கட்டக்கை அடையும் சிவாஜி ஒரு தவறைச் செய்கிறார். ஒரு சிறிய குதிரையை விலைக்கு வாங்கும்போது, அதற்குச் சேரவேண்டிய விலையை விடவும் அதிகமாகப் பணத்தை குதிரைக்காரனுக்குக் கொடுக்கிறார். ஆச்சரியமடையும் குதிரைக்காரன், இதுபோலப் பணம்கொடுக்க முகலாயர்களிடமிருந்து தப்பிய சிவாஜியால் மட்டும்தான் முடியும் எனச் சொல்லவே, சிவாஜி தன் கையிலிருந்த மொத்தப் பணத்தையும் அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்புகிறார்.
View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5Tag: சாம்பாஜி
ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4
சிவாஜி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்கிடப்பதாகவும், அவரைத் தொந்திரவுசெய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஆட்கள் பரபரப்பாக சிவாஜியின் கூடாரத்திற்குள் மருந்துக் குப்பிகளை எடுத்துச் செல்வதும், வெளியே வருவதுமாக இருக்கிறார்கள்.
இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருந்து தப்பிய ஒருவன், நிச்சயமாக தனக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆக்ராவுக்குள் எங்கேனும் ஒளிந்து கொண்டிருப்பான் என நம்புகிறார். கோபமும், வருத்தமும் தோய்ந்த மனிதராக மாறும் ஔரங்கஸிப், சிவாஜியைக் கண்டதும் கைதுசெய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ராஜா ஜெய்சிங்குக்குக் கடிதம் எழுதுகிறார்.
ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3
அந்த வீட்டிற்குப் போனால் தனது கதி என்னவாகும் என்பதினை முழுவதும் உணர்ந்திருந்த சிவாஜி, உடனடியாக அங்கிருந்து தப்பத் தீர்மானிக்கிறார். ஔரங்கஸிப் சிவாஜிக்குக் கெடுதல் செய்யத் தயாராகிவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அவரை எட்டுகின்றன.
View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2
தன்னுடைய அடிமைகளாக சேவகம்புரிகிற ஹிந்து ராஜாக்களைப் போல சிவாஜியையும் சாதாரணமாக எடைபோட்டார் ஔரங்கஸிப். ஒரு ஹிந்து அரசனுக்குத் தான் மரியாதை தருவதா என்கிற அடிப்படைவாத மனோபாவமே அவரது அழிவுக்கும், முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கும் அச்சாரம் போட்டது என்பதனை அந்த நேரத்தில் அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிவாஜிக்கு உரிய மரியாதைதந்து அவரைக் கவுரவித்திருந்தால் ஔரங்கஸிப்பிற்குத் தென்னிந்தியாவில் ஒரு பெரும் சக்தி துணையாகக் கிட்டியிருக்கும்.
View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1
ஆக்ராவுக்கு சமாதானம்பேசச் சென்று, அங்கு சிறைவைக்கப்பட்ட சிவாஜி, ஔரங்கஸிப்பின் பிடியிலிருந்து தப்பிவந்தது ஒரு பெரும் சரித்திர நிகழ்வேயன்றி வேறில்லை. ஏனென்றால் ஔரங்கஸிப்பிடம் சிக்கிய எவரும் உயிருடன் திரும்பியதில்லை — அவரது சொந்த சகோதரர்கள் உட்பட. ஒருவேளை சிவாஜி அந்தச் சிறையிலேயே இறந்திருந்தால் இந்திய வரலாறே முற்றிலும் மாறியிருக்கும். முகலாய ஆட்சியேகூட இன்றுவரை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1