தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்

யார் ஹிந்து?

guru_gobind_singh1மகா புருஷனான குரு கோவிந்த சிங்கனைப் போல ஹிந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும் பொழுதுதான் –அப்போது மட்டுமே- நீங்கள் ஹிந்து ஆவீர்கள். ஹிந்துக்களின் பாதுகாப்புக்காகத் தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்களத்தில் கொல்லப்படுவதைப் பார்த்த பிறகும் – ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணந்தான் என்னே! யாருக்காகத் தமது உதிரத்தையும் தமது நெருங்கிய மக்களின் இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட அந்தப் படுகாயமுற்ற சிங்கம் – களத்திலிருந்து ஓய்ந்து வெளியே வந்தது, தெற்கே வந்து மடிய! நன்றி கெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித்தவறியும் வெளியிடவில்லை.

உங்களது நாட்டுக்கு நீங்கள் நன்மை செய்ய நினைத்தால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்கனாக ஆக வேண்டும். உங்களது நாட்டு மக்களிடையே ஆயிரக்கணக்கான குறைபாடுகளை நீங்கள் காணலாம். ஆனால் அவர்களது ஹிந்து தன்மையைக் கவனியுங்கள். உங்களை தாக்கி புண்படுத்த நினைத்தாலும் அவர்களே உங்கள் முதல் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள். அவர்களில் ஒவ்வொருவரும் உங்கள் மீது சாபமழையை பொழிந்தாலும் நீங்கள் அவர்களுக்கு அன்பு அருள் மொழிகளையேத் திருப்பியளிக்க வேண்டும். அவர்கள் உங்களை வெளியே துரத்தினால் அந்த மகா சக்திசாலியான சிங்கத்தைப் போல குரு கோவிந்த சிங்கனைப் போல, வெளியே வந்து அமைதியாக இறக்க வேண்டும். ஹிந்து என்ற பெயர் தாங்க அத்தகைய மனிதனே தகுந்தவன். அத்தகைய இலட்சியத்தையே நாம் எப்பொழுதும் நம் முன் வைத்திருப்போமாக.

நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்து விடுவோம். நாற்றிசையிலும் இந்த அபாரமான அன்புணர்ச்சி அலையைப் பரப்புவோம்.

அன்பு கொண்ட தொண்டுக்கு தகுதிகள் என்ன?

திறக்கவே முடியாத கதவுகளையும் அன்பு திறந்து விடுகிறது. எனது வருங்கால சீர்திருத்தக்காரர்களே! வருங்கால தேசபக்தர்களே! நீங்கள் உண்மையான உணர்ச்சி கொண்டிருக்கிறீர்களா? தேவர்கள் தவ முனிவர்கள் இவர்களின் சந்ததிகளான கோடானுகோடி மக்கள் மிருகங்களினின்றும் அதிக வேற்றுமையில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை உணர்கிறீர்களா? கோடிக்கணக்கான மக்கள் இன்று பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் லட்சக்கணக்கானவர்கள் பல்லாண்டுகளாக பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் உணர்கிறீர்களா? அறியாமை என்னும் இருண்ட மேகம் இந்த நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணருகிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து உங்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து இரத்தக் குழாய்களில் ஓடி இதயத்துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா? ஏறக்குறைய அவ்வுணர்ச்சி உங்களை பைத்தியமாகவே ஆக்கிவிடுகிறதா? இந்தப் பெரிய துன்பம் ஒன்றே உங்கள் மனத்தை முற்றும் கவர்ந்திருக்கிறதா? அழிவு பற்றிய துன்பம் பற்றிய கவலைகளால் பீடிக்கப்பட்டும் உங்கள் பெயர் புகழ் மனைவி மக்கள் உடைமை இவையனைத்தையும் உங்கள் உடலையும் கூட மறந்து விட்டீர்களா?

young_vivekananda_2உங்கள் உள்ளத்தில் பரிவு உணர்ச்சி நிறைந்திருக்கிறதா? அப்படியானால் அது முதற்படி மட்டுமேயாகும்.

அடுத்தபடியாக ஏதாவது பரிகாரமாக நோய் தீர்க்கும் மருந்து ஒன்றைக் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். பழையக் கால கருத்துக்கள் எல்லாம் மூடநம்பிக்கைகளாகவே இருக்கலாம். ஆனால் அந்த மூடநம்பிக்கையின் உள்ளேயும் மேலேயும் தங்கப்பாளங்களும் சத்தியமும் உள்ளன. அந்தத் தங்கத்தின் மீது பாசியோ மாசோ படியாமல் காப்பாற்றி வைக்க நீங்கள் ஏதாவது வழி கண்டு பிடித்திருக்கிறீர்களா? உங்கள் சக்தியையெல்லாம் வெட்டிப் பேச்சில் செலவழிக்காமல் நடைமுறையில் கையாளக் கூடிய உபாயம் கண்டு பிடித்திருக்கிறீர்களா? குறை கூறி கண்டிப்பதற்குப் பதிலாக உதவி செய்வதற்கும் அவர்களது துயர்களுக்குப் பதிலாக ஆறுதலாக இதமான மொழிகளைக் கூறவும் நடைப்பிண வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்கவும் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறீர்களா?

அப்படிச் செய்திருந்தால் அது இரண்டாவது படிதான்.

மற்றொரு விஷயமும் தேவை. உங்கள் தொண்டின் நோக்கம் என்ன? பணத்தாசை பிடித்தோ பெயர் புகழ் ஆசையால் தூண்டப்பட்டோ நீங்கள் வேலை செய்யவில்லை என்பது நிச்சயம்தானா? அதுவும் போதாது. உங்கள் வேலையில் இடையூறுகள் மலை போல திரண்டுவரினும் அவற்றை எதிர்த்துத் தயங்காது செல்ல உங்களுக்கு மனவலிமையிருக்கிறதா? உலகமனைத்தும் சேர்ந்து கொண்டு கையில் வாள் கொண்டு எதிர்த்து நின்றாலும் அந்த நிலையிலும் நீங்கள் சரியென்று நினைக்கும் செயலைச் சிறிதும் பின்வாங்காமல் செய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? உங்கள் மனைவி மக்களே உங்களுக்கு விரோதமாக இருந்தாலும் உங்கள் செல்வத்தையெல்லாம் இழக்க நேரிட்டாலும் உங்களது புகழ் கெடுவதானாலும் எல்லா சொத்து சுகங்களும் பறி போனாலும் அப்பொழுதும் கூட ஏற்றுக் கொண்ட பணியிலே ஊன்றி நிற்பீர்களா? நீங்கள் கருதுகிற இலட்சியம் கைகூடுகிற வரையில் இடைவிடாது தொடர்ந்து முன்னேறிச் செல்வீர்களா? மாமன்னனான பர்த்ருஹரி கூறியது போல

“நிந்தந்து நீதிநிபுணா யதி வா ஸ்துவந்து
லக்ஷ்மீ: ஸமாவிசது கச்சது வா யதேஷ்டம்
அத்யைவ வா மரணமஸ்து யுகாந்தரே வா
நியாய்யாத்பத: ப்ரவிசலந்தி பதம் ந தீரா: (பர்த்ருஹரி நீதி சதகம்)

“நீதிபண்டிதர்கள் நிந்திப்பதானாலும் நிந்திக்கட்டும் அல்லது புகழட்டும். சகல பாக்கியங்களையும் கொடுக்கும் லக்ஷ்மி தேவியானவள் வந்தாலும் வரட்டும் அல்லது தான் விரும்புகிற இடத்துக்கே போகட்டும். மரணமானது இன்றைக்கே வந்தாலும் வரட்டும் நேர்மைப் பாதையிலிருந்து மயிரிழையேனும் யார் பிறழாதிருப்பார்களோ அவர்களே தீரராவர். இந்த உறுதி உங்களிடம் உள்ளதா?

இந்த மூன்று விஷயங்களும் உங்களிடம் இருக்குமாயின் நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதங்களை செய்வீர்கள்.

arjuna_krishna_chariot

இது ஒரு நாள் வேலையல்ல. அத்துடன் பாதையும் பயங்கர விஷமயமான முட்களால் நிறைந்தததாகும். ஆனால் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தவர் நமக்கும் சாரதியாக இருக்க சித்தமாக இருக்கிறார். நமக்கும் அது தெரியும். அவருக்காக அவரிடம் நம்பிக்கை பூண்டு பாரதத்தின் மீது பல சகாப்தங்களாகக் குவிந்து மேடிட்டு மலை போல இருக்கும் துயரங்களைச் சுட்டுப் பொசுக்குங்கள். அவை எரிந்து சாம்பலாகட்டும்.

parthasarathyபார்த்த சாரதியின் கோவிலுக்கு செல்லுங்கள். கோகுலத்து எளிய ஆயர்களின் தோழனான கண்ணனுக்கு முன்னால் சென்று அந்த உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணன் ஏழைகளின் தாழ்த்தப்பட்ட இடையர்களின் நண்பனாக இருந்தான். வேடனான குகனைக் கட்டித்தழுவ தயங்காதவன் அவன். புத்தாவதாரமாக வந்த போது சீமான்களின் அழைப்பை ஏற்காமல் ஒரு வேசியின் அழைப்பை ஏற்று அவளைக் கடைத்தேற்றினான். அந்த பார்த்த சாரதியின் சன்னதியில் சென்று தலை தாழ்த்திக்கொள்ளுங்கள். மகத்தானதொரு தியாகத்தை அங்கே சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். யாருக்காக அவர் யுகங்கள் தோறும் அவதரிக்கிறாரோ அந்த ஏழைகள் அந்த தாழ்த்தப்பட்டவர்கள் அந்த ஒடுக்கப்பட்டவர்கள் இவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணிக்க சபதம் எடுங்கள். அதன்படி நாளுக்கு நாள் தாழ்வுற்று வரும் மக்களை மீட்பதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துவிடுங்கள்.

தலித் விடுதலைக்கு வேண்டிய ஆற்றல்

dalit1-1சக்தி சக்தியைத்தான் உபநிடதங்களின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறுகிறது. நினைவிற் கொள்ள வேண்டிய ஒரு பெரிய விஷயம் இது. எனது வாழ்க்கையில் நான் கற்ற ஒரு பெரிய பாடம் இது. “மனிதனே சக்தியுடனிருப்பாயாக: பலவீனனாக இராதே” என்ற பாடத்தையே நான் கற்றிருக்கிறேன்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எவை எவை நம்மைப் பலவீனப்படுத்துமோ அவற்றுக்கெல்லாம் நாம் இடங்கொடுத்துவிட்டோம் …யார் வேண்டுமானாலும் கேவலமாக நம்மை நினைத்து ஊர்ந்து வரும் நம்மை காலால் மிதிக்கும் அளவுக்குப் பலவீனர்களாகிவிட்டோ ம். ஆனால் சகோதரர்களே உங்களில் ஒருவன் என்ற நிலையில் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்து மடிகிற நான் கூறுகிறேன். நாம் வேண்டுவது சக்தி. சக்தி, ஒவ்வொரு முறையும் சக்தியே வேண்டும். உபநிடதங்கள் சக்திக்கு பெரும் சுரங்கமாகும். உலகமுழுவதற்கும் வீரம் அளிக்கப் போதுமான அளவு சக்தி இதற்கு உண்டு. இதைக் கொண்டு உலகமனைத்தையும் புத்துயிர் செய்ய முடியும். பலம் பெறச்செய்ய முடியும். சக்தித்துடிப்பு பெறச்செய்ய முடியும்.

எல்லா இனத்தவரிடையேயும் எல்லா மதத்தினரிடையேயும் எல்லா பிரிவினரிடையேயும் உள்ள பலவீனப்படுத்தப்பட்ட துன்பத்தால் நலிந்த தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை இது போர் முரசு கொட்டி அழைத்து உங்களையே நம்பி எழுந்து நின்று விடுதலை பெறுங்கள் என்று முழங்கும். விடுதலை – உடலுக்கு விடுதலை, மனதுக்கு விடுதலை – ஆன்மாவுக்கு விடுதலை : இவையே உபநிடதங்களின் மூல மந்திரமாகும்

39 Replies to “தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்”

  1. அனைத்து வார்த்தைகளும் உண்மையே.நீங்கள் தலித் மக்களை மதிக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்கவில்லை ,சக மனிதனாக நடத்தினாலே போதும்.இதுவே நீங்கள் தலித் மக்களுக்கு செய்யும் மிகபெரிய தொண்டு .

  2. விவேகானந்தர் நம் யுகம் கண்ட மாமனிதர். அவரின் தனிப்பட்ட பார்வையில் இந்து கோட்பாடுகள் சமன்வயப்பட்டு கர்ம வேள்விகளாக வாழ்க்கை முறைகளாக மாறின.

    மேலைநாட்டாரின் காமாலைப் பார்வையில் இந்துமதத்தை சித்தரிக்கும் போக்கை மாற்றியவர் அவர். வெறும் சடங்களையும், பெண்களையும், தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கும் வழக்குகளையும் விலக்கி அவர் நிறுத்திய இந்து மதம் ஒரு விதத்தில் அத்வைத வேதாந்த பரமானது. கம்யூனிச வகுப்பு வாத கற்பனையில் ஜோடிக்கப்பட்ட தலித்-இந்து பாகுபாட்டை அவர் முழுவதுமாக நிராகரித்தார்.

    அவர் வாழ்ந்த இந்திய அடிமைத்தளையிலிருந்து விடுதலை ஆக முழுதும் முயன்றுகொண்டிருந்தது. அவர் இந்துஒற்றுமையும், இந்து எழுச்சியையும் இதற்கான ஆயுதமாகக் கண்டார்.

    ஆனால், இன்றைய இந்தியாவில் விவேகானந்தரின் செய்தி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. பல தலைமுறைகளாக நடந்துவரும் இந்த சதி நடப்பது 85% இந்துக்கள் இருக்கும் இந்தியாவில். 50களில் ஹூமாயுன் கபீர் (கலாசார மந்திரி) காலம் தொட்டு ஆரம்பித்த இந்த சதி இப்போதும் தொடர்கிறது. விவேகானந்தரின் கருத்துக்களை பரப்பும் ராமகிருஷ்ணா மிஷனின் புத்தகங்கள் கம்யூனிச வங்காள அரசால் தடை செய்யப்பட்டது ஒரு காலம் – (விவேகானந்தரின் முகம்மதிய எதிர்ப்பு கருத்துக்களை தாங்க முடியாமல்).
    ஆயிரக்கணக்கான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகள் கொண்ட நம் அரசால் – அவற்றில் பெரும்பான்மை இந்திராகாந்தி குடும்ப உறுப்பினர்கள் பெயரையே கொண்டிருக்கின்றன – விவேகானந்தரின் கருத்துகளையும் நினைவையும் பரப்பும் ஒன்றும் முக்கியமாக படவில்லை. இளைஞர்களை “ஓடிப்போ, கால்பந்து விளையாடு” என்று ஆணையிட்டவருக்காக ஒரு விளையாட்டு நிகழ்ச்சி கூட அவர் நினைவாக இல்லை. இன்றோ அவர் பெயர் கொண்ட விவேகானந்த நகர் என்ற பெயரே முப்பது வருடமாக பயன்படுத்த மாட்டோம் என்று அரசாங்கம் மறுத்து CBD (central business district) என்றே குறித்துக்கொண்டிருக்கிறது. பிஜேபி முதலியவர்கள் பெயருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

    விவேகானந்தரின் கருத்துக்களை எடுத்துச்சொல்லும் தமிழ்இந்துவை வரவேற்கிறேன்.

    தலித்துக்கள் மட்டுமல்ல, இன்று மேற்கத்திய படிப்பும் நாகரீகமும் அறிமுகமான மற்ற இந்துக்களே தங்களை இந்துக்களோடு ஒன்றுணர முயல்வதில்லை. இது ஒரு வெட்கக்கேடு.

  3. ஆஹா, எவ்வ‌ள‌வு அற்புத‌மான‌வ‌ர்!

    சுவாமி விவேகான‌ந்த‌ரின் க‌ருத்துக்க‌ளை என்னும் போதே உட‌லிலும் ,ம‌ன‌திலும் வ‌லிமை உண்டாகிற‌து, அதே நேர‌ம் இத‌ய‌த்தில் ந‌ம்மை அறியாம‌லே க‌ருணையும் , அன்பும் உருவாகிற‌து. வ‌லிமை அதிக‌மானால், அக‌ந்தை உண‌ர்வு வ‌ருவ‌து இய‌ற்கை. ஆனால் இவ‌ர‌து க‌ருத்துக்க‌ளோ, ஒரே நேர‌த்திலே வ‌லிமையையும் , க‌ருணையையும் உருவாக்குகின்ற‌ன‌. தெய்வீக‌ம் என்ப‌து இதுதானா?

    சுவாமி விவேகான‌ந்த‌ர் – இவ‌ரை ஒரு க‌ட்டுரையிலே ந‌ம்மால் விவ‌ரிக்க‌ இய‌லாது.

    உல‌கில் உள்ள‌ எல்லா ம‌னித‌ர்க‌ளையும் நேசித்த‌வ‌ர்.

    எல்லா மார்க்க‌ங்க‌ளிலும் உள்ள ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை விள‌க்கி எந்த‌ மார்க்க‌த்தையும் வெறுக்காம‌ல் , எல்லா மார‌க்க‌ங்க‌ளுக்கும் இடையே உள்ள‌ ஒற்றுமைக‌ளை சுட்டிக் காட்டி ஒருங்கிணைப்பு பாதையை அமைத்த‌வ‌ர்.

    த‌ன் வாழ்வில் ஆர‌ம்ப‌ம் முத‌ல் இறுதி வ‌ரை ப‌குத்த‌றிவாள‌ராக‌ இருந்த‌வ‌ர்.

    சிகாகோவில் ந‌ட‌ந்த‌ ச‌ர்வ‌ ம‌த‌ ம‌ஹா ச‌பையில் முர‌ட்டுக் க‌ருத்துக்க‌ளை கைக்கொண்டு முட்டி மோதிய‌ பல‌ரும், இவ‌ருடைய‌ க‌ருத்துக்க‌ளில் இருந்த‌ உண்மையையும், இத‌ய‌த்தில் இருந்த‌ அன்பையும் க‌ண்டு வாய‌டைத்துப் போயின‌ர்.

    இளைங்க‌ர்க‌ள், முதிய‌வ‌ர் , சிறுவ‌ர் என‌ யாரும் பின்ப‌ற்றக் கூடிய‌ க‌ருத்துக்க‌ளை, எல்லா ம‌தத்தின‌ரும் புரிந்து கொண்டு வ‌ர‌வேற்கக் கூடிய‌ க‌ருத்துக்க‌ளை முன் வைத்த‌வ‌ர்.

    த‌ற்கொலை செய்து கொள்ள‌ நினைப்ப‌வ‌ன், இவ‌ருடைய‌ க‌ருத்துக்க‌ளைப் ப‌டித்தால், த‌ன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வாழ‌க்கையில் வெற்றி பெருவான் என‌ நான் தைரிய‌மாக‌ சொல்வேன்.

    அவ‌ருடைய‌ ஒரே ஒரு வ‌ச‌ன‌த்தை ம‌ட்டும் வைத்து இந்த‌ பின்னூட்ட‌த்தை
    நிறைவு செய்கிறேன்.

    ந‌ம்பிக்கை, ந‌ம்பிக்கை, ந‌ம்பிக்கை.உங்க‌ளிட‌த்தில் ந‌ம்பிக்கை, க‌ட‌வுளிட‌த்தில் ந‌ம்பிக்கை. உங்க‌ள‌து முப்ப‌த்து முக்கோடி தேவ‌ர்க‌ளிட‌மும், மற்றும் பிற‌ நாட்டினர் அவ்வ‌ப் போது உங்க‌ளிடையே புகுத்திய‌ தேவ‌ர்க‌ளிட‌மும் ந‌ம்பிக்கை வைத்து, உங்க‌ள் சொந்த‌ முய‌ற்சியில் ந‌ம்பிக்கை வைக்க‌வில்லை என்றால், அத‌னால் ப‌ல‌ன் எதுவும் இல்லை.

  4. ம‌திப்பிற்குரிய‌ திரு.ஜ‌ய‌ராம‌ன் அவ‌ர்க‌ளே,

    உங்க‌ள் ப‌திவு சிற‌ப்பாக‌ உள்ள‌து.

    ஆனால்

    //(விவேகானந்தரின் முகம்மதிய எதிர்ப்பு கருத்துக்களை தாங்க முடியாமல்)//

    என்று நீங்க‌ள் குறிப்பிட்டுள்ள‌து ‍புரிய‌வில்லை. இன்னும் தெளிவாக‌ குறிப்பிட்டு இருந்தால் ந‌ன்றாக‌ இருந்திருக்கும்.

    ஏனெனில் சுவாமி விவேகான‌ந்த‌ர் முக‌ம‌திய‌ர்க‌ளுக்கு (இசுலாமிய‌ருக்கு) எதிரான‌வ‌ர் அல்ல‌. இசுலாமிய‌ ம‌த‌த்தை தோற்றுவித்த‌ முக‌ம‌து ந‌பிக்கும் எதிரான‌வ‌ர் அல்ல‌. சுவாமி விவேகான‌ந்த‌ர், முக‌ம‌து ந‌பியைப் ப‌ற்றிக் கூறிய‌ பாரட்டுத‌ல்க‌ளை, திருச்சியில் ஒரு ம‌சூதியின் சுவ‌ரில் எழுதி வைத்து, – விவேகான‌ந்த‌ர்- என்று எழுதி வைத்து இருந்த‌தை நான் சிறுவ‌னாக‌ இருந்த‌ போது ப‌டித்து இருக்கிறேன். (பிற‌ மார்க்க‌த்த‌வ‌ரை பாராட்டிய‌ ஒரு அறிஞரை மேற்கோள் காட்டி ம‌கிழ்ப‌வ‌ர்க‌ளுக்கு, அவ‌ரை எல்லோரும் அழைக்கும் ப‌டியான‌- சுவாமி விவேகான‌ந்த‌ர் – என்ற‌ பெய‌ரில் எழுதும் ப‌ண்பு இல்லையே என்று கூட‌ நினைத்து இருக்கிரேன்)

    இராமகிருட்டிண‌ ம‌ட‌த்திலே “முக‌ம‌து ந‌பியின் வீர‌ முர‌சு” என்று ந‌பிக‌ள் ப‌ற்றி சுவாமி கூறிய‌தை தொகுத்து, சிறிய‌ கைப் பிர‌தியாக‌ முன்பு வெளியிட்டு வ‌ந்த‌ன‌ர். இஸ்லாத்தை ப‌ற்றியும் ஆக்க‌ பூர்வ‌மான‌ நோக்கிலேயே சுவாமி அணுகி இருந்தார். சுவாமி, ஒட்டு மொத்த‌மாக‌ இஸ்லாத்தை க‌ண்டித்து புற‌ம் த‌ள்ள‌வில்லை. எந்த‌ அள‌வுக்கு அதில் உள்ள ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை பாராட்ட‌ முடியுமோ அந்த‌ அளவுக்கு பாராட்டினார்.

    சுவாமி விவேகான‌ந்த‌ர் எதிர்த்த‌து , க‌ண்டித்த‌து – ப‌ல‌வ‌ந்த‌ப் ப‌டுத்தி இஸ்லாமிய‌ மார்க்க‌த்துக்கு ம‌த‌ மாற்ற‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌தைக் க‌ண்டித்துதான். க‌ட‌வுளின் பெயரால் காட்டு மிராண்டித் த‌ன‌த்தைக் க‌ட்ட‌விழ்த்து விட்டு, மூர்க்க‌மாக‌ ம‌த‌ம் மாற்ற‌ம் செய்த்த‌தை, சுவாமி விவேகான‌ந்த‌ர் வ‌ன்மையாக‌க் க‌ண்டித்து இருக்கிறார்.

    நான் கூறுவ‌து த‌வ‌றாக‌ இருந்தால், நீங்க‌ள் த‌ய‌வு செய்து சுவாமியின் வாச‌க‌ங்க‌ளை மேற்கோள் காட்டி விள‌க்கினால், ம‌கிழ்ச்சி அடைவேன்.

  5. வணக்கம்,
    அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    சுவாமிஜி அவர்கள் என்றுமே எந்த மதத்தினன் பற்றி பேசியவர் அல்ல
    மனிதனைப் பற்றி பேசியவர்.

    அவரின் அற்புதமான வாக்கினை வரிகளாய் சமைத்து தந்த தமிழ் ஹிந்துவிற்கு கோடி நன்றிகள் உரித்தாகுக.

    *****,சக மனிதனாக நடத்தினாலே போதும்.இதுவே நீங்கள் தலித் மக்களுக்கு செய்யும் மிகபெரிய தொண்டு ******

    நண்பர் சதீஷ், இருக்கும் மூன்று தலை முறையில் இப்போதுள்ள இளைய சமுதாயம் சாதியத்தில் உள்ள அரசியலை பெரும்பாலும் கண்டுகொண்டு உள்ளனர், பல இடங்களில் சாதிகள் பெயரில் மட்டுமே உள்ளன, தலித்துகளின் தாழ் நிலை பல இடங்களில் மேம்பட்டு உள்ளது. வரும் காலங்களில் தலித்துகள் என்ற நிலையே இல்லாமல் போகலாம். போகும். இளைய பாரதம் சாதிக்கும்.

  6. Hmm…

    Grur Gobind Sinhg, a Hindu? This will steer agitations in Sikh community. And… remember it was the Marathas, that broke the back of the Mughal Empire… not the Khalsa of Guru Gobind Singh.

  7. // Sri Kishan

    Grur Gobind Sinhg, a Hindu? This will steer agitations in Sikh community //

    Hi, it is those who spread the venom of hatred and separatism will steer such agitations, not true Sikhs.

    Remember this quote was spoken not by some ordinary person but by the great Swami Vivekanada, during a speech in Lahore, the heart of Punjab abt 90 yrs back.

    Sri Guru gobind himself proclaimed that he is declaring “Khalsa panth” for the arising of Hindu Dharma – “jaage dharam hindoo, khalsa path bandh baje”. He also declared,

    ” dharam ved maryadaa jag men chalaavun
    gau ghat kaa dosh jag se mitaavun”

    May I upold the honour of Dharma and Veda in the world
    May I eliminate the evil of cow-slaughter from the world.

    // And… remember it was the Marathas, that broke the back of the Mughal Empire… not the Khalsa of Guru Gobind Singh.//

    Not true. it is the twin attack from both Marathas and Sikhs that uprooted the Mughal empire. This is well attested by the historians. Marathas exapanded their empire a much larger area, but the Sikh valour also played a major role.

  8. // நான் கூறுவ‌து த‌வ‌றாக‌ இருந்தால், நீங்க‌ள் த‌ய‌வு செய்து சுவாமியின் வாச‌க‌ங்க‌ளை மேற்கோள் காட்டி விள‌க்கினால், ம‌கிழ்ச்சி அடைவேன்.//

    “.. உடனே அழித்து ஒழிக்கப் படவேண்டியவை. ஒரு கண நேர முன்னறிவிப்பில் இதை முழுவதும் நம்பாத ஒவ்வோர் ஆணும், பெண்ணும், கொல்லப் படவேண்டும். இந்த வழிபாட்டு முறை இல்லாத மற்ற எல்லாம் உடனடியாக உடைத்து நொறுக்கப் படவேண்டும். இது தவிர வேறு எதையாவது கற்பிக்கும் எல்லா புத்தகங்களும் எரிக்கப் படவேண்டும். பசிபிக்கில் இருந்து அட்லாண்டிக் வரை 500 வருடங்கள் உலகம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது: அது தான் முகமதியம்!”

    அன்புள்ள திருச்சிக்காரன்,

    மேலே உள்ள வரிகள் சுவாமிஜி கூறியவை தான்.. சுவாமிஜி உலகளாவிய மனிதநேயத்தையும், சமய நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியவர் தான். ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் ஆக்கிரமிப்புத் தன்மையையும், வன்முறையையும் கறாரான வரிகளில் அவர் கண்டிக்கத் தயங்கவில்லை.

    இஸ்லாம் பற்றி சுவாமிஜி கூறியுள்ள அனைத்துக் கருத்துக்களையும் தொகுத்து அளிக்கும் எனது பழைய பதிவு – https://jataayu.blogspot.com/2007/03/blog-post_23.html

    கம்யூனிஸ்டுகளில் ஒரு பிரிவினர் சுவாமிஜியை சமுதாயப் போராளியாக தங்கள் பக்கம் தத்தெடுக்க முயல்கையில், இன்னொரு பிரிவினர் அவரை மதவெறியர் என்று வசைபாடினார்கள். ஜெயராமன் சொல்வது சரிதான்.

  9. /// நான் கூறுவ‌து த‌வ‌றாக‌ இருந்தால், நீங்க‌ள் த‌ய‌வு செய்து சுவாமியின் வாச‌க‌ங்க‌ளை மேற்கோள் காட்டி விள‌க்கினால், ம‌கிழ்ச்சி அடைவேன் ///

    தன் ராஜயோக கட்டுரை மொழிகளில் ஸ்வாமிஜி இவ்வாறு எழுதுகிறார். இவை ஆங்கிலத்தில் பதிப்பிக்கபட்டன. ஆனால், இந்த புத்தகத்தின் பெங்காலி மூலம் இந்த வரிகளின் காரணமாக தடை செய்யப்பட்டது. இதுவே என் புரிதல்.

    Quote ::: ” The Yogi says there is a great danger in stumbling upon this state. In a good many cases there is the danger of the brain being deranged, and , as a rule, you will find that all those man, however great they were, who stumbled upon this super conscious state without understanding it, groped in the dark, and generally had, along with their knowledge, some quaint superstitions. They opened themselves to hallucinations.
    Mohammed claimed that the Angel Gabriel came to him in a cave one say and took him on the heavenly horse, Harak, and he visited the heavens. But with all that, Mohammed spoke some most wonderful truths mixed with superstitions. How will you explain it? That man was inspired, no doubt, but was not a trained Yogi, and did not know the reason of what he was doing. Think of the good Mohammed did to the world, and think of the great evil that has been done through his teachings, mothers bereft of their children, children made orphans, whole countries destroyed, millions upon millions of people killed.”

  10. அன்புக்குரிய சகோதரர் ஜடாயுஜி அவர்களுக்கும்,

    அன்புக்குரிய சகோதரர் ஜெயராமன் அவர்களுக்கும்,

    நன்றியையும், சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை மேற்கோள் காட்டியதற்கு பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறேன்.

    கட்டுப்பாடற்ற காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்து மதத் திணிப்பு செய்வதையும், பிற மார்க்கங்களை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள இயலாமல் அழித்து விட விரும்பும் மூர்க்கத்தையும், யாருமே ஆதரிக்க முடியாது. சுவாமி விவேகானந்தர் மட்டும் ஆதரிப்பாரா?

    அதை முந்தைய பதிவில் குறிப்பிட்டும் இருக்கிறேன். அதே நேரம் இசுலாத்தில் உள்ள நன்மைகளை வெளிப்படுத்தி, எவ்வளவு பாராட்ட கூடுமோ அவ்வளவு பாராட்டிய நேர்மையான பண்பாளர் சுவாமி விவேகானந்தர்.

    //ஒருநாள் கேப்ரியேல் தேவதை ஒரு குகையில் தம்மிடம் வந்ததாகவும், தன்னை ஹரக் என்ற தேவலோகக் குதிரையில் சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் முகமது கூறினார். இதை வைத்துக் கொண்டு, பின்னர் முகமது சில ஆச்சரியகரமான உண்மைகளைப் பற்றிப் பேசினார். நீங்கள் குரானைப் படித்தால் அதில் உள்ள பெரும்பாலான ஆச்சரியகரமான உண்மைகள் மூடநம்பிக்கைகளுடன் கலந்திருப்பதைப் பார்க்கலாம். அந்த மனிதர் உணர்ச்சி பெற்றார், வாஸ்தவம் தான், ஆனால் அந்த உணர்ச்சி தடுக்கி விழுந்ததால் ஏற்பட்டது. அவர் பயிற்சியடைந்த யோகி அல்லர், தான் என்ன செய்கிறோம் என்றே அவர் அறிந்திருக்கவில்லை. உலகத்திற்கு முகமது செய்த நன்மையை நினைத்துப் பாருங்கள், அவரது வெறித்தனத்தால் செய்யப் பட்ட மிகப்பெரும் தீமைகளையும் எண்ணிப் பாருங்கள். அவரது போதனைகளால் படுகொலை செய்யப் பட்ட லட்சக் கணக்கானவர்களை எண்ணிப் பாருங்கள்: குழந்தைகளை இழந்த தாய்மார்கள், அநாதைகளாக்கப் பட்ட குழந்தைகள், முழுவதுமாக அழிக்கப் பட்ட தேசங்கள், லட்ச லட்சமாகக் கொல்லப் பட்ட மக்கள் !

    இந்த உணர்வு நிலையில் தற்செயலாகச் சென்று விழுவதில் பெரும் அபாயம் உள்ளது என்று யோகி சொல்லுகிறான். பெரும்பாலானவர்கள் விஷயத்தில் மூளை முழுவதுமாக மிக மோசமாக பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. அதனால், தவறாமல் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் இந்த பரவச நிலையைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் அதில் தற்செயலாகத் தடுக்கி விழுந்தவர்கள் இருளில் தடுமாறுபவர்களாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்களிடம் அறிவாற்றலோடு கூடவே சில நேர்த்தியாகத் தோன்றும் ஆனால் பெரும் தீமை தரும் மூடநம்பிக்கைகளும் இருக்கும். நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் பலவிதமான மனப்பிராந்திகளுக்கு அவர்கள் ஆட்படுவார்கள்.

    (இங்கு உணர்வு நிலை எனக் குறிப்பிடுவது கடவுளை பார்த்த பரவச நிலையை அவ்வாறு குறிப்பிடுவதாக பொருள் கொள்ளலாம் – திருச்சிக்காரன்)

    .. பல முகமதியர்கள் இந்த விஷயத்தில் மிக வக்கிரமானவர்கள், மிக குழுவெறி கொண்டவர்கள். அவர்களது மந்திரம்: ஒரே கடவுள், முகமது அவரது இறைத்தூதர். இது அல்லாத மற்ற விஷயங்கள் எல்லாம் மோசமானவை மட்டுமல்ல, உடனே அழித்து ஒழிக்கப் படவேண்டியவை. ஒரு கண நேர முன்னறிவிப்பில் இதை முழுவதும் நம்பாத ஒவ்வோர் ஆணும், பெண்ணும், கொல்லப் படவேண்டும். இந்த வழிபாட்டு முறை இல்லாத மற்ற எல்லாம் உடனடியாக உடைத்து நொறுக்கப் படவேண்டும். இது தவிர வேறு எதையாவது கற்பிக்கும் எல்லா புத்தகங்களும் எரிக்கப் படவேண்டும். பசிபிக்கில் இருந்து அட்லாண்டிக் வரை 500 வருடங்கள் உலகம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது: அது தான் முகமதியம்!

    .. மற்ற சமயங்கள் போலன்றி ஒரு மனிதன் முகமதியன் ஆன உடனேயே இஸ்லாம் அவனை திறந்த கரங்களுடன் வரவேற்கிறது. உங்கள் அமெரிக்க செவ்விந்தியர்களில் ஒருவன் முகமதியன் ஆகிவிட்டால் துருக்கி சுல்தான் அவன் கூட உட்கார்ந்து சாப்பிடுவதற்குக் கூட ஆட்சேபம் இருக்காது. அவனுக்கு மூளையும் இருந்தால், எந்த நிலையிலும் அவனுக்குத் தடங்கல்கள் இருக்காது. ஆனால் இந்த தேசத்தில் வெள்ளையனும், கருப்பனும் அருகருகே மண்டியிட்டு பிரார்த்தனை செய்யும் எந்த தேவாலயத்தையும் நான் பார்த்ததில்லை.

    … சமய உலகின் முடிந்த முடிபான தத்துவம் அத்வைதம். ஏனென்றால் அத்வைதம் என்ற நிலையில் இருந்து தான் ஒருவர் எல்லா சமயங்களையும், எல்லா இனங்களையும் அன்போடு நோக்க முடியும். வருங்காலத்தின் அறிவொளி பெற்ற மனித சமுதாயத்தின் சமயம் இதுவே என்று நான் கருதுகிறேன். இந்த தத்துவத்தை மற்ற எல்லா இனங்களுக்கும் முன்பு முதலில் கண்டடைந்த பெருமை இந்துக்களைச் சாரும், அவர்கள் யூத, அரபிய இனங்களை விடப் பழமையானவர்கள் என்பதால். ஆனால் மனிதகுலம் முழுவதையும் தன் ஆன்மா போலக் கருதும் நடைமுறை அத்வைதம் அதன் முழுமையான அளவில் இந்துக்களால் வளர்க்கப் படவில்லை. என் அனுபவத்தில், இந்த சமத்துவம் என்ற விஷயத்தை ஓரளவு பாராட்டத் தக்க வகையில் அணுகிய ஒரு மதம் இருக்குமென்றால், அது இஸ்லாம். [3.1]

    வேதாந்த மனமும், இஸ்லாம் உடலும் கொண்டு, இந்தக் குழப்பங்கள் மற்றும் மோதல்களில் இருந்து மீண்டெழும் புகழ்மிக்க, அசைக்க முடியாத வருங்கால பாரதம். இதை என் மனக்கண்ணில் பார்க்கிறேன்.//

    இவ்வளவு நேர்மையாக , தைரியமாக, சரியான உண்மையை அப்பட்டமாக சொல்லிய வீரர் சுவாமி விவேகானந்தர்.

    சுவாமி அவர்களை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், இசுலாமியர்களிடம் உள்ள பிற மதங்களை சகித்துக் கொள்ள முடியாத தன்மையை நீக்கவும் , இந்துக்களிடம் சமத்துவத்தை உருவாக்கவும் உழைப்போம். .

  11. Very well Jatayu.
    Sikhs were been Hindus until Max Arthur McAuliffe separated them from us. He said that Hinduism was like a ‘boa constrictor of the Indian forest’ which ‘winds its opponent and finally causes it to disappear in its capacious interior’. The Sikhs ‘may go that way’, he warned. There is enough of a prima facie case that Sikhism is a Hindu sect pure and simple. When Guru Tegh Bhadur went to Delhi, he went as a representative of the Hindus.

    Even when the Sikhs carved out a state for themselves, they did not separate from Hinduism: “The Sikhs triumphed and we had Ranjit Singh. You may feel that here at long last we had a Sikh monarch, and the Khalsa would come into their own. Nothing of the sort happened. (…) Instead of taking Sikhism in its pristine form, he accepted Hinduism in its brahminical form. He paid homage to Brahmins. He made cow-killing a capital offence.!!!”

    Further, he donated three times more gold to the newly built makeshift Vishvanath temple in Varanasi than to the Hari Mandir in Amritsar. He also threatened the Amirs of Sindh with an invasion if they didn’t stop persecuting the Hindus. Even more embarrassing for those who propagate the progressive non-Hindu image of Sikhism: one of the last and greatest royal self-immolations of widows ever performed in India took place in 1839 when Ranjit Singh was accompanied on his funeral pyre by four of his wives and seven maids and concubines.

    By any standard, Ranjit Singh was a Hindu ruler.

    He worshipped as much in Hindu temples as he did in gurudwaras. When he was sick and about to die, he gave away cows for charity. What did he do with the diamond Kohi-noor? He did not want to give it to the Darbar Sahib at Amritsar which he built in marble and gold, but to Jagannath Puri as his farewell gift. When he had the Afghans at his mercy and wrested Kashmir from them, he wanted the gates of the temple of Somnath back from them. Why should he be making all these Hindu demands? Whatever the breakaway that had been achieved from Hinduism, this greatest of our monarchs bridged in 40 years.

    After a few years following the death of Maharaja Ranjit Singh, the British annexed Punjab. The Khalsa identity was fast disappearing. This was normal. Sikh identity was not religious but functional, and it disappeared when its circumstantial raison d’être disappeared. Sikhism was thrown up by Hindu society as part of the centuries-long “Hindu response to the Islamic onslaught”.

    Now coming to your point Mr. Jatayu.
    “Sikhism as the sword-arm of Hinduism”
    It is well-known that the Sikhs were the most combative in fighting Muslims during the Partition massacres, and that they were also singled out by Muslims for slaughter. The image of Sikhs as the most fearsome among the Infidels still lingers in the Muslim mind; it is apparently for this reason that Saudi Arabia excludes Sikhs from employment within its borders. But to prove my point here… please read theo’ the following carefully.

    Tegh Bahadur’s son and successor, Govind Singh, only fought the Moghul army when he was forced to, and it was hardly to protect Hinduism. His men had been plundering the domains of the semi-independent Hindu Rajas in the hills of northeastern Panjab, ‘who had given him asylum after his father’s execution’.

    Govind was defeated and his two eldest sons killed in battle; many Sikhs left him in anger at his foolhardy tactics. During Govind Singh’s flight, a Brahmin family concealed Govind’s two remaining sons (Hindus protecting Sikhs, not the other way around), but they were found out and the boys were killed.

    The death of Govind’s sons provides yet another demythologizing insight about Govind Singh through its obvious connection with his abolition of the Guru lineage. A believer may, of course, assume that it was because of some divine instruction that Govind replaced the living Guru lineage with the Granth, a mere book (a replacement of the Hindu institution of gurudom with the Book-centred model of Islam). However, a more down-to-earth hypothesis which takes care of all the facts is that after the death of all his sons, Govind Singh simply could not conceive of the Guru lineage as not continuing within his own family.

    Now tell me when did Guru Gobind Singh and his men had been the “Sword arm of Hinduism”

    Now read my lines carefully. I prove that the brave Hindu Marathas under Shivaji Bhonsle and the Peshwas broke the back of the Mughals (Moslems).

    I prove my point in the following paragraphs.
    After his defeat and escape (made possible by the self-sacrifice of a disciple who impersonated the Guru), Govind Singh in his turn became a loyal subject of the Moghul Empire. He felt he had been treated unfairly by the local governor, Wazir Khan, so he did what aggrieved vassals do: he wrote a letter of complaint to his suzerain, not through the hierarchical channels but straight to the Padeshah. In spite of its title and its sometimes defiant wording, this “victory letter” (Zafar Nâma) to Aurangzeb is fundamentally submissive. Among other things, Govind assures Aurangzeb that he is just as much an idol-breaker as the Padeshah himself: “I am the destroyer of turbulent hillmen, since they are idolators and I am the breaker of idols.” Aurangzeb was sufficiently pleased with the correspondence (possibly several letters) he received from the Guru, for he ordered Wazir Khan not to trouble Govind any longer.

    After Aurangzeb’s death in 1707, Govind tried to curry favour with the heir-apparent and effective successor, Bahadur Shah, and supported him militarily in the war of succession: his fight was for one of the Moghul factions and against the rival Moghul faction, not for Hinduism and against the Moghul Empire as such. In fact, one of the battles he fought on Bahadur Shah’s side was against rebellious Rajputs. As a reward for his services, the new Padeshah gave Govind a fief in Nanded on the Godavari river in the south, far from his natural constituency in Panjab. To acquaint himself with his new property, he followed Bahadur Shah on an expedition to the south (leaving his wives in Delhi under Moghul protection), but there he himself was stabbed by two Pathan assassins (possibly sent by Wazir Khan, who feared Govind Singh’s influence on Bahadur Shah) in 1708. His death had nothing to do with any fight against the Moghuls or for Hinduism.

    So far, it is hard to see where the Sikhs have acted as the sword-arm of Hinduism against Islam. If secularism means staying on reasonable terms with both Hindus and Muslims, we could concede that the Gurus generally did steer a “secular” course. Not that this is shameful: in the circumstances, taking on the Moghul Empire would have been suicidal.

    In his last months, Govind Singh had become friends with the Hindu renunciate Banda Bairagi. This Banda went to Panjab and rallied the Sikhs around himself. At long last, it was he as a non-Sikh who took the initiative to wage an all-out offensive against the Moghul Empire. It was a long-drawn-out and no-holds-barred confrontation which ended in general defeat and the execution of Banda and his lieutenants (1716). Once more, the Sikhs became vassals of the Moghuls for several decades until the -Marathas broke the back of the Moghul empire in the mid-18th century. Only then, in the wake of the Maratha expansion, did the Sikhs score some lasting victories against Moghul and Pathan power.

    Now I shall tell you about the deed we did to estrange Sikhs from ourselves.

    The attitude of cringing Hindu gratitude to the “sword-arm” is not the only nor even the most important reason for the contempt which some Khalsa Sikhs developed toward everything Hindu during the past century. The British policy of privileging the Sikhs is probably the decisive factor, but we should not ignore the role which Hindus themselves have played in the estrangement of the Sikhs with their own type of contempt. The Arya Samaj, as a genuinely fundamentalist movement, distinguished between “authentic” (Vedic) Hinduism and “degenerate” (defined as post-Vedic) forms of Hinduism. By campaigning for the Shuddhi (“purification”, effectively conversion) of Sikhs, it implicitly declared the Sikhs to be either degenerate Hindus or non-Hindus.

    Fortunately for the Sikhs, Dayanand Saraswati was also very offensive in the language he used. He did not realize that he was treading on soft ground when he described guru Nanak as a dambi, an impostor. The Sikhs rejected Dayanand and the Samaj, and set up Singh Sabhas and the chief Khalsa Diwan to counteract Dayanand’s movement. Kahan Singh of Nabha published a book entitled ‘Ham Hindu nahin hain’. It was a categorical statement of rejection of Hinduism. The Arya Samaj can take the credit for driving Sikhs away from Hinduism.”

    The Hindi-Panjabi controversy

    Sikh separatists, and probably Sikhs in general, resented it when Hindus in Panjab registered Hindi as their mother-tongue in the 1951 and 1961 census. The Sikh plan was to carve out a Sikh-majority state under a linguistic cover, viz. as a Panjabi Suba, a Panjabi-speaking province: “in demanding a Punjabi-speaking state, they were in fact demanding a Sikh-majority state. They were giving a linguistic sugar coating to a basically communal demand.”

    In the 1950s, many provincial boundaries had been redrawn with the object of creating linguistically homogeneous states. Nehru had been opposed to this principle, but his hand was forced in 1952-53 by the fast unto death (ending in actual death, followed by widespread violence on government property) of Potti Sri Ramulu in support of the demand for a Telugu-speaking state. After states like Andhra Pradesh and Maharashtra had been created on a linguistic basis, the Sikhs were dismayed that the Government kept on opposing the creation of a Panjabi-speaking state.

    The 1961 census, and in particular its item on language, became a crucial event in the campaign for the Panjabi Suba. Since language was used as a code for religion, Hindus joined the game: “Punjabi Hindus were persuaded to declare their language to be Hindi, which it is not, and not Punjabi, which it is.” This way, “they played into the hands of Sikh communalists: ‘How can you trust this community? They are even willing to deny their mother tongue’, they said.”

    The Sikhs got their Panjabi Suba anyway, as a reward for their sterling loyalty to India in spite of Pakistani overtures during the 1965 war. But twenty years later, Arya Samaj polemicist Kshitish Vedalankar still defended the claim of the Panjabi Hindus that their mother tongue is Hindi: “What we call Panjabi today is only a wing of Hindi–Pashchimi [= ‘Western’] Hindi.” The difference between language and dialect is indeed not always clear-cut, and the separate status of Panjabi is more a matter of politics than of linguistics (somewhat like the recent decision of the Croats and Bosnian Muslims to develop their own dialects of Serbo-Croat into separate languages).

    Sorry for the long lecture. Sikhs are Hindus. But they don’t consider themselves as Hindus. The Darbar Sahib in Amritsar is the Vishu Temple -Hari Mandir Sahib. The Vishnu Statue was removed in 1905 by the influence of British.

    Thanks for allowing me to Comment.

    Regards,
    Sridhar Krishnan.

  12. தலித் விடுதலையை முன்னெடுக்க வேண்டியது இந்து இயக்கங்களே, ஆனால் நடப்பது என்ன, நாத்திகர்களான திருமாவளவன் போன்றவர்களே கோவில் நுழைவு போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது, அப்போதும் இந்து இயக்கங்கள் நாத்திகனுக்கு என்ன வேலை என்கிறது, முறைப்படி அந்த வேலையை செய்யவேண்டியது இந்து இயக்கங்கள், வெறும் கட்டுரைகள் பயன் தராது செயலில் ஈடுபடவேண்டும். அனைத்து கிராம கோவில்களிலும் சமமாக சாமி கும்பிடும் உரிமையை இந்து இயக்கங்கள் பெற்றுத்தரவேண்டியதுதான் நியதி.

  13. Dear all, Please read the latest book ‘Understanding Muhammed’ by Dr. Ali Sina, an apostate (ex-muslim). He has analysed the life and activities of Muhammed and concludes that Muhammed was having psycho-pathological problems which have resulted in the birth of the cult Islam. You may also benefit by visiting the websites http://www.faithfreedom.org, http://www.islam-watch.org, and http://www.jihadwatch.org, for learning more about the havoc that Islam has inflicted upon humans.

  14. தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள். ….

    விவேகானந்தர் ஒரு சுடரொளி. மக்களின் வாழ்கை தரம் உயரவும், இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அகற்றவும் பாடு பட்டவர். இந்துமதத்தின் சரிவு முகமதியர்களின் படையெடுப்பும், ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கமும் மட்டும் காரணம் இல்லை. ஒரு சில சுயநல வாதிகளால் இந்துமதத்தில் புகுத்தபட்ட சாதி முறை முக்கிய பங்கு வகித்தது.

  15. த‌லித் பிரிவு ம‌க்க‌ள் ஏற்க‌னெவே விடுத‌லை அடைய‌ ஆர‌ம்பித்து விட்ட‌ன‌ர். ந‌க‌ர‌ப் ப‌குதிக‌ளில் சாதிப் பிரிவினை இல்லை. ஆனால் கிராம‌ப் ப‌குதிக‌ளில் இன்னும் பிரிவினை இருக்கிற‌து, த‌லித் பிரிவு ம‌க்க‌ள் பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ர‌ அனுமதிக்க‌ப் ப‌டுவ‌து இல்லை. ம‌க்க‌ள் ம‌ன‌தில் மாற்ற‌ம் தேவை. ஆன்மீக‌த்தின் மூல‌மாக‌ எல்லா ம‌க்க‌ளையும் ஒன்றினைக்க‌ முடியும்.ஆன்மீக‌க் க‌ருத்துக்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌ அருமையான‌ இசையும் பாட‌லும் இருக்கிற‌து.

    “திக்கு நீவ‌னுசு தெலிசி ந‌ன்னு புரோவ‌
    கிர‌க்குன‌ ராவு க‌ருண‌னு நீ சே,
    ஜிக்கி யுன்ன‌ தெள்ள‌ ம‌ர‌ துராயிக்க‌
    ஸ்ரீ தியாக‌ராஜுனு பாகிய‌மா”

    “திக்கு (திசை) அறியாம‌ல் திகைக்கும் எனைக் காக்க‌
    விரைந்து நீ வ‌ந்து வ‌ழியினைக் காட்டு,
    சிக்கித் த‌விக்கும் நான் விடுத‌லை பெற்றிட்டால்
    என் பாக்கிய‌மாகும்”

    நாம் எல்லொருமே இய‌ற்கையின் கையிலே சிக்கித் த‌விக்கு ம் அடிமைக‌ள் என்ப‌தை சுட்டிக் காட்டியுள்ளார் ஸ்ரீ தியாக‌ராச‌ர். இதை புரிந்த‌வ‌ர் யாரையும் தாழ்மையாக‌ க‌ருத‌ப் போவ‌தும் இல்லை. அக‌ந்தையுட‌ன் இருக்க‌ப் போவ‌தும் இல்லை.

    ந‌ண்ப‌ர்க‌ள் நான்கைந்து பேர் விடுமுறை நாட்க‌ளில் கிராம‌ப் ப‌குதிக‌ளுக்கு, த‌லித் பிரிவு ம‌க்க‌ள் வசிக்கும் ப‌குதிக‌ளுக்கு சென்று அதிகாலையிலே ம‌க்க‌ள் ந‌ன்மைக்கான‌ கீர்த்த‌னைக‌ளைப் பாடி அவ‌ர்க‌ளின் ம‌ன‌திலே த‌ன் ந‌ம்பிக்கையை வூட்டுங்க‌ள். அங்கேயே ச‌ட்டி பானையில் ச‌ர்க்க‌ரைப் பொங்க‌லும் , வெண் பொங்க‌லும் ச‌மைத்து சேரி ம‌க்க‌ளுக்கு நிவேத‌ன‌ம் அளியுங்க‌ள்.

    “ஓம், ஓம் என‌ வ‌ருவோர்க்கு நாம் என‌த் துணையாவான்”, என்ற‌ த‌மிழ‌ரின் உதார‌ண‌ புருட‌னைப் பற்றிப் பாடி ம‌க்க‌ள் ம‌ன‌தில் த‌ன்ன‌ம்பிக்கையை வ‌ள‌ருங்க‌ள்.

    கோவிலே, இனி ம‌க்க‌ளின் வீடுக‌ளுக்கு செல்ல‌ வேண்டும்.
    ரா, ராமா இண்டி தாகா… என்று இராம‌ரை ம‌க்க‌ளின் வீடுக‌ளுக்கு கொண்டு செல்லுங்க‌ள். ஆன்மீக‌த்தில் முன்னேற்ற‌ ம‌டைந்த‌வ‌ர்க‌ள் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌வராக‌ க‌ருத‌ப் ப‌ட‌வே முடியாது.

    சேரிக்கு சென்று பாட‌ல்க‌ளைப் பாடி நிவேத‌னம் அளித்து, அப்ப‌டியே பிற‌ சாதியின‌ர் வ‌சிக்கும் ப‌குதிக்கும் சென்று, அவ‌ர்க‌ள் வீட்டிலும் வா இராமா வீட்டிற்க்குள்ளே என்று பாடி அவ‌ர்க‌ள் ம‌ன‌திலும் ஆன்மீக‌ ஒளி ஏற்றுங்க‌ள்.

    உண்மையை உண‌ர்ந்த‌ ம‌க்க‌ள் ஒரே ச‌முதாய‌மாக‌ உருவெடுப்பார்க‌ள். குக‌னும், வ‌சிட்ட‌ரும், அனும‌னும், வீபிட‌ண‌னும், ஜ‌டாயுவும், சுமேந்திர‌ரும் ஒரே கொள்கைக‌ளின் அடிப்ப‌டையில் – ‍‍ம‌ற்ற‌வரின் ந‌ன்மைக்காக‌ த‌ன் சுக‌த்தை விட்டுத் த‌ருவ‌து, பிற‌ன் ம‌னை விழையாமை, அநியாய‌ அக்கிர‌ம‌த்தை முழு வீச்சில் எதிர்ப்ப‌து‍ – ஆகிய‌ கொள்கைக‌ளின் அடிப்ப‌டையிலே, ஒரே த‌ன்மையில் அன்பின் அடிப்ப‌டையில் வாழும் வ‌கையை ,ஆன்மீக‌ம் உருவாக்குமானால் அந்த‌ ஆன்மிக‌த்தை நாம் வ‌ர‌வேற்க்கிரோம்.

    ஆனால் அறிவின் அடைப்ப‌டையிலான‌, கொள்கைக‌ளின் அடிப்ப‌டையிலான‌, த‌ன்ன‌ம்பிக்கையை உருவாக்கும் ஆன்மீக‌த்தைக் கொண்டு செல்லுங்க‌ள். ம‌றுப‌டியும் மூட‌ப் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை எடுத்து சென்றால் பின்ன‌டைவே உண்டாகும்.

  16. குடுகுடுப்பை

    //தலித் விடுதலையை முன்னெடுக்க வேண்டியது இந்து இயக்கங்களே, ஆனால் நடப்பது என்ன, நாத்திகர்களான திருமாவளவன் போன்றவர்களே கோவில் நுழைவு போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது,//

    பிரச்சனை என்னவென்றால் சுய அரசியல் ஆதாயங்களுக்காக இது போன்ற அரசியல் தலைவர்கள் தான் பிரிதாள்கிறார்கள். அதனால் கோவிலில் நுழைவது என்பது ஈகோ ப்ராபளம் ஆகிவிடுகிறது. இரண்டாவது திருமாவளவன் ஒரு மதம்மாற்றி. சுவிசேஷ கூட்டங்களில் மத வியாபாரம் செய்ய மைக் பிடித்து பேசுபவர்(Edited). கோவிலில் நுழைகிறேன் என்று சொல்லி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் செய்யும் அட்டூழியம் கிராமங்களில் அதிகம்.

    பிரச்சனை பெரிதாக இதுவும் காரணம். மேலும் தலித் மக்களுக்கு இந்து மதம் விரோத மதம் என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு , இந்து மத கடவுளரை கெட்ட வார்த்தைகளில் ஏசிவிட்டு அவர்களே அதே தலித் மக்களுக்காக வக்காலத்து வாங்கி கோவிலுக்குல் நுழைகிறேன் என்றால் அவர்கள் பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள் அன்றி தீர்க்க வழி செய்ய வில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    தலித் வீடுகளுக்கு சென்ற சங்கர மட அதிபரின் இன்றைய நிலை என்ன? என்பதையும் யோசியுங்கள். மிஷனரிகளின் முன்னால் இந்து இயக்கங்கள் கொஞ்சம் பலகீனமாகத்தான் இருக்கிறது. காரணம் இப்படி பின்னூட்டங்களில் புத்தி சொல்லும் எவரும் இந்து இயக்கங்களுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பதில்லை. வாருங்கள் நாம் போராடுவோம் என்றால் அது என் வேலை இல்லை என்று சொல்வீர்கள். எம்மதமும் சம்மதம் நான் யாருக்கும் எதிரியில்லை என்று ஜல்லியடிக்கும் கூட்டத்தினர் வேறு இதில் அடக்கம். குறைந்த பட்சம் நேரடியாக இந்து இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கூட தெரிவிப்பது கிடையாது. பிறகு இயக்கங்களை குறை சொல்லி என்ன பயன்.

    இத்தனை மிஷனரிகளின் மலை போன்ற பண மற்றும் அதிகார பலத்தை எதிர்த்து இன்றைய இந்து இயக்கங்கள் ஆற்றி வரும் விழிப்புணர்ச்சி நடவடிக்கைகள் மிகவும் பெரியது. ஒவ்வொரு இந்துவும் நேரடியாக ஆதரவு தெரிவித்து அவர்களோடு கைகோர்ப்பதால் மட்டுமே அவர்கள் சக்தி அதிகரிக்கும். பின் அது நமது சக்தி ஆகும். அதை புரிந்து கொள்ள வேண்டியது நமது கடமை.

    இன்றைக்கு கூட கலைஞர் தொலைக்காட்சியில் மீண்டும் இந்து தாலி சம்பிரதாயம் கேலிக்குள்ளாக்கப்பட்டது. விவாதப்பொருளாக்கப்பட்டது. இதை எதிர்க்கும் வகையில் இந்துக்களை அவமதிக்கும் தி மு க விற்கு ஓட்டு போடாதிர்கள் என்றால் எத்தனை இந்துக்கள் கேட்கப் போகிறீர்கள்? முதலில் ஒரு இந்துவாக நம்மை அவமதிக்கும் சக்திகளுக்கு ஆதரவு தரப்போவதில்லை என்ற தீர்விலாவது இந்து இயக்கங்களோடு ஒற்றுமையாக ஆதரவுடன் நடந்து கொண்டால் தானே நமக்கு எதிர்க்கும் சக்தியாவது கிடைக்கும். ஆனால் தி மு க விற்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறீர்கள். பின்னர் இந்து மத இயக்கங்களை குறை சொல்வதில் பிரயோஜனம் என்ன. நம் உணர்வுகளைக் காக்கும் இயக்கங்களை நாமே பலவீனப்படுத்தி விட்டு அவர்களை குறை சொல்வதை விட்டு விட்டு திருமாவளவன் போன்ற மத வியாபாரியை கண்டிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

    (Edited & Published)

  17. சுவாமி விவேகான‌ந்த‌ரிட‌ம் சீடர்: இறுதியில் இந்தியா தன்னை வென்றவர்களையும் வென்றுவிடுமா??

    சுவாமி விவேகான‌ந்த‌ர் : ஆம். கருத்துக்களின் உலகில். இன்று இங்கிலாந்திடமும் வாள் இருக்கிறது, பௌதிக உலகம் என்கிற வாள், நம்மைத் தோற்கடித்த முகம்மதியர்கள் போலவே. ஆனால் மாமன்னர் அக்பர் நடைமுறையில் ஒரு இந்துவாகவே ஆகிவிட்டார். கற்றறிந்த முகமதியர்களும், சூபிக்களும் இந்துக்களிடமிருந்து வேற்றுமை காண முடியாதவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலர் பசு மாமிசத்தைத் துறந்து விட்டவர்கள், அவர்களது நடைமுறைகள் அனைத்தும் நம்மைப் போலவே உள்ளன. அவர்களது சிந்தனைகள் முழுதும் நம் தர்மத்தினுடையவையே நிரம்பியிருக்கின்றன.

    வேதங்களைக் கடந்த, பைபிளைக் கடந்த, குரானைக் கடந்த ஓர் இடத்திற்கு மனிதகுலத்தை இட்டுச் செல்லவே நாம் விழைகிறோம். ஆனால் இதைச் செய்வதற்கு வேதங்களுக்கும், பைபிளுக்கும், குரானுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். ஒருமை என்ற ஒரே மதத்தின் பல்வேறு மாறுபட்ட வெளிப்பாடுகளே இந்த மதங்கள் எல்லாம் என்று மனிதகுலத்திற்குக் கற்றுக் கொடுக்க வெண்டும். தனக்குப் பொருத்தமான வழியை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க அது வழிசெய்யும்.

  18. அநியாய‌த்தை, அசிங்க‌த்தை , அற்ப‌த்த‌ன‌த்தை, சூதினை எதிர்க்க‌ நியாய‌மான‌, அமைதியான‌ போர‌ட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌மாகக் கூடும்.

    ஆனால் வெறும் போராட்ட‌ங்க‌ளை ம‌ட்டும் ந‌ம்பிக் கொண்டு அடிப்ப‌டைக‌ளில் கோட்டை விட்டால் அதோ க‌திதான். உண்மையில் இந்து ம‌த‌ம் என்றால் என்ன‌, ஆன்மீக‌ம் என்றால் என்ன‌ என்று புரிந்து கொண்டால், அதை ம‌க்க‌ளிட‌ம் ப‌ர‌ப்பினால், பிற‌கு நீங்க‌ள் எதைப் ப‌ற்றியும் க‌வ‌லைப் ப‌ட‌ வேண்டி இருக்காது.ஆனால் ஆன்மீக‌த்தின் வ‌லிமை என்ன‌ என்று ப‌ல‌ருக்கும் தெரிய‌வில்லை.

    இப்போதும் நானோ நீங்க‌ளோ, சேரிக்குப் போய் ம‌க்க‌ளை விழிப்ப‌டைய‌ வைத்தால் யார் ந‌ம் மீது வழ‌க்கு தொடுக்க‌ப் போகிறார்க‌ள்? வ‌ழ‌க்கு தொட‌ர்ந்தால் ச‌ந்திக்க‌ வேண்டிய‌துதானே! தெருவிலே போராட்ட‌ம் ந‌ட‌த்தி வ‌ழ‌க்கை ச‌ந்திக்க‌ த‌ய‌ராக‌ இருக்கும் போது, அமைதியான‌ முறையிலே ம‌க்க‌ளை ச‌ந்த்தித்து உண்மைக‌ளை விள‌க்கி அத‌ற்க்காக‌ வ‌ரும் வ‌ழ‌க்கையும் ச‌ந்திக்கலாம் அல்ல‌வா?

    அப்ப‌ர், ஆதி ச‌ங்க‌ர‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் ம‌க்க‌ளைத் திர‌ட்டிப் போராட்ட‌ம் ந‌ட‌த்தினார்க‌ளா? அல்ல‌து ம‌க்களை ச‌ந்தித்து ஆன்மீக‌ ச‌க்தியை அவ‌ர்க‌ளுக்கு அளித்தார்க‌ளா?

    இந்து ம‌த‌த்தின் அடிப்ப‌டைக‌ளை, அத‌ன் முக்கிய‌ வ‌லிமையை உண‌ராத‌வ‌ர்க‌ள் பல‌ர் அதை த‌வ‌றான போக்கிலே த‌ள்ளுகின்ற‌ன‌ர். முக்கிய‌ விட‌ய‌ங்க‌ளை பின்னுக்குத் த‌ள்ளி, ச‌க்தியை த‌வறாக‌ விர‌ய‌ம் செய்கின்ற‌ன‌ர்.

    க‌ருணாநிதியை பார்த்தே இவ்வ‌ள‌வு க‌ல‌க்க‌ம் அடைந்து இருக்கிறார்க‌ள். “கருணாநிதிக்கு ஓட்டு போடாதே என்றால் யார் கேட்கிறார்க‌ள்” என்றால் எப்ப‌டிக் கேட்பார்க‌ள்? ந‌ம்முடைய‌ வார்த்தைக‌ளில் செய‌ல் பாட்டில், ரிஷித் துவ‌ம் வெளிப்ப‌டுமானால் நாம் சொல்வ‌தைக் கேட்பார்க‌ள்.

    இந்த‌ க‌ட்டுரையோ, “நீ உறுதி உடைய‌வ‌னாக‌ இருந்தால், பாம்பின் விஷ‌ம் கூட‌ உன் முன்னால் ச‌க்தி அற்ற‌தாகி விடும்” என்று கூறிய‌வ‌ரைப் ப‌ற்றிய‌து. “உறுதி உடைய‌வ‌னை ம‌லை கூட‌ த‌டுக்க‌ முடியாது” என்றார் சுவாமி விவேகானந்தர். அவ‌ர் உண‌மையான‌ ஆன்மீக‌த்தை அறிந்த‌வ‌ர் .

    ஆனால் இன்றோ ப‌ல‌ரும், இந்து ம‌த‌த்தைக் காக்க‌ வேண்டும் என்ற‌ ஆவ‌ல் உள்ள‌வ‌ர்க‌ளாய், ஆனால் ஆன்மீக‌ப் புரித‌ல், ப‌யிற்சி ப‌ற்றாம‌ல் உள்ளோம். தோட்டா இல்லாம‌ல், வெறும் துப்பாக்கியை எடுத்து செல்லும் வீர‌ர்க‌ளைப் போன்ற‌ நிலை அது.

    (Edited and published – Tamilhindu editorial)

  19. @ராம்
    திருமாவளவனை கண்டித்தால், இந்து மதம் வளர்ந்து விடுமா. இங்கே தேவை சுயவிமர்சனமும் வளர்ச்சியும் முடிந்தால் திருமாவளவனையும் இந்தக்குடையின் கீழ் கொண்டுவருதலே தவிர கண்டித்து வெளியேற்றுதல் அல்ல.

    ஏன் சுவிசேச காரன் உள்ளே வருகிறான். முதலில் இந்து இயக்கம் கோவில் நுழைவை தடுப்பவனுக்கு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை புரியவைத்து வழிபாட்டு உரிமை வாங்கித்தரவேண்டும். நான் என்னை சுத்தம் செய்ய அடுத்தவனை திட்டமுடியாது, அதனால் நான் சுத்தமாக முடியாது.
    RSS செய்ய வேண்டிய வேலை தலித் முன்னேற்றம் வழிபாட்டு உரிமை, இதை ஒரு முக்கிய அறிவுப்புரட்சியாக செய்யவேண்டும்.இதெல்லாம் நடந்தால் நீங்கள் சொல்லும் அரசியல் வாதிகள் இருக்கமாட்டார்கள் அல்லது முழுமையான இந்துக்களாக இருப்பார்கள். தலித் இந்துவாக முழு உரிமையுடன் வாழ அவர்களில் ஒருவரை சங்கராச்சிரியர் ஆக்கும் அளவுக்கு மாற்றம் இங்கே தேவை, இவையெல்லாம் நடந்தால் திருமாவளவன் கூட தமிழ்ஹிந்துவில் கட்டுரை எழுத நேரலாம், உங்களின் சண்டை போடும் அனுகுமுறை எதற்கும் உதவாது.

  20. //ஏன் சுவிசேச காரன் உள்ளே வருகிறான். முதலில் இந்து இயக்கம் கோவில் நுழைவை தடுப்பவனுக்கு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை புரியவைத்து வழிபாட்டு உரிமை வாங்கித்தரவேண்டும்.//சரியாக சொன்னீர்கள். ஆனால் தலித் கிருஸ்துவர்களுக்கென்று சர்ச் ஏன் தனியாக உள்ளது என்றும் யோசித்தால் நன்றாக இருக்கும்.

  21. //திருமாவளவனை கண்டித்தால், இந்து மதம் வளர்ந்து விடுமா. இங்கே தேவை சுயவிமர்சனமும் வளர்ச்சியும் முடிந்தால் திருமாவளவனையும் இந்தக்குடையின் கீழ் கொண்டுவருதலே தவிர கண்டித்து வெளியேற்றுதல் அல்ல.//

    குடுகுடுப்ப!

    திருமாவ கண்டிக்க தாவல…அப்டீன்னு ஸொல்லிகின பாரு, அது மெய்யாலுமே கரீட்டு வாத்யாரே! ஆனாக்க, அவுரையும் நம்ம சைடு இட்டாந்துருன்னு ஸொன்னது ராங்கு நைனா! அவுர கண்டிக்கற்து நமுக்கு தான் டைம் வேஸ்டு…..அதே நேரத்துல அவுர இட்டாற்றது படா பேஜாரு, வேலக்கு ஆவாது.

    திருமா டுபாக்கூர் பார்டி! தலித் பார்டின்னு ஸொல்லிக்கினு கிறுஸ்துக்கும், இஸ்லாமுக்கும் வேல பாக்குற பார்டி. தலித் ஜனத்துக்கு ஒன்னியும் உருப்புடியா செய்ய தாவல.

    ஒரு மேட்டரு ஸொல்றேன் கேட்டுக்க!

    சேலம் பக்கத்துல ஓமலூருன்னு ஒரு ஊர் கீது, தர்மபுரி, மேட்டூர் போவற ரூட்ல! பக்கத்துல கந்தம்பட்டின்னு ஒரு ஊர் கீது. அந்த ஊர்ல த்ரௌபதி அம்மன் கோவில் கீது வாத்யாரே! சூப்பர் கோவிலு.

    அந்த ஊர்ல இருக்கற ஜனங்க தலித்தும் வன்னியரும்…… இன்னா கேட்டுக்கினியா? கோவில வன்னியருங்க ஸொந்தம் கொண்டாட்றாங்க…அவுங்க கட்ன கோவிலாம்! அத்தொட்டு தலித்துங்கள கோவிலாண்ட வுட மாட்டேன்றானுங்க வன்னியருங்க.

    மேட்டரு பெர்சாயி நாப்பது வர்ஸமா கோவிலு பூட்டி கெடக்குது. ஊர்ல இருக்கறவன் இன்னா ஜாதியா இருந்தா இன்னா, அம்மனுக்கு மன்ஸனோட ஜாதியா முக்கியம்? மன்ஸனோட பக்தி தானே முக்கியம்? ஊர் கோவில்ல அம்மனுக்கு வயிபாடு இல்லான்னாக்க, அம்மன் கோச்சுக்காது? அம்மனுக்கு கோவம் வந்தா இன்னா ஆவற்து?

    அதான் வாத்யாரே ஆச்சு! கந்தம்பட்டி வெளங்கற மாரி தெர்ல. அந்த ஊர் காரனுங்களுக்கும் புத்தி வரா மாரி தெர்ல!

    2006 சட்டசப எலீக்ஸன்ல தி.மு.க…, பா.ம.க…, வி.சி,க…,காங்கிரசு.., அல்லாரும் ஒன்னா கூட்டு வச்சுக்கினாங்க. எலீக்ஸன்ல கெலிச்சானுங்க.

    கெலிச்சிட்டானுங்களா! அப்பாலிகா, ஊர்ல திருவிழா வர ஸொல்ல இன்னா செய்யனும்? ராம்தாஸோட வன்னியருங்களும், திருமாவோட தலித்துங்களும் ஒன்னா திருவிழா கொண்டாட தாவல?

    இல்லியே!….. ஏன்?….. கோவில் மேட்டரு ஸால்வ் அயிட்சுன்னா ரெண்டு தலெங்களுக்கும் பாலிடிக்ஸ் அந்த ஊர்ல க்ளோஸ் ஆயிரும். வோட்டு வேட்ட ஆட முடியாது. இன்னா புர்ஞ்சிக்கினியா?

    சரி, ராம்தாஸயும், திருமாவையும் வுடு… நம்ம கலிஞரு கிட்ட வா! நம்ம கலிஞரு அடிக்கடி ஸொல்ற வார்த்த இன்னா?

    ”சமூக நீதி”…..

    அப்டீன்ன இன்னா? தாய்த்தப் பட்டவன் ஒஸந்த பார்டி கூட ஒன்னா இருக்கனும். அதாவ்து…கந்தம்பட்டில….தலித்தும், வன்னியனும், ஒன்னா சேந்து கோவில்ல சாமி கும்பட்னும்! இன்னா…நா ஸொல்றது ரைட்டா?

    கலிஞரு கந்தம்பட்டில “சமூக நீதி” கொண்டாந்தாரா? இல்லியே!…ஏன்?

    ஏன்னாக்கா.., கந்தம்பட்டில அவுருக்கு ஓட்டு கடியாது. இருக்கற ஓட்டெல்லாம்..ராம்தாஸுக்கும் திருமாவுக்கும் தான். அத்தொட்டு தான், தி.மு.கவும், காங்கிரசும், கந்தம்பட்டிய கண்டுக்கல.

    சரி…அவுங்க தான் கண்டுக்கல…. ராம்தாஸும் திருமாவும் அப்போ லவ் பன்னிக்கினு தானே இருந்தாங்க? அவுங்க ஏன் கண்டுக்கல? அவுங்க நெனச்சுர்ந்தா மேட்டர முட்சுட்றுக்கலாமே? ஏன் முடிக்கல?

    ஏன்னாக்க….மேட்டரு ஸால்வ் ஆயிட்டா அவுங்க பாலிடிக்ஸ் பெஃயில் ஆயிடும்! அடுத்த எலீக்ஸன்ல அவுங்க ஓட்டு புட்டுக்கும். அத்தொட்டு அவுங்க கண்டுக்கல.

    இதுல படா டமாஸு இன்னா தெர்மா? தி.மு.க.., பா.ம.க…, வி.சி.க.., காங்கிரசு.. அல்லாரும் ஒரே கூட்டணி!

    அத்தவுட படா படா டமாஸு இன்னா தெர்மா? அந்த கோவிலு…இந்து அற நிலையத் துறை கீய வர்து நைனா!

    அதாவ்து சண்ட பார்டிங்க அல்லாம் ஒரே கூட்டணி; அந்த கூட்டணி தான் ஆட்சி செய்யுது; கோவிலு அந்த ஆட்சி கண்ட்ரோல்ல கீது;

    ஆனாக்கா…பிரெச்சன முடியல….

    இது எப்டி கீது? சூப்பரா இல்ல?

    இதான் வாத்யாரே….திராவிட அரசியலு; தமிழ் அரசியலு; சமூக நீதி; சாதி ஒயிப்பு!

    தெர்ஞ்சுக்கினியா?….

    கடேசியா…சீக்ரட்டான மேட்டருக்கு வர்ட்டுமா? ….கேட்டுக்க நைனா…

    ஒரு ஊர்ல….ரெண்டு பிரிவு ஜனங்க ஒத்துமையா இல்லன்னா..யாருக்கு ஜாலி? ஊரு ரெண்டு பட்டா…..ஒண்ட வந்த நரிக்கு ஜாலி!

    இங்க நரி யாரு? மிஷநரி! அதான்..விஷநரி! ஒன்னு….தலித்த மதம் மாத்தலாம்…..இல்லாங்காட்டி…வன்னியர மதம் மாத்தலாம்!

    அத்தொட்டு….இந்த தலைங்க எல்லாம்….சர்ச்சு ஏஜெண்டுங்களாத்தான் வேல பாக்கறானுங்க. எவனும் நம்ம ஜனங்க ஒன்னா ஒத்துமையா இருக்கனூன்னு நெனைக்கறது கடியாது வாத்யாரே!

    இன்னா..புர்ஞ்சுக்கினியா? புர்ஞ்சா சரி…திருந்துனா சரி…

    இதெல்லாம் பேச ஸொல்ல பேஜாரா கீது நைனா…. ஒரே பீஃலிங்கா கீது.

    //RSS செய்ய வேண்டிய வேலை தலித் முன்னேற்றம் வழிபாட்டு உரிமை, இதை ஒரு முக்கிய அறிவுப்புரட்சியாக செய்யவேண்டும்.இதெல்லாம் நடந்தால் நீங்கள் சொல்லும் அரசியல் வாதிகள் இருக்கமாட்டார்கள் அல்லது முழுமையான இந்துக்களாக இருப்பார்கள்//

    ரொம்ப தப்பு நைனா…ஆர்.எஸ்.எஸ். அவுங்களால முடிஞ்சத நல்லா செய்றாங்க. நாம தான் அவுங்களுக்கு சப்போர்ட்டு பண்றதில்ல. திராவிட தலெங்களுக்கு ஓட்டு போட்ற வரெக்கும் தமிழன் உருப்பட மாட்டான் வாத்யாரே! அவுனுக்கு எதிர்காலமே கடியாது.

    //திருமாவளவன் கூட தமிழ்ஹிந்துவில் கட்டுரை எழுத நேரலாம்//

    டமாஸுக்கு கூட அப்டி ஸொல்லாத நைனா! தமிழ் இந்து வாஸகருங்க பாவம்! அவுங்க ஒனக்கு இன்னா த்ரோகம் செஞ்சாங்க?

    வர்டா…

    மன்னாரு.

  22. ச‌ரி, த‌லித்துக‌ளும், வ‌ன்னிய‌ர்க‌ளும் க‌ந்த‌ம் ப‌ட்டி கோவிலில் ஒன்றாக‌ சேர்ந்து சாமி கும்பிட‌ ராமதாஸோ, திருமாவ‌ள‌வனோ, க‌லைஞ‌ரோ அக்க‌றை காட்டவில்லை.

    ஆனால் நாம் ஏன் அரசிய‌ல் வாதிக‌ளை ந‌ம்பி அவ‌ர்க‌ளைக் குறை சொல்ல‌ வேண்டும்?

    கோவில் அறநிலைய‌த் துறையின் பொருப்பில் இருக்க‌ட்டும். ஆன்மீக‌ம் யார் பொறுப்பில் இருக்கிற‌து?

    எல்லோரிட‌மும் இருப்ப‌து ஒரே ஆத்மா , வேறுபாடாக தெரிவ‌து மாய‌த் தோற்ற‌மே என்ப‌துதானே இந்து ம‌த‌த்தின் அடிப்ப‌டைக் க‌ருத்து! ஆன்மீக‌ அடிப்ப‌டையில் ம‌ன‌ங்க‌ளை இணைக்க‌ இய‌லாதா? ஒரு நாளிலே சாதிப் பிரிவினையை போக்கி, ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் அமைப்ப‌து க‌டின‌ம். ஆனால் நாம் அந்த ப‌ணியை செய்ய‌ ஆர‌ம்பிக்கலாமே. அர‌சிய‌ல்வாதிக‌ளை குறை சொல்லிக் கொண்டிருப்ப‌தால் என்ன‌ பல‌ன்?

    ஆதி சங்க‌ர‌ர் அசோக‌ரை குறை சொல்லிக் கொண்டிருக்க‌வில்லை.

    சுவாமி விவேகான‌ந்த‌ர் ஆங்கிலேய‌ரைக் குறை சொல்லிக் கொண்டிருக்க‌வில்லை.

    எல்லோருக்கும் புரிய‌ வைத்து நெறிப் ப‌டுத்த‌க் கூடிய‌ உண்மையின் ச‌க்தி அவ‌ர்க‌ளிட‌ம் இருந்த‌து
    .

    திருமாவ‌ள‌வ‌ன், க‌லைங்க‌ர் எல்லோரிட‌மும் இருப்ப‌து ஒரே ஆத்மா தான், அந்த‌ ஆத்மாவை ம‌றைத்து இருக்கும் குழ‌ப்ப‌ங்க‌ளை விளக்கி, உண்மையை புரிய‌ வைக்க‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கை உங்க‌ளிட‌ம் இருக்கிற‌தா?

    முத‌லில் நீங்க‌ள் ஆன்மீக‌ உண்மை என்றால் என்ன‌ என்ப‌தை அறி ந்தீர்க‌ளா?

  23. //திருமா டுபாக்கூர் பார்டி! தலித் பார்டின்னு ஸொல்லிக்கினு கிறுஸ்துக்கும், இஸ்லாமுக்கும் வேல பாக்குற பார்டி….. //

    இது பேப்பர்ல போட்ட நியூஸ் நைனா……

    https://epaper.dinamalar.com/DM/DINAMALAR/2010/01/21/ArticleHtmls/21_01_2010_013_002.shtml?Mode=1

    வேலூர் கோட்டைக்குள் நுழைய முயன்ற திருமாவளவன் கைது.

    வேலூர் கோட்டை மசூதிக்குள் தடையை மீறி நுழைய முயன்ற திருமாவளவன் உள்ளிட்ட 700 பேரை, போலிசார் கைது செய்தனர்.

    வேலூர் கோட்டையில் இஸ்லாமியர்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்கக்கோரி, விடுதலை சிறுத்தைகள் சார்பில், வேலூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்பாட்டமும், கோட்டை மசூதியில் நுழையும் போராட்டமும் அறிவிக்கப் பட்டிருந்தது.

    ஆர்பாட்டம் மட்டும் நடத்த அனுமதி அளித்த போலீசார், கோட்டை மசூதிக்குள் நுழைய அனுமதி அளிக்கவில்லை. ஆர்பாட்டம் முடிந்ததும் கோட்டை மசூதிக்குள் நுழைய முயன்ற திருமாவளவன் உள்ளிட்ட 700 பேரை போலிசார் கைது செய்தனர்.

    இது வெப்சைட்டுல் போட்ட நியூஸ் வாத்யாரே…

    https://www.dinamalar.com/district_main.asp?ncat=Vellore#292754

    அத்துமீறி ஊர்வலம்: திருமாவளவன் கைது

    வேலூர்: வேலூர் கோட்டைநோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற திருமாவளவன் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கோட்டை வளா கத்தில் உள்ள சர்ச்சைக்குரிய கட்டடத்தை, வழிபாட்டிற்கு திறக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் கோட்டைக்குள் நேற்று அத்துமீறி நுழைய போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்து, கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தனர். நேற்று காலை கோட்டை மற்றும் கலெக்டர் அலுவலக பகுதியில் வேலூர் டி.ஐ.ஜி. தாமரைக்கண்ணன், எஸ்.பி., அறிவுச்செல்வம், விழுப்புரம் எஸ்.பி., அமல்ராஜ், கடலூர் எஸ்.பி., அஸ்வின் கோட்னிஸ் மற்றும் டி.எஸ். பிக்கள் பாலசுப்ரமணி, பட் டாபி, வெங்கடாஜலபதி, பன்னீர் செல்வம், மனோகரன், காசிவிசுவநாதன், மகேஸ்வரன், கருணாகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இத ற்கான ஏற்பாடுகளை வட க்கு மண்டல ஐ.ஜி. ஆசீஸ் பங்ரா பார்வையிட்டார். கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிக்கு மதியம் 12.20க்கு திருமாவளவன் வந்தார். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு கோட்டை நோக்கி ஊர்வலம் செல்ல வி.சி.,க்கள் முயன்றனர். இதனைத் தொடர்ந்து திருமாவளவன் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    ——————————————

    வர்டா….

    மன்னாரு.

  24. தலித் கிறிஸ்தவர்களை சர்சுகளில் நுழைய விடுவதில்லை சில ஊர்களில். அதனால் சர்ச்சு நுழையும் போராட்டத்தை திருமா ஏன் நடத்தவில்லை.?

  25. திருமா, திருமா என்று திருமா புராண‌ம் பாடுவ‌த‌ற்க்குப் ப‌திலாக‌ ம‌க்க‌ளிட‌ம் சென்று திருமால் புராண‌த்தை பாடுங்க‌ள்.

    வேலூர் கோட்டையில் உள்ள‌ ம‌சூதியில் நுழைவ‌து போல‌ பாவ்லா காட்ட‌ முய‌ன்றால் இசுலாமிய‌ரின் வாக்கு த‌னக்கு கிடைக்காதா என்ற‌ ஒரு எதிர்பார்ப்பிலே (அது அவ‌ருக்கு கிடைப்ப‌து க‌டின‌ம் என்ப‌து வேறு விட‌ய‌ம்) ஏதோ செய்து பார்க்கிறார். சேல்ஸ் மென் த‌ன் பொருளை விற்க‌ என்ன‌வெல்லாமோ செய்வ‌து போன்ற‌ செய‌ல் தான் அது.

    யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வேலை பார்க்க‌ட்டும். ம‌க்களுக்கு அமைதி அளிக்க‌க் கூடிய‌ , ந‌ம்பிக்கை அளிக்க‌க் கூடிய‌ ஆன்மீக‌த்தை ம‌க்க‌ளிட‌ம் கொண்டு செல்லுங்க‌ள். அப்போது யார் எந்த‌ வேலை செய்தாலும் ம‌க்க‌ளே உண்மையை எடுத்து உரைப்பார்க‌ள்.

    ஆன்மீக‌ வ‌ழியே ந‌ம‌க்கு ம‌றந்து விட்ட‌து. ம‌க்க‌ளின் ம‌ன‌தில் அமைதியை , நம்பிக்கையை உருவாக்க‌க் கூடிய‌ ஆன்மீக‌ த‌லைவ‌ர்க‌ள் இப்போது இல்லை. நொருளை வேண்ட‌னு நீ வாட‌னு, என்று பாடிய‌ தியாக‌ராச‌ர் இல்லை. 600 கோடிப் பொன்னை தூக்கி எறிந்து விட்டுப் போன‌ ப‌ட்டின‌த்தார் இல்லை. மாறாக சாத‌ரண‌மாக‌ இருந்து பில்லிய‌னேர் ஆகிய‌ ஆன்மீக‌ வாதிக‌ளே உள்ள‌ன‌ர். ம‌க்க‌ளும் த‌ங்க‌ளுக்கு காசு த‌ருப‌வ‌னுக்கு ஓட்டு போடுகின்ற‌ன‌ர். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?

  26. #
    ram
    21 January 2010 at 11:06 am

    தலித் கிறிஸ்தவர்களை சர்சுகளில் நுழைய விடுவதில்லை சில ஊர்களில். அதனால் சர்ச்சு நுழையும் போராட்டத்தை திருமா ஏன் நடத்தவில்லை.?
    //
    தலித் இந்துக்களை கோவில்களில் நுழையும் போராட்டத்தை நீங்கள் நடத்துங்கள் ராம், பிறகு மற்றவர்களைப்பற்றி கவலைப்படலாம். இல்லாவிட்டால் அவர்கள் ஆபிரகாமிய மதத்திற்கு மாறுவார்கள், அதன்பின் அது ஆபிரகாமியர்களின் கவலை, ராமிற்கு அது தேவையில்லாதது. ஏன் ஒரு தலித் மதம் மாறுகிறான் என்ற கேள்விக்கு விடை தேடுங்கள்? அவனை மதம் மாற விடாமல் தடுக்க வழி என்ன?

    ராம் பின்னாடி வராத தலித் ஏன் திருமா பின்னால் செல்கிறான்? திருமா அரசியல்வாதியாகவே இருப்பினும் அவன் மேல் உள்ள மேல் நம்பிக்கையை ராமின் மேல் தலித்கள் வைக்காததன் காரணம் என்ன?
    அந்த நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

    திருமாவளவனை முழு இந்துவாக மாற்ற விருப்பமா, இல்லை கிறிஸ்தவராக மாற்றுவது உங்கள் நோக்கமா?, தெளிவு படுத்தவும், திருச்சிக்காரன் போன்று தெளிந்த சிந்தனையோடு இருங்கள்.

  27. குடுகுடுப்பை

    //ராம் பின்னாடி வராத தலித் ஏன் திருமா பின்னால் செல்கிறான்?//

    ஏனென்றால் எனக்கு கட்டைப்பஞ்சாயத்துப் பண்ண தெரியாது. நூறடி ரோட்டில் இருக்கும் காலி இடங்களை ஆக்கிரமித்து ரௌடிகளைக் காட்டி மிரட்டி அபகரிக்கத் தெரியாது. தொழில் நிறுவனங்களுக்குள் புகுந்து பணம் பறிக்கத் தெரியாது. கல்லூரியில் உடன் படிப்பவர்களை கொலை வெறியுடன் தாக்கி அடித்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நடக்க வேண்டும் என்றால் என் ஃப்ரெண்ட்ஷிப் உதவாது. என்னுடன் சேருவதால் சல்லிக்காசுக்கு பிரயோஜனம் இருக்காது. இதை தமிழகத்தின் ஒரு குழந்தை கூட சொல்லுமே!

    //திருமாவளவனை முழு இந்துவாக மாற்ற விருப்பமா, இல்லை கிறிஸ்தவராக மாற்றுவது உங்கள் நோக்கமா?///

    நாம் யாரையும் மதம் மாற்றும் தொழிலைச் செய்யவில்லை. ஆனால் அதைத் தொழிலாகவே செய்பவர்கள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக வேண்டியதும் நமது கடமைதான். ஆன்மீகம் சொல்லிக் கொடுப்பதும் நல உதவிகள் செய்து கொடுப்பதும் மட்டும் போதாது. எதிராளிகள் பற்றிய விழிப்புணர்வும் கூடவே ஏற்படுத்தப் பட வேண்டும். கூடவே வேறு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்லுங்கள். அதை செய்பவர்கள் இருந்தால் அல்லது ஏற்கனவே செய்துகொண்டிருப்பவர்கள் இருந்தாலும் அவர்களுடன் கைகோர்த்து நீங்களும் உதவுங்கள். அப்போது நீங்கள் சொல்வதை கேட்கலாம். ஆனால் வெறுமனே இந்து இயக்கங்கள் மீது குறைமட்டுமே சொல்வதை பகுத்தறிவாக கொண்டிருந்தால் என்ன செய்ய.

    “நீங்கள் கோல் போட மாட்டேன் என்கிறீர்கள், அதனால் நான் எதிராளிக்கு கோல் போட்டுக் கொடுத்தேன்” என்பது போல் இருக்கிறது நீங்கள் பேசுவது.

    சரி..இந்து இயக்கங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பட்டியல்லிடுங்கள். படித்துப் பார்த்து செயல் படுத்துவோம்.

  28. முதலில் இதைப் படிக்க
    ________________________
    விஜய் டிவி அலுவலக முற்றுகை அறிவிப்பு
    (இஸ்லாத்தில் உள்ள இஸ்லாம் பெண்கள், அதுவும் அவர்கள் அணியும் பர்தா பற்றி அவர்களே ஒரு டிவியில் பேச இஸ்லாம் சங்க பொறுப்பாள‌ர்களின் அனுமதி வேண்டும்)
    https://www.tntj.net/?p=9594

    விஜய் டிவி நிகழ்ச்சி வாபஸ்
    https://www.tntj.net/?p=9622

    விளக்கங்கள் :முற்றுகை இல்லை.
    https://www.onlinepj.com/vimarsanangal/vijay_tv
    ___________________________

    இந்த தளத்தின் பின்னூட்டங்களில் அதி புத்திசாலிகளாகவும் , சமத்துவ ஜல்லி அடிப்பவர்களும் – விஜய், சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் இந்து விரோத நிகழ்ச்சிகளுக்கு எதிராக தொலைக்காட்சி நிலையத்தின் முன் ஒரு முற்றுகை போராட்டத்தை இந்து மக்கள் கட்சியோ அல்லது ஹிந்து முன்னனியோ அறிவித்தால் எத்தனைபேர் அதில் கலந்து கொள்வீர்கள்?

  29. ///பர்தா விஷயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய நிகழச்சியை விஜய் டிவி ஒளிபரப்ப இருந்ததையும் அதை கண்டித்து விஜய் டிவி அலுவலக முற்றுகைப் போராட்டத்தை தமிpழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்ததையும் தாங்கள் அறிவீர்கள்.

    மேலும் எங்களுடன் இது குறித்து அறிவிபுபூர்வமாக விவாதிக்க நாங்கள் தயார் என்று தவ்ஹீத் ஜமாஅத் விஜய் டிவிக்கு நேரடி விவாத அழைப்பும் கொடுத்திருந்தது. Click Here

    தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தை மதியம் 2 மணி அளவில் தொடர்பு கொண்ட விஜய் டிவி நிர்வாகத்தினர்,”அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்றும் முஸ்லிம்கள் புன்படும் விதத்தில் ட்ரையலர் ஒளிபரப்பியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது!

    எல்லாப் புகழும் இறைவனுக்கு!

    https://www.tntj.net/?p=9622

    ///

    பகுத்தறிவு சமத்துவ ஜல்லியடித்துக் கொண்டு இந்துக்களை இந்துக்களே அதி புத்திசாலித்தனமாக நினைத்து திட்டிக்கொண்டிருக்காமல் முதலில் நம் உணர்வுகளைக் காக்கும் விஷயத்தில் ஒற்றுமையாக இருந்தாலன்றி ஒரு டிவிகாரர்களிடம் கூட நம்மால் ஜெயிக்க முடியாது என்பதற்கு இதுவே சாட்சி.

  30. இந்த‌ போராட்ட‌ம் எல்லாம் ஓர‌ளவுக்கு தேவை தான்.

    ஆனால் அதை விட‌ முக்கிய‌மான‌து ச‌ரியான‌ ஆன்மீக‌த்தை உண‌ர்வ‌தும், அதை ம‌க்க‌ளிட‌ம் எடுத்து சொல்லுவ‌தும் தான். அதுதான் இந்து ம‌த‌த்தின் வ‌ழி.

    அமைதியாக‌ ரோஜாப் பூக்க‌ள் மல‌ர்வ‌து போல‌ ம‌க்களிட‌ம் ஆன்மீக‌ க‌ருத்துக்க‌ள் பர‌வும் என்றார் ஒரு அறிஞ‌ர்.

    ம‌க்க‌ள் ச‌ரியான‌ ஆன்மீக‌த்தைப் புரிந்து கொண்டால், இத்த‌கைய‌ டீ.வி. நிக‌ழ்ச்சிக‌ளை அவ‌ர்க‌ள் பொருட்ப‌டுத்த‌ மாட்ட‌ர்க‌ள். 6 கோடி இந்துக்க‌ள் ஒரு நிக‌ழ்ச்சியை பார்க்க‌வில்லை என்றால் டி.வி. கார‌னே அதை போட‌ மாட்டான்.

    ந‌டிக‌ர்க‌ள் சிவ‌ன் போல‌ வேட‌மிட்டு ப‌ப்பிள் க‌ம் உடைப்ப‌து போல‌வும், திருட்டு த‌ன‌ம் ப‌ண்ணுவ‌து போல‌வும் ந‌டிக்கும் போது, போராட்ட‌ வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளை அல‌ங்கார‌மாக‌ த‌ளங்க‌ளில் போட்டுக் கொண்டு இருக்கிரார்க‌ளே, அப்ப‌ உணர்வு காணாம‌ல் போய் விட்ட‌தா?

    ச‌ரியான‌ ஆன்மீக‌ம் இல்லாத‌தால் நாளுக்கு நாள் ஒரு செய்தி வ‌ருது. அன்பும், அமைதியும் உடைய‌ ஆன்மீக‌வாதி இருந்தால் ம‌க்க‌ள் ம‌திப்பார்க‌ள்.

  31. @ராம்

    ஒரு தனிப்பதிவாக என் தளத்தில் இடலாம் என்ற எண்ணம் உள்ளது. நான் சார்ந்த மதம் எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறது, ஆனால் அந்த மதத்தில் பெரும்பாண்மை மனிதர்களை வழிபட கூட அனுபதிப்பதில்லை.மதமாற்றம் ஏன் நடக்கிறது? காசு கொடுத்து மாற்றும் ஆபிரகாமிய மதமாற்றிகளின் நோக்கத்தை ஆதிக்க சாதிக்காரர்களிடம் புரியவைத்து தலித்துகளுக்கு வழிபாட்டு உரிமை வாங்கிக்கொடுப்பது, பொருளாதாரத்தில் அவர்களை மேலே கொண்டுவருவது போன்றவைகளுக்கு முன்னுரிமை இந்து இயக்கங்கள் கொடுக்கவேண்டும், அதில் மனப்பூர்வமாக நானும் பங்கெடுப்பேன்.

    திராவிடர் கழக தொடர்புடைய குடும்பத்தில் பிறந்த என் போன்றவர்களை இந்து என அடையாளப்படுத்திக்கொள்ள வைத்தது, ஆபிரகாமிய மத சகிப்புத்தன்மைதான்.:) . மற்றபடி இந்துமதம் பற்றி எந்தப்புத்தகங்களும் படித்தவனல்ல, படித்தாலும் அதில் எதிர்கருத்துகள் இருந்தால் விமர்சிப்பேன்.

    விஜய் டிவியை எதிர்ப்பதால் இந்து மதம் வளர்ந்துவிடாது, விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, எதிர் கருத்துக்களை வைக்கவேண்டும், எதையும் தடை செய்து இறுக்கமாக இருக்கும் மதமாக இந்து மதம் இருக்கவேண்டுமா?

    இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு சென்றடைந்திருக்கிறது என்று பாருங்கள்.
    https://sandanamullai.blogspot.com/2010/01/blog-post_23.html

  32. பிறாமணா்களின் நல்ல பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டு பிற சாதி மக்கள் தங்களின் சமய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.சமுக நம்பிக்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்- இந்துக்கள் அனைவருக்கும் முறைான சமய கல்வி பயிற்சி இதுதான் அனைத்து நோய்களுக்கும் மருந்து. அது விவேகானந்தாின் ஞான தீபம் ஆகும்.

  33. ரொம்ப கஷ்டம். ஓரளவுக்குத்தான் கடைபிடிக்கலாம். மற்றபடி ஏலாது.

    எடுத்துக்காட்டு: அசைவம் உட்கொள்ளுதல். பிராமணர்களின் சைவப்பழக்கத்தை ஏற்பது நடக்காத காரியம். ஆனால், எப்போது, எங்கு சைவம் உட்கொள்ள வேண்டுமோ அங்கு உட்கொள்ளுவார்கள். கோயிலுக்குப்போகும்போது, விரத நாட்கள், விசேஷ நாட்கள், போன்றுமட்டுமே சைவம். ஆனால் பிராமணர்கள் வீட்டிலிருந்து சைவமே.

    பிராமணப் பழக்கங்களை ஒழுகினால், சமூகத்தில் பலபல தொழிலகள் செய்ய ஆட்கள் இருக்கமாட்டார்கள்.

    கிடா வெட்டித்தான் சாப்பாடு போடுவார்கள் குழந்தைக்கு காதணிவிழாவில் கூட. பிராமணர்களைக் காப்பியடிக்கும் போது வாழ்க்கையில் கிட்டும் பல இன்பங்கள் கிட்டா.

    இப்ப்டிச்சொல்லிக்கொண்டே போகலாம். கும்பிடும் சாமிகளில் கூட பிராமணர்கள் பழக்கத்தைவிட மற்றவர்கள் சாமிகள் பாப்புலர். அப்படியே பிராமணர்கள் சாமிகளை வணங்கினாலும் அதை தம்வழியே எடுத்தே பார்க்கின்றனர்.

    அழகர் என்பது திருமாலின் பெயர். ஆனால் அவர் வழிபாடு முழுக்கமுழுக்க அபார்ப்பன ஸ்டைல். அழகர் சாமியின் குதிரை படத்தையும் பாருங்கள். இந்த அபார்ப்பன ஸடைலினால்தான் அழகர் ரொம்ப பாப்புலர் மதுரையில். இந்த ஸடலைப்புகுத்திய்வர் திருமலை நாயக்கர். அழகர்சாமியைப்பொறுத்த்வரை, கோயிலுள் பூஜை செய்வது மட்டுமே பட்டர்கள்; மற்றபடி முழுக்கமுழுக்க அது ஒரு நன் பிராமின் ஷோ 🙂

    எனது ஆசிரியர் என்னிடம் அடிக்கடி கூறுவது: என்னென்னவெல்லாமோ பிறரைத்திருப்தி செய்ய (அவர் மனைவியைச்சொல்கிறார்) செய்யவேண்டியதிருக்கிறது பார. அதாவது பிராமண பழக்கங்களை ஒழுகுவது எரிச்சலைத்தருகிறது; மற்றும் அவரின் நேரத்தையும் விழுங்குகிறது. இவர் ஒரு திருவரங்கத்து அய்யங்கார்.

    அதாவது பிராமணப்பழக்கங்களை ஒழுகுவது – நூற்றுக்கு நூறாக – இற்றைநாள் பிராமணர்களுக்கே முடியாதபோது மற்றவர்களுக்கு எப்படி முடியும்?

  34. பிராமணத்தெய்வங்கள் என்ற சொல்லுக்குப் பதிலாக பெருந்தெய்வ வழிபாடு என்ற சொல்லை எடுத்துக்கொள்ளவும் courtesy: Jeyamohan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *