பெரியபுராணம் ஏன் எழுதப்பட்டது? பேரரசன் ஒருவனின் தலைமை அமைச்சரால் எழுதப்பட்டது பெரியபுராணம். அதை யானையில் ஏற்றி வீதிவலம் வந்தான் அரசன். அமைச்சரை யானையில் அமர வைத்து அவன் கவரி வீசினான். என்றால் இதன் பின்னால் அரசியல் இருக்குமா? இருக்காதா? இந்த கேள்விக்கான விடை இது..
View More பெரியபுராணம் – அரசியல் சூழ்ச்சியும் ஆன்மீக மாட்சியும்Category: இலக்கியம்
திருமகளுக்கென ஓர் அழகிய தமிழ்ப்பாடல்
வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாக, ஶ்ரீ என்ற மந்திரத்தை நேரடியாகக் குறிக்கும் ‘திரு’ என்ற இனிய சொல் தமிழில் உள்ளது. ஆயினும், திருமகளை நேரடியாக விளித்துப் போற்றக் கூடிய துதிப்பாடல்கள் எனக்குத் தெரிந்து எதுவும் பழைய நூல்களில் இல்லை. இந்தக் குறையைத் தீர்ப்பதற்கென்றே சரஸ்வதியின் பெயர் பூண்ட நமது மகாகவி சில பாடல்களை எழுதியிருக்கிறார்.. வறுமையும் உள்ளச்சோர்வும் சோம்பலும் முயற்சியின்மையும் கவிஞரைப் பீடித்திருந்த தருணத்தில் அவற்றை அகற்றி நல்லொளி தரவேண்டும் என்று திருமகளை இறைஞ்சும் இந்தப் பாடல்…
View More திருமகளுக்கென ஓர் அழகிய தமிழ்ப்பாடல்கிறிஸ்தவ “கீர்த்தனைகள்” ஆய்வுக்கு 2026 தமிழ்விக்கி பெ.தூரன் விருது: ஒரு கண்ணோட்டம்
எழுத்தாளர் ஜெயமோகனின் தலைமை மற்றும் வழிகாட்டலில் தரப்படும் தமிழ்விக்கி பெ.தூரன் விருது இந்த வருடம் யோ. ஞான சந்திர ஜாண்சன் என்கிற ஆய்வாளருக்கு அளிக்கப் படுகிறது.. பொதுவான கலை, இலக்கிய, கலாசார செயல்பாடுகளுக்கான தளம் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அமைப்பு ஒன்று இத்தகைய விருதை அறிவிப்பது என்பது கிறிஸ்தவ மதமாற்றச் சூழ்ச்சிகளையும், அதன் பகுதியாக உள்ள கலாசாரத் திருட்டையும் அங்கீகரிப்பதன்றி வேறில்லை. இது பெ.தூரனுக்குச் செய்யப்படும் அவமதிப்பு.. 2021ல் ஒரு மாநாட்டில் இது குறித்து ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரையை நான் சமர்ப்பித்திருக்கிறேன்.. .
View More கிறிஸ்தவ “கீர்த்தனைகள்” ஆய்வுக்கு 2026 தமிழ்விக்கி பெ.தூரன் விருது: ஒரு கண்ணோட்டம்காலவெளி: பாரதியும் வான்கோவும்
பாரதிக்கு நவீன இயற்பியல் தெரியாது. சமன்பாடுகள் தெரியாது. ஆனால் அவன் வரிகள் உயர்கணிதமும் நவீன இயற்பியலும் தொடாத உயரங்களை தொடுகின்றன. அவற்றுள் காளி புன்முறுவல் செய்கிறாள். வெளியை அவன் பிரவாகமாக பார்க்கிறான், சக்தி வெள்ளமாக… வான்கோ தற்கொலை செய்து கொண்டார். பாரதி அலட்சியப்படுத்தப்பட்டார். குறைந்த பட்சம் இன்று வான்கோ கொண்டாடப்படுகிறார் உரியவிதத்தில். பாரதி?…
View More காலவெளி: பாரதியும் வான்கோவும்தமிழகத்தின் சனாதன பாட்டி ஔவையார்
வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சங்ககாலத்திலிருந்து பல ஔவையார்கள் வாழ்ந்ததாக கருதுகிறார்கள். ஆனால் தமிழரின் சனாதன தர்ம மனமானது, கல்வியும் அனுபவமும் இறைஞானமும் கொண்ட ஒற்றைப் பெண்மணியாக ஔவையை உருவகித்தது. ஔவைப் பாட்டி ஒரு ஆன்மிக பண்பாட்டு archetype. அப்படிப்பட்ட பெண்ஞானியை உருவாக்கும் கல்வி முறை இந்த மண்ணில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாட்டி ஏதோ ஒரு கட்டத்தில் அவள் பேரக்குழந்தைகளுக்கு ஔவை பாட்டியின் வடிவமாக வேண்டும்…
View More தமிழகத்தின் சனாதன பாட்டி ஔவையார்வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்
“வேதம் புதுமை செய்” என்று தான் எழுதியதைத் தாமே செய்தும் காட்டியிருக்கிறார் பாரதியார் என்பது ஆசிரியரின் கருத்து. ஶ்ரீ அரவிந்தரின் “யோகரகசிய ஞானமொழி” என்பதை பாரதியார் நன்கு உள்வாங்கித் தனது வீரியமிக்க மொழியில் பலவாறு வெளிப்படுத்துகிறார்.. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற வரிகளே பாரதி உண்மையில் எழுதியவை, அவரது இதயத்தைப் பிரதிபலிப்பவை. இதனை “சாதி பெருமையில்லை பாப்பா” என்று திருத்த முயன்ற திரிபு முயற்சிகளை ஆணித்தரமாக, ஆதாரபூர்வமாக மறுதலிக்கிறார் ஆசிரியர்.. இதுவரை யாரும் தொடாத, வெளிச்சம் பாய்ச்சாத பாரதியின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொண்டு வருகிறது என்பதால் மிகவும் முக்கியமான நூலாகிறது…
View More வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்பு
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவின் ஓர் அங்கமாக பாகவதத்தின் இந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தை விசேஷமாக வாசிப்பது என்பது பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கிறது… நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதுமே கண்ணன் அருளமுதம் தான், ஆயினும் கிருஷ்ண ஜயந்தி என்றால் அது பெரியாழ்வாருக்கு உரிய நாள்…
View More ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்புஎப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?
தலித் பட்டிக்குள் அடைக்கப்பட்ட – இத்தனை பேரின் – வாழ்க்கையும் வேறு; வரலாறும் வேறு – நிலம் பறிபோன பின்னும் – பிரிட்டிஷாரால் பீ அள்ளவைக்கப்பட்டவர்களில் – நீ இருந்ததில்லை.. ஆதித்தாய் அடிவயிற்றில் இருந்து கத்தியபடி – நம் கண் முன்னே கதறி அழுது சுட்டிக்காட்டுகிறாள் – அவள் கதறல் உன் காதில் விழவில்லையா?…
View More எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?திரிசூலம் அஹிம்சையின் அடையாளமாம்…
அடிக்கிறவனின் கர்த்தர் அப்படித்தான் – அடிவாங்குபவனை – அடி வாங்கிக் கொண்டே இருக்கச் சொல்வான் – கொஞ்சமாவது – சுய மரியாதையும் சொரணையும் இருந்தால் – அடிப்பவன் கன்னத்தில் திருப்பி அறைவான்.. நீயும் உன் தென்னகக் கூட்டுக் களவாணிக் கும்பலும் – ராஜபக்சேவுடன் சேர்ந்து காட்டினீர்களே – அதுதானே உன் கட்சியின் அபய ஹஸ்தம்..
View More திரிசூலம் அஹிம்சையின் அடையாளமாம்…உனக்கு அது லவ் எனக்கு அது ஜிஹாத் [கவிதை]
ஓர் ஓநாய் புள்ளி மானைத் துரத்துவதைப்போல் – அன்பே –
உன்னை நான் துரத்துகிறேன் – நீ முழுவதும் எனக்கு மட்டுமே – அதனாலேயே கூர் நகங்கள் கொண்டு – சுதந்தரம் முழுவதுமாகக் கிழித்துப் போடுகிறேன் – உன்னை எனக்குள் முழுவதுமாக –
உள்வாங்கிக் கொண்டபின் –
உன் சகோதரியைப் பின்தொடர ஆரம்பிப்பேன்…
