ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்… பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.
View More அருணையின் கருணைMonth: June 2010
இது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்
……வேறுபடும் பன்மைத்தன்மைக்கும், மாற்றத்தை அனுமதிக்காத ஒற்றைத் தன்மைக்கும் இடையே உள்ள வித்தியாசமே இந்து மதத்தை மற்ற மதங்களிடம் இருந்து பிரிக்கும் முக்கிய வேறுபாடு என்று சொல்ல முடியாது; ஆன்மீக மூலங்களைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் இந்துத்துவமானது ஒரு திறந்த மூல (open source) மதமாக திகழ்வதும், மாற்றக் கூடாத இறையியலைப் போதிக்கும் மற்ற மதங்கள் மூடிய மூல (closed source) மதங்களாக இருப்பதும்தான் மிக முக்கியமான வேறுபாடு.
View More இது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4
அந்த முக, நேத்ர அபிநயங்களில் தான் கதகளி தன் அடையாளத்தைப் பதிப்பித்திருக்கிறது. அது தான் கதகளி. கதகளி மாத்திரமே. கதகளியைத் தவிர வேறு எதாகவும் அது இருக்கமுடியாது. இத்தகைய ஓர் அனுபவம் எனக்கு பின் வருடங்களில், கதா நிகழ்த்திய விழா ஒன்றில்….
….பத்மா அத்வைதத்திற்கு அளித்த ஒற்றை விரல் நீட்டும் அபிநயத்தைப் பற்றி காலம் சென்ற சுப்புடு, அவருக்கே உரிய பாஷையில், “பத்மா சுப்ரமண்யத்திற்கு அது அத்வைதத்தைக் குறிப்பதாக இருக்கலாம். அதே அபிநயம் நம்மூர் ஒண்ணாங்களாஸ் பையனுக்கு ‘சார் ஒண்ணுக்கு!’ என்று அனுமதி கேட்பதாக இருக்கும்,” என்று எழுதியிருந்தார்.
View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4தேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்
மந்திர கேசரி மலைகள் அச்சு: சூரிய சந்திரர் சில்லுகள்: ஷட்ருதுக்கள் சந்திகள்: பதினான்கு உலகங்கள் தட்டுகள்: ஆகாச ஆசனம்: நதிகள் கொடிகள்: மோட்ச உலகம் மேல்விரிவு: யாகங்கள் சட்டம்: நாள் திதி நட்சத்திரம் போன்றன குறுக்கு மரங்கள்: அஷ்ட பர்வதங்கள் தூண்கள்: அஷ்ட திக்கஜங்கள் தாங்கும் ஆதாரங்கள்: ஏழு கடல்கள் திரைச்சீலைகள்: உபவேதங்கள் மணிகள்: வாயுக்கள் படிகள்: நால்வேதங்கள் குதிரைகள்;: உச்சிக்குடை பிரம்மரந்திரம்: கலசம் சோடஷாந்தத்தானம்: ஆக தேரானது சிவரூபம்…
கோயில் தோத்திருவிழாவில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்குப் பெரியோர் வழங்கும் காசினை ‘தேர்க்காசு’ என்று வழங்குவதனூடாக ஆலயத் தேர்விழா ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். இது போலவே தனது மாப்பிள்ளைக்கு இவ்விழாவை ஒட்டி மாமனார் அளிக்கும் சன்மானம் ‘தேரடிச்சம்பாவனை’ என்றும் கூறப்படும்.
View More தேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்இராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை
கிராமத்தில் இந்துக்கள் முஸ்லீம் ஜமாத்திற்கு வரி செலுத்திதான் தொழில் செய்ய முடியும் என்கிற நிர்பந்தம். காவல் துறையினர் உள்ளிட்ட மாவட்ட அரசு நிர்வாகங்கள் அனைத்தும் ஜமாத் மூலமாகத் தான் செயல்படுகின்றன.. கண்ணன் எனும் ஆட்டோ டிரைவர் ஜமாத்திற்கு மாதக் கட்டணம் செலுத்தமாட்டேன் என்று போராடத் துவங்கினார், இஸ்லாமிய மதத் வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். சுந்தர்ராஜ் எனும் நாட்டுப்படகு மீனவர் முஸ்லீம் மதம் சார்ந்த விசைப் படகு மீனவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
View More இராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலைஅஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை
மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிவருகிறார்கள். இவ்வாறு சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் பங்களாதேஷிகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. முஸ்லிம்கள் என்றே அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். முஸ்லிம்களைப் பகைத்துக்கொண்டால் சிறுபான்மையினரின் எதிரி என்று முத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற பயம் அரசியல் கட்சிகளுக்கு- குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு- உள்ளது. இதனால் காங்கிரஸாரின் ஆதரவுடன் பங்களாதேஷிகள்…. இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. வாக்குவங்கி சார்ந்த பயமும் ஓரு முக்கிய காரணமாகும்.
View More அஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமைஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 3
முதல் நாள் நினைத்துக் கொண்டு, அன்று காலைதான் ரயில் டிக்கெட்டே வாங்கினோம் என்று அவர் அறிந்ததும், ஆச்சரியத்துடன் “உங்கள் தரிசனத்திற்கு ஏதாவது miracle (அதிசயம்) நடந்தால்தான் உண்டு” என்றார். நான் நொடிப்பொழுதும் யோசியாது “miracle நடந்தால் நடக்கட்டுமே” என்றேன்.
View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 3பிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்
அசித்துவிற்கும் சித்துவிற்கும் இடையே ஆன ஒத்ததன்மை அற்ற நிலை ஏற்படாமல் இருந்து இருந்தால் இன்று விரிந்துகொண்டே இருக்கும் பிரபஞ்சம் ஆனது ஒளியால் தொகுக்கப்பட்ட, நம் அறிவுக்கு எட்டாத ஏதோ ஒன்றாக இருந்திருக்கும். அப்போது வான்-இயற்பியலாளர்கள் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள்…. இந்த 12 வேறுபட்ட தனிமங்களே கிரகங்களையும் அதன்மேல் உயிரினத்தையும் இயற்ற வழிவகுத்தது. இந்தத் தனிமங்கள் வரவிருக்கும் எல்லாத் தொல்லைகளுக்கும் காரணமாக இருந்தது. இவைகள் அந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேயே இருந்திருந்தால் இன்று எனக்கும் இதை எழுதவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. நீங்களும் இதைப் படித்து, தலை கிறுக்குப்பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய் இருக்கும்.
View More பிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3
ஒரு ஜப்பானிய கவிதை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் அந்த க்ஷணத்தில் படிக்கப் படிக்க, அதே தன் நடனத்திற்கான பதமாக எடுத்துக்கொண்டு ஒருவர் ஆடுவார். ஆடமுடியும் என்பது யார் சிந்தனையிலும் உதிக்காத ஒன்று. எல்லோருக்கும் எதிர்பாராது கிடைத்த பரிசு போல ஒரு குதூகலம்… இவை எல்லாவற்றையும் மீறி எழும் நாம் உள்ளூர உணரும் மாயம் (mystique) தான் நடனம். அந்த மாயம் (mystique) அடவுகளிலோ, அபிநயங்களிலோ, முத்திரைகளிலோ, ஜதிகளிலோ இல்லை. சங்கீதத்திலும் இல்லை. இவையெல்லாவற்றையும் தரும் நடன கலைஞரிடம் தான் இருக்கிறது என்றால் அது சரிதானா?..
View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது
(மூலம்: நவோமி ப்ரெட்டிமேன்) நானும் எங்களது பணியில் முழுமுற்றாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்… மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக… நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் – அச்சம்.
View More மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது