யூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்

இணையத்தில் தமிழ் உலாவரத் தொடங்கிய காலகட்டத்தில் பல்வேறுவிதமான எழுத்துருக்கள் (encoding) புழங்கின. இதனால் ஒவ்வொரு இணையதளத்தையும் படிப்பதற்கு அந்தந்த தளம் பயன்படுத்தும் எழுத்துவடிவத்தை (font) தரவிறக்கிக் கொண்டாக வேண்டும் என்ற தொல்லை இருந்தது. ஆரம்பகால இணையத் தமிழ்ப் பயனாளிகள் இப்போது கூட ஒரு கொடுங்கனவாக அதை எண்ணிப் பார்க்கக் கூடும்.

letter_chart1 பிறகு, உலக அளவில் ஆங்கிலம் அல்லாத பற்பல உலக மொழிகளையும் கூட இலகுவாக கணினியில் பயன்படுத்த பொதுவாக யுனிகோட் என்ற எழுத்துரு புழக்கத்தில் வந்தது. மைக்ரோசாஃப்ட், கூகிள் போன்ற நிறுவனங்களும் யுனிகோட் எழுத்துருவுடன் இயைந்திருக்குமாறு (compatible) தாங்கள் உருவாக்கும் மென்பொருட்களை வடிவமைத்து வருகின்றன. யுனிகோட் பயன்பாட்டுக்கு வந்த பின்பு தான் இணையத் தமிழில் பெரும் மலர்ச்சி ஏற்பட்டது என்று கூறலாம். இன்றைக்கு இந்திய மொழிகளிலேயே மிக அதிகமாக, ஏன் ஹிந்தியை விடக் கூட அதிகமாக வலைத்தளங்கள் தமிழில் தான் உள்ளன என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தமிழக அரசும் யுனிகோட் எழுத்துருவையே இணையத் தமிழ்ப் பயன்பாட்டிற்காக தனது தேர்வாக அங்கீகரித்துள்ளது.

தமிழ் யுனிகோட் எழுத்துருவின் பயன்பாட்டை இன்னும் விரிவாக்கும் முகமாக இன்னும் சில எழுத்துக் குறியீடுகளை சேர்த்து “விரிவாக்கப் பட்ட தமிழ்” (extended Tamil) என்ற எழுத்துருவையும் புழக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்று தமிழ் மென்பொருள் ஆர்வலர்கள் சிலர் யுனிகோட் நிர்வாகத்திற்கு யோசனை தெரிவித்துள்ளனர். யூனிகோடு நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பப்பட்ட “விரிவாக்கப்பட்ட தமிழ்” என்கோடிங்க் தொடர்பாக பல குழப்பங்கள் நிகழ்ந்து வரும் காரணத்தினால், அது குறித்து சில அடிப்படையை விளக்கங்கள் தரப்பட வேண்டி உள்ளது. இது தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களையும் வரலாற்று ரீதியான கருத்துக்களையும் விவரமாக காண்போம்.

தற்சமயத்தில் இணையம் எங்கும் தமிழ் யூனிகோடு கோடு சார்ட்டில் (Unicode Code Chart) தமிழில் கூடுதலாக 26 கிரந்த எழுத்துக்கள் சேர்க்கபப்டுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சில தேவையற்ற குழப்பங்கள் நிலவி வருகின்றன. “விரிவாக்கப்பட்ட தமிழ்” என்பது ஒரு தனி விஷயம் இதற்கும் கிரந்தத்துக்கும் சம்பந்தமே இல்லை. இது போன்ற குழப்பங்களுக்கு, “விரிவாக்கப்பட்ட தமிழுக்கான” யூனிகோடு முன்மொழிவை திறந்து கூட பார்க்காதது தான் காரணம் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதில் மிகத்தெளிவாகவே, முன்மொழியப்பட்ட “விரிவாக்கப்பட்ட தமிழ்” அட்டவணையில் துணைஎண்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்கள் தான் உள்ளன.

கிரந்த எழுத்துமுறையானது பாரம்பரியமாக சமஸ்கிருதத்தை எழுத பெருமளவு பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்தது, பழங்கால தமிழர்கள் கிரந்த லிபி கொண்டே சமஸ்கிருதத்தை கற்றனர். நம்முடைய பழைய கல்வெட்டுகளில் பலவற்றிலும் கிரந்த லிபி உள்ளது. கிரந்த லிபியானது இப்போதும் கூட சிறு அளவில் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழிலிருந்து தனிப்பட்ட எழுத்துமுறை அது. அதை தனியாகத்தான் யூனிகோடில் ஏற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம்முடைய பாரம்பரிய கிரந்த லிபியானது இன்னும் ஏறக்குறைய ஓராண்டில் யூனிகோடில் ஏறிவிடும். கிரந்த லிபியானது தமிழ் யூனிகோடுக்கு சம்பந்தமற்றதாக தனியாக யூனிகோடில் ஏறவிருக்கிறது. இத்தோடு கிரந்த சம்பந்தம் முற்றிற்று.

grantha_inscription

((முதற்பதிப்பில் இந்த பத்தி விடுபட்டு விட்டது)) கிரந்த எழுத்துமுறைக்கான முன்மொழிவை யூனிகோடு நிறுவனத்திடம், சென்ற ஆண்டு அளித்த போது, மேற்கத்தியர் ஒருவர், ஏன் கிரந்தத்தையும் தமிழையும் ஒன்றிணைக்கக்கூடாது, தமிழ் யூனிகோடில் நிறைய காலி இடங்கள் உள்ளனவே, ஏன் தேவை இல்லாமல் கிரந்தத்தை தனியாக யூனிகோடில் ஏற்றப்பட வேண்டும் என்ற பரிந்துரையை யூனிகோடு நிறுவனத்திடம் சமர்பித்தார். அப்போதே, அதை மறுத்து, சில எழுத்துக்கள் இரண்டுக்கும் பொதுவாக இருந்தாலும், தமிழ் லிபியும் கிரந்த லிபியும் ஒன்றல்ல இரண்டும் வெவ்வேறான பாரம்பரிய லிபிகள். எனவே தமிழில் இருந்து தனியாகத்தான் கிரந்தம் யூனிகோடில் இணைக்கப்பட வேண்டும் என்று உடனே மறுமொழி, இதே விரிவாக்கப்பட்ட தமிழை முன்மொழிந்த தரப்பினால், யூனிகோடிடம் கொடுக்கப்பட்டது, தனியாகவே கிரந்தம் இப்போது யூனிகோடில் சேர்க்கப்படவிருக்கிறது.

இந்த நிகழ்வை யூனிகோடு நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளவர்களும் கிரந்த லிபியை யூனிகோடில் சேர்க்க பிரயத்னம் செய்தவர்களும் நன்றாக அறிவர். உண்மையாகவே 26 கிரந்த எழுத்துக்கள் தமிழில் சேர்க்கப்படக்கூடிய சாத்தியம் இருந்த அப்போதெல்லாம் ஆட்டேபம் தெரிவிக்காமல், ஊருக்குள் அமைதியாக இருந்துவிட்டு, இன்னொருவர் கிளப்பி புதைத்து புல் முளைத்த இவ்விஷயத்தை சம்பந்தா சம்ப்ந்தம் இல்லாமல் இப்போது கிளப்புவுது ஏன் என்பது புரியாத புதிர். இந்த “விரிவாக்கப்பட்ட தமிழ்” முன்மொழிவானது கடந்த மாதம் ஜூலை அனுப்பப்பட்டு, யூனிகோடு தொழில்நுட்ப குழுவினரின் பரிசீலனைக்கும் சென்றது. இதுவும் யூனிகோடு உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரிந்த விஷயம். அப்போதே கூட தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் தெரிவித்திருக்கலாம், அப்போது தெரிவிக்காது இப்போது இல்லாத ஒன்றை (26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்த்தல்) முன்னிறுத்தி ஆட்சேபிப்பது ஏனென்று அறியேன்.

இனி “விரிவாக்கப்பட்ட தமிழுக்கு” (Extended Tamil) வருவோம். மற்ற இந்திய எழுத்துமுறைகளை போல் அல்லாது தமிழில் kha, gha, jha, dha, ba போன்ற எழுத்துக்களுக்கு வடிவமில்லை. ஆகவே, தமிழில் சமஸ்கிருதம் உட்பட்ட பிற இந்திய மொழிகளை மூல உச்சரிப்பு மாறாமல் அச்சிட விரும்பியவர்கள், தமிழ் எழுத்துக்களுடன் 2,3,4 முதலிய எழுத்துக்களை சேர்த்து க² க⁴ ஜ² த⁴ ப³ என்றவாறு தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தினர். பல ஆண்டுகளாக இது வழக்கில் உள்ள ஒரு முறை. இது இலத்தீன் எழுத்துக்களை grave, accent, caret போன்ற துணைக்குறியீடுகளை இணைத்து புதிய ஒலிகளை குறிப்பிடுவது போலத்தான். உதாரணமாக, e என்ற எழுத்து è é ê ë xஎன்றவாறாக பல்வேறு துணைகுறியீடுகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு ஒலிகளை வெளியிடுவது போல. இதே போல், தமிழிலும் துணைஎண்களுடன் கூடிய இது போன்ற எழுத்துக்களையே, தமிழ் அட்டவணையில், ஒரு “விரிவாக்கப்பட்ட தள”த்தை உருவாக்கி, அதில் இவ்வெழுத்துக்களை சேர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இலத்தீன் எழுத்துமுறை ஆங்கிலம் உட்பட உலகின் பல்வேறு மொழிகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, ஒவ்வொரு மொழிக்கும் ஏற்றவாறு, துணைக்குறிகளுடன் கூடிய எழுத்துக்களையும் இன்ன பிற புது எழுத்துக்களையும் சேர்த்துக்கொண்டது. அடிப்படை எழுத்துக்களை மீறிய இதுபோன்ற துணைக்குறிகள் கொண்ட கூடுதல் எழுத்துக்கள் பல்வேறு விரிவாக்கப்பட்ட யூனிகோடு பகுதிகளில் சேர்க்கப்பட்டது. இலத்தீன் எழுத்துமுறைக்கு, LATIN-1 SUPPLEMENT, LATIN EXTENDED-A, LATIN EXTENDED-B , LATIN EXTENDED-C, LATIN EXTENDED-D, LATIN EXTENDED ADDITIONAL என்றவாறும், ரஷ்ய சிரில்லிக் எழுத்துமுறையில் CYRILLIC SUPPLEMENT , CYRILLIC EXTENDED-A CYRILLIC EXTENDED-B என்றவாறும், ஜப்பானிய மொழியை எழுதுவதையே பிரதானமாக கொண்ட ஜப்பானிய எழுத்துக்களுக்கு கூட சிறுபாண்மை மொழியான ஐனு மொழியை எழுத, Katakana Phonetic Extensions என தனியே கூடுதல் எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏன், யூனிகோடின் தேவாநாகரி அடிப்படை அட்டவணையில் கூட சமஸ்கிருத ஒலிகளை மட்டும் அல்லாது, எ, ஒ, ற, ழ, ள, ன போன்ற திராவிட மொழி ஒலிகளுக்கான எழுத்துக்களும், சிந்தி, காஷ்மீரி மொழிகளை எழுதுவதற்காக பயன்படுத்துப்படும் எழுத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த மாத்திரத்திலும் சமஸ்கிருதம் சீரழிந்து விடவில்லை. பாணினி எழுந்து வந்து, “நான் இலக்கணம் சமைத்த மொழியில் ஏன் திராவிட காஷ்மீரி புல்லுருவித்தனத்தை அனுமதித்தாய் ?” என்று யூனிகோடு நிறுவனத்திடம் சண்டையும் போடப்போவதில்லை. இதனால் சமஸ்கிருதம், ஹிந்தி முதலான வடமொழி கணினி முயற்சிகளோ, அல்லது மென்பொருள் செயல்பாடுகளோ செயலற்று போய்விடவில்லை. சமஸ்கிருதம் மற்றும் பிற வட மொழிகளை எழுதுவோர் அவ்வெழுத்துக்களை பயன்படுத்தப்போவதில்லை, அவ்வளவுதான்.

tatvavivechani1

காஷ்மீரி மொழியை எழுத முனைவோர் தங்களுக்கு தேவையான எழுத்துக்களை பயன்படுத்தப்போகின்றனர். இன்னும் ஏன், 19ஆம் நூற்றாண்டு மேற்கத்திய மொழியியலாளர்கள் சிருஷ்டித்த புதிய தேவநாகரி வடிவங்கள் மற்றும் அவெஸ்தன் மொழியை எழுதுவதற்கு தேவையான எழுத்துக்கள் கூட தேவநாகரி யூனிகோடில் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது !
யூனிகோடில் எழுத்துக்களை சேர்க்க, அவை அச்சிலும் புழக்கத்திலும் இருந்ததற்கான ஆதாரம் இருந்தால் போதுமானது. சில அகராதிகளில் மட்டும் உள்ள பொதுப்பயன்பாட்டில் இல்லாத எழுத்துக்களெல்லாம் யூனிகோடில் ஏறி உள்ளன. இத்தனைக்கும், ஹிந்து சாத்திர, ஸ்தோத்திர நூல்களை அச்சிடுவோர் பல்லாண்டுகளாக பெரும்பாண்மையாக துணைஎண்களுடன் கூடிய எழுத்துக்களை பயனபடுத்துகின்றனர்.

இதன் அடிப்ப்டையில் தான், தமிழிலும் 2,3,4 ஆகிய துணைக்குறிகள் அடங்கிய எழுத்துக்களுக்கு தனி இடம் கேட்டு, “Extended Tamil” என்ற பகுதியை ஒதுக்கி, அதில் இவ்வெழுத்துக்களை சேர்க்க யூனிகோடு நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எந்த இடத்திலும் கிரந்த எழுத்துக்களை இங்கு சேர்க்கவும் என்ற கேட்கப்படவில்லை என மீண்டும் இங்கு தெளிவுப்படுத்தப்படுகிறது.

எழுத்துமுறையும் மொழியும் ஒன்றல்ல. ஒரு மொழியானது பல்வேறு எழுத்துமுறைகளில் எழுதப்படலாம், அதே போல ஒரு எழுத்துமுறையானது பல்வேறு மொழிகளை எழுத பயன்படலாம். உதாரணமாக, செர்பிய மொழியானது இலத்தீன், சிரில்லிக் என்ற இரு எழுத்துமுறைகளிலும் எழுதப்படுகிறது. தேவநாகரி எழுத்துமுறையானது மராட்டி, ஹிந்தி, நேபாளம் முதலிய மொழிகளை குறிக்கப்பயன்படுகிறது. ஆகவே, ஒரு எழுத்துமுறையானது அதைச்சார்ந்த மொழியும் கூடுதலாக பிற மொழிகளையும் குறிக்கும் வேளைகளில், பல்வேறு புதிய எழுத்துக்கள் துணைக்குறிகளுடன் நீட்சியாக எழுகின்றன. இது உலகின் அனைத்து எழுத்துமுறைகளுக்கும் பொருந்தும்.

பிற இந்திய மொழிகளை மூலபாடம் மாறாமல் தமிழ் எழுத்துமுறையில் எழுத இந்த துணைஎண்களுடன் கூடிய எழுத்துக்கள் நிச்சயமாக உபயோகப்படும். நம்முடைய பாரம்பரிய பண்டைய சூத்திர, சாத்திர, உரைகளில் இருந்து தமிழ் நூல்களில் உச்சரிப்பும் மூலமும் மாறாமல், மேற்கோளாக காட்ட இவ்வெழுத்துக்கள் மிகவும் பயன்படும். இந்த எழுத்துக்களை பயன்படுத்த விரும்பாதவர்கள், பயன்படுத்த வேண்டாம். ஜ, ஹ, ஷ, ஸ போன்ற எழுத்துக்கள் இருந்தும் சிலர் பயன்படுத்தாதது போலத்தான் இதுவும்.

இது போன்ற கூடுதல் எழுத்துக்கள், உதாரணமாக தற்காலத்தில் தமிழில் இல்லாத dha ध என்ற எழுத்து கூட மிக முன்னதாகவே 2000 காலத்துக்கு முற்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டில் காணப்படுகின்றன. இது ஜைன சமய கல்வெட்டு, धम्मम् த⁴ம்ம்ம் என்ற பிராகிருத சொல்லை குறிக்க இவ்வெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. [மேலும் விவரங்களுக்கு: https://www.virtualvinodh.com/writingsystems-ta/148-sanskrit-letter-tamil]. இந்த பழமையான தமிழ்கல்வெட்டை தற்காலத்தில் மொழிப்பெயர்க்க வேண்டுமென்றாலும் கூட த⁴ என்ற எழுத்து வேண்டும்!. மயிலையாரின் கூற்றுப்படி பௌத்த ஜைன சமயத்தவர்கள் தான் மணிப்பிரவாளத்தையே உருவாக்கியவர்கள். ஏதோ தமிழ் – வடமொழி தொடர்பு என்றாலே ஹிந்து மத சம்பந்தம் உடையது என்று பிரசங்கிப்பவர்கள் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது.

akara

உண்மை நிலையை அனைவரும் அறிய வேண்டும் என்பதாலே இந்த விளக்கக்கட்டுரை. துணை எண்களுடன் கூடிய எழுத்துக்களை சேர்ப்பதற்கான முன்மொழிவு யூனிகோடிடம் அளிக்கப்பட்டு விட்டது. நுட்ப ரீதியான பிரச்சினைகள் ஏதேனும் யூனிகோடு எழுப்புமாயின் அதற்கான பிற வழிமுறைகளும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எதுவாகினும், நம்முடைய சாத்திரங்கள் கிரந்தங்கள் முதலியவற்றை மூலபாடம் தவறாது தமிழ் எழுத்துமுறையில் எழுதக்கூடிய நுட்பத்தேடல் தொலை தூரத்தில் இல்லை !

84 Replies to “யூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்”

  1. Pingback: Indli.com
  2. நல்ல முயற்சி. இதை தவறாகத் திரித்து, குழுமங்களிலும், பதிவுகளிலும் தேவை அற்ற இன வெறியை பல பரப்பி வருகின்றனர்

  3. அன்புள்ள விநோத்ராஜன் அவர்களுக்கு,

    உங்கள் படைப்பு மிக நன்றாக உள்ளது. வட இந்தியாவில் சமஸ்கிருதம் தேவநாகரி வடிவிலும், தென்னிந்தியாவில் கிரந்த வடிவிலும் எழுதப்பட்டு வந்தது. நான் இங்கு வடிவு என்பது லிபி என்ற பொருளில் கூறுகிறேன். இப்போது உள்ள தமிழ் எழுத்துக்களின் வரி வடிவம் 1979 ஆம் ஆண்டுகூட எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில் பெரியார் எழுத்துக்கள் என்ற பெயரில் லை, ளை , னை, ணை முதலிய எழுத்துக்கள் மாற்றப்பட்டன. எனவே எந்த மொழியிலும் காலப்போக்கில் எழுத்து வடிவம் மாறுவது இயல்பானதும், தேவைகளுக்கு ஏற்ப கட்டாயமாக செய்யப்படவேண்டிய மாறுதல் ஆகும். எனவே தமிழ் எழுத்து சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.

    ஜான் என்பதை சான் என்றும், முஸ்தபா என்பதை முச்தபா என்றும் ஹமீது என்பதை கமீது என்றும் எழுதுவது சரியல்ல. எனவே லிப்கோ போன்ற பதிப்பகங்கள் முன்னரே இந்த எழுத்து சீர்திருத்தங்களை தங்களுடைய கடவுள் வழிபாடு பற்றிய சமஸ்கிருத ஸ்லோகங்களை தமிழில் வெளியிடும்போது க2, க3 , க 4 என்று குறிப்பிடுவது ஏற்கனவே அச்சில் பழக்கத்தில் உள்ளது. எனவே கிரந்த எழுத்துக்களை இன்டர்நெட்டில் யுனிகோடில் சேர்த்து நல்ல மாறுதல்களை செய்வது மிக நல்லது ஆகும்.

    ஆனால் இந்த நேரத்திலே நாம் சில விஷயங்களை மனதிலே கொள்ளுதல் அவசியம். எந்த மொழியிலும் இந்தி, சமஸ்கிருதம், மராட்டி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பெரும்பாலான மொழிகளில் க, ச, ட,த ஆகிய நான்கு வர்க்கங்களிலும் நான்கு எழுத்துக்கள் உள்ள போதிலும் முதல் எழுத்தும், மூன்றாவது எழுத்துமே 100 சதவீதம் (விழுக்காடு) பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாவது மற்றும் நான்காவது எழுத்துக்கள் முற்றிலும் பயன்படுத்தப்படுவதில்லை.

    இது தொடர்பாக திரு ஏ.செல்வராஜ், ஐ ஆர் எஸ் , (ஒய்வு பெற்ற வருமானவரி தலைமை ஆணையாளர்) அவர்கள் தினமணி தமிழ் நாளிதழில் பல நீண்ட கட்டுரைகளை எழுதி மிக சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். இதே போன்று திரு வா செ குழந்தைசாமி, (முன்னாள் இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைகழகம் (இக்னோ ) துணை வேந்தரும் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தில் மிக்க ஆர்வம் உள்ளவரும் ஆவார் ) அவர்களும் தினமணி தமிழ் நாளிதழில் எழுத்து சீர்திருத்தம் குறித்து பல விரிவான கட்டுரைகளை பலமுறை எழுதியுள்ளார். இவ்விருவரின் கருத்துக்களும் வெளியாகி சுமார் 30 ஆண்டுகள் ஆகியும் அவை நடைமுறை படுத்தப் பda vi ல்லை. எனவே இந்த எழுத்து சீர்திருத்தங்களை நடைமுறை paduththum podhu இந்த iruvarin karuththukkalai kavaniththu seyalpada vendukiren. thankal muyarchi vetripera iraivanaiyum, தமிழ் annaiyaiyum vendukiren .

  4. விநோத், தனித்தமிழ் ஆர்வலர்கள் தாங்கள் தான் தமிழைக் காப்பாற்றுவதாய் நினைக்கும்போது என்ன விளக்கினாலும் புரிந்துகொள்ள மறுப்பார்கள். என்ன செய்ய முடியும்?? இந்த முயற்சியைப் பாராட்ட வேண்டுமே தவிர, இப்படி வெறுத்து ஒதுக்கக் கூடாது என்பது எப்போத் தான் புரியுமோ?? :((((((

  5. என்னிடம் கிரந்த புத்தகங்கள் சில உள்ளன. முக்கியமாக இராமாயண புத்தகம் ஒன்றும் உள்ளது. கிரந்தம் படிக்க தெரிந்து கொள்ள ஆசை. IIT வலைத்தளத்தில் ஒரு டுடோரியல் இருக்கிறது. அதைக் கொண்டு கற்க முயற்சித்து வருகிறேன். தமிழில் ஏதேனும் புத்தகங்கள் உள்ளதா என்று அறிய ஆவல்.

    மேலும் ஒரு சந்தேகம். கிரந்த, மலையாள, சிங்கள எழுத்து முறை களுக்கு தொடர்பு உண்டா?

  6. //எந்த மொழியிலும் இந்தி, சமஸ்கிருதம், மராட்டி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பெரும்பாலான மொழிகளில் க, ச, ட,த ஆகிய நான்கு வர்க்கங்களிலும் நான்கு எழுத்துக்கள் உள்ள போதிலும் முதல் எழுத்தும், மூன்றாவது எழுத்துமே 100 சதவீதம் (விழுக்காடு) பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாவது மற்றும் நான்காவது எழுத்துக்கள் முற்றிலும் பயன்படுத்தப்படுவதில்லை.//

    You mean to say there are no words in these languages that has second and fourth variation of these alphabets or people don’t pronounce it the way it should be?

  7. //என்னிடம் கிரந்த புத்தகங்கள் சில உள்ளன. முக்கியமாக இராமாயண புத்தகம் ஒன்றும் உள்ளது. கிரந்தம் படிக்க தெரிந்து கொள்ள ஆசை//

    ஒ. நல்லது.

    என்னுடைய வலைத்தளத்தில் கிரந்த லிபி கற்க ஒரு தொடரை வரம் ஒரு முறை எழுதி வருகின்றேன். அதை காணலாம்

    https://www.virtualvinodh.com/grantha-lipitva

    // மேலும் ஒரு சந்தேகம். கிரந்த, மலையாள, சிங்கள எழுத்து முறை களுக்கு தொடர்பு உண்டா? //

    ஆம் உண்டு. கிரந்த எழுத்துமுரையில் இருந்தே இவை அனைத்தும் தோன்றின.

    தாய், கம்போடிய எழுத்து முறைகளும் கிரந்தத்தில் இருந்தே தோன்றின

  8. கிரந்தம் பற்றிய விவாதம் ஆரம்பமாகியிருப்பதை வரவேற்கிறேன். நான் இலங்கையில் வசிக்கும் அர்ச்சக மரபைச் சார்ந்தவன் என்பதை முன்னிட்டு இது தொடர்பில் இங்கிருக்கும் நிலைமையை விவரிக்க விரும்புகிறேன்.

    இலங்கையில் ஏராளமான சம்ஸ்கிருத ஆர்வலர்கள் இருக்கிறார்கள். ஆனால் நாகரம் வாசிக்கத் தெரிந்தவர்கள் மிகக் குறைவு ஆனால் பலரும் கிரந்தம் வாசிப்பார்கள் .தற்போதும் தினமும் ஒரு நூலாவது கிரந்தத்தில் இங்கு அச்சேறிக் கொண்டே இருக்கிறது.

    கும்பகோணம் ஸ்ரீ வித்தியா பிரஸ் என்ற பதிப்பகம் ஏராளமான கிரந்த நூல்களை அச்சேற்றியிருக்கிறது. பல என்னிடமும் உள்ளன. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கிளல் சம்ஸ்கிருத பாஷையைக் கற்பவர்கள் நாகரத்தையெ ப்ரதானமாகக் கற்கிறார்கள். (ஆயினும் அவர்களும் கிரந்தம் கற்க வேண்டும் என்றும் நியதி இருக்கிறது.) மற்றப்படி கோயிலல் நடக்கிற கும்பாபிஷேகம், மஹோத்ஸவம், விரத அனுஷ்டானங்கள், யாவுமே கிரந்த லிபியில் உள்ள பத்ததிகளை அடிப்படையாகக் கொண்டே ஆற்றப்பெற்று வருகின்றன.

    இது இப்படியிருக்க… இலங்கையிலிருந்து தமிழகத்து வேதபாடசாலைகளுக்கு கற்க வருகிற மாணவர்களும் கூட கிரந்தம் படிப்பிக்கிற பாடசாலையாகத் தேடிச் செல்வது வழக்கம். ஏனெனில் அவர்கள் மீணடும் இலங்கையில் வந்து குருத்துவப் பணி செய்ய முற்படும் இடத்து அனைத்துப் பத்ததிகளையும் கிரந்த லிபியிலேயே பயன்படுத்த வேண்டியிருக்கும்.

    நாகரம் வழக்கில் இல்லை என்று இல்லை. ஆனால் நாகரத்தை வியாகரணம் கற்று முறைப்படி சம்ஸ்கிருத பாஷையை கற்க விழைகிறவர்களே கற்க அர்ச்சகர்கள் (தம் குருத்துவப் பணிக்காகவே கற்பவர்கள்) கிரந்த லிபியையே தற்போதும் கற்று வருகின்றனர்.

    ஆயினும் இது வரை யுனிகொட்டில் கிரந்தம் இன்மையால் இவர்கள் யாவரும் பெரும் இடர்ப்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கையிலுள்ள வேதபாடசாலைகளில் கிரந்த லிபியே முக்கியமாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.

    கிரந்தத்தை அறியாதவர்கள் சம்ஸ்கிருதத்தை முழுமையாக அறியாதவர்கள் என்ற எண்ணப்பாங்கும் இங்குண்டு. பரவலாக அனேகமான ப்ராம்மணச் சிறுவர்கள் யாவரும் கிரந்த லிபியை வாசிக்க வல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நாகர லிபி பெர்தவில் வழக்கில் இல்லை.

    தற்போது இலங்கைப் பிராம்மண சமூகத்தில் எந்த ஒரு விசேஷமாகிலும் ஒரு கிரந்த லிபி நூல் வெளியிடும் ஸம்ப்ரதாயம் உண்டாகியிருக்கிறது. இவற்றின் ஊடாக இன்றும் இலங்கையில் கிரந்த லிபி வாழும் எழுத்துருவாக இருந்து வருகின்றது. இந்நிலையே 1950களுக்கு முன் தமிழகத்திலும் ஓரளவுக்கு இருந்ததாக கருதுகிறேன்.

    இவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றினையும் உள்வாங்கி இவ்விஷயத்தை பற்றி ஆராய வேண்டுகிறேன்.

    சிங்கள மொழி என்பது தமிழ், சம்ஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளின் கலப்பில் உருவானதாகக் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக குக்குட என்றால் சம்ஸ்கிருத்தில் சேவல், சிங்களத்தில் குக்குல என்றால் சேவல் இது ஒரு உதாரணம் இப்படி ஏராளம் ஏராளம் சொற்கள் இரண்டிலுமுள்ளன.

    தேவாலய, உத்ஸவ, பகவன், சரணம், பூஜாகாரிய, பூஜக, ஆராதனா, மஹாசார்ய, வித்யாலய, குலபதி, சர்வ கலாசாலய, இப்படி பல்வேறு சம்ஸ்கிரத சொற்கள் சிங்களத்திலும் நிறைந்திருக்கின்றன.

    ஆக, கலப்பில் தோன்றிய இம்மொழியில் கிரந்த எழுத்துருவின் தாக்கம் நிச்சயமாக இருக்கும் என நம்பலாம்.

    வினோத்ராஜன் அவர்களின் ஆய்வு மேம்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

  9. மதிப்பிற்குரிய மயூரகிரி சர்மா அவர்களுக்கு,

    தங்கள் கட்டுரை மிக விரிவாக பல தகவல்களை தந்துள்ளது. நன்றி. தாங்கள் ஏற்கனவே எழுதிய பல கட்டுரைகளையும் படித்தேன், தாங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதம் மிகவும் அற்புதமாகவும், படித்து முடித்தவுடன் ஒரு சொல்லமுடியாத மகிழ்ச்சியை படிப்போர் மனதில் உண்டாக்கும் விதத்திலும் எழுதுகிறீர்கள். இறை அருளால் தங்கள் பணியும் ,பாணியும், தொடரட்டும்.

    வணக்கம் பல.

  10. அன்புள்ள குமுதன்

    என் கடிதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது எழுத்துக்களின் பயன்பாடு நூறு சதவீதம் இல்லை என்று தெரிவித்துவிட்டேன். அது தவறு தான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. முதலாவது மற்றும் மூன்றாவது எழுத்துக்களின் பயன்பாடு சராசரியாக 20:3 என்ற விகிதத்தில் எழுத்தில் உபயோகப்படுவதாயும் ஆனால் உச்சரிப்பில் தமிழுக்கு முதல் மற்றும் மூன்றாம் எழுத்துக்கள் மட்டுமே போதுமென்று வல்லுனர்கள் கருத்து நான் தெரிவித்த கட்டுரைகளில் உள்ளது.நிற்க தமிழில் புதியதாக கற்போரும், பள்ளிகளில் படிக்கும் மாணவ சமுதாயமும் சரியான உச்சரிப்பு செய்ய தமிழை பொறுத்த மட்டில் முதலாவது மற்றும் மூன்றாவது எழுத்துக்களே போதுமானது என்று பலரும் தீர்க்கமாக கருதுகிறார்கள். இரண்டாவது மற்றும் நான்காவது எழுத்துக்களின் உச்சரிப்புக்கும் முறையே அவற்றுக்கு முந்திய எழுத்துக்களுக்கும் உள்ள உச்சரிப்பு வித்தியாசம் சிறிது இருந்தபோதும் தமிழில் அவற்றின் தேவை இல்லை.

  11. // ஆக, கலப்பில் தோன்றிய இம்மொழியில் கிரந்த எழுத்துருவின் தாக்கம் நிச்சயமாக இருக்கும் என நம்பலாம். //

    விக்கிபீடியாவில் உள்ள இந்த கட்டுரையைப் பார்க்கவும்:
    https://en.wikipedia.org/wiki/Grantha_script

    குறிப்பாக, அதில் உள்ள இப்படத்தைக் காணவும்: https://upload.wikimedia.org/wikipedia/commons/3/3e/Grantha_ConsComp.gif

  12. எத்தனை தமிழர்களுக்கு நீங்கள் சமஸகிருதத்தை கற்று தந்திருக்கிறீர்கள்.
    சமஸகிருதம் என்பது ஒரு இனத்திற்கான மொழி என்று வைத்திருந்து விட்டு இப்போது மொழி அழிந்து போய்விடுமோ என்று கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்.
    முதலில் ஜாதி ரீதியான உங்கள் பார்வையை மாற்றுங்கள்
    மனிதர்கள் அனைவரும் சமம் எனும் பார்வையை நீங்கள் வளர்த்துக்கொண்டால் உங்கள் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை வரும்.

    மேலும் மலைத் தமிழர்களாய் இருந்த மலையாள மக்கள் இன்று மொழி கலப்புக்கு ஒப்புக்கொண்டதனால் இன்று மலையாளம் என்ற புது மொழிக்கு சொந்தக்காரர்களாக மாறி விட்டார்கள்.

    ஆகவே தமிழில் மொழி கலப்பையோ எழுத்து கலப்பையோ சேர்க்காமல் இருந்தால் மட்டுமே தமிழ் வாழும் இல்லை யென்றால் மலையாளம் போல தமிழும் கொலையாளம் என மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    பாமர ஜீவன்

  13. தவறு பாமரஜீவன். நீங்க சரியாய்ப் புரிஞ்சுக்கலை. அந்தக் காலங்களிலும் சரி, இந்தக் காலங்களிலும் சரி, சம்ஸ்கிருதம் பொது மொழியாகவே இருந்து வந்திருக்கிறது. சிற்பிகள், ஆயுர்வேத வைத்தியர்கள், பரத நாட்டியம் கற்பிக்கும் ஆசான்கள் எனப் பலரும் சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த ஞாநமும், அறிவும் பெற்றே கற்பித்தார்கள், கற்பிக்கின்றனர். இப்போதும் சிற்ப சாஸ்திரக் கலைஞர்களின் சமஸ்கிருத அறிவைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பல ஸ்தபதிகளின் சம்ஸ்கிருத அறிவையும் ஞாநத்தையும் பார்த்து வியந்திருக்கிறேன். குஜராத் ஜாம்நகரின் ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலும் வெளிநாட்டு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் சமஸ்கிருதம் பயில்கின்றனர். இங்கேயும் பல அரசியல்வாதிகளின் குடும்பத்துச் சிறுமிகள் பரதம் பயிலும்போது சமஸ்கிருதம் படிக்கின்றனர் என்பதும் உண்மை.

  14. யூனிகோட்டின் துவக்க கால விவாதங்களில் தமிழிற்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை. இது பற்றி இணையத்திலும் சிலர் எழுதினர்.
    தற்போது வரும் இந்த நீட்சி வேற்று மொழிச் சொற்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே பலனளிக்கும். உண்மையில் தமிழுக்கு ஊறே. ‘மணிப்ரவாளத்திற்கு’ கட்டியம் கூறுகிறார்கள்

  15. இல்லை சகோதரி கீதா சாம்பசிவம்

    நீங்கள் சொல்லும் சிற்பிகள், ஆயுர்வேத வைத்தியர்கள். பரதநாட்டிய கலைஞர்கள் எல்லோரும் சமுகத்தின் சிறுபான்மையானவர்கள்.
    நான் சொல்வது பெரும்பான்மை மக்களைப் பற்றி.
    ஒரு மொழி பெரும்பான்மை மக்களை சென்றடைந்தால் மட்டுமே அது வாழும்.
    ஒரு மொழி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் மட்டும் பயன்படுமானால் அந்த மொழி பெரும்பான்மை பெற்ற மக்களிடையே நம்பகத்தன்மையை இழக்கும்.

    ஆகவே சமஸ்கிருதம் தேவ மொழி என்று நீங்கள் நினைத்தால் ஏன் அனைவருக்கும் அந்த மொழியை கற்றுக் கொடுக்க பயப்படுகிறீர்கள்.
    வேதத்தை அனைத்து ஆதி திராவிடர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் கோயில் குருக்களாக மாற்ற உங்கள் மனம் இடம் தருமா ?

    முதலில் சமஸ்கிருதத்தை அனைவரும் பயன்படுத்தும மொழியாக மாற்றுங்கள். அதறகு முன்பு அனைவரையும் சமமாக பாவிக்கின்ற மனதை பெற இறைவனை வேண்டுங்கள்.

    பாமர ஜீவன்

  16. திரு வினோத் அரசன் அவர்களின் கட்டுரையைப் படித்தேன்.

    காதில் பூ வைக்கப் பார்க்கிறார் திரு வினோத். பல வழிகளில் தமிழைக் குலைக்க முற்சிக்கும் இவர்கள், தமிழை முற்றிலும் அழிப்பதற்கு புது வியுகத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். எதிரில் மோதினால்தானே விழித்துக்கொள்வார்கள் இப்படி புழக்கடை வழியாக புகுந்துவிட்டால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய செயலை, அதாவது தமிழை ஒரேயடியாக குழித்தோண்டிப் புதைப்பதை, தடங்களின்றின்றி செய்துவிடலாமென்று திட்டமிட்டுச் செயல்பட்டிருகின்றனர். கிரந்தத்தை வேற்றுருவில் நுழைக்கும் முயற்சியே இது.

    தமிழின் ஒலிமுறை மிகவும் பழமையானது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழை எழுதவும் பேசவும் இது போதுமானது. அயற்சொற்கள் வந்தால் அதை எப்படி கையாள்வதென்று விதிமுறைகள் இருக்கின்றன. அதைத்தான் பின்பற்ற வேண்டும். மணிபிரவாலம் தலைத்தூக்கிய போது தாறுமாறாக தமிழில் கிரந்த எழுத்தைக் கலந்து எழுதி தமிழைச் சிதைத்தனர். பின்னர் விழித்துக் கொண்ட சில தமிழ்ப்பெரியார்கள் இதை நடக்கவிடாமல் தடுத்து ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அவர்கள் முயற்சியால் பல கிரந்த எழுத்துகள் தமிழில் வழக்கற்று போயின ஒரு சில தங்கிவிட்டன. அவைகளையும் முற்றிலும் நீக்கி தமிழை தமிழெழுத்துகளால் மட்டுமே எழுதவேண்டு மென்பதுதான் பல தமிழ் அறிஞர்களின் உள்ளக்கிடக்கை.
    ஆனால் கண்ணில் மண்ணைத் தூவி மீண்டும் கிரந்த ஒலிகளை வேறு வடிவில் புழக்கடைவழியாக புகுத்தும் முயற்சிதான் இந்த சர்மா-வினோத் குழுவின் செயல்பாடுகள். இதில் சிறிதளவுகூட ஐய்யமில்லை. இதைக் கண்டுகொள்வதற்கு இராகட் விஞ்ஞானி தேவையில்லை

    வடபாடயைத் தமிழில் எழுத விரும்புகிறார்களாம் அதற்காக இந்த மாற்றத்தை தமிழ் ஒருங்குறியில் செய்ய விரும்புகிறார்களாம். இதனால் தமிழுக்கு எந்தவித கேடுமில்லையாம். விளைந்தால் நன்மைதானாம் ஆகா!! என்ன பரந்த மனப்பான்மை. என்ன ஒரு கரிசனம். ஆடு நனைகின்றதே யென்று ஓநாய் அழுததாம்.
    போதுமையா உங்கள் கரிசனம். உங்கள் அன்பு மழையில் நாங்கள் நனைந்தது போதும். உங்கள் உதவி எங்களுக்கு தேவையில்லை. நன்றி.
    வடமொழியை எழுத தேவநாகிரி இருக்கிறது அத்துடன் வைதிக குறிகளும் எழுத்துகளும் வடமொழியை ஒசைகுறைவின்றி எழுத சேர்க்கப் பட்டு விட்டன. இது பற்றாதென்றால் மேலும் கிரந்தம் இருக்கின்றது.. ஒரு மொழியை கற்றுகொள்ள , எழுதப் படிக்க அதற்கென்றிருக்கும் எழுத்து முறையைப் பயிலுவதுதான் முறை. அதை விடுத்து நான் தமிழில் தான் வடபாடையை எழுதுவேன் அதற்காக தமிழில் மாற்றங்கள் செய்யுங்களென்று சொல்லுவது பகுத்தறிவிற்கு ஒத்துவருவதாக தெரியவில்லை. நாளை சீனகாரன வந்து சீனத்தை வடமொழியில் எழுத வேண்டும் அதற்கான மாற்றத்தை செய்யுங்களென்று கூறினால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? இதை நான் ஏட்டிக்குப் போட்டியாக எழுதவில்லை. உண்மையில் இப்படியொரு நிலைவந்தால் என்ன செய்வீர்கள்.
    சமற்கிருதத்தை எழுதுவதற்கு ஒன்றிற்கு இரண்டு வித குறியீடுகள் இருக்கின்றன.( தேவநாகிரி, கிரந்தம்) தமிழை விட்டு விடுங்கள்.

    நீங்கள்தான் அறிவாளி. தமிழர்களெல்லாம் மடையர்கள் என்று நினைக்காதீர்கள். யாரும் அறியாமல் புழக்கடை வழியாக கிரந்தத்தை வேறு உருவில் மீண்டும் தமிழில் புகுத்திவிடலாமென்று கனவு காணாதீர்கள்.
    மிகப் பல தமிழ் அறிஞர்கள் இணைய தொழில் நுட்பம் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். அதனால் தமிழர்களே அறியாமல் ஏன், தமிழ் நாடு அரசே அறியாத வண்ணம் , கமுக்கமாக இதை செய்து விடுவதுதான் உங்கள் நோக்கம்.

    . இப்பொழுது வேண்டுமானால் ஒருங்குக் குறியை பலர் அறியாதிருக்கலாம். நாளடைவில் இது எல்லாராலும் ஏற்கப்பட்டுவிடும். தமிழ்நாடு அரசும் ஒருங்குக்குறியை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஒருங்குறியில் ஒரு முறை ஒரு குறியை ஏற்றிவிட்டால் மீண்டுமதை நீக்க முடியாதென்பதை நான்றாக அறிந்துள்ளதால் எப்படியாது இதை செய்து முடிக்கத் துடிக்கின்றீர்கள்

    ஏமாந்தக்காலத்தில் ஏற்றம் கொள்ள நினைக்காதீர்கள்.

    இதை நான் ஏதோ உணர்ச்சி வேகத்தில் எழுதினதென்று கதை கட்ட வேண்டாம். உள்ளதைதான் எழுதியிருக்கிறேன்.
    அன்புடன்
    பிலிப்

  17. பாமர ஜீவனே, பாமர ஜீவனே,
    கீரிப்பட்டி, பாப்பாபட்டி என்ற ஊர்கள் தமிழ் நாட்டிலே இருக்குதாம்.
    அங்கே சமஸ்க்ருதம் என்றால் வீசை எவ்வளவு என்று கேட்கும் பச்சை, மறத் தமிழர்கள் இருக்குறாங்களாம்.
    அவங்க பஞ்சாயத்து தேர்தலில் கீழ் சாதியினர் வெற்றி பெற்றாலும் பதவி வகிக்க அனுமதிக்க மாட்டாங்களாம் .
    அய்யா சமூகம் கொஞ்சம் அவங்களையும் கவனித்து புத்திமதி சொல்லவேணும்.

  18. அற எஸ் எஸ் என்று சொல்லப்படும் ஒரு இயக்கத்தின் கிளை இயக்கமான ‘சம்ஸ்க்ருத பாரதி ‘ நாடு பூராவும், ஏன் உலகத்தில் மற்ற சில நாடுகளிலும் சம்ஸ்க்ருத பேச்சு மொழிப் பயிற்சி அளித்து வருகிறது.
    அதில் பயிற்சி பெற்று,மிக அழகாக சம்ஸ்க்ருதம் பேசும் கட்டிடத் தொழிலாளியின் மகளையும் , தச்சு வேலை செய்பவரின் மகனையும் நான் கண்டு கேட்டு ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.

  19. பாமர ஜீவன், ஒரு தவறான புரிதலில் இருக்கிறீர்களோ? யாரும், எங்கேயும், எப்போவும் சம்ஸ்கிருத மொழியை எவருக்கும் கற்றுக்கொடுக்கப் பயப்பட்டதில்லை, தயங்கியதும் இல்லை. இப்போவும் இலவச வகுப்புகள் நடக்கின்றன. எவர் வேண்டுமானாலும் சேரலாம். மத்திய அரசே நடத்துகிறது. கேந்திரிய வித்யாலயாவில் படிக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்களும் சம்ஸ்கிருதம் படிப்பார்கள். ஜாதி, மத, இன வேறுபாடுகள் இல்லாமல். இங்கேயும் அப்படி நவோதயா பள்ளிகளை வரவிட்டால், கிராமத்துக் குப்பனும், சுப்பனும் கூடப் படிக்கலாமே?? படிக்க விடலாம் அல்லவா?? முதலில் நவோதயா பள்ளிகளைக் கிராமங்களில் வர விட்டால் அதற்கு அப்புறம் நிச்சயம் நம் தமிழ்நாட்டு மாணாக்கர்களை உலக அளவில் போட்டி போடும் அளவுக்குத் தயார் செய்ய முடியும். நவோதயா பள்ளிகளில் ஹிந்தியும், சம்ஸ்கிருதமும் இருக்கிறது என்பதற்காக எந்த முற்போக்கு இனத்தவரும் அதைத் தடுக்கவில்லை. தடுப்பது அடுத்தடுத்து வரும் தமிழக அரசுகளே.

    கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பதும் சாமானியமான வேலை அல்ல. அர்ப்பணிப்பு உணர்வு முதலில் இருக்கவேண்டும். மேலும் அலைச்சல் அதிகமாய் இருக்கும். வேலை ஒன்றும் சுலபமானது அல்ல. கர்ப்பகிரஹத்தில் அரை மணி நேரம் நின்று பார்த்தால் தெரியும். விசேஷ தினங்களில், அபிஷேஹங்களில் நிதானப் போக்கு, கவனம், ஒருமுகத் தன்மை எல்லாம் வேண்டும். வெளியே சாதாரணமாய்ப்பேசுவது போல் தோன்றினாலும் பல அர்ச்சகர்களும், உள்ளூர அர்ப்பணிப்பு உணர்வோடேயே பணி புரிவார்கள். சம்பளம் எதிர்பார்க்காமல் செய்யவேண்டும். நியம, நிஷ்டைகள் உண்டு. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனையும் கடைப்பிடித்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் அர்ச்சகராய் இருக்கலாம். பல கோயில்களிலும் இப்போது இப்படிப் பலரையும் காணவும் முடிகிறது. உங்கள் கண்களில் படவில்லைபோலும்.

  20. சன்ஸ்க்ருதம் பழங்காலத்தில் மக்கள் பெருமளவில் பேசும் ஒரு வழக்கு மொழியாக இருந்தது.
    நான் எப்போதோ புத்தகத்தில் படித்தது:
    ஒரு கவிஞர் ஒரு ராஜ சபைக்கு வருகிறார்.
    மன்னர் அவரை ‘நீர் என்ன செய்கிறீர்?’ என்று கேட்கிறார்.
    அதற்கு அவர் ‘कवयामि,वयामि,यामि’ – kavayaami, vayaami, yaami
    என்று விடை அளிக்கிறார்.
    அதாவது ‘ கவிதை எழுதுகிறேன், நெசவு ( அவரது தொழில்) செய்கிறேன், வாழ்க்கையை ஒட்டுகிறேன் !
    ஒரு நெசவு செய்யும் கலைஞர் சன்ஸ்க்ருதத்தில் கவிதை எழுதும் ஆற்றல் கொண்டிருந்தமைக்கு இது சான்றாக விளங்குகிறது.

  21. சு பாலச்சந்திரன்

    சமஸ்கிருதம் அழிந்து போய்விடுமோ என்று யாரோ பயப்படுவதாக ஒரு அன்பர் தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் டெக்னிகல் ஜார்கன் (technical jargan) என்று சொல்லுவார்கள். அது என்னவெனில் ஒரு துறையில் உள்ளோர் மட்டுமே பயன்படுத்தும் சொற்கள் ( துறை சொற்கள்)ஆகும். அவை சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படாதவை ஆகும். அவை சாதாரண மனிதன் பயன் படுத்தாமல் சிறுபான்மையினரால் உதாரணமாக வழக்கறிஞர்கள், மருத்துவ நிபுணர்கள், பொறியாளர்கள் ஆகியோர் பயன்படுத்துகின்றனர். சிறுபான்மையினர் பயன்படுத்துவதால் அவை அழிந்து போவதில்லை. பெரும்பான்மையினர் பயன்படுத்தும் எல்லாமும் நீண்டநாள் நீடிப்பதும் இல்லை. சமஸ்கிருதம் எந்தக்காலத்திலும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் மொழியாக இருந்ததில்லை. அது இறைவழிபாடு தொடர்பாக பயன்படுத்தப்பட்ட துறை சொற்களை தன்னகத்தே கொண்டிருந்தது. அவ்வளவுதான். மற்றபடி சமஸ்கிருதம் என்றும் அழியாதது ஆகும். சமஸ்கிருதம் எல்லோரும் கற்றுக்கொள்ளலாம். எல்லா சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்கும் தமிழக அரசின் திட்டப்படி பலர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு கோயில்களில் பணி வழங்காதது யார் செய்யும் தாமதம் ?

    கோயில்களில் குருக்களாக பணிபுரிய சமஸ்கிருதம் தேவையில்லை, முழு வேதமும் தேவையில்லை. கோயில்களில் அன்றாட பூஜை மற்றும் திருவிழாக்காலங்களில் விக்கிரகங்களுக்கு திருநீராட்டு, அலங்காரம், பதினாறு வகையான உபசாரங்கள் ஆகியவற்றிலும், கோயில் குடமுழுக்கு தொடர்பான மந்திரங்களும் மட்டும் தெரிந்தால் போதுமானது.ஆகமங்களில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அந்த பணியை செய்ய முடியும். பிராமணர்கள் என்ற சாதியிலோ, அய்யங்கார்கள் என்ற வைணவ சாதியிலோ பிறந்தவர்கள் எல்லோரும் கோயிலில் பூஜை செய்ய முடியாது. ஆகம பயிற்சி பெற்றோரே இந்த பணிக்கு தகுதியானவர்கள். மேலும் ஆதி சைவர்கள் எனப்படும் இனத்தவரே சிவன் கோயில்களில் பூஜை செய்கின்றனர். அவர்களே குருக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ராமனும் கிருஷ்ணனும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களே தெய்வமாக வணங்கப்படுகின்றனர். பிராமண வகுப்பிலே பிறந்த இராவணன் பிறன்மனை நாடிய குற்றத்திற்காக மிக இழிந்தவனாகவே என்றும் கருதப்பட்டான். எதிர்காலத்திலும் அவன் மிக மிக இழிந்தவனாகவே கருதப்படுவான்.

    பாமர ஜீவன் அவர்களுக்கு நேரமும் ஆர்வமும் இருந்தால் சென்னை சமஸ்கிருத பாரதி நடத்தும் இலவச வகுப்பில் சேர்ந்து சமஸ்கிருதம் பயிலலாம். ஜாதியோ, மதமோ ஒரு தடை அல்ல. அனைவரும் நம் மதத்தில் சமமாகவே பாவிக்கப்பட்டுள்ளது.

  22. ஸ்ரீதரன்,
    //சன்ஸ்க்ருதம் பழங்காலத்தில் மக்கள் பெருமளவில் பேசும் ஒரு வழக்கு மொழியாக இருந்தது.
    நான் எப்போதோ புத்தகத்தில் படித்தது://

    இதன் விவரம் தர இயலுமா?

    நான் அறிந்தவரை பிராகிருதமே வழக்கு மொழியாகவும் பின் பல வடிவங்களில் கிளைத்த மொழியாகவும் சொல்லப்படுகிறது.

  23. கிரந்த ஆர்வலர்களுக்கு ஒரு முக்கியத்தகவல்

    https://groups.yahoo.com/group/agathiyar/message/50472

    அன்பர்களே,

    தென்கிழக்காசியாவில் பல
    சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள்
    காணப்படுகின்றன. சில
    கல்வெட்டுக்கள்
    சம்ஸ்கிருதமும் புராதன மலாய்
    மொழியும் கலந்ததாகக்
    காணப்படும்.
    கீழ்க்கண்ட லின்க்கில்
    காணப்படும் கல்வெட்டு கிபி
    760ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.
    எப்படித் தெரியும்?
    சக சகாப்த ஆண்டு 682 என்று
    குறிக்கப்பட்டிருக்கிறது.
    லிபி – அதாவது எழுத்து – காவி
    என்னும் லிபி.
    அந்தக் காலத்தில் தென்
    கிழக்காசியாவில் புழங்கிய
    முக்கிய லிபி பல்லவ கிரந்தம்
    எனப்படுவது.
    ஆயிரத்து ஐந்நூறு
    ஆண்டுகளுக்கு முற்பட்ட
    தென்கிழக்காசியாவில் பல
    நாடுகள்
    இருந்தன. இவை காம்போடியா
    வியெட்நாம் தாய்லந்து, தென்
    பர்மா, மலாயா, போர்னியோ,
    ஜாவா, சுமாத்ரா,
    பிலிப்பைன்ஸின் பகுதிகள் ஆகிய
    பெரும் பிரதேசத்தில் இருந்தன.
    பல்லாயிரக்கணக்கான
    தீவுகளிலும்
    தீபகற்பங்களிலும் இவை
    இருந்தன.
    இவை அத்தனையிலும் பல்லவ
    கிரந்த லிபியில் சமஸ்கிருதம்
    அல்லது மலாய் கலந்த
    சமஸ்கிருதம் இருந்தது.
    ஆகவே க்மெர் நாட்டு ஆசாமி
    சம்ப்பா ஆசாமியுடனும்
    ஜாவாக்காரனுடனும்
    கடாரத்தானுடனும் அட்சய
    நாட்டானுடனும்
    ஸ்ரீவிஜயத்தானுடனும் தொடர்பு
    கொள்வதில்
    சிரமமில்லாமல் இருந்தது.
    நல்லவேளை. அந்தக் காலத்தில்
    இந்த யூனிக்கோடு/கிரந்த/தமிழ்
    தகராறு எல்லாம்
    அப்போது இல்லை. இல்லையென்றால்
    குழப்படி செய்து கந்தர்கோலம்
    ஆக்கியிருப்பார்கள்.

    இந்தக் கல்வெட்டை
    கஞ்ஜுருஹான் கல்வெட்டு என்று
    குறிப்பிடுவார்கள்.
    டினாயா என்னும் இடத்தில்
    கண்டுபிடிக்கப்பட்டது. டினாயா
    என்பது கிழக்கு ஜாவாவில்
    உள்ள இடம்.
    இந்தக் கல்வெட்டை காவி
    என்னும் லிபியில்
    எழுதியிருக்கிறார்கள்.
    காவி என்பது பல்லவ
    கிரந்தத்திலிருந்து தோன்றிய
    லிபி. ஜாவாவில் இந்த லிபியை
    இன்னும் பயன்படுத்துபவர்கள்
    இருக்கிறார்கள்.
    கல்வெட்டின் லிபி புராதனக்
    காவி.

    இந்தக் கல்வெட்டை
    எழுதுவித்தவர் கஜாயனா என்னும்
    மன்னர். கிழக்கு ஜாவாவில்
    அந்தக் காலத்தில் சிங்கஸோரி
    என்னும் வளமுள்ள நாடு
    இருந்தது. அது ஹிந்து-பௌத்த
    சமயச் சார்புள்ள நாடு. அந்த
    நாட்டைத் தோற்றுவித்தவர்
    கஜாயனா என்னும் மன்னர்.
    கிழக்கு ஜாவாவிலேயே மிகப்
    புராதனமான கல்வெட்டு இதுதான்.
    இதில் காணப்படும் விஷயம்தான்
    மிகவும் விசேஷமானது.
    தென்னாட்டு அகத்திய
    முனிவருக்காக ஓர் ஆசிரமத்தை
    கஜாயனா மன்னர் நிறுவினார்
    என்னும் விஷயத்தை அந்தக்
    கல்வெட்டு சொல்கிறது.

    https://s1229.photobucket.com/albums/ee470/JayBee2741/Inscriptions/?action=view&c\
    urrent=Kanjuruhannscription1.gif

    அன்புடன்

    ஜெயபாரதி

  24. “முதலில் சமஸ்கிருதத்தை அனைவரும் பயன்படுத்தும மொழியாக மாற்றுங்கள். அதறகு முன்பு அனைவரையும் சமமாக பாவிக்கின்ற மனதை பெற இறைவனை வேண்டுங்கள்”.
    -பாமர ஜீவன்

    முதலில், இந்த சமமாக பாவிப்பது என்பது ஒரு மொழி சம்பந்தப்பட்டது அல்லது ஒரு ஜாதியினர் மட்டுமே சம்பந்தபட்டவர் என்பது இல்லை தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்படுபவர்களில்கூட ஒரு ஜாதியினர் மற்றொரு ஜாதியை தமக்குச் சமமாக பாவிப்பது இல்லை. இது சமுதாய அவலம்; மாறவேண்டும்; பெருமளவு மாறியிருக்கிறது.

    இரண்டாவது; யாரோ ஸம்ஸ்க்ருதத்தை கற்றுக்கொடுக்ககூடாது என்று தன்னுடைய லாக்கரில் பூட்டி வைத்திருப்பதுபோல் சொல்கிறீர்கள்; யதார்த்தம் அப்படியில்லை. தமிழ்நாட்டில் பல அரசு கல்லுரிகளிலேய ஸம்ஸ்க்ருததுறை இருந்தது; அங்கு ஜாதிரீதியாகவா கர்பிக்கப்பட்டது? ஆனால் பெருமளவில் சேர்க்கையில்லை(இதற்கு அரசியல் காரணமும் உண்டு); இன்றைக்கு, சென்னை பல்கலைக்கழகத்திலேயே அந்த இலாகா இருக்கிறது; தமிழ்நாட்டில் நடக்கும் பல ஓரியன்டல் பள்ளிகளில் ஸம்ஸ்க்ருதம் உள்ளது; இவை எதிலும் சாதி பார்த்து சேர்ப்பதில்லை; ஸம்ஸ்க்ருத பாரதி எனும் நிறுவனத்தில் பல ஸம்ஸ்க்ருத ப்ரசாரகர்களே நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் சாதியினர் இல்லை. அந்த நிறுவனம் நடத்தும் வகுப்புக்களில் 80 சதமானவர்கள் நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் சாதியினர் இல்லை.

    மூன்றாவது, நாம் தெருவெங்கும் தமிழோ தெலுங்கோ ஹிந்தியோ பேசுகிறோம் என்றால் அது நம் தாய் மொழி; ஆனால் ஸம்ஸ்க்ருதம் எந்த ஒரு குழுவினர்க்கும் தாய் மொழி இல்லை. அதை நாம் பேசும் எந்த மொழியுடனும் ஒப்பிடமுடியாது. அது, சங்க தமிழைப்போல்அறிவுஜீவிகளின் மொழி(எந்த ஜாதியையும் கற்பித்துக்கொள்ளாதீர்கள்). நம்மில் எத்தனைபேருக்கு சங்க தமிழ்ப்பாடல்களை பதவுரை உதவியில்லாமல் படிக்கத்தெரியும்? அதற்காக அது வழக்கொழிந்தது என்று ஒதுக்கிவிடலாமா?

    அது சரி, இன்றக்கு தமிழ்நாட்டில் எத்தனைபேர் கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாகவேனும் எடுத்து படிக்க முயலுகிறார்கள்! தமிழை சிறப்பாகப் படிப்பதை அப்புறம் பார்க்கலாம்! அப்படிப் படித்தவர்களில் எவ்வளவுபேர் நல்ல தமிழில் சேர்ந்தார்போல் ஒரு பக்க அளவிலாவது எழுதவோ பத்து வாகியங்களாவது பேசவோ இயன்றவர்களாக இருக்கிறார்கள்! தமிழை வழக்கொழிகின்ற மொழி என்று சொல்லிவிடலாமா? நண்பரே திறந்தமனத்துடன் அணுகுங்கள்; திக மனது வளர்ச்சிக்குத்தடை.
    -கண்ணன், கும்பகோணம்.

  25. சமஸ்கிருதம் , தமிழ் , ஆங்கிலம் என்று உலகிலுள்ள எல்லா மொழிகளுமே பலவேறு காலக்கட்டங்களை தாண்டியே வந்துள்ளன. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் இன்று இங்கிலாந்தில் இல்லை.அது வழக்கொழிந்து போய்விட்டது.இப்போது இருப்பது மாடர்ன் இங்கிலீஷ் என்று சொல்லி இப்போது உள்ள நடையில்தான் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. எனவே அந்த பழைய ஆங்கிலம் செத்துவிட்டதாக கூறமுடியுமா? தவறான பொய் பிரச்சாரங்கள் செய்யப்பட்டதால் அதை நம்பி, சமஸ்கிருதம் ஒரு சாதியினரின் மொழி என்று சிலர் நம்புகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சமஸ்கிருதம் கற்றவர்கள் எவராயினும் அவர்களின் தாய் மொழி இந்தியே ஆகும். ஆந்திராவில் உள்ள சமஸ்கிருதம் கற்றவர்கள் எவராயினும் அவர்களின் தாய் மொழி தெலுங்கே ஆகும். கேரளத்தில் உள்ள சமஸ்கிருதம் கற்றவர்கள் எவராயினும் அவர்களின் தாய் மொழி மலையாளமே ஆகும். தமிழகத்தில் உள்ள சமஸ்கிருதம் கற்றவர்கள் எவராயினும் அவர்களின் தாய் மொழி தமிழே ஆகும்.சமஸ்கிருதம் இந்தியா முழுமைக்கும் பொதுவான பொக்கிஷம் ஆகும். அது தனி நபர் சொத்தல்ல.

  26. முதலில் சமஸ்கிருதத்தை “சமஸ்கிருதம்” என்று கூறாமல் “வடமொழி” என்று சொல்லும் முறையைத் தவிர்க்க முயலலாமே ! “திராவிட மொழி”, “வடமொழி” ஆகிய தொடர்களையும் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் “திராவிடம்” என்பது ஒரு இனம் என்பது போலும் கற்பிதமும் செய்துகொள்வது எப்படிப்பொருந்தும்? “திராவிடம்” என்பது “தென்”னிந்திய மொழிகளைக் குறிக்குமானால், “திராவிட” என்னும் பதம் “தெற்கத்திய” என்றுதான் பொருள்படும் என LKG மாணவன்கூட அறிவானே ! பிறகு ஆரிய-திராவிட இன வாதம் ஏது?

  27. இராதாகிருஷ்ணன்,
    இந்தியாவின் வட மாநில மொழிகளில் சம்ஸ்ரிதத்தின் தாக்கம் தெற்கை விட பெரிதல்லவா? அதனால் அதை வட மொழி என்று குறிப்பிடுகிறேன்.
    திராவிட என்பது இனவாதம் இல்லை; ஆயினும் அது புவியல், மொழி பிரிவைக் குறிப்பிடுகிறது. இருப்பினும் தாங்கள் கூறியது போல் பல்லாண்டுகளாக இன வாதமே பேசப்பட்டதால் ‘திராவிட’ பயன்பாட்டைத் தவிர்க்கிறேன்; மொழியியல் பகுப்பு திராவிட என்று கூறுவது சரியானாலும்.

    நீங்கள் இக்கேள்வியை வைத்தமைக்கு நன்றி.

  28. பாணினி ‘அஷ்டத்யாயி’ எழுதிய பின் செம்மொழியாக சம்ஸ்க்ருதம் உரு மாறியது.அது பண்டிதர்கள், குருமார் கள் மற்றும் ஆட்சி யாளர்களின் மொழியாக இருந்தது

    அதுவே ப்ராக்ருதமாக உரு மாறி மக்களின் மொழியாக இருந்தது
    புத்தரின் காலம் முதல் குப்தர் காலம் வரை அது பேச்சு வழக்கில் இருந்தது.

  29. ‘திராவிட’ என்பது இந்தியாவின் தென் பகுதியில் வழங்கப்படும் மொழிகளைக் குறிக்கலாம். ஆனால், சமஸ்கிருதம் எப்படி வட மொழியாகும்?

    தெற்கில் சமஸ்கிருதத்தின் தாக்கம் குறைவானதென்றால், வடக்கு மாநிலங்களைவிட இங்கு ஏன் ‘சமஸ்கிருதப் பகை’ வளர்கிறது? எத்தனை வட மாநிலங்களில், அல்லது, தமிழகம் தவிர்த்த தென் மாநிலங்களில், சமஸ்கிருதம் இந்த அளவு எதிர்க்கப்படுகிறது?

    தமிழகம் தவிர வேறு தென் மாநிலங்கள் எதிர்க்காத சமஸ்க்ருதத்தை ‘வடமொழி’ எனச் சொல்வதைத் தவிர்க்கவேண்டும் என்பதே என் நிலை. வடமாநிலங்களில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் மொழிகளுக்கு சமஸ்கிருதத்தால் ஆபத்து வராதா? நம் தமிழுக்கு மட்டும்தான் அந்த இடர்ப்பாடா?

    விவேகானந்தர் நினைவாலயத்துக்கு முன்னால் திருவள்ளுவர் சிலையை வைப்பதன்மூலம் விவேகனந்தர் பெருமையை மறைத்துவிடமுயல்வது நம் வக்கிர சிந்தனையாக இருக்கலாம். நம் வக்கிர சிந்தனையின் பிரதிபலிப்பாகவே எல்லாவற்றையும் காண்பது சரியல்லவே!

    உண்மையில் ஹிந்து சமயத்தை அழிக்க விளையாட்டுத் தனமாகவும் சிறுபிள்ளைத் தனமாகவும் செய்யப்படும் வீண் முயற்சியே ‘சமஸ்கிருத விரோதம்’ என்பது. விவேகானந்தரின் கருத்தின்படி எல்லா மக்களுக்கும் ‘சம்ஸ்கிருத அறிவை’ வழங்கினால் இங்கு பலர் தொழில் (அரசியல்) செய்யவே முடியாமல் போய்விடும். அதுதான் உண்மை.

  30. ///‘திராவிட’ என்பது இந்தியாவின் தென் பகுதியில் வழங்கப்படும் மொழிகளைக் குறிக்கலாம். ஆனால், சமஸ்கிருதம் எப்படி வட மொழியாகும்? ///
    வடநாட்டில் தோன்றிய மொழி சமற்கிருதம். வடநாட்டில் இன்னும் பல மொழி தோன்றியிருந்தாலும் வடமொழி (அல்லது வடபாடை என்றே பொரும்பாலும்) அழைப்பது தமிழ் இலக்கியத்தில் வழக்கமாக உள்ளது. தமிழ் அறிந்தவர்கள் அனைவருக்கும் அது விளங்கும். இது ஏன் உங்களுக்குத் தவறாக தோன்றுகிறது? ஆங்கிலம் இன்று உலகம் முழுவதும் பேசப் படுகிறது. உலகமொழி எனவும் கூறப்படுகிறது. இந்தியா முழுதும் வழக்கிலுள்ள ஒரு மொழி. எனினும் அது மேற்கத்திய மொழிதானே. இந்திய மொழியாகிவிடுமா?

    ///தெற்கில் சமஸ்கிருதத்தின் தாக்கம் குறைவானதென்றால், வடக்கு மாநிலங்களைவிட இங்கு ஏன் ‘சமஸ்கிருதப் பகை’ வளர்கிறது? எத்தனை வட மாநிலங்களில், அல்லது, தமிழகம் தவிர்த்த தென் மாநிலங்களில், சமஸ்கிருதம் இந்த அளவு எதிர்க்கப்படுகிறது? ///
    தமிழ் நாட்டில் சமற்கிருதத்திற்கு என்ன பகை இருக்கின்றது. எங்கே இருக்கின்றது? அவைகள் என்னவென்று கூறினால் நலமாய் இருக்கும். யாராவது தமிழ் நாட்டில் அதைக் கற்றுத் தரவோ படிக்கக் கூடாதென்று கூறுகிறார்களா? இங்கு கூறுவதெல்லாம் தமிழில் சமற்கிருதத்தை வலிந்து புத்தாதீர்கள் என்றுதான். கிரந்த எழுத்துகளை வலிந்து புகுத்த முயல்வது யார்.? இதை வட நாட்டுக்காரர்கள் செய்வதிலை. தமிழ்நாட்டில் இருக்கும் ‘தமிழர்கள்’ தான் இதில் குறியாய் இருகின்றார்கள். சமற்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலெதிர்ப்பு என்று பெய்மூட்டையை அவிழ்த்து விட்டிருப்பதும் அவர்கள்தான். என்றாவது தமிழ்நாட்டிலிருந்து யாராவது சமற்கிருதத்தில் தமிழ் எழுத்துகளைப் புகுத்த முயன்றிருகின்றார்களா? இல்லை அவைற்றைப் புகுத்தினால் சமற்கிருத அறிஞர்கள் ஒத்துக் ஒத்துக்கொள்வார்களா? ஒரு மொழியில் வலிய வேறு மொழியை புகுத்தாதே என்பது பகைமைச் செயலா அல்லது வலிந்துதான் புத்துவேன் என்பது பகைமைச் செயலா?

    ///தமிழகம் தவிர வேறு தென் மாநிலங்கள் எதிர்க்காத சமஸ்க்ருதத்தை ‘வடமொழி’ எனச் சொல்வதைத் தவிர்க்கவேண்டும் என்பதே என் நிலை. வடமாநிலங்களில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் மொழிகளுக்கு சமஸ்கிருதத்தால் ஆபத்து வராதா? நம் தமிழுக்கு மட்டும்தான் அந்த இடர்ப்பாடா? ///
    இடர்பாடுதான். இல்லாவிட்டால் கேரளம் இன்று தமிழ் மானிலமாகத்தானே இருந்திருக்கும்!!?

    !
    ///உண்மையில் ஹிந்து சமயத்தை அழிக்க விளையாட்டுத் தனமாகவும் சிறுபிள்ளைத் தனமாகவும் செய்யப்படும் வீண் முயற்சியே ‘சமஸ்கிருத விரோதம்’ ///
    இந்து கடவுள்களைப் பற்றி சமற்கிருதத்தைவிட தமிழில் அதிக நூல்களிருக்கின்றன. மொழியா மதத்திற்கு ஆணி வேர்!? இலத்தின் மொழியையோ அல்லது அரபு மொழியையோ அழித்துவிட்டால் கிருத்துவ மதத்தையும் முசுலிம் மதத்தையும் அழித்துவிடமுடியுமா? எந்த மொழியை நம்பி புத்த மதம் இருக்கிறது.?
    மதம் நம்பி இருப்பது மனிதனை மொழியை யல்ல!
    நன்றி
    பிலிப்

  31. ”யூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்

    என்ற தலைப்பில் திரு வினோத் தன்னுடைய விளக்கங்களைc சுவைபட வைத்திருகின்றார். அதற்கு என் மறுமொழியையும் நான் இங்கு இட்டிருகின்றேன். இது பற்றி நான் வலையில் மேய்து கொண்டிருந்த போது திரு வினோத் இப்பொழுது கட்டுரையில் கொடுத்துள்ள கருத்திற்கு நேர்மாறான கருத்தை முன் வைத்திருகின்றார். இது சென்ற ஆண்டில். ஒர் ஆண்டு காலத்தில் தன் கருத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டிருகின்றார் என்பதை காணும்பொழுது வியகாமல் இருக்க முடியவில்லை. அவர் அன்று சொன்ன கருத்துதான் இன்றும் எனது கருத்து.

    அவர் அன்று குறியது:
    https://groups.google.com/group/mintamil/tree/browse_frm/month/2009-09/fdf1c7c97b1855ec?rnum=51&_done=/group/mintamil/browse_frm/month/2009-09?&hl=az

    36. வினோத் ராஜன்

    //But Tamil 12 + 18 letters can handle all these letters and sounds
    using simple diacritics. //
    I repeat for the umpteenth time:
    This is not Senthamil. Nor it is defined in Ancient Tamil Grammars.
    What is the difference betwee ஜ or ‘ச ? Both serve the same purpose,
    denoting the “ja” pronunciation.
    Senthamizh Ilakkanam says no “ja” pronunciation or nothing, it should
    become ‘ca’ – ச.
    Classical Grammar says no Foreign Sounds, Make it Tamilizied.
    If you are trying to devise a way to denote the non-Tamil sounds, you
    are already betraying the Senthamizh Ilakkanum rules !!
    Why do you want to re-invent the wheel ???? What new purpose does it
    going to serve ?? other than confusing millions of people, by trying
    to dethrone an already existing ancient well known system ???
    ’ச or ஜ share the same logic. Denoting foreign sounds.
    You are suggesting a mere Graphemic variant. I suggest we follow the
    system that has been used for thousands of years.
    As said already, Diacritic Tamil betrays all the Tamil Classical
    Grammar both by letter and spirit.
    V

    நன்றி
    பிலிப்

  32. இதெல்லாவற்றுக்கும் காரணம் ‘மறைமுக சிலுவைப் போர்’
    அதன் படை அரசியல்வாதிகள்,ஊடகங்கள்,போலி அறிவு ஜீவிகள்,மிஷனரிகள் இந்த நான்கு பிரிவுகளைக் கொண்டது.
    அதன் ‘சுப்ரீம் கமாண்டர்’ ‘அன்டோனியா மைனோ’

  33. சீதரனே சீதரனே

    தமிழகம் முழுவதும் ஏன் இந்தியாமுழுவதும் பாப்பாரப்பட்டி. கீரிப்பட்டி போன்று மாற வேண்டும் என்பதுதானே உங்களை போன்றவர்களின் விருப்பம்.
    அப்போதுதானே பிரித்தாளும் வேலையை சுலபமாக செய்ய முடியும்.
    சும்மாவாவது சமத்துவம் என்று போலியாக பேசிக்கொண்டு ஊரை ஏமாற்றுகின்ற வேலை தமிழரிடம் இனி பலிக்காது.

    கீதா சாம்பசிவம் அவர்களை போன்றவர்கள் தங்கள் இனத்தவர்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் மற்றவர்கள் எல்லாம் மர மண்டைகள் என்கிற மனப்பான்மை கொண்டவர்கள் என்பது தெளிவாகிறது.

    ஒருவர் சமஸ்கிருதம் அறிவுஜீவிகளின் மொழி என்கிறார். பின் ஏன் ஆங்கிலத்தை கற்கிறீர்கள். மொழி என்பதில் எந்த அறிவு ஜீவித்தனமும் கிடையாது. இங்கே நீங்கள் சொல்ல வந்தது சமஸ்கிருதத்தை பயன்படுத்தும் ஒரு சமுக மக்கள் அறிவு ஜீவிகள் என்பதைதான். அதை நேரடியாக சொல்ல முடியாததால் இப்படி சமசுகிருதம் ஒரு அறிவு ஜீவி மொழி என்கிற மிகச்சிறந்த காமெடியை கூறியிருக்கிறீர்கள்.

    பாமர 4வன்

  34. //இது சென்ற ஆண்டில். ஒர் ஆண்டு காலத்தில் தன் கருத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டிருகின்றார் என்பதை காணும்பொழுது வியகாமல் இருக்க முடியவில்லை. அவர் அன்று சொன்ன கருத்துதான் இன்றும் எனது கருத்து.//

    நேர்மாறான கருத்து என்று இல்லை. அந்த இழையில் நடைபெற்ற கருத்தாடல் வேறு. தமிழ் மொழியை எழுத இதுபோன்ற குறிகள் வேண்டும் என்றே விவாதிக்கப்பட்டது.

    இன்றும் சொல்கிறேன், தமிழ் மொழியை எழுத இவை எதுவும் தேவையில்லை. யாரும் தமிழை மொழியை எழுத இவைகளை பயன்படுத்தப்போவதில்லை.

    தமிழ் “லிபி”யில் பிற மொழிகளை எழுத, மேற்கோள் காட்ட இவை தேவை.

    ஆங்கிலத்தில் “ஐ.ஏ.எஸ்.டி” மற்றும் “ஐ.எஸ்.ஓ” போன்ற மேற்குறிகள் அடங்கிய எழுத்துக்கள் இந்திய மொழிகளை எழுத பயன்படுகின்றன.

    இது போல,

    āṅkilattil \”ai.ē.es.ṭi\” maṟṟum \”ai.es.ō\” pōṉṟa mēṟkuṟikaḷ aṭaṅkiya eḻuttukkaḷ intiya moḻikaḷai eḻuta payaṉpaṭukiṉṟaṉa.

    இதனால் யாரும், ஆங்கிலத்தை

    nō ōnē is gōing to usē thēsē lettērs whilē wṟiṭing english as such

    மேலே இருப்பதை போல, குறிகளோடு எழுத்துக்கள் இருக்கிறது என்பதற்காக, ஆங்கிலத்தை மேற்கண்டவாறு எழுதப்போவதில்லை.

    அதே வேளையில், பல்வேறு ஆங்கில நூல்களை பார்த்தீர்களேயானால், மேற்கோள்களையும் , பிற மொழிச்சொற்களை மூலபாடம் தவறாது காண்பிக்க இவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    மேற்கத்திய ஆராய்ச்சி நூல்களில் இவை மிகவும் முக்கியம்.

    உதாரணமாக,

    But this body, form (saṁsthāna) and senses are made of the eight substances; deluded in the cage of transmigration, the ignorant thus discriminate this phenomenal world (rūpa).

    தேவையான மூலச்சொற்கள் மட்டும் குறிகளோடு இருப்பதை காண்க.

    மேற்கத்திய தமிழ் தொடர்பான நூல்களில் கூட தமிழ்ச்சொற்கள்/ தமிழ் மேற்கோள்கள் குறிகள் கொண்ட ஆங்கிலத்திலேயே காட்டப்படுகின்றன

    V

  35. ஸ்ரீ பிலிப் நான் பலமுறை டிவியில் கிறிஸ்தவ பைபல் பிரசங்கங்கள் கேட்டு இருக்கிறேன். தமிழும் இல்லாது மணிப்ரவாளமும் இல்லாது எந்த மொழி இலக்கணங்களுக்கும் உட்படாது அவர்கள் பேசும் தமிழ் எப்படி இருக்கு பிலிப்புக்கு. தமிழை கொலை செய்வது யுனிகோட் அல்லது மணிப்ரவாளம் அல்ல. கர்ண கடூரமாக தமிழை துஷ் பிரயோகம் செய்யும் பைபல் பிரசங்கிகளே. தமிழ் தெரிந்த யாரும் இந்த பிரசங்கங்களை கேட்டு பாருங்கள் எப்படி பிழை மலிந்த தமிழில் இவர்கள் கதைக்கிறார்கள் என்பது விளங்கும்.

  36. வினோத் Rajan,
    பன்மொழி கையாளும் வல்லமை அச்சேற்கும் கருவிகளுக்கு இருக்கும் தருவாயில் தமிழில் இதைச் சேர்க்க என்ன தேவை? புரியவில்லை.

    மேலும் தமிழ்ச் சொற்களை வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்துவது அதிகமாகிவிடும். தமிழில் தட்டெழுதுவது கடினாமன் காலங்களில் ஆங்கிலக் கலப்பு அதிகமானது; இன்று சிலருக்கு இயல்பாகிவிட்டது. தாங்கள் வரிவடிவக் குறியீடுகளை விவரிக்காமல் இதற்கு பதிலிறுத்தால் நலம்.

  37. ////இதெல்லாவற்றுக்கும் காரணம் ‘மறைமுக சிலுவைப் போர்’
    அதன் படை அரசியல்வாதிகள்,ஊடகங்கள்,போலி அறிவு ஜீவிகள்,மிஷனரிகள் இந்த நான்கு பிரிவுகளைக் கொண்டது.
    அதன் ‘சுப்ரீம் கமாண்டர்’ ‘அன்டோனியா மைனோ’////

    இதற்கு மேலும் இதை தொடர விரும்பவில்லை. அதில் பயனும் இருக்காது. தேவையில்லாதவற்றைப் புகுத்தி திசைத்திருப்ப முயல்வது நல்ல கருத்தாடல்களுக்கு வழிகோளாது. மற்றவர்கள்மீது குற்றம் சாட்டும் பொழுது ஆள்காட்டி விரல் மட்டும்தான் எதிராளியைக் காட்டும் மற்ற மூன்று விரல்களும் குற்றம் சாட்டுபவரைத்தான் சுட்டி நிற்கிறன என்பதை மனதில் வைத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
    நன்றி
    பிலிப்

  38. தமிழுக்காக இவ்வளவு முதலைக் கண்ணீர் வடிக்கும் பிலிப்பு , உங்கள் பெயர் தமிழ் போல் இல்லையே

  39. ///nō ōnē is gōing to usē thēsē lettērs whilē wṟiṭing english as such
    மேலே இருப்பதை போல, குறிகளோடு எழுத்துக்கள் இருக்கிறது என்பதற்காக, ஆங்கிலத்தை மேற்கண்டவாறு எழுதப்போவதில்லை.////

    உங்கள் விளக்கம் எனக்குப் புரிகிறது உங்களைப் போன்றவர்கள் இம் மாற்றங்களின் நோக்கத்தை யறிந்து கட்டுபாடுடன் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு ஆனால் தமிழ் நாட்டில் பெருபாலானோர் அடிப்படையை விட்டுவிட்டு மேம்போக்காக செயல் படுபவர்களே. அதனால் தற்போதைய நிலையில் இது தமிழுக்கு ஒத்து வராது.
    நீங்கள் கூறுவதற்கு எதிர்மாறான விளைவிகள் ஏற்படும் என்பது பல தமிழ்,அறிஞர்கள், ஆர்வளர்களின் அச்சம்.

    ஆங்கில எழுத்தாளர்கள், ஊடகத்தார்கள் பொறுப்பானவர்கள். மொழியைச் செவ்வனே அறிந்தவர்கள். மொழி தடுமாற்றமோ, இலக்கண, சொல்,ஏன் அச்சுப்பிழைகள் கூட காண்பது அறிது. அவர்களைத் தமிழ் எழுத்தாளர் மற்றும் ஊடகத்தாருடன் ஒப்பிடமுடியாது. ஒரு வாக்கியத்தைகூட ஒழுங்காக தமிழிலோ ஆங்கிலத்திலோ பேச ,எழுத தெரியாத மொழிக்களஞ்சியங்கள். நம்மவர்கள். இவர்களிடம் இது குரங்குகையில் கிடைத்த மாலைதான். இப்பொழுதிற்கு இது ஒத்துவராது.
    தமிழன் திருந்தி தமிழை ஒழங்காக பேசவும் எழுதவும் கூடிய நாள் கண்டிப்பாக விரைவில் வரும். அன்று உங்கள் முன் மொழிவுபற்றி சிந்திக்கலாம் அதுவரை தமிழனை ஒழங்காக தொல்காப்பியத்தை மட்டுமாவதுபடிக்க, பழகச் சொல்வோம்.
    மற்ற மொழிகளின் சொற்களை ஒலிப் பிறழாமல் எழுத வேண்டும் என்ற கட்டாயம்தான் ஏன்.?. இருக்கும் எழுத்துகளைக் கொண்டு எழுதுவதுதான் முறை.. வேறு எந்த மொழிகாரனும் இப்படி சிந்திப்பதுமில்லை. செயல் படுவதுமில்லை. தமிழில் போதுமான ஒலிகளில்லை என்று கூறாதீர்கள். இது எல்லாமொழிகளுக்கும் உள்ள குறைபாடு. உலகத்திலுள்ள மொழிகளை யெல்லாம் ஒரே மொழி கொண்டு எழுதுதல் நடக்கக் கூடிய காரியாமா? இது போன்ற மொழி ஏதாவது ஒன்று இன்று உலகில் உண்டா? சமற்கிருதமோ, இந்தியோ அல்லது வேறு எந்த மொழியாவது இதைச் செய்யுமா? அப்படி எப்பொழுதாவது சில சிறப்பு காரணங்களுக்காக மொழி பலுக்களைக் காட்டவேண்டுமானால் பன்னாட்டு ஊரோமன் குறியீட்டு முறையை அடைப்புக்குறியுள் பாவிக்கலாம்.
    நன்றி
    வணக்கம்

  40. ஸ்ரீ பிலிப் தமிழ் மொழியை தமிளன் தமில் என்று கூறும்போது ஏற்படும் வலியை விட அண்டைய மொழியினர் தமில் என்று கூறும்போது அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம் அவர்களின் தமிழ் வெறுப்பு. அந்த தமிழ் வெறுப்புக்கு காரணம் தமிழ்நாட்டில் சென்ற பல பத்தாண்டுகளாக தமிழ் அரசியல்வாதிகள் மிக பிரயாசையுடன் வெளிப்படுத்தும் பிற இந்திய மொழி வெறுப்பு. நான் பல மாகாணங்களில் வேலை செய்து பல மொழிகள் பேச தெரிந்தவன். என் அனுபவத்தில் நான் கண்டது தன மொழி மீது உள்ள அன்பை விட காரணம் இல்லாது பிற மொழியின் மீது இருக்கும் வெறுப்பு நம் நாட்டில் அளவிடற்கரியது. சமஸ்க்ருத மொழியை சமற்கிருதம் என்று கூறி அவமரியாதை செய்வதில் சுகம் கண்டு பயன் இல்லை. தமிழின் மீது உள்ள உண்மையான காதல் தமிழில் ஒரு தமிழனுக்கு எவ்வளவு பரிச்சயம் உண்டு என்பதில் தான் வெளிப்படுகிறது. தமிழ் மொழியில் தொல்காப்பியம் என்ற ஒரே நூல் மட்டும் அல்ல. தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்யப்ரபந்தம் திருப்புகழ் என்று பல அணிமணிகள் உள்ளன. திருப்புகழையும் தேவாரத்தையும் குழி தோண்டி புதைத்து மற்ற மொழிகளை துற்றுவதில் இன்பம் கண்டு தொல்காப்பியத்தை என் தலை மீது அணிந்து கொள்வது தொல்காப்பியத்துக்கு செய்யும் மரியாதையா? கிறிஸ்தவர் பைபல் பிரசங்கங்களில் தங்கள் தேவைக்கு ஏற்ப சம்ஸ்க்ருத மொழியை ஏறுமாறாக கர்ண கடுரமாக தமிழில் ஊடுருவல் செய்வது தங்களுக்கு ஏற்புடையது. ஆனால் பிறமொழி சொற்களை தமிழில் கையாள வேண்டிய குறிக்கோளுக்காக கூட மற்றையவர் தமிழில் அதிகப்படி எழுத்து உபயோகப்படுத்துவது தங்களுக்கு வலிக்கிறது. நாம் காரணம் சொன்னால் உங்களுக்கு ஒப்பாமல் இருக்கலாம். நீங்களே சொல்லுங்கள். ஏன் இந்த ஒரு பிரச்சினை இரட்டை நிலைப்பாடு. ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு.

  41. Philip என்ற உங்கள் பெயரை ஃபிலிப் என்று தமிழில் எழுதலாம். தினேஷை, தினேச் என்று எழுதுவது சரியா? Shamiana என்பதை சாமியானா என்று எழுதினால் அர்த்தம் மாறாதா?

  42. உச்சரிப்புக்கு ஒரு வழி செய்தால் அதிலும் தப்புக்கண்டுபிடிக்கும் தமிழன் நாக.இளங்கோவன் அவர்களே நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை குட்டையைக் குழப்பி கேட்டதை செய்யாதீர் .navamber 1-15,2010 தமிழ் கம்ப்யூட்டர் இதழில் உமது கட்டுரையை படித்துவிட்டு இதைக் கூறுகிறேன்…………….ஈஸ்வரன்,பழனி.

  43. பல மாநிலங்களில் பயணம் செய்த கிருஷ்ணகுமார்,
    இந்தி மாநிலங்களில் தமிழ் அல்லது ஏதேனும் தென் மாநில மொழி கற்பிக்கபடுகிறதா? எத்தனை விழுக்காடு பயில்கிறார்கள்?
    இணைப்பு மொழியாக ஆங்கிலம் நீடிப்பதை எதனால் இந்தி மாநிலங்கள் பாராளுமன்ற்த்தலும், வெளியிலும் எதிர்த்தன? 1991 லும் பின் ௨௦௦௭ லும் கர்நாடகத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டதிற்கு என்ன காரணம்? எந்த தேசிய இயக்கங்கள் அதைக் கண்டித்தன?

    மொழிப் பிரச்சினை பற்றி இந்த தளத்திலேயே நிறைய எழுதிவிட்டேன். இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன. நேர்மையான விவாதத்திற்கு நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

  44. ஸ்ரீ ராம்கி மற்றும் அன்பு நண்பர் பிலிப் அவர்களே , நான் முன்னமே எழுதியது

    ‘என் அனுபவத்தில் நான் கண்டது தன மொழி மீது உள்ள அன்பை விட காரணம் இல்லாது பிற மொழியின் மீது இருக்கும் வெறுப்பு நம் நாட்டில் அளவிடற்கரியது.”

    ஹிந்து தேசியவாத இயக்கங்கள் மொழி வாரியாக மக்களை பிரிப்பதை எதிர்த்தார்கள்; எதிர்கிறார்கள் மற்றும் எதிர்ப்பார்கள். இந்த நாட்டை மொழி வாரியாக கூறு போட்டு சின்னா பின்னம் செய்வதில் குறியாக உள்ள இறக்குமதி செய்யப்பட மதங்கள் பிறமொழி வெறுப்பு என்பதை ஒரு கலையாகவே ஆக்கி உள்ளனர்.

    \\\\\\\\\இந்தி மாநிலங்களில் தமிழ் அல்லது ஏதேனும் தென் மாநில மொழி கற்பிக்கபடுகிறதா? எத்தனை விழுக்காடு பயில்கிறார்கள்?\\\\\\\\\\ அடுத்தவன் என்ன செய்கிறான் என்று சுட்டுவிரல் நீட்டுமுன் நான் என்ன செய்கிறேன் என்று தன்னை நோக்கி கேள்வி கேளுங்கள். வேலை நிமித்தமாக ஆனாலும் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகள் கற்கும் வாய்ப்பை பெற்றேன். நான் உங்கள் மொழியை பயின்று உள்ளேன் என்று நான் சொல்லும்போதே நீங்கள் எங்களுக்கு தமிழ் சொல்லிதாருங்கள் என்று பல பேர் கேட்டு உள்ளனர். அன்பு நண்பர் ராம்கி அவர்களே இந்த அரவணைப்பு மனப்பான்மையால் பல பிறமொழியாளர்கள் என் தாய் மொழியான தமிழில் பேச விழைந்து உள்ளார்கள். அவர்களை நான் தமிழ் புலவர்கள் ஆக்கி விட்டேன் என்று சொல்ல மாட்டேன். அறுவறுக்கத்தக்க மொழிவெறுப்பு என்ற அவகுணத்தாக்கம் என்னை சுற்றி இருக்கும் நண்பர் குழாத்தில் இல்லாமல் போகவும் சொல்பமாகவேனும் என் பிற மொழி நண்பர்கள் தமிழில் பேசவும் நான் அவர்கள் மொழியில் பேசவும் ஆக பல பத்தாண்டுகளாக என் வாழ்க்கை நடாத்தி உள்ளேன்.

    நிதமிரண்டு திருப்புகழ் ஓதும் எனக்கு திருப்புகழ் தமிழ் நூலே அல்ல என்று சொல்லிய தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லிகொள்ளும் பிறமொழி வெறுப்பாளர் தந்த மனவலியை விட பிழையாகவேனும் என் தாய் மொழி தமிழை பேச விழைந்துள்ள பிறமொழியாளர் என் தாய்மொழிக்கு உரம் சேர்ப்பவர் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    தமிழ், கன்னடம், மலையாளம், தெலுகு, ஹிந்தி, மராட்டி, பஞ்சாபி, குஜராத்தி,பங்காலி போன்ற பழமொழிகள் எம் பாரத அன்னையின் அணிகலன்கள். மொழி வேறுபட்டாலும் உணர்வில் எல்லோரும் பாரத அன்னையின் புதல்வர் என்பது அந்தந்த மொழிகளில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் உள்ள நுலிழை போன்ற பொது கருத்துகள் பறை சாற்றுகின்றன.

    இந்த ஒரு தாய் மக்கள் ஒருவரை ஒருவர் ஜாதியின் பேராலும் மொழியின் பேராலும் அடித்துக்கொண்டு சாக வேண்டும் என்பது இறக்குமதி செய்யப்பட ஆபிராகாமிய மதங்களின் கனவு. அந்த கனவு கை கூட கூடாது என்று நிதம் வணங்கும் ஆறுமுகபெருமானை வேண்டுகிறேன்.

  45. நன்றி கிருஷ்ணகுமார்!
    கிட்டத்தட்ட தேசியவாதம் பேசுவோர் முன் வைக்கும் மேம்போக்கான பதில்கள். தமிழ் அதன் தோற்றம் கொண்டு தனியிடத்தைப் பிடித்ததது. அது வரலாற்று உண்மை. இதை தேசியவாதிகள் இவ்வளவிற்குப் பின்னும் கண்டுகொள்ளாததுவே இப்பிரச்சினை நீள்வதற்குக் காரணம். நீங்களே எனது பிந்தைய கேள்விகளை புறந்தள்ளியிருக்கிரீர்கள். மொழியின் வாயிலான ஆக்கிரமிப்பும், அரசியலும் தமிழகத்தில் தோன்றியதல்ல. அது எதிர்மறையாக தமிழகத்தில் தோன்றியது. அதை தி மு க இன்று வரை காசாக்குகிறது. தேசியவாதிகள் சற்றும் சிந்திக்காமல் தங்கள் பழைய பாட்டையே பாடுகிறார்கள். என் போன்ற உதிரிகள் இடையே!

  46. @பாமர ஜீவன்,

    கீதா சாம்பசிவம் அவர்களை போன்றவர்கள் தங்கள் இனத்தவர்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் மற்றவர்கள் எல்லாம் மர மண்டைகள் என்கிற மனப்பான்மை கொண்டவர்கள் என்பது தெளிவாகிறது.//

    ஓஓஓ, உண்மையில் என் மர மண்டைக்கு நீங்க ஏன் இப்படி சொல்லி இருக்கிங்கனு புரியலை! அனைத்து தரப்பினருக்கும் நல்ல தரமான கல்வி கிடைக்கணும்னு சொன்னதையா?? 😛 என்னோட இனம் பற்றி எங்கேயும் நான் குறிப்பிட்டு, அவங்களுக்கு தான் எல்லாம் தெரியும்னு எழுதினதும் இல்லை, எழுத போறதும் இல்லை. படிக்க வைச்சால் எல்லாருமே நல்லா தான் படிப்பாங்க! வாய்ப்புக் கொடுக்கணும். அதுக்கு தான் கிராமங்களிலும், கிராமத்து குழந்தைகளும் மத்திய அரசுப் பாடத் திட்டத்தில் படிக்கணும். அப்போ தான் உண்மையான சமச் சீர் கல்வித் திட்டம்னு சொல்லலாம். இந்தியும், சம்ஸ்கிருதமும் இருக்குங்கறதுக்காக நவோதயா பள்ளிகளை வேண்டாம்னு சொன்னது யார்???

  47. நன்றி கீதாசாம்பசிவம்,
    கிருஷ்ணகுமாருக்கு என்னை விட நீங்கள் அழகாக விடையிருத்துள்ளீர்கள்.
    2009 ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து வருமான, நிறுவன வரி வருவாய் 21242 கோடி ரூபாய். அதில் மூன்று விழுக்காடு கல்வித்தீர்வை 637 கோடி ரூபாய். இந்தப் பணத்தையே நாம் பெற இந்தியும், சம்ஸ்கிருதமும் படிக்க வேண்டும். நல்ல தீர்ப்பு.

    ஒன்றாக இயங்கும் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் தங்கள் பன்மொழிப் பிரச்சினைக்கு பல மொழிகளைப் பாடத் திட்டத்தில் சேர்த்துள்ளன. எடுத்துகாட்டாக ஜெர்மனி பிரெஞ்சு, german, ஆங்கிலம் மூன்றையும் பயிற்றுவிக்கிறது. பின்லாந்த் பின்னிஷ், ஸ்வீடன், ஆங்கில, பிரெஞ்சு மொழிகளை பயிற்றுவிக்கிறது. இதில் ஆங்கிலத்தை இராண்டாம் மொழியாக்கியிருக்கிறது. இது போன்ற கொடுக்கல் வாங்கல் பற்றி இந்தி மாநிலங்கள் சிந்திப்பதேயில்லை.ஏன்?
    பல மொழிகள் படிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை ஏற்கனவே (வேறொரு விவாதத்தில்) வைத்திருந்தேன். அதில் மாற்றமில்லை.
    ஆனால் அது போன்ற வழி நட்புநிலைகளை மேம்படுத்துமானால் விட்டுக்கொடுக்கலாம்.

  48. ஸ்ரீ ராம்கி விஷயத்தில் இருந்து வெகு தூரம் பொய் விட்டீர்கள். தமிழின் வளமை எவ்வளவு என்பது பற்றி இங்கு பேச்சே இல்லை. பிற மொழி தமிழில் கலந்தால் தமிழ் கெடுமா என்பது தான் விஷயம். பிற மொழி தமிழில் கலப்பதால் தமிழ் கெடும் என்பது அங்கிலத்தை பொறுத்த வரை சற்று உண்மை. ஏனெனில் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் பொது விஷயங்கள் மிக குறைவு. மற்ற பாரத மொழிகளுக்கும் தமிழுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது மறக்க முடியாத உண்மை. ஆனால் இதை மறைப்பதில் தேச விரோத வெள்ளை சர்ச் சக்திகளுக்கு லாபம் உள்ளது.
    அருணகிரிநாதர் தமிழில் சம்ஸ்க்ருதம் கலந்ததால் தமிழ் என்ன தீட்டு பட்டு விட்டதா. யுனிகோட் எழுத்து அமைப்பில் அதிக எழுத்து கலந்தால் தமிழ் அழிந்து விடுமாம். ஆனால் பைபல் பிரசங்கங்களில் சகட்டு மேனிக்கு ஆதியோடு அந்தம் தமிழையும் மணிப்ரவாளத்தையும் கொலையே செய்தாலும் தமிழ் சாகாதாம். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சந்தடி சாக்கில் சொல்லி விட்டு ஓடி விடுவார்களாம். கேட்பவன் முட்டாள் என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்பானாம்.
    தமிழ் பற்று என்பது தமிழ் இலக்கியத்தில் நான் எவ்வளவு படித்து உள்ளேன். எவ்வளவு படிப்பதில் ஆசை கொண்டுள்ளேன். எவ்வளவு அடுத்த தலை முறைக்கு பயிற்றுவித்தேன் என்பதில். இதில் எனக்கு மிக்க நிறைவு உள்ளது.
    ஆனால் துரத்ருஷ்ட வசமாக தேச விரோத சக்திகள் பிற மொழி வெறுப்பு என்ற அறுவறுக்கத்தக்க அவகுணத்தையும் தமிழ் பற்றின் அளவுகோலாக வைக்க முனைகிறார்கள். தேச பக்த சக்திகள் இதனை வேரோடு அறுக்க கண்டிப்பாக பாடு படுவர்.
    தேவாரம், திருப்புகழ், சங்கத்தமிழ் இவற்றில் சம்ஸ்க்ருதம் கலந்துள்ளது என்பதை பண்டித மணி கதிரேசன் செட்டியார் தெள்ள தெளிவாக தனி தமிழ் ஆவலர் வடமொழி வெறுப்பாளர் மறைமலைக்கு பொது சபையில் விளக்கி உள்ளார். கிழே கண்ட இணைப்பை படிக்கவும்.

    https://tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/

    இவ்வாறு கலந்த பின்பும் தமிழ் தீட்டு படவில்லை என்பது நிதர்சனம். ஆனால் சம்ஸ்க்ருத கலப்பால் தமிழ் கெடும் என்பது வெள்ளை சர்ச்சின் கைகூலிகளான ஹிந்து விரோதிகளின் ஆதாரமற்ற பித்தலாட்டமான நிலைப்பாடு. தங்கள் மத வழி பாடுகளில் சௌகரிய படி தமிழுடன் எந்த மொழி கலப்பதிலும் இந்த பித்தலாட்டக்காரர்கள் யோசனை கூட செய்ய மாட்டார். ஆனால் hindukkalidam தமிழ் பற்று என்பது பிறமொழி வெறுப்பு என்று prachaaram செய்ய thayanga மாட்டார்.

  49. இவர்கள் பைபிளை அல்லது கிறிஸ்தவக் கருத்துகளை ஏன் ஊருக்கு ஏற்றார் போல் மாற்றி சாயம் பூசுகிறார்கள்
    வேதம்,ஸ்தோத்ரம், ஐயர் ( பாஸ்டர்) ,ஆகமம் ,சங்கீதம் இதெல்லாம் எங்கிருந்து வந்தது.
    கிறிஸ்தவத்தை என் கலப்பில்லாமல் கொடுக்கவில்லை?

  50. ஊருக்கு ஊர் பாப்பாப் பட்டி, கீரிப்பட்டி வந்தால் ஆதாயம் சர்ச்சுக்குத்தான்.
    ஹிந்து இயக்கங்களுக்கல்ல.

  51. கிருஷ்ணகுமார்,
    பிற மொழி கலந்தால் கெடுமா என்பதல்ல கேள்வி. அதன் தேவை என்ன என்பதே கேள்வி? அந்த கேள்வியையே நான் முதலில் வைத்தேன். பின்னர் பிற மொழி வெறுப்பு பற்றி தாங்கள் துவங்கிய விவாதத்திற்கு நான் பதிலிறுத்தேன். மொழி வழி அரசியலும் ஆளுமையும் உருவாகிறது. அதற்கு அச்சாரம் கலப்பு. இவ்விவாதம் பயன் தராப் புள்ளியைத் தாண்டிவிட்டதாகக் கருதுகிறேன். என் கேள்விகள் என்னுடன்!

  52. ==அருணகிரிநாதர் தமிழில் சம்ஸ்க்ருதம் கலந்ததால் தமிழ் என்ன தீட்டு பட்டு விட்டதா. யுனிகோட் எழுத்து அமைப்பில் அதிக எழுத்து கலந்தால் தமிழ் அழிந்து விடுமாம். ==

    இதுதான் பிரச்சனையே. தமிழினி எந்த வார்த்தையை எடுத்தாலும் அதன் முலம் செங்கிருதத்திலிருந்த வந்தது என்று ஒரு கூட்டம் தமிழ் ஏதோ எதற்குமே லாயக்கற்ற மொழி என்று அந்த மொழியிலே பிழைப்பை ஓட்டிக்கொண்டு அந்த மொழியையே கேவலப்படுத்தும் மனப்பாங்கு கொண்டு அலைகிறார்கள.
    இன்றைக்கு எழுத்து கலப்புக்கு ஒப்புக்கொண்டால்
    நாளை தமிழுக்கு எல்லா எழுத்துக்களுமே செங்கிருதம் தான் என்று சொல்ல மாட்டார்களா ? அப்படி சொல்லக்கூடியவர்கள்தானே இப்போது எழுத்து சேர்க்கைக்கு ஆளாய் பறக்கிறார்கள்.

    ==இவ்வாறு கலந்த பின்பும் தமிழ் தீட்டு படவில்லை என்பது நிதர்சனம். ஆனால் சம்ஸ்க்ருத கலப்பால் தமிழ் கெடும் என்பது வெள்ளை சர்ச்சின் கைகூலிகளான ஹிந்து விரோதிகளின் ஆதாரமற்ற பித்தலாட்டமான நிலைப்பாடு.==

    முட்டாள்தனமான வாதம்.
    செங்கருதம் கலக்க ஒப்புக்கொண்டால் அவர்கள் உண்மையான இந்துக்கள். அப்படி இல்லையென்றால் அவர்கள் பிற மதங்களின் கைக்கூலிகளா ?

    இன்றைக்கு மலையாள மொழியை எடுத்துக்கொண்டால்
    செங்கிருத கலப்பை ஒப்புக்கொண்ட மலைத்தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து புதிய ஒரு இனமாக மலையாள இனமாக மாற்றப்பட்டது உலகம் அறியாததா ?
    மலையாள மொழியில் 20 சதவீத செங்கிருத வார்த்தைகளை எடுத்து விட்டால் அது முழு தமிழக மட்டுமே இருக்கும்.

    இது தமிழை அழிக்கும் ஒரு முயற்சியாகவே படுகிறது.
    பயன்பாட்டில் இல்லாத ஒரு எழுத்து முறையை
    ஒரு சிறு குழு மட்டுமே பயன்படுத்தும் எழுத்து முறையை ஏன் தமிழ் மொழியில் சேர்க்க வேண்டும்.
    உங்களுக்கு தேவையென்றால் அதை தமிழில் சேர்க்காமல் கிரந்தம் எனும் ஒரு தனி குறியீடாக போட்டுக்கொள்ளுங்கள். யார் வரப்போகிறார்கள்?

    தமிழில் மொழி கலப்பையோ. எழுத்து கலப்பையோ ஒப்புக்கொண்டால் தமிழின் அழிவை எதிர்நோக்கும் கூட்டத்தினருக்கு வாயப்பை ஏற்படுத்தி கொடுத்ததாகதான் அமையும்.

    பாமரஜீவன்

  53. உலகின் முதல் மொழியாம் தமிழுக்கு பல சிறப்புகள் உள்ளன.
    அதில் முக்கியமானது சாகா கல்வியை தெரிவிக்கும்
    உலகின் ஒரே மொழி தமிழ் மட்டுமே.
    …………
    ஆகவே ஒரு மொழியின் ஞானத்தை கற்க வேண்டும் என்றால்
    அந்த மொழியை முதலில் கற்றால் மட்டுமே
    அந்த மொழியில் கூறப் பட்டுள்ள ஞானத்தை முழுமையாக
    உணரவும் ஞானத்தை அடையவும் முடியும்.
    நமது தமிழ் மொழி மட்டுமே ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி.
    ஆகவே ஞானம் பெற நாம் அனைவரும் தமிழில் உணர்ந்து ஞானம் பெறுவோம்.

    முழுக்கட்டுரையும் இங்கே படிக்கலாம் – https://nakinam.blogspot.com/

    பாமரஜீவன்

  54. //தற்சமயத்தில் இணையம் எங்கும் தமிழ் யூனிகோடு கோடு சார்ட்டில் (Unicode Code Chart) தமிழில் கூடுதலாக 26 கிரந்த எழுத்துக்கள் சேர்க்கபப்டுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சில தேவையற்ற குழப்பங்கள் நிலவி வருகின்றன. “விரிவாக்கப்பட்ட தமிழ்” என்பது ஒரு தனி விஷயம் இதற்கும் கிரந்தத்துக்கும் சம்பந்தமே இல்லை. இது போன்ற குழப்பங்களுக்கு, “விரிவாக்கப்பட்ட தமிழுக்கான” யூனிகோடு முன்மொழிவை திறந்து கூட பார்க்காதது தான் காரணம் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதில் மிகத்தெளிவாகவே, முன்மொழியப்பட்ட “விரிவாக்கப்பட்ட தமிழ்” அட்டவணையில் துணைஎண்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்கள் தான் உள்ளன.//
    ராம்கி அவர்களே, மேற்கண்டவாறு கட்டுரையில் உள்ளதே. பின் ஏன் //பிற மொழி கலந்தால் கெடுமா என்பதல்ல கேள்வி. அதன் தேவை என்ன என்பதே கேள்வி?// என்று கேட்கிறீர்கள்?
    புரியவில்லை. Or am I missing something here!?

  55. armchaircritic,
    நான் மிகவும் தளர்ந்து களைப்புற்று இருக்கிறேன். . நான் கிரந்த எழத்துக்கள் பற்றி பேசவில்லை. துணை எண்களைப் பற்றியே எழுதிள்ளேன். விரிவாக எழுதப்போவதில்லை. எனது முத்தையா பதிவுகளை படியுங்கள்.

  56. ஸ்ரீ பாமரஜீவன் அவர்களே தமிழில் பிற மொழி கலவாமல் சம்ஸ்க்ருத மொழி கலவாமல் படைப்புகள் சாத்தியம் என நான் அறிவேன். வினோபா பாவே ஒருமுறை தமிழகம் வந்த போது அவரை சந்தித்த தமிழ் ஆர்வலர் சிலர் தமிழ் மொழி இறைவனிடம் இருந்து உதித்த சிறந்த மொழி என்று கூறினர். அதை செவிமடுத்து அவர்களிடம் அவர் சொன்னார். ஐயா நான் நம் நாட்டில் பல மாகாணங்களுக்கு சென்று உள்ளேன் பல மொழி பேசும் மக்களுடன் பழகி உள்ளேன். ஒவ்வொரு மொழியை சார்ந்த மக்களும் தங்கள் தாய் மொழி இறைவண்டியம் இருந்து உதித்ததாகத்தான் நம்புகிறார்கள். அது போன்றே ஒருமித்த கருத்து என் சஹோதரர்களான தமிழ் மக்களிடமும் உள்ளது பெருமிதமாக உள்ளது என்றார்.
    ஐயா சம்ஸ்க்ருதமும் தமிழும் அறிந்த எவரும் எதிலிருந்து எது வந்தது என்ற விதண்டாவாதத்தில் நிச்சயம் இறங்கார். பிறமொழியை தமிழில் ஜபர்தஸ்தியாக கல என்று நான் நிச்சயம் சொல்லமாட்டேன்.
    நான் சொல்ல வரும் முக்கிய விஷயம் தமிழின் ஆன்மா ஹிந்து மதம் ஹிந்து கலாசாரம். ஹிந்து மத மற்றும் கலாச்சாரத்துடன் பிணைந்த மற்றொரு மொழி தமிழில் கலப்பதால் தமிழ் சிதையாது. இதற்க்கு ஆதாரம் தேவாரம், சங்கத்தமிழ், திருப்புகழ்.
    பண்டிதமணி கதிரேசன் செட்டியார் இந்த விஷயத்தை தனி தமிழ் ஆர்வலர் பிற மொழி வெறுப்பாளர் மறைமலைக்கு நெற்றியடியாக சொன்னார் என்பதை இதே இணைய தளத்தில் ஸ்ரீ சுப்பு எழுதியுள்ளார்.
    சமஸ்க்ருதத்தை செங்கிருதம் என்று சிதைக்கும் மனப்பாங்குடன் நான் ஒதுபோகமாட்டேன். ஆனால் சம்ஸ்க்ருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்று யார் சொன்னாலும் அதற்க்கு என் குரல் எதிர் குரலாக நிச்சயம் இருக்கும்.

    செச்சைப் புயத்தன் நவ ரத்னக் க்ரிடத்தன்மொழி
    தித்திக்கும் முத்தமிழினைத்
    தெரியவரு பொதிகைமலை முனிவர்க் குரைத்தவன்
    சேவற் றிருத் துவசமே

    தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து

    சலம் பூவோடு தூபம்மறந்தறியேன்
    தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

    ஸ்ரீ சுப்பு எழுதுகிறார்

    \\\\\\\\\சலம்; தூபம் இரண்டும் வடசொல் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் வடசொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார்.

    அடிகளாருக்குக் கோபம் வந்துவிட்டது; கோபமாக மேசையைக் குத்தினார்.

    ‘எனக்கும் ஒரு மேசை போட்டிருந்தால் இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்; என்றார் பண்டிதமணி.

    ‘When you are strong in law, talk the law;
    When you are strong in evidence, talk the evidence;
    When you are weak in both, thump the desk ‘

    என்ற வழக்கறிஞர்களுக்கான வாசகத்தை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்துகிறது.\\\\\\\\\\\

    யாம் நிதம் ஓதும் திருப்புகழில் இன்று சேவல் வகுப்பு ஓதிய போது முதற் சொன்ன தீந்தமிழ் வரிகள் படித்தேன். உண்மை. இதில் சம்ஸ்க்ருதம் கலந்துள்ளது.
    ஐயா, இவ்வாறு சம்ஸ்க்ருதம் கலந்து அருணகிரிநாதரும், திருநாவுக்கரசரும் சீத்தலைசாத்தனாரும் என் எழுதினர். அவர்களுக்கு தூய தமிழ் தெரியாதா? அல்லது சோதரர் பாமரஜீவன் சொல்லுவது போல் தமிழில் பிறமொழி கலந்து தமிழை குலைக்க வேண்டும் என்ற முன்னேற்பாட்டுடன் இவ்வாறு எழுதினரா?

    நீங்கள் தூய தமிழ் உபயோகபடுத்துங்கள் மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஹிந்துக்கள் தமிழில் சம்ஸ்க்ருதம் கலந்தால் அது தமிழை குலைப்பதற்காக என்பது தவறான நிலைப்பாடு.

    அப்படியே சம்ஸ்க்ருத கலப்பின்பால் தங்களுக்கு ஆக்ஷேபம் இருப்பின் நீங்கள் முதன் முதல் குரல் எழுப்ப வேண்டியது நான் கிழே பட்டியல் இட்டுள்ள தமிழ் காவலர் என்று தம்பட்டம் அடிப்பவர்களுக்கு

    ௧. ஏதோ தாங்கள் தான் தமிழ் இலக்கணத்துக்கே சேவை செய்தது போல் புரட்டு பேசி பைபல் பிரசங்கங்களில் தமிழுடன் சமஸ்க்ருதத்தை பிழை மலிய கலந்து பேசி தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பேரில் ஒரே பிரசங்கத்தால் இரு மொழிகளையும் த்வம்சம் செய்யும் தம்பட்டம் அடிக்கும் தமிழ் காவலர்
    ௨. யுனிகோட் முறையில் அதிகப்படி எழுத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்ரீ. கருணாநிதி மற்றும் அவர் கழகத்தினர் ஸ்ரீ ஸ்டாலின் அவர்கள் பேரினை எல்லா சுவரொட்டிகளிலும் மற்றும் அரசாங்க குறிப்புகளிலும் ஏன் ஸ்டாலின் என்று குறிப்பிடுகிறார்கள். சுடாலின் என்று ஏன் குறிப்பிடுவதில்லை

    ஐயா நீங்கள் தூய தமிழ் உபயோகிப்பாளர் என்றால் எமக்கு மிக மகிழ்ச்சி. ஆனால் தமிழில் ஹிந்துக்கள் சம்ஸ்க்ருதம் கலத்தல் என்பது தமிழை கெடுக்க என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படி சொல்வது நான் நிதம் ஓதும் திருப்புகழும் தேவாரமும் நான் களிப்புடன் படிக்கும் சங்க நூல்களும் தமிழை குலைக்க அவதாரம் எடுத்த நூல்கள் என்று சொல்வதற்கு சமம். இது மதி குலைந்த நிலைப்பாடு.

    தமிழ் மொழி பயின்று ஞானம் பெறமுடியும் என்பதை நான் முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தமிழ் மொழியினால் மட்டுமே ஞானம் நல்க முடியும் என்பது மிகைப்படுத்தப்பட்ட நிலைப்பாடு.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  57. எமது அருமை நண்பர் ஸ்ரீ பாமர ஜீவன் அவர்களே உண்மையான ஹிந்துக்கள் யார் யார் இல்லை என்று சொல்ல எமக்கு அருகதை இல்லை. அதே போல் உண்மையான தமிழன் யார் யார் இல்லை என்று சொல்ல எவருக்கும் அருகதை இல்லை. ஹிந்துக்களை மொழியின் வழியும் ஜாதியின் வழியும் கூறு போட்டு வெறியூட்டி இந்த நாட்டை துண்டாட இராப்பகல் வேலை செய்யும் வெள்ளை சர்ச் கைக்கூலிகளுக்கு பிறமொழி நிந்தனை பிறமொழி வெறுப்பு என்பது கைவந்த ஆயுதம். இவர்களின் பொய் பிரசாரத்தில் துரத்ருஷ்டவசமாக எம் சஹோதரர்களும் மயங்கி விடுகிறார்கள் என்பது இன்றைய நிலை.

    தென்னிந்தியாவில் தமிழ் மொழிக்கு மிக நெருக்கமான மொழி என்று அறியப்படுவது மலையாளம் மட்டும் அல்ல. துளு மொழியும் கூட தான். மலையாளத்தில் ௮௦% சம்ஸ்க்ருதம் கலப்பு என்பது எமக்கு மிகவும் வியப்பு அளிக்கிறது. ௫௦% கூட அதிகம் என நினைக்கிறேன். தமிளன் என்று சொல்லி தமிழை சிதைக்கும் தமிளனை விட எம் தாய் மொழியின் சிறப்பு எழுத்தாம் ழகரத்தை பிழையின்றி பேசும் மலையாளி எம்மை பொறுத்தவரை தூய தமிழன். கோவை தமிழ் நெல்லை தமிழ் மதுரை தமிழ் என்ன என்றே புரியாத மதராஸ் தமிழ் எல்லாம் தமிழ் என்று ஒத்து கொள்ளலாமாம். சம்ஸ்க்ருதம் கலந்து விட்டது என்பதால் சம்ஸ்க்ருத த்தின் மீது காழ்ப்புணர்ச்சி காரணத்தால் சேர நாட்டு தமிழன் பேசும் மலையாளத்தமிழ் மட்டமாம். அவன் தனி இனமாம். கேரளத்தில் இருந்து பழனி மலைக்கு காவடி எடுத்து வந்து திருப்புகழ் ஓதும் மலையாளி “சீவிக்கிறார் இயேசு சீவிக்கிறார் பாவிகளே” என்று தெரு தோறும் கூவி நாட்டை கூறு போட எத்தனிக்கும் வெள்ளை சர்ச் கைக்கூலிகளை விட உயர்ந்த தமிழன். கிறிஸ்தவனாகப் பிறந்தும் வைஷ்ணவ ஆசாரியப் பெருமக்கள் கூட அமர்ந்து கேட்க ரஹஸ்ய த்ரய ஸாரம் பிரசங்கம் செய்யும் ஜோசப் பாகவதர் பிற மொழி வெறுக்கும் தமிழனை விட உயர்ந்த தமிழன். எம்மை பொறுத்த வரை மலையாளி தனி இனம் அல்ல. எம் சஹோதரன். மடி, இல்லம், கொட்டாரம் என்று கணக்கிலடங்கா தமிழ் நாட்டு தமிழன் கூட மறந்த தமிழ் சொற்களை தனது அன்றாட வாழ்க்கையில் சர்வ சாதரணமாக புழங்கும் சேர நாட்டான் செந்தமிழன். அவனை தனி இனம் என்று ஒதுக்குவது காழ்ப்புணர்ச்சி. அதற்கு காரணம் வெள்ளை சர்ச் கைக்கூலிகள் செய்யும் துஷ் பிரசாரம்.
    இதை தமிழ் ஹிந்து இணையம் கண்டிப்பாக பதிவு செய்ய vendum.

  58. சு பாலச்சந்திரன்

    காலத்தால் மிகவும் முற்பட்டது மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில் பேசிய ஒலிகளே ஆகும். அவை மொழி என்ற சிறப்பு பெறாது. மேலும் தமிழுக்கு சிறப்பு தருவது அதன் தொன்மை அல்ல. “யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற தமிழ் ஞானிகளின் கூற்றே தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும் உலகெங்கும் சிறப்பு சேர்த்தது. எல்லாத்திக்குகளிலிருந்தும் உயர்ந்த எண்ணங்கள் வந்து சேரட்டும் ( let noble thoughts come from all sides – Rig Veda) என்ற கூற்று ரிக் வேதத்திற்கு புகழ் சேர்ப்பதுபோல , தமிழுக்கு புகழ் சேர்ப்பது மேற்சொன்ன இரு வாக்கியங்களே ஆகும். உலகத்திலேயே முதலில் பிறந்த மொழி என்பதால் ஒரு சிறப்பும் எந்த மொழிக்கும் கிடையாது. தமிழை வளர்ப்பதாக பொய் சொல்லி ஆங்கிலத்திற்கு சாமரம் வீசி , தமிழை நடைப்பிணம் ஆக்கிவிட்ட கும்பல் குப்பை தொட்டிகளில் தூக்கி எறியப்படும் நாள் வந்துகொண்டே இருக்கிறது.

  59. ஒரு முறையான தமிழ் கருத்துரையாடல் இழையில்”திரு” வைத் தவிர்த்து ‘சிரி’ யை வலுக்கட்டாயமாக புகுத்தியிருக்கின்றீர்கள்
    ஆனால் சமற்கிருதம், வடமொழியென்று முறையாக தமிழ் வழி எழுதினால் சினக்கிறீர்கள்.
    தமிழை உங்கள் சமற்கிருதத்தில் ஒலிபிரழாமல் எழுமுடியுமா? இல்லை முற்சியாவது செய்ததுண்டா?
    மற்ற மொழிச் சொற்களைத் தமிழில் ஒலி பிறழாமல் எழுதவேண்டுமென்று துடிக்கும் நீங்கள், தமிழச் சொற்கள் மற்ற மொழிகளில் சிதைத்து எழுதப் படுவதைக் கண்டு கவலுறாதது ஏன்? இதுதான் உங்கள் தமிழ் பற்று போலும்.

    /////நான் பல மாகாணங்களில் வேலை செய்து பல மொழிகள் பேச தெரிந்தவன். என் அனுபவத்தில் நான் கண்டது தன மொழி மீது உள்ள அன்பை விட காரணம் இல்லாது பிற மொழியின் மீது இருக்கும் வெறுப்பு நம் நாட்டில் அளவிடற்கரியது./////
    தமிழ் நாட்டில் மற்ற மொழி வெறுப்பிற்கு காரணம் அரசியலென்று கூறிவிட்டு இதற்கான காரணத்தைக் கூறாது விட்டு விட்டீர்கள்.

    ///திருப்புகழையும் தேவாரத்தையும் குழி தோண்டி புதைத்து மற்ற மொழிகளை துற்றுவதில் இன்பம் கண்டு தொல்காப்பியத்தை என் தலை மீது அணிந்து கொள்வது தொல்காப்பியத்துக்கு செய்யும் மரியாதையா?///
    ஒரு தமிழன், தமிழின் மிகப்பழமையான நூல், தமிழ் மொழிக்கு அடித்தளமான நூல் இதை தலைவைத்து வைத்து கொண்டாடுவது உங்களுக்கு ஏன் கசக்கிறது? .
    தேவாரத்தை கரையான் புற்றில் போட்டு அழிக்க முனைந்தது யார் மிஞ்சியிருக்கும் பாடகளை இராசராசன் காப்பாற்ற முனைந்த பொழுது எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்பதெல்லாம் வரலாறு. நிகழ்கவுகள் இப்படியிருக்க தொல்காப்பியம் படியென்று சொன்னால் அது மற்ற தமிழ் நூட்களைக் குழிதேண்டி புதைக்கச் சொல்கிறார்கள் என்று உங்களைப் போன்றவர்களால் மட்டும்தான் பொருள்படுத்திக்கொள்ளப் முடியும்(.

    1.////அருணகிரிநாதர் தமிழில் சம்ஸ்க்ருதம் கலந்ததால் தமிழ் என்ன தீட்டு பட்டு விட்டதா//
    .2.///. யுனிகோட் எழுத்து அமைப்பில் அதிக எழுத்து கலந்தால் தமிழ் அழிந்து விடுமாம்.///
    .3///கிழே கண்ட இணைப்பை படிக்கவும்.
    https://tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/
    இவ்வாறு கலந்த பின்பும் தமிழ் தீட்டு படவில்லை என்பது நிதர்சனம்//
    4.//. ஆனால் சம்ஸ்க்ருத கலப்பால் தமிழ் கெடும் என்பது வெள்ளை சர்ச்சின் கைகூலிகளான ஹிந்து விரோதிகளின் ஆதாரமற்ற பித்தலாட்டமான நிலைப்பாடு.//

    ஆக நீங்கள் உங்கள் விருப்பம் போல் வடபாடை சொற்களைக் கலக்கலாம். தமிழுக்கு ஒன்றும் ஆகாது. அப்படி கூறுவது கிருத்துவ மதக் கை கூலிகளின் சதி
    ஆனால்
    5./// தங்கள் மத வழி பாடுகளில் சௌகரிய படி தமிழுடன் எந்த மொழி கலப்பதிலும் இந்த பித்தலாட்டக்காரர்கள் யோசனை கூட செய்ய மாட்டார்////

    கிருத்துவர்கள் மொழிகலப்பு செய்தால் உங்களுக்கு ஆகாது.
    இந்த மொழி கலப்பை அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததே நீங்கள்தானே!!:-))
    உங்களைப் பொறுத்தவரையில் இங்கு எது நடந்தாலும் வெள்ளக்கார கிருத்துவன்தான் காரணம்.
    . அந்த வெள்ளைக்கார கிருத்துவன் முகம் கோணாமல் நடந்து கொண்டு தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டது யாரென்று கடந்த முன்னுறுகால வரலாற்றில் தெளிவாகப் பட்டையம் போடப்பட்டிருக்கிறது.

    புதைந்து கிடந்த வடமொழியை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அதற்கு மேலைநாட்டு பல்கலைகளில் தனியாகத் துறை ஏற்படுத்திக் கொடுத்தது யார்? வெள்ளைகாரகிருத்தவன். அதற்காக நன்றி கூறாவிட்டால் பரவாயில்லை ஆனால்
    அதே வெள்ளைக்கார கிருத்துவன் சமற்கிருதம் வேறு தமிழ் வேறு என்று கூறினால் அது சூழ்ட்சியாகி விடுவது எங்கணம்?

    இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

    தமிழில் வட மொழி எழுத்துகளையோ அல்லது புழக்கடை வழியாக வடமொழி ஒலிகளையோ நுழைக்கத் துடிக்கும் வஞ்சகத்தை சுட்டுவதுதான் இந்த கருத்துரையாடலின் நோக்கம்.
    மொழி பற்றிய கருத்துரையாடலில் மதம்,, அரசியல், நாடு,. இனவறுப்பென்று தேவையில்லாதனவற்றை கலந்து குட்டையைக் குழப்பி திசைதிருப்ப முயலுவது தேவைதானா?

    சமற்கிருதத்தை தமிழிலெழுத தமிழ் எழுத்தொலிகளை மாற்றி அமையுங்கள் என்று கூறுவது முட்டால்தனமான வாதம். சமற்கிருதத்தை எழுத இரண்டு முறைகள் வழக்கில் உண்டு. பின் ஏன் தமிழில் அதை எழுத வேண்டும் என்று கூறுகிறீர்கள். வேறு எந்த மொழிக்காரனுக்கும் இல்லாத பொல்லாத ஆசை. இந்த வினோத ஆசைக்கு என்ன காரணியமாக இருக்க முடியும்? ஒன்று பைத்தியக் காரத்தனம் அல்லது ஒரு மொழியைக் கெடுக்க நினக்கும் சூழ்ச்சி.

    வேறு எந்த மொழிக்காரனும் தன் தாய்மொழியில் வலிந்து கலப்படம் செய்யமாட்டான். அது போல் மற்றமொழிச் சொற்களை ஒலிப் பிறழாமல் எழுதியே ஆக வேண்டுமென்று, அவனுடைய மொழியையே மாற்றத் துடிக்க மாட்டான்.
    மாற்று மொழிக்காரன்தான் இப்படி செய்ய முயற்ச்சிப்பார்கள். அப்படி செய்வது அந்த மொழியை அழிக்க அவர்கள் செய்யும் சூழ்ச்சி.

    போன நூற்றாண்டில் உருசியா தன் மொழியை மற்ற மொழிகள் மீது வலிந்து நுழைக்க முயன்று தோற்றுப் போனது. சப்பானும் சப்பான் மொழியை கொரிய மொழி வலிந்து நுழைக்க முயன்று தோற்று விட்டது. மணிபிரவாளத்தால் தமிழை அழித்துவிடலாம் என்று மனப்பால் குடித்தவர்கள் கனவு பலிக்க வில்லை. மீண்டும் அதையே தமிழ் எழுத்துகளின் ஒலியையே மாற்றி செய்துவிடலாம் என்று மீண்டும் கனவுகானுகிறார்கள்.

    நீங்கள் அவ்வப்பொழுது கூறுவது போல் தமிழ் நாட்டில், தமிழனிடம் எந்த மொழி வெறுப்பும் இல்லை. வெறுமனே பொய்யைத் திரும்ப திரும்ப கூறி கொயல்பல்சை உண்மையாக்க முயலவேண்டாம். ஒரு மொழி மேல் வேறு மொழியை திணிக்க முயலாதே என்பது மொழி வெறுப்பா? இல்லை திணித்துதான் தீருவேன் என்பது மொழி வெறுப்பா? இதற்கு பெயர் மொழி வெறி. வடமொழி வெறி தமிழ் மொழி வெறுப்பு. தாய்மொழியான தமிழை வெறுத்து வடமொழிக்கொண்டு அழிக்க முயல்பவர்கள் தமிழர்களா?
    வடமொழியால் தமிழைக்கூட எழுத முடியாத நிலையில் தமிழால் வடமொழியை எழுத வேண்டிய தேவை என்ன? முதலில் மற்ற இந்திய மொழிகளை சமற்கிருதத்தில் எழுத முயச்சி செய்யுங்கள்.பிறகு உல மொழிகளை எழுத வழிவகை செய்யுங்கள். உங்கள் உன்னதத்தை பாரதத்திற்கு உலகிற்கும் தெரிவியுங்கள். பிறகு உங்கள் வழியைமற்றவர்கள் பின் பற்றுவார்கள்
    . வடமொழி உங்களுக்கு மட்டும் உரியது போல் ஏன் பேசுகின்றீர்கள். எங்களுக்கும் உரியதுதான். இந்தியன் என்றாலே வடமொழியில் பங்குண்டு. அதனால் அதன் அவளர்ச்சியில் எங்களுக்கும் ஆர்வமுண்டு. அதன் மேல் எங்களுக்கு பற்றுண்டு. ஆனால் மற்ற மொழிகள் மேல் வலிந்து புகுத்த வேண்டுமென்ற வெறி இல்லை. வட மொழியை கற்க விரும்பிய பொழுது இடம் மறுக்கப் பட்டவன் நான். இது முற்றிலும் உண்மை, பொய்யல்ல.இங்கே யாருக்கு யார் மேல் வெறுப்பு?
    திரு வினோத் அவர்களின் கட்டுரையைப் பற்றி கருத்துகளைக் கூறுங்கள்.
    மீண்டும் உதவாக்கரை மதம், இனம், வெள்ளைக்காரன் சூச்சி, திராவிட கட்சி, வென்று ஆரம்பிக்க வேண்டாம்
    நன்றி
    வணக்கம்.
    பிலிப்

  60. அன்பு (திலிப்) நண்பரே…
    (1) வேற்றுமையைத் தவிர்க்க ‘வடமொழி’ என்கிற சொல்லைவிட ‘சமஸ்கிருதம்’ என்கிற சொல் பயன்படும் என்பதே என் எண்ணம். தெய்வீக வேத ஒலிகளை மொழியாக்கியதே சமஸ்கிருதம் ஆகும். இது நமக்குரியதல்ல, வட இந்தியருக்கே உரியது என்பது நிச்சயம் தவறு.
    (2) அனேகமாக சமஸ்கிருதம் தமிழ் நாட்டில், இருந்தால், வழிபாட்டு மொழி என்னும் அளவில்தான் இருக்கலாமோ என்னவோ! அங்கேயிருந்தும் சமஸ்கிருதம் துரத்தப்பட ‘பகீரதப் பிரயத்தனங்கள்’ நடந்துவரும் இந்தக் காலத்தில் போய் , “சமஸ்கிருதத்துக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு எங்கே இருக்கிறது?” என்று கேட்கிறீர்களே! வேடிக்கை தான் போங்கள்.
    (3) தாய் மொழி வரி வடிவத்தைக்கொண்டு தானே, தன் மொழியில் இல்லாத, பிற மொழியிலுள்ள, ஒலிகளை எழுத முடியும்? இதில் தாய் மொழியில் பிற மொழி எழுத்தொலிகளைக் கலப்பது என்கிற பேச்சே இல்லையே! தமிழ்ச் சொல்லில் பிற மொழி எழுத்தை யாரும் கலக்க முடியாது. பிற மொழியிலுள்ள ஒரு சொல் அல்லது தொடரைப் புரிந்துகொள்வது பற்றிய விஷயம் இது. விருப்பம் இல்லாதவர்கள் தமிழல்லாத, தமிழில் இல்லாத ஒலிகளைத் தவிர்த்துக் கொள்ளலாமே. வேற்று மொழியறிவு வேண்டும் என நினைப்பவர்களுக்கு எவரும் தடை போட முயல வேண்டியதில்லையே!
    (4) கேரள மாநிலம் பற்றிய தங்கள் கூற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்திய மாநிலங்கள் பல மொழி வாரியாக உருவாகக் காரணமே சமஸ்கிருதம் தான் என்று சொல்லுவீர்கள் போலிருக்கிறது.
    (5) //”மதம் நம்பியிருப்பது மொழியையல்ல; மனிதனை!” //ஆகா! கேட்க இனிக்கும் பேச்சுக்களுக்கு நம்மவர்களிடம் குறை ஏது? மத வழிபாட்டு முறைகளில் மொழி தொடர்பான சச்சரவுகளே இல்லாத ஒரு மாநிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கு என் அன்பு.

  61. இராதாகிருஷ்ணன்,
    //பிற மொழியிலுள்ள ஒரு சொல் அல்லது தொடரைப் புரிந்துகொள்வது பற்றிய விஷயம் இது. விருப்பம் இல்லாதவர்கள் தமிழல்லாத, தமிழில் இல்லாத ஒலிகளைத் தவிர்த்துக் கொள்ளலாமே. வேற்று மொழியறிவு வேண்டும் என நினைப்பவர்களுக்கு எவரும் தடை போட முயல வேண்டியதில்லையே!//

    என்னுடைய முந்தைய கூற்றைப் படித்தீர்களா?
    //வினோத் Rajan,
    பன்மொழி கையாளும் வல்லமை அச்சேற்கும் கருவிகளுக்கு இருக்கும் தருவாயில் தமிழில் இதைச் சேர்க்க என்ன தேவை? //
    பிறமொழித்தேவைகளை ஆங்கிலக் கலப்பு மூலம் எழுதுங்கள். மணிப்ரவாள நடையிலிருந்து தமிழை மீட்டெடுக்க இயக்கம் தோன்றியது வரலாறு. அந்த விளைவையே விவாதிக்கிறோம். பின்னோக்கி செல்ல விரும்புகிறீர்களா?

  62. அன்புள்ள திரு ராம்கி அவர்களே! பன்மொழி கையாளும் வல்லமை அச்சேற்கும் கருவிகளுக்கு இருக்கலாம். வேறொரு மொழி ஒலியை அந்த மொழி ஒலிக் குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ குறிக்க, தாங்கள் சொல்லும் அச்சேற்கும் கருவியால் இயலும்தான்.
    ஆனால், தாய் மொழி வழியாகத்தான் அந்த ஒலியை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்றுதான் நான் குறிப்பிடுகிறேன்.

    தமிழோடு ஆங்கிலம் கலக்கலாம்; ஆனால் மணிப்பிரவாளம் கூடாது என்பது பெரிய முரண்பாடல்லவா? இதில் சமஸ்கிருத துவேஷம் இருப்பது வெள்ளிடை மலை ஆயிற்றே!

    மேலும், திருமந்திரம் உள்ளிட்ட இந்திய அற நூல்கள் அக்ஷரங்கள் 51 என்று குறிப்பிடுகின்றன. அதைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தால், அனேகமாக நாம் மறுக்கும் அல்லது எதிர்க்கும் (வட மொழி ஒலிகள் என்று கருதி) ஒலிகள் நம் தமிழுக்கும் உரியவையே எனப் புலப்படும்.

  63. எனக்கென்னவோ இது just pronounciationக்கு உதவக் கூடிய விஷயமாக மட்டுமே புரிகிறது. பிற மொழி பேசுபவர்களுக்கு தமிழை எளிதாகக் கற்றுக் கொள்ள இருக்கும் வழியாகவும் தெரிகிறது.
    ஃபிலிப் அவர்கள் //வடமொழியால் தமிழைக்கூட எழுத முடியாத நிலையில் தமிழால் வடமொழியை எழுத வேண்டிய தேவை என்ன? முதலில் மற்ற இந்திய மொழிகளை சமற்கிருதத்தில் எழுத முயச்சி செய்யுங்கள்.பிறகு உல மொழிகளை எழுத வழிவகை செய்யுங்கள். உங்கள் உன்னதத்தை பாரதத்திற்கு உலகிற்கும் தெரிவியுங்கள். பிறகு உங்கள் வழியைமற்றவர்கள் பின் பற்றுவார்கள்// என்று எழுதியுள்ளார். ஆனால் கட்டுரையில் //யூனிகோடின் தேவாநாகரி அடிப்படை அட்டவணையில் கூட சமஸ்கிருத ஒலிகளை மட்டும் அல்லாது, எ, ஒ, ற, ழ, ள, ன போன்ற திராவிட மொழி ஒலிகளுக்கான எழுத்துக்களும், சிந்தி, காஷ்மீரி மொழிகளை எழுதுவதற்காக பயன்படுத்துப்படும் எழுத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளன.// என்று உள்ளதை அவர் கவனிக்கவில்லையோ?
    கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பெரியார் பரப்பிய பிராமண த்வேஷமும் சம்ஸ்கிருதம் பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற தவறான எண்ணமும் ஒன்று சேர்ந்து இந்த unicode விஷயத்தில் வெளிப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது.

  64. // தமிழை உங்கள் சமற்கிருதத்தில் ஒலிபிரழாமல் எழுமுடியுமா? இல்லை முற்சியாவது செய்ததுண்டா? //

    तमिऴै उङ्कळ् चमऱ्किरुतत्तिल् ऒलिपिरऴामल् ऎऴुमुटियुमा? इल्लै मुऱ्चियावतु चॆय्ततुण्टा? (Transliteration)

    तमिऴै उङ्गळ् समऱ्किरुदत्तिल् ऒलिबिरऴामल् ऎऴुमुडियुमा? इल्लै मुऱ्चियावदु सॆय्ददुण्डा? (Transcription)

    V

  65. கிரந்தம் கலவாமல் திருமந்திரம் நான்காம் தந்திரத்தில் பல பாக்களை எழுத முடியாது. எடுத்துக்காட்டாக பஞ்சதஸாக்ஷரி மந்திரம் பற்றிய பாடல்:

    ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
    ஹகாராதி ஓராறு அரத்தமே போலும்
    ஸகாராதி ஓர்நான்கும் தான்சுத்த வெண்மை
    ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

  66. தமிழுக்கு இவ்வளவு பரிந்து பேசும் பிலிப் என்பவர் திருக்குறளைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரைக்கு வந்துள்ள மறுமொழியில் படியுங்கள்:

    https://www.tamilpaper.net/?p=882

  67. தமிழ் ஹிந்து இணைய நிர்வாகிகளுக்கு பணிவன்புடன் தெரிவிப்பது தற்போது நான் எழுதவிருக்கும் கருத்துகள் நீண்ட பதிவு. இந்த இழையில் மொழிபிணைப்புகளை வஞ்சனை என்று கூறி பொய்யும் புரட்டும் பகர்ந்தவர்களுக்கு கேள்வி வாரியாக பதிலிறுக்கும் முயற்சி இது. இந்த இழை இந்த முயற்சிக்கு ஆதாரம் என்றாலும் தொடர்புடைய பல கேள்விகளும் விவரிக்கப்படுவதால் இதை தாங்கள் தனி இழையாக வெளியிடல் நன்று என நினைக்கிறேன்.

    எமது பெருமதிப்பிற்கும் நமஸ்காரத்திர்க்கும் உரிய திருப்பனந்தாள் காசித் திருமடாதிபர் கயிலை மாமுனிவர் திருவாளர் திரு காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் அவர்கள் சமய நெறி குறித்து தெரிவித்த கருத்துகள் யாஹூ சிவாசாரிய குழுமத்தில் கிடைக்கப் பெற்றேன். அதில் மொழி பற்றி மாமுனிவர் அவர்கள் தெரிவித்த கருத்துகளுடன் இந்த பதிவை துவங்குகிறேன்.

    கீழே மாமுனிவர் கருத்து:-

    \\\\\\\\\\\\\\\\\\\\\\திருக்குறள் உலகப் பொதுமறை என்பது போல், வேதமும் உலகப் பொதுமறை. உலகப் பொதுமறையானாலும், தமிழர்களின் தனிப்பெருஞ் சொத்து. வேதம் எழுதாக்கிளவி. ஒலி வடிவாக இருந்தது. எழுத்து வடிவம் கொடுக்கப்பெற்றது. “வேத மொழியர்” என்று இறைவனைக் குறிப்பது மாணிக்கவாசகம். வேத மொழியினின்றும் சமஸ்கிருதம் உருவாயிற்று. யாருக்கும் தாய்மொழியாக இல்லை. “இம்மொழி ஆரிய மொழிகளுக்குத் தலைமையான மொழி. ஆரியர் என்பாரும் ஓர் இனத்தார் அல்லர்.” இதை அறிஞர் அம்பேத்கர் தெளிவுபடுத்தி இருக்கிறார். சமஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழியாக இருந்ததில்லை. பிராகிருதமே பேச்சுமொழி. தமிழர்களும் சமஸ்கிருதத்தில் வல்லவர்களாகவே விளங்கிவந்திருக்கின்றனர். இவ்விரு மொழிகளையும் ஒருங்கே படைத்தவர் சிவபிரானே. \\\\\\\\\\\\\\\\\\\\

    தமிழ் முதலா சம்ஸ்க்ருதம் முதலா என்ற தேவையில்லா விதண்டாவாதத்திற்கு தமிழையும் தமிழ் மறைகளையும் தெள்ளெனத் தெரிந்து சமயக்குரவர்கள் நால்வர் வழி நடக்கும் மாமுனிவர் அன்றி பிறிதொருவர் ஆழ்ந்த விளக்கம் அளிக்க இயலாது. தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் சிவபெருமான் ஒருங்கே படைத்தார் என்று அழகாக தெரிவு செய்த அவருக்கு வணக்கம் தெரிவித்து தொடருகிறேன்.

    ஆங்கில எழுத்துக்கள் மூலம் தமிழ் எழுதுகையில் பிழை அதிகம் வருவதால் தமிழ் சான்றோர் இதை மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    “நோய் நாடி நோய் முதல் நாடி” என்பது வள்ளுவ பெருந்தகை வாக்கு. இந்த இழையில் எடுத்துக்கொள்ள பட்ட பொருள் யுனிகோட் முறையில் ஸ,ஷ,ஜ, ஹ, க்ஷ போன்ற எழுத்துக்களை அதிக எழுத்துக்களாக இணைப்பது பற்றி.

    இதற்க்கு எதிர்ப்பு எழுந்ததற்கு காரணம் இது பிறமொழி சேர்க்கை என்பதால். ஆக இந்த பிரச்சினையின் ஆணிவேர் தமிழில் பிறமொழி சேர்க்கை என்பதாம். அதனின்று பல கிளை கேள்விகள் எழுந்தன. என்னென்ன என்று பார்ப்போம்.

    ௧. பிறமொழிகளில் மொழி சேர்க்கை ஜீரணிக்கப்படுகிறதா? பிற மொழி எழுத்துக்களை சரியாக உச்சரிக்கும் பொருட்டு பிற மொழிகளில் குறிப்பாக சம்ஸ்க்ருதத்தில் பிற மொழி எழுத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளதா?

    ௨. தமிழ் இலக்கியங்களில் பிற மொழி குறிப்பாக சம்ஸ்க்ருதம் கையாளப்பட்டுள்ளதா?

    ௩.தமிழ் மொழியில் சம்ஸ்க்ருத கலப்பு என்பது குறிப்பிட்ட சில தமிழ் ஜாதியார் அல்லது தமிழ் ஹிந்துக்கள் மட்டும் செய்த விஷயமா?

    ௪. அவ்வாறு சம்ஸ்க்ருத கலப்பு செய்தவர்களுக்கு மேற்கண்ட கலப்பு செய்வதற்கு ஏதும் குறிக்கோள் இருந்ததா? குறிப்பாக தமிழை கெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்ததா?

    ௫. இந்த பிறமொழி சேர்க்கை என்ற விஷயத்தை விவாதப் பொருளாக்குபவர் யார்?

    ௬. இதை விவாதப் பொருளாக்குபவர் தமிழில் பிறமொழி சேர்க்கையை தவிர்க்கிரார்களா?

    ௭. இதை விவாதப் பொருளாக்குபவர்களின் குறிக்கோள் எதுவாக இருக்க முடியும்?

    ௮. இனம், மதம் மற்றும் வெள்ளை பரங்கியருக்கு இதில் என்ன பங்கு.

    யாம் நிதம் வணங்கும்

    திக்கதும திக்கவரு குக்குடமும் ரக்ஷைதரு
    சிற்றடியு முற்றிய பன்னிரு தோளனை வணங்கி

    இந்த கேள்விகளுக்கு பதிலிறுக்க விழைகிறேன்.

    ௧. பிறமொழிகளில் மொழி சேர்க்கை ஜீரணிக்கப்படுகிறதா? பிற மொழி எழுத்துக்களை சரியாக உச்சரிக்கும் பொருட்டு பிற மொழிகளில் குறிப்பாக சம்ஸ்க்ருதத்தில் பிற மொழி எழுத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளதா?

    இன்று உலகம் சுருங்கி வருகிறது. முப்பது நாற்பது வருடங்கள் முன் மதராசிலிருந்து தில்லி செல்வது பெரும் பிரயத்னம். இன்று புகை ரத வண்டி கூட ௨௪ முதல் ௩௬ மணி துளிகளில் இந்த பயணத்தை முடிக்கிறது. இந்த சுருங்கி வரும் உலகத்தில் பல மொழி பேசும் மக்கள் மற்றும் பல மதத்தை சார்ந்த மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து பழகும் வாய்ப்பு அதிகம். ராணுவம் மற்றும் பாரா மிலிடரி சேவை பல மொழி மத மக்களை இன்று பாரதத்தில் இணைக்கும் பெரும் சேவை பிரிவு. தவிர ஹிந்துஸ்தானத்து மக்கள் புலம் பெயர்ந்து ஐரோப்பிய அராபிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பணி செய்வதால் த்வீபாந்தர மொழிகளுடனும் தொடர்புகள் அதிகரித்து உள்ளன. இதன் முக்கிய விளைவு பிற மொழி சொற்கள் கலப்பு. எல்லா மொழிகளிலும் மற்ற மொழி சொற்கள் கலப்பது இன்று இயல்பாக உள்ளது. ஹிந்தியில் உருது ஹிந்தியில் பஞ்சாபி தெலுகு மொழியில் உருது ஹிந்தி தமிழில் பலகாலமாக சம்ஸ்க்ருதம் மற்றும் ஆங்கிலம் இன்று ஹிந்தி என பிற மொழி சொற்களின் கலப்பு இயல்பாக உள்ளது. தன மாகாணம் விட்டு பிற மாகாணத்தில் வேலை செய்வோரிடம் இந்த பிற மொழி கலப்பு மிக இயல்பு. வட மொழிகள் பேசும் மாகாணங்களில் இன்னமும் தங்கள் தங்கள் ஊர்களின் தனி மணத்துடன் தமிழ் பேசுவோர் இல்லங்களிலும் கூட மற்றும் ராணுவத்தில் தமிழகம், தென்னிந்திய,ஹிந்துஸ்தானத்தின் பிற மாகாணங்களில் இருந்து பணி செய்யும் மக்களிலும் சப்ஜி, ஆலு, பியாஜ், பைங்கன், ஜூத்தா போன்ற சொற்களின் புழக்கம் இயல்பாக உள்ளது. இது ஏதோ தமிழையோ தங்கள் மற்ற தாய் மொழியையோ கெடுக்க எண்ணி இவர்கள் செய்யும் சதி என்று நினைப்பது மதியீனம். ஹைதரா பாதில் நான் பணி செய்த பொது அங்கே தெலுகு மொழியில் உருது கலப்பது எவ்வளவு சாமானியம் என்று உணர்ந்தேன். “துகான் பந்த் ஆயி போயிந்தா?” என்று பேசுவர். இதில் “ஆயி போயிந்தா” என்பது மட்டும் தெலுகு “துகான்” மற்றும் “பந்த்” உருது. இது நிஜாம் ஓரிரு நூற்றாண்டுகள் ஆட்சி செய்த இடத்தில். விஜயவாடாவில் தூய தெலுகு பேசுகிறார்கள். “ஹான்” என்பது ஹிந்தி. பிறை குறியில் புள்ளியிட்டு “ந” மற்றும் “ம” விற்கு இடைப்பட்ட ஒலியை இங்கே வெளிப்படுத்த முடியவில்லை. “ஆவுனு” என்பது தெலுகு. தமிழில் “ஆம்” என்று நாம் சொல்லும் வார்த்தைக்கு சமமான சொற்கள். ஹைதராபாதில் ஹிந்தியையும் தெலுகையும் இணைத்து “ஹாவு” என்று சொல்வர். ஜம்மு விற்கு வைஷ்ணோதேவி யாத்திரை வருபவர் “ஜெய் மாதா தி” என்று சொல்ல பலர் கேட்டிருக்கலாம். “அன்னைக்கு வெற்றி” என்பதற்கு சமமான சொல். இதை ஹிந்தியில் “ஜெய் மாதா கி” என்று சொல்ல வேண்டும். ஆனாலும் ஹிந்தி பேசுவோரும் “ஜெய் மாதா தி” என்றே சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஏதோ சதியால் மக்கள் பேசும் வழி அல்ல. அன்றி புழக்கத்தால். பிற மொழி மக்களுடன் இணைந்து வாழ்வதால்.

    மொழிகள் இணைவது சதியால் அல்ல மக்கள் ஒருவரொடொருவர் பழகுவதால் என்று பார்த்தோம்.

    ஸம்ஸ்க்ருத மொழியில் பிற மொழி எழுத்துக்களை எழுதும் புழக்கம் உள்ளதா? பார்ப்போம்.

    தமிழ் நாட்டில் நெடும்காலமாக ஸம்ஸ்க்ருத மொழியை க்ரந்த எழுத்து வடிவில் தான் எழுதி வந்தனர். இப்போது தேவநாகர லிபியில் எழுதுகிறோம். ஹிந்துஸ்தானத்தின் மற்ற மாகாணங்களில் ஸம்ஸ்க்ருத மொழியை பல காலமாக தேவநாகர லிபியில் தான் எழுதி வருகிறார்கள். ப்ரம்மஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்கள் இலங்கையில் இன்றும் ஸம்ஸ்க்ருதத்தை க்ரந்த லிபியிலேயே எழுதுவதாக பிறிதொரு இழையில் குறிப்பிட்டு இருந்தார். இந்த தேவநாகர லிபி வளர்ச்சிக்காக காசி மாநகரில் “நாகரி ப்ரசாரிணி சபா” என்ற இயக்கம் உள்ளது. மற்ற பாரத மொழிகளை உச்சரிப்பு பிசகாமல் நாகரி லிபியில் எழுத வசதியாக பிற மொழி எழுத்துக்களை நாகரியில் எழுத வேண்டி புதிய எழுத்து வடிவங்களை உருவாக்கி உள்ளனர்.
    தமிழில் உள்ள “ள” ஸம்ஸ்க்ருதத்தில் இல்லை. அந்த “ளகாரம்” எழுதுவதற்காக ஸம்ஸ்க்ருதத்தில் எழுத்து வடிவம் இணைத்து உள்ளனர். “மங்களம் பகவான் விஷ்ணு” என்ற ஸ்லோகம் வட மாநில மக்களால் “மங்கலம் பகவான் விஷ்ணு” என்று படிக்கப்படுகிறது. பஞ்ச த்ராவிடம் என்று அறியப்படும் ப்ரதேசங்களான தமிழகம், கேரளம், ஆந்திரம்,கர்நாடகம் மற்றும் மஹாராஷ்ட்ரம் இந்த மாநிலங்களில் “ளகார” ப்ரயோகத்திற்கு வசதியாய் ஸம்ஸ்க்ருதத்தில் “ளகார” எழுத்து வடிவம் இணைக்கப்பட்டு உள்ளது.

    இது போன்று உருது மொழியை ஸம்ஸ்க்ருதத்தில் எழுத வசதியாய் பல எழுத்து வ்டிவங்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இணைக்கப்பட்டு உள்ளன. “ஹகீகத்” “கம்” ஜெஹர்” “ஜமானத்” “பிகர்” போன்ற உருது சொற்களில் உள்ள வித்யாசமான “க” மற்றும் “ஹ” சேர்ந்த “க” ஆங்கில எழுத்தின் கடைசி எழுத்தான “இஜட்” உச்சரிப்புடன் கூடிய “ஜ” ப்ரயோகத்தில் உள்ள “ஜெஹர்” “ஜமானத்”, ஆங்கிலத்தில் “பாதர்” என்ற வார்த்தையில் வரும் “பா” வுக்கு சமமாக உருதுவில் கையாளப்படும் “பா” ஒலியுடன் கூடிய “பிகர்” போன்ற வார்த்தைகளை எழுத வேண்டி ஸம்ஸ்க்ருதத்தின் “க” வின் மூன்று வடிவங்களின் கீழே புள்ளி இடுவதின் மூலமும் “ஜ” மற்றும் “ப” வின் கீழே புள்ளி இடுவதின் மூலமும் அந்த புதிய எழுத்து வடிவங்களை உருவாக்கி உள்ளனர்.

    ஸம்ஸ்க்ருதத்தில் பிற மொழி எழுத்துகளை இணைக்க என்ன செய்து இருக்கிறார்கள் என்பதற்கு எனக்கு தெரிந்த வரையில் பதிலிறுத்து உள்ளேன். இஃது சொற்பமான குறிப்பே. இஃதை நான் புழங்கி உள்ளதால் குறிப்பிட்டு உள்ளேன்.

    ௨. தமிழ் இலக்கியங்களில் பிற மொழி குறிப்பாக சம்ஸ்க்ருதம் கையாளப்பட்டுள்ளதா?

    கீழே உதாரணங்கள் :=

    கலித்தொகை :- (சீத்தலைசாத்தனார்)

    தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்த

    தேவாரம் :- (திருநாவுக்கரசர்)

    சலம் பூவோடு தூபம்மறந்தறியேன்
    தமிழோடிசை பாடல் மறந்தறியேன
    புதுவிரிபொன் செயோலை யொருகா தொர்காது
    சுரிசங்கம்நின்று புரள
    விதிவிதி வேதகீதமொருபாடுமோத
    ஒருபாடு மெல்ல நகுமால்

    திருப்புகழ் :- (வள்ளல் அருணகிரிநாதர்)

    செச்சைப் புயத்தன் நவ ரத்னக் க்ரிடத்தன்மொழி
    தித்திக்கும் முத்தமிழினைத்
    தெரியவரு பொதிகைமலை முனிவர்க் குரைத்தவன்
    சேவற் றிருத் துவசமே
    திக்குப்பரி அஷ்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத்தொகு
    சித்ரப்பவு ரிக்கத் த்ரிகடக எனவோத

    சிவஞானசித்தியார் :-
    சிவன்அரு உருவும் அல்லன்; சித்தினொடு அசித்தும் அல்லன்;
    பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடுவானும் அல்லன்;
    தவம்முதல் யோகபோகம் ஒன்றும் பண்ணிடுவானும் அல்லன்; தானே
    இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பினானே

    மற்ற தமிழ் இலக்கியங்களை ஒப்பிடுகையில் திருப்புகழில் ஸம்ஸ்க்ருத வார்த்தை ப்ரயோகம் சற்று அதிகம். ஆனால் சங்கத்தமிழ் முதற்கொண்டு சிவஞானசித்தியார் வரை கற்றறிந்த ப்ரக்யாதி வாய்ந்த பல தமிழ் சான்றோரும் தாங்கள் எழுதிய தெயவத்தமிழ் கவிதைகளில் ஸம்ஸ்க்ருதம் கலந்து எழுதி உள்ளார்கள் என்பது மறக்க முடியாத மற்றும் மறைக்க முடியாத உண்மை. இவர்கள் வஞ்சனையே குறிக்கோளாகக்கொண்டு தமிழில் ஸம்ஸ்க்ருதம் கலந்தார் தமிழைக் குலைக்கவே தமிழில் ஸம்ஸ்க்ருதம் கலந்தார் என்பது போக்கிரித்தனம். தமிழகத்தில் கோவில்கள் இருக்கும் வரையிலும் அந்த கோவில்களில் பக்தர்கள் தமிழ் மறையாம் தேவாரம், திருப்புகழ், திவ்ய ப்ரபந்தம் இவைகள் ஒதும் வரையிலும் ஸம்ஸ்க்ருதம் கலந்த தமிழ் தமிழகத்தில் அழியாது நிலைத்து இருக்கும்.

    ௩.தமிழ் மொழியில் சம்ஸ்க்ருத கலப்பு என்பது குறிப்பிட்ட சில தமிழ் ஜாதியார் அல்லது தமிழ் ஹிந்துக்கள் மட்டும் செய்த விஷயமா?

    ௪. அவ்வாறு சம்ஸ்க்ருத கலப்பு செய்தவர்களுக்கு மேற்கண்ட கலப்பு செய்வதற்கு ஏதும் குறிக்கோள் இருந்ததா? குறிப்பாக தமிழை கெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்ததா?

    மேலே கண்ட ஸம்ஸ்க்ருதம் கலந்த தமிழ் பாடல்கள் இயற்றியவர்களை பார்த்தோம். இதில் தமிழகத்தின் பல ஜாதியை சேர்ந்த சான்றோர் பெருமக்களும் உள்ளனர் என்று அரியலாம். அப்படியானால் தமிழில் ஸம்ஸ்க்ருதம் கலப்பு என்பது தமிழ் ஹிந்துக்கள் மட்டும் செய்த காரியமா? இல்லை நண்பர்களே. தமிழின் முதல் நாவல் என்று தமிழ் தெரிந்த அனைவரும் அறிந்த “ப்ரதாப முதலியார் சரித்திரம்” சாமுவேல் வேதநாயகம் பிள்ளை என்ற கிறிஸ்தவ சான்றோரால் இயற்றப்பட்டது. அவர் என்ன வஞ்சகரா? ஆக தமிழகத்தில் சாதி மற்றும் மதம் கடந்து பண்டைய காலம் தொட்டு நேற்று வரை வெகு இயல்பாக பல சான்றோர் பெருமக்கள் ஸம்ஸ்க்ருதம் கலந்த தமிழில் எழுதி வந்தார் என்று பார்த்தோம். இதே சான்றோர்களே ஸம்ஸ்க்ருதம் கலவாதும் எழுதியுள்ளார்கள் என்பதும் உண்மை. தூய தமிழ் புனைவு ஸம்ஸ்க்ருதம் கலந்த புனைவு என்பது அவ்வப்போது அந்த சான்றோர் மனதில் எழுந்த கவித்துவத்தின் வெளிப்பாடு அவ்வளவே. இங்கே கவித்துவம் அன்றி குறிக்கோள் வ்ஞ்சனை என்றெல்லாம் ஏதும் இல்லை.

    ௫. இந்த பிறமொழி சேர்க்கை என்ற விஷயத்தை விவாதப் பொருளாக்குபவர் யார்?

    ௬. இதை விவாதப் பொருளாக்குபவர் தமிழில் பிறமொழி சேர்க்கையை தவிர்க்கிரார்களா?

    ௭. இதை விவாதப் பொருளாக்குபவர்களின் குறிக்கோள் எதுவாக இருக்க முடியும்?

    ௮. இனம், மதம் மற்றும் வெள்ளை பரங்கியருக்கு இதில் என்ன பங்கு.

    யுனிகோட் முறையில் அதிக எழுத்து சேர்ப்பத்தற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர் தனி தமிழ் ஆர்வலர் என்ற பெயருடன் உலா வரும் தமிழை படிப்பதில் ஆர்வம் இல்லாது ஆனால் தமிழை வைத்து அரசியல் பண்ணுவதில் குறியாக உள்ளவர்கள்.

    உலகில் கிறிஸ்தவ மதம் தவிர்த்து இஸ்லாம் ஹிந்து மதம் உட்பட அனைத்து மதங்களையும் அழிக்க குறியாய் இருக்கும் வொய்ட் சர்ச் அல்லது தமிழில் வெள்ளைப்பரங்கியன் சர்ச். சீன தேசத்தில் வொய்ட் சர்ச்சுக்கு வால் பிடிக்கமாட்டோம் என்ற நிலை எடுத்த அரசை அவ்வப்போது எப்படியெல்லாம் கைமுறுக்குகிறார்கள் என்பது உலகம் அறிந்த விஷயம்.

    இந்த வொய்ட் சர்ச்சின் கைகூலிகளாக உலகம் முழுதும் இயங்கி வருபவர்கள்.

    தமிழ் மொழியை கற்பதில் எந்த ஆர்வமும் இல்லது ஆனால் பிற மொழியை தூற்றுதல் என்பது தமிழ் மொழிப்பற்றுக்கு ஆதாரமாக இருக்கும் அடிக்கோல் என்ற நிலைப்பாடுடன் இருப்பவர்கள்.

    மேற்சொன்ன அத்தனை பேரும் தமிழ் ஆர்வலர் என்ற் நம்பும் பாமர தமிழ் மக்கள்.

    இந்த நிலைப்பாடு உடையவர்களில் ஜாதி மதம் என்ற பாகுபாடு இல்லை. மேற்கண்ட நிலைப்பாட்டை ஆதரிப்பவர் மற்றும் எதிர்ப்பவர் எல்லா ஜாதி மற்றும் மதத்தை சார்ந்த மக்களே

    முதல் சொன்ன மூன்று வகையினரும் அப்பட்டமாக ஹிந்து மதத்தின் பால் விரோதம் பாராட்டுபவர். பல கிறிஸ்தவ பிரசங்கங்களில் தமிழுடன் ஸம்ஸ்க்ருதம் கலந்து அதுவும் தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருதத்தை பிழை மலிய உபயோகித்தும் தமிழ் ஹிந்துக்களுக்கு மொழி கலவாதே என்று போதனை செய்வார். ஐயா, அடுத்தவனை சுட்டு விரல் நீட்டுமுன் நீ என்ன செய்கிறாய் என்பதர்கு இவர்களிடம் பதில் இருக்காது. அதே போல் யுனிகோட் முறையில் அதிக எழுத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கழக கண்மணிகள். ஸ்ரீ ஸ்டாலின் அவர்கள் பேரை சுவரொட்டிகளிலும் அரசாங்க ஆவணங்களிலும் சுடாலின் என்று எழுதாது ஸ்டாலின் என்று எழுத விழையும் இவர்களுக்கு தான் இந்த யுனிகோட் முறை மிக அவசியம். ஆனாலும் இதை எதிர்ப்பதில் முனைப்பு உள்ளவர்கள்.

    சரி இவர்கள் குறிக்கோள் என்ன? முதலில் தமிழில் ஸம்ஸ்க்ருத கலப்பு தமிழைக் குலைக்க என்று துஷ் பிரசாரம் செய்வது. அது எடுபட்ட பின் பார், தேவாரம், திருப்புகழ், திவ்யப்ரபந்தம் இவை எல்லாவற்றிலும் கலப்பை காண்பாய். இவை எல்லாம் தமிழ் நூல்களே அல்ல என்று தமிழ் மறைகளை ஒழித்து விட்டால் வொய்ட் சர்ச்சிர்க்கு ஹிந்து மதத்தை அழிப்பது மிக சுலபம். வொய்ட் சர்ச் உலகில் உள்ள பிற மதங்களை அழிக்க பற்பல உத்திகளை வைத்து உள்ளது. அந்த உத்திகளில் ஒன்று தான் மொழி கலப்பை எதிர்த்து மாய்மாலம் செய்வது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்.

    நம் நாட்டை கூறு போட வந்த பரங்கிப்பாதிரிகளில் ஒருவன் கால்டுவெல் பாதிரி. ஆரியன் என்பதும் த்ராவிடன் என்பதும் தனி இனம் என்று புளுகு மூட்டையை அவிழ்த்த முதல் வெள்ளையன் இவன். தமிழன் தனி இனம் என்று இந்த புளுகு மூட்டையிலிருந்து தான் புது புளுகு அவிழ்ந்தது. இந்த நாட்டை மொழி மூலமும் ஜாதி மூலமும் கூறு போட்டால் இந்த நாட்டில் உள்ள மற்ற மதங்கள் எல்லாவற்றையும் அழித்து ஒழித்து வொய்ட் சர்ச்சின் அடிமையாக இந்த நாட்டை ஆளலாம் என்பது வொய்ட் சர்ச்சின் சித்தாந்தம். உலகில் வொய்ட் சர்ச் புகுந்த நாடுகளில் இருந்த மதங்களை வேரோடும் வேரடி மண்ணாகவும் ஒழித்தது வொய்ட் சர்ச் என்பது உலக சரித்திரம். ஹிந்துஸ்தானத்தில் சென்ற பல நூற்றாண்டுகளில் தன் முயற்சியில் முழுதும் வெற்றி பெறாத வொய்ட் சர்ச் தன் முயர்சியில் சற்றும் தளராது தொடர்கிரது.

    இதை முடிக்கு முன் நண்பர் பிலிப் அவர்கள் எழுதிய சில கூற்றுகளுக்கு கீழே பதிலிறுத்திருக்கிறேன்.

    பிலிப் ;-
    \\\\\\\நீங்கள் அவ்வப்பொழுது கூறுவது போல் தமிழ் நாட்டில், தமிழனிடம் எந்த மொழி வெறுப்பும் இல்லை. வெறுமனே பொய்யைத் திரும்ப திரும்ப கூறி கொயல்பல்சை உண்மையாக்க முயலவேண்டாம்.\\\\\\\
    தமிழன் பிற மொழி வெறுப்பாளன் அல்ல என்பது நீங்களோ நானோ கண்டுபிடிக்க வேண்டிய விஷயம் அல்ல நான் சொன்னதாக நீங்கள் சொல்வது கோயபல்சை மிஞ்சிய பொய்.
    நான் சொன்னது
    \\\\\\\தமிழ்நாட்டில் சென்ற பல பத்தாண்டுகளாக தமிழ் அரசியல்வாதிகள் மிக பிரயாசையுடன் வெளிப்படுத்தும் பிற இந்திய மொழி வெறுப்பு.இந்த நாட்டை மொழி வாரியாக கூறு போட்டு சின்னா பின்னம் செய்வதில் குறியாக உள்ள இறக்குமதி செய்யப்பட மதங்கள் பிறமொழி வெறுப்பு என்பதை ஒரு கலையாகவே ஆக்கி உள்ளனர். \\\\\\\\ தாங்கள் தமிழ் எவ்வளவு க்ற்றீர் என்று எமக்கு தெரியாது. தமிழை தாய் மொழியாக கொண்டு நிதம் திருப்புகழால் வழிபாடு செய்யும் தமிழனான நான் தமிழரின் தாய் மதமாம் ஹிந்து மதத்தை மதிக்கும் தமிழ் ஹிந்துக்கள் தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழ் இஸ்லாமியரை மதிப்பவன். வொய்ட் சர்ச்சுக்கு கூலிப்படையாக இருந்து எம் தமிழ் மறையாம் தேவாரம், திருப்புகழ், திவ்யப்ரபந்தம் இவைகளை ஸமஸ்க்ருதம் கலந்த நூல்கள் இவைகள் தமிழைக் குலைக்க வந்த நூல்கள் என்று சாடும் எவரையும் நான் தமிழன் என்று கருத முடியாது.
    பிலிப் :-
    \\\\\\வடமொழியால் தமிழைக்கூட எழுத முடியாத நிலையில் தமிழால் வடமொழியை எழுத வேண்டிய தேவை என்ன? முதலில் மற்ற இந்திய மொழிகளை சமற்கிருதத்தில் எழுத முயச்சி செய்யுங்கள்.பிறகு உல மொழிகளை எழுத வழிவகை செய்யுங்கள். உங்கள் உன்னதத்தை பாரதத்திற்கு உலகிற்கும் தெரிவியுங்கள். பிறகு உங்கள் வழியைமற்றவர்கள் பின் பற்றுவார்கள்\\\\\\\\

    நண்பரே ஸ்மஸ்க்ருதத்தில் எந்த அளவு பிற மொழி எழுத்துகளை எழுத வகை செய்யப்பட்டு உள்ளது என்பதை எமக்கு தெரிந்த அளவு தெரிவு செய்து உள்ளேன். நான் விளக்கிஉள்ளது சொற்பம். தற்போது எந்த அளவு இதில் முன்னேற்றம் உள்ளது என்பதை “நாகரி ப்ரசாரிணி சபா” மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    பிலிப் : –
    \\\\\\\\\வடமொழி உங்களுக்கு மட்டும் உரியது போல் ஏன் பேசுகின்றீர்கள்.\\\\\\\\\\\\\\
    தமிழ் எம் தாய் மொழி; திருப்புகழால் நிதம் வழிபாடு நடத்துகிறேன் என்று தான் நான் கூறிவுள்ளேன். ஸம்ஸ்க்ருதத்தை நான் வடமொழி என்று கூறு போடவில்லை அந்த மொழி எமக்கு மட்டும் உரியது என்பது மிக தூரம் என்னுடய மொழி என்று கூட கூறவில்லை நான். ஏனெனில் ஸம்ஸ்க்ருதம் வடமொழியும் அல்ல தென்மொழியும் அல்ல. கயிலை மாமுனிவர் கூரியது போல் உலக பொது மொழி.

    பிலிப் :-
    \\\\\வட மொழியை கற்க விரும்பிய பொழுது இடம் மறுக்கப் பட்டவன் நான்\\\\
    \\\\\புதைந்து கிடந்த வடமொழியை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அதற்கு மேலைநாட்டு பல்கலைகளில் தனியாகத் துறை ஏற்படுத்திக் கொடுத்தது யார்? வெள்ளைகாரகிருத்தவன். அதற்காக நன்றி கூறாவிட்டால் பரவாயில்லை ஆனால் அதே வெள்ளைக்கார கிருத்துவன் சமற்கிருதம் வேறு தமிழ் வேறு என்று கூறினால் அது சூழ்ட்சியாகி விடுவது எங்கணம்\\\\\
    \\\\ஒரு முறையான தமிழ் கருத்துரையாடல் இழையில்”திரு” வைத் தவிர்த்து ‘சிரி’ யை வலுக்கட்டாயமாக புகுத்தியிருக்கின்றீர்கள்\\\\

    மிக வியப்பு அடைகிரேன். ஸ்ரீ ஜாகிர் ஹுசைன் என்ற தமிழ் இஸ்லாமிய அன்பர் பரத நாட்டியமும் ஸம்ஸ்க்ருதமும் கற்பதில் நாட்டம் கொண்டு தன் முயற்சியில் வெற்றி பெற்று மொழி மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாய் இருப்பவர். இந்த முயற்சியில் வெற்றி பெற்ற கிறிஸ்தவர்களையும் நான் சுட்டி உள்ளேன்.
    யாதொன்றும் கற்பவர் எப்படி இருக்க வேண்டும் என கண்ணன் கீதையில் உரைக்கையில்
    “தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்னேன சேவயா” என்று கூறிஉள்ளார்.
    ஸம்ஸ்க்ருதம் கற்பிக்கும் ஆசிரியரிடம் வடமொழி, செங்கிருதம், சமற்கிருதம் என்று கூறி அது புதைக்கப்பட்ட மொழி என்றும் கூறி ஸம்ஸ்க்ருதத்தில் மிக புனிதமான ஸ்ரீ என்ற வார்த்தையை “சிரி” என்று இகழ்ந்து இதற்கு மேல் அவர் தங்களுக்கு ஸம்ஸ்க்ருதம் கற்று தர வேண்டும் என்று எதிர் பார்ப்பது ஞாயமா நண்பரே.
    பூனை கண் மூடி கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று சொன்னதாம். ஸம்ஸ்க்ருதம் புதைந்து விட்டது என்று நீங்களோ வொய்ட் சர்ச்சோ நினைத்தால் அதை ஸம்ஸ்க்ருதம் தெரிந்தவர் மருப்பு ஏதும் சொல்லாது ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படித்தானே. தங்களுக்கு எத்தனை ஸம்ஸ்க்ருத மொழி படைப்புகள் சென்ற நூற்றாண்டுகளில் படைக்கப்பட்டது என்று தெரியுமா. கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் மட்டும் தமிழில் உள்ள வெண்பா ஆசிரியப்பா போன்று லலிதா, உபேந்த்ரவஜ்ரா, ஆர்யா, சார்தூலவிக்ரீடிதம், ரத பந்தம் போன்று எண்ணிற்ந்த ச்ந்தங்களில் நூற்றுக்கணக்கான படைப்புகள் தமிழகத்தில் மட்டும் படைக்கப்பட்டதை நான் அறிவேன். நான் எந்த மொழி வித்தகனும் அல்ல. பன்மொழி ஆர்வலன் என்ற ஆசையில் இந்த படைப்புகளை எம் தீந்தமிழ் திருப்புகழ் போன்று சுவைத்து மகிழிந்து உள்ளேன். ஹிந்துஸ்தானத்தின் மற்ற பகுதிகளில் இது போன்று எவ்வளவு அருமையான படைப்புகள் படைக்கப்பட்டன என் நான் அறியேன். நான் அறியவில்லை என்ற காரணத்திற்காக மற்ற பகுதிகளில் படைப்பு எதும் இல்லை என்று நான் சொன்னால் அது நேர்மை ஆகாது.
    மேலை நாட்டு பல்கலை கழகங்களில் ஸம்ஸ்க்ருதத்திர்க்கு துறை வேண்டும் என்று ஸம்ஸ்க்ருதத்தில் ஆர்வம் உள்ள யாரும் பிச்சை எடுக்கவில்லை. இண்டாலஜிஸ்ட் எனப்படும் வெள்ளைக்காரர்கள் ஸம்ஸ்க்ருதம் ஏன் கற்கிறார்கள் எவ்வளவு கற்கிறார்கள் என்பது தமிழ் ஸம்ஸ்க்ருதம் அறிந்த மொழி ஆர்வலர் நன்கு அறிவர். இந்த இணையத்தில் “மைக்கல் விட்ஜல்” என்ற இது போன்ற இண்டாலஜிஸ்ட் இங்கே ஏன் வந்தார் அவர் இங்கு வந்து எதாவது ஒரிரண்டாவது ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் அவர் பேசினாரா என்றெல்லாம் ஏற்கனவே இந்த இணயத்தில் பதிவு உள்ளது. ப்டித்து பார்க்கவும். அவருக்கு யார் யார் துணை போனார் என்றும் பதிவு உள்ளது. எம் வீட்டை கொளுத்த எம்மிடமே நெருப்பு எடுப்பானாம். அதற்கு நாம் ந்ன்றி வேறு கூற வேண்டுமாம்.

    தமிழ் வேறு ஸம்ஸ்க்ருதம் வேறு என்று இங்கே யாருக்கும் தெரியாதாம். வெள்ளைப்பரங்கியன் அதை உலகுக்கு எடுத்து கூறுவனாம்.

    முடிக்குமுன்

    வங்கள மொழியும் சிங்கத்தமிழும் எங்களதென்றிடுவோம்
    கன்னடம் தெலுங்கு கவின் மலயாளம் ஹிந்தியும் எங்களதே

    சூலம் பிடித்தெம பாசம் சுழ்ற்றித் தொடர்ந்து வரும்
    காலன் தனக்கொருகாலும் அஞ்சேன், கடல் மீதெழுந்த
    ஆலம் குடித்த பெருமான் குமாரன், ஆறுமுகவன்
    வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே!

    வேலும் மயிலும் சேவலும் துணை
    வணக்கம்.

  68. இராதாகிருஷ்ணன்,
    நன்றி!
    தமிழில் சில ஒலிகள் இல்லை என்று தான் இரவல் வாங்குகிறீர்கள். மேலும் வேற்று மொழி கலப்பு எனது தேவை அல்ல. உங்களது. நான் வேண்டாம் என்று வேண்டுகோளும் வைக்க எண்ணவில்லை. ஆங்கிலம் கலந்து இன்னொரு திருப்புகழ் யாரும் பாடப்போவதில்லை. ஆங்கிலக் கலப்பையும் வடமொழிக் கலப்பையும் ஒன்றென வாதிட இயலாது. மேலும் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தச் சொல்லியிருந்தேன். அது மொழிக் கலப்பு இயல்பாவதற்கு ஒரு தடை.

  69. ஸ்ரீ வினோத் ராஜன் அவர்களே தாங்கள் நாகர லிபியில் எழுதிய வாசகத்தில் ழகாரத்திர்க்கு பதிலாக ளகாரம் உள்ளது. தாங்கள் பராஹா எழுத்துமுறை மூலம் இதை எழுதி உள்ளீர்கள் என நினைக்கிறேன். தமிழ் ழ வடிவத்தை அப்படியே நாகரத்தில் இணைத்ததாக எனக்கு நினைவு. தெளிவு படுத்தவும். ழகாரம் நாகரத்தில் இணைக்கப்பட்டு விட்டதா.

    ட்ரான்ஸ்ஸ்லிடேறேஷன் மற்றும் ட்ரான்ஸ்கிரிப்ஷன் இரண்டு சொற்களையும் கேட்டு உள்ளேன். அதில் ட்ரான்ஸ்லிடேறேஷன் சொல்லை புழங்கவும் செய்கிறேன். இந்த இரண்டிலும் உள்ள வித்யாசம் என்ன?

    பஞ்ச திராவிடத்தில் புழக்கத்தில் உள்ள ளகாரம் உருது மொழியில் புழக்கத்தில் உள்ள பல எழுத்துக்கள் நாகரத்தில் இணைக்கப்பட்டதை பார்த்தோம். பஞ்சாபி மொழியில் “ர” மற்றும் “ட” விற்கு இடைப்பட்ட ஒலி உள்ளது. “சோப்ரா” என்று எழுதுவதை “சோப்டா” என்று படிப்பர். ஒலி வடிவத்தில் இது “ர’ மற்றும் “ட” விற்கு இடைப்பட்ட ஒலி. இந்த ஒலியை “ர” எழுத்தின் கிழ் புள்ளியிடுவதன் மூலம் புது எழுத்து முறை நாகரத்தில் அறிமுகப்படுத்த பட்டது.

    சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் ஹிந்துஸ்தானத்தின் மிகப் பழைய மொழிகள். மற்றும் பற்பல புழக்கத்தில் உள்ள மொழிகளுக்கு தாயான மொழிகள். சம்ஸ்க்ருதம் அரசியல் சாராததால் பற்பல திராவிட மொழிகள், பஞ்சாபி, உருது போன்ற மொழிகளை அரவணைக்கும் போக்கு உள்ளது. உருது மொழி கலப்பதால் சம்ஸ்க்ருதம் தீட்டு பட்டு விடும் என்று யாரும் மாரடிப்பதில்லை. தமில் வாலக இந்தி ஓளிக என்று தமிழும் படிக்காது ஹிந்தியும் படிக்காது கூக்குரல் போடுபவர் வெறும் ஜிங்கோஇசம் மூலம் தமிழ் அரசியல் நடத்துபவர். இந்த பேர்வழிகள் தான் சம்ஸ்க்ருதத்தில் பிற மொழி ஒலிகள் சேர்க்கப்பட்டு உள்ளதா இல்லையா என்று தெரிந்து கொள்ள கூட பிரயத்னம் கூட செய்யாது சம்ஸ்க்ருதத்தில் என்னத்தை செய்தாய் என்று கேட்பார். Ignorance is bliss. இப்போது சம்ஸ்க்ருதத்தில் பிறமொழி ஒலிகள் இணைக்கப்பட்டு உள்ளது என்று தெளிவு படுத்தப் பட்டு உள்ளது. பின் தமிழ் மொழியில் பிற மொழிகளை அரவணைக்கும் பாங்கு வர வழி உள்ளதா. அல்லது அரசியல் தொடருமா?

    \\\\ஆங்கிலம் கலந்து இன்னொரு திருப்புகழ் யாரும் பாடப்போவதில்லை. \\\ ஸ்ரீ ராம்கி இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறிர்கள் என்று விளங்கவில்லை. தெளிவு படுத்த முடியுமா?

  70. // krishnakumar
    17 November 2010 at 5:39 pm //
    உங்களின் மேற்படிக் கட்டுரை நிறைவைத் தந்தது. நன்றி. நான் நேர்முக வகுப்பில் சைவ சித்தாந்தம் பயிலச் சென்றேன். அங்கு வேதத்துக்கு எதிராகவும் சமஸ்கிருதத்துக்கு எதிராகவும் எத்தனையோ கருத்துக்கள் எழுந்தன. மிகப் பொறுமை காக்க வேண்டி வந்தது.
    வேதனையை இறைவனிடம்தான் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை.
    இன்று கயிலை மாமுனிவர் காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் அவர்கள், ‘வேதம் உலகப் பொதுமறை. உலகப் பொதுமறையானாலும், தமிழர்களின் தனிப்பெருஞ் சொத்து. வேதம் எழுதாக்கிளவி. ஒலி வடிவாக இருந்தது. எழுத்து வடிவம் கொடுக்கப்பெற்றது. “வேத மொழியர்” என்று இறைவனைக் குறிப்பது மாணிக்கவாசகம். வேத மொழியினின்றும் சமஸ்கிருதம் உருவாயிற்று. யாருக்கும் தாய்மொழியாக இல்லை. “இம்மொழி ஆரிய மொழிகளுக்குத் தலைமையான மொழி. ஆரியர் என்பாரும் ஓர் இனத்தார் அல்லர்.” இதை அறிஞர் அம்பேத்கர் தெளிவுபடுத்தி இருக்கிறார். சமஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழியாக இருந்ததில்லை. பிராகிருதமே பேச்சுமொழி. தமிழர்களும் சமஸ்கிருதத்தில் வல்லவர்களாகவே விளங்கி வந்திருக்கின்றனர். இவ்விரு மொழிகளையும் ஒருங்கே படைத்தவர் இறைவனே” எனக் கூறிய பகுதியை வெளியிட்டிருந்தது பொருத்தமானதும் சிறந்ததுமாகும்.
    இந்தியச் சமயங்களின் உட்பிரிவுகளையும் மொழிகளையும் ஒன்றுக்கு மற்றது பகை போல மாற்ற வீண் முயற்சி செய்வோர் அவசியம் உங்கள் கட்டுரையைப் படிக்க இறைவன் அருள்வாராக.

  71. //ஸ்ரீ வினோத் ராஜன் அவர்களே தாங்கள் நாகர லிபியில் எழுதிய வாசகத்தில் ழகாரத்திர்க்கு பதிலாக ளகாரம் உள்ளது. தாங்கள் பராஹா எழுத்துமுறை மூலம் இதை எழுதி உள்ளீர்கள் என நினைக்கிறேன். தமிழ் ழ வடிவத்தை அப்படியே நாகரத்தில் இணைத்ததாக எனக்கு நினைவு. தெளிவு படுத்தவும். ழகாரம் நாகரத்தில் இணைக்கப்பட்டு விட்டதா.//

    ஆம். ளகரத்தில் நுக்தம் சேர்க்கப்பட்டுள்ளதை கவனிக்க.

    பாரஹா அல்ல என்னுடைய எழுத்துமாற்றி மூலம் மாற்றியது.

    https://www.virtualvinodh.com/aksharamukha

    //ட்ரான்ஸ்ஸ்லிடேறேஷன் மற்றும் ட்ரான்ஸ்கிரிப்ஷன் இரண்டு சொற்களையும் கேட்டு உள்ளேன். அதில் ட்ரான்ஸ்லிடேறேஷன் சொல்லை புழங்கவும் செய்கிறேன். இந்த இரண்டிலும் உள்ள வித்யாசம் என்ன?//

    டிரான்ஸ்லிடறேஷன் என்பது எழுத்துப்பெயர்ப்பு. உச்சரிப்பை பற்றி கவலைப்படாமல் எழுத்துக்களை மட்டும் மாற்றுவது

    அதாவது, வந்தான் என்பதை वन्ताऩ् என மாற்றுவது எழுத்துப்பெயர்ப்பு.

    டிரன்ஸ்கிரிப்ஷன் – ஒலிப்பெயர்ப்பு.

    அதாவது, மேற்கண்ட சொல்லையே वन्दाऩ् என சேர்ப்பது.

    இதை சமஸ்கிருதத்துக்கு சொல்ல வேண்டுமென்றால்.

    हरिः – ஹரி: (எழுத்துப்பெயர்ப்பு)
    ஹரி(ஹி) (ஒலிப்பெயர்ப்பு)

    V

  72. கிருஷ்ணகுமார்,
    தங்களுக்குப் பதிலெழுத சற்றுத் தயக்கமாக இருக்கிறது. தாங்கள் என் பதிலுக்கிப் பின் கிருத்துவ சதியைத் தேடக்கூடும். அவ்வாறு தெடுவீர்களாயின் மேலே இதைத் தொடுருவதில் பயனில்லை.
    எனது பதிலுக்கு முன் சில கருத்தூட்டம்
    தமிழ் நாட்டுப் பிற மொழி காழ்ப்பு பற்றி எழுதும் நீங்கள் எனது நினைவூட்டலுக்குப் பின்னும் என் கேள்விகளுக்குப் பதில் தரவில்லை.
    பிற மொழிக் கலப்பு என்பது எந்த மொழிக்கும் தவிர்க்க இயலாதது. அதை எதிர்த்துப் போராடுவதென்பது ஒரு நோக்கில் அறியாமை கூட.
    ஆனால் தமிழில் வடமொழி கலப்பு என்பது நிறைய அரசியல் சூழ்ந்தது. தாங்கள் கூட ராம்கி என்றோ திரு ராம்கி என்றோ எழுதாமல் ஸ்ரீ ராம்கி என்றே எழுதுகிறீர்கள். உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலராயிருக்கும் இந்து ஆர்வலர்கள் வலிந்து கொணரும் இக்கலப்பு சற்று ஆர்வம் குறைவாக இருக்கும் பலரிடையே இயல்பாகப் பரவி விடுகிறது.
    இந்த இயல்பான கலப்பு பக்தி இலக்கியங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. பொதுவாகப் பாட்டிலக்கணம் கூடியும் குறைத்தும் (அளபெடுத்தும் ) எழுதுவதை வகை செய்வதோடு வெற்றிமொழிக் கலப்பை ஏற்கிறது.
    அதிலும் நாவுக்கரசர் போன்ற அருளாளர்களை நீங்கள் பட்டியலிட்டு”ஸ்ரீ ராம்கி” யை நியாயப்படுத்துவது சரியல்ல.
    ஆங்கிலம் போன்ற மொழிகள் கலக்கும் போது இத்தகைய இயல்பான ஏற்பு அவற்றுக்குக் கிடைக்காது. அவற்றைத் தவிர்க்கும் உனைர்வை ஆர்வலர்கள் மட்டுமின்றி அதன் அடுத்த சுற்றுக்கும் எடுத்துச் செல்லலாம். இதையே நான் ஆங்கிலம் கலந்து திருப்புகழ் எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன்.

    வேறு ஒரு விவாதத்தில் நான் வைத்தது போலவே தேசிய எண்ணம் கொண்டவர்கள் (அல்லது அவ்வாறு நினைப்போர்கள் ) தமிழிற்கு உரிய இடமளிக்கவில்லை. அதுவே தி மு க போன்ற இயக்கங்களுக்குக் கடை போட போதுமானது. அக நானூறு தன் காப்பிலேயே யாழ்கெழு மணிமிடற்று அந்தணன் எனப் போற்றும் நிலையிலும் தமிழைச் சொல்லி இறைமறுப்பை வளர்த்தனர்

  73. கீழே கொடுத்துள்ள வலைப் பக்கத்தைப் பாருங்கள். தமிழ்ச்செம்மொழி அலுவலகத்தில், தமிழ்ப்பல்கலைக் கழக துணைவேந்தரால் அழைக்கப்பட்டு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபின்னர், அதில் கலந்துகொண்ட திரு ரவிக்குமார் (விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்) செய்த பதிவு இது. இந்த விஷயத்தில் யார் யார் என்ன நிலை எடுத்தார்கள் அவரது நிலை என்ன என்பது இதில் இருக்கிறது.

    https://nirappirikai.blogspot.com/2010/11/blog-post_03.html

    திரு கி.நாச்சிமுத்து அவர்களின் வேறு கோணத்திலான பார்வையும் இதோ இந்தப் பக்கத்தில் :

    https://nirappirikai.blogspot.com/2010/11/blog-post_8125.html

  74. சு பாலச்சந்திரன்

    அன்புள்ள கிருஷ்ணகுமார்,

    மிக நீண்ட கடிதத்தை மிக தெளிவாக மற்றும் அற்புதமாக எழுதியுள்ளமைக்கு நன்றி. தூங்குபவனை எழுப்பலாம்.தூங்குபவன் போல நடிப்பவனை எழுப்பமுடியாது. உங்கள் கடிதத்தை பாராட்ட சொற்கள் உடனடியாக கிடைக்கவில்லை. உங்கள் பணி தொடரட்டும்.உங்களுக்கு இறைஅருள் என்றும் கை கொடுக்கட்டும்.

  75. ஸ்ரீமான் வினோத் ராஜனிடம் இழையிலிருந்து வெகுவாக விலகியதற்கு க்ஷமாயாசனம் செய்தும் எமது சம்சயங்களுக்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தும் நிறைவு பகுதியாக இதை எழுத விழைகிறேன்.

    மற்றொரு இணைப்பில் விவாதத்தின் மற்றொரு கோணத்தை தெரிவித்த ஸ்ரீமான் உமாசங்கர் அவர்களுக்கு நன்றி. அங்கே எழுதிய பல வித்தகர்களின் பதிவுகளை படித்த பின் வித்தகனல்லாது ஆர்வலனாகிய யாம் இப்பதிவை தெரிவு செய்கிறோம்.

    \\\\\\\\அதிலும் நாவுக்கரசர் போன்ற அருளாளர்களை நீங்கள் பட்டியலிட்டு”ஸ்ரீ ராம்கி” யை நியாயப்படுத்துவது சரியல்ல.\\\\\\\\\\\\மணிப்ரவாள நடையிலிருந்து தமிழை மீட்டெடுக்க இயக்கம் தோன்றியது வரலாறு.\\\\\\\\\\\\

    ஸ்ரீமான், வரலாறு என்று போதிக்கப்படுவது அனைத்தும் உண்மை என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் இல்லை அவ்வபோது இருக்கும் அரசாங்கதினரின் உண்மையான பொய்யான மிகைப்படுத்தப்பட்ட சில நிலைப்பாடுகளின் கிச்சடி தான் வரலாறு என்று அரங்கேறுகிறது. ஆரியன் என்பது ஒரு இனம் திராவிடம் என்பது ஒரு இனம் என்ற அப்பட்டமான பொய் வரலாற்றில் நுழைக்கப்பட்டது. இன்று ஜபர்தஸ்தியாக நுழைக்கப்பட்ட இந்த நிலைப்பாடு பொய் என்று தேசியவாதிகள் நிரூபணம் செய்தும் எம் குழந்தைகள் இன்றும் கூட இந்த புரட்டை வரலாற்றில் படிக்கிறார்கள்.

    ஸ்ரீ ராம்கி அவர்களே மணிப்ரவாளம் எமது இல்ல மொழி வழக்கு. ஏதோ வேண்டுமென்றே “திரு” தவிர்த்து “ஸ்ரீ” எழுதுவதாக எண்ண வேண்டாம். “ஸ்ரீ” “ஸ்ரீமான்” “மகாசயா” போன்ற வார்த்தைகள் மழலை தொடர்ந்து கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயல்பாக யாம் புழங்கும் வார்த்தைகள். இதில் தவறேதும் இருப்பதாக எமக்கு லவலேசமும் சந்தேகம் கிடையாது. பின்னும் தங்களுக்கு இந்த வார்த்தை வெருப்பளித்தால் திரு என்று எழுதுவதில் எமக்கு யாதொரு ஆக்ஷேபமும் இல்லை.

    \\\\\\\\\\மணிப்ரவாள நடையிலிருந்து தமிழை மீட்டெடுக்க இயக்கம்\\\\\\\\\ இந்த வாக்யத்தில் இயக்கம் இருந்தது இருக்கிறது என்பது உண்மை. மணிப்ரவாள நடையில் தமிழ் தொலைகிறது என்பதும் அது ஏதோ மீளாத்தொலைவு என்றும் அதை மீட்டு எடுக்க ஒரு இயக்கம் என்றெல்லாம் இந்த செய்தியில் தொக்கி நிற்கும் நிலைப்பாடுகள் மிகைப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகள். மேலும் இந்த மணிப்ரவாள நடை அமிழ்ந்து விட்டது என்பதும் ஸ்வப்ன துல்யம்.

    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் வியாக்யானம் படிக்கும் வைணவ இல்லங்களிலும் திருப்புகழ் நிதம் ஓதும் வைணவர் அல்லாதார் இல்லங்களிலும் மணிப்ரவாள நடை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழ் நடை. பிழை மலிந்த மொழி பிரயோகமாயினும் தமிழ் பேசும் கிறிஸ்தவ அன்பர்களின் இல்லங்களில் புதிய ஏற்பாட்டு பைபல் மூலமும் அவர்களின் பிரசங்கங்களிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் நடை மணிப்ரவாளம்.

    இதை யாம் வெரும் வார்த்தைக்கு சொல்லவில்லை. “சர்போதகப்பதும முற்றே தமிழ் கவிதை பேசி பணிந்துருகு நேசத்தை இன்று தர இனி வர வேணும்” “முந்து தமிழ் மாலை கோடி கோடி” என்றெல்லாம் திருப்புகழில் வள்ளல் அருணகிரி சொல்லிவைத்தபடி யாம் உணர்ந்தது.

    பரமசிவம் படைத்து அகத்திய முனி வகுத்து நக்கீரரும் மற்ற சங்கப்புலவர்களும் சமய குரவர் நால்வரும் ஆழ்வார்கள் பன்னிருவரும் வள்ளல் அருணகிரியும் வள்ளலாரும் திருமுருக கிருபானந்த வாரியாரும் வளர்த்த தமிழ் சம்ஸ்க்ருதம் கலப்பதாலோ ஹிந்தி கலப்பதாலோ தீட்டு படும் அல்லது அழியும் என்பது மதியீனம் என்பது எனது திட நம்பிக்கை. மறைமலை அடிகளின் அடித்தளமில்லா விதண்டா வாதமும் பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் ஆழ்ந்த எதிர் வாதமும் இதற்க்கு உரம் சேர்க்கின்றன.

    வொய்ட் சர்ச்சால் இனசாயம் பூசப்பட்டு கழக கண்மணிகளால் மரண சான்றிதழ் கொடுக்கப்பட்டும் “சிற புராதன நித்ய நூதன” (காலத்தால் மிகவும் பழைய ஆனால் என்றும் இளமை மிகும்) என்று இளமை மாறது படிப்பவர்கள் சிந்தையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்ஸ்க்ருதம் திராவிட மொழிகள் மற்றும் உருது பஞ்சாபி போன்ற மொழிகள் கலந்தும் தன தனித்தன்மை இழக்கவில்லை. இழக்காது என்பதும் திண்ணம்.

    ஸ்ரீமான்,நான் தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஹைதராபாத் துவங்கி பல மாநிலங்களில் பணி செய்து இன்று காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ளேன். காஷ்மீர மொழி புரிந்து கொள்ள சற்று சிரமமாக உள்ளது. மற்ற படி இந்த நீண்ட பிற மாநில சேவைகளில் பல மொழிகள் அறிய வாய்ப்பு கிடைத்தது. இன்று தமிழ், ஹிந்தி, பஞ்சாபி/டோக்ரி , உருது, ஆங்கிலம் போன்ற மொழிக்கலவைகளின் பகிர்ந்தளிப்பு எம் எண்ண ஓட்டம். எம் ஸ்வதந்த்ரமான எண்ண ஓட்டத்தின் படி எழுதுவது விரைவாக எழுத துணை அளிக்கிறது. வாக்யத்திற்கு வாக்கியம் ஜபர்தஸ்த்தியாக ஒரு முனைப்போடு மொழி கலவா தமிழ் எழுதுதல் சாத்யம். ஆனால் அது நீண்ட நேரம் எடுக்கிறது.

    மிகப்பல வருடங்கள் நான் என் மனைவி என் மகன் என்று எங்களின் சிறு குடும்பம் தவிர்த்து தமிழ் மொழி பேசுபவர் வேறு யாரும் இல்லாத இடங்களில் எங்களின் ஒரே ஆதாரம் வள்ளல் அருணகிரி தந்த திருப்புகழ்.

    “தனி வழிக்கு துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”

    “தனித்து வழி நடக்கும் எனதிடத்தும் ஒரு
    வலத்து மிரு புரத்துமறு கடுத்திரவு
    பகற்றுணையதாகும்”

    என்று திருப்புகழையும் வேலையும் மயிலையும் சேவலையும் துணையாக எங்கள் வாழ்க்கை பயணம் நடக்கிறது.

    நெருப்பையும் எரிக்கும் பொறுப்பையும் இடிக்கும்
    நிறைப்புகழ் உரைக்கும் செயல் தாராய்
    சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
    திருப்புகழ் நெருப்பென் ரறிவோம்யாம்

    என்ற இப்படி எங்கள் வாழ்வாதாரமான திருப்புகழை நேர்முகமாவோ மறைமுகமாவோ எவரும் தனித்தமிழ் என்ற ஆயுதம் கொண்டு தாக்கினால் அல்லது தாக்கினார் என்று யாம் உணர்ந்தால் கூட பதிலிருப்பதில் யாம் தயக்கம் காட்டுவதில்லை.

    எமது பள்ளிப்பருவத்தில் ஸ்ரீமான்கள் சேலம் கோபால ஐயர் பாலசுப்ரமணிய செட்டியார் சுப்பையா செட்டியார் வையாபுரி கவுண்டர் ( தயவு செய்து சாதி குறிப்பிடுகிறேன் என்று என்ன வேண்டாம் அக்காலத்தில் இவ்வாறே அந்த சான்றோர் தம் பெயர் எழுதினர்) போன்ற சான்றோர்கள் தம் திருப்புகழ் சபை மூலம் ஊர்க்குழந்தைகளுக்கு திருப்புகழ் அமுதம் உட்டினர். அந்த சான்றோர் ஊட்டிய அமுதத்தில் இதயத்தில் அமிழ்ந்த சில துளிகளும் அவர்களோடு சேர்ந்து திரு செங்கோட்டு வேலவனின் படி பூசையில் கலந்ததாலும் அவர்கள் கையால் செங்கோட்டு வேலனின் திருநாமம் கலந்த பிரசாதம் உண்டதாலும் அவர்கள் இட்ட பிச்சையான திருப்புகழ் எங்கள் நாவில் இன்று மட்டும் உள்ளது. இப்படி ஒரு தாய் பிள்ளையாக

    “உருகியும் ஆடிப் பாடியும் உணர்வினொடூடிக் கூடியும் உணதடியாரைச் சேர்வதும் ஒருநாளே”

    என்ற சூழலில் அமுதம் உண்ட எமக்கு இனவாதம் எப்படி கசக்கும் என உணரலாம்.

    கிறிஸ்தவ இஸ்லாமிய நண்பர்களுடன் கோட்டை மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்த எமக்கு யாம் வணங்கும் கடவுள்கள் சாத்தான்கள் என்று சொல்லி எம்மிடம் சில கிறிஸ்தவர் பிரசாரம் செய்தது வலியையும் வெறுப்பையும் தந்தது.

    அது முதல் மொழி வெறுப்பு இன வெறுப்பு ஹிந்து மத வெறுப்பு என்று யார் பேசினாலும் என்னால் இயன்ற மறு மொழி தயக்கம் இல்லாமல் கொடுப்பது என் வழக்கம்.

    \\\\\\\\தாங்கள் என் பதிலுக்கிப் பின் கிருத்துவ சதியைத் தேடக்கூடும்.\\\\\\\\

    ஸ்ரீமான், தங்கள் எழுதிய \\\\\\\\\\\\\வேறு ஒரு விவாதத்தில் நான் வைத்தது போலவே தேசிய எண்ணம் கொண்டவர்கள் (அல்லது அவ்வாறு நினைப்போர்கள் ) தமிழிற்கு உரிய இடமளிக்கவில்லை. அதுவே தி மு க போன்ற இயக்கங்களுக்குக் கடை போட போதுமானது.\\\\\\\\\\ இந்த வாசகத்தை படித்த பின் தங்கள் ஆதங்கம் ஏது என புரிகிறது. தங்கள் பதிலுக்குப் பின் யதார்த்தம் உள்ளது என்று உணர்கிறேன்.

    \\\\\\\\\\\\\நான் நேர்முக வகுப்பில் சைவ சித்தாந்தம் பயிலச் சென்றேன். அங்கு வேதத்துக்கு எதிராகவும் சமஸ்கிருதத்துக்கு எதிராகவும் எத்தனையோ கருத்துக்கள் எழுந்தன. மிகப் பொறுமை காக்க வேண்டி வந்தது.
    வேதனையை இறைவனிடம்தான் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை.\\\\\\\\ ஸ்ரீ ராதக்ருஷ்ண மகாசயா, கயிலை மாமுனிவரின் வாக்கினை யாம் எழுதியது தங்கள் தாபம் தணிக்க எம்மை கருவியாய் ஆக்கிய ஆடல்வல்லானின் சங்கல்பமாக இருக்கலாம். யாரே அறிவார் அவன் கருணையை.

    வெள்ளை பரங்கியரின் அச்செந்திர சேவையை தமிழ் சேவை என்று மயங்கிய சில மடாலயங்களை சேர்ந்த மதிப்புக்குரிய அருளாளர்கள் சிலர் அவர்கள் துஷ் பிரச்சாரத்திற்கு மயங்கி மொழி வெறுப்பு மறை வெறுப்பு என்றெல்லாம் இறங்கியது தமிழ் ஹிந்துக்களின் துரத்ருஷ்டம்.

    ஆனால் ஐயா, யாம் வணங்கும் கடவுள்களை சாத்தான்கள் என்று கிறிஸ்தவர் பகர்ந்தமையால் அவர்களின் பைபல் அவர்களின் பூசல் யூதர்களுக்கு அவர்கள் செய்த கொடுமைகள் அவர்களின் தந்திரங்கள் இவற்றை பற்றி யாம் படிக்க நேர்ந்தது.

    சாதி வெறி ஊட்டுதல் மொழி வெறி ஊட்டுதல் மற்ற ஹிந்துஸ்தான மொழிகளுக்கு எதிராக ஆங்கிலத்தை ஊக்குவித்தல் இவர்களின் தந்திரங்களில் சில. இந்த நிலைப்பாடுகளை எடுப்பவர் அனைவரும் வொய்ட் சர்ச் காரர்கள் என்று சொல்லவில்லை நான். இவர்கள் வொய்ட் சர்ச் காரர்களாகவும் இருக்கலாம் அல்லது அவர்களின் வார்த்தை ஜாலங்களில் மயங்குபர் ஆகவும் இருக்கலாம் என்று சொன்னேன். பல பாமர மக்கள் இவர்களின் சேவை மற்றும் வார்த்தை ஜாலங்களில் மயங்குகிறார்கள் என்பது உண்மை.

    \\\\\\\\\\\\\ஒரு தமிழன், தமிழின் மிகப்பழமையான நூல், தமிழ் மொழிக்கு அடித்தளமான நூல் இதை தலைவைத்து வைத்து கொண்டாடுவது உங்களுக்கு ஏன் கசக்கிறது?\\\\\\\\தேவாரத்தை கரையான் புற்றில் போட்டு அழிக்க முனைந்தது யார்\\\\\\\\\\\இது போன்று தமிழ் பற்று மற்றும் ஆரிய வரலாற்று உண்மைக்கு நிகரான வரலாற்று உண்மைகளை பகர்ந்த எமது கிறிஸ்தவ சோதரர் அன்பர் பிலிப் அவர்கள் எழுதிய பின் நான் எழுதியது.

    \\\\\\\\\\\\\\\\\\\\\\\முதலில் தமிழில் ஸம்ஸ்க்ருத கலப்பு தமிழைக் குலைக்க என்று துஷ் பிரசாரம் செய்வது. அது எடுபட்ட பின் பார், தேவாரம், திருப்புகழ், திவ்யப்ரபந்தம் இவை எல்லாவற்றிலும் கலப்பை காண்பாய். இவை எல்லாம் தமிழ் நூல்களே அல்ல என்று தமிழ் மறைகளை ஒழித்து விட்டால் வொய்ட் சர்ச்சிர்க்கு ஹிந்து மதத்தை அழிப்பது மிக சுலபம். \\\\\\\\\\\\\\\\

    ஸ்ரீ வெங்கட் அவர்கள் பகர்ந்த படி தமிழ் பேபரில் நண்பர் பிலிப் எழுதியதை கிழே பதித்து உள்ளேன்.

    \\\\\\\\\\\\\\\\\\\//தொல்காப்பியன், வள்ளுவன், கம்பன் இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள். – தந்தை பெரியார் //

    ஜாதியை ஏற்றுக்கொண்டு ஜாதிரீதியாய் தொழில்களையும் பிரிப்பதை நியாயப்படுத்தும் நூல் என்பதாலேயே தந்தை பெரியார் தீர்க்கதரிசனத்துடன் திருக்குறளை கடுமையாக விமர்சித்து நிராகரித்தார். ஆனால் பின்னர் வந்த திராவிடக்கட்சிகள், அவர் சிலைக்கு வருடாவருடம் மாலை போடுவதோடு நிறுத்திக் கொண்டு அவர் உயிர்மூச்சாய்ப் பரப்பிய ஆதாரக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டன. \\\\\\\\\\\\\\\\\\\\

    செயின்ட் தாமஸ் திருவள்ளுவருக்கு ஞான ஸ்நானம் செய்தார் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்றல்லாம் வொய்ட் சர்ச் ஆதரவுடன் படம் பிடிக்க போகிறார்கள் என்று இதே இணையத்தில் படித்தேன்.

    தமிழில் எழுதப்பட்ட ஒவ்வொரு அக்ஷரமும் தமிழ் மொழியின் அழியாத சொத்து. தேம்பாவணி, சீறாப்புராணம் போன்ற நூல்கள் உட்பட மற்றும் தமிழ் ஹிந்துக்கள் இல்லங்கள் தோறும் ரசித்து ருசித்து படிக்கப்படும் கம்ப ராமாயணத்தையும் தமிழ் மொழியின் ஆதார ஸ்தம்பமாகிய தொல்காப்பியத்தையும் அதற்க்கும் மீறி தர்ம சாஸ்திர துல்யாமான திருக்குறளையும் ஏன் தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு இலக்கியத்தையும் நிராகரணம் செய்வது அல்லது செய்ய நினைப்பது என்பது மௌட்யம் அன்று. மௌட்யத்தின் சிகரம்.

    யாம் முன்னமே எழுதிய படி இந்த இழையிலிருந்து விலகி ஆனால் இழையுடன் சிறிது சம்பந்தம் உள்ள விஷயங்களை பகிர்ந்தோம். ஸ்ரீ ராம்கி தங்களுடைய கேள்விகளை புறந்தள்ளவில்லை. இழையிலிருந்து மிக விலகிய பதிவு என்ற எண்ணப்பாட்டில் பதில் இயம்பவில்லை. முடிந்த வரை பதிலிறுக்க முயற்சிக்கிறேன். அரசியல் சார்ந்த கேள்வி என்பதால் பதிலிலும் அரசியல் இருக்கும்.

    இந்தி மாநிலங்களில் தமிழ் அல்லது ஏதேனும் தென் மாநில மொழி கற்பிக்கபடுகிறதா? எத்தனை விழுக்காடு பயில்கிறார்கள்?

    ஹிந்தி மாநிலங்களில் குறிப்பாக தில்லியில் தமிழ் கற்பிக்க படுகிறது. டி.டி.இ.எ பள்ளிகளில். இங்கே படிக்கும் குழந்தைகள் தமிழ் குழந்தைகள். ஆனால் தமிழர் அல்லாதோருக்கு தமிழோ அல்லது மற்ற தென் மாகாண மொழிகளோ கற்பிக்க படுகிறதா எத்தனை சதவிகிதம் என்பது தங்கள் கேள்வி. ஐயா, எமக்கு தெரிந்த வரை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எங்காவது படிப்பிக்க படுகிறது என்றால் எம் கருத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

    நீ என் மொழி படிக்கவில்லை ஆதலால் நான் உன் மொழி படிக்க மாட்டேன் என்று தேச ஒருமைப்பாடு வராது. நான் உன் மொழி படிக்கிறேன். ஆதலால் நீயும் என்மொழி படிக்க வேண்டும் என்பது சரியான நிலை என்பது எம் கணிப்பு.

    ஹிந்தியை தென் மகாணங்களில் பரப்ப வேண்டி “தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா” மூலம் பிரயத்னம் செய்கிறார்கள். ஹிந்தி எதிர்ப்பு மாய்மாலங்கள் நாடகங்கள் இவை எல்லாம் அரங்கேறிய பின்னும் பிரசார சபையின் பணி இன்றும் நடை பெறுகிறது.

    யாம் தனிப்பட்ட மனுஷ்யனாக எம் தாய் மொழியை மற்றவருக்கு பகிர்ந்து வருவதை ஏற்கனவே தெரிவு செய்துள்ளேன். மற்ற பல மாகாண சர்வகலாசாலைகளில் தமிழ் மொழிக்கு துறை உள்ளது என அறிகிறேன். கேரள சர்வகலாசாலையினர் பாதுகாத்துவரும் ஓலைச் சுவடிகளில் இருந்து வள்ளல் அருணகிரிநாதர் எழுதி இதுவரை அச்சில் இல்லாது சமீபமாக அச்சேறிய திருப்புகழ் இதற்கு வலு சேர்கிறது.

    இது போன்று தமிழ் துறை அல்லாது மற்ற மொழி பேசுபவர்க்கு தமிழ் கற்பிக்க தமிழக சர்கார் ஸ்வதந்த்ரம் கிடைத்து இன்று அறுபது ஆண்டுகள் ஆகி என்ன செய்து உள்ளார்கள். மற்ற மாநிலங்களில் தமிழ் பரப்பாதே என்று ஹிந்துஸ்தானத்தின் எந்த சட்டங்களும் நம்மை பிரதிபந்தம் செய்யவில்லையே.

    பெயர்ப் பலகைகள் மீது தார் பூசி ஹிந்தி எழுத்துக்களை அழித்து ( இன்று திரும்ப வந்து விட்டதே) அதை தமிழ் மொழி பற்று என்று தம்பட்டம் அடித்ததற்கு பதிலாக மற்ற மாகாணங்களில் ஹிந்தி பாஷையை பரப்ப பாரத சர்கார் “தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா” அமைத்தது போன்று தமிழக சர்கார் “வட பாரத தமிழ் பிரசார சபா” ஏன் “தமிழ் பிரசார சபா” என்று அமைத்து மற்ற மகாணங்களில் தமிழ் பிரசாரம் செய்திரிந்தால் தமிழ் கற்பதில் ஆர்வமுள்ள எத்தனையோ பேர் பயன் அடைந்து இருப்பார்களே. இதற்க்கு சர்க்காரிடம் பணம் இல்லை என்று சொல்லாதிர்கள். தெருத் தெருவாக சிலை வைப்பதற்கு சர்க்காரிடம் பணம் உள்ளது. அறுபது ஆண்டு காலமாக பல தமிழக அரசியல் வாதிகள் ஊழல் செய்து தமது குடும்ப சம்பத்தை வ்ருத்தி செய்ய பணம் இருந்தது. ஆனால் “தமிழ் பிரசார சபா” அமைக்க பணம் இல்லை என்று சொல்லாதிர். யாம் தனி ஒரு மனுஷ்யனாக செய்யும் காரியத்தை ஒரு சர்கார் ஏன் செய்ய இயலாது என்ற மனம் தாங்காத பொருமலில் இதை எழுதுகிறேன்.

    இது போதாது. குறைந்த பக்ஷம் தேசிய வாதிகள் ஆளுமையில் இருக்கும் பிரதேசங்களில் ஹிந்துஸ்தானந்த்தின் மற்ற பாஷைகளை பரப்ப குறைந்த பக்ஷம் முயற்சி எடுக்கப்பட வேண்டும்.

    இணைப்பு மொழியாக ஆங்கிலம் நீடிப்பதை எதனால் இந்தி மாநிலங்கள் பாராளுமன்ற்த்தலும், வெளியிலும் எதிர்த்தன?

    உலகத்தில் வ்யாபார மொழியாக ஆங்கிலம் நீடிக்கும் வரை ஹிந்துஸ்தானத்தில் அது நன்றாக கற்பிக்கப் படவேண்டும் என ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஹிந்துஸ்தானத்தில் அது இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற வாதத்தை அடியோடு எதிர்க்கிறேன். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மேல் தட்டத்து மக்கள் தவிர்த்து பல மொழிகள் பேசும் ஹிந்துஸ்தானத்தின் பல கோடி ஸாமான்ய மக்களின் இணைப்பு மொழியாக ஏற்கனவே ஹிந்தி ஆகி விட்டது என்பது நிதர்சனம். இதை விளக்க நான் மிக நீண்ட தெரிவுகள் பதிக்க வேண்டும். ஹிந்தி, ஹிந்துஸ்தானி, உருது, பாரத சர்காரின் மொழிக் கொள்கைப் படி பரப்ப விழைகின்ற ஹிந்தி போன்ற பல விஷயங்கள் சம்பந்தமாக விளக்கங்கள் அளிக்க வேண்டும்.

    எனவே, இணைப்பு மொழியாக ஆங்கிலம் நீடிப்பதை இந்தி மாநிலங்கள் பாராளுமன்ற்த்தலும், வெளியிலும் எதிர்த்தன என்பதை யாம் ஆமோதிக்கிரோம். இது அந்த மாஹாணங்களின் அரசியல் கூத்து என்று நீங்கள் சொன்னால் அதில் உள்ள நிதர்சனத்தையும் ஒப்புக்கொள்கிரோம்.

    1991 லும் பின் ௨௦௦௭ லும் கர்நாடகத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டதிற்கு என்ன காரணம்? எந்த தேசிய இயக்கங்கள் அதைக் கண்டித்தன?

    கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டது; ம்ஹாராஷ்ட்ரத்தில் மற்றும் ஆஸாமில் எம் ஸஹோதரர்களாகிய பீஹாரிகள் தாக்கப்பட்டது பல வருஷங்கள் முன் அங்கெயே எம் தமிழ் ஸஹோதரர்கள் தாக்கப்பட்டது இவை அத்தனைக்கும் காரணம் யாம் முன்னமே கூறிய மொழி வெருப்பு. மொழியின் பேராலோ மதத்தின் பேராலோ சாமான்ய மக்கள் ஹிம்சை செய்யப்படுவது மிகுந்த துயரம் அளிக்கும் செயல். பண்டித நேருவின் பயங்கரமான பிழையான் மொழி வாரி மாஹாண அமைப்பும் இதற்கு பெரிய காரணம். இதை தேசிய வாத இயக்கஙகள் கண்டித்தன என்பது உணமை. அந்த கண்டிப்பு வெறும் ஸம்ப்ரதாயம் என்பதும் மறுக்க முடியாத இன்னொரு உண்மை. இந்த நிலை மாற தேசிய வாத இயக்கங்கள் இடித்துரைக்கப்பட வேண்டும் என்பது எம் கருத்து. தேசிய வாத சக்திகள் இது போன்ற மக்கள் விரோத செயல்களை முனந்து எதிர்க்க வேண்டும் என்பது எம் அவா.

    \\\\\\\\\\\\நேர்மையான விவாதத்திற்கு நான் ஆயத்தமாக இருக்கிறேன்.\\\\\\\\\\\\\\
    ஸ்ரீமான் வித்தகர்களிடையே நடைபெரும் கலந்துரையாடல் விவாதம். தாங்கள் வித்தகராக இருக்கலாம். விவாதம் செய்யலாம். ஆனால் ஆர்வலன் என்ற முரையில் எம் கருத்துகளை பகிர்ந்து கொள்ள யாம் ஸவினயத்துடன் தயாராக உள்ளோம்.

    இழையிலிருந்து விலகியமைக்காக மீண்டும் ஸ்ரீ வினோத் ராஜனிடம் க்ஷமாயாசனம் செய்கிறேன். எமது கருத்துகளை ஆமோதித்த மற்றும் விரோதித்த எம் சஹோதரர்களுக்கு நன்றி.

    இன்று கார்த்திகை தீபப் பெருவிழா. உலக மக்கள் அனைவரின் இல்லங்களிலும் துயர் நீங்கி வளம் பெருக

    மீனுலவு க்ருத்திகை குமாரனு நினைக்குமர்
    வீடுபெற வைத்தருள் உதாரக்கார

    வள்ளி மணவாளனை வணங்கி நிறைவு பெருகிறேன்
    வணக்கம்.

  76. கிருஷ்ணகுமார்,
    எனது கேள்விகளுக்கு விடை இல்லை. உங்கள் அனுமானத்தையே பதிலாக வைக்கிரிஈர்கள்.
    இருப்பினும் எனது அடை மொழியைக் கூட மாற்ற முன்வரவில்லை. எனது பெயரும் அதன் முன் அடையும் என் விருப்பத்தின் பேரிலேயே அமையவேண்டும் என்பது அவை மரபு.
    தங்களைப் போன்றோர் தமிழுக்கும் இந்து மதத்திற்கும் ஒரு சேர ஊறே விளைவிக்கிறார்கள்.

  77. அன்புள்ள ராம்கி

    எண்ண ஓட்டத்துடன் இணைந்து எழுதுகையில் பெயர் முன் தாங்கள் விரும்பாத அடைமொழி வந்தமைக்கு க்ஷமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தங்கள் வினாக்களுக்கு நேரடி பதில்கள் கொடுத்து இருக்கிறேன் என்பது என் எண்ணம். பதில்கள் வெறும் அனுமானங்கள் என்ற தங்கள் தெரிவு. படிக்கும் மற்றவர்கள் அபிப்ராயங்கள் தங்களிடமிருந்து வேறுபடலாம்.

    தங்கள் கடைசி கருத்தில் எமக்கு சற்றேனும் ஒப்புமை இல்லை. ஹிந்தி எதிர்ப்பு ஆங்கில ஆதரவு போன்ற நிலைப்பாடுகள் தமிழ், தேச ஒருமைப்பாடு மற்றும் ஹிந்து மதத்தில் இருந்து பல காத தூரம் அன்பரே.

    நன்றி
    வணக்கம்

  78. அன்பு கிருஷ்ண குமார்! “தமிழக அரசு முனைந்து எல்லா மாநிலங்களிலும், ஏன், எல்லா நாடுகளிலும்கூட, தமிழ் மொழிப் பயிலகங்கள் அமைக்கவேண்டும்” என்னும் தங்கள் கருத்தை நூறு சதவிகிதம் ஆதரிக்கிறேன். இதற்கான செயல்திட்டத்தின் அடிக்கல் நாட்டவாவது செய்துவிட்டு, வீண் விவாதங்களைச் செய்யலாம். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அதை உலகெங்கும் கற்றுக் கொடுக்க முயற்சி செய்யாமல் வேறு எவர் செய்வர்? மேலும் தமிழைப் பிற மொழிக்காரர்கள் கற்றுக்கொள்ள, படித்தறிய, தமிழ் to பிற மொழி(கள்) அகராதி(கள்) எதையும் இதுவரை ஆண்ட தமிழரசுகள் வெளியிட்டுப் பரப்பவில்லையே! இலக்கியங்களைப் படைபபதால் மட்டும் மொழியைப் பிறரிடம் சேர்க்க முடியாது. குறைந்த பட்சம் Dictionary-யாவது அதிக எண்ணிக்கையில் வரவேண்டும்.

  79. the amount comments about this amazing — every comment increase the affinity towards Tamil and Sanskrit
    Namesthe to everyone contributed — I can only go half of the comment — I am blessed by God to have Tamil as my mother tongue and little knowledge on Sanskrit — Everyone commented extradinary knowledge — Can author “Vinoth Rajan” collect all the comments and put up another article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *