மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 1

முன்னுரை:

“All muslims are not terrorists. But, unfortunately most of the terrorists are muslims.”

என்ற வாக்கியம் பிரசித்தமானது.

george_w_bush2001ல் அமேரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் அன்றைய அதிபர் புஷ் அவர்கள் சில முஸ்லீம் தலைவர்களுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் அமேரிக்காவின் எதிரிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் எனவும் எல்லா முஸ்லீம்களும் இல்லை என்றும் தெளிவு படுத்தினார். “Islam is a religion of Peace” என்றும் கூறினார். அங்கிருந்த முஸ்லீம் தலைவர் ஒருவர் தீவிரவாதிகள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டதால்தான் அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் அத்தாக்குதலை அல்லாஹ் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் கூறினார்.

2008 நவம்பரில் இந்தியாவில் மும்பாய் நகரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகும் இந்திய முஸ்லீம் தலைவர்கள் கிட்டத்தட்ட இதே தொனியில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கு பிறகும் முஸ்லீம் தலைவர்கள் மற்றும் பெரும்பாலான முஸ்லீம் மதகுருமார்கள் அதை எதிர்ப்பது வாடிக்கையாகி விட்டது.

120 கோடி மக்கள் அனுசரிக்கும் ஒரு மதம் மிகவும் பழமையான கொள்கைகளுடனும், சீர்திருத்தங்களை அனுமதிக்காமலும் அனுசரிக்கப் படுவதால் உலகெங்கிலும் மத சச்சரவுகள் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றிருக்கிறது.

இதை ஆராயும், முஸ்லீம்கள் அல்லாத பலரும் சீர்திருத்தங்களை அறிவித்த வண்ணம் உள்ளனர்.

நான் இதிலிருந்து வேறுபட்டு முஸ்லீம்கள் மட்டுமே தங்களுக்குள்ளேயே இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். மேலும் மிதவாத முஸ்லீம்களால் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும் என்றும் இச்சீர்திருத்தங்களை இப்பொழுதே அவர்கள் ஆரம்பிக்கா விட்டால் சமூகங்கள் உச்சகட்ட அழிவுக்கு செல்லும் என்றும் நம்புகிறேன்.

அமேரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த பகுதிக்கு வெகு அருகாமையில் மசூதி ஒன்றை கட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அமேரிக்கர்களின் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

USREPORT-US-USA-NEWYORK-MOSQUE

முஸ்லீம்களின் பல பழமைவாத கொள்கைகளாலும், குறிப்பாக இந்த புதிய மசூதியின் கட்டமைப்பினாலும் ஏற்படும் பாதகங்கள் மற்றும் இக்கொள்கைகளை இன்றைய யதார்த்தத்தில் சீரமைக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் அலசுவது இக்கட்டுரையின் நோக்கம்.

முக்கிய குறிப்பு:

நான் முஸ்லீம்கள் அனைவரையும் எதிரிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ நினைக்கவில்லை. சமீபத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் மழையினால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பது நமக்கு தெரியும். பாதிக்கப்பட்ட ஒருவரையும் இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஹிந்துவையும் பேட்டி எடுத்தால் இருவரும் ஒரே தொனியில் பேசுவார்கள். மொத்தத்தில் மக்களின் தேவை மிக எளிமையானது. நாகரீகமாக வாழ உரிமை, திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம், மனைவி மக்களுடன் வாழ சமூக அங்கீகாரம், தன்னை விட தன் குழந்தைகளை நல்ல நிலையில் வாழ வைக்க நினைக்கும் பெற்றோர், குற்ற செயல்களை செய்வோரின் மீது சட்டப்படி நடவடிக்கை, மனம் தொய்ந்து போகும்போது தேவைப்படும் இசை மற்றும் பிற கேளிக்கைகள், மன அமைதி பெற மதம் இவையெல்லாம் உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களின் தேவைகள். முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, ஹிந்துக்களாக இருந்தாலும் சரி, தேவைகள் ஒன்றுதான்.

முஸ்லீம்களுக்கு உருவாகும் பிரச்சினைகள் இந்த தேவைகளை கருத்தில் கொள்ளாது வாழ்வதால் உருவாகுபவை. அவர்களின் சமூக பிரச்சினைகள் மற்ற மதத்தினரையும் பாதிப்பதால் என்னைப் போன்றவர்களும் பேச வேண்டிய நிலை.

பகுதி-I

இரட்டை கோபுர தாக்குதல் பகுதிக்கு அருகில் மசூதி-சர்ச்சை:ayaan-hirsi-ali

அமேரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில்  13 மாடி இஸ்லாமிய கலாச்சார நிலையம் மற்றும் மசூதி கட்டப்படப்போவது குறித்த சர்ச்சைகள் அமேரிக்காவில் சூடு பிடித்துள்ளது. இவற்றை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் பற்றிய வேறுபாடுகளை கொஞ்சம் பார்க்கலாம்.

புதிய மசூதியை எதிர்ப்பவர்கள்:

(1) அலி சீனா, வாஃபா சுல்தான், அயான் ஹிர்ஸி அலி போன்றவர்கள்:

இவர்கள் முஸ்லீம்களாக பிறந்து அவர்களின் நாடுகளில் (ஈரான், சோமாலியா போன்றவை) கொடுமை படுத்தப் பட்டவர்கள். மேற்கத்திய நாடுகளுக்கு வந்து குடியேறிய பின் தங்கள் நாட்டை மட்டுமல்லாது தங்களின் தாய் மதமாகிய இஸ்லாத்தின் மீதும் மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள். இணைய தளம் மூலமாகவும் மற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் முஸ்லீம்களை இஸ்லாத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறோம் என்று கூறுபவர்கள். இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் உள்ளார்கள். இஸ்லாத்தை முழுவதுமாக எதிர்ப்பதால் இவர்களுக்கு சாதாரண முஸ்லீம்களிடையே ஆதரவில்லை. இவர்கள் இந்த புதிய மசூதியை மட்டுமல்லாது அனைத்து இஸ்லாமிய விளக்கங்கள் மற்றும் குறியீடுகளை எதிர்ப்பவர்கள்.
zuhdi-jasser
(2) டாக்டர் ஜேஸ்ஸர் (Dr. Zuhdi Jasser) போன்றவர்கள்:

முஸ்லீம்களாகவே இருந்து கொண்டு தங்கள் மதப்புத்தகங்களின் விளக்கங்களை காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொண்டு முஸ்லீம்கள் வாழ வேண்டும், வாழ முடியும் என்று வாதாடுபவர்கள். இவர்களை போன்றவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் முஸ்லீம் சமூகத்தில் உண்டு. ஆனாலும் மதகுருமார்களின் கருத்திலிருந்து வேறுபடுவதால் இவர்களுக்கும் சாதாரண முஸ்லீம்களிடம் பெரிய ஆதரவு இல்லை. 9/11 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் அனுதாபத்திற்காகவும், மனிதர்களின் அடிப்படை உணர்திறனை முன்வைத்தும் (Sensitivity) இந்த புதிய மசூதி கட்டப்படக்கூடாது என்று கூறுபவர்கள்.

(3) கிறிஸ்தவ, யூத கடும்போக்காளர்கள்:

நாம் ஊகிக்கிறபடியே இந்த புதிய மசூதி முஸ்லீம்களின் ஜிஹாத்தின் ஒருவகை என்று கூறுபவர்கள். பிரச்சினை மசூதி கட்டப்படுவதை குறித்து அல்ல. எந்த இடத்தில் கட்டப்படுகிறது என்பதுதான்-என்பது இவர்கள் வாதம். இதற்கு இவர்கள் வரலாற்றிலிருந்து சில ஆதாரங்களை முன் வைக்கிறார்கள். முஸ்லீம்கள் எந்த நாட்டை போரில் வென்றாலும் அந்த நாட்டின் முக்கிய கலாச்சார குறியீட்டை அழித்து அதன் மேல் மசூதி ஒன்றை கட்டியிருக்கிறார்கள். உதாரணமாக ஜெருசெலத்தில் அல்-அக்ஸா மசூதி, இந்தியாவில் முக்கிய கோயில்களை அழித்து அதன்மேல் மசூதிகள் கட்டியது போன்றவை. ஆகவே, இது வெறும் மசூதி அல்ல. இது ஒரு வெற்றி அறைகூவல் என்பது இவர்கள் வாதம்.
pameela-geller
இந்த மசூதிக்கான எதிர்ப்பு முதன்முதலில் ஒரு இணைய தள  Blogல் உருவானது. பமீளா கெல்லர் (Pameela Geller) என்பவர்தான் மே மாதத்தில் இந்த மசூதி கட்டப்பட்டால் அது மேற்கத்திய கலாச்சாரத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் என்று எழுதியவர். இந்த பெண்மணி ஆரம்பித்து வைத்த இந்த போராட்டம் அமேரிக்காவின் பல மட்டங்களில் வெடித்திருக்கிறது.

(4)அரசியல்வாதிகள்:

பெரும்பான்மையான குடியரசு கட்சி அரசியல்வாதிகளும், ஜனநாயக கட்சியிலேயே சிலரும் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை எதிர்க்கிறார்கள்.

புதிய மசூதியை ஆதரிப்பவர்கள்:

(1) பெரும்பாலான முஸ்லீம்கள்:

நாம் ஊகிக்கிறபடியே பெரும்பாலான முஸ்லீம்கள் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை ஆதரிக்கிறார்கள். இந்த கட்டிடத்தில் மசூதி மட்டுமல்லாது “மதங்களுக்கிடையேயான ஒற்றுமை” வளர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறுகிறார்கள்.

(2) அரசியல்வாதிகள்:

ஜனநாயக கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை ஆதரிக்கிறார்கள். குறிப்பாக அமேரிக்க அதிபர் ஒபாமா இதை ஆதரிக்கிறார். அவரின் ஆதரவு பேச்சு மேலும் பல ஆட்சேபனைகளை எழுப்பியது. அடுத்த நாளே தான் அந்த மசூதி கட்டப்பட முடியுமா/முடியாதா என்பதை பற்றித்தான் பேசியதாகவும் அந்த இடத்தில் கட்டப்படுவது சரியா/தவறா என்பதை பற்றி இல்லை என்றும் மறு விளக்கம் அளித்தார்.

(3) பொது ஜனத்திலேயே சிலர்:

முஸ்லீம் தீவிரவாதிகள் சிலரால் தாக்கப்பட்டதற்காக எல்லா முஸ்லீம்களின் மேலும் பழி போடுவது சரியல்ல என்றும் அமேரிக்க அரசியல் சட்டத்தின் அடிப்படையில் “ஒவ்வொரு மனிதனின் மத உரிமை”யின் அடிப்படையிலும் எந்த இடத்திலும் எந்த மதத்தினரும் தங்கள் வழிபாட்டு கட்டிடத்தை கட்டிக்கொள்ள உரிமை உண்டு என்றும் கூறுகிறார்கள்.

இந்த புதிய மசூதிக்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்களை பார்த்தோம். இங்கு இன்னுமொரு முக்கிய பிரச்சினையையும் கவனிக்க வேண்டும்.

பெயர் சர்ச்சை: (Cordoba Mosque)

cordoba-mosqueஇந்த புதிய மசூதிக்கு “கார்டோபா மசூதி” என்று நாமகரணம் செய்யப் பட்டுள்ளது. “கார்டோபா” என்பதன் பெயரின் வரலாற்றை பார்த்தாக வேண்டும். கார்டோபா என்னும் பழமையான நகரம் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. இங்கு கி.பி.600களில் ஒரு கிறிஸ்தவ சர்ச் கட்டப்பட்டது. ஆனால் கி.பி.700களில் முஸ்லீம் மன்னர்களால் ஸ்பெயினின் இந்த பகுதி பிடிக்கப் பட்டவுடன் இந்த சர்ச், மசூதியாக மாற்றப்பட்டது. மீண்டும் 1200களில் கிறிஸ்தவ அரசரால் இந்த பிராந்தியம் பிடிக்கப்பட்டவுடன் மீண்டும் சர்ச்சாக மாற்றப்பட்டது. இந்த பெயரின் முக்கியத்துவத்தை வாத பிரதிவாதங்களுடன் நோக்கலாம்.

புதிய மசூதியை ஆதரிப்பவர்களின் வாதம்:

ஸ்பெயினின் இந்த கார்டோபா பகுதி கி.பி. 700களில் முஸ்லீம் அரசர்களின் கைக்கு வந்தும் கூட, கிறிஸ்தவ மற்றும் யூதர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுடன் வாழ அனுமதி அளிக்க பட்டது. இன்றைய மதச்சார்பற்ற கொள்கைகளை அன்றே முஸ்லீம் மன்னர்கள் அந்த பிராந்தியத்தில் நடத்தி காட்டினார்கள். இங்கு இன்னொரு விஷயத்தையும் கூறியாக வேண்டும். அமேரிக்க அதிபர் ஒபாமா எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அதில் முஸ்லீம்கள் மதச்சார்பற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று புகழும்போது குறிப்பாக இந்த கார்டோபா பிராந்திய அரசாங்கத்தை சிலாகித்து பேசினார்.

கிறிஸ்தவ, யூத கடும்போக்காளர்களின் பிரதிவாதம்:

– மதச்சார்பற்ற அரசாங்கம் என்றால் ஏன் அங்கிருந்த சர்ச் அகற்றப்பட்டது?

ஒரு வெற்றி அறைகூவலுக்காகவும், மற்ற மதத்தினர் முஸ்லீம்களுக்கு அடங்கியவர்கள் என்று வெளிபடுத்துவதற்காகவும்தானே சர்ச்சின் இடத்தில் மசூதி கட்டப்பட்டது.

islamic_jihad1– மேலும் கி.பி.1200களில் முஸ்லீம் மன்னர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டவுடன் அந்த பிராந்தியத்திலிருந்த அத்தனை கிறிஸ்தவ மற்றும் யூதர்களை கொன்று குவித்து விட்டுத்தான் தோற்று ஓடினார்கள். தங்களுடைய அரசாங்கம் இருக்கும்வரை மதச்சார்பற்றவர்கள் போல் நடித்தவர்கள் தாங்கள் தோற்கும் நிலையில் மற்ற மதத்தினரை, அப்பாவிகளை கொன்று போட்டது எப்படி மதச்சார்பற்ற அரசாக வரலாற்றில் பார்க்கப்பட முடியும்?

மேற்கூறிய அனைத்தும் சரித்திரபூர்வமாக ஆவணப்படுத்த பட்டவை. மேலும் அதிபர் ஒபாமா பேசிய பேச்சை பற்றி பி.பி.சி வானொலியில் ஒரு ஆவணத்தொகுப்பை (Documentary) ஒலிபரப்பினார்கள். அதில் பேசிய வரலாற்று அறிஞர்கள் ஒபாமா ஸ்பெயினின் கார்டோபா இஸ்லாமிய அரசாங்கத்தை “மதச்சார்பற்ற அரசாங்கம்” என்று கூறியது தவறுதான் என்றார்கள்.

சரி, இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். அமேரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 70%க்கும் அதிகமானோர் இந்த புதிய மசூதி கட்டப்பட அனுமதிக்கக் கூடாது என்று கருதுகிறார்கள்.

இவ்வளவு பெரிய அளவில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் வெளிப்படுத்தும் இந்த புதிய மசூதிக்கான எதிர்ப்பை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இந்நிலை தீடிரென்று ஏற்பட்டதில்லை. பல வருடங்களாக அமேரிக்காவில் தொடரும் உள்நாட்டு தீவிரவாதம் போன்ற காரணங்களால்தான் அமேரிக்கர்களின் இந்த மனநிலை மாற்றம். அமேரிக்காவில் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலையை அந்நாட்டு மக்களில் பலர் அடைந்திருப்பது தெளிவாகவே தெரிகிறது. குறிப்பாக முஸ்லீம்களை எதிர்க்கும் அரசியல்வாதிகளுக்கு அந்நாடுகளில் மக்கள் ஆதரவு அதிகரித்து இருப்பதையும் இங்கு நோக்கலாம்.

155889448மேலும் மேற்குலகில் குறிப்பாக அமேரிக்காவில் இஸ்லாத்தின் மீதான விமர்சனம் வரம்பை மீறி சென்றிருக்கிறது. பேச்சு சுதந்திரமும், எழுத்து சுதந்திரமும் பரிபூர்ணமாக அமேரிக்கர்களுக்கு இருப்பதால் அதை தடுக்க வழியில்லை. ஏதோ ஒரிருவர் இணைய தளங்களில் எழுதுகிறார்கள் என்றால் அதை உதாசீனம் செய்து விடலாம். முஸ்லீம் அல்லாத அமேரிக்கர்களில் 18% பேர் அதிபர் ஒபாமா ஒரு முஸ்லீம் என்று நம்புகிறார்கள். அவர் அமேரிக்காவில் பிறக்கவில்லை என்றும் நம்புகிறார்கள்.

அதிபர் ஒபாமாவின் கொள்கைகளைப்பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது என்றாலும், பொய்களை பெரும்பான்மையான அமேரிக்கர்கள் நம்புவது விவரம் அறிந்தவர்களிடம் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கு இன்னொரு விஷயத்தை கூறியாக வேண்டும். கிறிஸ்தவ மற்றும் யூத கடும்போக்காளர்கள் எவ்வாறு வரம்பு மீறி இஸ்லாத்தை விமர்சனம் செய்கிறார்களோ அதைப்போன்றே முஸ்லீம் கடும்போக்காளர்களும் அமேரிக்கர்களுக்கு எதிராகவும், ஜிஹாத்திற்கு ஆதரவாகவும் வரம்பு மீறி எழுதுகிறார்கள்.

உணர்ச்சி கொந்தளிப்புடன் இருக்கும் அமேரிக்க சமூகத்தின் இன்றைய நிலையில் அறிவுபூர்வமாக பிரச்சினையை கையாள்வது கடினம்தான்.

எனினும், இந்த மசூதி சர்ச்சையை விடுத்து, இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களினால் மற்ற மதத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடங்களை விரிவாக பார்க்கலாம்.

(தொடரும்)

37 Replies to “மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 1”

  1. இந்த நிகழ்வைப் பொறுத்தவரை அங்கே மசூதி கட்ட முனைவது நிச்சயம் நல்லதல்ல என்றே தோன்றுகிறது. இந்த மசூதி கட்ட எங்கிருந்து பணம் வருகிறது என்பதும் ஒரு மர்மமாகவே இருக்கிறது.

  2. மதிப்பிற்குரிய பாலாஜிஅவர்களே, அலி சீனா, வாஃபா சுல்தான், அயான் ஹிர்ஸி அலி போன்றவர்கள் இஸ்லாத்தை எதிர்ப்பதற்கான காரணம், நேரடியாக தனிப்பட்ட முறையில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள். இஸ்லாத்தில் உள்ள, காலத்திற்கு ஒவ்வாத விஷயங்களை சுட்டிக்காட்டுவதிலும், உலகிலுள்ள மற்ற நம்பிக்கைகளுடயவர்களுடன் சமாதான சகவாழ்வு வாழ்வதற்கு தேவையான மனநிலையை இஸ்லாமியர்களுக்கு உணர்த்திடவும் பல்வேறு முயற்சிகள் இவர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்த முட்டாள் தனமான முடிவை எடுத்த ஒபாமாவிற்கு, நிதானத்துடன் நாட்டை வழிநடத்தும் திறன் கெட்டுப்போய் விட்டதாகவே பெரும்பான்மையான அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

  3. சோமநாதபுரம், மதுரா, அயோத்தி என பாரதத்தில் உள்ள பட்டியல் போலவே உலகெங்கும் “கார்டோபா” போன்ற நிகழ்வுகள் உள்ளன என்பதை நாம் நமது பாரத மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

    இந்த வரிசையில் இப்போது நியூயார்க்கும் சேருவது வருந்தத் தக்கதே. உலக அமைதிக்கு இது பெரும் சோதனைக்காலம்.

  4. பெரும்பாலான அமைதி விரும்பும் முஸ்லிம்கள், தீவிரவாதிகளால் தங்கள் மதம் அவமானபடுத்த படுவதை எண்ணி மிகவும் கவலை படுகிறார்கள். ஆனால் தீவிரவாதத்தை தைரியமாக எதிர்த்து நிற்க தயங்குகிறார்கள். குண்டு வடிப்புகளை தங்கள் மதத்தினர் செய்து இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறார்கள். சமீப காலமாக Who Killed Karkare என்ற புத்தகம் அநேகமாக அணைத்து முஸ்லிம்களாலும் படிக்க பட்டு விட்டது. இந்த புத்தகத்தில் 26 /11 மும்பை நிகழ்வுகள் sangh பரிவார் அமைப்புகளால் நடத்த பெற்றது என்று ஒருவர் எழுதி இருக்கிறார். இது உண்மையாக இருக்க கூடாதா என்று அணைத்து முஸ்லிம்களும் ஏங்குகிறார்கள், நிறைய பேர் அந்த கதையை நம்பவும் செய்கின்றனர். இந்த புத்தகம் எழுதிய ஆசிரியர், தனக்கு தெரிந்த விவரங்களை வைத்து கொண்டு ஏன் கோர்ட்டில் கேஸ் போடவில்லை என்ற வினாவை எழுப்ப முயல்வதில்லை. நம்ப வீட்டில் ஒரு திருடன் ஒளிந்து இருந்தது தெரிந்தவுடன், அவனை வைத்து பராமரிப்பது போன்ற தவற்றை மிதவாதிகளே செய்கின்றனர். தாடி வைத்து குல்லா போட்ட அனைவரும் மிக சிறந்தவர்கள் நம்ம ஆளு, அவன் தப்பு செய்ய மாட்டான் என்று நினைத்து கொள்கின்றனர்.

  5. காவி கட்டி கொண்டு துறவறத்தை அவமான படுத்திய நித்தியானந்தர், சட்டத்தின் படி குற்றம் அற்றவரே. அனால், தர்மத்திலிருந்து வழுவியாதினால் அவரை அநேகமாக அணைத்து ஹிந்துக்களும் கடிந்து தான் கொண்டனர். இதை போன்ற நினைப்பு மிதவாத அமைதி விரும்பும் முஸ்லிம்களுக்கும் வரவேண்டும். அவர்கள் தங்கள் மதத்தின் பேரில், அதில் உள்ள சில கருத்துகளை சிரமேற்கொண்டு தீவிரவாதத்தை ஏற்கும் தமது ஆட்களை காட்டி கொடுத்து, காவல் துறையினரிடம் கொண்டு நிறுத்தும் துணிவு பெற வேண்டும். இந்தியாவிற்கு எதிரானவன், முஸ்லிமாக இருந்தாலும், தங்களுக்கும் எதிரி தான் என்று உணரவேண்டும். பலோசிஸ்தானில் இருக்கும் முஸ்லிம்கள் தான் பாகிஸ்தான் இஸ்லாமிய அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். முஸ்லிம்கள் என்றும் பாராமல் தான் பாகிஸ்தான் அந்த பகுதிகளில் இன்றும் அநியாயம் செய்து வருகின்றது. ஷியா மக்களும் முஸ்லிம்கள் தான் என்று மறந்து உலகெங்கும் அவர்களின் தொழுகைகளுக்கு நடுவே குண்டு வெடிப்புகள் முஸ்லிம் தீவிர வாதிகளால் நிகழ்த்த படுகின்றன.

  6. சவுதி அரேபியாவில் அந்த காலத்தில் இஸ்லாம் பரவும்போது நிறைய சிலை வழிபட்டுகாரர்கள் இருந்து உள்ளனர். அந்த சிலைகளை இடித்து தள்ளப்பட்டு இஸ்லாம் அங்கே நிறுவப்பட்டது. அன்றைய கால கட்டத்தில், இஸ்லாத்தின் படி அது சரியாகவே இருந்து இருக்கலாம். அனால் அதே அடிப்படையில், எண்ணற்ற வழிபாட்டு தளங்களை இந்தியாவில் சேத படுத்திய படை எடுப்பாளர்களை இன்றைய முஸ்லிம்களும் தான் கொண்டாடுகிறார்கள். அதே சமயத்தில், பாப்ரி கட்டடம் இடிக்க பட்டது பெரும் தவறு என்கின்றனர். நாங்கள் செய்தால் சரி, அதையே நீங்கள் செய்தால் தவறு என்பது தான் வாதம்.

  7. ஐயோ பாவம்!! இந்த அப்பாவி முஸ்லிம்களுக்கு டீஸ்டா ஜாவேத் செடல்வாத், ஷபனா ஆஸ்மி, பர்கா தத், மகேஷ் பட் இவர்களை பற்றி யாரும் சொல்லவில்லை போலும். தெரிந்தால் இந்த பிரச்னை எல்லாம் இல்லாம இந்நேரம் மசூதி கட்டி அல்லாவை மகிழ வைத்திருக்கலாம்.

  8. இந்த ஸ்ரீலங்கன் பெண்ணுக்கு நடந்த கொடுமைகளை படித்த பின், இஸ்லாம் இருக்க வேண்டும் என்றால் முதன் முதலில் சவுதி அரேபியா முற்றிலும் மாற வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றுகிறது. இந்திய முஸ்லிம்கள் இத்தகைய முஸ்லிம்களை கண்டு பெருமை படுகிறார்களா !
    எந்த மதம் அனால் என்ன, முதலில் மனிதனை மனிதனாக பார்க்க தெரிய வில்லை என்றால் எந்த மதத்தினால் என்ன பயன்.

    https://gulfnews.com/news/world/sri-lanka/doctors-remove-nails-from-maid-who-returned-from-saudi-arabia-1.673903

  9. Let us first understand this basic thing abut Islam. There is only one Islam and that is the RADICAL ISLAM.There is nothing called MODERATE ISLAM. This name” moderate Islam” is a Western/Pseudosecular invention.This muslim lady Dr from Egypt, now in USA,( I cannot remember her name now) clearly states this fact in her speech. (You can Google on that speech.).Any religion which does not change and clings to tenets set 1500 years ago,basically is a FUNDAMENTAL RELIGION.Swamy Dhayanadaji clearly staes this fact in his book” Is all religions are same?”

  10. Sometimes I question the existence of god when I see people like actor murali dies and Tamil Nadu chief minister is still alive talking nonsense. His latest speech is this.
    Seriously how long we need to endure this? Is there any Hindu leader or Hindu someone from tamil nadu to stop all this.

    //
    உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றது தான் இஸ்லாம்: கருணாநிதி
    //

    https://thatstamil.oneindia.in/news/2010/09/09/karunanidhi-extend-ramzan-wishes.html

  11. Pingback: Indli.com
  12. // உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றது தான் இஸ்லாம்: கருணாநிதி //

    இதில் என்னய்யா சந்தேஹம்? கபீர்களின் உடல்களை உரித்து அவர்கள் வீட்டு பெண்களை பலா சுளை போல் சாப்பிடவில்லையா இவர்கள். முதல்வர் என்றும் ஒன்றே சொல்வார் அதுவும் நன்றே சொல்வார்

  13. அமெரிக்காவின் மிதவாத முஸ்லீம்கள் சிலர் ஒன்றுபட்டு கிழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பிரமாண கடிதத்தை எல்லா மசூதிகளுக்கும் மதராஸாகளுக்கும் அனுப்பி அங்கு வரும் முஸ்லீம்களிடம் இந்த பிரமாண பத்திரத்தில் நாங்கள் இதை முழுமையாக ஏற்கிறோம் மிதவாதிகளாக இருக்கவே விரும்புகிறோம் அதற்கான மாற்றங்களையும் வரவேற்கிறோம் என்று கையொப்பம் வாங்க இருக்கிறார்கள்.

    இது உண்மையாக வரவேற்க்கதக்க ஒரு முயற்ச்சியே ஆகும். இதைபோல் கிருஸ்துவ மிதவாதிகளும் மதமாற்ற அறுவடை செய்வது தவறு என்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பும் தொகையை அந்தநாட்டின் அரசாங்கத்திடம்தான் கொடுக்கவேண்டும் என்றும் போப்பை கட்டாயமாக வற்புறுத்தி பிரகடன படுத்தவேண்டும் !!!!!!!

    IS YOUR LOCAL MOSQUE IS RADICAL OR MODERATE

    Ask the Imams of Mosques, the Muslim leaders, and the Islamic organizations in the US and worldwide to sign this declaration (See below) by Tawfik Hamid
    http://www.tawfikhamid.com

    After the problem of Ground Zero Mosque has escalated it becomes an urgent necessity to distinguish ‘Moderate’ from ‘Radical’ Islam. Without making such a distinction the US and the rest of the world will remain divided regarding this issue. Debates about the issue can be endless unless we define the words ‘radical’ and ‘moderate’.

    Mosque leaders, Islamic scholars, and organizations who want to be considered Moderates MUST clearly and unambiguously declare the following declaration in their media outlets and on their websites.

    I suggest that you send this declaration to Mosque leaders and the Islamic organizations inside the US and worldwide to see if they are ready to accept such a declaration or not.

    Please feel free to circulate this newsletter so that we can start a process that allows us to distinguish radical from moderate Islam.

    Declaration of Beliefs of Muslim Moderates –

    I (We) are Muslims who want contemporary understandings of Islam to replace currently predominant harsh and radical (Salafi/Wahabbi) interpretations of our religion. We therefore declare that:

    1- Redda Law, the Sharia Law that allows the killing of Muslims who convert to other faiths, must be banned in Islamic teachings and in Sharia legal doctrine. Islamic countries that practice Sharia must stop the practice of this law and must admit that Freedom of belief and the right to convert to other faith or believe is a basic right that must be given to all Muslims.

    2- Current mainstream Sharia doctrines justify the use of violence against women. They encourage men to beat their wives to discipline them. They allow women accused of adultery to be stoned to death. These doctrines are barbarically inhumane, non-egalitarian, and teach Muslim children to be violent. These teachings must be ended by reinterpreting the Islamic text that justifies such violence.

    3- Traditional Sharia doctrines teach Muslims that they must engage in war so that Islam will dominate the world. When Islam becomes dominant, Non-Muslims are offered three options: to convert to Islam, to pay Jizzia (a humiliating tax), or to be killed. These doctrines run contrary to modern respect for diversity and for personal freedom of speech and belief. This understanding of Jihad that seeks domination of Islam over other peoples must no longer be regarded as an Islamic value and its teaching as a duty for Muslims must end.

    The early Islamic wars known as “Futohaat Islameia” were fought to implement this doctrine of Jihad. These wars therefore should now be regarded as un-Islamic and un-justifiable.

    4- Jews are individuals who deserve the same respect accorded to all individuals. They should not be called “pigs and monkeys.” The Islamic teaching that Muslims must fight and kill all Jews before the end of days is totally incorrect and unacceptable as it does not exist in the Quran. All teachings that encourage anti-Semitic attitudes, violence or disrespect toward Jews must be declared un-Islamic.

    5- Slavery is a crime against humanity. All Sharia laws that justify slavery in our modern times must not be taught any more. Muslim scholars must have a clear and loud voice against slavery.

    6- Islamic Sharia laws currently permit the killing homosexuals. These laws also are advocating a crime against our fellow human beings. They must be declared un-Islamic and their implementation must be considered criminal.

    Signed, Dr. Tawfik Hamid

    Comment:

    The above violent teachings, which currently are taught in mainstream Islamic books in America, are implemented in countries that allow governance according to Sharia Law. Future Muslim generations must be protected from these destructive doctrines, interpretations and customs.

    These violent Sharia doctrines must be replaced with clear and unconditional explanations of why they no longer are valid.

    Anything short of a fully clear and unequivocal stand against these doctrines indicates passive approval.

    Therefore, all Islamic leaders who genuinely consider themselves to be Muslim moderates must post these principles in English and in Arabic in full public view on their websites and declare them in their media outlets.

  14. எழுதிய கருத்துக்கள் அனைத்தும் சரியானவை
    இவன்
    சரவணன் ஈரோடு

  15. வேதம்கோபால்,
    அது ஒரு மடத்தனமான முயற்சி. காபிர்களிடம் பொய் சொல்லுவதும், காபிர்களோடு செய்த ஒப்பந்தத்தை முறிப்பதும், இஸ்லாத்துக்குள் மற்றவர்களை கொண்டுவருவதற்காக பொய் சொல்லுவதும் இஸ்லாமிய சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.

    தாராளமாக கையெழுத்து போடுவார்கள்.. அதனை நிறைவேற்றவேண்டும் என்ற ஒரு கட்டாயமும் அவர்களுக்கு மதரீதியில் கிடையாது.

  16. இதனுட இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
    இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு தங்கள் வழிபாட்டுத் தலங்களை கட்டிக் கொள்ள,வழிபாடு செய்ய, கலாச்சாரத்தைப் பின் பற்றி வாழ முழு சுதந்திரம் கொடுக்கப் பட வேண்டும்.

  17. ஒரு கட்டிடத்திற்கு வைக்கப்படும் பெயருக்குப் பின்னால் இவ்வளவு பெரிய சரித்திரமா? நல்ல தகவல்கள். அதைவிட அமெரிக்காவில் இன்று நடப்பில் உள்ள பிரச்சனையை அலசி ஆராய்ந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. நான் தினசரி செய்தி படித்தும் இவ்வளவு தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிய வில்லை. நல்ல தொகுப்பு. இதற்கான விமர்சனங்கள் மூலமும் பல செய்திகளை அறிந்து கொண்டேன். அனைவருக்கும் நன்றி.

  18. Muslim Persecution of Hindus In India — The Story You Won’t See In the Western Mainstream Media: https://www.foxnews.com/opinion/2010/09/09/phyllis-chesler-hindu-human-rights-muslim-islamic-terrorism/

    இதை எந்த இந்திய செய்திதாள்களும் வெளியிடவில்லை.

    ஒ! நாமதான் நம் தேச பிதாவை பின் பற்றுவர்கள் ஆச்சே!! அண்ணன் தம்பி சண்டையில் நாம் தலையிட வேண்டாம் என்று இருக்கார்கள் போலும்!!

  19. வடிவேலு ஐயா இஸ்லாமியர்கள் நம்பகதன்மையற்றவர்கள் என்பது ஊர்அறிந்த உண்மை. இருந்தும் ஒரு ஆதங்கத்தினால் மனம்மாறும் இந்தமுயர்ச்சி ஒரு முதல் படியே. அதையாவது செய்கிறார்களா என்பதை முதலில் பார்போம்.

  20. மறுமொழி எழுதிய அனைவருக்கும் நன்றி,

    வடிவேலு அவர்களே!
    எப்படி இருந்தாலும் சில யதார்த்தங்களை நாம் கவனத்தில் கொள்ள
    வேண்டியது அவசியம். இன்று மிதவாதிகள் (மிக) குறைந்த அளவில் இருக்கலாம்.
    மற்ற மதத்தவருக்கு வேறு என்ன Alternatives இருக்கிறது என்பதை
    யோசித்து பாருங்கள். (முஸ்லீம்களின் மக்கள் தொகை 120 கோடிகள்)

    இக்கட்டுரையின் அடுத்த பாகங்களில் மிதவாதிகள் செய்தே தீர வேண்டிய சீர்திருத்தங்களை என் கற்பனையுடன் சேர்த்து எழுதியுள்ளேன். படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  21. ஆர்பாலாஜி அவர்களே,

    இது முதல்படிஅல்ல, சுவாமி சிரத்தானந்தர் செய்ததுதான் சரியான முயற்சி. மொகலாயர்களால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட முஸ்லீம் ஜாட்டுகளிடம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சென்று நீங்கள் மீண்டும் இந்து மதத்துக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். பல்லாயிரக்க்கணக்கான முஸ்லீம்கள் இந்துக்களாக மதம் மாறினர். பஞ்சாப் ஹரியானாவில் இருக்கும் பல்ல்லாயிரக்கணக்கான இந்துக்கள் முன்பு முஸ்லீம்களாக இருந்தவர்கள். இவ்வாறு கூட்டம் கூட்டமாக மதம் மாறுவதை பார்த்து அதிர்ந்த முஸ்லீம் இமாம்கள் சிரத்தானந்தரை கொல்ல ஆளை ஏற்பாடு செய்து அவரை கொன்றனர். அவரை கொன்றது சரிதான் என்று அஹிம்சை மகாத்மா காந்தியடிகள் சொன்னார்.

    இன்று அர்ஜூன் சம்பத் போன்றோர்கள் செய்வதுதான் சரியான முயற்சி. முஸ்லீம்களில் மிதவாத முஸ்லீம்கள் என்று யாரும் இல்லை. முஸ்லீம்கள் இஸ்லாத்தை விட்டு மீண்டும் இந்துக்களாக ஆக அழைப்பு விடுப்பதுதான் சரியான முயற்சி. அவர்களை யாரும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றினால் நான் எதிர்ப்பேன். ஆனால், அவர்களாக இந்துக்களாக மதம் மாறினால் ஆதரிப்பேன். இதுதான் என் நிலைப்பாடு.

  22. நன்றி , ஆசிரியர் அவர்கள் தங்களுடைய பணியை சிறப்பாக செய்கிறார் , இந்த வலை தளம் பற்றிய விளம்பர செய்தி தேவை ,, அணைத்து மக்களுக்கும் இந்த செய்தி சென்று சேர வேண்டும் … இனியாவது ஹிந்துகளை காப்பாற்ற வேண்டும் ஒற்றுமை ஏற்படுத்தவேண்டும் ..

  23. பாலாஜி

    மிக முக்கியமான நல்ல பதிவு. இதைப் பற்றி மிக விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் நீங்களே மிக அருமையாக எழுதி விட்டீர்கள். இஸ்லாமில் தக்கியா என்று ஒன்று உண்டு. அதன் படி உள்ளுக்குள் தீவீரவாத இஸ்லாமியர்களாக இருப்பவர்கள் கூட வெளியில் மிதவாதிகள் போல நடித்து உள் புகுந்த தங்கள் எண்ணிக்கை கணிசமான பின்னால் தங்கள் நிஜ முகத்தைக் காட்டுவார்கள் அதையும் குரானும் இஸ்லாமுமே சொல்லிக் கொடுக்கின்றது. குரானில் இருக்கும் வெறுப்பு வாதங்கள், பயங்கரவாதங்கள் அனைத்தும் நீக்கப் பெற்று மென்மைப் படுத்தப் பட்டு புதிய குரான் வெர்ஷன் வெளி வர வேண்டும் அதை மிக உயர்ந்த அளவில் சவூதி அரேபியாவில் இருக்கும் மதகுருமார்கள் செய்ய வேண்டும் அதை உலக இஸ்லாமியர்கள் முழுவதும் ஏற்க வேண்டும் அதை மீறுபவர்கள் கல்லால் அடித்துக் கொல்லப் படுவார்கள் என்ற தண்டனையை விதித்து அவர்களுக்குள்ளேயே மிகக் கண்டிப்பாக செயல் படுத்த வேண்டும். இஸ்லாமில் இருக்கும் மாடரேட் இஸ்லாமியர்கள் (விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே அப்படிப் பட்டவர்கள் உள்ளார்கள்) இதை உடனடியாகச் செய்யத் தலைப்பட வேண்டும் இல்லாவிட்டால் இவர்களினாலும் குரானாலும் மட்டுமே உலகம் அழியும் நிலை ஏற்பட்டு விடும். ஆனால் இஸ்லாமில் மென்மையானவர்கள் என்பது வர வர ஒரு ஆக்ஸிமோரானாக வளர்ந்து வருவதால் நாம் நினைப்பது எல்லாம் கனவாக மட்டுமே நின்று விடும். இந்த உலகம் இவர்களால் அழிய வேண்டும் என்று நிச்சயிக்கப் பட்டு விட்டது.

  24. முஸ்லீம்களின் நம்பகதன்மைளை பற்றி ஒரு இணையதள செய்தியின் தமிழ் பதிவு.

    ஒருநாட்டில் இஸ்லாமியர்கள் 1 சதவிகித எண்ணிக்கையில் இருக்கும்போது அவர்கள் அமைதியான சிறுபான்மையினர் போல் நடிப்பார்கள்.

    அமெரிக்கா – முஸ்லீம் 1 சதவிகிதம்
    ஆஸ்த்தேரிலியா – முஸ்லீம் 1.5 சதவிகிதம்
    கனடா – முஸ்லீம் 1.9 சதவிகிதம்
    சைனா – முஸ்லீம் 2 சதவிகிதம்
    இத்தாலி – முஸ்லீம் 1.5 சதவிகிதம்
    நார்வே – முஸ்லீம் 1.8 சதவிகிதம்

    இவர்கள் எண்ணிக்கை ஒரு நாட்டில் 2 முதல் 3 சதவிகிதம் என்று உயரும் பொழுது சிறியஅளவில் மதமாற்ற செயலில் ஈடுபடுவார்கள். குறிப்பாக சிறைகைதிகளையும் கலவரங்களளில் ஈடுபடும் ரௌடிகளையும் மற்ற சிறுபான்மை இனத்தவரையம் தூண்டி மதமாற்றம் செய்வார்கள்

    டென்மார்க் – முஸ்லீம் 2..1 சதவிகிதம்
    ஜெர்மனி – முஸ்லீம் 3.7 சதவிகிதம்
    இங்கிலாந்து – முஸ்லீம் 2.7 சதவிகிதம்
    ஸ்பெயின் – முஸ்லீம் 4 சதவிகிதம்
    தாய்லாண்டு – முஸ்லீம் 4.6 சதவிகிதம்

    5 சதவிகித எண்ணிக்கைளை எட்டும் பொழுது தனது எண்ணிக்கைக்கு மீறிய கெடுபிடிகளை முன்வைப்பார்கள். தங்களுக்கு தேவையான அசைவ உணவை அலால்முறைப்படியே தாயாரிக்கவேண்டும் எனகூறி எல்லா அசைவ உணவுதாயாரிக்கும் தொழில்களை ஆக்ரமிப்பார்கள். மேலும் இதை எல்லா உணவு அங்காடிகளிலும் விற்கவேண்டும் என கிளர்ச்சி செய்வார்கள்.. ஷரியா சட்டப்படி தங்கள் குழுக்களுக்குள் தனிகட்டுப்பாட்டை அரசாங்கம் ஏற்க்க போராடுவார்கள்.

    பிரான்ஸ் – முஸ்லீம் 8 சதவிகிதம்
    பிலிபையின்ஸ் – முஸ்லீம் 5 சதவிகிதம்
    ஸ்வீடன் – முஸ்லீம் 5 சதவிகிதம்
    சுவிஸ்சர்லாந்து – முஸ்லீம் 5.3 சதவிகிதம்
    நெதர்லாந்து – முஸ்லீம் 5.5 சதவிகிதம்
    டிரினிடாட் – முஸ்லீம் 5.8 சதவிகிதம்

    அவர்களது எண்ணிக்கை 10 சதவிகிதத்தை தாண்டும்போது தாங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் தங்கள் மதத்தையும் மத தலைவர்களையும் குறை கேலி செய்யும் சிறுவிஷயங்களை கூட பெரியதாக ஆக்கி கலவரம் பயமுறுத்துதல் போன்ற யுக்திகளை கையாள்வார்கள். உராரணம் – பாரிஸ் கார் எரிப்பு டானீஷ் முகமது சித்திரத்திற்கான எதிர்ப்பு.

    கென்யா – முஸ்லீம் 10 சதவிகிதம்
    இந்தியா – முஸ்லீம் 15 சதவிகிதம்
    இஸ்ரேல் – முஸ்லீம் 16 சதவிகிதம்
    ரஷ்ஷியா – முஸ்லீம் 15 சதவிகிதம்

    அவர்களது எண்ணிக்கை 20 சதவிகிதத்தை தாண்டும்போது ஜிகாதி குழுக்களை ஏற்ப்படுத்தி சிறு சிறு இடைவெளிகளில் மயிர்கூசும் போராட்டங்களிலும் கொலைகளிலும் வழிபாட்டு தலங்களை தாக்குவதிலும் ஈடுபடுவார்கள்

    எதியோப்பியா – முஸ்லீம் 33 சதவிகிதம்

    அவர்களது எண்ணிக்கை 40 சதவிகிதத்தை தாண்டும்போது மேலேசொன்னவற்றை தொடர்ந்து இடைவிடாது செய்து ஒரு கலவரமான சூழுலை ஏற்ப்படுத்துவார்கள். கொலைவெறியுயாலும் கலவரத்தாலும் ஜிகாத் போர் தந்திரங்களாலும் எப்பொழுதும் ஒரு அமைதியற்ற சூழுலில் நாட்டை கொண்டு செல்வார்கள்.

    போஸ்னியா – முஸ்லீம் 40 சதவிகிதம்
    சாட்டு – முஸ்லீம் 53 சதவிகிதம்
    லெபனான் – முஸ்லீம் 59 சதவிகிதம்

  25. அவர்களது எண்ணிக்கை 60 சதவிகிதத்தை தாண்டும்போது மேலேசொன்னவை தீவிரமடைந்து மற்றமதத்தினரை கொலை செய்வது நாடுகடத்தவது ஷரியா சட்டத்தின் படி மற்றதத்தவரை வரி செலுத்த கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

    அல்பேனியா – முஸ்லீம் 70 சதவிகிதம்
    மலேசியா – முஸ்லீம் 61 சதவிகிதம்
    கடார் – முஸ்லீம் 78 சதவிகிதம்
    சுடான் – முஸ்லீம் 70 சதவிகிதம்

    அவர்களது எண்ணிக்கை 80 சதவிகிதத்தை தாண்டிவிட்டால் மேலே சொன்ன அராஜகங்களை அரசே முன்நின்று நடத்தும்
    பங்களாதேசம் – முஸ்லீம் 83 சதவிகிதம்
    ஈஜிப்ட் – முஸ்லீம் 90 சதவிகிதம்
    காசா – முஸ்லீம் 98.7 சதவிகிதம்
    இந்தோநேஷியா- முஸ்லீம் 86.1 சதவிகிதம்
    ஈரான் – முஸ்லீம் 98 சதவிகிதம்
    ஈராக் – முஸ்லீம் 97 சதவிகிதம்
    ஜோர்டான் – முஸ்லீம் 92 சதவிகிதம்
    மாராகோ – முஸ்லீம் 98.7 சதவிகிதம்
    பாகிஸ்தான் – முஸ்லீம் 97 சதவிகிதம்
    பாலஸ்தீன் – முஸ்லீம் 99 சதவிகிதம்
    சிரியா – முஸ்லீம் 90 சதவிகிதம்
    டாஜ்கிஸ்தான் – முஸ்லீம் 90 சதவிகிதம்
    டர்க்கி – முஸ்லீம் 99.8 சதவிகிதம்

    அவர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதமாகும் போது ”டருல் இஸ்லாம்” முகலாய அமைதி இல்லம் உருவானதாக சொல்வார்கள். ஏன்எனில் எல்லோரும் இஸ்லாமியர்கள்

    ஆப்கதனிஸதான் – முஸ்லீம் 100 சதவிகிதம்
    சவுதி அரேபியா – முஸ்லீம் 100 சதவிகிதம்
    சோமாலியா – முஸ்லீம் 100 சதவிகிதம்
    ஏமன் – முஸ்லீம் 99.9 சதவிகிதம்

    ஆனால் ஒருசில நாடுகளை தவிற மற்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கிறது. இத்தோடு இவர்களது ரத்தவெறி நிற்காது. அவர்களுக்கு்ளேயே அடித்துக்கொண்டு சண்டையிட்டு சாவார்கள். உதாரனமாக ஈராக் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள். இதுவே இஸ்லாமிய அமைதி மார்கம் ஆகும்.

  26. yes. the letter summarizes what muslims have to do at present to be regarded as liberal and moderate. i am sure that most muslims would be ready to sign this. it all requires a start somewhere.

  27. ,இஸ்லாத்தில் உள்ள தீவிரவாத கட்டளைகளை நீக்கி தூய்மைப்படுத்துவது நல்ல முயற்சி என்றாலும் தொண்ணூறு சதவீதம் முஸ்லீம்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் குரான் அல்லாவின் வாரத்தைகள் என்று அவா்களுக்கு போதிக்கப்படுகிறது.
    அல்லாவுக்காக செத்தால் மோட்சம் என்று போதிக்கப்படுவதால் தான் முஸ்லீம்கள் இந்துக்களைப் போல் மனம் தடுமாறி வேறு மதங்களுக்கு மாறாமல் இருக்கிறார்கள். சரியா தவறா என்று ஆராய்ந்து பார்க்கச் சொல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு பைபிளையும் குரானையும் பின்பற்ற வேண்டும் என்று போதிக்கப்படுகிறது. அவா்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் மேற்படி மதங்கள் அழிந்துவிடும் என்பதால் சிந்திக்க விடாமல் பாதுகாக்கின்றனா்.

  28. first of all all should remember that we r in all humanbeing then only religion so please be patient and give comments iam amuslim but i like my country and my people so my hindu brothers must make unity within these people . any unwanted things done by any religious men r been not good and like me people dont like this and we r in the same position what u will do in that situuaion. i romise my death will only for india and not for any thing that causes danger to my hindu muslim cristian brothers and sisters.thank u and jaihind.by anwar chennai.

  29. அன்வர், உங்கள் தேசிய ஈடுபாட்டை நினைத்து பெருமை படுகிறேன். தாங்கள் தங்களால் ஆனா முயற்சி எடுத்து அனைவருக்கும் தேச நேசத்தை அதிக படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இந்த நாட்டை தாய் போல (பாரத மாதா) நினைத்து, இதற்க்கு ஊறு விளைவிப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும்.
    காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்? என்ற தலைப்பில் பிரிவினை வாதத்தை ஆதரிக்கும் கருத்தை, அப்துல் நாசர் மதானி – அதிகாரத்தின் இரை – என்ற கட்டுரை மக்களின் எதிரியை ஆதரித்தும், மும்பைத் தாக்குதல் – கர்கரேயைக் கொன்றது யார்? என்ற கட்டுரையில் RSS, BJP யை தீவிரவாதியாக சித்தரித்தும் இஸ்லாமிய தளங்கள் வெளியிடுகின்றன.
    இத்தகைய பிரசாரங்களில் உண்மை எதுவும் இல்லை. இதை அணைத்து முஸ்லிம் நண்பர்களும் அறிய வேண்டும்.

  30. I have seen with my own eyes muslims in saidapet area in chennai celebrating when pakistan won a world cup cricket match against india in cricket.

    There is no point talking of muslims joining the natiponal mainstream, hindu-muslim bhai bahis etc.,

    Muslims will always be muslims. They will never change.

    If you talk too much, U will not live to see another day – that is their attitude.

  31. Radical muslim is a person who chops off the neck of a kafir. Moderate muslim is one who holds the kafir’s legs while the radical cuts the neck

  32. நண்பர்களே,

    இஸ்லாமில் மிதவாதம் என்பதே கேலி கூத்தான சொல்லாடல்.அங்கே மிதவாதம் என்று ஒன்று இருப்பதாக சொன்னால்,இஸ்லாமியர் ஹிந்துக்கள் ஆகி விடுகிறார்கள்.இஸ்லாம் என்றால் extremism மட்டுமே. அனைத்துமே எக்ஸ்ட்ரீமீசம் தான்.அது இருந்தால் தான் இஸ்லாமால் வாழ முடியும். இல்லையென்றால் அது அழிந்து விடும்.இதனாலேயே இஸ்லாமியர்கள் மிதவாதம் என்றாலே பயப்படுகிறார்கள் அல்லது பொய்மையாக பின்பற்றுகிறார்கள்.மிதவாதம் என்ற வார்த்தை இஸ்லாமுக்கு சம்பந்தம் இல்லாதது என்பதை மறக்காமல் நினைவில் கொள்ளவும்.

    பிரதீப் பெருமாள்

  33. Dear Tamil Hindu viewers,

    Apart from writing such comments, Please join any one of hindu organaisation like RSS, VHP and Indhu munnani. If it is not possible for you, you please atleast join with any spritual oraganisation like rama krishan mission. If you cant do any one of this, please do some service to poor hindus. Please educate your surrounding people. Just writing such comments… alone cant make any sense…

  34. I will never blame Muslims and Christians. I will only blame pseudo secular Hindus. There are the real culprits for our nation. These so called secular craps are just spoiling the so called minority community with the help of Medias and school books. So, only way where we can stop all these non sense is.. don’t vote for congress / DK parties / Communist.

    Vote for people who support Hindus. please dont waste your time by things about other religious people. Even congress will listen to us when we Hindus get united; Please educate your surroundings. Please dont hesitate to do this. I even eused to speak on this to my colleagues. I was able to educate more than 10 people. Of course, i was also criticized by few people. But, i don’t mind about them.

    Please join with any hindu organization. If you are not interested to join religious organization, at least join any spiritual org like rama krishna mission… ISKON… if you dont have time, please give your money.. if you dont have any faith on any organization… please help poor hindus…

    Gratitude,
    Srikumar S

  35. நான் ஹிந்து என்று சொல்பவனுக்கு பகவத்கீதை, ரிக் வேதா, தெரிவதில்லை, நான் கிறிஸ்தவன் என்று சொல்பவனுக்கு பைபிள் தெரிவதில்லை, நான் முஸ்லிம் என்று சொல்பவனுக்கு குர்ரான் தெரிவதில்லை, இந்த மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இதே போன்று வலைத்தளங்களை ஆரம்பித்து தப்பு தப்பா நல்ல வாய்கிழிய பேசமட்டும் தெரியும், முதல்ல கடவுள் பற்றி உணர்ந்து கொண்டு இந்த தவறை செய்யுங்கள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *