… ஆணுக்கேனும், பெண்ணுக்குகேனும் இளமைப் பிராயம் கடந்த மாத்திரத்திலே போக விருப்பமும் போக சக்தியும் இல்லாமற் போகும்படி கடவுள் விதிக்கவில்லை. உலகத்தின் நலத்தைக் கருதி கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் போக இச்சையை அக்கிரமமான வழிகளில் தீர்த்துக்கொள்ள முயல்வோரை மாத்திரமே நாம் கண்டிக்கலாம்… வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக்கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள்….
View More இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை – பாரதியார் கட்டுரைMonth: September 2009
வாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்
ஒருபுறம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் வியக்கவைக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மக்களின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளும் ஆபத்துகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அதிகார வெறி, பொதுநலத்தை ஓரங்கட்டிவிட்டது. எங்கு பார்த்தாலும் கோஷ்டிப் பூசல் காணப்படுகிறது. எந்தக் கட்சியும் இதற்கு விலக்கல்ல. இந்த பரஸ்பர அவநம்பிக்கை, தகராறு போன்றவற்றால் அரசியல் கட்சிகள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன. அறப்பண்பு முற்றிலுமாக செல்லரித்துப் போய்விட்டது. மனித விழுமியங்கள் நலிவடைந்து விட்டன. அரசுகள் ஸ்திரத்தன்மை இழந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் அநீதியும் அட்டூழியமும் அக்கிரமமும் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இவற்றுக்கெல்லாம் என்ன பரிகாரம் என்பதை…
View More வாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்டைம் (கொரிய திரைப்படம் 2006)
புதிய முகத்தைக் கொண்ட தன்னை வேறு ஒரு புதிய மனுஷியாக நம்பி காதலன் ஏற்றுக்கொண்ட போது தன் காதல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு மகிழும் அவள் – தன்னுடைய பழைய சுயம் காதலில் தோற்றதை எண்ணி வருந்துகிறாள். ஒரு கட்டத்தில் பழைய காதலி ஜீ வூ சந்திக்க விரும்புவதாக தானே கடிதம் எழுதி, தன் புதிய காதலை சோதனைக்குட்படுத்துகிறாள். அந்தக் கடிதத்தைக் கண்ட ஜீ வூ ஆழமான தன் பழைய காதலைத் தேடி போகப் போவதாக முகம் மாறி வந்த ஷெ ஹீயிடம் சொல்கிறான். தன்னுடைய புதிய காதல் சிதையக்கண்ட ஷெ ஹீ அவனுடன் சண்டையிடுகிறாள். இந்தச் சமயத்தில் இத்தனை நாள் ஷெ ஹீ நடத்திய நாடகம் ஜீ வூ-க்குத் தெரிய வருகிறது. மனம் உடைந்து போகிறான். அவளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத ஜீ வூ,…
View More டைம் (கொரிய திரைப்படம் 2006)போகப் போகத் தெரியும் – 33
‘கடவுள் இல்லை’ என்று சொல்லும் ஈ. வெராவின் திராவிட இனவாதக் கோரிக்கையை எதிர்த்து, ‘தாருல் இஸ்லாம்’ என்ற இதழ் எழுதியது. ‘திராவிட நாட்டில் அல்லாவுக்கும் குர் ஆனுக்கும் இடமிருக்காது’ என்று அது எச்சரித்தது.
“…நபிகள் நாயகம் விழாக்களுக்கு நமது அண்ணாவும் பெரியாரும் போகாமல் நடந்தது கிடையாதே – பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதாரம் நம்மைப்போல யாரும் தந்தது கிடையாதே – அவர்களும் திராவிட முஸ்லிம்கள்தான் என்ற எண்ணத்தை நாம் மாற்றியது இல்லையே…”
–மு. கருணாநிதி/ ஆறுமாதக் கடுங்காவல்
ராஜசேகர ரெட்டி: ஏழைப் பங்காளன் முதல் எவாங்கிலிஸ்ட் வரை
நெல்லின் கொள்முதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் அதிகப் படுத்தி வந்தமையால் விவ்சாயிகளின் மதிப்பையும், அன்பையும் பெருமளவில் சம்பாதித்துக் கொண்டார் ரெட்டி … ஏழுமலையானின் ஏழு மலைகளில் இரண்டு மலைகள் மட்டுமே அவருக்குச் சொந்தம் என்றும், மற்ற ஐந்து மலைகளையும் அரசு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அரசாணை பிறப்பித்தார் ரெட்டி .. 2009 தேர்தலுக்கு முன்னால் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து ராஜசேகர ரெட்டியையே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
View More ராஜசேகர ரெட்டி: ஏழைப் பங்காளன் முதல் எவாங்கிலிஸ்ட் வரைஇசைக்கூறுகள் – 6 : குறியீட்டு முறையின் வரலாறு
1874களில் ரவீந்தரநாத் தாகூர் Hindoo Patriot என்ற இதழில் – “இசை முறைகள் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் தனிப்பட்ட குறியீட்டு முறை இருக்கும். அவை விஞ்ஞான முறைப்படி உள்ளதா, மற்ற முறைகளை விட மேன்பட்டதா என்ற கேள்விகள் தேவையில்லாதவை.. எல்லாவிதங்களிலும் ஆங்கில யுத்திகளைப் பயன்படுத்தும் நாம், இந்திய இசைக்கு எங்கள் முறையே சிறந்தது என எண்ணுகிறோம்” – என குறியீட்டு விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
View More இசைக்கூறுகள் – 6 : குறியீட்டு முறையின் வரலாறுதேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்
தெரியாது என்ற வார்த்தையும் முடியாது என்ற வார்த்தையும் பாரத பக்தர்கள் தவிர ஏனையோரின் பொருட்டாகவே உண்டாகின்றன. இவ்வுண்மை உங்கள் மனதில் எப்போதும் நிற்கட்டும்… சிவநேசனாகவோ தமிழ்நேசனாகவோ அவ்விருபொருள் நேசனாகவோ என்னை மதித்து என்னிடமிருந்து யாதொரு கைமாறும் கருதாது, “சிவநேசன்” வாரந்தோறும் என்னைக் காணும்படி நீங்கள் செய்ததற்காக யான் உங்கள் பால் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன் ..
View More தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?
”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். (நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)
“பிராமண கபே எழுத்துகளை அழிப்பதில் இருந்த நியாயமான முனைப்பு தலித்துகளுக்கு பிராமணரல்லாதார்களால் ஏற்பட்ட கொடுமைகளான பொது இடப் பயன் மறுப்பு, தனிக்குவளை என்பனவற்றை எதிர்த்துப் பேசவோ போராடவோ இல்லை.” — (கோ. கேசவன், தலித் அரசியல். நன்றி; புதிய கோடங்கி, ஜூலை – 2004.)
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?குண்டலினி
ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன்…
View More குண்டலினிஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!
காம உணர்ச்சியிலிருந்து ஆன்மிக நிலைக்கு என்னும் நிலையிலிருந்து திருமண அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிதல் என்பதாக அந்த உறவினை மாற்றி அமைத்தது. நவீன காலத்துக்கு முந்தைய திருமண அமைப்பில் பெண்ணின் கீழ்படிதல் நிலையே ஏசுவுக்கும்-சபைக்குமான உறவாகவும் அதன் அடுத்த கீழ்படிதலாக சபைத்தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்குமாக அது மாற்றப்பட்டது. இந்த மேற்கத்திய உருமாற்றம் பாரத பண்பாட்டில் ஏற்படவே இல்லை.
View More ஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!