இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2

முந்தைய பகுதியிலிருந்து…

கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.

வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ் கிராமம் தியாவட்டவான். இக்கிராமமும் மிகவும் பழமைவாய்ந்த தமிழ் கிராமம். ஆனால் அது தற்போது முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இக்கிராமம் கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் காவத்தமுனை முஸ்லிம் கிராமமும் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியின் எல்லையும் அமைந்திருந்தன.

தியாவட்டவான் கிராமத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆலயங்கள் என்பனவும் இருந்தன. அருகில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருந்ததால் இக்கிராமம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இதனால் இக்கிராமத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது…

இனி…

தியாவட்டவான் கிராமத்தில் முதற்தடவையாக 1983 ஆகஸ்ட் மாதத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவும் முஸ்லிம் காடையர்களால் அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டிலும் மற்றொரு தாக்குதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் காரணமாக பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. சிலர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் காரணமாக தமிழ் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இத்தாக்குதல்களுக்குப் பின்னாலும் இலங்கை படையினரின் உதவி இருந்தது. இலங்கை இராணுவத்தில் முஸ்லிம் இளைஞர்களும் இருந்தது மாத்திரமின்றி முஸ்லிம்கள் தமது வியாபாரம்,மரக்கடத்தல் மற்றும் கஞ்சாக் கடத்தல் போன்ற சுயநலத்திற்காக இராணுவத்தினருக்கு உதவிகளை செய்வதும் வழக்கமாக இருந்தது. தியாவட்டவான் கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் அயற்கிராமங்களிலேயே நீண்டகாலம் அகதிகளாக இருந்தனர். பின்னர் அவர்கள் 1988 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரின் வருகைக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்குச் சென்றனர்.

ஆனால் அங்கு தமது பெரும்பாலான காணிகளிலும் வீடுகளிலும் முஸ்லிம்கள் அத்துமீறிக் குடியேறியிருந்தனர். அங்கிருந்த தமிழ் கலவன் பாடசாலை அரபா முஸ்லிம் பாடசாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தின் அடையாளமே தெரியாமல் குடியேற்றம் இடம் பெற்றிருந்தது. எனினும் மக்கள் எங்கு முறையிட்டாலும் உரிய பலன் கிடைக்கவில்லை. சில தமிழ் வீடுகள் எஞ்சியிருந்தன. அதில் குறைந்த குடும்பங்கள் குடியேறினர். எனினும் மீண்டும் அவர்கள் மீதும் 1990 ஐ{ன் மாதத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் அவர்களும் முற்று முழுமாக வெளியேற்றி விட்டனர். இதனால் தற்போது இத்தமிழ் கிராமம் முற்று முழுதாக முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. தற்போது கடதாசி தொழிச்சாலை குறைந்த ஊழியர்களுடன் இயங்கினாலும் 90சதவீதமானவர்கள் முஸ்லிம்களே.

ஓட்டமாவடி கிராமம் பற்றியும் கூறவேண்டும். இது ஒரு கலப்புக் கிராமம்தான். ஆனால் கிராமத்தின் அதிகாரமும் அதன் மையப்பகுதியும் தமிழர்களுடையது. ஓட்டமாவடியில் 60 வீதமானவர்கள் முஸ்லிம்களாகவும் ஏனையவர்கள் தமிழர்களும் வாழ்ந்தனர். ஓட்டமாவடி கிட்டத்தட்ட ஒரு உபநகரமாகவே இருந்தது. பல கடைகளும் பெரும் கல்வீடுகளும் நகரின் மையப்பகுதியில் தமிழர்களுடையதாகவே இருந்தன. தமிழர்களின் வழிநடத்தலிலே இக்கிராமம் இயங்கியது. இதன் மையப்பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்தது. அது தமிழர்களின் வழிபாட்டுத்தலம். முஸ்லிம்களுக்குச் சற்றுத் தொலைவில் பள்ளிவாசல் இருந்தது.தமிழர்களின் மயானமும் மையப்பகுதியில் ஒரு புறத்தில் அமைந்திருந்தது. இக்கிராமத்தில் வாழ்ந்தவர்கள் இரு இனத்தினரும் ஆரம்பகாலத்தில் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். ஆனால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிருந்த தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பமாகின.

இத்தாக்குதல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து 85, 90 ஆம் ஆண்டுப்பகுதியில் அங்காங்கு நடந்த தமிழர் மீதான தாக்குதல்கள் போன்றே ஓட்டமாவடி தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. பெரும் கடைகள் வீடுகள் என்பன அடித்து நொருக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இதனால் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த முடியாமல் அப்பகுதியை விட்டு வெளியேறினர். வெளியேறிய தமிழர்கள் கறுவாக்கேணி கிராமத்தில் தற்போது நிரந்தரமாக வாழுகின்றனர். ஓட்டமாவடியில் இருந்த தமிழர்களின் பல காணிகள் வீடுகள் என்பன முஸ்லிம்களினால் அத்துமீறிப் பிடிக்கப்பட்டன. சில காணிகளை மனச்சாட்சியுள்ள சில முஸ்லிம்கள் தமிழர்களிடம் காசு கொடுத்து வாங்கிக் கொண்டனர். அங்கிருந்த பிள்ளையார் அலயம் உடைக்கப்பட்டு தற்போது அதில் மீன்சந்தை கட்டப்பட்டுள்ளது. மயானம் அழிக்கப்பட்டு தபாலகம், பிரதேச செயலகம் என்பன கட்டப்பட்டுள்ளன.

இந்த ஓட்டமாவடி பகுதி 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழைச்சேனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள்ளேயே இருந்தது. ஆனால் 90 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் இனவன்முறைகள் காரணமாக அரசாங்கம் தற்காலிகமாக இந்த பகுதியை நிருவாக ரீதியாக ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவாக (முஸ்லிம்) மாற்றப்பட்டு தற்போது முழுமையான முஸ்லிம் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இந்த வன்முறைகள் மற்றும் தனியான செயலக நிருவாக பிரிவுகள் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு நிறையவே பங்கிருந்தது. அத்துமீறிய குடியேற்றங்களையும் இவர்களே அதிகம் தூண்டி விட்டனர். முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தல் போன்றவற்றையும் இந்த அரசியல்வாதிகளே திட்டமிட்டும் செய்தனர்.

இதன் மூலம் தமிழர்களின் பலத்தை அழிப்பது மாத்திரமின்றி போராட்டத்தையும் சிதைப்பதும் அதன் மூலம் கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியான மாகாண அலகுகளை ஏற்படுத்துவதும் நோக்கமாக இருந்தது. இந்த வகையில் இந்த அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் காடையர்களின் நோக்கங்களில் தனியான பிரதேச செயலகம் அமைத்தது முதற்படியாக வெற்றி பெற்றது.

இந்த திட்டமிட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப், தற்போதைய கட்சித் தலைவர் ரவூப் கக்கீம், பசீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா உட்பட பலர் செயற்பட்டனர். உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 85 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் பரந்துபட்டோ அல்லது பல இடங்களிலோ வாழவில்லை. அவர்கள் பிரதான நெடுஞ்சாலையை அண்டியதாக கொழும்பு-மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி, ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய மூன்று இடங்களிலுமே வாழ்ந்தனர். இந்த இடங்களை ஒட்டியதாக ஒரு சில கிராமங்களும் இருந்தன. ஆனால் தற்போது நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம் போன்றனவற்றால் குறைந்தது ஐம்பது கிராமங்கவரை அமைத்துள்ளனர்.

ஏறாவூரில் லிபியா மீதான தாக்குதலை எதிர்க்கும் முஸ்லிம்கள்...

ஓட்டமாவடியில் தமிழர்களை விரட்டியடித்ததுபோலவே ஏறாவூர் தமிழ் கிராமத்தில் இருந்தும் தமிழர்கள் விரட்டடியக்கப்பட்டனர். இந்த சம்பவங்களும் 83, 85, மற்றும் 90 ஜூன் மாதத்திலும் இடம் பெற்றன. ஏறாவுர் தமிழ் கிராமம் மிகவும் செழிப்பான கிராமம். அங்குள்ளவர்களில் அதிகமானோர் பொற்கொல்லர்களாகவும் பெரும் வியாபாரிகளாகவும் இருந்தனர். இதனால் ஏறாவூர் நகர் மிகவும் பரபரப்பாகவே எப்போதும் இருக்கும். அது மாத்திரமின்றி அங்கு வாரச்சந்தை நடப்பதும் வழங்கம். இத்தமிழ் கிராமத்திற்கு அருகில் இருந்தது ஏறாவூர் முஸ்லிம் பகுதி. அது அப்போது பெரியளவில் அபிவிருத்தியடைந்து இருக்கவில்லை.

இதனால் தமிழ் பகுதியைப் பார்த்து ஆத்திரமும் வெறுப்பும் அடைந்திருந்த முஸ்லிம்கள் சந்தர்ப்பம் பார்த்திருந்து தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல்களில் 90 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த தாக்குதலே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தன. இத்தாக்குதலால் ஏறாவூர் தமிழ் கிராமம் முற்றாக அழிக்கப்பட்டன. தற்போதும் அந்த அழிவுகள் அப்படியே கிடப்பதைக் காணலாம். இந்த மக்கள் இன்னமும் மீளக் குடியமரவில்லை. ஆனால் இக்கிராமத்தின் எல்லைப்பகுதிகள் மற்றும் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமத்துள்ளனர். இதுதவிர அப்பகுதியில் இருந்த தமிழ் மக்களுக்கான பல ஏக்கர்கணக்கான தோட்டக்காணிகள் அரச நிலம் என்பனவற்றை ஆக்கிரமித்து ஐpன்னாநகர், மிச்நகர் என்று பல கிராமங்களை புதிதாக அமைத்துள்ளனர்.

முஸ்லிம்கள் பல தமிழ் கிராமங்களை அபகரித்தது மாத்திரமின்றி பல புதிய கிராமங்களையும் அத்துமீறி அமைத்துள்ளனர். அது மாத்திரமின்றி இன்னும் சில தமிழ் கிராமங்களை அரைகுறையாக அத்துமீறி அபகரித்துள்ளதுடன் மேலும் பல கிராமங்களை குற்றுயிராக்கியுமுள்ளனர்.

கொழும்பு வீதியில் புனாணை கிராமத்திற்கு எதிராக இருந்த தமிழர்களின் காணிகள் மற்றும் வன இலாகாவுக்கான காணிகளில் திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றத்தை கிஸ்புல்லா 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது ஏற்படுத்தினார். தற்போது அது பெரும் நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் இந்த பகுதியிலும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு பகுதியிலும் தமிழர்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரித்து அத்துமீறிய குடியேற்றங்களை முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இதற்கு பின்னணியில் தற்போது இருப்பவர் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி.

இதுதவிர முஸ்லிம்களால் குற்றுயிராக்கப்பட்ட பல தமிழ் கிராமங்கள் உள்ளன. ஆறுமுகத்தான்குடியிருப்பு, வாழைச்சேனை தமிழ் கிராமம், நாவலடிச்சந்தி, ஆரையம்பதி எல்லைக்கிராமம், புதுக்குடியிருப்பு, செல்வாநகர் என கிராமங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகின்றது.

அம்பாறைமாவட்டம்

அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக தமிழ் பாரம்பரிய கிராமங்களைக் கொண்டதாகவும் அவர்களே பெரும்பான்மையினத்தவராகவும் இருந்ததுடன் ஆங்காங்கே முஸ்லிம்களும் சிங்களவர்களும் திட்டுத்திட்டாக வாழ்ந்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தமிழர்கள் சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டு பல குடியேற்றங்களை செய்தனர். இதே காலப்பகுதியில் முஸ்லிம்களும் பல இடங்களில் குடியேறியும் தமிழர்களின் நிலங்களை கொள்ளையடித்தும் அத்துமீறியும் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொண்டனர். எனினும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கண்மூடித்தனமாகக் குடியேற்றங்களைச் செய்தனர். இன்று அந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த படியாக சிங்களவர்களும் அதற்கடுத்ததாகவே தமிழர்களும் உள்ளனர்.

(தொடரும்…)

3 Replies to “இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2”

  1. அன்பர் ராஜ் ஆனந்தன்,

    தங்கள் வ்யாசத்தின் முதல் பகுதியையும் இப்பகுதியையும் கூர்ந்து வாசித்து வருகிறேன். அரசியல் ரீதியாக ஈழம் ஹிந்துஸ்தானத்தின் ஆளுமையில் இல்லையெனினும் உணர்வுபூர்வமாக முழு லங்காபுரியையும் ஹிந்துஸ்தானத்தின் ஒரு அங்கமாகவே கருதுகிறேன்.

    ஹிந்துஸ்தானத்தின் வடவெல்லையாம் காஷ்மீரத்தில் ஈழத்தில் நடந்தேறியது போன்றே அக்ரமங்கள் நடந்தேறியுள்ளன. பின்னிட்டும் பாரத அன்னையின் சிரமாம் காஷ்மீரத்திலும் பாதமாம் லங்காபுரியிலும் கொடுமையான ஒரு ஒற்றுமை.

    காஷ்மீரத்தின் ஹிந்து ஆலயங்கள் ஸ்வதந்த்ர ஹிந்துஸ்தானத்தில் அரசியல் ஷரத்து 370ன் போர்வையில் சிதைக்கப்பட்டும் ஆங்குள்ள ஹிந்துக்கள் முழுமுச்சூடாக காஷ்மீர ப்ராந்தியத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டும் ப்ரச்சினையை ஊடகங்களோ அரசியல்வாதிகளோ ஒரு ஹிந்து ப்ரச்சினை என்று முன் வைப்பதில்லை. காஷ்மீர பண்டிதர்களின் ப்ரச்சினை என்றே இந்த ப்ரச்சினை முன்வைக்கப்படுகிறது.

    ஈழத்து ப்ரச்சினையும் தமிழர்களின் ப்ரச்சினை என்று மட்டும் தான் ஹிந்துஸ்தானத்தில் குறிப்பாக தமிழகத்தின் கழகக் கண்மணிகளாலும் ஏனைய அரசியல் வாதிகளாலும் முன்வைக்கப்படுகிறது. பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களும் ப்ரச்சினையை ஈழத் தமிழர்களின் ப்ரச்சினை என்றே உலகெங்கிலும் முன்வைப்பதாகவே ஊடகங்கள் வாயிலாக வாசித்து வருகிறேன்.

    வாஸ்தவத்தில் ஈழத்தில் நிலைமை வேறானது என்பது தங்கள் வ்யாசத்தின் மூலம் தெளிவாகப் புலனாகிறது. ஈழத் தமிழ் ப்ரச்சினை என்பது நிதர்சனத்தில் ஈழத் தமிழ் ஹிந்துக்களின் ப்ரத்யேகமான ப்ரச்சினை என்பது சாம்பலால் மறைக்கப்பட்ட தீ போன்று தெரிகிறது.

    ஏறாவூரின் தமிழ் பேசும் முஸல்மான்கள் ஈழத்திலே தொலைதூரத்தில் இருக்கும் லிபியர்களுக்காக குரல் கொடுக்கிறார்களாம். ஆனால் பக்கத்து க்ராமத்தில் இருக்கும் தங்கள் தாய்மொழியாம் தமிழிலேயே பேசும் ஹிந்துக்களின் வீடுகளை சூரையாடி அவர்கள் வழிபாட்டு ஸ்தலங்களை இடித்து நொறுக்கி மீன்சந்தையாக மாற்றுவார்களாம். என்ன அக்ரமம்.

    தாங்கள் பதிவு செய்துள்ள ஏறாவூர் முஸல்மான்களின் லிபியர்களுக்கான போராட்டம் சம்பந்தமான புகைப்படமே நிலைமையை வெட்ட வெளிச்சமாக்குகிறதே. இவர்களும் தமிழர்கள் தான் என்பது இவர்கள் கஷ்கத்திலும் பின்னணியிலும் ஏந்தியுள்ள பதாகைகள் மூலம் தெரிய வருகிறது. இவர்களால் முன்னிறுத்தப்படும் பதாகை அரபியிலோ அல்லது உருதுவிலோ எழுதப்பட்ட பதாகை. தெளிவாக அடுத்த படி இவர்கள் காண்பிக்கும் பதாகை ஆங்க்ல பதாகை.

    ஈழத்தில் தமிழ் மொழி பேசுபவர்களில் ஹிந்துக்கள், முஸல்மான்கள் மற்றும் க்றைஸ்தவர்கள் இருந்தும் சொல்லொணா ஹிம்சைக்கும் சூரையாடல்களுக்கும் இரையாகும் நிலை தமிழ் மொழி பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும் என்று புரிபடுகிறது.

    அதுவும் தமிழ் பேசும் முஸல்மான்கள் சிங்கள் மொழி பேசும் ராணுவத்தினருடன் கூட்டு சேர்ந்து ஹிந்து க்ராமங்களை சுரையாடுதலும் ஹிந்து ஆலயங்களை இடித்து நொறுக்குவதும் ஒரு புறம் நடக்கையில் சிங்கள் மொழி பேசும் பௌத்த மதத்தினர் ஹிந்து ஆலயங்களிலும் வழிபடுதலும் ஊடகங்கள் வாயிலாக பார்க்கவும் வாசிக்கவும் முடிகிறது.

    ஹிந்து ஆலயங்களில் தரிசனம் செய்யும் இந்த மூட சஹோதர சிங்கள பௌத்தர்கள் இன்றைக்கு தமிழ் ஹிந்துக்களுக்கு தாங்கள் தமிழ் பேசும் முஸல்மான்களுடன் சேர்ந்து நிகழ்த்தும் அக்ரமம் நாளை தங்கள் பௌத்த ஆலயங்களுக்கும் நிகழ இயலும் என்பதை ஆஃப்கனிஸ்தானத்திலும் சில நாட்கள் முன்னர் மாலத்தீவுகளிலும் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் அறியவொண்ணாரோ. ஒன்று நிச்சயம்.மணலே கயிறாகத் திரிக்கப்பட்டாலும் தமிழ் பேசும் லங்காபுரியின் க்றைஸ்தவர்களோ முஸல்மான்களோ தமிழ் ஹிந்துக்களுடன் லங்காபுரியின் தமிழ்க் கோவில்களில் வழிபட மாட்டார்கள் என்பது திண்ணம்.

    போதாதென்று குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக தமிழ்ப்போராளிகளும் சிங்கள் அரசும் வாடிகனின் ஆசியைப் பெற்ற நார்வேயை மத்யஸ்தம் செய்ய ஒப்புக்கொண்டதும் நார்வே குரங்கு கூடியிருந்து குடி கெடுத்ததும் சரித்ரம். தமிழ் என்ற போர்வையில் ஈழத்தில் கூத்தாடும் ஆப்ரஹாமியர் லங்காபுரியில் நிறுவ முனைவது அராபிய அராஜகமா அல்லது வாடிகன் அராஜகமா என்பது தெளிவே.

    புரிய இயலா விஷயம். தமிழ் பேசும் ஹிந்துக்களின் கோவில்களில் வழிபாடு செய்யும் சிங்களம் பேசும் பௌத்தர்கள் ஒரு புறம் இருக்கையில் ஆப்ரஹாமியருடன் கூட்டு சேர்ந்து தமிழ் ஹிந்துக்களை சூரையாடும் சிங்களவர்களும் இருக்கிறார்கள் என்பது.

    மேலும் ஈழத்து ஆப்ரஹாமியர் நோக்கம் மிகத் தெளிவு. தெளிவு கிட்டாத விஷயம் சாட்சிக்காரன் போன்ற நிலையில் இருக்கும் தமிழ் பேசும் ஈழத்து ஆப்ரஹாமியருடன் சமரசத்தைக் காட்டிலும் சண்டைக்காரன் போன்ற நிலையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் ஹிந்துப் பாரம்பரியத்தைச் சார்ந்த பௌத்தருடனான சமரசம் ஈழத்து தமிழ் ஹிந்துக்களுக்கு சற்றாவது நன்மை பயக்க வல்லதா என்பது.

  2. நண்பர் க்ருஷ்ணகுமார்,
    இலங்கை தமிழ் சிங்கள மக்களிடையில் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. சிங்கள மக்கள் இந்து மதத்தின் பிரிவான பௌத்தைத்தையே பின்பற்றுபவர்கள். பெளத்தமக்கள் மட்டுமல்ல பெளத்த மதகுருமாரும் இந்து தெய்வங்களை வணங்குகின்றனர். முஸ்லிம்கள் தமிழராக இருந்தாலும் பேரீச்சம் மரம் நட்டு தங்களை அரபிகளாக கற்பனை பண்ணி அரபிகளுக்கு சேவை செய்பவர்களாக மாறிவிட்டனர். இலங்கை தமிழ் சிங்கள மக்களின் முரண்பாடுகள் சுயலாபம் அடைவதற்காக இருபகுதி அரசியல்வாதிகளால் உருவாக்கபட்டவை. விடுதலை போராட்டம் ,புலி என்று தோன்றியவை தன் சொந்த மக்களையே கொன்று தாங்க முடியாத அவலத்தையும் அழிவையும் தமிழருக்கு தந்தன. தமிழ் சிங்கள மக்கள் இலங்கையில் ஒற்றுமையுடன் வாழவேண்டியது காலத்தின் கட்டாயம். பாதிரிகளின் திட்டங்களுக்கு துணைபோக கூடாது.

    https://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/02/120227_vincentsaraswathi.shtml
    இலங்கை இந்து மாணிவிகளுக்கு பாராட்டுக்கள்

  3. யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்ட வகையில் முஸ்லிம் சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கோரி உள்ளது சுவிற்சலாந்தை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற இந்து – பௌத்த சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரன் விடுத்து உள்ள அறிக்கை வருமாறு:-
    இலங்கையில் கட்டாய மத மாற்ற நடவடிக்கை சட்டத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது. கட்டாய மத மாற்ற நடவடிக்கை தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.ஆனால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் காலம் காலமாக கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மாற்று சமயத்தவர்களை குறிப்பாக இந்துக்கள் பௌத்தர்கள் ஆகியோரை சலுகைகளையும் உதவுகளையும் வழங்கி மத மாற்றம் செய்து விடுவது தொடர்கதையாகவே இடம்பெற்று வருகின்றது. இதை இந்து – பௌத்த சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
    யாழ்ப்பாணத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இலக்கு வைத்து இஸ்லாமிய சக்திகளால் கட்டாய மத மாற்ற நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. யாழ்ப்பாண முஸ்லிம்களின் இணையத் தளத்தில் இது சம்பந்தப்பட்ட செய்தி ஒன்று பிரசுரமானது. தற்போது அச்செய்தி தளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
    நாம் முஸ்லிம்களுக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால் இம்மதத்தவர்களின் கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளை எம்மால் அனுமதிக்க முடியாது.
    முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் அவர்களின் மார்க்கத்தின்படி ஒழுகுகின்றமையை நாம் தடுக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மீது சமயப் பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விடுகின்றமையை ஒருபோதும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இஸ்லாமிய மார்க்கத்தை ஏனைய சமயத்தவர்களுக்கு விளக்குகின்றமை நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்ற செயல் என்று இஸ்லாமியர்கள் நியாயம் கற்பிக்கக் கூடும். ஆனால் ஏனைய சமயத்தவர்களின் மத நிகழ்ச்சிகளில் இதே முஸ்லிம்கள் பங்குபற்றுவார்களா? ஏனெனில் ஏனைய மதத்தவர்களின் சமய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுகின்றமை முஸ்லிம்களால் பாவத்துக்கு உரிய செயலாகவே காணப்படுகின்றது.
    யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் அவர்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அபிவிருத்தி கலாசார வளர்ச்சி மறுமலர்ச்சி ஆகியன சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கட்டும். மாற்று மதத்தவர்களை இலக்கு வைக்கின்ற செயல்பாடுகளில் இறங்க வேண்டாம்.
    இவ்வாறான கட்டாய மத மாற்ற நடவடிக்கைகள் தொடர்கின்ற பட்சத்தில் எமது அமைப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுத்தே தீரும்.
    -https://thesamnet.co.uk/?p=34719

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *