DHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்

பேஸ்புக்கில்  இந்து தர்மத்தின் பெருமைகள்,  இந்து சமுதாய பிரசினைகள் குறித்து பலர் எழுதி வருகின்றனர். இந்து எதிர்ப்பு  பிரசாரங்களுக்கும் அருமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்..  இத்தகைய தர்ம சேவகர்களை ஒன்றிணைத்தால்  இன்னும் சிறப்பாக இணையத்திலும்  அதோடு  நேரடி களப்பணிகளிலும் ஈடுபடலாம் என்ற நோக்கத்துடன்  சில குழுங்களும் தொடங்கப் பட்டுள்ளன.

DHARM-facebook

இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட DHARM பேஸ்புக் குழுமம் மிக அருமையாக இந்து தர்மம் குழித்த விழிப்புணர்வை உண்டாக்குவதுடன், களப்பணிகளையும் திட்டமிட்டு செய்து வருகிறது.

இந்தக் குழுமத்தின் வலைத்தளம்: https://www.facebook.com/groups/dharamwarriors/

சமூக வலைத்தளங்களை  அரட்டைக்கும், நேர விரயத்திற்குமே பலரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில்,  அதன் மூலம்  நல்ல பணிகளை  முன்னெடுக்கும் இக்குழுமத்திற்கு தமிழ்ஹிந்து தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இது போன்ற குழுக்கள் மேன்மேலும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பெருக வேண்டும்.

11 Replies to “DHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்”

  1. வினவு போன்ற இஸ்லாமிய பயங்கர வாத அமைப்புக்களுக்கு துணை போகும் சில வலைதளங்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். நான் தினமும் பதிலடி கொடுத்து வருகிறேன். அந்த அமைப்பை சேர்ந்தார்களே ஆதரிக்கிறார்கள். இது எனக்கு வெற்றியாக கருதுகிறேன். மேலும் பலர் இதுபோன்ற இஸ்லாமிய ஆதரவு பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக கருத்துக்களை அவர்களின் வலை தளத்திலேயே பதில் கூறவேண்டும். அப்போதுதான் இவர்களின் செயல்களை உலகிற்கு எடுத்துக்கூற முடியும்.

  2. நன்றி மு.நாட்ராயன். இதைதான் திரு க்ருஷ்ணகுமார் அவர்கள் தனி ஒருவராக திண்ணையில் பன்னி கொண்டு உள்ளார். அவரின் ராமாயண கேள்விகளுக்கு ஒருவர் பதில் சொல்ல முடியாமல் தவிப்பது சுவாரஸியம். மறைந்த மலர்மன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க அவர் எழுதிய கட்டுரை அங்கு பெரும் வரவேற்ப்பை பெர்றது

  3. என்னை பொறுத்தவரை ஹிந்து ஒரு மதமல்ல.அது வாழ்வியல் புரிஞ்சா சரி..

  4. இந்திய நாட்டின் மீது வெளியில் அறிவிக்கபடாத போர் தொடங்கபட்டு பல நூறு ஆண்டுகள் ஆகின்றது. இந்த போர் நடப்பதையே உணராத பாமரன் தன்னை வெளிநாட்டு சக்திகள் தாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை அறியாமலேயே இயேசுவின் குழுக்களில் இருப்பவர்கள் கூறும் தேன் சொற்களுக்கு பலியாகின்றனர். பலர் கேள்வி ஏதும் கேட்காமல் கண்மூடித் தனமாக நம்புவதே இந்த அதர்மத்திற்கு காரணம். போர் நடப்பது பற்றி தெரிந்து கொள்ளவும், நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளவும், இது போல் குழுக்கள் இந்தியா முழுவதும் ஆரம்பிக்க பட வேண்டும். பதில் தாக்குதல் தொடங்கட்டும். தர்மமே வெல்லும்.

  5. சனாதன ஹிந்து தர்ம நீதி ஓங்குக வுலகம் எல்லாம், வுங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும் இறைவனிடத்தில் பிராத்தனையும்

  6. இவர்களுக்கு சும்மா பதிலடி கொடுத்தால் மட்டும் போதாது. தங்கள் வரம்பை மீறும் இவர்கள் சுவாமி விவெஹானந்தரைக் கூட விடவில்லை. ஏசுவே உங்கள் முக்திக்கு வழி சொல்லும் ஒரே கடவுள் என்று ஞானதீபம் சுடர் 4 இல் அவர் கூறியதாக facebook இல் பரப்புகிறார்கள். இயேசு குறித்து அவர் உயர்வாக ஏதாவது சொன்னாரா எனக்கு தெரியாது ஆனால் ஒரு பதிப்பகத்தால் பதிப்புரிமை பெற்ற புத்தகத்தை மாற்றிப் பயன்படுத்தினால் பதிப்புரிமை கோரி வழக்கு தாக்கல் செய்ய முடியாதா? இப்படி ஏதாவது செய்தே ஆகா வேண்டும். இதைத் தவிர இந்து மதத்தில் வேதங்களில் யெசுவுக்கான மந்திரம் என்று ஓம் பிரம்ம புத்திராய நமஹ, ஓம் கன்னி சுதாய நமஹ என்று சிலவற்றைக் கூறுகிறார்கள்.அதை விடக் கொடுமை யாக ஓம் ம்ருத்துஞ்சயாய நமஹ என்ப்பது கூட ஏசுவைக் குறிக்கிறதாம்? இதைக் கூடவா நாம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்?

  7. முதலில் இந்த அமெரிக்க மோகத்தை விட்டுவோழிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *