குற்றத்தைத் தடுக்கவோ, குற்றம் செய்தவனை தண்டிக்கவோ, இப்படிப்பட்ட ஆவணங்கள் இரகசியமாக, பிரதியெடுத்தோ, அல்லது திருடியோதான் மக்கள் பார்வைக்கு வரமுடியும். குற்றத்தை விசாரிப்பவர்களுக்கு அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மைதான் முக்கியமானதே தவிர, யார் கொடுத்தது, ஏன் கொடுத்தான், எப்படி எடுத்தான் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது நீதி பரிபாலன செயல்பாடுகளுக்கு எதிரானது. பொது நலத்துக்கும் எதிரானது; ஊழலை ஊக்கப்படுத்துவது போன்றது; ஊழல் வாதிகளைப் பாதுகாக்க விரும்புவது போன்றது…. இந்த நிகழ்வில், நிர்வாகம் தவறு நடந்திருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, தவறு செய்து தங்கள் பிள்ளைகளுக்கு திருட்டுத் தனமாக வேலைக்கு ஆர்டர் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தவறுக்கு வெளிச்சம் போட்ட கடைநிலை ஊழியர் ஒருவரை பழிவாங்கத் துடித்தது ஏன்? ஏனென்றால் நிர்வாகத்தின் உயர்ந்த பீடத்தில் இருப்பவர்கள் அறிந்தே இந்த தவறுகள் நடந்தன என்பதுதான்….
View More ஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?Tag: சட்ட மீறல்கள்
கனிம வளங்களை சுரண்டும் முதலைகள்
அளவை குறைத்துக் காட்டுவது, புறம்போக்கு நிலங்களிலும் குவாரியை விஸ்தரிப்பது, அனுமதி இல்லாமலே பல இடங்களில் குவாரி நடத்துவது என கிரானைட் மோசடியின் இலக்கணங்கள் பல வகை. இது எதையும் உள்ளூர் அதிகாரி முதல் அமைச்சர் வரையிலான படை பரிவாரங்களின் ஆசி இல்லாமல் நடத்தவே முடியாது… நிலக்கரி ஊழலால் நாட்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி இழப்பு. நாடாளுமன்றம் முடங்கினாலும், காங்கிரஸ் கட்சிக்கு கவலை இல்லை. தேசத்தின் பிரதமரே தன் முகத்தில் கரி பூசிக்கொண்டு தள்ளாடுவது நாட்டு மக்களுக்குத் தான் கவலை அளிக்கிறது….
View More கனிம வளங்களை சுரண்டும் முதலைகள்ஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி!
அடித்தள மக்கள், ஏழைகள், உதவி வேண்டு பவர்களுக்கு போராடி வரும் நிறுவனமாகும் என்று கூறும் நிர்வாகம், மோசடியான கிரையப் பத்திரம் என விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரும், அபகரித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை விட்டுக் கொடுக்க முன் வராதது ஏன்? சேவை என்பது பெயரளவில் மட்டும்தானா? என ஈரோட்டு மக்கள் கேட்கின்றனர். இதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் ஈரோடு ஹிந்து இயக்கங்களின் லட்சியம் பெரும்பகுதி நிறைவேறி உள்ளது. சி.எஸ்.ஐ, பிரப் தேவாலய கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி நிலத்தை மீட்டு கோவிலுக்கு பயன்படுமாறு செய்வதே, ஈரோடு ஹிந்து இயக்கங்களின் அடுத்தகட்டப் பணியாக இருக்கும்.
View More ஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி!ஒரு நதியின் நசிவு
மூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும்…. வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி…
View More ஒரு நதியின் நசிவு