தாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்

திருஞான சம்பந்தர் வரலாறு குறித்து மோசமான பொய்களையும் அவதூறுகளையும் பரப்பும் தாண்டவபுரம் நாவலுக்கு எதிராக தமிழ்ஹிந்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறது.

சைவ அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்தப் போராட்டம் பற்றி அறிவிப்பு எமக்கு வந்தது. இந்த விஷயத்தைக் கவனப்படுத்துவதற்காக அதனை வெளியிடுகிறோம்.

தாண்டவபுரம் உள்ளிட்ட எந்த நூலையும் தடை செய்வதையோ அவ்வாறு கோருவதையோ தமிழ்ஹிந்து ஆதரிக்கவில்லை. அது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடு என்றே கருதுகிறோம்.

அவதூறுகளையும், பொய்மை வாதங்களையும் அறிவாற்றலாலும், சீரிய விவாதங்களாலும் எதிர்கொள்வதே ஜனநாயக முறையும் இந்து அறிவியக்கத்தின் வழியுமாகும். அதற்கான முனைப்பும், சக்தியும் ஊக்கமும் அனைத்திற்கும் மேலாக இறையருளும் நம்மிடம் உள்ளது.

தமிழ் மரபிலக்கிய அறிஞர்களும், சமயச் சான்றோர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் இணைந்து இந்த நாவல் முன்வைக்கும் ஆதாரமற்ற பொய்களை பொதுத் தளத்தில் அம்பலப்படுத்த வேண்டும் என்று தமிழ்ஹிந்து கேட்டுக் கொள்கிறது.

18 Replies to “தாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்”

  1. நம் சைவ ஆச்சாரியார் மீது இழிவான செய்திகளை வெளியிட்டவர்கள் ஐந்து அறிவு படைத்த மிருகமே அன்றி ஆறறிவு படைத்த மனிதனே இல்லை.
    தமிழ் வளர்த்த எம் பெருமானுக்கு உற்ற இழிவு நம் சைவ சமயத்திற்கு ஏற்பட்ட இழிவாக கருதி அன்பில் சீர் தொண்டர் எல்லாம் இணைந்து போராட வேண்டும். திருவருள் நமக்கு துணை நிற்கும்.
    மிண்டு மனத்தவர் போமின்கள் ; மெய் அடியார்கள் விரைந்து வம்மின்;
    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக வுலகமெல்லாம்.

  2. நாங்களும் கலந்து கொண்டு நூலுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

    “தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்
    ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
    திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
    அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே”

    சிவமயம்
    சோமசுந்தரம்

  3. ஒரு புத்தகம் தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழ் ஹிந்து தளத்தில் வருவது மிகவும் வருத்தத்தைத் தருகிறது.

    சல்மான் ரஷ்டியின் புத்தகம் தடை செய்யப்பட்டது அநீதி என்று தமிழ் ஹிந்து தளத்தின் தீவிர ஆதரவாளர்கள் பலரும் கருதுவீர்கள். இங்கே சிலராவது வெளிப்படையாக சொல்லியும் இருப்பீர்கள். இப்போது நீங்கள் மவுனமாக இருந்தால் நாளை சல்மான் ரஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன், யாருக்கும் ஆதரவாக குரல் கொடுக்கும் தார்மீக உரிமையை இழந்துவிடுவீர்கள்.

    அடுத்தது என்ன? புதுமைப்பித்தனின் “சாப விமோசனம்” தடை செய்யப்பட வேண்டுமா? எம்.வி. வெங்கட்ராமின் நித்யகன்னி? சமணர்களை குரூரமாக கழுவேற்றியதாக சொல்லும் பெரிய புராணம்? திரவுபதி ஆறாவதாக கர்ணன் மீதும் ஆசைப்பட்டதாக சொல்லப்படும் தொன்மம்? கிருஷ்ணனின் பல ஏமாற்று வேலைகளை விவரிக்கும் மகாபாரதம்? வாலியை மறைந்திருந்த கொன்ற, சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமனின் புகழ் பாடும் ராமாயணம்? துளசியின் தொன்மம்?

  4. அன்புள்ள ஆர்.வி, அவர்களுக்கு,

    தங்கள் மறுமொழிக்கு நன்றி.

    தமிழ் ஹிந்து இந்தப் புத்தகம் குறித்து தனது எதிர்ப்பையே பதிவு செய்ய விரும்புகிறது. தடை செய்வதற்கான கோரிக்கையை ஆதரிக்கவில்லை. அறிக்கையில் இருந்த குறுஎழுத்து வாசகத்தில் அது உள்ளது என்று கவனித்தோம்.

    பதிவிலேயே எமது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தும் வரிகளையும் இணைத்து விட்டோம்.

  5. கருத்துச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் காப்பாற்றப்பட வேந்தியவையே.ஆயினும் அவதூறான எழுத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. திருஞானசம்பந்தர் மூன்று வயதில் திருநனிபள்ளி சென்றார்
    என்பது சேக்கிழார் வாக்கு.ஆனால் அவர் 16 வயதில்தான் தலயாத்திரை
    சென்றார் என்றும் அங்கே தன் மாமன் மகளைப் பார்த்ததாகவும்
    தலயாத்திரை தொடரும்போது ஒருநாள் இரவு மாமன் மகளை நினைத்து
    கர மைதுனம் செய்ததாகவும் தாண்டவபுரம் சொல்கிறது.

    மனோன்மணி என்னும் கணிகையுடன் உறவு கொண்டதாகவும் அவர்களுக்கு
    மகவு பிறந்ததாகவும் இந்த நாவல் சொல்கிறது. பக்திசெய்ய வீதி மருங்கில் கூடும் பெண்களை திருஞானசம்பந்தர் நோட்டமிடுவார் என்றும் இந்த நாவல் குறிப்பிடுகிறது.

    இந்த வ்க்கிரப்பார்வை கருத்துச் சுதந்திரத்திலோ எழுத்துச் சுதந்திரத்திலோ
    அடங்குமா என்பதை அறிஞர்கள் சொல்லட்டும்

  6. சோலை சுந்தர பெருமாளைப் பாராட்டி எழுதும் வெங்கட் சாமிநாதன் தமிழ் ஹிந்துவின் பிதாமகர்தானே?

  7. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் நிலையைத் தெளிவுபடுத்திய விதமும் – எதிர்ப்பு, ஆனால் தடை செய்யும் கோரிக்கை இல்லை – மிகவும் நாகரீகமான முறை. என் மனமார்ந்த பாராட்டுகள்.

  8. திருஞானசம்பந்தரின் வரலாறு சேக்கிழாரின் திருத்தொண்டர்புராணம், தேவாரத்திருமுறைகள், நம்பியாண்டார் நம்பிகளின் பிரபந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அறிய வேண்டும். தாண்டவபுரத்தைப் பற்றி வரும் செய்திகளைக் காணும்போது, அதன் ஆசிரியரின் பண்பாடும் ஒழுக்கமும் மனவக்கிரமும் ஞானசம்பந்தரின் பெயரால் வெளிப்படுகின்றன. ஆசிரியர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகின்றாரேயன்றி தமிழ் இலக்கிய சமய சமுதாய வரலாற்றில் இடம்பெற்ற ஒருவரையன்று. இது திருஞானசம்பந்தர் என்ற பெயருடைய கற்பனைப் பாத்திரம். பெரியவர் ஒருவரை அவதூறு செய்வதற்குப் படைத்துக் கொண்ட கற்பனைப் பாத்திரம். இந்த நாவலை வெளியிட்ட பதிப்பாளர்களே சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘சமயங்கடந்த தமிழ்- உ.வே.சா’ என்னும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு ஊரூராகப் பரப்பினர். அப்புத்தகம் சாமிநாதையரை முன் வைத்துச் சைவத்தையும் சைவமடாலயங்களையும் திருஞானசம்பந்தரையும் இழிவாகக் கேவலப்படுத்த எழுதப்பட்டது. மாதவச் சிவஞான யோகிகள், கச்சியப்பமுனிவர், மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை முதலாய பெரியோர்கள் இழிமொழிகளால் சித்திரிக்கப்பட்டனர். மத்தகஜம் பின் சென்ற சேற்றுப் பன்றி தான் படிந்து மகிழ்ந்து இருந்த சேற்றினைத் தெளித்தது போன்ற மதிப்புத்தான் இத்தகைய புத்தகங்களுக்கு உண்டு. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் மனவக்ரங்களுக்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனர்கள் மீது கொண்ட வெறுப்பே. ஆரிய திராவிட மாயையே. ஒரு கூட்டத்தார் திட்டமிட்டே இத்தகைய கருத்தினைப் பரப்பி வருகின்றனர். இது மணிமேகலை காப்பிய காலத்திலிருந்தே தொடர்கின்றது. வேதநெறியும் சைவத்துறையும் இந்த வக்ரத்தை எதிர்கொண்டே வளர்ந்துள்ளன.
    இந்த புத்தகத்தைக் குறித்து தமிழ்ஹிந்துவின் நிலைப்பாடு சரியானதே. எதிர்ப்பத் தெரிவித்து ஒதுக்குவதான் சரி. அப்புத்தகத்தை (அந்த நூல் என்று சொல்லுவதற்கு என் மன்ம் ஒப்பவில்லை. மாந்தர் மன்க்கோட்டம் தீர்ப்பதுதான் நூல்) தடைசெய்ய்க் கேட்க வேண்டுவதில்லை. மனவக்ரங்களுக்குத் தீனி போட விரும்புவோர் தானே அதனை விலைகொடுத்து வாங்கப் போகிறார்கள்? அதனைப் பொருட்படுத்தாமல் விடுவதே முறையானது.

  9. //இந்த வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் மனவக்ரங்களுக்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனர்கள் மீது கொண்ட வெறுப்பே. //
    இல்லை என்று நான் கருதுகின்றேன். இது அவரின் சைவ வெறுப்பை காட்டுகின்றது. இதற்க்கு முதலில் குரல் கொடுத்தவர்கள் தீவிர சைவ பற்று உடையவர்கள் தான்.
    இன்று இதை தடை செய்யவில்லை என்றால் இது போல் பலரும் தங்களுக்கு தெரிந்ததை எழுதுவார்கள். அதை சில மோசமான பதிப்பகங்கள் வெளியிடும்.

    ஏற்க்கனவே திகா கழகத்தினர் பெரிய புராணத்தை தவறாக பரப்பிவருகின்றனர்.
    இந்த புத்தகம் கட்டாயம் தடை செய்யவேண்டும்.

  10. மூன்று விவித கருத்துக்கள். தடை செய்; செய்யாதே, சொல்லப்பட்ட தாறுமாறான கருத்துக்களை களைதல்; அடுயோடு விஸர்ஜனம் செய்;

    ஹிந்துஸ்தானத்தின் தற்போதைய நிலைப்படி க்றைஸ்தவ இஸ்லாமிய ஓட்டுக்காக அவர்களுக்கு எதிரானது என்று கருதப்படும் எந்த விஷயங்களுக்கும் அல்லது புஸ்தகங்களுக்கும் ப்ராதான்யம் கொடுக்கப்படும். நீதிபதிகள் அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுப்பதை ஊடகங்கள் கூட கௌரவப்படுத்தலாம்.

    ஹிந்துக்கள் விஷயத்தில் இவ்வாறு நடப்பது இயலாது. ஸ்ரீமான் சோமசுந்தரம் போன்று சைவ சமயத்தில் ஆழ்ந்த ஞானம் உடையவர்கள் தடைக்காக பாடுபட்டாலும் தாறுமாறான கருத்துக்களை களையெடுப்பது உண்மையை உலகுக்குணர்த்தும் என்பதென் அபிப்ராயம்.

  11. முற்போக்கு எழுத்தாளராம் இந்த மனிதர். இப்புனைக்கதைக்காரரெல்லாம் சைவர்கள் எதிர்க்கும் அளவுக்கு பெரிய ஆளில்லை. இந்த நூலுக்கு தடைகோரி இந்த மனுடரை கைது கோரி பெரிது படுத்தவேண்டாம். இவர் இவரது எழுத்துக்களை சிவபிரானை வழிபடும் சைவர்கள் தமிழ் ஹிந்துக்கள் புறக்கணித்தலே போதும். அதன் விளைவு நிச்சயம் நன்றாயிருக்கும்.
    விபூதிபூஷண்

  12. தீக்கை பெற்ற சைவராகிய அடியேன், தாண்டவபுரம் நாவலில் புனையப்பட்டுள்ள பொய்யான வரலாற்றினை சைவ சமய நூல்களிலும் எம்பிரான் சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் படிக்கவில்லை. தாண்டவபுரம் நாவலில் கண்டனத்துக்குரிய பக்கங்களை நீக்கவேண்டும்.

  13. ஐயா சித்தாந்த ரத்தினம் சிவ. இராசு அவர்களே. சூரியனைப்பார்த்து ஏதோ என்னவோ செய்தால் அதைப்பற்றி சூரியன் கவலைப்படுவாரா. நாம் ஏன் இதுபோன்றவர்கள் கக்கியவற்றைப்பற்றி கவலை கொள்ளவேண்டும். இவர்களது நோக்கம் மக்களின் கவனத்தினை ஈர்ப்பதே. அதில் அவர்கள் வெற்றிபெறாது இருக்கவேண்டும். ஆகவே இவர்களை புறக்கணிப்போம். சைவம் பற்றி பேச எழுத உரையாட எண்ணிலடங்காத செய்திகள் உள்ளன. அதை நாம் செய்தால் மக்களிடையே எழுச்சி ஏற்படும் திருஞான சம்பந்தரின் காலம் போன்று. இந்த தளத்தில் சைவம் பற்றி உள்ள கட்டுரைகளை ப்படியுங்கள். உங்கள் கருத்துரைகளை வழங்குங்கள்.
    சிவலிங்கம், திருநீறு, அக்கமணி அணிந்தார் அடியார்க்கும் அடியேன்.
    விபூதிபூஷண்

  14. manimohan on February 1, 2012 at 3:52

    திருஞானசம்பந்தரை பற்றி அவதூறு மற்றும் போய்ப்புனைவுகளை வெளியிட்ட இழிபிறவியை ஐந்து அறிவு படைத்த உயிர்களுடன் ஒப்பிட்டது ஒரு மன்னிக்க முடியாத விஷயம் ஆகும். அறிவே இல்லாத ஒருவருக்கு எப்படி ஐந்தறிவு என்று தவறாக சொன்னாய் நண்பா ?

    ஆத்மநாதன் அடியான்

  15. சிவஸ்ரீ .விபூதி பூஷண் ஐயா அவர்களுக்கு நன்றி. தனி மனித சுதந்திரம் ,எழுத்துரிமை என் அடிப்படை உரிமை என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு , வரலாற்று ஆவணங்கள்,பிரமாணங்கள் எதுவுமின்றி ,பொய்வரலாறுகள் புனைந்துரைக்கும் தாண்டவபுரம் நாவலை எதிர்த்துக் கண்டனக் குரல் நாடெங்கும் ஒலிக்கவில்லைஎனில் இன்னும் சைவர்கள் உறங்குகிறார்கள் என்று இன்னொரு பொய் வரலாற்று நாவல் புனைந்து விடுவார்கள் நம் எழுத்தாளர்கள். சென்னையில் வருகிற 2.03.2012 வெள்ளிக்கிழமை “தமிழ் ஞான சம்பந்தர் விழா” ஸ்ரீலஸ்ரீ மதுரை ஆதீனம் அவர்கள் தலைமையில் (கருத்தரங்கு )நடைபெறுகிறது..
    “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.”
    அடியேன்-சிவ.இராசு

  16. We, in Kerala, face lot of such people who criticize our hindu culture and denigrade our hindu gods. But we have one Dr.Gopalakrishnan, former Scientist with CSIR, a fire brand orator who is a scholar in Theology, replying our critics. His speeches in malayalam and in English are available in Youtube. Again another orator, Sasikala teacher, who is the president of Hindu Aikya Vedi, unleashes virulent attack on all those who speak ill of hinduism. Your website is doing great service for spreading the hindu philosophy. Kudos to you and the people behind it.

  17. ஒரு நாவலை தடை செய்வதால் அந்த நாவல் மேலும் வளர்ச்சி அடையும்; அந்த நாவல் மேலும் விரும்பி படிக்கபடும்; ஆதலால் நாவலை தடைச்செய்வது;எரிப்பதை விட்டுவிட்டு ;எழுத்தாளர் எந்த நோக்கத்திற்க்காக எழுதியுள்ளார் என்பதை அனுதாணிப்புடன் வாசிக்கவேண்டும். நம் மதம் மற்றும் கொள்கைகள் சொல்வது என்ன? ‘கட’ அல்லது ‘கடந்துசெல்வது’ அது எந்த ஆசையாக இருப்பினும் சரி!; அப்படி யேன்றால் ஒருநாவலை எதிர்ப்பதும்;எரிப்பது என்பது அதிலேயே மூழ்கிகிடப்பது; ஆதலால் நம் சைவ மதத்தவர் இந்த நாவலுக்கு எதிர்ப்பை காண்பிப்பதை விட்டுவிடவேண்டும், உண்டான மாற்று கருத்துகளை திரணாய்வுகளுடன் வெளிபடுத்துவது தான் நமது சைவத்துக்கு கிடைக்கப் போகும் வெற்றி;
    இப்படிக்கு
    இரா.மீ.தீத்தாரப்பன்.

  18. யந்த ஒரு சமயத்தின் மீதும் அவர்கள் அதன் மீது கொண்டுள்ள பிணைப்பையும் ஈடுபாட்டையும் தனி மனிதனோ சமயம் சார்ந்த மற்ற அமைப்புகளோ கருத்து சொல்லும் போது மிக மேன்மையகயும் தன்மையகாஉம் சொல்ல வேண்டும் , தமக்கு சுதந்தரம் இருக்கு என்ற காரணத்திற்காக எதையும் பேசுவதும் எழுதுவதும் வரம்பு மீறிய செயலாகும் நாம் வாழ்கின்ற நாட்டின் சமுகம் எவ்வாறு காலம் காலமாக தம்மை நிலை நிறுத்தி கொண்டுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும் பேர் கூட சொல்ல பயப்படும் மனிதர்கள் கருத்தை சொல்ல அருகதை அற்றவர்கள் உலக யியல்பு என்னவெனில் பெரும்பான்மை ஆள வேண்டும் சிறுபான்மை ஆதரிக்க பட வேண்டும் சிவா.கணேஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *