இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 7

முந்தைய பகுதிகள் :

ஆந்திர மாநிலம்

நாடு விடுதலை பெற்ற போதே காஷ்மீர் மாநிலத்தைப் போலவே இஸ்லாமியர்களின் பிரச்சினை துவங்கிய மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்றாகும்.  93 சதவீதம் உள்ள இந்துக்களுக்கு எதிராக ஹைதராபாத்தை ஆண்டு வந்த மன்னன் நிஸாம் பாகிஸ்தானுடன் இணைந்து விடுவது என்கிற முடிவை எடுத்தார். இந்த முடிவை எதிர்த்துஇந்தியாவுடன் இணைவது (Join India)” என்கிற போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சுவாமி ராமானந்த தீர்த்தர் என்பவர் துவக்கினார். இந்தப் போராட்டத்தை அடக்கவும், ஒடுக்கவும், நிஸாம் மன்னன் கள்ளத் தனமாக ஆயுதங்களைப் பதுக்கி வைக்க முற்பட்டான். ஆனால் 18.9.1948ம் தேதி மேஜர் ஜெனரல் திரு ஜே.என். சௌத்திரி தலைமையில் நடத்திய தாக்குதலில் ஹைதராபாத் நிஸாம் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டார். ஹைதராபாத் பாரத நாட்டுடன் இணைந்து விட்டாலும், நாடு விடுதலை பெற்ற போது துவங்கிய இஸ்லாமியர்களின் பிரச்சினை இன்று வரை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த சுவாலையை ஊதிப் பெரிதாக்கிக் குளிர் காயும் காரியத்தைப் பாகிஸ்தான் செய்து கொண்டிருக்கிறது.

ஐஎஸ்ஐ யின் முக்கிய நோக்கம்

காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் இரண்டையும் இந்தியாவிலிருந்து விடுவிப்பதும், பின்னர் அவற்றை சுதந்திர நாடுகளாக அறிவிப்பதும் இவையே முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என ஆந்திராவில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் பாகிஸ்தானின் .எஸ். யின் விஷ விதை பரப்பப்பட்டது. இந்த விஷ விதையே இன்று பயங்கரவாதமாக உருவெடுத்து, ஆந்திராவின் பல பகுதிகளில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கும், நாடு முழுவதும் நடக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் ஆதரவான குரல் கொடுப்பதுமான ஆந்திர மாநிலமாகச் செய்துள்ளது.

isi_motiff1947க்கு பின் இந்தியாவில் உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டி விடுவது, உள்நாட்டுப் பிரச்சினையைப் பெரிது படுத்துவது, ஜம்முகாஷ்மீர் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இந்து முஸ்லீம் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்துவது, பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்ட தாவுத் இப்ராஹிம் , அபு சலீம், சோட்டா சகீல், அலடாப் அன்சாரி, போன்றவர்களுக்கு முழு ஆதரவும், பாதுகாப்பும் கொடுப்பது, கள்ள நோட்டுகளை அதிக அளவில் இந்தியாவில் புழக்கத்தில் நுழைத்து இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது, பயங்கரவாதிகளை உருவாக்கி அவர்களுக்கு பாகிஸ்தானில் முழுப் பயிற்சி அளிப்பது, இம்மாதிரியான காரியங்களுக்கு உதவிகரமாக இருக்க சிலீப்பர் செல்(Sleeper Cell) என்கிற அமைப்பை ஏற்படுத்துவது என்பனவே ஐஎஸ்ஐயின் முக்கிய நோக்கங்களாகும். இவர்களின் அனைத்துப் பணிகளையும் செவ்வனே செய்வதற்குரிய பகுதியாக இன்று வரை ஆந்திர மாநிலம் அமைந்துள்ளது.

இம்மாதிரியான காரியங்களுக்கு உகந்த இடம் ஹைதராபாத் என்பதை ஐஎஸ்ஐ தனது சிலீப்பர் செல் மூலமாகத் தெரிந்து கொண்டு நம்பத் தகுந்த ஆட்களைத் தேர்வு செய்தது.  2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ந் தேதி கரீம் நகரில் உள்ள ஜெகத்யால் (Jagityal) என்னுமிடத்தில் நடத்திய என்கெளண்டரில் கொல்லப்பட்ட ஆஸம் கோரி கொல்லப்படும் வரை அவன் ஒரு ஐஎஸ்ஐ உளவாளி என்பது பலருக்குத் தெரியாது. ஆஸம் கோரி கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் அவனது ஆதரவாளர்கள் அப்துல்லா பக்தாதி , மொஹம்மது முஜாஹித் , சையத் முக்கார் அஹ்மத் , அப்துல் வாசி  ஆகியோர் மகாவீர் மோடி என்பவரின்  நகைக் கடையில் வெடி குண்டு வைத்து மோடியைக் கொல்ல முயன்றார்கள் ஆனால் வெடி குண்டு வெடிக்காத காரணத்தால் 14.4.2000ம் தேதி மோடியைச் சுட்டுக் கொன்றார்கள். ஆகவே ஆந்திராவில் பயங்கரவாதச் செயல்களுக்குப் பங்களித்த இயக்கங்களில் முக்கியமான இயக்கம் லஷ்கர்தொய்பாவாகும். இந்த இயக்கத்திற்கு பின் பல்வேறு இயக்கங்கள் தோன்றின. ஆனால் அனைத்து இயக்கங்களுக்கும் தாய் இயக்கமானது லஷ்கர்தொய்பா என்பது குறிப்பிடத் தக்கது.

உதவிக் காவல் துறை கண்காணிப்பாளரான திரு ஜீ. கிருஷ்ண பிரசாத் 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்லப்பட்ட போது ஹிஜ்புல் முஜாஹிதீன் (Hizbul Mujahideen) அமைப்பு முக்கியப் பங்கு கொண்டது என்பதும், காஷ்மீர் தாக்குதலுக்கு ஆள் பிடித்த போது காவல் துறையினரின் கவனத்திற்கு வந்த அமைப்புகள் இக்வான் உல் முஸ்லீமீன் (Ikhvan-ul-Muslimeen) மற்றும் அல் ஜிகாத் என்பதும் தெரியவந்தது. ஹைதராபாத் குண்டு வெடிப்பிற்கு முக்கியக் குற்றவாளி தன்சீம்-இஸ்லாஹுல்-முஸ்லீமீன் (Tanzeem- Islahul-Muslimeen) என்றும் , மீர்ஸா பைஜ் என்பவனைத் தப்பிக்க வழி செய்த அமைப்பு முஸ்லீம் முஜாஹிதீன் என்றும் அஸ்கர் அலி கூட்டத்தைக் கைது செய்த போது தெரியவந்தது. இந்த அமைப்புகள் மட்டுமில்லாமல் பிரிவினையைத் தூண்டுவிதமாகவும், அந்நிய நாட்டிற்கு உளவு சொல்லியதாகவும் அறியப்படுபவை சலிம் ஜுனாய்ட் குழு (Salim Junaid Gang) ,வாலி மொஹம்மத் ஜாஹிட் (Wali Mohammed Jahid) எனப்படும் இரண்டு அமைப்புக்களாகும், இந்த இரண்டு அமைப்புகளும் லஷ்கர்தொய்பாவினால் உருவாக்கப்பட்ட கிளை அமைப்புகள். பல்வேறு மத வழிப்பாட்டுத் தளங்களில் நடத்திய வெடி குண்டு சம்பவங்களுக்குப் பொறுப்பான அமைப்பு, தீன்தார் அன்ஜூமன் அமைப்பாகும் .

இந்த அமைப்புகள் மட்டுமில்லாமல் மிகவும் முக்கியமான அமைப்பாக ஆந்திராவில் செயல்படுபவை Darsgah-e-jehad-o-Shahadat, Tahreek Tahfooz Shaer-e-Islam எனப்படும் மிகவும் மோசமான அமைப்புக்களாகும். 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ந் தேதி மத்திய அரசு சிமி இயக்கத்திற்குத் தடைவிதித்த பின், பல்வேறு பெயர்களில் பல மாநிலங்களில் சிமி இயக்கத்தினர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். தமிழகத்தில் முஸ்லீம் முன்னேற்றக் கழகம் எனும் பெயரிலும், கேரளத்தில் நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் என்கிற பெயரிலும், வட மாநிலங்களில் இந்தியன் முஜாஹிதீன் என்கிற பெயரிலும் தங்களது பயங்கரவாதச் செயல்பாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சிமி இயக்கம் தடைசெய்யப்பட்ட பின் ஆந்திராவில் இரண்டு முக்கிய இயக்கங்கள் முளைத்தன. ஒன்று தர்ஷாஜிகாத்ஷாகிதத் (Darsgah-e-jehad-o-Shahadat) ரண்டாவது தாரிக் தப்ஃஸ் ஷோஇஸ்லாம் (Tahreek Tahfooz Shaer-e-Islam) என்கிற பெயரில் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்தார்கள்.

நலகொண்டா மாவட்டத்திலிருந்து பைசூதின் என்பவன் புதிதாகச் சேர்க்கப்பட்ட பயங்கரவாதி, ஹைதராபாத்தில் உள்ள என்.பி.கல்லூரியில் பயின்றவன், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றவன். இஸ்லாமியத் தீவிரவாதச் செயலுக்காக அதிகமான இளைஞர்களைப் பயிற்சிக்குக் கொண்டு வந்தவன். இவன் ஹைதராபாத்தில் உள்ள சாந்தாநகர், பாலநகர், போன்ற பகுதிகளில் ஆயுதங்களும் வெடிப்பொருள்களும் பதுக்கி வைத்திருந்தான். தான் நடத்தப் போகும் தாக்குதலுக்கு முன் பரிசோதனை செய்து பார்ப்பதற்காகவே மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியான காந்தி பேட்டில் வெடி குண்டு வெடிக்கச் செய்தான். இந்த சோதனை வெற்றி பெற்ற பின் தனக்கு .எஸ்.ஐயினால் கொடுக்கப்பட்ட பணியான அரசியல் தலைவர்களை கொல்லும் பணியை செய்ய முற்பட்டான்.   22.1.1993ம் தேதி விஷ்வ இந்து பரிஷித்தின் செயலாளர் ஜி.பாப்பைய கௌட் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து 2.2.93ம் தேதி பாரதீய ஜனதா கட்சியின் கார்பரேட்டர் நந்தராஜ் கௌட் கொலை செய்யப்பட்டார். ஆனால் 1993ம் ஆண்டு ஜீலை மாதம் நடந்த காவல் துறையினரின் என்கௌன்டரில் பைசூதீன் கொல்லப்பட்டான்.

அமைதியாக இருந்த ஐஎஸ்ஐ மீண்டும் தனது கொடுரமான கரங்களை நீட்டத் துவங்கியது.  21.11.2002ந் தேதி மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட ஹைதராபாத் நகரில் உள்ள தில்சுக்நகர் பகுதியில் உள்ள சாயிபாபா கோவிலுக்குlashkar-e-taiba-photo-bbc-news வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரில் வெடி குண்டு வைத்தார்கள். காலை 8.30 மணியளவில் அந்த வெடி குண்டு வெடித்து ஒரு பெண்ணும் அவருடன் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டார்கள், 14க்கும் அதிகமானவர்கள் படு காயமடைந்தார்கள். இந்தச் சம்பவத்திற்கும் , அதே மாதம் 22ம் தேதி மற்றும் 23ம் தேதியில் ஹைதராபாத் மற்றும் கரீம் நகரில் நடத்திய குண்டு வெடிப்பிற்கும் இரண்டு தீவிரவாதிகள் காரணமாயிருந்தார்கள் என்பது தெரியவந்தது, அவர்களில் ஒருவர் முகமது ஆசம் என்பவனும், மற்றொருவன் முகமது இம்ரான் என்பதும் காவல் துறையினர் தெரிவித்த தகவல்கள்.

இது தொடர்பான தரவு : https://www.indiankanoon.org/doc/115080/

இவர்கள் இருவரும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். அரபு நாடுகளில் லஷ்கர்தொய்பாவிற்கு ஆட்கள் சேர்க்கும் பணியை செய்து வந்த அப்துல் பாரி என்பவன் பயிற்சி கொடுத்தவன். இந்தியாவின் தென்னகப் பகுதியில் லஷ்கர்தொய்பாவின் பொறுப்பாளர் முகமது இம்ரான் என்பதும் 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் பயிற்சி பெறுவதற்காகச் சவுதி அரேபியா சென்றவன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

ஹைதராபாத் காவல் துறையினர் 1.4.2003ம் தேதி சந்தேகத்திற்கிடமான வகையில் முகமது ஜாபர் கான், அக்பர், சயீத் முக்தார், கலீத் என்னும் நான்கு பேர்களைக் கைது செய்தார்கள். இவர்கள் அனைவரும் தர்ஷாஜிகாத்ஷாகிதத் (Darsgah-e-jehad-o-Shahadat) எனும் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரனையில் ஹைதராபாத்தில் உள்ள பிர்லா மந்திர் தாக்கப்பட்ட சம்பவமும், தில்சுக்நகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் தாக்கப்பட்ட சம்பவமும் இந்த அமைப்பினரால் நடத்தப்பட்டது என்றும், இவ்வியக்கம் சிமி இயக்கம் தடை செய்யப்பட்ட பின் துவக்கப்பட்டது என்றும் தெரியவந்தது. இந்த அமைப்பினருக்குக் கொடுக்கப்பட்ட பணி பேருந்து நிலையங்களில் அப்பாவித்தனமாக இருக்கும் இந்துக்களை பிடித்து அவர்களைக் கொடூரமான முறையில் கொல்வது; இம்மாதிரியாக இந்த அமைப்பினர் 100க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாகத் தெரிவித்தனர்.

தீன்தார் அஞ்சுமன்(Deendar Anjuman)

இந்து வழிபாட்டுத் தலங்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் திடீர் என கிறிஸ்துவ தேவலாயங்களின் மீது தாக்குதல்களைத் தொடுத்தார்கள்.  2000ம் ஆண்டு மே மாதம் 21ந் தேதி முதல் ஜீலை மாதம் 9ந் தேதி வரை ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், கோவா, மகாராஷ்ட்ரா உட்பட்ட மாநிலங்களில் சர்ச்சுகள் மீது 12 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த செயல்களுக்குக் காரணமானவர்கள் இந்து இயக்கங்களைச் சார்ந்தவர்கள் என மதச்சார்பற்ற கட்சிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிக் கட்சிகளும், சில சமூக அமைப்புகளும் குற்றம் சுமத்தினார்கள். இவர்கள் குற்றம் சுமத்திய முக்கியமான இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ். , விஷ்வ இந்து பரிஷித், பஜரங்தள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகும். ஆனால் நான்கு மாநிலங்களில் விசாரணை செய்த போது சர்ச்சின் மீது குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் நடத்தியவர்கள் இஸ்லாமிய அமைப்பான தீன்தார் அஞ்சுமன் என்பது தெரியவந்தது.

deendaar-anjumanஇவ்வமைப்பு சித்திக் ஹசன் தீன்தார் என்பவரால் துவக்கப்பட்டது. துவக்க காலத்தில் மீர்ஸா குலாம் அகமது குத்தானி (Mirza Ghulam Ahmad Qadiani) என்பவரால் துவக்கப்பட்ட அகமதியா இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் சித்திக் ஹசன் தீன்தார்.  2000ம் ஆண்டு ஜீலை மாதம் 9ம் தேதி பெங்களுரில் ஒரு மாருதி வேனில் குண்டு வெடித்து இருவர் கொல்லப்பட்டார்கள், ஒருவர் படு காயமடைந்தார். காயமடைந்த எஸ்.எம். இப்ராஹிம் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திரா காவல்துறையினர் 17.7.2000ம் தேதி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற நான்கு பேர்களைக் கைது செய்தார்கள். தொடர் குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டியவர் சயீத் ஜியா உல் ஹசன் என்பவர், இவர் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீன்தார் அஞ்சுமன் பொறுப்பாளர். கைது செய்யப்பட்ட நால்வரும் ஆந்திராவில் உள்ள தீன்தார் அஞ்சுமன் பொறுப்பாளர்கள், இவர்களில் ஒருவர் சயீத் இக்பால் விஜயவாடா நகரின் செயலாளர் ஆவார்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சார்ந்த கான்ஜர்லா என்னுமிடத்தில் முகமது நிஸாமுதீன், மற்றும் காஸா மொய்தீன், ஹுமாயூன் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். ஆந்திர மாநிலக் காவல்துறையினர், கைது செய்யப்பட்ட முகமது நிஸாமுதீனிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட ஐந்து பேர்களும் 1992 மற்றும் 1993ம் ஆண்டில் பாகிஸ்தானில் 20 நாட்கள் பயிற்சி பெற்றதாகவும், தீன்தார் அஞ்சுமன் அமைப்பின் பொறுப்பாளர் ஜியா உல் ஹசன் பயிற்சி அளித்தது மட்டுமல்லாமல் சில திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தார் என்பதும் தெரியவந்தன. அவர் கொடுத்த திட்டங்களின் படி ஆந்திராவில் உள்ள பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்த வகுப்புக் கலவரங்களை நடத்த வேண்டும் என்பது முக்கியமான திட்டமாகும் எனவும் தெரிவித்தான்.

தீன்தார் அஞ்சுமன் பொறுப்பாளாரான ஜியா உல் ஹசன் ஆந்திராவிற்கு அடிக்கடி வந்து சென்ற விபரமும் தெரியவந்தது.  1999ம் வருடம் ஜியா உல் ஹசன் தனது மகன் ஷாகித் பாட்சா என்பவருடன் ரகசியப் பயணமாக வந்ததாகவும், ஆந்திராவில் உள்ள தீன்தார் அஞ்சுமன் அமைப்பாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தான். இந்த ரகசிய விசாரணையின் போது ஆந்திராவில் ஜிகாத் துவங்கக் கூடிய நேரம் வந்துவிட்டது, பல்வேறு மதப் பிரிவுகளிடையே பிரிவினையையும், வெறுப்பையும் ஏற்படுத்திக் கலவரம் ஏற்படுத்த வேண்டும், இந்தக் கலவரத்திற்காகத் தங்களது உயிரை கொடுக்கக் கூடத் தயங்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டதாகவும் பிடிபட்ட முகமது நிஸாமுதீன் காவல் துறையினரிடம் தெரிவித்தான். இந்தக் கருத்தை வலியுறுத்த ஆந்திரா,கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கும் ரகசியச் சுற்றுப் பயணம் நடந்தது. இந்தத் தகவல் கிடைத்தபின் காவல்துறையினரின் முழு விசாரணையில் பாகிஸ்தானில் முழுப் பயிற்சி எடுத்த 20க்கு மேற்பட்டவர்கள் ஆந்திராவில் ஊடுருவியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆகவே காவல்துறையினர் சயீத் நுரூர் அகமது, மகபூல், கலிக்குஸ்ஸாமன் (Khaliquzzaman) அப்துல் காதர் ஜிலானி, பரூக் போன்றவர்கள் தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களுடன் விஜயவாடாவின் தீன்தார் அஞ்சுமன் செயலாளரான சயீத் இக்பாலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

லஷ்கர்தொய்பாவின் பங்கு

ஆந்திராவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் லஷ்கர்தொய்பாவின் பங்கும் முக்கியமானதாகும்.  29.2.2000ம் தேதி தலைப்பு எதுவும் இல்லாமல் 31 வரிகள் கொண்ட செய்தி ஒன்று அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்பபட்டது. அனுப்பப்பட்ட செய்தியில்இந்தியாவில் உள்ள மேலைநாட்டுக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட நாங்கள் எங்களை அர்ப்பணித்துக் கொண்டோம். இந்தப் பணியின் ஒரு அங்கமாக ஆபாச படங்கள் காட்டும் சினிமா திரையரங்குகளை குண்டு வைத்துத் தகர்ப்போம்எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆந்திரக் காவல்துறையினரும், மற்றவர்களும் இந்தச் செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்தச் செய்தியை அனுப்பியவர்கள் தங்களை இந்தியன் முஸ்லீம் முகமதி முஜாஹிதீன் (Indian Muslim Mohammadi Mujahideen) (IMMM) என்கிற அமைப்பபைச் சார்ந்தவர்கள் எனத் தெரிவித்தார்கள்.

இந்தச் செய்தியை அனுப்பவதற்கு முன்பே அதாவது ஜனவரி மாதம் ஹைதராபாத் நகரில் உள்ள மோகிலாயூரா (Moghalop ura) எனும் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவாளர் ஒருவரின் பலகாரக் கடையில் குண்டு வெடித்து சிலர் காயடைந்தார்கள். மேலும் வெடிக்காத இரண்டு குண்டுகள், பலத்த பாதுகாப்புக்குட்பட்ட ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சம்பந்தமான ஆய்வுக் கூடத்திற்கு அருகில் உள்ள லம்பா திரையரங்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டன. .எம்.எம்.எம். எனும் அமைப்பினர் அனுப்பிய செய்தியின் படியே கரீம் நகரில் உள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கிலும், ஆந்திராவின் எல்லைப் பகுதியான நான்டேட் எனும் நகரில் உள்ள திரையரங்கிலும் குண்டுகள் வெடித்தன.

இந்த இரண்டு சம்பவங்கள் நடப்பதற்கு முக்கிய சூத்தரதாரியாக இருந்த அமைப்பு லஷ்கர்தொய்பாவாகும்.  2000ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 6ந் தேதி லாகூரில் உள்ள Murikde எனுமிடத்தில் நடந்த மூன்று நாள் வருடாந்தர லஷ்கர்-இ-தொய்பாவின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இரண்டாம் கட்டத் தலைவரான அப்துல் ரஹமான் மக்கி என்பவனால்இந்திய ஆட்சியாளர்களிடமிருந்து கூடிய விரைவில் ஹைதராபாத் விடுதலை பெறும், விடுதலை பெறுவதற்கு புதிதாக ஒரு இயக்கம் துவக்கப்பட்டுள்ளதுஎன அறிவிக்கப்பட்டது, அந்த இயக்கத்தின் பெயர் இந்தியன் முஸ்லீம் முகமதி முஜாஹிதீன் (Indian Muslim Mohammadi Mujahideen) என்பதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொறுப்பாளராக விஜயவாடாவை சேர்ந்தவனும், லஷ்கர்தொய்பாவில் பயிற்சி பெற்றவனுமான அஸிம் கோரி என்பவன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹபீஸ் முகமது சயீத் என்பவன் தெரிவித்தான். 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியும், இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதியுமானவன் இந்த இயக்கத்தின் பொறுப்பாளர்.  1994லிருந்து தலைமறைவு வாழ்க்கையை நடத்திய அஸிம் கோரி இந்தியன் முஸ்லீம் முகமதி முஜாஹிதீனின் (Indian Muslim Mohammadi Mujahideen) பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் 1994ம் ஆண்டின் பிற்பகுதியில் ஆந்திராவிற்குக் கள்ளத்தனமாக வந்து சேர்ந்தான்.azam-ghori

1985ம் ஆண்டு துவக்கத்தில் மும்பையில் உள்ள மோமினிபுர பகுதியில் உள்ள அஹால்ஹதீஸ் மசூதியில் நடந்த கூட்டத்தில் வரும் ஆண்டில் இந்தியாவில் நடக்க இருக்கும் கலவரத்தில் இஸ்லாமியர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அஸிம் கோரியும் ஒருவன்.  இவனுடன் கல்கத்தாவைச் சார்ந்த அபு மசூத்தும், அப்துல் கரீம் என்கிற துண்டாவும் கலந்து கொண்டார்கள். மசூதியில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் லஷ்கர்தொய்பாவின் ஆலோசனையின் படி மேலும் ஒரு புதிய அமைப்பை இந்த மூவரும் துவக்கினார்கள், அந்தப் புதிய அமைப்பிற்குத் தான்ஸிம் இஸலாஹஸ் முஸலிமீன் எனப் பெயர் வைத்தார்கள்.

இந்தப் புதிய அமைப்பினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஷாகாவில் செய்கின்ற செயல்பாடுகளை எள்ளிநகையாடுவதும், மிமிக்ரி செய்வதுமாக இருந்தவர்கள்,  பின்னர் இஸ்லாமியர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மோமினிபுராவில் உள்ள YMCA மைதானத்தில் தற்காப்புக் கலையாக ஆயுதமில்லாமல் பாதுகாப்பாக இருப்பதையும், லத்தி கொண்டு தாக்குகின்ற தற்காப்புப் பயிற்சியையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர். இந்தச் செயல்பாட்டிற்கு இவர்களுக்குத் துணையாக அன்சாரி என்பவனும் சேர்ந்து கொண்டான். அன்சாரி மருத்துவம் படித்தவன்; Brihanmumbai Municipal Corporationல் இளம் நிலை மருத்துவ அதிகாரியாகப் பணிபுரிந்தவன். இவனுக்கு இந்துக்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் விதமாக முளைச் சலவை செய்யப்பட்டான். இந்து மருத்துவர்கள் இஸ்லாமியர்களுக்கு முறையான வைத்தியம் பார்க்க மாட்டார்கள் என்றும், 1985ல் பிவாண்டியில் நடந்த கலவரத்தின் தாக்கத்தையும், 1992ல் நடந்த அயோத்தி சம்பவத்தையும் காண்பித்து அன்சாரியை இந்துக்களுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களை செய்யும் மனோபாவத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இம்மாதிரியான செயல்பாடுகளை செய்யத் துணிந்த இயக்கம் லஷ்கர் தொய்பாவும், பாகிஸ்தானின் எஸ். அமைப்புமாகும். ஆகவே அன்சாரியுடன் சேர்ந்து அஸிம் கோரி, அப்துல்கரீம் துண்டா மூவரும் மும்பை ஹைதராபாத் உட்பட்ட நகரங்களில் 43 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கும், 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி ரயிலில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கும் முக்கியக் குற்றவாளியானவர்கள்.

26.1.1994ம் தேதி நடந்த இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 13 நாட்கள் கழித்து அன்சாரி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான். தேடுதல் வேட்டை நடந்த போதே அஸிம் கோரியும், அப்துல் கரீம் துண்டாவும் தப்பித்துத் தலைமறைவாகிவிட்டார்கள். ஆனால் அப்துல் கரீம் துண்டா மட்டும் கல்கத்தா வழியாக டாக்காவில் உள்ள லஷ்கர்தொய்பாவில் தஞ்சம் புகுந்துவிட்டான். ஆகவே ஆந்திராவில் அப்துல்கரீமிற்க்கு கொடுக்கப்பட்ட பணியை இனிமேல் நிறைவேற்ற ஜக்கி உர் ரகுமான் என்பவனை லஷ்கர்தொய்பா நியமித்தது.   1995ல் லஷ்கர் தொய்பாவிற்கு தாராளமாக நிதி உதவி அளித்தவரான Hamid Bahajib என்பவரின் உறவினர் மூலம் கள்ள பாஸ்போர்ட் பெற்று அஸிம் கோரி காராச்சிக்கு ஓடிவிட்டான்.

(தொடரும்)

2 Replies to “இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *