தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்

இன்று செப்டம்பர்-5 வ.உ.சி பிறந்த நாள்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை கோவை சிறைச்சாலையில் அவருடைய மனைவி மக்களும் அவருடைய ஆப்தராகிய ஸ்ரீ வள்ளிநாயக சாமியாரும் வேறொரு நண்பரும் பார்வையிடச் சென்றிருந்தார்கள். அவர்கள் மூலமாக வ.உ.சி அவர்கள் தமிழ் சமுதாயத்தின் தேசபக்தர்களுக்கு வெளியிட்ட செய்தி:

தமிழர்களெல்லாரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்து வர வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத்துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும், யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை. ஞானமும் திறமையும் இல்லாத ஜாதியார் விரைவில் நாசமடைவார்கள். அவையிரண்டுமுடையார் நீடுழி வாழ்வர். ஆதலால் பாரதபக்தர் அனைவரும் அவ்விரண்டையும் விரைவில் கைக்கொள்வாராக. தெரியாது என்ற வார்த்தையும் முடியாது என்ற வார்த்தையும் பாரத பக்தர்கள் தவிர ஏனையோரின் பொருட்டாகவே உண்டாகின்றன. இவ்வுண்மை உங்கள் மனதில் எப்போதும் நிற்கட்டும்.

– கர்மயோகி பத்திரிகையில் ஸௌம்ய வருஷம் பங்குனி மாதம் -மார்ச் 1910- வெளிவந்த செய்தி.

vochidambaram-largeதமிழகத்தின் மிகப் பெரிய தேசிய எழுச்சியின் பிள்ளையார் சுழியாக அமைந்தது தூத்துக்குடி தொழிலாளர் வேலை நிறுத்தமும் அதனை தொடர்ந்து தென்தமிழகத்தில் எழுந்த சுதேசி உணர்வும் தான். அதனைத் தொடக்கி வைத்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். தூத்துக்குடியில் விவேக பானு எனும் ஆன்மிக இதழை நடத்தி வந்த அவர் ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியவர்களைக் குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டார். பின்னர் அந்த இதழ் பிரசுர அலுவலகம் மதுரைக்கு இடம் பெயர்ந்த போது அவருக்கு சுவாமி விவேகானந்தரின் குருபாயியும் சசி மகராஜ் என அழைக்கப்படுபவருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தாவுடன் தொடர்பு ஏற்பட்டது. வ உ சிதம்பரம் அவர்கள் 1901 ஆம் ஆண்டு ஐஸ் ஹவுஸ் என அழைக்கப்பட்ட விவேகானந்தர் இல்லத்தில் சசி மகாராஜை சந்தித்தார். சசி மகராஜ் வ.உ.சியிடம் சுதேசி இயக்கத்தில் ஈடுபடச் சொன்னார். வ.உ.சி எல்லாமே மாயைதானே நிலையில்லாதது தானே என கூறினார். சசி மகராஜ் மிக மென்மையாக சுதேசியின் பயன்களை எடுத்துக்கூறி வ.உ.சியை சுதேசி சிந்தனைக்கு ஆற்றுப்படுத்தினார். பின்னர் வ.உ.சி இந்நிகழ்ச்சியை குறித்து “சுதேசியால் பல நல்ல விளைவுகள் ஏற்படும் அதனை பின்பற்றுக” எனும் சுவாமி இராமகிருஷ்ணானந்தரின் வார்த்தைகளே என்னுள் சுதேசி சிந்தனையின் விதைகளை வித்திட்டன” என்று கூறுகிறார்.

– சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள Vivekanandar Illam – Vivekananda House the birthplace of Ramakrishna Movement in South India என்ற நூலில் இருந்து (பக்.109)

“அஞ்சாமை கல்வி அடக்கம் கருணை
எஞ்சாமல் நிரம்பிய் என் வள்ளிநாயகம்
இலகுநம் தேயம் இன்புற வுழைக்குந்
திலகன், அரவிந்தன், கப்பர்டே, மூஞ்சி,
சீனிவாசன், பாரதி செப்பரும் பிறசிலர்
நானிவண் உணர்ச்சியால் நட்ட நண்பினர்”

வ.உ.சி சிறையிலிருந்த போது பரலி.சு.நெல்லையப்பர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமது சுயசரிதை முழுவதையும் அகவற்பாவில் எழுதினார் (காலம் 1912). மேற்காணும் குறிப்பு அதில் காணப்படுகிறது. 1936ல் வ உ சியின் மறைவுக்கு பிறகு நெல்லையப்பரின் “லோகோபகாரி” இதழில் அவர் சுயசரிதை தொடராக வெளிவந்தது. 1946ல் நூலாக பதிப்பித்த போது இப்பாவுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு “மாண்பு நிறைந்த நண்பர்கள்” (ஆ.இரா.வேங்கடசலாபதி, வ. உ.சியும் பாரதியும்). இதில் மூஞ்சி என்பது யார் தெரிகிறதா? மாபெரும் விடுதலை வீரரும், ஹிந்து மகாசபையின் மிக முக்கியமான தலைவருமான டாக்டர் மூஞ்சி (Dr. B. S Moonje) தான் அவர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெக்டேவாரின் வழிகாட்டியாகவும், குருவாகவும் திகழ்ந்தவர்.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் அவருடைய உள்ளத்தில் சுதேசிய உணர்வும், பாரத பக்தியும் துடித்துக்கொண்டிருந்தன. “சிவ நேசன்” எனும் பத்திரிகைக்கு அவர் எழுதிய கடிதம் ஒரு எடுத்துக்காட்டு.

பலவான்குடி “சிவநேசன்” ஆசிரியர் அவர்களுக்கு,

ஐயா,

v_o_chidambaram_stampசிவநேசனாகவோ தமிழ்நேசனாகவோ அவ்விருபொருள் நேசனாகவோ என்னை மதித்து என்னிடமிருந்து யாதொரு கைமாறும் கருதாது, “சிவநேசன்” வாரந்தோறும் என்னைக் காணும்படி நீங்கள் செய்ததற்காக யான் உங்கள் பால் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். சிவநேசன் தமிழ் நடையைப் படிக்குந்தோறும் யான் அடையும் இன்பத்துக்கு அளவேயில்லை. அவ்வின்பமே “சிவநேசனை”ப் பற்றிப் பின்வரும் வரிகளை எழுதும்படித் தூண்டிற்று. எனது நண்பர் சி.சுப்பிரமணிய பாரதியான் இவ்வுலகை நீத்த பின்னர் யான் இனிய தமிழ் நடைக் குறிஞ்சியைக் காணாது கடிய தமிழ்நடைப்பாலையில் அமர்ந்து வருந்திக் கொண்டிருந்தேன். அவ்வருத்தத்தையெல்லாம் உங்கள் “சிவநேசன்” நீக்கிவிட்டது. தமிழ்மொழி நடையின் இனிமையை யாரேனும் காண விரும்புவாராயின் அவர் சிவநேசனைப் படிக்கவேண்டுமெனத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். சிவநேசனில் சிவப்பொருளைக் கண்டிலீரோ என வினவின் அகத்தின் ஆட்டத்தையே எப்போழ்தும் சூழக்கண்டு கொண்டிருக்கும் யான் சிவப்பொருளை எங்ஙனம் காணுதல் கூடும்? சிற்சில சமயங்களில் சிவநேசனில் காணப்படும் பொருள்கள் எனது உள்ளத்தைக் கவர்கின்றன. அவற்றில் ஒன்று ஆவணி மீ கஉ-உ வெளிவந்த “சிவநேசன்” அ-ம் பக்கத்திலுள்ள ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் வாக்கு. என் போன்ற சீர்திருத்தக்காரருக்கு அஃது ஒப்புயர்வற்ற ஓர் மருந்தாக விளங்குகின்றது. அதனை இச்சமயம் வெளியிட்டதற்காக யான் பேருவகை யெய்துகின்றேன்.

உண்மையுள்ள,
வ.உ.சிதம்பரம் பிள்ளை
கோவில்பட்டி
29-8-’28

வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ,
வருந்தலையென் கேண்மைக் கோவே
தாளாண்மை சிறிது கொலோ யாம்புரிவேம்?
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி

1944 இல் சக்தி காரியாலயம் வெளியிட்ட பரலி சு நெல்லையப்பர் எழுதிய வ.உ.சி.வரலாற்றின் பிற்பகுதியில் “வீர சிதம்பரம் – புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமவாசி சுவாமி சுத்தானந்த பாரதியார் 20-12-1939 இல் எழுதியது” என்ற குறிப்புடன் வெளியான கட்டுரையில், ”கோவை சிறையில் வ.உ.சியை காணச்சென்ற நெல்லையப்பரிடம் சுப்பிரமணிய பாரதி மூன்று அழகிய பாடல்களை எழுதி அனுப்பினார்; அதில் இதுவே கிடைத்தது” என்ற குறிப்புடன் சுத்தானந்த பாரதியார் இப்பாடலை வெளியிட்டுள்ளார். ஆனால் பாரதி பாடல்களில் அவர் வாழ்ந்த காலத்தில் இது வெளிவரவில்லை. தற்போது வெளிவரும் எல்லாத் தொகுப்புகளிலும் உள்ளது.

12 Replies to “தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்”

  1. செக்கிழுத்த செம்மல் என்கிற ஒரு வரிக்குள் அடக்கிவிடும் நம் கல்விமுறையில் தவறவிட்டுவிட்ட ஒரு தேச பக்தரைப் பற்றி, செக்கிழுத்த செம்மல் என்கிற டேக் இல்லாமல் படித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

  2. Pingback: pligg.com
  3. வ.உ.சி.

    இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பிறந்த நாள் (1872). பொதுவாக வ.உ.சி. என்றால் அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதேசிக் கப்பல் ஓட்டினார் என்பது மட்டுமே தெரியப்பட்ட ஒரு பக்கமாகும். அந்த வகையில் பார்த்தாலும் இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டதில் அவருக்கு நிகராகத் தியாகம் செய்த செம்மல் ஒருவரை பார்ப்பனர் சமூகத்தின் எந்த மூலையில் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்.

    ஆனாலும், அவர் தமிழராகப் பிறந்த ஒரு குற்றத்துக்காக அவரின் உயர் பெரும் தியாகம் இருட்டடிக்கப்பட்டது. அவரின் வாழ்வும், வாரிசுகளும் வறுமைச் சிறையில் சிக்கினர்.
    அவரது இன்னொரு பக்கம் என்பது பார்ப்பனர் அல்லாதார் உணர்வின் வயப்பட்டது. தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வயப்பட்டது.

    இதோ வ.உ.சி. பேசுகிறார்:

    நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர்கள் அந்தஸ்து உயர்ந்துள்ளது. நீதிக்கட்சிதான் தமிழ் மக்களிடத்துப் பிறப்பும், தமிழர்களின் வாழ்வில் ஒரு உருப்படியான சேவையும் செய்துள்ளது.
    உதாரணமாக நான் முன்பெல்லாம் இந்து பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றபோது திரு. கஸ்தூரி ரெங்க அய்யங்கார், வாடா சிதம்பரம் என்று அழைத்துப் பேசுவார். ஆனால், நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒரு நாள் நான் போனேன், வாங்கோ சிதம்பரம் பிள்ளை; சவுக்கியமா? என்று அழைத்தார் என்று குறிப்பிடுகிறார்.

    மிக மேன்மையான கல்வியும், அந்தஸ்தும் பெற்றிருந்த வ.உ.சி.க்கே இந்த நிலை என்றால், பார்ப்பனர்களின் ஜாதி ஆணவத்தின் திமிர் எத்தனை டிகிரியில் இருந்திருக்கும் என்பதை எளிதில் அறியலாம்.

    3.5.1936 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சர்வக்கட்சிப் பார்ப்பனர் அல்லாதார் கமிட்டிக் கூட்டத்திற்கு வ.உ.சி. அனுப்பிய ஒரு செய்தியில் வ.உ.சி. என்னும் பத்தரை மாற்றுத் தங்கத்தின் தகதக ஒளியை உணரலாம்!

    நமது சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட மட்டில், அதிலும் முக்கியமாகத் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மட்டில் பெருந்தொகையினர்களாகிய பார்ப்பனரல்லாதார்கள் பல துறைகளி-லும் சிறு தொகையினராகிய பார்ப்பனருடைய ஆதிக்கத்திற்குட்பட்டுப் பின்னிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நடுவு நிலைமையுடையார் யாரும் மறுக்க முடியாத உண்மை. அதைப்பற்றி நான் பெரிதும் கவலையடைகிறேன். பார்ப்பனருடைய ஆதிக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு, பார்ப்பனரல்லாதார்கள் முன்னிலைக்குச் செல்லத் தொடங்கும் நன்னாளின் வரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன் என்று வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

    இந்த வ.உ.சி.யை இந்த வகையில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

    —————- மயிலாடன் அவர்கள் 5-9-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

  4. தோழர் வி.ஓ சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்தி விட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகிவிட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையேயாகும்.

    மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மத சம்பந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்பந்தமானது என்றும் எப்படி எனில் கூனோ, குருடோ, அயோக்கியனோ, கொள்ளைக்காரனோ ஒருவன் புருஷனாய் அமைந்து விட்டால் பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும் பின்தூங்கி முன்னெழுபவள் போலவும் இருப்பதுதான் பெண்ணின் கற்புக்கு குறியென்றும் அக்கூட்டு தெய்வீக சம்மந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வது போல் அரசன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும், ஆட்சி எப்படிப் பட்டதாய் இருந்தாலும், அரசனை விஷ்ணுவாய் கருதி ஆட்சியை வேதக் கோட்பாடாகவும் கருதி வாழ வேண்டும் என்று இந்த பார்ப்பனீய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில், தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து அரசியலை இகழ்ந்து துச்சமாய் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களின் முதன்மை வரியில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். அதன் பலன் எப்படியோ, ஆனாலும் அவராலேயே அநேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும் சுய நலமற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது.
    தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப் பாரேயானால் லோக மானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டம், சிதம்பரம் உருவச் சிலை, சிதம்பரநாதர் கோயில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர்கள் வீடுகளில் சிதம்பரம் கழுத்து சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும்படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை. அதுவும் சைவப் பிள்ளை ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.

    சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பனரல்லாதாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.

    அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும் இப்போது ஒரு விதமாகவும் இருக்கிற படியால் ஓர் அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப் பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில் பார்ப்பனரல்லாத தேச பக்தர்களை பார்ப்பனர் ஓர் அளவுக்காவது வேஷத்துக்காகவாவது அணைத்துத் தீரவேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டியதில்லை.
    ஆகையால் சிதம்பரம் பிள்ளையை ஓர் உதாரணமாகக் கொண்டு மற்ற தேசபக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக.

    ————————- (22-.11.-1936 குடிஅரசு)

    ஹிந்து, மெயில், மித்திரன், ஜெயபாரதி, தினமணி இடம் கொள்ளுமா? பிறப்புக்கும் பேருக்கும் அடிமையான பித்தலாட்ட தேசம் இதுதானே?

    ஏ -பி வகுப்பு சிறையில்லாத முப்பதாண்டு கட்கு முன்பு சிறை புகுந்து, வக்கீல் தொழிலிழந்து, தியாகம் பல புரிந்து, கஷ்டநஷ்டங்கள் அடைந்து, கடைசி வரையில் ஏழையாகவே வாழ்ந்து சென்ற 18ஆம் தேதியன்று, 65ஆவது வயதில் உயிர் துறந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை பிரம்மா தலையிலிருந்து வெடித்தெழுந்த வ.உ.சிதம்பர அய்யராயிருந்தால், ஹிந்து, சுதேசமித்திரன், ஜெயபாரதி, தினமணி முதலிய பழுப்பு வெள்ளை பத்திரிகைகளிலும், மெயில் போன்ற வெளுப்பு பார்ப்பன பத்திரிகைகளிலும் வேறு விஷயங்களுக்கு இடமிருக்குமா? இது வரையில் இந்நாட்டில் இறந்த வடநாட்டு படேல்களாயிருந்தாலும் சரி – தென்னாட்டுப் படேல்களாயிருந்தாலும் சரி – சிதம்பரம் பிள்ளை தியாகத்துக்கு ஒப்பாகுமா? ஜெயிலிருக்கும் திக்கே தெரியாத கஸ்தூரி தங்கய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார் முதலியோரின் சேவையும் தியாகமும் பிள்ளை அவர்களின் தியாகம் முன்பு உறை போடவும் கூடுமா? ரவுலட் சட்டத்தில் கையொப்பமிட்ட சர். சி.வி.குமாரசாமி சாஸ்திரிக்கும், பார்ப்பனரல்லா தாரிடமே பத்து லட்சக் கணக்கில் கொள்ளையடித்து எல்லா சொத்தையும் பார்ப்பனருக்கே உதவ வேண்டுமென்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போன டாக்டர் ரங்காச்சாரிக்கும் கொடுத்த இடத்தில் 100இல் ஒரு பங்குகூட, தேசபக்த சிங்கம் சிதம்பர தங்கத்துக்கு, ஹிந்து முதலிய தேசிய பத்திரிகைகள் கொடுக்கவில்லையென்றால் இந்த வகுப்புவாதமே உருவெடுத்த சண்டாள பத்திரிகைகள் தேசியம் பேசி, பாமர மக்கள் தலையில் எத்தனை காலம் மிளகாய் அரைக்க உத்தேசித்திருக்கின்றனவோ தெரியவில்லையே?

    போதாக்குறைக்கு சிதம்பரம் பிள்ளை காங்கிரஸ் என்று சொல்லியே உயிர் துறந்தாராம்! சி. ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனத் தலைவர்களின் சூழ்ச்சியை கண்டித்தும், காங்கிரசை விட தேசமே பெரிதென்று கர்ஜித்த சிங்கமா, அக்ரஹாரப் புலிகள் அதிகாரம் செலுத்தும் காங்கிரசைப் பற்றி மகா கவலை கொண்டு இறந்திருப்பார்? ஒரு வேளை காங்கிரசின் பேரால் பாமர மக்கள் தலை மேல் கல் விழப் போகிறதே என்று வேண்டுமானால் கவலைப் பட்டிருக்கலாம். தாலி அறுப்பு ஜவஹர் கூட்டத்தில் யானையை விட்டது. ருக்மணி லட்சுமிபதியை சுந்தரராவ் குத்தப் போனது – போன்ற தேர்தல் அபாண்டங்களோடுதான், சிதம்பரம் காங்கிரஸ் காங்கிரஸ் என்று உயிர்விட்டார் என்ற அபாண்டத்தையும் சேர்க்க வேண்டும்.

    சிதம்பரம் பிள்ளை விஷயத்தில் மவுனம் சாதிக்கும் ஜாதிப் பித்து பிடித்த பார்ப்பன பத்திரிகைகளின் போக்கைக் கண்ட பின்னாவது, பார்ப்பனரல்லாதாருக்கு ஆத்திரம் பொங்குமா?

    —————-(29.-11.1936, குடிஅரசு).

    ————— “வ.உ.சி.யும் பெரியாரும்” என்ற நூலிலிருந்து…….

  5. இன்னோர் இடம் !

    அங்கே ஓர்
    தனவந்தர் ….
    குணவந்தரும் கூட !

    அவருக்குச் சொந்தமாய்
    உண்டு
    அலை ஏறும் கப்பல்கள்
    ரெண்டு !

    அவரால் அன்னியர்க்கு
    மிக நட்டம் !
    அதனால் போட்டார்கள்
    ஒரு திட்டம் !

    சேர்ந்து வியாபாரம் செய்ய
    பேரம் பேசினர் !
    அவரோ
    தேய்ந்து போயினும்
    தீவழி மறுத்தனர் !

    அந்நியருடன்
    வாணிபமும் செய்வதற்கில்லை
    அற வழியிலிருந்து
    அணு அளவும் நகர்வதுமில்லை என
    சூளுரைத்தார் சொக்கத்தங்கம் !

    கூடியது உதவாக்கரை
    கோர்ட்டு !
    இந்த தமிழனுக்கு
    என்ன நெஞ்சழுத்தம் !
    நமக்குப் போட்டியாக
    இவன் கப்பல் விடுவதா ?

    “அடையுங்கள் சிறையில் ! – அவன்
    மனம் திருந்தும் வரையில் ! ”
    என்று கர்ஜிக்கிறான்
    பரங்கி அநீதிபதி!

    நம் தமிழரோ துவளவில்லை!
    தீர்ப்பு கேட்டு அழுகவில்லை !
    சிரித்துக் கொண்டே
    சென்றார் சிறைக்கு – சின்னஞ்
    சிறிய அறைக்கு !

    கோடானு கோடி சொத்துக்களின்
    கோமான் –
    சீமையிலே கப்பல் விட்ட
    சீமான் –
    சிறையிலே கிடந்தார் ! – இருட்டு
    அறையிலே இருந்தார்!

    அத்துடன் நின்றதா
    ஆணவக்காரர்களின் கொட்டம்?
    இல்லை ! – இல்லவே இல்லை !
    மாடு இழுக்கும்
    செக்கைப் பார்த்தார்கள்!
    இதை
    மனிதன் இழுத்தால் என்ன என்று
    மனதிலே நினைத்தார்கள்!

    கூப்பிடு அவனை என்றார்கள் !
    குனிந்து நிற்கச் சொன்னார்கள் !
    நெஞ்சிலே உரத்துடன்
    நின்றார் நம் தமிழர்!

    மாணிக்கம் போன்ற மேதையை
    மாடு போலப் பூட்டினார்கள்!
    கப்பலோட்டிய கனவானைச்
    செக்கிலேற்றிச் சிரித்தார்கள் !

    ஐயகோ !
    சிங்கம் நிகர் சிதம்பரனார்
    செக்கினை இழுத்தார்!
    அந்தக் காட்சி –
    செக்குக்கே பொறுக்காமல்
    கண்ணீரை விட்டது – எண்ணெயாக !
    ஆம்!
    கண்ணீரை விட்டது – எண்ணெயாக !

    ஐயனே…

    நீர் விட்ட மூச்சால்
    எமக்கு பேச்சுரிமை கிடைத்தது….
    உன் கரங்கள் காப்புக்
    காய்ந்ததால்
    எம் கரங்கள் எழுதிட உரிமை கிடைத்தது…

    வருங்காலம் வாழ்ந்திட
    தம் காலத்தையே
    அர்ப்பணித்த நும் வாழ்க்கை
    ஞாலத்தின் மாணப் பெரிதே!!!!!!!!

    https://www.padikkathavan.blogspot.com/

  6. Tamil Oviza, Ok, Ok we admitt, it is all Parpans fault for all the disasters in India, specifically in TN. Now, that makes you better i hope.I am just wondering how long you losers are going carry on like this, blaming poor Brahmins for everything under the sun.
    Now, let us go back to EVR. Why did he marry a young woman old enough to be his grand daughter? How come your leader Annadurai and other DK leaders of his time slammed that marriage?
    Would like your young daughter to marry an old man like EVR? Just curious.

  7. Sri VOC was forsaken by the ungrateful Congress Party. Likewise many Brahmin freedom fighters were also neglected (for instance, Sri Suramnaya Siva; basically, they were all Congressmen prior to Gandhian era and followers of Tilak. That was one of the reasons for such neglect). VOC had to open a grocery shop in Perambur, Chennai in his last days and was not successful in that also. He was drawn towards EVR during his last days and even requested EVR to recommend his son for the post of police constable! In certain cases it happens likewise. EVR himself could become Tamil Nadu Congress president and Brahmins did not oppose it. Sri Kamaraj could come up in his political career with the encouragement of Sri Sataymoorthi, a Brahmin. In tamilnadu Congress, when non brahmins were sidelined, many Brahmins stood in support of them. It is in bad taste to make it look as discrimintion on the basis of caste.

    MALARMANNAN

  8. பார்ப்பன பத்திரிகைகள் சாதியத்தின் காரணமாக வ.உ.சியின் மரண செய்தியை போடவில்லை என்பதெல்லாம் சுத்த பொய். நவம்பர் 20 1936 தேதியிட்ட ஹிந்து பத்திரிகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கையை பிரசுரித்தது. இதுவே அந்த காலத்தில் மிகவும் துணிகரமான செயலாகும். கருத்து கணிப்பு வெளியிட்டதற்காக தவறேதும் அறியாத இளைஞர்களைக்
    கொல்லும் குடும்ப அரசியலை ஈவெரா என்ற தேசதுரோகியும் மானுட குல விரோதியும் போட்ட விஷ வித்துகள் வளர்த்து விட்ட திராவிட அரசியல் சூழ்நிலை போலவே மோசமான அடக்கு முறை சூழ்நிலை நிலவிய அந்த காலத்தில் தி ஹிந்து இதை வெளியிட்டது:

    The death of Mr.V.O.Chindambaram Pillai is indeed an irreparable loss
    to the country. One is really struck by the report that even in his
    deathbed, the great patriot longed to hear the songs of Bharathi and
    was expressing his firm belief that India would get Swaraj early. The
    great sacrifices of the departed patriot and his valuable services to
    the country cannot be forgotten by the people of Tamil Nadu. We
    earnestly appeal to the public to liberally contribute to the
    Chidambaram Pollai Purse Fund, which should give the needed help to
    his children in this, the hour of their distress.

    அது மட்டுமல்ல பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற மனதுவேஷமும்
    வக்கிரமும் வெள்ளையர்களாலும் ஒரு சில மனநிலை பிறழ்ந்த பார்ப்பனர்-
    பார்ப்பனரல்லாதாராலும் இம்மாநிலத்தில் வளர்க்கப்பட்டது. அந்த மனநோயின்
    உச்சகட்டமே ஈவெரா. ஈவெரா பெண்கள் முன்னேற்றத்துக்கோ அல்லது
    தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றத்துக்கோ எந்த செயல்முறை பங்கையும்
    நடத்தியவரல்லர். நம் சமுதாயத்தில் நிலவிய அவலங்களைப் பயன்படுத்தி ஆபாச வெறுப்பியலை பிரச்சாரம் செய்தவரே அல்லாமல் வேறல்ல. அய்யா வைகுண்டர், முத்துலட்சுமி ரெட்டி , நாராயணகுரு, அய்யன் காளி, போன்ற களத்தில் இறங்கி அடியும் உதையும் உண்டு களப்பணி செய்து அடக்கப்பட்டோ ருக்கு வாழ்வளித்த பெருமக்கள் இந்த மண்ணின் ஆன்மிக பாரம்பரியத்தால் மனஎழுச்சி பெற்றவரே ஆவார். இன்றைக்கு ஈவெராவின் கருத்தியல் புதல்வர்கள் ஏதோ பார்ப்பனர் பார்ப்பனரல்லாதாரின் தியாக வாழ்க்கையை மறத்தடித்ததாக பிதற்றுகின்றார்களே இவர்களுக்கு வரலாறு தெரியாது வெறுப்பியல்தான் தெரியும். சிதம்பரம் பிள்ளையின் தியாக வாழ்க்கையை முதன் முதலில் “ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சரிதம்” என வெளிவந்தது. எழுதியவர் பெயர்: எம் கிருஷ்ணசாமி அய்யர்.

    சுப்பிரமணிய சிவாவின் கதை என்ன? அவர் பார்ப்பனர்தானே….வ உ சி அளவுக்கே அவரும் தியாகம் செய்தாரல்லவா? கடைசி காலம் வரை சி.ஐ.டி தொந்தரவும் பெருநோயும் துன்பப்படுத்த தேசத்துக்காகவே உழைத்தாரல்லவா? அவரை இந்த சமுதாயம் முழுக்க முழுக்க மறந்துவிட்டதே…ஈவெராவின் மடக்கணக்கை அவரது ஆபாச உளறலை சுப்பிரமணிய சிவாவின் தியாகத்தை மறந்தமைக்கும் பொருத்திப் பார்த்தால் என்னவாகும்? பிராம்மணரல்லாதவரைப் போல நன்றி கெட்டவர்கள் கிடையாது என்று சொல்லலாமல்லவா?

  9. வெறுப்பு ஒன்றை தவிர வேறு எதையும் அறியாத அறிவிலிகள் இந்த ராமசாமி நாயகரின் அடிவருடிகள்! வெறுப்பிலே குளிர் காய்ந்துகொண்டு ஆக்க பூர்வமாக எதையும் செய்யாது புழுதி வாரி தூற்றிக்கொண்டிருந்த ஒரு சராசரி மனிதனை பெரியார் என்றும் சிந்தனை சிற்பி சமுதாய சீர்திருத்தவாதி என்றும் அடி மொழிகளால் அர்ச்சனை செய்து கொண்டு அப்படியே காலம் தள்ளி விட்டார்கள், காசும் பார்த்து விட்டார்கள்! தமிழ் நாட்டில்தான் இது நடக்கும்

  10. பெரியார் விடுதலைப் போராட்ட வீரருக்காக முதலைக் கண்ணீர் விடுவது வேடிக்கை
    வெள்ளைக்காரனுக்கு சாமரம் வீசியது அவரது நீதிக் கட்சி
    அவருக்கு விடுதலைப் போர் த்யாகிகளைப் பற்றிப் பேச என்ன தகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *