பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!

ந்து மத சாத்திரங்கள் சாதிப் பாகுபாடுகளையும், பெண்ணடிமைத் தனத்தையும் வளர்க்கின்றனவா?

ந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா?

லக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா?

ரங்கசீப்பின் கோயில் இடிப்புகள், திப்பு சுல்தானின் செயல்கள், தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகள் – இவற்றிற்கிடையே தொடர்பு இருக்கிறதா?

ந்தியாவிலிருந்து பௌத்தம் மறைந்ததற்கு யார் காரணம்?

சைவம் சமணர்களைக் கழுவேற்றி வளர்ந்த மதமா?

ராமனும், கண்ணனும் தமிழ்க் கடவுள்களா?

டார்வின், காந்தி, ஐன்ஸ்டின், விவேகானந்தர் – இவர்களுக்கிடையே என்ன தொடர்பு?

மேற்கத்திய கலாசாரம் கச்சிதமானது, இந்துக் கலாசாரம் குழப்படியானது – சரியா?

முட்டாள் புராணக் கதைகளால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா?

ந்தியாவில் கலை சுதந்திரம் உள்ளதா?

திரைப் படம் கலாசாரத்தைச் சீரழிக்கிறதா?

மூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்?

நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய  நூல் இது.

panpattai_pesuthal_front_cover
பண்பாட்டைப் பேசுதல்
இந்து அறிவியக்கக் கட்டுரைகள்

வெளியீடு:

தமிழ்ஹிந்து
441,கவிமணி நகர்,
நாகர்கோவில் – 629002.

பக்கங்கள் : 256

விலை: ரூ. 120

சென்னை புத்தகக் கண்காட்சியில் (2010 ஜனவரி-1 முதல் ஜனவரி-10 வரை) விஜயபாரதம் கடையில் (ஸ்டால் எண்: 278 & 279)  கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

விவேகானந்த கேந்திரம்
5, சிங்காராசாரி தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை – 600 005.
(தொலைபேசி: 91763-68789)

தபால் மூலம் பெற விரும்புபவர்கள், புத்தகத்தின் விலையுடன் தபால் செலவும் சேர்த்து ஆர்.எஸ்.நாராயணன் என்ற பெயரில் டிமாண்ட் டிராஃப்ட் (சென்னை) எடுத்து, தங்கள் முகவரியைக் குறிப்பிட்டு மேற்கண்ட விவேகானந்த கேந்திர முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம். (தபால் செலவு – தமிழ்நாடு:  ரூ. 25,  வெளிமாநிலங்கள்: ரூ. 30, வெளிநாடுகள்: ரூ. 140)

இணையம் மூலம் (ஆன்லைன்) புத்தகத்தை வாங்க  இங்கே க்ளிக் செய்யுங்கள்.

மேலும் விவரங்களுக்கு தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவை  tamizh.hindu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்து அறிவியக்க சிந்தனைகள் இணைய வெளியைத் தாண்டி பலதரப்பட்ட தமிழ் மக்களையும் சென்றடைய இத்தகைய வெளியீடுகள் கண்டிப்பாக உதவும் என்பதனால், தமிழ்ஹிந்து இதில் முனைந்துள்ளது.

நமது தளத்தின் வாசகர்கள் காத்திரமான, சுவாரஸ்யமான, சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தை வாங்கி ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், வாசகர் வட்டங்கள் மற்றும் நூலகங்களுக்கும் இந்தப் புத்தகத்தை வாங்கி அளிக்கலாம்.

26 Replies to “பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!”

 1. 256 பக்கத்திற்கு மிகவும் சகாயமான விலைதான். நாம் இதைப் பெரிய எண்ணிக்கையில் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்; அதற்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

  அட்டை கம்பீரமாக இருக்கிறது. கவரும் தோற்றம்.

  கண்ணன், கும்பகோணம்.

 2. மிக நல்ல முயற்சி tamilhindu.com
  இணையம் மூலம் இப்புத்தகத்தை வாங்குவதற்கான அறிவிப்புக்காக காத்திருக்கிறேன்.

 3. இதைத் தான் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இணையத்தில் எழுதும் சுதந்திரம் இருக்கிறது என்றாலும், அந்த சுதந்திரம் துஷ்பிரயோகப்படுத்துவதும் தாராளமாக நடக்கிறது. ஆக, அச்சில் வருவது தான் கருத்துக்க்ள் பரவலாக்கப் படுவதற்கும், எப்போதும் எல்லோரும் உடனே கைக்கொள்வதற்கும் இசைவானது. அதிக காலம் வாழும் சௌகரியமும் இதில் உண்டு. தமிழ் ஹிந்து இந்த பழைய பாட்டைக்குத் திரும்பியது சந்தோஷம் தருகிறது.

  இரண்டாவது, வெளிநாடுகளுக்கு 140 ௦ என்பது மிக குறைந்தது. அனுப்பப் படும் நாடுகளுக்கும் தூரத்திற்கும் அனுப்பும் மார்க்கம் பொறுத்தும் இது நிர்ணயிக்கப்படவேண்டும். உள்நாட்டிலேயே கூட் 120௦ ரூபாய் புத்தகம் 140 -க்குக்௦ கொடுப்பது சாத்தியமில்லாத்து. – வெ.சா.

 4. `பண்பாட்டைப் பேசுதல்’

  அற்புதமான தலைப்பு.

  நூலைப் படிப்பதற்கு முன்னரே பல செய்திகளை உணர்த்தும் தலைப்பு.

  நூலுக்குத் தலைப்பைத் தேர்ந்தெடுத்த அன்பர்களுக்கு உள்ளார்ந்த வாழ்த்துகள்; திருவருள் என்றும் துணைநிற்கும்.

 5. Impressive!!!
  Hope the tamilhindu editors bring more books in the future especially History on the invasions of muslims and christians in India and how they destroyed our culture, our temples. It will be worth while to read that. I will purchase this book right away the moment its available for online purchasing….. So Please make the details available to purchase online as soon as possible.
  I can’t wait to read. Really!!

  Thank you.

 6. தமிழ் ஹிந்து புத்தகங்கள் கொண்டு வந்தால் மற்றும் போதாது.

  ஒரு உண்மையான மத சார்பற்ற டிவி சேனல் இங்கிலீஷ் மற்றும் தமிழில் ஆரம்பிக்க முயற்சி செய்யவேண்டும்.

  ஒரு லிமிடெட் கம்பெனி ஆரம்பித்து அதன் மூலமாக இதை எளிதாக செய்ய முடியும். ஒரு தூண்டு கோலும் ஆரம்பமும் மட்டுமே தேவை.

  இதை ஒரு நல்ல உண்மையாக உழைக்கும் ஒரு டிவி தயரிபாலறை வேலைக்கு அமர்த்தி நன்றாக கம்மேர்சியாலகவும் செய்ய முடியும்.

  குருமூர்த்தி போன்றவர்கிளின் உதவியுடன் இதை செய்யலாம்.

  யாரவது பூனைக்கு மணி காட்டுங்களேன்.

 7. மிக‌வும் தேவையான‌ ச‌ம‌ய‌த்தில் வெளிவ‌ருகிற‌து.

  இத‌ற்கு பின்னால் உழைத்த‌ அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் இத‌யப்பூர்வ‌மான‌ ந‌ன்றி,

  ப‌ல நூல‌க‌ங்க‌ளுக்கு ப‌கிர்ந்து கொள்ள‌ ஏதெனும் விலையில் த‌ள்ளுப‌டியை எதிர் பார்க்கிறேன்,

  ந‌ன்றி,

  ச‌ஹ்ரித‌ய‌ன்

 8. இணையம மூலம் வாங்க காத்திருக்கிறேன் , இளைய தலை முறைக்கு தேவையான நூல் , நன்றிகள் பல உரித்தாகுக …….வேங்கட கிருஷ்ணன் பிரகதீஸ்வரன்

 9. நன்றி

  நாளை புத்தக கண்காட்சி செல்கிறேன், இதற்காக

 10. ஒரு வேண்டுகோள் துக்ளக் வார இதழில் வரும் ஹிந்து மஹா சமுத்திரம் மறு பதிப்பாக தமிழ் ஹிந்து வில் வந்தால் நன்றாக இருக்குமே ,மேலும் துக்ளக் இன்டர்நெட் செய்திகளில் நம் தமில்ஹிண்டு பற்றிய செய்தி வந்தால் நம் வலை தளம் பலரை சென்று அடையும்

 11. இணையம மூலம் வாங்க காத்திருக்கிறேன்

 12. ஐயா

  VPP யில் அனுப்புவிர்களா ?

 13. // ப‌ல நூல‌க‌ங்க‌ளுக்கு ப‌கிர்ந்து கொள்ள‌ ஏதெனும் விலையில் த‌ள்ளுப‌டியை எதிர் பார்க்கிறேன் //

  புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப் படும் எல்லாப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. அந்த வகையில் இந்தப் புத்தகத்தையும் கண்காட்சியில் வாங்கினால் அதே தள்ளுபடி உண்டு.

  // ஐயா
  VPP யில் அனுப்புவிர்களா ? //

  இல்லை. தபாலில் பெற விரும்புபர்கள், இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி டிமாண்ட் டிராஃப்ட் அனுப்பினால் புத்தகம் உடனடியாக அனுப்பி வைக்கப் படும்.

 14. அன்புள்ள தமிழ்ஹிந்து டீம்,
  மிக நல்ல முயற்சி. புத்தகக் கண்காட்சியில் வாங்கிவிட்டேன். பதிப்பு நன்றாக உள்ளது. படித்ததும் மீண்டும் மடல் எழுதுகிறேன். புத்தக கண்காட்சி என்பது ‘முற்போக்கு’, ‘பகுத்தறிவு’ என்று சொல்லிக் கொள்வோரின் ஆதிக்கத்தில் இருக்கிறது. அதை மாற்ற, ஒத்த இந்துத்துவ சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் திரள வேண்டும். உங்கள் புத்தகத்தை https://www.viruba.com/ இல் பதிவு செய்யுங்கள். நன்றி.
  எனது வலைப்பூ: https://kuzhalumyazhum.blogspot.com/

 15. அன்புள்ள தமிழ் ஹிந்துவுக்கு ,
  இணையத்தில் இப்புத்தகத்தின் தலைப்பும் அதனை ஒட்டி விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட முதல் கேள்வியும் இப்புத்தகத்தை படிக்கவேண்டும் என்ற ஆவலை உண்டு பண்ணுகிறது ….கட்டாயம் வாங்கி படிக்கபோகிறேன் ……
  வாழுத்துக்கள் .உங்கள் பணி தொடரட்டும் ….ஜெய் ஸ்ரீராம் ….

 16. எல்லாம் சரிங்க. இதோட ISBN நம்பர் கொடுத்திருந்தா தேட ஈசியா இருந்துருக்கும்…

 17. // இதோட ISBN நம்பர் கொடுத்திருந்தா தேட ஈசியா இருந்துருக்கும்…//

  புத்தகம் அச்சில் வரும் நேரத்திற்கு ஐ.எஸ்.பின். எண் கிடைக்கவில்லை. விண்ணப்பத்தில் இருக்கிறது.

  எண் கிடைத்ததும் கண்டிப்பாகத் தெரிவிக்கிறோம்.

  நன்றி.

 18. நல்ல முயற்சி. புத்தகங்கள் எங்கே கிடைக்கும் ஆர்டர் செய்ய ?

 19. புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு கட்டுரைகளைப் பற்றி:

  விஸ்வாமித்ரா எழுதி இருக்கும் பைத்ருகம் சினிமா விமர்சனம் நன்றாக இருக்கிறது. படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்குகிறது.

  எனக்கு ஒரு எண்ணம் உண்டு – இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களை இந்த தளம் சந்தேகக் கண்ணோடு – ஒரு வித paranoia, guilty until proven otherwise என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கிறது, அது சரியான அணுகுமுறை இல்லை என்று. அப்படிப்பட்ட கருத்து உள்ள என்னையே அருணகிரி எழுதிய ஒரு குடும்பத்தின் கதை என்ற கட்டுரை மிகவும் பாதித்தது. மிகுந்த தாக்கம் உள்ள கட்டுரை. (ஏமாற்றி, வற்புறுத்தி மதம் மாற்றுவதைப் பற்றி எனக்கும் இந்த தளத்துக்கும் முழு இசைவு உண்டு, அதனாலும் இருக்கலாம்.) மத மாற்றம் என்பதை குறிக்கோளாக கொண்ட பின்னர், எல்லா கம்பெனிகளுக்கும் வருஷாந்தர வியாபார டார்கெட் இருப்பது போல ஒவ்வொரு பாஸ்டருக்கும் வருஷாந்திர டார்கெட் கொடுக்கப்படலாம், டார்கெட்டை அடைய அவர்களும் எத்தனையோ விதத்தில் அடுத்தவருக்கு டார்ச்சர் கொடுக்கலாம். தப்பி தவறி ஒரு மத மாற்றுபவரிடம் பேச்சு கொடுத்துவிட்டு, பிறகு பல நாட்கள் mottaarsaikkiL சத்தம் கேட்டாலே ஹாஸ்டலில் அங்கும் இங்கும் ஒளிந்து கொண்ட நெருங்கிய நண்பன் ஒருவன் ஞாபகம் வந்தது.

  அப்புறம் ISBN எண் மிக முக்கியம். நான் அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் வாழ்பவன். எங்கள் அலமேடா நூலகத்துக்கு தமிழ் புத்தகங்கள் வாங்கி கொடுப்போம் என்று ஒரு முறை ஒரு நாற்பது ஐம்பது புத்தகம் வாங்கிக் கொணடு வந்தேன். ஒரு வருஷம் முயற்சி செய்து பத்து புஸ்தகம் கொடுக்க முடிந்தது. ISBN எண் இல்லாத எந்த புத்தகத்தையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ungaL எண்ணங்களை பரப்புவது உங்களுக்கு மிக முக்கியம் என்று தெரிகிறது. கட்டாயமாக ISBN எண்ணோடு பதியுங்கள்.

  மீண்டும் சொல்கிறேன், இந்த தளத்தோடு எனக்கு பல கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்த புத்தகம், போக போகத் தெரியும் மாதிரி புத்தகங்கள் பலரையும் அடைவது என் கண்ணில் நல்ல விஷயம். அமெரிக்காவாழ் நண்பர்கள் இந்த புத்தகங்களை இங்குள்ள நூலகங்களுக்கு கொடுக்கலாமே? (ISBN எண்ணோடு பதியுங்கள்!)

 20. ISBN எண் கிடைத்து விட்டதா ? Online-ல் ஆர்டர் செய்ய முடியுமா?

  நன்றி.

 21. இந்த புத்தகம் எங்கே கிடைக்கு?

 22. ஈழம், சிங்கப்பூர், மலேசியாவில் இந்த நூலுக்கான அறிமுகம் அவசியம். பண்பாட்டு சிதைவுக்கு உள்ளாகும் ஈழத்தில் இளம் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *