மஹாபாரத உரையாடல்கள் – 006 கர்ணன்

திறமையைக் காட்டுகிறேன் என்று வந்த சமயத்தில் யாரும் ‘அப்பன் பேர் என்ன, நீ என்ன பிறப்பு’ என்று கேட்கவில்லை. ‘என்கூட ஒண்டிக்கு ஒண்டி வா’ என்று அறைகூவும்போது, இளவரசனோடு மோதவேண்டுமானால், உன் தகுதி என்ன என்று கேட்டார்கள். கேட்கத்தான் கேட்பார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த ஜனநாயக சூழலை மறந்துவிட்டு, அரசர்கள் ஆண்ட அந்த சூழலுக்கு மனத்தை எடுத்துச் சென்று, அந்தச் சூழலில் இந்தக் கணத்தை நிறுத்திப் பாருங்கள்.