‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்

a wednesdayபொடா சட்டத்தை நீக்கியது, காந்தஹார் விமானக் கடத்தல் தீவீரவாதிகளை விடுவித்தது, அப்சல் குருவை இன்னும் தூக்கில் போடாமல் வைத்திருப்பது, கோவை குண்டு வெடிப்புக்குப் பின்னிருந்த மதானிக்குச் சிறையில் ராஜ உபச்சாரம் அளித்து விடுதலை செய்தது, டெல்லி குண்டு வெடிப்புக் கைதிகளுக்கு அரசாங்கமே செலவு செய்து வழக்காடுவது, ஆஸ்திரேலியாவில் கைதாகும் இஸ்லாமியத் தீவீரவாதிக்காக தன் தூக்கத்தை பிரதமர் இழப்பது போன்றவை இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்குகின்றன. தன் கடமையைச் செய்து குற்றவாளிகளுக்குத் தண்டனையை நிறைவேற்ற மறுக்கும் அரசாங்கத்தின் மீதும் அப்படியாகப் பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் மீதும் நம்பிக்கை இழக்கும் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரும் மன அளவிலாவது அந்தப் பயங்கரவாதிகளை அழிக்கத் துடிக்கிறார்கள். அப்படியாகப் பட்ட ஒரு சராசரி இந்தியனின் மனநிலைதான் ’A Wednesday’ (ஒரு புதன்கிழமை) என்னும் சினிமாவாக எடுக்கப் பட்டுள்ளது. ஆபாசமான, தரந்தாழ்ந்த சினிமாக்களையே உற்பத்தி செய்து வரும் இந்தி சினிமா உலகத்தில் இருந்து அத்தி பூத்தாற்போலச் சில நல்ல படங்கள் உருவாவதுண்டு. அதில் ஒன்றுதான் சராசரி இந்தியனின் மன அழுத்தத்தைச் சித்தரிக்கும் ’ஒரு புதன்கிழமை’.

இந்தியாவில் சினிமா தோன்றிய நாள் முதல் பழிவாங்கும் திரைப்படங்கள் தொடர்ந்து ஒரே விதமாகவே எடுக்கப்பட்டு வருகின்றன. அலுப்பே இல்லாமல் எந்தவிதக் கலாரசனையும் கற்பனை வளமும் சமூகப் பொறுப்பும் இல்லாமல் லட்சக் கணக்கான பழிவாங்கும் திரைப்படங்கள் வந்துவிட்டன. அம்மா அப்பாவைக் கொல்பவர்களைப் பழிவாங்குவது, சகோதரியைக் கற்பழித்தவர்களைப் பழிவாங்குவது என்று அலுக்காமல் இந்தியத் திரைப்படங்கள் பழி வாங்கிக் கொண்டேயிருக்கின்றன.

இந்தப் படமும் ஒரு பழிவாங்கும் படம்தான். ஆனால் அரசாங்கம் தண்டனை அளிக்கத் தவறிய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒரு சாதாரண மனிதன் அதே அரசாங்கத்தின் காவல்துறையை வைத்து அவர்கள் செய்ய மறந்த கடமையைச் செய்ய வைக்கும் படம். வழக்கமான பழிவாங்கும் ஃபார்முலா படங்கள் போல இல்லாமல் இந்தப் படம் ஒரு வித்தியாசமான கோணத்தில் எடுக்கப் பட்டிருக்கிறது.

போலீசும் சட்டமும் தண்டனை கொடுக்கத் தவறும் தீவீர்வாதிகளுக்கு அதே போலீஸ்காரர்களை வைத்தே தண்டனை கொடுக்க வைக்க ஒரு பாமரன் திட்டமிட்டுச் செயல்பட்டு அதில் வெற்றி பெறுவதுதான் கதை. எந்தவித அலங்காரமும், இந்திப் படங்களுக்கே உரிய ஆடம்பரங்களும் இல்லாமல் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கும் ஒரு கதை இது. முள்ளை முள்ளாலேயே எடுக்க முயல்கிறான் பெயரில்லாத அந்தச் சராசரி இந்தியன். மும்பையில் பல இடங்களிலும் குண்டுகள் வைத்திருப்பதாகச் சொல்லி போலீஸ்காரர்களை நிர்பந்தப் படுத்துகிறார் ஒரு முகமில்லாத பெயரில்லாத பாமரன். குண்டு என்ற பெயரைக் கேட்டதுமே சிறுநீர் கழிக்கும் காவல் துறையும் அவர் மிரட்டலுக்குப் பயந்து அவர் கேட்கும் நான்கு முஸ்லீம் தீவீரவாதிகளைக் கடுமையான பாதுகாப்பில் இருந்து வெளியே கொண்டு வருகிறது. அவர்களில் ஒருவர் அவர்களின் விடுதலைக்காக குண்டு வைத்து மிரட்டுகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது திருப்பம் நேர்கிறது. குண்டு வைத்த அதே பயங்கரவாதிகள் அவர்கள் பாணியிலேயே குண்டு வெடித்துச் சாகடிக்கப் படுகிறார்கள்.

Naseeruddin Shahஇந்த சினிமாவை தயாரித்திருப்பவர்கள் முஸ்லீம்கள். படத்தில் கதாநாயகனாக அல்லது முக்கியமான பெயரில்லாத பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கும் நஸ்ருத்தீன் ஷா ஒரு முஸ்லீமே. இவர் ஷபனா ஆஸ்மியுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவில் முஸ்லீம்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஒரு காலத்தில் ஒப்பாரி வைத்தவர்தான்.

இதுபோன்று அமைதி விரும்பும் இஸ்லாமியர்கள் துணிந்து இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கண்டிக்க முன்வர வேண்டும்.

இந்தப் படம் ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் தூண்டும் ஒரு சினிமா. தொடர்ந்து நம்மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களை ஒவ்வொரு இந்தியனும் எந்த விதத்திலாவது எதிர்கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது ’ஒரு புதன்கிழமை’. பொதுவாக நிலவும் அக்கறையற்ற, அலட்சியமான, சுயநல மனப்பாங்கிலிருந்து உசுப்பி எழுப்பும் ஒரு சக்தி வாய்ந்த சினிமா இது. இந்தப் படத்தில் வரும் ஸ்ரீமான் பொதுஜனம் போல அதி புத்திக் கூர்மையுடன் திட்டமிட்டு தீவீர்வாதிகளை ஒவ்வொரு சராசரி இந்தியனும் அழிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இதைப் பார்க்கும் ஒவ்வொரு சராசரி இந்தியனிடத்தும் இது போன்ற தீவீரவாதிகளைத் தங்களால் முடிந்த விதத்தில் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதே இந்தப் படத்தின் வெற்றி.

ஒரு புதன்கிழமை பல உண்மைகளைத் தொட்டுச் செல்கிறது. பயங்கரவாதத்திற்குத் தயாராக இல்லாத காவல்துறை. முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத அதிகாரிகள், முடிவெடுக்கத் தெரியாத முதல்வர்கள், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு இல்லாத உளவுத் துறை, குறைந்தபட்சப் பாதுகாப்புக் கூட அமைத்துக் கொள்ளத் தெரியாத காவல்துறை, பரபரப்புக்காக மட்டுமே அலையும் பொறுப்பற்ற மீடியா என்று இந்த தேசத்தின் அனைத்து பலவீனங்களையும் இந்தப் படம் போகிற போக்கில் காண்பிக்கிறது.

இந்தச் சினிமா வெளிவந்த பின்னால்தான் மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. எப்படித் தீவீர்வாதிகள் எளிதாகப் பாதுகாப்புத் துறையினரின் நடவடிக்கைகளை டி.வி. பேட்டிகள் மூலமாகவும், நேரடி ஒளிபரப்புகள் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம், அவற்றைப் பயன்படுத்தித் தங்கள் தாக்குதல்களை எப்படி வழிநடத்தலாம் என்பது மிகத் தெளிவாகக் காண்பிக்கப் படுகிறது. இதுபோன்ற எச்சரிக்கை சினிமாக்கள் மூலமாகக் கூட நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் மும்பைத் தாக்குதலின் பொழுது நம் மீடியாக்களின் பொறுப்பற்ற நடத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அங்கே உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு குறித்த உணர்வின்றி பர்க்கா தத்களும், சர்தேசாய்களும் நேரடி வர்ணனையோடு வன்முறைக் காட்சிகளை ஒளிபரப்பி, என்ணற்ற வீரர்களின் உயிரிழப்புக்குக் காரணமாயினர். அரசாங்கத்திற்குத் தானாகவும் புரிவதில்லை, இது போன்ற சினிமாக்களின் மூலம் யாரேனும் எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை. மீடியாக் காமெராக்களைச் சம்பவம் நடக்கும் இடத்தில் அனுமதித்தால் போலீசாரின் நடவடிக்கை உடனடியாக எதிரிக்குத் தெரிந்து விடும் என்ற அடிப்படை விஷயம் இந்தச் சினிமாவில் தெளிவாகக் காண்பிக்கப் படுகிறது. அதன் பிறகும் அனுமதித்த குற்றத்தை அரசாங்கம் செய்திருக்கிறது.

anupam kherகாவல்துறையின் உயர் அதிகாரிகளின் கைகள் கட்டப் பட்டிருப்பதைக் கமிஷனராக வரும் அனுபம் கேர் அழகாகச் சித்தரிக்கிறார். மும்பை முழுதும் குண்டு வைத்திருப்பதாக மிரட்டும் நபர் அந்தக் கையாலாகாத கமிஷனருடன் பேசக் கூட விரும்புவதில்லை. போலீஸ் தலைமையகம் மிக மந்த கதியில் செயல்படுவதையும், பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் தயாராக இல்லாததையும் இந்தச் சினிமா சுட்டிக் காண்பிக்கிறது. ஒரு ஆள் கையில் மிகப் பெரிய பயணப் பையுடன், அதுவும் ஜம்மு அண்ட் காஷ்மீர் என்று பெயர் பொறிக்கப்பட்ட கனமான பையுடன், வந்தாலும் கூட அவரது பையைப் பரிசோதிக்கத் தவறும், அடிப்படை பாதுகாப்பு உணர்வில்லாத போலீஸ் தலைமைச் செயலகங்களும், போலீஸ் நிலையங்களும் நுடபமாகக் காண்பிக்கப் படுகிறது. சர்வசாதாரணமாக எவரும் எநத ஒரு போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்குள்ளும் நுழைந்து ஆர்.டி.எக்ஸ். குண்டுகளை வைத்துவிட்டு வந்துவிடலாம் என்ற உண்மையைத் தலையிலடித்த மாதிரி இந்தச் சினிமா எடுத்துச் சொன்ன பிறகும் எதையும் எவரும் கற்றுக் கொள்ளவில்லை.

இந்தச் சினிமா வெளிவந்த பின்பு நடைபெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் இதை உறுதிப் படுத்துகின்றன. கமிஷனர் அனுபம் கேர் ஏதோ கோடை விடுமுறையை கோவாவில் அனுபவிக்கும் உல்லாசி போல நிதானமாக செயல்படுகிறார்.

நமது பாதுகாப்புத் துறைகளில் உரிய தொழில்நுட்பம் இல்லை என்பதையும், காயலாங் கடைக்குப் போக வேண்டிய உபகரணங்களையும், கம்ப்யூட்டர்களையும் பயன்படுத்துவதையும் சொல்றது இந்தச் சினிமா. திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இல்லாமால் வெளியே இருந்து ஒரு சின்னப் பையனை அழைத்து வந்து உதவி கேட்டுக் கெஞ்சுகிறது மும்பை காவல் துறை. அந்தச் சிறுவன் வந்து காவல்துறையின் கம்ப்யூட்டர்களைப் பார்த்துவிட்டு சிரிப்பாய்ச் சிரிக்கிறான், இதை வைத்துக் கொண்டு சவரம் கூடச் செய்ய முடியாது என்கிறான்.

ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்புக் குறையாமல் எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. படத்தின் கதையை முன்பே அறியாதவர்களுக்கு இறுதிக் காட்சிகள் அதிர்ச்சி தரக் கூடிய திருப்பமாக இருக்கிறது. மிகவும் துணிகரமான வசனங்களும், காட்சிகளும் படம் முழுக்க நிரம்பியுள்ளன. படத்தின் சமநிலைக்காக நேர்மையான ஒரு முஸ்லீம் போலீஸ் இன்ஸ்பெக்டரை காண்பித்த போதிலும் கூட அந்தச் சமுதாயத்தின் மீது இந்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையும் அந்தப் பாத்திரம் மூலமாகவே மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் பாண்டே. பயங்கரவாதிகளை அழைத்துச் செல்லும் பொழுது ஒருவேளை அந்த முஸ்லீம் போலீஸ்காரரும் மதநம்பிக்கையின் பாற்பட்டு அவர்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடும், ஆகவே அவன்மீது ஒரு கண் வைத்திரு என்று ஒரு இந்து அதிகாரியிடம் கமிஷனர் சொல்லும் இடம், பொதுவாக இந்திய மக்களிடம் முஸ்லீம் சமுதாயத்தின் மீது படிந்துவிட்ட அவநம்பிக்கையைச் சுட்டிக் காட்டுவதாகத் தெரிகிறது.

கமிஷனரிடம் புகார் கொடுக்க வரும் பிரபல இந்தி நடிகர் ”நான் மைனாரிட்டி வகுப்பைச் சேர்ந்தவன், நீங்கள்தான் எனக்குப் பாதுக்காப்புக் கொடுக்க வேண்டும்” என்று சொல்கிறார். கமிஷனர் அவரைக் குழப்பத்தோடு பார்க்கிறார். இந்திப் படவுலகில் கான்களும் அந்தக் கான் நடிகர்களுக்குப் பின்புலமாக இருக்கும் இஸ்லாமிய மாஃபியாக்களும்தான் பெரும்பான்மையினர் என்றும், தானும், அமிதாப் போன்ற வெகு சிலரும் மட்டுமே இந்து நடிகர்கள் என்றும் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் மிக துணிவாக வெளிப்படையாக அந்த நடிகர் சொல்வது இந்திய சினிமாக்களில் நாம் எதிர்பார்க்க முடியாத ஒரு ஆச்சரியம்.

படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு பெயரில்லாத மதமில்லாத சாமான்யனாக வரும் நஸ்ருத்தீன் ஷா பேசும் வசனங்கள் ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் உலுக்குபவை. ”அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமையில் ஒரு கேள்வி கேட்டார்கள், மீண்டும் திங்களன்றும், செவ்வாய் அன்றும் அதே கேள்வியைக் கேட்டார்கள். நான் ஒரு சராசரி இந்தியன் பொறுத்தது போதும் என்று முடிவு செய்து இன்று ஒரு புதன்கிழமை அன்று அவர்களுக்குப் பதில் சொல்கிறேன்” என்கிறார். பயஙகரவாதிகளை அவர்கள் பயன்படுத்திய அதே பயங்கரவாத டெக்னிக் மூலமாகவே பழி வாங்குகிறார் ஒரு பாமரன். நான்கு பயங்கரவாதிகளில் மூவர் மட்டுமே கொல்லப்பட மீதம் ஒருவர் போலீஸ் வசம் இருப்பதை அறியும் ஷா அந்த பயங்கரவாதியையும் கொல்ல வேண்டும் என்று கேட்க போலீஸ் மறுக்கும் பொழுது தான் வைத்திருக்கும் குண்டுகளை வெடிக்கச் செய்வேன் என்று போலியாக மிரட்டுகிறார். வெடித்தால் நூற்றுக்கணக்கான பேர்கள் இறந்து விடுவார்கள் அப்படிச் செய்து விடாதே என்று கெஞ்சும் கமிஷனரிடம் ஷா சொல்கிறார் “எப்படியும் இவனை நீங்கள் விட்டு விட்டால் அதே நூற்றுக்கணக்கான பேர்கள் நாளைக்குச் சாகத்தான் போகிறார்கள். நாளைக்கு மடியப் போகிறவர்கள் இன்று மடியட்டுமே” என்று மிக விரக்தியாகச் சொல்கிறார். அவரது வாதத்தின் உண்மையை உணர்ந்து மீதமிருக்கும் ஒரு பயங்கரவாதியையும் ஒரு முஸ்லீம் அதிகாரியே சுட்டுக் கொல்கிறார்.

[youtube]https://www.youtube.com/watch?v=x8Qlgel48rU[/youtube]

இதன் திரைக்கதையின் சில அம்சஙகளை நம்பமுடியாதுதான். இருந்தாலும் தன்னை நோக்கிச் சீறிப் பாயும் துப்பாக்கிக் குண்டைக் கையால் பிடித்துத் திருப்பி வீசுவது போன்ற அபத்தமான இந்திப் படங்களையும், புவியீர்ப்பு சக்தி என்ற ஒரு விஷயமே இல்லாது போன விஜயகாந்த் படங்ளையும் பார்த்த நமக்கு இந்த நம்ப முடியாத கதையமைப்பு அப்படி ஒன்றும் பெரிய குறையில்லை. ஒரு பாமரனுக்கு, கோடானு கோடி மனிதர்களில் ஒருவராக ஒரு சாதாரண கிளார்க் போலத் தோற்றமளிக்கும் ஒருவருக்கு, தர்ம ஆவேசம் வருவதை தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த சாதாரணன் ஆர்.டி.எக்ஸ். வாங்குவதையும், அதி நவீன தொழில் நுடபத்தைக் கையாள்வதையும், யாருக்கும் தெரியாமல் குண்டுகளை அமைத்து அவற்றை ரிமோட் மூலமாக வெடிக்க வைப்பதையும் நம்பத்தான் முடிவதில்லை. இந்தச் செயலைச் செய்தது கடமை உணர்வு மிக்க ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்றோ அல்லது தொழில்நுட்ப அறிவுள்ள பொறியாளர் என்றோ காட்டியிருந்திருக்கலாம். பயங்கரவாதிகளைக் காண்பிக்கும் பொழுது அவர்களை பாகிஸ்தானிய பயங்கரவாதிகளாகக் காண்பிக்காமல் இந்திய முஸ்லீம்களாகவே காண்பிக்கிறார்.

ஒரு புதன்கிழமை ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் உசுப்ப வேண்டும். இந்தப் படம் ஒரு வித ஃபான்டஸிதான். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் பொழுதும் ஒரு சாதாரண இந்தியனின் மனதில் எழும் பழிவாங்கும் உணர்வை திரையில் சாத்தியப் படுத்திக் காட்டியிருக்கிறார்கள். அதை மிக யதார்த்தத்துடன், வலுவாக, மசாலா இல்லாமல் சொல்லியிருப்பதில்தான் படத்தின் வெற்றி அடங்கியுள்ளது. அந்தக் காரணத்தினாலேயே படம் பார்ப்பவர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த சினிமாவாக அமைந்து விடுகிறது. ஒரு சாதாரண இந்தியனால் இந்தப் படத்தில் வரும் நஸ்ருத்தீன் ஷா போலச் செயல்பட முடியாது. இருந்தாலும் இஸ்லாமிய பயங்கர்வாதத்திற்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் தன்னிடம் இருக்கும் ஒரே வலுவான ஆயுத்த்தைப் பிரயோகிக்கலாம். அது என்ன?

நஸ்ருத்தீன் ஷாவிடம் இருக்கும் கம்ப்யூட்டரை விட, தொழில்நுட்பங்களை விட, ஆர்.டி.எக்ஸ். குண்டுகளை விடவும் வலுவான ஆயுதம் ஒவ்வொரு இந்தியனிடமும் இருக்கிறது அதுதான் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்ய அவனிடமிருக்கும் ஜனநாயக ஆயுதம். பயங்கரவாதிகளை அழிக்க விரும்பும் இந்தியன் செய்ய வேண்டிய ஒரே காரியம், அந்த பயங்கரவாதிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு தரும் அரசியல்வாதிகளைத் தங்களிடம் இருக்கும் வலிமையான ஆயுதமான வாக்குச் சீட்டு என்ற ஆயுதம் மூலம் அகற்றுவதுதான்.

இந்த முறையும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தவறி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அதே மைனாரிட்டி அடிவருடி அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்தால் ஒவ்வொரு நாளும் மக்கள் உடல் சிதறிச் சாகும் நிலையை அந்த ஆண்டவனால் கூட மாற்ற முடியாது. தானும் தன் உற்றமும் சுற்றமும் உடல் கருகிச் சாவதோ, பாதுகாப்புடனும் அமைதியுடனும் வாழ்வதோ ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கைகளில் மட்டுமே உள்ளது.

ஒரு புதன்கிழமை போன்ற சினிமாக்கள் இந்தியர்களிடம் சிறிய விழிப்புணர்வுக்கு வலிகோலுகின்றன. அப்போதும் விழித்துக் கொள்ள மறுப்பவர்களுக்குப் பெரும் தீமைகள் ஏற்படும்போது உலகில் யாரும் அனுதாபம் காண்பிக்க மாட்டார்கள். நாமே நமக்கு எதிரிகளாகிவிடுவதுதான் மிகப் பெரிய அபாயம்.

ஒரு புதன்கிழமையை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.

ஜெய்ஹிந்த்!

14 Replies to “‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்”

  1. //
    இதன் திரைக்கதையின் சில அம்சஙகளை நம்பமுடியாதுதான். இருந்தாலும் தன்னை நோக்கிச் சீறிப் பாயும் துப்பாக்கிக் குண்டைக் கையால் பிடித்துத் திருப்பி வீசுவது போன்ற அபத்தமான இந்திப் படங்களையும், புவியீர்ப்பு சக்தி என்ற ஒரு விஷயமே இல்லாது போன விஜயகாந்த் படங்ளையும் பார்த்த நமக்கு இந்த நம்ப முடியாத கதையமைப்பு அப்படி ஒன்றும் பெரிய குறையில்லை.
    //

    :‍))))

    நல்ல விமர்சனம் ஐயா. ரசித்தேன்! கமல் இதை தமிழ்ப்’படுத்துவதற்குள்’ இப்படத்தைப் பார்த்துவிட வேண்டும்.

  2. //நஸ்ருத்தீன் ஷாவிடம் இருக்கும் கம்ப்யூட்டரை விட, தொழில்நுட்பங்களை விட, ஆர்.டி.எக்ஸ். குண்டுகளை விடவும் வலுவான ஆயுதம் ஒவ்வொரு இந்தியனிடமும் இருக்கிறது அதுதான் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்ய அவனிடமிருக்கும் ஜனநாயக ஆயுதம். பயங்கரவாதிகளை அழிக்க விரும்பும் இந்தியன் செய்ய வேண்டிய ஒரே காரியம், அந்த பயங்கரவாதிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு தரும் அரசியல்வாதிகளைத் தங்களிடம் இருக்கும் வலிமையான ஆயுதமான வாக்குச் சீட்டு என்ற ஆயுதம் மூலம் அகற்றுவதுதான்.//

    அருமையாகச் சொன்னீர்கள்.

  3. நல்ல விமர்சனம்.
    நானும் இந்த படத்தை சமீபத்தில் பார்த்தேன் , நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றையும் கவனித்தேன். உண்மையில் ஆச்சர்யமான படம் தான்.

  4. நான் ஹிந்து மதத்தை ஆதரிப்பவன். இருப்பினும் இஸ்லாமிய கோட்படுகளை ஒரு இணையதளத்தின் வாயிலாக சுமார் ஆறு ஆண்டுகளுக்ககு முன் பார்க்க நேர்ந்தது. அதன் பின் அந்த தளத்திலுள்ள எல்லா கட்டுரைகளையும் மிக கவனத்துடன் ஆராய்ந்து படித்தேன். பின் நம் ஹிந்துமத கோட்பாடுகளில் உள்ள மேன்மையை நன்கு எனக்கு உணர்த்தியது. அதன்பின் நான் ஒரு தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளனாகவும் இருக்கிறேன். அது ஒரு மதமல்ல. அது ஒரு மதம் என்ற பெயரில் இயக்கும் ஒரு வெறுப்புக்கழகம். ஆம் கழகம் தான். உலகில் சுமார் 20% முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் படிப்பறிவுள்ளவர்களோ ஒரு அல்லது இரு விழுக்காடு, அதிகம் போனால் 5% விழுக்காடு தான். நமது இந்துமதம் இஸ்லாம் இந்தியாவில் படை எடுப்பதற்கு முன் மிகச் சீரும் சிறப்புடன் நாகரீகத்தில் மிக உயர்ந்து பண்பாட்டில் மிகச் சிறந்ததாக விளக்கியது. பிறரைத் துன்புறுத்தி ஹிந்துமதத்தைத் திணிப்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். ஹிந்துமதமே ஒரு வாழ்க்கை நெறி தானே. ஆகவே ஹிந்துக்கள் 638 (AD) யிலிருந்து இன்றுவரை தோற்றுக்கொண்டே இருக்கிறோம். அதற்குத் தீர்வுகாண ஒரே வழி, ஹிந்து மக்களின் வீர எழுச்சிதான். சாம, தான, பேதம் இன்று இவ்வுலகில் சரிப்படாது. கடைசிப் பிரயோகமான தண்டமே தற்போது சாலச் சிறந்தது. மேலும்…. பார்க்கலாம்

  5. சேதுபதி, அன்புக்கரசு, கார்கில்ஜெய், டில்லி, ராஜகோபாலன் அனைவருக்கும் நன்றி

    சேது

    ஆம் இந்தப் படத்தைக் கமால் ஹஸன் தமிழில் எடுக்கப் போவதாக நானும் கேள்விப்பட்டேன். அவர் இந்து மதத்தைப் பழித்து எடுத்த ’அன்பே சிவம்’ எந்த லட்சணத்தில் இருந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம். இந்தப் படத்தை அப்படியே எடுக்கும் துணிச்சல் கமல் ஹாசனுக்குக் கிடையாது.

    அதில் மோகன்லால் வேறு நடிக்கிறாராம். மோகன்லாலுக்கு ஏதோ கெட்ட நேரம் போலிருக்கிறது. கமல் ஹாசன் படத்தில் ஒரே ஒரு நடிகர்தான் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நடிக்க முடியும் அது கமல் ஹாசன் மட்டுமே. இந்திப் படத்தில் எந்தவிதமான மசாலாவும் சினிமாத்தனமும் கிடையாது. மிக நேரடியாக ஆனால் அழுத்தமாக எடுக்கப் பட்டிருக்கும் ஒரு இயல்பான திரைப்படம். ஆனால் கமல் ஹாசன் இந்தப் படத்தைத் தமிழில் எடுக்க முயன்றால் அதில் குறைந்த பட்சம் அவருக்கு ரெண்டு ஹீரோயின்களாவது வேண்டும். ஒருவரைத் தீவீரவாதிகள் கொன்று விட்டதால் இன்னொரு காதலியுடன் பழி வாங்கக் கிளம்பி விடுவார். ரெண்டு கதாநாயகிகளுடன் குறைந்த பட்சம் ரெண்டு டூயட்களாவது அவரது நடனத் திறமையை ஆயிரத்தி ஓராவது தடவையாக நிரூபிக்கக் காட்டியே ஆக வேண்டும்.

    மேலும் இந்திப் படத்தில் வரும் நஸ்ருத்தீன் ஷா ரோலில் மட்டும் அல்லாமல் போலீஸ் கமிஷனராக வரும் அனுபம் கேர் ரோலிலும், இன்னும் சில இன்ஸ்பெக்டர்கள் ரோலிலும், கம்ப்யூட்டர் ஹாக்கராக வரும் சின்னப் பையன் ரோலிலும், டி வி பெண்ணின் ரோலிலும், தீவீர்வாதிகளாகவும், நஸ்ரூத்தின் ஷாவுடன் ஃபோனில் மட்டும் பேசும் திரையில் முகம் காட்டாத அவரது மனைவியாகவும், ஏன் வெடிகுண்டை மோப்பம் பிடிக்கும் நாய்களில் ஒன்றாகவும் கூட அவரே அல்லது அவர் மட்டுமே நடிக்க விரும்புவார்.

    இந்திப் படத்தில் வரும் நஸ்ருத்தீன் ஷாவின் பின்புலம் எதுவும் காட்டப் படுவதில்லை. அவர் பெயரோ குடும்பமோ எதுவுமே யாருக்கும் தெரிவிக்கப் படுவதில்லை. அவர் முகமில்லாத ஒரு மும்பைக்கர் அவ்வளவுதான். ஆனால் கமலஹாசன் அப்படி சும்மா வந்து விட்டுப் போய் விட முடியுமா என்ன? அவருக்கு மனைவி கொல்லப் படுவதைக் காண்பிக்க ஒரு ஃப்ளாஷ் பேக் காதலிக்கு ஒரு காட்சி என்று நிறைய சேர்க்க வேண்டி வரும்.

    அப்புறம் இந்தியில் நஸ்ருத்தீன் ஷா சண்டையெல்லாம் போடுவதில்லை. ஒரு சோர்ந்து போன ஆபீஸ் குமாஸ்தா போல அமைதியாக வந்து விட்டுப் போகிறார். கமலஹாசனுக்கு குறைந்தது ரெண்டு ஃபைட்டாவது வைக்க வேண்டும். தீவீரவாதிகள் தப்பித்துப் போவது போல வைத்து அவர்களை இவர் காரிலும் பின்னர் போட்டிலும் சேஸ் செய்து பிடித்துக் கொல்வது போலக் காட்சி வைத்தால்தான் அது கமல் ஹாசன் படமாக இருக்கும்

    இந்திப் படத்தில் பயங்கரவாதிகளை இந்திய முஸ்லீம்களாகக் காட்டுகிறார்கள். என்ன அநியாயம். மதச்சார்பின்மையைத் தூக்கி நிறுத்தும் ஈ.வெ.ரா.வின் சீடர் அப்படிக் காட்டி விட முடியுமா என்ன? ஆகவே தமிழ் வெர்ஷனில் தீவீரவாதிகள் நிச்சயம் இந்து பயங்கரவாதிகளாகவோ அல்லது பெயர் சொல்லப்படாத தீவீரவாதிகளாகவோதான் இருப்பார்கள். அல்லது சினிமாவில் அவரது முதல் மனைவியைக் கற்பழித்துக் கொன்ற கொடூரர்களாகவும் கூட இருக்கலாம். ஆனால் அந்த பயங்கரவாதிகள் சிவனடியார்களாக இருக்கப் போவது நிச்சயம். வார்த்தைக்கு வார்த்தை தென்னாடுடைய சிவனே போற்றி என்றும் நமச்சிவாயம் என்று சொல்லிக் கொண்டேயிருக்கப் போகிறார்கள். நாலு பாட்டு, நாலு ஃபைட்டு உறுதியாக இருக்கும். நஸ்ருத்தின் ஷா உட்கார்ந்த இடத்தில் இருந்து அலட்டாமல் பேசும் வசனத்தை இவர் ஒரு அறையில் சுத்தி சுத்தி சுத்தி வந்து நம்மை தலை கிறு கிறுக்க வைத்து வேறு பேசுவார். எல்லா கொடுமைகளையும் நாமும் பார்க்கத்தானே போகிறோம். இஸ்லாமிய பயங்கரவாதிகளை தன் படத்தில் காண்பித்து உண்மையைச் சொல்லும் ஆண்மை கமால் ஹஸனுக்கு நிச்சயம் கிடையாது. அந்த விஷயத்தில் நீரஜ் பாண்டேவும், அனுபம் கேரும், நஸ்ருத்தீன் ஷாவும் அபாரத் துணிவுடன் இந்த சினிமாவை எடுத்திருக்கிறார்கள்.

    இப்படி இந்தியில் அபூர்வமாக இந்தியில் வரும் நல்ல படங்களை கமல் ஹாசன், பீ வாசு ஆகியோர் தமிழில் எடுக்கக் கூடாது என்று யாராவது சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்கினால் புண்ணியமாகப் போகும். குசேலன் என்ற பெயரில் ’கத பறயும் போள்’ என்ற ஒரு நல்ல படத்தை எப்படி பீ வாசு சீரழித்தார் என்று நாம் சமீபத்தில் பார்த்தோம். மோகன்லால் கமலஹாசனுடன் நடிப்பதற்குப் தான் கற்றுக் கொண்ட மாஜிக்கைக் கொண்டு மாயமாக மறைந்து போய் விடலாம்.

    மற்றொரு ’அன்பே சிவம்’ உருவாகி வருகிறது. அனைவரும் ஜாக்கிரதை!

    விஸ்வாமித்ரா

  6. விஸ்வாமித்ரா ஐயா,
    உங்கள் கருத்துப் பதிவு கட்டுரையை விட நன்றாக இருக்கிறது.

  7. //நஸ்ருத்தீன் ஷாவிடம் இருக்கும் கம்ப்யூட்டரை விட, தொழில்நுட்பங்களை விட, ஆர்.டி.எக்ஸ். குண்டுகளை விடவும் வலுவான ஆயுதம் ஒவ்வொரு இந்தியனிடமும் இருக்கிறது அதுதான் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்ய அவனிடமிருக்கும் ஜனநாயக ஆயுதம்.//

    ம்ம்ம்ம்ம்ம்?? அடுத்த‌ தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா! நடக்குமா இது????

  8. //பயங்கரவாதிகளை அழைத்துச் செல்லும் பொழுது ஒருவேளை அந்த முஸ்லீம் போலீஸ்காரரும் மதநம்பிக்கையின் பாற்பட்டு அவர்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடும், ஆகவே அவன்மீது ஒரு கண் வைத்திரு என்று ஒரு இந்து அதிகாரியிடம் கமிஷனர் சொல்லும் இடம்,//

    சரியாக பார்க்கவில்லையா நீங்கள்? ராகேஷ் ராதோட் (அனுபம் கேர்) சொல்வது ‍ தீவிரவாதிகளை விட்டவுடன் ஆரிஃப்கானை காயப்படுத்திவிட வேண்டும் என்பதைத்தான். போலிஸின் திட்டப்படி தீவிரவாதிகளை பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் மாற்றும் போது போலிஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர் என்ற செய்தியை பரப்புவதுதான். ஆரிஃப்கானை ஏன் காயப்படுத்த வேண்டும் என்றால், இன்னொருவர் மண்மாகி குழந்தையுடன் இருப்பவர் மற்றும் அவர் ஒரு சீனியர் இன்ஸ்பெக்டர். அவர் சொன்ன மாதிரியே இறுதியில் ஜெய் சிங் ஆரிஃப்கானை கையில் சுட்டுவிடுவார்.

    விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை. இறுதியில் நஸ்ருதீன் ஷா ‘முட்டாள் பொதுஜனமாக’ பேசும் வசனங்கள் சிற்ப்பானவையே. ஆனால் கதையின் அடிப்படை தவறாக இருப்பதாகத்தான் தெரிகிறது. ஆனால் அப்படி சினிமா எடுத்தால்தான் இந்திய ரசிகர்களுக்கு பிடிக்கிறது போல். தமிழில் இரா முருகனின் திரைக்கதை செய்கிறாராம். எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

  9. ஸ்ரீதர்

    விளக்கத்துக்கு மிக்க நன்றி. ஆம் சற்று குழம்பி விட்டேன். திருத்தத்திற்கு நன்றி. இரா முருகன் நல்ல எழுத்தாளர். ஆனால் கமலஹாசன் படத்தில் கமலஹாசன் மட்டுமே இருக்க முடியும் என்பது விதி. மேலும் இந்த சினிமாவின் கதை கமலஹாசனின் போலி மதச்சார்பின்மைக்கு ஒத்து வராது. பயங்கரவாதிகளைப் ஒரு நக்சலைட்டாகவோ அல்லது கொள்ளைக்காரர்களாகவோ காண்பித்து மழுங்கடித்து விடுவார். மேலும் கமலஹாசனின் திறமைகளைக் காட்டுவதற்கு இந்தப் படத்தில் எந்த சந்தர்ப்பமும் இல்லை. பல் வேறு வேஷங்களில் வந்து ஏதாவது புதுமை செய்து நடிப்பதுதான் நடிப்பின் இலக்கணம் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் நல்ல காமெடி படங்களை எடுத்தால் சிரித்து மகிழலாம். இந்தப் படத்தை வைத்து அவருக்குத் தக்கபடி மாற்றி எடுப்பார்.

    நன்றி
    விஸ்வாமித்ரா

  10. விமர்சனதைப் படிக்கின்றபோதே படம் பார்க்கும் ஆவல் வருகிற்து.

    வித்யா‌

  11. விஸ்வா!

    கமலைப் பற்றி அதிகமாகவே புரிந்து வைத்துள்ளீர்கள். [கமலை விட]

  12. அவர் இந்து மதத்தைப் பழித்து எடுத்த ’அன்பே சிவம்’ எந்த லட்சணத்தில் இருந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம்.
    ////

    whats wrong with that flim???/

    oru mathavaathiyaal maddume appadi solla mudiyum

    pakuththarivaaliyai paarthaalee matha veriyarkaLukku payamthaan

  13. நிச்சயமாக முஸ்லிம் சமுதாயம் மீது ஒரு அவநம்பிக்கை இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ளது.அதற்கு முஸ்லிம்கள் பாடுபடவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *