இந்து தர்ம ஆசாரியர், வேத-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி அவர்களின் சமீபத்திய வீடியோ. மகாவிஷ்ணு சர்ச்சை பின்புலத்தில் தமிழ்நாட்டில் ஒலிக்கும் ஏகப்பட்ட கூச்சல்கள், குழப்படிகளுக்கு நடுவில், தர்மம் குறித்த சரியான, ஆதாரபூர்வமான, உண்மையான விளக்கத்தை இந்த வீடியோ அளிக்கிறது… பாவம் செய்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆனால், இதை வைத்து, நாம் பார்க்கக்கூடிய கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம், முன்பு ஏதோ பாவம் செய்திருப்பார்கள் என்று முடிவு கட்டி விடலாமா?…
View More மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்Category: கேள்வி-பதில்
இந்து மதம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கும், தோன்றும் சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் இந்த பகுதி.
சங்ககாலத்தில் நடுகல் வழிபாடு மட்டும் தான் இருந்ததா?
போரிட்டு மாண்டு வீர சுவர்க்கம் புகுந்த வீரனின் நடுகல்லை உயர்வு நவிற்சியில் ஏற்றி வைத்துப் பாடியது இது. போர் வெற்றியைக் கூறும் வாகைத் திணையின் பேசுபொருளுக்குள் வைத்து இதனைப் பார்க்க வேண்டும். இந்த ஒரு பாட்டை வைத்துக் கொண்டு நடுகல் வழிபாட்டைத் தவிர வேறு எந்த தெய்வ வழிபாட்டையும் தமிழர் ஏற்கவில்லை என்று கருத்துக் கூறுவதெல்லாம் அதீதம், அபத்தம். இதே புறநானூற்றில் மற்ற பல பாடல்களில் சிவன், திருமால், கொற்றவை, இந்திரன், முருகன் ஆகிய தெய்வங்களைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்..
View More சங்ககாலத்தில் நடுகல் வழிபாடு மட்டும் தான் இருந்ததா?வேதத்தைக் குறித்த வியாசம் – பாம்பன் சுவாமிகள்
சம்ஸ்கிருத மொழியில் பெரும்புலமை பெற்ற பாம்பன் சுவாமிகளைக் குறித்து, அவர் ஒரு தனித்தமிழ் ஆதரவாளர், வேதத்தை ஏற்றுக் கொள்ளாத சைவர் என்பது போன்ற பொய்யான பிம்பம் தமிழ்ச் சூழலில் சிலரால் கட்டமைக்கப் பட்டு வருகிறது. 1903ல் வெளிவந்த கேள்வி-பதில் வடிவில் அமைந்த அவரது இந்த நூல், வேதத்தைக் குறித்த அவரது ஆழமான புரிதலுக்கு சான்றாக உள்ளது. உதாரணத்திற்கு சூத்திரர்-பெண்கள் வேதம் ஓதுதல் குறித்த இந்தக் கேள்வி.. இந்த நூலை முழுமையாக pdf வடிவில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்…
View More வேதத்தைக் குறித்த வியாசம் – பாம்பன் சுவாமிகள்ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்
ஸ்மார்த்த என்ற சொல் அதன் நேர்ப்பொருளில் வேதநெறியைக் கடைப்பிடிக்கும் அனைவரையுமே குறிக்கும். ஆயினும் நடைமுறையில், தத்துவரீதியாக ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தத்தை ஏற்று, வைதிக சடங்குகளையும் நெறிகளையும் கடைப்பிடிக்கின்ற, வழிபாட்டு ரீதியாக சிவன், விஷ்ணு முதலான அனைத்து இந்து தெய்வங்களையும் பேதமின்றி வழிபடுபவர்களாக உள்ள பிராமணர்களைக் குறிப்பதாக இச்சொல் புழக்கத்தில் உள்ளது. பொதுவாக ஐயர் என்ற பின்னொட்டுடன் இவர்கள் அழைக்கப் படுகின்றனர்.. ஸ்மார்த்தர்கள் விபூதி அணிவது என்பது தொன்றுதொட்டு வருகின்ற வழக்கம் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.. பாரதம் முழுவதும் உள்ள பிராமணர்களை எடுத்துக் கொண்டால், அதில் ஸ்மார்த்த என்ற வகையினரில் வருவோரே மிகப் பெரும்பான்மையினர்…
View More ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்கேள்விக்கென்ன பதில் – புத்தக அறிமுகம்
பொதுவாக தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றில் எடுக்கப்படும் பேட்டிகளில் இடதுசாரி, திராவிட இயக்கம், காங்கிரஸ், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவற்றைச் சேர்ந்த பிரபலமென்றால் பூப்போல் கேள்விகள் கேட்பார்கள். வலதுசாரி பிரபலங்கள் என்றால் முள்ளால் குத்திக் கிழிப்பார்கள்.
View More கேள்விக்கென்ன பதில் – புத்தக அறிமுகம்பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்
மந்திரங்களில் வசத்தில் தெய்வங்கள். அந்த மந்திரங்கள் பிராமணர் வசத்தில். அத்தகைய பிராமணர் எனது தெய்வங்கள்” – இந்த சுலோகத்தை வைத்து வழக்கம் போல இந்துமத வெறுப்பு பிரசாரங்கள் ஓடுகின்றன. ஆரிய பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக சூழ்ச்சி செய்து எழுதிவிட்டார்கள் இத்யாதி. இதைச் சரியான நோக்கில் புரிந்து கொள்வது முக்கியம்…
View More பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்வேதத்தில் சிவலிங்கம்
“இந்த வேதத்தில – ருத்ரம் இருக்கு, அதுல நமச்சிவாய எல்லாம் இருக்கு, ஆனா சிவலிங்கம் என்று வெளிப்படையாக இருக்கா சார்” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். கேட்டவர் ஒரு “சைவர்” என்பது சொல்லாமலே விளங்கும்… கிருஷ்ண யஜுர்வேதம், தைத்திரியாரண்யகம் கடைசி பாகத்தில் உள்ளது மஹாநாராயண உபநிஷத். இதில் ஶிவோபாஸன மந்த்ரா: என்ற பெயரில் கீழ்க்கண்ட மந்திரங்கள் வருகின்றன. சிவபெருமானின் ஐந்து முகங்களுக்கான மகாமந்திரங்களும்,ருத்ர நமஸ்கார மந்திரங்களும் உள்ளன…
View More வேதத்தில் சிவலிங்கம்ஆதி சைவர்கள் என்ற தமிழக அந்தணர்கள்
ஆதிசைவர் என்ற சொல்லின் பொருளும் அவ்வாறு அழைக்கப்படும் மரபார் குறித்த தெளிவின்மையும் தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருப்பதால் இந்த வினா விடைத் தொகுப்பை எழுதியுள்ளேன்… சைவாகமங்கள் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பொதுயுகம் 5ம் நூற்றாண்டு முதலே கிடைக்கின்றன. இதன்படி, சைவாகம மரபு 1500 ஆண்டுகள் பழமையானது என்று உறுதிபடக் கூறலாம்.. அடிப்படையில் வைதிகர்கள் என்பதால், மற்ற பிராமணர்களைப் போலவே, ஆண்கள் உபநயனம் (பூணுல்) என்ற சடங்கின் மூலம் பிரம்மோபதேசம் பெற்று வேதங்களை ஓதுவதற்கும் வேள்விக் கிரியைகளை செய்வதற்கும் தகுதி பெறுகின்றனர்.. அவ்வாறாயின் கடந்த காலங்களில் ஏன் பிற அந்தணர்கள் கோயில் அர்ச்சகர்களை, குறிப்பாக ஆதிசைவர்களை ஒதுக்கி வைத்தனர்? இலங்கையிலுள்ள அந்தணர்கள் என்பது இவர்கள் தானா?…
View More ஆதி சைவர்கள் என்ற தமிழக அந்தணர்கள்ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8
126 போர்விமானத் தேவைக்காக ராஃபேல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற செய்திவந்த இரண்டே வாரத்திலேயே, அதாவது 2012லேயே, டசோல் நிறுவனம் பாதுகாப்புத்துறையில் பாரதத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒரு உடன்படிக்கை செய்துகொண்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. அப்பொழுது காங்கிரஸ் கூட்டணி [யு.பி.ஏ – ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணி] பாரதத்தை ஆட்சிசெய்தது என்பதை நினைவு கூறவேண்டும்.
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?
இது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை. பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார் என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.. சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது. சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது. இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு ஒளிவீசுகிறது, அப்படியிருக்க சூரியன் எவ்வளவு ஒளிதரும்? என்றால் அது சந்திரனை நிந்திப்பதல்ல..
View More சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?