ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் தருணத்தில், காங்கிரஸ் கட்சி தனது நிறத்தை மாற்றி வாக்காளர்களை
ஏமாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும், உத்திரபிரதேசத்தில் மட்டுமே காங்கிரஸ்
கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தனது நிறத்தை மாற்றிக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் குடும்ப
ஆதிக்கம் எவ்வாறு வளர்கிறது என்பதற்கு உத்திரப் பிரதேசத் தேர்தல் களம் ஒரு சான்றாகும். சோனியா காந்தியுடன் அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி, மருமகன் வதேரா உட்பட அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் செய்த பிரச்சாரம் அவர்களின் நிறத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஜனவரி மாதம் 30-ம் தேதி சிதாபூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது “ உத்திரப் பிரதேச மக்கள் எனது வார்த்தைகளை நம்பி வாக்களிக்க வேண்டாம், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து வாக்களியுங்கள்.”
எந்தச் செயல்பாட்டை பார்த்து வாக்களிக்க வேண்டும்? 2004ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. 2004ல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்களா என்பதைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால் இவர்களின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும். விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது, விலைவாசியைக் குறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதைப் பற்றி ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்.
2004-ம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியின் தேசீய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பதவியை விட்டு இறங்கி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி அமைத்து இன்று வரை ஏறிய விலைவாசி குறையவில்லை. ஏறிய விலைவாசியைக் குறைப்பதற்குப் பதிலாக நிதி அமைச்சர், பிரதமர், மற்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்த்தால் இந்த அரசின் செயல்பாடு நன்கு விளங்கும். இந்த ஆட்சியின் செயல்பாடுகளால் இந்தியக் குடும்பத்தில் உணவிற்காகச் செலவிடும் தொகை 50 சதவீதம் கூடுதலாகியுள்ளது. பலமுறை பெட்ரேல் டீசல் விலை
உயர்வின் காரணமாக ஏறிய விலை
குறையவில்லை. பணவீக்கம் இரட்டை இலக்கத்திலிருந்து குறையவில்லை. 2004-ல் ரூ.58.38க்கு விற்ற கடுகு எண்ணெய்
ரூ 93.14-க்கு விற்கப்படுகிறது. 2004-ல் 1 கிலோ சர்க்கரை ரூ14.50-க்கு விற்றது, தற்போது ரூ32க்கு விற்கப்படுகிறது. இதை போலவே அரிசி பருப்பு, மற்றும் எண்ணெய் வித்துக்கள் 100 சதவீதத்திற்கு மேல் விலை ஏறியுள்ளன. இந்த அரசின் செயலற்ற செயல்பாடுகளால் விலை உயர்வு என்றால் மிகையாகாது. 2008ல் 26 மில்லியன் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி ஒரே ஆண்டில் 15 மில்லியன் டன்னாக குறைந்தது இந்த ஆட்சியின் செயல்பாடுகளால். இந்த விலைவாசி உயர்விற்காகவா காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கேட்கிறார் ராகுல்காந்தி?
விலைவாசி உயர்வு பற்றித் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலூலியா கூறும் போது “ஆமாம் பால் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்திருக்கிறது. இது பொருளாதார வளம் மற்றும் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான்” என விலை உயர்வுக்கு வக்காலத்து வாங்கிறார். விலை உயர்வின் காரணமாக நடுத்தர மற்றும்
கீழ்த்தட்டு மக்கள் படும் அவலங்களை வளர்ச்சி என விமர்சிக்கும் போக்குதான் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடாகும். 2009ம் ஆண்டு ஜீன் மாதம் 16ந் தேதி பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் “உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆனால் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தானின் பிராந்தியங்கள் பயன்படுத்தப் படக்கூடாது” என வேண்டுகோள் விடுத்தவர்
16.7.2009ம் தேதி ஷர்ம்-எல்-ஷெய்க்கில்
கூட்டறிக்கையில் “பயங்கரவாதத்தின் மீதான
நடவடிக்கைகளை இருதரப்புக் கூட்டுப் பேச்சு
வார்த்தைகளோடு தொடர்பு படுத்தக் கூடாது”
என்கிறார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக
17.7.2009ந் தேதி பாராளுமன்றத்தில் “பாகிஸ்தான் தனது பகுதிகளை பயங்கரவாதத்திற்கு அனுமதிக்காமல் இருப்பதே அந்த நாட்டுடன் அர்த்தமுள்ள பேச்சுகளுக்கு ஆரம்பப் புள்ளி” என விளக்கமளித்தார். இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் நீண்ட விளக்கமளித்த பிரதமர் உரையில், பேச்சு வார்த்தைக்கும், தீவரவாதத்தை ஒடுக்குவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற வார்த்தைகள் கூட்டு அறிக்கையில் ஏன் இடம் பெற்றன என்பதற்கு இறுதி வரை பதில் இல்லை. இதைதான் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் என்கிறார?
இதைப் போலவே அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளின்டனுடன் நடந்த பேச்சுவார்த்தையும் இந்தியாவின் மரியாதையைக் கேள்விக் குறியாக்கியது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் பாகிஸ்தானுக்கு நிதியுதவி என்ற எந்த தெளிவான வாக்குறுதியும் அமெரிக்கா கொடுக்கவில்லை. ஓப்பந்தம் போடப்பட்டதில் கூட இந்தியாவிற்குப் பாதகமான அம்சங்கள் இருந்தும் அமெரிக்காவிற்கு அடிமையாக நடந்து கொண்டது. அதாவது “அமெரிக்கப் பாதுகாப்புக் கருவிகளை வேறு ஏதாவது மூன்றாம் தேசத்திற்கு தருவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கர்கள் களத்திற்கே வந்து பரிசோதனையிட அனுமதியளிக்கிறது, அதற்கான நேரம் மற்றும் இடத்தை இந்தியாவே தீர்மானிக்கும் என்ற பேரம் படிந்திருக்கிறது என்றாலும் பாதுகாப்புத் தளங்களில் இருக்கும் ராடார்கள் போன்றவற்றுக்கு இதனால் அச்சுறுத்தல் உண்டு. இதற்கு மறுப்புக் கூறாமல் கையெழுத்திட்ட காங்கிரஸ் அரசு, ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினர் பதவி இந்தியாவிற்குக் கிடைக்கும் விவகாரத்தில் அமெரிக்கா பிடி கொடுக்கவில்லை.
ஆகவே இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்காக உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என ராகுல் காந்தி வாக்காளர்களைக் கேட்கிறார். தேசத்தின் வளர்ச்சிப் பணியில் கூட இந்த அரசின் செயல்பாடுகளைப் பார்த்தால் மீண்டும் காங்கிரஸ் எந்த மாநிலத்திலும் ஆட்சிக்கு வரக் கூடாது என்கின்ற எண்ணமே ஏற்படும். பல ஆயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டி நெடுஞ்சாலைத் திட்டத்தில் பல பெரும் தடைகளில் ஐ.மு. கூட்டணி அரசு சிக்கியிருக்கிறது. பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்.எச்.டி.பி. திட்டத்திற்கு அஸ்திவாரம் பலமாகப் போடப்பட்டது. ரூ32,000 கோடியில் உருவான திட்டத்திற்கு 2004க்குப் பின் இத் திட்டத்தைச் செயல்படுத்த காங்கிரஸ் அரசு செயல்படவில்லை. பாரத் ஜோடோபாரி யோஜனா என்ற திட்டத்தின் பெயரை
மாற்றி மூன்றாவது கட்டம் என காங்கிரஸ் அரசு விளம்பரப்படுத்தியது. இந்த திட்டத்தில் மேம்பாடு மற்றும் நான்கு வழிப் பாதை அமைத்தால் இதற்கு 2005-2007 வரைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் 12,109 கி.மீ. என
வரையறுக்கப்பட்டும், 2010 வரை 613 கி.மீக்கு மட்டுமே திட்டத்தைச் செயல்படுத்திய அரசு இந்த அரசு. தேசீய நெடுஞ்சாலைத் துறையின் செயலாளர் பிரஹ்ம் தத்தின்
கூற்றுப்படி 2008க்குள் முடிய வேண்டிய 60 திட்டங்களுக்கு, 35 ஏலங்களில் 16 திட்டங்களுக்கு மட்டுமே ஒப்பந்தக்காரர்கள் கிடைத்தார்கள் என்றார். இதற்குக் காரணம் அமைச்சர் டி.ஆர். பாலுவின் கொள்ளையடிக்கும் நோக்கமே காரணம் என அரசியல்
விமர்சகர்கள் தெரிவித்தார்கள். தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு ஆணையகத்தின் தினசரி செயல்பாட்டில் தலையிடுவதாக டில்லி உயர்நீதிமன்றம் கண்டித்தது. இப்படிப்பட்டச் செயல்பாடுகளைத் தான் ராகுல்காந்தி
நல்ல செயல்பாடுகள் என விமர்சிக்கிறாரா?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சக்தி வாய்ந்த குழு என்று தேசிய ஆலோசனைக் கவுன்சிலைக் கூறலாம். இந்தக் குழு மக்களால் தேர்ந்தொடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது இல்லை, பிரதமரின் சிறந்த நண்பர்களைக் கொண்ட குழுவும் கிடையாது, இதற்கு மாறாக ஒரு சில இடதுசாரிச் சிந்தனை கொண்ட தாராளவாதிகளும், சிவில் உரிமை இயக்கத்தினரும், ஒரு சில சமூக சேவகர்களும் கொண்ட குழு. அமைச்சரவை கொண்டு வரும் மசோதக்களும், அல்லது பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கொண்டு வரும் மசோதக்களையும் கூட இந்தக் குழு நிராகரிக்க முடியும், அல்லது மாற்றி அமைக்க முடியும். ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் இந்தச் செயல்தான் காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய செயல்பாடாகும். மத வன்முறை தொடர்பாக ஐ.மு.கூ. அரசு தயார் செய்துள்ள மசோதாவில் பல குறைகள் இருப்பதாக என்.ஏ.சி. கருதியதால், தனியாக ஒரு மசோதவை என்.ஏ.சி தயார் செய்து கொடுத்தது.
லோக்பால் மசோதாவிற்கு அண்ணா ஹஸாரே தெரிவித்த கருத்துக்குப் பலமாகக் கண்டனம் செய்த காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவர்கள் மசோதாக்கள் கொடுப்பது ஜனநாயகத்திற்கு இழுக்கு என்று கூறியவர்கள், என்.ஏ.சி.கொடுக்கும் மசோதாக்கள் மட்டும் சரியானதா என்பதை ராகுல் காந்தி கூற வேண்டும், அல்லது இப்படிப்பட்ட செயல்பாடுகளால் இந்த நாடு வளர்ச்சியடையும் என கருதுகிறாரா என்பதையும் விளக்க வேண்டும்.
மின்சாரமில்லா தேசம், சாரமில்லா நிர்வாகம் என்றால் அது காங்கிரஸ் கட்சியின் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகும். மின்சக்தியைப் பெருக்குவதற்கான எந்த உருப்படியான காரியமும் செய்யப்படவில்லை. அதைவிட
மோசமாக ஏற்கனவே நாட்டிலுள்ள நிறுவப்பட்ட மின் சக்தி உற்பத்தி கொள்ளவைக்கூட எட்ட முடியாமல் போயிருக்கிறது இதற்குக் காரணம் காங்கிரஸ் அமைச்சர்களிடையே நடந்த குடுமிப்பிடிச் சண்டை. தற்போதைக்கு சுமார் 10 கோடி டன் நிலக்கரி பற்றாக்குறை நிலவி வருகிறது. இது அடுத்த ஐந்தாண்டுகளில் இரு மடங்காக உயரும் என்பது கூட தெரியாத மந்திரி
சுஷில் ஷிண்டே.சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், நிலக்கரி அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், மின்சக்தி அமைச்சர் சுஷில் ஷிண்டே ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் போடும் சண்டையின் காரணமாக மின் உற்பத்தி குறைந்திருக்கிறது.
இப்படிப்பட்ட செயல்பாட்டை பெருமையாக நினைக்கிறார் ராகுல் காந்தி. உணவுப் பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்மொழிந்த மசோதாவில் திருப்தி இல்லை என என்.ஏ.சி கருதியதால் ஒரு புதிய மசோதவைத் தயார் செய்கிறது; இதனால் ரூ30,000 கோடி கூடுதல் செலவு. பாராளுமன்ற உறுப்பினருக்கு இல்லாத அதிகாரம் என்.ஏ.சிக்கு உண்டு என்பதுதான் இந்த அரசின் செயல்பாடு. இந்த மசோதவைப் போலவே யு.ஐ.டி அட்டை,கிராமப்புற வேலை
உறுதித் திட்டம், தகவல் உரிமைச் சட்டம், வேதாந்தா, நக்சல் வியூகம், சம் வாய்ப்புக்கான மசோதா, உடல் நலம் காக்க தனி மசோதா போன்ற மசோத்தாக்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தை விட தேசிய
ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் உள்ளது. இந்த செயல்பாட்டிற்காகவா ராகுல் காந்தி வாக்குக் கேட்கிறார்?
இந்த நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட இந்த அரசு செயல்படுத்தவில்லை.ஆயுதங்கள்,வெடி பொருட்கள், கொள்முதல் நிர்வாகக் குழப்பங்களில் சிக்கிக் கொண்டுள்ளது. இன்சாஸ் (INSAS) ரைஃபிளுக்குப் பதிலாக புதிய அசால்ட் ரைஃபிள்கள் கொள்முதல் செய்வது,2008ம் ஆண்டு முன்மொழியப்பட்டது, இதுநாள் வரை பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை.
இரண்டாவது 2007ம் ஆண்டு 9 எம்.எம்.சிறு துப்பாக்கிகளுக்குப் பதிலாக 2 லட்சம் புதிய சிறு துப்பாக்கிகள் கொள்முதல் செய்வதற்கு முன்மொழிப்பட்டது, ஆண்டுகள் பல முடிந்தும்
கொள்முதல் செய்வது சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மூன்றாவதாக 2008ம் ஆண்டு 15,000 புதிய பல பயன் எந்திரத் துப்பாக்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டது,இந்த கொள்முதலுக்கு முறையான அங்கீராத்தை இந்த அரசு இன்னும் வழங்கவில்லை.
இந்தச் செயல்பாடுகளைத் தான் ராகுல்காந்தி சிறந்த செயல்பாடு என நினைக்கிறாரா?
ராகுல்காந்தி வாய்கிழியப் பேசும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அதாவது காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதற்கு ஆட்சியில் உள்ள அமைச்சர்களின் செயல்பாடுகளே முக்கியமான அம்சமாகும். ஊழல் குற்றச்சாட்டுகளாலும், கட்சிக்கும் அரசுக்கும் இடையிலும் கேபினட்டில் அமைச்சர்களுக்கடையிலும் உருவாகியிருக்கும் மோதல்களினாலும் இந்த அரசு செயலற்ற அரசாக முடங்கிப் பொயிருக்கிறது, முடங்கிப் போன அரசாங்கத்தை வழிநடத்துகிறார் பிரதமர் மன்மோகன்சிங். பணவீக்க விவரத்தைப் பார்த்தால் போதும் இந்த அரசிடம் உருப்படியான யோசனைகளே அல்லது கட்டுப்படுத்தக் கூடிய திட்டங்களே கிடையாது. இதை ஆராய்ந்து தீர்வு அளிக்குமாறு அமைச்சரவைகளுக்கிடையிலான குழு ஒன்றை 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் அறிவித்தார். இந்தக் குழு மாதந்தோறும் ஒரு கூட்டத்தை நடத்தியிருக்கிறது. இக் குழு இதுவரை செய்ததெல்லாம் பேச்சு, பேச்சு மட்டுமே. ஆனால் உருப்படியான எந்த யோனைகளும் கொடுக்கவில்லை. 2011ம் ஆண்டு ஜனவரி மாதமே கோதுமை மிக அமோகமான விளைச்சல் இருக்கும் என அரசுக்குத் தெரியும், ஆனாலும் கோதுமை
ஏற்றுமதியின் மீது விதிக்கப் பட்ட தடையை அது நீக்கவே இல்லை, இதனால் விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றம் மிஞ்சியது. இதன்
காரணமாக 80 லட்சம் டன் கோதுமை கேட்பாற்று மழையில் நனைந்து அழுகிப் போயிற்று, இதற்காகச் சேமிப்பு இடங்களில்
அதிக அளவில் சேமிக்க வசதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.சோனியாவின் மனம் குளிர்வதே தனது ஆட்சியின்
முக்கிய நோக்கமாக கருதியதால், உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறும் வரை இந்தச் சாகுபடியை நிறுத்தி வைக்க முடியாது. ஆனால அந்த மசோதா நிறைவேறுவதற்குள் ஏகப்பட்ட தானியம் அழிந்து விடும் என பலர் கருத்துத் தெரிவித்தார்கள். இதுதான் இந்த ஆட்சியின் செயல்பாடுகள்.
ஆகவே உத்திரபிரதேசத் தேர்தல் களத்தில் ராகுல்காந்தி பேசுவதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாடுகளைப் பற்றிய முழுமையான கண்ணோட்டம் இல்லாமல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பாரத தேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள்; இந்த நாட்டின் வளர்ச்சியை மையமாகக்
கொண்டு செயல்பட்டிருந்தால் நாடு உலக அரங்கில் வல்லரசாக மாறியிருக்கும் என்பது உண்மையாகும். ஆனால் நேரு குடும்பத்தின் மனதைக் குளிர வைப்பதற்காகவே ஆட்சி அதிகாரங்கள் இருப்பதாகக் கருதுவாதால் இந்த நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை என்பதை மறந்து விட இயலாது.
ஒவ்வொரு ஆண்டும் பரம ஏழையாக இருப்பவர்களுக்கு உதவும் வகையிலான முக்கியத் திட்டங்கள் வழியாக மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் நிதியை மாற்றிச் சமூகத் துறைகளுக்கான செலவை மத்திய அரசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தச் செலவைத் தணிக்கை செய்ய முடியாது என்பதுதான் இந்த அரசின் செயல்பாடு. இந்திய அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் 2008-2009ம் ஆண்டு செலவு செய்யப்பட்ட மக்களின் வரிப் பணத்தில் ரூ83,000 க்கும் அதிகமான தொகை தணிக்கை செய்யப்படவில்லை என்பதை இந்தியக் காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. தணிக்கை செய்யப்படாத தொகை திட்டமிடப்பட்ட மொத்த செலவுத் தொகையில் கிட்டத்திட்ட 50 சதவீதம் என்கிறார். இதுதான் காங்கிரஸ் அரசின் செயல்பாடு இதற்காகவா வாக்குக் கேட்கிறார் ராகுல் காந்தி? காங்கிரஸ் அரசு திட்டங்களுக்கு ஒப்புதல் தரும் முடிவில் தாமதம் ஏற்படுவதால்
முதலீட்டாளர்கள் சங்கடப்படுகின்றனர். கேய்ர்ன் இந்தியாவின் 9.6 பில்லியன் டாலர் டேக் ஒவர் டீல், இதற்கு அரசு காட்டும் சுணக்கம் அநியாயமானது. இதன் காரணமாக 2010 செப்டம்பர் மாதத்திலிருந்து இந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் நிற்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி ஜனவரி
31ந் தேதி கோண்டா எனுமிடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் “ உத்தரப் பிரதேச அரசில் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்களைத் தேர்தல் நேரத்தில் பதவி நீக்கம் செய்துள்ளார்.அவர்களின் ஊழல் கடந்த 5 ஆண்டுகளாக மாயாவதிக்குத் தெரியாதா? இந்த நடவடிக்கை மூலம் ஊழல் ஒழிந்துவிட்டதா? “ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இருவரின் பொதுக் கூட்ட பேச்சும் சற்றே சிந்திக்க வைத்துள்ளது.கடந்த எட்டு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய விரிவான விவரத்தை சற்று திரும்பிப் பார்த்தால் இருவரும் மற்றவர்கள் மீது விமர்சனம் செய்வதற்குத் தகுதி உடையவர்களா என்பது தெரியவரும்.
உத்திரப்பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகி விட்டன. முலாம் சிங்கின் கட்சிக்கு 226 இடங்கள் கிடைத்துள்ளன. சென்ற தேர்தலில் 22 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரசு கட்சிக்கு 38 இடங்களும் ( கூட்டணி கட்சியான அஜீத் சிங்கின் லோக்தளம் கட்சி மற்றும் சரத் பவாரின் தேசீய காங்கிரசு எல்லாம் சேர்ந்து) கிடைத்துள்ளன. பாஜகவுக்கு 47 இடங்கள் கிடைத்துள்ளன. சென்ற தேர்தலில் 51 இடங்களை பெற்ற பாஜகவுக்கு நாலு இடங்கள் குறைந்துள்ளன. தனது சிலையை தானே நிறுவி, ஒரு சீனியர் ஐ பி எஸ் அதிகாரியை மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பிய மாயாவதி , 207 இடங்களுக்கு பதிலாக 80 இடங்களை மட்டுமே பெற்று , எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளார். பாஜகவுக்கு ஒரு எதிர்க்கட்சிக்கு தேவையான 41 சீட்டுக்களுக்கு மேலே கிடைத்துவிட்டது. ஆனால், காங்கிரசு கட்சிக்கு , எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் இல்லை. இத்தாலி காங்கிரசு முற்றிலுமாக அழிந்தால் நாட்டுக்கு நல்லது.
உயிருடன் இருக்கும் தலைவர்களுக்கு சிலை வைப்பது ஒரு தவறான செயல் ஆகும். காமராஜருக்கு அவர் உயிருடன் இருந்தபோது மெரீனா கடற்கரையில் சிலை வைத்தனர். அதன்பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் காமராஜரும், ஒரு கல்லூரி மாணவரிடம் தோற்றுப்போனார். அவரது அரசியல் வாழ்க்கை அதன் பின்னர் அஸ்தமனம் ஆனது.அவர் காலமாகும் வரை அவரால் மீண்டும் பதவியை பிடிக்க முடியவில்லை.
சில சதிகாரர்கள் ஒன்று கூடி, அண்ணாவுக்கும் அவர் உயிருடன் இருக்கும்போதே சிலை ஒன்றை , மவுன்ட் ரோட்டில் நிறுவினர். அண்ணா ஒரே ஆண்டில் உயிர் துறந்தார்.
திராவிடர்கழக மோசடிக்காரர்கள் ஒன்று கூடி, சென்னை அண்ணாசாலை வெலிங்டன் சந்திப்பில் கலைஞருக்கு அவர் உயிருடன் உள்ள போதே ,ஒரு சிலை எழுப்பினார்கள். அந்த சிலை நிறுவிய பின்னர், கலைஞரின் அரசியல் வாழ்வில் பின்னடைவு ஏற்பட்டது. எம் ஜி ஆர் இறந்தபோது, அந்த சிலையை சிலர் தகர்த்து எறிந்தனர். அதன்பின்னரே, கலைஞருக்கு 13 வருட வனவாசம் நீங்கி அரசுப்பதவி மீண்டும் கிடைத்தது.
மாயாவதி தான் உயிருடன் இருக்கும் போதே, உ.பி முழுவதும் தனக்கு ஆளுயர சிலைகளை தானே வைத்துக்கொண்டார். எனவே தான் அவரது அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிட்டது. உத்தரப்பிரதேசத்தில், சுகாதாரத்திட்டத்தில் நடைபெற்ற பல கோடி ஊழலில் பல அதிகாரிகள் கொலை அல்லது தற்கொலை அல்லது படுகொலை ஆகி உள்ளனர். தீயணைப்பு துறை அதிகாரி (ஐ பி எஸ் )ஒருவர் மாயாவதியால் மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த பாவங்கள் எல்லாம் சேர்ந்து அவரை பதவியிளுந்து இறக்கி விட்டன. உயிருடன் இருக்கும் போதே தனக்கு சிலை வைத்துக்கொள்ளும் யாருக்கும் இந்த கதி தான் ஏற்படும். தி க வீரமணிக்கு உடனே சிலை வைத்து அவர் வாழும் காலத்திலேயே , அந்த குடும்ப இயக்கத்துக்கு ஒரு பகுத்தறிவு முடிவு ஏற்படுத்த வேண்டும்.
வீர மணி அவர்களுக்குச் சிலை வைப்பதைவிடப் ‘பகுத்தறிவு’க்குச் சிலை வைத்தால், உலகத்துக்கு நல்லது.
https://www.youtube.com/watch?v=c9ghcPg-ois&feature=g-vrec&context=G2578603RVAAAAAAAABw