அண்ணாத்துரை குறித்து பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்… கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள். இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை!
View More புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்Month: February 2011
ரமணரின் கீதாசாரம் – 5
ஒரு பொருளின் இருப்பையும், இல்லாமையையும் உணர்கிறோமே, அந்த உணர்வு என்பதற்கு ஒரு வடிவமும் இல்லை, அதை நாம் நம் புலன்களாலும் அறிவதில்லை. ஆக புலன்களால் அறியப்படுவது என்பது நம்மைச் சுற்றி பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருட்களுக்கே அன்றி நமக்கோ நமது உணர்வுக்கோ இல்லை என்றே ஆகிறது.
View More ரமணரின் கீதாசாரம் – 5ஆசிர்வதியுங்கள் அனந்த் பை
அமர்சித்திரகதை அவை அனைத்துக்கும் மணிமகுடம். காமிக்ஸ் என்கிற சித்திரகதை வடிவத்தையும் இந்திய பண்பாட்டின் சிறந்த பொக்கிஷங்களையும் இணைத்துக் கொடுத்த ஒரு புத்துயிர்ச்சி அற்புதம். இதன் பின்னணியில் இருந்த மனிதர் அனந்த் பை. அல்லது ’பை மாமா’ (Uncle Pai) என அழைக்கப்பட்டவர்… ஒரு காமிக்ஸ் இப்படி தொடர்ந்து பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளுடன் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது இதுவே முதல்தடவையாக இருக்கும்… அங்கிள் பை, இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக எங்கள் சந்ததிகள் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றோம்.
View More ஆசிர்வதியுங்கள் அனந்த் பைதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]
உயர் நீதிமன்றம் கடும் நடவடிக்கையாக சாய ஆலைகளை மூட உத்தரவிட்ட பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறது தொழிற்துறை… நொய்யல் நதியைச் சீரழித்ததற்கு உயர் நீதிமன்றம் விதித்த அபராதமே சாய ஆலைகளிடையே ஒற்றுமை குலையக் காரணமானது… சாய ஆலைகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த பனியன் தொழில் துறையே பாதிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்… அரசும் அரசியல் கட்சிகளும் தொழில் துறையினரும், விவசாயப் பிரதிநிதிகளும், நீதி துறையும், இணைந்து நடைபோட வேண்டிய தருணம் இது.
View More திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!
காங்கிரசும் கழகமும் இயற்கையான அணி போலும். […] அதிலும் கபில் சிபல் ஊழலில் ஒரு “கலைஞர்”. [….] கபில் சிபல் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை நீக்கி சீர்திருத்தம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கிவிட்டார். […] தேர்வு எழுதி சிறப்பாகத் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களைவிட தேர்வைப் புறந்தள்ளிய மாணவர்கள் முன்னுரிமை பெறுகிறார்கள். கலைஞர் உத்தி போல் தெரியவில்லை? என்னே புரட்சி! […] கோடிகளைக் குவிக்கச் செய்யும் மோசடியின் முகப்பூச்சு இந்தப் பள்ளிக் கல்விச் சீர்திருத்தம்.
View More கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!பயணம்: திரைப்பார்வை
திருப்பதி விமானநிலையத்தில் ஓடுவழி நடுவில் இருக்கும் மூடிய விமானத்துக்குள்ளாக ஒரு மாதா கோயில் மணியோசை கேட்பதாக படத்தில் காட்டுகிறார்கள்… பாதிரியார் விமானத்துக்குள்ளே பைபிள் படிக்க அனுமதி பெற்று, அதை உரக்க எல்லோருக்குமாகப் படிப்பதில் இயல்பாகத் தொடங்கும் கிருத்துவக் காட்சிகள், இறந்த பயணிக்காக பாதிரியார் ஜபிக்கும்போது இயல்பை இழக்க ஆரம்பிக்கிறது.
View More பயணம்: திரைப்பார்வைமாயக்கரங்கள் (சிறுகதை)
“ஆத்தா, எந்திரன் படம் பார்த்துட்டேன்.” என்று கத்திக் கொண்டே வந்தான் ரஜினி முத்து. முகம் எல்லாம் கருப்பும், சிவப்புமாக வண்ணப் பொடிகள் ஒட்டி மீசையில் வேர்வை சொட்ட கோமாளி மாதிரி வந்து நிற்கிற பிள்ளையைப் பார்த்து “டேய்… ” என்று கூப்பிட்டுக் கொண்டு வந்த அவன் அம்மா வசந்திக்கு சிரிப்பு வந்து விட்டது.
View More மாயக்கரங்கள் (சிறுகதை)அத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை
ஏ, ஏ, அம்மா. இந்தா பாருங்கமா. அழாதீங்கம்மா. அம்மா, அழாதீங்கம்மா. பாருங்க. நீங்கள் அழுவதைப் பார்த்தால் எனக்குக் கண்ணில் கண்ணீர் தேங்குகிறது… நான் திருடவில்லை என்று, என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் நீங்கள் கூப்பாடு போட ஆரம்பித்தது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூப்பாடு போட்டால்தான் இந்தியப் பத்திரிக்கை உலகமும் கவனிக்கும். யவன ராணி கூப்பிட்ட குரலுக்கு ஆஜராவதில்தான் மெக்காலே புத்திரர்களுக்குப் பெருமிதம் அதிகம்..
View More அத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரைதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]
எல்லாமே, செருப்புத் தோலுக்காக செல்வக் குழந்தையைக் கொன்ற கதையாக, சாய ஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டால் மாறிப் போயிருக்கிறது… அரசு நிறுவனமான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலற்ற தன்மையும் ஊழலும், நதிநீர் மாசுபடக் காரணங்களாயின… இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, தொழில்துறையினர், அரசு, நீதிமன்றம், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது..
View More திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]ரமணரின் கீதாசாரம் – 4
எது என்றும் உள்ளதோ அது நிலைத்து நிற்கும், எதற்கு இருப்பு இல்லையோ அது இல்லாததே. இன்று இருக்கிறது, நாளை இல்லாது போகும் தன்மை கொண்டது அது. ஆக முன்னும் பின்னும் இல்லாது இடையில் மட்டும் இருக்கும் தேகத்தை எப்படி நிலையானது என்று கொள்ள முடியும்?
View More ரமணரின் கீதாசாரம் – 4