ஹடயோக பிரதீபிகை – தமிழில்

பதினைந்தாம் நூற்றாண்டில் யோகி சுவாத்மாராமரால் எழுதப்பட்ட இந்த முக்கியமான நூல் இன்றளவும் யோக பயிற்சிகளுக்கான முதன்மையான வழிகாட்டியாக திகழ்கிறது. சுமார் நூறாண்டுகளுக்குப் பின்னர், முனைவர் ம.ஜயராமன் அவர்களின் மொழியாக்கத்தில், தற்காலத் தமிழில், பிரம்மானந்தர் அவர்களின் ஜ்யோத்ஸனா உரையிலிருந்து அரிய பல குறிப்புகளுடன் இந்த நூல் இப்போது வெளிவந்திருக்கிறது. 15 ஆசனங்கள், 6 கிரியைகள் 8 விதமான பிராணாயாமங்கள், 10 முத்ரைகள், தியான வழிமுறையான நாதானுசந்தானம் ஆகிய பயிற்சிகள் ஆதாரபூர்வமாக விளக்கப்பட்டுள்ளன….

View More ஹடயோக பிரதீபிகை – தமிழில்

வேதம் தமிழ் செய்த மேலோன்: ம.ரா.ஜம்புநாதன்

ஜம்புநாதன் செய்த பணியில் மகத்தானது, நான்கு வேதங்களையும் தமிழில் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டதாகும். வேதம் எல்லோருக்கும் பொதுவானது. அவை தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என அவர் விரும்பினார்.. மும்பை, அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. ஆரிய சமாஜத்தில் ஆர்வம் பிறந்தது. சாலையோரச் சிறுவர்கள் படும் கஷ்டங்களையும், அங்கு வசிக்கும் தமிழர்கள் படும் அவலங்களையும் கண்டு ஜம்புநாதன் மிகவும் மனம் வருந்தி 1924ல் தாராவியில் ஒரு பள்ளியை அவர்களுக்காக ஏற்படுத்தினார்…

View More வேதம் தமிழ் செய்த மேலோன்: ம.ரா.ஜம்புநாதன்

மாரியம்மன்

மாரியம்மன் என்பதை தமிழ்ச்சொல்லாக எடுத்துக்கொண்டு மழையுடன் (மாரி) தொடர்புறுத்தி விளக்கம் அளிக்கின்றனர். இது முற்றிலும் தவறான விளக்கம். மாரியம்மனை அம்மை போன்ற பெருநோய்களைத் தீர்க்கும் தெய்வம் என்றே பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனரே அன்றி மழை, விவசாயம், பயிர் விளைச்சல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தெய்வமாக அல்ல. உண்மையில் அம்மனின் பெயர் மஹாமாரீ என்ற சம்ஸ்கிருத மூலத்திலிருந்து வருகிறது. தேவி மகாத்மியத்திலும், அதனோடு இணைந்த சாக்த நூல்களிலும் இப்பெயர் உள்ளது…

View More மாரியம்மன்

சாணக்கிய நீதி – 7

This entry is part 2 of 8 in the series சாணக்கிய நீதி

அன்புக் காதலியான மனைவி, தன்னை உயிருக்குயிராகக் காதலிக்கும் கணவனைப் பிரிந்து கள்ளக் காதலன் வீட்டிற்குச் சென்றால், தன் கௌரவத்திற்கும், தன் குடும்பத்தின் நற்பெயருக்கும் இழுக்கு வந்து சேர்ந்ததே, ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானோமே என்று அணுஅணுவாக மனதிற்குள் புழுங்கி இறந்துபோகவோ, அல்லாது தற்கொலை செய்துகொள்ளவோ, நேரிடும்.

View More சாணக்கிய நீதி – 7

குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம்

வியாச பகவான் ஞானத்தை விஸ்தாரமாக விளக்கி அளித்தவர். ஞான விஷயங்களை பிறருக்கு விளக்கிக் கூறி புரிய வைக்கும் சாமர்த்தியம் கொண்டவர். உண்மையில் வேத வியாசர் என்ற பெயரிலேயே இந்த பொருள் உள்ளது. வேதம் என்றால் ஞானம். வியாசம் என்றால் விரிவான விளக்கம்.. நாம் எத்தனை மேதாவியானாலும் அந்த மேதமையில் உள்ள ஆத்ம ஜோதி தூண்டப்படாவிட்டால் நாம் முழுமையடைந்ததாக பொருள் அல்ல. அப்படிப்பட்ட தூண்டப்படுதல் அல்லது உத்தீபனம் அல்லது சக்தி பாதம் சத்குருவால் மட்டுமே சாத்தியம்…

View More குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம்

தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்

பழனியாண்டவர் மீது அமைந்த சம்ஸ்கிருத ஸ்தோத்திரம் வேண்டும் என்று நண்பர் கேட்டார். தண்டபாணி பஞ்சரத்னம் உடனடியாக நினைவுக்கு வந்தது. கீழ்க்காணும் இந்த எளிய, இனிய ஸ்துதி சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி சுவாமிகள் (1858-1912) அருளியது. பழனி திருக்கோயிலுக்கும் சிருங்கேரி பீடத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு…

View More தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்

எங்கே போகிறேன்?

“சுவாமிகள் எழுதிவைத்த திருமுகக் குறிப்பில் ஜீவசமாதி செய்துவிடும்படி ஆஞ்ஞை கொடுத்திருக்கிறாராம்!”
“சுருங்கச்சொன்னால் கம்ப்யூட்டர் விளையாட்டில் இருக்கும் ஒரு பாத்திரம்போலத்தான் நீ! நீ உணர்ந்து எல்லாமே அந்த விளையாட்டுதான்! கம்ப்யூட்டர் விளையாட்டு எவ்வளவு உண்மையோ, அத்தனை உண்மைதான் நீ இதுவரை கண்டது, கேட்டது, அறிந்தது, துறந்தது, தேடியது – அனைத்துமே!”

View More எங்கே போகிறேன்?

பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?

புராணங்களும் சாத்திரங்களும் பொய் என்று பாரதியார் கூறுவதாக ஒரு இந்து விரோத பதிவில் மேற்கோள் காட்டியிருந்ததை நண்பர் கவனப்படுத்தினார்.. மகாபாரதம் பொய் என்று பாரதி கருதியிருந்தால், ஏன் பாஞ்சாலி சபதம் எழுத வேண்டும்? பீமனையும் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாக அவர் காண்கிறார்.. நிவ்ருத்தி எனப்படும் யோக, ஆன்மீக உயர்நிலையில் நின்று பாரதி அந்த வரிகளை எழுதுகிறார்..

View More பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?

ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்

ஸ்மார்த்த என்ற சொல் அதன் நேர்ப்பொருளில் வேதநெறியைக் கடைப்பிடிக்கும் அனைவரையுமே குறிக்கும். ஆயினும் நடைமுறையில், தத்துவரீதியாக ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தத்தை ஏற்று, வைதிக சடங்குகளையும் நெறிகளையும் கடைப்பிடிக்கின்ற, வழிபாட்டு ரீதியாக சிவன், விஷ்ணு முதலான அனைத்து இந்து தெய்வங்களையும் பேதமின்றி வழிபடுபவர்களாக உள்ள பிராமணர்களைக் குறிப்பதாக இச்சொல் புழக்கத்தில் உள்ளது. பொதுவாக ஐயர் என்ற பின்னொட்டுடன் இவர்கள் அழைக்கப் படுகின்றனர்.. ஸ்மார்த்தர்கள் விபூதி அணிவது என்பது தொன்றுதொட்டு வருகின்ற வழக்கம் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.. பாரதம் முழுவதும் உள்ள பிராமணர்களை எடுத்துக் கொண்டால், அதில் ஸ்மார்த்த என்ற வகையினரில் வருவோரே மிகப் பெரும்பான்மையினர்…

View More ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்

ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 4

ஆரிய படையெடுப்பு கோட்பாட்டில் உள்ள முக்கிய குறைபாடுகள் என்ன? தத்துவம், கணிதம், தர்க்கம்,…

View More ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 4