தமிழ் இந்துவில் உரையாடுங்கள் -கேள்விகள்

அக்டோபர், 2010

வாசக, வாசகியரே,

rishis-21

தமிழ் இந்துவில் உரையாடுங்கள்” என்ற புதிய பகுதிக்கான அறிவிப்பை 29 செப்டம்பரில் வெளியிட்டிருந்தோம். அதைப் படித்துவிட்டு, பல கேள்விகளை வாசகர்கள் அனுப்பியுள்ளீர்கள். உங்களுடைய உற்சாகம் வரவேற்கத் தக்கது.

வாசகர்கள் அனுப்பிய பல கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றிற்கான பதில்களை நீங்கள் tamizh.hindu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது, இந்தப் பகுதியின் இறுதியில் உள்ள மறுமொழிப் பெட்டியிலும் உங்கள் பதில்களைத் தரலாம்.

மறுமொழிப் பெட்டியிலும் மின் அஞ்சலிலும் வரும் பதில்கள் முழுதாகக் தொகுக்கப்
பட்டு தனிப் பதிவாக வெளியிடப் படும்.

பதில்கள் வந்து சேரக் கடைசி தேதி: 27 அக்டோபர் 2010

கேள்விகளுக்குக் கீழே சில இணையதளங்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளது. அவை பதில்கள் தேடும்போது உங்களுக்கு உதவலாம்.

உரைபொருள் பகுதி:

இந்த மாத உரைபொருள்: அயோத்தி கோயில் மீட்பு

அயோத்தி குறித்த கேள்விகள்:

கேட்டவர்: திருமதி. ஜயஸ்ரீ கோவிந்தராஜன்

1. அயோத்தியில் மசூதியை இடித்தது சட்டப்படியும் தார்மீக ரீதியிலும் தவறில்லையா?

2. சமூக அமைதிக்காக தீர்ப்பென்று எதுவும் வராமலே இன்னும் 100 வருடங்களுக்கு இந்தப் பிரச்சினையை இழுத்தடித்தால்தான் என்ன?

கேட்டவர்: திருவாளர். ஈஸ்வரன், பூலாம்பட்டி, பழனி

1. அயோத்தியில் முதன்முதலில் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் கட்டியவர் யார்? இது பற்றி விளக்கமாக யாராவது விளக்க வேண்டுகிறேன்.

கேட்டவர்: திருவாளர். பால. மோகன் தாஸ்

1. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டி அவரை வழிபட அந்த இடம் வேண்டும் என்று ஹிந்துக்கள் கோருகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக அது ஒரு மசூதியாக இருந்தது என்றும் எனவே அங்கு அல்லாவைத் தொழ தாங்கள் விரும்புவதாகவும் முஸ்லிம்கள் கோருகிறார்கள்.

ஒரே இடத்திற்காக இருதரப்பினர் போட்டிபோடுவது தேவையற்றது. கடவுள் ஒருவரே. முஸ்லிம்களும் அந்தக் கடவுளை வழிபடத்தான் கேட்கிறார்கள் எனும்போது கொடுத்துவிட்டுப்போனால்தான் என்ன?

2. அனைவருக்குமான பரம்பொருளான, பரம தியாகியான அந்த ஸ்ரீ ராமர் வன்முறைக்குப் பின் கிடைக்கும் இந்தக் கோவில் ‘கூடாது’ என்று கூறவும் கூடுமோ?”

என்ற கேள்வியை உண்மையான, விஷயஞானம் நிறைந்த, ஆத்திக ஹிந்து ஒருவர் என் முன் வைத்தார். இந்த கேள்விக்கான நேர்மையான, விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

கேட்டவர்: ஐஸ்வர்யா, பெங்களூர்

1. அயோத்தி தீர்ப்பு மக்களிடையே பெரிய ரியாக்ஷன் எதுவும் இல்லாமல் முடிந்து போனது போன்று தோன்றுகிறதே… ஒரு சில ஊடகங்களைத் தவிர பெரும்பாலான ஊடகங்கள் அடுத்த பிரச்சனைக்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது. இது பற்றி கருத்து என்ன?

2. ஒரு சில வலைப் பக்கங்களில், காசி, மதுரா போன்ற தளங்களிலும் கோவில்கள் மீட்கப் படவேண்டும் என்று கூறுகின்றனரே… அங்கேயும் கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப் பட்டனவா? அவற்றின் வரலாறு என்ன?

3. அயோத்தி தீர்ப்பு வந்த பின்னர், இனி பாஜக வின் அரசியல் எப்படி அமையும்?

4. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கின் எதிர்காலம் என்ன?

5. ஏன் அயோத்தி மூன்று பங்காக பிரிக்கப் பட்டு தீர்ப்பு வந்திருக்கிறது? அதற்கு என்ன காரணம் கூறப் படுகிறது?

6. இந்த இரண்டு மதங்களுக்கிடையில் இந்த தீர்ப்பு ஒற்றுமையை தோற்றுவிக்குமா?

7. 1949 ல் ராமர் விக்கிரகங்கள் அயோத்தியில் கொண்டு போய் வைக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது. அதற்கு முன் அந்த இடம் தர்காவாக இருந்ததா?

8. அயோத்தியில் கோவில் நிலத்தில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு கொடுக்கச் சொல்லி தீர்ப்பு வந்திருக்கிறது. இனி வரும் நாளில் கோவிலும், மசூதியும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இயங்க முடியுமா?

கேட்டவர்: திருவாளர். எஸ். ரவி

1. அயோத்தி பிரச்னை முற்றியுள்ள இவ்வேளையில் ஒரு அய்யம்:

பாபர் தினமும் நாட் குறிப்பு எழுதியவர்- தனது உதவியாளரை கொண்டு என்பது வரலாறு. அதற்கு பெயர் பாபர் நாமா.

அவர் அயோத்திக்கு படை எடுத்தப்போது பாபர் நாமா வில் அதனை பதிவு செய்திருப்பார். ஆனால் பாபர் நாமாவில், பாபர் அயோத்திக்கு படை எடுத்த கால கட்டங்களில் பல நாட்களுக்கு எழுதிய குறிப்புகள், என்னவாயின? பாபர் நாமாவை எழுதிய அப்துல் ஃபாசல், அந்நாட்களை பதிவு செய்யவில்லையா?

ஏனென்றால், அவை இருப்பின் இந்த அயோத்திப் பிரச்சனையே தவிர்த்திருக்கலாம் இல்லையா?

சந்தேகத்தைத் தீர்ப்பீர்களா?

கேட்டவர்: திருவாளர். ஆர். வெங்கி

1. ராமனின் வாழ்க்கையை ராமசரித மானஸ் என்ற புத்தகமாக எழுதியவர் துளசி தாஸர். அவர் பாபரின் காலத்தில் வாழ்ந்தவர். அவர் ஏன், பாபர் ராமர் கோயிலை இடித்தது பற்றி அவர் ஏன் அவரது நூலில் குறிப்பிடவில்லை?

கேட்டவர்: திருவாளர். ஜெ.இரவிச்சந்திரன்

1. அயோத்யா தீர்ப்பு நம்பிக்கை சார்ந்து அமைந்துள்ளது என்கிறார்களே?இந்துக்கள் சார்பாக சட்டபூர்வமான ஆதாரம் ஒன்று கூட இல்லையா?இஸ்லாமியர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் என்னென்ன?இது ஒரு கட்டப்பஞ்சாயத்து தானா?

பொதுவான கேள்விகள்:

கேட்டவர்: திருவாளர். ஷங்கர் சுப்பு

1. சில கோவில்களுக்கு வழிபடப் போனால், கருவறையில் உள்ள மூலவர் நம் கண்ணுக்குத் தெரியாதவாறு அர்ச்சகர்கள் மறைக்கிறார்கள்.

சில சமயங்களில் ஒருவருக்கொருவர் விளையாடிக்கொண்டும், ஜோக்குகள் அடித்துச் சிரித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

இதைப் போன்ற செயல்கள் அவர்கள் மேல் உள்ள மரியாதையைக் குறைக்கின்றன.

பக்தர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பயிற்றுவிக்கிற அமைப்பு ஏதேனும் இருக்கிறதா?

2. காஞ்சி காமகோடி பீடத்தினர் அர்ச்சகர்களுக்காகப் பயிற்சி தருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பயிற்சியில் மக்களுக்கு முன்னால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பயிற்சியும் சொல்லித் தரப்படுகிறதா?

கேட்டவர்: திருவாளர். கீர்த்திவாசன்

1. இந்திய துணைக்கண்டத்தில் பல மொழிகள் பேசுவோர் இருக்கின்றனர். இப்படி இருக்கும் போது, ஏன் இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டும்?

மொழி அடிப்படையில் தனித்தனி நாடாக இருந்தால் அதிக வளர்ச்சி பெறுவது சத்தியம் என்ற கருத்து குறித்து தங்கள் விளக்கங்கள் என்ன?

2. இந்து மதம் என்று சொல்லப் படும் என்ற பண்பாட்டைக் கூட பல சமயங்கள் இணைந்த ஒன்றாக கருத முடியுமா ?

3. காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் ஆள் என்று சொல்லப்படுவது உண்மையா?

கேட்டவர்: திருவாளர். வளர்மதி

1. இந்தியாவில் வணங்கப்படும் கற்புக்கரசிகளில் ஒருவர் அனுசூயை. இவரது வாழ்க்கையை “அனுசூயா சரித்திரம்” என்ற வாய்மொழி வரலாற்று பாடல் விளக்குவதாகக் கேள்விப்பட்டேன். அக்காலங்களில், சில குறிப்பிட்ட விசேஷங்களின்போது இப்பாடல் பாடப்பட்டதாம். இந்தப் பாடல் யாரிடமாவது இருக்கிறதா?

கேட்டவர்: திருவாளர். ஆர். சுந்தரேசன்

1. பாரதியார் எழுதிய பகவத் கீதை விளக்க உரை இப்போது கிடைப்பதில்லை. அது எங்கே கிடைக்கும்?

2. அத்வைதத்திற்கும், விசிஷ்டாத்வைதத்திற்கும் என்ன வித்தியாசம்?

கேட்டவர்: திருவாளர். தோழர். பொன்னரசு

1. ஐயனார் என்றும் ஐயப்பன் என்றும் கும்பிடப்படுபவர் ஒரு பௌத்த இளவரசன் என்று கேள்விப்பட்டேன். இது குறித்த ஆதாரங்கள் யாருக்காவது தெரியுமா?

கேட்டவர்: திருவாளர். ஆர். சுரேஷ்

1. போதாயண அம்மாவாசை என்றால் என்ன? அது குறித்த புராணக் கதை என்ன? வானவியலின் அடிப்படையில் அதை யாரேனும் விளக்கினால் நன்றி உடையவன் ஆவேன்.

கேட்டவர்: திருவாளர். ஆர். ஸ்ரீதரன்

1. பாரத நாட்டைப் பிரித்ததின் பின் புலத்தில் நடந்த சதிகள், அவற்றை அரங்கேற்றியவர்கள் பற்றிச் சொல்ல முடியுமா?

கேட்டவர்: திருவாளர். ஜி. பிரபு

1. இந்தியாவில் இருக்கும் ஜிகாதி வன்முறைவாதத்தை எப்படி அழிக்கலாம்?

தகவல் தரக்கூடிய தளங்கள்:

கோவில் மீட்பிற்கு ஆதரவான கட்டுரைகள்:

panchayat-300x224Ayodhya And After – Issues Before Hindu Society by Koenraad Elst
https://voi.org/books/ayodhya/

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி
https://tamilhindu.com/2010/09/ayodhya-facts/

அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை, ஜடாயு
https://tamilhindu.com/2010/09/ayodhya-a-turning-point-in-history/

இராம சேது குறித்தும் இராமர் குறித்தும், எஸ்.அரவிந்தன் நீலகண்டன்
https://tamilhindu.com/wp-admin/post.php?action=edit&post=13044

மறுப்புவாதமும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும், ஃப்ரான்ஷ்வா காதியே
https://www.thinnai.com/?module=displaystory&story_id=200102215&format=html

அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், வினவு
https://www.vinavu.com/2009/04/07/elec0904/

Ayodhya and Nazareth: A Comparitative Study By Koenraad Elst
https://www.faithfreedom.org/articles/from-ayodhya-to-nazareth/

The Ayodhya Debate: Focus on the ‘No Temple’ Evidence – Koenraad Elst
https://koenraadelst.bharatvani.org/articles/ayodhya/notemple.html

Romila Thapar’s Double standards and Half Truths
https://arvindneela.blogspot.com/2007/09/romila-thapars-double-standards-and.html

Berlin Wall & Ayodhya Temple
https://www.faithfreedom.org/articles/free-thought/berlin-wall-ayodhya-temple/

THE EVIDENCE AT AYODHYA
https://folks.co.in/2009/11/the-evidence-at-ayodhya/

THE ROLE OF LAW AND JUDICIARY IN THE AYODHYA CASE
https://www.hvk.org/specialrepo/bjpwp/ch9.html

[நூல் அறிமுகம்] Ayodhya 6 December 1992 by PV Narasimha Rao
https://readerswords.wordpress.com/2006/07/29/ayodhya-6-december-1992-by-pv-narasimha-rao/

கோவில் மீட்பிற்கு எதிரான கட்டுரைகள்:

Ayodhya: is a solution possible? – K.N. Panikkar Professor of Modern
History with Jawaharlal Nehru University, Delhi
https://www.hindu.com/2010/09/27/stories/2010092751201300.htm

panchayat2[ஒரு கிறுத்துவப் பார்வையில்] God and Ayodhya.By Winfried Corduan
https://wincorduan.net/God%20and%20Ayodhya.pdf

அயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்
https://www.thinnai.com/?module=displaystory&story_id=20303231&format=html

அயோத்தி வழக்கு – வரலாறும் வருங்காலமும்
https://www.saravanakumaran.com/2010/09/blog-post_24.html

தேசத் துரோகம், ஆபிதீன்
https://abedheen.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/

A solution to Ayodhya dispute – DR. K. HUSSAIN
https://www.hindu.com/thehindu/op/2001/11/27/stories/2001112700270100.htm

லி­பரான் ஆணையம்
https://www.tmmk.in/index.php?option=com_content&view=category&id=87&Itemid=284

When caution becomes an imperative- Vidya Subrahmaniam
https://www.thehindu.com/opinion/lead/article695270.ece

“Evidences about Ayodhya doubtful”
https://www.milligazette.com/Archives/2005/01-15July05-Print-Edition/011507200533.htm

[மின் நூல்] Slouching Towards Ayodhya: From Congress to Hindutva in Indian
Politics
https://umanitoba.academia.edu/documents/0009/1959/7_Slouching_Towards_Ayodhya_Smaller_Size.pdf

3 Replies to “தமிழ் இந்துவில் உரையாடுங்கள் -கேள்விகள்”

  1. பழம் பெரும் கோவில்கள் நிறைந்திருக்கும் பூமி நம்முடையது. ஒரு புறம் அவைகளை சரியாக பராமறிக்க இயலாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம். கோபுங்களில் செடிகள் வளர்வதும், சுவர்கள் பலவீணமாவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    ஆனால் அவற்றின் மீது கவணம் கொள்ளாமல் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து பல கோவில்கள் புதிது புதிதாக எழுந்துகொண்டே இருக்கிறன. அதற்காக ஆகும் செலவுகளை பெருமைவாய்ந்த கோவில்களுக்கு பயன்படுத்தினால் இரண்டு பிரட்சனையும் சரியாகுமே!. மக்கள் செய்வார்களா!. உங்கள் பார்வையில் இந்த விஷயத்தை எப்படி கருதுகின்றீர்கள்.

  2. இந்த கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் எழுத எனக்கு ஒரு பத்து நாட்களாவது தேவைப்படும். பதில் டைப் செய்யத்தான் அதிக நேரம் ஆகும்.

    சு பாலச்சந்திரன்

  3. ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களின் கேள்வியில் பொதிந்துள்ள உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தி. அயோத்தியில் இருந்த அந்தப் பாழடைந்த கட்டிடம், குறைந்த பட்சம் 1948 ஆம் ஆண்டு முதலாக வழிபாடு நடைபெற்று வரும் ஒரு ஹிந்து கோயிலாகத்தான் செயல்பட்டு வந்திருக்கிறது! 1952 ஆம் ஆண்டில் பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இஸ்லாமியர்கள் அந்தக் கோவிலுக்கு ஒருகுறிப்பிட்ட (சுமார் முன்னூறு மீட்டர்) அருகாமையில் வருவதற்குக்கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்னும் சரியான விவரங்களை கொயின்ராட் எல்ஸ்ட் அவர்களின் ராமஜென்ம பூமி – பாபரி மஸ்ஜித் புத்தகத்தில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *