பெரியபுராணம் – அரசியல் சூழ்ச்சியும் ஆன்மீக மாட்சியும்

பெரியபுராணம் ஏன் எழுதப்பட்டது? பேரரசன் ஒருவனின் தலைமை அமைச்சரால் எழுதப்பட்டது பெரியபுராணம். அதை யானையில் ஏற்றி வீதிவலம் வந்தான் அரசன். அமைச்சரை யானையில் அமர வைத்து அவன் கவரி வீசினான். என்றால் இதன் பின்னால் அரசியல் இருக்குமா? இருக்காதா? இந்த கேள்விக்கான விடை இது..

View More பெரியபுராணம் – அரசியல் சூழ்ச்சியும் ஆன்மீக மாட்சியும்

விநாயகர் அகவல்: அனைவருக்குமான ஆன்மீகம்

பக்தி, யோக சாதனை ஆகிய இரண்டு பாதைகளும் எல்லை கிழித்து பிரித்துவிட முடியாதவை. என்ற போதிலும் திருமந்திரத்தில் யோக-தந்திர சாதனைகளில் உள்ள முக்கியத்துவமும் இதர திருமுறைகளில் பக்திக்கு உள்ள முக்கியத்துவமும் அவை இரண்டு முழுக்க வெவ்வேறான பாதைகள் என்பது போல காட்சி மயக்கமொன்றை ஏற்படுத்துகின்றன. விநாயகர் அகவல் இந்த மயக்கத்தை இல்லாமலாக்குவதுடன் இரண்டையும் ஆற்றலுடனும் அழகுடனும் இனிமையுடனும் இணைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. பின்னர் அருணகிரிநாதர், தாயுமானவர், பாரதி வரை ஏற்பட்ட இணைவு இனிமைக்கு பிள்ளையார் சுழியாகவும் அமைந்துள்ளது…

View More விநாயகர் அகவல்: அனைவருக்குமான ஆன்மீகம்

ஜே.சி.குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம்

மகாத்மா காந்தியை சந்தித்து குமரப்பா அடைந்த மாற்றத்திலிருந்து ஆரம்பித்து – நம் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு பார்வையைக் குறித்த அடிப்படை கேள்விகளுடன் கு.சிவகுமாரின் உரை இதயத்திலிருந்து எழுந்த உரையாக இருந்தது. அந்த கோட்பாடுகளை திருப்பூரின் வரலாற்றுப்பாதையிலிருந்தும், இன்றைய தொழில்-பொருளாதாரச் சூழலிலிருந்தும், தம் சொந்த அனுபவங்களிலிருந்தும் இணைத்து பேசியது சிறப்பு. இந்த உரையின் வீடியோ பதிவு …

View More ஜே.சி.குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம்

வால்மீகி-கம்பர் ஒப்பீடு: பிழைகளும் சரியான வழிமுறையும்

சில வருடங்கள் முன்பு ஒரு கம்பன் கழக மேடையில் ஒரு பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் “வால்மீகியின் இராமன் வழிபாட்டுக்கு உரியவன் அல்லவன், அவன் பச்சையான இராமன், கம்பன் தான் இராமனை பண்புள்ள தெய்வமாக ஆக்கினான்” என்றெல்லாம் படு அபத்தமாக உளறியதைக் கேட்க நேர்ந்தது. தமிழ்நாட்டின் பெரும்பாலான “கம்பன்” பேச்சாளர்கள் இப்படித் தான் பேசுவார்கள் சார் என்றார் நண்பர். எனவே தினமலர் ஆன்மீகம் சேனலில் இராமாயணம் குறித்த எனது தொடர் உரையாடலில் இது பற்றிப் பேசியிருக்கிறேன். இதன் வீடியோக்கள் கீழே..

View More வால்மீகி-கம்பர் ஒப்பீடு: பிழைகளும் சரியான வழிமுறையும்

முருகன் உண்மையில் யார்?

சிறந்த இந்து சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டனின் சமீபத்திய மகத்தான பேருரை. உலகெங்கும் உள்ள தமிழ் இந்துக்கள், குறிப்பாக முருகபக்தர்கள் அனைவரும் பார்த்து, கேட்டு, உள்வாங்க வேண்டிய அத்தனை முக்கியமான விஷயங்களும் இந்த ஒரு மணி நேர வீடியோவில் உள்ளன. “முப்பாட்டன் முருகன்” என்ற ரீதியிலான சமீபத்திய பொய்ப் பிரசாரங்களின் உண்மையான நோக்கத்தையும் சதித்திட்டத்தையும் மிகத் தெளிவாக விளக்குகிறார்…

View More முருகன் உண்மையில் யார்?

சனாதன தர்ம சர்ச்சை: ஒரு முழுமையான பார்வை

சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள் அறிவற்றவர்கள் அல்ல. அவர்கள் எந்த அடிப்படையில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று சொல்கிறார்கள்?சனாதனத்தை காப்போம் என்று சொல்வோரும் எந்த சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவோம் என்று சொல்கிறார்கள்? இந்த இரண்டு தரப்பினருமே சொல்லாமல் விடுகிற விடயங்கள் என்னென்ன? இந்த அனைத்துக் கேள்விகளுக்குமான விடைகளின் தேடல் இந்த வீடியோ..

View More சனாதன தர்ம சர்ச்சை: ஒரு முழுமையான பார்வை

வேதாந்தம் : மூன்று உணர்வு நிலைகள்

நமது அன்றாட அனுபவங்களான விழிப்பு (ஜாக்ரத்), கனவு (ஸ்வப்னம்), ஆழ்ந்த உறக்கம் (ஸுஷுப்தி) ஆகிய மூன்று உணர்வு நிலைகளை (அவஸ்தா-த்ரயம்) குறித்த விசாரத்தின் மூலம் ஆத்ம தத்துவத்தை உணர்தல் என்பது வேதாந்தத்தில் ஒரு முக்கியமான வழிமுறையாகும். அது குறித்த அடிப்படை விளக்கம் இந்த உரை. .

View More வேதாந்தம் : மூன்று உணர்வு நிலைகள்

சக்தி தத்துவம் – ஜடாயு உரை

சக்தி வழிபாடு, தாயன்பு என்னும் அடிப்படை உணர்வு, பூமி, இயற்கை, பிரபஞ்சம், சிவசக்தி இணைவு – ஐக்கியம், பிரம்மம் – மாயை, மஹாமாயை, ஆற்றல்கள், காளி, லலிதா தேவி, சக்தியின் ரூபங்கள் ஆகிய ஆகிய விஷயங்கள் குறித்துப் பேசும் ஆழமான உரை இது. 2026 பிப்ரவரி 6 வெள்ளி மாலை கோயம்புத்தூர் ஶ்ரீ சாரதாம்பாள் கோயில் (ரேஸ் கோர்ஸ் சாலை ) அரங்கில் நிகழ்ந்த உரையின் வீடியோ பதிவு..

View More சக்தி தத்துவம் – ஜடாயு உரை

இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் இருமுறை தலைவர் பதவியில் திறம்பட செயல்பட்டவர் ம.வெ. அத்துடன் சிறந்த சமூக வரலாற்று அறிஞரும் ஆவார். அவருடைய உரை நேரடி அனுபவத்திலிருந்து வருவது. தூய்மைப் பணியாளர்கள் குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நேரடியாக உரையாடியது, கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் செய்த தொண்டு, தமிழ்நாடு உட்பல பல மாநிலங்களில் மாநில அரசு அமைப்புகளின் மெத்தனம், ஒப்பந்தக் காரர்களின் சுரண்டல்கள், அராஜகங்கள், பாலியல் அத்துமீறல்கள், தனது பணிக்காலத்தில் அவர் எடுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகள், பட்டியல் சமுதாயத்தினரே மிக அதிக அளவில் இந்தப் பணிகளுக்கு வரும் நிலைமை தொடர்வது சரியானதா என்று பல முக்கியமான விஷயங்களைத் தொட்டுச்செல்வதாக அவரது உரை அமைந்திருந்தது. உரையின் வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்…

View More இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்

இந்து தர்ம ஆசாரியர், வேத-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி அவர்களின் சமீபத்திய வீடியோ. மகாவிஷ்ணு சர்ச்சை பின்புலத்தில் தமிழ்நாட்டில் ஒலிக்கும் ஏகப்பட்ட கூச்சல்கள், குழப்படிகளுக்கு நடுவில், தர்மம் குறித்த சரியான, ஆதாரபூர்வமான, உண்மையான விளக்கத்தை இந்த வீடியோ அளிக்கிறது… பாவம் செய்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆனால், இதை வைத்து, நாம் பார்க்கக்கூடிய கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம், முன்பு ஏதோ பாவம் செய்திருப்பார்கள் என்று முடிவு கட்டி விடலாமா?…

View More மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்