1664ல் பரமேஸ்வரனின் மூலஸ்தானம் இருந்த முக்தி மண்டபம் கர்ப்பக்ரஹம் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே ஔரங்கசீபினால் மசூதி உருவாக்கப்பட்டது.. கண்ணுக்கு நேராக பார்த்தாலே தெரிகிறது. ஆனால் அதை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இத்தனை வருடங்கள் இழுத்தடித்ததே நம் தேசத்தின் சாபக்கேடு… நிச்சயமாக இந்த அரசாங்கத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும். தைரியமாக இந்த விஷயத்தை முன்னெடுத்து மேற்கொண்டு ஆய்வுகளை செய்ய நடவடிக்கைகளை எடுத்தது. ஆய்வுக்குழு, ஞானவாபி மசூதி வளாகத்தில் கிணறு போன்ற அமைப்பின் உள்ளே சிவலிங்கத்தை கண்டுபிடித்துள்ளார்கள். வஸுகானா என்ற, அவர்கள்கை கால்களை சுத்தப்படுத்தும் குளத்தின் உள்ளே சிவலிங்கம் இருந்தது என்று மனம் பதைக்கும் செய்தி வருகிறது…
View More காசியின் ஞானவாபி: மகத்துவமும், ஆக்கிரமிப்பும், மீட்சியும்Tag: இஸ்லாமிய கொடூரங்கள்
பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை – அம்பேத்கரின் நூல் தமிழில்
பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது குறித்து இந்து தரப்பு வாதங்கள், இஸ்லாமியத் தரப்பு வாதங்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லிவிட்டு கடைசியில் பிரிவினைதான் ஒரே வழி என்ற முடிவையும் முன்வைப்பவர், அந்தப் பிரிவினையை எப்படி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சொல்லியிருப்பவைதான் மிகவும் முக்கியமானவை. அது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் முன்வைத்திருக்கும் யோசனைகள் எல்லாம் ஒரு மாமேதை, ஒரு தீர்க்கதரிசி சொன்ன ஆலோசனைகளாக இருக்கின்றன. சற்று உணர்ச்சி மேலிடச் சொல்வதென்றால், மாபெரும் ரிஷி கண்டு சொன்ன வேத வாக்கியங்கள் போல் இருக்கின்றன..
View More பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை – அம்பேத்கரின் நூல் தமிழில்வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்
1925ல் வீர சாவர்க்கருக்கும் கிலாஃபத் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஷவுக்கத் அலிக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் முக்கியமானது. இந்த 2021ம் ஆண்டில் தாலிபானின் எழுச்சியை இந்திய முஸ்லிம்களில் கணிசமானவர்கள் வரவேற்றுள்ளனர் என்ற செய்தியின் பின்னணியில் வாசித்தால் இது நமக்குப் பல விஷயங்களை உணர்த்துகிறது. உரையாடல் நடந்தபடியே வருமாறு… “நேற்று வரை எல்லோரும் நல்லவரே என்று எங்கள் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தோம். உலகின் வேறு பகுதியிலிருந்து வந்த திருடர்கள் எங்கள் சொத்தைக் கொள்ளையடித்து விட்டனர். இன்று புத்தி வந்து, சற்றே ஜாக்கிரதையாக வீட்டைப் பூட்டுகிறோம். சில கொள்ளையர்கள் வந்து, “நாங்கள் பல காலமாகக் கொள்ளையடித்து வந்துள்ளோம். நீங்கள் வீட்டைப் பூட்டுவது அநியாயம். இது நம் உறவை பாதிக்கும்” என்றால் நாங்கள் என்ன சொல்வது? அப்படிப்பட்ட அபாயகராமான உறவை முறிக்க வேண்டிய நேரம் இது… ”
View More வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்
சுதந்திர இந்திய வரலாற்றில் தேர்தல் முடிவுகளை ஒட்டி நடந்த மிகக் கொடூரமான வன்முறையாக சமீபத்தில் திரிணாமுல் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய மேற்குவங்க வன்முறைகள் உள்ளன… மாநிலத்தின் பல இடங்களில் கற்பழிப்புகள், கூட்டு பலாத்காரம் மற்றும் கொலைகள் நடந்துள்ளன. தேர்தல் நாளன்று பாஜகவின் வாக்குச் சாவடி முகவர்களாக பணியாற்றிய காரணத்துக்காகவே பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்… கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்…
View More மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்அஞ்சலி: கி.ராஜ்நாராயணன்
கிராமிய வாழ்க்கையின் பல்வேறு வண்ணங்களையும், விவசாயம் சார்ந்த நுண்தகவல்களையும், பாலியல் வேடிக்கைகள், சீண்டல்கள் உட்பட ஆண்-பெண் உறவின் பல பரிமாணங்களையும், அபூர்வமான கர்ணபரம்பரைச் செய்திகளையும் கதைசொல்லும் போக்கில் இயல்பாக எந்த சுவாரஸ்யக் குறைவுமில்லாமல் அள்ளித்தெளித்துச் செல்வது அவரது எழுத்து….
பூர்விக பூமியில் இருந்து அடித்து விரட்டப்பட்ட வரலாற்று உண்மைகள் எவ்வளவோ அவரிடம் பகிரப்பட்டிருந்த நிலையிலும் இடது கரத்தின் அழுத்தத்தினால் அவரால் அதை எழுதமுடியாமல் போனது. அவருடைய முன்னோருக்கு இருந்த இஸ்லாமிய அச்சமும் மிரட்டலும் இருந்திருந்த நிலையிலும் இங்கு வேறுவகையான நெருக்கடிகள் அவருக்கு இருந்தன…
ராஜேந்திர சோழனும் ஹிந்து மன்னர்கள் கூட்டமைப்பும்
கஜினியின் அத்தனை படையெடுப்பும் கோவில்களை கொள்ளையடிப்பது, பிற மதத்தினரை இஸ்லாமியர்களாக மதம் மாற்றுவது அல்லது கொன்றொழிப்பது என்ற முழுமையான ‘ஜிஹாதி’ வடிவமுறை போர்கள்தான். இந்த நேரத்தில்தான் அவனை எதிர்க்க சந்தேல அரசன் வித்யாதரன்,மாளவ அரசன் போஜராஜன், காளச்சூரி அரசன் காங்கேயா விக்ரமாதித்தன் முதலான ஹிந்து மன்னர்களின் கூட்டமைப்பு ஒன்று உருவானதை சில தரவுகள் சொல்கின்றன. இந்த நேரம்தான் ராஜேந்திர சோழனின் வடஇந்திய திக்விஜயம் நடந்தது.. ராஜேந்திர சோழனுக்கு மேற்கண்ட மன்னர்களுடன் நட்பும் இருந்தது..
View More ராஜேந்திர சோழனும் ஹிந்து மன்னர்கள் கூட்டமைப்பும்தமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்
யானைகளைக் கைப்பற்றும் மாலிக் கஃபூர் பின்னர் மீனாட்சியம்மன் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறான். மதுரையில் மாலிக் கஃபூரின் படைகள் நடத்திய வெறியாட்டங்களைக் குறித்து வரலாற்றாசிரியர் நெல்சன் விளக்கமாக எழுதியிருக்கிறார்… மதுரைக் கோவில் எரிக்கப்பட்டு, இடிக்கப்பட்டு ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்களின் இருபிரிவினருக்கிடைய நிகழ்ந்த மோதலால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயப்பகுதி மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்தது.
குமார கம்பணன் மதுரையின் மீது படையெடுத்து அதனை மீட்டெடுக்கும் வரையில், ஏறக்குறைய 48 ஆண்டுகள், மதுரை ஆலயப் பூசனைகள் எதுவும் நடைபெறவில்லை…
அக்பர் என்னும் கயவன் – 18
பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது. …
View More அக்பர் என்னும் கயவன் – 18அக்பர் என்னும் கயவன் – 17
பதாயுனி மற்றும் அபுல் ஃபசல் இருவருமே அக்பர் ஹிந்துக்களின் மீதான கருணையுடன் ஜிஸியாவை நீக்கிவிட்டதாகப் பொய்யாக எழுதி வைத்திருக்கிறார்கள். அக்பரின் காலத்தில் (பதாயுனி, அபுல் ஃபசல் காலமும் கூட) இந்தியாவில் பயணம் செய்த ஐரோப்பிய பயணிகள் அக்பர் ஹிந்துக்கள் மீதான ஜிஸியா வரியைத் தொடர்ந்து கொடூரமான முறையில் வசூலித்துக் கொண்டிருந்ததாக விளக்கமாக எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். ராந்தம்போரை ஆண்ட ஹிந்து அரசரான ராய் சுர்ஜான் அக்பரை நேரில் சந்தித்து தன்னுடைய பிராந்தியங்களில் ஜிஸியா வரி வசூலிப்பதனை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது அக்பரின் வரலாற்றாசிரியர்களாலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது… இஸ்லாமிய சட்டங்களின்படி, ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழ்கிற காஃபிர் அந்த நாட்டுக் குடிமகனாக அங்கீகரிக்கப்பட மாட்டான். அவ்வாறு இருக்கிற காஃபிர்களை அவமானங்களுடன் மட்டுமே வாழ இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே காஃபிர்களுக்கு எதிரான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் அந்தப் பகுதியில் வாழும் முல்லாவே தீர்மானிப்பான். இஸ்லாமியச் சட்டம் அந்த முல்லாவின் மூலமாகவே அங்கு வாழும் ஹிந்து காஃபிர்கள் மீது செயல்படுத்தப்படும் என்பதால் ஹிந்துக்கள் தங்களின் மதச் சடங்குகளையும், ஆலயங்கள் நிர்மாணிப்பதனையும், ஏன் இடிந்த பழையதொரு ஆலயத்தையும் மீண்டும் கட்டிக் கொள்வதற்கான அனுமதியும் கூட மறுக்கப்படும் என்பதே வரலாறு…
View More அக்பர் என்னும் கயவன் – 17அக்பர் என்னும் கயவன் – 16
வரலாற்றாசிரியர் பதாயுனி அக்பரின் படையில் ஒரு சாதாரண சிப்பாயாகப் பணிபுரிந்தவர். ராணா பிரதாப்புக்கு எதிராக நிகழ்ந்த புகழ்பெற்ற ஹல்திகாட் போரில் பங்கேற்றவர். பதாயுனி சொல்கிறார், “நம்முடைய படையணியிலும் ராஜபுத்திரர்கள் இருக்கிறார்கள். நமக்கு எதிரிகளும் ராஜபுத்திரர்கள்தான். இவர்கள் இருவரையும் நான் எப்படிப் பிரித்துப் பார்ப்பது என நான் கமாண்டர் ஆஸப்கானிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த ஆஸப்கான், நீங்கள் நம்முடன் இருக்கும் ராஜபுத்திரனைக் கொன்றாலும் பாதகமில்லை. ஏனென்றால் இரண்டுபேர்களும் ஹிந்துக்கள்தான். அவர்களைக் கொல்வது இஸ்லாமிற்கு நன்மையாகத்தான் இருக்கும்… அக்பரிடம் சென்று காஃபிர்களுக்கு எதிரான இந்தப் புனிதப்போரில் (ஜிகாத்) என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். என்னுடைய தாடியை காஃபிர்களின் ரத்தத்தால் நிறம் மாற்றிக் கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் என அக்பரிடம் கூறினேன். பின்னர் குனிந்து அக்பரின் பாதத்தை முத்தமிட எத்தனிக்கையில் அக்பர் தனது கால்களை நகர்த்திக் கொண்டார். ஆனால் நான் வெளியே செல்ல எத்தனிக்கையில் என்னை மீண்டும் உள்ளே அழைத்த அக்பர் தன்னுடைய கை நிறைய பொற்காசுகளை அள்ளி என்னிடம் கொடுத்து என்னை அனுப்பி வைத்தார்”….
View More அக்பர் என்னும் கயவன் – 16