இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரின் விளைவாக, சுமார் 3 லட்சம் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி இருக்கின்றனர். உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதி முதலிய அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் இலங்கைத் தமிழர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு உதவவும், மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபடவும் இலங்கை அரசு சில குறிப்பிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு (NGO) மட்டும் அனுமதியளித்துள்ளது. அவற்றுள் பிரபல இந்து சேவை நிறுவனமான சேவாபாரதியின் இணை அமைப்பான சேவா இன்டர்நேஷனல் அமைப்பும் ஒன்றாகும்.
இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப் பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்குத் கீழ்க்கண்ட உதவிகள் உடனடியாகத் தேவைப் படுகின்றன.
- உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்
- மருத்துவ சேவைகள்
- தற்போது மழைக்காலமாதலால் அதற்குத் தேவையான தார்பாய்கள், கூடாரங்கள், கம்பளிகள், குடைகள்
- போரினால் ஏற்பட்ட மன அதிர்ச்சியிலிருந்து நீங்குவதற்கு மனநல ஆலோசனைகள்
தற்போதைய தேவைகள் விவரம்:
- ஒரு குடும்பத்திற்கான 6 கம்பளிகள் மற்றும் சொசுவலை – ரூ. 1500
- ஒரு குடும்பத்திற்கான கூடாரம் / தார்ப்பாய் / மழைக் கோட்டுகள் – ரூ. 2500
- ஒரு குடும்பத்திற்கான ஒரு மாத மருத்துவச் செலவு – ரூ. 2500
- ஒரு குடும்பத்திற்கான 15 நாள் உணவு – ரூ. 2500
- 2 மருத்துவர்கள் + 4 உதவியாளர்கள் அடங்கிய ஒரு மருத்துவக்குழு இலங்கையில் 3 மாதம் தங்கியிருந்து பணியாற்ற ஒரு நாள் செலவு – ரூ. 30,000 (3 மாதத்திற்கு 27,50,000).
சேவா இண்டர்நேஷனல் மேற்கண்ட பணிகளை உங்களைப் போன்ற கருணை உள்ளங்களின் மூலம் நிறைவேற்ற முனைந்துள்ளது. இந்தத் தொண்டுப் பணியில் நீங்களும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டுகிறோம்.
அனைத்து நன்கொடைகளுக்கும் 80G பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு.
தங்கள் நன்கொடைகளை Srilankan Tamils Medical Relief Fund (Seva Bharathi) என்ற பெயரிலோ அல்லது STMRF (Seva Bharathi) என்ற பெயரிலோ காசோலை (cheque) அல்லது வரைவோலை (Demand Draft) ஆக எடுத்து, தங்கள் பெயர் மற்றும் முழு முகவரியுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சேவாபாரதி தமிழ்நாடு
12, எம்.வி.நாயுடு தெரு
பஞ்சவடி, சேத்துப்பட்டு,
சென்னை – 600 031.
தொலைபேசி : +91 – 44 – 2836 1049 / 2836 0243
வங்கி மூலம் பணம் மாற்றம் செய்ய – ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்கு எண் : 30798737338. தங்கள் பெயர், முகவரி மற்றும் பணமாற்றம் பற்றிய விவரங்களை அஞ்சல் மூலம் மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
நன்றி: விஜயபாரதம் (3.7.2009) இதழ்
நல்ல பணி, வாழ்த்துக்கள். என்னால் இயன்ற உதவித்தொகையை அனுப்பி வைக்கின்றேன்.
இந்த அறிவிப்பினை வெளியிட்டதற்கு நன்றி.
சேவாபாரதி அமைப்புடன் நான் நெடுநாளாகத் தொடர்பில் இருக்கிறேன். தன்னலமற்ற தொண்டு புரியும் நிறுவனம். தமிழகத்தின் சுனாமியின் போது அவர்கள் செய்த பணி தமிழக அரசு உட்பட பலராலும் பாராட்டப் பெற்றது.
நானும் என் நன்கொடையினை அனுப்பிவிட்டேன்.
seva bharathi work is very must to this situation. I will contribute earlear.
நல்ல விஷயம் … இப்போதே இதை குறித்து அறிகிறேன் … வெகு விரைவில் என் சிறு பங்களிப்பை செய்கிறேன் …
மேலும் இது போன்ற நல்ல காரியங்களை தொடருங்கள் .. நன்றிகள …
ஹர ..ஹர.. மகாதேவ் …
இலங்கை ஹிந்துக்கள் என்று குறிப்பிடுங்கள்
இத்தனை காலம் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டது போதும்
இரா.ஸ்ரீதரன்
தோழி சாவித்திரி அத்துவிதானந்தன் அவர்கள் எழுதிய ” போரும் வலியும் ” -என்ற நூலை படித்தேன். இலங்கை தமிழருக்கு சிங்கள ராணுவம் இழைத்த கொடுமை , ஒரு இனப்படுகொலை தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த இனப்படுகொலைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்த மத்திய அரசை இயக்கிய சோனியா அவருக்கு பாதபூஜை செய்து வாழ்ந்த குல்லுக பட்டன் கருணாநிதி ,ஆகியோரை தமிழகத்து தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். அவர்கள் அனுபவித்த துயருக்கு நாம் என்ன உதவிகள் செய்தாலும் , அது ஒரு சிறு தூசு போல தான். ஒரு இனம் முழுவதும் கொத்து குண்டுகளால் அழிக்கப்பட்டுள்ளது. உலக நீதி மன்றத்தில் கொடுங்கோலன் ராஜபட்சேக்கு தண்டனை கொடுக்கப்பட்டு , அவனை தூக்கிலிட வேண்டும்.