சேனைகளின் மராத்தியப் பெருமை
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ‘சிவ சேனை’ மற்றும் ‘மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனை’ ஆகிய இரண்டு கட்சிகளும், மாநிலத்தின் தலைநகரான மும்பை, மராட்டியர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்றும், மற்ற மொழி பேசும் மக்கள் அந்நகரை விட்டு வெளியேற வேண்டும் என்றும், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சிவ சேனை கட்சியின் தலைவர்களான பால் தாக்கரேயும் அவர் மகன் உத்தவ் தாக்கரேயும் மற்றும் மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனை கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயும் (சிவ சேனையிலிருந்து பிரிந்து வந்து தனிக்கட்சி ஆரம்பித்த இவர், பால் தாக்கரேயின் மருமகன்) தங்கள் கட்சியினரைத் தூண்டிவிட்டு மும்பையிலும் மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் வாழ்ந்து வரும் வட இந்தியர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆஸ்த்திரேலிய நாட்டில் இனவெறி காரணமாகத் தொடர்ந்து இந்தியர்கள் (குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள்) தாக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்த பால் தாக்கரே, ஆஸ்த்திரேலிய கிரிக்கெட் வீர்ரர்கள் மும்பை அரங்கில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்றும், அதே போல் இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் பாகிஸ்தான் நாட்டைக் கண்டிக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களையும் மும்பையில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார். ஐ.பி.எல். (IPL – Indian Premier League) கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருப்பதையடுத்து, மும்பையில் வாழும் நடிகரும் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ (Kolkatta Knight Riders) என்ற அணியின் சொந்தக்காரருமான ஷாருக்கான், “பாகிஸ்தான் அன்பு மிகுந்த அண்டைநாடு” என்று அதற்கு ஆதரவாகப் பேசியதோடு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தன் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் கூறியதால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார். ‘மும்பை இந்தியர்’ (Mumbai Indians) என்ற சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மற்றொரு அணியின் சொந்தக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி, “அனைத்து மாநில இந்தியர்களும் மும்பைக்கு வரலாம்” என்று உறுதியாகக் கூறியதையும் கண்டித்தனர் சேனைகளின் தலைவர்கள். மஹாராஷ்ட்டிரம் மாராட்டியருக்கே என்று மீண்டும் கொக்கரிக்கின்றனர்.
சிவ சேனையும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்
இதனிடையே, “ஜாதி, மத, மொழி அடிப்படையில் பிரச்சினை உண்டாக்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். மும்பை நகரம் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது. மேலும் அங்கு வாழும் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செயல் படுவார்கள்” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்ஜி பகவத் அவர்களும் திரு.ராம் மாதவ் அவர்களும் உறுதியாகக் கூறியது நாட்டு மக்கள் அனைவராலும் வரவேற்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பகிரங்கமாகத் தன் நிலைப்பாட்டை தெரிவித்ததனால் அதிர்ச்சி அடைந்த சிவ சேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே அதற்கு பதில் அளிக்கும் விதமாக, “மும்பைப் பிரச்சினை பொருத்தமட்டில் எங்கள் அரசியலில் ஆர்.எஸ்.எஸ் தலையிட வேண்டாம். அவ்வியக்கம் மும்பையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தேசப்பற்று, ஒற்றுமை பற்றியெல்லாம் அவர்கள் எங்களுக்குப் போதிக்க வேண்டியதில்லை. இப்போது வடமாநிலத்தவரைக் காப்பாற்றுவோம் என்று கூறுகின்ற ஆர்.எஸ்.எஸ், 1992-ல் இந்து முஸ்லிம் கலவரம் நடந்த போது எங்கே போனது? அப்போது சிவ சேனாதானே இந்துக்களைக் காப்பாற்றிற்று? தென் மாநிலங்களில் வடமாநிலத்தவர் எவ்விதம் நடத்தப்படுகின்றனர், அங்கெல்லாம் இந்தி மொழியின் நிலைமை என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தன் கவனத்தைத் திருப்பட்டும்” என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
சிவ சேனையும் பா.ஜ.க.வும்
சிவ சேனாவும் பா.ஜ.கவும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட்டணிக் கட்சிகளாக ஒரே அணியில் இருந்து வருகையில், சேனாவுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்ஸின் பகிரங்க நிலைப்பாடு பா.ஜ.கவைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் என்று போலி மதச்சார்பின்மைக் கூட்டம் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி ஆர்.எஸ்.எஸ் கருத்தை ஆமோதிக்கும் விதமாக, “இந்தியர் எவரும் நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியேறி, தொழில் செய்து வாழலாம் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “இந்திய அரசியல் சாஸனத்தின் க்ஷரத்து 19-இன் 1-வது பிரிவின் படி இந்தியர் எவரும் இந்தியாவில் எந்தப் பகுதியிலும் வாழலாம் என்பதன் மூலம் இந்தியா ஒரே நாடுதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம், மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில், எவ்விதப் பிரிவினையும் பாகுபாடும் காட்டப்படக்கூடாது. மற்றப் பிராந்தியக் கலாசாரங்களையும், மொழிகளையும், பழக்க வழக்கங்களையும் மதிக்க வேண்டும். அதுதான் இந்தியா ஒரே நாடு என்பதை வலியுறுத்தும்” என்றும் தெளிவுபடக் கூறியுள்ளார்.
அவர் மேலும், “இந்தியா முழுவதும் அனைவரும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி ஒற்றுமையாக இந்தியர்களாக வாழ வேண்டும் என்கிற ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருப்பதால்தான், பாரபட்சம் மிக்க காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது க்ஷரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறோம். பிரிவினையை பா.ஜ.க எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
சிவ சேனையைக் கண்டிக்க காங்கிரஸுக்கு என்ன தகுதி?
நாற்பது வயது ஆன பிறகும் கூட அரசியலில் கத்துக்குட்டியாக வலம் வருகின்ற, அதே நேரத்தில், தங்கள் குடும்பத்தின் அடிமைகளாகச் செயல்படும் சில காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனையின் பேரில் ஆங்காங்கே நாடகத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடும் ராகுல் காந்தி, அவ்வப்போது தன் “மேதாவிலாஸம்” வெளிப்படுமாறு பேசி மாட்டிக் கொள்வதில் வல்லவர். அவருடைய மேதாவிலாஸத்திற்குச் சமீபத்திய உதாரணம், தமிழகம் வந்த போது, “நதிகள் இணைப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை” என்று அவர் கூறியதுதான்.
சிவ சேனைத் தலைவர்களின் நிலைப்பாடு தவறானது, மும்பை நகரம் இந்தியர் அனைவருக்கும் சொந்தம் என்று கூறுவதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் ராகுல் காந்திக்கு எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. ஆனால் பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர், பீகார் மக்களைக் கவர வேண்டும் என்கிற நினைப்பில், “மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது பீகார், உ.பி., மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த தேசியப் பாதுகாப்புப் படைவீரர்கள்தான் அவர்களை எதிர்த்துப் போராடி உயிர்த் தியாகம் செய்தனர். அப்போது இவர்கள் ஏன் பீகார், உ.பி. வீரர்கள் மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரவில்லை?” என்று பேசியுள்ளார். ராகுலுக்குப் பதில் கூறும் விதமாக உத்தவ் தாக்கரே, “மும்பை தாக்குதல் நடந்த போது ராகுல் எங்கே இருந்தார் என்பதை முதலில் தெரிவிக்கட்டும். மும்பை தாக்குதல் சமயத்தில் மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஹேமந்த் கர்காரே, துகாராம் ஒம்லே, அஷோக் காம்தே, விஜய் சாலஸ்கர் போன்ற போலீசாரும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் என்கிறவரும் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ராகுல் பேச்சு இவர்களை அவமானப்படுத்தி, இவர்களின் தியாகத்தை அவமதிப்பதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மும்பை தாக்குதல் நடந்த போது, ராகுல் தன் நண்பர் ஒருவரின் பாச்சுலர் பார்டியில் விடிய விடிய மகிழ்ந்திருந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆகவே உத்தவ் தாக்கரே கேட்ட கேள்விக்குப் பின்புலத்தில் இருப்பது இந்தச் செய்திதான். அதோடு மட்டுமல்லாமல், சிவ சேனைக் கட்சியை இரண்டாகப் பிளந்து அதன் சக்தியைக் குறைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி, ராஜ் தாக்கரேவை சிவ சேனையிலிருந்து பிரித்து, புதிய கட்சி தொடங்குமாறு செய்ததே காங்கிரஸ் கட்சிதான் என்பது உலகறிந்த செய்தி. அதற்கு முன்னர் சஞ்சய் நிரூபம், நாராயண் ராணே ஆகியோரையும் சிவ சேனையிலிருந்து பிரித்து தங்களுடன் சேர்த்துக் கொண்டதும் காங்கிரஸ் கட்சிதான். அதனால்தானோ என்னவோ ராஜ் தாக்கரே செய்த அராஜகத்தின் போதெல்லாம் ராகுல் வாயைத் திறக்கவே இல்லை! மேலும் அப்போது மஹாராஷ்ட்ரா சட்டசபைத் தேர்தல் காலம் வேறு. தற்போது இன்னும் சில மாதங்களில் பீகார் சட்டசபைக்கான தேர்தல் வருகின்ற காரணத்தால் பீகார் சுற்றுப்பயணத்தின்போது தன் மேதாவிலாஸத்தைக் காட்டியிருக்கிறார் ராகுல். மேலும், இவர் கட்சியின் தலைவரும் மஹாராஷ்ட்ராவின் முதல்வருமான அஷோக் சவான், சேனா பாணியில், மராட்டியர்களுக்கு மட்டுமே டாக்ஸி டிரைவர் லைசென்ஸ் வழங்கப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தபோது, ராகுலின் பீகார் மற்றும் உ.பி. பாசம் வெளிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஷோக் சவான் பின்னர் உத்தரவை மாற்றியது வேறு விஷயம். ஆயினும் ராகுல் அப்போது வாய் திறக்கவில்லை என்பதே உண்மை.
மேலும் இன்று இந்திய உடலில் தைத்துப் புரையோடி இருக்கும் விஷ முள்ளாகக் காஷ்மீர் மாநிலம் இருப்பதற்குக் காரணம் யார் என்பது ராகுலுக்குத் தெரியாதா? இவருடைய பாட்டனார் காலத்திலிருந்து இவர் குடும்பமும், அப்துல்லா குடும்பமும் சேர்ந்துதான் காஷ்மீரத்தை இந்த நிலைக்குக் கொணர்ந்துள்ளனர் என்பதை இவரால் மறுக்க முடியுமா? சுலபமாகத் தீர்த்திருக்கவேண்டிய பிரச்சினையை சர்வதேச அளவிற்குக் கொண்டு சென்றது இவருடைய பாட்டனார் நேருதான் என்பது இவருக்குத் தெரியாதா? தங்களுடைய புண்ணிய பூமியான காஷ்மீர் என்னும் மாபெரும் சிவஸ்தலத்திலிருந்து குற்றுயிரும் கொலை உயிருமாக விரட்டியடிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஹிந்து பண்டிட்டுகளுக்கு ஆதரவாக என்றாவது இவர் ஒரு வார்த்தைப் பேசியிருப்பாரா? காஷ்மீர் முஸ்லிம்களைக் கண்டித்து இவரால் ஒரு வார்த்தை பேச முடியுமா? சேனைகளைக் குறை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கின்றது?
ராகுலுக்கு உத்தவ் தாக்கரே பதில் கூறியிருந்தாலும், பால் தாக்கரே தன்னுடைய ‘ஸாம்னா’ இதழின் தலையங்கத்தில், “மும்பை அனைத்து இந்தியருக்கும் சொந்தமாக இருக்கலாம். ஆனால் இத்தாலிய அம்மைக்கு எப்படிச் சொந்தமாக இருக்க முடியும்? ராகுல் காந்தியின் கருத்துக்கள் மராட்டியரை அவமதிப்பதாக உள்ளது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்துத் தங்கிச் செல்வதற்கு மும்பை ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல. நாற்பது வயதாகியும் திருமணம் நடக்காத விரக்தியில் ராகுல் இவ்வாறு உளருகிறார்” என்று சேனாவிற்கே உரிய ‘நாகரிகம்’ வெளிப்பட எழுதியுள்ளார். இத்தாலி அம்மை என்று குறிப்பிடும்போது அவர் ‘இத்தாலி மம்மி’ என்று இரண்டு அர்த்தங்கள் தொனிக்குமாறு எழுதியுள்ளதும் பண்பாடற்றச் செயலாகும்.
பெருமையல்ல பேய்க்குணம்
சமீப காலத்தில் மராட்டியப் பெருமை என்கிற பெயரில் சேனைகள் நடத்திய இரண்டு தாக்குதல்கள் (சட்டசபைக்கு உள்ளே ஒன்று, வெளியே ஒன்று) இந்த நாட்டிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தின. மஹாராஷ்ட்ரா சட்டசபைத் தேர்தல் முடிந்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்து சட்டசபை துவங்கிய முதல் நாள், அங்கத்தினர் அனைவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக்க் கொள்ளும்போது, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபு ஆஸ்மி என்கிற எம்.எல்.ஏ மராத்திய மொழியில் அல்லாமல் இந்தி மொழியில் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்பதற்காக அவரைச் சட்டசபையிலேயே கடுமையாகத் தாக்கினர் ராஜ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்கள். உலகம் முழுவதிலும் தொலைக்காட்சிகளால் பரப்பப்பட்ட இந்நிகழ்வு நம் நாட்டிற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது. சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடனேயே ராஜ் தாக்கரே, “தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் அனைவரும் மராத்தி மொழியில்தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு எடுத்துக்கொள்ளதாவர்கள் பின்விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள்” என்று சவால் விடுத்திருந்தார். அவரின் கட்சி வன்முறைக்குப் பெயர் போன கட்சியென்றாலும், சட்டசபைக்கு உள்ளேயே வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மஹாராஷ்டிர சட்டசபை வரலாற்றில் ஒரு அழியாத கறையை ஏற்படுத்திய ‘பெருமை’ மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனாவிற்கே உண்டு.
அதே போல், “நான் ஒரு மராட்டியன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் முதலில் ஒரு இந்தியன்” என்று நாடு போற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதற்காக அவரையும் பழித்தனர் சிவ சேனைத் தலைவர்கள். “சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது” என்று பால் தாக்கரே தன்னுடைய ‘ஸாம்னா’ இதழில் தலையங்கம் எழுதினார். இவ்விவகாரத்தை மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டிருந்த ஐ.பி.என் (IBN) தொலைக்காட்சி அலுவலகத்தை சிவ சேனைத் தொண்டர்கள் கடுமையாகத் தாக்கிச் சூறையாடினர். விமரிசனத்தை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் விமரிசனத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்கொண்டு தங்கள் பயணத்தைத் தொடரவேண்டும். அதுவே ஒரு தலைவருக்கு வேண்டிய முக்கிய குணங்களில் ஒன்று.
காட்டுமிராண்டித் தனமான இவர்களின் நடவடிக்கை நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகவே, சச்சின் மேல் இன்னும் வெறுப்புற்ற சேனைத் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவுட் (இவர் ஸாம்னா இதழின் ஆசிரியர்) சச்சினின் கிரிக்கெட் சாதனைகளையும் திலகர், பகத் சிங், ராஜ்குரு ஆகியோரின் சாதனைகள் மற்றும் தியாகங்களையும் ஒப்பிட்டு, சச்சினின் சாதனைகளினால் நாட்டிற்கு எந்தப் பெருமையும் பயனும் இல்லை என்று எழுதி, தன் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டார்.
இவருடைய தம்பியான சுனில் ராவுட் தலைமையில் நடந்த தொலைக்காட்சி அலுவலகத் தாக்குதலினாலோ, அல்லது சச்சினைத் தாக்கி இவர்கள் எழுதிய தலையங்கங்களினாலோ நாட்டிற்குப் பெருமையும் பயனுமா விளைந்தது? அவமானம் விளைந்து, தலைக்குனிவு அன்றோ ஏற்பட்டுள்ளது? நாட்டிற்கே பெருமை சேர்த்த சத்திரபதி சிவாஜி, பால கங்காதிரத் திலகர், அண்ணல் அம்பேத்கர் போன்ற தலை சிறந்த மராட்டியர்கள் அனைவருக்கும் இவர்கள் அவமானத்தையன்றோ உண்டாக்குகின்றனர்? ஜாதி, மொழி வேறுபாடுகளைக் கடந்து இந்த தேசத்து மக்கள் அனைவருக்கும் பாடுபட்ட உத்தமர்கள் அன்றோ அவர்கள்? அப்பெருந்தலைவர்கள் பெயரைச் சொல்லிப் பெருமை கொள்ள மராட்டியர்களுக்கு உள்ள அளவு உரிமை மற்ற இந்தியர்களுக்கும் உண்டு என்பதை இவர்கள் மறுக்க இயலுமா?
(தொடரும்)
இவ்வளவு சச்சரவுகளுக்கிடையிலும், முதலும் அந்தமுமாக தான் ஒரு முஸ்லீம், தனது மார்க்கெட் இந்தியாவில் இருபபதாலேயே தான் இங்கு வாழ்நேர்ந்து அதற்கேற்ப பெருந்தன்மையான செக்யூலர் வேஷத்தில் கோஷமே ஆகிப்போன வார்த்தைகளில் தன் முஸ்லீம் விஸ்வாசத்தை வெளிப்படையாகச் சொல்லாது கோடிக்காட்டும் நிர்ப்பந்தத்தில் இருப்பதை தன் தேர்ந்தெடுத்த தெளிவற்ற விளக்கங்களில் மறைந்து தன் வியாபாரத்தைப் பெருக்கி நம்மையெல்லாம் முட்டாளாக்கும் ஷா ருக் கான் தான் இதில் வெற்ற் பெற்றவன். சாமர்த்தியசாலி. சிவ சேனா மகாராஷ்டிரா காங்கிரஸ், பா.ஜா.க ராகுல் காந்தி எல்லொரும் தடுமாறுகிறார்கள். ஆனால் தன் நிலைப்பாட்டில் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல், குழ்ம்பிய வார்த்தக்ளைக் கொட்டியே தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் சாமர்த்தியம் பாகிஸ்தானுக்கு இருக்கும் சாமர்த்தியத்தின் ஒரு அங்கமே. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நாம் இளிச்ச வாயர்களாக இருக்கும்போது மற்றவர்களைக் குற்றம் சாட்டுவானேன். இந்தியா பாக் பேச்சுவார்த்தைகள் பற்றி எவ்வளவு தடுமாற்றங்கள், குழப்பங்கள் நமக்கு. திணறுவது நாம் தான். பாகிஸ்தான் திருட்டுப் புன்னகை புரிவதை நம்மில் எத்தனை பேர் பார்க்கிறார்கள்?
தெளிவான கட்டுரை எழுதிய நண்பர் ஹரனுக்குப் பாராட்டுக்கல்.மும்பையில் தாக்கப்படும் வெளிமாநிலத்தவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற ஆர் எஸ் எஸ் உறுதிமொழியை நிச்சயமாக நம்பலாம். பல ஆண்டுகளுக்கு முன் மும்பையில் தென்னிந்தியர்கள் சிவசேனைத் தொண்டர்களால் தாக்கப்பட்டபோது தென்னிந்தியர்களுக்காக ரத்தம் சிந்தியது ஆர் எஸ் எஸ் தொண்டர்கள்தான்.
சுப்பு
/** “மும்பைப் பிரச்சினை பொருத்தமட்டில் எங்கள் அரசியலில் ஆர்.எஸ்.எஸ் தலையிட வேண்டாம். அவ்வியக்கம் மும்பையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தேசப்பற்று, ஒற்றுமை பற்றியெல்லாம் அவர்கள் எங்களுக்குப் போதிக்க வேண்டியதில்லை. இப்போது வடமாநிலத்தவரைக் காப்பாற்றுவோம் என்று கூறுகின்ற ஆர்.எஸ்.எஸ், 1992-ல் இந்து முஸ்லிம் கலவரம் நடந்த போது எங்கே போனது? அப்போது சிவ சேனாதானே இந்துக்களைக் காப்பாற்றிற்று? தென் மாநிலங்களில் வடமாநிலத்தவர் எவ்விதம் நடத்தப்படுகின்றனர், அங்கெல்லாம் இந்தி மொழியின் நிலைமை என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தன் கவனத்தைத் திருப்பட்டும்” என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
***/
I fully support uddhav thakeray.. he has hit the nail on the RSS.. where did RSS go during the mumbai riots?
I like shiv sena most because of their straightforward and bold talks.. and i support them fully in the recent episode.. Mumbai is for maharashtrians, just like Chennai and coimbatore is for tamilians.. the problem is that mumbai is dominated by north indians, displacing the local marathis. and shiv sena has every right to ask the north indians..
Probably the harsh actions they have taken may be wrong.. but their stand is right..
I dont know why tamil hindu is against the shiv sena? has haran being suverted by the media noises?
// I fully support uddhav thakeray.. he has hit the nail on the RSS.. where did RSS go during the mumbai riots? //
Does it mean that Shiv Sena is right every time just because they were right during one instance? Don’t you have any absolute standards for good and bad? Or you just like to side with one party no matter what they do?
// I like shiv sena most because of their straightforward and bold talks.. //
That is exactly how Periyar followers justify following Periyar – Paguththarivu.
// Mumbai is for maharashtrians, just like Chennai and coimbatore is for tamilians.. //
This is exactly how Periyar and his ilk used to violently oppose the “imposition” of Hindi on Tamilians. Oh, and btw, you forgot that our constitution says that: “Freedom to reside and settle in any part of the territory of India.”
// the problem is that mumbai is dominated by north indians, displacing the local marathis. //
Oh, what do you mean by “displacing”? Are they (Hindi-speakers) firebombing their houses (Marathis)? Are North Indians in Maharashtra demolishing the Marathis’ houses?
// Probably the harsh actions they have taken may be wrong.. but their stand is right.. //
Oh finally you admit that… and that too “probably”… Brother, since when did ends justify the means? This is plain feudalism. If A has a genuine issue with B regarding property sharing, so A ends up weilding a sickle and kill B and his family. If means are wrong, we don’t care what the intents might be. They first deserve to be condemned and punished for their means.
And meanwhile, I happened to take a look at your web site. What’s up with all the boiling hatred there? Yes we, the proud supporters of tamilhindu.com are working for furthering the Hindu cause and in checking Christian/Islamic Missionary (mis) preaching against us and spreading around lies about Hinduism. BUT, there is a proper way to do it. And if you don’t follow the dharmic means, you are essentially only doing a big harm for Hinduism – from within, that too. And don’t accuse me of pacifism. I am not talking pacifism here.
You are welcome to change your ways, brother Senthil, and please give things some thought and logic before you proceed to write anything. Fight ideas with sharp logic and accurate well-researched writing, not with knee-jerk reaction and blatant hatred. Expose misconceptions about Hinduism with honest and deep writing. I am sure you can do much better with that. As long as you don’t change your ways, we will all shout in one voice: “Thumbs down to your ways, we Hindus are NOT proud of, and certainly want to disown, what you are doing in the name of Hinduism (no matter how noble your intentions might be).”