திரிசூலம் அஹிம்சையின் அடையாளமாம்…

அடிக்கிறவனின் கர்த்தர் அப்படித்தான் – அடிவாங்குபவனை – அடி வாங்கிக் கொண்டே இருக்கச் சொல்வான் – கொஞ்சமாவது – சுய மரியாதையும் சொரணையும் இருந்தால் – அடிப்பவன் கன்னத்தில் திருப்பி அறைவான்.. நீயும் உன் தென்னகக் கூட்டுக் களவாணிக் கும்பலும் – ராஜபக்சேவுடன் சேர்ந்து காட்டினீர்களே – அதுதானே உன் கட்சியின் அபய ஹஸ்தம்..

View More திரிசூலம் அஹிம்சையின் அடையாளமாம்…

ஊடகமும் தர்மமும்

பிரிவினைவாத, இந்து விரோத ஊடகங்களை ஒழுங்குபடுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால், அவர்கள் இப்படியான விஷயங்களைக் கண்டுகொள்வதே இல்லை. ஊடக, தகவல் தொழில்நுட்பத்துறை என்பது போன்றவற்றில் இவற்றைத் தடுக்க சட்டங்கள் நிச்சயம் இருக்கும். ஆனால் மத்திய அரசு இவற்றில் 100-ல் ஒரு பங்கு நடவடிக்கைகூட எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் நம் மனதில் எழுகிறது.

View More ஊடகமும் தர்மமும்

மோதி 3.0 : தேசிய, தமிழக, தர்மக் கணக்குகள்

வட இந்தியாவில் முஸ்லிம் அடிப்படைவாத ஆதிக்கம், தெற்கில் கிறிஸ்தவ அடிப்படைவாத ஆதிக்கம் என வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான ஆப்ரஹாமிய அடிப்படைவாத சக்திகளின் இலக்கு இது. வரவிருக்கும் தலைமுறையை நம் தெய்வங்களால் காப்பாற்ற முடியாது. இந்து ஆன்மிக, அரசியல், சமூகத் தலைவர்கள் ஏதேனும் செய்தால்தான் உண்டு…

முதல் பத்தாண்டுகளில் இந்து மறுமலர்ச்சி என்பதைவிட தேசத்தின் வளர்ச்சி என்பதையே பாஜக முத்திரை முழக்கமாக வைத்து ஆட்சியை நடத்திவந்திருக்கிறது. தொடர்ந்து இரண்டு மூன்று முறை வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன காரணத்தினாலோ அந்தக் கட்சி மீது அதிருப்தி வந்துவிடுகிறது. பாஜகவும் அந்த சலிப்பினால் ஓரங்கட்டப்படுவதற்கு முன்பாக சுதாரித்துக் கொள்ளவேண்டும். பாஜக தனக்கான பி.டீம்களைக் கண்டடைந்தாகவேண்டும்..

அதிமுகவின் தலைவர்கள்தான் இந்து விரோதிகளாக இருக்கிறார்களே தவிர அதிமுகவின் வாக்காளர்கள் அப்படி அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அவர்களுடைய ஆதரவு பாஜகவுக்குக் கிடைக்கவேண்டுமென்றால்..

ஈ.வெ.ராவை விட அம்பேத்கர் பல மடங்கு மேலானவர். அந்தவகையில் பாஜக அவரை தமது வழிகாட்டிகளில் ஒருவராகச் சொல்கிறது. ஆனால், பிராமணிய எதிர்ப்பு என்றவகையில் ஈ.வெ.ரா மற்றும் அம்பேத்கரை பாஜக நேச சக்தியாகவே கருதுகிறது. அதனால்தான் திமுக மீது காங்கிரஸ் அளவுக்குக்கூட எந்தவொரு நடவடிக்கையையும் பாஜக எடுப்பதே இல்லை. திமுகவின் இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு ஆகியவற்றையாவது பாஜக தீவிரமாக எதிர்க்கலாம். அதையும் செய்வதில்லை…

(முழுக்கட்டுரையையும் இணையதளத்தில் வாசிக்கலாம்)

View More மோதி 3.0 : தேசிய, தமிழக, தர்மக் கணக்குகள்

அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்

அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து அரசியல் பொறுப்புணர்வுகள் மக்களை நடக்கவைக்கவேண்டும். இந்தப் புத்தகம் அப்படியான விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியிலேயே எழுதப்பட்டுள்ளது.. அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது… இந்தப் புத்தகத்திற்கு அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஜே.சாய் தீபக் ஆகிய இரண்டு சிந்தனையாளர்களும் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளனர். புத்தகத்தின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசும் அந்த இரண்டு முன்னுரைகளையும் கீழே தருகிறோம்..

View More அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்

பெரியார் மண்

ஜாதிப் பிரச்னைக்கு தீர்வு ஜாதி சீர்திருத்தத்தில்தான் இருக்கிறது. ஜாதி ஒழிப்பில் இல்லை.கோவில் கருவறைக்குள் நுழையவிடாவிட்டால், நாமே கருவறையே இல்லாத ஒரு புதிய கோவிலைக் கட்டி அனைவரையும் கும்பிடவைக்கவேண்டும். அனைத்து ஜாதியினரில் இருந்தும் அர்ச்சகர்களை நியமித்து பூஜைகள் செய்யவேண்டும். சம்பிரதாயக் கடவுளுக்கு மாற்று நவீனக் கடவுளே

View More பெரியார் மண்

இந்திய குற்றவியல் சட்டங்களில் மோதி அரசு கொண்டுவரும் மாபெரும் சீர்திருத்தங்கள்

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதே மூன்று புதிய சட்டங்களின் ஆன்மாவாக இருக்கும், அவற்றின் நோக்கம் தண்டிப்பது அல்ல, நீதி வழங்குவது.. இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் பரவலான மாற்றத்தைக் கொண்டுவரும் இந்தச் சட்டத்தின்படி அதிகபட்சமாக எந்த வழக்கிலும் 3 ஆண்டுகளுக்குள் எவரும் நீதியைப் பெற முடியும்… பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் காவல்துறை தங்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முடியாது… நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜீரோ எஃப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படும். வழக்கு குறிப்பேடு, குற்றப் பத்திரிகை முதல் தீர்ப்பு வரை முழு செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது…

View More இந்திய குற்றவியல் சட்டங்களில் மோதி அரசு கொண்டுவரும் மாபெரும் சீர்திருத்தங்கள்

கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்

உங்கள் பெரியாரால் *** கதை என்று இழிவு படுத்தப்பட்ட சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டியிருப்பது பாராளுமன்றத்தைக் கொச்சைப்படுத்தவா? பெரியார் அப்படி என்ன சொன்னார்?… “மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” தமிழர் முறை. யார் தமிழர் இங்கே? கண்ணகியின் சாபம் தெரிந்த உங்களுக்கு கண்ணகியின் திருமணம் பற்றி தெரிந்திருக்க வேண்டுமே.. சிலப்பதிகாரத்தில் உங்களைப்போலவே, உங்கள் திராவிட இயக்கத்தைப் போலவே, ஒரு ஆசாமி இருந்தான். பொற்கொல்லன் அவன்…

View More கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்

அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்

மே-23 அன்று ஆலய கோபுர கலசங்கள் சேதப்படுத்தப்பட்டதும், இறை மூர்த்தங்களின் உடைமைகள் திருடப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் இருப்பது அதிர்ச்சிகரமான செயல். அற நிலையத்துறை சார்பாக எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல் விடப்பட்டுள்ள ஆலயத்திற்கு பக்தர்கள் சார்பாக ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலரும் முழு போதையில் சுய நினைவின்றி இருந்திருக்கிறார். காவல்துறை கடைசியில் கோவிலில் ஒளிந்திருந்த நபரை கைது செய்தனர். நன்கு ட்ரிம் செய்யப்பட்ட தாடி மற்றும் உடலில் அங்கங்கே டாட்டூ குத்திக்கொண்டு முழு ஆரோக்கியத்தோடு திட்டமிட்டு கோவில் கதவை திறந்து இறை மூர்த்தங்களை சேதப்படுத்திய “மனநலம் குன்றியதாக” அறிவிக்கப்பட இருக்கும் கூலி சமூக விரோதியான அந்த நபரை காவல் துறையினர் பத்திரமாக பாதுகாத்து அழைத்து சென்றனர்… திமுக ஆட்சி வந்த உடன் திருக்கோவிலின் திருக்குளத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டு வெற்றிகரமாக மத மாற்ற பணிகளை ஆலயத்திற்குள்ளேயே செய்யும் பெந்த கோஸ்தே சர்ச்சின் அடாவடிகள். அதற்கு துணை போகும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அற நிலையத்துறை அதிகாரிகள் என்று அலங்கோல நிலையில் இருக்கிறது உண்மை நிலை…

View More அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்

தமிழக அரசியல்: சர்வம் சர்ச் மயம்

இன்னும் புரியும்படிச் சொல்வதானால், வீடியோ கடை உரிமையாளர் சசிகலா மூலமாக கட்சியைத் தன் கைக்குள் வைத்திருக்கிறது சர்ச் மாஃபியா. நடிகை ஜெயலலிதாவை மக்கள் செல்வாக்குக்காக முன்னிறுத்தியிருந்தது… ஸ்டாலின், கிறிஸ்திகாபு ருஷன், அன்பில் மகேஷ் என திமுக முழுக்கவும் சர்ச்சின் பிடியில்தான் இருக்கிறது.. அன்புமணி, டேனியல் ராஜா, தாவீது பாண்டியன், திருமா அனைவரும் சர்ச் கைக்கூலிகளே. சீமான் செபஸ்டியன் தமிழ் தேசியம் என்ற போர்வையில் உருவாக்க விரும்புவது கிறிஸ்தவ தேசியமே… பாஜக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தினாலும் அதிகப் பலன் பெறுவது கிறிஸ்தவ லாபியே.. உலகம் முழுவதுமே சர்ச் மாஃபியாவின் மிதமான அழித்தொழிப்புதான் இந்த நூற்றாண்டு முழுவதும் நடந்து வந்திருக்கிறது. இந்தியாவிலும் வெகு காலத்துக்கு முன்பே ஆரம்பித்தும்விட்டிருக்கிறது…

View More தமிழக அரசியல்: சர்வம் சர்ச் மயம்

ராகுல் காந்தியின் “நான் சாவர்க்கர் அல்ல” – இரு சாட்டையடிகள்

புழுக்களுக்கு புலியின் வலிமை தெரியாது. புழுக்களின் உலகமே வேறு. பதவிக்காலம் முடிந்த பின்னும் அரசாங்கம் வழங்கிய சொகுசு பங்களாவில், வெட்கமேயில்லாமல், வசித்து வந்த ஒரு காந்திக்கு, சாவர்க்கர், அந்தமான் சிறைத்தண்டனையின் வேதனை புரியுமா?… செக்கிழுத்து தேங்காய் நார் உரித்து மலக்குழியைவிட கேவலமான அறையில் தரையில் படுத்து தனிமை சிறையில் தங்கி இருக்க முடியுமா? 50 ஆண்டுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சூழலில் நான்கு வருடங்கள் மிகக் கொடுமையான தண்டனைகளை அனுபவித்த ஒருவர், என்னை மட்டும் சிறையில் வைத்துவிட்டு பிறர் அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என எழுதுகிறார். இந்த தியாகத்தை கிண்டலடிப்பவன் மனிதர்களில் சேர்த்தியா? அப்படி கிண்டலடிப்பவன் பின்னால் செல்பவர்கள் இந்திய ரத்தம் கொண்டவர்களா?….

View More ராகுல் காந்தியின் “நான் சாவர்க்கர் அல்ல” – இரு சாட்டையடிகள்