தஞ்சை மாவட்டத்தின் இயற்கை வழி விவசாயிகள் ஒருங்கிணைந்து தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் முகமாக பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி யோக மையத்துடன் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்குகின்றனர். டாக்டர் கோ.நம்மாழ்வார் உள்ளிட்ட பல இயற்கை வேளாண் அறிஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இடம்: ஜனரஞ்சனி ஹால், கோபால் ராவ் நூலகம், காந்தி பார்க் எதிரில், கும்பகோணம். 13 அக்டோபர் 2013 ஞாயிறு பிற்பகல் 3.50க்கு விழா தொடங்கும், அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே.
மிகுந்த மன மகிழ்ச்சியை இந்தச் செய்தி தருகிறது, இன்டர்நெட் முதல் எல்லாவகையான வாலண்டியர் நெட்வொர்கையும் உபகரணங்களையும் முதலில் இருந்து உபயோகித்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
நல்ல தகவலுக்கு மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் !
குமரன்
மிக சிறந்த முயற்சி. இந்த நண்முயற்சியில் இணைந்துள்ள நல்ல மனிதர்களுக்கு வாழ்த்துக்கள்.மண் பயனுறவேண்டும். அனைத்துமக்களுக்கும் நோயற்ற வாழ்வு வாழ இயற்கை உணவுப்பொருட்கள் கிடைக்க முனைந்துள்ள இந்த முயற்சி வெற்றிபெற எந்தை தில்லை க்கூத்தப்பெருமான் திருவருள் நிறைக. வாழ்க வாழ்க வளர்க வளர்க வெல்க வெல்க.