மோசடி நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள்
சென்டரல் விஜிலென்ஸ் கமிஷனால் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிபிஐ-யினால் விசாரணை வளையத்தில் உள்ள ஐந்து நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கடன் கொடுத்துள்ளன. கொடுக்கப்பட்டுள்ள கடன் தொகையின் அளவு சுமார் ரூ.26,000 கோடியாகும். 2ஜி ஸ்பெக்டரத்தில் முறைகேடாக உரிமம் பெற்ற யூனிடெக் நிறுவனமும், எஸ் டெல் (S Tel) நிறுவனமும் ரூ.11,500 கோடி அளவிற்கு கடன் பெற்றுள்ளார்கள். இந்த இரண்டு நிறுவனங்கள் மீதும் 2009-ஆம் ஆண்டு மே மாதமே சென்டரல் விஜிலென்ஸ் கமிஷன் பரிந்துறையின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவுசெய்து, தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் தேசியமயமாக்கப்பட்ட சில வங்கிகள் 2009-ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின் யூனிடெக் மற்றும் எஸ் டெல் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்துள்ளார்கள்.
மேலும், நிறுவனங்கள் பதிவு அலுவலகத்தில் (Registrar of Companies) கிடைத்த ஆவணங்கள் மூலம் இன்னும் சில நிறுவனங்களுக்கும் அரசு வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடனாகக் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தணிக்கை அதிகாரி, உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்த நிறுவனங்களுக்கு இவ்விதமான கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்வான் டெலிகாம், யூனிடெக், லூப் (Loop) டாட்டாகாம் (Videocon) மற்றும் எஸ் டெல் ஆகிய ஐந்து நிறுவனங்களாகும்.
மத்தியத் தணிக்கைத் துறையின் மூலம் குற்றம் சாட்டப்பட்ட 85 நிறுவனங்களில் இந்த ஐந்து நிறுவனங்களும் அடக்கம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் எந்தவிதமான பாதுகாப்பின்றி கடன் தொகை வழங்கியுள்ளன. 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த இரண்டு நிறுவனங்களிலும் சிபிஐ சோதனை நடத்தி சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன்பின் சிபிஐ வழக்குப் பதிவுசெய்திருந்தும் இந்த வங்கிகள் எவ்வாறு கடன் கொடுத்தார்கள் என்பதும், கடன் கொடுக்க எந்த இடத்திலிருந்து இவர்களுக்கு ஆணை வந்தது என்பது மிகப் பெரிய கேள்விகளாகும்.
யூனிடெக் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட கடன் தொகை ரூ.10,000 கோடியில் பெரும் பங்குத் தொகையைக் கொடுத்த வங்கி பாரத ஸ்டேட் பேங்காகும். 2009-2010ஆம் ஆண்டுக்கான கடன் கொடுக்கப்பட்ட விவரப் பட்டியலில் ரூ.8,050 கோடி யூனிடெக் நிறுவனத்திற்கு SBI கடன் கொடுத்துள்ளது. கம்பெனிப் பதிவாளர் பதிவேட்டில் இன்னும் சில வங்கிகள் யூனிடெக் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்துள்ளார்கள். கார்பரேஷன் வங்கி ரூ.120 கோடி, அலகாபாத் வங்கி ரூ.500 கோடி, சவுத் இன்டியன் வங்கி ரூ.400 கோடி, கனரா பேங்க் ரூ.120 கோடி, ஓரியன்டல் வங்கி ரூ.70 கோடி, சென்டரல் பேங்க் ஆப் இந்தியா ரூ.70 கோடி, பஞ்சாப் நேஷனல் பேங்க் ரூ.120 கோடி, ஸ்டேன்டேட் சார்டட் பேங்க் ரூ.100 கோடி, எஸ் பேங்க் ரூ.70 ஆகியவை கடன் கொடுத்துள்ள பிற வங்கிகளாகும்.
யூனிடெக் நிறுவனம் மேலும் ஒரு வித்தியாசமான மோசடியிலும் ஈடுப்பட்டுள்ளது. அதாவது இந்திய அரசின் SBI Cap Trustee Company AlD-உடனும் தொலைத் தொடர்புத் துறையுடனும் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. யூனிடெக் நிறுவனம் பெற்ற உரிமத்தை மேற்கண்ட இரண்டு நிறுவனங்களிடமும் அடகு வைத்து ரூ.2,500 கோடியை 2009-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெற்றுள்ளார்கள். இந்த அடகு ஒப்பந்தத்தில் தொலைத் தொடர்புத் துறையின் சார்பாக ஏ.கே.ஸ்ரீவத்ஸவா, பி.கே.மிட்டல் இருவரும் கையெழுத்திட்டுள்ளார்கள். இவர்கள் இருவரையும் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
யூனிடெக் நிறுவனத்தைப் போலவே எஸ் டெல் நிறுவனமும் தனது கடன் தொகையான ரூ.1,538 கோடியை IDBI & IDBI Trusteeship Services Limited எனும் இரண்டு நிறுவனங்களிடமும் பெற்றுள்ளது. இவர்களும் தங்கள்மீது வழக்குப் பதிவுசெய்த 2009-ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின் 2009 நவம்பர் மாதம் கடன் தொகை பெற்றுள்ளார்கள். எஸ் டெல் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மற்றும் பேங்க் ஆப் பரோடாவிலும் சேர்ந்து ரூ.1,917 கோடியை கடன் பெற்றுள்ளது. எஸ் டெல் நிறுவனம் தனது உரிமத்தில் சில பங்குகளை எடிஸ்லாட் டி.பி. இந்தியா (Etisalat DB India) எனும் நிறுவனத்திற்கு பங்குகளை விற்பதற்கு முன்பே ரூ.2,000 கோடி வங்கியிடம் கடனாகப் பெற்றுள்ளது.
எஸ் டெல் நிறுவனம் தனது நிறுவனத்தின் அறிக்கையை Registrar of Companies-இல் கொடுத்துள்ளதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரூ.747 கோடியும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ரூ.500 கோடியும், பாங்க் ஆப் பரோடா வங்கி கொடுத்துள்ள கடன் தொகை ரூ.400 கோடியாகும், இவர்கள் மட்டுமில்லாமல் ஐடிஎப்சி வங்கி ரூ.200 கோடியும், IL&FS என்கிற நிதி நிறுவனம் ரூ.70 கோடியும் கடனாகக் கொடுத்துள்ளார்கள்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு முன்பே, பல வங்கிகளில் கடன் தொகை பெற ஸ்வான் நிறுவனம் முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. மேற்படிக் கடன்தொகை அனைத்தும் 20.10.2007-லிருந்து 24.10.2007 தேதிக்குள் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேதிகளில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படவில்லை என்பது வெட்ககேடான விஷயமாகும். ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பெற்ற கடன் தொகை போலவே லூப் டெலிகாம் நிறுவனமும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.400 கோடி கடன் பெற்றுள்ளது.
சுமார் 11,500 கோடி ரூபாயை கடன் பெற்றதற்கு இந்த இரண்டு நிறுவனங்களும் கொடுத்த செக்யூரிட்டி வெறும் உரிமம் பெற்ற கடிதம் மட்டுமே; இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகப் பெற வேறு எந்த விதமான அசையா சொத்துக்களையும் செக்யூரிட்டியாகக் கொடுக்கவில்லை.
திருமதி இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கியபோது, சாதாரண ஏழை எளிய மக்களும் வங்கிகளில் கடன்பெற்று, தொழில் துவங்க வேண்டும் என்பதற்காகவே வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடுத்தர மக்களுக்கு– குறிப்பாக மாணவர்களுக்குக் கல்விக் கடன் கொடுக்க– ஆயிரம் செக்யூரிட்டிகள் மற்றும் ஜாமீன் கேட்கும் இத்தருணத்தில் எவ்வித ஆதாரமும் செக்யூரிடியும் இல்லாமல் ஒரே ஒரு காகிதத்தை மட்டும் நம்பி இவ்வளவு பெரிய தொகை, நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் மோசடியில் பங்கு கொண்ட நிறுவனங்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டது எவ்வாறு என்பது, தேர்ந்த நிதியியல் நிபுணர் திருவாளர் மன்மோகன் சிங்குக்கே வெளிச்சம்.
இனிமேலாவது வங்கிகள் மக்களுக்காக உழைக்குமா, இல்லை மக்கள் பணத்தை ஏமாற்றும் கம்பெனிகளுக்கே தாரை வார்க்குமோ!
மக்களைப் பற்றி கவலைப் பட யாரும் இல்லை!
இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் வங்கிகளின் பங்கு பற்றி இன்னும் மக்களுக்கு விஷயம் சென்றடையவில்லை. தேவையானதொரு கட்டுரை. மன்மோகனின் உள்கை இல்லாமல் இதில் எதுவுமே நடந்திருக்க முடியாது, நிச்சயம் மன்மோகனுக்கு இந்த ஊழலில் பெரும் பணம் சென்றிருக்காமல் வெறும் பதவிக்காக மட்டுமே மன்மோகன் இவ்வளவு தூரம் இந்தக் கூட்டுக் கொள்ளைக்கு தலைவனாக இருந்திருக்க முடியாது. மன்மோகன் தீவீரமாக விசாரிக்கப் பட வேண்டிய ஒரு குற்றவாளியே என்பது இந்த ஊழல் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது
கல்வி கடனுக்கு வீடு, LIC பாலிசி, தனி நபர் பிணை பத்ரம் என்று கொடுக்கும் கடனுக்கு 4 அல்லது 5 பங்கு கூடுதலாக செக்யூரிட்டிகள் மற்றும் ஜாமீன் கேட்கும்
வங்கிகள் எந்தவொருசெக்யூரிட்டிகள் மற்றும் ஜாமீன் இல்லாமல் வெத்து காகிதம் பேரில் இவ்வளவு தொகையை வாரி வழங்கினார்கள் என்றால் மேலிடத்து உத்தரவும் அனுமதியும் இல்லாமல் நடந்திறுக்குமா? இல்லை என்று நாம் நம்ப முட்டாள்களா? இன்னும் எத்தனை தலைகள் உருளுமோ அல்லது எல்லாம் மூடி மறைக்கபடுமோ? மொத்தத்தில் வங்கிகள் சாமான்யனுக்கு இல்லை என்பது நிதர்சனமான உண்மை
திரு விஸ்வாமித்ரா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. திரு மன்மோகன் சிங்கின் மனைவிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு கொடுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து செய்தி வருகிறது. ஊழலில் பங்கு இல்லாவிட்டால் இவ்வளவு கீழே சிங் இறங்கி வந்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.
ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவின் சேர்மன் காங்கிரஸ் கட்சியின் பெரும்புள்ளியின் மருமகன். வாரக் கடைசிகளில், வங்கிகளின் தானியங்கி பணம் கொடுக்கும் இயந்திரங்கள், நோ ஸ்டாக் நிலையில் இருப்பதும், வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணம், குறைந்த கால அவகாச வட்டிக்கு விடப்பட்டு, பெரும் பணம் பண்ணப்படுவதும், இம்மாதிரியான, கன்னா பின்னா கடன்களுக்குத்தான். கட்டுக்கட்டாகப் பணம் முழுங்கும், பாரத ரிசர்வ் வங்கி எனப்படுவது, தினசரி வட்டி அளிக்கும் ஏமாற்றுவேலையை கொண்டுவந்ததும், ஊழலுக்குத் துணைபோகத்தான்.
அருமையான கட்டுரை.
ஒரு பழைய நிகழ்வு இப்போது நினைவுக்கு வருகிறது.
நெருக்கடி நிலையின்போது, சஞ்சய் காந்தியின் கனவுத் திட்டமான மாருதி கார் உற்பத்திக்கு பொதுத்துறை வங்கிகள் நிதியுதவி வழங்க அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, நிதித்துறையின் அம்சமான வருமானவரி, வங்கிகள் விவகாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளைப் பிரித்து பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் மத்திய வருவாய் மற்றும் வங்கித் துறை இணை அமைச்சர் ஆனார் (1975).
அதன் பிறகு, சென்ட்ரல் வங்கியும், பஞ்சாப் நேஷனல் வங்கியும் எந்த முன்நிபந்தனையும் அற்ற ரூ. 75 லட்சம் கடனை (அப்போது இந்தத் தொகை மிகப் பெரியது). சஞ்சய் காந்திக்கு வழங்கின. இந்திரா காந்தி ஆட்சி வீழ்த்தப்பட்டு ஜனதா அரசு உதயமான பின், இந்த மோசடி குறித்து விசாரித்த ஷா கமிஷன், பிரணாப் முகர்ஜியின் அதிகார அத்துமீறலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து குற்றம் சாட்டியது. அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், ஜனதா அரசு கவிழ்ந்து மீண்டும் இந்திரா காந்தி பிரதமர் ஆனவுடன், ஷா கமிஷன் அறிக்கை குப்பைக்கூடையில் எறியப்பட்டது.
அதே பிரணாப் முகர்ஜி தான் இப்போது மத்திய நிதிஅமைச்சர். இவர் தான், ” ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த மோசடியும் நிகழவில்லை; எதிர்க்கட்சிகளின் ஜே.பி.சி. கோரிக்கை நியாயமற்றது; ஜே.பி.சி. என்ன வானத்தில் இருந்தா குதிக்கப் போகிறது?” என்று ஏளனம் பேசி வருகிறார்.
நமது மக்கள் மறதித் திலகங்கள்; நமது ஊடகங்களோ ‘செலெக்டிவ் அம்னீசியா’ வியாதியால் பாதிக்கப்பட்டவை- காங்கிரஸ், இடதுசாரிகள் செய்த தவறுகள் இவர்களுக்கு பெரும் பொருட்டல்ல.
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்ற பழமொழி பழையதாகி விட்டது. கோயில் தேங்காயை எடுத்து எண்ணெய் அரைத்து விற்கிறார்கள் நமது அதிபுத்திசாலி அமைச்சர்கள். அந்த எண்ணெய் மணமாகும் சுவையாகவும் இருப்பதாக நாம் பாராட்டிக் கொண்டிருக்கிறோம்…
நாம் ஏன் அடிமைப் பட்டோம் என்பது இப்போது தெளிவாக விளங்குகிறதா?
-சேக்கிழான்
செய்தியாளர்களைக் கிண்டல் செய்யும் கருணாநிதி
முதல்வர் கருணாநிதிக்கு பத்திரிக்கை யாளர்களை சந்திப்பது என்றால் அலாதி பிரியம். அடிக்கடி பத்திரிக் கையாளர்களை சந்திப்பதன் மூலம் எப்போதும் தன்னை முதன்மைச் செய்தியில் தக்கவைத்துக் கொள்வார்.
தனக்கு விருப்பமான கேள்விகளைத் தன்னிடம் கேட்குமாறு அவரே நெருக்கமான செய்தியாளர்களிடம் சொல்லி அனுப்புவதும் அவரது பாணிகளில் ஒன்று. சில கேள்விகளை அவரே எழுதிக்கொடுத்து கேட்கச் சொல்வார் என்றும் கூறப்படுகிறது.
செய்தித் துறையோடு அளவளாவும் கருணாநிதிக்குப் பிடிக்காத ஒன்று உண்மைகளை கேள்விகளாகக் கேட்பது! பிறரைக் கேலியும் கிண்டலும் செய்யும் கருணாநிதியிடம் பலநேரம் பல பத்திரிக்கையாளர்கள் திட்டு வாங்கியது உண்டு. திமுக பிரமுகர் தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், கருணாநிதி டெல்லி சென்றார். அப்போது ஒரு செய்தியாளர், உங்கள் மகன் அழகிரிதான் கொலை செய்தார் என்று கூறப்படுகிறதே? என்று கேட்டார். உடனே கோபமடைந்த கருணாநிதி ‘‘நீதாண்டா கொலை செய்தாய்’’ என பதிலடி கொடுத்து அதிர வைத்தார்.
கோவையில் ஒருமுறை பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை அடுக்கியபோது, கோபமாக வெளியேறியவர், ‘‘இனி கோவையில் பத்திரிக் கையாளர்களை சந்திக்க மாட்டேன்’’ என்று பாய்ந்தார். பின்னர் சரணடைந்தது வேறு விஷயம். அதுபோல் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி களைக் கேட்டனர். அமைச்சர் பூங்கோதையும், நீரா ராடியாவும் பேசிய ரகசிய டேப்புகள் குறித்து ஒரு செய்தியாளர் கேட்க, ‘‘இரண்டு பெண்கள் பேசினால் உனக்கென்ன?’’ என ஒருமையில் கேட்டு திடுக்கிட வைத்தார். அவர்கள் அரசியல் சார்பற்ற குடும்பப் பெண்கள் அல்ல. ஒருவர் அமைச்சர், இன் னொருவர் அரசியல் தரகர். இதைக்கூட உணராத கருணாநிதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
சமீபத்தில் வெங்காய விலை உயர்வு குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். உடனே ‘‘பெரியாரிடம் கேளுங்கள்’’ என்றார். காரணம் பெரியார் கோபமாகப் பேசும்போது, ‘வெங்காயம்’ என அடிக்கடி கூறுவார். அதை வெங்காய விலை உயர்வோடு சம்பந்தப்படுத்தி தன்னை பெரிய ‘ராஜதந்திரி’யாக காட்டிக் கொண்டார். இவரது ராஜதந்திரம் டெல்லியில் சந்தி சிரிப்பது குறித்து அவருக்கு தெரியாதோ என்னவோ.
ஜனவரி 3 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துவிட்டு வெளியே வந்த கருணாநிதி கடுகடுவென இருந்தார். காரணம் அடையாறு பூங்காவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராததால், பிரதமர் திறந்து வைப்பதாக இருந்த அந்த நிகழ்வு ரத்தாகியது. எல்லாவற்றையும் அரையும் குறையுமாகவாவது தன்னுடைய ஆட்சியில் திறந்துவைத்து, வரலாற்றிலும் கல்வெட்டிலும் பெயர் பெறவேண்டும் என்பது அவரது வெறித்தனமான ஆசை. அடுத்த முறை தான் ஆட்சியமைக்க முடியாது என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது போலும்.
இந்நிலையில், திமுக பங்கு வகிக்கும் மத்திய அரசே, மாநில அரசு உருவாக்கிய ஒரு பூங்காவுக்கு அனுமதி தராததும், அந்த விழாவில் பிரதமரும் அவரும் பங்கேற்று காட்சியளிக்க முடியாமல் போனதும் அவருக்கு பெரிய இழுக்காகி விட்டது.
அந்தக் கோபத்தில்தான் பிரதமரை வரவேற்கப் போகாமல் வைரமுத்துவின் நிகழ்ச்சிக்குப் போனார். அங்குபோய் பிரதமரை விட புலவர்தான் முக்கியம் என ‘டபாய்க்கவும்’ தவறவில்லை.
அடுத்த நாள் ஜனவரி 3 அன்று பிரதமரை அவர் ஆளுநர் மாளிகையில் சந்தித்தபோது, சந்திப்பு சுமுகமாக இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதியிடம், ‘‘திமுக&காங்கிரஸ் கூட்டணி எப்படி உள்ளது?’’ என நிருபர்கள் கேட்டனர். கேள்வி கேட்டது ஒரு பெண் நிருபர். ஸ்டாலினின் மருமகள் வயதுதான் அவருக்கு இருக்கும். அதாவது கொள்ளுப் பேத்தி வயது.அவரின் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, ‘‘உனக்கும் எனக்கும் உள்ள உறவு போல உள்ளது…’’ என சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். இது தொலைக்காட்சியைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
கொஞ்சமும் நாகரீகமில்லாமல், வயதுக்கேற்ற பக்குவமில்லாமல் ஆபாச மாக அவர் அளித்த பதில் மிகவும் கண்டனத்திற்குரியது.
பிரதமரின் சந்திப்பில் ஏற்பட்ட விரக்தியும், காங்கிரஸ் மீதான அதிருப்தியும் அவரை நிலைகுலையச் செய்துள்ளது. அதற்காக கருணாநிதி இப்படியெல்லாமா தரம்தாழ்ந்துப் போவது?