பின் லேடனை விட மாபெரும் அபாயம்

osamaசர்வதேச பயங்கரவாதி, உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட ஒசாமா பின் லேடன் ஒருவழியாக அமெரிக்கப் படையால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் 2001, செப். 11 ல் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதாகவும், நீதி வென்றுவிட்டதாகவும் முழங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இனி கவலையில்லை- அடுத்த அதிபர் தேர்தலிலும் ஒமாபா வென்று விடலாம்.

பின்லேடன் கொல்லப்பட்டது உலக அளவில் மேற்கத்திய ஊடகங்களில் அளவுக்கு அதிகமாகவே புகழப்படுகிறது. ஆனால், இந்த அதிரடி நிகழ்வின் பின்புலத்தில் பதில் அளிக்க வேண்டிய பல கேள்விகள் புதைந்துள்ளன. இக்கேள்விகளைக் கேட்காமல் நாமும் பிற ஊடகங்கள் போல அறியாமையால் அமைதி காக்கக் கூடாது.

பின்லேடன் யார்?

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் ஒரு செல்வந்தர் வீட்டில் (1957) பிறந்த பின்லேடன் பயங்கரவாதி ஆனது எப்படி? கட்டுமான நிறுவனம் நடத்திவந்த ஒசாமாவை பயங்கரவாத படுகுழிக்குள் தள்ளியது யார்? கண்டிப்பாக, இஸ்லாமிய மத அடிப்படைவாதம் மட்டுமல்லாது அமெரிக்காவுக்கும் அதில் பங்குண்டு.

சோவியத் ரஷ்யா என்ற மாயையான கம்யூனிச வல்லரசு அமெரிக்காவுக்கு போட்டியாக இருந்த காலகட்டத்தில், அண்டையிலுள்ள நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்திவந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத்துறை (சி.ஐ.ஏ) பல நிழல் நடவடிக்கைகளை அரங்கேற்றியது. அதில் ஒன்று, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த ரஷ்யாவுக்கு எதிராக, முஜாகிதீன்களை வளர்த்துவிட்டது. அவர்களுக்கு உதவ அமெரிக்காவால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டவர் (1979) தான் ஒசாமா பின் லேடன். இவரது உதவியுடன் முஜாகிதீன்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்தது. 1989 ல் ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யா படைகளை வாபஸ் பெற வேண்டியதானது; தவிர அதன் வல்லரசு பிம்பமும் தகர்ந்து பல நாடுகளாக சிதறுண்டது. இதனிடையே அல்குவைதா அமைப்பை முஜாகிதீன்களின் உதவியுடன் துவங்கினார் பின் லேடன் (1988).

osama

ஆப்கானிஸ்தான் பணி முடிந்தவுடன் ஒசாமாவின் கவனம் ஈராக் மீது திரும்பியது. குவைத்தை ஆக்கிரமித்த ஈராக் மீது போர் தொடுத்த (1990) அமெரிகாவுக்கு சவூதி அரேபியா ஆதரவளித்தது. முஸ்லிம்களின் புனித நகரங்களான மெக்கா, மெதினா அருகே அமெரிக்கப் படைகள் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பின் லேடன், சவூதி அரச குடும்பத்திற்கு எதிராகவும் சதி செய்தார். அதன் விளைவாக அமெரிக்காவின் அதிருப்திக்கு ஆளான பின் லேடன் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு சூடான் (1991) சென்றார். தன்னால் வளர்த்துவிடப்பட்ட கையாளே தனக்கு எதிராக வளர்ந்து நிற்பது கண்டு சி.ஐ.ஏ அதிர்ந்தது. அவரை ஒழிக்க முயற்சிகள் துவங்கின.

1992 ல் ஏமன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு பின் லேடனின் சுயரூபத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து நியூயார்க் உலக வர்த்தக் மையத்தில் தாக்குதல் (1993), கென்யா, தான்சானியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் (1995), ஏமன் கப்பல் மீது தாக்குதல் (2000) என அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மீதான பின் லேடனின் தாக்குதல் நடந்தது. ரஷ்யாவிற்கு எதிராக இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற பெயரால் பயங்கரவாதிகளை வளர்த்துவிட்ட அமெரிக்காவுக்கு எதிராக, அதே இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற பெயரில் தாக்குதல்களை பின் லேடன் நடத்தியது. அமெரிக்க நெருக்குதலால் சூடானிலிருந்து துரத்தப்பட்ட பின் லேடன், ஆப்கானிஸ்தானில் (1996) தஞ்சம் அடைந்தார்.

2001, செப்டம்பர் 11 – உலக வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்று தான் 4 விமானங்களைக் கடத்தி உலக வர்த்தக மைய கட்டடங்களையும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனையும் தாக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் பின் லேடன். அந்த நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகினர். இச்சம்பவம் தன்னால் தான் திட்டமிடப்பட்டது என்று அறிவித்தார் பின் லேடன் (2004).

இதற்கு பழிவாங்க அலைந்தது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசுக்கு எதிராக போராடும் முஜாகிதீன்களையும் அல்குவைதா அமைப்பினரையும் ஒழிக்க ராணுவ நடவடிக்கை தொடங்கிய அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள், அங்கு பல அத்துமீறல்களில் ஈடுபட்டன. இந்தப் போரால் ஆப்கானிஸ்தான் சின்னாபின்னமானது. இப்போரில் பாகிஸ்தானையும் தனது கூட்டாளியாக்கிக் கொண்டது அமெரிக்கா.

கடைசியாக, 10 ஆண்டு தேடலுக்குப் பிறகு, பின் லேடனை பாகிஸ்தானிலுள்ள அப்போதாபாத்தில் உள்ள வசதியான வீட்டில் கமாண்டோ நடவடிக்கை மூலமாக சுட்டுக் கொன்றிருக்கிறது அமெரிக்கா (2.5.2011). பேயை வளர்த்து விடுவானேன்? பிறகு அதை அழிக்க பேயாட்டம் ஆடுவானேன்?

நடந்தது என்ன?

உண்மையில் பின்லேடனின் கொலையில் பல மர்ம முடிசுகள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருப்பதாகக் கூறப்பட்ட பின்லேடன் அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக இந்தியா பல ஆண்டுகளாகவே தகவல் கொடுத்து வந்துள்ளது. ‘பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் மாறிவிட்டது; அதற்கு ஆயுத உதவி செய்யாதீர்கள்’ என்றும் இந்தியா எச்சரித்து வந்துள்ளது. அப்ப்போதேல்லாம் கண்டுகொள்ளாத அமெரிக்கா இப்போது அதிரடியாக செயல்பட்டுள்ளது.

இப்போதுதான் சி.ஐ.ஏ.வுக்கு ஒசாமா பாகிஸ்தானில் இருந்தது தெரிந்ததா? உண்மை அதுவெனில், அதன் உளவுத்திறமையே கேள்விக்குறியாகும். ஏற்கனவே தெரிந்தது எனில், அமெரிக்க அரசின் நம்பகத் தன்மை கேள்விக்குறி ஆகும்.

பாகிஸ்தானில் பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பதுங்கி இருப்பது இந்தியாவுக்கு தெரிந்து, தகவல் கொடுக்க முடியும்போது, அமெரிக்கா இப்போது தான் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறது என்பதே பல கேள்விகளை எழுப்புகிறது. உண்மையில் இது போலி மோதலாகவே இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் சரிந்துவரும் தனது செல்வாக்கை உயர்த்த பராக் ஒபாமா நடத்திய நாடகமாகவும் இது இருக்கலாம்.

பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் குறித்த வீடியோ பதிவு, புகைப்படங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படாதது ஏன்? அவரது உடல் அவசர அவசரமாக கடலில் மூழ்கடிக்கப்பட்டது ஏன்? இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பிறர் யார் என்ற விபரங்களை இதுவரை அமெரிக்க ராணுவம் வெளியிடாதது ஏன்?

obama_announcement

எந்த அரசும் தன் மீது அதிருப்தி ஏற்படும் தருணங்களில் இத்தகைய சாகசங்களில் இறங்குவது வழக்கமே. சந்தன கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கு நாம் ஒப்பு நோக்கலாம். ஆனால், பின்லேடன் பாகிஸ்தானில் தங்கி இருந்தது தங்களுக்கு இப்போதுதான் தெரியும் என்று அமெரிக்கா சொல்வதை எப்படி நம்புவது? இதைவிட பெரிய பொய்யர் பாகிஸ்தான் நாடு. பின் லேடன் தங்கள் நாட்டில் தங்கி இருந்ததே தனக்கு தெரியாது என்று சாதிக்கிறது, தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஊட்டி வளர்க்கும் பாகிஸ்தான். இந்த பொய்யை ஏன் அமெரிக்க சகித்துக் கொண்டிருக்கிறது?
பாகிஸ்தானின் காகுல் ராணுவ பயிற்சி மையத்தின் அருகில் உள்ள வசதியாகவும் மிக பாதுகாப்பாகவும் கட்டப்பட்ட கட்டடத்தில் தங்கி இருந்தது யார் என்று பாகிஸ்தான் அரசுக்கு தெரியவில்லையாம். அதை அமெரிக்க நம்புகிறதா? நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் தெருவில் செல்லும் ஒருவரைக்கூட தொலைதொடர்பு செயற்கைக்கோளால் படம் எடுக்க முடிவது சாத்தியமான இந்நாளில், பாகிஸ்தான் சொல்வதையும் அதை ஏற்கும் அமெரிக்காவையும் இந்த உலகம் எப்படி நம்புகிறது?

உண்மையில் பின் லேடன் பாகிஸ்தானில் இருப்பது அமெரிக்காவுக்கு தெரிந்தே இருந்திருக்கும். ஆனால், பாகிஸ்தான் ஆதரவின்றி ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உணவும் ஆயுதங்களும் எரிபொருளும் அனுப்புவது சிரமம் என்பதால்தான் அமெரிக்கா அமைதி காத்திருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் தான் நடத்தும் போருக்கு உதவுவதற்காகவே பாகிஸ்தானுக்கு பல்லாயிரம் கோடி ராணுவ உதவி அளித்து வருகிறது அமெரிக்கா என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், காந்தகார் விமானக் கடத்தல், அக்ஷர்தாம் கோயில் தாக்குதல், மும்பை படுகொலைகளில் தொடர்புடைய அதி பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் தான் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அவர்களை அமெரிக்க பாணியில் பாகிஸ்தானில் நுழைந்து சுட்டுக் கொல்ல இந்திய ராணுவத்தை இதே அமெரிக்கா அனுமதிக்குமா? பிறிதொரு நாட்டில் சாவகாசமாக ஹெலிகாப்டரில் சென்று இறங்கி ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு மட்டும் விசேஷ உரிமை கொடுத்தது யார்? ஆரம்பத்தில் இதை மழுப்பிய பாக். அரசு பிறகு இதைக் கண்டிக்கிறது; ஆயினும் ஏன் அமெரிக்காவுடன் நட்பு கொண்டாடுகிறது?

அந்த ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களுக்கு சென்று சேர்க்கிறது. இதன்மூலமாக ஒரே கல்லில் 3 மாங்காய்களை அடிக்கிறது அமெரிக்கா. ஒன்று, பாகிஸ்தானை தனது ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பது; இரண்டு, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய்வது; அதன்மூலமாக இந்திய துணைக்கண்ட பகுதியில் வலுவாக காலூன்றுவது. இந்த அமெரிக்காவைத் தான் நமது தலைவர்கள் நட்பு நாடு என்று இறுமாந்து போகிறார்கள்!

திசைமாறும் சர்வதேச அரசியல்

பின்லேடன் கொல்லப்பட்டது ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் அழிவான் என்ற தத்துவப்படி அமைந்து விட்டது (நன்றி: திமுக தலைவர் கருணாநிதி). இது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்த சம்பவத்திற்கு இந்திய அரசியல் தலைவர்கள் சிலர் (திக்விஜய் சிங், முலாயம்) இதிலும் முஸ்லிம் மக்களைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெறத் துடிப்பது அசூயையாக இருக்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்கும் இந்த கொள்ளையர்களை தண்டிப்பது யார்?

பின் லேடனின் சாவு, இத்துடன் நின்று விடாது என்பது மட்டும் திண்ணம். ஏனெனில், அவர் வளர்த்துவிட்ட அல்குவைதா பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையை கிறிஸ்தவ அரசின் நடவடிக்கையாக சித்தரித்து ‘ஜிகாத்’ நடத்தவும், அதன் பலனாக உலகில் அமைதி மீண்டும் குலையவும் பல வாய்ப்புக்கள் உள்ளன. இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, இஸ்லாமிய பயங்கரவாதிகள் பல்கிப் பெருகியுள்ள நமது நாடு தான். ஒசாமாவை ஆதரித்து வளர்த்துவிட்ட அமெரிக்கா போலவே, இங்கும் இஸ்லாமிய பயங்கர வாதிகளை வளர்த்துவிட மதச்சார்பற்ற அரசியல்வியாதிகள் முண்டி அடிக்கிறார்கள். அதற்கான பலனை பொதுமக்கள் தான் அடைய வேண்டி இருக்கும்.

உலக அளவில் கிறிஸ்தவ மேலாதிகத்திற்கும் இஸ்லாமிய அகிலத்திற்கும் மோதல் மறைமுகமாக நடந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகளில் மேற்கத்திய நாடுகளின் ஊடுருவல் இருப்பதாக இஸ்லாமிய நாடுகள் வெகுண்டு வருகின்றன. அதன் அடுத்த கட்டமாகவே பின் லேடன் மரணத்தைக் காண வேண்டும். இந்த நிகழ்வு, அமெரிக்காவின் பிடியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழுமானால், இரு ‘செமிட்டிக்’ மதங்களிடையிலான மூன்றாவது உலகப் போருக்கு உலகம் தயாராக வேண்டியது தான். அதை தாக்குப் பிடிக்க நமது நாடு முன்யோசனையுடன் தயாராக வேண்டும். ஆனால், நமது அரசோ, நாட்டை நாசாமாக்கும் பயங்கரவாதிகளைவிட கேவலமான நிலையில் இருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?

19 Replies to “பின் லேடனை விட மாபெரும் அபாயம்”

  1. சேக்கிழான் மிக அற்புதமான கட்டுரை. நன்றிகள் பல உரித்தாகுக.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னார்: ‘ இந்த உலகில் எல்லா நிகழ்ச்சிகளும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு மாபெரும் சக்தியின் விருப்பப்படியே நடக்கிறது.’

    மத தீவிரவாதமும் அப்படியே மனித இனத்தை அழிப்பதற்காக , இந்த தீய சக்திகள் ஒருவரை ஒருவர் அழிக்கும் போது , அந்த போரில் சாதாரண பொது மக்களும் கோடிக்கணக்கில் மாள்வர். சற்று சிந்தித்து பார்த்தால் , கடவுளால் படைக்கப்பட்ட பல உயிர்வகைகள் இன்று உலகில் அழிந்துவிட்டன. கடவுள் ஏன் அவற்றை காப்பாற்றவில்லை ? . உதாரணம் யாளி மற்றும் பல.

    கடவுள் சக்தி நினைத்தால் , அதாவது தேவை என்று கருதினால் , மறைந்து போன அந்த உயிர்வகைகளை எந்த நொடியிலும் மறுபடியும் உயிர்ப்பிக்க முடியும். தேவையற்றதை தேவையில்லாத போது, இறைவன் அழிக்கிறார். பிறகு தேவையானபோது மீண்டும் படைக்கிறார்.

    காட்டுமிராண்டிகள் தான் தன்னுடைய விருப்பத்தை பிறர் மீது திணிப்பர். மனிதன் கண்டுபிடித்த பல வழிகளும் உயர்ந்தவையே. ஆனால் தன் வழியை மட்டும் வாழவிட்டு, பிற வழிகளை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதனும், மதங்களும், கால வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவார்கள்.

    எதிர்காலத்திலும் புதிய வழிகளும், புதிய மதங்களும் ஏராளம் இந்த உலகில் தோன்றும்.

    எனவே இந்த மத வெறியர்களுக்கு நல்ல புத்தியை கொடு என்று எங்கள் குல தெய்வம் பெரியசாமி எனப்படும் முருகப்பெருமானை நான் பிரார்த்திக்கிறேன். உலகில் அன்பும், கருணையும், அமைதியும் நிலவ அருள்வாயாக என்று அனைவரும் அவரவர் முறைப்படி பிரார்த்தித்து, நம்மால் இயன்றதை செய்வோம்.

  2. ஒசாமா வீழ்த்தப்பட்ட அன்று இரவு அப்போடாபாதில் மின் விநியோகம் துண்டிக்கப் பட்டது. மற்றும் பாகி படைகள் ஒசாமா வீட்டைச் சூழ்ந்தன . அதன் பிறகே அமெரிக்க ஹெலிகாப்டர்கள் உள்ளே இறங்கின. இது சீன செய்தி ஏஜன்சி சின் ஹுவா கூறியுள்ளது. அது ஒன்றும் அமெரிக்கர்களுக்கு ஜால்ரா அடிக்கத் தேவை இல்லை ஆதலால் இதனை பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

    மேலும் இதில் முழுக்க ஒபாமா நாயகனாகவே சித்தரிக்கப் பட்டு வருவதைப் பார்க்கையில் இதில் ஒரு வகை அரசியல் நாடகம் தான் அரங்கேறியிருப்பது புலப்படும். சரியும் தன பிரபலம், வீழும் அமெரிக்கப் பொருளாதாரம் இவற்றில் இருந்து தம் மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த நாடகம்.

    இஸ்லாமிய தீவிரவாதம் என்பது பாகிஸ்தானின் மற்றும் ஒசாமாவின் கண்டுபிடிப்பு அல்ல. இவை இரண்டும் பொம்மலாட்டத்தின் ஊசலாடும் பொம்மைகள். திரைக்குப் பின்னால் அசைக்கும் கைகள் அமெரிக்க மற்றும் அதன் அடிவருடி தேசங்கள்.

  3. Pingback: Indli.com
  4. சகோ.சேக்கிழான்..!

    ///உலக அளவில் கிறிஸ்தவ மேலாதிகத்திற்கும் இஸ்லாமிய அகிலத்திற்கும் மோதல் மறைமுகமாக நடந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகளில் மேற்கத்திய நாடுகளின் ஊடுருவல் இருப்பதாக இஸ்லாமிய நாடுகள் வெகுண்டு வருகின்றன. அதன் அடுத்த கட்டமாகவே பின் லேடன் மரணத்தைக் காண வேண்டும். இந்த நிகழ்வு, அமெரிக்காவின் பிடியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழுமானால், இரு ‘செமிட்டிக்’ மதங்களிடையிலான மூன்றாவது உலகப் போருக்கு உலகம் தயாராக வேண்டியது தான். அதை தாக்குப் பிடிக்க நமது நாடு முன்யோசனையுடன் தயாராக வேண்டும். ஆனால், நமது அரசோ, நாட்டை நாசாமாக்கும் பயங்கரவாதிகளைவிட கேவலமான நிலையில் இருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்? ///

    ——-“நச்”…”நச்”…”நச்”——மிகவும் துல்லியமான அலசல்..! வாழ்த்துக்கள்.

    ///அந்த ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களுக்கு சென்று சேர்க்கிறது. இதன்மூலமாக ஒரே கல்லில் 3 மாங்காய்களை அடிக்கிறது அமெரிக்கா. ஒன்று, பாகிஸ்தானை தனது ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பது; இரண்டு, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய்வது; அதன்மூலமாக இந்திய துணைக்கண்ட பகுதியில் வலுவாக காலூன்றுவது. இந்த அமெரிக்காவைத் தான் நமது தலைவர்கள் நட்பு நாடு என்று இறுமாந்து போகிறார்கள்!///

    —–சபாஷ்…!

    அடடா..! உங்க கைகளை பிடித்து குலுக்கி பாராட்ட வேண்டும் போல இருக்கிறது..!

    பின்னூட்டத்தில் அந்த வசதி இல்லையே… சகோ.சேக்கிழான்..!

  5. On May 7th, a prayer meeting was held in a mosque in chennai for osama.

    What were these guys doing when innocent muslims died in the twin tower blasts?

    It is surprising that not one political / religious leader has condemned this act.

    This is highly dangerous for the secular fabric of our country.

  6. சேக்கிழான் அவர்களின் ஆய்வு பாராட்டுக்குரியது. இரு மதங்களுக்கிடையே நடக்கும் இந்த நிழல் யுத்தம் நீங்கள் சொல்வது போல உலக யுத்தமாக மாறும் போது இந்தியாவின் நிலைமை என்ன என்று கவலைப் படுகிறீர்கள். இப்போது உள்ள மன்மோகன் சிங்கின் ஆட்சி அப்போதும் இருக்குமானால், சோனியாவின் வழிகாட்டுதலோடும், சிதம்பரம் போன்ற ‘அறிவு ஜீவிகளின்’ ஆலோசனைகளின் படியும், இந்திய அரசு அமெரிக்காவின் கைப்பொம்மையாக இயங்கும் என்பதில் ஐயமில்லை. நமது பாரம்பரிய பெருமைகளும், நமது கலாச்சார செல்வங்களும், அமெரிக்கர்களின் காலடியில் சமர்ப்பிக்கப்படும்.

  7. Chennai, May 6 : A section of Muslims today offered Special Prayers at the Makkah Masjid at the arterial Anna Salai in the city to mourn the killing of Al Qaeda leader Osama Bin laden by the US.

    The special prayers were held along with the regular Friday afternoon prayers in which thousands of Muslims participated. Chief Imam of Makkah Masjid and Shariyat Council Secretary Moulana Shamsudeen Qasimi led the prayers. Sources close to the Imam said about ten to 12,000 Muslims participated in the special prayers.

    Talking to UNI, Moulana Shamsudeen said the Muslims condemned the US killing of Osama Bin Laden and his body being thrown into the sea. ”The US had denied last rites to Bin Laden as per Islamic traditions and threw his body into the sea”, he charged.

    Stating that US had created a fear psychosis in the minds of Muslims world-wide by branding Bin Laden as a ‘terrorist’, he said the US had been claiming that he was involved in the terror attack on World Trade Centre. ”But till now the US has not come out with any evidence to substantiate its charges”, Mr Shamsudeen said and added the prayers were held to remove the fear psychosis from the minds of the people.

    Justifying the conduct of the prayers, he said unlike LTTE Leader V Prabhakaran, who was wanted in the Rajiv Gandhi assassination case, Bin Laden was not involved in any acts of terrorism in India. He was also not declared as a proclaimed offender by the Indian government. ”So, there is nothing wrong in conducting prayers to pay homage to a Muslim, who was branded as a terrorist by the US”, he added.

    What do we have to say to this?

  8. இந்துக்கள் சாதி வேறுபாடின்றி ஒன்றுபடவும், அரசியல் விழிப்புணர்வு பெறவும், “எங்கள் பாரதம்” என்ற இலவச இணையதள மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது. முதல் இதழ் 15/5/11 அன்று வெளியிடப்படும். இதை அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    -இதழ் ஆசிரியர்.

    சித்திரை மாத “எங்கள் பாரதம்” இதழ்,
    சித்திரை 31 (14-05-11)
    அன்று வெளியிடப்படும்.
    விபரங்கள்:-
    1. இந்து மத விளக்கம்.
    கட்டுரை: விபூதி
    எழுதியது: வீர பாரதியன்.
    2. அரசியல் விழிப்புணர்வு.
    கட்டுரை: திராவிட கழகங்கள் எங்கே?
    எழுதியது: வீர பாரதியன்.
    3. நடப்பு அரசியல்.
    கட்டுரை: 2011 தேர்தல்
    ஒரு பார்வை.
    எழுதியது: வீர பாரதியன்.
    4. பக்தி/ தேச பாடல்.
    பாடல்: இந்த நாடு, இந்து நாடு…..
    (இந்த பாடல் H.S.Sயின் பாடலாகும்).
    5. வாசகர் கேள்வி-பதில்.
    உங்கள் கேள்விகளுக்கு இதழ் ஆசிரியர்
    வீர பாரதியன் எழுதும் பதில்கள்.
    6. தலைவர்கள்/ மகான்கள்.
    தலைவர்: டாக்டர்ஜீ ஹெட்கேவார்.
    எழுதியது: வீர பாரதியன்.
    7. பொது கட்டுரை.
    கட்டுரை: லட்சியம்.
    எழுதியது: வீர பாரதியன்.
    8. தர்ம சிறுகதைகள்.
    கதை: உண்மை VS பொய்.
    எழுதியது: சக்தி.
    9. ஆரோக்கிய சைவ சமையல்.
    சமையல்: தேங்காய் பால் கொழுக்கட்டை.
    குறிப்பு: சக்தி.
    ॐॐॐॐॐॐॐॐॐ
    அன்பார்ந்த இந்து உறவுகளே, இந்து மாத
    இதழை நீங்களும் படித்து; பிறரையும்
    படிக்க வைத்து, நலம் பெறுக!
    -வீர பாரதியன்

  9. ஜனாப் ஒசாமா பின்லேடன் அவர்கள், சிறுநீரக கோளாறினால் ஒரு சில வாரங்கள் முன்பு இறந்திருக்கலாம்.. அன்னாரின் இறுதிச் சடங்கை அமெரிக்கா கடலில் செய்துள்ளது. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய சென்னை இமாம் பிராத்தனை செய்துள்ளார்..

  10. கலைஞர் ஒன்றும் காங்கிரசு அளவுக்கு ஊழல் செய்தவர் அல்ல.
    காங்கிரசு ஒரு தேசவிரோத சக்தி.
    கலைஞரைப்போல பல ஊழல்வாதிகளுக்கு அரவணைப்பு கொடுத்து, நாட்டை கெடுத்தது , காங்கிரசு என்று இன்று சொல்லிக்கொண்டிருக்கும் ஊழல் கட்சி தான்.

    இந்தியாவிலேயே பெரிய ஊழல் கட்சியாக அது இருப்பதால் தான், அவர்கள் கலைஞர் , சிபுசோரென், லல்லு பிரசாத் யாதவ், மற்றும் குமாரசாமி கவுடா போன்ற பல ஊழல் வாதிகளுடன் அடிக்கடி கூட்டு சேர்ந்து பதவி சுகத்தை தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள். என்னவோ , காங்கிரசு பெரிய சுத்தமான கட்சி போலவும், மற்றவர்கள் மட்டம் என்றும், சொல்வது ஒரு கேலிக்கூத்து ஆகும்.

    கலைஞர் பல தவறுகள் செய்தார். தன்னுடைய இருமகன்களை அரசியலுக்கு கொண்டுவந்ததுடன் நிறுத்தாமல், மகள், பேரன் என்று பட்டியல் தொடர்ந்ததும் பெயர் கெட்டுப்போய்விட்டது. மின்சார உற்பத்தியும் போதிய கவனம் செலுத்தாததால் , காலை வாரி விட்டது. இதனுடன் ௨ ஜி யும் சேர்ந்துகொண்டது.

    அவருடைய கட்சிக்காரர்களே குடும்ப உறுப்பினர்கள் மேல் பொறாமை படுகிறார்கள்.

    அண்ணா மேம்பாலத்தின் அருகில் களரி கலை பற்றி ஒரு சிலை திறந்து , அதன் கீழே ஒரு கல்வெட்டு வைத்துள்ளார்கள். ( ஸ்டாலின் அவர்கள் திறந்த சிலை) அதனை இன்று படித்து பார்த்தேன். அதில் ராவணன், அகத்தியர், போகர் போன்ற சித்த புருஷர்களால் இந்த களரி கலை உருவாக்கப்பட்டு , வளர்க்கப்பட்டதாக எழுதியுள்ளார்கள். எனக்கு தெரிந்து ராவணனை சித்தர் என்று யாரும் சொல்லி நான் கேட்டதோ, படித்ததோ இல்லை. அகத்தியர், மற்றும் போகர் ஆகியோர் சித்த புருஷர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ராவணன் எப்போது சித்த புருஷர் ஆனார். தன் இரு மகன்களை ராவணன், மற்றும் கும்பகர்ணன் போல இருங்கள் என்று உபதேசித்தவர் இவர். ராவணனுக்கு களரி கலை தெரியும். ஆனால் , அவர் சித்த புருஷர் அல்ல.

    அடுத்தவன் பெண்டாட்டியை தூக்கி கொண்டு போன ஒரு காம வெறி பிடித்த நாய் அவன். அவனை போய் சித்த புருஷன் என்று சொல்லி , உண்மையான சித்த புருஷர்களை கேவலப்படுத்தலாமா ?

    [Edited and published]

  11. உலக வர்த்தக மையத்திற்கு பின் லேடன் வகையறா தான் விமானம் மூலம் மோதி வெடிக்க செய்தனர் என்பது உலகு அறிந்த உண்மை. நல்ல வேளை, உலக வர்த்தக மையத்தில் இருந்தவர்களே தங்கள் கட்டிடத்திற்கு ஒரு விமானத்தினை வெடிபொருள் நிரப்பி, அனுப்பி மோதச் செய்தனர் என்று சொல்லாதது தான் பாக்கி.

    அல் குவைதா தான் இந்த தாக்குதலை செய்தது என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. இதில் சந்தேகம் இருப்பவர்கள் அந்த தாக்குதல் பற்றி வெளிவந்துள்ள ஏராளமான நூல்களையும், இணையத்தில் வந்துள்ள தகவல்களையும் படித்தால் புரியும். எந்த கொலைகாரனும் சதித்திட்டங்கள் செய்து பிற உயிர்களை பாதிப்பு அடைய செய்யும்போது , கோடிக்கணக்கான மக்கள் அவனுக்காக பிரார்த்தனை செய்தாலும் , இறைவன் அவனை மீளா நரகத்திற்கே அனுப்புவார்.

    தவறான பாதையில் சென்று விட்ட இந்த நபர்கள் இனியாவது திருந்துவார்களா? அவனைப்போன்ற கொலைகாரர்களுக்கு பிரார்த்தனை கூட்டம் நடத்துவது ஒரு மன்னிக்க முடியாத தவறாகும்.

  12. sanjay, ஒசாமா பின் லேடனை அமெரிக்கா தான் வளர்த்து விட்டிருந்தாலும் சென்ற வாரம் இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான உதவி செயலாளர் றொபர்ட் பிளெக் தெரிவித்த கருத்து சரியானது.
    “ஒசாமா பின் லேடன், பிரபாகரன் ஆகியோர் உலகில் இரக்கமற்ற பயங்கரவாத தலைவர்கள்”

  13. பின்லேடனுக்காக சென்னையில் சிறப்பு தொழுகை நடத்தியதற்கு எதிராக ராமகோபாலன் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு இந்நேரம் டாட்காம் மற்றும் தட்ஸ்தமிழ் இணைய தளங்களில் முஸ்லீம்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். அவற்றைப் பார்த்தபோது மேற்படி தளங்கள் முஸ்லீம் தளங்கள் போல் தோன்றுகிறது. பின்லேடனை ஆதரிப்பவர்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள். இவர்களின் எதிரிகளுடன் நேரடியாக மோதாமல் அப்பாவி மக்களை குண்டு வைத்துக்கொல்லும் மனித மிருகங்களை ஒழித்தால்தான் நாட்டில் அமைதி இருக்கும்.

  14. அன்புள்ள சதாசிவன் .எம்.

    இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. எல்லாவற்றையும் எழுத இடமும் நேரமும் இல்லை. ஒரு இணைப்பில் பார்த்தாலே தொடர் இணைப்புக்கள் பலவும் கிடைக்கும்.

    பார்க்கவும்:-

    culteducation.com

  15. தமிழ் நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்ற தலைப்புடன் ஒரு கிறித்துவ கும்பல் சில இந்து, முஸ்லிம் பிரமுகர்களுடன் நாளை (12-05-2011, மாலை 5 மணி, செ.தெ.நாயகம் மேனிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்) கூடுகிறது. இதன் பின்னணி, முன்னணி விவரங்கள் தெரியவில்லை. முடிந்தால் விசாரித்து எழுதவும். நான் நாளை வெளியூர் செல்கிறேன். நன்றி.

    நடத்துவது காவியுடை கிறித்துவர் தெய்வநாயகம் என்று தெரிகிறது.

  16. அய்யா, தாங்கள் வெறுங்கண்ணால் பார்க்காமல் ஒரு கருப்புக்கண்ணாடி மூலமாய்ப்ப்பர்க்கிறீர்கள். ஒபாமா அமெரிக்காவின் மத்தியதர மக்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரு விடிவுகாலம் காண்பதற்கு வந்திருக்கிறார். அதற்கaaகவும் ஒரு கறுப்பினத்தவர் என்பதற்காகவும் அவர் அடையும் அவமானம் எல்லையற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *