2014 பாராளுமன்றத் தேர்தலில் இன்று வாக்களிக்கும் முன் இவற்றை எண்ணிப்பாருங்கள்..
(இவை அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட சித்திரங்கள்).
2014 பாராளுமன்றத் தேர்தலில் இன்று வாக்களிக்கும் முன் இவற்றை எண்ணிப்பாருங்கள்..
(இவை அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட சித்திரங்கள்).
இன்று காலை வாக்கு சாவடிக்கு சென்ற போது,காலை 7 மணிக்கே வயதான பெரியவர்கள் ஆண் பெண் அனைவரும் சுமார் 20 பேர் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் வரிசையில் நின்று கொண்டு இருந்ததை காண முடிந்தது. சென்னையில் மோடி அலை வீசுவதை கண்டேன். எனவே திமுக, அதிமுக இரு கட்சியினரும் பெருங்கவலையில் இருந்தனர். வாக்கு வித்தியாசம் அதிகம் இருக்காது என்றார் ஒரு பெரியவர். காங்கிரஸ் தொண்டர்களோ, கட்சிப்பிரதிநிதிகளோ யாரையும் எங்கும் காணவில்லை. தலைமறைவாகி விட்டனர். இந்த தேர்தல் நாளில் மதச் சார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சியின் கர்நாடக வேட்பாளர் கிருஷ்ணப்பா காலமாகி விட்ட செய்தியும் பத்திரிகைகளில் வந்துள்ளது. அந்த கட்சி இந்த தேர்தலில் மறைந்துவிடும். எல்லா வாக்கு சாவடிகளிலும் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிக்காரர்களே காணப்படுகின்றனர். தாமரைக்கும், இரட்டை இலைக்கும் கிடைக்கும் வாக்கை விட உதயசூரியன் கட்சிக்கு இம்முறை குறைவாகதான் கிடைக்கும் என்றார் ஒரு பெரியவர். இல்லை இல்லை அவர்கள் மிக பெரிய ஊழலை செய்துள்ளனர் எனவே , மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பார்கள் என்றார் இன்னொருவர். ஊழல் நம் நாட்டில் ஒரு நகைச்சுவை ஆகிவிட்டது . பெரிய மாறுதல்களை இந்த தேர்தல் தரும். காங்கிரசுக்கு சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது.
எதிர்கால இந்தியாவின் பொற்காலத்தை வேண்டி ஒளிரும் பாரதத்துக்கு முதல் ஆளாக வாக்களித்து விட்டேன். மகா கவி பாரதியின் பாடல் வரிகள் மனதில் ஓடியது. “நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது” எனும் வரிகள் அவை.
மாகாளி பராசக்தி இந்திய நாட்டினில் கடைக்கண் வைக்கிறாள் . ஆஹாவென்றெழுகின்றது யுகப்புரட்சி. அலறி வீழ்கின்றார்கள் ஊழல்வாதிகள். அரியணை ஏறுகிறார் மோடி விடியலைத் தேடியவர்களே! ஆடி வாருங்கள் பூபாளம் பாடிவாருங்கள் மோடியையும் புதிய பாரதத்தையும் வரவேற்க.
அருமையான கட்டுரை, திரு அரவிந்தன் நீலகண்டன் வழக்கம் போல் முத்திரை பதித்துள்ளார். திரு மோடி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
ஆம். வாக்கு அளித்து விட்டோம். 20 நாட்கள் பொறுப்போம்.