சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகத் தமிழர்கள் கொண்டாடி வருவதை ஓர் அரசாணையால் தை மாத முதல்நாளாக மாற்ற தமிழ்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அரசாணை போட்டபிறகும் ’அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது’ என்று ஏன் சொல்லவேண்டுமென்றால் உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான தமிழர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இது தொடர்பான பொதுநல வழக்கை தமிழக அரசால் இன்னும் வெல்ல முடியவில்லை. தமிழக உயர்நீதி மன்றங்களில் தமிழக அரசு வெற்றி பெற்றாலும் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் இந்த வழக்கில் தமிழக அரசு வெல்லக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை அரசாணையாலும் பொய்யான பரப்புரைகளாலும் அரசு மாற்ற முனைந்து கொண்டிருகிறது. அரசின் இந்த முனைப்பு தமிழ் மரபுக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பதோடு தமிழ் மரபிற்கே எதிரானது என்பதையும் விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
சித்திரை முதல்நாளே ஆண்டு தொடக்கமாகக் கொள்ளவேண்டும் என்பதற்கு பலவிதமான ஆதாரங்களை இலக்கிய மற்றும் வரலாற்று அறிஞர்கள் அளித்துவிட்ட போதிலும் ஏன் தை மாதத்தில் ஆண்டு துவங்க வேண்டுமென்ற ஆதாரங்களை அரசோ அல்லது இந்த கருத்தாக்கத்தை ஆதரிப்பவர்களோ இதுவரை அளிக்க வில்லை. வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் இவை எதிலும் தை மாதம் முதல் மாதம் என்பதற்கு ஆதாரமான கருத்தோ அல்லது சித்திரை முதல் மாதம் என்பதற்கு எதிரான கருத்தோ இதுவரை கிடைக்கவில்லை. இதற்கான தரவுகளைத் தருவதற்கு அரசு தவறியதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பாக அறிஞர்கள் எழுப்பிய கருத்துகளுக்கும் வினாக்களுக்கும் விளக்கமளிக்கவில்லை.
இந்த கருத்தாக்கத்தை ஆதரிப்பவர்கள் வைக்கக் கூடிய சில வாதங்களை ஆராய்வோம்:
1. முக்கியமான ஆதாரமாக இதை முன்மொழிந்தவர் மறைமலை அடிகளார் என்று கருதப் படுகிறது. ஆனால் எந்தெந்த ஆதாரங்களை வைத்து மறைமலை அடிகளார் தைமாதம் முதல் மாதம் என்றார் என்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை. மறைமலை அடிகளார் அவ்வாறு கருதுகிறார் என்பதே இதை ஆதரிப்பவர்கள் தரும் மிகப்பெரிய தரவாக இருக்கிறது. இதைத் தாண்டிய இலக்கிய மற்றும் வரலாற்றுத் தரவு எதனையும் நாம் காணமுடிவதில்லை. ஆனால் மேற்கொள்ள எந்த தரவுகளுமற்ற நிலையில் இது மறைமலை அடிகள் மற்றும் வேறு சிலரின் தனிப்பட்ட அபிலாஷை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அபிலாஷை நிறைவேற்றலை தமிழைக் கொண்டு செய்ய முற்படும்போது உண்மையான தமிழன்பர்கள் வெட்கமும் வருத்தமும் அச்சமும் கொள்ளவேண்டியிருக்கிறது.
2. சங்க இலக்கியங்களில் தைமாதம் சிறப்பித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதும் தைநீராடல் என்பது தமிழர் பண்பாட்டின் ஓர் அம்சம் என்பதும் இந்தக் கருத்தாக்கத்திற்கு ஆதாரமாக குறிக்கப் பெறுகிறது. இவ்வாறு தைமாதம் சிறப்பிக்கப் படுவது உண்மையென்றாலும் இவற்றில் எந்த ஆதாரமும் தைமாதத்தை புத்தாண்டுத் தொடக்கமாக குறிக்கவில்லை என்பதும் உண்மை! ஆனால் நோன்பு நோற்று, நோன்பு நிறைவேற்றலாகத் தைநீராடல் செய்வதையே சிறப்பித்துக் கூறும் சங்கத் தமிழ்ப் பாடல்களை நாத்திகர்களும் இந்துமத எதிர்ப்பாளகளும் தைப்புத்தாண்டுக்கான ஆதாரமாகக் கூறுவது புரியாத புதிராக இருக்கிறது. சங்க காலம் தொட்டு பழந்தமிழரின் ஆன்மிக ஈடுபாடுகளுக்கு இவற்றை ஆதாரமாகக் கொள்ளலாமேயன்றி தைப்புத்தாண்டுக்கும் இந்த தைமாதச் சிறப்பித்தலுக்கும் யாதொரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
3. பொங்கல் பண்டிகை தமிழருக்கு முதன்மையான ஒரு திருநாள், ஆகவே அதுவே புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பது இன்னொரு வாதமாக வைக்கப் படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட்டதற்கு எந்தவிதமான தரவுகளும் இல்லை. இது தொடர்பான கல்வெட்டோ இலக்கியச் சான்றோ அல்லது பிறிதொன்றோ இல்லை. ஆதாரமில்லை என்பதனால் கொண்டாடப் படவில்லை எனக் கொள்ள இயலாது என்றொரு வாதம் வைக்கப்படலாம். இது உண்மைதான் என்றாலும் இத்தனை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படும் பொங்கல் எவ்வாறு குறிக்கப் பெறாமல் இருக்கும் என்பது ஒரு மாபெரும் வினாவாகத் தோன்றுகிறது. பாரதமெங்கும் மகர சங்கராந்தி எனவும் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப் பட்ட விழா தமிழகத்தில் கொண்டாடப்படத் தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் விவசாய மற்றும் வழிபாடு தொடர்பான வழக்கங்களோடு மிக உற்சாகமாகக் கொண்டாடப் படத் தொடங்கியது என்று கருதுவதே மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.
பார்க்க: உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்
4. தைப் பிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கையூட்டும் பழமொழியை புதியன தொடங்குதலோடு தொடர்பு படுத்தி தைப்புத்தாண்டுக்கு ஆதரவாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் விவசாய முறைமைகளை நோக்கும்போது ஒவ்வொரு தனிமனிதனின் ஆண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் காலமாக தை மாதத்தைக் காணலாம். விவசாயக் காரியங்கள் முடிந்த பிறகே அவ்வாண்டு திட்டமிடப்பட்ட திருமணமோ. வேறு சொத்துக்கள் கொடுக்கல் வாங்கலோ. தீர்த்த யாத்திரையோ. நேர்த்திக்கடன் நிறைவேற்றலோ செய்வதற்கான நேரமும் நிதியும் வாய்க்கப் பெற்றிருக்கும் காலமே தைமாதம். தை நீராடல் எனும் பழந்தமிழர் வழக்கத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஆக இவை ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்காமல் ஆண்டு நிறைவை நோக்கிச் செல்லுதலைக் குறிக்கிறது என்பதே வெளிப்படை.
சித்திரை புத்தாண்டை மாற்றுவதற்கு தீவிரமாக சொல்லப்படுவன இம்முறையில் 60 ஆண்டுகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் செங்கிருதமாக (சம்ஸ்கிருதம்) இருப்பதும் அது தொடர்பாகச் சொல்லப்படும் புராணக் கதையுமாகும். செங்கிருதம் பாரதப் பண்பாட்டில் இரண்டறக் கலந்தவொன்றாக இருக்கிறது. வேதாச்சலம் என்ற தன் பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்டு அடிகளார் இயங்கினாரே தவிர அந்தப் பெயருக்காக தன்னையே மாற்றிக் கொள்ளவில்லையே! மேலும் அவர் செய்துகொண்ட பெயர் வெறும் மொழிமாற்றுதானே! அதுபோல கருணாநிதி, ஜெயலலிதா என்று முற்றிலும் செங்கிருதப் பெயர் கொண்டவர்களை பெயருக்காக யாரும் ஆட்சேபித்துவிடவில்லையே! பெரும்பாலோருக்குத் தெரியாத ஒரு புராணக் கதையை தூசி தட்டி எடுத்து, அந்தக் கதையின் படிமங்கள்ள், உருவகங்கள் மற்றும் அது உணர்த்தும் உட்பொருள் பற்றிய எதையும் தெரிந்து கொள்ளாமல், காழ்ப்புணர்ச்சியுடன் சித்திரைப் புத்தாண்டுக்கு எதிரான கருத்தை உருவாக்கும் வகையில் இக்கதையைப் பரப்புரைப்பது அடாத செயல்.
சித்திரைப் புத்தாண்டு தான் அறிவியல்பூர்வமானதும் பல இலக்கிய மற்றும் வரலாற்று ஆதாரங்கள் கொண்டதுமான தமிழ் மரபாகும் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.
தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா.
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.
உண்மை வேறாக இருக்கையில், இனவாதத்தையும், வெறுப்புணர்வையும் கொட்டி எழுதப்பட்டிருக்கும் மேற்காணும் பாரதிதானின் பாடல் எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் தெள்ளத் தெளிவாக உணர முடியும்.
இனி இது எவ்வாறு தமிழ் மரபுக்கு எதிரானது என்பதையும் பார்ப்போம்.
சித்திரைப் புத்தாண்டு தமிழரின் அறிவியல் பூர்வமான ஓரு மிகப்பழைய வழக்கம். நெடுநல்வாடையின் ஒரு பாடல் இதைப் பறைசாற்றுகிறது. ஆவணி மாதத்தில் ஒரு ஆண்டுத் தொடக்க முறை இலக்கியத்தில் காணப்பட்டாலும் அது வழக்கில் வராமல் சித்திரையே நிலைத்திருக்கிறது. இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட வசந்தகாலம் அல்லது இளவேனிலின் தொடக்கம் பருவங்களின் புதிய சுழற்சிக்கு அடித்தளம் அமைக்கிறது. பனியால் கட்டுண்ட வண்டுகளின் சிறகுகள் இளஞ்சூட்டில் விரிந்து புதிய பூக்களின் மகரந்ததை நாடும் பொற்காலம் சித்திரை. வாடை தந்த நடுக்கம் நீங்கி வசந்தம் தரும் தென்றலின் சுகத்தில் மகரந்தம் மனக்கும் மாதம் சித்திரை.
பல பண்பாடுகளிலும் நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஓர் ஆண்டின் பருவங்களை ஆறு பருவங்களாகப் பிரித்து அதில் இளவேனிலை முதல் பருவமாக வைத்தார் நம் பழந்தமிழர். ஆனால் அரசோ அதில் மார்கழி மற்றும் தை மாதத்திற்கான முன்பனிக்காலத்தை இரண்டாக உடைத்து ஒரு ஆண்டுக் கணக்கைத் தொடங்க ஆவன செய்துகொண்டிருக்கிறது. ஓர் ஆண்டின் மிக நீண்ட இரவுப் பொழுதைக் கொண்டிருக்கும் தை முதல்நாளை ஆண்டுத் தொடக்கமாக்குவதும் பகலும் இரவும் ஒரே அளவினதாக இருக்கும் சித்திரை முதல்நாளை மாற்றுவதும் பழந்தமிழரின் அறிவியல் நோக்கை அவமதிப்பதாகும். ஆண்டுத் தொடக்கம் என்பதை வானவியலின் நிகழ்வுகளைக் கொண்டே முன்னோர் கணித்தனர். இன்றும் அரசு தை மாத முதல் தேதியை முன்னோர் வகுத்த பஞ்சாங்கத்தை வைத்தே கணிக்க இயலும். அவ்வாறு கணிக்கும்போது ஆட்டின் உருவத்தைக் கொண்ட மேழ இராசிக்குள் ஆதவன் நுழைவதே ஆண்டுப் பிறப்பு எனக் கொள்ளுதலின் முக்கியத்துவம் புரியும். ஏனெனில் ஆடு என்கிற வேர்ச்சொல்லைக் கொண்டே ஆண்டு என்ற சொல் பிறந்தது என்ற கருத்து இருக்கிறது.
தற்கால வழக்கான கல்வி ஆண்டும் கணக்கு ஆண்டும் சித்திரை புத்தாண்டை ஒட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் – தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!
தொடர்பான சுட்டிகள்:
சித்திரையில்தான் புத்தாண்டு – தினமணியில் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன்
தைந்நீராடல் – ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன்
‘Dravidian’ New Year Ordinance facing defeat and death : B R Haran
Tamil New Year and the Tamil Nadu Government – I : B R Haran
Tamil New Year and the Tamil Nadu Government – II : B R Haran
I wonder why change the name of Samiskritham/ Sanskrit into Sengkritham in this article.
Unrelated to the topic, DMK leaders of old, used to call Shakespear as “Sega Priyar”, apparently a tamil translation.
சம்ஸ்கிருதத்தை செங்கிருதம் என்று எழுதியதற்குக் காரணம் சம்ஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள் அறியாதவஎகள் அதன் செம்மையைப் புரிந்து கொள்ளலாம் என்பதற்காகவே. இப்படி தமிழில் எழுதுவது அம்மொழியை சிறப்பிக்கவே செய்கிறது என்பது எண் எண்ணம். மேலும் தமிழின் உச்சரிப்பு இயல்புகளுக்கு ஏற்ப மொழிகளின் பெயர்களை மாற்றிச் சொல்வது இயல்புதான். எ-கா: ஆங்கிலம், தெலுங்கு.
சேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று சிலர் குறிப்பது கம்பர் லக்ஷ்மனனை இலக்குவன் என்று குறிப்பது போலத்தான்.
அருமையான கட்டுரை. காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் அதை வெட்ட வெளிச்சமாக்கியதற்கு நன்றி. எது எப்படி இருப்பினும், தமிழ் புத்தாண்டை கொண்டாடுபவர்கள் சித்திரையில்தான் கொண்டாடுவார்கள். ஆங்கில புத்தாண்டையும் சனவரி இன்றி, அக்டோபர் போன்ற ஏதாவது மாதத்தில் தான் தமிழர்கள் கொள்ளவேண்டும் என்று கலைஞர் அரசு முடிவெடுத்து அதை அவரது கண்மணிகளும் ஜாலராக்களும் ஒப்புக்கொண்ட்டலும் ஆச்சரியமில்லை. அதைச் செய்யமாட்டார். ஏனெனில் இந்து மதம் தவிர குறிப்பாக பார்ப்பனர்கள் தவிர மற்ற எவர் மீதும் துணிவுடன் பாயமாட்டார்.
திருச்சிற்றம்பலம்
ஒரு சிலர் தம் செல்வாக்கால் ஒரு பழமையான மரபை மாற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டால், அது பெருமை அல்ல; அது அவர்களின் சிறுமையையே வெளிப்படுத்துகிறது. எல்லா தமிழர்களின் கருத்தை சிறிதும் விசாரிக்காமல் அவரவர் தம் விருப்பத்திற்கு தமிழ்ப் புத்தாண்டை மாற்றினால் அதை எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை; ஏற்றுக்கொள்ளவும் படாது. அவ்வாறு ஏற்றுக்கொள்பவர் தமிழுணர்வு அற்று சிலரின் சுயனலதுக்குச் சோடை போனவர்கள் ஆவர்.
திருச்சிற்றம்பலம்.
அது சரி பார்ப்பனரின் துணையோடு அரியணை ஏறி வாயில்லாப்பூச்சிகளான பார்ப்பனர்களை ஒடுக்குவதிலும் ஏளனப்படுத்துவதிலும் வீரம் காட்டும் இந்த மு.க. அரசு இல்லாமல் வேறு மு.க. அரசு வந்தால் மீண்டும் புத்தாண்டு மாதம் மாறுமா?
அசல் 28 நெ சுத்த வாக்கிய பஞ்சாங்கம் பார்க்கும் முறைகளை
ஒரு பாடமாக தமிழ் ஹிந்துவில் எழுதினால் நலம்.
அய்யா வணக்கம் தமிழ் மொழி வரலாற்றில் கிறிஸ்தவ பாதிரியார்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பது ஏன் ???
ஒரிஜினல் ஹிந்து என்றும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டடமடர்கள், கருணாநிதி மற்றும் காங்கிரஸ் காரர்களுக்கு ஹிந்துவை எதிற்பதுதான் சோசியலிசம் ஹிந்துவை அவமனபடுதுவதும் அவர்களின் பழக்க வழக்க்ஹளையும் குறை கூறுவதும் அவர்களின் நடைமுறையை குறைகுருவதும் அவர்களின் சோசியலிசம் கிறஸ்தவர்கள் எது செய்தலும் தவறில்லை ஆனால் ஹிந்து எது செய்தலும் தவுறு
ஹிந்து வஹா இருப்போம் ஹிந்து மதம் காப்போம். ஹரிஓம்
தமிழ்ப் புத்தாண்டு சித்தரையில்தான் பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது என்பதற்குரிய சான்றுகளை அறிந்து கொள்ள வேண்டுகிறேன். ஓகை நடராஜன் அவர்களோ, மற்றவர்களோ தக்க சான்றுகளைத் தெரிவித்தால் மகிழ்வேன். நெடுநல்வாடையில் ஒரு பாடலில் உள்ளதாகக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெடுநல்வாடை முழுவதும் ஒரு பாட்டுதான். அதில் ஒரு பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. நெடுநல்வாடையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சித்தரை ஆண்டின் தொடக்கம் என்பதற்கான அடிகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். உங்கள் தரவுகள் கிடைத்த பிறகு மேற்கொண்டு கருத்து அறிவிக்கிறேன்.
– ஆராதி –
Dear Mr Natarajan
Thanks for clearing my doubt. My apologies for any misunderstanding..
I am going going to go off the topic and my apology upfront.
My two cents worth:
I feel Sanskrit/ Samiskritam are the words used widely and it will be easy for a layman like me to understand when used in such articles as yours.
When there are appropriate alphabets in Tamil which can be used correctly, I am at a loss to understand why such names like Krishnan are changed to Kritinan Shakespear is the name of the person and can be written correctly in Tamil. Segapriyan is not the name of the English poet. Neither Kritinan will be equivalent to Krishnan
My heart felt thanks for your great article
Regards
Rama
Nice Article sir. But I think you missed to add a few more points. Actually I learnt it from one show in Jaya Plus tv yesterday, where a scientist couple were talking about the greatness of our tradition.
Thai 1, as you said is the longest night – once upon a time. Now we know Dec 21st is the longest night of the year(so your statemnt in the article might be misleading to many). They say, the reason is, the earths axis changes by 1 degree every 72 years and Jan 1st, ie. the current Thai 1 was fixed based on the earths position 1500 years back. Counting the 1 degree shift for 1500 years, the longest day have shifted from Jan 14 to Dec 21. And so if we want to correct our calendars, Thai 1 should fall on Dec 21. And the tamil new year instead of April 14, shoul fall on I think March 21.
மலர்மன்னன் சார்,
நமக்கு, நமது பிழைப்பை கவனிபதற்கு தான் நேரம் சரியாக உள்ளது.
கலூரிகளும், பள்ளிகுடங்களும் கிறிஸ்துவ மிஷனெரியின் கையில் இருக்கிறது.
ஹிந்துக்கள் தமிழ் படித்தால் எந்த கல்வி கூடத்தில் வேலை கிடைக்கும்.
minority institution கு அரசாங்கம் உதவி தொகை கொடுப்பதை நிறுத்தினால் தான் இந்த நிலை மாறும்.
அல்லது, ஒவொரு ஜாதியும் minority ஆக அறிவிக்க பட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இந்து மதம் பிழைக்கும். எல்லா ஜாதியினரும் பள்ளிகூடங்களை கட்டலாம். ஹிந்துக்கள் எல்லோருக்கும் admission கொடுக்கலாம் எந்தவித ஒதுக்கீடும் இன்றி.
இலையேல் கல்விக்கு கிறிஸ்துவர்களை அண்டியும் மதம் மாறியும் பிழைக்க வேண்டியது தான். இப்பொது நடப்பது மாதிரி
///சேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று சிலர் குறிப்பது கம்பர் லக்ஷ்மனனை இலக்குவன் என்று ///
இது மிகவும் அநாகரீகமான ஒன்று. நாம் தமிழ்ப்படுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் பெயரை கொச்சைப்படுத்துவது ஞாயமில்லை. ஷாஜஹான் என்பது ஒருவர் பெயர் அதை சாசகான் என்று உச்சரிக்கிறார்கள். ஷாஜஹான் கேட்டால் சிரச்சேதம் செய்யச் சொல்லுவான். ஒரு விஷயம் நாம் கவனிக்க வேண்டும். உச்சரிப்புக்குத் தேவையான எழுத்துக்கள் இல்லாத மொழிகள் தேய்பிறையை சந்திக்கும்.
ஆங்கிலத்தில் வெறும் இருபத்தாறு எழுத்துக்கள். தமிழ் மட்டுமல்ல பல இந்திய மொழிகளின் சரியான உச்சரிப்புக்கு ஆங்கிலத்தில் எழுத்துக்கள் இல்லை. ஆனால் அவை பிழைத்திருப்பது அரசியல் ஆதிக்கத்தால் தானே ஒழிய மொழி வளத்தால் இல்லை.
எனவே தமிழ் மொழியில் ஜ ஷ ஹ ஸ் போன்ற உச்சரிப்பை எளிதாக்கும் எழுத்துக்களை நீக்கிக் கொண்டிருந்தால் பிற மொழிகளோடு நாம் எளிதில் கலக்க முடியாது. மொழியை ஊடகமாக பயன் படுத்துவதே அறிவு. அதை உணர்ச்சியாக்குவது பகுத்தறிவன்று. ஆக தமிழ்ப்படுத்துகிறேன் என்ற பெயரில் பிறர் பெயர்களை அல்லது பொதுப்பெயர்களை மோசமாக தமிழ்ப்படுத்துவது அநாகரீகம் மட்டுமல்ல மொழித்தீவிரவாதமே ஆகும்.
///தை மாதத்தில் அப்படி என்ன விசேஷம்? அது திருவள்ளுவர் பிறந்த மாதம்.
திருவள்ளுவர் அந்த மாதத்தில்தான் பிறந்தார் என்று (‘பகுத்தறிவுவாதிகள்” ஏற்கிற வகையில்) எப்படித்தெரியும்? இப்படிக்கேட்பதே, பகுத்தறிவுக்கு விரோதம்.
சரி, தொல்காப்பியர் – கலைஞர் கையினால் உரை எழுதப்படுகிற பெருமையைப் பெற்ற தொல்காப்பியத்தை எழுதியவர் – திருவள்ளுவருக்கு அறுநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே பிறந்தாரே? அவர் பிறந்த மாதத்தில் புத்தாண்டைத் துவக்க, ஏன் கலைஞர் ஆணையிடவில்லை? உஸ்!!! அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசக் கூடாது. இது “கலைஞர் ஆதரவுத் தமிழறிஞர்கள்” ஏற்றுக்கொண்டுள்ள விஷயம்.
தவிர, கலைஞர் தனது முடிவிற்கு ஒரு ஆதாரமாக காட்டியிருக்கிற மாதிரி, “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி இருக்கிறதே? ஹையா!! இப்ப என்ன செய்வே? இப்ப என்ன செய்வே….?///
இந்தச் சுட்டியைப் படிக்கலாம். ஒரு வரலாற்றி ஆய்வை வெளியிட்டுள்ளனர்.
https://jayaraman.wordpress.com/2008/01/24/newyear
அம்பேத்கர் பிறந்தநாளை யாரும் கொண்டாடவில்லை என்று அந்த ஜாதிக்காரர்கள் சொல்லியதால் பார்ப்பன பண்டிகை என்று அவர்கள் சொல்லிக்கொள்ளும் சித்திரைப் புத்தாண்டை ஒட்டு அரசியலுக்காக இடம் மாற்றி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
@ஆராதி
//நெடுநல்வாடையில் ஒரு பாடலில் உள்ளதாகக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெடுநல்வாடை முழுவதும் ஒரு பாட்டுதான். அதில் ஒரு பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. நெடுநல்வாடையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சித்தரை ஆண்டின் தொடக்கம் என்பதற்கான அடிகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.//
“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டி லம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல் வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும்
கலைஞர் ஆட்சியில் உண்மையிலேயே மக்களுக்கு உபயோகமான திட்டங்கள் வருவது அரிது. அவருக்கு தம்மை அனைவரும் புகழ வேண்டும் – தனக்கு பின்னும் பெயர் நிலைக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. திருவள்ளுவர் சிலை வைப்பது, தொல்காப்பியம் – திருக்குறள் உரை எழுதுவது (அதன் தரம் எப்படி இருந்தாலும்), முடிந்த இடங்களில் எல்லாம் கல்வெட்டு வைத்துக் கொள்ளுவது, இந்த புத்தாண்டு மாற்றம் என்று சற்றும் ஒரு அரசு செய்ய வேண்டிய காரியங்களை தவிர்த்து இது போன்ற மற்ற செயல்களில் ஈடுபடுகிறார். ஜெயலலிதா இதற்கு சற்றும் குறைந்தவர் அல்ல – கருணாநிதி புகழ்ச்சி பிரியர் என்றால், அவர் புகழ்ச்சி வெறியர்.
இந்த ஷேக்ஸ்பியர் – செகப்பிரியர், தமிழில் ஜ – ஷ – ஹ போன்ற எழுத்துக்கள் இருக்கலாமா என்கிற விவாதம் இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லை. இருந்தாலும் ஒரு கருத்தை சொல்லி விடுகிறேன் – கம்பரும் – ஆழ்வார்களும் – நாயன்மார்களும் – இருந்த காலத்தில் ஜ – ஷ – ஹ இருந்ததா என்று தெரியவில்லை – அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம். ஜ – ஷ – ஹ ஒரு பிற்சேர்க்கை என்று வைத்துக் கொண்டாலும் நா – னா – போன்ற எழுத்துக்களை ஒரே எழுத்தாக எழுதி வந்தோம் – இப்போது எழுத்து சீர்திருத்தம் ஏற்பட்டு இரண்டு எழுத்துக்களாக எழுதுவதை எழுத்து வளர்ச்சியாகவே கருதுகிறோம் – அதே நேரத்தில் ஜ – ஷ – ஹ வை மட்டும் ஏன் மொழி வளர்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வதில்லை? மற்ற மொழிச் சொற்களையும் பேச உபயோகப் படுகிறது – வடமொழி மந்திரங்களையும் – ஒலிப் பிழையின்றி சொல்ல உதவுகிறது எனும் போது, அந்த எழுத்துக்களை ஏன் ஒதுக்க வேண்டும்? வடமொழி பார்ப்பனர்கள் மட்டுமே உபயோகபடுத்துவது – மந்திரங்களும் அப்படியே – இவை இரண்டுமே தேவை இல்லை – மற்ற மொழி சொற்கள் தமிழுக்குள் சீரணிக்கப் படவே கூடாது – (திருவள்ளுவரே ‘கூலி’ போன்ற சொற்களை ஏற்றுக்கொண்டதை கவனிக்க) – இவை தமிழகத்துக்கு தேவை இல்லை கருதினால் மேலே பேச எதுவும் இல்லை.
/// அம்பேத்கர் பிறந்தநாளை யாரும் கொண்டாடவில்லை என்று அந்த ஜாதிக்காரர்கள் சொல்லியதால் பார்ப்பன பண்டிகை என்று அவர்கள் சொல்லிக்கொள்ளும் சித்திரைப் புத்தாண்டை ஒட்டு அரசியலுக்காக இடம் மாற்றி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது ////
ராம் ஐயா, அப்படி இல்லை. இந்த தைமாத தகிடுதத்தம் அறிவிக்கப்பட்டபோது அந்த வருடத்திற்கான பட்டியலில் இந்த அம்பேத்கார் பிறந்தநாள் இல்லை. ஆனால், இந்த தைமாத புதுவருட அறிவிப்பு பயங்கரமாய் தோல்வியடைந்தது. தமிழகத்தை தவிர மற்ற எல்லா தமிழ்பேசும் உலகலாவிய சமுதாயமும் இந்த மாற்றத்தைப் புறக்கணித்து ஏப்ரலில் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். இலங்கையும், மலேசியாவும், அதிகாரபூர்வமாக ஏப்ரலில்தான் புதுவருட அறிவிப்பு செய்தார்கள். பிரபாகரன் கூட ஏப்ரலில்தான் புதுவருட வாழ்த்து சொன்னார். (அதுவே அவர் சொன்ன இறுதி புதுவருட வாழ்த்தாகிப்போனது ஒரு சோகம்..) ஏப்ரலில் தமிழக கோயில்களில் பூசைகள் தடைசெய்யப்பட முயற்சிசெய்யப்பட்டு அதற்கு பலத்த எதிர்ப்பு எழும்பியது. எல்லாவற்றிற்கும் மேலாக, கலைஞர் டிவியில் “சித்திரை மாத பிறப்பு விழாவை” முன்னிட்டு சிறப்பு கூத்துகள் போட்டார்கள் – புதுவருடம் என்று சொல்லாமல். அதனால், என் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லி – அம்பேத்கார் பிறந்தநாளை அடுத்த வருட விடுமுறைப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். மக்கள் கொண்டாடும் இந்த தினத்தை “அம்பேத்காரை கொண்டாடும் விழா”வாக சொல்லிக்கொள்ளலாமே. அதற்காகத்தான்.
I like to point out some interesting episode that happened in my life. Though it is a deviation it is connected to the above arguments, with regard to the name of the person. One of my superior’s name was Mr. Naig. When his name was written in a cover addressed to him as Mr Naik ( it is a proper noun it can be written in any way ), he called the person and fired him and returned the cover itself asking him to correct the name on the cover. One’s name and spelling is so much important that nobody can change it or translate it. The so called Tamil pandits should know this unanimous truth.
அருமையான கட்டுரை எழுதிய ஓகை நடராஜனுக்குப் பாராட்டுக்கள்.மகர சங்கராந்தி பொங்கலாகவும் தமிழர் திருநாளாகவும் மாற்றப்பட்டதைக் குறித்து அவர் ஒரு கட்டுரை எழுதவேண்டும்.
அன்புடன்
சுப்பு
//தமிழ்ப் புத்தாண்டு சித்தரையில்தான் பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது என்பதற்குரிய சான்றுகளை அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.//-ஆராதி
ஆரதி, நீங்கள் சுட்டியது போல் நெடுநல்வாடை ஒரே பாடல்தான். அருண் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அப்பாடலின் 160,161,162,163ம் வரிகள் சித்திரையில்தான் புத்தாண்டு என்பதற்கு சான்றாக நிற்கின்றன.
திண்ணிலை மருப்பின் ஆடுதலை ஆக,
விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து,
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய,
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிதுஉயிரா;
ஆதவன் மேழ இராசியைத் தொடக்கமாக வைத்து மற்ற இராசிகளில் பயணிக்கிறான் என்பது இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆதவனின் ஒரு சுழற்சியே ஓர் ஆண்டு என்று கொள்ளப்படுவதால் ஆதவன் மேழ இராசியில் பயணிக்கும் சித்திரை மாதமே ஆண்டின் துவக்கம் என்பது ஐயந்திரிபர தெளிவிக்கப் படுகிறது. தை மாத புத்தாண்டுக்கு இதுபோன்ற எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பொங்கல் திருநாள் கொண்டாடப் பட்டதற்கே இலக்கிய ஆதாரங்கள் இல்லை. இதை நான் கொடுத்திருக்கும் மற்ற சுட்டிகளிலிருந்து அறியலாம்.
மற்றுமொரு சுவையான சுட்டி:
https://www.thinnai.com/?module=displaystory&story_id=60905282&format=html
//Thai 1, as you said is the longest night – once upon a time. Now we know Dec 21st is the longest night //-Satish
சதிஷ், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அறிவியல் உண்மை சரிதான். தற்காலத்தில் மிக நீண்ட இரவைக் கொண்ட நாள் டிசம்பர் 21. அதேப்போல் தற்காலத்தில் பகலும் இரவும் ஒரே அளவினதாக இருக்கும் நாள் மார்ச் 21. இந்த நாளில்தான் இளவேனில் தொடங்குகிறது. இவ்வாறு சுமார் 23 நாட்கள் நமது பஞ்சாங்கங்களில் மாறிப் போயிருக்கின்றன. பூமியின் அச்சு தன் நிலையிலிருந்து தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் இந்த வேறுபாடு களையப்படவேண்டும்.
ஆனால் இதன் காரணமாக புத்தாண்டு தை மாதம் தொடங்கினால் என்ன தவறு என்ற வாதம் ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஏனென்றால் புத்தாண்டு இளவேனில் காலத்தில் தொடங்கப்படவேண்டும். பொதுவாக சித்திரை மாதம் துவங்கும் ஏப்ரல் 14 இள்வேனிற்காலம்தான். நமது முன்னோர் வகுத்த பருவங்கள் இளவேனிலிருந்தே தொடங்குகின்றன.
ஓகை நடராஜன்.
அரசாங்கம் தனது வேலைக்காக மட்டுமே எந்த முறையையும் வைத்து “ஆண்டு” என்பதை வைத்துக் கொள்ளலாம். ஆனால் மக்களை இப்படித்தான் வருடப் பிறப்பைக்கொண்டாட வேண்டும் என்றுக் கட்டுப்படுத்த உரிமை இல்லை. தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் வருடப் பிறப்பை யுகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு என்று சொல்லப் படுகிறது) என்றுதான் கொண்டாடுகிறார்கள். அதுபோல ஏனைத் தமிழர்களும் அரசின் அறிவிப்பைப் பொருட்படுத்தாது சித்திரை முதல் நாளை வருடப் பிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
இந்துப் பண்பாடு, பாரதக் கலாச்சாரம் எனப் பேசும் நம் நாட்டில் ஆண்டுப் பிறப்பு மட்டும் மாறி மாறி வருவதற்குக் காரணம் என்ன? இந்தியா முழுமைக்கும் ஒரே வருடப் பிறப்பு கொண்டாடப் பட்டதற்கு ஏதேனும் சான்றுள்ளதா?
ஆங்கிலப் புத்தாண்டில் எல்லா இந்துக் கோயில்களிலும் பூஜை செய்கிறார்களே ஏன்? எந்த அரசு ஆணையும் இல்லாமல் ஆங்கிலப் புத்தாண்டன்று இந்திய மக்கள் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறார்களே ஏன்?
தமிழ்நாட்டில் என்ன நிலை என்று பார்த்தால் 3 வகையாக ஆண்டுப் பிறப்புக் கொண்டாடப் படுகிறது.
சித்திரையில் ஒரு புத்தாண்டு
தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சேரநாடு என்றழைக்கப்பட்ட கேரளத்திலும் தென்பாண்டி நாட்டின் சில பகுதிகளிலும் ஆவணி முதல் நாளைப் புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாகிறார்கள்.
இப்பொழுது தை முதல் நாள் அரசு ஆணைப்படி ஆண்டுப் பிறப்பு.
நடுநெல்வாடையின் அடிகள் சூரியன் மேட ராசியைத் தொடக்கமாகக் கொண்டு வலம் வருகிறது என்க் கூறுகின்றன. அதனால் அக்காலத்தில் சித்திரையை ஆண்டின் தொடக்கம் எனக் கூற முடியாது.
“ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை” என ஓகை நடராஜன் கூறுவதற்குக் தக்கச் சான்றுகள் வேண்டும்.
உலகம் முழுவதும் இரண்டு வகையான மாதக் கணக்கீடுகள் உள்ளன. ஒன்று சூரியனை முதன்மைப்படுத்திக் கணக்கிடுவது. இரணடாவது சந்திரனை முதன்மைப்படுத்திக் கணக்கிடுவது.
தமிழில் உள்ள மாதப் பெயர்கள் எல்லாம் சந்திரனை முதன்மைப்படுத்திக் கணக்கிடும் முறையைக் கொண்டவை.
தனித்தமிழ்க்காக வாழ்ந்த தேவநேயபாவாணர் இதற்கு மாறாகச் சூரியனை முதன்மைப்படுத்தித் தமிழ் மாதப் பெயர்களை வழங்கினார். அவர் மேடம் முதலிய இராசிகளின் பெயர்களைத் தமிழப்படுத்தி மாதப் பெயராக்கினார். மேழம், விடை (காளை என்பது பொருள்), ஆடவை என அவர் பன்னிரண்டு மாதப் பெயர்களை அமைத்தார். அதனையே இன்றும் தனித் தமிழ் அன்பர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்
என்பது தொல்காப்பியம்.
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீரிள வேனில் வேனில் என்றாங்கு
இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுதே
என்பது நம்பியகப்பொருள்.
ஆவணி முதலா இரண்டி டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே
என்பது தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான திவாகர நிகண்டு.
மருவும் ஆவணியே ஆதி மற்றிரண் டிரண்டு மாதம்
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம்
என்பது மற்றொரு புகழ்வாய்ந்த சூடாமணி நிகண்டு.
நாம் வாழ்வது அறிவியல் யுகமான 21ஆம் நூற்றாண்டில். விருப்பு வெறுப்புக்களை அப்பால் வைத்துவிட்டு இன்றைய தலைமுறைக்குச் சரியான தகவல்களைக் கொண்டு செல்வது நமது கடமை. அரசியல்வாதிகள் மக்கள் மனத்தில் நஞ்சை விதைத்து, சண்டை மூட்டிவிட்டுக் குளிர்காய்கிறார்கள் என்றால் அதற்கு நாம் யாரும் துணை போய்விடக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்.
இது தொடர்பாக விரிவாக விவாதிக்க விரும்பினால் தொடரலாம்.
ஆராதி
///எந்த அரசு ஆணையும் இல்லாமல் ஆங்கிலப் புத்தாண்டன்று இந்திய மக்கள் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறார்களே ஏன்?///
அடிமைத்தனத்தின் முற்றுப்பெறா தன்மை.
///ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை” என ஓகை நடராஜன் கூறுவதற்குக் தக்கச் சான்றுகள் வேண்டும்.///
அதே போல் வள்ளுவர் பிறந்த நாளுக்கு யாரும் சான்று கொடுக்க வில்லை. அதைவைத்து தானே வள்ளுவர் ஆண்டு என்கிறார்கள்.
ஆராதி,
இந்திய பண்பாடு மற்றும் ஏனைய புத்தாண்டுகள் பறிய உங்கள் கேள்விகள் இப்பதிவுக்குப் புறம்பானவை என்பதோடு இக்கேள்விகளால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதும் புரியவில்லை. இப்பதிவு ’தையில் புத்தாண்டு தமிழர் மரபன்று’ என்ற பொருள் பற்றியதே!
//நடுநெல்வாடையின் அடிகள் சூரியன் மேட ராசியைத் தொடக்கமாகக் கொண்டு வலம் வருகிறது என்க் கூறுகின்றன. அதனால் அக்காலத்தில் சித்திரையை ஆண்டின் தொடக்கம் எனக் கூற முடியாது.//
தெளிவாக மேழத்தில் ஆண்டு தொடங்குகிறது என்று சொல்லும் பாடல் வரிகளை சித்திரையை ஆண்டின் தொடக்கம் எனக் கூற முடியாது என்று கூறுகிறீர்களே, என்ன குழப்பம்? ஆதவன் மேழத்தில் இருக்கும் காலமே சித்திரை மாதம் என்பதில் உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருக்கிறதா?
“ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை” என ஓகை நடராஜன் கூறுவதற்குக் தக்கச் சான்றுகள் வேண்டும்//
நெடுநல்வாடை இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பதில் உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருக்கிறதா?
ஆவணியில் புத்தாண்டு தொடங்கியிருக்கலாம் என்ற கருத்தத் தரும் தொல்காப்பிய எடுத்துக்காட்டுகளைத் தந்ததற்கு நன்றி. இவ்வரிகள் தையில் புத்தாண்டு என்ற கருத்தை வலியுறுத்தாதது மட்டுமல்லாமல் தை மாதத்தை ஆண்டின் மையத்துக்கு தள்ளுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக தொல்தமிழ் மரபின் படி புத்தாண்டு சித்திரையா அல்லது ஆவணியா என்ற விவாதம் இருக்கலாமேயன்றி தையில் நிச்சயமாக இல்லை என்று உறுதியாகக் கூறிவிடலாம்.
இன்னொரு சுட்டி: https://groups.google.com/group/minTamil/msg/42c0387e9d8962f8
//நாம் வாழ்வது அறிவியல் யுகமான 21ஆம் நூற்றாண்டில். விருப்பு வெறுப்புக்களை அப்பால் வைத்துவிட்டு இன்றைய தலைமுறைக்குச் சரியான தகவல்களைக் கொண்டு செல்வது நமது கடமை. அரசியல்வாதிகள் மக்கள் மனத்தில் நஞ்சை விதைத்து, சண்டை மூட்டிவிட்டுக் குளிர்காய்கிறார்கள் என்றால் அதற்கு நாம் யாரும் துணை போய்விடக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்.//
இந்த அறிவுரை அதீதமாக இருப்பதோடு விவாதத்தில் தேவையில்லாததுமாக இருக்கிறது. இந்த வரிகள் இப்பதிவு இன்றைய தலைமுறைக்கு தவறான தகவல்களைக் கொண்டு செல்வதாகவும், மக்கள் மனத்தில் நஞ்சை விதைத்து, சண்டை மூட்டிவிட்டுக் குளிர்காய்வதற்கு துணை போவதாகவும் உத்தேசமாகக் குறிப்பிடுகிறது. இவ்வாறு பூடகமாகக் குறிப்பிடுவது தேவையற்றது.
ஓகை நடராஜன்.
ஐயா,
உங்கள் கட்டுரை மிகவும் நன்றாக இருக்கின்றது. தை மாதத்தில் வருடபிறப்பு எங்கும் கேட்டதில்லை. வட இந்தியாவிலும் வருடம் பிறப்பது சித்திரை மதத்தில் தான். இதை மற்ற கூடாது. இது என்னுடைய வேண்டுகோள்.
ராமச்சந்திர மேனன்
பிரபவ முதல் விபவ வரையிலான ஆண்டுகளை கடைப்பிடிக்கும் போது வரலாற்று நிகழ்வுகளை குறிப்பிடும் பொது குழப்பங்கள் ஏற்படும். உதாரணமாக விரோதி வருடத்தில் சுனாமி வந்தது என்றால் இன்னும் 1௦௦ வருடங்களுக்கு பிறகு எந்த விரோதி வருடத்தில் வந்தது என்று தெரிந்து கொள்ளுவது இது வரலாற்றில் குழப்பத்தை ஏற்ப்படுத்தும். இதற்க்கு ஒரு வழி சொல்லுங்கள் பார்ப்போம்
There is severe power shortage and power cut in Tamilnadu .
The Industries are crippled due to this and production suffers.
Workers are laid off and they lose wages.
Most of the roads in the state resemble the surface of the Moon
During rainy season most of the areas float in water
people undergo severe hardship
Most of them cannot get milk and power
since water enters houses their valuables are destroyed
people cannot sleep for days together.
snakes enter houses.
drainage water also enters the houses
After the rains also people have to spend heavily to clean water sumps, wells etc which stink because of drainage water.
This happens year after year.
Most of the areas in Tamilnadu suffer severe drinking water shortage
Land cost has been artificially jacked up because of politician- land mafia nexus
Karunanidhi has no time to attend to these problems
But he is busy attending cinema functions, functions got up by chamchas to praise him,etc etc
So he and his gang have to divert attention by whipping up controversies like Tamil new year etc.
Most shameful.
R.Sridharan
R.sridharan
dear sir i want biography of thiruvalluvar.
இது ஒரு நல்ல முயற்சி. இந்தியாவில் அங்கமாக இல்லாத ஒரு ‘கற்பனைத் தமிழகத்தை’ உருவாக்க நினைப்பவர்கள் சிலர் செய்யும் வீண் முயற்சியே ‘தை முதல் நாளில் வருடப் பிறப்பு’ என்னும் பிரச்சாரம்.
நம் நாட்டின் காஷ்மீரத்துப்பகுதி முதல் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், வங்கம் வழியாக ஆந்திரப் பிரதேசம் வரை எல்லா இடங்களிலும் வருடப் பிறப்பு ‘சித்திரை’ மாதத்தை ஒட்டியே வருகிறது. நமக்கு அருகில் இருக்கும் உதாரணம் ‘யுகாதி’.
நாட்டின் எந்தப் பகுதிக்கும் ‘தை’ மாதத்தை ஒட்டிய புத்தாண்டு இல்லை என்றே தோன்றுகிறது.
அடுத்து ‘பாரதம் முழுதும் ஒரே நாளில் புத்தாண்டு’ பற்றிய கருத்தை அன்பர் திரு ஆராத்தி கூறியிருந்தார். புவியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே ஆண்டுக் கணக்கு என்னும்போது, பூமியின் ஒவ்வொரு புள்ளியிலும் புத்தாண்டு நாள் மாறுபடவே செய்யும்.
நாம் IST என்று நம் தேசத்துக்குப் ‘பொது நேரம்’ வைத்திருப்பது போலவே, நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு பொதுப் புள்ளியால் ஆண்டுப்பிறப்பை அனேகமாக நிர்ணயித்திருக்கலாம். அதனால், ஆண்டுப் பிறப்புக் கணக்கில், சிறிய அளவில், மாநிலத்துக்கு மாநிலம் நாள் வேறுபாடு தோன்றலாம்.
மற்றபடி இந்தியாவின் பெரும்பாலான அல்லது எல்லாப் பகுதிகளிலும் ‘தமிழ்ச் சித்திரை’யை ஒட்டியே புத்தாண்டுக் கணக்கு வருகிறது.
‘தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி’ என்று துணிந்தவர்களுக்கு வருடப் பிறப்பு சித்திரையே!
அடுத்து நண்பர் பிரபாவின் ‘விரோதி’ ஆண்டுச் சுழற்சி பற்றிய கவலைக்கு வருவோம்.
‘ஞாயிறு’ வாரந்தோறும் வருகிறது. ‘1-ஆம் தேதி’ மாதந்தோறும் வருகிறது. ‘சித்திரை’ வருடந்தோறும் வருகிறது. ஏன், வருடப்பிறப்பே வருடந்தோறும் வருகிறது. இவை போலவே 60 ஆண்டுகள் கொண்ட ‘பிரபவ…’ போன்றவையும் சுழன்று வருவது தானே இயற்கையான காலக் கணக்காக அமைய முடியும்?
‘விரோதி வருடப் பஞ்சம்’ என்பது, எத்தனாவது 60 ஆண்டுச் சுழற்சியில் இடம்பெற்ற ‘விரோதி’ வருடத்தைக் குறிக்கிறது என்பதையெல்லாம் நம் காலக் கணக்கில் துல்லியமாக வெளியிட முடியும்.
‘வினாடி’யைவிட நுண்ணிய கால அலகுகளும் 60 ஆண்டுச் சுழற்சியைவிட மிகப் பெரிய கால அலகுகளும் நம்மிடம் உள்ளன.
தவிர, ஏறுமுகமாக ஆண்டுக்கணக்கை நாம் கையாள்வது வேறு; வருடப் பிறப்பைச் ‘சித்திரை’யிலிருந்து ‘தை’க்குக் கொண்டு செல்வது என்பது வேறு.
அவ்வாறு ‘தை’க்குக் கொண்டு செல்லுவதால் வருடக் கணக்கு ஏறுமுகமாகிவிடுமா என்ன?
இங்கு அனைவரும் தை அல்ல சித்திரை தான் தமிழ் புத்தாண்டின் முதல் மாதம் என்று வாதிடுகிறார்கள் … அதற்கு அவர்கள் தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி சித்திரை தான் தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்று வாதிடுகிறார்கள்… இருக்கலாம் . சங்கதமிழ் இலக்கியங்கள் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தமிழர்களின் வாழ்வை படம்பிடித்து காடும் ஒரு கால பேழை அன்றைய மக்களின் வாழ்க்கை நிலை,அரசியல் நிலை, மக்கள் கொண்ட பழக்க வழக்கங்கள் பேணிய கலாச்சாரங்கள் பற்றி சொல்லும் ஒரு இலக்கியம் சங்க இலக்கியம்.இதை தவிர இலக்கியங்கள் ஒன்றும் தெய்வ வாக்கு அல்ல.. ஆரிய புராண இதிகாசங்கள் போல பொய்யான கற்பனையான நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராத புரட்டுகளை சொல்லும் இலக்கியங்கள் அல்ல தமிழ் இலக்கியங்கள்.. தமிழர்களின் அன்றைய வாழ்கைமுறை காதல், வீரம், தமிழ் மன்னர்கள் மேற்கொண்ட வீரமிக்க போர்கள் போன்ற நடந்த உண்மை வரலாறை கூறும் கால பெட்டகங்கள் அவை. அன்றைய காலத்தில் உள்ள சூழ்நிலைகளை புலவர்கள் தங்கள் கவித்திறன் முலம் வெளி படுத்திஇருகிறார்கள் அவ்வளவே … 2000 ஆண்டுகளாக சொல்ல பட்ட விஷயம் அல்லது கடைபிடித்த ஒன்று என்பதற்காக ஒரு விஷயம் உண்மை ஆகி விடாது .. அதில் ஒன்று தான் இந்த சித்திரை மாதம் தமிழ் ஆண்டின் தொடக்கம் என்பதும்.. ஆண்டுகள் என்பது மனிதன் கணகிடுவதற்காக கண்டு பிடிக்கப்பட்ட ஒரு விஷயம். மனிதனின் எவ்வளவோ கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று அது நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம் என்று மாறுபடும். மனிதனின் முளையில் இருந்து வரும் எண்ணங்களுக்கு அபார ஆற்றல் உண்டு. இது போன்ற அற்ப விஷயங்களுக்கு விஞ்ஞான ஆதாரம் மெய்ஞான ஆதாரம் என்று எல்லாம் வியாக்கியானமும் கொடுக்கும் . 2000 ஆண்டுகளாக எப்படி சம்ஸ்க்ருதம் தேவ பாஷை என்று ஒரு முட்டாள்தனமான கீழ்த்தரமான ஒரு நம்பிக்கை உலவி வந்ததோ அதே போல் தான் இந்த புத்தாண்டின் விஷயமும். சம்ஸ்க்ருதமும் ஒரு மொழி அவ்வுளவு தான் அதற்கு மேல் அந்த மொழிக்கு எந்த சிறப்பும் இல்லை அது தேவபஷாயும் கிடையாது என்று இப்போது அனைவர்க்கும் விழிப்புணர்வு ஏற்பட்டதுபோல் ஒரு நாள் இந்த ஆண்டின் விஷயத்திலும் ஏற்படும்.. மேலும் உலக தமிழர்கள் அனைவரும் இதை விரும்பவில்லை என்று கட்டுரை ஆசிரியர் சொல்கிறார் . எனக்கு அப்படி தோன்றவில்லை .. எனக்கும் உலக நாடுகளில் பல தமிழர்கள் நண்பர்களாக இருகிறார்கள் தை புத்தாண்டை அவர்கள் தனி தன்மையோடு வரவேற்கிறார்கள் மிகவும் விரும்புகிறார்கள் .. உலக நாடுகளில் உள்ள அணைத்து தமிழ் சங்ககளிலும் தை புத்தாண்டை மனதார வரவேற்கிறார்கள் .. தமிழர்க்கு என்று பல தனி தன்மைகள் உள்ளது.. மொழி, சமயம் ,மருத்துவம்,கலாச்சாரம்,பண்பாடு என்று அனைத்திலும் வேறு பட்டு தனி தன்மையோடு நிற்கும் தமிழனை ஆரியத்திற்கு அடிமை ஆக்கிட வேண்டும். எந்த தனி தன்மையும் தமிழனுக்கு இருக்க கூடாது.அனைத்தும் ஆரியத்தின் எச்சமாக இருக்க வேண்டும் . தமிழ்மொழி சமஸ்க்ருததின் எச்சமாக இருக்க வேண்டும், தமிழ்இலக்கணம் பாணினியின் எச்சமாக இருக்கவேண்டும், சித்த மருத்துவம் ஆயுர்வேதத்தின் எச்சமாக இருக்க வேண்டும் ,தமிழரின் சமயம் மதம் ஆரிய புரட்டுகளின் எச்சமாக இருக்க வேண்டும் அது போல் தான் இந்த ஆண்டு கணக்கும். ஆரியத்தின் கடைசி எச்சம் இது தான் போலும் . இப்போது வந்தாக இருக்கட்டுமே தை புத்தாண்டு , இன்னும் 2000 ஆண்டுகள் கழித்து தை திங்கள் முதல் நாள் புராதன தமிழர் புத்தாண்டாக மாறிவிடும்..
வணக்கம் திரு தாயுமானவன் அவர்களே,
வெறும் இணையதிலும், திராவிட இயக்கங்களின் மடத்தனதையும் படித்துவிட்டு, மற்றும் பகுதறிவு போலிகளின் ஊடகங்கள் சொன்ன கருத்துகள் ஆகியவற்றை கொண்டு கற்பணை தமிழகம் ஒன்றில் வாழுந்துகொண்டு இருக்கிரீர்கள்.
தயவுசெய்து இது போன்ற கருதுக்களை மூட்டைகட்டி வைய்த்துவிட்டு கொஞ்சம் அறிவியல் நோக்குடன் இதைப்பார்க்கவும். காரணம், நாம் இதுவரை படித்தது எல்லாம் பொய்யான ஒன்று.
சித்திரையில் புத்தாண்டு என்பதற்க்கு அறிவியல் காரணஙள் உண்டு. ஆரியம் வேறு தமிழர் வேறு என்பது பொய். இரண்டும் ஒன்றே.
2000 வருடங்கள் என்பது தவறு, 5000+ வருடங்கள் என்பதே செரி
மலையாள வருடபிறப்பு விஷு நம் சித்திரை பிறப்பு அன்றுதான் கொண்டாடபடுகிறது. மற்றும் தெலுகு வருடபிறப்பு யுகாதி சித்திரை ஒட்டியே கொண்டாடபடுகிறது, கன்னட வருடபிறப்பும் அப்படியே,ஒருமுறை பாம்பே சென்றபோது மராட்டி வருடபிறப்பும் நம் சித்திரை மாதத்தை ஒட்டியே கொண்டாடபடுகிறது.
மராட்டியை விடுவோம் திராவிட தேசம் என்று நாம் சொல்லி கொள்ளும் கன்னட தெலுகு மற்றும் மலையாள தேசத்தில் இந்த ஜிகினா வேலை எல்லாம் எடுபடாது, ஆங்கில வருட பிறப்பை ஒட்டி தங்கள் வருட பிறப்பை கொண்டாட அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்
ஆங்கில வருடம் பிறக்கும் ஜனவரி மாதத்திலேயே தமிழ் வருட பிறப்பை மாற்ற முயல்வது ஆங்கிலேய கிருத்துருவ அடிமைத்தனத்தின் எச்சம் அன்றி வேறு என்ன?
ஹிஜ்ரி வருட பிறப்பு எப்படி தமிழ் இஸ்லாமியர்களின் ஆன்மிக வருட பிறப்போ,அதுபோல சித்திரை தமிழ் இந்துக்களின் ஆன்மிக வருட பிறப்பு. இந்துக்களின் ஆன்மிகத்தில் தலையிடுவது எளிது என்பதால் வாலாட்டுகிறார் மஞ்சள் துண்டு,
ஹிஜ்ரி வருட பிறப்பு எப்படி தமிழ் இஸ்லாமியர்களின் ஆன்மிக வருட பிறப்போ,அதுபோல சித்திரை தமிழ் இந்துக்களின் ஆன்மிக வருட பிறப்பு. இந்துக்களின் ஆன்மிகத்தில் தலையிடுவது எளிது என்பதால் வாலாட்டுகிறார் மஞ்சள் துண்டு அவர் வேண்டுமானால் முதலில் அவர் குடும்பத்தில் இருந்து நாத்திகர்களை உருவாக்கட்டும் பிறகு தமிழ் மக்களுக்கு நன்மை செய்யட்டும் இவர் செய்வது ஒன்று சொல்வது ஒன்று தமிழர்களை கோமாளிகளாக நினைக்கிறார் காலம் பதில் சொல்லும்
மிக அழகான நேர்த்தியான தெளிவான கட்டுரை!
ராம்
சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்!
இலங்கையில் ஒன்றாக வரும் தமிழ் இந்து ,சிங்கள பௌத்த புத்தாண்டு ஒரு மிகப்பெரும் கலாசாரப் பண்டிகையாகும். இதை முன்னிட்டு 13 ,14 April அரசவிடுமுறையாகும்.
பணத்திற்காக புகழ்ந்து தள்ளிய புலவர்களை நம்புகிறார் நம்ம தாயுமானவன் அய்யா!
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” இது அறிவியல் பூர்வமாக சாத்தியமா? இந்த திராவிட கட்டு கதைகளை பகுத்தறிவு பகலவர்கள் நம்புவது எப்படி? சீன மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒற்றுமை கூற முடியமா? லெமுரியா கண்ட கற்பனை குதிரைகள் நமது தாயுமானவன் அய்யா ஏற்று கொள்ளுகிரரா? இராவணன் தமிழன இல்லை சிங்களவனா? ராவணனை வீரனாக கொண்டாடும் பகுத்தறிவு பகலவர்கள் அறிவு திறன் என்னே என்னே!
பக்தியால் ஒழுக்கம் வராது சரி… நம்மது மக்கள் பட்டினி கிடக்கும் போதும் அனைத்தையும் உறிஞ்சி ஊழல் புரிவது தான் பகுத்தறிவின் அடையாளமா? ஏன் அணைத்து திராவிட பெருமைகள் அடிக்கும் கட்சிகள் ஊழல் பெருச்சளிகளாக இருக்கின்றன? ‘selective’ பகுத்தறிவு ?
அனைவருக்கு வணக்கம் என் அன்பு நண்பர் திராவிடன் ( தென்னாடுடையான்) அவர்களுக்கும் வணக்கம்.
தமிழ்புத்தாண்டு விஷயத்தில் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். சித்திரை முதல் நாள் என்பதை உங்கள் விஞ்ஞான வ்யாக்யானத்தின் படி நீங்கள் ஜோசியம் பஞ்சாங்கம் நல்லது கெட்டது பார்க்க( அதில் நம்பிக்கை உள்ளவர்கள் ) ஜாதகம் கணிக்க வைத்து கொள்ளுங்கள் யாரும் உங்களை வேண்டாம் என்று சொல்லவில்லையே. வேண்டுமானால் இந்து மத புத்தாண்டு என்று இந்தியா முழுமைக்குமாக வைத்து கொள்ளுங்கள் யார் உங்களை தடுக்க போகிறார்கள் அதான் சொல்லிவிட்டிர்களே “வானியல் நிகழ்வான மேஷ ராசியில் சூரியன் புகும் ஒரு உண்மையான கணக்கீடு” என்று . எந்த தமிழனும் உங்கள் மீது வழக்கு தொடுத்து நிறுத்த மாட்டான். கவலை வேண்டாம். அனால் தை திங்கள் முதல் நாள் என்பது மார்கழிக்கு பிறகு வரும் ஒரு மனதுக்கு இதம் தரும் இனிய குளுமையான மாதம். உலகிலுள்ள சர்வ மத தமிழர்கள் ஒன்று கூடி கொண்டாட கூடிய பாரம்பரிய புத்தாண்டாக அமையட்டும் அந்த மாதம் . சித்திரையில் என்ன இருக்கிறது கொண்டாட.. சுட்டெரிக்கும் வெயிலில் என்ன கொண்டாட்டத்தை காண முடியும். 100 மீட்டார் தூரம் நடந்தாலே நாய்க்கு நாக்கு தள்ளுவது போல் தள்ளி விடுமே நாவறட்சி. வேண்டும் என்றால் சன் t .v யில் போடும் நிகழ்ச்சிகளை வீட்டில் உட்கார்ந்து ரசிக்கலாம்.அதற்கு தான் அது லாயக்கு. இன்னும் சொல்லப்போனால் கிராமப்புறங்களில் உள்ள தமிழ் பழமொழியே சொல்லுவது கூட “தை பிறந்தால் வழி பிறக்கும்”என்பது தானே.. தை அன்று தானே உழவன் மகிழ்ச்சியாக தான் பயிரிட்ட நெல்லை அறுவடை செய்து புத்தாடை அணிந்து அறுவடை செய்த நெல்லை இறைவனுக்கு பாலும் வெள்ளமும் சேர்த்து காணிக்கை ஆகுகிறான். மீதம் இருக்கும் நெல்லை சந்தையில் விற்று பணம் சம்பாதித்து தன் இன்ப நாட்களை தொடங்குகிறான் . அந்த மகிழ்ச்சியான தருணம் தான் தமிழனுக்கு ஒரு இனிய புத்தாண்டாக அமைய முடியும். “சித்திரையில் பிள்ளை பிறந்தால் நித்திரை கெட்டு போகும்” என்பது தானே சித்திரையின் யோகியதையை சொல்லும் பழமொழி, அன்றைக்கு மருத்துவமனை அறுவை சிகிச்சை fan , a /c போன்ற வசதி இல்லாத காலத்தில் பெண்ணுக்கு பிரசவ வேதனை என்பது பெரிய வேதனையாக அமைந்து இருந்தது .அதிலும் சித்திரையில் பிரசவம் என்பது மரண வேதனையாக இருந்ததால் தானே அப்படி சொல்லி வைத்தார்கள் . இப்போது வந்ததாக இருக்கட்டும் தை தமிழ் புத்தாண்டு இனி வரும் காலங்களில் உலகில் உள்ள தமிழர்கள் சித்திரையை மறந்து தை மாதத்தை மட்டுமே புத்தாண்டாக மனதில் கொள்வார்கள்.அந்த நாள் விரைவில் அமையும். ஆர்ய குலசெல்வர்கள் அதற்காக கவலை படவேண்டாம் …. நன்றி
//ஆங்கில வருடம் பிறக்கும் ஜனவரி மாதத்திலேயே தமிழ் வருட பிறப்பை மாற்ற முயல்வது ஆங்கிலேய கிருத்துருவ அடிமைத்தனத்தின் எச்சம் அன்றி வேறு என்ன?//
நண்பர் திரு. திராவிடன் ( தென்நாடுடையான் ) அவர்களே ,
ஆங்கில புத்தாண்டிற்கும் தை மாதத்திற்கும் என்ன சம்பந்தம். அவர்கள் ஏசுநாதரின் பிறப்பை ஒட்டி கொண்டாடுகிறார்கள். அது மதம் சார்ந்த புத்தாண்டு. ராமன் கிருஷ்ணன் கதாபாத்திரங்களை போன்று இல்லாத இயேசுவின் பிறப்பை அடிப்படையாக கொண்டாடப்படும் புத்தாண்டு ஜனவரி 1 ஆம் நாள். மதம் என்றாலே அங்கே 70 விழுக்காடு மூடநம்பிக்கை தான் இருக்கும் இதற்கு எம்மதமும் விதிவிலக்கு அல்ல. அதை ஏன் தமிழ் புத்தாண்டோடு முடிச்சு போடுகிறீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு மத்தியில் ஆளும் இத்தாலிய சோனியாவின் அறிவிலோ அல்லது தமிழ் இனம் காக்க தவறிய தமிழ் இன கொலைஞர் கருணாநிதியின் அறிவிலோ உதித்த சிந்தனை அல்ல . 1931 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சைவமும் ,தமிழும் இரு கண்கள் என பாவிக்கும் மறைமலையடிகள். திரு. வி. க ஆகியோர் 100 கணக்கான தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் ஆய்வு செய்து எடுக்க பட்ட தீர்மானம் இந்த தை முதல் நாள் புத்தாண்டு . அதை இன்று தான் சட்டமாக நிறைவேற்றி இருக்கிறார் கருணாநிதி. தயவு செய்து அதற்கு எந்த மத சாயலும் பூச வேண்டாம் . இது எம்மதமும் சாராத தனி தன்மை வாய்ந்த தமிழ் புத்தாண்டு . தமிழை நேசிபவர்கள் தமிழரின் தனி தன்மை வாய்ந்த பண்பாட்டை ஏற்றுகொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் இதை தான் புத்தாண்டாக ஏற்று கொள்வார்கள். ஜாதி, மதம், இந்தியன் என்கிற அடையாளம் ஒழித்து தமிழன் என்கிற அடையாளத்தோடு மட்டும் வாழும் வாழ நினைக்கும் அணைத்து தமிழர்களுக்கும் இந்த தை புத்தாண்டு சமர்ப்பணம். நன்றி வணக்கம்
shameless creatures. You people always against the festival Pongal. I have experienced this in so many times. Again you proved that. But still I wonder, do you people celebrate Tamil new year? This is nothing else except for selling the Panjangam.
Like Pongal Deepavali also did not have any evidence that it has been celebrated in south India atleast above 1000 years. In any of the south Indian language can you people find evidence for Deepavali? So, will you talk against Deepavali?
சித்திரை தான் நமக்கு வருட பிறப்பு சுழற்சி முறையில் வரும் நாரத முனிவரின் அறுபது பிள்ளைகளின் பெயர்களே நம் ஆண்டுகள் . சாளுக்கிய மன்னன் விக்கரமாதிதனின் சாக ஆண்டே நம் ஆண்டு . சம்ஷ்க்ரிதமே நம் தாய் மொழி. அபிதான சிந்தாமணியில் உள்ள கதைகளே நம் வரலாறு..நமேக்க அர்த்தம் தெரியாத எந்த சாஸ்திறன்களிலும் இல்லாத வெள்ளைக்காரன் வய்த்த இந்து என்ற பெயரைத்தானே சொல்லிக்கொளுகிறோம். வாழ்க சித்திரை வடமொழி வருடம் .
சித்திரை முதல்நாளுக்கு வானியல் அடிப்படை இருக்கிறது தை முதல்நாளுக்கு வானியல் அடிப்படை இல்லை என்பது தவறு. தை முதல் நாள் ஞாயிறு தனு இராசியை விட்டு நீங்கி மகர இராசிக்குள் நுழைகிறான். அது மட்டுமல்ல மகர இராசிக்குள் நுழையும் நாளே ஞாயிறின் வட திசைப் பயணம் தொடங்குகிறது. பகல் நேரம் அதிகரிக்கிறது. சித்திரை முதல் ஞாயிறு மேடராசியில் புகுகிறது. சமபகல் இரவு மார்ச்சு 20 -21 இடம்பெறுகிறது. அன்றுதான் வேனில் காலம் (வடகோளத்தில்) தொடங்குகிறது. எனவே சித்திரை முதல் நாள் வேனில் காலம் தொடங்குகிறது என்பது பிழை. ஒரு ஆண்டுப்பிறப்பு ஞாயிறு வடதிசை நோக்கிப் பயணிக்கும் நாளில் தொடங்குவது சரியா, இடையில் நடுக்கோட்டை கடக்கும் போது தொடங்குவது சரியா? பின்னேகல் காரணமாக ஞாயிறு தனது அச்சில் பின்னோக்கி (மேற்கில்) நகர்ந்து கொண்டிருக்கிறது. 71.5 ஆண்டுகளில் ஒரு பாகை பின்னோக்கி நகர்கிறது.
Considering the winter solstice marks the beginning of the gradual increase of the duration of the day. Scientifically, the shortest day of the year is around December 21–22 after which the days begin to get longer, hence actual Winter Solstice begins on December 21 or December 22 when the tropical sun enters Makara rashi. Hence actual Uttarayana is December 21. This was the actual date of Makar Sakranti too. But because of the Earth’s tilt of 23.45 degrees and sliding of equinoxes, Ayanamsa occurs. This has caused Makara Sankranti to slide further over the ages. A thousand years ago, Makar Sankranti was on December 31 and is now on January 14. Five thousand years later, it shall be by the end of February, while in 9,000 years it shall come in June.
வானவியலின்படி வான மண்டலத்தின் தொடக்க இடமான மேடத்தின் தொடக்க முனை பின் நோக்கிச் செல்கிறது. ஆனால் இந்திய சோதிட சிந்தாந்ததின்படி வான மண்டலத்தின் தொடக்க இடம் அசுவனி நட்சத்திரத்தின் தொடக்க இடம். இது பின் நோக்கி நகருவதில்லை. இது நிலையானது. வானியல்படி வான மண்டலம் நகரக்கூடியது. இதைத்தான் மேல் நாட்டவர்கள் தங்கள் சோதிடத்திற்குப் பயன் படுத்துகின்றனர்.