பிகாரில் திசை திரும்பி கட்டுக்கடங்காமல் ஓடிய கோசி நதி, பல உயிர்களையும் உடைமைகளையும் மூழ்கடித்து அனைவரையும் வருத்தமடையச் செய்த அதே வேளையில் மத வேற்றுமைகளையும் மூழ்கடித்தது சற்று ஆறுதலான விஷயம்.
ஆம். வெள்ள நிவாரண முகாம்களில் மத வேறுபாடு இன்றி எல்லா மதத்தினரும் ஒருவருக்கொருவர் உதவுவது மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பூர்ணியா மாவட்டத்தில் சகர்சாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் காக்கி நிக்கர், வெள்ளை சட்டை அணிந்து தொப்பியுடன் முஸ்லிம்களுக்கு உற்சாகமாக உதவி செய்தனர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.
ரம்ஜான் மாதம் என்பதால் அவர்களுக்கு கஞ்சியும் பருப்பும் வழங்கப்பட்டன.
இந்த முகாம் சேவா பாரதி அமைப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் ஒரு வாரமாக தங்கி உள்ளனர். “எங்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்கின்றனர். நிவாரண முகாமில் இதைவிட வாழ்க்கை சிறப்பாக இருக்க முடியாது” என்று முகமது சலாலுதீன் கூறினார்.
நிவாரண முகாம்கள் சோகமும் மகிழ்ச்சியும் கலந்ததாகக் காணப்படுகிறது. வெள்ளத்தில் தனது குழந்தைகளையும் கணவரையும் இழந்து அவர்களை மீட்டுத் தருமாறு கதறி அழுத சோகத்தையும் பார்க்க முடிந்தது. அதுபோல் வெள்ளம் தனது மனைவி குழந்தைகளை விழுங்கிவிட்டதோ என்று சோகத்தில் நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்தவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த நிவாரண முகாமில் தனது குழந்தைகளும் மனைவியும் பத்திரமாக இருப்பதைக் கண்டு ஆனந்தமுற்றார்.
கர்ப்பிணிகள் நிவாரண முகாம்களிலேயே பிரசவிக்கின்றனர். அவ்வாறு பிறந்த ஒரு குழந்தைக்கு கோசி நதியின் பெயர் சூட்டப்பட்டது. கோசி நதியம்மா எங்களுக்கு கொடுத்த துயரங்கள் போதும். இனியாவது எங்களை வாழ விட வேண்டும் என்று வேண்டி “கோசி” என்று பெயர் சூட்டப்பட்டதாக அவர் கூறினார்.
~ செய்தி: தினமணி
RSS = Ready for Selfless Service !
A great organization which stands for Duty, Discipline and Dignity in the truest sense.
நல்ல செய்தி.
ஆத்தில் அடித்துக்கொண்டு போகிறவர்களுக்கு மதம் ஏது, இனம் ஏது?
அல்லாஹ்வை எதிர்பார்த்து காத்திருந்தால் ஆத்தோடு போக வேண்டியதுதான்.
சேவாபாரதியின் சேவையால் மீண்டுவந்த முஸ்லிம்கள் தேச நல்லிணக்கத்திற்கு நல்ல அறைகூவல் விடட்டும்.
நன்றி
ஜயராமன்
விளம்பரம் இல்லாமல் அமைதியாக சேவகம் புரிபவர்கள் சங்கத்துக் காரர்கள்.
வளரட்டும் அவர்கள் சேவை
பாரத் மாதாகீ ஜே
THIS ACTIVE NOT FOR TODAY WHEN BORN RSS THAT TIME,,,,,,,
Pls Enter Dinamani Papper Date.
Vanakkam,
V.Selvakumaran
THE WEBSITE: https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=7124&SKIN=l
shows a video presentation of the service rendered by Sewa Bharathi, a wing of the RSS, in BIHAR after the kosi floods.
regards,
KRISHNAMURTHY.V.
THE WEBSITE: https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=7124&SKIN=l
shows a video presentation of the service rendered by Sewa Bharathi, a wing of the RSS, in BIHAR after the kosi floods.
regards,