பாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா

மேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும் அந்தப் பெண்கள் ஷரியா சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சமூகப் புறக்கணிப்பை கோருகிறேன். இதை அவர்கள் மீறினால் “ஏக இறைவனின் திருப்பெயரால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரின், ஒரு பகுதியில் உள்ள இமாம் பஸீருதீன் அகமது வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தார். அந்த இளம் பெண்களுக்கு– கலைத்தாகம் கொண்ட பெண் சிறார்களுக்கு எதிராக கொலைமிரட்டல் விடுத்தவர் ஜம்மு காஷ்மீரின் தலைமை மெளலவி. இதற்கு எதிராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசிய மாநாட்டுக் கட்சியின் இளம் முதல்வர் உமர் அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவி மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் கூட அந்த ஃபத்வா எனும் பகிரங்கக் கொலை மிரட்டலைக் கண்டிக்காமல், நடவடிக்கை எடுக்காமல் அந்த இளம் பெண்களின் இசைக்குழுவான “பிரகாஷ்” (paragaash)-க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.

Kashmir_Girls_Band

இவை எல்லாம் பாகிஸ்தான் ஆக்ரமித்துத் திருடிக்கொண்ட காஷ்மீரில்; தாலீபான்களின் காட்டுமிராண்டித்தனம் அரங்கேறும் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நடக்கவில்லை. ஜனநாயகத்தின் வாசலை வெளிச்சமிட்டுக் காட்டும் பாரத மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. நாகரிக சமுதாயமான பாரத சமுதாயத்தில் இந்த அநாகரிகமான செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை பேசும் எந்த நாளேடும் இது குறித்துப் பேசவில்லை. விவேகானந்தர் படத்தை பிரசுரிப்பதால் கற்பழிப்புகள் அதிகமாகிறது என்று அவதூறு செய்தி பரப்பிய இழிவான The Hindu நாளேடு இது பற்றி உடனே செய்தி வெளியிடவில்லை. ஆபாசத்தையும் கலாசாரக் கேட்டையும் பெருமளவு வியாபாரப்படுத்தும் ஆபாச Outlook இதழோ, இன்ன பிற காசு வாங்கிக்கொண்டு ஊடக வேசித்தனம் புரியும் இதழ்களோ, இது பற்றி வாயே திறக்கவில்லை. உச்சபட்சக் குரலில், இந்தியாவில் மகளிர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, பெண்களுக்கு சுதந்திரம் இல்லை, கலாசாரக் காவலர்களான பாஜக, சங்பரிவார் கும்பல்களை அழிக்க வேண்டும் என்று தினமும் பிரசாரம் செய்யும்– அயல்நாட்டுப் பணத்தில் கொழிக்கும் ஆங்கில ஊடக ஜாம்பவான்களோ வாயைத் திறக்கவில்லை.

இந்த ஆபத்தான, வெளிப்படையான கொலை மிரட்டல் ஃபத்வா இந்தியச் சமூகத்தை எதை நோக்கி நகர்த்துகிறது? இது கேள்விக்குள்ளாக்கும் பெண் சுதந்திரத்தின் பின்விளைவுகள் என்ன? நாகரிக சமூகத்தில் இப்படியான பிற்போக்கான, அடிப்படைவாத சிந்தனைகளின் தாக்கம் என்ன? ஏற்கெனவே கல்வி அறிவு, வேலை வாய்ப்புத் துறையில் பின்தங்கி இருக்கும் ஏழை இஸ்லாமிய சகோதரிகளின் சமூக நிலையை என்ன விதமான அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தும்? தாலிபான் பாணியிலான வஹாபிய சிந்தனையின் பின்விளைவுகளையும் யோசிக்கலாம்.

சமீப காலமாக இந்தியா போன்ற பண்பாட்டுக் கூறுகளின் விளைநிலத்தில் அடிப்படைவாத அச்சுறுத்தல்களும், வஹாபியக் குரூரங்களுக்கு பெருகும் சிறுபான்மையின ஆதரவும், பொது நீரோட்டத்தில் இருக்கும் பெரும்பான்மையின மக்களை அச்சமும் பீதியும் கொள்ள வைக்கின்றன. கற்காலச் சிந்தனைகளை ஒட்டிய காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள், நாகரிக மக்களைப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் குரூரமான தண்டனை முறைகள். பழங்குடிகளின் கண்மூடித்தனமான போர் வெறியேற்றப்பட்ட மனிதர்கள், பாதிக்கப்படும் இளைய சமுதாயம், போராடிப் பெற்ற பெண் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கி பெண்ணை வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாகவும், பாலியல் கொத்தடிமைகளாகவும் ஆக்குவதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்படும் இது போன்ற இழிவான செயல்களை உடனடியாகக் கிள்ளியெறியா விட்டால் பெரிய பாதிப்பை, கலாசாரச் சீரழிவை, மானுடப் பேரழிவை இது போன்ற செயல்கள் ஏற்படுத்தி விடும். கருத்துக் குருடர்களையும், போலி மதச்சார்பின்மை பேசுபவர்களையும், காட்டுமிராண்டிகளையும், அடிமை வியாபாரம் செய்வதற்காக அலையும் வியாபாரிகளையும் புறம்தள்ளிவிட்டு நாம் முன்னகர்வோம்.


காஷ்மீரில் முறிக்கப்பட்ட பெண் உரிமைக் குரல்:

malala03வங்கப் பிரிவினையின் போது தேவையற்ற முறையில் இந்திரா காந்தி கைதியாகப் பிடித்த 93,000 பாகிஸ்தானிய ராணுவ வீரர்களையும் கூலிப்படை பயங்கரவாதிகளையும் சிம்லா ஒப்பந்தப்படி எந்த நிபந்தனையும் விதிக்காமல்– பாகிஸ்தான் ஆக்ரமித்து வைத்திருந்த காஷ்மீரப் பகுதிகளை விடுவிக்கவும் கோராமல்– விட்டதன் பிரதிபலனை இன்று வரை இந்தியா அனுபவிக்கிறது. அந்தப் பள்ளத்தாக்கின் அப்பாவி மக்களும், பூர்வகுடி பண்டிட்களும், தாக்கூர்களும், பாசுபத சைவத்தைப் பின்பற்றும் சிறுபான்மையின இந்துக்கள் மட்டுமின்றி, பெரும்பான்மையான இஸ்லாமியர்களும் சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். தொடர்ச்சியாக உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதன் மூலம் அந்த மக்களின் கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றங்களைத் தடுத்துத் தேக்கி வைப்பதன் மூலம் அவர்களுக்கு இந்திய அரசின் மீது வெறுப்பை வளர்த்து, அந்தப் பகுதியைத் துண்டாடி இந்தியாவை சிதைக்கலாம் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. கடந்த 40 வருடங்களாக காஷ்மீரப் பள்ளத்தாக்கு மக்களுக்கு எந்தவித அமைதியும், நல்ல வாழ்வும் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அங்கு திட்டமிட்டு அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் போஷித்து வளர்த்து வருகிறது. அவர்களால் பெருவாரியாக நிம்மதியைத் தொலைத்த காஷ்மீர மக்கள் நடுவில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடும் நடவடிக்கைகளுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகக் காற்றை சுவாசிக்க ஆரம்பிக்கிறார்கள். காஷ்மீரத்து மக்கள் இப்போதுதான் சுதந்திரமாக வெளியே வர துவங்கியிருக்கிறார்கள்.

சில பதின்மப் பருவத்துச் சிறுமிகள் தங்களின் மேலான நுண்ணுர்வின் வாயிலாக உலகைப் பார்க்க விரும்பி இசை எனும் கலை வடிவத்தின் வழியாக தங்களின் குரல்களை திசையெங்கும் பரப்பிக்கொண்டிருந்தார்கள். பிரகாஷ் (from darkness to light) இருளிலிருந்து ஒளிக்கு என்ற வாக்கியத்துடன் ஒரு band இசைக்குழுவை அனிக்மா, நோமா மற்றும் ஃபாரா என்ற 3 சிறுமிகள் சென்ற ஜனவரி 2012-லிருந்து ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள் (குழுவின் ஃபேஸ்புக் பக்கம்). சென்ற டிசம்பரில் காஷ்மீரின் 2012-ஆம் ஆண்டுக்கான இசை விழாவில் பரிசு வென்ற பின் இந்தச் சிறுமிகளுக்கு முக்கியத்துவம் கூடியது. இந்தியா முழுக்க இவர்களுக்கு ஆதரவு பெருகியது. பலரும் இவர்களை ஊக்குவித்தனர். உடனே அடிப்படைவாதிகள் களத்தில் குதித்தனர். முதலில் அவர்களின் முகநூல் பக்கத்தில் மிரட்டினர். அவர்களின் மேனேஜர் நஸீரைத் தனியாக அழைத்து எச்சரித்தனர். திடீரென துகாதார்ன்-இ-மில்லத் என்ற இஸ்லாமிய பெண்கள் பயங்கரவாத அமைப்பினர் இந்தச் சிறுமிகள் செய்வது கொலை நிகர் குற்றம் என அறிவித்தனர்.

இப்படிப் பெண்கள் வெளியே வந்து பாடுவது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அறிவித்தது. அந்தச் சிறுமிகள் தொடர்ந்து பாடினால் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றும் அச்சுறுத்தி அறிக்கை வெளியிட்டது. ஏற்கெனவே மாநிலத்தின் தலைமை முஃப்தி இந்தச் சிறுமிகளுக்குத் தடையாணை (ஃபத்வா) பிறப்பித்திருக்கிறார். என்றும் சல்மான் ருஷ்டிக்கு என்ன செய்தார்களோ, தஸ்லீமா நஸ்ரினுக்கு என்ன செய்தார்களோ, படிக்க வேண்டும் என்று சொன்னதற்காக மலாலாவை என்ன செய்தார்களோ அப்படிச் செய்வோம் என்று மென்மையான(?) மொழியில் சொன்னர்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், அவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு கூலிக்கு மாரடிக்கும் சிலரும் இப்படியெல்லாம் இளம் பெண்கள் வெளியே வந்து பாடலாமா என்று பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். மறைமுகமான தாக்குதல் மிரட்டலும் அந்தப் பதிவுகளில் இருந்தன.

இந்த முக நூலில் இருந்தும் ஹயா அந்ராபி என்ற முகநூலில் இருந்தும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் போலீஸ் முதல் தகவல் அறிக்கை தயாரித்த உடன் உடனடியாக ஒரு வீடியோவை வெளியிட்டனர்.

[youtube https://www.youtube.com/watch?v=aX_BbG–ULg]

பகிரங்கக் கொலை மிரட்டலுடன் அந்த அழிக்கப்பட்ட யூ ட்யூப் வீடியோவின் காப்பியை ஹெட்லைன்ஸ்டுடே ஒளி பரப்பியது. அரசோ பயங்கர வாதிகளைக் கண்டிக்காமல் நீங்கள் பாடுங்கள் உங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்றதோடு அமைதி காத்தனர். பயந்து போன பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உயிருக்கும், மானத்திற்கும் பயந்து தங்கள் குழந்தைகளை அமைதி காக்கக் கேட்டுக்கொண்டனர்.

kashmir_girls_band_2

காஷ்மீரின் எழிலோடும் குளுமையோடும், இனிமையோடும் இருந்த அந்தப் பூங்குயில்களின் குரல்வளையும் ஜனநாயக உரிமைகளின் குரல்வளையும் ஒருங்கே நெறிக்கப்பட்டது. மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைமை முஃப்தி இப்படி பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுக்கிறாரே என்று யாரும் அவரைக் கண்டிக்கவில்லை. அனைவரும் அந்தச் சிறுமிகளுக்கு அறிவுரை வழங்கினர். சிறுமிகளின் பெற்றோர் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களைத் தலைமறைவாக வைத்துள்ளனர். யாரும், குறிப்பாக ஊடகங்கள், சிறுமிகளோடு தொடர்புகொள்ள முடியாத வகையில் அவர்களது கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட தொடர்புக் கருவிகளைக் கைப்பற்றி வைத்திருக்கின்றனர். முதலமைச்சரின் ட்வீட் உறுதிமொழியோ, காவல்துறையோ தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க முடியாது என்று அந்தப் பெற்றோர் கூறுகின்றனர். பள்ளத்தாக்கு தனக்குக் கிடைத்த கூடுதல் இசைக்குரல் இனிமையை இழந்திருக்கிறது.

ஆனால் யார் கண்டித்தாலும் அடிப்படைவாதம் தான் இறுதியில் வெல்லும் என்ற முடிவை வலுவாக தாலீபானிய அடிப்படைவாத வஹாபிய சிந்தனை பொதுமக்களிடம் விதைக்கிறது. இதன் மூலம் பெருவாரியான பயத்தை விதைக்கிறது. நாகரிக சமூகத்தை இதன் மூலம் பின்னுக்கு இழுத்து கற்காலத்தில் மக்களை இருத்தப் பிரயத்தனபடுகிறது. பெண்களை சமையலுக்கும், பாலியல் வல்லுறவுக்கும், இதர வீட்டு வேலைகள் செய்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். பெண் என்பவள் ஒரு நுகர்வுப் பண்டம் என்பதைத் தாண்டி வேறில்லை என பெண்களையும் நம்பச்செய்து அவர்களையும் அதற்காகப் போராட செய்யும் அளவுக்கு அது குரூரமாகத் திட்டமிட்டு செயலாற்றுகிறது.

இதன் மூலம் அருவெறுப்பு அடைந்திருக்கும் சராசரி நியாய உணர்வுள்ள எளிய இஸ்லாமிய மக்களிடம் நான் கேட்பதெல்லாம் அந்தச் சிறுமிகளுக்கு எதிரான இந்த மதவாத ஒடுக்குமுறையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இஸ்லாம் மார்க்கம் உண்மையிலேயே இளம் பெண்களின் கலைத்திறமை வெளிப்பாடுகள் கூடாது என்று சொல்கிறதா? உண்மைதான் என்றால் அது நியாயம்தானா? இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த 21-ஆம் நூற்றாண்டில் தொடர்வது பொருத்தம்தானா? பொருத்தமில்லை என்றால் இதற்கும் நீங்கள் உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாமா? இப்போது நீங்கள் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்காவிட்டால் மலாலாவிற்கு நிகழ்ந்த கொடுமை சுதந்திர இந்தியாவின் மகள்களுக்கும் ஏற்படும். ட்வீட்டரில் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு அமைதி காக்கும் ஒமர் அப்துல்லா தன் ஜனநாயகக் கடமையிலிருந்து வழுவியிருக்கிறார். பெண்களுக்கு எதிரான கற்பழிப்புக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கும் அரசின் அவசரச் சட்டத்தையே இதற்கும் உபயோகித்து அப்பாவிப் பெண்களை, சிறுமிகளை மிரட்டிய அந்த மதத்தலைவருக்கும் அரசு விதிக்குமா?

women rights01இது போன்ற கேவலங்கள் எல்லாம் நாகரீக உலகிற்கும் பெண்கள் சமூகத்திற்கும் இடையில் ஒரு மிகப்பெரும் பள்ளத்தை உருவாக்கி பெண்களை வெறும் பண்டமாகவும், பாலியல் கொத்தடிமைகளாக மட்டுமே வைத்திருப்பதற்கான சதியை பழமைவாதிகள் முன்னெடுக்கிறார்கள். அதனால் தங்களின் சகோதரிகளும், தாய்மார்களும், மகள்களும் சமூக அமைப்பில் கீழான நிலையில் மட்டுமே இருக்க வேண்டும். அவர்களுக்கான சுதந்திரம் என்பது ஆண்களால் அனுமதிக்கப்படும் அளவிற்கு மட்டுமே இருக்க வேண்டும். பெண் சமூகமே ஒழுக்கவியல் சங்கிலிகளால் கடுமையாகப் பிணைக்கப்பட்டு, அவர்களை மன உளைச்சலில் ஆழ்த்தி பழங்குடி சமூக அந்தஸ்த்திலேயே வைத்திருக்க பெரும் முயற்சி நடக்கிறது. இதனால் ஏற்கெனவே சமூக அடுக்கில் கீழ்நிலையில் இருக்ககூடிய ஏழை இஸ்லாமிய சகோதரிகள், தாய்மார்களின் வாழ்க்கை பெரும் பாதிப்பிற்குள்ளாகி, மேலும் சிக்கலாகப்போகிறது. கல்வி கற்கப் போனால் கொலை செய்வோம் என்று மிரட்டி, கொலை முயற்சியும் செய்த தாலீபான் பாணியிலான அடிமை முறையை இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டிலும் புகுத்தி இங்குள்ள ஏழை மக்களின் மீதும் தேவையற்ற அடிப்படை வாத சமூக அழுத்தங்களைத் திணிக்கிறார்கள்.

மலாலாவை கொலை செய்ய முயன்றது ஒரு சமூகத்தின் கல்வி முயற்சியை தடுப்பது மட்டுமே என்பதைத் தாண்டி அதற்கு வேறு எந்தப் பொருளும் இல்லை. இதன் விளைவுகள் அந்தச் சமூகத்தில் ஏற்படுத்தும் மதிப்புகளை நோக்கினால் ஏழை இஸ்லாமியச் சிறுமிகளின் கல்வி பின்னுக்குத் தள்ளப்படும். அவர்களுக்கான சமூக சுதந்திரம் பறிக்கப்படும். அவர்களின் கல்வி அறியாமையும், சமூகத் தனிமைப்படுத்தலும் அவர்களின் உரிமைகளை மேலும் இல்லாமலாக்கும். ஏற்கெனவே மைய நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கும் இஸ்லாமிய சகோதரிகளும், தாய்மார்களும் மேலும் கீழான சமூக நிலையை அடையவே இது போன்ற வஹாபிய அடிப்படைவாத சிந்தனைகள் வழிவகுக்கும். புர்கா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசுவது, கல்வி கற்கும் பெண்களைக் கொலை செய்வது, பள்ளியில் ஒரு மாணவனுடன் தன் மகள் பேசினார் என்பதற்காக பெற்ற குழந்தையின் மீது ஆசிட் ஊற்றி கொன்ற பெற்றோர்களை ஊக்குவித்து வளர்ப்பதன் வழியாக, பெண்களுக்கு 1000 ஆண்டுகளாக இருந்த சமூகத் தடைகளைத் தாண்டி வளர்ந்த இன்றைய நிலையை மீண்டும் மாற்றி பழைய நிலையை உறுதிப்படுத்துவதன் வழியாக அவர்களை பாலியல் கொத்தடிமைகளாக மட்டுமே வைத்திருப்பதற்கான மனநிலைக்கு எதிராகப் போரிட வேண்டியது நம் கடமையாகும். நம் சொந்த சகோதரிகளும், தாயும், மகளும் முன்னோக்கி நடப்பதைப் பெருமையுடன் பார்ப்பதும் அதை ஆதரிப்பதும் ஒரு நாகரிக சமூகத்தின் பெருமிதமான வெற்றியாக இருக்கும். பள்ளத்தாக்கில் சிறகொடிந்து இருக்கும் அந்தப் பாடும் வானம்பாடிகளுக்கு என் மனமார்ந்த ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

malala02

துக்தரன் – இ – மில்லத்

காஷ்மீரிலுள்ள செல்வாக்கு பெற்ற பெண்கள் அமைப்பு இந்த இசைக்குழுவுக்கு எதிரான நிலையை எடுத்தது.எதிர்ப்பு தெரிவித்தது .என்றெல்லாம் மிக மென்மையான மொழியில் மீடியாக்களால் (i meant it for paid media and pro secular media & media persons.)வர்ணிக்கப்பட்ட அந்த பெண்கள் அமைப்பு பற்றியும் அதன் தலைவி ஆயிஷா அந்ரோபி பற்றியும் சிறிது தெரிந்து கொள்வோம். DeM எனக்குறிப்பிடப்படும் துக்த்தரன் – இ – மில்லத் அமைப்பு 1987 முதல் செயல் படுகிறது தாங்கள் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு என்ற அறிவிப்போடு.அதிர்ச்சி அடைய வேண்டாம் . இதற்கு முன்னால் அதன் தலைவியின் பேச்சை கேட்டவர்கள் நடுங்கிப்போனார்கள். அது என்னவென்றால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் புர்கா அணியாமலோ, இஸ்லாமிய உடைகளை அணியாமலோ செல்பவர்கள் மட்டுமின்றி ஜீன்ஸ் உள்ளிட்ட மேலை நாட்டு உடைகளை அணிபவர்கள் மீது ஆசிட் வீச வேண்டும் என்று ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டார் 2000 ஆவது ஆண்டு . இதை சிரமேற்று இவர்களின் பயங்கரவாத பிரிவான லஷ்கர் – இ ஜாபர் 2 பெண்கள் மீது ஆசிட் ஊற்றி தங்கள் செயலை மக்களுக்கு காண்பித்தார்கள் (https://www.mid-day.com/news/2001/sep/15235.htm ).அதை வெளிப்படையாக செய்ய தூண்டியவர் தான் அம்மையார் ஆயுஷா (https://banditash.wordpress.com/2008/04/06/dukhtaran-e-millat-asiya-andrabi/)அந்த்ராபி .  dem01பாகிஸ்தானால் திருட்டுத்தனமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரில் இப்போது ஒரு சம்பவம் நடந்து அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்க வைத்தது.ஒரு இஸ்லாமிய மாணவி தன் வகுப்பு தோழனுடன் பேசியதற்காக சொந்த பெற்றோர்களால் ஆசிட் நிறைந்த ட்ரம்மில் அமிழ்த்தி கொல்லப்பட்டார்.அது மத ரீதியாக சரி தான் என வாதிட்டவர் தான் நம் மாதர் குல திலகம் ஆயிஷா அந்த்ரோபி.(https://www.guardian.co.uk/world/2012/nov/02/parents-accused-kashmir-acid-attack ).இந்த பெற்றோர்கள் சந்தேகித்த பெண்ணின் வயது 15.ஜோஹிரா யூசுப் எனும் பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய உறுப்பினர் தெரிவிப்பது என்ன வேன்றால் மாதம் 10 தாக்குதல் ஆவது பெண் குழந்தைகளின் உடை சார்ந்தும், ஒழுக்கம் சார்ந்தும் நடை பெறுகிறது . இது ஒரு நாகரீக சமூகம் தானா? என கேள்வி எழுப்புகிறார்.ஆனால் ஆயிஷாயும் அவரின் அடிப்படைவாத தோழிகளும் பகிரங்கமாக மிரட்டுகிறார்கள் அந்த பெண்களை . நீங்கள் பாடினால் உங்களின் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் தர முடியாது என்கிறார் . ஆறு ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு குற்றங்களுக்காகவும் ,பயங்கரவாத செயல்களுக்காகவும் சிறை சென்று மீண்டு வந்த ஆயிசா அந்த்ரேபி.காஷ்மீரத்திற்காக துப்பாக்கி, வெடிகுண்டு ஏந்தி போராடும் லஷ்கர் இ தொய்பாவும், ஹரிககத் உல் முஜாகீதீனும் தான் காஷ்மீர் மக்களின் பிரதி நிதிகள். மற்றவர்கள் அல்ல என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியவர் தான் இவர். இந்த அமைப்பை பற்றிய தெற்காசிய தீவிரவாத எதிர்ப்பு நாடுகளின் கூட்டமைப்பின் இணைய தளம் சொல்வதை பாருங்கள் (https://www.satp.org/satporgtp/countries/india/states/jandk/terrorist_outfits/dukhtaran.htm ).இந்த அம்மையார் தான் மகளிர் அமைப்பின் தலைவர் என்றால் காஷ்மீர் மக்களின் வாழ்வில் என்ன விதமான முன்னேற்றம் ஏற்படும் என நினைக்க நடுக்கமாக இருக்கிறது.

dem02
மேலதிக விபரங்களுக்கு :

https://www.voanews.com/content/kashmiri-girl-band-folds-after-muslim-cleric-issues-fatwa/1597597.html

https://tribune.com.pk/story/502931/kashmir-girl-band-quits-after-fatwa/

https://www.irishtimes.com/newspaper/breaking/2013/0205/breaking26.html

https://www.bbc.co.uk/news/world-asia-india-21335186

https://www.satp.org/satporgtp/countries/india/states/jandk/terrorist_outfits/dukhtaran.htm

https://www.youtube.com/verify_controversy?next_url=/watch%3Fv%3D5Ue4Hm0-4YE%26bpctr%3D1360416591

https://www.youtube.com/watch?v=E3Za1GcHwKI

https://www.youtube.com/watch?v=-h_RaXdvlTY

 

10 Replies to “பாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா”

  1. RSS thalaivar sollatha ondrai sonnathaaga mathasaarbinmayin moththa kuththagaiyaalargal
    Kuyo miyo endru kaththiyavargal ippothu yange sendru olinthu kondanar .

  2. தமிழகத்தில் மதமாற்றம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறதே !
    ஆயிரம் ஆயிரமாக மதம் மாறிக்கொண்டிருப்பதாகவும்
    சொல்கின்றனரே ! மதம் மாறும் அப்பாவிகள் இதையெல்லாம்
    அறிவார்களா ?

    தேவ்

  3. இந்த ஜென்மங்கள் திருந்தவே திருந்தாது.

    கடவுள் அவதாரம் எடுத்தால் மட்டுமே உண்டு.

    ஸ்ரீ ராம ஜெயம்.

  4. இந்த ஆணாதிக்க வெறியனாகிய மவுல்வியை , இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின்படி கைது செய்து விசாரித்து, தூக்கில் இடவேண்டும். பெண்களை அச்சுறுத்தும், இழிவு படுத்தும் இவனைப்போன்ற அயோக்கியர்களை பெண்கள் ஒன்று சேர்ந்து நாட்டைவிட்டு துரத்தவேண்டும்.

  5. இந்த மாதிரியான ஒரு கும்பல் தமிழ் நாட்டில் இதே போல் சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம்
    அப்போது ஜெயலலிதா என்ன செய்வார்?
    அவர்களுடன் சம்மந்தப் பட்டவர்களை பேச்சு வார்த்தை நடத்தச் சொல்வாரா?

  6. அன்பு நணண்பரே, டேவிட் படம் பார்த்தீர்களா நம்மை எவ்வாறு சொல்லயுள்ளார்களென்று

  7. பாடுபவர்களை கொல்வோம் என்று சொல்லும் இவர்களை உடன் பரலோகத்துக்கு அனுப்ப வேண்டும்.

  8. ஒவ்வரு ஹிந்து பெண்ணும் கையில் ஆயுதம் எடுத்தால் … முஸ்லிம் சமுதாயமே அடையாளம் இல்லாமல் போய்விடும்…. ஜாக்கிரதை! இப்படிக்கு ஹிந்து பெண்.

  9. இது போன்று இஸ்லாம் ஆல் பாதிக்கப் படும் பெண்கள் வெளியேறி சுதந்திரமாய் வாழ ஒரு அமைப்பை ஏற்படுத்தினால் நிறைய பெண்கள் பயன் பெறுவர்.

  10. விவேக்!

    சொல்வது சுலபம். செய்வது கடினம்.

    இசுலாமிலிருந்து வெளியேறி சுதந்திரமாகப் பெண்கள் வாழம் பெண்களை இசுலாம் காணாமல் விட்டாலும், அதாவது நிராகரித்தாலும், அவர்களுக்கு மணமாக வேண்டுமே? யாரை மணப்பார்கள்? மணம் செய்யும் ஆண்கள் ஏதாவது மதத்தைச்சேர்ந்தவர்களாகத்தானே இருப்பார்கள்? அவர்கள் மூலம் இவர்களுக்கும் மதம் வந்துதீரத்தானே செய்ய வேண்டும்?

    எந்த மதமாகவோ அஃது இருந்து விட்டுப்போகட்டும்: இசுலாமைத்தவிர என்பது உங்கள் வாதமென்றால் ஓகே. ஆனால் எந்த மதமும் பெண்ணைத் தன்போக்கில் விடுவதில்லை. இக்கட்டுரையில் போடப்பட்டிருக்கும் படங்களில் பெண்கள் ஒரு ராக் பாண்டில் வாசிக்கிறார்கள். அதைப்போல தமிழ்ப்பெண்களை தமிழ்ச்சமூகம் விடுவதில்லையே? இந்துப்பெண்களை இந்து மதம் விடுமா?

    எம்மதமானாலும் பெண்கள் ஆண்கள் வகுத்த வரைகளுக்குள்ளேதான் வாழவேண்டும். இசுலாம் கொடூரமாக அவ்வரையறைகளை மூறுவோரைத்தண்டிக்கிறது. மற்றவர்கள் அப்படித்தண்டிக்கவில்லை. ஆனால் தடுப்பார்கள்?

    தாலி வேண்டுமா வேண்டாமா என்ற விவாதத்தைக்கூட அனுமதிக்காதவர்கள்! வெலண்டின் டே கூடாது என்பவர்கள்… எப்படி பெண்ணை ராக் பாண்டில் வாத்தியக்கருவிகளை இசைத்து ஆட விடுவார்கள்?

    பல இணைய தளமேடைகளிலும் பத்திரிக்கைகளிலும் நான் கண்டது: பெண் சுதந்திரம் என்ற பேச்சின்போது, அங்கு இசுலாமியரும் இந்துக்களும் கிருத்துவரும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள்.; அதாவது பெண்களை அடக்கித்தான் வைக்கவேண்டும் என்பதில் மூவருக்கும் உடன்பாடே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *