ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி

mantralayam-on-thungabadra-teeramஇரண்டு நாள் பயணமாக மந்த்ராலயம் சென்றிருந்தேன். ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம் மன்சாலி எனப்படும் மாஞ்சாலி எனப்படும் மந்த்ராலய கிராமம். துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இன்றைய நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் வசத்தில் உள்ள மந்த்ராலயம் இப்போதும் ஒரு குக்கிராமமே. ராகவேந்திரரின் மடத்தையும், மடத்தைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் வேலைகளையும் நீக்கி விட்டுப் பார்த்தால், இக்குக்கிராமத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

மத்வாசாரியரால் மொழியப்பட்ட த்வைத நெறியில் வந்த ஆசார்யர்களுள் முக்கியமானவர் ராகவேந்திரர். இவருக்கு முன்பு வியாசராஜ யதி (வியாச யதி ராஜர்), ஸுரேந்திரர், விஜயீந்த்ர தீர்த்தர், ஸுதீந்திரர் போன்றவர்கள் மத்வத்தை முன்னெடுத்தவர்கள். மத்வருக்குப் பிறகு ராகவேந்திரரின் காலமே மத்வ, த்வைதத்தின் பொற்காலம் என்று அறியப்படுகிறது.

mantralayam-entrance1595-ல் புவனகிரியில் பிறந்த ராகவேந்திரர், வேதங்களைக் கற்று, உபநயனம் செய்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு, சன்னியாசம் மேற்கொண்டு, பாத யாத்திரை சென்று, வழியில் பல்வேறு வாதங்களை மேற்கொண்டு பலரை வென்று, இறுதியில் மாஞ்சாலி (மன்சாலி என்றும் சொல்லப்படுகிறது) என்னும் மந்த்ராலயத்தில் ஜீவ சமாதி அடைந்ததாக அவரது வாழ்க்கை வரலாறு விரிகிறது. ராகவேந்திரர் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் முழுவதுமே அவரை ஒரு சித்தராகவும் மகானாகவுமே காட்ட முனைகின்றன. அவர் தொட்டார், கண் பார்வை வந்தது; அவரை நினைத்ததும் படிப்பறிவு வந்தது என்பன போன்றவை. ராகவேந்திரரின் அக்கா மகனால், ராகவேந்திரரின் காலத்திலேயே எழுதப்பட்ட ஸ்ரீ ராகவேந்திர விஜயம் என்னும் நூலே ராகவேந்திரர் பற்றி அறிய உதவும் நூலாக உள்ளது. ராகவேந்திரரை மத்வ மடாதிபதியாக நிறுவும் பொருட்டும், அவரது மகான் தன்மையை விளக்கும் பொருட்டுமே அது எழுதப்பட்டிருக்கவேண்டும். அதுமட்டுமில்லாமல், ராகவேந்திரர் ஜீவ சமாதிக்குச் செல்லும் முன்பு ஆற்றிய உரையாகச் சொல்லப்படும் உரையில் அவரே தனது மகிமைகளைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அது ராகவேந்திரர் ஆற்றிய உரை என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த ‘மகிமை’களையெல்லாம் விட்டுவிட்டு, அந்த நூலில் இருந்து ராகவேந்திரரின் வரலாற்றைத் தேடித்தான் அறியவேண்டியுள்ளது. இத்தனைக்கும் 350 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.

மகிமைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ராகவேந்திரர் மிக முக்கியமான சன்னியாசியாக, பெரும் ஞானியாக வாழ்ந்திருக்கிறார் என்பது புலனாகிறது. ராகவேந்திரர் 64 கலைகளில் வல்லவர் என்கிறது ராகவேந்திர விஜயம். இது எத்துணை தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ராகவேந்திரர் வீணை வாசிப்பதில் தேர்ந்தவராக விளங்கியிருக்கிறார். அவரது தாத்தா விஜயநகர அரசவையில் வீணை வாசிப்பவராக இருந்திருக்கிறார். (விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சியின் போது, வாழ்வாதாரம் தேடி கும்பகோணத்திற்கு இடம் பெயர்கிறது ராகவேந்திரரின் குடும்பம். அங்கேதான் ராகவேந்திரர் பிறக்கிறார்.) ராகவேந்திரரின் அப்பாவுக்கும் வீணை வாசிக்கத் தெரிந்திருக்கிறது. இதனால் ராகவேந்திரருக்கும் வீணை வாசிக்கத் தெரிந்திருக்கலாம் என்று யூகிக்கலாம். சமிஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருக்கிறார். அவர் சமிஸ்கிருத நூல்களுக்கு உரைகளும், வேறு சில சிறிய சிறிய உரைகளும் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றில் பல கிடைக்கவில்லை. நிறைய பாடல்களும் இயற்றியிருக்கிறார். அவர் இயற்றிய பாடல்களில் நமக்குக் கிடைக்கும் ஒரே கன்னடப் பாடல் ‘இந்து எனகே கோவிந்தா நிந்நய பாதாரவிந்தவ தோரோ முகுந்த’ என்ற பாடல் மட்டுமே என்கிறது ஒரு குறிப்பு.

wooden-chappel-used-by-raghavendra-swamiதனது திருமணத்துக்குப் பின் சன்னியாசம் மேற்கொள்ளுகிறார். சன்னியாசம் பற்றிய விவரணைகள் ஸ்ரீ ராகவேந்திர விஜயம் நூலில் உள்ளன. சன்னியாசம் மேற்கொண்டதால் அவரது மனைவி சரஸ்வதி தற்கொலை செய்து கொள்கிறார். (அவர் திருமணம் செய்துகொண்ட வருடம், அவர் சன்னியாசம் மேற்கொண்ட வருடம் பற்றிய குழப்பங்கள் நூல்களில் காணப்படுகின்றன.) அவரது சன்னியாச வாழ்க்கையில் ஒரு சன்னியாசிக்குள்ள கடமைகளை நிறைவேற்றுகிறார். க்ராம ஏக ராத்ரி வாஸ! என்பதற்கிணங்க தொடர்ந்து தென்னிந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நிறைய வியாக்யானங்கள், நிறைய பாடல்கள் இயற்றுகிறார். மீமாஸத்திலும், த்வைதத்திலும் நிறைய பேரை வாதில் வெல்கிறார். (இவ்வளவுதான் சொல்கின்றன ராகவேந்திரரைப் பற்றிய நூல்கள். எவையும் அவர் அப்படி என்ன பேசி வாதில் வென்றார் எனச் சொல்லுவதில்லை!) சேது, திருவனந்தபுரம், மதுரை, ஸ்ரீரங்கம், வேலூர், உடுப்பி, மைசூர், மீண்டும் கும்பகோணம், கதக், பண்டரீபுரம், பீஜப்பூர், அல்லூர், ராய்ச்சூர், ஆதோனி, மான்சாலி எனத் தொடர்கிறது அவரது பயணம்.

அவர் இயற்றிய பாட்ட ஸங்கரஹம் என்னும் நூலை யானையில் வைத்து பெருமைப்படுத்தி அழைத்துச் சென்றார் நீலகண்ட சாஸ்திரி – இது நடந்தது மதுரையில். ராய்ச்சூரில், தாழ்த்தப்பட்ட இனமாகக் கருதப்பட்ட ஒருவர் ராகவேந்திரரிடம் பேசுகிறார். அவரை, தான் பூஜித்து வந்த மூல ராமருக்கு பூஜை செய்வாயாக என்கிறார் ராகவேந்திரர். அந்த மனிதர் நிறைய கடுகைக் கொண்டுவந்து பூஜை செய்கிறார். கடுகை விரதகாலத்தில் சேர்க்கக்கூடாது என்ற முறை இருந்தும், அதனை மறுத்து, கடுகைப் பயன்படுத்தும் வழிமுறையைக் கொண்டு வருகிறார் ராகவேந்திரர். (இவை போக, அவர் செல்லுமிடங்களிலெல்லாம் ராகவேந்திரரின் பெருமைகளும் மகிமைகளும் தொடர்கின்றன. ஆனால் இந்த இரண்டு மட்டுமே நம்பும்படியாக உள்ளன.) இப்படி கடுகைப் பயன்படுத்தியதால் வெறுப்படையும் ஆசார்யர்களைக் கண்டிக்கிறார் ராகவேந்திரர்.

ஆதோனியில் வெங்கண்ணா என்பவர் ராகவேந்திரரின் சீடராகிறார். (ராகவேந்திரரின் மகிமையால் அவர் சுல்தான் மசூன் கானிடம் திவனாகிறார். அதனால் அவர் ராகவேந்திரரின் சீடராகிறார்.) ராகவேந்திரரைச் சோதிக்க நினைக்கும் சுல்தான், பின்னர் ராகவேந்திரரைப் புரிந்துகொண்டு, அவருக்கு தானமாக என்ன வேண்டும் எனக் கேட்க, ராகவேந்திரர் மன்சாலி கிராமத்தைக் கேட்கிறார். அது ஏற்கெனவே ஒரு ஹாஜிக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்றாலும், ராகவேந்திரர் அக்கிராமமே வேண்டும் எனக் கேட்க, சுல்தான் அந்த ஹாஜிக்கு வேறொரு கிராமத்தைக் கொடுத்துவிட்டு, மன்சாலியை ராகவேந்திரருக்குக் கொடுக்கிறார். அது பிரகலாதன் யாகம் செய்த இடம் என்று நம்பிய ராகவேந்திரர் அந்த இடத்தைக் கேட்டிருக்கிறார். 1671-ல் தான் சமாதி அடையும் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். பின்னர் வேறொரு இடத்தை, தான் முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு அருகிலேயே தேர்ந்தெடுக்கிறார். முதலில் தேர்ந்தெடுத்த இடம், தனது அண்ணனின் கொள்ளுப் பேரப்பிள்ளையான வாதீந்தருக்கு இருக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார். (அப்போது வாதீந்தரருக்கு வயது 2.) தான் ஜீவ சமாதி அடையும் முன்பாக, தனது அண்ணனின் பேரப்பிள்ளையான யோகீந்திரரை மடாதிபதியாக்குகிறார்.

mantralayam-ragavendrarஉடலுடன் பிருந்தாவனம் புகும் நாள் வருகிறது. பிருந்தாவனத்துக்குள் மூச்சை அடக்கி தியானத்தில் ஆழ்ந்தார். அவரது கையில் இருந்த ஜபமாலை நழுவி விழுகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் வெங்கண்ணா கடைசியாக, திறந்திருந்த பகுதியை மூடிவிடுகிறார். இதன் பின்பு நெகிழ்ச்சி அடையச் செய்யும் நாடகத்தனமான காட்சிகள் அரங்கேறுகின்றன. துங்கபத்திரை நதியின் கரையில் அமைந்திருக்கிறது ராகவேந்திரர் சமாதி அடைந்த இடம். அதன் இன்னொரு கரையில் பிச்சாலய என்னும் ஊரில் (தற்போதும் உள்ளது) அப்பண்ணா என்பவர் – ராகவேந்திரரின் சீடர் இருக்கிறார். ராகவேந்திரர் ஜீவ சமாதி அடையப் போவதை அறிந்ததும் அவரைக் கடைசியாகக் கண்டுவிடும் உத்வேகத்தில் ஓடிவருகிறார். வழியில் துங்கபத்திரை பொங்கி வழிந்து ஓடுகிறது. அவர் ராகவேந்திரரை மனதில் நினைத்துக்கொண்டு, சமிஸ்கிருதத்தில் சுலோகம் பாடிக்கொண்டு, நதியில் இறங்கிக் கரையேறுகிறார். அதற்குள் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்துவிடுகிறார். அப்பண்ணா பாடிக்கொண்டிருந்த சுலோகத்தில் கடைசி ஏழு எழுத்துகள் மட்டும் பாக்கி இருக்கின்றன. தம்மால் ராகவேந்திரரைப் பார்க்க முடியவில்லையே என்னும் சோகத்தில் அவரது நா தழுதழுத்துவிடுகிறது. ஆனால் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த பிருந்தாவனத்தில் இருந்து “ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி” என்பதாக அந்த சுலோகம் நிறைவு பெறும் உரத்த ஒலி வெளிவருகிறது. இதை எத்துனைத் தூரம் நம்பமுடியும் எனத் தெரியவில்லை. ஆனால் ராகவேந்திரர் மேலும், தெய்வீகத்தின் மேலும் நம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயம் நெகிழ்ந்துவிடும் இடம் இது. இது நடந்திருக்குமா இல்லையா என்பதையெல்லாம் மீறி, நானும் நெகிழ்ந்த இடம் இதுவே.

devotees-sitting-for-food-inside-annadhana-mandapamநான் என் குடும்பத்துடன் ஆதோனி வழியாக மந்த்ராலயம் சென்றேன். ராகவேந்திரர் சொன்னதை பெரும்பாலும் மறந்துவிட்டு, தமக்கென உருவாக்கிக்கொண்ட சாதி சார்ந்த வழக்குகளில் மூழ்கிக் கிடக்கிறது மந்த்ராலயம். இன்றும் பிராமணர்களுக்கும், அபிராமணர்களுக்கும் தனித்தனி சாப்பாட்டு இடம். ஆனால் ராகவேந்திரர் சொன்னதாக, மடமே வெளியிட்டிருக்கும் ராகவேந்திர வரலாறோ, அவர் தாழ்த்தப்பட்டவர்களை அரவணைத்தார் என்கிறது. கோயில் தரிசனத்தில்கூட, மிக நுணுக்கமாக இந்த வேறுபாட்டை நிறுவுகிறார்கள்.

இன்றும் ராகவேந்திரர் சமாதிக்கு அருகிலேயே, அவரது அண்ணனின் கொள்ளுப் பேரனான வாதீந்திரரின் சமாதியும் உள்ளது.

sri-manchallamma-templeமான்சாலியில் இன்னொரு முக்கியமான விஷயம், மாஞ்சாலம்மா என்னும் கிராம தேவதை பற்றியது. ராகவேந்திரரை தரிசிக்கச் செல்லும் முன்பு, மாஞ்சாலம்மாவை தரிசிப்பது அவசியம் என்கிறது நடைமுறை. ஆனால் இதைப் பற்றிய குறிப்பே இல்லை மடம் வெளியிட்டிருக்கும் நூலில். கிராம தேவதை பற்றிய வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பது ராகவேந்திரருக்குத் தெரிந்திருக்கிறது. ராகவேந்திரருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது! அதேபோல் ஆதோனியிலும் கிராம தேவதை வழிபாடு முக்கியமாக உள்ளது. (அதன் வரலாறு தெரியவில்லை. அடுத்த முறை செல்லும்போது கேட்கவேண்டும்.)

சில முக்கியமான, சுவாரஸ்யமான குறிப்புகள்

1. ராகவேந்திரர் ஜீவ சமாதிக்கு நுழையும் முன்பு பேசியதாகச் சொல்லப்படும் உரை:

* சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.

* நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்.

* சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது. சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.

* கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது. கடவுளின் மேலாண்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்த்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றும் இன்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இதில் “நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்” என்னும் வரி முக்கியமானது. அன்றைய, அவரது காலகட்டத்தில் அவர் பிராமணர்கள் என்றே சொல்லியிருக்கலாம். ஆனாலும் சொல்லவில்லை என்பது முக்கியமானது. இதனை இன்றைய மடங்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடவுள் மேல் மட்டுமன்றி இதர தேவதைகளிடமும் என்னும் வரியும் முக்கியமானது. ஆனால் இவை ராகவேந்திரரால்தான் சொல்லப்பட்டதா என்பதுதான் தெரியவில்லை!

sri-rangavendra-tamil-movie2. ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் திரைப்படம் ரஜினிகாந்த் நடிக்க தமிழில் வெளிவந்தது. அதில் வரும் எஸ்.பி.முத்துராமத்தனங்களை விட்டுவிட்டுப் பார்த்தால், பெரும்பாலும் அவரது வாழ்க்கைக் குறிப்புகளை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளது. பிரம்ம ராக்ஷசனை அழிப்பது, படிப்பறிவற்ற வெங்கண்ணா படிப்பது, மாம்பழ ரசம் நிரம்பியுள்ள குண்டாவில் விழுந்து இறக்கும் குழந்தை ராகவேந்திர மகிமையால் உயிர் பிழைப்பது போன்றவை. ஆனால், கடைசியில் வரும் பாடல் ‘அழைக்கிறான் மாதவன்’ ராகவேந்திரராலேயே பாடப்படுவதாக உள்ளது. ராகவேந்திரர் சமிஸ்கிருதத்தில் பாடியதற்கான குறிப்புகள்கூட இல்லை. அப்பண்ணா துங்கபத்திரை நதிக்கரைக்கு தமிழில் பாடிக்கொண்டே ஓடிவரும்போது, துங்கபத்திரை இரண்டாகப் பிரிந்து வழி விடுகிறது. சென்ற வாரம் உதயா டிவியில் ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் ஒரு கன்னடப் படத்தின் கடைசி சில காட்சிகளை மட்டும் காண முடிந்தது. அதில் ராகவேந்திரர் கன்னடத்தில் பாடவில்லை. அப்பண்ணா துங்கபத்திரையில் இறங்கி நீரில் தத்தளித்து ஓடிவருகிறார். நதி இரண்டாகப் பிரிந்து வழிவிடவில்லை. அப்பண்ணா சமிஸ்கிருதத்தில் பாடுகிறார். கடைசி வரியின் ஒலி மட்டும் ராகவேந்திரரின் சமாதியிலிருந்து வெளிவருகிறது. அன்று அந்தப் படம் பார்த்தபோது எனக்கு இது புரியவில்லை. ராகவேந்திரரின் வரலாற்றைப் படித்தபோது, கன்னடப் படம் எப்படி ராகவேந்திரரின் வரலாற்றுக்கு அருகில் இருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியம் ஏற்பட்டது. கன்னடத்தில் வெளி வந்த ஸ்ரீ ராகவேந்திரர் படத்தை முழுவதும் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யங்கள், ஆச்சரியங்கள் கிடைக்கலாம்.

3. ராகவேந்திரர் எழுதிய சிறு குறிப்புகளின் பட்டியல்:

* வேத பிரஸ்தனம்– என்னும் பொருள் பற்றி: வேதத்ரய விங்குதி (ரிக், யஜூர், சாம வேதங்கள்), மந்த்ரார்த்த மஞ்சரி, பஞ்ச சூக்த உரைகள், பத்து உபநிடதங்களில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்துக்கும் உரை.

* பகவத் கீதாப்ரஸ்தானம்- கீதா விங்ருதி, கீதாப்ரமேய தீபிகையின் உரை, கீதாதாத்பர்யத்திற்கு உரை.

* ஸூத்ரப்ரஸ்தானம்– தந்த்ர தீபிகா, ந்யாய முக்தாவளி, ப்ரஹ்ம ஸூத்ரபாஷ்ய தத்வப்ரகாசிகர்பாவதீபம், அனுபாஷ்ய டீகா, தசப்ரகரண டீகாவின் உரை.

* தர்க்க தாண்ட வ்யாக்யானம்

* வாதாவளீ வியாக்யானம்

* ப்ரமாண பக்ததி வியாக்யா

* ஸ்ரீராம சாரித்ர மஞ்சரி

* ஸ்ரீ க்ருஷ்ண சாரித்ர மஞ்சரி

* ஸ்ரீ மன்மஹாபாரத தாத்பர்ய நிர்ணய பாவ ஸாங்க்ரஹம்

* அணுமத்வ விஜய வ்யாக்யானம்

* ப்ராதஸ் ஸாங்கல்ப கத்யம்

* பாட்ட சங்க்ரஹம்

* ப்ரமேய ஸங்க்ரஹம்

(இவை எல்லாம் மடம் வெளியிட்டிருக்கும் நூலில் உள்ள விவரங்கள். இவற்றின் உண்மைத்தன்மை பற்றித் தெரியவில்லை.)

4. ராகவேந்திரரின் மீது கன்னட நடிகர் ராஜ்குமார் பாடிய பாடல்கள் அற்புதமானவை. துரதிர்ஷ்டம் என்னவென்றால், அந்த குறுவட்டு மந்த்ராலயத்திலும் கிடைக்கவில்லை என்பதுதான். (குறிப்பாக, ஹாலல்லா தரு ஹாது என்னும் பாடலின் மெட்டையும், ராஜ்குமாரின் அபூர்வமான குரலையும், அப்பாடலின் மெஸ்மெரிசத்தையும் மறக்க முடியவில்லை.) பெங்களூரில் எங்கேனும் இந்தக் குறுவட்டு கிடைத்தால் நண்பர்கள் சொல்லவும்.

shri-panchamuga-hanuman-temple5. எனது மந்த்ராலயப் பயணம் எனக்கு பெரிய மனநிறைவைத் தந்ததா என்றால் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஒரு திருப்பதி தரிசனம் போன்ற உணர்வு என்னை ஆட்கொள்ளவில்லை. ஆனால், ராகவேந்திரர் பற்றிய நினைவுகளும், அவர் தவம் செய்த இடத்தைப் பார்த்த போது (பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ள இடம், மந்த்ராலயத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது) ஏற்பட்ட உணர்வும் வித்தியாசமானவை.

இக்கட்டுரைக்கு உதவியவை:

1. விக்கி பீடியா
2. நிலாச்சாரல்.காம்
3. ராகவேந்த்ர ஸ்வாமிகள் ஜீவ சரிதம் மற்றும் மஹிமைகள் என்னும் நூல்.
4. https://www.gururaghavendra1.org/

166 Replies to “ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி”

  1. அருமையான கட்டுரை. உங்கள் தனிப்பட்ட பதிவுகளையும் தந்திருக்கலாமே…

  2. Good informative article..

    But
    // இதன் பின்பு நெகிழ்ச்சி அடையச் செய்யும் நாடகத்தனமான காட்சிகள் அரங்கேறுகின்றன. //
    idhu konjam over !!

    Also,

    // கடைசியில் வரும் பாடல் ‘அழைக்கிறான் மாதவன்’ ராகவேந்திரராலேயே பாடப்படுவதாக உள்ளது. ராகவேந்திரர் சமிஸ்கிருதத்தில் பாடியதற்கான குறிப்புகள்கூட இல்லை. அப்பண்ணா துங்கபத்திரை நதிக்கரைக்கு தமிழில் பாடிக்கொண்டே ஓடிவரும்போது, //

    Songs in our movies are not to be taken so seriously even if the character moves his lips for it…they are sometimes meant to express the feelings in the heart.
    is he expecting Raghavendrar to speak Telugu in a Tamil movie ??
    Haran Prasanna seems to have shown himself a bit too smart in taking a dig at such insignificant things..

  3. எனக்கு நீண்டகாலமாக ஒருஐயம் இருந்து வருகின்றது. அறிந்தவர் தீர்த்து வைக்க வேண்டுகின்றேன். சங்கரரின் அத்துவிதத்தைப் பின்பற்றுகின்ற வேதாந்திகள் பிராமணர் அல்லாதவர்கள் உண்டு. பிராமணர் அல்லாதவர்களைக் கொண்ட தமிழ் வேதாந்த மடங்கள் உண்டு. அவ்வாறே விசிட்டாத்துவத்தை அனுசரிக்கும் பிராமணர் அல்லத மடங்கள் உண்டு. விசிட்டாதுவத்தை அனுசரிக்கும் பிராமண திருமடத்தலைவர்கள் பிராமணர் அல்லாதவர்களுக்கு முத்திராசமஸ்காரம் அளித்து சீடர்களாக ஏற்றுக் கொள்ளுவதும் உண்டு. இந்த நிலை மாத்துவ மடங்களில் உண்டா? பிராமணர் அல்லாத மாத்துவர்கள் உண்டா? தமிழகத்தில் , சிதம்பரத்துக்கு அருகில் உள்ல புவன்கிரியில் பிறந்த இராகவேந்திரருக்குத் தமிழிடத்திலும் தமிழரிடத்திலும் ஏதேனும் தொடர்பு இருந்துவருகின்றதா?

  4. அன்புள்ள ஹரன்,

    ஆழமான நம்பிக்கை இல்லாமல் இந்த மாதிரி புனிதமான இடங்களுக்கு நீங்கள் செல்வதை விட, செல்லாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது. உங்களுக்குத் திருப்பதி தான் பிடிக்குமென்றால் அங்கே மட்டும் போய் ஒரு மொட்டையைப் போட்டுக்கொள்வதுதானே!

    நேற்று நடந்துமுடிந்த செம்மொழி மாநாட்டில் என்னென்ன நடந்தது என்பதையே நாம் (நேரில் போகாமல்) சரிவரப் புரிந்துகொள்ள இயலாதபோது, 350 வருடங்களுக்கு முந்தைய நடப்புகளைக் கிண்டலடித்தும், வரிக்கு வரி அவநம்பிக்கையுடனும், மேம்போக்காக எழுதுவது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மன வருத்தமே அளிக்கும். அப்பேர்ப்பட்ட மகானையும் அவர் சார்ந்த இயக்கத்தையும் குறை சொல்லிக் கேவலமாகத் தூற்றி எழுத உங்களுக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கம்பராமாயணம் போன்ற காவியங்களை எழுதும்போது கம்பன் போன்ற மகாகவிகள்கூட, தத்தம் அவையடக்கத்தை ஏன் அவ்வளவு தூரம் முன்வைத்து எழுதி இருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது!

    ‘மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு’ தமிழ்ஹிண்டு.காம் கேட்டுக் கொண்டிருக்கிறது. கட்டுரை எழுதுபவர்களும் தங்கள் பொறுப்பறிந்து எழுதவேண்டும் என்பதே என் கோரிக்கை. தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி, மீதமுள்ள எல்லாவற்றையும் கேவலப்படுத்துவதால் வரும் கோளாறு இது.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்தின் பிரபலமான வாசகம் தான் நினைவுக்கு வருகிறது: “இறைவா, நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று, விரோதிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்!”.

    இந்து மதத்திற்கும் இது சாலப் பொருந்தும்.

    தயவுசெய்து இனிமேலாவது சரி செய்துகொள்ள வேண்டுகிறேன்!

  5. There were several social reformers in the country. In Kerala Sri Narayana Guru, Chattambi Swamigal, Ayyankali were most prominent. When the caste feelings were very high and people from lower castes were not given permission to visit temple or walk in the main roads, the above mentioned social reformers fought against this injustice and the caste feelings have to a great extent eliminated. But now the followers of these great men impute godliness in these great men and attempts are being made to build temples and to even worship them as gods. Raghavendra was a great saint. Even Sankara was a great saint. But Sankara is not worshiped as a god. He did much to save hinduism. He saved it from getting disintegrated. Our culture is to bow before all great men and women. Now Mata Amrithananda Mayi is doing great service to the society and so also Bhagwan Satya Sai Baba in Andhra Pradesh. They never claimed to be gods. In their bhajans they sings songs praising Lord Krishna and Shiva. It is because of them the hinduism survives.

  6. ஹிந்து மதத்தின் பெருமைகளை பொதுமக்களுக்கு எடுத்து காட்டும் உங்கள் செயல்பாடுகள் மிகவும் புகழ தகுந்தவை, பராடிர்க்குரியவை.

  7. //
    முறையைக் கொண்டு வருகிறார் ராகவேந்திரர். (இவை போக, அவர் செல்லுமிடங்களிலெல்லாம் ராகவேந்திரரின் பெருமைகளும் மகிமைகளும் தொடர்கின்றன. ஆனால் இந்த இரண்டு மட்டுமே நம்பும்படியாக உள்ளன.)
    //

    கருணாநிதியே தேவலாம் போல இருக்கிறதே – கிட்ட தட்ட ஸ்ரீ ராக வேந்திரர் சரித்திரம் மேஜிக்காரர் போல உள்ளது என்று சொல்லி விட்டீர்கள்

    வாதம் செய்தார் வென்றார் என்று தான் ஆடி சங்கரரை பற்றியும், ராமானுஜரை பற்றியும் இருக்கும் என்ன வாதம் என்றெல்லாம் எழுத மாட்டார்கள் – வாதம் பல கோணங்களில் நடக்கும் அதை எழுத்து வடிவில் கொண்டு வருவதே மிக கடினமானது – இரண்டு பேர் இரண்டு நாள் வேகமாக தர்க்கம் பேசிக்கொண்டால் அதை எப்படி record செய்வது என்று எனக்கு தெரியாது

    உங்களுக்கு எப்படியோ தெரியாது – எனக்கு மன்றலயம் வழியாக ரயிலில் போகும் பொது கூட அதிக நிம்மதி கிடைக்கும்

    //
    இவை எல்லாம் மடம் வெளியிட்டிருக்கும் நூலில் உள்ள விவரங்கள். இவற்றின் உண்மைத்தன்மை பற்றித் தெரியவில்லை
    //

    இதை பற்றி மடம் தான் வெளியிட வேண்டும் – கருணாநிதி இதை ஒத்துகொண்டால் தான் நான் ஒத்துக்கொள்வேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது – இதை போல ஆராய்ச்சி எல்லாம் வெள்ளை காரர்கள் மட்டும் தான் ஹிந்டுத்வத்தை இழிவு படுத்து செய்வார்கள் என நம்பினேன்

    சங்கரர்/ராமானுஜர் பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதினார்கள் என்று அவர்களின் சிஷ்யர்கள் சொல்கிறார்கள் – இதை வேறு வழியில் உறிதிபடுத்த முடியவில்லை என்றால் என்ன சொல்வது?

    ராமாயணம், மகாபாரதம் கிருஷ்ணர், ராமர் என்று எல்லாவற்றை பற்றியும் இப்படி ஒரு கேள்வி எழுப்பலாம்

    இன்று நாம் திருப்பதிக்கு மலை ஏறி செண்டு அமைதி பெறுகிறோம் என்றால் அதன் பின்னே பல ஆசார்யர்களின் உழைப்பும் பக்தியும் உள்ளது – அனந்தாழ்வான் பிள்ளை செய்த பணியினால் தான் திருப்பதி சீர் அமைந்தது – அவரை பற்றியும் (உங்களின் மொழியில்) நம்ப முடியாத கதைகள் உண்டு – அவர் பாலாஜியின் மேல் கல்லை விட்டு அடித்தது அதன் காரணமாக இன்றளவும் அவரது முகத்தில் வைக்கப்படும் பச்சை கற்பூரம், அவர் பாம்பு கடியின் பின்னும் பிழைத்தது இப்படி பல

    இதை எல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம் – ஆனால் கிண்டலும் செய்ய வேண்டாமே – இவர்களின் தொண்டை மறந்து விட்டு, கிண்டல் செய்துவிட்டு திருப்பதி செல்வது நிம்மதி எங்கே தருகிறது? அது மலை scenery நிறைய இருக்கு என்பதாலோ? மந்த்ராலயம் பாவம் ஒரு குக் கிராமம் தானே

  8. To Haran Prasannah,
    I like reading your articles but this one is not good. First thing first,
    your visit to Mantralaya, was it suppose to be pilgrim or a casual visit? The point is this,
    when visiting this sort of sacred places, one has to go there with proper mindset. At least a
    a strong believe and a trust that there is a shakti there. If not its pointless to visit this kind of
    shrines. Especially with so much of doubts and questions.

    When india was under islamic rule, its is saints like Ragavendrar who went
    from places to places still upholding our religion values and giving hope to Hindus at that
    time.

    I suggest you read Sri Ragavendra Biography which “Sri Ragevendra Magimai”
    from Amman Sathyanathan. ( 7 parts )
    You will have a clearer picture of this Madhva Traditions.
    Its both availabe in Tamil And English.

    As for the rajini movie Sri Ragavendra, I accept there could be some faults in it. But you
    cannot deny that movie created Awareness for Sri Ragavendra Swamigal in Tamil Nadu.
    For that, the movie succeed.

    Thank you.

    Kreshna

  9. //நீங்கள் குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்தின் பிரபலமான வாசகம் தான் நினைவுக்கு வருகிறது: “இறைவா, நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று, விரோதிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்!”.//

    அட்டகாசமான வசனம்! சினிமாவைத் தவிர நமக்கு வேறெதையுமே மேற்கோள் காட்ட வரமாட்டேன் என்கிறதே! ஏன்?

  10. கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு
    ///ராகவேந்திரர் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் முழுவதுமே அவரை ஒரு சித்தராகவும் மகானாகவுமே காட்ட முனைகின்றன. ///
    ///ராகவேந்திரரை மத்வ மடாதிபதியாக நிறுவும் பொருட்டும், அவரது மகான் தன்மையை விளக்கும் பொருட்டுமே அது எழுதப்பட்டிருக்கவேண்டும். ///
    ///ஆனால் அது ராகவேந்திரர் ஆற்றிய உரை என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ///
    ///ஆனால் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த பிருந்தாவனத்தில் இருந்து “ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி” என்பதாக அந்த சுலோகம் நிறைவு பெறும் உரத்த ஒலி வெளிவருகிறது. இதை எத்துனைத் தூரம் நம்பமுடியும் எனத் தெரியவில்லை. ///

    இப்படியாகத் தங்கள் சந்தேகங்கள் பலப்பல. இந்தச்சந்தேகங்கள் அனைத்துமே தங்கள் அனுமானத்தின் பேரிலேயே எழுந்தவை. இவை எதற்காவது ஆதாரம் என்று தரமுடியுமா உங்களால்? இப்போது எழுந்த சந்தேகத்துக்கே ஆதாரம் தரமுடியவில்லை என்றால், 350 ஆண்டுகால சரித்திரத்துக்கு அதுவும் இஸ்லாமிய, பிரிட்டிஷ் ஆதிக்கங்களுக்குப் பிறகு எப்படி ஆதாரம் கிடைக்கும்? நமது வரலாற்றை நீதிமன்றத்தில் நிலைநாட்டுவது போல சாட்சி, ஆதாரம், பத்திரம் முதலியவற்றால் செய்யமுடியாது. நமக்கு மட்டும் அல்ல, ஏசுவுக்கும் முகமதுக்கும் இதே கதிதான்.

    அத்தகு சுழலில் எதை நாம் ஆதாரமாகக் கொள்ளவேண்டும்? அவரது ஜீவ சமாதி இஸ்லாமியர் கொடுத்த இடத்தில் இருப்பதற்கு இருக்கும் ஆதாரம், இஸ்லாமியர் படையெடுப்பால் எல்லாரும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்த 350 ஆண்டுக்குக் முந்தைய காலத்தில் எதிர் நீச்சளாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப்போயிருக்கிறாரே அந்த ஒன்றே போதும் அவரது மகிமையைப் பறைசாற்ற.

    இதே கட்டுரை இந்தத் தளத்தில் வராமல் திண்ணை போன்ற தளங்களில் வந்திருந்தால் சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரை என்று கொள்ளலாம். ஆனால் தமில்ஹிந்து தளத்தில் வரும்போது வலிக்கிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் ராம் சொல்லும் பொறுப்பு பற்றிய கருத்துடன் உடன்படுகிறேன்.

  11. மாஞ்சாலை அம்மன் கோயில் ரெடியாகிவிட்டதா.. போன வருஷம் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. தனித்தனி சாப்பாடு இடத்திற்காக பெரிய பெரிய கட்டிடங்களை கட்டிக் கொடுத்தவர்களெல்லாம் சமூகத்தில் பெரிய புனித பிம்பங்கள், உம் Mrs. இன்போசிஸ். மத்வத்தில் ஏராளமான பிரிவுகள் உண்டு என்பதை சொல்ல வேண்டியதில்லை. கழகத்தவர்களை மிஞ்சும் அரசியலும் உண்டு. மந்திராலயத்தை விடுங்கள், ராகவேந்திரரின் பிறந்த இடமான புவனகிரிக்கும் ஒருமுறை வாருங்கள், இதை விட ஷாக்கான ரிப்போர்ட் எழுதலாம். பைதபை ராகவேந்திரர் தமிழ்படம் பற்றி இன்னொரு நாள் விரிவாக.

  12. கருணாநிதி சில மடத்துத் தலைவர்களை “சன்னியாசி”கள் என்று கிண்டலடிப்பார். மற்ற சில மடத்து தலைவரகளை “துறவிகள்” என்று போற்றுவார். ஹப்பி ஐயா “ராகவேந்திரர் என்னும் சன்னியாசி” என்று கட்டுரை எழுதியது சாலப் பொருத்தம். இதை இப்படியே நிறுத்தாமல் ஒரு தொடராகவே அவர் இந்த தளத்தில் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு, கிழக்குப் பதிப்பகத்தால் “இந்துமதத்தின் இட்டுக்கட்டல்கள்” என்று ஒரு புத்தகமகாய் போட்டால் அது எல்லோருக்கும் பிரயோசனமாய் போகும். இல்லை இன்னும் சுவாரசியமாக “பார்ப்பன சன்னியாசிகளின் புரட்டுகள்” என்று போட்டால் இன்னும் அதிக காப்பி பிரிண்ட் போடலாம். வாழ்த்துக்கள்.

  13. ஹரன் பிரசன்னா

    இப்படியே யோசித்தால் நாம் நம் புராணங்கள் எதையுமே நம்ப முடியாதுதான். இது போன்ற கட்டுரைகள் தமிழ் இந்துவின் மேல் தேவையில்லாத மனக் கசப்புக்களையே உருவாக்கும். நண்பர்கள் சிலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் இந்தக் கட்டுரை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இதற்கும் ராமன் என்ன எஞ்சினீயரா என்று கருணாநிதி அடித்த கிண்டலுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கத் தேவையில்லை. அங்குள்ள குறைகளை நாம் தாராளமாகச் சொல்லலாம் ஆனால் நம் துறவிகளைப் பற்றிய சந்தேகங்களை நாமே அநாவசியமாக எழுப்பத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

    விஸ்வாமித்ரா

  14. அங்கங்கே skeptic தொனிகள் இருந்தாலும் மொத்தத்தில் ஒரு நல்ல கட்டுரை, பிரசன்னா.

    300 வருடங்களே முன்பு வாழ்ந்த ஒரு பிரசித்தி பெற்ற மகானுடைய வாழ்க்கை சரித்திரத்தில் கூட துல்லியமான வரலாற்றுப் பதிவுகள் இல்லை என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். சமீபகால மகான்களின் சரிதங்களையும் புராண வடிவிலேயே பதிவு செய்து அதனை ஒரு மரபாக நிலைநிறுத்துவது எல்லா இந்து சமயப் பிரிவுகளிலும் உள்ள விஷயம் தான். மகான்களின் மீது நாம் பெரும் மதிப்பு கொண்டிருக்கும் போதும், குதர்க்கமாக இல்லாமல் நேர்மையான முறையில் வரலாற்றுத் தகவல்கள் பற்றிய கேள்விகளை எழுப்புவது தவறு அல்ல என்று நினைக்கிறேன். இவற்றை நாம் எழுப்பா விட்டால், இந்து எதிரிகள் தங்களுக்கே உரிய திரிபுகளுடன் இவற்றை சித்தரிப்பார்கள்.

    பல இடங்களில் புராணப் பதிவுகள் ஒரு வரலாற்று / கலாசார செய்தியைக் குறியீட்டு ரீதியாக சொல்லும் விதமாக இருக்கும். அந்தக் குறிப்பிட்ட காலத்திய சமூக சூழல், மற்ற இலக்கியப் பதிவுகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, புராணத் தன்மை கொண்ட செய்திகள் சொல்ல வந்தது என்ன என்று ஆய்வு செய்யலாம், விளக்க முயற்சி செய்யலாம். உதாரணமாக, திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரது அற்புதச் செயல்கள், திருவிளையாடற் புராணம் ஆகியவை பற்றி இந்த ரீதியான விளக்கங்கள் தமிழில் எழுதப் பட்டுள்ளன. எனவே, அற்புதச் செய்திகளை ஒரேயடியாக ”ஆதாரமில்லாத கற்பனை” என்றும் ஒதுக்கி விடமுடியாது. இதையும் மனதில் கொள்ள வேண்டும்.

  15. எனக்குத் தெரிந்தவரை: மாத்வர்கள் அல்லாத யாரும் மடாதிபதி ஆகமுடியாது. மாத்வர்களில் பிராமணரல்லாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. மாத்வர்களில் சில உட்பிரிவுகள் (பெலஹ நாடு, ஆர்வேலு, அரவத்த ஒக்கலு, ஹவளகட்டாஜாதி, அட்ட தேசஸ்துரு போன்றவை) உள்ளன. ஆனால் அவர்களுக்குள் ’கழகத்தவர்களை மிஞ்சும் அரசியல்’ எல்லாம் கிடையாது. பேசும் முறைகளில், திருமணங்களில் வேறுபாடு உண்டு. ராகவேந்திரர் அரவத்து ஒக்கலு பிரிவைச் சேர்ந்தவர். நான் பெலஹ நாடு. அதற்காக இந்தக் கட்டுரையை இப்படி எழுதவில்லை. நான் நம்புவதை, எனக்கு சரி என்று பட்டதை எழுதினேன். இப்போதும் நான் எழுதியதை சரி என்று நம்புகிறேன். மற்றவர்கள் கருத்துகளை, மற்றவர்களின் கருத்துகள் என்கிற அளவில் மதிக்கிறேன்.

    கருத்துச் சொன்ன அனைவருக்கும், சொல்லப் போகிறவர்களுக்கும் நன்றி.

  16. இதில் ஹரன் பிரசன்னாவின் ஒரு முக்கியமான ஆதங்கத்தை நாம் பார்க்கவில்லை. 350 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த துறவி. சிறந்த தத்துவ ஞானி. ஆனால் அவரை நாம் இன்றைக்கு அவரது அருளிச்செயல்கள் மூலமாக மட்டுமே அறிந்து கொள்கிறோம். அவரது தத்துவ இலக்கியங்கள் என்ன? இந்திய தத்துவ மரபில் அவருடைய இடம் என்ன? இவற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு குறைந்தபட்ச வாய்ப்பு கூட அங்கே இல்லை. அருளிச்செயல்களுக்கு மாஸ் அப்பீல் இருக்கலாம். ஆனால் இன்றைய அறிவியக்கம் சார்ந்த இந்துவுக்கும் ஏதாவது வேண்டாமா? சில அருளிச்செயல்களின் வரலாற்று பரிமாணங்கள் நமக்கு சமூக ரெலவன்ஸ் கொண்டவையாகக் கூட இருக்கலாம். உதாரணமாக கும்பகோணத்து ஆலயங்களை மொகலாய படையெடுப்பிலிருந்து அவர் ஒரு அற்புத செயல் மூலம் காப்பாற்றினார் என சொல்லப்படுகிறது. அதில் ஒரு வரலாற்று உண்மை புதைந்திருக்கலாம். அதைக் குறித்து ஆராய்ச்சி செய்ய நமக்கு தோன்றவில்லை. வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டத்தில் இஸ்லாமுக்கு ஹிந்துக்கள் மதமாற்றப்படுவதை அவர் தடுத்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் அற்புதச்செயலில் விழுந்த ஃபோகஸ் லைட்டில் நமக்கு தெரியாமலே போய்விட்டது. இந்நிலையில் வரலாற்றில் சமூகம் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் நமது சமூக வழிகாட்டியாக ராகவேந்திரரை எப்படி ஒரு ஹிந்து பார்ப்பது என்பதே ஹரன் பிரசன்னாவின் பார்வையாக உள்ளது. இப்பார்வை ஒரு முக்கியமான பார்வை. இதற்கும் கருணாநிதியின் குதர்க்கத்துக்கும் முடிச்சு போடுவது அதீதப்பயம் கொண்ட மனநிலை.

  17. இங்கு ஸ்ரீ இராகவேந்திரர் மீது உண்மையில் பக்திகொண்டு ஆசிரியர் எழுதியதை கண்டித்த நண்பர்களுக்கு:- நீங்கள் ஏன் ஆசிரியரை கடிந்துகொள்கிரீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்தியர்கள் இன்னும் மெக்காலேவின் பிள்ளைகள்தான். அவர் கூறியவற்றை மறந்துவிட்டீர்களா?

    “It is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population.”

    இன்னும் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள் மெக்காலேவின் வழியையே பின்பற்றுகிறார்கள். சில உதாரணங்கள். மற்ற மதத்திற்கென்று வரும்பொழுது:-

    -> Jesus CURED the people with diseases.
    -> Moses RECEIVED the Ten Commandments from God directly
    -> Mohammed SPLIT the moon in two.

    ஆனால் இதுவே நமது மதத்திற்கு வரும்பொழுது:-

    -> IT IS BELIEVED that Murugan appeared before Arunagirinadhar.
    -> LEGEND HAS IT that Varadaraja Perumal spoke to Vedanta Desikar.
    -> IT IS SAID that Madhvacharya met Veda Vyasa in the Himalayas.

    ஏதோ இவர்கள் செய்த அற்புதங்கள் ஆதாரமற்றதென்றும், பொய்யென்றும், என்னவோ அவர்கள் செய்த அற்புதங்களை டிஜிட்டல் கேமராவில் படமெடுத்து யூடியுபில் அப்லோட் செய்தது போலவும் எழுதுவார்கள். இதற்காக இதுபோன்ற எழுத்தாளர்கள் மீது கோவப்படுவது நியாயமன்று. அது நமது மறபில் ஊறிவிட்டன. என்று ஐரோப்பியர்கள் நமது மண்ணில் கால்வைத்தார்களோ அன்றே பிடித்தது பீடை!

    இன்றும் பலர் நமது புராணங்களை புழுக்கு என்றும் mythology என்றும், மற்ற மத நூல்களிலுள்ள கதைகளை வரலாறு போலவும் கூறுவார்கள். அவற்றை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வரும்! mythology என்று கூறவேண்டாம், சரித்திரம் (history) என்றும் எடுத்துக்கொள்ளவேண்டாம். ஆனால் புண்ணியக்கதைகள் (sacred stories) என்றாவது சொல்லலாமல்லவா??

    சரி இந்த கட்டுரைக்கு வருவோம். ஆசிரியர் திரு.அரன் பிரசன்னா அவர்கள் என்னவோ ஸ்ரீ இராகவேந்திரர் செய்த அற்புதங்களுக்கு ஆதாரமில்லை, நம்பும்படியாக இல்லை என்று எழுதியிருந்தார். ஒரு சம்பவத்தை சொல்கிறேன், கேளுங்கள். ஒரு இரண்டு வயது குழந்தை. பிட்ஸ் நோயால் தவித்தது. பல மருத்துவர்களை அணுகியும் சரியாக குணமடையவில்லை. சிலர் முயற்சித்தனர், பலர் கைவிட்டுவிட்டனர். குழந்தை இறக்கும் நிலைக்கு சென்றது. அக்குழந்தையின் பெற்றோர்கள் ஸ்ரீ இராகவேந்திரரின் பக்தர்கள். மனமுறுக வேண்டினார்கள். அந்த தாய் தந்தையார் அம்மகானின் பிரசாதமான மிருத்திகையை (மகானின் காலடி பட்ட மண்ணை) அக்குழந்தையின் நெற்றியில் இட்டார்கள். சில நேரத்திலெல்லாம், அக்குழந்தை சிறிது சிறிதாக முழுமையாக குணமடைந்துவிட்டது! இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டன. இன்று அக்குழந்தை எவ்வித நோய் நொடியுமின்றி திடகாத்திரமாக உள்ளது. “அதெப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்காதீர்கள். என்னைவிட அக்குழந்தையைப் பற்றி அறிந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனெனில் அக்குழந்தை வேறு யாருமில்லை, நான்தான்! இன்றும் என் பெற்றோர்கள் அச்சம்பவத்தை நினைவில் கூறும்போது கண்கலங்குவார்கள்!! சரி அதாவது விட்டுவிடுங்கள், என் பெற்றோர்கள் சொல்லித்தான் எனக்கு அது தெரியும். ஆனால், நானே பிரார்த்தித்து கண்கூடாக அனுபவித்த அம்மகானின் அற்புதங்கள் பல இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் வைத்துக்கொண்டு ‘குருடன் பார்கிறான், நொண்டி நடக்கிறான், உண்ணாதவன் மலம் கழிக்கிறான்’ என்றெல்லாம் சொல்லி சில பிரிவுகளைப்போல மதமாற்றம் செய்ய நாங்கள் கனவிலும் நினைத்ததில்லை. இப்பொழுதும் இவ்வளவுபெரிய மறுமொழியை நான் இங்கு எழுத வேண்டியதில்லை. ஆனால் என் உயிரைக் காத்த அம்மனித தெய்வத்தைப் பற்றி அனைவரும் சரிவர அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இங்கு எழுதியுள்ளேன். மேலே, நண்பர் திரு.கிருஷ்ணா அவர்கள் எழுதியுள்ளதைப் போல திரு.அம்மன் சத்தியநாதன் என்பவர் எழுதிய “இராகவேந்திரா மகிமை” என்ற நூலை வாங்கிப் படியுங்கள். ஏழு பாகங்கள், எட்டாவதை எழுதிக் கொண்டிருக்கிறார். படியுங்கள், புரியம்.

    ஆனால், ஆசிரியர் சொன்ன சில விஷயங்கள் உண்மை. ‘இராகவேந்திரர்’ எனும் ரஜினிகாந்த் நடித்த தமிழ் திரைப்படத்தில் வருபவை அனையதும் உண்மையில்லை. ஒரு உதாரணம்:- தனது கல்வியை முடித்தபின்தான் வேங்கடநாதன் (இராகவேந்திரருக்கு அவர் பெற்றோர்கள் இட்ட பெயர்) சரஸ்வதி பாயை திருமணம் புரிந்தார் என்று திரைப்படம் கூறுகிறது. ஆனால், அவரது வாழ்கை வரலாற்றின்படி திருமணத்தின் பிறகுதான் அவரது குருவான ஸ்ரீ சுதீந்திர தீர்தரையே அவர் சந்திக்கிறார். அதுபோல பல வேறுபாடுகள் உள்ளன. மேலும் அவர் ஜீவ சமாதியாகும்போது அவர் பாடவில்லை, அப்பன்னாசாரியார்தான் பாடுகிறார். சுவாமிகளை இறுதியாக ஒரு முறை காணவேண்டும் என்று ஓடிவரும்போது துங்கபத்திரை நதி கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது சுவாமிகளை மனமுறுக நினைத்துக்கொண்டு சிறிதும் பயமின்றி “ஸ்ரீ பூரண போத குரு தீர்த்த பயோப்தி பாரா” என்னும் சுலோகத்தைப் பாடிக்கொண்டே ஆற்றில் இறங்குகிறார். ஆறு வழிவிடவில்லை, ஆனால் தனது வேகத்தை குறைத்துக் கொள்கிறது, அவ்வளவே! ஆனால் அவர் எவ்வளவு வேகமாக ஓடிவந்தாலும் அவர் வருவதற்கு முன்னாலேயே சமாதியை எழுப்பி விடுகிறார்கள் பக்தர்கள். 31 வரிகளை பாடிய அவரால், கடைசி வரியை பாடமுடியவில்லை. அப்பொழுது “இந்த சுலோகத்திற்கு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவரே சாட்சி” என்று ஒருகுரல் சமாதியிலிருந்து கேட்கிறது.
    அதேபோல, மந்த்ராலயத்தில் பிராமணர்கள் (என்று கூறிக்கொள்பவர்கள்) தனி, பிராமணர் அல்லாதவர்களுக்கு தனி என்று தான் அன்னதானம் அளிக்கப்படுகிறது. இவை அந்த மகான் ஏற்படுத்திய வழிமுறைக்கே எதிரானது. குருதட்சனைகூட வாங்காமல் சாதி வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் கற்பித்த அந்த மகானின் பெயரைச் சொல்லோக்கொண்டு இப்படி செய்கிறார்களே என்று எனக்கும் வெறுப்பாகத் தானுள்ளது. மேலும் சில விவரங்கள்:-

    மத்வ மதத்தை ஸ்தாபித்த ஸ்ரீமான் மத்வாச்சாரியார் தான் யாரென்று தான் எழுதிய ‘விஷ்ணு தத்துவ விநிர்ணய’ திலும் ரிக் வேத பலித்த சூக்தத்திர்க்கு தான் எழுதிய உரையிலும் கூறுகிறார்:-

    “நான் வாயுதேவன். திரேதா யுகத்தில் ஸ்ரீ இராமனுக்கு சேவை செய்ய நானே அனுமானாக அவதரித்தேன். பிறகு துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தொண்டு புரிய நானே பீமசேனனாக வந்தேன். இப்பொழுது கலி யுகத்தில் வேத வியாசருக்குத் தொண்டு புரிய நானே மத்வாசாரியாராக வந்துள்ளேன்”.

    இந்து மத சரித்திரத்தில், ஸ்ரீ கிருஷ்ணரைத் தவிர்த்து தான் யாரென்று மக்களுக்கு உணர்த்திய ஒரே ‘உண்மையான’ மகான் ஸ்ரீமான் மத்வாச்சரியரே! (ஏன் ‘உண்மையான’ என்று குறிப்பிட்டுள்ளேன் என்றால் நித்தியானந்தன் “நான் சிவன், நான் விஷ்ணு, பிரம்மா” என்றெல்லாம் சொல்லிப் பாசாங்கு செய்ததை சில இந்து விரோதிகள் இங்கே கூறுவார்கள், மேலே கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு மொக்கை போட்டதுபோல!)

    மேலும், ஸ்ரீ இராகவேந்திரர் சங்குகர்ண தேவதை எனும் ஒரு சிறிய தேவனின் அவதாரம் என்பது மாத்வர்களின் நம்பிக்கை. ஒரு முறை பிரம்மதேவர் ஸ்ரீ ஹரியை பூஜை செய்ய மலர்கள் வேண்டும் என்று அந்த தேவதையை உலகத்திற்கு அனுப்பியபொழுது நேரத்திற்கு வராததால், சினம்கொண்ட பிரம்மதேவர் “பூவுலகில் பிரக்ககடவாய்” என்று சாபமிட்டுவிடுகிறார். அதன் படி முறையே, சங்கு கர்ண தேவதை உலகில் நான்கு அவதாரங்களை எடுத்தார்:-

    முதலில், பக்த பிரகலாதனாக பிறந்து நரசிம்ம மூர்த்தியை காண்பித்தார்.

    இரண்டாவதாக, மகாபாரதத்தில் வரும் பாலீக ராஜன் ஆக! (சந்தனுவின் அண்ணன், பிதாமகர் பீஷ்மரின் பெரியப்பா!). இவரும் குருக்ஷேத்திரப் போரில் கௌரவர்கள் படையில் போர் புரிந்து “நான் செய்த பாவம் போதும், என்னைக் கொன்றுவிடு” என்று பீமசெனனிடம் விண்ணப்பிக்க பீமன் கொன்றுவிடுகிறான். குருக்ஷேத்திரப் போரின் போது, பீஷ்மர்தான் எல்லோரிலும் மூத்தவர் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அவரது பெரியப்பாவே இருந்தார்.

    மூன்றாவதாக, ஸ்ரீ வியாசராஜ தீர்தராக அவதரித்து, புகழ்பெற்று விளங்கிய விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரபல மன்னனான கிருஷ்ணதேவராயருக்கு ராஜகுருவாக விளங்கினார்.

    இறுதியாக, ஸ்ரீ இராகவேந்திரராகப் பிறந்தார்.

    ஸ்ரீ இராகவேந்திரர் செய்த இன்னும் சில அற்புதங்கள்:-

    1. Once while he was touring Kumbakonam along with his wife, Sri Venkatanatha and his family was invited to attend a function. Unfortunately, the hosts did not treat him well and wanted him to earn his food by running a chore. So they asked him to make some sandalwood paste for all the invitees. Sri Venkatanatha per his habit, was chanting stotras and mantras while preparing sandalwood for Tilaka. When the guests applied this paste, it induced a burning sensation all over their bodies. Surprised by this, the hosts sought a clarification from Venkatanatha. He replied that the burning sensation was due to the Agni Suktam (hymn for the worship as defined in the Esoteric Vedas) that he was chanting while preparing sandalwood and thus eternal power of Vedic Mantras revealed itself. This happens only when chanted with absolute dedication and devotion. The power is enhanced since it was chanted by someone as virtuous and devoted to Bhagwaan Hari as himself. Upon realizing his devotion and power, the host apologized profusely to Sri Venkatanatha and sought his forgiveness.

    Sri Venkatanatha then prepared the paste again but chanted the Vedic Mantra to Varuna (Vedic rain gods) this time. It has been recorded that when the guests applied this paste, they were awash with a sense of being drenched in rainwater, reaffirming Sri Venkatanatha’s power of devotion.

    2. During Sri Raghavendra Swami’s time at Kumbakonam, the Tanjore district as a whole was reeling under the effects of a severe 12 year long drought. The Maharaja of Tanjore approached Swamiji for spiritual solace and was advised to perform some Yagnas. No sooner were these rites performed, was the region flush with rain and prosperity. As a mark of gratitude, the Maharaja gifted the Matha with a necklace embellished with precious stones.

    Swamiji offered the necklace as a contribution to a yagna that he was performing then. The Maharaja took affront at this action. When Swamiji realized this, he immediately put his hand into the homa kunda and retrived the necklace in a condition identical to which it was given to him by the King. Neither the necklace nor Swamiji’s hand showed any indication of having been in a raging fire. This incident only served to reaffirm the greatness of Swamiji and converted the Maharaja of Tanjore into an ardent Bhakta.

    https://en.wikipedia.org/wiki/Raghavendra_Swami

    முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அய்யா அவர்களுக்கு:-

    //எனக்கு நீண்டகாலமாக ஒருஐயம் இருந்து வருகின்றது. அறிந்தவர் தீர்த்து வைக்க வேண்டுகின்றேன். சங்கரரின் அத்துவிதத்தைப் பின்பற்றுகின்ற வேதாந்திகள் பிராமணர் அல்லாதவர்கள் உண்டு. பிராமணர் அல்லாதவர்களைக் கொண்ட தமிழ் வேதாந்த மடங்கள் உண்டு. அவ்வாறே விசிட்டாத்துவத்தை அனுசரிக்கும் பிராமணர் அல்லத மடங்கள் உண்டு. விசிட்டாதுவத்தை அனுசரிக்கும் பிராமண திருமடத்தலைவர்கள் பிராமணர் அல்லாதவர்களுக்கு முத்திராசமஸ்காரம் அளித்து சீடர்களாக ஏற்றுக் கொள்ளுவதும் உண்டு. இந்த நிலை மாத்துவ மடங்களில் உண்டா? பிராமணர் அல்லாத மாத்துவர்கள் உண்டா?//

    சங்கரர், இராமானுஜர், மத்வர் மூவரும் வேதாந்த மதத்தின் ஆணிவேர் என்று உங்களுக்குத் தெரியும். இம்மூவரில், இராமானுஜர் மட்டுமே சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடினார். சங்கரரும் மத்வரும் ‘ஓரளவுக்கு’ சாதிக்கொடுமைகளை எதிர்த்தாலும், இராமானுஜரைப் போல பெரிய புரட்சிகள் எதையும் செய்யவில்லை. அத்வைதத்தில்கூட , சங்கர மடங்களிலிருந்து வெளியே வந்த துறவிகள் சிலர் தொடங்கிய மடங்களில்தான் எல்லோரையும் ஏற்றுக்கொண்டார்கள். இவற்றில் சுவாமி தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜ்), சுவாமி சின்மயானந்தா, சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் தத்துவங்களாலும் புரட்சிகளாலும் இன்று அத்வைதம் சாதி வேறுபாடுகளை கடந்து எல்லோரையும் தழுவிக்கொள்ளும் நிலையில் உள்ளது. மத்வ மதத்திலும் இப்படிப்பட்ட புரட்சிகள் ஏற்படவேடும் என்று ஸ்ரீ இராகவேந்திறரை வேண்டுகிறேன்..
    ஆனால், அவரது முந்தைய அவதாரத்தில் ஸ்ரீ வியாசராஜராகப் பிறந்த பொழுது அவர் பிராமணரல்லாத குருபர் சாதியைச்சேர்ந்த கனகதாசரை தனது சீடராக ஏற்றுக் கொண்டார். அவரை ஒரு முறை உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் அனுமதிக்காதபோழுது, அந்த கிருஷ்ணரின் சிலைவடிவமே இவருக்காக திரும்பி நின்றது. புகழ்பெற்ற கன்னடப் பாடலான “கிருஷ்ணா நீ பேகனே பாரோ” கனகதாசரால்தான் இயற்றப்பட்டது.

    ஸ்ரீ வியாசராஜர் ஜீவ சமாதியடயும்போழுது கனகதாசரிடம் “கனகா, உனக்கும் எனக்கும் இன்னும் ஒரு பிறவி மீதமுள்ளது. அதில் நீ ஹரிஜனாக வந்து என் மூலமாக மோட்சத்தை அடைவாய்” என்று சொன்னதாகவும், கனகதாசரே ஹரிஜனாக வந்து அந்த அட்சதை நிறம் மாறிய சம்பவத்தை நீங்கள் ‘இராகவேந்திரர்’ திரைப்படத்தில் பார்த்திருக்கலாம்!

    //தமிழகத்தில் , சிதம்பரத்துக்கு அருகில் உள்ல புவன்கிரியில் பிறந்த இராகவேந்திரருக்குத் தமிழிடத்திலும் தமிழரிடத்திலும் ஏதேனும் தொடர்பு இருந்துவருகின்றதா?//

    அய்யா, இக்கேள்விக்கு நீங்களே விடையும் அறிவீர்கள். புவனகிரியில் பிறந்து, மதுரையில் கல்வி கற்று, கும்பகோணத்தில் துறவு பெற்று, ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் மற்றும் பல புண்ணிய ஸ்தலங்களை வசித்த மகானுக்கு தமிழைப் பற்றித் தெரியாமலா இருக்கும்? எனினும், எனக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தை இங்கே கூறுகிறேன். ஒரு சமயம் (மதுரையிலோ தன்ஜாவூரிலோ) ஸ்ரீமான் அப்பையா தீட்சிதரின் பேரனான ஸ்ரீ நீலகண்ட தீட்சிதருடன் வாதிட்டார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

    நன்றி,
    பாலாஜி.

  18. ராகவேந்திரர் வெறும் சந்நியாசி அல்லர் – அவர் ஒரு ஆசார்யர் – அவரை குரு ராகவேந்திரர் என்றல்லவா அனைவரும் அழைக்கிறார்கள்

    காலையும் மாலையும் மடத்தில் விளக்கேற்றி ஓம்கார ஜபம் செய்தாலே சந்நியாசி எனப்படுவார் [ சன்யாசிகளின் வகைகள் பற்றின விவரங்கள் ப்ரிஹத் உபநிஷத்தில் உள்ளது]

    ஆசார்யர் என்பவருக்கும் வெறும் மடத்து சன்யாசிக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது

  19. //அட்டகாசமான வசனம்! சினிமாவைத் தவிர நமக்கு வேறெதையுமே மேற்கோள் காட்ட வரமாட்டேன் என்கிறதே! ஏன்?
    //

    வருவதில் பிரச்சனையை இல்ல நண்பரே – படிப்பவருக்கு அது தான் தெரிகிறது என்ன செய்வது – முண்டக உபநிஷத்திலிருந்து குடுத்தால் புரியும் என்கிறீர்கள்?

  20. மந்த்ராலயம் கிராமத்தில் இருக்கும் பிரிந்தவன இடத்தை ஆக்கிரமிக்கும் பொருட்டு ஈஸ்ட் இந்திய கம்பெனி இன் லார்ட் sir தாமஸ் மன்றோ மந்திராலயம் வந்தார்.அந்த நேரம் அங்கு பூஜை நடந்து கொண்டு இருந்தது.பூஜையில் கலந்துகொண்டு நடப்பதை கவனித்து கொண்டுஇருந்தார். அந்த நேரம் பிருந்தாவனம்தில் இருந்து ஒரு துறவி வெளிப்பட்டு தன்னிடம் ஆங்கிலத்தில் தனக்கு வேண்டிய விசயங்களை உரையாடிவிட்டு தன்னை ஆசிர்வதித்து மந்திர அக்ஷதையை தந்ததாக சொல்லி அருகில் உள்ளோரிடம் காட்ட அவர்கள் யாரும் வரவில்லையே என கூற வந்தது ராகவேந்திர சுவாமிகள் என புரிந்தது. இதன் பின்னர் தாமஸ் மன்றோ உத்தரவை ரத்து செய்தார்.இந்த விபரத்தை 200 வருட முன்னதைய சென்னை மாகாண காசெட் இல் 15 ம் பிரிவில்அதோனி தாலுகா பக்கம் 213 இல் இன்றும் காணலாம் . இதை எழுதியதன் கரணம் நம்மவர்கள் சொன்னால் குட நிறையபேருக்கு நம்பிக்கை வருவதில்லை.மகிமைகள் நடந்துகொண்டே தான் உள்ளது. உணரத்தான் முடியும்.வாதிடமுடியாது.இந்த கட்டுரை மே 2000 ஜோதிடபூமி புத்தகத்தில் பக்கம் எண் 58 இல் வெளிவந்து உள்ளது.

  21. aravindan neelakandan 1 July 2010 at 2:08 pm said

    //// ஞானி. ஆனால் அவரை நாம் இன்றைக்கு அவரது அருளிச்செயல்கள் மூலமாக மட்டுமே அறிந்து கொள்கிறோம். அவரது தத்துவ இலக்கியங்கள் என்ன? இந்திய தத்துவ மரபில் அவருடைய இடம் என்ன? இவற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு குறைந்தபட்ச வாய்ப்பு கூட அங்கே இல்லை. அருளிச்செயல்களுக்கு மாஸ் அப்பீல் இருக்கலாம். ஆனால் இன்றைய அறிவியக்கம் சார்ந்த இந்துவுக்கும் ஏதாவது வேண்டாமா? //////

    அநீ ஐயா, இதை நீங்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? த்வைதத்தின் த்த்துவ இலக்கியங்கள் இங்கு இல்லை, அவருக்கு ஒரு தத்துவ மரபு இல்லை என்கிறீர்களா? அந்த தத்துவ ஞானத்தை அறிவதற்கும், அதை பரப்புவதற்கும், அதை விவாதிப்பதற்கும் ஆயிரமாயிரம் ஞானத்தேடலர்கள் இன்றும், நேற்றும் என்றும் இங்கே இருக்கிறார்கள். தங்களுக்கு வேணுமானால் அவை இல்லாதத்து போன்று இருக்கலாம். வேதாந்த தத்துவங்களைத் தெறிந்துகொள்வதற்கான வாய்ப்பு கோயில்களிலோ, சமாதிகளிலோ என்றுமே இருக்காது. அன்பே சிவம் என்று சிவன் கோயிலில் எழுதியிருந்தாலும் அங்கே சிவஞானபோதம் பேசப்படாது, சடங்குளுலும், சம்பிரதாயங்களும்தான் பிரதானமாய் தெரியும். மேலும், சடங்குகளும், வழிபாடுகளும் முக்கிய வடிகாலாக அமைந்த மதக்காரர்கள்தாம் இந்துமத்தின் ஆணிவேர். தத்துவ்விசாரிகள் எப்போதுமே பிரதான இடங்களை பிடிப்பதில்லை. இரண்டிற்கான தேடல்களும் வெவ்வேறு, தேடுபவர்களும் வெவ்வேறு, இரண்டின் அனுபவங்களும் வெவ்வேறு. விரல் விட்டு எண்ணுபவனுக்கு பைனாரி சிஸ்டம் படிப்பிக்கப்படவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஒன்றை மட்டம் என்றோ, இல்லை ஒன்று இல்லவே இல்லை, அந்த “சன்னியாசி” ஒரு சடங்கில் அடங்கிவிட்டார் என்றே சொல்வது சரியில்லை. அவர் நிறுவிய த்வைத த்த்துவ விசாரம் இந்து மதம் உள்ளவரை நிற்கும்.

    //// சில அருளிச்செயல்களின் வரலாற்று பரிமாணங்கள் நமக்கு சமூக ரெலவன்ஸ் கொண்டவையாகக் கூட இருக்கலாம். உதாரணமாக கும்பகோணத்து ஆலயங்களை மொகலாய படையெடுப்பிலிருந்து அவர் ஒரு அற்புத செயல் மூலம் காப்பாற்றினார் என சொல்லப்படுகிறது. அதில் ஒரு வரலாற்று உண்மை புதைந்திருக்கலாம். அதைக் குறித்து ஆராய்ச்சி செய்ய நமக்கு தோன்றவில்லை. வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டத்தில் இஸ்லாமுக்கு ஹிந்துக்கள் மதமாற்றப்படுவதை அவர் தடுத்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் அற்புதச்செயலில் விழுந்த ஃபோகஸ் லைட்டில் நமக்கு தெரியாமலே போய்விட்டது. ////

    அதாவது, அவர் வாய்வழிச்செயல்களாக இப்போது நமக்கு தெரிய வருபவை எல்லாம் பொய்கள். அவற்றை நாம் இன்னும் எப்படி “ஆராய” வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒருவேளை, யாராவது பரங்கியன் வந்து ஆராய்ச்சிக்கட்டுரை வாசித்தால் ஒத்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன். இந்த மண்ணின் வரலாறு பதியப்பட்ட விதம் முற்றிலும் வேறானது, சமூகத்தை சார்ந்த மக்களின் மனத்தோடு ஒன்றிய வாழ்க்கையாய் அந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது உங்களுக்கு அவசியம் புரியும் என்றே நினைக்கிறேன்.

  22. ///// நான் நம்புவதை, எனக்கு சரி என்று பட்டதை எழுதினேன். இப்போதும் நான் எழுதியதை சரி என்று நம்புகிறேன். ////

    ஹப்பி ஐயாவிற்கு நம்பிக்கை கிடையாது என்று சொன்னவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நிறையவற்றை நம்புகிறார், ஆமாம்.

  23. அற்புதங்களை எல்லோரும் நம்பியே ஆக வேண்டும் என்று இல்லை – அதை மறுப்பதே இந்த கட்டுரையின் மைய கருத்து போல தோற்றம் தருகிறது அற்புதங்களை நம்பாமை என்பது இன்று ஆபிராமிய மதஹ்தின் மீது நாம் கொண்டுள்ள மாற்றுக் கருத்துகளால் ஹிந்து மதம் அதற்க்கு எதிரான ஒரு நிலைபாட்டை கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணத்தினால் வருகிறதோ என்று தோன்றுகிறது – ராகவேந்திரரின் அறிவுவியக்கம் சார்ந்து கூறுவதை கோடிட்டு காட்ட விரும்பி இருந்தால் இன்னும் கூட ஆராச்சி செய்திருக்கலாம், வெறும் ஆதங்கத்தை மட்டுமே கொட்டி என்ன பயன் – ராக வேந்திரர் அறிவியக்கம் சார்ந்து இன்னென்ன செய்தார் ஆனால் அவரை வெறும் அற்புதங்கள் நிகழ்த்தும் ஒருவராகவே நாம் பார்க்கிறோம் என்று ஆராய்ந்து சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே – ராமானுஜரை பற்றி பரவலாக உள்ள எந்த புத்தகத்திலும் (சரிதங்கள்) அவர் அறிவியக்கம் சார்ந்து செய்த எதையும் படித்து விட முடியாது – அதுவும் hagiography போலவே தான் இருக்கும் – அதை மட்டும் படித்துவிட்டு ஆதங்க பட்டு இப்படி எழுதினால் என்ன பயன்? மகான்களின் சரிதங்கள் hagiography போல தான் இருக்கும் , இது அனைவரும் அறிந்த உண்மையே – – சங்கர விஜயத்தில் அத்வைத ரசம் இருக்கிறதா அல்ல hagiography இருக்கிறதா

    க்ரிஷனரை பற்றி ஆழ்வார்கள் ஆயிரம் ஆயிரம் பாடினார்கள் – அதில் ஒரு சில பாசுரங்களே கிருஷ்ணர் கீதா உபதேசம் செய்தார் – உபநிஷத்தின் சாரத்தை இன்னதாக சொன்னார் என்று இருக்கும் – மற்றவை எல்லாம் செயற்கரிய செய்தலை பற்றி தான் – இதற்காக ஆழ்வார்களை கிண்டலடித்து என்ன பயன் –
    எந்த ஒரு படைபிற்க்குமே 1) subject 2) Adikari (audience) 3) Relevance 4) Relation between these என்ற நான்கு விஷயங்கள் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது – மகான்களின் சரித்திரமும், பாசுரங்களும், திருமறைகளும் மேற்கொள்ளும் subject, audience, Relevance, Relation எல்லாமே வேறாக இருக்கும் பொழுது அதில் ஏன் அறிவியக்கத்திற்கு சான்று தேட வேண்டும், தேடி ஏமாற வேண்டும்

    குறிப்பாக இது தூஷனை போலவே தான் உள்ளது [தூஷிக்கிறார் என்று சொல்லவில்லை]
    //
    எனது மந்த்ராலயப் பயணம் எனக்கு பெரிய மனநிறைவைத் தந்ததா என்றால் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஒரு திருப்பதி தரிசனம் போன்ற உணர்வு என்னை ஆட்கொள்ளவில்லை
    //
    – இப்படி ஒரு அனுபவம் கிடைக்கவில்லை என்பதற்காக அதை எழுத வேண்டிய நிர்பந்தம் என்ன? தன்னை இதை எல்லாம் நம்பாதவன் என்று காட்டி கொள்வதற்க்கா? அதை திருப்பதியுடன் ஒப்பிடும் நோக்கம் என்ன – இதை படிப்பவர் பலரும் என்ன நினைப்பார்கள்? அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்ற மனப்பான்மையில் தவறேதும் இல்லைதான்

    கட்டுரை ஆசிரியர் ராகவேந்திரரை எங்குமே நேரடியாக குறைத்து கூறவில்லை என்பது உண்மையே – ஆனால் இக்கட்டுரை அவரை பற்றி இல்லாமல் அற்புத செயல்களை எதிர்க்கும் ஒரு கட்டுரையோ என்று என்ன வைக்கிறது

    //
    மந்த்ராலயத்தில் பிராமணர்கள் (என்று கூறிக்கொள்பவர்கள்) தனி, பிராமணர் அல்லாதவர்களுக்கு தனி என்று தான் அன்னதானம் அளிக்கப்படுகிறது. இவை அந்த மகான் ஏற்படுத்திய வழிமுறைக்கே எதிரானது
    //

    இதற்க்கு எந்த சமய மடமும் விதி விலக்கல்ல – உள்ளே அனுமதித்து தனியாக வேணும் பரி மாறுகிறார்களே சந்தோசம் தான்

    இதற்க்கு ஒரு அனுஷ்டானம் சார்ந்த காரனுமும் உண்டு என நினைக்கிறேன் – அதை உடுப்பியில் கடைபிடிப்பது பற்றி தெரியும் [எல்லோருக்கும் இலையில் உணவு பரி மாறிய விட்டு பகவானுக்கு உணவு கண்டருல்வது, அதன் பின் அனைவரும் உண்பது] – அது மாத்வ சம்பிரதாய பொது அனுஷ்டானமா என்று எனக்கு தெரியவில்லை

  24. இந்தக் கட்டுரையில் ஹரன் பிரசன்னா அவர்களின் ஆதங்கம் எனக்குப் புரிகின்றது. இராகவேந்திரர் வெறும் சாதாரண சித்தரோ, சந்நியாசியோ அல்லர். அவர் மாத்துவ சித்தாந்தத்தின் நிறுவனர். நீலகண்ட தீட்சிதருடனும் தத்துவ வாதம் புரிந்தவர் என்று பெருமையாகக் கூறப்படுபவர். அவருடைய வாழ்க்கையை வெறும் அற்புத நிகழ்ச்சிகளின் தொகுதியாகக் கூறி முடிப்பது, கிறித்துவர்களின் சமயப் பிரச்சார உத்தி போன்றல்லவா உள்ளது? நம் பாரத நாட்டில் அவதரித்த ஞானியர் பலரும் எண்ணற்ற அற்புதங்களைத் தங்களை நம்பினவரைக் காப்பாற்றச் செய்துள்ளனர். அற்புத நிகழ்ச்சிகள் யார் பொருட்டு நிகழ்த்தப்பட்டனவோ அவர்களுக்கே உரியன. அவை பொது விதியாக ஆகா. இராகவேந்திரரின் திருவடி மண் பட்டுப் பிழைக்க வேண்டிய புண்ணியம் திரு பாலாஜிக்கு இருந்தது. அதனால் அந்த அற்புதம் நிகழ்ந்தது. இதுவே விதி என்றால் அந்த மண் எல்லாருடைய இறப்பையும் நீக்குமா?நோய் நீக்குமா? மருத்துவர்களே வேண்டியதில்லையே. திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் போன்ற ஆதீன முதல்வர்களும் தஞ்சை மராட்டிய மன்னர்களாட்சியில் இத்தகைய அற்புதங்கள், சித்துக்கள் நடத்தினர் என்று அவர்களுடைய வரலாறுகள் கூறுகின்றன. சித்துக்கள் , அற்புதங்கள் பாமர மக்களின் கவனத்தை ஈர்க்கும். கற்றோர் அற்புத நிகழ்ச்சிகளுக்கு ஓரளவே மதிப்புத் தருவர். வெளியில் அதிகம் தெரியாத ‘அழுக்குச்சாமிகள்’ என்ற ஞானியின் அருள் என் தந்தையாரையும் எங்கள் குடும்பத்தையும் ஈடேற்றியது. வேட்டைகாரன் புதூர் என்னும் ஊரில் உள்ள அவரது சமாதிக்கு இன்றும் பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் வந்து பயன்பெறுகின்றார் என்று அங்குள்ள மக்கள் கூறும் செய்தி.

  25. எது எப்போடியோ, தமிழ் இந்துல இந்த மாதிரி கட்டுரைகளை படிக்க வருத்தமா இருக்கு. 🙁

    ராகவேந்திர ஸ்வாமிகள, அவரோட மகிமைகள அறிவியல் மூலமா, வரலாற்று
    பார்வையோட புரிஞ்சிக்க முறய்சி பண்றிங்க.

    பக்தி ஒன்ன தவற, அவர வெற எந்த வழியிலையும் புரிஞ்சிக்க முடியது.

  26. //
    அதாவது, அவர் வாய்வழிச்செயல்களாக இப்போது நமக்கு தெரிய வருபவை எல்லாம் பொய்கள். அவற்றை நாம் இன்னும் எப்படி “ஆராய” வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒருவேளை, யாராவது பரங்கியன் வந்து ஆராய்ச்சிக்கட்டுரை வாசித்தால் ஒத்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன். இந்த மண்ணின் வரலாறு பதியப்பட்ட விதம் முற்றிலும் வேறானது, சமூகத்தை சார்ந்த மக்களின் மனத்தோடு ஒன்றிய வாழ்க்கையாய் அந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது உங்களுக்கு அவசியம் புரியும் என்றே நினைக்கிறேன்.
    //

    அரவிந்தன் அவர்கள் அப்படி சொன்னதாக தெரியவில்லையே – அவர் அற்புதங்களையும் தாண்டி என்னென்ன நடந்திருக்கிறது என்பதை முழுவது புரிந்து கொள்ள முயல வேண்டும் – அதிலிருந்து நமக்கு புதிய புரிதல்கள் கிடைக்கும் என்று தானே சொல்கிறார்

    //
    ஒருவேளை, யாராவது பரங்கியன் வந்து ஆராய்ச்சிக்கட்டுரை வாசித்தால் ஒத்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன்
    //

    இது கொஞ்சம் ஓவர் அரவிந்தன் அவர்களின் கட்டுரைகளை படித்துவிட்டு தான் இதை சொல்கிறீர்களா? அவர் பரங்கியனை திட்டும் விடமே அலாதி

  27. அநீ ஐயாவின் அட்வகேட் சாரங்க் ஐயா அவர்களே,

    /// அரவிந்தன் அவர்கள் அப்படி சொன்னதாக தெரியவில்லையே – அவர் அற்புதங்களையும் தாண்டி என்னென்ன நடந்திருக்கிறது என்பதை முழுவது புரிந்து கொள்ள முயல வேண்டும் – அதிலிருந்து நமக்கு புதிய புரிதல்கள் கிடைக்கும் என்று தானே சொல்கிறார் ////

    அவர் எழுதியதுதான் மேலேயே கொடுத்திருக்கிறதே. குருவின் தத்துவ இலக்கியங்களையும், மரபையும் தெரிந்துகொள்வதற்கு “குறைந்த பட்ச வாய்ப்பு கூட” இல்லை என்று தெளிவாகத்தானே சொல்லியிருக்கிறார். அப்புறம் நீங்கள் ஏன் போர்த்துகிறீர்கள்?

    /// இது கொஞ்சம் ஓவர் அரவிந்தன் அவர்களின் கட்டுரைகளை படித்துவிட்டு தான் இதை சொல்கிறீர்களா? அவர் பரங்கியனை திட்டும் விடமே அலாதி////

    எனக்கு ஐயா மீது அதிக பரிச்சயம் இல்லை. அவர் இணையத்தில் எழுதியதின் மூலமாகத்தான் அவரை படித்திருக்கிறேன். ஆனால், அவர் லெவலே தனி. அவர் 40 எர்ட்ஸ் படிச்சு நான்கு நாட்கள் தலைசுற்றியது. அதனால், என் புரிதலில் தப்பு இருந்தால் சந்தவ்யஹ!

    ஆனால், “ஆராய்ச்சி “பண்ணிதான் குருவின் அனுபவத்தை பெறவேண்டும் என்று அவர் சொல்வது என் பாமர மனசுக்கு புரியவில்லை. இதுவரை பண்ணிய ஆராய்ச்சிகளில் எல்லாம் – சரஸ்வதியாகட்டும், அயோத்தியாகட்டும், ஹரப்பாவாகட்டும் இல்லை நம்மூர் ராமர் பாலமாகட்டும் – ஆராய்ச்சியினால் இறுதியானது என்று ஏதாவது இருக்கிறதா? நம்பிக்கை இல்லாமல் சமாதிகளுக்கு பிக்னிக் போய்ட்டு வருபவர்கள் ஆராய்ச்சிக்க்ட்டுரையில் நம்பி நமஸ்காரம் பண்ணி விடுவார்கள் என்று என்க்கு நம்பிக்கையில்லை.

    இத்துடன் இந்த சீரியலை முடிச்சுக்கிறேன். நன்றி

  28. ஜயராமன் சார், எனக்கு ஒரு சந்தேகம், தீர்த்து வைப்பீர்களா?? உங்களின் கடைசி இரண்டு மூன்று மறுமொழிகளை படித்தால் நீங்கள் இராகவேந்திர சுவாமிகளின் பக்தன் என்று புலப்படுகிறது. பின்பு ஏன் உங்கள் முதல் மறுமொழி நக்கலாக (with a sarcastic tone) எழுதியிருக்கிறீர்கள்? நீங்கள் இந்துவா இந்து-விரோதியா என்று புரியவில்லையே???

  29. // மகான்களின் மீது நாம் பெரும் மதிப்பு கொண்டிருக்கும் போதும், குதர்க்கமாக இல்லாமல் நேர்மையான முறையில் வரலாற்றுத் தகவல்கள் பற்றிய கேள்விகளை எழுப்புவது தவறு அல்ல என்று நினைக்கிறேன். இவற்றை நாம் எழுப்பா விட்டால், இந்து எதிரிகள் தங்களுக்கே உரிய திரிபுகளுடன் இவற்றை சித்தரிப்பார்கள். //

    இது நியாயமான வாதம் என்றாலும் ஹரனின் வார்த்தை பிரயோகம் வேறு மாதிரி எண்ணத்தை உருவாக்குகிறது.
    “நாடகத்தனமான நிகழ்வுகள்” என்கிறார். இப்படி பார்த்தால் ராகவேந்திரர் மட்டுமல்ல…கிட்டத்தட்ட எல்லா மகான்களின் வாழ்க்கையிலும் இந்த “நாடகத்தனம்” அதிகம் இருக்கும். அதனால் “நான் ‘நேர்மையான முறையில்’ கேள்வி கேட்க்கிறேன்” என்று எல்லா மகான்களின் வாழ்க்கை செய்திகளையும் கேள்விக்குரியதாக ஆக்கி விடலாமா ?

    ஞான சம்பந்தருக்கு உமை அம்மை பால் கொடுத்தது “நாடகத்தனமானது” என்று அடுத்த கட்டுரையில் எழுதினால் , அதை நம் “இந்து எதிரிகள்” தங்கள் இணைய தளத்தில் போட்டு “பாருங்கள்..ஹிந்துக்களுக்கே குழப்பம்” என்பார்கள்..இதெல்லாம் தேவையா ? அல்லது ஹரன் போன்றவர்களின் அறிவுக்கு உட்பட்டு தான் மகான்களின் வாழ்க்கை இருந்திருக்க வேண்டுமா ?

    ரஜினிகாந்த்தின் “ராகவேந்திரர்” படத்தில் ராகவேந்திரர் தமிழில் பாடுகிறாராம்..அதனால் அது உண்மை இல்லையாம்..என்ன ஒரு கண்டுபிடிப்பு !!
    “திருவிளையாடல்” படத்தை பார்த்து விட்டு “பாட்டும் நானே பாவமும் நானே” என்று சிவ பெருமான் முன் ஒரு காலத்தில் டி.எம்.எஸ் குரலில் பாடினாரா ? என்று கேட்பார் போலிருக்கிறது.

  30. அனைவருக்கும் நன்றி.
    ஸ்ரீ ராகவேந்திரரைப்பற்றி படிக்க, சிந்திக்க வைத்தமைக்கு .
    எனக்கு ஷிர்டி பாபா எப்படியோ அப்படியே இவரும்.
    திரு முனைவர் அய்யாவுக்கு நன்றி-இப்போது பல மகான்களை ப்பற்றி படித்து வருகிறேன். அழுக்கு சாமிகள் பற்றி அறிந்து மகிழ்ச்சி.
    அற்புதங்களை பற்றி : இவை மக்களை கவர அல்ல . உண்மையான மகான்கள் உலக வாழ்க்கைக்கடலில் பாமரர்கள் சிக்கித்தவிக்கையில்,
    அவர்களை கைதூக்கி விட்டு பின்- இதைத தாண்டி ஓர் உண்மை உள்ளது -கண்ணீரைத் துடைத்துக்கொள் -எழுந்திரு- பரமாத்மா வடிவமான நான் இருக்கிறேன் உனக்கு- என்று குரு வடிவாய் அந்த பரமாத்மாவே வந்து தடுத்தாட்கொள்ளும் அற்புதம்.
    ராகவேந்திரர் , ஷிர்டி பாபா, பூண்டி சித்தர், ரமணர் ,இன்னும் பலர் அந்தந்த கால த்தேவைகளுக்கேற்ப அவதாரம் செய்கிறர்கள்.
    அனலிசிஸ் தேவை , ஒப்புக்கொள்கிறேன்- ஆனால் சில விஷயங்கள் அதற்கு அப்பாற்பட்டவை.
    மடங்களில் ஜாதி பேதம் கூடாது -நாம் ஒன்று பட வேண்டிய நேரம் இது.
    அந்த மகான்களே இப்புண்ணிய நாட்டைக் காத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கும் சக்தியை நமக்கு அளிக்கட்டும்.
    குருவே சரணம்.

  31. ஜெயராமன் அவர்களே

    அரவிந்தன் தமிழில் தெளிவாக எழுதியதால் தான் உங்களுக்கு புரியவில்லை என்று நினைத்தேன் – இப்போது புரிந்துவிட்டது – உங்கள் தலை சுற்றல் நின்றால் தான் எல்லாம் சரியாகும்

    law படிக்காத என்னை advocate ஆக்கிய பெருமை சிறப்பு எல்லாம் உங்களையே சேரும்

  32. கட்டுரை மிக அருமை. பக்தர்களில் பல விதம். சிலருக்கு தத்துவம் பிடிக்கும். சிலருக்கு அற்புதங்கள் பிடிக்கும்.

    சந்நியாசிகளின் சரிதம் இப்படி கலந்து தான் இருக்கிறது. நம் காலத்தில் பகவான் சத்ய சாயி பாபா இல்லையா…

  33. ஹரன் அவர்களே

    நீங்கள் நம்பவேண்டும் என்று ராகவேந்திரர் மகிமைகள் செய்யவில்லை..நீங்கள் ஒரு கால் தூசு கூட கிடையாது.
    உங்கள் அரைகுறை ஞானதுடன் ராகவேந்திரர் உரை களை படித்து எதாவது எழுதி தமிழ் ஹிந்துவுக்கு களங்கத்தை எற்படுதவேண்டம்

  34. திரு ஹரன் ப்ரஸன்னாவின் கட்டுரையும் பின்னூட்டங்களும் படிக்க விருந்தாகவும் சிந்திக்கவும் வைத்துவிட்டன. நன்றி. ப்ரஸன்ன கட்டுரையில் வரிக்கு வரி தன் நம்பகமின்மையை பதிவு செய்திருக்க வேண்டாம். டிச்க்ளைமர் போல் கீழே குறிப்புகள் எழுதியிருக்கலாம். பாலாஜி அவர்களின் நீண்ட பின்குறிப்பும் சுவை. நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவைகள் வம்ச வம்சமாக வரும்போது additions / omissions இருக்க வாய்ப்பிருக்கிறது. இவற்றை யாராலும் உண்மையென்றோ பொய் என்றோ வாதிட்டு நிரூபிக்க முடியாது. சமீப கால சரித்திரங்களையே நம்ப முடியவில்லை. (விகடன் பொக்கிஷத்தில் சோ அவர்களின் காலப்ப் பெட்டகம் பற்றி வந்ததைப் படித்திருப்பீர்கள்!).
    Miracles பற்றி நான் படிக்கும்போதெல்லாம் எனக்கு நம்பிக்கை வருவதில்லை. ஆனாலும் சொல்பவர் / அநுபவித்தவரின் நம்பிக்கையை எப்படி கேள்வி கேட்க முடியும்? அவரவர் அநுபவம் அவரவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நம்மை மீறிய, நமக்கு மேற்பட்ட சக்தி தான் இறைவன். இந்த நம்பிக்கை ஒன்று போதும் எனக்கு.
    – ஜகன்னாதன்

  35. //இன்றைக்கு அவரது அருளிச்செயல்கள் மூலமாக மட்டுமே அறிந்து கொள்கிறோம். அவரது தத்துவ இலக்கியங்கள் என்ன? இந்திய தத்துவ மரபில் அவருடைய இடம் என்ன? இவற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு குறைந்தபட்ச வாய்ப்பு கூட அங்கே இல்லை//

    ஜெயராமன்,

    நான் குரு என்று பொதுவாக சொல்லவில்லை. சங்கர திக்விஜயம் இருக்கிறது கூடவே அவரது பிரம்ம சூத்திர பாஷ்யமும் கிடைக்கிறது. ஸ்ரீ ராமானுஜரின் அற்புத செயல்கள் நிறைந்த சரித்திரமும் கிடைக்கிறது கூடவே ஸ்ரீ பாஷ்யமும் இருக்கிறது. ஆனால் ஸ்ரீ ராகவேந்திரர் குறித்து அப்படி இல்லை. இதுதான் கட்டுரையாளரின் ஆதங்கம். நானறிய இந்த ஆதங்கம் சரியானதே. அடுத்ததாக இதுதான் நான் சொல்வது. இதனை தயவு செய்து திரிக்க வேண்டாம். நன்றி.

    எனக்கு தனிப்பட்ட முறையில் அற்புதச்செயல்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் அத்தகைய அற்புதங்களின் பின்னால் ஒரு வரலாற்று உண்மைக்கரு இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஊகம். அதற்காக அற்புதங்களை நம்பாதீர்கள் என நான் பிரச்சாரமும் செய்யவில்லை.
    அரவிந்தன் நீலகண்டன்

  36. //
    ஸ்ரீ ராமானுஜரின் அற்புத செயல்கள் நிறைந்த சரித்திரமும் கிடைக்கிறது கூடவே ஸ்ரீ பாஷ்யமும் இருக்கிறது. ஆனால் ஸ்ரீ ராகவேந்திரர் குறித்து அப்படி இல்லை.
    //

    அப்படிப் பார்த்தால் சுவாமி ஜெய தீர்த்தர் பிரபலமாக இருக்க வேண்டும். ஸ்ரீ மத்வருக்கு அடுத்த படியாக த்வைதத்தை அநேக வாத கிரந்தங்களால் வித விதமாக எழுதி குவித்து நிறுவியது அவர்தான்.

  37. திரு அரவிந்தன் அவர்களே,

    //
    சங்கர திக்விஜயம் இருக்கிறது கூடவே அவரது பிரம்ம சூத்திர பாஷ்யமும் கிடைக்கிறது. ஸ்ரீ ராமானுஜரின் அற்புத செயல்கள் நிறைந்த சரித்திரமும் கிடைக்கிறது கூடவே ஸ்ரீ பாஷ்யமும் இருக்கிறது.//

    அது சரி. உண்மை தான்.

    //
    ஆனால் ஸ்ரீ ராகவேந்திரர் குறித்து அப்படி இல்லை. இதுதான் கட்டுரையாளரின் ஆதங்கம். நானறிய இந்த ஆதங்கம் சரியானதே.
    //

    இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இத்தகு ஆதங்கத்திற்கு இடமே இல்லை. இதோ இலவசமாக டவுன்லோட் கூட செய்யும்படி இங்கு இருக்கிறது:

    1) சுவாமி ராகவேந்திரரின் நூல்கள்

    2) சுவாமி ராகவேந்திரரின் புருஷ சூக்த வியாக்கியானம்

    3) மத்வருடைய பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு ராகவேந்திரர் ஒரு டீகையையும் எழுதி உள்ளார். அது இன்றளவும் கிடைக்கிறது.

    இந்த நூல்களை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை என்பதனால் அவைகள் இல்லை ஆகி விடாது. அதை ஓதுபவர்கள் இருக்கிறார்கள். மக்களுக்குத் தான் அதில் அவ்வளவு ஆர்வம் இல்லை.

    சங்கரரின் பிரம்ம சூத்திர, கீதா, உபநிஷத், விஷ்ணுசஹஸ்ரநாம பாஷ்யம் பெயரளவில் பிரசித்தமானது என்றாலும், அதை எத்தனை ஸ்மார்த்த பையன்கள்/மாமாக்கள் ஒதியிருக்கின்றனர் என்று கேட்டுப் பாருங்கள். சங்கரருடைய நூல்களுக்கு இப்பொழுது பெரும்பாலும் பெயரளவில் வெறும் lip service மட்டும் தான் தருகிறார்கள்.

  38. நானும் ஆச்சாரியாரின் பக்தனே. ஆனால் 21ம் நூற்றாண்டில் ப்ராமினர்ஹளுக்கு என்றும் மற்றவரகளுக்கு என்றும் தனி தனியாக உணவு பரிமாறுவது தவறு அல்லவா. அதை மாற்றுவதற்கு என்ன பண்ண வேண்டும்?

  39. நான் கூற நினைத்ததை நண்பர் கந்தர்வன் கூறிவிட்டார். இராகவேந்திரரின் நூல்கள் வெளியில் தெரியவில்லை என்பதற்காக அவர் எதையும் எழுதவே இல்லை என்று கூறமுடியாது. அப்படி சொன்னோமானால், அவர் ஏதோ ஒரு கண்கட்டிவித்தைக்காரர்போல அதிசயங்களை மட்டுமே செய்தார் என்றே மக்கள் நினைப்பார்கள். அதுவும் அவரது கடைசி அறிவுரைகளை கேட்டபின்னுமா சொல்லமுடியும் (அவை இக்கட்டுரையிலேயே உள்ளனவே):-

    சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது. சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.

    மேலும்,

    * வேத பிரஸ்தனம்- என்னும் பொருள் பற்றி: வேதத்ரய விங்குதி (ரிக், யஜூர், சாம வேதங்கள்), மந்த்ரார்த்த மஞ்சரி, பஞ்ச சூக்த உரைகள், பத்து உபநிடதங்களில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்துக்கும் உரை.

    * பகவத் கீதாப்ரஸ்தானம்- கீதா விங்ருதி, கீதாப்ரமேய தீபிகையின் உரை, கீதாதாத்பர்யத்திற்கு உரை.

    * ஸூத்ரப்ரஸ்தானம்- தந்த்ர தீபிகா, ந்யாய முக்தாவளி, ப்ரஹ்ம ஸூத்ரபாஷ்ய தத்வப்ரகாசிகர்பாவதீபம், அனுபாஷ்ய டீகா, தசப்ரகரண டீகாவின் உரை.

    * தர்க்க தாண்ட வ்யாக்யானம்

    * வாதாவளீ வியாக்யானம்

    * ப்ரமாண பக்ததி வியாக்யா

    * ஸ்ரீராம சாரித்ர மஞ்சரி

    * ஸ்ரீ க்ருஷ்ண சாரித்ர மஞ்சரி

    * ஸ்ரீ மன்மஹாபாரத தாத்பர்ய நிர்ணய பாவ ஸாங்க்ரஹம்

    * அணுமத்வ விஜய வ்யாக்யானம்

    * ப்ராதஸ் ஸாங்கல்ப கத்யம்

    * பாட்ட சங்க்ரஹம்

    * ப்ரமேய ஸங்க்ரஹம்

    இவைதவிர ஸ்ரீமான் மத்வாச்சாரியார் எழுதிய ‘கீதா தாத்பர்யத்திர்க்கு’ “கீதா தாத்பர்ய நிர்ணயம்” எனும் உரையையும் எழுதியுள்ளார்!

    //சங்கர திக்விஜயம் இருக்கிறது கூடவே அவரது பிரம்ம சூத்திர பாஷ்யமும் கிடைக்கிறது. ஸ்ரீ ராமானுஜரின் அற்புத செயல்கள் நிறைந்த சரித்திரமும் கிடைக்கிறது கூடவே ஸ்ரீ பாஷ்யமும் இருக்கிறது. ஆனால் ஸ்ரீ ராகவேந்திரர் குறித்து அப்படி இல்லை. இதுதான் கட்டுரையாளரின் ஆதங்கம். நானறிய இந்த ஆதங்கம்//

    அரவிந்தன் நீலகண்டன் அய்யா, அப்படிச் சொல்லமுடியாது. எப்படி நீங்கள் இராகவேந்திர சுவாமிகளை சங்கரருடனும் இராமனுஜருடனும் ஒப்பிடுகிறீர்கள்? அவர்கள் ஸ்ரீமதாசாரியார்கள். புதிய மார்கங்களை ஸ்தாபித்தவர்கள். எனவே பிரம்ம சூத்திர பாஷியம், கீதா பாஷியம் மற்றும் உபநிடத பாஷியம் எழுதவேண்டியது அவர்களின் ‘தர்மம்’. ஆனால், இராகவேந்திரர் புது மதத்தை துவங்கவில்லையே! மாறாக ஏற்கனவே இருக்கும் ஒரு மதத்தின் வழி வந்தார். ஆனால், அப்படியிருந்தும் அவர் அடைந்திருக்கும் பிரசித்தத்தை பாருங்கள். தமிழ்நாட்டில் சங்கரரைத் தெரியும், இராமானுசரைத் தெரியும், மத்வாசாரியாரைத் தெரியுமா? எத்தனை பேருக்குத் தெரியும்? இராகவேந்திரரின் குருவின் குருவான ஸ்ரீ விஜயீந்திரரின் திக்விஜயத்திர்க்குப் பிறகுதான் விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு வெளியில் மாத்வ மதம் பரவியது! மத்வ சம்பிரதாயம் என்றாலே மத்வாசாரியாரைவிட இராகவேந்திரர்தான் பலருக்குத் தெரிகிறது. இதுவே அவர் செய்த பெரும் ‘சாதனை’ அல்லவா? (மன்னிக்கவும் வேறு வார்த்தை தெரியவில்லை).

    இன்று இந்து மதத்தை உலகத்தின் பட்டிதொட்டிக்கேல்லாம் கொண்டு சென்றுள்ள இஸ்கான் இமைப்பினர் கிருஷ்ணருக்கு இணையாக கருதும், கவுடிய மதத்தை ஸ்தாபித்ததாக கருதப்படும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ‘சிக்ஷாஷ்டகம்’ எனும் ஒரு சிறிய ஸ்லோகத்தைத் தவிர வேறு எதையும் எழுதவில்லையே! ஆயினும், அவர் இன்று கிருஷ்ணருக்கு அருகில் வைத்து “ஒரு காலத்தில் இந்து மதத்தை எள்ளினகயாடிய” வெள்ளையர்களும் வழிபடுகிறார்கள்.

    உலகத்தில், அனைத்து மானிடர்களும் பிரம்மத்தை தேடி அலைவதில்லை, பெரும்பாலானவர்களுக்கு தங்கள் வாழ்கை கஷ்டங்கள் தீருவதுதான் முக்கியமாக இருக்கிறது! இல்லையென்றால், மிஷினரிகள் செய்யும் ‘பொருளுதவி’ இல்லையென்றால் ஏன் பல இந்துக்கள் மதம் மாறுகிறார்கள்?

    சடங்கில்லா தத்துவம் வெறும் நாத்தீகம்; தட்துவமில்லா சடங்கு வெறும் மூடநம்பிக்கை.

    Religion without philosophy is Superstition and Philosophy without religion is dry atheism

    -Swami Vivekananda.

  40. ஹரன் அவர்களுடைய கட்டுரையைத் தொடர்ந்து பலமறுமொழிகள் வந்துள்ளன. அவைகளில் இருந்து சுவாமி இராகவேந்திரர் மாத்துவ சம்பிரதாயமாகப் பல நூல்கள் இயற்றியுள்ளார் என்றாலும் அவர் ஆற்றிய அற்புதங்களின் வழியேதான் பெரிதும் அறியப்பட்டுள்ளார் எனவும் தெரிகின்றது. சங்கரரின் அத்துவிதமும் இராமாநுஜரின் விசிட்டாத்துவிதமும் தமிழகத்தில் பரையுள்ளதுபோல மாத்துவம் இங்கு பரவவில்லை. அதனால் அந்தச் சித்தாந்தம் பற்ரிய அறிவு எனக்கு இல்லை. என்னுடைய ஐயம், சங்கரருடைய கொள்கையும் இராமாநுஜருடைய கொள்கையும் மக்கள் இயக்கமாக , பிராமணர் அல்லதாரிடையும் பரவியுள்ளது போல மத்துவ சம்பிரதாயம் பரவியுள்ளதா? சங்கராச்சாரியர் மடத்துடனோ வைணவ ஜீயர் மடத்துடனோ எந்தவிதத் தொடர்பும் அற்ற, பிராமணர் அல்லாத வேதாந்த வைணவ மடங்களும் பீடாதிபதிகளும் உண்டு. அவர்கள் செய்த நூல்கள் உண்டு. கைவல்ய நவநீதம், பிரம்மகீதை போன்ற தமிழ் நூல்களை பிராமண பீடாதிபதிகள் போற்றி மதிப்பதும் உண்டு. நாராயணகுரு, அமிர்தானந்தமயி போலப் பிற்பட்ட சமூகத்தில் பிறந்து தம்முடைய சமூகத்தை முன்னேறிய சமூகங்களுக்கு இணையாக வளர்த்த ஆன்மீகத் தலைவர்களின் கொள்கைகள் பெரும்பாலும் சங்கரைப் பின்பற்றியே அமைந்திருக்கக் காண்கின்றோம். இத்தகைய சமூகப் புரட்சியாளர்கள் மத்துவ சந்நியாசிகளாகத் தோன்றியுள்ளனரா?ஆண்டான் அடிமை எனும் பேத உணர்வோடு பக்தி செய்தல் இந்துக்கள் அனைவருக்கும் பொது. தமிழகத்தில் இல்லாதபோனாலும் கன்னடநாட்டிலாவது மாத்துவம் பிராமணர் அல்லாத சமூகத்தில் பரவியுள்ளதா? ஸ்மார்த்தத்துக்கும் அத்துவிதத்துக்கும் வேற்றுமை கண்டு, ஸ்மார்த்தத்தை சங்கரர் மடத்துக்கு ஒதுக்கிவிட்டு வேதாந்தத்தை பேணும் தமிழரின் வேதாந்த த்திருமடங்கள், இராமாநுஜ கூடங்கள் போன்ற அமைப்புக்கள் மத்துவ சம்பிரதாயத்தில் உள்ள்னவா? மாத்துவ சம்பிரதாய சாத்திரநூல்கள் சமஸ்கிருதம் அல்லாமல் மக்களின் நடைமுறையில் இருக்கும் மொழிகளில் உள்ளனவா? இஸ்கான் , மத்துவ சம்பிரதாய மதம் அல்ல.

  41. திரு பாலாஜி அவர்களே

    சடங்கு என்பது ritual சமயம் அல்லது மதம் என்பது religion
    எனவே,
    சமயமில்லா தத்துவம் வெறும் நாத்தீகம்; தத்துவமில்லா சமயம் வெறும் மூடநம்பிக்கை.
    – என்றே மொழிபெயர்க்கவேண்டும்.

    இது தவிர, நாத்திகத்துக்கும் சடங்கு இருக்கிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டு உள்ளது. எந்தச் சீர்திருத்தத் திருமணமும் ஏதாவது ஒரு தலைவரின் தலைமையில், ஒலிபெருக்கி முன்னிலையில், பலமணி நேர அரசியல் அல்லது அடாவடி அல்லது வெறுப்புப் பேச்சுக்களுடன் முடிந்தால் கருப்பு நிறச் சட்டைகளுடன் போலி அன்பும் பணிவும் காட்டி நடப்பதை நாடறியும். சடங்கு என்பது வழக்கமாக அல்லது வழிவழியாக குறிப்பிட்ட செயல்களைத் தவறாமல் செய்வதுதான். ஆக இவையெல்லாம் காலப்போக்கில் சடங்காகிப்போயின. மரணத்தில் படத் திறப்பும் அப்படியே. கொஞ்சம் பெரிய தலைவராகிவிட்டால் கோவில் கணக்குக்குச் சமாதி கட்டி உள்ளே நுழையும்பொது காலணியைக் கழட்டும் அளவுக்குச் சடங்கு உருவாகிவிட்டது. ஆக நாத்திகம் தனக்கென தனிப்பட்ட சடங்கை ஏற்கிறது. ஆனால் சமயத்தைத்தான் ஏற்கவில்லை.

  42. நன்றி. இந்த நூல்கள் இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும். அறியாமையை அகற்றிய நண்பர் கந்தர்வனுக்கு நன்றி. ஆனால் பாருங்கள் ஹரன் பிரசன்னா இதை எழுதி இந்த விவாதங்கள் நடந்திருக்கவில்லை என்றால் இவை தெரியாமலே போயிருக்கும். இந்த நூல்களையும் என்னைப் போன்ற சாதாரணமக்களிடம் சேர்க்க வேண்டிய பொறுப்பு மடத்துக்குதான் இல்லையா?

  43. திரு அரவிந்தன் அவர்களுக்கு,

    //
    ஆனால் பாருங்கள் ஹரன் பிரசன்னா இதை எழுதி இந்த விவாதங்கள் நடந்திருக்கவில்லை என்றால் இவை தெரியாமலே போயிருக்கும்.
    //

    நான் ராகவேந்திரர் நூல்களை ஆழ்ந்த ஆராய்ச்சி செய்தோ, பல பெரியோர்களிடம் கேட்டுக் கொண்டோ கண்டு பிடிக்கவில்லை. வெறுமென கூகிள்- தேடல் பண்ணித் தான் இதை எல்லாம் தெரிந்துக் கொண்டேன். ராகவேந்திரர் பற்றிய விக்கிபீடியா கட்டுரையின் கீழே “தொடர்புடைய சுட்டிகள்” பகுதியிலும் அவர் இயற்றிய நூல்கள் பற்றி உள்ளன.

    “இங்கு விவாதம் நடந்திராமல் இருந்தால் பலருக்குத் தெரியாமல் போயிருக்கும்” என்பதெல்லாம் இல்லை. தெரிய வேண்டும் என்று சின்சியரான, உண்மையான ஆர்வம் இருந்தால், தகவல்களை சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். கண்ணை மூடிக் கொண்டு effort எடுக்காமல் ‘இது இல்லை, அது இல்லை’ என்று வெறுமென கம்ப்ளைன் செய்வது நியாமில்லை. அதைத் தெரிவிக்கத்தான் எழுதினேன்.

    பத்து மைல் நடந்து சென்று பக்கத்து ஊரு புத்தக சாலையில் இரண்டு மணி நேரம் குடைந்து தூசி தட்டி புத்தகங்களைத் தேடி எடுக்கும் அவசியம் இன்று இல்லை. இன்று தகவல் வேண்டுபவர்களுக்குத் தேவையான கருவிகள் (கூகிள், இன்டர்நெட், டிஜிட்டல் லைப்ரரி ஆப் இந்தியா) அனைவருக்கும் சுலபமாகக் கிடைக்கிறது. அதை ஏனோ சத்-விஷயங்கள் அறிந்துக் கொள்ள முயற்சிக்காமல், கிசுகிசுச் செய்திகளையும் தேவையற்ற குப்பை விஷயங்களையும் அறிந்துக் கொள்ள உபயோகப் படுத்திக் கொண்டு வருகிறோம்.

    நன்றி.

  44. ///ஆனால் பாருங்கள் ஹரன் பிரசன்னா இதை எழுதி இந்த விவாதங்கள் நடந்திருக்கவில்லை என்றால் இவை தெரியாமலே போயிருக்கும். ///

    இந்தக் கட்டுரையை ஹரன் பிரசன்னா அவர்கள் எழுதப் பண்ணியதே ஸ்ரீ ராகவேந்திரரின் லீலை என்றே கருதுகிறேன்.

  45. //நேற்று நடந்துமுடிந்த செம்மொழி மாநாட்டில் என்னென்ன நடந்தது என்பதையே நாம் (நேரில் போகாமல்) சரிவரப் புரிந்துகொள்ள இயலாதபோது, 350 வருடங்களுக்கு முந்தைய நடப்புகளைக் கிண்டலடித்தும், வரிக்கு வரி அவநம்பிக்கையுடனும், மேம்போக்காக எழுதுவது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மன வருத்தமே அளிக்கும்.///

    உண்மை. நம்பாதவர்கள் அவற்றை விமர்சிக்கும் வேலையை விட்டு விடலாம். எதையுமே நம்ப வேண்டாம் என்றால் அவரவர் தாய் பத்தினி என்பதையும் கூட நம்ப வேண்டாம் தான்! எல்லாவற்றிர்கும் ஆதாரம் வேண்டுபவர்கள் தான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்றரிந்து கொள்ள அவரவர் தந்தையாரின் டி என் ஏ சான்றிதழ்களையும் கையில் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். கடவுளர்களிடம் கூட சான்றிதழ் கேட்கும் தொனியில் எழுத வரும் பகுத்தறிவுப்போலிகளின் எழுத்துக்களை வெளியிடுவது தமிழ் ஹிந்துவுக்கு அழகல்ல. தமிழ் ஹிந்து வை மதிக்கும் வாசகர்களை அவமதிப்பதாகவே படுகிறது.

  46. உமாசங்கர் அய்யா, நீங்கள் சொன்னது சரிதான், நாந்தான் தவறாக மொழிபெயர்த்துவிட்டேன். தவிர, இன்றைய கூத்துக்களையும் மறந்துவிட்டேன்.

    முனைவர் அய்யா அவர்களுக்கு, நான் கேள்விப்பட்டவரை அத்வைத விசிஷ்டாத்வைத மதங்களைப் போல த்வைத மதத்தில், பிராமணரல்லாத மடங்கள் எதுவுமில்லை என்றுதான் நினைக்கிறேன். அது வருத்தத்திற்குரிய விஷயம்தான்.
    நீங்கள் இஸ்கான் மத்வ மதத்தை பின்பற்றுவதில்லை என்கிறீர்கள். மத்வ மடங்களும் இதைத்தான் சொல்கின்றன. ஆனால் இஸ்கான் அமைப்பினர் கொடுக்கும் குரு-சீட பரம்பரையை பாருங்கள்:-

    1.Krishna
    2.Brahma
    3.Narada
    4.Vyasa
    5.Madhva
    6.Padmanabha
    7.Narahari
    8.Madhava
    9.Aksobhya
    10.Jaya Tirtha
    11.Gyanasindhu
    12.Dayanidhi
    13.Vidyanidhi
    14.Rajendra
    15.Jayadharma
    16.Purusottama
    17.Brahmanya Tirtha
    18.Vyasa Tirtha
    19.Laksmipati
    20.Madhavendra Puri
    21.Isvara Puri(Nityananda/Advaita)
    22.Lord Caitanya
    23.Rupa(Svarupa/Sanatana)
    24.Raghunatha, Jiva
    25.Krishnadasa
    26.Narottama
    27.Visvanatha
    28.Baladeva
    29.Jagannatha
    30.Bhaktivinoda
    31.Gaurakisora
    32.Bhaktisiddhanta Sarasvati
    33.A.C.Bhaktivedanta Swami Prabhupada

    https://www.harekrishnatemple.com/chapter12.html

    அதாவது மத்வ சம்பிரதாயத்தில் தோன்றிய ஸ்ரீ மாதவேந்திர புரி என்ற மகாநிடம்தான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு துறவறம் பெற்றார், எனவே இஸ்கான் (ஏன், கவுடிய மதமே) மத்வ சம்பிரதாயத்தின் தொடர்ச்சி என்று தான் அவர்கள் கூறுகிறார்கள். இதை மறுக்கிறார்கள் மத்வ மதத்தலைவர்கள்.

    இவ்விஷயத்தில், மத்வ பிராமணர்கள் (என்று கூறிக்கொள்ளும் பிராமணனாக இருக்க சற்றும் தகுதியற்ற சிலர்) மேற்கத்தியதேசங்களில் வாழும் இஸ்கான் அமைப்பினரை வாதத்திற்கு அழைத்து அவமானப்பட்ட சம்பவங்கள் கீழ்கண்ட லிங்கில் உண்டு. படியுங்கள், சுவாரசியமாக இருக்கும். தவிர நீங்கள் மீண்டும் மீண்டும் “அந்தனரல்லாதவர் உண்டா” என்று வலியுருத்துவதிலிருந்தே நீங்கள் இந்துமதத்தின் முன்னேற்றத்தைப் பற்றிக் கவலை படுகிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. அந்த மத்வ இளைஞர்கள் மேற்கத்திய இஸ்கான் அமைப்பினரை “ஏதோ ஒரு சாதியில் பிறந்த நீங்கள் பிராமணன் என்று கூறிக்கொள்ள என்ன அருகதை இருக்கிறது?” என்று கேட்டு அதற்க்கு அவர்கள் வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், மகாபாரதம் ஆகிவற்றின் உதவியுடன் “பிறப்படிப்படையில் மட்டும் பிராமணத்துவம் வராது” என்று நிரூபித்துள்ளனர். படித்துப் பாருங்கள்:-

    https://www.gosai.com/chaitanya/saranagati/html/vaisnava_sampradayas_fs.html

    நன்றி,
    பாலாஜி.

  47. ராம் நீங்கள் எழுதுவது அநாகரீகத்தின் உச்சம். ஆபிரகாமிய மதவெறி மனநிலை. கேள்வி கேட்பது எந்த புனிதத்தையும் கேள்விக்குள்ளாக்குவது ஹிந்துவின் அடிப்படை உரிமை. தாயுமான சுவாமிகள் இறைவனையே “கேள்வி மூலம்” என்றுதான் சொல்கிறார். அய்யா வைகுண்டர் “கேடு வருமே கேள்வி கேளாபேர்களுக்கு” என்கிறார். அர்ஜுனனே கிருஷ்ணனை “நீ என்னை குழப்பும்படி பேசுகிறாய்” என்றெல்லாம் சொல்லி விவாதிக்கிறான். கிருஷ்ணன் “நீ என்னை எப்படி நம்பாமல் இருக்கலாம் உன்னிடம் பர்த் சர்ட்டிபிக்கேட் இருக்கிறதா” என்றெல்லாம் கேட்கவில்லை. கேள்வி கேட்கப்பட வேண்டும். அது விதண்டாவாதத்துக்கு அல்ல உண்மையை அறிவதற்கு. ஹரன் பிரசன்னாவின் எழுத்துக்கள், அவர் இயங்கும் தளம் அவரது தரம் ஆகியவை அனைத்துமே இந்த கட்டுரையில் “எப்படி காட்டப்பட வேண்டிய மகானை எப்படி மலினப்படுத்தி விட்டோ ம்” என்கிற ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. இதனை புரியும் திறன் இல்லாவிட்டால் அதனை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். மாறாக சேற்றை வாரி இறைக்க வேண்டாம். ஏனென்றால் அது உங்கள் முகத்தில்தான் விழுகிறது. ஹரன் பிரசன்னா மீதல்ல.

  48. //ராம் நீங்கள் எழுதுவது அநாகரீகத்தின் உச்சம்.// மதிப்பிற்குரிய அரவிந்தன் நீலகண்டன், இதில் அநாகரீகத்திற்கு என்ன இருக்கிறது. நம்பகத்தன்மை அற்ற நிலைக்கும், ஆதாரங்கள் கேட்டும் குணத்திற்கும் ஒரு உச்ச பச்ச நிலையைக் கூறினேன், அப்படித்தானே! அதில் அநாகரீகம் என்ன இருக்கிறது. //கேள்வி கேட்பது எந்த புனிதத்தையும் கேள்விக்குள்ளாக்குவது ஹிந்துவின் அடிப்படை உரிமை// இருக்கட்டுமே, நல்ல கட்டுரையை நம்பிக்கை இல்லாதவர் போன்ற தொனியில் எழுதுவது, அல்லது நம்புகிறோம் என்று கூறிவிட்டால் நாத்திகர்கள் தன்னை கேலி செய்வார்களே என்ற காரணத்தால் அதை நான் நம்பவில்லை என்பது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தி எழுதுவதும் அந்த கடவுளரின் பெயரால் சொல்லப்பட்டு வந்த மகிமையைக் சந்தேகிப்பதாகத் தானே இருக்கிறது. எழுதியவர் தான் ராகவேந்திரரின் மகிமையை நம்புகிறேனா இல்லையா என்பதை புறந்தள்ளிவிட்டு, என்ன வரலாறோ அதை வெளிப்படுத்தி “இவ்வாறு சொல்லப்படுகிறது” என்பதோடு நிறுத்திக் கொள்ளலாமே. அதை விடுத்து தன்னுடைய பகுத்தறியும் மேதாவித்தனத்தை இங்கே காட்டி இருக்க வேண்டாமே என்பது என்னுடைய ஆதங்கம். அது தவறா?

    ஒரு விஷயத்தை நினைத்துப் பாருங்கள், ஆதிசங்கரர் கூட இந்து மத தத்துவங்களை இந்தியா முழுவதும் வேரூன்ற வைத்த மகான். ஆனால் சங்கரர் நிகழ்த்திய அதிசயங்கள் என்று நிறைய சொல்லப்படுவதில்லை. ஆனால் ஸ்ரீ ராகவேந்திரர் இறந்த குழந்தையைக்கூட காப்பாற்றினார் என்கிறது அவரது வரலாறு. அதாவது மக்களை நம்பவைத்தே தீரவேண்டும் என்ற ரீதியில் எல்லா மகான்கள் மீதும் சித்துக்களின் ஆற்றலை இந்துக்கள் திணிக்க வில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சங்கரரை கடவுளாக்கவில்லை, ஸ்ரீ ராகவேந்திரரை கடவுளாகவே வழிபட்டு அவரை வேண்டி விரதம் இருந்து வழிபாடுகள் செய்கிறோம். எனவே ஒருவரை கடவுளாக ஏற்றுக்கொள்வதில் கூட ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும். அதற்கு அவரது மகிமைகளும் தெய்வீக ஆற்றலும் உதவியிருக்கும் தானே. வெறும் கட்டுக்கதை என்றால் அந்தக்கதையை சங்கரர் திணித்திருப்பார்கள் அவரையும் கடவுளாக்கி இருப்பார்கள். எனவே சந்தேகிக்கிறேன் பேர்வழி என்று நம் பாரம்பரியத்தின் மீது நாமே கேள்விக்குறி போட்டால் வருங்கால சந்ததியினர் யாரை தான் நம்பும் என்பதுஎன்னுடைய ஆதங்கம். அது தவறா?

    ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் “நம்புங்கள் இது தான் சரி” என்று சொல்பவர்களின் மதம் தான் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இந்த வேளையில் நம்முடைய மதமோ, கடவுளோ நம்பகத்தன்மை அற்றது என்ற தோற்றத்தை நாமே ஏற்படுத்தினால், நம் வீட்டுப் பிள்ளைகள் நிஜத்தில் எதை நம்புவார்கள் என்பது என்னுடைய ஆதங்கம், அது தவறா?

    செத்துப்போன பின் சமாதியில் அதிசயம் நிகழ்த்தினாள் என்று கூறி ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் உருவத்தை இந்திய நாணயத்தில் பொறிக்கிறது இந்தியாவை ஆளும் இத்தாலி அரசு. இத்தனை ஆயிரம் பாரம்பரியம் உள்ள நாட்டில் சங்கரர் முதல் ராகவேந்திரர் வரை எத்தனையோ மகான்களைக் கொண்ட நாட்டில் அவர்களில் ஒருவர் உருவத்தை இதுவரை அரசு நாணயத்தில் பொறித்ததில்லை. அதைத் தட்டிக்கேட்க நாதியற்றுப்போய் இருக்கும் நாம், சொந்த மகான்களின் மகிமைகள் மீது நாமே ஒரு கேள்வி எழுப்பி ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாற்றை பிசுபிசுக்க வைப்பானேன் என்பது என்னுடைய ஆதங்கம். அது தவறா?

  49. திரு அரவிந்தன் நீலகண்டன்., //சங்கரர் திணித்திருப்பார்கள் // “சங்கரர் மீதும் திணித்திருப்பார்கள்” என்று படிக்கவும். மேலும்.

    //ஆனால் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த பிருந்தாவனத்தில் இருந்து “ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி” என்பதாக அந்த சுலோகம் நிறைவு பெறும் உரத்த ஒலி வெளிவருகிறது. “இதை எத்துனைத் தூரம் நம்பமுடியும் எனத் தெரியவில்லை”//
    இது நம்பிக்கை எனும் அஸ்திவாரத்தின் மீது எழுப்பும் சந்தேகத் தொனி இல்லையா?

    //ராகவேந்திரர் ஜீவ சமாதிக்கு நுழையும் முன்பு பேசியதாகச் சொல்லப்படும் உரை// என்று எழுதிவிட்டு பின் //ஆனால் இவை ராகவேந்திரரால்தான் சொல்லப்பட்டதா என்பதுதான் தெரியவில்லை!// என்று கூறினால் என்ன அர்த்தம்? இவைகளை ராகவேந்திரர் கூறினார் என்றே நம்புபவர்களின் நம்பிக்கையில் மன்னள்ளிப் போடுவதான கேள்வி தானே? இது தேவையா?

    //எனது மந்த்ராலயப் பயணம் எனக்கு பெரிய மனநிறைவைத் தந்ததா என்றால் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது// என்று கூறி நிறைவாக என்ன சொல்ல வருகிறார் இவர்..ஆகையால் யாரும் மந்திராலயம் செல்லாதீர்கள் என்று கூற விழைகிறாரா? அபத்தமாக இருக்கிறது.

    ஒன்று நம்ப வேண்டும், இல்லையேல் அங்கே இருப்பதை அப்படியே எடுத்துச் சொல்லவேண்டும், இல்லையேல் எதுவும் சொல்லக்கூடாது. அதையும் விட்டு விட்டு சொல்லியிருப்பதன் மீது சந்தேகத்தை எழுப்பினால் நம்புபவர்கள் முட்டாள்கள் , இவர் மட்டும் புத்திசாலி என்று சொல்ல வருகிறாரா? ஆன்மீகவாதிகள் மீது நாத்திகர்கள் காட்டும் இருமாப்பான தொனிக்கு இந்த கட்டுரை எழுத்தாளரின் “நம்பிக்கை” பற்றிய தொனி சற்றும் சளைக்கவில்லை.

    //அர்ஜுனனே கிருஷ்ணனை “நீ என்னை குழப்பும்படி பேசுகிறாய்” என்றெல்லாம் சொல்லி விவாதிக்கிறான்.// அர்ஜுனன் கண்ணனிடம் தனக்குப் புரியவில்லையே என்ற ஆதங்கத்தில் பேசும் பேச்சு தான் நீங்கள் குறிப்பிட்டது. கண்ணனை அர்ஜுனன் மனமாற நம்பினான். ஆனால் அவனது கூற்றுக்கள் தன் மண்டையில் ஏறவில்லையே என்ற ஆதங்கத்தில் கண்ணா கொஞ்சம் குழப்பாமல் புரியும்படியாகச் சொல் கேட்டுக்கொள்கிறேன் என்கிறான். ஆனால் அதே அர்ஜுனன் ஒரு வேளை நீ சொல்வதை நான் சந்தேகிகிறேன், நம்பவேயில்லை, ஏதோ சொல்கிறாய் சொல்லிவிட்டுப் போ என்று நக்கலாகக் கூறியிருந்தால் கண்ணன் தேரை விட்டுச் சென்றிருப்பான். தன்னை ஆத்மார்த்தமாக நம்புபவர்கள் பாண்டவர்கள் என்ற ஒரே காரணத்தினால் அவர்களுக்கு தன் இறைத் தன்மையைக் கூடக் காட்டி எப்போதும் கண்ணன் உடனிருந்தான் என்பதை நாம் மறக்ககூடாது. கண்ணன் அர்ஜுனனை சந்தேகிக்க வில்லை. ராகவேந்திரர் பற்றிய விஷயங்களை கட்டுரையாளர் சந்தேகிக்கிறார் – இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

    நான் யாரையும் அவமதிக்கும் நோக்குடனோ கோபத்துடனோ கூட எழுதவில்லை. சில விஷயங்களை செவிட்டில் அரைந்தார் போல் சொல்லவில்லை என்றால் நம்மவர்களே நம் மதத்தை இழிவு படுத்துவதற்கு முன்னாடி நிற்பார்கள். நம் மதத்திற்கும் நம்மவர்களே பெரும்பாலும் எதிரி. அதனால் நான் சொல்ல நினைத்ததை நறுக்கென்று கூறினேன். தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

  50. நம்பிக்கை என்பதே தவறு என்கிற உண்மையை நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். நம்ப வேண்டுமென்றால் உன்னை நம்பு. உன்காலில் நின்று ஞானத்தை தேடு. நம்பிக்கை அல்ல என்று நாம் நம் குழந்தைகளுக்கும் கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற அருவெறுப்பான அன்னிய மூடநம்பிக்கைகளில் பிடிபட்டு உழலும் குழந்தைகளுக்க்கும் சொல்ல வேண்டும். மாறாக நாம் அவர்களையோ அவர்களின் மனிதனை அடிமைப்படுத்தும் இழிந்த கீழ்த்தரமான மதநம்பிக்கைகளையோ பிரதி எடுக்கக் கூடாது

    //ராகவேந்திரர் ஜீவ சமாதிக்கு நுழையும் முன்பு பேசியதாகச் சொல்லப்படும் உரை// என்று எழுதிவிட்டு பின் //ஆனால் இவை ராகவேந்திரரால்தான் சொல்லப்பட்டதா என்பதுதான் தெரியவில்லை!//

    ராகவேந்திரர் கூறியதுதான் என்பதற்கு அவரது சீடர்கள் சாட்சியாக சொல்லியிருக்கிறார்கள். அல்லது வழிவழியாக பாரம்பரியமாக இப்படிச் சொல்லப்படுகிறது இதற்கு இன்னின்ன சமூக ஆன்மிக காரணங்கள் இருக்கலாம் என்று சொல்ல எவருமில்லை. இதனை நம்பிக்கையை கிண்டலடிப்பதாக நான் உணரவில்லை. நாம் -உலகத்துக்கே நம்பிக்கையை மீறிய ஒரு ஞான மரபாக ஆன்மிகத்தை முன்வைக்கும் சாத்தியம் கொண்ட ஒரே பண்பாடான நாம்- நம்மை ஒரு அறிவியக்கமாக கட்டி எழுப்பாமல் இருப்பது குறித்த ஒரு ஆதங்கத்தையே நான் உணர்கிறேன்.

  51. //நல்ல கட்டுரையை நம்பிக்கை இல்லாதவர் போன்ற தொனியில் எழுதுவது, அல்லது நம்புகிறோம் என்று கூறிவிட்டால் நாத்திகர்கள் தன்னை கேலி செய்வார்களே என்ற காரணத்தால் அதை நான் நம்பவில்லை என்பது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தி எழுதுவதும் அந்த கடவுளரின் பெயரால் சொல்லப்பட்டு வந்த மகிமையைக் சந்தேகிப்பதாகத் தானே இருக்கிறது. எழுதியவர் தான் ராகவேந்திரரின் மகிமையை நம்புகிறேனா இல்லையா என்பதை புறந்தள்ளிவிட்டு, என்ன வரலாறோ அதை வெளிப்படுத்தி “இவ்வாறு சொல்லப்படுகிறது” என்பதோடு நிறுத்திக் கொள்ளலாமே. அதை விடுத்து தன்னுடைய பகுத்தறியும் மேதாவித்தனத்தை இங்கே காட்டி இருக்க வேண்டாமே என்பது என்னுடைய ஆதங்கம். //

    மிக சரியான வரிகள்.பெரும்பாலும் நமக்கு பகுத்தறிவு பர்வேர்ஷன் அதிகம்.
    இதனை மறைவாக நம் மனதில் விதைத்து விட்டனர்.ஹரன் பிரசன்னாவின் கட்டுரையை படிக்கும் போது செம்மொழி மாநாட்டில் கலைஞரின் அப்ரூவல்-க்காக அவர் முகம் பார்த்து, பார்த்து பேசிய மேடைப்பேச்சாளர்களின் நினைவுதான் வருகிறது.

  52. தமிழ் ஹிந்து இதேபோல் கட்டுரைகளை வெளியிடும் முன்பு ஆய்வு செய்து வெளியிட வேண்டும். ஒரு சிலருக்கு மந்த்ரயலாம் எந்த வித பக்தியும் ஏற்படவில்லை என்பதால் எல்லோருக்கும் அப்படி இல்லை. நம் நாட்டில் எத்தனை யோகிகள் வாழ்ந்து மிக பெரிய ஆன்மிக உணர்வை ஏற்படுத்தி உள்ளார்கள் அதில் ராகவேந்திரர் மிகவும் முக்கியமான ஒருவர்.

  53. திரு அரவிந்தன் அவர்களே,

    //
    நம்பிக்கை என்பதே தவறு என்கிற உண்மையை நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
    //

    இது கொஞ்சம் ஓவராக இருக்கிறது. இப்படி, ‘நம்பிக்கையே வேண்டாம்’ என்னும் ஒரு இயக்கம் சனாதன தருமத்திற்கு நேர் விரோதமே. நீங்கள் சொல்வதற்குப் பெயர் skepticism/agnosticism. இது சனாதன தருமம் ஆகாது.

    //
    நம்ப வேண்டுமென்றால் உன்னை நம்பு.
    //

    புலன் அடக்கும் தன்மையே இல்லாமல், காமக்-குரோத-மோக-மத-மாச்சரியங்களாலும் பீடித்துக் கிடக்கும் நம்மை நாமே எப்படி நம்புவது? இதற்கு இறையருள்/ஆச்சாரிய அருள்/பக்தி/சரணாகதி தான் விடை.

    //
    உன்காலில் நின்று ஞானத்தை தேடு.
    //

    பிரம்மமும் ‘சொந்தப் பிரயத்தனத்தால் புலன்களுக்கு எட்டாது’, ‘அதைப் பற்றி பேச வந்த வாக்கானது (வார்த்தைகள்/பேச்சு) அதைப் பற்றி பேச இயலாமல் தோல்வியுற்று திரும்பிச் செல்லும்’ என்பதும் உபநிஷத்து வாக்கியங்கள். இவற்றை ஏற்றுக் கொண்டால் எப்படி “உன்காளில் நின்று ஞானத்தைத் தேடு” என்பது சாத்தியம்?

    ஆகையால் வேதாந்தத்தில் ‘பிரம்மம்’ என்று சொல்லப்படும் இறைவனின் அருள் இன்றி ஒன்றும் நடவாது. இதற்கு ரிஷிகள் வாக்கில் நம்பிக்கை அடிப்படை.

    ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பதும் வேதாந்தக் கொள்கையே. நம் ஆச்சாரியார்கள் மேல் பக்தியும் நம்பிக்கையும் வைத்து அவர்கள் சொன்னதை பின்பற்றாமல், வாழ்நாளை “rediscovering the wheel” என்னும் முயற்சியில் இறங்கி வீனடிப்பதால் ஒரு பிரயோஜனமும் வராது.

    எல்லாக் கேள்விகளுக்கும் தர்க்க ரீதியில் (logical) விடைகள் தயாராக இருக்கிறது; ஆனால் அதற்கு முதலில் கடவுள் மீதும் ஆசாரியன் மீதும் அனுஷ்டானத்தின் மீதும் நம்பிக்கை தேவை. இதை ஏற்காதவர்கள் அவர்களிடம் தர்க்க வாதத்தில் தாராளமாக இறங்கலாம்; பலர் அப்படித் தர்க்கம் பண்ணித் தோற்றுப்போய் அவர்கள் காலிலேயே விழுந்து மாறினார்கள் என்பது சரித்திரம். Richard Dawkins கூறுவதை விட பன்மடங்கு systematic-ஆன சாருவாகம் என்னும் ஒரு மதத்தை இப்படித் தான் சங்கரரும், ராமானுஜரும் தோற்கடித்தனர் என்பதை ஒரு நண்பர் எனக்குச் சொன்னார்.

    அத்வைதத்தின் படி, ஞானத்தால் தான் பரகதி என்று இருந்தாலும், வேதாந்த வாக்கியங்களில் (உபநிஷத்துக்கள் கூருபவற்றில்) நம்பிக்கை வேண்டும். ஆதி சங்கரர் ‘ஞானம் தான் மோட்சத்திற்கு வழி’ என்று சொல்லியிருந்தாலும், அவரே ‘பகவானின் கிருபையால் தான் அந்த ஞானம் ஏற்படும்’, ‘ஆச்சாரியன் கடாக்ஷம் தேவை’ என்று பஷ்யங்களிலேயே பல இடங்களில் கூறியுள்ளார். அவரே கீதை 18.65-இல் பக்தியோகத்தை சாதனமாக சொல்லுகிறார்.

    உடையவர் (ராமானுஜர்) சித்தாந்தத்தின் படியும், ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்னும் நம்பிக்கை அடிப்படை. அது இல்லை என்றால் ஒன்றும் பலிக்காது. மத்வரும் பக்தியைத் தான் சாதனமாகக் கூறினார்.

    சைவர்கள் கூறும் சித்தாந்தத்திலும், நம்பிக்கை தானே அடிப்படை?

  54. அரவிந்தன்,

    கேள்வி கேட்பது இந்து மத தத்துவ மரபுதான். இந்த புவியின் தலைசிறந்த ஆன்மீக தத்துவ இலக்கியம் உபநிஷதங்கள் கேள்வி-பதில் மூலமாகவே கொடுக்கப்பட்டுள்ளன.

    அதனால், கேள்வி கேட்பவனெல்லாம் தத்துவ விசாரிகள் இல்லை. கேள்வி கேட்பவனெல்லாம் தெரிந்துகொள்பவன் என்று கேட்பவன் இல்லை. ராமன் எந்த கல்லூரியில் படிச்சான் என்று கேட்டவன் தத்துவ விசாரி என்றால் நீங்கள் பரிதாபமாக நிர்பந்தத்தில் வக்காலத்து வாங்குபவXம் தத்துவ விசாரிதான்.

    அதிலும், இந்த கட்டுரையாசியர் கேள்வியா கேட்கிறார்? எல்லாவற்றிற்கும் தீர்ப்பு அல்லவா சொல்கிறார்!! அதுவும் ஒருவித நக்கலுடன்! இதையுமா சப்பைகட்ட வேண்டும், அந்தோ!!

    நம்பிக்கை என்பதே தப்பு என்று குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற தங்கள் உபதேசம் கொடுமையானது. நம்பிக்கை இல்லை என்றால் எதுவுமே இல்லை. இந்து மதத்தில் என்ன புடுங்குகிறது என்று பின்னர் நீங்கள் பாகனீய மதத்தை கட்டிக்கொண்டு அழவேண்டும் என்று ஒரு பாதிரி நம்மை பார்த்து கேட்டால் நம்பிக்கை மட்டும்தான் நம் விடை. அதைக்கூட ஹரன் பிரசன்னாவின் இலக்கிய ஈகோ சொறியலுக்கு காவு கொடுக்கும் பரிதாபம் உங்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டாம். தாட்சண்யம் தனநாசம் என்று சொல்வார்கள். இப்போது, தாட்சண்யம் தளநாசம் என்று கண்கூடாக பார்க்கிறேன்.

  55. அரவிந்தன்,

    //// நம்பிக்கை என்பதே தவறு என்கிற உண்மையை நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். நம்ப வேண்டுமென்றால் உன்னை நம்பு. உன்காலில் நின்று ஞானத்தை தேடு. ///

    இந்த வரிகளை நீங்கள் வாபஸ் வாங்க வேண்டும். உங்களுக்கு ஞானத்தைப் பற்றியும் தெரியவில்லை. இந்து மத மரபையும் தெரியவில்லை என்று (உங்கள் பெலஹ நாட்டு நண்பர் மாதிரி) சட்டாத்தனமாக நான் குற்றம் சாட்டுகிறேன். அத்வைதமாகட்டும், இல்லை வேறு எந்த ஞான மரபாகட்டும், அது நிற்கும் ஆதார புள்ளி நம்பிக்கையே. உங்களுக்கு இதில் அரிச்சுவடி கூட தெரியவில்லை. ஆனால், இந்து மதத்திற்கு வழிகாட்ட வந்து விட்டீர்கள். ஈஸ்வரன் அருள் இன்றி ஞானம் கிடைக்காது என்று பல இடங்களில் சொல்கிறார் அத்வைதி சங்கரர். அப்படியே இராமானுசரும். மற்றவர்களும். அதையே விட்டுவிட்டாலும், வேதமே பிரமாணம் என்று நம்பிக்கை இல்லாமல் அந்த ஞான மரபில் நாம் முதல் படிகூட வைக்க முடியுமா. தத்துவமசி என்பதை நீங்கள் உள்வாங்க வேண்டுமானால் முதலில் நம்பிக்கை வேண்டும். நீங்கள் குழந்தைகளை கெடுக்க சொல்லிக்கொடுப்பதை விட்டுவிட்டு முதலில் நீங்கள் (உங்கள் நம்பிக்கையற்ற நண்பருடன்) திருந்த வேண்டும் என்று உங்களுக்கு நம்பிக்கை இல்லாத இறைவனிடம் வேண்டுகிறேன். யாரோ ஒருத்தர் அழகாக இங்கே முன்னமேயே எழுதியிருக்கிறார். இந்து மதம் பாதிரிகளாலும், ஜிகாதிகளாலும் ஒன்றும் ஆகிவிடாது. இப்படியாப்பட்ட இந்து மத “அறிஞர்”களால் மட்டும் கேடு வராமல் கவனமாக அவர்கள் இருக்க வேண்டும்.

  56. If a person is not really interested or intended to do a thing,he should not be doing it. If he does then the Outcome will be the one above.

    The reply for the ppls comment is much worse,
    நான் நம்புவதை, எனக்கு சரி என்று பட்டதை எழுதினேன். இப்போதும் நான் எழுதியதை சரி என்று நம்புகிறேன். மற்றவர்கள் கருத்துகளை, மற்றவர்களின் கருத்துகள் என்கிற அளவில் மதிக்கிறேன்.
    then he should post his comments in “non believers in hinduism” sites . When a person makes a comment in a media , he should know his(its) responsibility. Remember Charu..??!! If you only believe in what you said, then there should not be any option for peoples comments for this article.

    Its really disappointing to read an article in this site.

  57. இங்கு கட்டுரை, விமர்சனம் எழுதுபவர்களுக்கும் அவைகளை படிக்கும் மற்றோருக்கும் என் வணக்கம்.

    பொதுவாக அமானுஷ்ய / தெய்வீக விஷயங்களை பற்றி பேசும்போது எழும் நியாயமான சந்தேகத்தின் வெளிப்பாடே இக்கட்டுரை.

    இதற்கு ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராசார்யா ஸ்வாமிகள் அவர்களின் திவ்ய வார்த்தைகள் சரியான விளக்கம் கொடுக்கும் என நம்புகிறேன்.

    “எந்த சப்தங்கள் சகல பிராணிகளுக்கும் இகபர நலன்களை தருமோ அவையே வேதங்களில் உள்ள மந்திரங்கள். நம் காதுக்கு கேட்காதது ரிஷிகளிக்கு கேட்குமோ என்று கேட்கலாகாது. நமக்கு தெரியாததை காண்கின்ற திவ்ய திருஷ்டி, நமக்கு கேட்காததை கேட்கும் திவ்ய சுரோத்திரம் எல்லாமே உண்டு. இப்போது நம் பார்வை நம் கண்ணிலுள்ள லென்சை கொண்டு நடைபெறுகிறது. இந்த லென்ஸ் வேறு விதமாக இருந்தால் காட்சியும் வேறு விதமாக இருக்கும். யோகா சாதனையினால் இந்த திவ்ய சக்திகளை பெறமுடியும்.

    வேதத்தில் இருப்பதை நம் கண்ணாலும் காதாலும் பரீட்சிப்பது சரியல்ல. வாஸ்தவத்தில் நம் புலன்களுக்கு எட்டாததை சொல்லவே வேதம் இருக்கிறது. நமக்கு நேரில் தெரிவதை நாம் தெரிந்துகொள்கிறோம். அதற்கு வேதம் என்று ஒன்று வேண்டியதே இல்லை.

    ‘வேதத்தை எப்படி நம்புவது? அதற்கு ஒரு யுக்தி சொல்லுங்கள்’ என்று கேட்பதே பொருத்தமில்லை. யுக்திக்கு எட்டாததை சொல்லவே வேதம் இருக்கிறது. எதை ருசுவினால் நிருபிக்கமுடியாதோ, எங்கே புத்தி எட்டாதோ, அப்படிப்பட்ட பரம சத்தியங்களை திவ்விய திருஷ்டி உள்ள முனிவர்கள் அறிந்து வேதமாக தந்திருக்கின்றார்கள்.

    அந்நிய தேச விவகாரங்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. அங்கிருந்து வரும் பத்திரிக்கைகளிலிருந்து தெரிந்துகொள்கின்றோம். லோகத்தில் உள்ள கருவி எதனாலுமே தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களை தெரிந்துகொள்வதற்காக வேத மந்திரங்கள் என்ற பத்திரிக்கையை ரிஷிகள் தந்திருக்கின்றார்கள். ”

    – Ref. : கல்கி ௦07.05.1972

    தற்சமயம் நம்மால் முடியாததை / நமக்கு தெரியாததை / நம்மால் உணரமுடியாததை தற்சமயம் நம்மால் ஆராய்ச்சியும் செய்யமுடியாது.

    எனவே, நம் முன்னோர்கள் சொன்னதை முழுவதும் நம்பி தகுந்த பயிற்சியின் முலம் மட்டுமே நமக்கு தெரியாததை தெரிந்துகொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.

    நன்றி.
    சுதாகர்.கி

  58. Dear friends
    Regarding belief , how can people search for gnana/Wisdom on their own if they didnt have ANY reference point to start with?
    If search for Gnana means taking up meditation, for example, -how can he /she start that practice without some belief in someone/some school /system to begin with?
    Some reference point is needed to start with anything-some belief is needed.
    Nambikkai is right-mooda Nambikkai is wrong.
    A lot of people hero -worship Scientists-I know a chap in a social networking site who , if he gets half a chance would start a fanclub for Dawkins-so belief in Sceince [ which tells us about things we can experience thru senses ] is also a kind of blind belief in the case of some believers!
    Ancient India has classified measures that help us have an idea of things-there are different kinds of pramana -number varies with different schools pf philosophy.
    Pratyaksha, anumana and shabda etc-for details, pls check a good source in the internet.
    One person’s Pratyaksha pramana [ perceived/experienced] pramana is
    another ‘s Shabda pramana [ what is heard-hearsay to translate roughly].
    A child, if he’s asked to wipe all his beliefs clean, would first want a DNA test done!
    [Even here we’ve to believe the lab is telling the truth.]
    Saravanan

  59. இவர்களுக்கு தமிழ் ஓவியா பரவாயில்லை. இவர்கள் ஆஸ்திக நாஸ்திகர்கள். இவர்கள் தான் மிக danger ஆனாவர்கள்.

    aravindan neelakandan do you think is this a right way to get knowledge? if he doesnt know anything he should ask somebody to get clarified.

  60. //இந்த வரிகளை நீங்கள் வாபஸ் வாங்க வேண்டும். உங்களுக்கு ஞானத்தைப் பற்றியும் தெரியவில்லை. இந்து மத மரபையும் தெரியவில்லை என்று (உங்கள் பெலஹ நாட்டு நண்பர் மாதிரி) சட்டாத்தனமாக நான் குற்றம் சாட்டுகிறேன். அத்வைதமாகட்டும், இல்லை வேறு எந்த ஞான மரபாகட்டும், அது நிற்கும் ஆதார புள்ளி நம்பிக்கையே. உங்களுக்கு இதில் அரிச்சுவடி கூட தெரியவில்லை. ஆனால், இந்து மதத்திற்கு வழிகாட்ட வந்து விட்டீர்கள்.//

    நான் என்னை இந்து மதத்துக்கு வழிகாட்டுவதாக எங்கும் சொல்லவில்லை. நம்பிக்கையை அல்ல அனுபவத்தை மட்டுமே நானறிய ஹிந்து ஞான மரபு முன்வைக்கிறது.

  61. அன்புள்ள நண்பர்களே,

    இந்து மதத்தை சேர்ந்தவர்கள், ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், அவர் நம்மைக் காப்பார் என்று நம்புகிறார்கள். (இந்த உலகத்தில் தன்னைக் கடவுள் என்று அறிவித்துக் கொண்டே ஒரே ஒருவரான கிரிஷ்ணரும், தான் காப்பேன் என்கிறார் )

    அதே நேரம் இந்து மதம் கடவுள் என்கிற ஒரு நிலையை மனிதன் தன்னுடைய அனுபவத்தின் மூலமாகவே உணர முடியும், எந்த ஒரு மனிதனும் உணர முடியும், இந்த வாழ்க்கையிலேயே உணர முடியும் என்று சொல்லுகிறது. இந்து மதம் நம்பிக்கையில் ஆரம்பித்து போகப் போக பகுத்தறிவு பாதையில் செல்லும் மதமாகும். உண்மையை தேடுவதும் , அதை உணர்வதுமே இந்து மதத்தின் முக்கிய குறிக்கோள். (அசத்தொமா சத்கமய ). இதுதான் பகுத்தறிவின் குறிக்கோளும் . இந்து மதம் யார் எதை சொன்னாலும், அது வேதமாக இருந்தாலும் அதை கேட்டு, சிந்தித்து பிறகு உணர்ந்து செயல் பட வேண்டும் என்றே சொல்லி இருக்கிறது.

    அத்வைதம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் வெறுமனே நம்பப் படுவது அல்ல. அனுபவத்தில் உணரப் பட வேண்டியது

    ஒருவன் தான் முழு விடுதலை பெற்ற , சுதந்திரமான அழிவற்ற நிலையை அடைவதும் அப்படிப் பட்ட நிலையிலே எல்லா உயிரகளியும் தானாகவே வித்யாசம் இல்லாமல் ஒன்றைத் தவிர வேறு எதவுமே இல்லாமல் இருப்பாதான ஒரு நிலையை அவன் அடைந்து அனுபவிக்கிறான். அதுவே அவனுக்கு விடுதலை அளிக்கும் நிலையாகும். இதை சொன்னதும் அதே கிரிஷ்ணர்தான்

    ஒருவன் அந்த நிலையை அனுபவத்தில் உணராவிட்டால் எந்த பலனுமில்லை என்கிறார் ஆதி சங்கரர். வெறுமனே நம்பிக்கையை (belief)) வைத்துக் கொள்வதோடு இந்து மதம் முடிந்து விடவில்லை. இந்து மதம் தன்னுடைய கோட்பாடுகளை ஒருவன் அனுபவத்தின் மூலம் சரி பார்த்துக் கொள்ளாலாம் என்று சொல்லும் தைரியமான மதமாகும்.

    56. Neither by Yoga, nor by Sankhya, nor by work, nor by learning, but by the realisation of one’s identity with Brahman is Liberation
    possible, and by no other means.

    (Viveka Chudamani by Adi Shanakara)

  62. திரு பாலாஜி அவர்களே! கிருஷ்ணா நீ பேகனே பாரோ என்ற பாடல் ஸ்ரீ.வ்யாசராஜரால் எழுதப் பட்டது.
    இதர நண்பர்களுக்கு,
    மத்வ மதம் கர்நாடகம் மகாராஷ்டிரா மற்றும் ஓரளவு ஆந்திராவில் மட்டுமே பரவியது. இப்போது தமிழ் நாட்டில் இருக்கும் மாத்வர்கள் அனேகமாக விஜயநகரம் வீழ்ந்த பிறகு இங்கே புலம் பெயர்ந்தவர்கள்.தஞ்சாவூர் பகுதியில் ஆண்ட நாயக்கர்கள் இவைகளுக்கு ஆதரவு அளித்தார்கள்.மராட்டி பேசும் மாத்வர்கள் மராட்டிய அரசர்கள் தஞ்சாவூரை ஆண்ட பொழுது இங்கே குடியமர்த்தப் பட்டவர்கள்.மத்வ மதம் முழுவதும் பிராமணர்களைக் கொண்டதுதான். அவர்கள் மற்ற பிராமனகளிடம் இருந்து தத்துவ ரீதியில் மாத்திரம்தான் வேறு பட்டவர்கள். சடங்குகளை செய்யும் விதங்கள் (வேறு இடங்களில் இருந்து வந்ததனால் ) சற்று வேறுபடும்.ஸ்ரீ.ராகவேந்திரர் மாத்வ சன்யாசிதான் என்றாலும் அவர் நடத்திய அற்புதங்களால் மக்களின் மனங்களை ஈர்த்து தங்களின் துன்பங்களைப் போக்குவார் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.சமீப காலங்களில் பத்திரிகைகளில் அவரைப் பற்றி நிறைய எழுதப் படுவதாலும் திரு. ரஜினிகாந்த் போன்றவர்கள் அவரை வழிபடுவதைப் பற்றிய பல செய்திகளாலும் இன்று தமிழ் நாட்டில் பிரபலம் அடைந்திருக்கிறார். இன்றைக்கு சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழ் நாட்டில் இருந்து மாத்வர்கள் மட்டுமே மந்த்ராலயம் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

  63. //இன்றைக்கு சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழ் நாட்டில் இருந்து மாத்வர்கள் மட்டுமே மந்த்ராலயம் சென்று வந்து கொண்டிருந்தார்கள்//

    இது மிக முக்கியமான அவதானிப்பு என கருதுகிறேன். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சன்னியாசி அவருடைய ஆன்மிக பலத்தினால் சமுதாய கரிசனத்தால் ஒரு சம்பிரதாயத்தை உருவாக்கும் போது அல்லது புனருத்தாரணம் செய்யும் போது எங்கிருந்து அந்தணர்களை உருவாக்கியிருப்பார்? இப்படி பெரும் கூட்டமாக வந்த அனைத்து சமுதாய மக்களிடமிருந்து தான். இன்றைக்கு மாத்வ பிராம்மணர்களாக இருப்பவர்களோ அல்லது ஸ்மார்த்த அல்லது வேறெந்த பிராம்மணர்களாக இருப்பவர்களோ வேதகால ரிஷிகளின் ‘இரத்த’ நீட்சியாக இருக்க முடியாது. அது ஒரு ஆன்மிக சமுதாய தொடர்ச்சி மட்டுமே. இது ஏதோ ஒரு காலத்தில் உறைந்துவிடக் கூடியதும் அல்ல. பிராம்மண சமுதாயத்தை ஹிந்து சமூகம் தொடர்ந்து தனது அனைத்து பாகங்களிலிருந்தும் மக்களை எடுத்து உருவாக்கிக் கொண்டிருந்திருக்கிறது. இந்த historic dynamics ஐ புரிந்து கொண்டு, பிரிட்டிஷ் காலனிய காலத்தின் தவறான/வேண்டுமென்றே திரித்த புரிதலாலும் சமுதாய தேக்க நிலையினாலும் உறைந்து போயிருக்கும் இச்செயல்பாட்டை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். இன்றைக்கும் வேதத்தைப் பாதுகாத்து முன்னெடுத்து செல்லும் பிராம்மணர்களை உருவாக்கும் இயக்கத்தை மீண்டும் அனைத்து சமுதாய மக்களுக்குமாக ஜனநாயகப் படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

  64. /// சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சன்னியாசி அவருடைய ஆன்மிக பலத்தினால் சமுதாய கரிசனத்தால் ஒரு சம்பிரதாயத்தை உருவாக்கும் போது அல்லது புனருத்தாரணம் செய்யும் போது எங்கிருந்து அந்தணர்களை உருவாக்கியிருப்பார்? ///

    ராகவேந்திரர் பிராமணர்களை மற்ற சாதிகளிடமிருந்து உருவாக்கினார் என்று அவர் சொன்னதாக தெரியவில்லையே.

  65. அதே நேரம் ஆதி சங்கரர் பல சமுதாய த்தை சேர்ந்த மக்களையும் பிராமணர்கள் ஆக்கி இருக்கிறார் என்று தகவல்கள் உண்டு. “அவர் மீனவ சமுதாயம் கூட்டம் முழுவதையும் பிராமணர் ஆக்கி இருக்கிறார். சில பலுசிஸ்தானிய சமூகங்களை அப்படியே கூட்டமாக பிராமணர் ஆக்கி இருக்கிறார் ” என்று சொல்லி இருக்கிறார்கள்.

  66. இன்றைக்கு தங்களை பிராம்மணர்கள் என பிறப்படிப்படையால் மட்டும் அழைத்துக் கொள்ளக் கூடியவர்கள் நிச்சயமாக வரலாற்று அறியாமையினால் அதை செய்கிறார்கள். அய்யர், அய்யங்கார் என்பதெல்லாம் சாதிகள் தான். பிராம்மணன் என்பது வர்ணம். இந்த வர்ணத்துக்குள் சாதிகள் வந்து போய் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் புதிய அந்தண சாதிகள் உருவாக்கப்பட்டதும் உண்டு.

  67. //Nambikkai is right-mooda Nambikkai is wrong//

    நம்பிக்கை என்பதே ஆதாரமில்லாமல் நம்புவதுதான். ஆதாரத்துடன் ஒன்றை உண்மை என கொள்வதன் பெயர் அறிதல்; அறிதலே நம் மரபின் ஆதாரம்

    எதனூடும் நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ? சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ?

    உலகிலேயே அறிதலின் அடிப்படையில் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல மறைநூல் மரபை ஏற்கவும் நிராகரிக்கவுமான மானுட உரிமையை ஏற்ற ஞான மரபே ஹிந்து மரபு. அதனை நம்பிக்கை எனும் கீழ்மையில் அடைப்பது சோகமான விசயம்

  68. தமிழ் நாட்டில் உள்ள பிராமணர்கள் எல்லோரும் தமிழர்களே. அவர்களின் தாய் மொழி தமிழே . பிராமண தாய்மார்கள் தங்கள் முழந்தைகளுடன் தமிழ் மொழியிலேயே பேசுகிறார்கள.

    நான் ஒரு விடயம் சொன்னால் தயவு செய்து தவறாக எடுத்தக் கொள்ளக் கூடாது. தமிழ் நாட்டில் உள்ள பிராமணர்களில் கணிசமானவர்கள் கருப்பு நிறம் உடையவர்கள். பிராமணர்களை விட சிவந்த நிறம் உடைய பிற பிரிவினரை நாம் தமிழ் நாட்டில் காணலாம்.

    பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டில் வசித்து வந்தவர்களில் ஆன்மீகத்தில் அதிக நாட்டமும் பொருள் ஈட்டுவதில் ஆர்வம் இல்லாமல் சிந்தனைகளில் கவனம் செலுத்தியவர்களை வைத்து, தமிழ் பிராமண சமுதாயம் உருவாக்கப் பட்டு இருக்க முடியும்.

  69. திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களே

    ///நம்பிக்கை என்பதே ஆதாரமில்லாமல் நம்புவதுதான். ஆதாரத்துடன் ஒன்றை உண்மை என கொள்வதன் பெயர் அறிதல்; அறிதலே நம் மரபின் ஆதாரம் ///

    தங்கள் கூற்றில் உண்மை உள்ளது. நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தால் ஆதி சங்கரர் பல்வேறு தரப்பட்ட நம்பிக்கை உடையவர்களை வாதத்தின் மூலம் தனது கருத்துக்கு மாற்றி அரவணைத்துச் சென்றிருக்க மாட்டார்.

    எல்லாவற்றையும் விட, ஆதி சங்கரர் ஆராய்ந்து அறிவதே அறிவு என்ற கோட்பாட்டை வலிமையாகப் பற்றியதால்தான் பூர்வமீமாம்சையை நிராகரித்தார். நம்பிக்கை மட்டுமே அடிப்படை அல்ல என்பது இதனால் தெளிவாகிறது.

    ஆனால் இந்தக் கோட்பாடு தத்வார்த்தமான விஷயங்களுக்கு மட்டுமே பொருந்தும் இல்லையா?

    இவை போக ஆதிசங்கரர் வாழ்விலும் கூட அவர் கூடு விட்டுக் கூடு பாய்வது நடத்தியிருக்கிறார், ஆனால் அது அவசியம் காரணமாக, சித்து வேலைகளால் மக்களைக் கவர்வதற்காக அல்ல.

    நமது அஷ்ட மாசித்திகளில் பரகாயப் பிரவேசம் முதலியன உண்டு. ஆய கலைகள் 64 இல் இந்த அஷ்டமாசித்திகளும் உண்டு. ஆக மகான்களின் சித்துக்கள் எனப்படுபவை கலையின் அடிப்படையில் அமைந்தவை என்பதனால் இவற்றையும் ஆழ ஆராய்ந்து உண்மையை உணரலாம். அதாவது ஒருவர் இந்த சித்து வேலையை கலைகளின் அடிப்படியில் செய்தாரா அல்லது தந்திர வேலைகளால் கண்கட்டு வித்தியால் (magic) ஆராய்ந்து அறிதல் உண்டு.

  70. அதாவது ஒருவர் இந்த சித்து வேலையை கலைகளின் அடிப்படியில் செய்தாரா அல்லது தந்திர வேலைகளால் கண்கட்டு வித்தையால் (magic) செய்தாரா என்று ஆராய்ந்து அறிதல் உண்டு.
    – என்று திருத்தி வாசிக்கவும்.

  71. //
    எதனூடும் நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ? சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ?
    //

    விஞானம் ஆனந்தம் பிரம்ம என்று சொன்ன உபநிஷத்துக்கள் தான் – மா அஹம் பிரம்ம நிராகுர்யாம் (அந்த பிரம்மத்தை நான் நிராகரிக்காமல் இருப்பேன் ) மா மா பிரம்ம நிரகரோத் (அந்த பிரம்மம் என்னை நிராகரிக்காமல் இருக்கட்டும்) என்ற நம்பிக்கை வார்த்தைகளையும் முன் மொழிகின்றன – self assurance, self confidence, என்பதும் நம்பிக்கை சார்ந்ததே – ஏன் காலில் நின்று என்னை அறிவேன் என்று சொல்வதும் நம்பிக்கை சார்ந்ததே – இதற்க்கு விஞ்ஞான நிரூபணங்கள் எல்லாம் கூட உண்டு – நம்பினார் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு –

    – சஹனா வாவது – இது நம்பிக்கை வார்த்தை தானே
    – அசதோம சத் கமைய – இதுவும் நம்பிக்கை வார்த்தையே – என்னத்தை மட்டுமே பிரதி பலிக்கின்றன

    – மாதா பிதா குரு தெய்வம் என்று வரிசையாக வைத்தது அம்மாவிற்கு முதல் இடம் தருவதற்காக இல்லை – ஒருவன் தனுது அன்னையை தானாக அறிவான் நம்புவான் – அந்த அன்னை தந்தையை காட்டுவாள், தந்தையை நம்ப சொல்வாள், தந்தை குருவை காட்டுவார், அவரை நம்ப சொல்வார், குரு இறைவனை காட்டுவார், இறைவனை நம்ப சொல்வர், நம்பி அறிந்திட சொல்வார் – ஒரு இலக்கின் மீது அந்த இலக்கு உண்மை என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே ஒருவனால் அந்த இலக்கை அடைய முடியும். அந்த இலக்கை அடைய எவ்வளவு பேரை நாம் நம்ப வேண்டி உள்ளது பாருங்கள்

    நானறிய நமது மதத்தில் இலக்கை புத்தகத்தில் படித்துவிட்டு நம்பிக்கை மட்டும் வைத்தால் போதாது – சுயமாக அறிந்து அடைய வேண்டும் என்பதே தவிர நம்பிக்கை வைக்காதே என்பதல்ல

    – இந்த நம்பிக்கை இல்லாமல் உண்மையை அடைய முடியாது என்பதை தர்கத்தின் மூலம் நிர்ணயம் செய்வது கூட சுலபானது

  72. /// aravindan neelakandan 6 July 2010 at 8:25 pm
    இன்றைக்கு தங்களை பிராம்மணர்கள் என பிறப்படிப்படையால் மட்டும் அழைத்துக் கொள்ளக் கூடியவர்கள் நிச்சயமாக வரலாற்று அறியாமையினால் அதை செய்கிறார்கள். அய்யர், அய்யங்கார் என்பதெல்லாம் சாதிகள் தான். பிராம்மணன் என்பது வர்ணம். இந்த வர்ணத்துக்குள் சாதிகள் வந்து போய் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் புதிய அந்தண சாதிகள் ருவாக்கப்பட்டதும் உண்டு ////.

    இருக்கலாம். ஆனால், நான் கேட்ட சந்தேகத்திற்கு பதிலைக்காணோமே.

  73. /// aravindan neelakandan 6 July 2010 at 8:31 pm //Nambikkai is right-mooda Nambikkai is wrong//

    நம்பிக்கை என்பதே ஆதாரமில்லாமல் நம்புவதுதான். ஆதாரத்துடன் ஒன்றை உண்மை என கொள்வதன் பெயர் அறிதல்; அறிதலே நம் மரபின் ஆதாரம்

    எதனூடும் நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ? சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ?

    உலகிலேயே அறிதலின் அடிப்படையில் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல மறைநூல் மரபை ஏற்கவும் நிராகரிக்கவுமான மானுட உரிமையை ஏற்ற ஞான மரபே ஹிந்து மரபு. அதனை நம்பிக்கை எனும் கீழ்மையில் அடைப்பது சோகமான விசய ///

    முதலில் ஞானமரபு அனுபவத்தைச் சார்ந்தது என்று பின்னூட்டம் இட்டு இப்போது அறிவைச் சார்ந்தது என்று சொல்கிறீர்களே. எப்படி? பழக்கமான நம்பிக்கையே அனுபவம். குழந்தை பயப்படும்போது அம்மாவை கட்டிக்கொள்வது அனுபவமா, நம்பிக்கையா, அறிவா? மகான்களின் இறையருளை கீழ்மையான நம்பிக்கை என்று வசை பாடுவதுதான் இந்து மரபா? இந்து மரபில், ஏதாவது ஞானி இம்மாதிரி நம்பிக்கை இல்லாமல் யாராவது இதுவரை இருந்திருக்கிறார்களா? நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் என்ன? இரண்டுமே கீழ்மையானதுதானா, மட்டமானதுதானா?
    நன்றி

  74. திரு சாரங்
    நன்றி. நான் சொல்ல நினைத்ததை சொன்னதற்கு .[ மாதா, பிதா ,குரு, தெய்வம் -நம்பிக்கை அடிப்படை ]
    திரு திருச்சிகாரன்
    நீங்கள் நிறம் பற்றி சொல்வது முற்றிலும் உண்மை -ஆறிப்போன ஆர்ய-திராவிட இனவாதம் அடிபடும் இடங்களில் இதுவும் ஒன்று.
    திரு நீலகண்டன்
    உங்கள் கட்டுரைகள் விரும்பி படிப்பேன் . ஆங்கிலத்தில் இருந்தால் லிங்க் தரவும் -என் வட இந்திய நண்பர்களிடம் சொல்ல -நம் மாநிலத்தின் உண்மை நிலை , வரலாறு அறியச்செய்ய உதவும். [ நாம் எல்லாரும் மஞ்சள் துண்டு அணிவதில்லை என்று எடுத்து சொல்ல வேண்டியுள்ளது ]
    பிரமாணங்களை பற்றி சொல்ல வந்தேன் .
    ப்ரத்யக்ஷ பிரமாணம் எல்லார்க்கும் வாய்க்காது.
    கேள்வி அறிவின் படி [ சப்த பிரமாணம் ] நம்பிக்கை வைத்து பின் மேல் செல்ல வேண்டி உள்ளது.

    ஞான மரபு உடையாமல் இன்னும் இருப்பதன் ஒரே காரணம் -கஷ்ட காலங்களில் [ ஆயிரம் வருஷம் கிட்டத்தட்ட , நம் தேசம் பல வித ஆக்கிரமிப்பு சக்திகளின் பிடியில் சிக்கி காணமல் போயிருக்க வேண்டியது]-இந்த மகான்கள் , காலத்திகேற்ப பக்தி [ நம்பிக்கை அடிப்படை] பயிரை வளர்த்து நம்மை காத்து வந்திருக்கிறார்கள்.

    நுண் கலைகள், ஞான தேடல் எல்லாம் எப்போது சாத்தியம்?
    நிம்மதியான வீடு மற்றும் நாடு. இருந்தாலே சாத்தியம். ஒரு சிலரைத் தவிர மற்றவர் புயலில் அகப்பட்ட துர்ம்பு போல் தவிப்பர்.
    இன்று நாம் ஒரு தனிமனித சுதந்திரத்தோடு ஞான தேடல் பற்றி பேச முடிகிறது என்றல் அதற்கு காரணம் என்றோ நம் முன்னோர் ஒருவர் போர் காலங்களில் ” குருட்டு ” நம்பிக்கை காரணமாக தப்பி பிழைத்து சந்ததியை ஞான மரபின் சந்ததியாகக வாய்ப்பு கொடுத்தது தான்.

    எல்லாரும் ஒன்று ஒப்பு கொள்வீர்கள்.
    ஆயிரம் வருடங்களில் இல்லாத அநீதிகள் ஐம்பதே வருடங்களில்….ஏன் ஐந்தே வருடங்களில் …நாம் அறியாததா ..மேலும் ஐந்து வருடங்கள் என்னாகுமோ ?
    இந்த கஷ்ட காலத்தில் தேவை நம்பிக்கை -இஷ்ட தெய்வ வழிபாடு -நம்பிக்கையே! -அயர்ச்சியை போக்க தியானம் முதலிய பயிற்சிகள்-ஒருவக்கொருவர் தெம்பு தருதல் – மற்றும் முடிந்தவர்களின் ஞான தேடல்.
    நான் சொந்த அனுபவங்களின் காரணமாக தான் எனக்கு தெரிந்த வரை தெய்வத்தை தேட முயற்சி செய்கிறேன். இப்பிறவி போனால் எப்பிறவி வருமோ? நம் “தவம் ” சாதாரணம் தான்.அதையும் கெடுக்க பல அரக்க சக்திகள்.கீழே விழுந்து விடாமல் இருக்க தேவை நம்பிக்கை .நம் குழந்தைகளுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு .
    [இது தரும் சுதந்திரம் அலாதி. ]கூடவே ஞானம் பற்றியும்-நம் உண்மை வரலாறு-தேவாரம், பிரபந்தம், திருமூலர் …எவ்வளவு முடியுமோ அவ்வளவு இவை தான் நிஜமான ” காம்ப்ளான் ” .
    .அன்புடன்
    சரவணன்

  75. நம்மால் முடிந்ததை குழந்தைகளுக்கு கொடுப்போம்-அதற்கு மேல் அவரவர் வாசனைகளின் படி- முன்னேற முயற்சி செய்வார்கள்-ஞானமோ , பக்தியோ .
    ஒரு பெரும் cultural assault நடந்து கொண்டிருக்கும் இந்நேரம் [ அறிவு ஜீவிகள் எழுதிய பள்ளி படங்கள் , சன் , விஜய் டிவிக்கள் ,ஊடகங்களின் திட்டமிட்ட மூளை சலவை முறைகள், நம் பாரம்பரியத்தின் மேல் நமக்கே வெறுப்பு வர செய்யும் [ வீண்] முயற்சிகள் -எல்லாவற்றையும் தாங்க வேண்டிஉள்ளது-கீழே விழுந்து எழுந்து போராடி கொண்டிருக்கிறோம் -பிடித்து நிற்க நம்பிக்கை என்னும் ஊன்று கோல் தேவை -காலம் வருகையில் ஞான வானில் பறக்க தான் போகிறோம்.அது வரை தாக்கு பிடிக்க வேண்டுமல்லவா?
    அன்புடன்
    சரவணன்

  76. மேல் உள்ள பின்னூட்டத்தில் பள்ளிபாடங்கள் என்றிருக்க வேண்டும் …படங்களல்ல ..மன்னிக்கவும். [ ஏமாற்றுபவை படங்களும் தான் என்பது வேறு விஷயம்]

  77. //எல்லாரும் ஒன்று ஒப்பு கொள்வீர்கள். ஆயிரம் வருடங்களில் இல்லாத அநீதிகள் ஐம்பதே வருடங்களில்….ஏன் ஐந்தே வருடங்களில் //

    இல்லை நான் ஒப்புக்கொள்ளவில்லை. அகமதுஷா அப்தாலியும் அவுரங்கசீப்பும் காலம் போல இன்றைக்கு இல்லை. இன்றைக்கு அறிவியலால் மானுட சுதந்திரம் நீதி ஆகியவை பரந்து பட்டுள்ளது ஆன்மிகம் ஆழமாகியுள்ளது.

    //ராகவேந்திரர் பிராமணர்களை மற்ற சாதிகளிடமிருந்து உருவாக்கினார் என்று அவர் சொன்னதாக தெரியவில்லையே//

    நானும் ஒரு வரலாற்று ஊகமாக சொன்னேன். அதற்கு வரலாற்று ஆதாரங்களை அளித்தேன். இன்று தங்களை பிராம்மணர்கள் என அழைத்துக் கொள்ளும் சாதிகள் வேதகால ரிஷிகள் முதல் இரத்த சம்பந்தம் கொண்டாடுவதைக் காட்டிலும் என்னுடைய வரலாற்று ஊகத்துக்கே அதிக நிகழ்தகவு இருக்கிறது. இதை ஜெயராமன் அய்யாவோ அல்லது ஆரிய படையெடுப்பு வாதம் பேசும் அவருடைய திராவிட குருநாத அய்யாக்களோ ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உண்மைக்கு அருகில் அதுதான் இருக்கிறது.

    //பழக்கமான நம்பிக்கையே அனுபவம்//

    இல்லை. அனுபவ அறிவு என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அனுபவ-நம்பிக்கை என்கிற வழக்கு கூட இல்லை. குழந்தை அம்மாவை கட்டிப்பிடிக்கிற விசயமெல்லாம் ஆழமான பரிணாம வேர்கள் கொண்டவை. விரிவான ஆராய்ச்சிகள் இவை குறித்து இருக்கின்றன. ஜெயராமனோ சொல்மண்டி இராவோ அல்லது வேறென்ன பெயர்களில் இயங்குபவர்களோ அதனையெல்லாம் தேடி கண்டுபிடித்து கொள்ளலாம் விரும்பினால்.

    // ஏதாவது ஞானி இம்மாதிரி நம்பிக்கை இல்லாமல் யாராவது இதுவரை இருந்திருக்கிறார்களா?//

    நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம்
    ஆரைஉன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்
    வேரை உன்னி வித்தை உனி வித்திலே முளைத்தெழும்
    சீரை உன்ன வல்லீரேல் சிவபதங்கள் சேரலாம்

    கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா?
    வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா?
    ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
    காயமான பள்ளியில் காணலாம் இறைவனை

  78. //// நானும் ஒரு வரலாற்று ஊகமாக சொன்னேன். ///

    ஊகங்களை நீங்கள் உண்மைகளுடன் கலக்கும்போது குழப்பம் ஏற்படுகிறது. இனி, தயவு செய்து ஊகங்களை ஊகங்களாகவே எழுதவும்

    இரண்டாவது, நான் சாதி மாற்றங்கள் குறித்து இங்கே ஒன்றும் பேசவில்லை. தாங்கள் உங்கள் அனுமானத்தை ராகவேந்திரர் மீது ஏற்றியதுதான் ஆதாரமில்லாதது. சாதிகள் உறைந்த காலம் ராகவேந்திரருக்கு பின்னாலா என்று இதனால் தெளிவு இல்லாமல் இருக்கிறது.

    ஞானமான பள்ளியில் இறைவனைக் காணலாம் என்பதும் இறைவன் மீதும், கோயில்கள் மீதும் உள்ள நம்பிக்கேயே. அந்த பாடலில் மந்திரங்கள் மீது வேணுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இதெல்லாம், அறிவின் மூலமாக வருமா, இல்லை நம்பிக்கையா.

    தாங்கள் விளக்க விரும்பவில்லையோ, இல்லை முடியவில்லையோ வேண்டுமானால் என்னையே தேடிக்கொள்ள சொல்கிறீர்கள். நன்றி

  79. Shri Aravindan,

    The poem that you have given is only to extort people to go beyond the externals and to go into the jnana that is the source of liberation. Without jnana there is no liberation in any school of thought. But to even get to that jnana, one has to have faith in the path shown by scriptures or guru. Until the jnana becomes aparoksha (seen through ones own eyes) this is absolutely essential.

    In this example also, you are taking the siddhar’s statements as true (or as it is called Apta vAkya). Without that belief you cant even progress.

    The difference with chsristanity or Islam is (which I guess you always want to maintain and show that Hindusim is different) that both those religions start and end with their respective beliefs. In Hinduism the belief is needed initially and it gets confirmed further on the way until the final aparoksha jnana when no more doubt will ever come up. If you want to read further about this you can look up the qualifications shankara prescribes for a mumukshu (seeker of liberation) where shraddha is deemed very important.

    regards
    Sthanu

  80. திரு அரவிந்தன் நீலகண்டன்
    நாட்டில் நடக்கும் அநீதிகளை பார்க்கையில் ஏற்பட்ட அயர்ச்சியில் சொன்னேன்.
    உண்மை தான் -நாம் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள்-இப்படிபேச சுதந்திரம் இருக்கிறது.
    ஆனாலும் இன்று ஆட்சியாளர்கள் பெரிதாக நாட்டிற்கு கெடுதல் ஏதும் செய்து விட முடியாது என்ற [ இது தான் மூட நம்பிக்கை-பிரமாணங்கள் அதாவது பார்த்தது, கேட்டது , உள் மனதில் பட்டது etc அடிப்படையில் இல்லாமல் – சும்மாவானும் தன்னை தான் ஏமாற்றி கொள்ளும் “நம்பிக்கை”] எண்ணத்தில் பெரும்பாலோர் ஒரு வித போதையில் வாழ்கின்றனர்.கவலைப்பட வைப்பது அதுதான்.
    அன்புடன்
    சரவணன்

  81. //
    கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா?
    வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா?
    ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
    காயமான பள்ளியில் காணலாம் இறைவனை
    //

    இதையும் நம்மவர்கள் தான் சொன்னார்கள்

    – ஒன்னும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான் இன்னு மறப்பேனா ஏழைகாள் அன்று கருவரங்கதிருந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயோன் திசை
    -உளன் எனில் உளன் … அலன் எனில் அலன்
    -அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவான் அடியனேனே
    – மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில் எழ
    – அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக இன்புறுகி ஞான சுடர் விளக்கேற்றினேன் ….
    – அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரவிணனை அம்மானே
    – பாதம் நம்ப வல்லார்கில்லை பாவமே

    அந்த காலத்தில் பல பேருக்கு நம்பி என்று தான் பெயரே வைத்தார்கள்

    இது அத்தனையும் நம்பிக்கை வார்த்தைகளே

    அறிவு என்பது அனுபவ பூர்வமாக இருக்க வேண்டும் “யதார்த்தஅனுபவ” என்று சொன்னது தர்க்க வாதிகள் – நம்பிக்கைக்கு அனுபவம் தேவையில்லை அது இயற்கையானது என்பதனால். தனி சொல் பிரயோகம் தேவை படவில்லை – மேலும் இந்த அனுபவம் வாயிலாக எழும் அறிவுக்கு பிரமேயம் என்றும் அது எழுவதற்கு வ்யாப்தி ஞானம் என்ற ஒன்றும் வேண்டும் என்கிறார்கள் – இந்த வ்யாப்தி ஞானமே (invariable concomittance) நம்பிக்கை – அது அறிவினால் வந்தால் என்ன, படித்து வந்தால் என்ன

    நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்கிறோம் இதை முழுமையாக அனுபவ பூர்வமாக அறிந்திரிக்கிரோமா? இல்லை? முடியவும் முடியாது?

    இப்படி அனுபவ அறிவை விடாபிடியாக முன் வைத்தது நியாய வைசேசிக காரர்கள் தான் – வேத மதம் என்றைக்குமே top-bottom அப்ப்ரோச் தான் எடுத்தது
    ருசிகரமாக இருக்கும் இந்த அறிவு விஷயத்தை கொண்டு இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருக்கு என்று சொல்லிவிடலாம்

    இப்படி எதற்கேடுத்தால்ம் சட்டம் பேசும் நியாய மதத்தவனே சுருதி என்பதை நேரடியாக அறிவு அள்ளிக்கவள்ளது என்று நம்ப சொல்கிறான் [ப்ரத்யக்ஷம், அனுமானம், உபமானம், சுருதி]

    இந்த குழந்தை அம்மாவை கட்டிபிடிப்பது பரிணாம விசயமே என்று ஒத்துக்கொண்டு தான் அது அம்மாவிடம் தானாக நம்பிக்கை வைக்கிறது என்ற சொல்கிறோம் – அம்மாவிடம் உள்ள அந்த நம்பிக்கை தான் அப்பாவை நம்ப வைக்கிறது – அப்புறம் குருவை – சரி இதெல்லாம் பரிணாம விசயமென்றால் நம்பிக்கை என்பது மனித இயல்பு போலும், அதை கண்டு கொள்ளாமால் எத்தனையோ தேடுவதோ ஏனோ

    குழந்தை அம்மாவையும் தவிர பலரையும் நம்புகிறது – இதெல்லாம் psychology இல் கண்டுபிடித்து வைத்துவிட்டார்கள்

  82. //அனுபவ அறிவு என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அனுபவ-நம்பிக்கை என்கிற வழக்கு கூட இல்லை.//

    அனுபவம், அறிவு அல்லாமே நம்பிக்க மேல தான் வாத்யாரே! ஒரு மேட்டர் மேல நம்பிக்க வச்சாத் தான் அந்த மேட்டர பத்தின அனுபவம் கெடக்கும், அஆங்! அப்பாலிகா அந்த மேட்டர வச்சுக்கலாமா அல்லாங்காட்டி தூக்கி போட்டுல்லாமான்னு அறிவு ஸொல்லும், இன்னா தெர்தா?

    எனுக்கு கடவுளாண்ட நம்பிக்க இல்ல; நா கோவிலாண்ட போனதே கடியாது; ஆனாக்கா என்னோட அறிவு இன்னா ஸொல்தோ அத்தொட்டு தான் நா செய்வேன், அப்டீன்னாக்கா…இன்னாத்த ஸொல்றது?

    அறிவு இன்னா நைனா ஸொல்லும்? நீ பட்சுக்கற பத்து பொஸ்தகத்துல இருக்கறதையா ஸொல்லும்? எத்தினியோ பொஸ்தகத்துல நம்பிக்கையும், அனுபவமும் நெறைய்ய ஸொல்லிகறாங்க, தெர்தா?

    நம்பிக்க வச்சு கோவிலாண்ட போனாதானே அனுபவம் கெடைக்கும் ஆ? அனுபவம் கெட்சா தானே மூள உஸாராவும்? நம்பிக்கையும் கடியாது….அனுபவமும் இல்ல…அப்பாலிகா மூள இன்னா செய்யும்? ஸொம்மா தேமேன்னு தான் கெடக்கும்!

    ஸிம்புளா ஒரு மேட்டரு ஸொல்றேன் வாத்யாரே, கப்புன்னு புட்சுக்கோ!

    “விஞ்ஞானம் தம்மாத்தூண்டு, மெய்ஞானம் செம பெருசு!

    விஞ்ஞானத்துக்கு லிமிட்டு கீது, மெய்ஞானத்துக்கு அளவே கடியாது!

    விஞ்ஞானத்த நம்புன்னு அறிவு ஸொல்லும்; மெய்ஞானத்த நம்புனாத்தான் அனுபவம் அறிவ தரும்!

    விஞ்ஞானம் ஏர் கண்டிஸன் ரூமு; ”ஆற்காடு” சொதப்புனான்னா புட்டுக்கும்!

    மெய்ஞானம்…..தென்றல் காத்தாவும் வரும், பொயலாவும் வீசும், இயற்கய (கடவுள) நம்புனா அனுபவம் கெடைக்கும், அறிவு ஒத்துக்கும்!”

    இன்னா, வர்டா?

    மன்னாரு.

  83. Thanks, Mr Sarang, I appreciate your inputs. I wish you will write more to enlighten poor ignorant athmas like me.

  84. Thanks Rama – No Atma is ignorant – it is the only guiding light during the most darkest moments of our life

  85. கடவுள் மீது நம்பிக்கை வைப்பதுதான் கையறு நிலையில் தவிக்கும் மனிதனுக்கு ஒரு ஆறுதலாக இருக்க்கிறது, கடவுள் தனக்கு உதவுவார் என்ற எண்ணம் ஒருவனை சோர்வில் இருந்து மீட்கக் கூடும்.

    அதே நேரம் ஆன்மீக முயற்சி என்பது நேருக்கு நேராக அனுபவத்தில் உணரும் நிலையை அடைவதை நோக்கிய பயணமே. விவேகானந்தர், சங்கரர், கிருஷ்ணர் எல்லோரும் இந்த நிலையை அனுபவத்தால் உணர்ந்தே ஒருவன் விடுதலை பெற்ற நிலையை அடைவதாக சொல்லி உள்ளனர். நேருக்கு நேராக பார்ப்பதுதான் , அன்பவிப்பதுதான் ஆன்மீகம். இந்த படிப்பு, விவாதம் போன்றவை எல்லாம் வைத்து ஒருவனை ஆன்மீக உண்மையை அறிந்தவனாக சொல்ல முடியாது என்று “மந்திரத் திருஷ்டா “, என்பதைக் குறிப்பீட்டு விவேகானந்தர் சொல்லி உள்ளார்.

    என்னைப் பொறுத்தவரையில் விவேகானந்தர், சங்கரர், கிருஷ்ணர் ஆகியோர் சொன்னதைக் கூட அப்படியே கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டியதில்லை. அவர்கள சொல்கிற வழியில் முயற்சி செய்து பார்க்கலாம். (சினிமா பார்க்க நேரம் செலவழிக்கும் போது, இவர்கள் சொன்ன முறைகளை முயற்சி செய்ய நேரம் செலவழிப்பது தவறில்லை). அப்போது நமக்கு அதிக ஆன்மீக வலிமை கிடைக்குமானால் தொடர்ந்து முயற்சி செய்யலாம். உண்மையை நேருக்கு நேர் அனுபவிக்கும் வரை முயற்சி செய்யாலாம். நேருக்கு நேர் கண்ட பின் அதை நாம் வழி மொழியலாம் -நாம் கண்டது ஒத்துப் போனால்.

    இந்தியாவில் தோன்றிய மதங்களின் சிறப்புகளுள் ஒன்று என்னவென்றால், அவை ஒரு மனிதன் தன்னுடைய சொந்த முயற்சி, கட்டுப்பாடு ஆகியவற்றால் தன்னைத் தானே மிக மேலான நிலைக்கு உயர்த்திக் கொள்ள முடியும் என்பதுதான்.

    கடவுள் மீது நம்பிக்கை வைப்பது என்பது ஒரு விடயம். நேருக்கு நேராக ஒரு நிலையை உணர்ந்து அதைப் புரிதல் செய்வது என்பது தான் ஐயத்துக்கு இடம் இல்லாமல் உறுதி செய்யப் படக் கூடிய வழியாகும். வெறும் நம்பிக்கை மட்டும்தான் என்றால் யார் சொல்வதைக் கேட்பது?

    நம்பிக்கை வைக்கிறேன், சொல்வதை அப்படியே நம்புகிறேன், என்றால் அவ்வளவுதான் , நம் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

    ” நீ கடவுள் இருக்கிறார் என்று நம்பர இல்லை. நீ நம்புறது நூத்துக்கு நூறு உண்மை அந்தக் கடவுள் நாங்க சொல்கிற ஒரே கடவுள் தான், நீ கும்பிடுபவை ஜீவன் இல்லாத கல்லுகள்” என்பார்கள்.

    இன்னொருவர் வருவார். அவர் சொல்வார், ”ஆமாம் ஒரே கடவுள்தான் அதுதான் நாங்களும் சொல்லுறோம், அவர் தான் விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதி, நாங்க சொல்லுகிற நூலை மறு பேச்சு இல்லாமல் அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். அனுபவ பூர்வமாக உணர முடியாது , நீ செத்த பிறகு ரொம்ப நாள் உன் ஆன்மாவை கல்லறையிலேயே வைத்து விட்டு கடைசியில் நடுதீர்க்கப் படுவாய் , அப்ப நீ நாங்க சொல்லுற கடவுளை கும்பிட்டு இருந்தா சொர்க்கம், இல்லை என்றால் நரகம். கடவுளை எல்லாம் பார்க்க முடியாது. போ, போ, இந்தப் புத்தகத்தில் எழுதி இருப்பதை அப்படியே நம்பு” என்பார்கள்.

    எதை நம்புவது. முதல் நபர் சொன்னதை நம்புவதா, இரண்டாம் நபர் சொன்னதை நம்புவதா?

    இருவருக்கும் தங்கள் நம்பிக்கையே உண்மை என்று நிரூபிக்க விரும்பி ஆத்திரமும் ,அவசரமும் பட்டு …. வாளை உருவு மோதிப் பார்க்கலாம் என்று கொக்கரிக்கும் நிலை .

    இந்து மதமோ, ”நீயே அனுபவத்தில் உண்மையை உணர்ந்து கொள்ளலாம், , எழுதி இருப்பது உண்மையா என்று பார்த்துக் கொள்ளலாம்” என்று தைரியமாக சொல்லுகிறது! அந்த அளவுக்கு உண்மைக்கான தேடலை ஆதரிக்கும் மதத்தை வைத்துக் கொண்டு, நாமும் நம்பிக்கை தான் ஒரே கதி , சொல்வதை அப்படியே நம்பு என்று கட்டளை இட வேண்டியதில்லை.

    எனவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, அப்படி கடவுள் என்று ஒருவர் தனியாக இருக்கிறாரா , அல்லது நாமேதான் கடவுளாக இருக்கிறோமா, ஒரே கடவுள் தான் இருக்கிறாரா, அவரே பல வடிவங்களை காட்சி தருகிறாரா என்பதை எல்லாம் நாம் அனுபவத்தில் பார்த்து விட்டு தெரிந்து கொள்ளலாம்.

    அவசரம் அவசரமாக இப்போதே இதுதான் சரி, நான் சாட்சி கொடுக்கிறேன் என்று காணாத ஒன்றுக்கு பொய் சாட்சி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. குடுக்கும் கூட்டத்தில் நாமும் சேர வேண்டுமா? காணாத ஒன்றுக்கு , உணராத ஒன்றுக்கு சாட்சி கொடுப்பது, பொய் சாட்சி கொடுப்பது (குற்றம்) அல்லவா?

    முதலில் நாம் நம்மைப் பற்றிக் கவனிப்போம். துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள, நம் மன நிலையை உயர்த்திக் கொள்ள நாம் முயற்சி செய்வோம். அதற்காக யாரை வேண்டுமானாலும் கடவுளாக வணக்கிக் கொள்ளலாம். அவர் நல்ல கொள்கைகளைக் கொண்டு அதன்படி செயல் பட்டாரா என்பதுதான் முக்கியம்.

    அனுமனுக்கோ, குகனுக்கோ, ஜடாயுவுக்கோ இராமர் கடவுளா, அவர் தான் ஈஸ்வரனா, அவர் தான் பிரம்மமா என்பது பற்றிஎல்லாம் எதுவும் தெரியாது, (எனக்கும் தெரியாது). அவர்கள் அதைப் பற்றிக் கவலையும் படவில்லை. (இராமர்) இவ்வளவு நல்லவர், தியாகி, இவரைப் போலக் கஷ்டப்பட்டவரும் உலகில் இல்லை, அந்தக் கஷ்ட நேரத்திலும் துன் மார்க்கத்துக்குப் போகாமல் நல்ல பாதையில் உறுதியாக இருந்தார் இராமர் என்பதால் அனைவரும் இராமரைக் கண்டு வியந்து அவருடைய கொள்கை வழி செல்ல உறுதி எடுத்தனர். முதலில் நாம் அனுமனை, குகனை, ஜடாயுவை அவர்களின் உன்னத மன நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

    நம்பிக்கை அடிப்படையில் அடாவடியாக இதுதான் சரி என்று சொல்லும் நிலையை நாமும் எடுக்க வேண்டுமா?

  86. அசத்தோமா சத் கமய என்பது இந்து மதத்தின் மிக முக்கிய கோட்பாடு, மிகச் சிறந்த கோட்பாடு . இதன் அர்த்தம் என்ன என்பதை என் போன்ற சாமானியர்கள் கூட அறிந்து கொள்ளலாம்.

    அதாவது உண்மை அல்லாத நிலையில் இருந்து உண்மையை நோக்கி என்பதே இதன் அர்த்தம். அதாவது பொய்யிலிருந்து உண்மையை நோக்கி என்பதே.

    சத் என்பதை உண்மையான நிலை (எப்போதும் மாறாமல் இருக்கும் நிலை என்பதாகவும், நாம் இப்போது இருப்பது பொய்யான நிலை (அதாவது சில காலம் கழித்து இல்லாமல் போய் விடும் நிலை) என்பதாகவும், அழியும் பொய்யான (இல்லாத) நிலையில் இருந்து அழிவற்ற மாறாத உண்மை நிலைக்கு செல்வதையும் இது குறிக்கும். எப்படி இருப்பினும் இந்து மதம் உண்மைக்கு கொடுத்திருக்கிறது என்பதையும், உண்மையைத் தேடும் பயணத்தை வூக்குவகிக்கிறது என்பதிலும் சந்தேகம் இல்லை. சொன்னதை அப்படியே நம்பு என்று இந்து மதம் சொல்லவில்லை.

    In tamil we use the word நம்பிக்கை in 3 meanings.

    நம்பிக்கை = confidence

    நம்பிக்கை = hope

    நம்பிக்கை = belief / faith.

    Hinduism gives us first two நம்பிக்கை confidence and faith. It does not insist or command to belief any thing blind folded.

  87. //நம்பிக்க வச்சு கோவிலாண்ட போனாதானே அனுபவம் கெடைக்கும் ஆ? அனுபவம் கெட்சா தானே மூள உஸாராவும்? நம்பிக்கையும் கடியாது….அனுபவமும் இல்ல…அப்பாலிகா மூள இன்னா செய்யும்? ஸொம்மா தேமேன்னு தான் கெடக்கும்!// ஆஹா மன்னாரு அன்னாத்தே! பட்டய கிளப்புரே நைனா! கலக்கு கலக்கு தலைவா!

  88. த்யாகராஜர் சுய தேடலில் ஈடு பட்டாரோ? நீ நம்பியே ஆக வேண்டாம், நீயே முயற்சி செய்து அறிந்து கொள்ளலாம் என்பது ஒன்று, நம்பிக்கை வைப்பவன் எல்லாம் ரெண்டாம் தரம் முட்டாள் என்பது ஒன்று. தன் முயற்சியால் மட்டுமே முக்தி கிட்டும் இதுவே ஹிந்து மதம் கூறும் இறுதியான கூற்று என்று சொல்வது மற்றொன்று சங்கரர் முதல் வகையை தான் சொன்னாரே தவிர நம்பிக்கை வைக்கவே வைக்காதே என்றல்ல – சங்கர பாஷ்யங்களில் எண்ணற்ற இடங்களில் ஒருவனுக்கு ஞானம் பகவானின் கிருபையால் மட்டுமே கிடைக்கும் என்று சொல்கிறார் என்ன செய்ய?

    சரி இதை நாம் சற்று வேதாந்த முறையில் பார்க்கலாம் – இதை பார்க்க ஆன்மா என்று ஒன்று உண்டு அப்புறம் பரமாத்மா என்று ஒன்று உண்டு என்று ஒத்துக்கொள்ள வேண்டும் (இதையும் தர்க்க ரீதியில் நிர்ணயம் செய்து விட்டு தான் வேதாந்த மதமோ, நியாய-வைசேசிக மதமோ முன் செல்கிறது)

    – ஆன்மா எல்லாவற்றையும் விட சூக்ஷ்மமாணது (இதற்க்கு சங்கரரின் கீதா பாஷ்யம் அந்தவந்த இமே தேஹா பார்கவவும்) – அதாவது ஆத்மா பிரக்ரிதி போன்ற வஸ்துக்களை விட சூக்ஷ்மமாணது அதனால் தான் அது அனாதியாக இருக்கிறது – அப்படி இல்லை என்றால் ஒரு கத்தியோ, கம்போ அதை கொன்று விடும் அல்லவா – இந்த தன்மையினால் தான் ஆன்மா உடலை ஊடுருவி நிலை கொள்கிறது. இப்படி அது சூக்ஷ்மமாணது இருப்பதினால் தான் அது ஊடுருவும் விஷயங்களை அது புரிந்து கொள்கிறது – உடலை பற்றி, கத்தி, கம்பு பற்றி …..

    – ஆன்மாவை விட சூக்ஷ்மமாணது பரமாத்மா – இதற்க்கு சுருதி வாக்யங்கள் ஏராளம் – அனோ ரணியானா போன்றவை மற்றும் ப்ரிஹடாரன்யாக உபநிஷத்தில் வரும் அந்தர்யாமி பிராமணம் முழுவதும்

    – தன்னை விட சூக்ஷ்மமான ஒரு பொருளை ஆன்மா எப்படி தானாகவே உணர முடியும் (தர்க்க ரீதியில் இப்படிதான் முடிவு எடுக்க வேண்டும்)

    – ஆக ஆன்மாவால் தன்னை மட்டுமே உணர முடியும் தான் வேறு இந்த உடல் வேறு என்பதை மட்டும் தான் உணர முடியும் – இறைவனை உணர தானாகவே முடியாது – அதற்க்கு பகவத் கிருபை அவசியம் – இதையே தான் சங்கரரும், ராமானுஜரும், மாத்வரும் மற்றும் பல ஆச்சார்யர்களும் முடிவு செய்கின்றனர்

    – பகவத் கிருபை இல்லாமல் நீ உன்னை உணரலாம் என்று விவேகானந்தர் சொல்லி இருக்க மாட்டார் என்று நம்புகிறேன்

    – சரி இந்த பகவத் கிருபை எப்படி தான் கிடைக்கும் ?

    இதை எல்லாம் விடுவோம் – நாமாக நம்மை அறிவோம் – இந்த அறிவு எங்கே ஏற்படுகிறது, நமது புத்தியில், இந்த புத்தி என்பதோ மனசின் ஒரு பகுதி – மனஸ் என்பதோ அசத் (இப்படி தான் எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர்) – ஒரு அசத்தில் ஏற்படும் அறிவை எப்படி சரியான் ஒன்று – அதுவே வழி காட்டி என்று எப்படி சொல்லமுடியும் – ஒரு அசத்தின் மூலம் எப்படி சத் – மாறாத ஒன்றை அறிவது?

    சுய தேடலில் தான் முக்தி என்றால் நாம் ஆழ்வார், நாயன்மார்கள், ப்ரஹல்லாதன், கோபிகைகள், சைதன்யர், த்யாகராஜர் மற்றும் பல மகாகளின் வழியை தெரிந்தோ தெரியாமலோ கேலிக்கு உள்ளாக்குகிறோம் என்பதே அர்த்தம்

    அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த …
    திருக்கமல பாதம் வந்து என் கண்ணில் உள்ளன ….

    என்று பகவத் கிருபையால் மட்டுமே, அரங்கனின் பாதம் தானே தன்னை தேடி வந்தது என்று ஆழ்வார் நம்பிக்கை வைக்கிறார்

    அனுமன் குகனென்ன ராவணனே ராமன் சாக்ஷாத் ஹரியின் அவதாரம் என்று ஒப்புகொல்கிறான் – இது ராமாயணத்தில் தான் இருக்கிறது நம்புங்கள் – இப்படி ஹனுமனுக்கு தெரியாது, விபீடணனுக்கு தெரியாது என்றெல்லாம் தயவு செய்து சொல்ல வேண்டாம் – வால்மீக்யின் வாக்கு வேற மாதிரி இருக்கிறது.

  89. ஜெயராமன் ‘அய்யா’

    //ஊகங்களை நீங்கள் உண்மைகளுடன் கலக்கும்போது குழப்பம் ஏற்படுகிறது. இனி, தயவு செய்து ஊகங்களை ஊகங்களாகவே எழுதவும்//

    யார் ஊகங்களை உண்மையுடன் கலந்தது? அல்லது மற்றவர் ஊகமாக முன்வைத்ததை அவர் உண்மையென சொன்னது போல வாதம் புரிய முன்வந்தது?

    இதோ நான் சொன்னது: //சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சன்னியாசி அவருடைய ஆன்மிக பலத்தினால் சமுதாய கரிசனத்தால் ஒரு சம்பிரதாயத்தை உருவாக்கும் போது அல்லது புனருத்தாரணம் செய்யும் போது எங்கிருந்து அந்தணர்களை உருவாக்கியிருப்பார்? இப்படி பெரும் கூட்டமாக வந்த அனைத்து சமுதாய மக்களிடமிருந்து தான். இன்றைக்கு மாத்வ பிராம்மணர்களாக இருப்பவர்களோ அல்லது ஸ்மார்த்த அல்லது வேறெந்த பிராம்மணர்களாக இருப்பவர்களோ வேதகால ரிஷிகளின் ‘இரத்த’ நீட்சியாக இருக்க முடியாது. அது ஒரு ஆன்மிக சமுதாய தொடர்ச்சி மட்டுமே. //

    இது நான் சொன்னதாக திருவாளர்.ஜெயராமன் அய்யாவாகிய நீர் சொன்னது:

    //ராகவேந்திரர் பிராமணர்களை மற்ற சாதிகளிடமிருந்து உருவாக்கினார் என்று அவர் சொன்னதாக தெரியவில்லையே.//
    //தாங்கள் உங்கள் அனுமானத்தை ராகவேந்திரர் மீது ஏற்றியதுதான் ஆதாரமில்லாதது//

    நான் ஊகமாக மட்டுமே முன்வைத்தேன். ஆனால் நிச்சயமாக “இன்றைய பிராம்மணர்கள் வேதரிஷிகளின் ரத்த சுத்தத்தை பாதுகாக்கிறார்கள்” என்று சொல்வதைக் காட்டிலும் நான் சொல்வது வரலாற்று உண்மை அதிகம் கொண்டது. சான்றோர் சமுதாயத்திலிருந்து ராமானுஜர் அந்தணர்களை உருவாக்கியதை வரலாற்றாராய்ச்சியாளர் தோத்தாத்ரி நிறுவுகிறார். மருத்துவ சமுதாயத்திலிருந்து உருவாக்கப்பட்ட அந்தண சாதிகளும் உண்டு. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை…ஏன் 1930களில் பிரிட்டிஷாரால் தாழ்த்தப்பட்ட சாதியாக அட்டவணை சாதி என அறிவிக்கப்பட்ட ஒரு சாதி தம்மை அந்தண சாதியாக நிறுவியுள்ளது வட இந்தியாவில். (இது குறித்த விரிவான கட்டுரையை பின்னால் எழுதுவேன்.) சாதிகளின் உறைநிலை பிரிட்டிஷாரின் காலகட்டத்திலேயே முழுமையடைந்தது. அதற்கு முன் சாதிகளின் வரையறைகளும் எல்லைகளும் நெகிழ்ச்சி கொண்டவையாகவே இருந்தன.

    மன்னாரு மன்னாரு வாருங்கண்ணாச்சி…நல்லாருக்கீயளா…ரொம்ப நாளா உங்கள காணாம ஒரு மாதிரி மனசு வேதனையா இருந்துச்சு. வந்து தீத்து வச்சதுக்கு சந்தோசம் சரியா….சரி இனி நம்ம கதைக்கு வருவோம்.

    //அனுபவம், அறிவு அல்லாமே நம்பிக்க மேல தான் வாத்யாரே!//

    திருவாவடுதுறை ஆதீனம் இல்ல திருவாவடுதுறை ஆதீனம் அவுக மெய்கண்டார் மெய்கண்டார் அப்படீன்னு ஒரு புஸ்தகம் போடுறாங்கோ…வருச சந்தா ஐம்பதே ஐம்பது ரூபாதான். அதில வைகாசி மாச புத்தகத்துல இன்னா போட்டிருக்காங்கோ ஒரு கட்டுரை. கட்டுரை பேரு “சிவஞான பாடியச் சிறப்பு” எழுதுனது யாரு? சித்தாந்த சைவச் செம்மணி ஆதீனப்புலவர் ஆதி.முருகவேள். அதுல இப்படி சொல்லுதாரு பாருங்களேன்

    ‘இதெல்லாம் ஆராய்ச்சியில் தெரியாது. அனுபவத்தில் தெரியவேண்டியது’ என்கிறோம். ‘ஆராய்ச்சி அறிவின் வேலை’ என்கிறோம். அப்படியானால் அனுபவம் என்பது? அறிவுக்குத் தொடர்பில்லாதது அது என்ற கருத்தோ? ஆம். அப்படித்தான் பெரும்பாலோர் கருதுகின்றனர். அறிவுப்பொருள் உயிர். அப்படியிருக்க அறிவுக்குத் தொடர்பில்லாமல் உயிர்க்கு அனுபவம் உண்டாயிற்று என்றால் எப்படி பொருந்தும்? அனுபவம் உயிருக்குத்தானே? அப்படி என்றால் அறிவினிடத்துதானே அனுபவம் உண்டாகும்? இது பற்றிய தெளிவு மிக ஆழ்ந்த அறிவில்தான் பிறக்கும். அத்தெளிவில் அறிவு பிறக்கும். அத்தெளிவில் அறிவு அனுபவத்தின் வேறு என்றோ அனுபவம் அறிவின் வேறானதென்றோ தோன்றாது. இரண்டுமே அறிவு நிலைதாம். சிறப்பாக அனுபவமே அறிவின் விளக்க நிலையாகும். ஒரு பொருளில் தோயாது அப்பொருள் பற்றிய அறிவு நமக்கு உண்டாயிற்று என்றால் அது தான் முதாலாவது கூறப்பட்ட அறிவு நிலை. அந்த அறிவில் பொருள் பற்றிய உண்மையியல்பு முற்றும் விளங்காது. அனுபவம் என்பது அப்பொருளில் நமது அறிவு தோய்ந்து நிற்கும் நிலை. அப்போதுதான் அப்பொருளை உள்ளபடியே நமது அறிவு அறியும். ஆதலால் இந்த அறிவினை அழ்ந்தியறியும் நிலையாகச் சொல்லுவர். அழுந்தி அறிதலுக்குப் பெயர் அனுபவம் என்பது. ஆகவே அழுந்தியறிதலே அனுபவம். அனுபவமும் அறிவின் வேலையே. அறிவுக்கு வேறாக அனுபவம் என்பதில்லை. அனுபவமும் அறிவே. ஆதலால் அனுபவமாகிய அறிவை அனுபவ அறிவு எனவும் அனுபவ ஞானம் எனவும் கூறுகிறோம். இத்தகைய மிக நுட்பமான சொற்பொருள் தெளிவினை நமக்கு அளிக்கும் சிறப்பினை இப்பாடியத்துள் காண்கிறோம். ‘அழுந்தி யறிதலே அனுபவித்தல்’ என்னும் சொற்குப் பொருள் (சிறப்பு , சூ.11 அதி.1) ‘அறிந்த பொருளிலே அழுந்துதலே சார்ந்ததன் வண்ணமாக அறிதல். அதுவே அனுபவம் என்னும் சொற்குப் பொருள்.’ (சூ-6. அதி.2)

    (இந்த அருமையான சித்தாந்த அறிவு தரும் இதழ் திருவாவடுதுறையினரால் வெளியிடப்படுகிறது. விலையோ மிகவும் குறைவு. உள்ளடக்கமோ நம் பாரம்பரிய ஞான மரபின் பொக்கிஷம். சந்தா சேர்ந்தால் வீடு தேடி வரும் அருளமுது. இன்றைக்கு ஆன்மிக இதழ்கள் என்கிற பெயரிலே மூடநம்பிக்கைகளையும் கல்ட்களையும் வளர்க்கும் இதழ்களே கடைகள் கடைகளாகத் தொங்குகின்றன. உண்மையான மெய்ஞானம் அளிக்கும் மெய்கண்டார் போன்ற திங்களிதழ்களோ நமக்கு அதிகம் தெரிவதில்லை. இத்தகைய இதழ்களுக்கு சந்தா சேருங்கள்.இத்தகைய இதழ்களை வாங்கி உங்கள் அருகில் உள்ள நூல் நிலையங்களில் சேருங்கள். உண்மையான ஆன்ம ஞானத்தை நம் மக்களிடையே பரப்புங்கள்.)

    இப்படி இதை சிந்திக்கலாம். சிறுவன் பள்ளிக்கு செல்கிறான். புவியீர்ப்பு விசை குறித்து படிக்கிறான். மூன்றாந்தர மாணவன் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்கிறான். முதல்தர மாணவன் சிந்திக்கிறான். சந்தேகிக்கிறான். அறிந்து கொண்டு முன்னேறுகிறான். ஏன் கேள்வி கூட கேட்கிறான். மோசமான வாத்தியார் என்ன செய்கிறார்? கேள்வி கேட்கிற மாணவனை திட்டுகிறார். கீழ்படிதலின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். நல்ல ஆசிரியர் சந்தோஷமடைகிறார். இந்து மதத்தில் நடப்பதும் இதுதான். இந்து தருமம் ஒரு அறிவியல். நம் ஆச்சாரியர்கள் எல்லாம் கேள்வி கேள் கேள்வி கேள் நான் சொல்கிறேனே என்று ஏற்றுக்கொள்ளாதே நீயாகவே தேடு தேடிக்கண்டு கொள் உன் அனுபவத்தில் உணர்ந்து கொள் என்கிறார்கள். “கேடு வருமே கேள்வி கேளா பேருக்கெல்லாம்” என்கிறார் அய்யா வைகுண்டர். இது நல்ல அறிவியல் ஆன்ம அறிவியல். நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல தேடுதலின் அடிப்படையில் அறிவுத்தேடலே ஹிந்து தருமம். ஆனால் இன்னொரு சப்ஜெக்ட் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது அறிவியல்தன்மை கொண்டதே அல்ல. முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. “கேடு வருமே கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம்” என்று மிரட்டுவது, நம்பாவிட்டால் சாஸ்வத நரகம் என்று பயமுறுத்துவது. அங்கே ஒரு மாணவன் கேள்விகேட்டால் பள்ளியை விட்டே வெளியே அனுப்பிவிடுவார்கள். “பதிலையும் கேள்விகேள் ஏனென்றால் நான் அளிக்கும் பதில் கூட ஒரு hint தான் நீயே தேடி கண்டு கொள்” என்பது ஹிந்து தருமம். “நம்பு நம்பு நம்பிக்கை எங்கள் தேவன் மேல் அவன் தான் தேவகுமாரன் என்பதன் மேல். அவனுடைய ரத்தமே மீட்சி என்பதன் மேல்” இப்படி நம்பினால் நீ செழிப்பாய் உனக்கு வியாதி குணமாகும் என்றெல்லாம் ஆன்ம வியாபாரம் செய்வது சில மதங்கள். “நம்பு நம்பு எங்கள் மறையை எங்கள் இறை தூதரை. நம்பாவிட்டால் உனக்கு நரகம் இல்லையென்றால் தண்டனை வரி. ரொம்ப கேள்வி கேட்டால் கையை வெட்டுவோம். போட்டுத்தள்ளுவோம்.” என்று சொல்லி மதம் பரப்புவோரும் உண்டு. இது ஆன்ம அடாவடித்தனம் அல்லது ரவுடித்தனம். இப்படி பட்ட ‘ஆன்ம’ வியாபார மதங்களுக்கும் ரவுடித்தன மதங்களுக்கும் அடிப்படையாக இருப்பது என்ன நம்பிக்கை. ஆனால் ஹிந்து தருமம் மட்டுமே இப்படிப்பட்ட மானுடத்தை கட்டுப்படுத்தும் நம்பிக்கைகளை முன்வைக்காமல் அறிவுத்தேடலை முன்வைக்கிறது. இதுதான் நம் சிறப்பு. நம் ஞானமரபின் சிறப்பு. இந்த சிறப்பை சில psychological comforts க்காக நாம் இழக்கவேண்டுமா?

  90. //
    சான்றோர் சமுதாயத்திலிருந்து ராமானுஜர் அந்தணர்களை உருவாக்கியதை வரலாற்றாராய்ச்சியாளர் தோத்தாத்ரி நிறுவுகிறார்.
    //

    இதற்க்கு நேரடி சான்றே என்னால் கொடுக்க இயலும் – எனக்கு தெரிந்த ஒருவர் வைணவ மடத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் பிராமணராக உருவாக்கப்பட்டு வேதம், சாஸ்திரம், பிரபந்தங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டார் – இன்று பிராமணர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் பலரையும் விட நற்தொண்டு புரிந்து வருகிறார் – ஆன்மிகத்திலும் சரி, மக்கட் தொண்டிலும் சரி

    இன்றைய பிராமணர்கள் எல்லோரும் வேத ரிஷிகளின் ரத்த சொந்தம் என்றால் சத்தியமாக நம்ப முடியாது

    நல்ல அனுபவம் அறிவு சார்ந்ததே – அறிவு சாராத அனுபவம் இருக்கிறது – அது சந்தேகம், குழப்பம், பயம், தவறான புரிதல், நினைவு செய்தல், தவறானதை உண்மை என்றும், உண்மையை தவறு என்றும் நிறுவுதல் – அனுபவம் என்பது யதார்த்த அனுபவமாக இருந்தால் தான் அதாவது உண்மையான அனுபவமாக இருந்தால் தான் அறிவு ஏற்படும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

    இங்கு அறிவு என்பது “knowledge” என்பதை குறிக்கும் திறனை அல்ல

    மற்றபடி சாத்தானிய மதத்தவன் சொல்லும் நம்பிக்கையை generalize செய்து நாம் சொல்லும் பற்று என்ற அர்த்தம் வரும் நம்பிக்கையுடன் முடிச்சு போடுவது சரி அல்ல என்றே எனக்கு படுகிறது

    நாம் நம்பியே ஆகவேண்டும் இல்லையேல் என்னை சட்டி என்று சொல்லவில்லை – ஆனால் நாம் பிறவி பெரும் துணையாக அவனை பற்றி நம்பினால் கேடு இல்லை என்று மட்டுமே சொல்கிறோம்

  91. திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களே
    அனுபவத்தால் அறிவு பெறப்படுகிறது என்பதே சரி. இதனால்தான் படிப்பறிவு என்றும் பட்டறிவு என்றும் கூறப்படுகிறது. அதாவது அறிவை கல்வியாலும் அனுபவத்தாலும் அடையலாம். ஆக அனுபவத்தின் அடுத்தநிலை அறிவே ஆகும்.
    சைவ சித்தாந்த ரீதியான விளக்கம் மிக அருமை. நன்றி.

  92. அட இன்னாப்பா அரவிந்து நீ பேஜார் பண்ற?

    நம்பிக்க, அறிவு, அனுபவம் அல்லாம் ஒன்னுக்கொன்னு கனீக்ஸன் உள்ள மேட்டருங்கன்னுதான் நா ஸொல்லிக்கறேன்.

    நம்பிக்க – வெக்க வேண்டிய எட்துல வெக்கனும்; வெக்க கூடாத எட்துல வச்சா ஏமாந்து தான் போவ!

    கேல்வி – கேக்க வேண்டிய எட்துல கேக்கனும்; கேக்க கூடாத எட்துல கேட்டா ஒத தான் கெடக்கும்!

    ரெண்டு எட்துலயும் அனுபவம் கெடெக்கும்; சில எட்துல கெடச்ச அனுபவம் கேல்வி கேக்க வெக்கும்; சில எட்துல கேல்வி கேட்டதுக்கு அப்பால தான் அனுபவம் கெடக்கும்.

    நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட மேட்டருங்க கூட கீது நைனா!

    அறிவால வெளக்க முடியாத அனுபவமும் கீது வாத்யாரே!

    நம்பிக்க இல்லாம ரொம்ப நாள் இருந்த பார்டி திடீர்னு ஒரு நாள் நம்பிக்க இருக்கற பார்டியா மாறிட்றான், எப்டி நைனா? ஒன் அண்ட் ஒன்லி எக்ஸ்பீரியன்ஸு! அந்த அனுபவம் தான் பார்டிய மாத்துது, அ ஆங்!

    இன்னா…ரொம்ப கொயப்புறனா?

    ஸரி அத்த வுடு…

    நீ கிலீன் போல்டுமா. அத்த ரீஜண்டா ஒத்துக்க. அத்த வுட்டுட்டு நா போட்டது நோ பால்னு ப்ரூவ் பண்றதுக்காவ திருவாவடுதுற, ஏஸ்து க்றுஸ்துன்னு ரவுண்டு கட்ற?
    போய் பெவிலியன்ல ஒக்காந்து ஸோக்கா வேடிக்க பாரு வாத்யாரே!

    இன்னா வர்டா…

    மன்னாரு.

  93. நாம் நம்பிக்கை அடிப்படையில் வணங்குபவர்களை குறை சொல்லவோ, நிந்திக்கவோ, இகழவோ இல்லை. அது ஆரம்பக் கட்டம். தியாகராசர் நம்பிக்கையில் ஆரம்பித்து விரைவில் அனபவத்துக்கு வந்ததாக சொல்லப் படுகிறது.

    சுக்ரீவன் முதாலானோர் ராமனையும், லக்ஷ்மனையும் பார்த்து அவர்கள் ஒருவேளை வாலியால் அனுப்பபட்டவர்களாக இருப்பார்களோ, என்று எண்ணியதாக சொல்லப் படுகிறது.

    அதனாலே அனுமன ஒரு சந்நியாசி வடிவத்தில் இராம லகஷுமனர்களை அணுகியதாக சொல்லப் படுகிறது. இராமரை கடவுளாக கருதி இருந்தால் ஆச்சா மரத்தில் அம்பு விட்டுத் துளைத்துக் காட்ட வேண்டியதில்லை.

    மற்ற படி இராமர், சீதை, இலக்குவன், அனுமன் உள்ளிட்டோர் கடவுளாக இருந்தால் அதனல் கடவுள் என்கிற நிலைக்குத்தான் பெருமையே தவிர, இராமருக்கு கடவுள் என்கிற பட்டம் புதியதாக பெருமை எதையும் தரப் போவதில்லை.

    இராமரை கடவுளுக்கு இணை வைக்கவில்லை. இராமர் கடவுளுக்கும் மேலே வைக்கப் பட வேண்ட்யவர்.

    ஆனால் கடவுளுக்கு மேலே எந்த ஒரு நிலையம் குறிப்பிடப் படாததால் இராமன் , அனுமன இவர்களை கடவுள் என்கிற கீழான நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்.

    இன்னும் சொல்லப் போனால் சீதை அவர்களை கூட கடவுள் என்னும் நிலைக்கு தான் வைக்கப் பட்டு உள்ளார்.

    எல்லோரும் கஷ்டப் படுவதை மேலே இருந்து வேடிக்கை பார்க்கும் ” கடவுள்” நிலைக்கு, தியாகியும் மற்றவர் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் ஏற்றவரும், அந்த நிலையிலும் பொறுமையை கைவிடாதவருமான இராமரை கடவுளாக வைத்துக் கொள்வதால் கடவுளுக்கு இருந்த பழி நீங்கி, கடவுள் என்கிற நிலை தான் தான் பெருமை அடைகிறது. . இராமருக்கு மனிதர்க்ளைளும் சமானம் இல்லை. கடவுளிலும் சமானம் இல்லை. என்று அறிங்ககள் சொல்கின்றனர்

    இராமரை தனக்கு மேல் ஈசன் என்று யாரும் இல்லாத ஈசன் என்று சங்கரரும், பிரம்மம் என்று துளசிதாஸ், தியாகராசர் ஆகியோரும் சொல்லுகின்றனர். மூன்று தெய்வங்களை வைத்து ஸ்ருஷ்டி, சதித்து, சம்ஹாரம் ஆகியவற்றை அவர்க்ளை இராமர் செய்ய வைப்பதாக பாடல்கள் உள்ளன.

    நம்மைப் பொறுத்தவரையில் நாம் முன்பு சொன்னது போல இராமர் ஒரு நல்லவர், தியாகி அதுவே நமக்கு போதும்.

  94. சுவாமியை பற்றி ஒரு DK-ஆசாமி எழுதிய கட்டுரை போல தெரிகிறது.
    எதையுமே உண்மை என்று நம்ப மறுக்கும் ஹரன் “பகுத்தறிவு” -வாதி போல் எழுதி இருக்கிறார்.
    இந்த நூற்றாண்டிலே வாழ்ந்த ரமணர், பரமாச்சாரியார் போன்றோரும் miracles- புரிந்ததாக எழுதப்பட்டுள்ளன. இவற்றின் நம்பக்கதன்மை எழுதியவரின் intellect, status, prejudice ஆகியவற்றை பொருத்தது. for example, Ex-USSR ambassador writing on paramaachariyarai can be trusted coz he can be considered reasonably knowledged and unbiased.

    எல்லாவற்றுக்குமே அடிப்படை “நம்பிக்கை”. அது இல்லாமல் எழுதுவது மனதை புண்படுத்துகிறது.
    ps: ஹிந்துக்களுக்கு எதிரியே வேண்டாம் !! நமக்கு நாமே போதும். sad truth…

  95. அநீ ஐயா,

    எப்படியெல்லாமோ சுத்திவிட்டு சமாளிக்க முயற்சிக்கிறீர்கள். இப்படியாப்பட்ட ஒரு விக்கிரமாதித்தன் தமிழ்இந்துவை தாங்கிப்பிடிப்பது எங்கள் பாக்கியம்.

    பிராமணர்கள் வேத ரிஷிகளின் ரத்தமா இல்லையா என்று எனக்குத்தெரியாது. இப்படித்தான் இருக்கும் என்றும் நான் எங்கேயும் சொல்லவில்லை. வேத கால ரிஷிகள் என்றாலே பிராமணர்கள் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள் என்று சொன்னார்கள் என்றும் புரியவில்லை. இன்னொரு பத்து பைசா பஜனை புத்தகத்திலிருந்து கட் பேஸ்ட் போடுவதற்குள் நான் ஜூட்.

    ஒரேயொரு விஷயம். நீங்கள் ராகவேந்திரர் பிராமணர்களை வேறு சாதியிலிருந்து உருவாக்கினார் என்றுதான் சொல்லியிருக்கிறீர்கள். சில நூறு வருட முன்பு சன்னியாசி என்று வேறு யாரை சொன்னீர்களாம்? அதுவும் நீங்கள் எதற்கு விடையாக இதைச் சொன்னீர்கள் என்று மேலே ஸ்க்ரோல் பண்ணி பார்க்கவும். “மரத்தில் மறைந்தது மாமத யானை”. அந்த யானை இதோ இன்னொரு வாட்டி…

    //இன்றைக்கு சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழ் நாட்டில் இருந்து மாத்வர்கள் மட்டுமே மந்த்ராலயம் சென்று வந்து கொண்டிருந்தார்கள்//

    இது மிக முக்கியமான அவதானிப்பு என கருதுகிறேன். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சன்னியாசி அவருடைய ஆன்மிக பலத்தினால் சமுதாய கரிசனத்தால் ஒரு சம்பிரதாயத்தை உருவாக்கும் போது அல்லது புனருத்தாரணம் செய்யும் போது எங்கிருந்து அந்தணர்களை உருவாக்கியிருப்பார்? இப்படி பெரும் கூட்டமாக வந்த அனைத்து சமுதாய மக்களிடமிருந்து தான். இன்றைக்கு மாத்வ பிராம்மணர்களாக இருப்பவர்களோ அல்லது ஸ்மார்த்த அல்லது வேறெந்த பிராம்மணர்களாக இருப்பவர்களோ வேதகால ரிஷிகளின் ‘இரத்த’ நீட்சியாக இருக்க முடியாது.

    !!! உச்ச்.. இப்பவே கண்ண கட்டுதே…

    நன்றி

  96. //
    நாம் நம்பிக்கை அடிப்படையில் வணங்குபவர்களை குறை சொல்லவோ, நிந்திக்கவோ, இகழவோ இல்லை. அது ஆரம்பக் கட்டம். தியாகராசர் நம்பிக்கையில் ஆரம்பித்து விரைவில் அனபவத்துக்கு வந்ததாக சொல்லப் படுகிறது.
    //

    இதை மட்டும் தான் நான் ஒத்துக் கொள்ளவில்லை – அதாவது சில பேர் அறிவாளியாம், சத் என்பதின் மேல் உண்மையான நம்பிக்கை வைப்பவேநேல்லாம் LKG யாம் – இது என்ன வேடிக்கையாய் இருக்கு – கற்றது கை மண் அளவு என்று சொல்லும் பொது அறிவு கை மண் அளவை விட small ஆகா தான் இருக்கணும் – நம்பிக்கை மிகவும் periyathu

    இந்த நம்பிக்கை வைத்து வாயாலேயே என்னென்ன சொல்கிறார்கள் சாதிக்கிறார்கள் என்று பாப்போம்

    – வையம் தகளியா vaar கடலே நெய்யாக செய்யாக் கதிரோன் விளக்காக என்று இந்த பிரபஞ்சத்தையே இறைவனுக்கு படைக்கிறார் ஒருவர்

    – நாறு நறும் பொழில் சூழ் … நூறு தடாவில் வெண்ணை வாய் நேர்ந்து பராவி வைத்தேன், நூறு தடா நிறைந்த அக்கார அடிசல் …. என்று வாயாலேயே நூற் அண்டா சக்கர பொங்கல் படைக்கிறார் ஒருவர் – இதெல்லாம் அறிவு சார்ந்த அனுபவமாக்கும்

    – சிந்திச்டுன்னுடே யமடு என்று ஒருவர் பாடுகிறார் – இது அறிவு சார்ந்த அனுபவமாக்கும்

    – இறைவனை பித்தன் என்கிறார் ஒருவர்

    திருடன் என்கிறார் ஒருவர்
    – நீ ரொம்ப அழாகா இருக்க அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும் பக்கலில் அம்மையார் இருக்கிறார் என்று பார்கிறேன் என்கிறார் ஒருவர்

    – அறிவுள்ள எவனாவது கடல்ல தூக்கிப்போட்ட நாராயணா நாராயண என்று கூவுவான இல்ல நீந்தி கரை சேர பார்பானா – நெருப்புல எரிச்சா வருநானு கத்தினாலவ்து ப்ரோயோஜனம் உண்டு நாராயண என்று கத்துராராம்

    – இன்னும் சில ஞானிகளின் அறிவிற்கு எட்டாத (அதிசய) அனுபவம் மட்டும் மட்டுமே சார்ந்த இகழ்வுகளை சொல்லுவேன் ஆனால் அதற்காக என்மேல் வீணாக பலர் கோவப்படுவார்கள் அதனால் விட்டு விடுகிறேன்

    இதெல்லாம் என்ன மூல கேட்ட செயல்

    அப்புறம் அனுபவத்திற்கு வருவோம் – எல்லா அனுபவமும் அறிவு தராது என்று ஏற்கனவே சொல்லியாகி விட்டது – எது அறிவை தந்தது எது தரவில்லை என்றே நமக்கு தெரியாது – நாம் அறிவு என்று வேண்டுமானால் நினைத்து கொள்ளலாம்

    அணு குண்டு போட்டால் அம்பேல் தான் என்று ஒவ்வொருவனும் சோதித்து அனுபவித்து தான் தீர் வேண்டும் என்றால் – அம்மா சாமி

    ஒரு வேள்வி செய்கிறோம் அக்னயே இதனமாமா என்கிறோம் – அது அக்னியை அடைந்ததா என்று எப்படிங்காணும் அனுபவித்து தெரிந்து கொள்வது – இப்படி ஒரு மந்திரத்தை அறிவு சார்ந்த அனுபவத்தால் ரிஷி தெரிந்து கொள்ளவில்லை

    அறிவார் யார் உன்னை – என்று எவ்வளவு பேர் பாடி உள்ளனர்

    த்யாகராஜர் அறிவு சார்ந்த அனுபவத்தில் ஈடு பட்டார் என்பது எனக்கு NEWS . – அவர் தான் இவ்வுடலை விட்டு இன்ன தேதிக்கு பிரியப்போவதை அறிந்து தனது சிஷ்யர்களை துடுக்கு கலா பாட சொன்னதாக கேள்வி –

    – முதலாவதாக தனதுயிர் பிரிய போவதை அனுபவ அறிவின் மூலம் எப்படி த்யாகராஜர் அறிந்தார் – அனுபவம் ஏற்பட்டிருந்தால் அவர் முன்னமே இறந்திருக்க வேண்டுமே? அனுபவம் ஏற்படாமல் எப்படி அறிவு ஏற்பட்டது

    சரி துடுக்கு கலா பாடலில் தன அறிவுடைமையை தேடி பாருங்களேன்

    த்யாராஜரின் ஆராதனை பெருமாள் தொலைந்து விடுகிறார் (அவரது ஆனந் ஆற்றில் எறிகிறார்) அவருக்கு கனவில் தான் எங்கு உள்ளேன் என்று ராமர் சொல்கிறார் – ராமரை மீட்டெடுக்கிறார் – அப்புறம் கண்ணு கொண்டினி பாடுகிறார்

    இது அனைத்தும் அனுபவ அறிவா – அனுபவ அறிவு எப்படி yerpattirukkum – ஏற்கனவே யாரவது ராமரை ஆற்றில் வீசி எரிந்து அதை த்யாகராஜர் பார்த்தோ படித்தோ தெரிந்து கொண்டிருக்க வேண்டும் – அதனால் ராமரை காணோம் என்றவுடன் அந்த அறிவு நினைவிற்கு வந்து – ஆற்றில் நீ இருப்பாய் ராம என்று பாடி இருக்க வேண்டும் – அப்புறம் ராமரை மீட்டவுடன் – என் அறிவு சரி நீ ஆற்றில் தான் இருந்தாய் ராம என்று தான் பாடி இருக்க வேண்டும்

    கடைசியாக அனுபவ அறிவு என்பதே பொய்யானது – இதை அறிந்து கொள்ள turkey syndrome என்று ஒன்று உள்ளது அதை படித்தால் புரியும் – சுருக்க சொல்ல வேண்டும் என்றால் – turkey sundrome என்பதை நாம் அப்துல்லா கட ஆடு syndrome என்று வைத்துக் கொள்வோம் – இதன்படி

    அப்துல்லாஹ் ஒரு ஆடு வளர்கிறார் தினமும் ரெண்டு கிலோ தீனி போடுகிறார். ஆடும் தினமும் சாப்பிடுகிறது – //
    நாம் நம்பிக்கை அடிப்படையில் வணங்குபவர்களை குறை சொல்லவோ, நிந்திக்கவோ, இகழவோ இல்லை. அது ஆரம்பக் கட்டம். தியாகராசர் நம்பிக்கையில் ஆரம்பித்து விரைவில் அனபவத்துக்கு வந்ததாக சொல்லப் படுகிறது.
    //

    இதை மட்டும் தான் நான் ஒத்துக் கொள்ளவில்லை – அதாவது சில பேர் அறிவாளியாம், சத் என்பதின் மேல் உண்மையான நம்பிக்கை வைப்பவேநேல்லாம் LKG யாம் – இது என்ன வேடிக்கையாய் இருக்கு – கற்றது கை மண் அளவு என்று சொல்லும் பொது அறிவு கை மண் அளவை விட small ஆகா தான் இருக்கணும் – நம்பிக்கை மிகவும் periyathu

    இந்த நம்பிக்கை வைத்து வாயாலேயே என்னென்ன சொல்கிறார்கள் சாதிக்கிறார்கள் என்று பாப்போம்

    – வையம் தகளியா vaar கடலே நெய்யாக செய்யாக் கதிரோன் விளக்காக என்று இந்த பிரபஞ்சத்தையே இறைவனுக்கு படைக்கிறார் ஒருவர்

    – நாறு நறும் பொழில் சூழ் … நூறு தடாவில் வெண்ணை வாய் நேர்ந்து பராவி வைத்தேன், நூறு தடா நிறைந்த அக்கார அடிசல் …. என்று வாயாலேயே நூற் அண்டா சக்கர பொங்கல் படைக்கிறார் ஒருவர் – இதெல்லாம் அறிவு சார்ந்த அனுபவமாக்கும்

    – சிந்திச்டுன்னுடே யமடு என்று ஒருவர் பாடுகிறார் – இது அறிவு சார்ந்த அனுபவமாக்கும்

    – இறைவனை பித்தன் என்கிறார் ஒருவர்

    திருடன் என்கிறார் ஒருவர்
    – நீ ரொம்ப அழாகா இருக்க அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும் பக்கலில் அம்மையார் இருக்கிறார் என்று பார்கிறேன் என்கிறார் ஒருவர்

    – அறிவுள்ள எவனாவது கடல்ல தூக்கிப்போட்ட நாராயணா நாராயண என்று கூவுவான இல்ல நீந்தி கரை சேர பார்பானா – நெருப்புல எரிச்சா வருநானு கத்தினாலவ்து ப்ரோயோஜனம் உண்டு நாராயண என்று கத்துராராம்

    – இன்னும் சில ஞானிகளின் அறிவிற்கு எட்டாத (அதிசய) அனுபவம் மட்டும் மட்டுமே சார்ந்த இகழ்வுகளை சொல்லுவேன் ஆனால் அதற்காக என்மேல் வீணாக பலர் கோவப்படுவார்கள் அதனால் விட்டு விடுகிறேன்

    இதெல்லாம் என்ன மூல கேட்ட செயல்

    அப்புறம் அனுபவத்திற்கு வருவோம் – எல்லா அனுபவமும் அறிவு தராது என்று ஏற்கனவே சொல்லியாகி விட்டது – எது அறிவை தந்தது எது தரவில்லை என்றே நமக்கு தெரியாது – நாம் அறிவு என்று வேண்டுமானால் நினைத்து கொள்ளலாம்

    அணு குண்டு போட்டால் அம்பேல் தான் என்று ஒவ்வொருவனும் சோதித்து அனுபவித்து தான் தீர் வேண்டும் என்றால் – அம்மா சாமி

    ஒரு வேள்வி செய்கிறோம் அக்னயே இதனமாமா என்கிறோம் – அது அக்னியை அடைந்ததா என்று எப்படிங்காணும் அனுபவித்து தெரிந்து கொள்வது – இப்படி ஒரு மந்திரத்தை அறிவு சார்ந்த அனுபவத்தால் ரிஷி தெரிந்து கொள்ளவில்லை

    அறிவார் யார் உன்னை – என்று எவ்வளவு பேர் பாடி உள்ளனர்

    த்யாகராஜர் அறிவு சார்ந்த அனுபவத்தில் ஈடு பட்டார் என்பது எனக்கு NEWS . – அவர் தான் இவ்வுடலை விட்டு இன்ன தேதிக்கு பிரியப்போவதை அறிந்து தனது சிஷ்யர்களை துடுக்கு கலா பாட சொன்னதாக கேள்வி –

    – முதலாவதாக தனதுயிர் பிரிய போவதை அனுபவ அறிவின் மூலம் எப்படி த்யாகராஜர் அறிந்தார் – அனுபவம் ஏற்பட்டிருந்தால் அவர் முன்னமே இறந்திருக்க வேண்டுமே? அனுபவம் ஏற்படாமல் எப்படி அறிவு ஏற்பட்டது

    சரி துடுக்கு கலா பாடலில் தன அறிவுடைமையை தேடி பாருங்களேன்

    த்யாராஜரின் ஆராதனை பெருமாள் தொலைந்து விடுகிறார் (அவரது ஆனந் ஆற்றில் எறிகிறார்) அவருக்கு கனவில் தான் எங்கு உள்ளேன் என்று ராமர் சொல்கிறார் – ராமரை மீட்டெடுக்கிறார் – அப்புறம் கண்ணு கொண்டினி பாடுகிறார்

    இது அனைத்தும் அனுபவ அறிவா – அனுபவ அறிவு எப்படி yerpattirukkum – ஏற்கனவே யாரவது ராமரை ஆற்றில் வீசி எரிந்து அதை த்யாகராஜர் பார்த்தோ படித்தோ தெரிந்து கொண்டிருக்க வேண்டும் – அதனால் ராமரை காணோம் என்றவுடன் அந்த அறிவு நினைவிற்கு வந்து – ஆற்றில் நீ இருப்பாய் ராம என்று பாடி இருக்க வேண்டும் – அப்புறம் ராமரை மீட்டவுடன் – என் அறிவு சரி நீ ஆற்றில் தான் இருந்தாய் ராம என்று தான் பாடி இருக்க வேண்டும்

    கடைசியாக அனுபவ அறிவு என்பதே பொய்யானது – இதை அறிந்து கொள்ள turkey syndrome என்று ஒன்று உள்ளது அதை படித்தால் புரியும் – சுருக்க சொல்ல வேண்டும் என்றால் – turkey sundrome என்பதை நாம் அப்துல்லா கட ஆடு syndrome என்று வைத்துக் கொள்வோம் – இதன்படி

    அப்துல்லாஹ் ஒரு ஆடு வளர்கிறார் தினமும் ரெண்டு கிலோ தீனி போடுகிறார். ஆடும் தினமும் சாப்பிடுகிறது –

    google transliteration seems to be not working for me know – let me finish this in english

    the lamb through experience thinks that it will be fed with similar food every day – so it happens

    abudullah brings 2 kilos of food – the lamb eats happily and strenthens its experiential intelligence

    so it goes … so it goes

    and then comes bakrid day and the lamb looks earnestly at its master abdullah to feed 2 kgs of food – abdullah smiles and makes 2 kilos of lamb food for him in the name of allah

    the lamb does not remain to learn from this experience

    i only requested not to include the likes of Hanuman, Vibishanar, Sabari in the list of people who according to Sage Valmiki had realized that Rama was verily God and the incident where Hanauman went to Rama camouflaged was before he had ever met Rama. Sugreevan needed tthe felling of 7 trees test because at that time he did not realize – later he realizes – so is every one – and extending this logic further even Sabari when she was 2 years old did not realize that Rama was God

    i had shared my views – in the past few posts i am only presenting whatever i shared earlier using different words – for the sake of not being DRY (Don’t Repeat Yourself) let me stop here and …. we have moved very far away from Shri Ragavendirar, the subject of this article
    thanks for all the posts – there were so many new things that came out and i learnt quite a bit

  97. sorry, one last matter

    knowledge is not aathma (or aathmaa is not knowledge) – Knwledge is a property of aathma, because if athma were to be knowledge alone many vaakyams in upanishads will beome false hood – aanandam bramma (replacing aatma or purusha for bramma)… atmaiva jyothi ….

    so aatmaa has the property of knowledge, self luminosity, seshatvam (subordinated to parama purusha) so on and so forth … so everything that aatma realizes is not through experience … even if this is agreed to be true, then this will run contrary to upanishad vaakyams – and another thing – according to Saastraas knowlede is the result of yathaartha anubavam (real experience) and not vice versa that is knowledge does not help us in understanding/creating experience. Saastraas conclude – “yathaartha anubavaha prama” and not “pramaaha yathaartha anubava”.. this can ve verified too

    so it may not be correct to say that kowledge and experience are same for cause and effect can never be same also experience as said earlier can be wrong or improper experience – knowledge can never be wrong or improper. So knowledge and experience are clearly different entities

  98. மூன்று விஷயங்கள்.

    1) தனது சொந்த ஆன்மிக அனுபவம் திருப்பதி போல் இல்லை என்று பிரசன்னா சொல்கிறார். .. என்னிடம் கேட்டிருந்தால், சீர்காழிக்குப் பக்கத்தில் உள்ள சிற்றூர் திருநகரியில் உள்ள திவ்ய தேசத்தில் எனக்குக் கிடைத்த மெய்சிலிர்ப்பு சுத்தமாக கூச்சலும், கெடுபிடிகளும், தகதக தங்கநகைகளும் புரளும் திருப்பதியில் சுத்தமாகக் கிடைக்கவில்லை என்று சொல்வேன்.. இது ஒரு subjective சமாசாரம். ஒரு குறிப்பிட்ட தலத்தில் தனக்கு ஆன்மிக உணர்வு வரவில்லை என்று சொன்னதற்காக அவரைச் சாட முடியாது..

    2) சாதி ரீதியாக கோவில் நிர்வாகம் பாரபட்சம் பாராட்டுவது பற்றி சொல்கிறார். இதில் “நம்பிக்கை” பற்றி கேள்வி எங்கே வந்தது? இது முழுக்க முழுக்க கோவில் நிர்வாக நடைமுறை பாலிஸி பற்றியது.

    3) ஸ்ரீராகவேந்திரர் வாழ்க்கை வரலாறு, அற்புதச் செயல்கள் இவற்றில் சில பகுதிகள் பற்றி தனக்குத் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். இவை எதையும் “நம்பாமல்” கூட, ஒரு சமய ஆசாரியாராக ராகவேந்திரரை எண்ணி, அவரைப் போற்றி வணங்குவதில் தவறு இருக்கிறதா? தவறு சிறிதும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால், நம்பிக்கையாளர்கள் கோபம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    மறைந்த திரைப்பட இயக்குனர் ஜி.வி.ஐயர் எடுத்த ’ஜகத்குரு ஆதிசங்கரர்’ என்ற அற்புதமான சம்ஸ்கிருதத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் ஒரு விஷயம் கவனித்திருப்பீர்கள். மகான்களின் வாழ்க்கை பற்றி எடுக்கப் பட்ட படங்களில் மிகச் சிறந்த படம் என்று அப்படத்தை நான் கருதுகிறேன். அதில் ஒரு இடத்தில் கூட அற்புதச் செயல்கள் இருக்காது, ஆனால் குறியீட்டுத் தன்மையுடன் அவை காண்பிக்கப் படும். உதாரணமாக, காபாலிகன் தியானத்தில் அமர்ந்திருக்கும் சங்கரரை வெட்டவரும்போது அவரது சீடர் பத்மபாதர் மேல் நரசிம்மர் ஆவேசித்து காபாலிகனைக் கொல்வதாக சங்கரவிஜயத்தில் வருகிறது. படத்தில் அந்த கட்டத்தில், காட்டில் உலவும் ஒரு நிஜ சிங்கம் காபாலிகனைப் பாய்ந்து கொல்வதாக சித்தரிக்கப் பட்டிருக்கும். அன்னபூர்ணா அஷ்டகம் பாடும் நேரம், ஒரு வயதான மூதாட்டி சங்கரருக்கும் சீடர்களுக்கும் உணவு பரிமாறுவதாகக் காட்சி வரும் – சிலிர்ப்பூட்டும் காட்சி அது.

    இது ஒரு முக்கியமான கோணம் (சரியா/தவறா என்பது தனி விவாதம்) என்பதை நாம் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். இந்தக் கோணத்தை முன்வைத்தவர் இந்துவிரோதியோ அல்லது நாஸ்திகரோ அல்ல.. தனது வாழ்நாள் முழுவதும் இந்துப் பண்பாட்டின் சிறப்பைக் கூறும் படங்களை எடுப்பதற்காகவே அர்ப்பணித்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அற்புதச் செயல்களை அவர் அறவே ஒதுக்கியது ஏன் என்று யோசியுங்கள்.

    யார் கண்டது? நவீன இலக்கிய ”ஆளுமை” & திரைப்பட விமர்சகர் பிரசன்னாவிடம் இந்தக் கேள்விகள் தோன்றியிருப்பதே அப்படி ஒரு கோணத்துக்கு விதையாகலாம் அல்லவா?

    கேள்விகளே வேள்விகளாக, அங்கே புதிய உபநிஷதம் பிறக்கிறது.

  99. திரு ஜெயராமன் அவர்களே

    அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் கருத்துக்களுடன் இருக்கும் வேறுபாடுகள் குறித்துத் தனங்கள் எழுதும்போது …

    ///இன்னொரு பத்து பைசா பஜனை புத்தகத்திலிருந்து கட் பேஸ்ட் போடுவதற்குள் நான் ஜூட்.///
    ….. என்று தாங்கள் எழுதினால் அதனால் தாக்கப்படுவது அவர் மேற்கோள் காட்டிய திருவாவடுதுறை ஆதீனம் வெளிய்டும் “மெய்கண்டார்” என்ற புத்தகமும், அதன் வைகாசி வெளியீட்டில் வந்த சித்தாந்த சைவச் செம்மணி ஆதீனப்புலவர் ஆதி.முருகவேள் அவர்கள் எழுதிய “சிவஞான பாடியச் சிறப்பு” என்ற கட்டுரையும்தான்.

    உணர்ச்சியின் வேகத்தில் நுனிமரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுகிறீர்கள் என்பதைச் சுட்டும் அவசியம் ஏற்பட்டது.

    “சிவஞான பாடியம்” இகழ்ச்சிக்கு ஆட்படுத்தப்படக்கூடாது.

    கட்டுரை ஆசிரியர் நம்பிக்கையில் கேள்வி கேட்கும் தொனியில் எழுதியிருப்பதைவிடவும் மிக அதிக அளவில் சிவபெருமானைப்பற்றி அவதூறாக மேலை நாட்டவர் எழுதிய கட்டுரை குறித்து நான் சுட்டிக்காட்டியபோது இத்தனை தூரம் இதை வளர்க்கும் எவரும் (திரு கந்தர்வன் அவர்களும் திருச்சிக்காரன் அவர்களும் நீங்கலாக) கண்டுகொள்ளாதது வெள்ளைத்தோலுக்கு நம்மவர்களுக்கு இன்னமும் இருக்கும் பயத்தையே காட்டுகிறது.

  100. ஒரு கருத்தை இப்போது நேரடியாக, பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாக நான் கருதுகிறேன். அந்தணர் தலைமைப்பீடத்தில் இருக்கும் மடங்களை வைத்திருக்கும் உயர்நிலையில் (மனதளவில்) ஏனைய மடங்களை அந்தணர்கள் (மனதளவில்) வைப்பதில்லை என்ற மனக்குறை பரவலாக அந்தணர் அல்லாதவர்களிடமும், அதிலும் குறிப்பாக அத்தகைய மடாதிபதிகளிடமும் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் பதிப்பைக்குறித்து தற்போது எழுதியிருப்பதைப்போல (அதிலும் குறிப்பாக மத்வ மேடம் குறித்த கட்டுரையில் பின்னூட்டத்தில்) எழுதுவதென்பது இந்த மனக்குறை சரியான அடிப்படையில் அமைந்ததுதான் என்ற முடிவுக்கே கொண்டுவிடும். இனியாவது அன்பர்கள் அனைத்துத் திருமடங்களையும் அவற்றின் தலைமைப்பீடத்தில் இருப்பவர்களையும் அவற்றின் பதிப்புகளையும் குறித்துப் பேசும்போதும் எழுதும்போதும் சிறிதும் மரியாதைக் குறைவு இல்லாமல் இருத்தல் வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

  101. நம்பிக்கையை நாம் குறை சொல்லவில்லை.

    ஆனால் நம்பிக்கை அடிப்படையில், ஒரு ஆர்வத்திலே சிலர் ஏராளமான பிட்டுகளை சேர்த்து விடுகின்றனர்.

    அதை வைத்து நம்முடைய பாசத்துக்குரிய மானமிகு தோழர்கள் நக்கல் செய்யவும், அதையே புத்தகமாக போட்டு காசு பார்க்கவும் செய்தனர். (அதிலும் இப்ப யாருக்கு ரைட்டு என்று சண்டை வேறு).

    எனவே யார் எக்கச்சக்கமான அற்புதங்களை எல்லாம் போட்டு, (அது நடந்ததா என்று தெரியாமலேயே) அது நடந்தது என்று அடித்து சொல்கிறர்களோ, அவர்கள தங்களை அறியாமலே இந்து மதத்தை பலவீனம் ஆக்கி, மானமிகுக்கக்ளுக்கு உதவி செய்கின்றனர்.

    கிருஷ்ணர், சங்கரர், தியாகராசர், விவேகானந்தர் இவர்கள எல்லாம் எப்போதாவது ராகு, கேது சூரியனைப் பிடிப்பதால் கிரகணம் உண்டாகிறது என்று எல்லாம் சொல்லி இருக்கிறார்களா? எந்த உப நிடதமாவது சூரியன் பூமியை சுற்றுகிறான் என்று சொல்லி இருக்கிறதா? அதை எல்லாம் விஞ்ஞானம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதை விட முக்கியம் நம்முடைய உயிர் என்பது உடல் இறந்த பின் தொடர்ந்து இருக்கிறதா? அது என்ன ஆகிறது என்கிற அறிவியலை, உயிர் அறிவியலையே அவைகள் விவாதித்து உள்ளன. நாம் இறந்த பின் பூமி சூரியனை சுத்தினால் நமக்கு என்ன ?

    எனவே நம்பிக்கை அடிப்படையில் எதை எதையோ சொல்லி- சென்னையிலே இருந்தார்- ஒருவருக்கு கிப்ட் கொடுக்க விரும்பினார்- பக்கத்து அறைக்கு போனார், ரோலெக்ஸ் வாட்ச்சுடன் வந்தார், அந்த ரோலேக்ஸ் வாட்ச் வாங்கிய பில்லையும் குடுத்தார், பில் நியூயார்க் நகரில் உள்ள பிரபல கடையில் இருந்து வந்தது. அன்றைய தேதியே போட்டு இருந்தது. அதாவது 5 நிமிடத்தில் நியூயார்க் நகரில் பிரத்தியட்சம் ஆகி வாட்ச் வாங்கிக் கொண்டு, திரும்பவும் சென்னையில் பிரத்யட்சம் ஆகி விட்டாராம். அவ்வளவு சக்தி உள்ளவர்கள் கங்கையில் இருந்து காவிரிக்கு ஐந்தே நிமிடத்தில் பாதாள குழாய் அமைத்து தரலாம் அல்லவா? ஆனால் இப்படிப் பட்ட அற்புதக் காரர்களை என் தலைவனுக்கு ரொம்ப பிடிக்கும். ஹி, ஹி… அதெல்லாம் நிறைய பகுத்தறிவு இருக்கு ! கண்டுக்காதீங்க.

  102. அற்புதங்களைப்பற்றி ஒரு வார்த்தை
    விவேகானந்தர் மற்றும் பரமஹம்ச யோகானந்தர் புத்தகங்களில் படித்தது-நம் பௌதிக உலகம் எப்படி சில விதிகளின்படி இயங்குகிறதோ அப்படியே ” அற்புதங்கள்” என்று நாம் நினைக்கும் விஷயங்களும்.அவைகளுக்கும் விதியுண்டு.
    உண்மை ஞானிகள் அவற்றை மக்கள் துன்பம் தீர்க்கவே பயன்படுத்துவர். மக்களைக்கவர அவை செய்யப்பட்டால் ஆன்மிக அழிவு தான்.
    இவற்றை ஒருவர் செய்வதாலேயே அவரை ஞானி என்று எண்ணுவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு, இவை நடக்கவே முடியாது என்று சொல்வது. அந்த உலகம் தற்போது நாம் அறியாத ஒன்று அவ்வளவுதான்.
    இந்த நிகழ்ச்சி தெரிந்தவர் ஒருவர் சொன்னது,
    அவதூத சந்யாசியான ஒரு மகான் சிறுவர்களுக்காக மணலை சர்க்கரையாக மாற்றினாராம். சாப்பிடவும் அது இனிப்பாக இருந்ததாம். விஷயம் தெரிந்த ஒருவர் அது விடிவதற்குள் பழயபடி மணலாக மாறிவிடும் என்றாராம். அப்படியே நடந்ததாம். மகான்? அவர் சித்தம் போக்கு சிவன் போக்கு ரகம்.,அவரை யாரும் அதற்குப்பின் காணவில்லை.
    ” அற்புதங்களும்” அவைகளுக்கென் உள்ள விதிகளுக்குக்கட்டுப்பட்டவையே. உயர்நிலை ஞானம் அடைய ஒருவன் முயல்கையில் அவை ஒரு சைடு effect , ஞானிகள் கையில் கருணையினால் மக்களை காக்கும் மருந்து. மற்றவர் கையில் ஆத்மிக வீழ்ச்சி.
    நம் மக்களுக்கு அற்புதங்கள் மேல் ஆசை உண்டு தான். ஆனால்
    ” நம்மாள் மட்டும் தான் அற்புதங்கள் செய்ய முடியும். [செஞ்சால் தான் அவர் மகான் ] மத்தவங்க செய்றதெல்லாம் சாத்தான் வேலை” என்று சொல்வதில்லை.
    ” ஏதோ பெரிய பெரிய விஷயம் சொல்றார் .ஒண்ணும் புரியலை. நமக்கு இப்போ எத்தை தின்னால் பித்தம் தெளியும் நிலைமை . இவர் அருளால் சீக்கிரம் விடியும்.” என்ற நிலையில் உள்ளவர்கள் பின் அந்த வேதனை தீர்ந்த பின் ஆத்மிகத்தை தேட ஆரம்பிப்பார்கள்.
    சமீபத்தில் வரும் ” ஆன்மிக” இதழ்கள் overdose தான் இவ்விஷயத்தில்.
    மகான்கள் சொன்ன விஷயத்தை விட செய்த விஷயங்கள் [ ஏன், யாருக்காக , எந்த சந்தர்ப்பத்தில் என்றெல்லாம் பார்க்காமல் ] தான் இந்த breaking news காலத்தில் மதிப்பு பெறுகின்றன.
    இந்த பத்திரிகைகள் ஒரே அலுவலகத்திலிருந்து மட்டமான ரசனையையும், ” ஆன்மிகம்” என்று அவர்கள் விற்பதையும் வெளியிடுகின்றன.
    அன்புடன்
    சரவணன்

  103. /// உணர்ச்சியின் வேகத்தில் நுனிமரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுகிறீர்கள் என்பதைச் சுட்டும் அவசியம் ஏற்பட்டது. ////

    உண்மைதான், உமாசங்கர் ஐயா. அநீ ஐயா எனக்கு பதிலாக இங்கே சொன்ன எல்லா பின்னூட்டங்களிலும் ஏதாவொரு துக்கடாவை கட்-பேஸ்ட் பண்ணி போட்டு ஒப்பேற்றியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டவே அப்படி பகடியாக சொன்னேன். மற்றபடி மெய்கண்டாரை நாம் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.

    விளக்க வாய்ப்பளித்த உங்கள் குறிப்புக்கு நன்றி.

  104. /// கட்டுரை ஆசிரியர் நம்பிக்கையில் கேள்வி கேட்கும் தொனியில் எழுதியிருப்பதைவிடவும் மிக அதிக அளவில் சிவபெருமானைப்பற்றி அவதூறாக மேலை நாட்டவர் எழுதிய கட்டுரை குறித்து நான் சுட்டிக்காட்டியபோது இத்தனை தூரம் இதை வளர்க்கும் எவரும் (திரு கந்தர்வன் அவர்களும் திருச்சிக்காரன் அவர்களும் நீங்கலாக) கண்டுகொள்ளாதது வெள்ளைத்தோலுக்கு நம்மவர்களுக்கு இன்னமும் இருக்கும் பயத்தையே காட்டுகிறது ////

    உமாசங்கர் ஐயா, நீங்கள் எந்த கட்டுரையை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் தமிழ்இந்துவின் பல வியாசங்களை படிப்பதில்லை. ஹரன் ஐயாவின் கட்டுரைகள் போன்ற சில விஐபி க்கள் கட்டுரைகள் அதிகம் படிக்கபடுவது சுபாவம்தான். என்னைப்போலவே பலரும் என்று தோன்றுகிறது. அதைவைத்து ஒரு முடிவுக்கும் வர முடியாது. நன்றி

  105. /// இனியாவது அன்பர்கள் அனைத்துத் திருமடங்களையும் அவற்றின் தலைமைப்பீடத்தில் இருப்பவர்களையும் அவற்றின் பதிப்புகளையும் குறித்துப் பேசும்போதும் எழுதும்போதும் சிறிதும் மரியாதைக் குறைவு இல்லாமல் இருத்தல் வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் ///

    போச்சுடா சாமி, இங்கேயும் பிராமண, அப்பிராமண தகராறா? போதும்டா சாமி. பேசாம சங்கர மடத்தை தினமும் வைது ஒரு பின்னூட்டம் போட்டால் எனக்கு பிராயச்சித்தம் கிட்டும் போல!!!

  106. //
    குறித்து நான் சுட்டிக்காட்டியபோது இத்தனை தூரம் இதை வளர்க்கும் எவரும் (திரு கந்தர்வன் அவர்களும் திருச்சிக்காரன் அவர்களும் நீங்கலாக) கண்டுகொள்ளாதது வெள்ளைத்தோலுக்கு நம்மவர்களுக்கு இன்னமும் இருக்கும் பயத்தையே காட்டுகிறது.
    //

    உமாசங்கர் அய்யா – இதற்க்கு நீங்கள் இப்படி எல்லாம் அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டாம் (இது ஒருவித bias போல தெரிகிறது) – வெள்ளை காரன் தான் புரியாமல்/தெரியாமல் சொல்கிறான் என்று விட்டு விடலாம் – [அந்த வெள்ளை காரரின் ப்ளாகில் உள்ள பின்னூட்டங்களை படித்திருந்தால் அவர் உண்மையாகவே நல்ல எண்ணத்துடன் தான் அந்த கட்டுரையை செய்திருந்தார் என்று புரியும். அவரது புரிதலில் மட்டுமே தவறு உள்ளது, எண்ணத்தில் அல்ல ]

    இங்கு விசயமோ வேறு – இந்த விவாதம் இப்போது வேறு (நம்பிக்கை vs அனுபவ அறிவு ) கோணத்திற்கு சென்று விட்டது அதனால் தான் வளர்கிறது

    [கடைசி பதில் என்று சொல்லிவிட்டு மறுபடியும் மறுபடியும் ஒருத்தன் பதில் எழுதுரான்யா]

  107. நண்பர்களே
    இப்போது பின்னூட்டங்கள் இந்தக் கட்டுரையின் பொருளை விட்டு விலகி எங்கோ சென்றுகொண்டிருக்கின்றன. இவை எல்லாம் தேவையா?

  108. அனுபவம் என்று இங்கே குறிப்பிடுவது எதை என்றால், கடவுள் என்று சொல்லப் படும் நிலையை, (அது நம்முடையே உயிர் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளக் கூடிய அதிக பட்ச வலிமை, சுதந்திர நிலையாகவும் இருக்கலாம்) ஒருவர் உணர்ந்து அந்த நிலையை அனுபவிப்பது என்பதையே அனுபவம் என்கிறோம்.

    அனுபவம் என்பதை Realisation என்பதாகவே பொருள் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் அனுபவம் என்பதை experience என்ற பொருளில் சொல்லவில்லை.

    //த்யாராஜரின் ஆராதனை பெருமாள் தொலைந்து விடுகிறார் (அவரது ஆனந் ஆற்றில் எறிகிறார்) அவருக்கு கனவில் தான் எங்கு உள்ளேன் என்று ராமர் சொல்கிறார் – ராமரை மீட்டெடுக்கிறார் – அப்புறம் கண்ணு கொண்டினி பாடுகிறார்

    இது அனைத்தும் அனுபவ அறிவா – அனுபவ அறிவு எப்படி yerpattirukkum – ஏற்கனவே யாரவது ராமரை ஆற்றில் வீசி எரிந்து அதை த்யாகராஜர் பார்த்தோ படித்தோ தெரிந்து கொண்டிருக்க வேண்டும் – அதனால் ராமரை காணோம் என்றவுடன் அந்த அறிவு நினைவிற்கு வந்து – ஆற்றில் நீ இருப்பாய் ராம என்று பாடி இருக்க வேண்டும் – அப்புறம் ராமரை மீட்டவுடன் – என் அறிவு சரி நீ ஆற்றில் தான் இருந்தாய் ராம என்று தான் பாடி இருக்க வேண்டும் //

    இது அனுபவமா நம்பிக்கையா? கனவில் தான் அறிந்து கொண்டபடி
    சிலை அந்த இடத்திலே இருக்கும் என்று நம்பியது, நம்பிக்கை. அந்த இடத்தை அடைந்து சிலைகள் அங்கே இருப்பதைக் கண்ட போது அது அனுபவமாகிறது. It became a realisation. இந்த சம்பவம் நடை பெற்றது என்பதாக நூல்களில் குறிப்புகள் உள்ளன. எனவே தியாகராஜுருக்கு அது ஒரு அனுபவம் தானே.

    Its an அனுபவம் (realisation) for Thiyakaraja, that Rama told him that the idols are in that particular location, and he found it there. For us its a belief that Rama told to Thiayakaraja and Thiyakaraja founded it there. So for us its a belief only. If any of us get any similar genuine realisation then its become அனுபவம் for themselves.

    இந்த இடத்திலே ஒன்றை முக்கியமாக குறிப்பிட வேண்டும், தாங்கள் சமாதி நிலையை அடைந்ததாகவும், மேலே நடப்பது பின்னால் நடப்பது எல்லாம் தனக்கு தெரிந்ததாகவும், உலகத்தில் எல்லா இடங்களில் நடக்கும் செயல்களையும் தன்னால் பார்க்க முடிந்ததாகவும் சொல்லிய சிலர்களின் வண்டவாளங்கள், தண்டவாளத்தில் ஏறி விட்டன. அவர்கள் உண்மையில் எதைப் பார்த்தார்கள் என்பதை இன்று பலரு பார்த்து விட்டார்கள். எனவே தான் அனுபவம் பெற்றதாக சொல்லி கோடிகளைக் குவிப்பவரிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    ஆனால் தியாகராசர், பட்டினத்தார் போனறவர்கள பண ஆசையை விட்டவர்கள. பணம் வேண்டாம் என்றவர்கள்.

    மேலும் தியாகராஜர் பல முறை “சிறு வயதில் எனக்கு குடுத்த உறுதி மொழி என்னவாயிற்று? சரயு நதியில் சீதையுடன் தோணியில் செல்வதாக காட்சி கொடுத்து அப்போது சொன்னது என்னவாயிற்று?” என்று எல்லாம் பாடி இருக்கிறார். இராமர் தனக்கு நேரிலே காட்சி தந்ததாக , உறுதி அளித்ததாக தியாகராஜர் சொல்லி இருக்கிறார். இது அவரைப் பொறுத்தவரையில் அனுபவமே. அவர் உண்மையில் பார்த்தது இராமரையா, அல்லது இராமரையே நினைத்து இருந்ததால் அப்படி அவருக்கு கனவு வந்ததா என்பதை எல்லாம் சொல்ல நம்மால் இயலாது. நாம் தியாக ராஜரின் மனதில் பகுந்து பார்க்கவில்லை.

    நமக்கு தெரிந்தது என்னவென்றால் எப்படி இராமர் பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போன்றது, கொள்கை என்பது இடுப்பில்கட்டக் கூடிய வேட்டி போன்றது என்பதை உண்மையில் வாழ்க்கையில் நடத்திக் காட்டி தனக்கு பதவி வேண்டாம் என விட்டுப் போனாரோ, அதே போல தியாகராசரும் தனக்கு வந்த அரசவைக் கவிங்க்கர் முதலிய பதவிகளை மறுத்தவர்.

    எப்படி அனுமன் உள்ளிட்ட வானரர்கள் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் நியாயத்துக்காக மிகப் பெரிய செயலை வெற்றிகரமாக செய்து முடித்தனரோ, அதே போல பணத்தை எதிர் பாராமல் எதுகை மோனையோடு, இலக்கண சுத்தமாக, ராகங்களுக்கு சரியான எடுத்துக் காட்டாக அமையும் வகையிலும், ஒரு மனிதனின் அமைதி, நல்லெண்ணம் உண்டாகி அவன் நல்வழி செல்லும் படிக்கு ௦௦ பாடல்களை எழுதி உள்ளார்.

    நம்மைப் பொறுத்தவரையில் தியாகராசர் – சபரி,
    அனுமன, அங்கதன், ஜாம்பவான், நீலன், குகன் போன்றவர்களின் லேட்டஸ்ட் பதிப்பாகவே ( பக்தி, கொள்கை, செயல்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலே) – புரிதல் ஆகிறார்.

    தியாகராசர் அனுபவம் (realisation, attainment) பெற்றார் என்பதை அவரே அவர் பாடல்களில் வெளிப்படுத்தி இருப்பதை வைத்தே நாம் சொல்கிறோம்.

  109. ஜெயராமன் “அய்யா” உங்கள் சிந்திக்கும் திறன் குறித்து எனக்கு எப்போதுமே மிகுந்த நம்பிக்கை உண்டு. நம்பிக்கை மட்டும்தான் உண்டு. ஏனென்றால் அனுபவம் உணர்த்திய யதார்த்தம் வேறல்லவா? போகட்டும். நான் உமக்கு எங்கெல்லாம் “துக்கடா”வை கட் பேஸ்ட் செய்தேன் என்று தெரியவில்லை. சிவவாக்கியரும், சிவஞானபாடியமும் தங்களுக்கு “துக்கடா”வாக தெரியலாம். மிகவும் நல்லது. ஜெயராமன் “அய்யா” நான் உங்களுக்கு பதில் சொல்லவே இல்லை. ஏனென்றால் உங்கள் நிலைபாடு உங்கள் மனநிலை உங்கள் தைரியம் எல்லாமே எனக்கு தெரியும். (அனுபவ அறிவு அய்யா….அனுபவ அறிவு). மீசை வைத்த பாரதிக்கெல்லாம் நீங்கள் பயப்பட மாட்டீர்கள். நான் பதில் சொன்னது பிற தமிழ்ஹிந்து வாசகர்களுக்கு மட்டுமே. ஏனென்றால் …விடுங்கள் காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும்… அந்தணர்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டார்கள் என்பது குறித்த தரவடிப்படையில் நான் கொண்டுள்ள வரலாற்று கருதுகோள் அது. நிச்சயமாக அதனை நான் ஸ்ரீ ராகவேந்திரருக்கும் பொருத்தியே பார்ப்பேன். பிரிட்டிஷார் சாதிகளை உறைநிலைக்கு கொண்டு போய் அட்டவணைப்படுத்திய காலம் வரை இப்படித்தான் அது நிகழ்ந்திருக்க வேண்டும். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சன்னியாசி வேறெந்த விதத்தில் மாத்வ அந்தணர்களை ஊர் ஊராக எழுச்சி கொள்ள செய்திருக்க முடியும்? இதெல்லாம் ஜெயராமன் போன்றவர்களுக்கு புரிந்து கொள்ள முடியும் என்று நான் நினைக்கவில்லை. காரணம் அவர்களின் கருத்துலகம் வேறு. அவர்கள் மானுட சமுதாயத்தை பார்க்கும்விதம் வேறு. அந்த பார்வை குறித்து பேசி அதற்கு குறைந்த பட்ச மரியாதை செய்யக் கூட நான் விரும்பவில்லை. ராமலிங்க சுவாமிகள் சொன்னது போல “மண் மூடி போகும்” போய் கொண்டிருக்கும் கருத்தியல் அது.

    சாரங்க்,

    // வையம் தகளியா vaar கடலே நெய்யாக செய்யாக் கதிரோன் விளக்காக என்று இந்த பிரபஞ்சத்தையே இறைவனுக்கு படைக்கிறார் ஒருவர்//

    சொன்னதுக்கு ரொம்ப தேங்கஸ்: அந்த பாடல் வரிசை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக உள் நோக்கிப் போகிறது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும்

    அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
    இன்புரு சிந்தை இடுதிரியா -நன்புருகி
    ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
    ஞானத் தமிழ்புரிந்த நான்.

    இதற்கு இணையான மற்றொரு பாடல் திருநாவுக்கரச சுவாமிகளின் தேவாரத்திலிருந்து

    உடம்பெனு மனையகத்து
    வுள்ளமே தகளியாக
    மடம்படும் உணர்நெய்யட்டி
    யுயிரெனுந் திரிமயக்கி
    இடம்படு ஞானத்தீயால்
    எரிகொளல் இருந்துநோக்கிற்
    கடம்பமர் காளைதாதை
    கழலடி காணலாமே.

    I think they state my case better than my own words can ever hope to do.

  110. அன்பர் ஜெயராமன் அவர்களே

    ///மற்றபடி மெய்கண்டாரை நாம் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.///

    நன்று. மெய்கண்டாரைத் தங்கள் மட்டுமல்ல இங்கு இப்போதுள்ள எவருமே கண்டிருக்கமுடியாது. அவரது காலம் இன்றைக்கு சுமார் 900 ஆண்டுகளுக்கு முந்தையது. அதாவது 1232 (பொ.ச.) ஆம் ஆண்டு. சிவஞானபோதம் என்ற நூலை எழுதியவர் அவர். வேளாள குலத்தில் உதித்தவர். சைவ சமயத்துக்கு மிகச்சிறந்த தொண்டாற்றியவர். “மெய்கண்டாரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை” என்று தங்கள் சொல்லக் கேட்டு, சிறந்த சிவத்தொண்டர்கள் குறித்த விழிப்புணர்வு இருக்கும் நிலை கண்டு வருந்தினேன். மெய்கண்டாரையே அறியாததால், தாங்கள் அந்தத் திருமடத்தின் பதிப்பைப் பத்து பைசா பஜனைப்புத்தகம் என்று குறிப்பிட்டதில் ஏதும் வியப்பில்லை.

    அவர்தம் வரலாறு குறித்து அறிய, கீழ்க்கண்ட வலைப் பக்கத்துக்குச் செல்க.

    https://www.shaivam.org/admeykan.htm

    மெய்கண்டார், அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதிசிவம் ஆகிய நால்வரும் சந்தானக் குரவர்கள் என்று போற்றப்படுபவர்கள். இவர்கள் சைவ சித்தாந்தத் தத்துவங்களை சீரிய முறையில் மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள். இவர்களது குறு பாரம்பரியம் கயிலாயத்திலிருந்து ஸ்ரீ தக்ஷினாமூர்த்தியிடமிருந்து துவங்குவதாக மரபு. எனவே இவர்களைத் திருக்கையிலாயப் பரம்பரையினர் என்று வழங்குவர். இவர்களில் மெய்கண்டார் வழியில் திருவாவடுதுறைத் திருமடமும், மறைஞான சம்பந்தர் வழியில் தர்மபுரத் திருமடமும் நிறுவப்பட்டு இன்றுவரை தொடர்ந்து சிவத்தொண்டு ஆற்றி வருகின்றன. சந்தானக் குரவர்கள் குறித்து அறிய கீழ்க்கண்ட வலைப் பக்கத்துக்குச் செல்க.

    https://www.shaivam.org/adsantan.htm

    திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சமயக் குரவர்கள் என்று போற்றப் பட்டனர். இவர்களில் முதல் மூவர் மட்டுமே அறுபத்து மூன்று நாயன்மார்களில் அடங்குவர்.

  111. இன்னுமொரு தகவல்:

    மெய்கண்டார் மெய்கண்டசிவம் என்றும் அழைக்கப்படுவார். அவர் திருஞான சம்பந்தரைப்போலவே மிகச் சிறிய பிராயத்திலேயே சிறந்த ஞானியாகப் பரிமளித்தவர்.

  112. அன்பர் ஜெயராமன் அவர்களே

    ///போச்சுடா சாமி, இங்கேயும் பிராமண, அப்பிராமண தகராறா? போதும்டா சாமி. பேசாம சங்கர மடத்தை தினமும் வைது ஒரு பின்னூட்டம் போட்டால் எனக்கு பிராயச்சித்தம் கிட்டும் போல!!!///

    பிராயச்சித்தம் என்பது வைத்து போடுவதால் கிட்டுவதல்ல. வாழ்த்திப்பாடுவதால் கிட்டுவது, அதாவது இறைவனையும் இறைத்தொண்டர்களையும் வாழ்த்திப் பாடுவதால் கிட்டுவது.

    ///உமாசங்கர் ஐயா, நீங்கள் எந்த கட்டுரையை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ///

    நான் குறிப்பிட்டது ஹிந்துமதம் ஒரு open source மதம் என்ற கட்டுரையை. நன்றி.

  113. //
    எந்த உப நிடதமாவது சூரியன் பூமியை சுற்றுகிறான் என்று சொல்லி இருக்கிறதா?
    //

    மேட்டர் என்னென்ன – இதை அவர்கள் அனுபவ அறிவுப் பூர்வாக சொல்லவில்லை

    அப்புறம் – we seem to be smitten by the abraham disease or Satan disease or semetic disease .. whatever – தொட்டதுகெல்லாம் இப்படி தான் அவன் சொல்றான் நாம இப்படி சொல்லக் கூடாது என்றால் – அவனும் கடவுள் இருக்கிறார் என்கிறான் – நாமும் அப்படி ஏன் சொல்லணும் என்று கடவுள் நிராகரிப்பில் இறங்கி விடுவோம் போல இருக்கிறது

    அவன் நம்பிக்கை என்ற ஒரு வார்த்தையை கலவாநித்தனாக கையாளுவதால் அதை நமது அகராதியிலிருந்தே நாம் நீக்கிவிடுவோம் போல இருக்கே – நாம் எதற்காக “Hinduism is a non-satanic religion” என்று brand positioning உருவாக்க வேண்டும் – “Hindusim the Real thing” என்று உருவாக்குவது better

    அவன் நம்பிக்கையை பேசினால் – ஓஹோ நீங்கள் எல்லாம் இப்படியாக்கும் – நாங்கள் எல்லாம் ஞான சீலர்கலாக்கும் – நாங்க எல்லாம் ஒரு நடமாடும் laboratory – ஒவ்வொரு நியூரான்களையும் சும்மா அதிரவிட்டு தான் முடிவே செய்வோம் – அப்புறம் முடிவு செஞ்சபின்ன எங்க பேச்ச நாங்களே கேக்க மாட்டோம் என்கிற ரீதியில் போய் கொண்டிருக்கிறோம்

    நான் சொல்லுகிறேன் – அவன் எல்லாத்தையும் அச்சு அசல் நம்ப கிட்டேருந்து கட் பேஸ்ட் செஞ்சு காலம் தல்றான்னு – மகா பாரதத்தை அப்படியே உல்டா பண்ணி – பழைய ஏற்பாடை ஏற்பாடு செய்து இருக்கிறான் – மகாபாரததுலா பாண்டவர்கள் அடிமை ஆக்கக் படுகிறார்கள் அவர்கள் நிலத்திலிருந்து விரட்டப் படுகிறார்கள் – அங்கேயும் இதே கதை தான் இங்க அஸ்தினாபுரம் அங்க எகிப்து அவ்வளோ தான் – அப்புறம் கிருஷ்ணர் வந்து சண்ட போடு என்று சொல்றார் – அங்கேயும் அவுக சாமி உடாத நான் தொரத்திகினே ஓடியாறேன் நீ மட்டேற முடிச்சிரு என்று சொல்றார்

    என்ன மகாபாரதத்துல எல்லாம் அர்த்தத்தோட இருக்கும் – உயர்ந்த தத்துவ ஞானம் இருக்கும் – அவக சொல்ற கதைல வெறி இருக்கும், ஒரே காமடியா இருக்கும் அவ்வளவே

    இதுக்காக மகாபாரதமே படிக்கறத நாம் நிறுத்தனுமா? மொதல்ல நான் பதில் எழுதிகிட்டே இருக்கறதா நிறுத்தனும்!!

  114. அநீ ஐயா,

    முழுசாக இப்படி தனிமனித தாக்குதலில் இறங்கியுள்ளீர்கள். அதையே பதிலாக சொல்லி சொல்லி வருகிறீர்கள். என்னத்தை நான் சொல்ல? ஒருமுறை கூட நாம் சந்தித்தது கூட இல்லை, ஆனால் நீங்கள் என்னை ஆராய்ந்து என் சிந்தனைக்கு சர்டிபிகேட் கொடுக்கிறீர்கள். தனிமனித சரித்திரத்தை களங்கப்படுத்தி கிண்டல் செய்கிறீர்கள். உள்ளிப்பூண்டில் தேனா வடியும்!! நன்றி

  115. உமாசங்கர் ஐயா,

    // நன்று. மெய்கண்டாரைத் தங்கள் மட்டுமல்ல இங்கு இப்போதுள்ள எவருமே கண்டிருக்கமுடியாது.////

    மெய்கண்டார் என்று இங்கே குறிப்பிட்டது மெய்கண்டார் என்ற பெயரில் வரும் பத்திரிக்கையையே. அம்மாதிரி ஒரு பத்திரிக்கை இருப்பது அநீ ஐயாவின் பின்னூட்டத்திலிருந்தான் தெரிந்துகொண்டேன்.

    இந்த தெளிவுடன் என் கருத்தை மீண்டும் படிக்க வேண்டுகிறேன். நன்றி

  116. //ஒருமுறை கூட நாம் சந்தித்தது கூட இல்லை//

    அது பரஸ்பர பாக்கியம்

    //தனிமனித சரித்திரத்தை களங்கப்படுத்தி கிண்டல் செய்கிறீர்கள். உள்ளிப்பூண்டில் தேனா வடியும்!//
    களங்கப்படுத்தியது நானுமல்ல. அது தனிமனித சரித்திரமும் அல்ல. தங்கள் இறுதி வரி அபாரமான நேர்மையுடைய சுய விமர்சனம்.

  117. //
    அது பரஸ்பர பாக்கியம்
    //

    இந்த பதிலின் சாமர்த்தியத்தை எண்ணி ஒரு ஐந்து நிமிடம் வாய் விட்டு சிரித்தேன் 🙂

    அரவிந்தன் அவர்களே – அது இன்னும் உள்ளே செல்கிறது

    மூன்றாம் திருவந்தாதியில்

    திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கை கண்டேன் என்னாழி வண்ணன் பால் இன்று

    இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்

    இதே திருவந்தாதியில் தான் முன் சொன்ன இந்த பாசுரமும் – “அன்று கர்வரங்கத் துட் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயோன் திசை” – கருப்பையில் இருக்கும் போதே திருவரங்க திசை நோக்கி கை தொழுதாராமே

    i now realize – we are talking about two sides of the same coin

    திருச்சிக்காரன் அய்யா

    நீங்கள் விஷயத்தையே விட்டு விட்டீர்கள் – இங்கு நாம் பேசுவது யதார்த்த அனுபவம் பற்றி – அதாவது உண்மையான அனுபவம் அதன் மூலம் ஏற்படும் அறிவு (knowledge) பற்றி – நீங்கள் த்யாகராஜரின் அனுபவம் பற்றி சொன்ன எதுவும் இதில் பொருந்தாது – அது எதுவும் எதார்த்தமானது அல்ல – மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் – எல்லா அனுபவமும் அறிவாகாது

  118. நண்பர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், மகாபாரதத்தை பிற நூல்களுடன் தொடர்பு படுத்துவதற்கு முன், அந்த நூல்களில் சொல்லப் பட்ட கருத்துக்கள் என்ன என்று நன்கு படித்து விட்டு எழுதுமாறு கோருகிறேன்.

    எகிப்தில் இருந்து வெளியேறியவர்கள் வசிக்க இடம் தேவைப் பட்டதால், அடுத்தவரை விரட்டி விட்டு அவர்களின் நாட்டில் குடியேற திட்டம் தீட்டி உள்ளனர். அவர்களை வெறுமனே விரட்டி விட்டால, மீண்டும் வந்து தங்களிடம் தகராறு செய்வார்களோ என்பதற்காக கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் எல்லா உயிர்களையும் வெட்டி இனப் படுகொலை செய்து அவர்களின் நாட்டில் குடியேறி இருக்கிறார்கள். இதை எல்லாம் கடவுள் செய்ததாக சொல்லி ஒரு கான்செப்டை உருவாக்கி இருக்கிறார்கள். அல்லது இதை எல்லாம கடவுளே முன்னின்ன்று நடத்தி இருந்தால் அவர் இல்லை எப்படிப்பட்டவர் என்பதை அவரவர்களே சிந்தித்திது முடிவு செய்து கொள்ளட்டும்.

    இந்திய நாட்டில் தோன்றிய எந்த மதமும் இனவாத, இனப் படுகொலை கருத்துக்களையோ, மத வாதாஹ் மதப் படுகொலை கருத்துக்களையோ முன் வைக்கவில்லை. விவேகானந்தர் சிக்காகோவில் பேசும்போது “எந்த ஒரு இந்துக் கடவுளாவது தான் ஒரு இனத்தை மட்டுமே வாழ வைப்பேன்” என்று சொன்னதாகக் காட்ட முடியுமா என்று கேட்டு இருக்கிறார்.

    பாண்டவருக்கும் , கவுரவருக்கும் நடந்தது இனப் போராட்ட இனப் படுகொலை அல்ல. அது மாற்று மதத்தவரின் மீது நடத்தப் பட்ட போர் அல்ல. கவுரவர் , பாண்டவர் இருவரும் ஒரே மதம் தான். இருவரும் ஒரே இனம் தான் (இந்திய இனம்). இருவரும் சகோதரர்கள். அது வாய்க்கால் தகராறு , வரப்பு தகராறு போன்ற பங்காளி சண்டையே.

    துரியோதணன் முரட்டுப் பிடிவாத குணத்தையும் , பாண்டவர்களின் மேல் மட்டற்ற வெறுப்பும் உடையவனாக இருந்த காரணத்தாலேயே போர் மூண்டது. போருக்கு காரணம் துரியோதனன் என்கிற தனிப் பட்ட மனிதனுக்கு, அவனுடைய சொந்த சித்தப்பா மகன்களின் மேல் இருந்த வெறுப்பும் பொறாமையுமே காரணம்.

    கிருஷ்ணர் சமாதானத்துக்கு எவ்வளவு வாய்ப்பு கொடுக்க முடியுமோ அத்தனை வாய்ப்பு கொடுத்தார். ஐந்து பிரதேசங்களையாவது கொடுக்க முடியுமா என்றார். துரியோதனன் மறுத்தான். ஐந்து கிராமங்களையாவது கொடுக்க முடியுமா என்றார். அதையும் மறுத்தான். ஐந்து வீடுகளையாவது குடுக்க முடியுமா என்றார். துரியோதனன் வெறும் ஐந்தே ஐந்து வீடுகளை மட்டும் பாண்டவர்களுக்கு கொடுத்து விட்டிருக்கலாம், போர் நடந்திருக்காது. ஆனால் ஊசி முனை நிலம் கூட குடுக்க முடியாது என்று விட்டான். இதற்க்கு மேல் கிருஷ்ணர் என்ன செய்ய முடியும்?

    இந்தியர்கள் எப்போதும், இனப் படுகொலையோ, மதப் படுகொலையோ செய்தது கிடையாது. யார் அடைத்தாலும் , திருப்பி அடிக்கும் வலிமை இருந்தும்., வெறுமனே தாயை வாங்கிக் கொண்டு வருபவன் இந்தியன். இது உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும். இந்து வலிமை இருந்தும் சாது வானவன். சாதுவான இந்துவுக்கு உலகில் உள்ள எல்லா இனங்களும் நன்றிக் கடன் பட்டு இருக்கின்றன என்றார்.

    மகாபாரதத்தை எகிப்தில் இருந்து வந்தவர்களின் கதையோடு தொடர்பு படுத்தினால் எகிப்தில் இருந்து வந்தவனே அதைக் கேட்டு சிரிப்பான். மகா பாரத்தையும், கிரிஷ்ணரையும் இழிவு படுத்துவதை ஆட்சேபிக்கிறேன். கண்டிக்கிறேன்.

  119. அன்புக்குரிய நண்பர் திரு. சாரங் அவர்களே,

    தியாகராசர் ராமரே தனக்கு காட்சி தந்ததாக பாடி இருக்கிறார், அதாவது அவர் பாடி இருக்கிறார்.

    தூணைப் பிளந்து வந்ததாக சொல்லப் படுவது பிரஹலாதனுக்கு கிடைத்த அனுபவமே. காட்சி தந்து பேசி விட்டுப் போனாலும் அதுவும் அனுபவமே. அது அனுபவம் இல்லை என்று எந்த அடிப்படையில் நீங்கள் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. அது அனுபவம் இல்லாவிட்டால் வேறு எது அனுபவம்? விவேகானந்தருக்கு காளி காட்சி தந்ததாக சொல்லப் படுகிறது. இதெல்லாம் அனுபவம் இல்லாவிட்டால் வேறு எது அனுபவம் என்று சொல்கிறீர்கள்.

    கடவுள் என்னும் நிலையை உணர்வது அல்லது பார்ப்பதுதான் அனுபவம்.

    நான் முன்பே சொன்னது போல தியாகராசர் பார்த்ததற்கு நான் சாட்சி கொடுக்க முடியாது.

    தியாகராசர் நேரிலே பார்த்தது போல விவரித்து இருக்கிறார், கவிங்கர்கள் கூட வர்ணனை செய்கிரார்கள. ஆனால் ரொம்ப ஓவராக கொடி இடை , அப்படி இப்படி என்பார்கள்.

    தியாகராசரின் வர்ணனை கற்பனைக்கும் மேற்ப்பட்ட தாக நேரிலே பார்த்தது போல, இராமர் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறார், கூந்தல் எப்படி சுருளாக அழகாக இருக்கிறது, என்று நேரிலே பார்த்து சொன்னது போல சொல்லி இருக்கிறார். ஆனால் அதுவும் ஒரு கற்பனையே என்று நீங்கள் சொல்லலாம் , அதற்க்கு உங்களுக்கு உரிமை உண்டு.

    நான் கூட இராமரைப் பற்றி, கிரிஷ்ணரைப் பற்றி ஆராய்ச்சி, சிந்தனை செய்து இருக்கிறேன். அனால் எனக்கு என்னவோ எல்லா இந்துக் கடவுள்கள் முகமும், ரவுண்டாக அழகாக இருப்பதாக ஓவியர்கள வரைவதாக தோன்றுகிறதே அல்லாமல், இராமருக்க் தனியாக அழகு இருப்பது போல தெரியவில்லை. அது மட்டுமல்ல, ஈ. வே. ரா பற்றி இயேசுவைப் பற்றி கூட ஆராய்ச்சி செய்து இருக்கிறேன். யாரும் எனக்கு கனவில் கூட வரவில்லை. ( ஈ. வே. ரா என் தலைவன் கனவில் மட்டும் தான் வருவார் , அது வேற விடயம்) .

    மற்றபடி அயோத்தியை ஆண்ட இராமர் , காட்டுக்கு சென்ற ராமர், பாலம் கட்டிய இராமர், இந்திய சரித்திரத்தின் ஆய்வு செல்லத மிகப் பணடைய காலத்திலேயே வாழ்ந்ததாக சொல்லப் படும் இராமர் , அவர் மேலே கடவுளாக இருக்கிறாரா , அவர் தியாகராசருக்கு காட்சி கொடுத்தாரா என்று எனக்குத் தெரியாது, நான் சாட்சி கொடுக்கவில்லை. நான் படித்ததை மாத்திரமே எழுதினேன்.

    எனவே தியாகராசர் இராமரை காட்சியாக காணவில்லை என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. தனக்கு அனுபவம் கிடைத்தது என்று சொல்லி, தான் இராமரைக் கண்டதாக சொல்லி பாடல் எழுத தியாகராசருக்கும் உரிமை உண்டு.

    உண்மை எது என்பது தியாகராசருக்கு தான் தெரியும். ஏனெனில் தியாகராசர் காட்சி கண்டதாக சொல்வது உண்மையான காட்சியா அல்லது மனப் பிரமையா என்பதை அறிய வேண்டுமானால், நான் தியாகராசரின் மனதுக்குள் புகுந்து பார்க்கவில்லை. .

    அல்லது அவருக்கு காட்சி குடுக்கும் போது உங்களுக்கோ, எனக்கோ காட்சி கொடுத்தால் நாமும் அதை உறுதியாக ஒத்துக் கொள்ளலாம்.

    அதாவது நமக்கே அனுபவம் இருந்தால் அது உறுதியான முடிவை எடுக்க உதவும். அனுபவம் இல்லாத நிலையில் தியாகரராசர் பார்த்திருபாரோ, பார்க்கலையோ என்று டிஸ்கசன் மட்டுமே செய்ய இயலும்.

    எனக்கு யாராவது காட்சி குடுத்தால் , அந்த அனுபவத்தை வைத்து நான் உறுதியாக சொல்ல முடியும். பெரியார் என் கனவில் வந்து கட்டளை இட்டால் கூட அதையும் நான் உங்களுக்கு தெரியப் படுத்துவேன்.

  120. திருச்சிகாரர் அவர்களே

    //
    நண்பர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், மகாபாரதத்தை பிற நூல்களுடன் தொடர்பு படுத்துவதற்கு முன், அந்த நூல்களில் சொல்லப் பட்ட கருத்துக்கள் என்ன என்று நன்கு படித்து விட்டு எழுதுமாறு கோருகிறேன்.
    //

    நீங்கள் (மட்டும்) ஏன் இப்படி யோசனை செய்கிறீர்கள் – நான் என்ன தொடர்பா படுத்தினேன் – நீங்கள் ஒரு ரெண்டு மூணு தடவை தெளிவாக படித்துவிட்டு பதில் எழுதுங்கள் – எனக்கு உங்கள் பதிலை படிக்க உண்மையிலே பரிதாபமாக உள்ளது – இதில் கண்டனமேல்லாம் வேற செய்கிறீர்கள்

    இத நீங்க படிக்கவே இல்லையா

    //
    என்ன மகாபாரதத்துல எல்லாம் அர்த்தத்தோட இருக்கும் – உயர்ந்த தத்துவ ஞானம் இருக்கும் – அவக சொல்ற கதைல வெறி இருக்கும், ஒரே காமடியா இருக்கும் அவ்வளவே
    //

    நான் கேக்க வந்த கேள்வி – சும்மா மேம்போக்க கிறுக்கு புடிச்சு பொய் பார்த்தா மகாபாரதம் மாடிரிரியே சில பைபிள் விஷயம் இருக்கும் அதுக்காக மகாபாரதம் படிப்பதை நாம நிறுத்த மாட்டோமே? அப்படி இருக்கு நம்பிக்கை என்ற ஒன்றை அவன் தப்ப பயன் படுத்தறான் atharkaaga நம்பவே கூடாதுன்ன நாம சொல்றோமேன்னு தான்

    பதில் சொல்லவே இவ்வளவு கஷ்ட பட வேண்டி இருக்கே

  121. அன்புக்குரிய , மதிப்புக்குரிய நண்பர் திரு. சாரங் அவர்களே,

    //இங்கு நாம் பேசுவது யதார்த்த அனுபவம் பற்றி – அதாவது உண்மையான அனுபவம் அதன் மூலம் ஏற்படும் அறிவு (knowledge) பற்றி – நீங்கள் த்யாகராஜரின் அனுபவம் பற்றி சொன்ன எதுவும் இதில் பொருந்தாது – அது எதுவும் எதார்த்தமானது அல்ல – மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் – எல்லா அனுபவமும் அறிவாகாது//

    தியாகராஜருக்கு ஏற்ப்பட்டது எதார்த்த அனுபவம் இல்லை என்பதையும், அவருக்கு கிடைத்த எதார்த்தம் இல்லாத சாதா அனுபவத்தால் அறிவு உண்டாக வாய்ப்பில்லை என்பதையும் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

    எந்த ஒரு சக்தியிலிருந்து எல்லா சக்திகளும் உருவாகிறதோ, அந்த சக்தியை அறியும்போது அங்கே இயற்பியல் ஆராய்ச்சி முடிகிறது. எந்த ஒரு மூலப் பொருளில் இருந்து எல்லா மூலப் பொருள்களும் உருவாகிறதோ அந்த மூலப் பெருளை கனடரியும் போது வேதியல் ஆராய்ச்சி முடிகிறது. எந்த ஒரு உயிரில் இருந்து எல்லா உயிர்களும் உண்டாகிறதோ அந்த உயிரை அறியும்போது ஆன்மீக ஆராய்ச்சி முடிகிறது என்று சொன்னார் விவேகானந்தர்.

    கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரை யாராவது பார்க்க நேர்ந்தால் அது எப்படி எதார்த்த அனுபவம் இல்லாமல் போகும்? அர்ஜுனனுக்கு விஸ்வ ரூபமாக காட்சி தந்ததாக கீதையில் குறிப்பு உள்ளதே, அது அர்ஜுனனுக்கு எதார்த்த அனுபவம் இல்லையா? தூணைப் பிளந்து பிரஹலாதனைக் காத்ததாக சொல்லப் பட்டது, அது எதார்த்த அனுபவம் இல்லையா? அது எல்லாம் எதார்த்தம், தியாகராசர் ராமனின் காட்சி கிடைத்தது, என்று சொன்னது மட்டும் எதார்த்தம் இல்லை என்றால் நீங்கள் எப்படி அதை உறுதியாக சொல்கிறீர்கள்? ஒரு வேளை நாடகத்தில் நடிக்க இராமர் வேடம் போட்டவர்களைப் பார்த்து விட்டு தியாகராசர் அவர்களை இராம, இலக்ச்மணர் காட்சி தந்ததாக நினைத்து விட்டாரா?ஒருவேளை அப்படி நாடகத்தில் நடிக்க வந்தவர்கள், எங்களை தான் தியாகராசர் பார்த்து நிஜமாக ராமரே வந்ததாக நம்பி விட்டார், என்று உங்களுக்கு “உண்மையை” விளக்கினார்களா? அப்படியானால் அதை தெளிவாக சொல்லி சாட்சி கொடுக்கலாமே. ஏனெனில் “மீண்டும் சொல்கிறேன்” என்று அழுத்தி சொல்லும் அளவுக்கு உங்களிடம் புரூப் இருக்கிறது போல இருக்கிறதே.

    எதார்த்த அனுபவம் மூலம் ஏற்ப்படும் அறிவு என்பது என்ன? காந்தப் புலத்தின் ஊடாக மின் கடத்தி குறுக்கு வெட்டாக சென்றால் அதில் மின் தூண்டல் ஏற்படுகிறது என்று எழுதி வைத்து இருக்கிறார்கள். ஒருவர் பரிசோதனை சாலைக்கு சென்று, காந்தப் புலத்தை உருவாக்கி, அதன் வூடாக மின் கடத்தியை வேகமாக நகர வைத்து அதில் மின்னோட்டம் உண்டாகிறதா என்பதை அம்மீட்டர் மூலம் சரி பார்த்தார் என்றால், அது எதார்த்த அனுபவம். தான் படித்தது சரிதான் என்கிற அறிவு அவருக்கு உண்டாகிறது. படித்ததை விட இன்னும் புதிய விடயங்களிக் கூட அவர் கண்டு பிடிக்கக் கூடும். அதைப் போலத்தான் , கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்கிறார்கள். பிரகலாதன், இராமகிருஷ்ண பரமஹம்சர் உட்பட சிலர் “நாங்கள் பார்த்து இருக்கிறோம்” என்கிறார்கள். அது அனுபவத்தினால் உறுதி செய்யப் பட்ட அறிவு. இதில் தியாகராசர் விடயத்தில் மட்டும் அதை எதார்த்த அனுபவம் இல்லாமல் போனது எப்படி. பிரஹலாதனோ, இராமகிரிஷனரோ, தியாகரசரோ அவர்கள கடவுளைப் பார்த்ததாக சொல்லப் பட்டதை அவர்கள் மாத்திரமே உணர்ந்து இருக்கிறார்கள். அதற்க்கு நான் சாட்சி குடுக்க முடியாது. இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தருக்கும் கடவுளைக் காட்டியதாக சொல்லப் படுகிறது. விவேகானதரோ, உங்காளால் பார்க்க முடியும், கடவுளைப் பார்க்காத வரை பெரிய பலன் இல்லை. நீங்கள் நேரில் பார்த்து ரிஷிகள் ஆகுங்கள் என்று சொல்லி இருக்கிறார். He encouarged people to make efforts to see the God!

  122. அன்பர் திரு ஜெயராமன் அவர்களே

    ///மெய்கண்டார் என்று இங்கே குறிப்பிட்டது மெய்கண்டார் என்ற பெயரில் வரும் பத்திரிக்கையையே. அம்மாதிரி ஒரு பத்திரிக்கை இருப்பது அநீ ஐயாவின் பின்னூட்டத்திலிருந்தான் தெரிந்துகொண்டேன்.///

    தங்கள் இப்படிச்சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். வெறுமே மெய்கண்டாரைக் கண்டதில்லை, என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் இதை ஏற்கலாம். அறிந்ததுமில்லை என்னும்போது இது எடுபடாது. அப்படியே ஆனாலும், மெய்கண்டசிவத்தை அறிந்தவர் நீங்கள் என்ற தெளிவுடன் நோக்கினால், அவரது வழிவந்த திருமடத்தின் பதிப்பை “பத்து பைசா பஜனைப் புத்தகம்” என்று சொல்லியிருக்கிறீர்களே அது முறையற்றது மட்டுமல்ல கண்டிக்கத் தக்கதும் கூட. புத்தகத்தின் மதிப்பு பணத்தால் வருவதல்ல, பாரம்பரியம் மிக்க திருமடத்துக்கும் அதை நிறுவிய சிவத்தொண்டருக்கும் தாங்கள் செய்யும் மரியாதை இதுதானா?

  123. //i now realize – we are talking about two sides of the same coin//

    சாரங்கன்,

    ஆமாம் இதோ தாயுமானசுவாமிகள் இந்த ஆன்மிகத் தேடலையே இப்படி ஒரு ரசவாதமாகக் காட்டுகிறார்:

    கருமருவு குகைஅனைய காயத்தின் நடுவுள்
    களிம்புதோய் செம்புஅனைய யான்
    காண்தக இருக்க,நீ ஞானஅனல் மூட்டியே
    கனிவுபெற உள்உருக்கிப்
    பருவமது அறிந்து நின் அருளான குளிகை கொடு
    பரிசித்து வேதிசெய்து
    பத்துமாற் றுத்தங்கம் ஆக்கியே பணிகொண்ட
    பக்ஷத்தை என்சொல்லுகேன்.
    அருமைபெறு புகழ்பெற்ற வேதாந்த சித்தாந்தம்
    ஆதியாம் அந்தம்மீதும்
    அத்வைத நிலையராய் என்னை ஆண்டு, உன் அடிமை
    ஆனவர்கள் அறிவினூடும்
    திருமருவு கல்லால் அடிக்கீழும் வளர்கின்ற
    சித்தாந்த முத்தி முதலே
    சிரகிரி விளங்கவரு தக்ஷிணாமூத்தியே
    சின்மயானந்த குருவே

    இதில் முக்கியமாக பாருங்கள் ஞான கனல் மூள்வது (அதையும் அவனே மூட்டுகிறான்) முதல் நிலை. அதுதான் நம்மை அருளைப் பெற பக்குவம் செய்கிறது, அவன் இன்னும் வளர்கிறான் அடியார்களின் அறிவில். ஞானத்தின் அறிவு அகம்பாவத்தை வளர்க்காது அது உள்ளத்தை உருக்கும். அரைகுறை அறிவுதான் அகம்பாவத்தை வளர்க்கும். கேள்வி கேட்டால் உதைப்பேன் அல்லது புனிதவிசாரணையில் எரிப்பேன் என்று சொல்லும். ஆனால் ஞானக்கனலோ நெஞ்சக்கனகல்லையும் உருக்கும். சரி இதிலிருந்து பிரசன்னா எழுதியுள்ள கட்டுரையைப் பார்ப்போம். அவர் ஸ்ரீ ராகவேந்திர பக்தர். தமிழ் நவீன இலக்கிய சூழலில் புழங்குபவர். பொதுவான இளைஞர் மனநிலை இன்று எப்படி இருக்கும் என்பது தெரிந்தவர். அவரே இன்னும் கொஞ்ச நாள் இளைஞர்தான். இப்படிப்பட்டவர் மந்திராலயம் போகிறார். சில கேள்விகள் சில ஆதங்கங்கள் எழுகின்றன. அவர் வெறும் தன் விருப்பம் நிறைவேற்றும் தனிப்பட்ட பக்தராக போகவில்லை. சமுதாய அக்கறைக்கும் அங்கு விடைகள் இருக்கும் என நினைக்கிறார். அவருக்கு கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தை நம்முடன் கட்டுரையாக பகிர்ந்து கொள்கிறார். அதே சமயம் அவருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் அங்கு சொல்லப்படும் அற்புதக் கதைகளுக்கு அப்பால் அவை உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றையெல்லாம் விடப் பெரிய ஒரு ஆன்மிக சமுதாய மகான் என்கிற முழுமையான ..க்கும் க்கும் ….நம்பிக்கை மனிதருக்கு இருக்கிறது. ஆக ஆழமான நம்பிக்கை ஆழமான ஆதங்கம் இவற்றிலிருந்து எழுந்த கட்டுரை அது. ஒருவிதத்தில் அது ஞானதேடல் என்றும் சொல்லலாம். ஆனால் அது அனலாக மாறுமா தேடுபவரை பத்தரைமாற்றுத் தங்கமாக மாற்றுமா அல்லது படிப்பவரில் எவரையாவது…என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.இக்கட்டுரை வெளியிடப்பட்டதும் அதிலிருந்து சில வாதங்கள் சில நேரங்களில் எல்லை மீறி சென்றிருக்கலாம் (குறிப்பாக ஜெயராமன் ‘அய்யா’ வுடன். எனக்கு அவர் முதல்கல்லை வீசியதாகவும் அவருக்கு நான் அவர் மீது தேவையில்லாமல் சேற்றை வாரி வீசியதாகவும் தோன்றியிருக்கலாம். வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.) ஆனால் இங்கு பலவேறு கோணங்களில் பிரச்சனைகள் அணுகப்பட்டன. இந்த சுதந்திர வெளி நமக்கு ஹிந்து ஞானமரபு அளித்த பெருங்கொடை. இதில் நூற்றில் ஒரு பங்கு விவாதம் வேறுசில மதங்களில் நடந்திருந்தால் மதவிலக்கம் முதல் கையை காலை வெட்டுவது வரை போயிருக்கும். ஆனால் இங்கு விவாதித்த/மோதிய நண்பர்கள் சந்தித்தால் நட்புணர்வும் அன்பும்தான் மேலோங்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஹிந்து என்கிற சமுதாய உணர்வில் நாம் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளோம். அவ்விதத்தில் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே.

  124. அரவிந்தன் நீலகண்டன், உங்கள் கடைசி மறுமொழி excellent! இதுவே இந்தக் கட்டுரையின் நிறைவு மறுமொழியாக இருந்தால் சரியாக இருக்கும். [நான் எழுதிய இது கணக்கில் வராது.:)]

  125. //கிருஷ்ணர் வந்து சண்ட போடு என்று சொல்றார் – அங்கேயும் அவுக சாமி உடாத நான் தொரத்திகினே ஓடியாறேன் நீ மட்டேற முடிச்சிரு என்று சொல்றார் //

    Relating Krishna with Genocide executers -I dont say this , its written in the book- is very unfortunate and hurting.

    Krishna said ” Athvestaanaam , sarva boothaanaam maithra (friendly with all livings).

    its better to read completely, understand the concepts and then say opinion.

  126. சரியாகச்சொன்னீர்கள் திரு அரவிந்தன்.நன்றிகள்.
    இந்த விவாத சுதந்திரம் நம் பெரும்கொடை, பொது சொத்து-நம் முன்னோர் நமக்காக விட்டு சென்ற சொத்து.
    இதில் [ fringe benefit அல்ல] உண்மையான benefit என்று நான் நினைப்பது இப்படி பேச, கேட்க வந்த இடத்தில் எதிர்பாராமல் கிடைக்கும் சர்க்கரைப்பொங்கல் , மற்றும் பாயசம் போன்ற திவ்ய பிரபந்தம் மற்றும் நாயன்மார் பாடல்கள்.
    பொன்னியின் செல்வன் நாவலில் இது போன்ற முத்துக்கள் நிறைய இருக்கும். ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும்-படிக்கவும் வைக்கும்.
    இவை [ தாயுமானவர் போன்ற relatively சமீப கால மகான்களின் பாடல்களும் ]வலையுலகில் verses மற்றும் பொழிப்புரையுடன் கிடைப்பவை தான். எனினும் யாராவது சமயம் கிடைக்கும் போது தனிப் பதிவு எழுத முடிந்தால் நன்றாக இருக்கும்.நாட்டில் நடக்கும் வம்பு தும்புகளுக்கு நடுவில் நமக்கெல்லாம் அதிக அளவில் spiritual tonic தேவைப்படுகிறது.
    இனிக்கும் பிரபந்தங்களை பகிர்ந்து கொண்ட திரு சாரங்கிற்கு நன்றி. திரு ஹரன் பிரசன்னாவிற்கு நன்றி. .
    அன்புடன்
    சரவணன்

  127. அரவிந்தன் அவர்களே

    ஹரன் பிரசன்னாவின் நோக்கத்தை எதிர்க்கவில்லை, அவர் அற்புதங்களை நம்பித்தான் ஆகா வேண்டும் என்றும் சொல்லவில்லை – அவர் இந்த கட்டுரையை சற்றே மாற்றி எழுதி இருந்தால் (சிலதை எழுதாமல் இருந்தால்) அவர் மேற்கொண்ட பயனை நன்கு அடைந்திருக்கும்

    உண்மை – பல தர பட்ட எண்ணங்களை பரிமாறும் சுதந்திரமும், பதில்களையும் பிரசுரிக்கும் பக்குவமும் இங்கு தான் கிடைக்கும்

    திருச்சிக்காரன் அவர்களே

    ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் வார்த்தைக்கு பெரும் மதிப்பளித்து உங்களுக்கு நான் பதில் சொல்லவில்லை – உண்மையா சொன்ன முடியல

    ( நான் பதில் சொல்லாததற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று நீங்கள் நம்பியே ஆக வேண்டும்) – வேண்டுமானால் உங்கள் ப்ளாக்கில் ஒரு மா பெரும் கண்டன கட்டுரை எழுதுங்கள்

  128. கவிஞர் கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசன் இந்து மதத்திற்கு மாறிவிட்டாராம். தட்ஸ்தமிழ் செய்திகளில் படித்தேன். ஹரன் பிரசன்னாவும், அ.நீலகண்டனும் மகிழ்வீர்களாக. கேள்விகேட்கும் சுதந்திரம் இந்து மதத்தில் தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு நீங்கள் கடவுளரைப் பற்றி கேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டிருங்கள். ஆக இவர்களுக்கே சந்தேகம் இருக்கிறது. ஒரு முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை. ஆனால் கிறிஸ்தவத்தில் தீர்மானமாகச் சொல்லுகிறார்களே கர்த்தர் தான் எல்லாமும். கர்ததருக்குத் தான் அத்தனை சக்தியும் மகிமையும் இருக்கிறது என்று. எனவே ஏற்கனவே ஒரு முடிவில் இருப்பவர்களை நம்புவோம் என்று விஷாலி கண்ணதாசன் மதம் மாறி விட்டார். நீங்கள் ராகவேந்திரருக்கு மகிமை இருக்கிறதா இல்லையா என்று சர்டிவிகேட் தேடிக்கொண்டிருங்கள்… புதைபொருளில் கிடைக்கலாம்! அதற்குள் இந்து தர்மம் புதைந்துவிடாமல் இருந்தால் சரி!

  129. //இந்து மதத்திற்கு மாறிவிட்டாராம்// ஐயய்யோ, அதிர்ச்சி அடையாதீங்க. அவரசர்த்திற்கு கூட கிறிஸ்தவ மதம் என்ற பெயரை விரல் டைப் செய்ய மாட்டேங்குது. தயவு செய்து “கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாராம்” என்று படிக்கவும். அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசனின் மகளுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள்!

  130. இந்து மதத்தின் முக்கிய வலிமை அதன் ஆன்மீக சக்தியே. எந்த அளவுக்கு இந்துக்கள் ஆன்மீக முயற்ச்சியில் ஈடுபடுகிரார்களோ அந்த அளவுக்கு இந்து மதம் வலிமை பெரும். இந்துக்களும் உறுதியான மன வலிமை பெறுவார்கள். ஒவ்வொரு இந்துவிடமும் ஆன்மீக வலிமை உருவாக்கப் பட வேண்டும்.

    ஒவ்வொரு இந்துவும் ஏதாவது ஒரு இந்துக் கடவுளிடமாவது கொள்கை அடிப்படையில், தனிப் பட்ட முறையில் ரேப்போ (Rappo) வைத்துக் கொள்ளும் படி ஆன்மீக பிரச்சாரம் நடத்தப் பட வேண்டும். ஒவ்வொரு இந்துவும் மாணிக்கவாசகரைப் போலவோ, பிரஹலாதனைப் போலவோ, உடனே ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆன்மீக முயற்சி என்பது சிறிதளவாவது ஏற்படுத்தப் பட்டால் கூட அவர்கள் மன வலிமை பெறுவார்கள். ஆன்மீக வலிமை பெற்றவன் எந்தக் கஷ்டம் வந்தாலும் உறுதியாக நிற்பான். கஷ்டம் வந்த போது, தாங்கும் வலிமையை பெற்றால் தாவ மாட்டார்கள்.

    ஆனால் யாருக்காவது ஏதாவது கஷ்டம் வந்தால் உடனே சில வியாபாரிகள் தங்கள் தள்ளு வண்டியை அங்கே கொண்டு போய் விடுகின்றனர்,

    இந்தக் கடவுளுக்குத் தான் மகிமை இருக்கிறது என்றால் அப்படிப் பார்த்தால் எந்த மதக் கடவுளாவது இந்த உலகத்தில் யாரையாவது சாவே இல்லாமல் தொடர்ந்து வாழும் படி செய்து இருக்கிறார்களா? புத்தர் சொன்னது போல யார் வீட்டிலாவது சாவே இல்லாமல் இருக்கிறதா ? எனவே எந்தக் கடவுளும் யாரையும் சாகாமல் காக்கவில்லை. பொய்யை உணமையால் கூட காக்க முடியாது. உணமையையே உண்மையால காக்க இயலும்.

    எனவே இந்துக்கள் இந்து மதத்தைக் காக்க விரும்பினால், அவர்கள் ஒவ்வொரு இந்துவையும், மனக் குவிப்பு பயிற்ச்யிலோ பூசனையிலோ, யோகத்திலோ சிந்தனையிலோ ஈடுபடும்படி செய்ய வேண்டும். இது முக்கியம். நான் இதை பல முறை எழுதி இருக்கிறேன். அவர்கள் உலகில் உள்ள மக்களை எல்லாம் சிந்தனைப் பாதைக்கு கொண்டு வருவது முக்கியன செயல்.

    அதோடு உலகிலே எந்த ஒரு மதத்தையும், யாரையும் வெறுக்காத மதமாக இந்து மதம் இருக்கிறது என்பதையும் தெரியப் படுத்த வேண்டும்.

    இந்து மதத்தின் தத்துவங்கள் இந்துக்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். அதோடு பிற மதங்களின் தத்துவங்களையும் நாம் இந்துக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்துவாக இருப்பவன் சர்ச்சுக்கு செல்ல முடியும்,மசூதிக்கும் செல்ல முடியும். அவன் வேறு மதத்திற்கு மாறினால் பிற மதங்களை கண்டிக்க வேண்டும் என்றே சொல்லப் படுகிறது.

    இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் பெரும்பாலானவை இந்திய சமுதாயம் பல்லாயிரம் ஆணடுகளாக பின்பற்றி வரும் கருத்துக்களே. ஒரு பெண்ணை மனம் செய்து கொண்டு, இறுதி வரை அவளை பிரியாமல் வாழ வேண்டும், அடுத்தவர்க்கு உதவி செய்ய வேண்டும், விபச்சாரம செய்யக் கூடாது என்பது போன்ற இந்திய சமுதாயக் கருத்துக்களையே இயேசு கிறிஸ்து யூத மக்களிடம் பரப்ப முயற்சி செய்தார். இதை எல்லாம் நாம் ஒவ்வொரு இந்துவிடமும் எடுத்து சொல்ல வேண்டும்.

    யாராவது நம்மிடம் வந்து ” வூழியத்தை ” ஆரம்பித்தால் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை அவர்களுக்கு நாம் எடுத்து விளக்க வேண்டும். ஒரு சரியான் இந்து சரியான கிரிஸ்துவனுமாவான். ஒரு சரியான கிறிஸ்துவன் சரியான இந்துவுமாவான் என்றார் சுவாமி விவேகானதர்.

    ஆனால் இயேசு கிறிஸ்துவின் பெயராலேயே , அடிப்படை வாத முரட்டுப் பிடிவாத சமரச மறுப்புக் கருத்துக்கள் பரப்பப் பட்டு வருகின்றன. இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொண்டு, அவரது உணமையான் கருத்துக்களை, சமரச மறுப்பு முரட்டுப் பிடிவாதக் கோட்பாட்டு பரப்பாளர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பும் நம்மிடமே இருக்கிறது.

    இது எல்லாவற்றுக்கும் ஆரம்பமான முக்கிய செயல் ஒவ்வொரு இந்துவும் வாரத்திலே ஒரு நாட்களோ, இரண்டு நாட்களோ, நேரம் கிடைக்கும் பொதெல்லாம் ஆரவாரமில்லாத மனக் குவிப்பு பயிற்சியிலோ, பூசனையிலோ, ஈடு பட செய்வதோடு சிந்தனையிலும் ஈடுபட செய்ய வேண்டும். இந்து மதத்தின் ததுதுவங்க்களை எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்கப் பட வேண்டும்.

    வாழ்க்கை என்ன என்பது பற்றிய சிந்தனை, ஆராய்ச்சி இனி முனிவர்களால் மட்டும் அல்ல, ஒவ்வொரு இந்துவாலும் மேற்கொள்ளப் பட வேண்டும்.

  131. //ஹரன் பிரசன்னாவும், அ.நீலகண்டனும் மகிழ்வீர்களாக. கேள்விகேட்கும் சுதந்திரம் இந்து மதத்தில் தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு நீங்கள் கடவுளரைப் பற்றி கேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டிருங்கள்//

    கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர் வாழ்ந்த சூழல் கேள்வி கேட்கிற சூழல் இல்லை. அப்படி கேள்வி கேட்டு வளர்ந்திருந்தால் இப்படி ஒரு முட்டாள்தனமான மதம் என்கிற பெயரில் நிலவும் ஹிஸ்டீரிக்கல் கீழ்த்தரத்துக்கு இரையாகியிருக்க மாட்டார். அவருடைய இந்த வீழ்ச்சி நாம் ஏன் நம் குழந்தைகளுக்கு நம்பிக்கையை மீறிய அறிவுத் தேடலை ஆன்மிகமாக ஹிந்து ஞான மரபாக முன்வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. சத்தியமே என் கடவுள் என்றார் மகாத்மா காந்தி. அன்பே சிவம் என்றார் திருமூலர். ஆனால் கீழ்த்தர மதங்களோ “என் கடவுளே சத்தியம்” என்றும் “கூட்டம் கூட்டமாக கருவறுக்க சொல்கிற என் கடவுளே அன்பு” என்றும் பிரச்சாரம் செய்கின்றன. இந்த பிரச்சாரத்தின் அடிப்படை முதுகெலும்பையே உடைக்க வேண்டும். அதற்கு சுத்தமான ஞானத்தை முன் நிறுத்திய நம் ஞானிகளின் மரபை மீட்டெடுத்து வலிமையுடன் அன்னிய மதங்களை கண்டனம் செய்ய வேண்டும். அவர்கள் நடத்தும் “ஆத்ம அறுவடை சந்தையில்” நாமும் ஒரு வியாபாரியாக கூவி கூவி விற்பதா அல்லது அவர்களின் சரக்கே போதை மருந்துதான் என்பதை வெளிப்படுத்தி நம்பிக்கை பித்தம் தெளிய நல்ல ஞான மருந்து இங்கேதான் இருக்கிறது என்று நிலைநாட்டுவதா? நீங்களே சிந்தியுங்கள்

  132. //அவர்கள் நடத்தும் “ஆத்ம அறுவடை சந்தையில்” நாமும் ஒரு வியாபாரியாக கூவி கூவி விற்பதா அல்லது அவர்களின் சரக்கே போதை மருந்துதான் என்பதை வெளிப்படுத்தி //
    மதிப்பிற்குரிய அரவிந்தன் ஐயா!
    சந்தை என்று வந்துவிட்ட பிறகு அவரவர் பொருளைப் பற்றி அறியாதவர்க்கு விளக்க வேண்டியது நமது கடமையே ஆகும். ஆனால் நம் கடைச்சரக்கைப் பற்றி மற்றவரிடம் கூறும்போதே ‘இச்சரக்கு சரிதானா என்பதை நானே பரிசோதனை செய்து கொண்டிருக்கிறேன். நீங்களும் வாங்கி சோதனை செய்யுங்கள்” என்றால் உங்கள் கடையில் எவன் பொருள் வாங்குவான். அப்படி ஒரு தொனியைத்தான் இந்தக் கட்டுரை பிரதிபலித்திருக்கிறது என்பது மட்டுமே எனது வாதம். முதலில் நாம் அவநம்பிக்கை இல்லாமல் நம் கருத்தை முன் வைக்கும் போது தான் மற்றவர்கள் அதை கேட்க விரும்புவார்கள். எனக்கு நம்பிக்கை இல்லை நீங்கள் வேண்டுமானால் கேளுங்கள் என்றால் ஒருத்தனும் உட்கார்ந்து கேட்கமாட்டான். கிருபானந்த வாரியாரை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் எத்தனை முருகன் கதை கூறியிருக்கிறார். எத்தனை இடங்களில் இறைவனைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். ஒரு முறையேனும் முருகன் அப்படி செய்திருப்பானா என்பது சந்தேகமே. எனக்கு அதுபற்றி ஆராய்ச்சி குறிப்புகள் கிடைக்கவில்லை . இருந்தாலும் உங்களுக்கு சொல்கிறேன்” என்றா கூறினார். தான் முழுமுதற்கடவுளாக முருகனை நம்பினார். அந்த நம்பிகையை ஆதாரமாக வைத்தே மற்றவர்களுக்கும் அதை எடுத்துச் சொன்னார். அதனால் மக்கள் அவரை நம்பினார்கள். அவர் சொற்பொழிவால் பக்தி மார்கம் தழைத்தும் இருந்தது. இந்த தொனியில் தான் நாம் மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதைத்தான் நான் இக்கட்டுரை பற்றிய கருத்தாக கூற விரும்புகிறேன். மற்றபடி இந்து தர்மத்தை காக்க வேண்டும் என்பதிலும் அந்நிய மத ஆக்கிரமிப்பை எதிர்த்து நம்மவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும் என்பதிலும் உங்களைப் போலவே எனக்கும் துடிப்புண்டு. அந்த அடிப்படைக் கருத்தில் மாற்றமில்லை. ஆனால் பிறருக்குச் சொல்ல வருவதை நம்பிச்சொல்லுங்கள். நம்பிக்கை என்ற ஒன்றை வைத்துக்கொள்வதே கேலிக்குரியது என்ற மனோபாவத்துடன் எழுதப்பட்டது இந்தக் கட்டுரை என்பதே எனது வாதம். உலகமயமாதலில் மத வியாபாரத்தையும் அரசியல் வாதிகள் கலந்து விட்ட பிறகு அவர்கள் போக்கிலேயே உண்மையை எடுத்துச் சொல்வதில் என்ன தவறு? அதற்கு கூச்சப்படக்கூடாது. உண்மை வெல்ல வேண்டும். ஏனெனில் காலம் அப்படி.

    ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், இது கலியுகம். அதர்மத்தை அதர்ம வழியில் தான் வெல்ல முடியும். இது எனது கருத்து. இல்லையே துரியோதனனை தொடையில் அடித்துக்கொல்ல கண்ணன் ஜாடை காட்டி இருப்பானா என்ன?

  133. அரவிந்தன் ஐயா! மாற்று மார்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தனி ஆளாயிருந்து நம்பிக்கையுடன் பதிலளித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை எமது

    https://hayyram.blogspot.com/2010/06/blog-post.html

    இந்த தளத்தில் வந்து வாசித்துப் பாருங்கள். நம்பிக்கை பற்றிய எனது ஆதங்கத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

    அன்புடன்
    ராம்

  134. Ram,

    I think the long discussion we all had is originally started about the said “Miracles” rather than நம்பிக்கை.

    In tamil we use the word நம்பிக்கை in 3 meanings.

    நம்பிக்கை = confidence

    நம்பிக்கை = hope

    நம்பிக்கை = belief / faith

    We can emphasise on first two (நம்பிக்கை = confidence & நம்பிக்கை = hope).

    If people are hopeful and confident they can face any thing and try their best.

    The third one – நம்பிக்கை = belief / faith – can make them to belive any thing. Today belive on some thing.

    Suppose one say that if you worship one Guru you will never get any heart attack or any heart problem, but after some months if he gets heart attack , then what will happen to his belife?

    Similarly if any one add many stories that he did miracle, he did this…he doubles the money kept within the pot…. etc… Is these going to be in any way useful for the spiritual upliftment for any one?

    On the other hand you just think of the major religious players of India like Buddha, Adi Shanakara, Ramanaju, Madhva, Saithanya, Vivekaanandha… Who created waves of Spiritualism – did any of them rely on miracles to spiritualise the people?

    Infact the most prominent God Rama, never did any “miracles” but suffered a lot. Still Indians respect and worship him, Right…

    Of Course Krishna is said to have done a lot of extraordinary Miracles, here Krishna is the only one in the world who claimed ( among those who lived all along with humans) he is the GOD, ultimate GOD, Superior GOD, GOD in Vishava Rooba, GOD without Roobaa… GOD who includes everything with him. He was a special one.

    Now we don’ t have any one with us who claimed that he is GOD.

    While I don’t rule out the possibility of any Miracle happening, its better we concentrate to promote genuine devotion and genuine spiritualism among the people rather than showing the carrot of Miracle!

  135. ராம் அவர்களே

    நீங்கள் இதை இப்படியும் யோசிக்கலாம் – ஹுமாயுன், அக்பர் போன்ற இருந்து நமது மதம் தப்பியதற்கும் இன்றைக்கும் உள்ள நிலைக்கும் நிறைய வேறுபாடு உண்டு

    அன்று எந்த ஒரு ஹிந்துவும் தனது மதத்தை குறைவாக நினைக்கவில்லை – ஹிந்து மதம் பற்றிய தெளிவு, அறிவு, ஞானம் நிறையவே இருந்தது – அதனால் அவனால் காட்டுமிராண்டி தனத்தை கூட எதிர்த்தோ சகித்துக் கொண்டோ இருக்க முடிந்தது – அந்த காட்டு மிராண்டி கொடூர தனத்தை தாங்க உடலிலோ மனதிலோ சக்தி இல்லாதவர் மட்டுமே வேறு வழி இன்றி மாறினார் [கற்பழித்தால் என்ன செய்வது ….- ]

    இன்றோ விஷயம் வேறு விதம் – ஹிந்துக்களின் சக்தியை புரிந்து கொண்ட விஷமக்கார பரங்கியன் மெதுவாக நமக்கு விஷம் ஏற்றிவிட்டான் – நம்மை நாமே இகழ்வாக, நமது மதத்தை குறைவாக காண வைத்து விட்டான்

    இந்த நிலையில் ஞானம் இல்லாத நம்பிக்கை மட்டும் வைத்துக்கொண்டு போராட முடியாது – ஏண்டா நீங்க நெருப்புல சாப்பட்ட போட்டுட்டு அது சாமிக்கு போவுதுன்னு சொல்றியே அப்படின்னு ஒரு சாத்தான் மதத்தவன் அப்பாவி விஷயம் தெரியாத ஹிந்துவா கேக்கறான் – நம்மாளுக்கு பதில் தெரியல, தலை குனிவு ஏற்படுகிறது, ஹிந்து மதத்தில் இருந்தால் தோல்வி தான் என்ற நிலை வருகிறது

    இதுவே விஷயம் தெரிந்த ஒரு ஹிண்டுவால இத கேள்வி ஏன்னா பல்லாயிரம் கேள்விக்கு பதில் தர முடியும், சாத்தான் காரனையும் கேள்வியாள திருப்பி கேட்டு வெக்கப்பட வைக்க முடியும்

    இதற்க்கு தான் ஞானம் தேவை கருத்து சுதந்திரம் தேவை – ஹிந்து மத வளர்ச்சி முன்னாடியே முடிந்து போன விஷயம் கிடையாது – இன்னும் ஒரு மகான் தோன்றி பல மென்மையான புரிதல்களை நமக்கு தர முடியும் – நாமே கூட தேடிக் கொள்ள முடியும்

    இன்று மேலை நாட்டு (அறிவுடைய) கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் மதத்தின் குறைவு புரிந்துள்ளது (அது வெறும் பஞ்சரான பஞ்ச தந்திர கதை தான்னு) அவர்கள் conciousness என்பதை நோக்கி நகர்கிறார்கள் – iskcon நின் வெற்றிய அந்த conciousness என்பது ஹிந்து மதத்தில் கிடைக்கும் என்று அவர்கள் நம்பி பயன் பெற்றதால் தான் – இந்த அறிவு/நம்பிக்கை இஸ்லாமிஸ்டுக்கு வரவே வராது – அவ்வளவு கொடுமையான மதம் அது – கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது

  136. தங்கள் புரிதலுக்கு நன்றி Sarang. நிச்சயமாக என்னால் இந்த விஷயத்தை இத்தனை தெளிவாக விளக்க முடியவில்லை.

  137. நன்றி திரு அரவிந்தன் – உண்மையிலேயே தமிழ் ஹிந்துவால் அடைந்த பயன் தான் இது – expansion of horizons – தங்களுக்கு தான் நன்றி

  138. அன்பர்களுக்கு, நான் ஏதோ செப்படி வித்தைக்காரனைப் போல எல்லோரையும் மயக்கி இந்து மதத்திற்குகொண்டு வாருங்கள் என்று சொன்னதைப் போலவே எனக்கு விளக்க முற்படுகிறீர்கள். உங்கள் கருத்துக்கள் எனக்குப் புரியாமல் இல்லை. நான் சொல்ல வருவது இவ்வளவு தான்..

    நாம் மற்றவர்களுக்கு எடுத்துக்கூறும் முன் நமக்கு அந்த விஷயத்தின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். இல்லையேல் நாம் பிறருக்கு போதிக்க முடியாது. //கிருபானந்த வாரியாரை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் எத்தனை முருகன் கதை கூறியிருக்கிறார். எத்தனை இடங்களில் இறைவனைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். ஒரு முறையேனும் முருகன் அப்படி செய்திருப்பானா என்பது சந்தேகமே. எனக்கு அதுபற்றி ஆராய்ச்சி குறிப்புகள் கிடைக்கவில்லை . இருந்தாலும் உங்களுக்கு சொல்கிறேன்” என்றா கூறினார். தான் முழுமுதற்கடவுளாக முருகனை நம்பினார். அந்த நம்பிகையை ஆதாரமாக வைத்தே மற்றவர்களுக்கும் அதை எடுத்துச் சொன்னார். அதனால் மக்கள் அவரை நம்பினார்கள். அவர் சொற்பொழிவால் பக்தி மார்கம் தழைத்தும் இருந்தது. இந்த தொனியில் தான் நாம் மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். //

    மாறாக

    //ராகவேந்திரர் ஜீவ சமாதிக்கு நுழையும் முன்பு பேசியதாகச் சொல்லப்படும் உரை// என்று எழுதிவிட்டு பின் //ஆனால் இவை ராகவேந்திரரால்தான் சொல்லப்பட்டதா என்பதுதான் தெரியவில்லை!// என்று ஏற்கனவே இவைகள் ஸ்ரீராகவேந்திரராலேயே சொல்லப்பட்டது என இருக்கும் நம்பிக்கையை நீர்த்துப் போகச்செய்வது மாதிரி நாமே பிரசங்கம் பண்ண வேண்டாம் என்பது மட்டும் தான் எனது கருத்து. மற்றபடி குருட்டாம் போக்கில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் என்று நான் வாதிட வரவில்லை. நமது தர்மத்தின் மீதும் கடவுளர்கள் மீதும் சந்தேகங்கள் மட்டுமே எழுப்பிக்கொண்டிருக்க தமிழ்ஹிந்து தளம் தேவையில்லை. அதற்கு நாத்திக தளங்கள் நிறைய வேலை செய்கின்றன.

    நான் சொல்ல வருவதை நீங்கள் புரிந்து கொண்டால் என் பாக்கியம். இல்லையேல் உங்கள் புரிதல் உங்களுக்கு என் புரிதல் எனக்கு. உங்கள் ஞானம் உங்களுக்கு, எனது ஞானம் (இருந்தால்) எனக்கு. மேற்கொண்டு உங்கள் நேரங்களை வீனடிக்க நான் விரும்பவில்லை.

    அரவிந்தன் நீலகண்டன் ஐயா,
    //இங்கு விவாதித்த/மோதிய நண்பர்கள் சந்தித்தால் நட்புணர்வும் அன்பும்தான் மேலோங்கும். // என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை. நீங்கள் பேச விருந்த கூட்டங்களில் கலந்து கொள்ள முயன்று முடியாமல் போயிருக்கிறது. என்றாவது சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

    நன்றி!

  139. சாரங், உங்கள் விளக்கம் தெளிவாக இருக்கிறது. நன்றி.

  140. திருச்சியார், தங்கள் விளக்கம் அருமை. நன்றி.

  141. Nice article..
    Good debate….one திங் is sure..when only this partiality of brahmin and non-brahmins goes,thats the moment hindu religion will sure araise…until then……????

    நம்மக்கு (hindu religion)பிடித்த கேடு பெரிய இந்த சாதியம்
    .

  142. ஹாலல்லா தரு ஹாகு பாடல் இன்று கிடைத்தது. யூ டிபில் வேறு ஏதோ தேடிக்கொண்டிருந்தபோது கிடைத்தது. தேவத மனுஷ்யா படத்தில் உள்ள பாடல் இது.

    https://www.youtube.com/watch?v=c_weBk1kvUQ&feature=related

    மிக நல்ல பாடல்.

  143. Life revolves around faith. If the human race loses faith in its future that will be the dooms day. Faith is to be reposed on something/someone/.somewhere by each and everyone of us. One believes in yes and the other beleives in no and , it all depends on ones mental make up.
    Pichumani

  144. *சன்னியாசி* என்பது தவறு. சமஸ்க்ருதத்தில் ந – ன இரண்டு எழுத்துக்கள் கிடையாது. ஆகவே சம்ஸ்க்ருத வார்த்தைகளை எழுதும் பொது சந்நியாசி என்றுதான் எழுத வேண்டும். பல மடங்கள் வெளியிடும் புத்தகங்களில் இதனைக் காணலாம். ந்யாசம், ஆராதநம், தர்சநம் என்றுதான் எழுதுவார்கள்.

  145. அன்பார்ந்த ஆத்திக நாத்திக அன்பர்களே!! வணக்கம்.
    இந்தப பெரிய நெடும் கருத்து, பின்னூட்டங்கள் எல்லாம் படித்தபின், ஓரளவு கடவுள் மீது நம்பிக்கை உள்ள எனக்கு ஒரு சின்ன பெரிய குழப்பம். எதை நம்புவது, எதை ஆராய்வது, எதை அனுபவிப்பது, எதை ஓதுவது, எதை எதை தள்ளுவது, என்கிற மகாக் குழப்பம் வந்துவிட்டது. பற்பல ஆன்மீகப் புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள் (மகான்களின்), ஓரளவு பகவத் கீதை, குரான், பழைய பாதை, புதிய பாதை எல்லாம் படித்த இந்தச் சிறியவனுக்கு ஒரு சந்தேகமற்ற தெளிவு வருகிறது. எதையும் தேடாதே, எதையும் நம்பி விடாதே, முடிந்தால் அனுபவி (நல்லதோ அல்லாததோ) அது உன் பிறவிப் பயன், இயன்றவரை அடுத்தவன் சொத்துக்கும் காசுக்கும் ஆசைப்படாமல் உன்னால் இயன்றவரை உதவி செய், நேரம் கிட்டும்பொழுது அருகிலுள்ள ஆலயம் சென்று இன்ன பிற சடங்குகளைச் செய்து (முடிந்தால்), விபுதி குங்குமம் இட்டுக் கொள்ள விருப்பம் இருப்பின் அதைக் கொள்க, இல்லையேல் அதையும் அங்கேயே விட்டுவிட்டு தத்தம் காரியத்தைப் பார், கலி காலன் உன்னை கடைக்கோடி நாள் வரை உன் ஆயுள் வரை என்ன செய்ய பணித்திருக்கிரானோ அதன்படி வாழ்ந்து முடி, அம்புடுத்தேன் !!! என்று தோன்றுகிறது. மனதில் தோன்றியதை எழுதி விட்டேன், மன்னிக்கவும்.

  146. Dear Friends, it is very disgusting rather frustrating to read multi-pronged analysis, pros-and-cons, largely due to opinionated view points from one and all – regardless if the writer has faith, belief, confidence or any hope at all in what they are trying to relay on the fellow reader.

    I myself having been a vivid reader in search of truth on spiritual way, after having read many writings on philosophy, biographies of various Saints, Gurus, of our great Nation including the very latest Sathya Sai Baba, we cannot conclude literally what’s the right path or way to choose to pursue our mission going forward in search of truth and the real Gnana for that matter !!

    Every school of thoughts have their own methods, methodologies and justifications to prove their stand-point, or counter others’ standpoints so there is no near-to-perfect way for one to follow or believe in or have faith or render ultimate confidence in finding the real truth – that is God !!

    So, to me, it just appears to be prudent that: As a human being, do just what you are supposed to be, with all your inner-conscience, without hurting anyone’s sentiments, without affecting any fellow human being by our deeds or mis-deeds or non-deeds; let us not refrain from own self-imposed jurisdictions not to pervade one’s territory – be it philosophical, material or spiritual or whatever on earth; do not indulge in tasks or activities that would harm others by person or soul or by sentiments; just proceed what you are doing as you have been sent to this earthy materialistic world, and leave the rest to destiny, That’s what I can say !!

  147. திரு சிங்கை சிவாஸ் எதை நம்புவது என்று குழப்பம் வந்துவிட்டது என்று எழுதியிறுக்கிறார். ஒன்றே உண்மை ஓரே வழி ஒரே முறை தான் சரி சரியானது என்ற கருத்தின் அடிப்படையில் உண்மையைத்தேடுகிறீர்கள். அதாவது ஆராய்கிறீர்கள். அதனால் குழப்பம் வருகிறது. ஆனால் கடைசியில் உண்மையாக வாழ்வது நம்பிக்கைப்படி வாழ்வது, நேர்மையாக வாழ்வது சரி என்கிறீர்கள். என்னைப்பொருத்தவரை இது சரி தான். ஆழ்ந்து புரிந்து கொள்ள முயற்சி செய்வது. நமக்கு எது முழுமையானது சரியானது என்று தோன்றும் வழியில் வாழ்வது சரியே. ஏன் எனில் மனிதன் அவனது மனம் மாறுபட்டது ஓரே வழி முறை அனைவருக்கும் பொருந்தாது. என்வே பல்வேறு வழிகளையும் ஏற்றுக்கொள்வதே ஹிந்து மதமாகும். ஒன்றே சரி இன்றேல் அழிவு நரகம் என்பது நம்மது அன்று.

  148. மிக மோசமான பதிவு. ராகவேந்திரர் பற்றி ஒரு மாத்துவரிடம் இருந்தே நல்ல விஷயத்தை எதிர்பார்க்கலாம் போல. சமீபத்தில் ஒரு நண்பர் தீபாவளி பற்றி எழுதுகையில், ” இந்த நாளில் செய்யும் ஸ்நானம் கங்கா ஸ்நானம் என்று கூறப்படுகிறது ” என்று ஆரம்பித்தார் . நான் அவரிடம் ” நீங்கள் இந்து தானே ? இது கங்கா ஸ்நானம் தான் என்று ஆரம்பிஙகளேன் ! ” என்று கேட்டவுடன் அப்போதுதான் தனக்கு இருந்த அந்த இலக்கிய வியாதியைத் துறந்தார்.

    இந்தக் கட்டுரை அதே நோய்க் குறியுடன் எழுதப்பட்டிருக்கிறது.இதில் கிடைப்பவை வெறும் செய்திகள். இந்தத் தளத்தில் நான் தேடுபவை உள்ளத்தில் இருந்து வரும் கருத்துக்கள் மற்றும் வரலாற்றில் இருந்து கிடைக்கும் பாடங்களும் அனுபவங்களும்.

    என் குடும்பத்தில் ராகவேந்திரர் போற்றப்படுகிறார். நான் படித்த ராகவேந்திரர் வேறு. ஹரனின் ராகவேந்திரர் ஒரு முச்சந்தியில் நிற்கும் கல் சிலை. அதற்கு காகங்களும் அபிஷேகம் செய்யும். என் ராகவேந்திரர் ஒரு பேரறிஞர். பெரும் ராம உபாசகர். சென்ற இடங்களில் எல்லாம், தன இருப்பால் இனிமையும், சாந்தியையும், பக்தியையும் நிரப்பிய பெரும் செல்வம்.

    வேதத்துக்கு மத்துவரின் வழியில் அத்தியாத்தும நோக்கில் உரை எழுதும் பணியைத் தொடர்ந்தவர். அவர் விட்ட பணி பின்பு அரவிந்தர் மூலமாக தொடரப் பட்டது. இன்றைய சாஸ்திரீய சங்கீதத்தின் முன்னோடிகளாகப் பேசப்படும் மும்மூர்த்திகளுக்கும் முன்னரே பல்லவி, அனுபல்லவி , சரணம் முறையை எடுத்தாண்டிருக்கிறார். ( சாம்ப மூர்த்தி போன்றோர் பல்லவி முதலான பாகங்களைக் கொண்ட கீர்த்தனைகளை முறைப்படுத்தியவர்கள் மும்மூர்த்திகளே என்று கூறியதால் இந்த விளக்கம்) அந்த பைரவி ராகக் கீர்த்தனையில் ராக முத்திரைகளை அப்படியே கையாண்டிருக்கிறார்.

    இது போன்ற மட்டமான பதிவுகள் தமிழ் ஹிந்துவில் ,வருவது வேதனை அளிக்கிறது.

  149. இதை இப்பொழுத்தான் நானும் படித்தேன். பிச்சாலய வரலாறு , அதன் பெயர் காரணம் , அங்கும் நடந்த அதிசயம் மர்ரும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அவருக்கு கிடைத்த தரிசனம் போன்ற குறைந்த பட்ச தகவல் கூட இல்லாத ஒரு கட்டுரை இது. வார்த்தை பிரயோகங்களும் சரியாக இல்லாத கட்டுரை ஒன்றை எப்படிதான் இங்கு வெளியிட்டார்களோ?

  150. முக்கியமான கட்டுரை நிறைய செய்திகளைத் தாங்கி வருகிறதால். இன்றைய காலகட்டத்தில் சாதிகளின் வழி இந்துமதம் செல்வது வரவேற்கப்படக்கூடாது. கட்டுரையாளர் சொல்லுவதில் மந்த்ராலயத்தில் சாதிவழிப்படியே அன்னதானம் என்பதைப்படித்தபோது எனக்கு இப்போதுதான் ஒன்று புலனாயிற்று. தில்லியில் இராகவேந்திரர் கோயிலொன்று உள்ளது. தமிழர்கள் பலர் வசிக்கும்பகுதியில்தான். ஆண்டு தோறும் பத்துநாட்கள் சிறப்புப்பூஜைகள் நடக்கும். ஒருதடவை, அப்படி நடக்கிறது. நீங்களும் போய்ச்சேர்ந்து கொள்ளுங்கள் என்று நான் சிலகுடும்பத்தவரைக்கேட்டுக்கொண்டேன். காரணம் அப்போது மத்ராலயத்து சுவாமி ஒருவர் வருவதாக இருந்தபடியால். 100 உருபா வசூலித்தார்கள். மறுநாள் என்ன சேர்ந்தீர்களா? என்றதற்கு, இல்லை என்றார்கள். ஏன்? கோத்திரம், சாதிகளைக்கேட்டார்கள். என்று மனவேதனைப்பட்டார்கள்.

    இதையும் கட்டுரையில் சொல்லப்பட்டதையும் சேர்த்துப்பார்க்கும்போது, இராகவேந்திரர் மடங்களிலும் கோயிலகளிலும் சாதிகள் பார்க்க்ப்படுவதாகத்தான் தெரிகிறது.

    ஏமாற்றமடைந்த குடும்பத்தினர் தற்சமயம் காமாட்சி அம்மன் கோயிலில் சேர்ந்திருக்கிறார்கள். இது காஞ்சி சங்கர மடத்துக்கோயில். அங்குசாதிப் பிர்ச்சினையுமில்லை.

    பின்னூட்டமிட்டவர்களில், குறிப்பாக, திருமுத்துக்குமாரசுவாமி, ஏன் இராகவேந்திர சுவாமிகள் வழிபாடு தமிழகத்தில் பல்கிப்பரவவில்லை என்ற கேள்வி எழுப்ப அதற்குப் பலரும் பலவித பதிலகள் சொன்னதாகத் தெரிகிறது.

    என் கணிப்பின்படி அதற்கு இச்சாதிமுறைப்பிடிப்பே காரணம் .

    தமிழகத்தில் அந்தணர் எண்ணிக்கை மிகக்குறைவு இல்லையா? அதைவைத்துச்சொன்னால், இந்துமதம் அந்தணரை மட்டுமே நம்பி இங்கிருந்தால், மற்ற மதங்களுக்குப் பிறர் செல்வதைத் தடுத்தல் முடியுமா? பிற்ஜாதியினரைக் குறிவைத்தே இந்து மதம் வாழ வேண்டும். வாழவும் முடியும். இதைத் தமிழகத்தில் பிறந்த இந்து மஹான்கள் அறிந்தேதான் தம் மதத்தில் சமத்துவத்தை மிகமுக்கியப்பங்கை வைத்தனர். எடுத்துக்காட்டாக, இராமானுஜர்.

    இராகவேந்திரர், கட்டுரையாளர் சொன்னது போல, அரிசனர்களை அரவணைத்திருக்கலாம். ஆனால் இன்று அவர் தொண்டர்கள் அருவருப்படைகிறார்கள்.

    இந்த அருவருப்பு பிற்ஜாதியினர் மேலும் வரத்தான் செய்யும் அந்தணர் மட்டுமே வேண்டுமென்றால். இராகவேந்திர ஆராதனை தமிழகத்தில் பரவமுடியாது. இரசனியால் கொஞ்சம் தெரியவந்திருக்கிறது.

    இங்கு பின்னூட்டமிட்டவர்கள் பலர் தங்களை இராகவேந்திர சுவாமியின் தொண்டர்கள் என்றெழுதுகிறார்கள். அவர்கள் எவ்ரேனும் கட்டுரையாளர் பட்ட மனவேதனையை அடைந்தார்களா? தங்கள் ஜாதிக்கு மட்டும் என்றா அவர் நினைத்தார்?

  151. எங்கள் ஊரில் முதலியாருக்கு ஒரு கோவில் இருக்கின்றது அங்கு அவர்கள்தான் தனியாக சாப்பிடுவார்கள், பூஜை எல்லாம். தலித் ம்ம். கடைசியில்தான், தனியாகத்தான். ஏன் இது? ஆக ஜாதி ஹிந்துகள் அடக்குமுறை எல்லாம் உங்கலால் பொறுத்துக்கொள்ளமுடியும். ஏன் . பின்னூட்டம் போட்டவன் இங்கு யாரும் தலித் இல்லை. ஆதிக்க வெறி என்ரால் இதுதான் — பிராமணர்கள் பண்ணுவது இல்லை.

  152. இங்கு பிரச்சினை பிராமணர் பற்றியன்று. இராகவேந்திர சுவாமியின் தொண்டர்களைப்பற்றித்தான். கட்டுரையில் இராகவேந்திர சுவாமி அரிசனங்களை அரவணைத்தவர் என்று சொல்லி அதற்கு மாறாக அவரின் தொண்டர்கள் நடக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக தனிப்பந்தி போடுவதைக் காட்டுகிறார்.

    அதாவது இராகவேந்திர சுவாமிக்கும் 96 விகிதம் பிராமணல்லாதோருக்கும் (தமிழ்நாட்டுக்கணக்குப்படி) இடையே இரும்புத்திரை போடுகிறார்கள் தொண்டர்கள் என்று சொல்கிறார். இது இவர்கள் இராகவேந்திர சுவாமிக்குச் செய்யும் தொண்டா? நான் இப்படிப்பட்ட இரும்புத்திரையே இராகவேந்திர சுவாமியைத் தமிழர்கள் மத்தியில் பிரபலமாக இல்லாமல் செய்துவிட்டது என்று கணிக்கிறேன். எந்த மஹானையும் 96 விகித மக்களிடமிருந்து தள்ளிவைத்தால், அந்த மஹானுக்கு 6 விகித பிராமணர்கள் மத்தியில் மட்டுமே வணக்கம் உண்டு. இவ்வுண்மையை உணர்ந்தவர்கள் இராமானுஜர் போன்றவர்கள் என்பதையும் சொன்னேன்.

    கட்டுரை பலகருத்துக்களைப்பற்றிச்சொன்னாலும் இங்கு தொண்டர்கள் என்று சொல்லிக்கொண்டு எழுதியவர்கள், தமக்கு பிடித்த கருத்துக்களை மட்டுமே விவாதித்து இதை விட்டுவிட்டார்கள். அது ஏன்? இதுபோன்ற செயல்கள்தானே இந்துமதம் தழைப்பதற்கு இடர்பாடுகள், இல்லையா பாண்டியன்?

    போனவாரம் அஹோபிலமடம் ஜீயர் தில்லித்தமிழ்சங்கத்துக்கு வருகை புரிந்தார். மாலை 4 மணிக்கு அவரின் அருள்வாக்கு கேட்க வாருங்கள் என்று எனக்கு இ மெயில் அனுப்பியிருந்தார் சங்கத்தார். நான் அஜ்ஜீயரை இதுநாள் வரை கண்டதில்லை. மற்ற ஜீயர்களைத்தான் கண்டிருக்கிறேன். காரணம். அஹோபிலம் எங்கோ ஒரு காட்டுக்குள் ஆந்திராவில் இருக்கிறது என்ற நினைப்பே தயக்கத்தை உருவாக்குகிறது. அப்படியிருப்பவனுக்கு, இது ஒரு பெரிய வாய்ப்பு. ஜீயர் வைணவத்தைப்பற்றி பேசி அசத்தப்போகிறார் என்று ஆவலாய்ப்போனவனுக்கு என்ன வியப்பு? ஜீயர் ஐந்தே நிமிடங்கள்தான் பேசினார்:

    பேச்சின்சாராம்சம் இதோ:

    //இத்தமிழ்ச்சங்கத்தாருக்கு என் நன்றி. எனக்கு உங்களிடம் பேச மகிழ்ச்சி. தமிழ் உயர்ந்த மொழி. தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள். தமிழ் வேதம், எப்படி சமஸ்கிர்த வேதங்கள் இருக்கின்றனவோ, அப்படி இருக்கிறது. அதுதான் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள். நீங்களெல்லாரும் தமிழ் படிக்கணும். இப்போ ஆயிரம் பேர் உறுப்பினர். பத்தாயிரம், ஐம்பதாயிரம் என்று பெருக வேண்டும். அந்த 50000 வீட்டிலும் தமிழ் பேசப்படவேண்டும். ஏன் சொல்றேனா. அப்போதான் உங்களுக்கு ஆழ்வாரைப்படிக்கமுடியும். பெரிய திருமொழியில் முதற்பாசுரத்தை வரிக்குவரி சொல்லி, இதை உங்கள் குழந்தைகளுக்கு எப்படி புரியவைப்பீர்கள்? அதுக்குத்தான் தமிழ் வேணும். தமிழ் பேசனும்; தமிழ் படிக்கனும். அப்போதான் நம்ம வைணவமும் வளரும். ஆழ்வார்கள் தமிழுக்குச்செய்த கொடையைப்போல மற்றவர்கள் செய்யவில்லை. நான் நாயன்மார்களைக்குறை சொல்லல. ஆனால் ஆழ்வார்கள் பாசுரங்களை தமிழில் பாடி உங்களுக்குப் பெருமாளைக்கொண்டு வராரகள். எனவே தமிழ் படிங்க. மறக்காதீங்க. எல்லாருக்கும் என் ஆசிகள் ////

    அவர் ஒரு சொல்லைக்கூட பிராமண பாஷையில் பேசவில்லை. அத்தனையும் பொதுத்தமிழ். இலக்கியத்தமிழ் கூட இல்லை. அவ்வளவு எளிமை. சுருங்கச்சொல்லின், இவர்தான் இராமனுஜரின் உண்மைத்தொண்டர். கூட்டம் முடியும் தருவாயில் அனைவரும் மேடையேறி அவரிடம் ஆசி வாங்கினார்கள். பணக்காரன் ஏழை என்ற பாரபட்சம் இல்லை. ஒரு கூடையில் (நார்த் ஸ்டைலில்) பழங்கள் கட்டிக் கொடுக்க, அதை அவர் திறக்கச்சொல்லி ஆசிவழங்கும்போது ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். எல்லாருமே போட்டோ அவருடன் எடுத்துக்கொண்டார்கள். எனக்குத் தனியாகவே சான்ஸ் கிடைத்தது. ஜீயரை தரிசத்ததும் அஹோபில நரசிம்மரைத் தரிசத்ததும் ஒன்றே.

    இது சுயபுராணம் இல்லை. இதில் மாபெரும் உண்மை புதைந்து கிடைக்கிறது. ஒரு பேரறிஞர், உபய வேதாந்தி மட்டுமன்று: ஆங்கிலம், தெலுங்கு, என்று பலமொழி வித்தகர். வாணாளையே பெருமாளுக்கு என்று கொடுத்து வாழ்பவர். அது மட்டுமா? உலகிலேயே மாபெரும் வைணவ மடத்தை காத்துவருபவர். அது இராமானுஜரால் நிறுவப்பட்டது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நரசிம்மர் கோயிலில் வாழ்ந்து வருபவர். இவர் மட்டும் கருநாடகாவில் பிறந்து இருந்தால், இவரை 6 விகித பிராமணர்கள் மட்டுமே நெருங்க முடியும். ஆனால் அன்று அத்தமிழ்ச்சங்கத்து கடைநிலை ஊழியர்கள் (அவர்கள் சிலர் துப்புரவுத்தொழிலாளிகள்) போட்டோ எடுத்துக்கொண்டார்கள். ஆசிகள் வாங்கிக்கொண்டார்கள்.

    இதுவே இந்துமதமாக இன்று அழுத்தமாக இருக்கவேண்டும். இவரைப்போன்றவர்களே தேவை. இராகவேந்திரசுவாமி பிராமணர்களுக்கு மட்டுமே எனக் கருதும் தொண்டர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு இக்கட்டுரை உதவினால் நன்று.

  153. திரு.பால சுந்தரம் கிருஷ்ணா கருத்தை நான் அப்படியே ஆதரிக்கிறேன். இப்போது நான் எனது கருத்தை இங்கே கூற விரும்புகிறேன்.
    உனக்கும் எனக்கும் என அனைவருக்கும் உரியவன் முருகன்.
    அந்த முருகனுக்கும் எனக்கும் இடையில் எதற்கு ஒரு தரகன்?
    கோவிலை கட்டி முடித்திடுவார் கட்டிட மேஸ்திரி
    அதனால் ஏற்பட்ட தீட்டை கழிக்க வருவார் சாஸ்திரி
    ஐயர் கடவுளுக்கு பால் ஊற்றி செய்திடுவார் பாலாபிஷேகம்
    அதே பாணியில் குடிகாரனும் செய்திடுவான் சாராயபிஷேகம்
    நீங்கள் சொல்வீர்கள் “பின்னது ரொம்ப மோசம்”
    அதற்கு இதற்கும் அப்படி என்ன வித்தியாசம் ?
    பால் விலை உயர்ந்த நேரத்தில் பால் அபிஷேகம் தேவையா?
    சத்துள்ள பாலை வீணடிப்பது கடவுளுக்கு செய்யும் சேவையா?
    தட்டில் காசு போட்டால் வாரிவாரி கொடுப்பான் விபூதி
    இல்லையெனில் காணாதது போல இருப்பன் கபோதி
    தேங்காய்,பழம், என்று கடவுளுக்கு எதற்கு லஞ்சம்?
    இப்படி செலவு செய்தே பக்தன் வீட்டில் என்றும் பஞ்சம்.
    இந்துமதம் எப்போது மாறும்? என் கவலைகள் எப்படி தீரும்?

  154. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுவவே இல்லை. இதைத்தான நாடார், செட்டியார், தேவர் எல்லாம் பண்ணுகின்றார்கள். அது எல்லாம் உங்களுக்கு பரவாயீல்லை. அவர்கள் பண்னினால் அதை பேசவே கூடாது. பிராமினன் என்றால் அது பொது சொத்து. அவனை என்ன வேண்டுமானாலும் கேக்கலாம்? நல்ல நியாயம் .

  155. பாண்டியன் கேள்விக்கு பதில்:

    நாடார்கள், செட்டியார்கள், பிள்ளைகள், இன்னும் சில ஜாதிகள் – ஓரிடத்தில் அங்கு வாழும் தங்கள் ஜாதியினருக்காக அவர்களிடம் பெறப்பெற்ற நன்கொடைகளை வைத்து தனிக்கோயில்கள் கட்டி, தங்கள் ஜாதியினர் மட்டுமே வணங்க சாமியை வைக்கலாம்; தனிப்பந்தி போடலாம; பிறரை விரும்பினால் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டு: பிள்ளையார்ப்பட்டி பிள்ளையார் கோயில். நாட்டுக்கோட்டைச் செட்டியார்களால். ஆனால் பிறருக்கு அனுமதி உண்டு.

    இப்படி தனிஜாதிக்கோயில்கள் நானறிந்தவரை தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கென்று இல்லை. இருந்தால், தனிப்பந்தி போட்டால் கேள்வி எழுப்ப முடியாது. அதே நேரத்தில் ஒரு மஹானுக்கென்று ஒரு மடத்தை கட்டிவைத்துக்கொண்டு, பிராமணருக்கு மட்டும் தனிப்பந்தி போடும்போது, அம்மஹான் சமத்துவத்தைப்போதித்து வாழ்ந்து மறைந்தவரானால், அவரின் கோட்பாட்டிற்கு எதிராக நடக்கலாமா எனக்கேட்பது சரி. இராமானுஜரின் பேரில் ஒரு மடத்தைக்கட்டிக்கொண்டு, ‘பிராமணர்களுக்கு மட்டும்’ என்று போர்டு போட்டால் தவறு. சுட்டிக்காட்டுபவர்களை ‘பிராமணத்துவேஷம்’பண்ணுகிறார்கள் என்பது வசதியாகத் தங்கள் குற்றத்தை மறைக்கும் உபாயம்.

    இங்கே இராகவேந்திர சுவாமியின் தொண்டர்கள் மந்த்ராலாயத்தில் மடத்தையும் கோயிலையும் கட்டிக்கொண்டு, பிராமணர்களுக்கு முதல்மரியாதையும் தனிப்பந்தியும் போட்டால், அவரின் கொள்கைக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டப்படுவது சரியே. 6 விகிதம் பிராமணர்களுக்கு மட்டுமே அவர்; 94 விகத மற்ற மக்களுக்கில்லையே இது நியாயமா எனபது பிராமணத்துவேஷம் ஆகாது. இராகவேந்திர சுவாமி மக்களிடையே பாரபட்சம் காட்டவில்லை. அரிசனங்களை அணைத்தார் என்பது ஹரன் பிரசன்னா சொல்லியே எனக்கு தெரியும். உண்மையானால், மந்த்ராலயத்தில் நடப்பது அவருக்கு எதிரானது. மத்துவர் தமிழ்நாட்டு மக்களிடையே பரவாததற்கு அவர் தொண்டர்கள் பிராமணர்களாக மட்டுமே இருப்பதனால். இராமானுஜரின் வைணவம் அவர் காலத்தில் விரைந்து எல்லா மக்களிடம் பரவிய காரணம் அவரின் சமத்துவம் ஈடுபாடு அதற்காக அவர் மேற்கொண்ட துணிச்சலான செயல்களுமே. இக்காலத்தில் அவ்வைணவம் தொய்யக் காரணம் அவரின் கொள்கைகளைப் புறந்தள்ளியதனால். ஆக, செயலுக்குத்தக்க விளைவுகள்; மாற்றமுடியாத இயற்கைக்கொள்கை மதங்களுக்கும் பொருந்தும்.

    மேலும், இப்படிப்பட்ட “பிறமக்கட்துவேஷம்” எப்படி இராகவேந்திரசுவாமியை மற்ற மக்களிடையே பரப்பும்? என்ற கேள்வியும் சரியே. இராகவேந்திர சுவாமிகளின் மஹிமைகளைப்பற்றிக்கேட்டு அவரின் தெயவத்தன்மை பற்றி அறிந்து அவர் கோயிலுக்கு ஆர்வத்துடன் தமிழர்கள் போய், பின்னர் அங்கு அவர்கள் பார்க்கும் காட்சிகளினால், அவ்வார்வத்தை இழப்பது இராகவேந்திர சுவாமி வணக்கம் தமிழகத்தில் பரவாமல் போயிற்று. இரஜினியின் படமும் அவ்வளவு தாக்கத்தை உண்டாக்க முடியாது.

    இந்துமதம் மக்களிடையே பல்கிப்பரவி தழைத்தோங்க வேண்டுமானால் இப்படிப்பட்ட செயல்கள் அதற்கு இடையூறே எனபதும் சரியே.

  156. சார்! நீங்க என்னதான் விவாதம் பண்ணினலும் ஒரு முடிவை எட்ட இயலாது. மனிதக் கரங்கள் புகுந்து விட்ட உங்கள் வேதத்தை வைத்து தெளிவை அடையவும் முடியாது.

    மனிதக் கரங்கள் புகாத குர்ஆனை ஆழ்ந்து சிந்தியுங்கள். நம்மைப் படைத்த கடவுளை அங்கு காண்பீர்கள். கசப்பாக இருந்தாலும் உண்மை அதுதான்.

  157. “HONEST MAN”
    ஹிந்து மதத்தில் ஒரு ஒரு பழக்கத்திற்கும் பெரிய தர்க்க ரீதியாக விழக்கம் உள்ளது. இதில் நான் பிராமனனை அவன் எழுதிய புக் ரெஃப் பண்ண சொன்னால் எகிற குதிக்க பல பேர் வருவார்கள். ஆகையால் கண்ணதாசன், வாரியார் போன்றவர்கள் புத்தகங்களை படித்து அதன்மூலம் நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம்.

  158. சுவனப் பிரியரே

    //
    மனிதக் கரங்கள் புகாத குர்ஆனை ஆழ்ந்து சிந்தியுங்கள். நம்மைப் படைத்த கடவுளை அங்கு காண்பீர்கள். கசப்பாக இருந்தாலும் உண்மை அதுதான்.
    //
    சைக்கிள் கேப்புல பிரசாரம்.

    குரானை அல்லா தான் சொன்னார் என்பதை விட பேத்தல் வேறு எதுவும் இருக்க முடியாது. முழுக்க முழுக்க முரண்பாடுகள், அச்சு பிச்சு பேத்தல்கள், மிரட்டல்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்ணடிமை வாதம், மனிதர்களை வெறியர்கலாக்கும் பாடங்கள் நிறைந்த ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த ஒருவரால் தன சுய லாபத்திர்க்ககவும், காமத்தை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்களை அடிமை படுத்தவும் உளறி கொட்டப்பட்ட பல வாக்கியங்களை அடங்கின நூல் தான் குரான் என்பது.

    அலிப் லம் லிம் என்றால் என்ன என்று மட்டும் சொல்லுங்கள்.
    அல்லா மொசெச்சை மின்னலால் எப்படி அடித்து தாக்கினார் அப்படியும் மோசேஸ் எப்படி மூச்ச பிடிச்சிகுனு நின்னுகினு இருந்தார்
    சல்லவர்கலுக்கும் அவரது பொண்டாட்டிமார்களுக்கும் ஊடே இருக்கும் இரவு நேரத்து பிரச்சனையில் அல்லா மூக்கை நோழைத்து எதற்கு குர்ஆனில் வசனம் வைக்க வேணும். இதனால மானிடனுக்கு என்ன லாபம்
    புருஷன் இறந்துவிட்டால் எத்தனை மாதங்களுக்கு அவனது மனைவி மார்கள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை குர்ஆனில் எழுதி என்னத்தை அல்லா சாதித்துள்ளார்
    காபிர்களை கொல்லு கொள்ளையடி அதற்க்கு பதிலா உனக்கு எழுவத்தி இரண்டு உருப்புடிகளையும் சாராயமும் தருகிறேன் என்று சொல்லுபவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும். நம்ம அரசியல் கட்சிகள் கூட இன்னும் இவ்வோளோ கேவலாமா போகல.

    ஒருவன் முட்டாளாக மூர்கணாக க்ரூரணாக அயோக்கியனாக மாற வேண்டும் என்றால் ஒரே எளிய வழி குரானை படித்து புரிந்து கொண்டு அதை கடைபிடிப்பதே ஆகும்.

  159. ஒருவன் முட்டாளாக மூர்கணாக க்ரூரணாக அயோக்கியனாக மாற வேண்டும் என்றால் ஒரே எளிய வழி குரானை படித்து புரிந்து கொண்டு அதை கடைபிடிப்பதே ஆகும்.
    //
    very easy. read suvanapriyan comments. that’s enough!!!!

  160. திரு சாரங்க்!

    //சல்லவர்கலுக்கும் அவரது பொண்டாட்டிமார்களுக்கும் ஊடே இருக்கும் இரவு நேரத்து பிரச்சனையில் அல்லா மூக்கை நோழைத்து எதற்கு குர்ஆனில் வசனம் வைக்க வேணும். இதனால மானிடனுக்கு என்ன லாபம்
    புருஷன் இறந்துவிட்டால் எத்தனை மாதங்களுக்கு அவனது மனைவி மார்கள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை குர்ஆனில் எழுதி என்னத்தை அல்லா சாதித்துள்ளார்//

    இதனால் சாதித்தது பல இருந்தாலும் எனக்கு தெரிந்த ஒன்றிரண்டை சொல்கிறேன். விவாகரத்து பண்ணிய மறு வாரமே ஒரு பெண் மறுமணம் புரிந்தால் அந்த நேரத்தில் அந்த பெண்ணுக்கு ஏதும் குழந்தை வயிற்றில் தங்கியிருந்தால் அதற்கு யார் சார் பொறுப்பு? கணவன்மார்கள் இருவருமே எனது குழந்தை இல்லை என்று வாதிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் என்னாவது? அவன் அனாதையாக திரிய வேண்டும் என்று சொல்கிறீர்களா? அந்த குழந்தைக்கு சேர வேண்டிய வாரிசு சொத்துக்களும் கிடைக்காமல்லவா போய் விடும்? தந்தை பெயர் தெரியாமல் அனாதையாக தெரிவில் சுற்றித் திரியச் சொல்கிறீர்களா?

    முக்காலத்தையும் உணர்ந்த நம்மைப்படைத்த இறைவனுக்கு பிற்காலத்தில் இது போன்ற சிக்கல்கள் எல்லாம் வரக் கூடாது என்பதற்காகத்தான் நமக்கான சட்டங்களை வகுத்துத் தந்துள்ளான். இந்த சட்டங்களை உலக முஸ்லிம்கள் சரியாக கடைபிடிப்பதால்தான் தகப்பன் பெயர் தெரியாத குழந்தைகளை இஸ்லாமிய நாடுகளில்நம்மால் பார்க்க முடிவதில்லை.

    இந்த சட்டங்களை உதாசீனப்படுத்திய ஐரோப்பிய நாடுகளில் தாய் தகப்பன் யாரென்றே தெரியாத பெரும் இளைஞர்கள் கூட்டம் மன நோயாளிகளாக சுற்றி வருவதை நாம் தினமும் பார்க்கிறோம். சமூகத்தில் வெறுப்படைந்து கல்லூரிக்குள் புகுந்து சக மாணவர்களை சகட்டு மேனிக்கு துப்பாக்கியால் போட்டு தள்ளுவதும் இறை சட்டங்களை அந்த மாணவர்கள் தூரமாக்கியதால்தான்.

    மேலும் இறைத் தூதர்களின் குடும்ப பிரச்னைகள் தாம்பத்திய பிரச்னைகள் பலவற்றில் மனித குலத்துக்கு பல சட்டங்களும் தீர்வுகளும் இன்று வரை கிடைத்து வருகின்றன. இதனால் பலனடைந்த கோடிக்கணக்கான இஸ்லாமியர்களைக் கேட்டுப் பாருங்கள் அதன் பலன் உங்களுக்குத் தெரிய வரும்.

    நான் தற்போது கம்பெனி வேலையாக தபூக்கில் உள்ளேன். ரியாத் வந்தவுடன் இன்னும் விரிவாக விளக்க முயற்சிக்கிறேன் இறைவன் நாடினால்.

  161. சுவனப் பிரியரே

    பாத்தீங்களா உங்க அல்லாவின் நிலைமையை கட்டபஞ்சாயத்துகார நிலைமை தான் இது.

    இந்த மாதிரி ஒரு கேணத்தனமான வசனங்கள் இல்லாத எவ்வளவோ மதங்கள் உள்ளன அங்கெல்லாம் அல்லா எதிர்பார்த்தபடி நடக்கிறதா. புருஷன் செத்த உடனே பெண்களுக்கு வேற வேலை இல்லையா. அல்லா என்ன சொல்ல வருகிறார் என்றால். அரபு ஆண்கள் ரொம்ப கொடூரமானவர்கள். அரபு பெண்கள் கெட்டவர்கள் அதனால் தான் நான் ஆணை இடுகிறேன் என்றல்லவா

    ஐரோப்பாவில் தான் உதாசீனப் படுத்தேனார்கள் ஆசியாவிலும் கூடவா. ஹிந்து மதத்தின் தாக்கம் உள்ள இடங்களை பாருங்கள் அங்கு யாரும் ஆணை இடாமலேயே மக்கள் நல்ல வழியை கடை பிடிக்கிறார்கள். ஒத்துக் கொள்ளுங்கள் இஸ்லாம் காட்டு மிராண்டி அரபியர்களுக்கு மட்டுமே பயன்படக் கூடியது என்று.
    ஆப்ரிக்காவில் இப்படியா நடக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலும் மதசாற்பற்றவர்கலின் செயல்களாலேயே குடும்ப வாழ்வில் இந்த நிலைமை. இயேசுவை கும்பிடும் எப்வ்வளவோ பேர் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்.
    அல்லா பெயரில் முஹம்மது தெளித்து விட்ட உளறல்களை நியாயப் படுத்தாதீர்கள்.

    இது சரி நபிகளுக்கு அவரவு பொண்டாட்டிகளுக்கும் நடக்கும் பிரச்சனையில் அல்லா எதுக்கு மூக்க நோழைக்கிறார்.

    பெண்களை ஒன்றிரண்டு நாளுக்கு மட்டும் ஆசைக்காக கன்னலம் கட்டிக்கிட்டு விவாஹரத்து செய்யம் ஆண்களக்கு ஒரு சட்டமும் போடலையே. அந்த பெண் கர்ப்பம் தரித்தால் அவள் கதி ஐயோ பாவம். இந்த பையனும் தந்தை பெயர் தெரியாத அநாதை தானே. இந்த பையனுக்கு அப்பாவின் சொத்து வருமா, ஐயோ பாவம். ரொம்ப கஷ்டம். இன்றைக்கு ஹைதரபாத்தில் ஷேக்குகள் அடிக்கும் கூத்தால் பல பெண்கள் இப்படி தான் அல்லல் படுகிறார்கள்.

    அதென்ன புருஷன் செத்த பின் அந்தப்பெண் ஆறு மாசம் கழிச்சி உறவு வைத்து கொள்ளலாம். கர்ப்பம் உள்ளது என்று தெரிய ஆறுமாசமா ஆகும். கர்ப்பம் இருக்கு என்று தெரிந்தும் ஆறு மாசம் கழித்து உறவு கொள்ளலாமா.
    அல்லாவின் ஒரே ஒரு வசனத்தில் மட்டுமே இப்படி எவ்வளவு கோளாறுகள் முரண்பாடுகள் உள்ளன பார்த்தீர்களா.

    ஒரு கேள்விக்கு மட்டும் சப்பையான ஒரு பதிலை தந்து விட்டு ஓடுவது ஏன்,

  162. சுவனப்பிரியரே

    நபி வழிப்படி வாழும் உலகம், பாத்தீங்களா இன்னைக்கு அம்பத்தி ரெண்டு பேர் பாகிஸ்தான்ல அல்லாஹு அக்பர் நூறு பேரு ஆஸ்பத்ரில.

    எத்தனை குழந்தைகள் தாய் தகப்பன் இன்றி அனாதையாய் அவதிப்படும் பாருங்கள், உங்கள் அல்லா என்னடான்னா பொம்பள எப்போ சேரனும் சேரக் கூடாதுன்னு பெனாத்திகிட்டு இருக்கார். அதுக்கு வாய்கூசாம மானமே இல்லாம சப்பக்கட்டு வேறு கட்டும் கூட்டம். பிள்ளை அநாதை ஆகிருமாம். இங்கே எத்தனை பிள்ளைகள் கொள்ளப்படுகின்றன, உடல் உறுப்புக்கள் இன்றி துடிக்கின்றன. நினைக்கவே நெஞ்சை உளுக்குது. உங்களுக்கெல்லாம் வலிக்கலையா. எப்படி வலிக்கும், வலிச்சா சுவனம் கிடைக்காதே , சுவனம் இல்லாங்காட்டி எழுவத்தி ரெண்டு எப்படி, டாஸ்மாக் நதில நீந்துவது எப்படி

  163. நம்ப வில்லை என்றால் ஏன் எழுதவேண்டும்? படித்துவிட்டால் ஏளனம் செய்யலாம் என்ற எண்ணமோ?
    இன்றளவும் ஸ்ரீ ராயர் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திவருகிறார்.
    புரிந்து கொண்டு எழுதுங்கள் ஹரன். ஆணவம் வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *