காகித ஓடம் – கார்ட்டூன்

தமிழக சட்டசபைத் தேர்தல் 2011 முடிவுகள்

cartoon-kagidha-odam
கார்ட்டூன்: ஆர்.செ.

மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ “குடும்ப ஆட்சி’ என்கிற அருவருப்பான விஷயம்தான்.

… தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.

… பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன்.

தன்மானத் தமிழன்: தினமணி தலையங்கம்

14 Replies to “காகித ஓடம் – கார்ட்டூன்”

 1. Happy to See Karuna losing….

  But upset that BJP never won a single place in tamil Nadu…

 2. தினமணியின் தலையங்கம் தவறானது. இவ்வளவு பெரிய ஊழலையும், திருதராஷ்ட்ரன்,துர்யோடன,துச்சாதனர்கள்போல் பொதுவாழ்வில் அதர்மவழியில் குடும்பம் குடும்பமாய் இவர்கள் சீரழித்துக்கொண்டிருப்பது கண்ணுக்குத் தெரிந்திருந்தபோதிலும், இவ்வூழல்வாதி திருதராஷ்ட்ரன் கருணாநிதிக்கு, திருவாரூர் வாக்காளர்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வோட்டைப்போட்டு வெற்றிபெறப் செய்திருப்பதும், துச்சாதனன் ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங்கின் மூலம் வோட்டைப்பிரித்து வெற்றியடையும் அளவுக்கு, எழுபதாயிரத்துக்கு மேல் வாக்குகள் பெற்று கொக்கரித்ததையும் பார்த்தால், தன்மானத் தமிழர்கள், எய்தவர்களை வெற்றியடையச் செய்து, அம்புகளை மட்டுமே புறக்கணித்து உள்ளார்கள். இப்படிப்பட்ட கருணாநிதியை, ஸ்டாலினை வெற்றி அடையச் செய்ததனால், இனி திருவாரூர், ஊழலூர் 1 என்றும், கொளத்தூர், ஊழலூர் 2 என்றும் அழைக்கப்படவேண்டும்.

 3. ஆளும் நாயகனாம் ஆதியை நீக்கி ஒரு
  வேள்வி செய்தக்கன் வலியழி வீரபத்திரன்
  நீள் அறம் காத்திட இன்னும் நீர்சூழுலகில்
  வாள் கொண்டு நிற்கிறான் வணங்கி போற்றுவம்

  கூடா இரணியனைக் கூறுகிரால் மார்விடந்த
  ஓடா அடலரியை உம்பரார் கோமானை
  தோடா நறுந்துழாய் மார்வனை ஆர்வத்தால்
  பாடாதார் பாட்டெல்லாம் பாட்டல்ல கேட்டாமே

 4. இந்தத் தேர்தலில் சில நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. ஈவேரா, அண்ணா போன்றவர்கள் உருவாக்கி வளர்த்த பொய்கள் புரட்டுகள் திமுகவின் அழிவோடு முழுமையாய் மறையும். அரும்பு மீசை, பானை வயிறு அரசியல்வாதிகள் வழக்கொழியும் நேரம் இது. அதிமுக கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் கழக அடையாளங்களையும் அடுத்த 5 வருடங்களில் உதிர்த்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. இத்தேர்தலில் வெளிப்பட்ட, இளைஞர்களின் உள்ளார்ந்த ஊழலுக்கு எதிரான, இந்திய தேசிய உணர்வோட்டத்தை இந்து/பாரதக் காரசார மறுமலர்ச்சியின் தொடக்கம் என்றே உணர்க.

 5. -தன்மானத் தமிழன்- கூறியது தினமணி.
  தினமணிக்கு தமிழன் எந்த விடயத்தில் மிக பலகீனமானவன் என்பது சரியாகவே தெரிந்திருக்கிறது.அவதானமாக இருக்க வேண்டும். அல்லது தன்மானத் தமிழன் என்று சொல்லியே உள்ளதை எல்லாம் உருவி நடுத் தெருவில் நிறுத்தி விடுவார்கள். அனுபவத்தில் சொல்கிறேன்.

 6. தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!

 7. இந்த தளத்தில் வேறு விவாதங்களில் தமிழன் பணம் பெற்றுக் கொண்டு வாக்கு மாறக்கொடுமோ என ஐயம் தெரிவித்திருந்தேன். ஆனால் தமிழன் கழகத்திற்கு யாரும் நினைத்துப் பார்க்காத அதிர்சியளித்தான். என் அனுமானத்திர்காக மனம் நிறைந்த மன்னிப்பைக் கோருகிறேன். தமிழனிற்கு மேலும் ஒரு விண்ணப்பம். கழகத்தைக் கழற்றிவிட்டு காங்கிரஸ் புனிதர் வேடம் போட முயலும். அதையும் அதிர்ச்சியுறச் செய்ய வேண்டும்.

  தா கி கொலை, தினகரன் தீ, ராசா பலி போன்று தன் தசையையே தின்னும் மிருகமாக தி மு க தலைமை எத்தனை நாள் இருக்கும். உடன் பிறப்புகள் சிந்திப்பார்களா?

  இனி பயமில்லை ரஜினியை மருத்துவமனையிலிருந்து வெளிவரச் சொல்லுங்கள்.

 8. திரு மயூரகிரி சர்மா அவர்களே,

  தேர்தலில் அசுர சக்திகள் தொர்கடிக்கப்பட்டதைக் கூறுவதற்குத் தகுந்த வரிகள். நன்றி…

  // கூடா இரணியனைக் கூறுகிரால் மார்விடந்த
  ஓடா அடலரியை உம்பரார் கோமானை
  தோடா நறுந்துழாய் மார்வனை ஆர்வத்தால்
  பாடாதார் பாட்டெல்லாம் பாட்டல்ல கேட்டாமே //

  அனைவருக்கும் நரசிம்ம ஜயந்தி (இன்று மே 16) தின வாழ்த்துக்கள். பெருமாளை அவதூறு செய்வதில் முதல்வராக விளங்கிய ஹிரண்யகசிபு கோஷ்டியினர் இன்று பதவியிலிருந்து நீங்குவது சனாதன தருமத்திற்கு ஒரு symbolic victory.

 9. நம் மக்கள் தேர்தலில் அப்போது உள்ள தீய சக்திகளில் , ரொம்ப தீய சக்தி எது என்று பார்த்து வடிகட்டி தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இதை விட இப்போது பெட்டர் ஆப்ஷன் இல்லை என்ற சூழலிலேயே அவர்களது தேர்வு அமைகிறது.

  கருணா இந்த தேர்தலில் பல தவறுகளை செய்து பலியானார் .

  ஒன்று: மகன்களை ராவணன், கும்பகர்ணன் போல இருங்கள் என்று சொல்லி வாழ்த்தினார். இது ஒரு கெட்ட நிமித்தம்.

  இரண்டு:- கனியை சி பி ஐ விசாரித்து கொண்டிருந்தபோது , அதே நாளில் அதே சமயம் மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஜப்பானில் ஏற்பட்டு , பல ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாணின. இது இரண்டாவது கெட்ட நிமித்தம்.

  மூன்று: இரண்டு ஜி ஊழலில் தொடர்புடைய ஏதோவொரு பாட்சா தேர்தலுக்கு முன்பே துர்மரணம் அடைந்தார். இது மூன்றாவதாக ஒரு கெட்ட நிமித்தம்.

  நான்கு:- அதே இரண்டு ஜி ஊழலில் சாட்சியான ராசாவின் உறவினர் தீபக் புஷ்பநாதன் என்பவர் தேர்தலுக்கு முன்பாக திடீர் மரணம் அடைந்தார்.இது நான்காவதாக ஒரு தீய நிமித்தம்.

  ஐந்து:- தேர்தலில் எந்த ஆளுங்கட்சி அரசியல்வாதியும் தாங்கள் செய்த நல்லவற்றை மட்டும் சொல்லி, தவறுகளை மூடி மறைப்பர். இதுவே வழக்கம். எதிர்க்கட்சியினர் தான் ஆளுங்கட்சியினர் செய்த தவறுகளை பட்டியலிடுவது வழக்கம். ஆனால் கலைஞரோ தன் மகள் இரண்டு ஜி கனிமொழியை திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய அனுப்பி, மக்களுக்கு இரண்டு ஜி யை , தேர்தல் காலத்தில் தினசரி நினைவூட்டி வந்தார். கனி பிரச்சாரம் செய்யாமல் இருந்திருந்தால், இந்த அளவுக்கு பெரிய தோல்வியை தடுத்திருக்கலாம். கலைஞரே திமுகவுக்கு எதிராக செயல்பட்டு விட்டார் என்பதே உண்மை. கனியின் பிரச்சாரம் ஐந்தாவது தீய நிமித்தம். சில பத்திரிகைகளில், ( புலனாய்வு) கலைஞர் தன்னுடைய பேரன்களிடம் பேசி , தேர்தல் முடியும் வரை, அவர்கள் தயாரித்த திரைப்படங்களை வெளியிடவோ, மீடியாவில் விளம்பரம் கொடுக்கவோ வேண்டாம் என்று அறிவுரை வழங்கியதாக செய்தி வந்தது. அவ்வளவு புத்திசாலி தனமாக செயல்பட்ட பெரியவர், கனியை மட்டும் பிரச்சாரத்திற்கு எப்படி அனுப்பினார் என்று தெரியவில்லை. கனி பேசிய கூட்டங்களை பார்க்க வந்தவர்கள், இந்த அம்மாதானா இரண்டுஜி வழக்கில் சம்பந்தப்பட்டது என்று தான் பேசினார்கள். பெரியவருக்கு இது தேவையா ?

  ஆறு:- சித்திரை புத்தாண்டை பொங்கல் விழாவன்று கொண்டாடவேண்டும் என்று சொல்லி குழப்பம் ஏற்படுத்தினார். இது ஆறாவது கெட்ட நிமித்தம்.

  ஏழு:- தமிழக மேல்சபை என்பது வெட்டிச்செலவு என்று , கம்யூனிஸ்டுகள் உட்பட பலரும் ஒத்துக்கொண்டு , எம்ஜிஆரால் ஒழிக்கப்பட்ட விஷயம். இந்தியாவில் சில மாநிலங்களில் தான் மேல்சபை உள்ளது. தமிழகத்தை விட பெரிய பெரிய மாநிலங்கள் பலவற்றில் , மேல்சபை கிடையாது. மேல்சபை உள்ள பல மாநிலங்களும் , அதை எடுத்துவிடலாமா என்று பரிசீலனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில்,

  எம் ஜி ஆருக்கு எதிராக பல காரியங்களை செய்வதாக எண்ணிக்கொண்டு, எம் ஜி ஆர் ஒழித்த , மேல்சபையை மீண்டும் கொண்டுவருவதற்கு, கருணா அவர்கள் முயன்று , இந்த முறையும் தோல்வி அடைந்தார். மேல்சபையை கொண்டுவரும் முயற்சிக்கு பதிலாக மின்சார உற்பத்தியை பெருக்க , முயற்சி எடுத்திருந்தால், கருணா இன்னும் ஐம்பது தொகுதிகள் கூடுதலாக கிடைத்திருக்கும். மேல் சபையை திரும்ப கொண்டுவர எடுத்த முயற்சி , ஏழாவது கெட்ட நிமித்தம்.

  எட்டு:- காமராஜர், மொரார்ஜி, வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் கால காங்கிரசு வேறு, இன்றைய காங்கிரசு வேறு. இன்றைய காங்கிரசு ஒரு வர்த்தக ஸ்தாபனம். அது ஒரு டுபாக்கூர் பார்ட்டி. காங்கிரசுடன் கூட்டணி வைக்காது அந்த அறுபத்து மூன்றிலும், திமுகவே போட்டி போட்டிருந்தால் , திமுக இன்னும் கூடுதலாக சில சீட்டுகளை பிடித்திருக்கும். காங்கிரசு என்ற விஷத்தை குடித்து , இன்று உயிருக்கு மன்றாடும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது.

  ஒன்பது:- விலைவாசி உயர்வுக்கு மாநில அரசு பொறுப்பாகாது. ஆனால் மத்திய அரசிலும் திமுக குடும்பமே பல அமைச்சர்களை பெற்றிருப்பதால், விலை வாசி உயர்வுக்கும் இவர்கள் பொறுப்பு ஏற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. அதுவே இந்த தேர்தலில் ஒரு அலையாக இவர்களை விழுங்கிவிட்டது.

  பத்தாவது:- இலங்கையில், சிவிலியன் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் , சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டபோது, அவர்களை காப்பாற்ற , இவர் வாயை திறக்காமல், தன்னுடைய குடும்ப வியாபாரத்தை மட்டும் பார்த்து, மௌனம் காத்தார். அந்த துரோகம் திமுகவை சாய்த்துவிட்டது.

 10. 1991-ADMK, 1996-DMK, 2001-ADMK, 2006-DMK, 2011-ADMK, 2016-no marks for guessing.
  It is just anti incumbency wave that is sweeping and nothing else.

 11. I think the congress must be congratulated in this election?

  The reason?

  They wanted the DMK to lose. They “allowed” the election commission to function freely & stop the flow of money.

  Now, Sonia has congratulated jaya & even invited her for lunch next month.

  She has never done this to any opposition leader or CM before.

  Why now?

  Something is cooking.

  I feel congress will take the help of Jaya & ditch the DMK.

 12. பாடல் : மு.கருணா நிதி

  படம் : மறக்க முடியுமா ?
  குரல் : சுசீலா
  இசை : ராமமூர்த்தி

  காகித ஓடம் கடல் அலை மீது
  போவது போலே மூவரும் போவோம் (மூவரும்=karunanidhi, azhagiri, staalin )
  ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் ( DMK lost support of congress)
  அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

  கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
  தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான் ( azhagiri )
  காலமும் பார்த்து நேரமும் பார்த்து
  வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

  காகித ஓடம் கடல் அலை மீது
  போவது போலே மூவரும் போவோம்
  ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
  அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

  அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை ( MLAs)
  ஆறுதல் வழங்க யாருமே இல்லை ( Jaffer Sait )
  ஏழைகள் வாழ இடமே இல்லை ( DMK purchased all land in Tamilnadu)
  ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

  காகித ஓடம் கடல் அலை மீது
  போவது போலே மூவரும் போவோம்
  ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
  அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

  தாயின் மடியும் நிலைத்திடவில்லை
  தந்தையின் நிழலும் காத்திடவில்லை ( Kanimozhi worries)
  ஆறிலும் சாவு நூறிலும் சாவு ( For Tha. Krishnan, Batcha, Dinakaran workers,Leelavathi)
  அம்மா எங்களை அழைத்திடு தாயே (Soniya )

  காகித ஓடம் கடல் அலை மீது
  போவது போலே மூவரும் போவோம்
  ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
  அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

 13. இந்துக்கள் சமய
  அறிவு பெறவும், அரசியல் விழிப்புணர
  ்வு பெறவும்
  https://
  hindu.friendhood.net
  என்ற
  இணையதளத்தை நான் தொடங்கியுள்ளேன்.
  இந்த இணையதளத்தையும், என்
  எழுத்து பணியையும் ஊக்குவிக்க
  ுமாறு உங்களை அன்புடன் கோட்டுக்கொ
  ள்கிறன். உங்கள் நட்பும் வட்டாரத்தில் நம்
  இணையதளத்தை பற்றி கூறுமாறும்
  அன்புடன் என் இந்து உறவுகளைக்
  கேட்டுக்கொள்கிறேன்.
  -தர்ம சக்தி.

 14. Latest news of https://hindu.friendhood.net website:

  * சமய விளக்கம்: விபூதி எளிய விளக்கம்.

  * அரசியல் விழிப்புணர்வு: சுதந்திரம் வந்துவிட்டதா? பகுதி-1 & பகுதி-2

  * சிந்தனை செய்: லட்சியம் அமைப்போம்.

  * பாடல்: இந்த நாடு இந்து நாடு…

  NOTE:-
  Plz forward this msg in ur friend circle.
  https://hindu.friendhood.net
  – தர்ம சக்தி.
  பாரத் மாதா கீ ஜெய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *