இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 28

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

28.1 சேரிடம் அறிந்து சேர்

வானரர்கள் முன்னால் சீதையை இந்திரஜித் கொன்றுவிட்டதையும், அதைக் கேட்ட இராமர் மயங்கி விழுந்ததையும் அறிந்த விபீஷணன், உடனே அவர் இருக்குமிடத்திற்கு விரைந்து வந்து அவன் உண்மையான சீதையைக் கொல்லவில்லை என்று சொன்னான். தனது மந்திர சக்தியால் ஒரு மாய சீதையை உருவாக்கி, வானரர்களை ஏமாற்றவும், அதைரியப்படுத்தவும் என்பதற்காகவே, அவர்கள் முன்னால் கொன்றிருக்கிறான்; அதனால் குழப்பத்தை உண்டாக்கி, இடையில் கிடைக்கும் அவகாசத்தில் நிகும்பிலா சென்று, தாங்கள் இருவரையும் தாக்கிக் கொன்று போரில் வெல்வதற்காகவே, மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை தயாரிப்பது அவன் திட்டம் என்றும் விவரித்தான். அதனால் லக்ஷ்மணனை நிகும்பிலாவிற்கு உடனே அனுப்பி அவன் திட்டத்தைத் தவிடு பொடியாகி, அவனையும் கொல்ல வேண்டும் என்று இராமரிடம் சொன்னான்.

rama1

அதன்படி வானரர் சேனை ஒன்றை அழைத்துக்கொண்டு லக்ஷ்மணனும் நிகும்பிலாவிற்கு விரைந்தான். தன் ஆயுதக் கிடங்கை இந்திரஜித் ஒளித்துவைத்திருக்கும் பாணியன் மரம் இருக்குமிடம் விபீஷணன் ஒருவனுக்கே தெரியுமாதலால், அவன் அவர்களை அழைத்துக்கொண்டு அங்கு சென்று காட்டினான். லக்ஷ்மணன் அங்கிருக்கும் இந்திரஜித்தை அந்த மறைவிடத்திலிருந்து வெளியே வந்து சண்டைபோட சவால் விட்டான். அவர்களிருவரையும் பார்த்ததுமே தன்னுடைய சித்தப்பாதான் தனது கிடங்கின் மறைவிடத்தையும், ரகசியத் திட்டத்தையும் காட்டிக் கொடுத்துவிட்டார் என்பதை இந்திரஜித் புரிந்துகொண்டான். அதனால் அவன் விபீஷணனை அடியோடு வெறுத்ததும் அல்லாமல், அவனை துரோகி என்றும், அரக்கர்கள் எல்லோரையும் அழித்தபின் காட்டிகொடுக்கின்ற அவனும் அவர்களாலேயே கொல்லப்படுவான் என்றும் கத்தினான்.

यः स्वपक्षं परित्यज्य परपक्षं निषेवते ।
स स्वपक्षे क्षयं प्राप्ते पश्चात्तैरेव हन्यते ।। 6.87.16 ।।

यः யார் स्वपक्षं, தனது பக்ஷத்தை परित्यज्य, விட்டுவிட்டு परपक्षं, எதிரியின் பக்ஷத்தை, निषेवते, தழுவுகிறானோ स:, அவன் स्वपक्षे, அவனது பக்ஷம் क्षयं , க்ஷீணம், प्राप्ते, உற்றவுடன், पश्चात् , பிற்பாடு तैरेव, அவர்களாலேயே (எதிரிகளாலேயே) हन्यते, கொல்லப்படுகிறான்.

தன்னைச் சார்ந்தவர்களைத் துறந்துவிட்டு, அவர்களை எதிரியிடம் காட்டிக்கொடுப்பதால் தனக்கு நன்மை உண்டு என்று ஒருவன் நினைப்பது தவறானது. எதிரிகள் முதலில் மற்றவர்களை அழித்துவிட்டு, கடைசியில் யார் காட்டிக் கொடுத்தானோ அவனையும் ஒழித்துவிடுவார்கள்.

ஒருவன் தன்னவர்களைப் புறக்கணித்து விட்டுப் போகலாமா? அப்படிப் போனபின், அவர்களது ரகசியங்களை எதிரிகளுக்குச் சொல்லி அவர்களைக் காட்டிக் கொடுக்கலாமா? செய்யலாம்; எப்போது என்றால், அவன் தன் அணியில் உள்ளவர்கள் தகாத வழிகளில் செல்லும்போதும், அதைத் திருத்த முயன்று பயன் ஏதும் இல்லாதபோதும் அவன் அப்படிச் செய்வதுதான் நல்லது. நீதி, நேர்மைப்படி நடக்க வேண்டும் என்று ஒருவன் நினைக்கும்போது, அப்படி அவன் அணியினர் நடக்கவில்லை என்பதைத்தான் அவன் காரணமாகக் காட்டுவான். என்னதான் காரணம் சொன்னாலும், அவன் அணியினர் அவன் செய்தது துரோகம் என்றுதான் வெறுப்புடன் நினைப்பார்கள். அப்படிப் பொதுவாக நடப்பதைத்தான் இந்திரஜித் மூலம் வால்மீகி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

28.2 தர்ம வாழ்வே முக்கியம்

இந்திரஜித்தின் அவமதிப்புகளுக்கும், அரக்கர்களின் துரோகி எனும் குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்று விபீஷணன் நினைத்தான். அவன் அவர்களை விட்டுவர வேண்டிய தன் நிலைப்பாடை இந்திரஜித்துக்கும், அரக்கர்களுக்கும் எடுத்துச் சொல்ல அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான். ராவணனின் பக்கபலத்தோடு அரக்கர்கள் கொடுஞ்செயல்களில் ஈடுபடுவதோடு, அதர்மமான வழிகளிலும் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். அரக்கனாகவே பிறந்திருந்தாலும் அவர்களின் கொடிய வழியை விட்டு, உடனே இல்லாவிட்டாலும் அப்புறமாவது ஆனந்தம் தரக்கூடிய தர்மத்தின் பாதையில் தான் செல்லவே ஆசைப்பட்டதாகச் சொன்னான். தர்மத்தின் பாதையில் செல்லாது, பாவம் சேர்க்கும் கொடிய வழிகளைக் கடைப்பிடிக்கும் தலைவனை அப்புறப்படுத்தவேண்டும். கையில் சுற்றிய பாம்பு போல் அத்தகையவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அவர்களைத் தூக்கி எறியவேண்டும் என்றான்.

धर्मात् प्रच्युतशीलं हि पुरुषं पापनिश्चयम् ।
त्यक्त्वा सुखमवाप्नोति हस्तादाशीविषं यथा ।। 6.87.22 ।।

यथा, (ஒருவன்) எப்படி हस्तात् கையிலிருந்து (கையைச் சுற்றிய) आशीविषं, கொடிய விஷப் பாம்பை त्यक्त्वा, விட்டுவிட்டு ( தூக்கி எறிந்துவிட்டு) सुखं, சுகத்தை अवाप्नोति, அடைகின்றானோ (அப்படியே) प्रच्युतशीलं, நன்னடத்தையிலிருந்து நழுவிய पापनिश्चयम, பாவத்தை (சுமப்பதை) पुरुषं, நிச்சயித்தவனை त्यक्त्वा, களைந்து सुखं, சுகத்தை अवाप्नोति, அடைகிறான்.

ஒருவன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அவன் தன் கையில் சுற்றிய பாம்பைத் தூக்கி எறியவேண்டும். அதுபோல தர்மத்தின் பாதையில் செல்லாது, பாவம் சேர்க்கும் கொடிய வழிகளையே விரும்பும் தலைவனை அப்புறப்படுத்தவேண்டும்.

நீதி, நேர்மை சம்பந்தப்பட்ட விஷயங்களில் தன் வாழ்வில் ஒருவன் உறுதியான நிலையை எடுக்க வேண்டியது மிக முக்கியமானது. தன் உற்றமும், சுற்றமும் பாவ வழிகளில் செல்வதையே விரும்பினால், அவர்களை ஒருவன் விடுவதில் என்ன தவறு? பிறப்பிலிருந்தே உடன் பிறந்தவர்களிடம் இருந்துவிட்டு அவர்களைப் பிரிவது ஒருவனை வாட்டலாம். அப்படி இருந்தாலும் அவர்களை விட்டுவிட்டு வருவதே சரியானது என்கிறான் விபீஷணன். அவனுக்குத் தர்ம வழியில் வாழ்வது என்பது மற்றெதையும் விட முக்கியமானது என்று தெரிகிறது.

28.3 கோபம் தவிர்

Killing_of_Indrajit_Painting_by_Balasaheb_Pant_Pratinidhiஇந்திரஜித்துக்கும் லக்ஷ்மணனுக்கும் இடையே நடந்த அந்தப் போர் மிகவும் உக்கிரமானது. ஒருவரையொருவர் கொலைவெறியுடன் தாக்கிக்கொண்டனர். இறுதியில் லக்ஷ்மணன் கை ஓங்கியிருந்தது தெளிவாயிற்று. மிகவும் வேகமானதும், கூர்மையானதுமான ஓர் அம்பு வீச்சினால் அவன் இந்திரஜித்தின் தலையைச் சீவி அந்த நொடியிலேயே கொன்றான். பல போர் முனைகளிலும் அரக்கர்களுக்கு வெற்றி வாய்ப்பை எளிதில் பெற்றுத் தந்தவனே போய்விட்டதால், அரக்கர் சேனைகளும் ஆளுக்கொரு பக்கம் சிதைந்து ஓடினார்கள். ராம-லக்ஷ்மணர்களையும் அதேபோல் தோற்கடித்து தனக்கு வெற்றி வாகை சூடுவான் என ராவணன் மிகவும் எதிர்பார்த்திருந்தவனுமான இந்திரஜித் போரில் இறந்துவிட்டான் எனக் கேட்ட ராவணன் தனது வலக்கை துண்டிக்கப்பட்டது போல நிலை குலைந்து போனான்.

துடிதுடித்துப் போய் முதலில் அடக்க முடியாமல் அழுது அரற்றிய ராவணனுக்கு பின்பு பயங்கரமாகக் கோபம் வந்தது. கோபத்தில் கண்டதை உளறிக்கொண்டே இருந்தவன், தனக்கு வந்துள்ள எல்லா துன்பத்திற்கும் சீதையே காரணம் என்று சொல்லி உடனே அவளைக் கொன்று போட வேண்டும் என்றான். அப்படி அவனுக்கு அந்த எண்ணம் வந்தவுடனேயே, அவன் அமர்ந்திருந்த சிம்மாசனத்தில் இருந்து குதித்து கையில் உருவிய வாளுடன் சீதை இருந்த அசோக வனத்துக்கு விரைந்து சென்றான். அப்போது அவனது அமைச்சர்களுள் மிதவாதியான சுபர்ஷ்வா மட்டும் அவனைத் தடுத்திருக்காவிட்டால் அவனுக்கிருந்த ஆத்திரத்திலும், கோபத்திலும் அவன் சீதையைக் கண்ட துண்டமாக வெட்டிக் கொன்றிருப்பான். எந்தவித தார்மீகக் கோட்பாடுகளின்படி பார்த்தாலும், கோபத்தில் ஒரு பெண்ணைக் கொல்வது தவறு என்று அவர் அப்போது சொன்னார்.

.… हन्तुमिच्छसि वैदेहीं क्रोधाद्धर्ममपास्य हि ।। 6.93.62 ।।

क्रोधात् , கோபத்தால் धर्मं, தர்மத்தை अपास्य, புறக்கணித்து वैदेहीं, வைதேஹியை
हन्तुं, கொல்ல इच्छसि, விரும்பிகிறாய்.

தார்மீகக் கோட்பாடுகளின்படி, கோபத்தில் ஒரு பெண்ணைக் கொல்வது தவறு.

ஒருவன் செய்த செயலுக்காக அதனால் வரும் கோபத்தில் இன்னொருவனை, அதுவும் தன்னைக் காத்துக்கொள்ளவும் இயலாத இன்னொருவனை, தண்டிப்பது தவறான செயல். இங்கு தன் மகனைக் கொன்ற லக்ஷ்மனணனை நேரே அடைய முடியாததால், எந்த விதத் தற்காப்பும் இல்லாத, அதுவும் பொதுவாக தண்டனையைக் குறைத்து அருள வேண்டிய பெண் ஒருவளைக் கொல்லும் அளவுக்குப் போய் விட்டதென்றால் பீறிட்டெழும் கோபம்தான் அதன் காரணம். கண் மண் தெரியாமல் வரும் கோபம் ஒருவனை என்னவெல்லாம் செய்யவைக்கும் என்று ராவணன் மூலம் வால்மீகி நமக்குக் காட்டுகிறார்.

28.4 பாச மலர்கள்

இந்திரஜித்தின் இறப்பும், தங்கள் படையின் பின்னடைவும், ஆயிரக்கணக்கான அரக்கர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டதும் எல்லாமாகச் சேர்ந்து அரக்கர்கள் நடுவிலும், முக்கியமாக அவர்களது பெண்மணிகளின் நடுவிலும் ஒரு துக்கச் சூழ்நிலையை ஏற்படுத்தியது. உற்றாரும் சுற்றாரும், கணவன்களும் மகன்களுமாக பலரும் தங்களது சுற்று வட்டாரத்தில் இறந்து போனதில் அவர்களுக்குத் துக்கம் பீறிட்டு வந்ததால் எங்கும் ஓலக்குரலே கேட்டன. அவர்களின் தொடர்ந்த அழுகையைக் கேட்டுத் தாங்க முடியாத ராவணன், இந்த நிலைக்குக் கொண்டுவந்த ராமனைப் பழி வாங்கியே தீருவேன் என்று அவர்களிடம் சொன்னான்.

முக்கியமான எல்லாத் தளபதிகளும் இறந்துவிட்ட நிலையில் தானே படைகளை முன்னின்று போரை நடத்துவதற்காக, உடனே தனது தேரையும், ஆயுதங்களையும் கொண்டுவரச் சொன்னான். அவனுக்கு உதவியாக அமைச்சர்கள் மஹாபர்ஷ்வா, மஹோதரா, விரூபாக்ஷா அனைவரும் போர்க்களத்துக்குப் புறப்பட்டனர். அரக்கர் படையில் எஞ்சியுள்ளவர்கள் எல்லோரும் நடக்கவிருக்கும் இறுதிப் போருக்காக ராவணன் தலைமையில் ஒன்று சேர்ந்தனர்.

முதலில் அவனது அமைச்சர்கள் எல்லோரையும் சுக்ரீவனும், அங்கதனுமே கொன்றுவிட்டதால் ராவணன் தனிமைப்படுத்தப்பட்டு விட்டான். அப்போதும் அவனிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருந்ததால், அவனிடம் தனியே போரிட முடியாத வலிமை வாய்ந்தவனாக இருந்தான். இராமர் அவனை நேரிடையாகப் போர் செய்யத் தூண்டியதும், அவர்கள் இருவரிடையே நடந்த போர் மிகவும் உக்கிரமாக இருந்தது.

இராமர் பக்கத்தில் லக்ஷ்மணனும், விபீஷணனும் இருந்ததைப் பார்த்த ராவணனுக்கு, தன்னை விட்டுவிட்டு ராமன் பக்கத்தில் நின்றுகொண்டு தன்னையே தாக்குகின்ற தன் தம்பியைப் பார்த்ததும், ஓர் ஆவேசமே வந்துவிட்டது. விபீஷணனை அங்கேயே கொன்றுவிட வேண்டும் என்று அவனுக்கு எரிச்சல் வந்தது. அவனிடம் இருந்த மாயா செய்து கொடுத்துள்ள பயங்கர ஆயுதம் ஒன்றை எடுத்து விபீஷணன் மேல் குறி பார்த்து எய்தான். அதைப் பார்த்துவிட்ட லக்ஷ்மணனுக்கு அதைத் தடுக்கவும் முடியாது, அதனை விபீஷணனால் தாங்கவும் முடியாது என்று தெரிந்ததனால் யாரும் எதிர்பார்க்காதபோது விபீஷணனுக்கு முன்னால் நின்று அந்த ஆயுதத்தைத் தன் மேல் வாங்கிக்கொண்டு விபீஷணனுடைய மரணத்தைத் தவிர்த்தான்.

சக்தி மிகுந்த ஆயுதம் என்பதால் தன் மார்பில் வாங்கிய லக்ஷ்மணன் அதன் வலிமையைத் தாங்க முடியாமல் மயங்கிச் சாய்ந்தான். சாய்ந்த அவனது மார்பிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியதை இராமர் பார்த்தார். அந்த ஆயுதத்தை உடனே பிடுங்கி இரண்டாக ஒடித்துப் போட்டார். தன் தம்பி அப்படி மரண அடிபட்டு விழுந்து கிடந்ததைப் பார்க்க அவருக்குப் பொறுக்கவில்லை. அவன் இறந்தே விட்டான் என்று நினைத்த அவர், ஒருவனது தம்பி இறந்தால் அதை வேறு எவரால் சரிக்கட்ட முடியும் என்று புலம்பிக்கொண்டே பெரிதாக அழுதார்.

देशे देशे कलत्राणि देशे देशे च बान्धवाः ।
तं तु देशं न पश्यामि यत्र भ्राता सहोदरः ।। 6.102.13 ।।

देशे देशे, ஒவ்வொரு (எந்த) தேசத்திலும் कलत्राणि, மனைவி देशे देशे च, ஒவ்வொரு (எந்த) தேசத்திலும் बान्धवा: பந்துக்கள் ( பெற இயலும்). (ஆனால்) भ्राता सहोदर: உடன் பிறந்த சஹோதரனை
तं तु देशं, எந்த ஒரு தேசத்திலும் न पश्यामि, (நான்) காணேன்.

மனைவியோ, உறவினர் வேறெவரோ இறந்தால் அவர்களுக்குப் பதில் வேறு எவரையாவது, ஏதோ ஒரு இடத்திலாவது கண்டுபிடிக்க முடியும். ஆனால் சகோதரன் இறந்துவிட்டால் அவனுக்குப் பதிலாக வேறெவரும் இருக்க முடியாது.

ஆசையும், அன்பும் போலவே சண்டையும் சச்சரவும் சகோதரர்களிடையே பொதுவாக இருப்பது ஓர் உண்மையே. பாரத இலக்கியத்தில் பரிவையும், பாசத்தையும் வளர்க்கவேண்டும் என்று சொல்லப்படுவது எங்கும் காணப்படும். சகோதரர்களிடையே மலரும் இயற்கையான பாசத்தைக் காட்ட இந்த ஸ்லோகத்தை அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

28.5 ஆதித்ய ஹ்ருதயம்

rama3சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் ராவணன் தலையில் பலமாக ஒரு அடி விழுந்தது. அந்த அடி அவனுக்கு மேலும் போரைத் தொடரும் எண்ணத்தைக் கூட வலுவிழக்கச் செய்தது. அதை உணர்ந்துகொண்ட அவனது தேரின் சாரதி, அவனுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் நல்லதோ என்று ஊகித்து, தேரைப் போர்க்களத்தின் மையப் பகுதியிலிருந்து கொஞ்சம் தள்ளி செலுத்திக்கொண்டு போனான். அதைக் கவனித்த ராவணன், போர்க் களத்திலிருந்து பின்வாங்கிய கோழை என்ற அவப்பெயர் தனக்கு வரக்கூடாது என்று சொல்லி அவனைக் கடிந்துகொண்டு, தேரைத் திருப்பச் சொன்னான். அதற்கு சாரதி மறுத்து ராவணனுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை என்றபோது, அவனது நல்லெண்ணத்தைப் புகழ்ந்துவிட்டு, இருந்தாலும் தேரை ராமன் இருக்கும் பக்கம் செலுத்தச் சொன்னான். அப்படிச் சிறிது நேரம் ராவணனைக் காணாமல் இராமர் அவனுக்காகக் காத்திருக்கும்போது, அங்கு அகத்தியர் வந்து ராவணனைக் கொலை செய்வதற்கு வேண்டிய மனோதிடம் இராமருக்கு வரவேண்டி ஒரு மந்திரத்தைச் சொல்லி ஜெபிக்கச் சொல்கிறார். அதுதான் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம்.

आदित्यं प्रेक्ष्य जप्त्वा तु परं हर्षमवाप्तवान् । … ।। 6.107.29 ।।

आदित्यं, சூர்யனைப் प्रेक्ष्य, பார்த்து जप्त्वा, ஜபித்துவிட்டு (இராமன்) परं, மிகுந்த
हर्षं, மகிழ்ச்சி अवाप्तवान् அடைந்தான்.

இராமர் சூரியனைப் பார்த்து ஜபித்துவிட்டு, தான் வெல்வதற்கான மனோதிடத்தைப் பெற்றார்.

எதிரியானாலும் ஒருவனைக் கொல்வது ஒரு கொடுமையான செயல்தான்; அது எளிதானது அல்ல. என்னதான் கோபத்தில் ஒருவன் இன்னொருவனைக் கொன்று விடுவேன் என்று கத்தினாலும், கொலை செய்ய என்று வரும்போது பின்வாங்கி விடுவான். கொல்வது ஓர் இயற்கையான செயல் இல்லை என்பதாலும், பலருக்கு அது வெறுப்பைத் தருகிறது. இராமரை முதலில் கொலை செய்யத் தூண்டியவர் விஸ்வாமித்திரர். அப்போது தாடகை என்னும் அரக்கியை ஏன் கொல்லவேண்டும் என்றும், அது அவரது கடமை என்றும் சொல்லி அதன் அவசியத்தை உணர்த்துகிறார். இப்போது ராவணனைக் கொன்றாக வேண்டும். அதற்குத் தூண்டுகோலாக விஸ்வாமித்திரர் இங்கு இல்லை. அதனால் அதற்கு வேண்டிய மனநிலையைப் பெறுவதற்கு இராமர் இங்கு மந்திரம் சொல்லி ஜபம் செய்து அதைப் பெற வேண்டியிருக்கிறது.

ராணுவத்தில் இருப்பவர்களுக்கு, போர்க்களத்தில் தன் வீரர்கள் கொலை செய்வதற்கு அவர்களைத் தூண்டுவது என்பதற்கே தனிப் பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. உலகைக் கயவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், எல்லா வழிகளையும் முயற்சி செய்துவிட்டு இறுதியில் போர், கொலை என்றுதான் செய்யவேண்டியிருக்கிறது. அது அரச நீதி, மக்களுக்குண்டான பொது நீதி அல்ல.

(தொடரும்)

48 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 28”

 1. ராமனாய் வந்தவனும் அவனே. இராவணனாய் வந்தவனும் அவனே. இறைவனின் திருவிளையாடல்களுக்கு நம்முடைய சிற்றறிவைக்கொண்டு நாம் விளக்கம் பெற முயற்சிக்கிறோம். சமஸ்கிருத எழுத்து font படிக்க வசதியாக இல்லை. முடிந்தால் வேறு font மாற்றினால் நன்றாக இருக்கும். திரு ராமன் அவர்களின் புனித முயற்சி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைஅருள் துணை நிற்கும். நமது தாத்பரியங்களில் அழிவு என்று ஒன்றுமே இல்லை. ஒன்று வேறொன்றாக உருமாறுகிறது.அவ்வளவு தான். வெளித்தோற்றம் மட்டுமே மாறுகிறது. உள்ளே இருக்கும் intrinsic அதே பழைய சரக்கு தான்.இராமனும், இராவணனும் இன்று நம்மிடையே இல்லை. ஆனால், அந்த கதா பத்திரங்களின் குணாதிசயங்கள் நம்மில் பலரிடையே நிறைந்து காணப்படுகிறது. ராமாயணம் காலத்தால் அழியாத காவியம் என்பது மேலும் உறுதியாகிறது. தமிழ் இந்துவுக்கும், திரு ராமன் அவர்களுக்கும் நம் பாராட்டுக்களும் நன்றியும் உரித்தாகுக.

 2. அத்விகா
  “ராமனாய் வந்தவனும் அவனே. இராவணனாய் வந்தவனும் அவனே”. என்ன அபத்தம்
  இது. ஸ்ரீ ராமனும் ராவணனும் ஒன்றா.என்ன? அத்வைத சித்தாந்ததினை தவராகப் புரிந்துகொண்டு இப்படியெல்லாம் பிதற்றாதீர்கள். பெருவீரனாயினும் பேரறிஞன் ஆயினும் ராவணன் வணக்கத்திற்குரியவன் ஆகான். சத்வகுணத்தின் மொத்த உருவம் ஸ்ரீராமபிரான். ராவணனோ ராக்ஷச குணத்தின் முழுமையான வடிவம்.ஸ்ரீ ராமனின் வெற்றி சத்வகுணத்தின் வெற்றி.
  அத்விகா ஆழ்ந்து சிந்திக்கவேண்டுகிறேன்.
  சிவஸ்ரீ

 3. சிவஸ்ரீ. விபூதிபூஷண்,

  இராவணன் வணக்கத்திற்குரியவன் என்று யாரும் சொல்லவில்லை. சொல்லாததை ஏனுங்க நீங்கலாக கற்பனை செய்து கொள்கிறீர்கள் ? உப்பு கரிக்கும் கடல் நீரே , purification plant மூலம் சுத்தமான குடிநீர் ஆகிறது. இதுதான் உண்மை. பஞ்ச பூதங்களாகவும், அனைத்து உயிர்களாயும் இருப்பவன் அவனே. அவனைத்தவிர வேறொன்று உள்ளது என்று கூறுவது , அவனின் எல்லையை குறிப்பதாகும், எல்லை குறைந்தால் , எங்கும் நிறைந்தவன் என்பது பொய்யாகும்.தாங்கள் கோரியபடியே சத்துவ குணத்தின் உரு ராமன் என்றாலும், ராவணன் ராக்ஷச உருவே என்பதும் உண்மையே. ஆனால், ராக்ஷச உரு, சத்துவ உருவாக மாற்றப்பட முடியும் என்பதே உண்மை.சோதனைச்சாலையில் , எதிர்மின் பகுதியான , எலெக்டிரானை பாசிட்றான் ( positron ) என்று நேர்மின்சாரம் உள்ள பகுதியாக மாற்றுகிறார்கள். ஏதாவது ஓர் cbse பள்ளியின் பத்தாவது வரை உள்ள அறிவியல் ( விஞ்ஞான புத்தகத்தை வாங்கி படித்தால் நல்லது. நான் கூறியது எதுவும் தவறாயின் மன்னிக்கவும். மேலும், நமது இந்து மதத்தில் , யாருக்கும் எதனையும் ஏற்கவேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. உங்கள் இராவணன் நான் கூறும் இராவணன் இல்லை என்று நீங்கள் ஒரு வியாசம் எழுத உங்களுக்கு என்றும் உரிமை உண்டு.

 4. ” அவனின் எல்லையை குறிப்பதாகும்” – இங்கு தட்டச்சுப்பிழை வந்துவிட்டது. குறிப்பதாகும் என்பதை,
  ” அவனின் எல்லையைகுறைப்பதாகும்” – என்று திருத்த வேண்டுகிறேன்.

 5. “அதன்படி வானரர் சேனை ஒன்றை அழைத்துக்கொண்டு லக்ஷ்மணனும் நிகும்பிலாவிற்கு விரைந்தான். தன் ஆயுதக் கிடங்கை இந்திரஜித் ஒளித்துவைத்திருக்கும் பாணியன் மரம் இருக்குமிடம் விபீஷணன் ஒருவனுக்கே தெரியுமாதலால், அவன் அவர்களை அழைத்துக்கொண்டு அங்கு சென்று காட்டினான்”.

  என்ன ராமன்ஜி தமிழில் ராமாயணம் படிக்கவில்லையா? இல்லை ராமகதையை கேட்கக்கூட இல்லையா? நிகும்பலை என்பது ஒரு இடம் அன்று அது ஒரு பகைவரை வெல்ல நடத்தப்படும் வேள்வி. இன்றும் கூட ஸ்ரீ ப்ரத்யங்கிர தேவியின் ஆலயங்களில் அமாவாஸ்யை பௌர்ணமிதோரும் நடத்தப்படுகிறது. அன்னைக்காளி வழிபாட்டில் மிளகாய் எரித்து நடத்தப்படும் பூஜைகள் கூட ஒருவகையில் நிகும்பலா யாகம் தான்.
  இராமன் ஜி நீங்கள் பாணியன் மரத்தினைப் பார்த்தது உண்டா இல்லையா. ஐயா அது நமது ஆல மரம் தான்.
  கருத்துருக்களை புரிந்த்துகொண்டு எழுதுங்கள். உங்கள் முயற்சி நிச்சயம் பாராட்டிற்குறியது. அருள் கூர்ந்து க்கருத்துபிழைகளை தவிர்க்கவேண்டுகிறேன்.
  ஒரே நூலை சார்ந்து எழுதாது ஒத்த நூல்களின் துணைக்கொண்டு மொழிபெயர்ப்பு செய்தல் நல்லது. அன்புக்குரிய ஸ்ரீ ஜடாயு, ஸ்ரீ அ நீ ஆகியோரதுக்கட்டுரைகளை கண்டு இவற்றை நன்கு உணர முடியும்.
  சிவஸ்ரீ.

 6. ஐயகோ இறைவனே ராமனும் ராவணன் என்றால் அவதாரம் என்பது என்ன என்றே புரியவில்லை.
  “நமது இந்து மதத்தில் , யாருக்கும் எதனையும் ஏற்கவேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை”. ஆளாளுக்கு வாயில் வந்ததை சொல்வதெல்லாம் ஹிந்துமதம் ஆகாது. அத்விகா என்ன ஆச்சாரியாரா ராவணனையும் அவதாரம் என்பதற்கு. ராவணனும் இறைவன் ஆகலாம் என்றால் அது பவதாரம். ஆனால் வேதமே ஓதி வேதியனாயினும் தவம்பல செய்தும் சிவதரிசனமே பெற்றும் திருந்தாத ஜென்மம் அவன் எனவே அவனை ஸ்ரீ ராமபிரான் வதைத்தார். ஆக ராமன் வேறு ராவணன் வேறு. தோன்றியதை அனைத்தையும் எழுதாது சிந்தித்து முன் பின் யோசித்து எழுதுங்கள்.
  கண்டபடி எழுதாதீர்கள்

 7. विद्या ददाति विनयं विनयाद्याति पात्रताम् ।
  पात्रत्वाद्धनमाप्नोति धनाद्धर्मं ततः सुखम् ॥ ५ ॥

  வித்யா ததாதி வினயம் வினயாத்யாதி பாத்ரதாம்
  பாத்ரத்வாத்தனமாப்னோதி தனாத்தர்மம் தத: ஸுகம் (ஹிதோபதேசம்)

  மனிதன் கல்வியினால் வினயத்தைப் பெறுகிறான். வினயத்தால் மதிப்பையும் மதிப்பால் செல்வத்தையும் பெற்று பெற்ற செல்வத்தால் தர்மங்களைச் செய்து அதனால் சுகங்களை அடைகிறான்.

  வால்மீகி ராமாயணம் – யுத்தகாண்டம் – சர்க்கம் – 85 – நிகும்பிலாபியானம்

  रघुनन्दन वक्ष्यामि श्रूयताम् मे हितं वचः ।
  साद्वयं यातु सौमित्रिर्बलेन महता वॄतः ॥

  ரகுநந்தன வக்ஷ்யாமி ச்ரூயதாம் மே ஹிதம் வச:
  ஸாத்வயம் யாது சௌமித்ரிர்பலேன மஹதா வ்ருத: (10)

  निकुम्भिलायां संप्राप्तं हन्तुम् रावणिमावहे ।
  धनुर्मण्डल निर्मुक्तै: आशीविषविषोपमै: ॥

  நிகும்பிலாயாம் ஸம்ப்ராப்தம் ஹந்தும் ராவணிமாவஹே।
  தனுர்மண்டல நிர்முக்தை: ஆசீவிஷவிஷோபமை: ॥ (11)

  ச்லோகம் எண் பத்து இரண்டு பாட பேதங்களுடன் காணப்பட்டது

  நிகும்பிலாயாம் ஸம்ப்ராப்ய எனவும் நிகும்பிலாயாம் ஸம்ப்ராப்தம் எனவும் இரண்டு பாடங்கள் காணப்பட்டன

  கீழ்க்கண்ட சுட்டியில் ஸம்ப்ராப்தம் என்ற பாடத்தின் படி பதவுரை கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி ச்லோக சாரம் பகிரப்பட்டுள்ளது.

  https://www.valmikiramayan.net/yuddha_kanda_contents.html

  மேற்கண்ட இரண்டு ச்லோகங்களின் சாரம்

  விபீஷணன் ராமனுக்குச் சொல்வதாய் அமைவது

  ஓ! ராம நான் சொல்லும் ஹிதமான வார்த்தைகளைக் கேழ்ப்பாயாக.

  ஸர்ப்பத்தை ஒத்த வில்லிலிருந்து எய்யப்படும் ஸர்ப்ப விஷம் போன்றதான நாண்களுடன் இந்த்ரஜித் நிகும்பிலையை அடைந்திருக்கிறான். இந்த லக்ஷ்மணன் பெரும் சேனையுடன் உடன் சென்று அவனை வதம் செய்ய வேண்டும்.

 8. நம் மகாவாக்யங்கள் எதுவும் தீமை நன்மையாக மாறுவதாகவோ அல்லது
  vice-versa என்று சொல்லவில்லை.

  ஜீவன் , பரமனிடமிருந்து தூது வரும் ஆசார்யனின் உதவியால் ஆணவத்தின் வடிவான அரக்கர்கள் அழிக்கபப்ட்ட பின் வீடு ஏகுவதே தத்துவம் என்று சொல்வது உண்டு.பரமனும் ஆணவமும் ஒன்றல்லவே.

  ராமாயணத்தை தத்துவார்த்தமாக பார்க்கும் நூல்களும் இராமனும் இராவணனும் ஒன்று என்று சொல்வதில்லை.

  ஏனென்றால் த்வைதப் பிரபஞ்சத்தில் ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்றல்ல.

  பின் அந்த வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத நிலையில் பிரமம் தான் உள்ளது.

  இராமனும் இராவணனும் நன்மை-தீமை, தெய்வீக-ராக்ஷச , நல்வினை-தீவினை , ஜீவன்-ஈஸ்வரன்சுத்த சத்வம்-தாமசம், என்று எப்படி பார்த்தாலும் ஒன்று இன்னொன்றாக மாறுவதில்லை.

  த்வைத நிலையில் தீவினை நல்வினையினால் அழிக்கப்படாக வேண்டும் .அதன் பிறகே இரண்டற்ற நிலையை பற்றி யோசிக்ககூட முடியும்.

  தீமையை முதலில் தீமை என்று உணர்வது தான் இதற்கு முதல் வழி.

  அது யுத்தமோ, சங்கரர் செய்தது போல வாதப்போரோ -அதன் முடிவில் நல்வினை ஜெயிக்கிறது .

  அதுவே நமக்கான வழிகாட்டி. ராமாயணத்தை அணுக வேண்டிய கோணம் அப்படியே.

  நதிகளை அழித்துப் போட்ட ஒரு மக்கள் கூட்டம் பின் வேறு வழியில்லாமல் கடல் நீரைத்தான் சுத்திகரித்துக் குடிக்க வேண்டும். அது அடைய வேண்டிய ஆதர்சம் அல்ல. நல்லதைக் காக்கத் தவறினால் கிடைத்ததைக் குடிக்க நேரிடும்.

  சாய்

 9. அவனிடத்தினின்று விராட் பிறந்தது
  விராட்டிலிருந்து (பல்லுயிர்களாக) பிறந்தான் புருஷன்
  பிறந்தவன் முன்னும் பின்னுமாய்
  புவியெங்கும் நிறைந்தான். (5) – புருஷ சூக்தம்

  ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க – மணிவாசகப்பெருமான் .

  பல்லுயிர்களாய் இருப்பவனும் அவனே என்கிறது புருஷ சூக்தம். ” ஈசா வாச்யம் இதம் சர்வம் ” -என்கிறது உபநிஷதம். ஏற்பதும் ஏற்காததும் சிவஸ்ரீ விபூதிப்ஹூஷனின் விருப்பம். ஏனெனில் நம் மதத்தில் பன்முக பார்வை எப்போதும் அனுமதிக்கப்படுகிறது.

  இறைவனை தவிர வேறு எதுவும் இல்லை என்கிறது நம் உபநிஷதம்.

 10. “விபூதிப்ஹூஷனின” என்று தட்டச்சு பிழை . ” சிவஸ்ரீ. விபூதிபூஷண் ” என்று படிக்க வேண்டுகிறேன்.

 11. உலகிலே திருக்குறளுக்கும், பகவத் கீதாவுக்கும் வியாக்யானம் எழுதுவது எவ்வளவோ சுலபமோ அவ்வளவு சுலபம் அத்வைதம் புரிந்துகொள்வது. சில மஹா வாக்கியங்கள் என்று சொல்லப் படுபவனவற்றை தெளித்தால் போதும்.

  அத்வைதம் ஜீவாத்மாவை ஒத்துக் கொள்ளாமல் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

 12. வெறும் வாதத்திற்காக அன்றி வாஸ்தவத்தில் அத்வைத அனுபவம் பெற்ற மகான்கள் தேவையிலாமல் பக்கம் பக்கமாக எழுதி வாதித்து வந்திருக்கிறார்கள்.
  ஒரே வரியில் ” எல்லாம் ஒண்ணு” என்று சொல்லி இருக்கலாம்.

  ” மானச சஞ்சரரே பிரம்மணி மானச சஞ்சரரே ” என்றவருக்கு கிருஷ்ணனின் மயிற்பீலி அலங்கார அழகைத்தாண்டி யோசிக்க முடியவில்லை .

  பரமஹம்சர்களுக்கோ பரிபூரண முரளி அவதாரத்தின் முக அழகை பருகத் தெரிந்ததே ஒழிய கம்சனின் கொலைவெறி மற்றும் கோபம் மண்டிய முகத்தையும் மனதில் கொண்டு பிரம்மத்தை உணருங்கள் என்று சொல்லத் தெரியவில்லை.

  எல்லாம் ஒண்ணு தான் அத்வைதத்தை பொறுத்த மட்டில் ஆனால் “எப்போதும் -எல்லா நிலையிலும் ” நிச்சயமாக அல்ல. நம் தற்போதைய நிலையில் காரியத்தில் அத்வைதம் கிடையாது. அப்படித்தான் என்று சாதித்தால்

  மக்கள் நல்ல வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதை விட்டு ஊரறிந்த புரட்டர்களுக்கு போட்டு விடலாம். எல்லாம் ஒண்ணு தானே. புரட்டர்கள் ஆட்டை வெட்டும் முன் இலவச மாலை போடுவார்கள். நல்லவர்கள்.

  “அத்வைதம் ஜீவாத்மாவை ஒத்துக் கொள்ளாமல் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.”

  நன்றி திரு சாரங்.

  அத்வைதம் த்வைதத்தை ஒரு நிலையில் -அதாவது நமது தற்போதைய நிலையில் ஒப்புக் கொள்கிறது.

  சதாசிவ ப்ரம்மேந்த்ரர் , தன கை வெட்டுப் பட்டபோதும் உடல் உணர்வின்றி பிரம்ம நிலையில் தோய்ந்து மேலே நடந்தவர் ,மனதை பிரம்மத்தில் சஞ்சாரம் செய்ய சொல்லுகையில் கிருஷ்ண அனுபவத்தில் திளைக்கும் அவர் தூய த்வைத பக்தியை பாடுகிறார்.

  சாய்

 13. Sivasree’s comments:

  “…என்ன ராமன்ஜி தமிழில் ராமாயணம் படிக்கவில்லையா? இல்லை ராமகதையை கேட்கக்கூட இல்லையா? நிகும்பலை என்பது ஒரு இடம் அன்று அது ஒரு பகைவரை வெல்ல நடத்தப்படும் வேள்வி. இன்றும் கூட ஸ்ரீ ப்ரத்யங்கிர தேவியின் ஆலயங்களில் அமாவாஸ்யை பௌர்ணமிதோரும் நடத்தப்படுகிறது. அன்னைக்காளி வழிபாட்டில் மிளகாய் எரித்து நடத்தப்படும் பூஜைகள் கூட ஒருவகையில் நிகும்பலா யாகம் தான்.
  இராமன் ஜி நீங்கள் பாணியன் மரத்தினைப் பார்த்தது உண்டா இல்லையா. ஐயா அது நமது ஆல மரம் தான்.
  கருத்துருக்களை புரிந்த்துகொண்டு எழுதுங்கள். உங்கள் முயற்சி நிச்சயம் பாராட்டிற்குறியது. அருள் கூர்ந்து க்கருத்துபிழைகளை தவிர்க்கவேண்டுகிறேன்.
  ஒரே நூலை சார்ந்து எழுதாது ஒத்த நூல்களின் துணைக்கொண்டு மொழிபெயர்ப்பு செய்தல் நல்லது. அன்புக்குரிய ஸ்ரீ ஜடாயு, ஸ்ரீ அ நீ ஆகியோரதுக்கட்டுரைகளை கண்டு இவற்றை நன்கு உணர முடியும்.
  சிவஸ்ரீ.”

  1. நான் படித்தது என்ன என்பது இருக்கட்டும். திரு. கிருஷ்ண குமார் அதற்குப் பதில் கொடுத்திருப்பது போல “… ஸர்ப்ப விஷம் போன்றதான நாண்களுடன் இந்த்ரஜித் நிகும்பிலையை அடைந்திருக்கிறான்…” நிகும்பலை என்பது ஒரு இடம் என்றாகிறது. மூலத்திலும் ” …soon reached Nikumbhila where Indrajith was busy assembling…” என்றுதான் இருக்கிறது. விஷயம் இப்படியாக இருக்க வேறு மூலங்களைப் படித்து நான் எழுதுவதில் எந்த மாற்றம் வந்திருக்கப்போகிறது?

  2. மூலத்தில் “..Vibeeshana was the only person who knew the Banian tree in Nikumbhila…” என்று வருவதில் முதன்முறையாக “banyan” என்பதற்குப் பதிலாக “banian” என்பதைக் கண்டேன். இது எனக்குப் புதிய சொல் ஆதலால், இதுவும் ஏதோ ஆரண்ய மற்றும் கிஷ்கிந்தா காண்டங்களில் வரும் பலவகை மரங்களில் ஒன்றோ என்று எடுத்துக்கொண்டு விட்டேன். மறுபடியும் கேட்கிறேன்: ஒரு பெயரில் என்ன வந்துவிட்டது? எந்தக் கருத்தில் எந்தப் பிழை வந்துவிட்டது?

  3. எழுதுவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். இந்தத் தொடரைப் பொருத்தவரை ஒவ்வொரு ஸ்லோகத்துடன் வரும் நீதி போதனைதான் அந்த முதற்காரணம். மற்றபடி விவரங்கள் அங்கங்கு தவறாக வந்தால் அதைச் சுட்டி காட்டுவதோடு நிற்க வேண்டுமே அன்றி, இவர்களைப் போல எழுதலாமே என்று சொல்வதோ, இதைப் படிக்கவில்லையா, இதுகூடத் தெரியாதோ, என்றவை எல்லாமே எழுதுபவர் தன் எல்லையை மீறுவதாகத்தான் எனக்குப் படுகிறது. அதை அனுமதிப்பது இணைய தளம் தொடர்புடையவர்கள் எவரையுமே பெருமைப் படுத்துவதாக இல்லை.

  அதனால்தான் திரு. கிருஷ்ண குமார் தனது பதிலை, பொதுவாக
  “வித்யா ததாதி வினயம் வினயாத்யாதி பாத்ரதாம்
  பாத்ரத்வாத்தனமாப்னோதி தனாத்தர்மம் தத: ஸுகம் (ஹிதோபதேசம்)

  மனிதன் கல்வியினால் வினயத்தைப் பெறுகிறான். வினயத்தால் மதிப்பையும் மதிப்பால் செல்வத்தையும் பெற்று பெற்ற செல்வத்தால் தர்மங்களைச் செய்து அதனால் சுகங்களை அடைகிறான்.”

  என்று ஆரம்பித்து பின்னரே “நிகும்பலா”வைப் பற்றி சொல்லியிருக்கிறார் என்ற ஐயம் எனக்கு இருக்கிறது.

  – S. Raman

 14. இன்று ஏகாதசி. ஏகாதசி அன்றெல்லாம் நமது தமிழ் ஹிந்து தளத்தில் ஏதேனும் வைஷ்ணவ பரமான ஒரு வ்யாசத்தை வாசிக்க மனம் நாடும். இன்று எனது பேறு இந்த வ்யாசத்தை வாசிக்க நேர்ந்தது.

  கற்பார் ராம பிரானை அல்லால் மற்றொன்றும் கற்பரோ

  என்று சான்றோர்களின் ப்ரவசனங்களில் கேட்டிருக்கிறேன்.

  மனதை உருக்குவது ராமகதை அன்றோ.

  படிப்பவர் அனைவருக்கும் ராம கதை மனதில் குளிர்ச்சி தருவிப்பது என்பது பொதுவிலான விஷயம்.

  ஆனால் ஏதோ ப்ரதேசாந்தரத்தில் தனிமையில் இருக்கும் என்னைப்போன்றோருக்குக் கடும் வெப்பத்தில் கிடைக்கும் தருநிழல் போன்றது ராமகதை.

  ப்ரதேசாந்தரத்தில் ஏகாதசி அன்று தனிமையில் இருந்து இது போன்ற ஒரு வ்யாசத்தை வாசித்து கண்ணிமையிலிருந்து ஒரு சொட்டு நீர்த்துளி விழுந்தால் எனது மனம் ஒரு க்ஷண நேரமேனும் ராமபிரானின் திருவடி நீழலைத் தீண்டும் பாக்யம் பெற்று விட்டதோ என எண்ணத்தோன்றும்.

  வாசிக்கும் பல அன்பர்கள் இதைவிடப்பன்மடங்கு அனுபவம் பெற்றிருக்கக் கூடும். பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம்.

  வ்யாசத்தை சமர்ப்பித்த தாங்கள், வாசிப்பனுபவம் பெற்ற அன்பர்கள், ராமபிரானின் திருவடிநீழல் இவையெல்லாம் இணைவது இது தான் இறைமயமான வ்யாசத்தின் சாரம்.

 15. வாசகர் அத்விகாவின் வாழ்த்துகளுக்கு நன்றி. தங்களது

  1. “…ராமனாய் வந்தவனும் அவனே. இராவணனாய் வந்தவனும் அவனே…”
  என்ற கணிப்பு அத்வைத சித்தாந்தத்தின் படி சரியே. ஆனாலும் “அத்துவிதம் என்றும் அகத்து உருக, ஓர்போதும் செய்கையில் ஆற்றற்க” என்ற ரமணர்/சங்கரர் கூற்றுப்படி அது சரியல்ல. எப்போது உலகம் தெரிகிறதோ அப்போதே இரட்டைகள் வரும்; அதனால் ராமனும் ராவணனும் வேறு வேறு என்றுதான் கொள்ளவேண்டும்.

  2. “..சம்ஸ்கிருத எழுத்து font படிக்க வசதியாக இல்லை. முடிந்தால் வேறு font மாற்றினால் நன்றாக இருக்கும்…”
  நான் அனுப்பிய கட்டுரையில் சமஸ்கிருதம் மட்டும்தான் இருந்தது. வாசகர்களுக்கு நன்மை பயக்கும் என்று தமிழில் இணைய தளத்தினர் சேர்த்தார்கள். (அதைப் பார்த்துவிட்டு எனது அடுத்த தொடரில் நானே அப்படிச் சேர்த்தேன்.) தற்போது ஆட்பலம் இல்லாமையால் தமிழ் சேர்க்கப்படவில்லை என்று ஊகிக்கிறேன். இது புத்தகமாக வரும்போது தங்களது வேண்டுகோளை நினைவில் கொள்கிறோம்.

  ராமன். எஸ்

 16. \\\\\சம்ஸ்கிருத எழுத்து font படிக்க வசதியாக இல்லை. முடிந்தால் வேறு font மாற்றினால் நன்றாக இருக்கும்…”\\\\\

  இது சம்பந்தமாய் இதே வ்யாசத்தில் நான் அடைந்த குழப்பமும், அதற்கான சுலபமான நிவாரணமும்

  உதாரணம்

  आदित्यं प्रेक्ष्य जप्त्वा तु परं हर्षमवाप्तवान् । … ।। 6.107.29 ।।

  आदित्यं, சூர்யனைப் प्रेक्ष्य, பார்த்து जप्त्वा, ஜபித்துவிட்டு (இராமன்) परं, மிகுந்த
  हर्षं, மகிழ்ச்சி अवाप्तवान् அடைந்தான்.

  மேற்கண்ட ச்லோகத்தில் ஜப்த்வா என்பது வெள்ளெழுத்து உள்ள எனக்கு *ஜஸ்வா* என்ற படிக்குத் தோன்றியது.

  இந்த ச்லோகத்தை அப்படியே copy paste செய்து அழகி Unicode Editor ல் பதித்து Font Size ஐ பத்திலிருந்து பதினான் குக்கு மாற்றினேன்.

  பதினாலு Font Size ல் அக்ஷரம் பெரிதாக ஆவதோடு அல்லாமல் தனக்குத் தானே Bold ஆகவும் ஆகி விடுகிறது.

  Font Size 12 அல்லது 13 ல் அந்த அளவு தெளிவில்லை.

  ஆனால் இதுவெல்லாமே என் வெள்ளெழுத்தின் படி Relative ஆக எனக்குக் கிடைத்த தெளிவு.

  நான் பிறிதொரு வ்யாசம் தளத்திற்கு சமர்ப்பிக்கையில் அதில் சம்ஸ்க்ருத ச்லோகங்களை தட்டச்சுகையில் இந்த உத்தியைக் கையாண்டதில் அக்ஷரங்கள் தெளிவாகத் தெரிந்தன.

  Just an alternative suggestion for consideration.

 17. திரு ராமன் அவர்களின் பதிலுக்கு எனது நன்றிகள். கண்ணாடி அணிந்து படிக்கும் வயதான பெரியவர்களுக்கு பெரிய எழுத்துக்களாக இருந்தால் வசதி. அதே சமயம் நமது கம்ப்யூடர் திரையில் தெரியும் எழுத்துக்களை பெரிதாக்கி படிக்கும் வசதி டூல் பாரிலேயே உள்ளது. ஆனால் நான் தெரிவித்த கருத்து சரியான சொற்களை பயன்படுத்தாததால் தவறாகிவிட்டது. சமஸ்கிருத எழுத்தின் வடிவம் ( font face type ) அதாவது எழுத்தின் வகையை மாற்றவேண்டும். font size -ஐ நாம் கூட்டியோ குறித்தோ படிக்க வசதி நம் கம்ப்யூட்டரிலேயே உள்ளது.

 18. சுவாமி சிவானந்தரின் ” MAY I ANSWER THAT ? ” என்ற நூலில் , கேள்வி எண் 235 -( பக்கம் எண். 189-190 ) ( divine life society, sivanandha nagar, Uttaranchal ) 2006 edition- கடவுள் ஏன் தீயவர்களை உருவாக்குகிறார் என்ற வினாவுக்கு, கீழ்க்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.

  ” As this is a relative world, there must be rogues and honest men. A rogue is not an eternal rogue. A rogue is the saint of the future. Roguery is a negative virtue. It is not a separate entity. Honesty will have no existence in the absence of roguery. The raison d”etre of roguery is to glorify honesty. Roguery and honesty are the obverse and the reverse of the same coin. They are mental creations only.Even a rogue has some virtues. There is neither absolute roguery nor absolute honesty. GOD HIMSELF PLAYS THE PART OF A ROGUE IN THE WORLD’S DRAMA FOR HIS LILA. tHERE IS NEITHER John nor Peter.”.

  இந்த கருத்தினையே நான் ஏற்பதால் அதனை எழுதினேன். அதனை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். நம் மதம் ஒரு சுதந்திர பூங்கா. எனவே மாறுபட்ட கருத்துக்களையும் எப்போதும் வரவேற்போம்.

 19. //
  ” As this is a relative world, there must be rogues and honest men. A rogue is not an eternal rogue. A rogue is the saint of the future. Roguery is a negative virtue. It is not a separate entity. Honesty will have no existence in the absence of roguery. The raison d”etre of roguery is to glorify honesty. Roguery and honesty are the obverse and the reverse of the same coin. They are mental creations only.Even a rogue has some virtues. There is neither absolute roguery nor absolute honesty. GOD HIMSELF PLAYS THE PART OF A ROGUE IN THE WORLD’S DRAMA FOR HIS LILA. tHERE IS NEITHER John nor Peter.”.
  //

  அபாக்யவசமாக இது வேதாந்தத்தின் ஒரு சிறு கருத்து. இதை தான் பெரிதா ஊதி “TAOISM” என்றார்கள். அதே போல வேதாந்தத்தின் ஒரு சிறு கருத்தை ஊதி ஜென் மதமே நிறுவினார்கள்.

  தீமை இல்லாமை தான் நன்மை என்று நம்புவது, ரெண்டும் ஒரன்று தான் என்பதெல்லாம் நம்மை நாமே நன்கு ஏமாற்றிக் கொள்வது. இந்த லாஜிக்கை அப்படியே நீட்டிக் கொண்டு போனால், பிரம்மம் இல்லை என்று நிர்ணயம் செய்து விடலாம். இதனால் தான் இப்படி எல்லாம் பேசாமல், சங்கராச்சார்யர் கவனமாக தாரதம்யம் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்.

  முன் சொன்னது போல, அத்வைதத்திற்கு விளக்கம் சொல்வது ரொம்ப சுலபம் – அதில் எல்லாமே ஓட்டும்.

 20. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் புலமை என்பதே பிறருக்கு புரியாமல் எழுதுவதும் , பிறரை குழப்புவதும் மட்டுமே என்று நினைத்தவர்கள் பலர் இருந்தனர். இன்றும் அப்படித்தான் உள்ளது. ஆனால் உலகெங்கும் மக்கள் என்றும் விரும்புவது என்னவெனில்., சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் புத்தகங்களை தான். BREVITY IS THE SOUL OF WIT- என்பதே உலகு ஏற்ற உண்மை. நாலாயிரம் பக்கத்துக்கு நூல்கள் வெளியிட்டால் அதனை யாரும் வாங்கிப்படிக்க மாட்டார்கள். கரையானுக்கு தான் உணவாகும். ஒரு நாற்பது அல்லது ஐம்பது பக்கங்களுக்குள் அடங்கிவிடும் ” JONATHAN LIVINGSTON SEAGULL “- போன்ற ரிச்சர்ட் பாக் எழுதிய நூல்கள் சாதித்ததை , கடினமான நூல்கள் சாதிக்க முடியாது. எளிமை இன்பம். கடினம் துன்பம்.

 21. இந்திய வேதாந்த குருவின் மாணவனின் மாணவனின் தெரிந்தவரின் மாணவர் எழுதிய புத்தகங்களை படித்து ” அத்வைத வேதாந்தம்” அறிந்து கொண்டவர் அமெரிக்காவில் மக்கள் விரும்படி எதையும் எழுதலாம் ரிச்சர்ட் பாக் போல . அங்கே இது ஒரு பெரிய இண்டஸ்ட்ரி.

  அவர்கள் வழக்கப்படி மூலம் இது தான் -அதில் இஷ்டத்துக்கு கற்பனையை கலந்திருக்கிறோம் என்று நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை .

  ஹிந்து , இந்தியா என்ற “கெட்ட” வார்ததைகள் இன்றி
  ” அத்வைதம்” பிளந்து கட்டலாம்.

  பாக் ” One” [ ஒன்று] என்று ஒரு புத்தகம் இப்படி எழுதினார்.

  தோப்புக்கரணம் பற்றி அவரகள் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

  கணவன் -மனைவி உறவு ஜன்மங்கள் கடந்தது என்றால் பாட்டிக் கதை.
  ரிச்சர்ட் பாச் ” soul mate” பற்றி எழுதினால் அது அமேசிங்.

  அந்த எழுத்தாளர் சீ -கல் புத்தகம் ஒரு பறவையின் பார்வையில் விடா முயற்சியை பற்றிய உருவகம். அதை படித்து ஒருவர் பைலட் ஆகலாம் என்றால் என்ன
  சொல்ல ?

  சாய்

 22. அத்வைத வேதாந்தம் நாடு, மதம், மொழி, இனம், சாதி என்ற குறுகிய எல்லைகளை கடந்தது. திருக்குறள் தமிழ் நாட்டில் பிறந்தாலும் அது உலகப்பொதுநூல். உலகப்பொதுமறை என்று பாராட்டப்படுகிறது. அத்வைதம் இந்தியாவில் பிறந்தது என்பதற்காக அதனை இந்தியர்களுக்கு மட்டுமான சொத்து என்று கருதமுடியாது. யார் வேண்டுமானாலும் அதனை பின்பற்றலாம். எதற்கெடுத்தாலும் மேட்டுக்குடி புத்தியுடன் , மத விஷயங்கள் கையாளப்பட்டதால் தான் , இன்று ஆபிரகாமிய மதங்கள் தலைதூக்க நேரிட்டுள்ளது. இனியாவது மேட்டுக்குடி புத்தியை கைவிட்டு நல்ல பாதைக்கு திரும்புவோம். நமக்கு நல்ல வழியை காட்டுமாறு ஐயனாரை வேண்டுகிறேன்.

 23. இத்தொடரை ஆரம்பம் முதலே படித்து வருகிறேன். ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  “அத்துவிதம் என்றும் அகத்து உருக, ஓர்போதும் செய்கையில் ஆற்றற்க”
  ஒரே வரியில் என்ன அழகாக சொல்லி விட்டார்.

  இந்த மேற்கோளுக்கும் மிக நன்றி. மிக உதவும் இது. ரமணரே இப்படி சொல்லியிருக்கிறார் என்பது மிக முக்கியம்.

  உரையாடலில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  இராமன்= இராவணன் என்பது அத்வைதம நிச்சயமாக அல்ல -அந்த கருத்தாக்கம் இராமாயணத்தின் மையக்கருத்துக்கும் முரணானது என்று உறுதி பட தோன்றியதால் அதை இங்கே நானும் எனக்கு தெரிந்த முறையில்சொல்ல முயன்றேன்.

  பல படித்த ஹிந்து நண்பர்கள் பல தளங்களில் இதில் குழம்புவதை காண்கிறேன்.

  அவ்வளவு படிக்காதவர்கள் இதில் குழம்புவதில்லை.

  “ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன-எல்லாம்
  மாயை ! ” என்ற தாமசீக மனநிலைக்கு இந்த குழப்பம் [ சிலரை] கடைசியில் இட்டு செல்வதையும் பார்க்கிறேன்.

  மேற்கத்தியர்கள் சிலர் ஆங்கில விவாத தளங்களில் நன்றாக உபயோகிக்கும்
  [ நம்மை அடிக்க] உதவும் தவறான கருத்துக்கள் இந்த ,

  1. ” எல்லாம் மாயா ” -அதாவது முயல் கொம்பு போல] மாயை , ஹிந்துக்களே தீமையை கண்டு கொள்ளாதீர்கள்.

  2.எல்லாம் *எப்போதும்* ஒன்று தான் என்பன .ராமன்=இராவணன் ;நரசிம்ஹன்=ஹிரண்யன் .

  எல்லாம் தவறான கருத்துக்கள்.

  அத்வைதம் அமெரிக்கர்களுக்கு கிடையாது அல்லது அமிஞ்சிகரைக்காரர்களுக்கு அல்ல என்று விஷயம் தெரிந்தோர் எவரும் சொல்லுவதில்லை.

  ரமணரே தன்னை தேடி வந்த தகுதியுள்ளவர்களுக்கு நாடு மதம் தடையின்றி அந்நிலை உணர வைத்திருக்கிறார்.

  [ தகுதி என்றால் அந்த நிலை அடைய ஆன்மீக ரீதியாக முதிர்ச்சி பெற்றவர்கள்-இதில் “மேட்டுக்குடி ” எங்கிருந்து வந்ததோ யானறியேன்.! ]

  இந்தியனான அடியேன் சென்றிருந்தால் ஒரு பார்வையில் அதற்கு நான் இன்னும் தயார் அல்ல என்று தெரிந்து கொண்டிருப்பார். ஒரு அமெரிக்கர் கூட நின்றிருந்தால் அவரும் பூர்வ ஜன்மங்களில் செய்த ஆன்ம சாதனைகளால் முதிர்ச்சி அடைந்தவராக இருந்தால் அதற்கேற்ற அனுபவம் அந்த அமெரிக்கருக்கு கிடைத்திருக்கும்.

  நான் எழுதியது.

  “அவர்கள் வழக்கப்படி- ” மூலம் இது தான் -அதில் இஷ்டத்துக்கு கற்பனையை கலந்திருக்கிறோம் என்று நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை .”

  நேர்மையின்மை என்பது யார் செய்தாலும் தவறு. நாடு மதம் கிடையாது.

  இணையத்தில் அத்வைதம் பற்றி பல விவாதங்கள். பல தவறான கருத்துக்கள் முக்கியமாக “எல்லாம் மாயை “அல்லது “எல்லாம் எப்போதும் ஒன்று” ,” ஹிந்து மதம் எதையும் ஒப்புக்கொள்ளும்” என்பது போன்றவை

  நான் மேலே எழுப்பியுள்ள விஷயங்கள் பற்றி அத்வைதம் சித்தாந்தம் பற்றி , அதன் இன்றைய தாக்கம் பற்றி மேலும் கட்டுரைகள், மேலும் விவாதங்கள் நடந்தால் நமக்கெலாம் நன்மையாக இருக்கும்.

  சாய்

 24. ” அபாக்யவசமாக இது வேதாந்தத்தின் ஒரு சிறு கருத்து. “- இது ஒன்றும் அபாக்கியவசமானது அல்ல. சுவாமி சிவானந்தரின் கருத்தினை அபாக்கியவசமானது என்று சொல்லிக்கொள்வதால் , வேதாந்தத்தின் உண்மைகளை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மேலும் ஆதிசங்கரர் அத்வைத ஆச்சாரியார்களில் ஒருவர் , அவ்வளவுதான். அந்த பரம்பரையில் வந்தவர். அத்வைதத்தை அவர் உருவாக்கவில்லை. அவருக்கும் முன்னரே பல காலமாக உள்ள விஷயம் இது.

  ” ராமன்=இராவணன் ;நரசிம்ஹன்=ஹிரண்யன் .

  எல்லாம் தவறான கருத்துக்கள். “- எப்படி தவறு என்று விளக்காமல் வெறுமனே தவறு என்று சொல்லிக்கொள்வதால் எவ்வித புண்ணியமும் இல்லை. ஒரே பரம்பொருளின் பல்வேறுவகை தோற்றங்கள் தான் பஞ்சபூதங்களும் என்று வேதங்களில் எவ்வளவு இடத்தில் வருகிறது என்று பட்டியலிடட்டுமா ? திருப்பதி என வழங்கும் திருமலையில் போகிறபாதைஎல்லாம் இருக்கின்ற மரங்களின் அருகே , பல இடங்களில் வனவேங்கடேச்வருலு – என்று தெலுங்கில் எழுதிய பலகைகள் TTD – தேவஸ்தானத்தினால் வைக்கப்பட்டுள்ளன. மலையப்ப சாமியும் , மரமும் ஒன்றா என்று விதண்டாவாதம் செய்வோரை என்ன செய்யமுடியும் ?

  இராமன்= இராவணன், நரசிம்மன்= இரணியகசிபு என்று யாரும் சொல்லாததை எல்லாம் சொல்லும் இலட்சணத்திலிருந்தே நமது புரியும் திறன் புலப்படுகிறது. இராமனாய் வந்தவன் தான் இராவணனாயும் வந்தான், நரசிம்மனாய் வந்தவன் தான் இரணியகசிபுவாயும் வந்தான். ஒரே சக்தியின் பல்வேறு தோற்றங்கள் தான் இந்த பிரபஞ்சம் முழுவதுமே.
  இராமன் வேறு இராவணன் வேறு என்று சொல்வோர் , உண்மை அறியாதோர். தோற்றம் வேறு, சக்தி ஒன்றே.

  ஒரு வீட்டில் ஐம்பது அறைகள் உள்ளன. அதன் உரிமையாளரை பார்த்து வேறு ஒருவருக்கு அறிமுகப்படுத்திவைக்கும் போது , ” சார் பேரு முருகேசன். இந்த பெரிய வீட்டின் சொந்தக்காரர் இவர் தான். ஆனால் , இந்தவீட்டில் உள்ள மொத்தம் ஐம்பது அறைகளில் 49- மட்டுமே இவருக்கு சொந்தம். ஒரே ஒரு அறை மட்டுமே வேறு ஒருவருக்கு சொந்தம். அந்த ஒருவர் பெயர் சூரபத்மன் – என்பது போல இருக்கிறது. நல்ல நகைச்சுவை போங்கள். தமிழ் இந்துவுக்கு நகைச்சுவையும் இருந்தால் தான் மேலும் சுவை கூடும்.

 25. மண்ணும் மரமும் காற்றும் நீரும் ஆகாயமும் ஆக இருப்பவன் அவனே. ஆனால் இவற்றுள் நமது வழிபாட்டு முறைகளுக்கு , நமது தேவைகளுக்கு தகுந்தவாறு தக்க உருவையும், பிடித்த வழிமுறைகளையும் அனைவரும் பின்பற்றிவருகிறோம்.
  ” கடவுள் வணக்கம் செய்பவன் தன்னையும் சேர்த்தே வணங்குகிறான் “- ஈஸ்வரன் பிம்பம் எனவும் , ஜீவன் அனைத்தும் பிரதி பிம்பம் எனவும், பாகவத மகாபுரானத்திலுள்ள ஸ்ரீ பிரஹலாத ஸ்துதியிலும் அழகாக கூறப்பட்டுள்ளது .( VII-ix.10- )

 26. இத்தொடரை வரவேற்று வாழ்த்தியிருக்கும் சாய் அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களின்

  “..இணையத்தில் அத்வைதம் பற்றி பல விவாதங்கள். பல தவறான கருத்துக்கள் முக்கியமாக “எல்லாம் மாயை “அல்லது “எல்லாம் எப்போதும் ஒன்று” ,” ஹிந்து மதம் எதையும் ஒப்புக்கொள்ளும்” என்பது போன்றவை

  நான் மேலே எழுப்பியுள்ள விஷயங்கள் பற்றி அத்வைதம் சித்தாந்தம் பற்றி , அதன் இன்றைய தாக்கம் பற்றி மேலும் கட்டுரைகள், மேலும் விவாதங்கள் நடந்தால் நமக்கெலாம் நன்மையாக இருக்கும்.”

  என்ற கருத்துக்களின் படி இங்கு தொடராக வந்துகொண்டிருக்கும் “ஆன்ம போதம்” சிலபல ஐயங்களை அகற்றியிருக்கும் என்று நம்புகிறேன்.

  ஒரு வருடத்திற்கும் முன்பாக வந்த “அறியும் அறிவே அறிவு” தொடரும் ரமணரின் “உள்ளது நாற்பது” நூலை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டதுதான். “உள்ளது” ஒன்றைப் பற்றியே அதில் அனைத்தும் உள்ளதால், அதிலும் தங்களுக்கு வேண்டிய விளக்கங்கள் பலவும் இருக்கும். “உள்ளது நாற்பதின்” இரண்டு மங்கலச் செய்யுள்களை எடுத்துக்கொண்டு அதன் விளக்கங்களைக் கேட்டாலே போதும். இவ்வுலகில் ஏன் பல மதங்களும், பிரிவுகளும் உண்டாயின என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 27. அன்பார்ந்த சஹோதரி ஸ்ரீமதி அத்விகா,

  \\\\\” கடவுள் வணக்கம் செய்பவன் தன்னையும் சேர்த்தே வணங்குகிறான் “- ஈஸ்வரன் பிம்பம் எனவும் , ஜீவன் அனைத்தும் பிரதி பிம்பம் எனவும், பாகவத மகாபுரானத்திலுள்ள ஸ்ரீ பிரஹலாத ஸ்துதியிலும் அழகாக கூறப்பட்டுள்ளது .( VII-ix.10- )\\\\\

  பாகவதத்திலிருந்து ப்ரஹ்லாத ஸ்துதியின் வாயிலாக ஒரு அத்வைதக் கருத்தைத் தாங்கள் சொல்லியதால் ப்ரஹ்லாத ஸ்துதியின் அந்த ச்லோகத்தை வாசிப்பதில் ருசி கொண்டு அதனை வாசிக்கவிழைந்தேன். (7-9-10)

  ச்லோக சாரம் நான் கீழே கொடுத்துள்ள படி.

  ஒரு வேளை உங்கள் கருத்தை உள்ளடக்கி நீங்கள் சொல்ல விரும்பிய ச்லோகம் வேறாக இருக்கலாம்.

  विप्राद्विषड्गुणयुतादरविन्दनाभ
  पादारविन्दविमुखात्श्वपचं वरिष्ठम्
  मन्ये तदर्पितमनोवचनेहितार्थ
  प्राणं पुनाति स कुलं न तु भूरिमानः

  விப்ராத் த்விஷட்குணயுதாத் அரவிந்தநாப
  பாதாரவிந்த விமுகாத் ஸ்வபசம் வரிஷ்டம்
  மன்யே ததர்பிதமநோ வசனேஹிதார்த
  ப்ராணம் புநாதி ஸ குலம் ந து பூரிமான: (ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம்-7 அத்யாயம்-9- ப்ரஹ்லாத ஸ்துதி – ச்லோகம்-10)

  ச்லோகசாரம் :-

  நாய் மாம்சத்தைப் புஜிப்பவனாக இருப்பினும் கூட ஒரு மனுஷ்யன் அரவிந்தநாபனின் (கண்ணனின்) திருவடித்தாமரைகளில் தன் மனம், வாக்கு, செயற்பாடுகள், செல்வம், ப்ராணன் இவையனைத்தையும் சமர்ப்பிப்பவனாக இருப்பானாயின் அவன் ………

  ஈராறு பன்னிரண்டு குணங்களைத் தன்னகத்தே கொண்ட ப்ராம்ஹணனாயினும் கண்ணன் திருவடித்தாமரையில் விமுகமாய் இருக்கும் ஒரு மனுஷ்யனை விட மேலானவன்..

  அப்படிப்பட்ட நாய்மாம்சம் புஜிக்கும் அன்பனோ தன் பக்தியின் ப்ரபாவத்தினால் தன் ஒட்டு மொத்த குடும்பத்தையே உத்தாரணம் செய்யத்தக்கவனாவான். ஆனால் பன்னிரு குணங்களைக் கொண்ட ப்ராம்ஹணனேயாயினும் தன் குலப்பெருமையில் ஆழ்ந்து கண்ணனின் திருவடித்தாமரைகளில் விமுகமாய் இருந்தால் அவன் தன்னைக்கூடத் தூய்மைப்படுத்தவியலாது

 28. ” ராமன்=இராவணன் ;நரசிம்ஹன்=ஹிரண்யன் .
  எல்லாம் தவறான கருத்துக்கள். “- எப்படி தவறு என்று விளக்காமல் வெறுமனே தவறு என்று சொல்லிக்கொள்வதால் எவ்வித புண்ணியமும் இல்ல”

  காரியத்தில் அத்வைதம் இல்லை என்று பல முறை சொல்லியாயிற்று.ரமணரின் மேற்கோளும் தெளிவு செய்திருக்கும்.

  பிரஹலாதன் செய்வது நரசிம்ஹனின் ஸ்துதியை. நானே கடவுள் என்ற ஹிரண்யனின் ஆணவத்தை அவன் ஸ்துதி செய்யவில்லை.

  ஆக இருமை உலகில் தான் ராமனும் ராவணனும் ;ஆயினும் ராமன் வேறு ராவணன் வேறு’;
  ஒன்றான நிலையில் ராமனும் இல்லை ராவணனும் இல்லை. பிரம்மம் மட்டுமே. இதையும் பல முறை சொல்லியாயிற்று.

  அதனால் ராமனாய் வந்தவன் ராவணனை வந்தான் …என்ற படிக்கான வாதம் ராம நாமத்தை பரப்பிய போதேந்திரர் போன்ற அத்வைத ஆச்சார்யார்கள் கூட செய்யாத ஒன்று.

  இப்போதும் இவ்வளவு நான் சொல்வது முன் முடிவுகள் இன்றி படிப்போருக்காக தான்.

  “இராமன்= இராவணன், நரசிம்மன்= இரணியகசிபு என்று யாரும் சொல்லாததை எல்லாம் சொல்லும் இலட்சணத்திலிருந்தே நமது புரியும் திறன் புலப்படுகிறது”

  அடுத்த வரியிலேயே முரணாக

  ” இராமனாய் வந்தவன் தான் இராவணனாயும் வந்தான், நரசிம்மனாய் வந்தவன் தான் இரணியகசிபுவாயும் வந்தான்”

  நான் அத்வைதத்தை மறுத்தது போலும் த்வைதமே சத்தியம் என்றது போல விளக்கங்கள் தேவையில்லை.

  நான் அத்வைதத்தை மனதில் வைத்த படி, த்வைத பக்தியின் மூலம் அதை அடைய குழந்தை அடிகள் எடுத்து வைக்க முயன்று கொண்டிருப்பவன். என் போன்ற சிறியேனுக்கு அதற்கு பல ஜன்மங்கள் ஆகலாம்.

  நான் திரும்ப திரும்ப சொல்வதெல்லாம் காரியத்தில் அத்வைதம் இல்லை என்பதையே. ரமணர் சொல்வது தவறு. நான் சொல்வதே சரியென்றால்?

  திரு ராமனுக்கு மிக்க நன்றி. அத்வைதம் தேவை . முதலில் தெளிவு அதற்கு மிக தேவை. நீங்கள் சொன்ன இணைப்புகள் பலருக்கும் மிக உதவியாக இருக்கும்.

  நான் சொன்னது இன்றைய சமூக அரசியல் சூழலில் இதன் தாக்கங்கள் பற்றி.

  ரமணரின் பளிசென்ற வரிக்கு மீண்டும் நன்றி.

  இன்றைய டைம்ஸ் ஒப் இந்தியா வில்

  https://timesofindia.indiatimes.com/india/Shiva-worship-not-a-religious-act-income-tax-tribunal-says/articleshow/18996617.cms

  சிவ வழிபாடு மத நம்பிக்கை இல்லையாம்.அதனால் வரி சலுகை கிடையாது. நாக்பூர் வருமான வரி த்ரிபுனல் சொல்கிறது.

  எலாம் “supernatural powers of தி universe ” ஆன்மிக ரீதியில் உண்மை தான் .

  ஆனால் இன்றைய சமூக அரசியல் சூழலில் வாசகர்கள் இதை பொருத்தி பாருங்கள். இந்த வகை வாதங்கள் யாருக்கு உபயோகப்படுகின்றன என்று?

  திரு கிருஷ்ணகுமாருக்கு நன்றி-பிரஹலாத ஸ்துதியில் அத்வைத கருத்துக்களை சில காலம் முன்பு கண்ட போது வியப்படைந்தேன்.மகிழ்வாகவும் இருந்தது.

  ஆயினும் குலப்பெருமை தரும் ஆணவம் என்பதும் ,இங்கு நாம் பேசு பொருளும் சம்பந்தப்பட்டது அல்ல என்றாலும் பிரஹலாதன் சொல்வது இன்றைய சூழலில் பொதுவில் தன அறிவிலோ , அதிகாரத்திலோ அகந்தை கொண்ட எல்லோருக்கும் ஒரு பாடம் தான். அன்பே அவனை அடையும் வழி.

  பிரஹலாதன் சொல்வது கேட்கையில் ” அன்பின்றி வாரான் நந்தலாலா” என்று சொன்ன கிருஷ்ண ப்ரேமையின் மனித வடிவான அன்னை மீரா நினைவுக்கு வருகிறாள்.

  நதி தன நதி தன்மையை விட்டு கடலில் கலக்க ஆசைப்படுகிறது. வழியில் ஆயிரம் நன்மை தீமைகள்.
  தீமைகள் தவிர்த்து கவனமாக ஒரு மனதாக கடலை ஸ்மரணை செய்து கொண்டு இறுதியிலேயே தன “தானை” விட்டு கடலில் சேர முடிகிறது.

  சாய்

 29. https://www.patheos.com/blogs/beingdifferent/2012/03/response-to-the-doctrine-of-sameness/

  வேதாந்தம் திரிக்கப்பட்டு அறிவுலகில் எப்படி சிலருக்கு உபயோகப்படுகிறது , சில மேற்கத்தியர்கள் எவ்வளவு காலமாக இதில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பது பற்றி திரு ராஜீவ் மல்ஹோத்ரா பல காலமாக எழுதி வருகிறார்.

  இன்றைய டைம்ஸ் ஆப் இந்திய இணைப்பு என் முந்தைய மறுமொழியில் கொடுத்தது -ரிலிஜன் வேறு “ச்பிரிசுவலிசம் ” வேறு என்று பல நவீன வேதாந்திகள் நிறுவ முயல்வது எல்லாமே இதனுடன் சம்பந்தப்பட்டவையே.

  இதையெல்லாம் மனதில் கொண்டு நண்பர்கள் சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்.

  சாய்

 30. ” TEXT 11

  naivātmanaḥ prabhur ayaṁ nija-lābha-pūrṇo
  mānaṁ janād aviduṣaḥ karuṇo vṛṇīte
  yad yaj jano bhagavate vidadhīta mānaṁ
  tac cātmane prati-mukhasya yathā mukha-śrīḥi “- ( 7-9-11)

  அன்புள்ள திரு கிருஷ்ண குமார்,

  தங்கள் மறுமொழிக்கு நன்றி.

  ஸ்லோகம் எண். 11. Compromises in the history of Advaitic thought- மகாமகோபாத்யாய பேராசிரியர் திரு எஸ் குப்புஸ்வாமி சாஸ்திரி அவர்கள் எழுதி 1993- ஆம் வருடம் வெளியான மறுபதிப்பு பக்கம் 15) ஸ்லோக எண் தவறுதலாக 10 என்று அச்சாகியுள்ளது. அந்த புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியதால் , இந்த பிழை ஏற்பட்டது. The advaitic theory of jeeva being the reflection ( pratibimba ) of Isvara ( viewed as bimba ) is used in explaining the idea that a worshipper is really worshippin himself by worshipping GOD.

 31. இது என் முந்தைய மறுமொழி-ஏன் வெளியாகவில்லை தெரியவில்லை. மீண்டும் பதிய முயல்கிறேன்.
  —————————————————————————————————————————-

  ” ராமன்=இராவணன் ;நரசிம்ஹன்=ஹிரண்யன் .
  எல்லாம் தவறான கருத்துக்கள். “- எப்படி தவறு என்று விளக்காமல் வெறுமனே தவறு என்று சொல்லிக்கொள்வதால் எவ்வித புண்ணியமும் இல்ல”

  காரியத்தில் அத்வைதம் இல்லை என்று பல முறை சொல்லியாயிற்று.ரமணரின் மேற்கோளும் தெளிவு செய்திருக்கும்.

  பிரஹலாதன் செய்வது நரசிம்ஹனின் ஸ்துதியை. நானே கடவுள் என்ற ஹிரண்யனின் ஆணவத்தை அவன் ஸ்துதி செய்யவில்லை.

  ஆக இருமை உலகில் ராமன் வேறு ராவணன் வேறு’; ஒன்றான நிலையில் ராமனும் இல்லை ராவணனும் இல்லை. பிரம்மம் மட்டுமே. இதையும் பல முறை சொல்லியாயிற்று.

  அதனால் ராமனாய் வந்தவன் ராவணனை வந்தான் …என்ற படிக்கான வாதம் ராம நாமத்தை பரப்பிய போதேந்திரர் போன்ற அத்வைத ஆச்சார்யார்கள் கூட செய்யாத ஒன்று.

  இப்போதும் இவ்வளவு நான் சொல்வது முன் முடிவுகள் இன்றி படிப்போருக்காக தான்.

  “இராமன்= இராவணன், நரசிம்மன்= இரணியகசிபு என்று யாரும் சொல்லாததை எல்லாம் சொல்லும் இலட்சணத்திலிருந்தே நமது புரியும் திறன் புலப்படுகிறது”

  அடுத்த வரியிலேயே முரண்.

  ” இராமனாய் வந்தவன் தான் இராவணனாயும் வந்தான், நரசிம்மனாய் வந்தவன் தான் இரணியகசிபுவாயும் வந்தான்”

  நான் அத்வைதத்தை மறுத்தது போலும் த்வைதமே சத்தியம் என்றது போலவும் விளக்கங்கள் தேவையில்லை.

  நான் அத்வைதத்தை மனதில் வைத்த படி, த்வைத பக்தியின் மூலம் அதை அடைய குழந்தை அடிகள் எடுத்து வைக்க முயன்று கொண்டிருப்பவன்.

  நான் திரும்ப திரும்ப சொல்வதெல்லாம் காரியத்தில் அத்வைதம் இல்லை என்பதையே. ரமணர் சொல்வது தவறு. நான் சொல்வதே சரியென்றால்?

  திரு ராமனுக்கு மிக்க நன்றி. அத்வைதம் தேவை . முதலில் தெளிவு அதற்கு மிக தேவை. நீங்கள் சொன்ன இணைப்புகள் பலருக்கும் மிக உதவியாக இருக்கும்.

  ரமணரின் பளிசென்ற வரிக்கு மீண்டும் நன்றி.

  இன்றைய டைம்ஸ் ஒப் இந்தியா வில்

  https://timesofindia.indiatimes.com/india/Shiva-worship-not-a-religious-act-income-tax-tribunal-says/articleshow/18996617.cms

  சிவ வழிபாடு மத நம்பிக்கை இல்லையாம்.அதனால் வரி சலுகை கிடையாது. நாக்பூர் வருமான வரி த்ரிபுனல் சொல்கிறது.

  எலாம் “supernatural powers of தி universe ” ஆன்மிக ரீதியில் உண்மை தான் .

  ஆனால் இன்றைய சமூக அரசியல் சூழலில் வாசகர்கள் இதை பொருத்தி பாருங்கள். இந்த வகை வாதங்கள் யாருக்கு உபயோகப்படுகின்றன என்று?

  திரு கிருஷ்ணகுமாருக்கு நன்றி-பிரஹலாத ஸ்துதியில் அத்வைத கருத்துக்களை சில காலம் முன்பு கண்ட போது வியப்படைந்தேன்.மகிழ்வாகவும் இருந்தது.

  ஆயினும் குல பெருமை தரும் ஆணவம் என்பதும் இங்கு நாம் பேசு பொருளும் சம்பந்தப்பட்டது அல்ல பிரஹலாதன் சொல்வது இன்றைய சூழலில் பொதுவில் தன அறிவிலோ , அதிகாரத்திலோ அகந்தை கொண்ட எல்லோருக்கும் ஒரு பாடம் தான். அன்பே அவனை அடையும் வழி.

  பிரஹலாதன் சொல்வது கேட்கையில் ” அன்பின்றி வாரான் நந்தலாலா” என்ற கிருஷ்ண ப்ரேமையின் மனித வடிவான அன்னை மீரா நினைவுக்கு வருகிறாள்.

  நதி தன நதி தன்மையை விட்டு கடலில் கலக்க ஆசைப்படுகிறது. வழியில் ஆயிரம் நன்மை தீமைகள்.
  தீமைகள் தவிர்த்து கவனமாக ஒரு மனதாக கடலை ஸ்மரணை செய்து கொண்டு இறுதியிலேயே தன “தானை” விட்டு கடலில் சேர முடிகிறது.

  சாய்

 32. திருமதி. அத்விகாவின் எடுத்தாளப்பட்ட,

  “The advaitic theory of jeeva being the reflection ( pratibimba ) of Isvara ( viewed as bimba ) is used in explaining the idea that a worshipper is really worshippin himself by worshipping GOD.”

  கருத்துக்களையும் ரமணர் சொல்வதையும் ஒப்பிட்டுவது நல்லது:

  “காணும் தனை விட்டுக் கடவுளைத் தான் காணல்
  காணும் மனோ மயமாம் காட்சி, தனைக் காணும் அவன்
  தான் கடவுளைக் கண்டானாம், தன் முதலைத் தான் முதல் போய்
  தான் அன்றி இலதால்”

  இங்கு தான் கோவில் தரிசனம் மற்றும் தீர்த்தத் யாத்திரையின் விசேஷம் கூட வருகிறது. ஒருவன் அங்கு செல்வதால் அவன் பார்க்கிறது என்பது சிறப்பே தவிர அவன் என்ன பார்க்கிறான் என்பது அல்ல. பார்க்கும் அவனைப் பார்க்க வைத்தது எது என்பதுதான் அதன் பொருள். அப்படியே அவன் பார்க்கும் உலகத்தையும் எடுத்துக்கொண்டால், உலகை விட அவனே உண்மை. அப்படி உள்ள அவன் யாதாய் இருக்கிறான்? இப்படி படிப்படியாகப் போய் தான் யாதுமாய் உள்ளதை உணர்தலே ஜீவன் முக்தி என்று முடியும். அப்படி உள்ளவன் இப்போதும் அப்படியே இருக்கிறான் என்பதால், பந்தமும் இல்லை முக்தியும் இல்லை என்று வரும். வெறும் புத்தியினால் இதை அலசாது இருந்து பார்த்தாலே தவம்.

 33. ” ” ராமன்=இராவணன் ;நரசிம்ஹன்=ஹிரண்யன் .
  எல்லாம் தவறான கருத்துக்கள். “- “- திரு சாய்.

  திரு சாய் அவர்களின் வாக்கியங்களில் உள்ள சமன்பாட்டுக்குறி ( =) நான் சொல்லியது அல்ல. இராமனாய் வந்தவன் யாரோ , அவனே இராவணனாகவும் வந்தான் என்று தான் நான் எழுதியுள்ளேன். இராமாவதாரத்துக்கு சமமாக இராவணனையும் போற்றி வணங்குங்கள் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

  எனது கடிதத்தில் எடுத்தாளப்பட்ட மகாமஹோபாத்யாய குப்புசாமி சாஸ்திரிகளின் நூல் மயிலாப்பூர் குப்புசாமி சாஸ்திரி சமஸ்கிருத ஆராய்ச்சி நிலையத்தில் விலைக்கு கிடைக்கிறது. விலை ரூபாய் இருபது.

 34. ஒரு மிகச் சிறிய சரியான புரிதல் அனைத்தையும் தெளிவு படுத்தி விடும் என்று நினைக்கிறேன்! கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் காட்டிய போது அதில் அண்டசராசரமே அடங்கியது எனில், ராமனுக்குள்ளே ராவணனும் அடங்கி விடுதல் நியாயமே!

  ஆனால் அசுர குணங்களைக் கொண்டு தீயவர்களின் துணையோடு குபேரனையும் கலங்க வைத்த ராவணன், ராமனுக்கொப்பாவனா? என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்! ஏனெனில், அண்டசராசரம் முழுதுமே பகவானால் வியாபிக்கப் பட்டிருந்தாலும், தான் எனும் அகங்காரம் எவனுக்குள்ளே குடிகொண்டுள்ளதோ அங்கே இறைவன் இருக்க மாட்டான் என்பது பெரியோர் வாக்கு! கீதையிலும் கண்ணனே இதைக் குறிப்பிடுகிறான்! எவனொருவன் கடமையை சரியாக செய்து, பலனை எதிர்பாராது இறைவனுக்கு அர்பணித்து அகங்காரம் அகற்றி மனதில் அன்பொளி பரவச்செய்து வாழ்கின்றானோ அங்கே அவன் மனதில் இறைவன் குடியேறுகிறான்!

  ராவணன் சிறந்த சிவபக்தனாக இருந்தாலும் அகங்காரத்தை விடாதவன்! அங்கே இறைவனுக்கு சர்வ நிச்சயமாக இடம் இல்லை! எனவே ராமனாக வந்தவன் தான் ராவணனாகவும் வந்தான் என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை! ராவணன் அற்ப மாயையில் விழுந்தவன்! இறைவனே கண்ணுக்கு முன் வந்தாலும் தெரிந்து கொள்ள மறுத்தவன்! பரமேஸ்வரனுகாக நரம்பை வீணையாக்கி மீட்டிய ராவணன், ராமனை வெறும் மனிதனாக அற்பமானவனாகப் பார்த்தது துரதிர்ஷ்டமே! ராமாவதார காலத்திலே ராமனாக அவதரித்த போது பகவான் எந்த மாயாசித்தியையும் கைக்கொள்ளாமல் வெறும் மனிதராகவே வாழ்ந்து விட்டுபோகிறார். எந்த சக்தியாலும் தனக்கு மரணமேற்படகூடாது என்று வரம் வாங்கிய ராவணன் மனிதர்களை ஒரு பொருட்டாக மதியாமல் அவர்களை தன் வரையறைக்குள்ளே அடக்காமல் விட்டு விடுவதால் அவனை சம்ஹாரம் செய்ய பகவான் முழு மனிதராகவே தான் ராமாயணம் முழுதும் இருக்கிறார். கிருஷ்ணரை போல் அவர் மாயாசக்திகளை பிரயோகிக்கவே இல்லை.

  எனவே இராமாயண கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது ராமனின் நற்குணங்களை முன்மாதிரியாகவும், ராவணனின் தீய குணங்களை பாடமாகவும் கொள்ளவேண்டும் என்பதற்காக தான் திரு. ராமன் அவர்கள் இத்தொடரையே எழுத விழைந்திருப்பார் என்பது என் நம்பிக்கை! அதையே நான் மற்றோருக்கும் பரிந்துரைக்கிறேன்!

 35. அத்விகாவிகா அம்மையாரின் ராமனாய் வந்ததும் ராவணனாய் வந்தததுவும் அதுவே என்ற கருத்து அத்வைத வேதாந்தத்தினை எந்த அளவிற்கு தவறாக மோசமாக பொருள்கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு இருக்கிறது.
  ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன கதைகளில் ஒன்று. அத்வைதம் போதனையைக்கேட்ட அரசன் அரசியும் தாசியும் ஒன்றுதான் ஆகவே தாசிகளெல்லாம் அந்தப்புரத்தில் அரசிபோல இருக்கலாம் என்று உத்தரவிட்டது தான் இங்கே நினைவுக்கு வருகிறது.
  பகவான் ஸ்ரீ ராமகிருஷணர் சிவோகம் சிவோகம் என்று ஜபம் செய்த சன்யாசியைக்கண்டித்தார். அந்த சன்யாசி தன்னிலையை உணர்ந்து எழுதிவைத்து சென்றார் இறைவனை தலைவனாகவும் தன்னை அடியவனாகவும் காண்கிறேன் என்று. அத்வைத அனுபவம் அடையும் வரையில் ஆன்மாவேறு இறைவன் வேறே.
  இன்னும் ஒன்று அத்வைதிகள் நிர்குணப்பிரம்மம்(transcendental) சகுணப்பிரம்மம்(immanent) என்று இரண்டைக்குறிப்பிடுவர் வேறுபடுத்துவர். அதிலே ஸ்ரீ ராமபிரான் சகுணப்பிரம்மம் அதாவது ஈஸ்வரன் என்ற நிலையிலிருந்து மக்களைக்காக்க இறங்கி வந்த அவதாரபுருசன். ராவணனோ அகங்காரம் கொண்டு முனிவர்களை அவமத்தித்த துவாரபாலகன். சபிக்கப்பட்ட அவன் தனது பாவம் தொலைக்கவே பிறவி எடுத்தான் என்பது புராணம்.
  அத்வைதானுபவம் அடைந்த ஸ்ரீ ராமன் வேறு தான் என்ற உடலே தான் என்று அகங்காரம் கொண்ட ராவணன் வேறு.
  எப்படிப்பார்த்தாலும் இரண்டும் ராவணன் வேறு ஸ்ரீ ராமன் வேறுதான். குழப்பத்திலிருந்து வெளிவரவேண்டும். அத்வைத நூல்களை இன்னும் ஆழமாகப்படித்து தெளிவாகி தெளிவு பட எழுதவேண்டுகிறேன்.
  சிவஸ்ரீ

 36. அத்விகா

  //அபாக்யவசமாக// நீங்கள் சம்ச்க்ருடம் அறிந்தவர் தானே – அபாக்யவஷாத் என்றால் ஐயோ பாவம் என்றா அர்த்தம் ?

  அத்வைத ரீதியாக பார்த்தாலும் ராவணனும் ராமனும் வேறே. இருவருக்கும் வெவ்வேறு மனங்கள் வெவ்வேறு உபாதிகள்.

  ராவணன் அஞான ஸ்வரூபி, ராமன் ஸ்வதசித்தி ரூபம். அத்வைதம் ராவணன் இல்லை என்று சொல்லவில்லை. ராவணன் உண்மை (கூடஸ்த நித்யம்) இல்லை என்று தான் சொல்கிறது.

  சங்கரருக்கு முன்னாலும் அத்வைதிகள் நிறைய இருந்தனர் என்கிறீர்கள். அவர்களும் இன்றைய அத்வைத புரிதல்வாதிகளும் ஒன்றே. அத்வைதங்களுள் சங்கரரின் அத்வைதம் படித்தால் புரியும்.

 37. சுந்தர காண்டத்தில் சீதை வஸ்துக்களின் நிஜ ரூபத்தை அறிந்த இராமன் என்கிறாள். அதாவது ஞானி என்ற அர்த்தத்தில் .

  தன் மாமியாரான சுமித்ரையையும் அப்படியே சொல்கிறாள்.

  ராமனுக்கு வஸ்துக்களின் நிஜ ரூபம் தெரியும். ஆயினும் ராவணனும் என் மற்றொரு வடிவமே. போர் வேண்டாம் என்று ராமன் சும்மா இருந்திருந்தால் ராமாயணமே இல்லை. இவ்விவாதமும் இல்லை .

  சீதையும் ஞானத்தின் தன்மை அறிந்தவள் என்று அவள் சொல்வதிலிருந்து தெளிவாகிறது.

  ஆயினும் ராவணன் வேறு -ராமன் வேறு என்ற தெளிவு இருந்ததால் ராமன்க்கென சாப்பாடு தூக்கமின்றி காத்திருந்தாள்.

  ஜீவர்களான நாம் பரம்பொருளை அடைய உதாரணமாக கொள்ள வேண்டியது அன்னை சீதையையே.

  தீமை பயமுறுத்தும். கஜோல் செய்யும். மிரட்டும். உன் ஆள் வேஸ்ட்-நான் தான் பெஸ்ட் என்று கெக்கலிக்கும்.

  அதைத் தீமை , அதாவது நன்மையிலிருந்து வேறானது என்று உணர்ந்து முற்றாக விலக்கி , தைரியமாக நின்றால் -நின்றால் தான் -பரமாத்மாவை அடைய முடியும்.

 38. அன்பார்ந்த சஹோதரி ஸ்ரீமதி அத்விகா,

  பெரிய மஹாவித்வான் ஒருவர் எழுதிய வ்யாக்யானத்தின் சாரத்தைத் தாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

  நீங்கள் எழுதிய ச்லோகத்தையும், ச்லோகத்தை அனுசந்தானம் செய்ததில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக வேண்டி மட்டிலும் நான் வாசித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். சற்று விரிவான பொழிப்புரையுடன். நான் பகிர்ந்து கொள்ள விழைவது பக்திவேதாந்த ஸ்ரீல ப்ரபுபாதா அவர்கள் எழுதி ப்ரதிபத அர்த்தத்துடன் இணையத்தில் கிடைக்கும் ஆங்க்ல வ்யாக்யானம்.

  नैवात्मनः प्रभुरयं निजलाभपूर्णो
  मानं जनादविदुषः करुणो वॄणीते
  यद्यज्जनो भगवते विदधीत मानं
  तच्चात्मने प्रतिमुखस्य यथा मुखश्रीः

  நைவாத்மன: ப்ரபுரயம் நிஜலாபபூர்ண:
  மானம் ஜனாதவிதுஷ: கருணோ வ்ருணீதே
  யத்யஜ்ஜனோ பகவதே விததீத மானம்
  தச்சாத்மனே ப்ரதிமுகஸ்ய யதா முகஸ்ரீ:

  ச்லோக சாரம் :-

  பகவானாகிய கண்ணன் தன்னில் நிறைந்தவனாக இருக்கிறான். சம்சாரத்தில் அடையத்தக்கது எது எனத் தெளிவாக அறியாத மாந்தர்கள் அவனைத் தொழுதலையோ அர்ப்பணித்தலையோ அவன் அளவற்ற கருணையுடன் ஏற்றுக்கொள்கிறான். ( அவன் தன்னில் நிறைந்தவன் என்ற போதிலும்)

  தன்னில் நிறைந்தவனான பகவானுக்கு பக்தர்கள் அர்ப்பணித்தல் அல்லது தொழுதல் ஆகியவற்றால் மேலும் கிடைக்கப்பெறுவது என்று ஏதும் இல்லை.

  மாறாக எந்தெந்த வழியின் மூலம் கண்ணனைத் தொழுதல் அர்ப்பணித்தல் போன்ற செயல்களை ஒரு அன்பன் செய்கிறானோ வாஸ்தவத்தில் அதன் பலனை அவனே அடைகிறான்.

  எப்படி என்றால் அலங்காரம் செய்யப்பட்ட முகம் நிலைக்கண்ணாடியில் பார்க்கப்படின் அதில் தெரியும் ப்ரதிபிம்பமும் அலங்க்ருதமாகவே தோணுகிறதோ அது போல். (ப்ரதி முகஸ்ய யதா முகஸ்ரீ:)

 39. எனக்கு அத்வைதம் போதிக்கப்பட்ட முறையில் முதன் முதல் ப்ரகரண க்ரந்தங்கள் வாசிக்கச் சொல்லப்பட்டது. என் துர்பாக்யம், ஆரம்பித்தது என்னுடைய ஸ்தானாந்தரணத்தினால் தொடர இயலாது போனது.

  ஆரம்பித்த க்ரந்தம். விவேக சூடாமணி.

  அத்வைத வேதாந்தம் கற்க விழைபவனின் தகுதியாக

  தடபுடலாக,

  “மேதாவீ புருஷோ வித்வான் ஊஹாபோஹ விசக்ஷண:”

  என்று படித்ததாக நினைவு. இப்படியெல்லாம் படித்ததுமே உதறலெடுத்தது. இதெல்லாம் நமக்கில்லையப்பா என. போறாததுக்கு முறையாகக் கற்றலும் தொடரவில்லை.

  ஆனால் ஸ்ரீ ராமன் மஹாசயர் அவர்களின் விளக்கங்களும் அன்பர் ஸ்ரீ சாய் மஹாசயர் அவர்களின் விளக்கங்களும் வாசிக்கையில் இப்படி எளிமையாகக் கூட விஷயத்தைப் புரிந்து கொள்ள இயலுமா என ஆஸ்சர்யமாக இருக்கிறது.

  சஹோதரி ஸ்ரீமதி அத்விகா அவர்கள் ஸ்ரீ சாய் அவர்கள் சொல்லியுள்ளதின் தாத்பர்யத்தை சரியாக உள்வாங்கவில்லையோ என நான் சம்சயமுறுவதால் எனக்குப் புரிந்ததைப் (அல்லது புரிந்ததாக நான் நினைத்துக்கொள்வதை) பகிர்ந்து கொள்கிறேன்.

  நான் போட்டு இன்னமும் குழப்பினாலும் குழப்பித்தள்ளலாம் 🙁

  அப்படி இருந்தால் எல்லோரும் க்ஷமிக்கவும்.

  ஸ்ரீ சாய் அவர்கள் ராமன் = ராவணன் என்று பொதுப்படையாக ஒரு எண்ணம் இருப்பதைக் குற்றம் சொல்லியுள்ளார். தாங்கள் அவ்வாறு சொன்னதாக சொல்லவில்லை.

  மேலும் அவர் இரண்டு கருத்தாக்கங்களை மறுத்துள்ளார்.

  1. ராமன் = ராவணன்
  2. ராமனே ராவணானக வந்தான் என்ற விஷயத்தை அத்வைதமாகச் சொல்வது

  அத்விதீய அத்வைதானுபவத்தில் இருப்பது ஒரே வஸ்துவான ப்ரம்மம் மட்டிலும் தான் என்பதால் முதல் கருத்து மற்றும் இரண்டாம் கருத்து இரண்டுமே அத்வைதம் என்ற அலகீட்டில் சரியாகாது எனச் சொல்லியதாகப் புரிகிறது.

  மேலும்

  அத்விதீய அத்வைத அனுபவம் எட்டும் வரைக்கும் அதற்கு மாறாகத் தோன்றும் இருமையைக் கூட அத்வைதம் தெளிவாகச் சுட்டிக்காட்டுவதாகத் தான் எனக்குப் புரிகிறது.வ்யாவஹாரிக சத்யம் என்பது அத்வைதத்தில் சொல்லப்படுகிறதே. வ்யவஹாரம் என்று மட்டிலும் அல்ல. வ்யாவஹாரிக சத்யம்.

 40. \\\\ஆயினும் குல பெருமை தரும் ஆணவம் என்பதும் இங்கு நாம் பேசு பொருளும் சம்பந்தப்பட்டது அல்ல \\\\

  அன்பார்ந்த ஸ்ரீ சாய், தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே.

  ஸ்ரீமதி அத்விகா அவர்கள் ச்லோக எண்ணைப் பிழையாக தட்டச்சியதால் ஒரு புறம் குழப்பம் நேர்ந்தது. அந்த குழப்பத்தில் நானும் பங்கு கொண்டேன்.

  ஆனாலும் என்ன. அதன் வ்யாஜமாக பாகவதத்தை ருசிக்க முடிந்ததில் லாபமே.

  \\\\நான் அத்வைதத்தை மனதில் வைத்த படி, த்வைத பக்தியின் மூலம் அதை அடைய குழந்தை அடிகள் எடுத்து வைக்க முயன்று கொண்டிருப்பவன்.\\\\

  “இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
  உந்தன்னோடே உற்றோமே ஆவோம்
  உமக்கே நாம் ஆட்செய்வோம்
  மற்றை நம் காமங்கள் மாற்று”

  அப்படின்னு எங்கேயோ மண்டையில் ஏறி விட்டதால் பக்தி அப்படின்னெல்லாம் ஏதும் இருப்பதாக நினைத்துக்கொண்டாலும் அத்வைதம் என்பது வெகுதூரத்தில் ஆகாசத்தில் இருக்கும் நக்ஷத்ரம் போல அப்படின்னு தோணும்.

  ஆனால் இங்கு எல்லாரும் எழுதுவதைப் படிக்கையில் அவ்வளவு தூரம் இல்லை எனத் தோன்றுகிறது.

  இன்னும் குழப்ப / குழம்ப வேண்டியது பாக்கி உள்ளது.

 41. ஸ்ரீ கிருஷ்ணகுமாரின்
  “… பக்தி அப்படின்னெல்லாம் ஏதும் இருப்பதாக நினைத்துக்கொண்டாலும் அத்வைதம் என்பது வெகுதூரத்தில் ஆகாசத்தில் இருக்கும் நக்ஷத்ரம் போல அப்படின்னு தோணும்….ஆனால் இங்கு எல்லாரும் எழுதுவதைப் படிக்கையில் அவ்வளவு தூரம் இல்லை எனத் தோன்றுகிறது.”, என்ற வாசகத்தின் படி,

  அத்வைதம் தூரத்தில் நிச்சயமாக இல்லை. வேறு கட்டுரைகளில் பல இடங்களில் சொல்லியுள்ளபடி ஆன்மாவைப் பற்றிப் புரிந்துகொண்டு அறிந்துகொள்ள இரண்டே வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று ஆன்ம விசாரம் செய்வது; இன்னொன்று தான் ஆன்மாவே என்ற பாவனையில் இருப்பது. இந்த இரண்டாவது வழியில், அது பாவனை என்பதால் பகவானை முன்னிறுத்தி நீதான் என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வேண்டுவதுதான் பக்தி மார்க்கம். எந்த மார்க்கமுமே கர்ம மார்க்கம்தான் என்பதை ரமணர் “உபதேச உந்தியார்/ சாரத்தில்” இப்படிச் சொல்வார்:
  “பூஜை, ஜெபம், தியானம் உடல், வாக்கு, உளத் தொழில் உந்தீபற”.
  அதனால் வழிகள் எதையும் பற்றிக் கவலைப்படாது நமக்கு உகந்த வழியைத் தேர்ந்து அதில் செல்லவேண்டும்.

 42. அன்பார்ந்த ஸ்ரீ கிருஷ்ணகுமார்

  சிறியேன் அத்வைத புத்தகங்கள் அவ்வளவு படித்ததில்லை. ஏதோ அசட்டு தைரியத்தில் பேச நுழைந்து விட்டேன். ஒரு பத்தாண்டுகள் முன்பு பணி ஓய்வு பெற்ற ஒரு பெரியவர் -மனைவியை இழந்த பின் ஆன்மீகத்தில் நாட்டமாக இருந்தவர்- -அவரை ஒரு நண்பருடன் சந்திக்க நேர்ந்தது.

  எனக்கு அத்வைதம் சொல்லி கொடுங்கள் என்று நான் கேட்டதற்கு அப்படி என்றால் என்ன என்று என்னையே கேட்டார். நீங்களும் நானும் மண்ணும் மலையும் ஒன்று ;நாம் எல்லாரும் கடவுள் /ஈஸ்வரன் என்றேன்.

  எல்லாம் ஒன்று -ஆனால் முள் குத்தினால் ஏன் வலிக்கிறது என்று கேட்டேன். அவர் பொறுமையாக பல சந்தர்பங்களில் விளக்கினார்.

  அவர் எனக்கு சொன்ன வற்றை தான் எனக்கு தெரிந்த வரையில் எழுத முயன்றேன். ஆனால் சுருக்கமாக எழுத தெரியவில்லை.

  இந்த தளத்தில் அனன்ய பக்தி பற்றி அடியேன் மறுமொழி எழுதியிருப்பதும் இதனாலேயே. எனக்கு அது தற்போது இல்லை. இஷ்ட தெய்வம் யார் என்று கேட்டால் பெரிய லிஸ்ட் போடுவேன். இன்று மறைந்து விட்ட அந்த பெரியவர் தெய்வத்தை குருவாக எண்ணி தொழுது வர சொன்னார்.

  “\நான் அத்வைதத்தை மனதில் வைத்த படி, த்வைத பக்தியின் மூலம் அதை அடைய குழந்தை அடிகள் எடுத்து வைக்க முயன்று கொண்டிருப்பவன்.\\\

  [இதில் சற்று ஆணவம் தொனிப்பதாக எனக்கே தோன்றியது. அதனால் எனக்கு அதற்கு பல ஜன்மங்கள் ஆகும் என்பதையும் குறிப்பிட்டேன். ]

  ஆனால் ஜன்மங்கள் பல ஆகும் என்ற சுய பரிதாபத்தில் ஆழ்ந்து விடாமல் சொந்த கடமைகளை சந்தோஷமாக செய்து வர சொன்னார் அந்த பெரியவர் .

  ஆனாலும் காலில் அடிபட்டால் எந்த தத்துவமும் தோன்றுவதில்லை ,பக்குவம் பற்றாததால் முதலில் ஐயோ என்றும் பின்னரே குருவின் நினைவும் வருகிறது.!

  சமீபத்தில் மற்றொரு நண்பர் கண்ணுக்கு தெரியாத விஷயங்களை பேசினாலும் கண்ணுக்கு தெரிந்த பாதையில் கற்கள் முட்கள் பற்றி இயன்ற வரை கவனமாக இருக்க வேண்டும். என்றார்.

  குரு பல உருவங்களில் உபதேசிக்கிறார் என்று நினைத்து கொண்டேன்.

  சாய்

 43. திரு கிருஷ்ணகுமார் அவர்கள் வ்யவஹார சத்யம் பற்றி தெரிவித்தமைக்கு நன்றி.

  “காரியத்தில் அத்வைதம் கிடையாது ;ராமாயணம் படி,உன் வேலைகளை ராமன் மீது பாரத்தை போட்ட பின் செய். இக வாழ்விலும் ஆன்மீகத்திலும் தடுக்கி பல முறை விழுந்தாலும் சோர்ந்து போகாதே,அவ்வபோது நிர்வாண சதகமும் படி -போகப் போக சில விஷயங்கள் புரியத்தொடங்கும் ” என்றார் நான் மேலே சொன்ன பெரியவர் .

  கேட்டு கொள்வது வேறு அதன் படி நடக்க முயல்வது வேறு. நம் வாசனைகள் நம்மை அவ்வளவு சுலபத்தில் விடுவதில்லை.

  நண்பரின் தந்தை என்பதால் சிறிது உரிமையுடன் அவரிடம் பேசி இருக்கிறேன். வாதம் செய்திருக்கிறேன். இப்போது தான் சில வாழ்வின் அனுபவங்களுக்குப் பின் அவர் சொன்ன சில விஷயங்கள் இலேசாக் புரிய தொடங்குகிறது.

  திரு ராமன் அவர்களுக்கு ரமணர் பற்றிய விவரங்களுக்காக என் மனமார்ந்த நன்றி. திருமதி அத்விகாவிற்கு நன்றி. பிரஹலாத ஸ்துதி அத்வைதம் போல் தொனிக்கிறதே என்று யோசித்திருக்கிறேன். அது அப்படிதான் என்று தெரிந்து மகிழ்ச்சி -அந்த குழந்தை பக்தன் -எல்லாம் அந்த நாராயணனே என்று இருந்திருக்கிறான்.

  பல வருடங்கள் முன்பு “நான் யார்” தத்துவத்தை பற்றி ஒருவர் [ சாதாரணமாக வீடு . வேலை என்று இருப்பவர் தான் ] சொல்லிக்கொண்டே திருவண்ணாமலை அழைத்து சென்றார். அப்போது வயதில் அதில் ஆர்வம் ஏற்படவில்லை. அது எப்படிப்பட்ட பாக்கியம் என்று இப்போது தான் புரிகிறது.

  தமிழ் ஹிந்துவில் பல விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது .
  நம் விவாதங்களுக்கு இடம் கொடுக்கும் தளத்தினருக்கு மனமார்ந்த நன்றி.

  நம் நாட்டின் அரசியல் அக்கபோர்கள் ஒரு புறம்;

  இதற்கிடையில் அனைவரும் நமக்கென்றே உள்ள வழியில் நம்மை அறிய முயன்று கொண்டே தான் இருக்கிறோம். அந்த முயற்சிக்கு ஒரு சக பயணி என்ற முறையில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் .சேர்ந்து பேசிக் கொண்டே நடக்கிறோம். சிரமம் தெரியவில்லை.

 44. அன்புள்ள கிருஷ்ண குமார் , திரு சாய், மற்றும் திரு சாரங் ,

  தங்கள் அன்பான விளக்கங்களுக்கு மிக்க நன்றி. நமது தளம் வாயிலாக நடக்கும் கருத்து பரிமாற்றம் நன்றாக அமைகிறது. மாறுபட்ட கருத்துக்கள் வெளிப்படும்போது தான், நமது கருத்துக்களை மறுபரிசீலனை செய்யவும், மேம்படுத்திக்கொள்ளவும், தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, நமது தளத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். கருத்து பரிமாற்றம் செய்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

 45. ” ராணுவத்தில் இருப்பவர்களுக்கு, போர்க்களத்தில் தன் வீரர்கள் கொலை செய்வதற்கு அவர்களைத் தூண்டுவது என்பதற்கே தனிப் பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. உலகைக் கயவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், எல்லா வழிகளையும் முயற்சி செய்துவிட்டு இறுதியில் போர், கொலை என்றுதான் செய்யவேண்டியிருக்கிறது. அது அரச நீதி, மக்களுக்குண்டான பொது நீதி அல்ல.”-

  இந்த பாராவில் ” அது அரச நீதி, மக்களுக்குண்டான பொது நீதி அல்ல.”- இந்த வைர வரிகளை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். அமுதமாக தந்த திரு இராமன் அவர்களுக்கு மீண்டும் நன்றி.

 46. பங்குனி உத்திர திருவிழாக்கள் பத்து நாட்கள் நடைபெறும் இந்த வளர்பிறை நாட்களில் , தந்தைக்கு உபதேசம் செய்தானின் புகழ்பாடும் திருப்புகழை படித்து வருகிறேன். திருப்புகழ் அன்பர் திரு கிருஷ்ணகுமார் அவர்கள் நமது தளத்தில் வெளியிட்ட திருப்புகழ் மேற்கோள்கள் , ரொம்ப நாட்களாக நிலுவையில் இருந்த இந்த காரியத்தை செய்ய மிக்க தூண்டுதலாக அமைந்தன. நல்ல மன நிறைவும், அற்புதமான தெய்வீக உணர்வுகளும் கிளர்ந்து எழுகின்றன. தமிழ் இந்துவின் மூலமான கருத்து பரிமாற்றமே நல்ல பல தொடர்புகளையும், வாய்ப்புக்களையும் தருகிறது. நன்றி.

 47. ஒரே மின்சாரம் தான் நூறு வாட், அறுபது வாட் மற்றும் நாற்பது வாட் என்று பல வித்தியாசமான அளவு பிரகாசம் ( ஒளி) தரும் குழல் விளக்குகளாகவும், பச்சை, சிவப்பு , வெள்ளை, நீலம் என்று பல நிறங்களிலும், டேப்பு ரிக்கார்டரில் சத்தமாகவும், ஏர்-கண்டிஷனரில் குளிர்ச்சியாகவும் ஹீட்டரில் உஷ்ணமாகவும் , பல விதமாக வெளிப்படுகிறது.

  கரண்டு என்று நாம் சொல்லும் இந்த மின்சாரம் பல கருவிகளில் , செல்போனு, ரேடியோ, டி வீ , கம்ப்யூட்டர் எனப்படும் கணிப்பொறி, என்று பல ஆயிரக்கணக்கான விதங்களில் உபயோகப்படுகிறது. ஆனால் இந்த மின்சாரம் கூட இறை சக்தியின் ஒரு வடிவம் தான். மின்சாரம் எப்படி இறைவன் ஆகும் என்று கேட்டால், மின்சாரமும் இறைவனே என்பதே உண்மை.

  கரண்டு எப்படி கடவுள் ஆகும் ?- என்று கேட்கும் நண்பர்கள் கருத்தை ஏற்றுக்கொண்டால் , கடவுள் என்ற சக்தி , கரண்டை தவிர மற்றதெல்லாம் மட்டுமே என்று ஆகி, எல்லை குறைகிறது. தூணிலும், துரும்பிலும் இருப்பவனை, மின்சாரத்தில் மட்டும் இல்லை என்று சொன்னால், ரஜினிகாந்த் படத்தில் வரும், கீழ்க்கண்ட வசனம் போல ஆகிவிடும்:-

  ” இவர்தான் மாப்பிள்ளை .ஆனால் இவர்போட்டிருக்கும் சட்டை மட்டும் இவருடையது அல்ல.”- என்ற நகைச்சுவை காட்சி மாதிரி ஆகிறது.

  என்னுடைய புரிதலின்படி, நல்லவன், தீயவன், குளிர் , சூடு, வெளிச்சம், இருட்டு என்று பல விதமாக காட்சி தருபவன் அல்லது தருபவள் அல்லது தருவது – ஒரே சக்தியின் பல்வேறு லீலைகள் தான். ஒருவர் கருத்தைப்பற்றி மற்றவர் சிந்திப்பது தவறு இல்லை. ஏனெனில் எந்த கருத்தும் , எந்த ஒரு தனி நபரின் உடமையும் இல்லை. இட்டலி நன்றாக இருக்கு என்று குப்பனும், சொல்லலாம், சுப்பனும் சொல்லலாம்.

  இன்று காலை மயிலை கபாலீசுவரர் கோயிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி தரிசனம் செய்யும்போது, என்னுடைய பேத்தி கேட்கிறாள்- தாத்தா அது என்ன பெரிய ரிஷப வாகனத்தில் கபாலீஸ்வரன் பக்கத்தில் ஒரு கற்பகாம்பாள், அதன் பின்னே தனியாக இன்னொரு வாகனத்தில் தனியே ஒரு கற்பகாம்பாள் – அது யார் இது யார் ? ஏனிப்படி இரு வாகனங்களில் என்று கேட்டாள். அது அப்படித்தானம்மா. வீட்டில் உன்னம்மா இருக்கும்போது நைட்டி போட்டுக்கொண்டு , வீட்டு வேலைகளை செய்கிறாள். அதே உன்னம்மா தான் கோர்ட்டுக்கு , போகும்போது , வேறு வக்கீல் உடையை அணிந்து, நைட்டியை கழற்றி வைத்துவிட்டு போகிறாள் அல்லவா , அது போலத்தான் , கபாலீசுவரர் விக்கிரகத்துடன் இருப்பவளும் அதே கற்பகாம்பாள் தான், தனி வாகனத்தில் தனியாக இருப்பவளும் அதே கற்பகாம்பாள் தான். இவள் வேறு அவள் வேறு அல்ல. வாகனமும், வெளித்தோற்றமும் தான் வேறு. சக்தி ஒன்றே தான்.

  ஒரே கடவுள் தான் பாம்பாகவும், பல்லியாகவும், தேளாகவும், யானை , சிங்கம், புலி ,கரடியாகவும், இன்னும் சொல்லப்போனால் மனிதஉருவில் கூட ஆண் பெண் என்று அவன் தான் இருக்கிறான் என்று சொன்னேன். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு கூட சரியாக பதில்கூற இயலாத ஒரு சூழலில் நாம் வளர்க்கப்பட்டது வேதனையாக இருக்கிறது. சுவாமி சித்பவானந்தரின் சந்தேகம் தெளிதல் எனக்கு உதவியது.

 48. எஸ் ராமன் அவர்களின் இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு நூலை வாங்க விரும்புகிறேன். பெறுவதற்கான வழி தெரிந்துகொள்ள விரும்புகிறேன். =

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *