இக்கட்டுரையில் “இந்தியாவுக்கு உடனே ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற லக்ஷயத்தில் நீயும் நானும் ஒன்றுபட்டிருக்கிறோம்” என்று கூறுகிற பாரதி, ” நம்மவரெல்லாரும் கூடி முயன்று, பாரதமாதாவின் ராஜரீக விலங்குகளை நீக்கி, விடுதலையேற்படுத்திக் கொடுக்கப்போகிற ஸுதினம்-நல்ல நாள்-எப்போது வரப் போகிறதென்பதை ஒவ்வொரு நிமிஷமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்.” என்று எழுதுகிறார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லாமல் வேறு என்ன?
View More பாரதி: மரபும் திரிபும் – 10தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்தி
தேர்தல் ஆணையத்தை மோடி அரசு பயன்படுத்திக் கொண்டு வாக்கு திருட்டை நடத்துகிறார்கள் என ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். . ஆனால் உண்மையில் தேர்தல் ஆணையத்தையும், நீதித் துறையையும் சீரழித்தது காங்கிரஸ். அரசியல் சட்டத்தையே தங்களுக்கு சாதகமாக வளைத்து எதிர்கட்சிகளை ஒடுக்க நினைத்தவர்கள் நேருவும், இந்திரா காந்தியும்..
View More தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்திஇந்து தியாக வீரர் குமார் பாண்டியன் குடும்பத்து வாரிசு எதிரணியில்: வேதனை
அண்மையில் மிகவும் பாதித்து மிகவும் மனத்தளர்ச்சியில் தள்ளிய விடயம் – குழந்தை ருத்ராவின் வீடியோ. அவளுக்கு நம் மீது எத்தனை கோபம் இருந்தாலும். எந்த மேடையில் ஏறி எத்தனை வசை மொழி பொழிந்தாலும் – அவள் என்றும் நம் வீட்டு குழந்தைதான். ஏனெனில் அவள் தந்தையும் அவள் சகோதரர்களும் அந்த குடும்பமும் செய்த தியாகம் அத்தகையது.. அந்த குழந்தையின் மீதும் அவள் குடும்பத்தின் மீதும் உள்ள அளப்பரிய அன்பாலும் மதிப்பினாலும் மட்டுமே, அவள் சொல்வதில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது…
View More இந்து தியாக வீரர் குமார் பாண்டியன் குடும்பத்து வாரிசு எதிரணியில்: வேதனைதிருப்பரங்குன்றத்தின் தீபத்தூண் சர்ச்சை : சில எண்ணங்கள்
திருப்பரங்குன்றம் என்பது ஒற்றை விசயமல்ல. இங்கு தமிழ்நாட்டில் மண்டைக்காடு, வி.களத்தூர், திண்டுக்கல் பெருமாள்பட்டி என்று ஒவ்வொரு ஊர்களிலும் நிகழ்கின்ற, வெளிப்பார்வைக்கு தெரியாமல் அழிக்கப்படும் இந்துக்களின் புனித நிலப்பரப்பின் ஒருங்கிணைந்த அடையாளம் அது.. இங்கு நடப்பது பெரும் பண்பாட்டு போர். இந்துக்களுக்கு இன்றைய தேவை தற்காலிக உணர்ச்சிகர ஒற்றுமை மட்டும் அல்ல. அதிலிருந்து உருவாக வேண்டிய உண்மையான நீடித்த இந்து ஒற்றுமை…
View More திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண் சர்ச்சை : சில எண்ணங்கள்‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்
திரைப்படத்தை பார்த்து முடிக்கும் எவருக்கும் ஏற்படுவது பெரும் உன்னத உணர்வு. புனித நதியில், கங்கையில் அல்லது காவேரியில், அதன் புனிதத்தை உணர்ந்து நீராடினால் ஏற்படும் மனத்தூய்மை உணர்வு… மாரி செல்வராஜ் சத்தியமாக கீதை படிக்கவில்லை. அவருக்கு அதில் ஆர்வமும் இருக்க அவசியமில்லை. அப்படி ஒரு வேலியை நாம் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் மேலே மதுராபுரி மாட்டிடையன் கீதையில் சொன்னவற்றை தம் திரைப்படத்தில் காட்சிப்படுத்திவிட்டார் அவர்… சங்கிகள் என்று தம்மை சொல்லிக் கொள்கிறவர்களில் பலர் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அப்படி செய்வது உங்கள் தலைவரான கோல்வல்கரையே கேலி செய்வதுதான்… எவ்வித மலின வணிக சமாச்சாரமும் இல்லாத, மலினங்கள் விடயத்தில் துளி சமரசமும் இல்லாத திரைப்படம் ஒன்றை தமிழ் சமுதாயம் வெற்றி பெற வைக்குமென்பதைக் காட்டியிருக்கிறது பைசன்…
View More ‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் இருமுறை தலைவர் பதவியில் திறம்பட செயல்பட்டவர் ம.வெ. அத்துடன் சிறந்த சமூக வரலாற்று அறிஞரும் ஆவார். அவருடைய உரை நேரடி அனுபவத்திலிருந்து வருவது. தூய்மைப் பணியாளர்கள் குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நேரடியாக உரையாடியது, கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் செய்த தொண்டு, தமிழ்நாடு உட்பல பல மாநிலங்களில் மாநில அரசு அமைப்புகளின் மெத்தனம், ஒப்பந்தக் காரர்களின் சுரண்டல்கள், அராஜகங்கள், பாலியல் அத்துமீறல்கள், தனது பணிக்காலத்தில் அவர் எடுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகள், பட்டியல் சமுதாயத்தினரே மிக அதிக அளவில் இந்தப் பணிகளுக்கு வரும் நிலைமை தொடர்வது சரியானதா என்று பல முக்கியமான விஷயங்களைத் தொட்டுச்செல்வதாக அவரது உரை அமைந்திருந்தது. உரையின் வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்…
View More இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்கம்பனில் காத்திருப்பு – புத்தக அறிமுகம்
நண்பர் ஜகன்னாத் அவர்களின் கம்பராமாயண வாசிப்பு ரசனை, ஆய்வு, சமயம் ஆகிய மூன்று கண்ணோட்டங்களையும் உள்ளடக்கியது என்பதை இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இவற்றுக்கிடையில் முரண்பாடுகளை அவர் காண்பதில்லை. இவை மூன்றையும் இணைத்துச் செல்வதாகவே அவரது பார்வை அமைந்துள்ளது. . இதிலுள்ள பத்துக் கட்டுரைகளில் நான்கு, இராமகாதைக்கெனத் தமது வாழ்வின் கணிசமான பகுதியைச் செலவிட்டு உழைத்த பெருந்தகைகளைப் பற்றி அமைந்துள்ளது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது…
View More கம்பனில் காத்திருப்பு – புத்தக அறிமுகம்ஶ்ரீ கிருஷ்ணரின் பிரம்ம மோகன லீலையும் அதன் உட்பொருளும்
மனதிற்கினியதும், வசீகரமானதும், ஆழமான தத்துவ உட்பொருள் கொண்டதுமான பிரம்ம மோகன லீலை ஶ்ரீமத்பாகவம் பத்தாவது ஸ்கந்தம் 13-14 அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. மாயத்தால் கண்ணனுடன் விளையாட பிரம்மா பின்பு தானே மாயச்சுழலில் சிக்கி திகைத்து நிற்பதும் இதில் வருகிறது. அதைப் பற்றியது ஜடாயுவின் இந்த உரை…
View More ஶ்ரீ கிருஷ்ணரின் பிரம்ம மோகன லீலையும் அதன் உட்பொருளும்தொடரும் “தோமா வழி கிறித்தவம்” மோசடி, நடிகர் ராஜேஷ், உறக்கத்தில் இந்துக்கள்
சீமானும் விஜயும் இந்த மோசடி வலையின் பல்வேறு சரடுகளில் (pun intended) அறிந்தோ அறியாமலோ இயக்கப்படுகிறவர்கள். திராவிடம், தனித்தமிழ் இயக்கம், வேத மறுப்பு போலி சைவம் அனைத்துமே இந்த பெரும் மோசடியின் அங்கங்கள்.. நடிகர் ராஜேஷ் இதைப் பரப்பும் ‘ஐந்தவித்தான்’ என்கிற பிரச்சார திரைப்படத்தில் நடித்தார். தவறு, அவரது மதம் பரப்ப ஊழியம் புரிந்தார். அதில் வரும் எளிய ஃபார்முலா ஒன்றுதான்.. அவர்கள் பொய்மையில் வலிமையடைந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களோ உண்மையினை காக்கவும் பரப்பவும் திராணியின்றி, சோம்பலால் சுயநலத்தால் அந்த பொய்மை பரவ துணை போகிறீர்கள்…
View More தொடரும் “தோமா வழி கிறித்தவம்” மோசடி, நடிகர் ராஜேஷ், உறக்கத்தில் இந்துக்கள்தமிழகத்தின் சனாதன பாட்டி ஔவையார்
வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சங்ககாலத்திலிருந்து பல ஔவையார்கள் வாழ்ந்ததாக கருதுகிறார்கள். ஆனால் தமிழரின் சனாதன தர்ம மனமானது, கல்வியும் அனுபவமும் இறைஞானமும் கொண்ட ஒற்றைப் பெண்மணியாக ஔவையை உருவகித்தது. ஔவைப் பாட்டி ஒரு ஆன்மிக பண்பாட்டு archetype. அப்படிப்பட்ட பெண்ஞானியை உருவாக்கும் கல்வி முறை இந்த மண்ணில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாட்டி ஏதோ ஒரு கட்டத்தில் அவள் பேரக்குழந்தைகளுக்கு ஔவை பாட்டியின் வடிவமாக வேண்டும்…
View More தமிழகத்தின் சனாதன பாட்டி ஔவையார்