இது ஒரு வரலாற்றுத் தவறு

ண்மையில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து வெளிவந்த ஆர்.எஸ்.எஸ் தீர்மானமும் சரி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துந்துபியான ஆர்கனைசர் இதழில் வந்த கட்டுரையும் சரி, மோசமான நிலைபாடுகள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஒரு இந்துத்துவ ஆதரவாளன் என்ற முறையிலும் இந்த நிலைப்பாட்டைக் கண்டிக்க எனக்குத் தய்க்கம் இல்லை.

அமெரிக்கா விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருந்த நாடு. இன்று அது இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறது. இதில் கட்டாயமாக அமெரிக்காவுக்கு ஆதாயங்கள் இருக்கும். இதில் நிச்சயமாக இலங்கையை சில சொந்த ஆதாயங்களுக்காக கையை முறுக்கும் அமெரிக்க திமிர் இருக்கும். இதெல்லாம் உண்மையே. இலங்கை பிரச்சனையில் இந்தியா தன்னைத் தானே ஒரு மிக மோசமான நிலையில் வைத்துக் கொண்டுள்ளது. இலங்கையை தாஜா செய்தே போவதுதான் ராஜ தந்திரம் என்பது பல இந்திய அரசியல்வாதிகளுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும் கொள்கையாக உள்ளது. எந்த தாஜா செய்யும் போக்கையும் போல, தார்மிக அடிப்படையற்ற தாஜா செய்யும் போக்கு இந்தியாவுக்கு எதிராகவே முடியும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் தேவைப்பட்டால், இலங்கையிடம் இந்தியா காட்டும் குழைவு ஒரு எடுத்துக்காட்டு.

இலங்கையில் இந்தியாவின் முதல் கடமை அங்கு வாழும் தமிழ் மக்களுக்கே ஆகும். அவர்களின் வாழ்வுரிமையை காப்பாற்ற வேண்டிய தார்மிகக் கடமை இந்தியாவுக்கு உண்டு. சீக்கிய இனப் படுகொலையை நியாயப்படுத்திய ’போபர்ஸ் புகழ்’ ராசீவ்காந்தியின் கொலையையும், அதனால் தமிழக மக்களிடையே ஏற்பட்ட பெரும் உணர்ச்சிகர குற்ற மனப்பான்மையையும் பயன்படுத்தி இலங்கை அரசு இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் இந்தியாவை பின்னடைய செய்தது. அதன் விளைவு நார்வே போன்ற நாடுகளின் தலையீடு. விடுதலை புலிகளின் ஏகபோக தமிழ் பிரதிநிதித்துவம். சிங்கள தேசியவாதம் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கவும் அடிமைப்படுத்தவும் வேண்டிய வசதியை நோக்கி நிகழ்வுகள் வேகமாக சென்றன.

ஆம், விடுதலை புலிகள் மிக மோசமான குற்றங்களை செய்திருக்கிறார்கள். இன்றைய ஈழத்தமிழர் பேரழிவில் அவர்களின் பங்கு மிகக் கணிசமானது. இழந்த உயிர்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஜனநாயக தமிழ் தலைமையை அழித்தொழித்து ஒரு சமுதாயத்தையே சிங்கள பெரும் தேசியவாதம் என்கிற ரத்தவெறி பிடித்த மிருகத்திடம் அவர்கள் ஒப்படைத்தார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகளின் எந்த கொடுஞ்செயலும் இலங்கை ராணுவத்தின் அக்கிரமத்தை நியாயப்படுத்திவிட முடியாது. அதனளவில் அவை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டியவை. இக்கண்டனத்தை உலக அரங்குகளில் அல்லது குறைந்த பட்சம் ஒரு அவசர சார்க் மாநாட்டிலாவது எழுப்பியிருந்திருக்க வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. இதைக் குறித்து ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் குறிப்பிட்டிருந்தால், ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலைப்பாடு அமெரிக்காவின் இந்த உள்நோக்கம் கொண்ட பெரியண்ணன் தீர்மானத்தை கேள்வி கேட்பதில் ஒரு குறைந்த பட்ச தார்மிக உள்ளீட்டைக் கொண்டதாக இருந்திருக்கும். ஆனால் அதை ஆர்.எஸ்.எஸ் செய்யவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

இலங்கை ராணுவம் செய்தது மனிதகுலத்துக்கு எதிரான குற்றம். அந்தக் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கேவலப் படுத்தப்பட்ட நம் சகோதர சகோதரிகளின் உடல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பத்து வயது சிறுவனின் நெஞ்சில் ஐந்து முறை குண்டை பாய்ச்சும் அளவுக்கு மனிதம் இறந்துவிட்ட அந்த விலங்கின் முகம் மானுட சமுதாயத்துக்கு காட்டப்பட வேண்டும். அதன் மூளையாக இயங்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை இந்தியா முதல்நாடாக கண்டித்திருக்க வேண்டும். அந்த கண்டனத்தை ஆர்.எஸ்.எஸ் எழுப்பியிருக்க வேண்டும்.

ஆர்கனைசர் வெளியிட்ட கட்டுரை அபத்தங்களின் உச்சகட்ட தொகுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஜிப்ஸிகளுக்கு எதிரான மானுட உரிமை மீறல்கள், மலேசிய தமிழ் ஹிந்துக்களுக்கு எதிரான மானுட உரிமை மீறல்கள் ஆகியவற்றில் இந்தியா பாராமுகமாக உள்ளது என்கிற உண்மையை இப்போது சுட்டுகிறது அக்கட்டுரை. உண்மையில் அவர்களும் இலங்கைத் தமிழர் செல்லும் பாதையில் பயணிப்பவர்களே என்பதை ஏனோ வசதியாக மறந்துவிடுகிறது.

ஆனால் இதை மட்டும் வைத்துக் கொண்டு ஆர் எஸ் எஸ்ஸை வசைபாடுபவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். போரில் தமிழர்கள் அனைத்தும் இழந்து அல்லலுற்ற சமயம், தமிழகத்தில் அறிக்கை நாடகங்களிலும் ஆரவார ஆர்ப்பாட்டங்களிலுமே பெரும்பாலான அரசியல் குழுக்கள் மூழ்கியிருந்த போது, களத்தில் இறங்கி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது ஆர். எஸ்.எஸ். இன்றும் இலங்கையின் பல தமிழ்ப் பகுதிகளில் ஆர் எஸ் எஸ் மற்றும் அதனைச் சார்ந்த சர்வதேச இந்து இயக்கங்களின் சேவைப் பணிகள் தொடர்கின்றன.

சேவைப் பணிகளை செய்வதில் காட்டும் அந்த பரிந்துணர்வை தனது நிலைப்பாட்டிலும் ஆர்.எஸ்.எஸ். காண்பிக்க வேண்டாமா? இறுதியாக, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலைப்பாடு எடுக்க வேண்டுமென ஆர்கனைசர் சொல்கிறது. இந்த வரலாற்றுக் குற்றத்துக்கு இந்து அமைப்புகள் கொடுக்கப் போகும் விலை மிகவும் கசப்பானதாக அமையும் என்பதில் ஐயமில்லை. அமெரிக்கா யோக்கியனல்ல. ஆனால் இலங்கை செய்திருப்பது கொடுங்குற்றம். கொல்லப்பட்டது நம் ரத்த சொந்தங்கள். நம் பண்பாட்டு இழையின் முக்கிய அங்கங்கள். அவர்களை காப்பாற்ற நாம் தவறினோம் – ஒரு ராசீவ் காந்தியின் பெயரை சொல்லி. அவர்களை மிக மோசமான ஒரு கொடுமைக்கு பலி கொடுத்திருக்கிறோம் என்பதையும் நாம் அறிவோம். அது எத்தகைய கொடூரம் என்பது இப்போது நம் இதய ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு வெளிவந்துள்ளது. இத்தகைய தருணத்தில் நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்த ஒரு நீத்தார் கடனையாவது செய்ய வேண்டும்.

அதுதான் ஹிந்து பண்பாடு. அதுவே ஹிந்துவின் கடமை. ஹிந்துஸ்தானத்தின் கடப்பாடு.

*******

(திரு. நா.சடகோபன், ஆர்.எஸ்.எஸ். தமிழக பிரசார அணிப் பொறுப்பாளர் அவர்கள் நமக்கு அனுப்பிய ஆங்கில அறிக்கை நகலைக் கீழே அளிக்கிறோம் – ஆசிரியர் குழு).

இலங்கைத் தமிழர் பிரசினை குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை:

84 Replies to “இது ஒரு வரலாற்றுத் தவறு”

 1. என்ன இருந்தாலும் பௌத்தம் கருணை மார்க்கம் அல்லவா ? சமத்துவம் என்பது அந்த மதத்தில் மட்டும்தானே இருக்கிறது ?

  சாதி மத இன வேறுபாடுகள் பாராட்டாமல் எல்லாருக்கும் சமத்துவம் வழங்கும் பௌத்தம் என்று அதைத் தீர்வாகச் சொல்லும் ரோசாக்களைத் தேடும் வசந்தகால மனிதர்கள் இங்கு உண்டு.

  அப்படிபட்ட பௌத்தம் அப்பாவித் தமிழர்களைக் கொல்லாமல் கருணையோடு நடத்தியதாக, இனியும் அவர்களுக்கு நன்மை செய்யப் போவதாக ஆர்.எஸ்.எஸ். நம்புவதில் என்ன தவறு ?

  யுத்தம் சரணம் கச்சாமி ! பொய்மை சரணம் கச்சாமி ! ரேஸிசம் சரணம் கச்சாமி !

  :))))))

  .

 2. ராஜீவ் காந்தி கொலை என்று சொல்ல முடியாது, ராஜீவ் காந்திக்கு கொடுக்கப்பட்டது அவர் செய்த பெரும் துரோகத்துக்கு, அவர் செய்த தவறுகளால் நடந்த பெருங்குற்றங்களுக்கு ஒரு கடுமை குறைந்த தண்டனை மட்டுமே. ஆனால் ஆதாயமற்ற அந்த அரசியல் தவறால் தமிழர் மிகப்பெரும் அழிவைச் சந்தித்தனர்.

  இப்போது ஆர். எஸ். எஸ் செய்திருப்பதும் வரலாற்றுக் குற்றம். ஒரு பக்கம் இலங்கையில் தமிழ் முஸ்லீம்கள் தாங்கள் தமிழர்கள் அல்லர், முஸ்லீம்கள் மட்டுமே என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு, தமிழர்கள் முஸ்லீம்களைக் கொல்வதாக போட்டோ ஆதாரம் திரட்டி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பாகிஸ்தான், பங்களா தேஷ், போன்ற இஸ்லாமிய நாடுகளிடம் ஜிஹாதி கோரிய நாள்களிளெல்லாம் கூட, தமிழ்நாட்டில் தமிழ்ப் பற்றாளர்கள் போல், தமிழ்க் காவலர்கள் போல் வேஷம் போட்டுகொண்டிருந்தனர். கருணாநிதியும் அவர்களுக்கு நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார். ஆனால் ஆர். எஸ். எஸ் நேரெதிராக அங்கே தமிழர்களுக்கு களத்தில் இறங்கிப் பணி செய்துவிட்டு, இங்கே முட்டாள்தனமான அறிக்கைகளை கொடுத்துக் கொடுப்பது மிக வருத்தமளிக்கிறது. அதுவும் நொந்து போய், நொடிந்து போய், நோய் வந்து துன்பத்தில் இருக்கும் மக்களை கிறிஸ்தவ மதமாற்றக் கழுகுகள் சுற்றிவரும் வேளையில்.

  தரவுகள்:
  https://www.lankanewspapers.com/news/2007/8/18217_space.html
  https://www.flickr.com/photos/39219599@N00/
  https://www.slmc.org.uk/thrmus1.htm
  https://www.slmc.org.uk/rights.htm

 3. இந்த கட்டுரையை நான் ஹிந்து தமிழனாக சில நாட்களாக எதிர்பார்த்தேன்.ஆர் .எஸ்.எஸ் ஆர்கனைசெர் கட்டுரை மிகவும் வருத்தமளிக்கிறது, இதே போல காரைக்காலில் ஆர்.எஸ்.எஸ் என் vigil பேச்சாளர் பொது நிகழ்ச்சியில் பேசிய பதில் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது மனித நீதியா, வெறுப்பா ஏன்? சங்க ஆதரவு தருவது வருத்தம் அளிக்கிறது.

 4. சிங்கள இனவெறி அரசை ஆதரிக்கும் RSS-ன் இந்த நிலைப்பாட்டால் ஈழத் தமிழ் ஹிந்துக்களும், தமிழகம் உள்ளிட்ட உலகமுழுதும் உள்ள தமிழ் ஹிந்துக்களும் அதிர்ச்சியடைந்து, அன்னியப்படுவார்கள். அரவிந்தன் நீலகண்டன் சுட்டிக்காட்டும் வரலாற்றுத் தவறை RSS திருத்தாவிட்டால் தமிழ் ஹிந்துக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரும்.

 5. எல்லா அரசியல் தளங்கலிலும், தென்னிந்திரைக்கண்டு ஒரு எளப்பம். அதிலும் தமிழனைக் கண்டால், எளப்பம். இந்திய துணைக்கண்டத்தில் அவன் ஒரு பொருட்டே இல்லை. இது ;போல்தான் வட இந்தியர் மொத்தமும், வட கிழக்குப் பிரதேசத்த்னரையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதை நான் வடகிழக்குப் பகுதியினர் அதிகம் காணப்படும் ஜவஹர்லால் யுனிவெர்சிடி யிலும் பார்த்திருக்கிறேன்.

  இந்த எளப்பம் ஆர்.எஸ்.எஸ்.ஸிலும் பா.ஜ.கா தலைமையிலும் காணப்படுகிறது. ஏன்? பா.ஜ.க. வோ ஆர்.எஸ்.எஸ்ஸோ தமிழ் நாட்டில் பலமற்று இருப்பதினாலா? இது காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் பொருந்து. தமிழ் நாட்டில் இவை எதுவும் சொல்லக்கூடிய பலத்தில் இல்லை. சக்திவாய்ந்த தலைவர்களும் இல்லை.

  இலங்கைத் தமிழர் பற்றி, இந்தியத் தலைமைக்கு என்றும் கவலை இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. இந்திரா காந்தி காலத்தைத் தவிர. ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனாவால் மிக மோசமாக ஏமாற்றப்பட்டார். இப்போதும் ராஜபக்சே எவ்வளவு தந்திரசாலியாக சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டி பயமுறுத்தியே தன் காரியங்களை எவ்வளவு சுலபமாக சாத்தித்துக்கொள்ள முடிகிறது அவரால்.
  அமெரிக்காவை எவ்வளவு துச்சமாக அலட்சியம் செய்யமுடிகிறது அவரால். எதிர்கால வல்லரசாகக் கனவு காணும் ஒரு நாட்டில் பிரதம மந்திரி “We Indians
  Love you Sir என்று அசடு வழிய சிரிக்க முடிகிறது.

  என்ன கத்தி என்ன? இப்படித்தான் இனியும் தொடர்ந்து நடக்கப் போகிறது.

 6. அரவிந்தன் சார் எங்கள் மனதில் உள்ளதை நீங்கள் அழகான வார்த்தைகளால் எழுதி விட்டீர்கள் . இன்னமும் தமிழ் இந்துக்கள் என்றால் இரண்டாம் குடியுரிமை தானோ?
  இதுவரை எனக்கு நான் ஒரு தமிழன் என்ற உணர்வு வந்தது கிடையாது ஆனால் இப்போது வந்துவிடுமோ என தோன்றுகிறது.

 7. இலங்கைப் பிரச்சனையை சம்பந்தமாக ஆர்கனைசர் ஆங்கில வார இதழில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் அவ்வார இதழ் ஆசிரியரின் கருத்தாகும். அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூவமான நிலைப்பாடு அல்ல.

  ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகிற வாராந்திர, மாதாந்திர, தினசரிப் பத்திரிக்கைகள் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வந்து கொண்டிருக்கிறது. அவைகளில் வருகின்ற, செய்திகள், கட்டுரைகள், கருத்துக்கள் அதிகார பூர்வமான ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடுகளை எடுத்துரைப்பவை அல்ல.

  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயற்குழு (காரியகாரிணி), பொதுக்குழு (பிரதிநிதி சபை) போன்றவற்றில் விவாதித்து நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்கள் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ நிலைப்பாடாகும்.

  அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதத் தலைவர், அகில பாரத பொதுச் செயலாளர், அகில பாரத பிரசார அணிப் பொறுப்பாளர் போன்றவர்கள் அவ்வப்போது எழுகின்ற பிரச்சனைகள் பற்றி ஊடகங்களுக்கு அளிக்கின்ற பேட்டியும், கருத்துக்கள் மட்டும்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வமான நிலைப்பாடுகளை எடுத்துரைக்கும். மற்றபடி ஆர்.எஸ்.எஸ். இயத்தினர்களால் நடத்தப்பட்டு வருகின்ற பத்திரிக்கைகளில் வருகின்ற செய்திகள், கட்டுரைகள், கருத்துக்கள் அனைத்தும் அந்தந்த ஆசிரியர்களின் கருத்தே ஆகும்.

  அதுபோன்றுதான் இலங்கை பிரச்சனையை பற்றி தற்போது ஆர்கனைசரில் எழுதப்பட்டுள்ள தலையங்கமும் அந்த வார இதழ் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தாகும்.

  இலங்கை தமிழர்கள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு பற்றி ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத பொதுச் செயலாளர் திரு.சுரேஷ் ஜோஷி அவர்கள் அளித்துள்ள அறிக்கை இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

  இப்படிக்கு

  நா.சடகோபன்
  தமிழக பிரசார அணிப் பொறுப்பாளர்
  ஆர்.எஸ்.எஸ்.

 8. திரு. நா.சடகோபன் அவர்களுக்கு நன்றி.

  அவர் அனுப்பியிருந்த அறிக்கை நகலைக் கட்டுரையின் இறுதியில் இணைப்பாகக் கொடுத்துள்ளோம்.

 9. இந்தப் பதிவு தமிழ்ப் பிரிவினைகளுக்கு ஊக்கமாய் அமையும் என்பதை இந்தப் பின்னூட்டம் உறுதிப் படுத்துகிறது.

  //v.ganessan on March 21, 2012 at 4:46 pm
  அரவிந்தன் சார் எங்கள் மனதில் உள்ளதை நீங்கள் அழகான வார்த்தைகளால் எழுதி விட்டீர்கள் . இன்னமும் தமிழ் இந்துக்கள் என்றால் இரண்டாம் குடியுரிமை தானோ? இதுவரை எனக்கு நான் ஒரு தமிழன் என்ற உணர்வு வந்தது கிடையாது ஆனால் இப்போது வந்துவிடுமோ என தோன்றுகிறது.//

 10. “விடுதலைப் புலிகளின் எந்த கொடுஞ்செயலும் இலங்கை ராணுவத்தின் அக்கிரமத்தை நியாயப்படுத்திவிட முடியாது” என்பது நியாயமான வார்த்தைதான் ஆனாலும் விடுதலைப் புலிகளின் எந்த கொடுஞ்செயலும் என்பது சாதரணமானது இல்லை இளம் பெண்களை மனித வெடிகுண்டாக்குவது அதவும் 2006 ல் நடந்த ஒரு தாக்குதலை தின தந்தி வரலாற்று சுவடுகளில் படித்தபோது மனித நாகரிகத்தின் உச்ச பச்ச காட்டுமிராண்டித்தனம் என்றே பட்டது. புலிகளுக்கு அப்போது இருந்த சர்வதேச பணம் அவர்கள் கண்ணை மறைத்தது சில ஐரோப்பிய நாடுகள் தெற்கு ஆசியாவில் கள்ள ஆயுத சந்தைக்கு தோதாக போனது இன்று அந்த சந்தை பறிபோனதில் கோபம் தெரிகிறது இந்திய வெளியுறவு அதிகாரிகள் குறட்டையில் இருந்தார்கள் வெளியுறவு கொள்கையில் தீர்க்கமான கொள்கை இல்லை மேலும் இப்போது இலங்கையை நாமே மிரட்டமுடியும் இலங்கை வாழ் வம்சாவளி தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுத்து தலையிடமுடியும் வெட்டியாக அமெரிக்கா பின்னாடி நிற்கவேண்டிய அவசியமில்லை அமெரிக்கா நம் பக்கத்தில் பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் தலையிட்டு என்ன நடத்துகொண்டிருக்கிறது .மேலும் வேடிக்கை என்னவென்றால் இலங்கையின் இடதுசாரி கச்சி ஜனதா விமுக்தி பெறுமுன என்ற சிங்கள இனவாத கச்சி இலங்கையை ஆதரிக்கும் சீனா பக்கா கம்யுனிஸ்ட் அனால் நம்மூர் இடதுசாரிகள் அசத்துகிறார்கள் பாவம் இலங்கை தமிழர்கள்

 11. விடுதலைப் புலிகள் என்னவோ நிராயுதபானி போலவும் மக்களைக் காக்கவே அவதாரம் புரிந்தவர்கள் போலவும் பரிந்து கொண்டு வருவது நல்லதல்ல. ஆர் எஸ் எஸ் எடுத்த முடிவு மட்டுமல்ல இது போன்ற விஷயங்களில் இலங்கைக்கெதிராக பேசுவது மட்டுமல்ல, இந்தியாவின் இந்த எல்லையில் இருந்து கொண்டு இலங்கையில் வாழும் சிங்களர்களுக்கு தமிழர்கள் மேல் மேலும் மேலும் ஆத்திரம் வரும் படியும், நம்பகமற்ற சந்தேகப் பார்வை மட்டுமே உண்டாகும்படியுமான ஒரு பிரிவினையை ஏற்படுத்தாமல் அமைதிகாப்பதே இப்பொழுதைய சூழ்நிலைக்கு சரியானதாகும். இலங்கையில் புணர்நிர்மானத்திற்குத் தேவையான விஷயங்களை மேற்கொண்டு நடத்தவும், தமிழர்கள் பழையபடி அமைதியாக வாழவும் வழி செய்யும் வகையில் பேசுவதும் எழுதுவதும் மட்டுமே சிறப்பு. எல்லைக்கப்பால் இலங்கையில் சென்று பார்க்காமல் இந்தியாவில் இருந்து கொண்டே உதார் விடுவதெல்லாம் தேவையில்லாத வேலை! சென்னை ஆன்மீக கண்காட்சியில் ஒரு இலங்கைத் தமிழ் இளைஞரைச் சந்தித்தேன், அவர் என்னிடம் சொன்னது, அவர் பெற்றோர்கள் யாழ்பாணத்தில் வாழ்கிறார்கள். போர்காலத்தில் கொஞ்சம் டென்ஷன் இருந்தாலும் இப்போது ‘கூலாக’அமைதியான வாழ்க்கையே அங்கு வாழ்கிறார்கள். அங்கே எதுவும் பிரச்சனை இல்லை என்றும் கூறினார். இலங்கையை சொந்த நாடாகக்கொண்டு அங்கேயே பெற்றோர்களை விட்டு விட்டு வந்தவரே எந்த பதட்டமும் இல்லாமல் நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம் என்று சொல்லும் போது தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு நாம் ராஜபக்ஷேவை அவமதித்து இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் துன்பம் உண்டாகுமாறு செய்ய வேண்டுமா என்ன?

  துடிக்கிறது புஜம் என்று போர்காலத்தில் முழங்கிய திருமாவளவனே ராஜபக்ஷேவைப் பார்த்தவுடன் பல்லைக்காட்டி மண்டியிட்டு வந்ததை மறந்து விட்டீர்களா என்ன? முடிந்தால் எல்லை தாண்டிச் சென்று தமிழர்களுக்கு நேரடியாக உதவுங்கள், இல்லையேல் அவரவர் வேலையைப் பாருங்கள்! இலங்கையில் ஹிந்துக்களுக்கு அருகிருந்து உதவுவதும் ஆர் எஸ் எஸ் தான் என்பதை மறக்காதீர்கள்!

 12. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலியுருத்துவது இந்தக்கொடுங்கனவு இனியும் தொடர வேண்டாமே என்ற எண்ணத்தில் தான் இருக்கும்.ஆனால் தவறு என்பது நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..முதலில் இந்த அமெரிக்க தீர்மானமே ஒரு போலியான ஏற்பாடு.அமெரிக்காவின் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு இருப்பது llrc யின் அடிப்படையில்,https://en.wikipedia.org/wiki/Report_of_the_Secretary-General%27s_Panel_of_Experts_on_Accountability_in_Sri_Lanka
  llrc யின் குற்றச்சாட்டுகள் மிகவும் மேலோட்டமானவையும்,இலங்கை அரசுக்கு சாதகமானதும் ஆகும்.llrc அறிக்கையில் சொல்லியதை விட ஆயிரம் மடங்கு கொடுரங்களும்,வன்கொடுமையும்,மானுட நீதி மீறல்களும் அங்கு ஏற்பட்டிருக்கிறது..330000 மக்களை புலிகள் மானுட கேடயங்களாக பயன்படுத்தி அவர்களில் பலபேரை close range ல் சுட்டுக்கொன்று இருப்பதாக கவலை தெரிவிக்கும் llrc அமைக்கப்பட்டது ராஜபக்சேவால் https://en.wikipedia.org/wiki/Lessons_Learnt_and_Reconciliation_Commission.இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தாலும்,எதிர்த்தாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை.அதற்கு பதிலாக ஒரு பொதுவான பாரபட்சமற்ற சுதந்திர அமைப்பின் மூலம் விசாரணையை தொடங்கி நடத்தக்கோரலாம்.அப்படிக்கோருவது அறத்தின் குரலாக இருக்கும்.இது போன்ற வலுவற்ற ஒரு தீர்மானத்தை ஆதரிப்பது இலங்கைக்கும் உதவியாக இருக்கும்.அமெரிக்காவையும் பாதிக்காமல் இருக்கும்.தமிழக கட்சிகளையும் திருப்தி படுத்தியது போல் இருக்கும் .ஒரே கல்லில் பல மாங்காய்களை விழ்த்தும் மன்மோகனுக்கு இது சாதகமானது..மானுட நீதிக்கும் அறத்திற்கும் எதிரானது.

 13. அறத்தின் குரலாக ஒலிக்கிறார்,அரவிந்தன் நீலகண்டன்.ஜொலிக்கிறார்.

 14. ஆர்.எஸ்.எஸ். மிகச் சரியான நிலைப்பாடு எடுத்திருக்கிறது. இந்த அமெரிக்க தீர்மானத்தின் பின்னர் மிகப்பெரிய கிறுஸ்தவ சதி இருக்கிறது. விடுதலைப் புலிகள் அழிவு கிறுஸ்துவ நிறுவனத்திற்கு விழுந்த மிகப் பெரிய அடி. சர்ச்சு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐநாவுடைய உதவியுடன் மீண்டும் தமிழ் ஈழப் போராட்டத்தை ஆரம்பிக்க முயற்ச்சிக்கின்றது. விடுதலைப் புலிகளை அல்லது அது போன்ற மற்றுமொரு பயங்கரவாத இயக்கத்தை நிறுவ முயற்சி நடக்கின்றது.

  இலங்கை வாழ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அழிவில் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது உண்மை. 30 ஆண்டுகளாக பெரும் துன்பத்தில் உழன்ற அவர்கள் தற்போது தனி ஈழத்தை ஆதரிக்க வில்லை என்பது உண்மை. அவர்கள் கோருவது இலங்கை இறையாண்மைக்கு பங்கம் ஏற்படாத, அதே சமயத்தில் சுதந்திரமான சம அதிகாரம் கொண்ட ஒரு நிலையும், போரில்லாத அமைதியான வாழ்வும்தான் என்பதும் உண்மை. கடந்த பல ஆண்டுகளாக கொஞ்சம் கூட விளம்பரம் இன்றி இலங்கைத் தமிழர்களின் துன்பத்தில் பங்குகொண்டு அவர்களுக்கு பெரிதும் உதவி வந்த இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அவ்வியக்கம் இலங்கையில் உள்ள ராம்கிருஷ்ணா மிஷன், சின்மயா மிஷன், சைவ மங்கையர் கழகம் மற்றும் சில இந்து அமைப்புகளுடன் சேர்ந்து, குறிப்பாக நான்காம் ஈழப்போரின் கடைசி வருடங்களில் அங்குள்ள நம் சகோதரர்களுக்கு ஆற்றிய பணி மகத்தானது.

  எனவே, இலங்கைத் தமிழர்களின் மனவோட்டமும், விருப்பமும் அவர்கள் துன்பத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு சேவைகள் புரிந்து அவர்களுடன் வாழ்ந்து வரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குத் தெரியுமா, இல்லை இங்கு இன வெறியுடனும் மொழி வெறியுடனும் ஈழத்து பரணி பாடும் வாய்ச்சொல் வீரர்களுக்குத் தெரியுமா? இல்லாவிட்டால் இங்கே இணைய தளங்களிலும், வலைத் தளங்களிலும் முகநூல் பக்கங்களிலும் தங்களின் மேதா விலாசத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் அறிவு ஜீவிகளுக்குத்தான் தெரியுமா?

  இலங்கைத் தமிழர்களுக்காகப் பேசும் உரிமை அவர்களுடைய துன்பத்தில் பங்குகொண்டு சேவைகள் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு இருக்கிறதா, இல்லை இங்கே அவர்கள் துன்பத்தில் தங்கள் அரசியல் பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கும் கிறுத்துவக் கைக்கூலிகளுக்கு இருக்கிறதா? இல்லாவிட்டால் இணைய வீரர்களுக்குத்தான் இருக்கிறதா?

  வெளிநாடுகளில் அகதிகள் அந்தஸ்துடன் சுதந்திரமாக வசதியாக வாழும் (Tamil Diaspora) இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்துள்ளனர் என்கிற உண்மையும் இலங்கைவாழ் தமிழர்களுக்குத் தெரிந்துதான் இருக்கிறது. அவர்கள்தான் தங்களுடைய 30 ஆண்டுகால துன்பத்திற்கும் காரணம் என்கிற எண்ணம் இலங்கைவாழ் தமிழர்கள் மனத்தில் உறைந்துபோன உண்மை. இதில் ஒரு பெரும் முரண் என்னவென்றால் இன்று வெளிநாடுகளில் சுகமாக வாழ்ந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிராக கொக்கரித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் பெரும்பான்மையானோர் இதுவரை தங்கள் வாழ்நாளில் இலங்கைக்குப் போனதே இல்லை என்பதுதான். அங்கு சென்று விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டு உச்சக்கட்டத் துன்பத்தில் உழன்ற நம் சகோதரர்களைக் கண்டிருந்தால் இவர்கள் இப்படிக் கொக்கரிக்கமாட்டார்கள். இவர்களை வைத்து இவர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு தூபம் போட்டு தமிழ் ஈழத்தைக் குறிவைத்து மீண்டும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து போராட்டத்தில் ஈடுபடுத்த கிறுஸ்துவ நிறுவனங்களும் மற்ற மேற்கத்திய கிறுஸ்துவ நாடுகளும் முயன்று வருவதையாவது புரிந்து கொண்டிருப்பார்கள்.

  உலகத்தையே கிறுத்துவ மயமாக்கவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் இயங்கி வருபவை வாடிகனும் அதன் நிறுவனங்களும். நமது நாட்டின் அதிகாரப் பூர்வ விருந்தாளியாக வந்து நம் மண்ணில் இருந்துகொண்டே 21-ம் நூற்றாண்டில் ஆசியாவைக் கிறுத்துவமயமாக்க வேண்டும் என்று போப் ஜான் பால் கூக்குரலிட்ட்தை மறக்கலாமா நாம்? கிறுத்துவம் அல்லாத தேசங்களில் மதமாற்றத்தில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்தி பிரிவினைவாத இயக்கங்களுக்கு சகல உதவிகளையும் செய்து அவர்கள் பின்னாலிருந்து இயக்குபவை அந்நிறுவனங்கள். மொழிக் களவு கலாசாரக் களவு என்று அனைத்திலும் ஈடுபட்டு தங்கள் குறிக்கோளை அடைய எந்த அளவிற்கும் செல்லக்கூடிய நிறுவனங்கள். தமிழ்நாடு மற்றும் வட-கிழக்கு இலங்கை இரண்டையும் இணைத்து ஒரு தமிழ் கிறுஸ்துவ தேசம் அமைக்க வேன்டும் என்கிற குறிக்கோளுடன் இயங்கி வருபவை. அவைகளுக்குக் காவடி தூக்குபவையே இங்கு இனவெறியும் மொழிவெறியும் ஏற்றிவிடும் கூலிக் கும்பல்.

  கிறுத்துவ நிறுவனங்களின் குறிக்கோளுக்கு சமீபத்திய சிறந்த உதாரணம் கிழக்கு டைமார் (East Tiomr). இலங்கையில் அவ்வாறு ஒன்று உருவாவது இந்தியாவிற்கு பெரும் அபாயம். இலங்கைக்கு எதிரான இந்தியாவின் செயல் ஒவ்வொன்றும் அதை சீனாவின் பக்கமே தள்ளும். அதே சமயத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதனால் அமெரிக்கா இந்தியாவிற்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. அமெரிக்கா பாகிஸ்தானுடன் கூடிக்குலாவுவதும், அனுசக்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தியாவிற்கு எதிராக அது மறைந்து நின்று நடத்திய கூடங்குள கூத்துகளும் அமெரிக்காவின் “நட்புக்கு” சான்று. கிறுத்துவ-மாவோயிஸ விஷ உறவினால் உலகின் ஒரே ஹிந்து நாடாக இருந்த நேபாளத்தின் உறவை இந்தியா இழந்து விட்டது. இன்று நேபாளம் சீனாவிடம் நெருங்குவது மட்டுமல்லாமல் மற்றொரு பக்கம் வேகமாக கிறுத்துவம் வளர்ந்து வரும் நாடாகவும் இருக்கிறது. அதே போல் இலங்கையின் நட்பை நாம் இழந்து விட முடியாது. இழந்து விடக் கூடாது. இலங்கை வாழ் தமிழர்களுக்காக இந்தியா இலங்கையுடன் நட்பு பாராட்ட வேண்டும். ஓரளவிற்குப் புவியரசியல் அறிந்திருந்தாலே நமக்கு பல உண்மைகள் தெளிவாகும்.

  அதே சமயத்தில், இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்து விட்டு வெற்றி உரை ஆற்றிய ராஜபட்சே தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கும் கடுமையாக்க் கண்டிக்க வேண்டும். போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு சரியான நடவடிக்கைகள் எடுப்பதில் காலதாமதம் செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து அதன் செயல்பாட்டை வேகப்படுத்த வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களின் மறுவாழ்வுச் செயல்திட்டத்திற்கு வாக்களித்த்தைவிட கூடுதலாக இந்தியா உதவ வேண்டும். இந்த நிலைப்பாட்டைத் தான் ஆர்.எஸ்.எஸ் கொண்டிருக்கிறது. அதன் பத்திரிகை அறிக்கையில் இலங்கையைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. தமிழ் மக்களின் இன்னல்களைத் துடைத்து அவர்களின் மறுவாழ்வுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்த அறிக்கையில் குற்றம் காண்பது அறிவீனம்.

  இலங்கை வாழ் தமிழர்கள் பெரும்பான்மையானோர் இந்துக்கள். அவர்கள் இலங்கை-இந்தியா நட்பையே விரும்புகின்றனர். இது நம் எல்லோரையும் விட ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு நன்றாகவே தெரியும். நன்கு ஆராயாமல், உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஒரு முடிவை எடுக்கக்கூடிய இயக்கம் அல்ல ஆர்.எஸ்.எஸ். இம்முடிவு வரலாற்றுத் தவறல்ல வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும் என்பதைப் போகப் போகத் தெரிந்து கொள்வோம்.

  நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் இந்த அவசரக் கட்டுரையின் மூலம் அரவிந்தன் சற்றே சறுக்கியுள்ளார் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.

 15. Commonly, here hindus not care about hindus residing in other countries like pakistan, Bangladesh ,Malyasia and SriLanka unlike muslims.

  Dear Venkat Sami nathan
  selfish is only motive of Indian Hindus. At least give some support. nothing they are doing. Even nearly 10 Lakhs kashmir pandits driven away from their own land. who cared about it. I roamed thorug hout India. All places are alike in this issue.

  Even problem came for one muslim, then media,secularists and parties came quickly and raise voice.
  some words came in mind . but i am not willing to write.

 16. Dear venkat saminathan,

  Here hindus in Tamil nadu gave any voice for minority hindus in Bangladesh, pakistan and Malaysia.
  NO.NO.
  BJP considered to Hindu nationalist party having infight for post and money. what else we say more.
  Only Surpreme(sadasiva or vishnu) will rescue hindus throughout world

 17. விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்தது போர் அல்ல. அது ஒரு உள்நாட்டு ராணுவ நடவடிக்கை மட்டுமே. நமது நாட்டில் நக்ஸலைட்கள் மேல் நமது ராணுவமே நடவடிக்கை எடுத்தால் அதை போர் என்போமா? எல்.டி.டி.இ ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் தங்களை காத்துக்கொள்ள சிவிலியன்களையும் பலிகொடுக்க தயாராக இருந்தனர். அந்நிலையில் ராணுவம் அதன் நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாது/கூடாது. ஏனெனில் எல்.டி.டி.இ வின் சரித்திரம் உலகறிந்தது. எனவே அந்த தாக்குதல்களில் இறந்துபட்ட சிவிலியன்களுக்காக வருந்துவோம், கண்ணீர்சிந்துவோம், ஆனால் அதன் காரணம் எல்.டி.டி.இ மட்டுமே. அவர்களே இதற்கு முழு பொறுப்பு.

  அதே சமயம் கேம்ப்களிலும், சண்டை இல்லாத பகுதிகளிலும், எல்.டி.டி.இ அல்ல என்று தெரிந்தும் குழந்தைகளையும் ஆண்களையும் பெண்களையும் கொத்துகொத்தாக சுட்டுக்கொன்றது இலங்கை ராணுவம் என்று படிக்க/காண நேரிடுகிறது. அவற்றிற்காக இலங்கை அரசை கண்டிக்கவேண்டும். ராணுவத்தினரின் நடவடிக்கைகளை சரிபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளலாம்.

  இது ஏதோ போர் என்றும், ராஜபக்க்ஷ ஏதோ போர் குற்றம் செய்துள்ளதாகவும் ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புவது மடத்தனம். நடந்தது உலகின் மிக முக்கியமான பயங்கரவாத அமைப்பு மீதான உள்நாட்டு ராணுவ நடவடிக்கை. இதில் ஓரளவுக்கு மேல்மூக்கை நுழைத்தால், நமக்குத்தான்……. நானும் இந்த நடவடிக்கைகளால் நண்பனை, நண்பனின் தந்தையை இழந்திருக்கிறேன். ஆனால் உணர்ச்சி பெருக்கெடுத்து ஓவென கூவுவது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை. சில சமயங்களில் இவை நிகழ்ந்திருக்கக்கூடாது என்று நினைத்தாலும் வரலாற்றில் இந்த இழப்புக்கள் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கின்றன.

  இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகள் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் வெளிநாடுகள் தலையிடலாம் என்றால் இலங்கையிலும் நாம் பேச உரிமை இருக்கிறது.

  நிகழ்ந்திருப்பது ஒரு ‘துன்பியல்’ சம்பவம். எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழாமல் இருக்கவும், சமத்துவம் நிலவவும் ஏதாவது உருப்படியாக செய்யமுடியும் என்றால் செய்யலாம். வெத்து தீர்மானம், அறிக்கை, போராட்ட பம்மாத்துகள் இதில் வேலைக்காகாது. பேச்சுவார்த்தை… பேசவேண்டும் … நிறைய பேசப்படவேண்டும். இலங்கை அரசுடனும், மக்களுடனும்… முட்டாள்களாலும், பிரிவினைவாத அரசியல்வாதிகளாலும் அல்ல… சமநிலை கொண்டவர்கள் பேசவேண்டும்…!!

 18. அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரபடும் தீர்மானம் வெற்றி அடைவதன் மூலம் நடை பெற போவது:-
  வெளிநாடுகளில் உள்ள எல்ரிரிஈ ஆதரவாளர்களும், இந்தியாவில் உள்ள தமிழ் பிரிவினைவாத எல்ரிரிஈ ஆதரவாளர்களும் மிகுந்த ஊக்கத்துடன், உந்து வேகத்துடனும் செயல்படுவார்கள் என்பது உறுதி.
  எல்ரிரிஈயின் நீண்டகால போர் வெறியினால் பேரழிவை சந்தித்த ஹிந்துக்கள் அதில் இருந்து மெதுவாக மீண்டு தாங்கள் விரும்பிய வாழ்க்கை வாழ தொடங்குகிறார்கள். இந்த நிலை தொடர்வது பாதிப்படையலாம்.
  எல்ரிரிஈ அழிக்கபட்ட பின்னர் இலங்கை அரசு ஹிந்துக்களுக்கு செய்து வரும் அபிவிருத்தி திட்டங்களை விரக்தி காரணமாக கைவிடலாம்.
  இனங்களுக்கிடையில் தேவையற்ற மன கசப்புகள் சந்தேகங்கள் ஏற்படும்.
  அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி அடைவதன் மூலம் இலங்கை ஹிந்துகள் அடைய போவது எதுவும் இல்லை. கடந்த மூன்று வருடங்களாக பெற்று வந்த அமைதியை இழந்து விடுவோமோ என்று அஞ்சுகிறோம்.ஒன்றை மறந்து விடாதீர்கள்! பிணத்தை வைத்து பிரசாரம் செய்பவர்கள் எல்ரிரிஈனர். பிணம் கிடைக்காவிட்டால் உயிருடன் இருப்பவனையும் பிணம் ஆக்குவார்கள்.ஆக்கினார்கள்.

 19. வணக்கம்
  தமிழ் செல்வன் , அவர்கள் மிக சரியாக பிரச்னையை தெளிவு படுத்தியுள்ளார் .

  தமிழ் நாட்டிலும் பலவித பிரச்சனைகள் உள்ளது ஆனால் எல்லாம் ஒரே மாதிரியானவை இல்லை . பலவிதமான துயர சம்பவங்களுக்கு தீர்வுகள் ஒரே மாதிரியானவை இல்லை .
  all solutions should change depend upon the place and the local people.

  so RSS has done the best work

 20. அமெரிக்கா என்கிற அயோக்கிய ஓநாய், ஈராக்கிலும், ஆப்கானிலும் , வியட்நாமிலும் செய்த மனித உரிமை மீரல்கள் பற்றி என்றாவது யாராவது வாய் திறக்க முடிந்ததா? அல்லது அது பற்றி அமெரிக்கா தான் பேசியதா? ஈராக் நகரத்திற்குள் புகைப்படம் எடுத்த பத்திரிக்கையாளர்களை சுட்டுக் கொன்ற அமெரிக்க வீரர்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதை நினைவில் கொள்ள வேண்டும்.

  இலங்கையில் அமைதி திரும்புகிறது, இனி அங்கே போருக்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்துவிட்டது. எனவே அமெரிக்கா தனது ஆயுத விற்பனையை ஊக்கு விக்க மீண்டும் ஒரு போர் அங்கே ஏதாவது ஒரு பிரிவினை வாதத்தால் தூண்டப்பட வேண்டுமென எண்ணி இப்படி தீர்மானங்கள் போடுகிறது. இரண்டாவது, இலங்கை சீனாவின்கைப்பாவையாக ஆகிவருவதை அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவில் ஆளுமை உலகில் பரவக்கூடாது என்பதை அமெரிக்கா விரும்புகிறது. அதனால் ராஜபக்ஷேவை மிரட்டி சீனாவின் கரங்கள் இருக்கும் இடத்தில் தன் ஆளுமையை நிரூபிக்க முயற்சிக்கிறது. அது இந்தியாவிற்கு நன்மை பயக்கும். அதனால் இந்தியா இதை ஆதரிக்காமலும், எதிர்க்காமலும் அமைதி காப்பதே நல்லது.

 21. எனக்கு தெரிந்த ஒரு கம்யூனிஸ்ட் சொல்றான்…

  ஆர்.எஸ்.எஸ். எப்போதும் வட இந்தியர்களுக்கு வால் பிடிக்கும் இயக்கம்.

  இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்தவர்கள், வட இந்தியாவை சேர்ந்த புத்த மதத்தினர். புத்த மதமும் இந்து மதத்தின் ஒரு பிரிவு. எனவே, புத்த மதத்திற்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்தால், அவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி விடுவார்கள் என்பதால்தான் இந்த அறிக்கை.

  மேலும், தமிழர்கள் படுகொலை செய்யப்படும்போது வேடிக்கை பார்த்துவிட்டு, பிறகு உதவி செய்வது என்பதும் ஹிந்து மதத்திற்கு ஆள் பிடிக்கும் வேலை.

  இவர்களின் ஒட்டுமொத்த கொள்கை : வட இந்தியர்களும், வட மொழியும் வாழ வேண்டும் என்பது மட்டும்தான்…. என்கிறார்.

  சில விசயங்களில் இதையும் யோசிக்க வேண்டி உள்ளது.

 22. சிறிலங்கா இந்து அவர்கள் எழுதியதுடன் முழுமையாக உடன்பட வேண்டும். தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் பிரிவினை சக்திகளுக்கு இது போன்ற கட்டுரைகள் பலத்த உத்வேகம் அளித்துவிடும். வைக்கோ போன்றோரின் பேச்சுக்களை பெரும்பான்மைத் தமிழர் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த அலை அவர்களுக்கு பெரும் வலிவைக் கொடுக்கக் கூடியது.

  அதிலும் ஆரெஸ்ஸெஸ் இயக்கத்தை பழிப்பதாக இருந்துவிட்டால் அவர்களுக்கு சர்க்கரைப் பாகில் தேன்மாரிப் பெய்வது போலத்தான்.

  இந்தக் கட்டுரை ஒரு இந்து விரோதக் கட்டுரை.
  இந்தக் கட்டுரை ஒரு இலங்கைத் தமிழர் நலன் விரோதக் கட்டுரை.
  இந்தக் கட்டுரை ஒரு தேச விரோதக் கட்டுரை.

  இணையத்தில் இந்து சிந்தனைகளுக்கு ஒளிவிளக்காக இருக்கும் அரவிந்தன் நீலகண்டன் இந்தக் கட்டுரையில் பலமாக சறுக்கியிருக்கிறார்.

 23. @தமிழ்ச்செல்வன்,

  // நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் இந்த அவசரக் கட்டுரையின் மூலம் அரவிந்தன் சற்றே சறுக்கியுள்ளார் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.//

  எது நன்றாக வளர்ந்து வருகிறது என்கிறீர்கள் ?!! RSS-ஆ, இந்திய-இலங்கை ‘நட்புறவா’ ? ஈழத் தமிழர்களின் தொடரும் துயரங்களா ?!!

  LTTE, கிறித்தவர்கள், முசுலீம்கள், கம்யூனிஸ்டுகள் போன்ற எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பின்னூட்டமிடும் அன்பர்களே ! சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலையை கண்டுகொள்ளக் கூடாது, பலியானவர்கள் பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்களாக இருந்தாலும் சரி என்று தட்டிக்கொண்டு போவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் – காங்கிரஸிலும், திராவிடக்கட்சிகளிலும். கேட்கவேண்டியது இந்து இயக்கங்களின் தலையாய கடமை. முடியாதென்றால் பெயரை மாற்றிக் கொண்டு மற்றவர்களைப் போல் சந்தர்ப்பவாத அரசியலில் இறங்கலாம்..

 24. ஸ்ரீ அரவிந்தன் அவர்களின் ஆதங்கம் சரியானது தான் மத்திய அரசு இலங்கை அரசின் தமிழர்மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும். ஆனால் கட்டுரையில் எங்கும் ஸ்ரீ அரவிந்தன் அமெரிக்கத்தீர்மானத்தினை ஆதரிக்கவேண்டும் என்று கூறியுள்ளதாகத்தெரியவில்லை. அவர் அதனை இன்னும் தெளிவாக சொல்லவேண்டுகிறேன்.
  அமெரிக்கத்தீர்மானத்தை ஆதரிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை தீவிரமாக நாம் சிந்திக்கவேண்டும். காஸ்மீர் பிரச்சினை, மணிப்பூர் பிரச்சினை இவற்றில் அமெரிக்கா தலையிட்டால் நமது நிலைப்பாடு என்ன? அமெரிக்காபோன்ற அத்துமீறல் வாதிகள், ஆயுதவியாபாரிகள் இத்தகைய த்தீர்மானம் கொண்டுவர யோக்யதை உள்ளவர்களா என்று நாம் சிந்திக்கவேண்டும்.
  ஈழத்தமிழர் நலனையும் நல்வாழ்வையும் பேண இயன்றதனைத்தும் பாரத நாடும் தமிழ் மக்களும் இயன்றதனைத்தும் செய்ய உறுதி பூணவேண்டும். அதைவிட்டுவிட்டு சிக்கலை இன்னும் பெரிதாக்கும் முயற்சிகள் வேண்டாம்.

 25. @ kargil ……….

  ” ராஜீவ் காந்தி கொலை என்று சொல்ல முடியாது, ராஜீவ் காந்திக்கு கொடுக்கப்பட்டது அவர் செய்த பெரும் துரோகத்துக்கு, அவர் செய்த தவறுகளால் நடந்த பெருங்குற்றங்களுக்கு ஒரு கடுமை குறைந்த தண்டனை மட்டுமே. ”

  இது போன்ற வசனங்கள் பேசுவதற்கு திடீர் தமிழர் சீமான் , தியாகு, கொளத்தூர் மணி போன்ற தேச விரோதிகள் இருக்கிறார்கள்…..நாம் இதுபோல் பேசுவதும் , அது தமிழ் ஹிந்து தளத்தில் வெளியாவதும் நிச்சயம் வன்மையாக கண்டிக்கத்தக்கது…..

  இலங்கைத்தமிழர்களின் இன்றைய இன்னல்களுக்கு மூல காரணம் இந்திய அரசியல்வாதிகள்தான்….அஹிம்சை போராட்டமாக இருந்த ஈழப்போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக மாற்றியவர் இந்திராகாந்தி……தமிழக அரசியல்வாதிகளும் இதில் சளைத்தவர்கள் அல்ல.குறிப்பாக எம்.ஜி.ஆர். புலிகளுக்கு பல கோடி நிதி உதவி அளித்தது மட்டுமல்லாமல்தமிழகத்தை அவர்கள் போருக்கான தளமாகவும் பயன்படுத்த அனுமதி அளித்தார்…அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை ஆயுதக்கிடங்காக மாறிய புண்ணியவான் எம்.ஜி.ஆர்……பின்னாளில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை புலிகள் நிராகரித்ததன் பின்னணியில் இருந்ததும் அவர்தான் [ வைகோவும் ஒரு காரணம் ]…..

  ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும் [ போபர்ஸ் ஊழல் காரணமாக தன மீது விழுந்த ஊழல் முத்திரையில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே அவர் இலங்கை பிரச்சினையில் ஆர்வம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது ] ராஜீவ் உண்மையாகவே தமிழர்களுக்கு நன்மை செய்ய விரும்பினார்….இலங்கை பிரச்சினையில் அன்று முதல் இன்றுவரை தமிழர்கள் சார்பாக செய்யப்பட ஒரே உருப்படியான முயற்சி ராஜீவ் – ஜெயவர்த்தனே இடையிலான இந்திய – இலங்கை ஒப்பந்தம்தான்….அதற்காக இலங்கை அரசியல் சட்டமே [ பதின்மூன்றாவது ] திருத்தப்பட்டது….ஜெயவர்த்தனேவும் அதற்கு எளிதில் உடன்படவில்லை…ராஜீவ் ,ஆப்பரேசன் பூமாலை என்ற பெயரில் இந்திய விமானப்படை மூலம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணவுப்பொட்டலங்களை வீச செய்தார்….அப்போதைய வெளியுறவு செயலர் ஜே .என்.தீட்சித் உணவு வீசிய அதே விமானங்களால் கொழும்பு மீது குண்டு வீச ரொம்ப நேரம் ஆகாது என்று எச்சரித்தார்….அதன் பிறகே ஜெயவர்தனே வழிக்கு வந்தார்….அந்த ஒப்பந்தம் மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் இலங்கை பிரச்சினை அப்போதே முடிவுக்கு வந்திருக்கும் …..அந்த நல்ல முயற்சியை நாசம் செய்தவர் பிரபாகரன்….தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக ஈழத்தை மாற்ற முயற்சித்தார்….அமைதியை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தை தாக்கினார்….தமிழகத்தில் இருந்த தனது ஆதரவாளர்கள்[ வைகோ , நெடுமாறன் போன்ற தேசவிரோதிகள் மற்றும் திமுக ] மூலம் இந்திய ராணுவத்தின் மீது பல அவதூறுகளை பரப்பினார்….ஜெயவர்த்தனேவுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த பிரமேதாசவுடன் தோள் மீது கைபோட்டுக்கொண்டு சகோதரர்களாகிய எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக்கொள்வோம்….அந்நியர்களாகிய இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று கொக்கரித்தார்…[ பிறகு வழக்கம்போல் பிறேமதாசவையும் தீர்த்துக்கட்டினார் ]. .இன்னொரு தேச துரோகி வி.பி .சிங் இந்தியாவில் ஆட்சிக்கு வர அவர்களது நோக்கம் நிறைவேறியது.ஈழத்தமிழர்கள்அன்றுமுதல் அனாதைகள் ஆனார்கள்……இன்றைய நிலை என்ன? அந்த ஒப்பந்த்தத்தில் தமிழர்களுக்கு கிடைக்க இருந்த உரிமைகளை இன்று நினைத்துக்கூட பார்க்க முடியாது…..எனில் தவறு செய்தது யார்.?
  ராஜீவ் செய்ததது ஒரே ஒரு தவறுதான்…பலமுறை இந்திய ராணுவத்திடம் பிடிபட்ட பிரபாகரனை தமிழக தலைவர்கள் [ என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்பவர்கள் ] பேச்சை கேட்டுக்கொண்டு உயிருடன் விடுதலை செய்ததுதான்….அந்த தவறுக்கு விலையாக அவர் தன உயிரையே தர நேர்ந்தது…..

 26. // நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் இந்த அவசரக் கட்டுரையின் மூலம் அரவிந்தன் சற்றே சறுக்கியுள்ளார் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.//

  // இணையத்தில் இந்து சிந்தனைகளுக்கு ஒளிவிளக்காக இருக்கும் அரவிந்தன் நீலகண்டன் இந்தக் கட்டுரையில் பலமாக சறுக்கியிருக்கிறார்.//

  திரு .தமிழ்ச்செல்வன் மற்றும் திரு . ஓகை நடராஜன் ஆகியோரது கருத்துக்களுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்…..வழிமொழிகிறேன்…..

  இந்த கட்டுரையின் அபத்தங்களை வரிக்கு வரி என்னால் மறுக்க முடியும்…..வேறு யாரும் எழுதியிருந்தால் அதைத்தான் செய்திருப்பேன்…..நான் மிகவும் மதிக்கும் திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்களை புண்படுத்த விரும்பவில்லை…

  யானைக்கும் அடி சறுக்கும்…..கவனம் …திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களே…..

 27. //இலங்கையை சொந்த நாடாகக்கொண்டு அங்கேயே பெற்றோர்களை விட்டு விட்டு வந்தவரே எந்த பதட்டமும் இல்லாமல் நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம் என்று சொல்லும் போது தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு நாம் ராஜபக்ஷேவை அவமதித்து இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் துன்பம் உண்டாகுமாறு செய்ய வேண்டுமா என்ன?//

  //ஒன்றை மறந்து விடாதீர்கள்! பிணத்தை வைத்து பிரசாரம் செய்பவர்கள் எல்ரிரிஈனர். பிணம் கிடைக்காவிட்டால் உயிருடன் இருப்பவனையும் பிணம் ஆக்குவார்கள்.ஆக்கினார்கள்.//

  நெற்றியடியான கருத்துக்களை பதிவு செய்த திரு. ராம் அவர்களுக்கும் சிறீலங்கா இந்து அவர்களுக்கும் நன்றி…..பாராட்டுக்கள்……

 28. இலங்கையில் உள்ள தமிழர்கள் என்று சொல்கிறார்கள் , அனால் இவர்களும் இந்தியர்களே, நம் இனத்தவரே, இதனை நடுவண் அரசாங்கமும் சொல்ல வில்லை, இங்கு உள்ள பகுத்தறிவாளர்களும் கூறவில்லை. இங்கு உள்ள திராவிட பழங்கள் தமிழன் தனி இனம் என்று கூறி, மற்றும் விடுதலை புலிகளும் தனி இனம் என்று கூறியும் பிரித்து விட்டார்கள் ,
  இங்கு உள்ள நெடுமாறன், சீமான் போன்றவர்கள் தமிழ் இனம் தமிழ் தேசியம் , என்று கூறி இந்த விசயத்தில் தமிழ் மக்களை லாவகமாக தனிமை படுத்தி விட்டார்கள். ஈழ தமிழன் இரக்கமற்ற சிங்களவனிடம் மாட்டி கொண்டான்.

  தமிழ்நாட்டில் உண்மையாக சமமாக பாவித்து ஆண்டது ப ஜா க தான், நிச்சயமாக அடல்லோ அத்வானியோ இப்போது பிரதமாராக இருந்தால், இந்திய சொல்படி ஸ்ரீ லங்கா நடந்து கொண்டிருக்கும்,
  இந்த ஈழபிரச்சனை சோழர்கள் காலத்தில் இருந்து இருக்கிறது , இது முடிவடைய ஈழத்தையும், இலங்கையும், இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.

 29. https://expressbuzz.com/world/tamils-picket-indian-high-commission/374814.html

  Tamils picket Indian High Commission

  COLOMBO: About 300 fishermen from the Tamil sp-eaking Northern Province held a demo in front of the Indian High Commission here on Wednesday to ‘request’ India not to support the US sponsored resolution against Sri Lanka at the UN Human Rights Council (UN-HRC) in Geneva.
  An official of the Indian mission told Express that the fishermen were drawn from the four districts of Jaffna, Mannar, Kilinochchi and Mullaitivu. They were under the banner of ‘United Tamils of Sri Lanka’.
  Police said that the fishermen had ‘picketed’ the mission, and that traffic had to be diverted.
  Earlier, Buddhist monks led by the Jathika Sangha Sangamaya had demonstrated with banners asking India not to endanger Indo-Lankan relations by supporting the US resolution.

 30. ஜெனீவா பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.

  இன்று நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலைமை வகித்தன.

  இதன்மூலம் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

  அதாவது எதிர்க்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் இப்போது தமிழர் விரோதமாக பார்க்கபடுகிறது. ஆதரவளித்த காங்கிரஸ் நல்ல பிள்ளையாகிவிட்டது.

  தவறு செய்வது தப்பில்லை. அதை திருத்திக்கொள்ள வேண்டும்.
  அதற்கு இனி ஆர்எஸ்எஸ்க்கு நேரம் இல்லை.
  இனியாவது சிந்தித்து செயல்படுக.

 31. ஆரம்பத்திலிருந்தே மேற்கத்திய கிருஸ்துவம்தான் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தி தீவிரவாதத்தை ஊக்கிவித்து வந்தது. எம்.ஜி.ஆர் முதல் இந்திரா காந்தி வரை தமிழர்களுக்கு அங்கு சமஉரிமை கிட்டும் என்ற எண்ணத்தில் எல்.டீ.டீ யை ஊக்குவித்துவந்தது கிருஸ்துவ தலையீட்டால் தீவிரவாத பிரிவினை இயக்கமாக மாறியது. இதில் இடையே பாகிஸ்தானும் சைனாவும் புகுந்து மேற்கத்திய ஆக்ரமிப்பு திட்டங்களுக்கு தடைகளை உண்டாகியது. இன்று இலங்கை தீவிரவாத ஒழிப்பு என்று கூறி பல அப்பாவி தமிழர்களை அனாதை பிணங்களாக பலியாக்கியுள்ளது. எல்.டீ.டீ. அழிக்கபடவேண்டிய ஒரு தீவிரவாத கும்பல். அவர்கள் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் அதே கேடயத்தை ஒரு சாக்காக சொல்லியே கேட்பார் இல்லாததால் தீவிரவாத ஒழிப்பு என்று கூறி இப்படி அப்பாவிகளையும் பலி எடுத்தால்தான் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்காது என்று செயல்பட்ட ராஜபிரகாசே தண்டிக்கபடவேண்டியவரே. இதற்க்கு இந்தியாவும் துணைபோனது மிகவும் கேவலமான நிகழ்வுதான். எல்லா இடத்திலும் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா போர் தீவிரமடைந்த நேரங்களில் வேடிக்கைபார்த்துக்கொண்டு எல்லாம் முடிந்தபின் காலம் கடந்து இலங்கையை போர் குற்றங்கள் செய்ததாக அறிவிப்பது ஏதோ உள்நோக்கம் கொண்ட செயலே. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதாலோ எதிர்பதாலோ அங்கு எஞ்சியுள்ள தமிழர்களுக்கு எந்தமுன்னேற்றமும் ஏற்ப்பட போவதில்லை. இந்தியா ராஜிவ் காலத்தில் இலங்கையில் தலையிட்டு தீர்வுகாணாமல் விலகியது முதல் தவறு. சமீபத்தில் ராஜபிரகாசேயின் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் பல அப்பாவி தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்தபோது நமது ராணுவத்தை அனுப்பி அதை தடுக்காமால் கைகட்டி துணைபோனது இரண்டாவது தவறு. பெரிய அண்ணன் இந்த வேலையை இன்று பல இடங்களில் தங்களது படைகளை அனுப்பி அமைதி ஏற்படுத்துவதாக சொல்லிக்கொண்டு இயற்கை வளத்தை சூரையாடுவது அல்லது தனக்கு பலம்வாய்நத எதிரிகள் உருவாகாமல் தடுப்பது என்ற உள்நோக்கத்தோடுதான் செயல்படுகிறது. உதாரணம் ஈராக் ஆப்கானிஸ்தான் சீரியா போன்ற சமீபத்திய நிகழ்வுகள் ஆகும்.

  ஆர்.எஸ்.எஸ் நினைப்பது போல் இலங்கையை ஆதரித்து அமைதிகாப்பதால் அங்கே தமிழர்களுக்கும் சிங்கள பௌதர்களுக்கும் ஒற்றுமை ஏற்ப்பட்டு எஞ்சியுள்ள தமிழர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் என்பதெல்லாம் வெறும் பகற் கனவே. இனிமேலும் இந்தியா காலம் தாழ்தாது இலங்கை விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு ஒரு தூது குழுவை அனுப்பி அங்கே சில மாதங்கள் தங்கி ஐ.நா. மேற்பார்வையில் தமிழர்களின் உரிமைகளை பெற செய்வதே சிறந்த வழிமுறையாகும். இதை ஐ.நா. ஏற்கும் வகையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம்.. இதை இந்தியா நிச்சயம் நிறைவேற்றமுடியும்.

 32. இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுவதாக உயிரை விடுவதாக கூறிக்கொள்ளும் சீமான் என்ற சைமன், தொல்லை.திருமாவளவன், பழ நெடுமாறன் போன்றோர் போர் காலத்தில் எத்தனை நாள் போர் களத்தில் இருந்தார்கள். தன கையிலிருந்து எத்தனை ரூபாய் நிதி கொடுத்துள்ளர்கள். இப்போதே ஒரு வாதம் வைக்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழர்கள் இலங்கை பிரஜை யாக இருப்பது சம்பந்தமாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் அது. இதையே காஷ்மீர் பிரிவினை வாதிகள் கூறி வருகின்றனர்.பிற்காலத்தில் தமிழகத்திலும் இந்த வாதம் வரலாம். நாம் பாரத ஒருமைப்பாடு உணர்வுடன் பிரச்சினைகளை அணுக வேண்டும்.

 33. தமிழ், தமிழர் என்று கூறியபடி தமிழ் நாடு கிறிஸ்தவர்கள் இலங்கை வடக்கு ,கிழக்கில் நுழைந்து விட்டார்கள் . தமிழர்கள் என்று கூறியபடி இந்துமத ஆர்வலர்கள் அங்கு செல்லாமலும் பார்த்துக் கொண்டார்கள்.இந்தியாவின் இந்த ஆதரவால் தமிழ் இந்துக்களுக்கு நன்மை தான். இந்த கட்டுரையும் ,RSS இந்த அறிவிப்பும் இலங்கை இந்துகளுக்கு ஒரு ஆதரவை கொடுக்கும்.

 34. திரு.அரவிந்தன் நீலகண்டன் சேனல்-4 தொலைக்காட்சியின் தற்பொழுதைய விவரணப் படத்தை பார்த்து மனம் மயங்கியிருக்கிறார். ஒரு 12 வயது குழந்தை மிருகம் போல் கொல்லப்பட்டது மனிதனாக உள்ள எவரையும் அசைக்கும்
  என்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அந்த குழந்தையை கொன்றவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்று மட்டுமா கோரிக்கை முன்வைக்கப் படுகிறது. இந்த விவகாரம் மிகவும் Complicated ஆனது.

  என் ஆசான் சங்கரன் பகருவான். ஆன்மீக தளத்தில் முன்னேற முதல் படி, மனம் கூறுவதை கேட்காதே; புத்தியை மட்டுமே அனுசரி என்று. சமூக தளத்திலும் பல சந்தர்ப்பங்களில் இதுவே சரியான வழியாகும்.

  கடந்த சில வருடங்களாக, தமிழகத்தில் உள்ள சில தகர டப்பா அரசியல் தலைவர்களின் கூச்சல் “நல்ல காமெடி” என்ற நிலையிலிருந்து, “காமெடி கலாட்டா” என்னும் நிலைக்கு வந்திருக்கிறது. “தகர டப்பா” என்று நான் கூறியது ஏனெனில்,
  சத்தம் மட்டுமே வரும்; சாரம் இருக்காது.

  இந்த தகர டப்பாக்களின் காமெடி கலாட்டாக்களை நானோ, இந்த தளமோ ஒரு துளியும் மதிப்பதில்லை என்னும் நம்பிக்கையில் இந்த மறுமொழியை எழுதுகிறேன்.

  “மனித உரிமை-மனித உரிமை” என்று பிணாத்துபவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி-மாற்றி பேசக் கூடாது; விவாதத்திலிருந்து நழுவக் கூடாது”;

  இலங்கை பிரச்சினையைக் குறித்த ஒரு சிறிய முன்னுரை:

  ஒரு கொலைவெறி கூட்டம்;
  பயங்கர ஆயூதங்களை வைத்திருப்பவர்கள்;
  மனிதத்தை ஒரு துளியும் நம்பாதவர்கள்;
  கம்யூனிஸ அரக்கத்தனத்தையே பரவாயில்லை என்று நினைக்க வைக்கக் கூடியவர்கள்;
  எதிர்ப்பவர்கள் தங்கள் இனத்தவராக இருந்தாலும் கொன்று போட்டவர்கள்;

  இலங்கையின் கடைசி கட்ட போரின் போது, மேற்குறிப்பிட்ட மேதாவி சாகசக்கார நீசர்கள் 100 பேர் ஆயுதங்களுடன் 1000 பொது மக்களுக்கு மத்தியில் நின்று கொண்டு(!) வீரப் போர் புரிந்தார்கள். இன்னும் சரியாக கூறுவதானால் சற்றேறக்குறைய 8000 முதல் 10000 நீசர்கள் 2 இலட்சம் மக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு பெட்டைத்தனத்துடன் போரிட்டார்கள். (பெண்மைக்கு எதிராக நான் கூறவில்லை. வேறு வார்த்தைகள் எனக்கு தெரியாததனால் எழுதினேன்.)

  சரி; இந்த முன்னுரையுடன் என் கேள்விக்கு வருகிறேன். இந்த 8000 நீசர்களை எவ்வாறு தனியாக கொல்வது அல்லது தனிமைப் படுத்தி பிடிப்பது; இந்த கேள்வியை நாம் கேட்டு விட்டோமானால், இலங்கை புரிந்ததாக கூறப்படும் அனைத்து போர் முறைகளையும் ஆதரித்து விடுவோம்.

  அந்த கடைசி கட்டத்தில், இலங்கை தப்பித்தவறி சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்திருந்தால், என்ன நடந்திருக்கும்? விடுதலைப் புலிகள் என்ற நீசக்கூட்டம் அதே புளித்து போன “ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு” என்ற கோரிக்கையை
  முன்வைத்து இன்றும் போரிட்டு கொண்டிருக்கும்.

  பொதுமக்களில் ஒருவர் கூட கொல்லப்படக் கூடாது என்பது எவ்வளவு “நேர்மைத்துணிவற்ற வாதம்” என்பது சிறிது சிந்தித்தாலும் புரிந்துவிடும்.

  சரி, பொதுமக்களில் சிலர் இறக்கத்தான் வேண்டும் என்ற எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டாலும், நம் அடுத்த கேள்வி; இவ்வளவு அதிக அளவில் பொது மக்கள் கொல்லப் பட வேண்டுமா?

  இதற்கு என் பதில்
  (1)எவ்வளவு பேர் இறந்தார்கள் என்பது நமக்கு ஒரு நாளும் தெரியப் போவதில்லை. 8000 என்கிறது இலங்கை அரசு. 40000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று உத்தேசிக்கிறது ஐக்கிய நாட்டு சபையின் ஒரு குழு. 1,40,000 பேர் வரை
  இறந்திருக்கலாம் என்கிறது சர்வதேச மனித உரிமை அமைப்புகள். மனித உரிமை மாய்மாலர்கள் என்றுமே உண்மை பேசுவதில்லை என்ற விரதத்தை அனுஷ்டிப்பதால், 1,40,000 என்ற எண்ணிக்கையை உதாசீனம் செய்து விடலாம். எந்த ஒரு அறிவியல் ரீதியான ஆய்வும் நடக்கவில்லை என்பதாலும், அதற்கு வாய்ப்பும் இல்லை என்பதாலும், இலங்கை அனுமதிக்காது என்பதாலும், 3 வருடங்கள் கடந்து விட்டது என்பதாலும், உத்தேசமாக 8000 முதல் 40000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று நம் வரை ஏற்றுக் கொள்வதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

  (2)அடுத்ததாக, மிகவும் முக்கியமாக “யார் பொது மக்கள்” என்ற கேள்வி எந்த விவாதத்திலும் அலசப்பட வில்லை. ஏனெனில் இறந்த மக்களில் எவ்வளவு பேர் பொது மக்கள்? எவ்வளவு பேர் தெரிந்தே விடுதலைப் புலிகளுக்கு மனிதக் கேடயமாக இருந்து மடிந்தார்கள்? எவ்வளவு பேர் உண்மையான பொதுமக்கள்-அதாவது விடுதலை புலிகளின் வற்புறுத்தலாலும், மிரட்டப்பட்டதாலும் மனிதக் கேடயமாக வேறு வழியின்றி மாறி இறந்தார்கள்? என்ற கணக்கு நம்மிடம் இல்லை.

  (அ) விடுதலைப் புலிகள் 15000 முதல் 25000 பேர் வரை ஆயுதங்களுடன் போரிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் 11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் போருக்கு பிறகும், சிறை பிடிக்கப் பட்டு, சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தில் கலக்கப் படுகிறார்கள். ஆகவே 25000 பேர் வரை போரிட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

  (ஆ) அடுத்து பொது மக்களில் ஒரு பகுதியினர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் அல்லது அல்லக்கைகள்.

  (இ) மிஞ்சியவர்கள்தான் பொது மக்கள் என்று அடையாளம் காட்டத்தக்கவர்கள்.

  மேற்கூறியவர்களில் முதல் தொகுதியினர் (அதாவது ஆயுதங்களுடன் போரிட்ட தீவிரவாதிகள்) மனிதர்களே அல்ல. மிருகங்கள். அவ்வளவு பேரும் வேட்டையாடப்பட தகுதியானவர்கள். அதைத்தான் இலங்கை இராணுவமும் ஒரு அளவிற்கு செய்தது. முழுமையாக செய்யவில்லை என்பதில் எனக்கு அதிருப்தியே! ஏனெனில் 11000 விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்து, பயிற்சி அளித்து பின் சமூகத்தில் கலக்க விட்டால் பின்னாளில் என்ன ஆகும் என்று நாம் ஊகிக்க வேண்டியதில்லை.

  அமேரிக்க இராணுவ சிப்பாய், பின் லேடனை நெற்றிப்பொட்டில் சுட்டு மூளையை சிதற அடித்ததைப் போல, பிரபாகரனை பிடித்து நெற்றிப் பொட்டில் சுட்டு மூளையை சிதற அடித்த இலங்கை சிப்பாயும் பாராட்டுக்குரியவனே! பிரபாகரன் மட்டும் உயிரோடிருந்தால்-நினைக்கவே பயமாக உள்ளது.

  (இந்தியா JeM (Jaish-E-Mohammad) தீவிரவாத தலைவனை கந்தஹார் விமானக் கடத்தலுக்காக வெளியில் விட்டவுடன், அவன் பாகிஸ்தானிற்கு சென்று, கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளை பெற்றுக் கொண்டு, இன்றளவும் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். பிடித்தவுடன் இது போன்ற High Value Targetகளை அழித்தொழிப்பது எவ்வளவு அவசியம் என்று இப்பொழுதாவது இந்தியா உணர வேண்டும்.)

  அடுத்து, இரண்டாவது தொகுதியினர், அதாவது விடுதலைப் புலிகளின் அல்லக்கைகள்; இவர்கள் தெளிவாக பயமுறுத்தப்பட வேண்டும். இவர்கள் திருந்துவதெல்லாம் நடவாத காரியம். இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று
  நான் கூற வில்லை. ஆனால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டால் வாழ்க்கை நரகமாகவே இருக்கும் என்று தெளிவாக உணர்த்தப்பட வேண்டும்.

  அடுத்து, மூன்றாவது தொகுதியினர், அதாவது பொது மக்கள். விடுதலைப் புலிகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டு வாழ்க்கையை தொலைத்த அப்பாவிகள். நம்மால் பரிதாபப்படவே முடியும்.

  2 மற்றும் 3வது தொகுதியினர், பொது மக்கள் என்ற பொது குறியீட்டினுள் உள்ளதால், லாவகமாகவே கையாள முடியும். இதையே இலங்கை அரசும் செய்கிறது. வெற்றுக்கூச்சல் போடும் விடுதலைப்புலிகளின் அல்லக்கைகளை தவிர்த்து பொது மக்களை தனியாக பிரித்து வசதிகள் செய்து தருவது மிகவும் கடினமான காரியம்.

  ———————–
  எதற்கெடுத்தாலும் அமேரிக்காவை எதிர்ப்பதை நான் என்றுமே ஏற்றதில்லை. ஆப்கானிஸ்தானில் அன்றைய சோவியத் யூனியனின் அரக்கத்தனத்தை எதிர்க்க வேண்டியிருந்த அமேரிக்காவிற்கு வேறு வழி இருக்க வில்லை. ஒரு பக்கம்
  கம்யூனிஸம் என்கிற அரக்கத்தனத்தை உலகின் பல நாடுகளில், பரப்ப முனைந்த சோவியத் யூனியன். கம்யூனிஸத்தை எதிர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த அமேரிக்கா “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்கிற தாலிபான் ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டது. இன்றைய நிலையில் அதை தவறு என்று கூறினாலும், சில நேரங்களில் ஒரு அரக்கத்தனத்தை எதிர்க்க வேறொரு அரக்கத்தனத்தை கைகொள்ள வேண்டிய கட்டாயம் அவசியம் ஏற்படும்.

  சரி அப்படியே இருந்தாலும், இந்தியா அதை விமர்சிக்க முடியுமா? கொஞ்சம் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் நம் பருப்பு வெந்து விடும். இறையாண்மை பெற்ற இலங்கைக்கு எதிராக, அந்நாட்டிற்கு எதிரான ஒரு தீவிரவாத அமைப்பிற்கு ஆயுதங்களும், பயிற்சியும் 1980களில் வழங்கியது இந்தியா என்பதை மறந்து விட வேண்டுமா? அதை அன்றைய பிரதமர் இந்திராவும், அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் முனைந்து செயல்படுத்தியதை நியாயப்படுத்தத்தான் முடியுமா?

  காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவை கண்டிக்கும் நாம், அதைப்போன்ற ஒரு தவறை நாமும் இலங்கையில் செய்திருக்கிறோம் என்பதை வரலாறு கூறும். காலம் கடந்தேனும், ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகேனும் அந்த தவறை சரி செய்து கொண்டோம்.

  தார்மீக நெறிமுறைகளைப் பற்றி பிரசங்கம் செய்ய இந்தியாவிற்கு யோக்கியதையோ / தகுதியோ இல்லை என்பதே என் வாதம்.

  சரி, தார்மீக நெறிமுறை என்பதிலேயே, தனிமனித தார்மீக நெறிமுறைக்கும், ஒரு அரசாங்கம் அனுசரிக்க வேண்டிய தார்மீக நெறிமுறைக்கும் வித்தியாசம் கண்டிப்பாக உண்டு. சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் தெளிவாக இதை எடுத்தியம்பும்.

  விடுதலை புலிகளை எதிர்க்கும் Organiser தலையங்கம் அமேரிக்க எதிர்ப்பையும் சேர்த்தே முன்வைக்கிறது. அதை விடுத்து விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் அந்த தலையங்கத்தை முற்றும் முழுவதுமாக நான் ஆதரிக்கிறேன்.
  ———————–
  அடுத்து, இந்த பிரச்சினையின் அடுத்த கோணம். ஐக்கிய நாடு சபையின் தலைவர், மூவர் குழுவை அமைத்து கடைசி கட்ட போரின் போது நடந்ததைப் பற்றி அறிக்கை தர ஏற்பாடு செய்தார். அந்த அறிக்கை 3 குழுக்களின் மீது தெளிவாக குற்றம் சாட்டியது.
  (அ) இலங்கை அரசு
  (ஆ) விடுதலைப் புலிகள்
  (இ) முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழர்கள்

  மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் கிட்டத்தட்ட ஒரு அராஜகத்தையே கட்டவிழ்த்து விட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் அனுப்ப, அங்கு குடியேறிய தமிழர்களை பயமுறுத்தி, மிரட்டி, தண்டல் பணம் வாங்கிய நீசர்கள். இவர்களும் விடுதலைப் புலிகளின் அல்லக்கைகள்தான்.

  ———————
  மீண்டும் முக்கிய பிரச்சினைக்கு வருவோம். சேனல்-4 தொலைக்காட்சி விவரணப்படத்தை நான் பார்த்தேன். அதில் 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. முதல் 3 குற்றச்சாட்டுகளும் குற்றச்சாட்டுகளே அல்ல. அதாவது எந்த ஒரு நாடும், தன் இறையாண்மையை தற்காத்துக் கொள்ள எந்த ஒரு நடவடிக்கையையும் செயல்படுத்தலாம் என்ற ரீதியில் பார்க்கப்பட வேண்டியவை. அதிபர் திரு. இராஜபக்சே பிடிக்கப்பட்ட பெண் விடுதலைப்புலிகளை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள் என்று அறிவுறித்தியிருப்பார் என்று நான் நம்ப வில்லை. மேலும் பிரபாகரின் 12 வயது பிள்ளை கொடூரமாக கொல்லப்பட வேண்டும் என்று ஆணையிட்டிருப்பார் என்றும் நான் நம்ப வில்லை.

  போர் என்று வந்து விட்டால் சில மனித உரிமை மீறல்கள் நடக்கவே செய்யும். எந்த போருக்கும் இதுதான் விதி. எந்த நாட்டு இராணுவமும் இதற்கு விலக்கல்ல.

  பிரபாகரனை பிடித்தவுடன் கொன்று விடுங்கள் என்று அதிபர் கட்டளையிட்டிருப்பார் என்றே நானும் நம்புகிறேன். அதில் தவறேதும் இல்லை. முதல் கட்ட, 2ம் கட்ட விடுதலைப் புலி தலைவர்களும் கொல்லப்பட வேண்டும் என்றே கட்டளையிட்டிருப்பார். அதிலும் தவறேதும் இல்லை. போரிடும் போது, விடுதலைப் புலிகளினால் கட்டாயப்படுத்தி போரிட வைக்கப்பட்ட சிறார்களும் கொல்லப்பட்டிருப்பார்கள். அதிலும் தவறில்லை. கடைசி கட்ட போரின்போது பொது மக்களில் சிலர், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.
  அதிலும் தவறில்லை.

  பின் எதுதான் தவறு? இசைப்பிரியா போன்றவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டது, பிரபாகரனின் 12 வயது குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டது போன்றவை.

  இது போன்ற குற்றங்களை இழைத்தவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று கேட்பதில் தவறில்லை. தார்மீக நெறிமுறைகளின் அடிப்படையில் இது தவறுதான்.

  ஆனால் இவற்றுக்காக, இலங்கை அரசை மிரட்டி, பணிய வைத்து, தங்களின் அரசியல் காய்களை நிகழ்த்த சில நாடுகள் முனைவதை நியாயப்படுத்த முடியாது.

  இலங்கை அரசை மட்டும், குறிப்பாக இலங்கை இராணுவத்தை மட்டும் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்ட எந்த நாட்டிற்கும் அருகதையில்லை. இந்தியா உட்பட. பாலியல் பலாத்காரமும், குழந்தைகளை கொல்வதும், உலகம் முழுவதிலும், எதிரணியை மிரட்டும் ஆயுதமாக பயன்படுகிறது. லிபியாவில், சிரியாவில், ஏன் சில நேரங்களில் இந்தியாவிலும்தான்.

  இதற்காக, நாட்டை பலவீனப்படுத்த “மனித உரிமை மீறல்” என்னும் சாக்கில் மறைமுகப்போர் தொடுத்தால், உலகில் எந்த ஒரு நாடும் நிம்மதியாக இருக்க முடியாது.

  கடைசியாக, என்னைப் பொறுத்தவரை, இந்தியா கடந்த பல வருடங்களாக, விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், பொது மக்களுக்கு ஆதரவாகவும் காய்கள் நகர்த்தி இலங்கையை அமைதியை நோக்கி திருப்பிக் கொண்டிருப்பதற்காக
  இந்திய நடுவண் அரசை மனமாற பாராட்டுகிறேன். சில தகர டப்பா அரசியல்வாதிகளின் வெற்றுக் கூச்சலால் ஐ.நா சபையின் மனித உரிமை மாநாட்டில் இந்தியா இலங்கைக்கு எதிராக ஓட்டளிக்கக் கூடாது. அவ்வாறு ஓட்டளித்தால் கூட இலங்கையில் எந்த ஒரு நடவடிக்கையும் வராது. சிங்கள் பேரினவாதம்தான் மேலும் செழிக்கும்.

  கடைசியாக ஒரு செய்தி: இந்த மறுமொழியை பதிவிடும் நிலையில் இந்தியா ஐ.நா சபையின் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக, அமேரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்து விட்டது. தீர்மானம் நிறைவேறி விட்டது. ஆனாலும் இந்த தீர்மானத்தால் ஒரு பயனும் விளையப் போவதில்லை என்ற என் கருத்தில் மாற்றமில்லை.

  முக்கியமாக சீனா இந்த தீர்மானத்தை எதிர்த்து, இலங்கைக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளது. இதனால் இலங்கையின் நடுவண் அரசு, கட்டமைப்பு, ஆயுதம், போர் வீரர்களுக்கு பயிற்சி என்று அனைத்து தேவைகளையும் சீனாவின் மூலம்
  செய்து கொள்ள முனையும் என்பதை எளிதாக ஊகிக்கலாம்.

  தமிழக தகர டப்பா அரசியல்வாதிகளால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால், இலங்கையில் வாழும் அப்பாவி பொதுமக்கள் மேலும் கடினமாக சிங்கள பேரின வாதத்தால் பாதிக்கப்பட போகிறார்கள் என்றே நான் ஊகிக்கிறேன்.
  இது அடுத்த பல தசாப்தங்களுக்கு தொடரும் என்றே அஞ்சுகிறேன். இலங்கைக்கு எதிராக ஓட்டளிப்பதுதான் சிறந்தது என்ற நோக்கம், “நல்ல நோக்கம்” என்ற மாயை, இலங்கையின் அப்பாவி தமிழர்களை மேலும் இக்கட்டில்தான் ஆழ்த்தப் போகிறது. ஆனால் எதிர்காலத்தில் இந்த தகர டப்பா தமிழக அரசியல்வாதிகள் எளிதாக நழுவி விடுவார்கள்.

  விடுதலை புலிகள் பெரும்பாலும் அழித்தொழிக்கப்பட்டு விட்டார்கள். எச்ச சொச்சங்களால் ஒன்றும் செய்ய முடியாது. “படகு கவிழத்தான் போகிறது” என்று நன்றாகத் தெரிந்தும் விடுதலை புலிகளை ஆதரித்த அல்லக்கைகள் மீதும்
  கருணை தேவையில்லை.

  தமிழகத்தில் உள்ள தகர டப்பா அரசியல்வாதிகளுக்கு இதனால் பிரயோஜனமும் இல்லை (தமிழகத்தில் இது தேர்தல் பிரச்சாரமாக மாற வாய்ப்பே இல்லை). அவர்களுக்கு நஷ்டமும் இல்லை. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த விடுதலை
  புலி ஆதரவாளர்களில் சிலர் மேலும் பணம் பண்ணும் வாய்ப்பு உள்ளது.

  ஆனால்,
  ஐயோ பாவம்! அப்பாவி இலங்கைத் தமிழர்கள்!

 35. இந்தக் கட்டுரையாளரின் விருப்பப்படியும் RSS இயக்கத்தின் பரிந்துரையைக் கண்டுகொள்ளாமலும் இந்தியா வாக்களித்துவிட்டது.

  ஒரு வரலாற்றித் தவறு நடந்திருக்கிறது.

 36. LTTEயும், தமிழீலத்தையும் ஆதரிக்க முடியாது, அதே வேளையில் இலங்கை அரசின் அராஜகப் போக்கை கண்டிக்காமல் இருப்பதும் தவறு. கிருத்தவ பின் புலமிருந்தாலும் ஒரு நல்ல விசயத்தை சொல்லுமானால் இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.

  இலங்கையை எதிர்ப்பதால் உள்நாட்டு இனப் பகை ஏற்படும் என்பது குறுகியப் பார்வை. நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் ஆதரிக்காவிட்டால் மீள் குடியேற்றப்பட்டவர்கள் மீண்டும் ஒரு நாள் பாதிக்கப்படலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

 37. அருமையான கட்டுரை திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களே. உங்கள் அனைத்து ஆக்கங்களையும் மற்றவர்களின் ஆக்கங்களுக்கு நீங்கள் பதிவிடும் கருத்துக்களையும் இந்தத் தளத்திலும் இன்னுமொரு தளத்திலும் படித்துவரும் பலரில் நானும் ஒருவன்.உங்கள் ஆக்கங்கள் அனைத்தும் பல்துறை சார்ந்த அறிவின் பிழிவு என்பது சர்வநிச்சயம். ஆனால் கருத்தை யார் வேண்டுமானாலும் பதிவிட முடியும் என்பதற்கு உங்களுடைய இந்தக் கட்டுரைக்கு பதிவிடப்பட்டுள்ள சில கருத்துக்கள் எடுத்துக்காட்டாக உள்ளன. சிறிலங்காவில் நடைபெற்றது இன அழிப்பு. அதனை எதிர்த்து போராடியவர்கள் தமிழ் இந்துக்கள். ஏனெனில் இன அழிப்பு செய்யப்பட்டவர்கள் அவர்களே.இன அழிப்பை எதிர்கொண்டவர்கள் சாதி சமயம் பணக்காரன் ஏழை என்று பார்க்க முடியாது. அனைவரும் சேர்ந்துதான் போராடினார்கள்.இராமாயணத்தில் எது நடந்ததோ, மகாபாரத்ததில் எதவெல்லாம் நடந்ததோ அவைதான் தமிழர்களால் பெரும்பாலும் பின்பற்றப்பட்டன. தவறுகள் எதுவுமே நடைபெறாமல் இருப்பதற்கு போராட்டத்தை நடத்தியவர்கள் ராமரோ அல்லது பகவானுடைய மற்றைய அவதாரங்களோ அல்ல.
  திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களே ஈழவரலாறு தொடர்பிலும் விடுதலைப் போராட்ட மற்றும் துரோக கும்பல்களின் செயல்பாடு சம்மந்தமாகவும் பலவற்றை படித்து அதன் பிழிவுகளாகவும் இத்தளத்தில் வெளியிட உங்களை வேண்டுகின்றேன். ஓகை நடராஜன், தமிழ்ச்செல்வன் ராம் போன்றவர்கள் தங்கள் மனதில் பட்டத்தை உடனடியாக பதிந்திருக்கின்றார்கள். நீங்கள் ஈழ தமிழர்கள் பற்றியும் அவர்களின் அடிமைத்தளை விடுத்தளிப்போர் பற்றியும் அறிந்துகொள்ள மிக மிக அதிகம் உள்ளது நண்பர்களே.

 38. ///இணையத்தில் இந்து சிந்தனைகளுக்கு ஒளிவிளக்காக இருக்கும் அரவிந்தன் நீலகண்டன் இந்தக் கட்டுரையில் பலமாக சறுக்கியிருக்கிறார்.///

  ஆம்!

 39. R Balaji ,

  நீங்க பேசுறது விடுதலை புலிகளை பற்றி. நாங்க பேசுறது அங்குள்ள மனிதர்களை பற்றி. புலிகளை பற்றி பேசவேண்டுமென்றால் இங்கு வராதீர்கள். அது தனியாக பேசப்படவேண்டிய விஷயம். இங்கு வந்து குட்டையை குழப்பிக்கொண்டிருக்காதிர்கள்.

 40. எங்கேயோ இருக்கும் அமெரிக்கர்களுக்கு தெரிந்த இலங்கை தமிழர்களின் இன்னல்கள் தமிழ் நாடில் வாழும் சிலருக்கு தெரியவில்லை.
  இலங்கையில் அமைதியாக வாழ்கிறர்கள?
  தமிழர்களின் போரரட்டம் ஏன் துவங்கியது? அதை அவர்கள் பெற்று விட்டார்களா என்பது கூட அறியாமல் சிலர் எழுதுகிறார்கள். பரிதாபமாக இருக்கிறது. நிற்க,அமெரிக்க தனது நாட்டு மக்களை கொல்லவில்லை.

 41. R.Balaji,

  எதற்கு இந்த சுற்றி வளைப்பு, நேரடியாகவே சொல்லிவிடலாமே :

  “இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்ல்ல்ல்லோருமே அழித்தொழிக்கப்படவேண்டியவர்களே”

  “எங்கோ” இருக்கவேண்டியவர் ஐயா நீவிர்.

 42. @seenu //on March 22, 2012 at 11:02 am
  எனக்கு தெரிந்த ஒரு கம்யூனிஸ்ட் சொல்றான்…//

  அந்த கம்யூநிஸ்டிடம் ஏன் சீனா முதற்கொண்ட எல்லா கம்யூனிச நாடுகளும் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன, ஏன் சிங்கள வெறி அரசாங்கத்துக்கு ஆதரவாக ஓட்டு போட்டன என்று கேளுங்கள்.

  @சான்றோன்,
  உங்கள் கருத்தை நான் முழுமையாக அமோதிக்கிறேன். ஆனால் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள், ராஜீவ் காந்தி என்ன எண்ணத்துடன் செய்தார் என்பதை விட அதன் விளைவுகள் எத்தனை தமிழ்ப்பெண்கள் கர்பிழக்கக் காரணம் ஆனது என்பதையே மக்கள் உணர்வார்கள். அதே மாதிரி ராஜீவைக் கொன்றவர்களும் அது மிக மட்டமான ராஜதந்திரமற்ற செயல் என்பதை உணர இப்போது உயிருடன் கூட இல்லை.

  மிகத்தெளிவான மனதுடையவர் அரவிந்தன்; சேனல் 4 கைப் பார்த்து மயங்கும் அளவுக்கு ஒன்றும் உணர்ச்சி வசப்படுபவர் அல்லர். சேனல் 4 கைப் பார்த்து அவர் மயங்கினார் என்று சொல்பவரெல்லாம் இலங்கையில் வாழ்ந்து விடுதலைப் புலிகளின் அராஜகத்தை நேரடியாகப் பார்த்தீர்களா? பொய் வடியும் தி ஹிந்து நாளிதழைத்தானே படித்து மயங்கித்தானே கருத்து சொல்கிறீர்கள்?

 43. வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 04:55.20 PM GMT ]
  முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில், மக்களின் நீண்டகால வழிபாட்டு தலமாக விளங்கிய விநாயகர் ஆலயத்தை உடைத்து, அங்கு பௌத்த விகாரை கட்ட முற்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் பிரதமருக்கு அனுப்பிய மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது

 44. திரு.ஓசை, திரு.சான்றோன்,

  அரவிந்தனின் விமரிசனங்கள் எவ்வளவு சரியானவை என்பதைக் காலம் நிரூபிக்கும்.

 45. // இந்த கட்டுரையின் அபத்தங்களை வரிக்கு வரி என்னால் மறுக்க முடியும்…..வேறு யாரும் எழுதியிருந்தால் அதைத்தான் செய்திருப்பேன்…..நான் மிகவும் மதிக்கும் திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்களை புண்படுத்த விரும்பவில்லை… //

  திரு.சான்றோன்,

  உங்களது பின்னூட்டங்களையும் மறுக்கமுடியும், ஆனால் அது போன்ற பின்னூட்டம் வெளியிடப்படாது மட்டுறுத்தப்பட்டுவிடும்.

 46. ஆர்கனைசர் ஆசிரியர் தன் சொந்த கருத்துக்களை எல்லாம் எழுத முடியும் என்றால் எங்கேயோ இடிக்கிறது. மேலும் இந்த விஷயத்தில் சங்கம் வாய் திறக்காமல் இருந்தாலே நன்றாக இருந்திருக்கும். உலகில் எங்கேயும் இந்துக்களுக்கு அநீதி என்றால் நாம் மூடிக்கொண்டு இருக்க முடியாது. பிஜிக்கொரு நீதி , இலங்கைக்கொரு நீதியா? இலங்கை தமிழர்கள் ரத்த வெறி பிடித்த புத்தர்கள் அல்ல. மேலும் சிங்களர்களில் கணிசமானோர் கிறிஸ்தவர்கள் என்பதை நாம் மறக்ககூடாது.

 47. கேரளாவில் கொல்லத்தில் feb 25-2010 அன்று RSS தலைவர் மோகன் பாகவத் வருகை தந்த பொழுது அவரை வரவேற்பதற்கு ஒரு லட்சம் பூரண கனவேஷ்(full RSS uniform) அணிந்த சுயம் சேவகர்கள் குழுமினர்.. 500 ரக்ட்சக்(RSS security) மற்றும் எராளமான மக்கள் கூடினர்.. இது ஒரு மகத்தான வெற்றியாக கூரபடுகின்றது. கருநாடகாவில் பா ஜா கா ஆட்சி.. இதுவும் சங்கத்தின் வெற்றியாக பறை சற்றபடுகின்றது.. ஆந்தரவில் RSS என்பது naxalitesகளின் சிம்மசொபனம்.. பல naxalites பகுதிகளில் RSS சேவகர்கள் முழுநேர பணியாற்றுகிறார்கள் (Full time ப்ராசாரக்)

  இந்த முன்று மாநிலங்களும் முன்று குழப்பம் இல்லாத எல்லை என்பதில் முடிவாகின்றது.. அதாவது, கேரளா என்பது கேரளா மாநில எல்லை, கருநாடக என்பது கருநாடக மாநில எல்லை மற்றும் ஆந்திராவின் எல்லை ஆந்திரம் மாநிலம்.. ஆதலால் RSS சேவை என்பது எந்த எல்லைகுடுபட்டது என்பது இங்கு தெளிவாகின்றது.. அனால் தமிழகத்தின் எல்லை மற்றும் தமிழ் மொழி பேசும் மக்களின் எல்லை என்பது தமிழ் நாடு மட்டும் இல்லை என்ற நிலைப்பாட்டில் RSS வழுவுகின்றது என்று கூரலாம்..

  குருவி கூடு கட்டுவது போல RSS சுயம் சேவகர்கள் வீடு வீடோக சென்று சம்பார்க(marketing) செய்து மாணவர்களை அழைத்து வந்து ஷாகா மற்றும் முகாம் போன்றவற்றில் அறிமுகம் செய்து வைத்து சங்கத்தின் சங்கியவை(count) கூட்டுகின்றாகள் ..ஆனால் இதுபோல எதாவது ஒரு செய்தி வெளீடு அந்த அருமயான கூட்டை கலைத்து விடுகின்றது.. உதாரணம், சம்பர்கவிற்கு செலும் சுயம் சேவகர்களை (RSS உறுபினர்களை) “பிள்ளை புடிபவர்கள் வருகின்றனர்” என்று ஏளனம் செயும் பெற்றோகளை நான் பார்த்துள்ளேன்.. ஒரு பெற்றோர் எங்களிடம் கேட்ட கேள்வி இது.. “இலங்கை தமிழர்களும் ஹிந்துக்கள் தானே.. பிறகு ஏன் உங்கள் தலைமை அந்த படுகொலைகளுக்கு ஏதிராக குரல் எழுப்பவில்லை?”.. அதற்கு நான் மற்றும் ஏன் RSS நண்பர்கள் ” இலங்கை மண்ணில் நமது ஷாகா 22 இடங்களில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றது என்று கூறியதற்கு அவர் அதற்கான “ஆதாரம் எதவது உள்ளதா” என்ற கேள்விக்கு எனிடம் பதில் இல்லை.. காரணம் ஒரு ஈமெயில் போன்ற சாட்சி கூட என்னிடம் இன்று வரை இல்லை.. இதை பற்றி நான் சந்தித்த தமிழகத்தை சேர்ந்த மூத்த RSS பிரச்சாரக் ஒருவரிடம் கேட்ட பொழுது அவர் “சுய தம்பட்டம் RSS கொள்கைள் இல்லை” என்று பதில் வந்தது.. தமிழகத்தை பொறுத்த வரை இது சுய தம்பட்டம் இல்லை காலத்தின் கட்டாயம் என்று யார் RSS மேல் இடத்திற்கு எடுத்து சொலுவது? இந்த Digital world இல் புணாக்கு விக்கறவன் குண்டுசி விக்கறவன் எல்லாம் தான் படத்தை தமிழகத்தில் தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி ஒட்டி வச்சு அழகு பாக்கும் பொழுது, களத்தில் இறங்கி சேவை செயும் சங்கம் ஏன் தமிழகத்தில் போஸ்டர் ஒட்டி மக்களுக்கும் விழிப்புணர்வு செய்ய கூடாது? Auto stand il ஏன் ப ஜ கா கொடிகளை அதிகமாக காண முடியவில்லை? குப்பத்திலும் சேரி பகுதிகளிலும் ப ஜ கா கொடி பறக்கவிலை?

  பங்களா தேஷ் எல்லை ஊடுருவல் பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை ABVP “Chicken neck” என்ற இடத்தில இருந்து வெளிட்டது.. இந்த கட்டுரை என்பது ஒரு கள ஆவன ரிப்போர்ட்..Approximately 80 பக்கங்களை கொண்ட ஆங்கில ரிப்போர்ட். அனால் இது போல இலங்கையை பற்றி ஒரு ரிப்போர்ட் கூட இதுவரை வெளி வரவே இல்லை.. இலங்கை RSS இன் சேவை மற்றும் பணிகளை தமிழக மக்களுக்கு எடுத்து சொலும் விதமாக தமிழகத்தில் பிரமாண்டமாக பாராட்டு விழ ஒன்றை RSS தலைமை ஏன் எடுக்க கூடாது?

  எந்த இடத்தில சங்கம் வலு இழந்து கானபடுகின்றதோ.. அங்கெ ஹிந்து மதம் பெரும் ஆபத்துக்கு உள்ளாகும் என்பது RSS இல கூறப்படும் நீயதி.. இது போல தமிழகத்தில் பாரா முகம் RSS எடுத்தால் தமிழகத்தில் ஹிந்து மதம் அழிவது மட்டும் இல்லை, தமிழகமே தீ பிழம்பாக பற்றி எறியும் காலம் மிக தொலைவில் இல்லை..

 48. திரு.குமரன் மற்றும் எங்கள் மீது பாய்ந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்……

  இலங்கை தமிழர் விவகாரம் என்றாலே சிங்களர்கள் செய்வது மட்டுமே தவறு……தமிழர்கள் தரப்பில் தவறே நடக்கவில்லை என்று சாதிக்க வேண்டும்…..புலிகளின் வெறியாட்டத்தை பற்றி மூச்சு விடக்கூடாது….மீறி இருதரப்பு நியாயங்களையும் எடை போட்டு கருத்து வெளியிட்டால் அவன் தமிழர் விரோதி….இன உணர்வே இல்லாதவன்…..இத்யாதி….இத்யாதி….

  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புழங்கும் ரயில் நிலையத்தில் ஒரு அந்நிய நாட்டை சேர்ந்த தீவிரவாதி மெஷின் கன்னோடு நுழைந்து நூற்றுக்கணக்கானவர்களை குருவி சுடுவது போல் சுடுவான்…..அவனை ஒரு காவலர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பார்….அவனை சட்ட ரீதியான விசாரணை என்ற பெயரில் மூன்று நேரமும் பிரியாணி போட்டு வருடக்கணக்காக பராமரிப்போம்…..

  நம் நாட்டு பாராளுமன்றத்தை அந்நிய நாட்டு பயங்கரவாதிகள் துணையுடன் தகர்க்க முயற்சிப்பார்கள்……அதை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் பலர் உயிரிழப்பர்…..இந்த திட்டத்தின் மூளையாக செல்பட்டவனை சட்டத்தின் முன் நிறுத்தி அவனுக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டாலும் சிறுபானமையினர் ஓட்டை பொறுக்குவதற்காக தண்டனையை நிறைவேற்ற மாட்டோம்…….

  அரசு நிர்வாகத்துக்கே கட்டுப்படாமல் நாட்டின் பல பகுதிகளை நக்சல்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை மீட்பதற்காக அவர்கள் காலில் விழுந்து கெஞ்சுவோம்…..போதாதென்று தீவிரவாதம் உருவாவதற்கான காரணங்களை பற்றி மணிக்கணக்காக அலசி ஆராய்வோம்…..

  வங்காள தேசத்திலிருந்து திருட்டுத்தனமாக ஊடுருபவர்களை வரவேற்று அவர்களுக்கு ரேஷன் கார்டு , வாக்காளர் அடையாள அட்டை போன்றவை வழங்கி நம் நாட்டு குடிமக்களை புறக்கணிப்போம்……

  காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்ட ஹிந்துக்கள் டெல்லியிலும் , நாட்டின் இதரபகுதிகளிலும் நடைபாதைகளில் சீரழிவதை கண்டுகொள்ள மாட்டோம்….காஷ்மீரில் இருந்து ராணுவத்தை வாபஸ் வாங்குவது பற்றியும் , அவர்களுக்கு சுயாட்சி வழங்குவது பற்றும் விவாதிப்போம்…..

  மாதம் தோறும் நடைபெறும் பயங்கவாத தாக்குதல்களுக்கு ஆயிரக்கணக்கான மக்களையும் , பாதுகாப்பு படையினரையும் பலி கொடுத்துகொண்டே இருப்போம்….பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட அசைக்க மாட்டோம்…..

  நமக்கு இன்னொரு நாட்டை குறைசொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது ?

  பெருந்தன்மைக்கும், கோழைத்தனத்துக்கும் நூலளவே வேறுபாடு……சிறுபானமையினர் நலம்,ஜன நாயகம் , மக்கள் கருத்து ,வேலையில்லா திண்டாட்டம் ,இதுபோன்ற வார்த்தைகள் நம் கோழைத்தனத்தை மறைக்க பயன்படுத்தும் முகமூடிகள்……நாம் அடிப்படையில் கோழைகள் , பேடிகள்…..ஒரு பிரச்சினையை நேரடியாக எதிர்கொள்ளும் துணிவு நமக்கு கிடையாது….நம் கையாலாகாத்தனத்தை மறைக்க அலங்கார வார்த்தைகளை பயன்படுத்தியே காலம் தள்ளுவோம்….அதற்காக உலகில் உள்ள எல்லா நாடுகளும் நம்மைப்போலவே இருக்கவேண்டும் என்பது பேதமை…..

  ஆண்மை உள்ள நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் விதமே வேறு……ஆயுதத்துக்கு ஆயுதத்தால் தான் பதில் சொல்ல முடியும்…..சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்திருக்க இஸ்ரேல் தன் நாட்டு மக்களை எப்படி பாதுகாக்கிறது?உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் வேறு பயங்கரவாத தாக்குதல்களே நடைபெறவில்லையே எப்படி? லண்டன் சுரங்க ரயில்பாதை வெடிவிபத்திற்குப்பிறகு அங்கு என் அடுத்த தாக்குதல் நடைபெறவில்லை?

  இதற்கெல்லாம் நேர்மையான பதில்களை தேடினால் , நாம் இலங்கையை குறை சொல்ல மாட்டோம்……. நடந்தது போர் அல்ல….உலகிலேயே மிக பயங்கரமான , ஆயுதம் தாங்கிய பயங்கரவாத கும்பலுக்கு எதிரான நடவடிக்கை…..இதில் பொதுமக்கள் உயிரிழப்பு வேதனைக்கு உரியதுதான்…..ஆனால் அதற்கு முழுக்க முழுக்க சிங்கள ராணுவத்தை மட்டும் குறை சொல்ல முடியாது…..பொது மக்களை புலிகள் கேடையங்களாக பயன்படுத்தினர் …..தப்பி ஓட முயன்ற தமிழர்களை சுட்டுக்கொன்றனர்…… முல்லைத்தீவை ராணுவம் கைப்பற்றிய போது அங்கே மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது ஏன் ? இப்போதும் ராஜபக்சே தயங்கியிருந்தால் , இனி எப்போதும் புலிகளை அழிக்க முடியாது….ஆகவே தமிழர்கள் பலியானதற்கு புலிகளே முக்கிய காரணம்…..

  இனி நடக்க வேண்டிய விஷயங்களை மட்டுமே கவனிப்போம்…..தமிழர்கள் மீள் குடியேற்றம், தமிழர்களுக்கான உரிமைகளை , வசதிகளை,வாழ்வாதாரங்களை பெற்றுத்தருவதே முக்கியம்….அதற்கு இலங்கையை வற்புறுத்துவோம்….அதில் தவறு ஏற்படின் சர்வதேச நிர்பந்த்தத்தை ஏற்படுத்துவோம்…..அதை விடுத்து மீண்டும் மீண்டும் போர்க்குற்றம் என்று அலறுவது எந்த விதத்திலும் பயன்தராது….

  புலம் பெயர்ந்த தமிழர்களின் பணத்துக்கு அடித்துக்கொள்ளும் வைகோ, நெடுமாறன் ,சீமான் , திருமாவளவன் போன்ற தேச விரோதிகளை புறக்கணிப்போம்……மொழி , இனம் போன்றவைகளை பயன்படுத்தி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகாலம் நம்மை முட்டாளாக்கியது போதும்….இனியேனும் கண்ணை திறந்து நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை கவனிப்போம்….

 49. திரு. சான்றோன்,

  ஆயிரக்கணக்கில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டாலும், அவனும் செய்தான், இவனும் செய்தான், சரியாப் போச்சு, நடந்து போன விசயத்தை விட்டுவிட்டு நடக்கப் போவதைப் பார்க்கலாம் என்ற போக்கில் பேசுகிறீர்கள்.

  ஒரு யூதனைக் கொன்றவர்கள் அமெரிக்கர்களாக இருந்தாலும் பதிலடி கொடுக்கத் தயங்காத இஸ்ரேலை இங்கே இழுக்கிறீர்கள்.!

  இன/மொழி/மதவெறி கொண்டு, தமிழ் ஹிந்துக்களை பாதுகாப்பு வளையத்திலும், புலிகளை முடித்துவிட்டு பின் அடுத்த இரண்டு நாட்களும் ஈவிரக்கமின்றி ஆயிரக்கணக்கில் கொன்றொழித்தவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது என்ன வகை நீதியோ??!!

 50. தயவு செய்து ஏன் இலங்கையில் இந்த தமிழர்களின் போராட்டம் ஆரம்பித்தது என ஆரம்பம் முதலே நடந்த விஷயங்களை யாராவது விவரமாக எழுதினால்தான் இங்கே காஷ்மீர் பிரச்சினையோடு இலங்கை பிரச்சினையையும் முடிச்சு போட்டு எழுதும் அதி புத்திசாலிகளுக்கு புரியும் என நினைக்கிறேன். நாம் காஷ்மிர முஸ்லிம்களுக்கு என்ன என்ன உரிமைகள் மற்றும் மரியாதைகள் நாம் கொடுத்தோம் , இலங்கையில் தமிழ் இந்துக்களுக்கு என்ன உரிமைகள் கிடைத்தன என்பது எல்லாம் ஒப்பிட்டு யாரவது எழுதுங்களேன். இங்கே பலரும் தினமலர் மட்டும் படித்துவிட்டு புலிகளை எதிர்க்கிறோம் பயங்கர வாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்திய நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எழுதி வருவது வன்மையாக வருந்த வேண்டிய விஷயம்.

 51. கணேசன் அவர்களே…..

  // ஆரம்பம் முதலே நடந்த விஷயங்களை யாராவது விவரமாக எழுதினால்தான் //

  அது ஏன் சார் ” யாராவது ” ? நீங்களே எழுதுங்களேன்? நாங்கதான் தினமலர் மட்டும் படிக்கிறவங்க …..நீங்கதான் உலக சரித்திரத்தையே கரைச்சு குடிச்சவராச்சே?

  // நாம் காஷ்மிர முஸ்லிம்களுக்கு என்ன என்ன உரிமைகள் மற்றும் மரியாதைகள் நாம் கொடுத்தோம் //

  என்னுடைய மறுமொழியை முதலில் சரியாக படியுங்கள்…..முஸ்லீமகளுக்கு காஷ்மீரை பட்டா போட்டு குடுத்துட்டு பண்டிட்களை தெருவில் விட்டுவிட்டோம் என்பதுதான் என் குற்றச்சாட்டு……

  // இந்திய நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் //

  தங்களுக்குள் அடித்துகொண்டு கிடந்த பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் பிரித்து விடுகிறேன் பேர்வழி என்று செய்தோம்….பலன் என்ன ? இன்று அவர்கள் மத அடிப்படையில் ஒன்று சேர்ந்து கொண்டு நம் மீதே பாய்கிறார்கள்…..மதத்தால் , மொழியில் வேறு வேறான சிங்களர்களையும் ,தமிழர்களையும் இரு நாடுகளாக பிரித்தால் இருவரில் யாராவது ஒருவர் நமக்கு எதிரியாவார்கள்…… வடக்கிலும் ,கிழக்கிலும் , மேற்கிலும் பகை நாடுகள்….தெற்கு ஒன்றுதான் பாக்கி….அங்கும் ஒரு எதிரியை உருவாகிவிட்டால் போதும்………சுத்தம்…..

 52. குமரன் அவர்களே…..

  // ஒரு யூதனைக் கொன்றவர்கள் அமெரிக்கர்களாக இருந்தாலும் பதிலடி கொடுக்கத் தயங்காத இஸ்ரேலை இங்கே இழுக்கிறீர்கள்.! //

  நல்ல விஷயம் எங்கேயிருந்தால் என்ன சார்….. கற்றுக்கொள்ள வேண்டியதுதானே?அவர்களை போல ஆண்மையுள்ள தேசமாக நாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடாதா ?

  இப்போது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முழுமையாக படியுங்கள்……பிறகு இவ்வளவு உணர்ச்சிவசப்பட மாட்டீர்கள்…..நான் அடிப்பது போல் அடிக்கிறேன்,…..நீ அழுவது போல் அழு ..என்பதுதான் அதன் உட்கருத்து……இந்த வீணாய்ப்போன தீர்மானத்தை ஆதரித்தது எவ்வளவு தவறு என்பதை காலம் சொல்லும்……

 53. //நடந்து போன விசயத்தை விட்டுவிட்டு நடக்கப் போவதைப் பார்க்கலாம் என்ற போக்கில் பேசுகிறீர்கள். //

  வேறு என்ன சார் செய்யலாம்? இந்தியா முன்முயற்சி எடுத்து ராஜபக்சே சகோதரர்களை தூக்கில் போட வேண்டுமா?

  நடைமுறையில் சாத்தியமானதை மட்டுமே நான் பேசுகிறேன்,….கனவுலகில் சஞ்சரிப்பது உங்கள் விருப்பம்….வீட்டோ அதிகாரம் கொண்ட இரு நாடுகள்[ சீனா,ரஷ்யா ] இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் ஐநா சபையில் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது….

 54. கிறிஸ்தவ நிகழ்ச்சி நிரல்களுக்காக, வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவவளர்களுக்காக,தமிழகத்தில் உள்ள தமிழ் பிரிவினை வாதிகளுக்காக இலங்கையில் வாழும் ஹிந்துக்கள் அழிய வேண்டியதில்லை.அவர்கள் வளமுடன் இலங்கையில் வாழ வேண்டியவர்கள் என்பதை ஆர் பாலாஜி அவர்களும், தமிழ்ச்செல்வன் அவர்களும் மிக தெளிவாக நீண்ட விளக்கம் அளித்துள்ளார்கள். மற்றும் நண்பர்கள் சான்றோன், ஓகை நடராஜன், ராம், பெருந்துறையான் அழகிய விளக்கங்கள் தந்துள்ளார்கள்.புலிகளினால் போரில் பாதிப்படைந்த இலங்கை ஹிந்துக்களுக்கு ஆர்எஸ்எஸ்சால் சிறப்பாக உதவிகளை செய்யமுடியும் போது இந்திய அரசால் இன்னும் எவ்வளவோ அவர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்திற்கு செய்ய முடியும்.அதை பற்றியா தமிழகத்தில் அக்கறைபடுகிறார்கள்? ஹிந்துக்களை எப்போதும் கிண்டலடிக்கும் தமிழக தலைவர் ஒருவர் சொல்கிறார் தமிழ் ஈழம் தான் தனது கனவாம். அமெரிக்காவில் உள்ளவன் கனவு, கனடாவில் உள்ளவன் கனவு, லண்டனில் உள்ளவன் கனவுகளை நிறை வேற்றுவதற்கு இலங்கையில் ஹிந்துக்கள் பலியாக முடியாது.

  //புலிகளை எதிர்க்கிறோம் பயங்கர வாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்திய நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எழுதி வருவது//
  புலி பயங்கரவாதிகளை ஆதரிப்பது இந்தியாவின் பாதுகாப்பு என்பது சிறுபிள்ளைதனமான நகைச்சுவை. உலகத்தின் நாலாவது பெரிய இந்திய இராணுவத்தையே ஓட விரட்டிய வீர புலிகள் என்கின்ற தமிழக பிரிவனைவாதிகளின் பரப்புரைகளில் இருந்தே இப்படியான அபந்தங்கள் தோன்றின. ஓசமா பின் லாடனை தனது தேவைக்கு பயன் படுத்திய அமெரிக்கா அதன் விளைவுகளையும் பின்பு அனுபவித்தது.

 55. விடுதலைப் புலிகளை வித்திட்டு வளர்த்தது இந்தியா; இந்திரா தலைமையிலான இந்திய அரசு. அதற்கு எவ்வாறு பொறுப்பேற்கிறோம்? எதை நோக்கிப் போராடுகிறோம் என்று இலக்கில்லாதவாறு இந்திய ராணுவத்தை அமைதிப் படையாக அனுப்பி என்ன சாதித்தோம்? புலியையும் ராணுவ வீரர்களையும் அடுத்தடுத்த அறைகளில் மருத்துவம் பெற வைத்தோம். உள்ளூர் அரசியலை மையமாக வைத்து கருத்து சொல்வது அபத்தம்.

 56. திரு.அரவிந்தன் போன்றவர்கள் வெறும் பத்திரிகையில் வருகின்ற ஒரு செய்தியை மட்டுமே வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினைப் பற்றி தவறான விதத்தில் விமர்சனம் செய்வது அவருக்கும் மற்ற ஊடங்கங்களில் எவ்வித ஆதாரமும் இன்றி ஆர்.எஸ்.எஸ். பற்றி கட்டுரை எழுதுபவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதையே காட்டுகிறது.

  இன்று அமைப்பு ரீதியாக நாடெங்கிலும் காடு, மலை, கடற்க்கரை என அனைத்து பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்தான் தேசிய சிந்தனைகளையும், விழிப்புணர்வையும், எண்ணற்ற சேவைப் பணிகளையும், பலவித சவால்களுக்கு இடையே, எந்த புகழ், பாராட்டுகள், வசைபாடுதல்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.

  அந்த இயக்கத்தையும் அரவிந்தன் போன்ற ஹிந்து சிந்தனை கொண்டவர்களும் அவதூறு பிரசாரம் செய்வதால் என்ன நன்மை ஏற்படும் என்று தெரியவில்லை. அரவிந்தன் போன்றவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கும்போது ஒரு விஷயம் பத்திரிகையில் வந்தால் உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதைத் தவிர்த்து அவ்விஷயம் பற்றி அந்த இயக்கத்தில் இருப்பவர்களுடன் ஒரு வார்த்தை கலந்து பேசி உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொண்டு எழுதுவதே நல்லது. அவர் அதைச் செய்ய மறந்து விட்டார்.

  இங்கு பலர் இலங்கைத் தமிழர்கள் பற்றி பேசுவதே அவர்களுக்குச் செய்திடும் நன்மை என்று பேசிக் கொண்டும் அறிக்கைகள் விட்டுக் கொண்டும் இருக்கையில் இலங்கையில் ஹிந்து ஒற்றுமைப் பணியினையும், பல தொண்டுக் காரியங்களையும் அந்நாட்டில் இருக்கின்ற ஹிந்துக்களைக் கொண்டே தொடர்ந்து 10௦ ஆண்டுகளுக்கும் மேலாக செய்து கொண்டிருக்கிறது.

  தமிழ் ஹிந்துவில் இதுபோன்ற வெறும் சர்ச்சையைக் கிளப்பிவிடுகின்ற கட்டுரைகள் வருவதைத் தவிர்த்தால் அதுவே நீங்கள் ஹிந்து சமுதாயத்திற்கு செய்கின்ற மிகப் பெரிய தொண்டாகும் என்பது எனது பணிவான கருத்தாகும்.

  வித்யா நிதி.

 57. சான்றோன் அவர்களே,

  // நல்ல விஷயம் எங்கேயிருந்தால் என்ன சார்….. கற்றுக்கொள்ள வேண்டியதுதானே?அவர்களை போல ஆண்மையுள்ள தேசமாக நாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடாதா ? //

  ஆசைப்பட்டால், இந்துக்களை அழிப்பவர்களை எதிர்த்துக் கூடப் பேசக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கமுடியாது.

  // இப்போது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முழுமையாக படியுங்கள்……பிறகு இவ்வளவு உணர்ச்சிவசப்பட மாட்டீர்கள்…..நான் அடிப்பது போல் அடிக்கிறேன்,…..நீ அழுவது போல் அழு ..என்பதுதான் அதன் உட்கருத்து……இந்த வீணாய்ப்போன தீர்மானத்தை ஆதரித்தது எவ்வளவு தவறு என்பதை காலம் சொல்லும்……//

  அமெரிக்கத் தீர்மானமும், இந்தியா கொண்டுவந்த திருத்தமும் நீதி வழங்கப் போவதில்லை. ஆனால் ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள், நலன்களை கவனிக்கும் உலக நாடுகளின் அழுத்தம் பேரினவாத இலங்கை அரசின் மீது வலுப்பெற கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. சர்வதேச ஊடகங்களை அனுமதிக்கமுடியாது என்று இலங்கை இனியும் சண்டித்தனம் செய்யமுடியாது. அந்த அளவில் இது வரவேற்கப் பட வேண்டிய துவக்கம் தான்.

  ஆனால் வீணாய்ப் போனத் தீர்மானம், எனவே ஆதரிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டையா நீங்கள் எடுத்தீர்கள்?!

  // வேறு என்ன சார் செய்யலாம்? இந்தியா முன்முயற்சி எடுத்து ராஜபக்சே சகோதரர்களை தூக்கில் போட வேண்டுமா?

  நடைமுறையில் சாத்தியமானதை மட்டுமே நான் பேசுகிறேன்,….கனவுலகில் சஞ்சரிப்பது உங்கள் விருப்பம்….வீட்டோ அதிகாரம் கொண்ட இரு நாடுகள்[ சீனா,ரஷ்யா ] இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் ஐநா சபையில் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது….//

  எதிரியை எதிர்த்துப் பயனில்லை என்றால், ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பது ஏன்?!

  தமிழரான நீங்களே தமிழ் ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உணர மறுக்கும் பட்சத்தில் யாரைச் சொல்லி என்ன பயன்?!

 58. //அமெரிக்கத் தீர்மானம்
  சர்வதேச ஊடகங்களை அனுமதிக்கமுடியாது என்று இலங்கை இனியும் சண்டித்தனம் செய்யமுடியாது. அந்த அளவில் இது வரவேற்கப் பட வேண்டிய துவக்கம் தான்.//
  இந்தியாவின் தமிழக பிரிவினைவாதிகளின் ஊடகங்களை சேர்ந்தோர் இலங்கை வந்து சென்று தங்கள் நோக்கத்தின் படி தமிழகத்தில் இலங்கை பற்றி வேறு விதமான தோற்றத்தை உருவாக்க கடும் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளார்கள்.எனது உறவினர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த போது துபாயில் சில மணி நேரம் இடை தங்கல்(transit) அங்கே சந்தித்த சில இந்திய தமிழர்கள் கேட்டார்களாம் கவலையுடன்
  நீங்கள் இலங்கைக்குள் போக முடியுமா?
  உங்கள்உறவினர்களை பார்க்க முடியுமா?
  நீங்கள் பயப்படவில்லையா?
  புலி பயங்கரவாதிகள் ஒழிக்கபட்டதில் இருந்து ஆர்எஸ்எஸ் ஆல் இலங்கை ஹிந்துகளுக்கு செய்யபட்ட உதவிகள், இலங்கை அரசு, நல்லெண்ணம் கொண்ட நிறுவனங்கள், நாடுகள் செய்த உதவிகள் எல்லாம் இந்தியாவின் தமிழகத்தில் புலியாதரவு பிரிவினைவாதிகளால்திட்டமிடப்பட்டு இருட்டடிப்பு செய்யபட்டது. அமெரிக்கத் தீர்மானம் மூலம் இதுவரை செய்யபட்ட உதவிகள் தொடக்கம் எல்லாமே இலங்கை ஹிந்துக்களுக்கு அமெரிக்கத் தீர்மானம் மூலம் கிடைத்தவை என்று இந்திய தமிழகத்தில் படம் காட்டுவதற்கும்,அமெரிக்க இரட்சகனின் புகழ் பாடவும் உதவும்.

 59. விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களைப் பற்றி யாரும் பேசவில்லையே.அது ஏன்?அந்த வீரர்களில் தமிழர்கள் யாரும் இல்லையா/ அன்றைய நிலையில் பிரேமதாசாவின் உறவு பிரபாகரனுக்கு இனித்தது என்பதை மறுக்க முடியுமா?போர் நிறுத்தம் செய்ய வேண்டாம் என்று வைகோவும் நெடுமாறனும் நடேசனிடம் கேட்டுக் கொண்டதால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தது என்று நார்வே அரசின் அறிக்கை சொல்கிறதே? அது பற்றி அரவிந்தன் என்ன சொல்கிறார்? எது எப்படியோ போகட்டும் . சங்கத்தை சாத்துவதுதான் நமது நோக்கம் என்று த ஹி நினைக்கிறதா?

 60. இலங்கையில் தமிழிந்துக்களுக்கு எதிராக சிங்கள அரசுகளினால் இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளத்தொடங்கி பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. என்றாலும் பதிவுகளின்படி 1919 ஆம் ஆண்டுமுதல்தான் தமிழ் இந்துக்களின் அரசியல் தலிமைகளினால் இதன் பயங்கரம் உணரப்பட்டு குரலெழுப்பவும் நீதி கோரியும் போராட தலைப்பட்டார்கள்.இது வரலாறு. இதன் தொடர்ச்சியாக 1958 ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் பரவலாக தமிழர்களின் உடைமைகள் சிங்களர்களால் சூறையாடப்பட்டும் கொள்ளையடிக்கப்பட்டும் , ஒரு இளம் தமிழ் இந்துப்பெண் உயிருடன் கொதிக்கும் தார் பீப்பாய்க்குள் வீசப்பட்டு கொல்லப்பட்டது உட்பட பல நூறு பேர் உயிருடன் எரியூட்டப்பட்டும் வெட்டியும் கொத்தியும் கொல்லப்பட்டது நேர்மையான சிங்களவர்களாலேயே பதியப்பட்டுள்ளன.இவைபற்றிய நூல்கள் கூட சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
  1930 களில் இருந்து எமது தமிழ் அரசியல் தலைவர்களால், தமிழ் இந்துக்களும் சிங்கள பவ்த்தர்களைப்போன்று சமமாக நடாத்தப்பட்டு சம வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று அப்போதைய பிரித்தானிய மகாரானிவரை சென்று போராடினார்கள். ஆனால் தலைவர்களினதும் மக்களினதும் நூறு சதவீத் சாத்விக போராண்டங்களனைத்தும் சிங்கள ஆட்ச்சியாளர்களால் படைகளைக் கொண்டும் காடையர்களைக் கொண்டும் வன்முறை மூலமே பதிலளிக்கப்பட்டது. அப்பேற்பட்ட பட்டுத்தேளிந்த அனுபவசாலிகளான தமிழ்த் தலைவர்களினால் 1970 களின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட முடிவே “இனிமேல் தமிழ் இந்த்துக்களுக்கு உள்ள ஒரே இறுதித் தெரிவு ஆயுத மூலமேனும் பிரிந்து சென்று காலனி ஆட்ச்சிகளிற்கு முன்பு இருந்தது போன்று தமிழருக்கு என்று தனி அரசு அமைப்பது” என்பதாகும்.
  என்றாலும் 1970 களின் இறுதி அரையாண்டுகளிலேயே ஆயுதப்போராட்டம் உருவானது என்பது சமகால வரலாறு. உணர்ச்சி மேலீட்டால் தான்தோன்றித் தனமாக சில ஆயுதக்குழுக்களும் உறுதியான தலைமையின் கீழ் பலம் வாய்ந்த ஒரே அமைப்பாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் வெளிநாட்டு ஆளும் ஆதிக்க சக்திகளின் அனுசரணையுடன் இன்னும் சில போராட்டகுளுக்களும் முளை எடுத்தன.இதுகும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த சமகால வரலாறு.
  நிற்க! அண்மைய ஈழ வரலாற்றில் தமிழ் இந்துக்கள் இழந்தவை பல்லாயிரம் உயிர்கள்,(சில லட்சம்) பல்லாயிரம் கோடி சொத்துக்கள். இதனைச் செய்வதற்கு சிங்களவர்கள் கணிசமான அளவு பொருளாதாரத்தை முதலிட்டிருந்தார்கள்.இந்த தமிழ் இந்துக்களின் அவலங்களை வைத்துப் பயனடைந்தது தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தாம் தமிழர் இல்லை எனக் கூறும் முஸ்லீம்களும் வெளிநாடில் இருக்கக்கூடிய சில பத்திரிகையாளர்களும் சில அரசியல் தொழிலதிபர்களும் என்பது உண்மை.
  இங்கே கருத்துக் கூறும் சிலர், சுவாமிகளும் சாமிகளும் ராமர்களும் நாராயனர்களும் புனைந்துவிடும் கதைகளை வைத்து இதுமட்டும்தான் என்று திரும்பத் திரும்ப கருத்துரைக்க வருகின்றார்கள்.ஆனால் கட்டுரையாளர் பெருமதிப்பிற்குரிய அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் இவற்றை பெரிதுபடுத்த மாட்டார் என்பது எனது திடமான நம்பிக்கை.

  அத்துடன் இத்தளம் ஆரம்பிக்கப்பட்டு சிலவருடங்களில் இருந்து தவறாது இத்தளத்தை பயன்படுத்துபவர்களில் நானும் ஒருவன். ஆனால் இங்கு கருத்துக் கூறுபவர்கள் சிலரின் போக்கு தமிழர்கள் அனைவரும் கொல்லப் படவேண்டியவர்கள் போன்று உள்ளது. உண்மைக்கு கொஞ்சமும் தொடர்பின்றி தாம் தமிழர்கள் அல்லபோன்று எழுதுகின்றார்கள். அல்லது தமிழர்கள் இந்துவாக இருக்க தகுதி அற்றவர்கல்போன்று நினைக்கின்றார்கள்.என்னைப்பொருத்த வரையில் நான் ஒரு இந்து என்று சொல்லி பெருமைப் பட்டுக்கொள்பவன். இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு இந்து வெறியன் .சிலரின் கருத்துக்கள் என்னையே ஈடாட்டம் கொள்ள வைக்கின்றது என்றால் சாதாரண ஒரு ஈழத் தமிழன் பார்த்தால் அவன் மனது என்ன பாடுபடும். எவ்வளவு கொதிப்படைவான். ஏனெனில் அவ்வாறான கருத்துக்களை கூறியிருப்பவர்கள் சாதாரணர்கள் அல்ல.
  சர்வம் சிவமயம்
  நன்றியுடன்
  சுப்ரமணியம் லோகன்.

 61. தமிழர்களின் மேல் மற்ற இந்தியர்களுக்கு இருக்கும் குறை மரியாதைக்கு நாம் தான் காரணம்,நம்மில் உள்ள குப்பைகளை கிளாசிக் என முன்வைப்பதும் மத்தியில் அதிகாரம் கிடைக்கும் போது திருடுவதும் தான் நாம் செய்வது பிறகெப்படி நம்மை மதிப்பார்கள், பொதுவெளியில் நாம் தமிழர் என்று முன்வைப்பது இந்தியன் என்ற வார்த்தைக்கு எதிராகவே இந்த குரல் சிலர்தான் என்றாலும் இவர்கள் குரல்தான் ஓங்கி ஒலிக்கிறது .
  நாம் நம் மேன்மையை அவர்கள் முன் வைக்கும் போது நம் மதிப்பும் உயரும் நம் கருத்துகளை கேட்க வேண்டிய சூழலும் ஏற்படும் ,அநீ போன்ற அறிவுஜீவி தன் கருத்துகளை முன் வைக்கும் போது rss தலைமை அதை பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அவரின் வாதத்தை இப்படி பலவீனப்படுத்துவது நமக்கு அழகல்ல

 62. இலங்கை மலையக தமிழனை பற்றி பேச நாதி இல்லை. 50 வருடம் குடிஉரிமை இல்லாமல் அகதியாக இருந்தது. வந்தேறிகள் என தமிழன் தமிழனை ஒதுக்கி விட்ட கொடுமை. சாவு அரசியல் நடத்தும் இழிவை விடுவோம் தமிழனை காக்க ஒன்று படுவோம்

 63. அய்யா சான்றோன் அவர்களே நான் ஒன்றும் உலக சரித்திரம் கரித்து குடித்தவன் அல்ல.மாற்று கருத்துக்களை கேட்க மறுப்பவனும், அல்ல. யாரையும் விட தேச பற்றிலோ மத பற்றிலோ குறைந்தவனும் அல்ல. இங்கே இல்லாத ராமனின் பாலம் என்று போராடும் நீங்கள் இலங்கை தமிழ் இந்துக்களை சக மனிதனாக கூட பார்க்க மறுக்கும் கூட்டம் என்று தான் நான் எண்ணுவேன்.
  ..மதத்தால் , மொழியில் வேறு வேறான சிங்களர்களையும் ,தமிழர்களையும் இரு நாடுகளாக பிரித்தால் இருவரில் யாராவது ஒருவர் நமக்கு எதிரியாவார்கள்…
  சரிதான் ஆனால் இப்போது இருவருமே நமக்கு எதிரி ஆகி விட்டார்களே. இலங்கை சீனாவோடு சேர்ந்து கொண்டு நம் கண்ணில் விரல் விட ஆரம்பித்து விட்டது. ம் ராமனை நம்பும் நாம் ராவணனை மறக்கலாமா? அப்போதிரிந்தே இலங்கை தமிழர்கள் நாடு. இங்கே உள்ள பிரிவினைவாத திராவிடர்கள் இலங்கை தமிழர்களை ஆதரிக்கிறார்கள் என்பதற்காக நாம் தமிழர்களை கொல்வதை ஆதரிக்க வேண்டாம். சிங்களர்கள் நமக்கு எப்போதும் ஆதரவு தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் கிறிஸ்தவத்தின் தாக்கம் அதிகம்.

 64. வங்காளிகள் ஆயுதம் ஏந்திய பிறகும் இந்திய அவர்களை ஆதரித்து தனி நாடு பிரித்து கொடுத்தது. இலங்கையிலே தமிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு அதன் விளைவாக அவர்கள் சாத்வீகமாக போராட ஆரம்பித்த காலத்திலேயே நாம் எதாவது செய்து இந்த விஷயம் கை மீறி போகாத மாதிரி செய்திருந்தால் இந்த அளவுக்கு இந்துக்கள் அங்கே கஷ்டப்படிருக்க மாட்டார்கள். (edited)

 65. // பிரிவினைவாத திராவிடர்கள் இலங்கை தமிழர்களை ஆதரிக்கிறார்கள் என்பதற்காக நாம் தமிழர்களை கொல்வதை ஆதரிக்க வேண்டாம். //

  முற்றிலும் ஆமோதிக்கிறேன். ஈழத்தமிழர்களும், போராளிகளும், புலிகளும் ”ஈழத்து திராவிடக் குஞ்சுகள்” என்பது போன்ற மாயையை இங்குள்ள திராவிடக்குழுக்களும், தினமலர் போன்ற ஊடகங்களும் உருவாக்கி ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஏதோ இனவெறிப் போராட்டமாக சித்தரித்து ஈழத் தமிழர்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்து வைத்திருக்கிறார்கள்.

 66. எவ்வாறு இருப்பினும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை.போரின்போதும்,பின்னரும் பல சிவன் கோவில்கள் அழிக்கப்பட்டு,புத்த விகாரைகள் நிறுவப்பட்டு வருகின்றன.இதற்கு ஒரே வழி,தமிழர்களுக்கு வடக்கு கிழக்கை இணைத்து தனி நாடு பெற செய்வதுதான்.அதற்கு ஆர்.எஸ்.எஸ் உதவ வேண்டும்.
  சிவன் கோவில்கள் அழிக்கப்பட்டது குறித்து எந்த கவலையும் ஆர்.எஸ்.எஸ். தெரிவிக்கவில்லை.

  இந்த நிலைமை தொடந்தால், ” தமிழ் இந்துக்கள் என்பவர்கள் அங்கே பௌத்த மக்களாக மாற்றப்பட்டு விடுவார்கள்.”

  புரிந்து கொள்ள வேண்டிய வரலாறு : “தமிழர்களுக்கு தொடந்து அநீதி இழைக்கப்படுகிறது.”

  புலிகள் ஒன்றும் மோசமானவர்கள் அல்ல.மேலும் பிரபாகரனின் மூதாதயார்களே புகழ்மிக்க வைத்தீஸ்வரன் கோவிலை (சிவன் கோவில்) கட்டியோராவர்.

  “சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி” “சிவ சிவ”

 67. Hindu Council objects Buddhist Vihara replacing Saiva temple in Kokku’laay
  [TamilNet, Tuesday, 27 March 2012, 16:24 GMT]
  The construction of a Buddhist Vihara in the site after the destruction of several decade old Pi’l’laiyaar temple at Kokku’laay in Mullaith-theevu district cannot be allowed, said C.Yogeswaran, Batticaloa district Tamil National Alliance (TNA) parliamentarian in a memorandum to Sri Lanka’s Prime Minister D.M.Jayatrena who also hold the post of Ministry of Buddha Sasana. Mr Yogeswaran has sent the memorandum in the capacity of vice president of All Ceylon Hindu Council.

  Yogeswaran has pointed out to the SL Prime Minister that Buddhist Viharas are being constructed in Tamil areas where not a Sinhalese lived earlier.

  “I have brought these injustices done to Saivites for your consideration several times. But you have failed to address the issues. Please take immediate steps to stop constructing Buddhist Viharas after destroying the Hindu temples,” said Mr Yogeswaran in his memorandum to the SL Prime Minister.

  Viharas are being constructed surrounding the spots where Buddha statues had been planted by the Sri Lanka Army, especially in the vicinity of their camps, in the North and Eastern provinces.

  “Such mischievous attempts would lead to animosity between the peoples,” the MP told SL Prime Minister in his letter.

  Tamil Saivites and Christians were the natives of Kokku’laay. There was no historical evidence to show that Sinhala Buddhists were living there.

  Under the current circumstance, many Hindu temples are being destroyed and Buddhist Viharas are being erupted under the guidance of Buddhist prelates in the North and Eastern provinces. This wanton destruction of Saiva koayils, going on for the last 3 years, could not be allowed any more, the MP further said.

  Source: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=35039

 68. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் அ.நீ ” தமிழ்” இந்துக்களின் வாழ்த்துக்கள் …..

 69. தமிழ்நெற் என்பது எல்ரிரிஈயின் பிரசார ஊடகம் என்பதை தமிழ்ஹிந்து மற்றும் நண்பர்கள் கவனத்தில் எடுக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.
  சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் என்பவரே ஹிந்துக்களின் அரசியல் தலைவராக(தமிழர் விடுதலைக் கூட்டணி) உருவாக்கபட்டு தந்தை செல்வா என்று ஹிந்துக்களாலேயே அழைக்கபடவைக்கபட்டவர்.
  புலிகளின் சர்வதேச பினாமி அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண.பிதா இம்மானுவேல்.
  இந்தியாவில் இருந்து வரும் ஹிந்து ஆன்மிக தலைவர்களை சந்திக்க வேண்டிய சந்தர்பங்களில் தவிர்த்து வந்த புலி பெருந்தலைகள் பாதிரிகளுக்கு எப்போதுமே மண்டியிட்டனர்.
  தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் (சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் இறந்த பின் தலைவராக வந்தவர்) உட்பட மற்ற தலைவர்களை கொன்றார்கள். இந்தியாவின் ஏஜன்டுகளாக அவர்கள் இருந்த படியால் கொன்றோம் என்று காரணம் சொன்னார்கள்.
  சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள். நாங்கள் எங்கள் பிரச்சனையை தீர்த்து கொள்வோம் அந்நியன் இந்தியா தலையிட தேவையில்லை என்றார்கள் எல்ரிரிஈயினர்.

 70. // புலிகள் ஒன்றும் மோசமானவர்கள் அல்ல.மேலும் பிரபாகரனின் மூதாதயார்களே புகழ்மிக்க வைத்தீஸ்வரன் கோவிலை (சிவன் கோவில்) கட்டியோராவர். //

  1958-ல் சிங்கள மத, இனவெறியர்கள் நடத்திய கலவரங்களில், பாணந்துறை கோவில் குருக்களை சிங்களக் காடையர்கள் உயிரோடு கொளுத்திய நிகழ்ச்சியும் சிறுவயதில் தன்னைப் பாதித்த தமிழ்ப் படுகொலைகளில் ஒன்று என பிரபாகரன் குறிப்பிடுவதுண்டு. போராளிகள் இயக்கங்களிலும், புலிகள் இயக்கத்திலும் பிராமண இளைஞர்களும் பங்கு கொண்டு சிங்கள இனவெறியை எதிர்த்துப் போராடியுள்ளனர். புலிகளின் அரசியல் பிரிவின் தலைவரான பிரிகேடியர் தமிழ்ச்செல்வத்தை சிங்கள விமானப்படை குண்டுவீசிக் கொன்றபோது உடன் இருந்து பலியானவர்களில், அவருடைய மெய்க்காப்பாளர்களில் ஒருவர் ஒரு பிராமண இளைஞர். இதை இங்குள்ள எல்லா திராவிடக் ’குரல் போராளிகளும்’ மூடிமறைத்துவிட்டனர். தமிழ்நாட்டில் சில பிராமணர்கள் போராளிகள் மீதும், புலிகள் மீதும் காட்டும் வன்மம் அர்த்தமற்றது. புலிகள் மீது விமர்சனங்கள் இருக்கலாம், வெறுப்பும், அச்சமும் தேவையற்றது. ஈழத்தில் தாங்கள் இருந்திருந்தால் அரக்கத்தனமான எதிரிகளிடம் அகிம்சை பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்திருப்பார்கள்.

 71. // இந்தியாவில் இருந்து வரும் ஹிந்து ஆன்மிக தலைவர்களை சந்திக்க வேண்டிய சந்தர்பங்களில் தவிர்த்து வந்த புலி பெருந்தலைகள் பாதிரிகளுக்கு எப்போதுமே மண்டியிட்டனர். //

  இந்தியாவில் இருந்த ஹிந்துத் தலைவர்கள்தான் புலிகளைத் தவிர்த்தனர், பால் தாக்கரேயைத் தவிர.

 72. பயங்கரவாத இயக்கமான புலிகளை ஆதரிப்பது என்பது இந்திய தமிழகத்தில் ராஜிவ் கொலையாளிகள் புலி மூன்று பேரை தூக்கில் போடாதே விடுதலை செய் என்று கேட்கும் அளவிற்கு இந்திய நீதிக்கே சவால் விடும் மோசமான நிலைக்கு சென்றதை மறந்திருக்க மாட்டீர்கள். ஹிந்துக்கள் புலி பயங்கரவாத இயக்கத்தை அதரிக்க முடியாது. அப்படி செய்வது முஸ்லிம்கள் அல் குய்தா பயங்கரவாத இயக்கத்தை ஆதரிப்பதற்க்கு சமன். ஹிந்துக்களின் நலன்கள், பொது நீதி, இதர மக்கள் நன்மைகள் இவற்றின் அடிப்படையிலும் புலி பயங்கரவாதத்தை ஹிந்துக்கள் நிராகரிக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு அலையோடு அள்ளுப்படும் சில ஹிந்து பெரியவர்கள் இதுபற்றி கவனம் எடுக்க வேண்டும். ஓசமா பின் லாடனை விட பிரபாகரன் ஒப்பீட்டளவில் மிக கொடூரமானவர். தன் பிறப்பு மதத்தை சேர்ந்த ஹிந்துக்களையே கொன்றொழித்தார்.
  இப்பகுதி புலி, பிரபாகரன் பிரசார பகுதியாக மாறும் அபாயம் உள்ளதால் எனது பின்நோட்டத்தை முடித்து கொள்கிறேன்.

 73. “”தமிழ்நெற் என்பது எல்ரிரிஈயின் பிரசார ஊடகம் என்பதை தமிழ்ஹிந்து மற்றும் நண்பர்கள் கவனத்தில் எடுக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.”

  கோக்கிலை பிள்ளையார் கோவில் இடித்து புத்தர் கோவில் கட்டுவது
  வேறு தமிழ் பத்திரிகைளிலும் வந்த செய்திதான்.

  ”சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள். நாங்கள் எங்கள் பிரச்சனையை தீர்த்து கொள்வோம் அந்நியன் இந்தியா தலையிட தேவையில்லை என்றார்கள் எல்ரிரிஈயினர் ”

  இவர்கள் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் என்றைக்கோ தமிழ் மக்கள்
  வெற்றி அடைந்து இருப்பார்கள்
  இந்திய தலை இட்டு தான் தமிழர்கள் அழிந்து போனார்கள்

 74. இந்த கட்டுரையை எழுதியதன் மூலம் அ.நீ அவர்கள் மதிப்பு பல மடங்கு கூடியுள்ளது.,சரியான பாதையில் போவதை மறுபடியும் நிரூபித்துள்ளார்,அனைத்து மக்களுக்கும் (இந்துக்களுக்கும்) சங்கம் போய் சேர வேண்டியதன், அனைவர் குரலையும் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
  இங்கு மாறுபட்ட கருத்துடையோர் மறுமொழி கூறுகையில் புலிகள் மீது விஷம் கக்கியிருந்தனர்– கட்டுரையின் நோக்கமான சாதாரண பொதுமக்களின் வேதனையான அவலத்தை நீக்கவேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தை புரிந்துகொள்ளாமல்.
  இலங்கை என்றவுடன் புலி,புலி என கூச்சல் வேறு….அப்பாவி மக்களை வதைத்த கொடூரத்தை பார்த்த பின்பும்? ஆனால் புலிகளை பற்றி விவாதிக்க இந்த கட்டுரை இடமல்ல! நீங்கள் கூறும் அவதூறுகளை எல்லாம் ஆணித்தரமாக மறுக்க ஆயிரம் சம்பவங்கள் இருக்கின்றன.
  எண்பதுகளில் சிங்கள அராஜகத்தையும் , தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தையும் பொறுக்க முடியாமல் தான் புலிகள் இயக்கம் தோன்றியது. வன்முறைக்கு அதையும் தாண்டிய வன்முறையால்,அவரவர்க்கு புரியும் மொழியால் பதிலடி கொடுத்தனர்.அவர்கள் முடிவைப்பற்றி யாருக்கும் துயரமில்லை. போரில் வீரர்களுக்கு ஒன்று வெற்றி இல்லை வீர மரணம் கிடைக்கும். (edited)

 75. // இந்தியாவில் இருந்த ஹிந்துத் தலைவர்கள்தான் புலிகளைத் தவிர்த்தனர், பால் தாக்கரேயைத் தவிர.//

  ”வெம்பு கரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே ” என்ற பழம்பாடல் கேட்டதுண்டா குமரன் ?…..துஷ்டரைகண்டால் தூர விலக வேண்டும்….சர்வாதிகார வெறிகொண்டு சக தமிழர்களையே கொன்று குவித்த கொலைகார கும்பலிடம் ஹிந்து மதத்தலைவர்களுக்கு என்ன வேலை ?

  // இவர்கள் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் என்றைக்கோ தமிழ் மக்கள்
  வெற்றி அடைந்து இருப்பார்கள் //

  திடீர் தமிழன் சீமான் போல உளற வேண்டாம்……..கொஞ்சமாவது வரலாற்றை தெரிந்துகொண்டு பேசுங்கள்……இந்தியா இல்லையேல் புலிகள் இயக்கமே இல்லை…

  // இப்பகுதி புலி, பிரபாகரன் பிரசார பகுதியாக மாறும் அபாயம் உள்ளதால் எனது பின்நோட்டத்தை முடித்து கொள்கிறேன்.//

  உண்மை…..தங்கள் முடிவை ஆதரிக்கிறேன்….

 76. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்தது தான் ஆர் எஸ் எஸ். சில சமயங்களில் குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றும், கருத்து வேறுபாடுகள் முளைக்கும் ஆர்கனைசர் பத்திரிக்கை ஆசிரியருக்கு ஒரு கருத்து தோன்றியது, அரவிந்த நீல கண்டனுக்கு அது தவறாகப் பட்டது. ஆனால் குடும்பத்தின் உண்மை கருத்து குடும்ப பெரியவர்களுடையது. ஆகவே மா.பையாஜி சொன்ன கருத்தை ஏற்போம். கருத்து வேறு பாடுகளை களைவோம். தமிழ் ஹிந்து ஒற்றுமை எனும் கடமையை நிறைவேற்றுவோம்.

 77. most of eelam tamils supported Tamileelam.no one can refuse this.Rss is against tamileelam like BJP and Congress.they just want to keep a balance between tamils and singalese.

 78. UN seeks AFSPA repeal in Kashmir – இது சமீபத்திய செய்தி.

 79. LTTE IS A HINDU ORGANIZATION . MR, VELU PILLAI PRAHKARAN IS A STAGE FOLLOWER OF SAVISM. MURUGAR PADAI( LORD MURUGAS ARMY) WAS LATER CONVERTED IN TO LTTE. AMERICA AND CHINA WANT TO CRUSH LTTE , BECAUSE IT IS HINDU BASED ORGANIZATION. LTTE NEVER GAVE ANY IMPORTANT TO OUT CASE HINDUS ( HARJANS) IN THEIR ARMY POSTS. WITHOUT KNOWING THIS TAMILNATIONAL AND DARVIDIAN PARTIES ARE SUPPORTING LTTE.. SIMPLY LTTE IS A SRILANKAN RSS MILITARY. SUPPORT LTTE FOR IT VARNSRAMA DARMA AND HINDU SANATHINA DARMA

 80. எல்ரிரிஈ வைத்து ஹிந்துக்களையும் ஆர்எஸ்எஸ்சையும் அவதூறு செய்துவிட்டதாக ஒரு அரபு விசுவாசி திருப்திபட்டுள்ளார். அனுதாபங்கள்.

 81. //they (RSS) just want to keep a balance between tamils and singalese.//

  இதுவரை உள்ள மரபணுவியல் ஆய்வுகள்எல்லாமே இலங்கையில் வாழும் தமிழரும் சிங்களவரும் ஒரே வகையான மரபுக்கூறுகளையே கொண்டிருக்கிறார்கள் என்றும் இவைகள் அனைத்தும் இந்தியாவின் பிரதேசங்களான தமிழக,கேரள பிரதேசங்களை சேர்ந்த மக்களின் மரபுக் கூறுகளை பெருமளவில் ஒத்திருப்பதையும் ஆய்வாளர்கள் இலங்கை தமிழ் ஆய்வாளர்கள் உட்பட உறுதியாக தெரிவிக்கிறார்கள்.

 82. What Aravindan told is absolutely correct. RSS, BJP, VHP, B.Dal, Ramasena etc never bother about Tamils. Saivites, Vainshnatvates, Tamil Hindus always respected North Indian based Hindu organizations like RSS, BJP, VHP, B.Dal, Ramasena etc., But they are treating us as Second class Madarasi. They using us to show their political Crowed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *