முன்குறிப்பு: திருச்செந்தூர் முருகனைப் பற்றிய ‘அலங்காரம்’என்னும் இந்த அழகிய பாடலை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை.பாட்டின் சொல்லும்பொருளும் காவடிச் சிந்து மெட்டும் என்னை இப்பாடலைக் கற்றுக் கொள்ளத் தூண்டியது. பல இடங்களில் கோலாட்டம், பஜனை போன்ற நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலைப் பாடியபோது மக்கள் விரும்பிக் கேட்டனர். தமிழ் ஹிந்து தள வாசகர்களும் இப்பாட்டை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.
(பாடலைக் கேட்க, கீழே உள்ள பெட்டியில் Play விசையை அழுத்தவும்).
|
பல்லவி
அலங்காரம் அலங்காரம் ஆஹா ஒய்யாரம் அடி
அலங்காரம் அலங்காரம்
சரணங்கள்
மணல்மேடு குன்றுகளாம் மாறாத அலை ஒலியாம்
மணமான சோலைகளாம் வளமான புஷ்கரிண்யாம்
வாடி என்கூட வள்ளிமாது தன்னோடு
வடிவேலைக் கும்பிட (அலங்காரம்) ……….(1)
தங்கமய கோவில் ஜோரு ஷண்முக விலாசம் பாரு
சகல பாக்யமும் தரும் சன்னதி முன்பு சேரு
சங்கை சொல்லவோ மனம் பொங்குதல்லவோ அது
எங்குமுள்ளதோர் (அலங்காரம்) ………..(2)
மூலபரம் சுப்ரமண்யர் காலிலே கிண்கிணி மணியும்
மேலே தங்கப்பூணூலும் வேலுடைய ஒட்யாணமும்
கண்டால் போறாதோ நம் கலியும் தீராதோ
கண் காக்ஷி காணாதோர் (அலங்காரம்) ………(3)
நாலுவேத கோஷங்களும் நானாவித பஜனை கோஷம்
வேலாயுதம் என்னும் கோஷம்
வெறுக்காது ஹே சந்தோஷம்
மெத்த உல்லாசம் ரத வீதி விலாசம்
இது நல்ல கைலாசம் (அலங்காரம்) ………….(4)
ஆறுகாலம் பூஜைகளாம் ஆறுமுக தரிசனமாம்
நூறுநாள் இருந்தாலும் சோறு கூட வேண்டாமடி
யார்க்கும் கிட்டாது முனிவர்க்கும் கிட்டாது
கண்கள் பார்க்கக் கொட்டாது இந்த (அலங்காரம்)……….(5)
மாசித் திருநாள் உண்டு வருவார் பலர் கோடி உண்டு
வள்ளி தெய்வானையுடன் மயிலேறி வரக் கண்டேன்
தங்கச் சப்பரமே அதில் பச்சைக் கற்பூரம் அதில்
பன்னீர் சிந்தும் நாற்புறம்(அலங்காரம்) ………….(6)
வெள்ளைமலர் மணமாலை விலையுள்ள வைரமாலை
வேலுமயில் கண்ட பேர்க்கு வினையெல்லாம் ஓடிப்போகும்
வெறுக்குதில்லையே மனம் பொறுக்குதில்லையே
தேகம் தரிக்குதில்லையே இந்த (அலங்காரம்) ……….(7)
பச்சை சாத்தி அலங்காரம் பச்சை மரகதம்
பச்சைப் பட்டு வஸ்த்திரம் பார்க்கப் பார்க்கவே சிங்காரம்
மயிலும் பச்சையே அவர் தருவார் பிச்சையே நீ
கேளாய் இத்தையே (அலங்காரம்) …………….(8)
அன்புள்ள ஜெயா மாமி,
கட்டுரையும் பாட்டும் நன்றாக இருந்தது. ஆனால் பாட்டில
continuty இல்லை மற்றபடி நன்றாக வந்திருக்கிறாது.
இப்படிக்கு,
லலிதா.
பாட்டும் கட்டுரையும் மிக நன்றாக உள்ளது.ரசிக்கத்தக்கது.
இரா.சி.பழ்ஹனியப்பன்.