மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!

Modi4சாதாரண தேநீர்க்கடைக்காரரின் மகன், மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமர் ஆவதென்பது, சரித்திர நிகழ்வு.

வாரிசு அடிப்படையில் நாட்டை ஆளும் உரிமை இருப்பதாக நினைத்துக்கொண்டு, மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் நடத்திவந்த காங்கிரஸையும், ஆளும்கட்சியாக இருந்துகொண்டு பல அராஜகங்களை நிகழ்த்திய அதன் கூட்டணியையும் ஒருசேர முறியடித்திருக்கிறார் மோடி.

இது கண்டிப்பாக மோடியின் வெற்றியே. அதேசமயம் மோடியின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, இந்த மகத்தான சாதனை.

16வது மக்களவைத் தேர்தலில் வாகை சூடிய மோடி, ஈட்டியின் கூர்முனை என்றால், அதன் பிடியாகவும், கம்பாகவும் இருந்தவர்கள் பலர். ஈட்டி முனை மழுங்கி இருந்தாலும் பயனில்லை;  ஈட்டியின் பின்னுள்ள கம்பு இல்லாமல் இருந்தாலும் பயனில்லை. அந்த ஈட்டியை எறியும் உத்வேகமும் இருந்தாக வேண்டும். அப்போதுதான் அந்த ஈட்டி சரியான இலக்கைத் தாக்கி வெல்ல முடியும்.

அத வகையில், மோடி என்ற அற்புதமான, தன்னிகரற்ற தலைவரை கூர்முனையாக முன்னிறுத்தி, அவருக்குப் பின் படையெனத் திரணடு பணியாற்றிய பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, சங்க பரிவார் இயக்கங்கள் அனைவருக்கும், இந்த வெற்றியில் பங்குண்டு.

இதனை மோடியே தேர்தல் பிரசாரத்தில் ஒருசமயம் குறிப்பிட்டார். தேசத்தில் வீசுவது மோடி அலையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த மோடி, “இந்த அலை பாஜக அலை. காங்கிரஸின் நிர்வாகத் திறமையின்மைக்கும், ஊழலுக்கும், விலைவாசி உயர்வுக்கும் எதிரான அலை” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் கூறினார் நரேந்திர மோடி.

தேர்தல் முடிவுகள் வந்தநிலையில் ஊடகங்களுக்கு தனது சேதியாக மோடி கூறியது இதுதான்:  “பிரித்தாளும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இனி மக்கள் நலனுக்கான அரசியல் தொடரும்.”

இந்த முற்றுப்புள்ளியிலிருந்து தான் தேசத்தின் வளர்ச்சிக்கான தொடர்புள்ளிகள் துவங்குகின்றன.

இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் செயலற்ற தன்மை மீதான மக்களின் கோபமே காரணம் என்றாலும், அதை வாக்குகளாக மாறியது தான் மோடியின் அசுர சாதனை. கண்டிப்பாக மோடியின் இடத்தில் அத்வானி உள்ளிட்ட வேறு எவர் இருந்திருந்தாலும், இத்தகைய இமாலய சாதனையை நிகழத்தியிருக்க முடியாது. மோடியை ஆர்எஸ்எஸ் தலைமை போர்ப்படைத் தளபதியாக முன்னிறுத்தியது ஏன் என்பது இப்போது பலருக்கும் புரிந்திருக்கும்.

தவிர, மோடியை மகுடம் சூடவைப்பதற்காகச் செயல்படுத்தப்பட்ட பஞ்சதந்திர அணுகுமுறைகளுக்கும் இவ்வெற்றியில் பெரும் பங்குண்டு. மோடியின் தன்னிகரற்ற தலைமையை முன்னிலைப்படுத்தியது, பாஜகவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை தீவிரப்படுத்தியது, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தியது, ஊடகங்களை வழிக்குக் கொண்டுவந்தது, சங்கபரிவார் இயக்கங்களின் அர்ப்பணிப்பான கடும் உழைப்பு ஆகியவை, பாஜகவின், மோடியின் மகத்தான வெற்றிக்கு வித்திட்ட பஞ்சதந்திரங்கள்.

1. மோடி என்ற மந்திரம்:

குஜராத் முதல்வராக மூன்று முறை ஆண்ட காலகட்டத்தில் (2001- 2014) நரேந்திர மோடி நிகழ்த்திய அற்புதங்களே அவரை தேசிய அரசியலில் தலைமை தாங்கச் செய்துள்ளன. மாநிலத்தில் ஊழல் ஒழிப்பு, நதிநீர் இணைப்பு, உபரி மின்சக்தி உற்பத்தி, உள்கட்டமைப்பில் தீவிர வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு, முதலீடுகளைக் கவர்வதில் கவனம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றால் ‘குஜராத் வளர்ச்சி மாதிரி’ என்ற சொற்றொடரை தேசத்தில் பிரபலமாக்கினார் மோடி.

நாடு முழுவதும் சுயநல அரசியல்வாதிகளிடம் சிக்கி, ஊழல் மலிந்து முன்னேற்றம் தடைப்பட்ட காலத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீது மக்கள் வெறுப்புற்ற வேளையில், ஓர் அற்புதமான மாற்றாக உதயமானார் மோடி. அவருக்குக்குப் பெருகிய மக்கள் செல்வாக்கை உடனடியாக உணர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு, அவரை பாஜகவின் போர்க்களத் தளபதியாக முன்னிறுத்துமாறு பாரதிய ஜனதாவுக்கு ஆலோசனை கூறியது. சங்க பரிவாரத்தின் அரசியல் பிரிவான பாஜக அதை ஏற்றதன் விளைவாக, இதுவரை காணாத வெற்றி அடையப்பட்டிருக்கிறது.

லக்னோ- விஜய சகடன் பேரணி- பிப் 24, 2014
லக்னோ- விஜய சங்கடன் பேரணி- பிப் 24, 2014

2013, ஜூன் மாதம் பாஜகவின் பிரசார அணித் தலைவராக மோடி நியமிக்கப்பட்டார். அன்று துவங்கிய அவரது ஓய்வற்ற களப்பயணம், 2014 மே 10 வரை தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் பல மாநிலங்களில், லட்சக் கணக்கான மக்கள் பங்கேற்ற 30க்கு மேற்பட்ட மாபெரும் பேரணிகளில் மோடி பங்கேறார்; 450க்கு மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களிலும் மோடி உரையாற்றினார். ஆவரது சுற்றுப்ப்யணத்தின் தூரத்தைக் கணக்கிட்டால் 3.50 லட்சம் கி.மீ.க்கு மேல் இருக்கும். தேசத்தின் அனைத்து மூலைகளுக்கும் பயணித்து, காங்கிரஸ் அரசின் பலவீனங்களை அம்பலப்படுத்திய மோடி, பாஜக எவ்வாறு நம்பிக்கையான தலைமையாக மலரும் என்பதை, தனது வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை முன்னிலைப்படுத்தியதன் மூலமாக பிரசாரம் செய்தார்.

டீக்கடைக்காரர்கள் ஒருகாலத்திலும் பிரதமராக முடியாது என்ற காங்கிரஸ் தலைவர் ஒருவரின் ஆணவப் பேச்சையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தேநீர்க்கடைப் பிரசாரங்களை அவர் மேற்கொண்டார். நவீன சாதனங்களின் உதவியுன் அவர் மேற்கொண்ட காணொலிக் காட்சிகள் மூலமாக பல லட்சக் கணக்கான மக்களை ஆயிரக் கணக்கான நிகவுகள் மூலமாக எட்டினார்.

தனக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் எந்தப் பிரசாரத்தையும் சாதகமாக்கும் கலையில் அவர் வல்லவராக இருந்தார். அற்புதமான பேச்சாற்றல், சாதுரியமான நகைச்சுவை, சமயோசிதமான அணுகுமுறை, தெளிவான – உறுதியான பிரசாரம் ஆகியவற்றால், தனது தலைமைப் பண்பை அவர் நிருப்பித்தார்.  ‘ஸ்வயமேவ மிருஹேந்திரதா’ என்று சிங்கத்தை வர்ணிப்பார்கள். மோடியின் தலைமைப் பண்பும் அப்படிப்பட்டதே.

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி அதே போன்ற வளர்ச்சியை நாட்டில் கொண்டுவருவதாக அவர் முழங்கியபோது, எந்த மறுப்பும் இன்றி மக்கள் அவரைப் பின்தொடரத் துவங்கினர். அவரது தலைமையே, பாஜகவின் கட்டுக்கோப்புக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் விரிவாக்கத்துக்கும் வழிவகுத்தது.

2. ஒத்த சிந்தனையுடன் அணிவகுத்த பாஜக:

பாஜக, தொண்டர்களின் அடிப்படையிலான கட்சி. இங்கு தலைவர்களின் முக்கியத்துவம் பாராட்டப்படுவதில்லை. அந்நிலையை மோடி மாற்றினார். கூட்டுத் தலைமையே பாஜகவின் அணுகுமுறையாக இருந்தது. அதை சிலர் தவறாகப் பயன்படுத்தியதால் கட்சியின் கட்டுக்கோப்பு குலைந்திருந்த நிலையில், கட்சிக்கு நம்பிக்கை அளிக்கும் ஆபத்பாந்தவராக மோடி வந்தார். அவரது தலைமையில் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் ஒத்த சிந்தனையுடன், வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்டு, ஒரே அணியாக இயங்கினர். இது ஒருவகையில் பாஜகவின் மறுபிறப்பு எனலாம்; கட்சி காலச்சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்களை மோடி அடிக்கடி சந்தித்து விவாதித்து, அவர்களையும் தனது களப்பணியில் பயன்படுத்திக் கொண்டார். தவிர கட்சியின் இளந்தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் காட்கரி, அருண் ஜேட்லி, அமித் ஷா, ரவிசன்கர் பிரசாத், ஹர்ஷ வர்த்தன், அனந்தகுமார், வெங்கைய நாயுடு, அர்ஜூன் முண்டா, சுஷீல்குமார் மோடி, கோபிநாத் முண்டே, கட்சியின் முதல்வர்களான சிவராஜ் சிங் சௌகான், மனோகர் பாரிக்கர், ரமண் சிங், வசுந்தரா ராஜி சிந்தியா ஆகியோரை கட்சி மிகவும் திறமையாகப் பயன்படுத்தியது. கட்சியிலிருந்து விலகியிருந்த கல்யாண் சிங், எடியூரப்பா போன்ற மக்கள் தலைவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்து, கட்சி வலுப்படுத்தப்பட்டது.

போபால்- கார்யகர்த்தர் மகா குமபமேளா- செப். 25, 2013
போபால்- கார்யகர்த்தர் மகா குமபமேளா- செப். 25, 2013

இவ்வாறாக, பாஜக புத்தெழுச்சியுடன் தேர்தலைச் சந்திக்கும் என எதிரிகள் கருதி இருக்கவில்லை. இதன் பின்னணியில் இருந்த சங்க ஊழியர்களின் பொருத்தமான வழிகாட்டுதலும் கூட கட்சியை சரியான திசையில் கொண்டுசெலுத்தியது.

மோடியின் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் திட்டமிட்டு நடத்தியது பாஜகவின் நிகரற்ற சாதனை. இத்தேர்தலில் பாஜக அளவிற்கு வேறெந்தக் கட்சியும் இத்தனை நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தவில்லை என்பது உண்மை.

தமிழகத்தின்  ‘இல்லந்தோறும் மோடி, உள்ளந்தோறும் தாமரை’ நிகழ்வை பெரும் மக்கள் தொடர்புத் திட்டத்திற்கு உதாரணமாகச் சொல்லலாம். பல லட்சம் மக்கள் திரண்ட மாநாடுகள் மூலமா அரசியல் காற்றின் திசையை வெளிப்படுத்தியதால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பாஜகவால் விரிவாக்கி வலிமையான சக்தியாக முடிந்தது.

3. வலிமை கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணி:

கட்சி வலுப்பெற்றபோதும், மோடியின் தலைமை பிரபலமாக இருந்தபோதும், தேர்தலில் வெல்லவும், தோல்விகளைத் தவிர்க்கவும் கூட்டணியை வலுப்படுத்துவது அவசியம் என்பதை பாஜக உணர்ந்திருந்தது. இதற்காக தலித் அரசியல் தலைவர்களான ராம் விலாஸ் பஸ்வான், உதித்ராஜ், ராம்தாஸ் அதவாலே ஆகியோர் முதல்கட்டமாக இணைக்கப்பட்டனர். இதற்கு தலைவர்களின் தனிப்பட்ட உறவும் தொடர்பும் பயன்பட்டன. உ.பி.யில் அப்னாதளம் போன்ற கட்சிகளின் வரவு வாக்குச் சிதறலைத் தடுத்தது.

மகாராஷ்டிராவில் சிவசேனையும், பஞ்சாபில் அகாலிதளமும் நம்பகமான கூட்டணித் தோழர்களாக நீடித்தன. தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனான 7 கட்சிக் கூட்டணி அமைந்து தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியது. இக்கூட்டணி எதிர்பார்த்த அளவிற்கு பெரும் வெற்றி பெறாத போதும், அரசியல் அரங்கில் அதிர்வை ஏற்படுத்தியதுடன், தேசிய அளவில் பாஜகவின் வலிமையைப் பெருக்கியது. ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்குதேசத்தின் உறவு அம்மாநிலத்தில் வெற்றிக்கு உதவியது.

சென்னை- தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு- மார்ச் 20, 2014
சென்னை- தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு- மார்ச் 20, 2014

வாக்குகள் சிதறுவதால் தோல்வி அடைவதைத் தவிர்ப்பது, வாக்குகள் ஒருங்கிணைவதால் வெல்வது ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் தேர்தலுக்கு முன்னரே பாஜக அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 25க்கு மேற்பட்ட கட்சிகள் அங்கமாகின. இது வாஜ்பாய் காலத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இந்தக் கூட்டணியும் மோடியின் வெற்றிக்குப் பின்புலமாக பெரும் பங்காற்றியுள்ளது.

4. ஊடகங்களிலும் பரவிய செல்வாக்கு:

பொதுவாகவே, பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் செயல்படுவது இந்திய ஊடகங்களின் போக்கு. தவிர விலைக்கு வாங்கப்படும் ஊடகங்களைக் கொண்டு அரசியல் நடத்திவந்த காங்கிரஸ் கட்சியால் பாஜக வெகுவாக பாதிக்கப்பட்டுவந்தது. அந்நிலையும் இம்முறை மாறியது.

காங்கிரஸுக்கு எதிரான மக்களின் மனநிலை ஊடகங்களின் காங்கிரஸ் ஆதரவுப் போக்கிற்கு கடிவாளமானது. அச்சு ஊடகமோ, தொலைக்காட்சி ஊடகமோ, இணையமோ, எதுவாயினும், பாஜக சார்பு நிலைப்பாட்டுக்கு மிகுந்த ஆதரவை மக்கள் வெளிப்படுத்தினர். மோடிக்கு ஆதரவான அலை தேசம் முழுவதும் பரவிவருவதை ஊடகம் உடனடியாகப் புரிந்துகொண்டு தன்னை மாற்றிக்கொள்ளத் துவங்கியது.

பாஜக-வின் ’இலக்கு272’
பாஜக-வின்  ‘இலக்கு272’

தவிர, சமூக வலைத்தளங்களான டிவிட்டர், ஃபேஸ்புக், மின்னஞ்சல் குழுமங்கள் போன்றவற்றில் மோடி ஆதரவாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். நரேந்திர மோடியே தனிப்பட்ட முரையில் டிவிட்டரைத் திறப்படக் கையாண்டார். அவரை டிவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியது. எந்த சமூக ஊடகத்திலும் பாஜக ஆதரவாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். அதன் எதிரொளி மரபான ஊடகங்களும் வெளிப்பட்டது.

ஊடகங்கள் தங்களைத் திருத்திக்கொண்டு செயல்பட்டதாலும், மக்களின் போக்கை உணர்ந்து செய்திகளை வழங்கியதாலும் தான்,  பாஜகவின் பிரசாரம் அனைத்து மக்களையும் சென்றுசேர்ந்தது. இதில் மோடி தலைமையிலான விளம்பரத் துறைக்கான அணி தனிப்பட்ட கவனம் செலுத்தியதும் குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் தான், இம்முறை கருத்துக் கணிப்புகள் திணிப்புகளாகாமல், உண்மையான நிலவரத்தைப் பிரதிபலித்தன.

5. தாய் அமைப்பின் வழிகாட்டுதல்:

இவை அனைத்திற்கும் மேலாக, எந்த விளம்பர வெளிச்சமும் இன்றி, எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் களப்பணியாற்றிய ஆர்எஸ்எஸ் அமைப்பும், அதன் பரிவார இயக்கங்களைச் சார்ந்தவர்களும் ஆற்றியுள்ள பெரும்பணி அளவிடற்கரியது. மோடியை முன்னிறுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை தய் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) தான் களைந்தது. கட்சியை கட்டுப்படுத்தியதிலும், தொகுதிவாரியாக தேர்தல் பணியை முறைப்படுத்தியதிலும் ஆர்எஸ்எஸ் ஆரவாரமின்றிப் பணியாற்றியது. அதன் விளைவே இந்தப் பெரும் வெற்றி.

இதுவரை ஆர்எஸ்எஸ் எந்தத் தேர்தல் களத்திலும் நேரடியாக அரசியல் பணியாற்றியதில்லை. 1977-ல் மட்டும் ஜனநாயகத்தை மீட்க சங்கம் தேர்தல் களத்தில் இறங்கி ஜனதாவை உருவாக்கப் பாடுபட்டது. அப்போதும்கூட தேர்தல் பணிகளில் நேரடியாக சங்கம் இந்த அளவிற்கு இறங்கியதில்லை. அதன்பிறகு இம்முறை தான், தேர்தலில் பாஜகவும் மோடியும் வெல்வதற்காக அதிதீவிரமாகக் களமாடியது. இப்போது வெல்லாவிட்டால் நாட்டை எப்போதும் காக்க இயலாது என்ற முடிவுடன், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சகோதரத்துவ இயக்கங்கள் துணிந்து இறங்கின.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உடன் நரேந்திர மோடி
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உடன் நரேந்திர மோடி

சங்கபரிவார் இயக்கங்கள் அனைத்தும் ஒரே குறிக்கோளுடன் தேர்தல் பணியாற்றியதும் இதுவே முதல்முறை. இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பிஎம்எஸ், கிசான் சங்கம், ஏபிவிபி, சுதேசி ஜாக்ரண் மன்ச் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும், ஊழல் மலிந்த காங்கிரஸ் அரசையும், பிரித்தாளும் அரசியலையும் முறியடிக்க தீவிரமான தேர்தல் பணியாற்றின.

தவிர, பாஜக தலைவர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துதல், தனிப்பட்ட  ‘ஈகோ’வால் ஏற்படும் உரசல்களைத் தடுத்தல், தேர்தல் களத்தில் திடீரெனெ உருவாகும் சிக்கல்களை எதிர்கொள்ளுதல், வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளையும் வேட்பாளர்களையும் இனம்காணுதல், கண்காணிப்பு போன்ற பணிகளிலும் ஆர்எஸ்எஸ் மிகவும் உறுதுணையாக இருந்தது.

அதுவும் சுயநல நாட்டம் மிகுந்த அரசியல்களத்தில் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களை இணைத்து, ஓரணியாகக் கொண்டுசெல்வது மிகவும் கடினமானது. அதை சங்கமே சாதித்தது. அர்ப்பணமயமான செயல்பாட்டின் முன்பு அனைவரும் கீழ்ப்படிவது இயல்பே. தேர்தலில் எதிர்பார்த்த பலன் கிடைத்தவுடன், அதன் பலன் மீது எந்த நாட்டமும் இன்றி வழக்கமான பணிகளுக்கு ஆர்எஸ்எஸ் திரும்பிவிட்டது.

-மேற்கண்ட பஞ்சதந்திர அணுகுமுறையே மோடியையும் பாஜகவையும் சிறப்பாக முன்னிலைப்படுத்தி, மகத்தான வெற்றியை ஈட்ட உதவி இருக்கின்றன.

இந்த வெற்றியைத் தடுக்க தேர்தல் களத்தில் யாரும் இதேபோன்ற ஆற்றலுடன் இருந்திருக்கவில்லை என்பது  முற்றிலும் உண்மை.

பாரதத்தை உயர்த்தும் பணி இப்போதுதான் துவங்கியுள்ளது என்பதும் உண்மை.

இந்த வெற்றி இனிதே தொடரட்டும்!

.

31 Replies to “மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!”

 1. மாபெரும் வெற்றி தொடரட்டும். ஒரு பேட்டியில் திரு மோடி இன்னும் 15/20 வருடங்களுக்கு பின் வாக்கு அளிக்க இருக்கும் தலைமுறை பற்றி குறிப்பிட்டு அப்போதும் அவர்கள் பா.ஜ.வுக்கு தான் வோட்டு அளிக்கும் படி ஆட்சி செய்ய வேண்டும் என்று முன்னோக்கு பார்வையுடன் பேசினார். உட்கட்சி குழப்பம் இன்றி திரு மோடியை ஆள விட்டால், இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பா.ஜவின் ஆட்சி தான்.

 2. வெற்றிக்குப் பின்புலம் பஞ்ச தந்த்ரம். நன்று. ஆனால் ஹிந்து ஹ்ருதய சாம்ராட் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பினைப் பற்றி மிகக்குறிப்பாக கேந்த்ர சர்க்கார் கவனமெடுக்கட்டும்.

  இந்த சமயத்தில் வலதுசாரி சக்திகளும் மற்றும் தேசத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்ற ஸ்ரீ லால்பஹாதூர் சாஸ்த்ரி போன்ற பெரியோர்களும் எப்படி தேசப்பிரிவினையில் ஊக்கமுள்ள காங்க்ரஸ் மற்றும் மேற்கத்திய சக்திகளால் அழித்தொழிக்கப்பட்டார்கள் என்பதையும் நினைவு கூறுதல் முக்யம்.

  1965 யுத்தத்திற்குப் பிறகு தாஷ்கண்டில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடச்சென்ற ஸ்ரீ லால் பஹாதூர் சாஸ்த்ரி அவர்களை கயமை மிகு கம்யூனிஸ சோவியத் சர்க்கார் விஷம் வைத்துக்கொன்றது.

  1947 தேசப்பிரிவினைக்குப் பிறகு குள்ளநரித்தனம் மிக காஷ்மீருக்குப் பண்டித நேரு தனி அந்தஸ்து கொடுத்து அந்த மாகாணத்தின் தலைவர்களை ஜனாதிபதி என்றும் ப்ரதமமந்த்ரி என்றும் அழைத்து அந்த மாகாணத்திற்காக தனிக்கொடி அளித்ததை மிகக் கடுமையாக எதிர்த்து அந்த மாகாணத்தின் தலைநகராகிய ஸ்ரீ நகருக்கே சென்று போராட்டம் நிகழ்த்திய பண்டித ஸ்ரீ ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களை பண்டித நேருவின் சர்க்கார் நரித்தனமாக கொலை செய்தது. இதை பகிரங்கமாக பொதுதளத்தில் அம்பலப்படுத்தி கண்டித்தவர் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய். இந்தக் கொலையை விசாரணை செய்யவும் இல்லை. மேலும் ஏக் தேஷ் மே தோ விதான் தோ ப்ரதான் ஔர் தோ நிஷான் நஹீன் சலேகா நஹீன் சலேகா (ஒரே தேசத்தில் இரண்டு சட்டம் இரண்டு தலைவர் இரண்டு கொடி செல்லுபடியாகாது ) என்று முழங்கி பண்டித நேருவின் சதியால் படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீ முகர்ஜி அவர்களின் உடல் ப்ரேத பரிசோதனைக்குக் கூட உட்படுத்தப்படவில்லை.

  இதற்குப்பின் மர்மமான முறையில் வாராணசிக்கு அருகில் உள்ள மொகல்சராய் ரயில்வே ஸ்டேஷனில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவர் பாரதீய ஜனசங்கத்தின் அத்யக்ஷகராக இருந்த ஸ்ரீ தீன் தயாள் உபாத்யாய் அவர்கள்.

  https://in.news.yahoo.com/modi-next-says-terror-accused-bhopal-court-121224059.html

  ஜிஹாதி சக்திகள் ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களை பயங்கரவாதம் மூலம் ஒழிக்க முனைவதாக ….. மேற்கண்ட தளத்தில் வந்துள்ள செய்தியை சர்க்காரி யந்த்ரங்கள் குறிப்பில் வைத்து ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் முறையாக எடுக்க வேண்டும்.

  மேற்கத்திய உலகம் தனக்கு எதிராக எழும் தலைவர்களையும் தனக்கு தலைவலியாக எழும் தலைவர்களையும் தீர்த்துக்கட்டுவது சாஸ்த்ரி அவர்களுடன் முடிந்த விஷயமில்லை.

  பாலஸ்தீனத்தின் அதிபரான ஜெனாப் யாஸீர் அராஃபத் அவர்களை மெதுவாக வதம் செய்யத்தக்க விஷம் மூலம் கொலை செய்தது மேற்கத்திய சக்திகள் என்பதும் நினைவு கூறத்தக்கது.

  மிகவும் பாவனமான இந்தக் கொண்டாட வேண்டிய தருணத்தில் இதை எழுத முனைவது மனதுக்கு கனம் அளிக்கிறது. ஆனால் யாஹூ செய்தியைப்பார்த்த பின்னர் மனது பதைத்தது என்பதும் இதற்கு முன்னாளைய சரித்ரம் நினைவுக்கு வந்ததையும் புறக்கணிக்க முடியாது.

  வெற்றிவேல் பெருமாள் தேசத்திற்கும் தேசத்தலைவர்களுக்கும் அருள்புரியட்டும்.

 3. 1) டிவி விவாத மேடைகளில் யாராவது “3 வது அணி” என்று சொன்னால் உடனே கம்யூனிஸ்ட் காரர்களுக்கு மூக்கின் மேல் கோபம் வரும்.அதை 3 வது அணி என்று சொல்லாதீர்கள். ம்தன்மை அணி என்று சொல்லுங்கள் என்று வாதாடுவார்கள். அந்த முதன்மை அணியின் கதாநாயகனுக்கு (கம்யூனிஸ்ட்) 9 இடம் கிடைத்துள்ளது.அது போதும். சொல்லபோனால் அதுவே ரொம்ப ஜாஸ்தி.
  2) டிவி விவாதங்களில் திமுக காரர்கள் “கலைஞர் விரல் காட்டும் நபர்தான் அங்கே பிரதமர்” என்று இறுமாப்போடு கர்ஜனை செய்தார்கள். இப்போது விரல் காட்டாமல் எதற்கு மடக்கி கொண்டார்? தேர்தலுக்கு முன் ஸ்டாலின் ஹீரோ இப்போ ஜீரோ(=0).
  3)மேடை தோறும் ஜெயா “அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் மத்தியில் அமையும்” என்றார். அதிமுக அங்கம் வகித்தால் அந்த அமைச்சரவைக்கு பெரும் பங்கம் (வாஜ்பாய்க்கு வந்தது போல) வந்துவிடும் என்று புத்திசாலி மக்கள் பிஜேபி க்கு தனி மெஜாரிட்டி தந்து ஜெயாவின் வாலை ஓட்ட நறுக்கி விட்டார்கள். இப்ப என்ன செய்வ? இப்ப என்ன செய்வ?
  4) எனக்கு அதிகாரம் கிடைக்குமானால் “மோடியை சிறையில் அடிப்பேன்” என்று ஜெயிலில் கொஞ்ச காலம் களி சாப்பிட்டுவிட்டு பையிலில் (bail ) வெளிவந்த ஒரு முண்டம் (லல்லு) பேசியது. இப்போது (இன்று பேப்பரில்) “மதசார்பற்ற சக்திகளை ஒன்று செர்க்கபோகிறேன்” என்கிறார். உங்கள் மதசார்பற்ற வார்த்தைகளை மக்கள் குப்பை கூடையில் தூக்கி எரிந்து உனக்கு வெறும் 3 (மூன்று) இடம் கொடுத்தான் இந்த லூசு பயலுக்கு புத்தி வரவே வராதா? இவனது தேங்காய் size தலையில் இருப்பதெல்லாம் வெறும் களிமண் தானா?
  5)காங்கிரஸ் தோல்வி ஆய்வுக்குரியது ஆனால் கவலைக்குரியதல்ல என்று ஞானதேசிகன் கூறுகிறார். ஒரு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவிற்கு படு தோல்வி கிடைத்துள்ளது. 20 மாநிலங்களில் ஒரு சீட்டு கூட கிடைக்கவில்லை.பெரிய தலைகள் எல்லாம் பணால் ஆகிவிட்டது. இது கவலைக்குரிய விஷயமில்லையாம். இவருக்கு என்ன ஞானமோ?
  6) பிஜேபி யின் மதவாத அரசியல் இனி எடுபடாது. அக்கட்சி இந்த தேர்தலில் பெருத்த தோல்வியையே சந்திக்கும் என்று பேசிய மாயாவதிக்கு மக்கள் கொடுத்த சீட்டு பெரிய வாத்து முட்டை. இப்போது (இன்று டிவி செய்தி) அதே நபர் “”காங்கிரேசை நாங்கள் வெளியிலிருந்து ஆதரித்ததால் மக்கள் அக்கட்சிக்கு தண்டனையை ஆதரித்த எங்களுக்கும் சேர்த்து கொடுத்து விட்டனர்”என்று கூறுகிறார். அப்பாடா! இப்போதாவது புத்தி வந்ததே! அனால் என்ன பயன்? இன்னும் 5 வருடம் பொறுக்கணும். அதுக்குள்ளே உனது கட்சி இருக்குமா?
  7) முன்னாள் தூங்கு மூஞ்சி பிரதமர் தேவ கௌடா 3 வது அணியில் சேர்ந்து இன்னொரு முறை பிரதமர் பதவியை அனுபவித்து விடலாம் என்று (தூங்கி கொண்டே) பகல் கனவு கண்டார். ஆனால் மக்கள் அவருக்கு கொடுத்தது வெறும் ரெண்டே சீட்டுதான். 0 சீட்டு கொடுத்திருக்க வேண்டும். மக்கள் போனாபோகட்டும் பெரிய மனுஷன் என்று 2 கொடுத்திருக்கிறார்கள்.
  8) பிரதமாவதற்கு எனக்குதான் முழு தகுதி உள்ளது என்று தற்பெருமையோடு கூறிய நித்திஷ் கதை நேற்றோடு finish ஆகிவிட்டது. ஆமாம் பிரதமாரக ஆசை பட்டவருக்கு முதல்வர் பதவியே close .
  9) சந்திரசேகர ராவ் (பொடி மூக்கன்) “நாங்கள் ஆதரித்தால் 3 வது அணியை ஆதரிப்போம். இல்லாவிட்டால் காங்கிரேசை ஆதரிப்போம் ஆனால்மொடியை மட்டும் எப்போதும் ஆதரிக்க மாட்டோம்” என்றார். “நீ எல்லாம் என்னையா அவரை ஆதரிப்பது. நாங்கள் (=மக்கள்) அவருக்கு தனி பெரும்பான்மை கொடுக்கிறோம் என்று கொடுத்தே விட்டார்கள். இப்போது எவன் மூஞ்சியிலும் ஈ ஆடவில்லை.
  10) இந்த பாழாய்ப்போன எடியூரப்பா ஒழுங்காய் ஆட்சி செய்திருந்தால் (மதிய பிரதேசம், சத்திஷ்கர் போல) இன்று கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி இருந்திருக்கும், குஜராத் போல அனைத்து சீட்டுகளையும் பிஜேபி கர்நாடகாவில் வேண்டிருக்கும். குட்டிசுவாராக ஆக்கிவிட்டார். இவருக்கு மோடி தப்பி தவறி கூட நல்ல போஸ்ட் கொடுக்க கூடாது. கொடுப்பதாக இருந்தால் ஒரு டம்மி போஸ்ட் கொடுங்கள்.
  11. பாவம் ஜஸ்வந்த் சிங் பிஜேபி கூறும் எதோ ஒரு இடத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கலாம். மந்திரி சபையில் இடம் கிடைத்திருக்கும். இப்போ தோல்வி தான் மிச்சம். எல்லாம் நேரம்பா நேரம்.
  12. டெலி சட்டசபைக்கு உடனடியாக தேர்தல் நடத்தவேண்டும் (இன்று செய்திபடி கேஜ்ரிவால் மீண்டும் அங்கே ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல்)
  13. பீகாரில் பிஜேபி ஆட்சியை உடன் நிறுவ வேண்டும். இல்லையெனில் இந்த புறா தலையன் (லல்லு) எதை வேண்டுமானாலும் செய்வான் ரொம்ப கிரிமினல் பேர்வழி.
  14. என்..ஜி.ஒ க்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் நிதியை உன்னிப்பாக கண்காணிக்கவேண்டும். பெரும்பாலான பணம் மதமாற்றத்திற்கு பயன்படுகிறது.
  15. சர்க்கரை ஆலைகளில் எத்தனாலை உற்பத்தி செய்து அதை பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தவேண்டும். அப்போது பெட்ரோல் இறக்குமதி குறையும். காங்கிரேசை போல பிஜேபி பெற்றோலை கண்டபடி ஏற்றாது என்றுனம்பிதான் மக்கள் பிஜேபி யை ஆதரித்து வாக்களித்தனர். அவர்களை ஏமாற்றாமல் இருக்க எத்தனாலை பெருமளவு பயன்படுத்தவேண்டும் அதுமட்டுமல்ல நஷ்டத்தில் இயங்கும் சர்க்கரை ஆலைகள் லாபத்தில் இயங்க தொடங்கும். செய்வார்களா?

 4. வணக்கம் திரு ஆனஸ்ட் மென் , பெரும்பாலான என் போன்ற மக்களின் எண்ணங்களை அப்படியே படம் பிடித்து சொற்களில் புகுந்து விளையாடி விட்டீர்கள் .வாழ்க .இந்த வலை தளத்தை என்னுடைய நண்பர்கள் பலருக்கும் பார்க்க படிக்க சொல்லி இருக்கிறேன் .பணி தொடரட்டும் .

 5. டீக்கடைக்காரர்கள் ஒருகாலத்திலும் பிரதமராக முடியாது என்ற காங்கிரஸ் தலைவர் ஒருவரின் ஆணவப் பேச்சையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தேநீர்க்கடைப் பிரசாரங்களை அவர் மேற்கொண்டார். நவீன சாதனங்களின் உதவியுன் அவர் மேற்கொண்ட காணொலிக் காட்சிகள் மூலமாக பல லட்சக் கணக்கான மக்களை ஆயிரக் கணக்கான நிகவுகள் மூலமாக எட்டினார்.

  இதுதான் மோடியின் சாதுர்யம்

 6. பல தெளிவான கருத்துக்களை தெளிவாகப் புட்டுப்புட்டு வைத்த திரு ஹானஸ்ட் மேன் அவர்களுக்கு நமது நன்றிகள்/ மற்றும் பாராட்டுக்கள். நமது மத்திய அரசு பெட்ரோல் இறக்குமதி செலவை குறைத்து, எதினால் கலந்த எரிபொருளை உடனே தயாரிக்க தீவிரமாக இறங்கவேண்டும்.

 7. பா.ஜ.கவின் வெற்றிக்கு வெளியல் இருந்து வேலை செய்தவர்கள் பலர். அவர்களுள் குறிப்பிட தகவர்கள் நால்வர். கொள்ளியர் கூடத்தின் சித்திரகுப்தன் சிதம்பரம், அனைத்தயும் ஞாயபடுதிய 2ஜீ ஊழல் பூஜியம் என்ற கபில் சிபல், நாக்கில் நரம்பே இல்லாமல் தனி நபர் வசை பாடிய திக் விஜய் சிங், என்ன பேசுகிறோம் என்ற தெரியாமல் உளறிய கோமான் சல்மான் ருஷ்டி .
  தங்கள் நா வன்மையால் எல்லோரயும் ஏமாற்ற நினைத்த இந்த நால்வர். இவை அனைத்திற்கும் மேலாக இவர்களை இயக்கிய சீமாட்டி குடும்பம்.

  இவர்கள் மக்களை ஏமாற்றுவதாக நினைத்துகொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிகொண்டவர்கள்.

  க.மாணிக்கத்தான்.

 8. அ.நீ. அவர்கள் எங்கே சென்றார் ? நாம் எல்லோரும் வெற்றிக் களிப்பில் உள்ளபோது அவரைக் காணவில்லையே !

 9. Congratulations Honest man.Keep on your good work which will arise the people from sleep..

 10. அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் கட்டுரைகள் நமது தளத்தில் சமீப காலமாக காணக்கிடைக்கவில்லை. முக்கிய தேர்தல் முடிந்துள்ள நிலையில் அவரது கருத்துக்கள் வெளிவரவில்லையே என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 11. மயிலாடுதுறையில் மண்ணை கவ்விய மணி சங்கர் “ஐயர்” என்ற திமிர் பிடித்த நபர் தேர்தலுக்கு முன் “தேநீர் விற்பவறேல்லாம் தேசத்தை ஆள ஆசைப்படக்கூடாது. வேண்டுமானால் மோடிக்கு நான் தேநீர் கடை வைத்து தர ஏற்பாடு செய்கிறேன்” என்று ஏளனம் செய்தார். இப்போது தேர்தல் முடிந்துவிட்டது. ” அய்யர்” தோற்றுவிட்டார். அவரது கட்சியும் தொற்றுவிட்டது.ஆட்சியை இழந்துவிட்டது இவர் தோற்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் இருக்கவே இருக்கு ராஜ்யசபா. அதன் மூலம் எதோ ஒரு மந்திரி ஆகிவிடலாம். அதற்கும் இப்போது வழி இல்லை. ஆகவே “”எங்க ஊரில் நிறைய கல்யாணம், கருமாதி நடக்கின்றன. மந்திரம் சொல்லி வயிற்ரை கழுவி பிழைக்கலாம். நான் உங்களுக்கு சிபாரிசு செய்து அதற்கு ஏற்பாடு செய்கிறேன்” அய்யரே! வருகிறீரா? இந்த எனது சொற்கள் உனது மனசை சுடுமே! இதே மாதிரிதானே மோடியின் மனசும் சுட்டுருக்கும். மற்றவர்களின் மனதை துன்புருத்தும்படி அனாவசியமாக பேசுவதுதான் ஒரு “அந்தணனுக்கு” அழகா? 1) திக் விஜய் சிங் 2) மனிஷ் திவாரி 3) பேனி வர்மா (UP ) 4) சல்மான் குர்ஷித் 5) கபில் சிபல் 6) மணி ஷங்கர் அய்யர் ஆகிய இவர்களை மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு காங்கிரேசை நேரு குடும்பத்தை அல்லாத வேறு யாரேனும் தலைமை தாங்கி நடத்தினால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் அப்படி இப்படி தட்டு தடுமாறி எழுந்து நிற்க வாய்ப்பு இருக்கும்.

 12. ஸ்ரீ சேக்கிழார் எழுதிய பஞ்ச தந்திரம் அருமை. எந்தை ஈசனுக்கு ஐந்து முகங்கள். அவ்வைந்து முகம்போல இந்த ஐந்தும் பரிமாணங்களாக இயங்கி. மானனீய ஸ்ரீ மோதிஜி அவர்களை பாரதப்பிரதமராக்கி உள்ளன. நேருவிய மாயத்தூக்கத்தில் இருந்து பாரத தேசம் விழித்து எழுந்திருக்கிறது. ஸ்ரீ ந மோ ஜி பாரதப்பிரதமராக வேண்டும் நம்பாரதம் தன்னுடைய மஹோன்னத நிலையை மீண்டும் அடையவேண்டும் என்று விரும்பிய அனைந்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். அதற்காக அல்லும் பகலும் பாடுபட்ட செயல்வீரர்களுக்கு பாராட்டுக்கள்.
  ஸ்ரீ சேக்கிழான் அவர்களுக்கும் தமிழ் ஹிந்துவில் எழுதுகிற கட்டுரையாளர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். மோடி என்று எழுதாதீர்கள். அவர் மோதி.
  மோதிவென்றவர். மோதி வெல்லப்படாதவர். அஜாதசத்ருவே இவர். வெல்க வெல்க பாரதம். தர்மம் ஓங்கட்டும்.

 13. இன்று ( 20.05.2014 ) பாராளுமன்றத்தில் திரு மோதி அவர்கள் பேசிய பேச்சு இது வரை யாரும் பேசி இருக்கமாட்டார்கள். எடுத்த எடுப்பிலேயே மற்ற கட்சிகளைத் திட்டாமல் பேசுவது என்பது நாம் இதுவரை கேட்காத காணாத ஒன்று. அனைவரும் ஒரு அடி எடுத்து வைத்தால் 125 கோடி அடிகள் … அருமை மிக அருமை.!! அரசு நடத்துவதில் மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை மிக நயமாகச் சொல்லி இருக்கின்றார். இவர் நீடூடி வாழ்க எல்லாம் வல்ல அன்னை காமாக்ஷி அருள் புரியட்டும்.

 14. Very good observation by “honest man”.
  kapil sibal got 1,75,000 votes in chadni chowk. but zero MPs from delhi.
  mani sankara iyer could not come out from his slavery mentality.
  He can become a “saundi”. I am not degrading their job. But mani is fit for that. .His service may be required for sonia congress party.
  Modi should be cautious about that saundi as he is friend of pakistan.
  We pray god, modi should live long and India should become a super power during his tenure.
  .

 15. தேர்தலுக்கு முந்திய சில நகைச்சுவை பேச்சுக்களை மீள்பார்வை செய்து மகிழ்வோமாக:-

  1. மூன்றாவது அணி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம்- திரு 15 நாள் அவர்கள்.

  2.மோடியை எதிர்க்க எல்லா கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.- திரு பேணி பிரசாத் வர்மா அவர்கள்.

  3. நரேந்திர மோடியின் வெற்றிக்கு நானே தடைக்கல்லாக உள்ளேன்.- திரு நிதீஷ் குமார் அவர்கள்

  4.நரேந்திர மோடி பிரதமர் ஆக முடியாது- டீ விற்கலாம்- திரு டூன் ஸ்கூல் அவர்கள்.

  5. மோடியை விரட்டுவேன் அல்லது அது முடியாவிட்டால் என் பெயர் லல்லு அல்ல. என் பெயரை மாற்றுவேன்- திரு லல்லு பிரசாத் யாதவ்.

  6. நரேந்திர மோடி பிரதமர் ஆனால் நான் கர்நாடகத்தை விட்டு ஓடுவேன் – திரு தேவ கவுடா அவர்கள் முன்னை நாள் இந்தியப்பிரதமர்.

  7. நான் வாரணாசி தொகுதி முழுவதையும் சுற்றிப்பார்த்து விட்டேன். மோடி நிச்சயம் இந்த தொகுதியில் தோற்கிறார். எனவே திரு மோடி அவர்கள் வதோதரா தொகுதியில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்- திரு அரவிந்த கேஜ்ரிவால் அவர்கள்.

 16. தமிழகத்துப் பத்திரிகை நண்பர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ? ஓரிரு பத்திரிகை தவிர , ஏனையவை – மோடிக்கு மொத்தம் 340 இடங்கள் கிடைக்கும் என்ற டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பை மூடி மறைத்தனர். தமிழகத்தில் ஏதோ ஆம் ஆத்மிக்கு ஏராளமான செல்வாக்கு இருப்பது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முனைந்தனர். அதுவும் கூடாங்குளம் திரு உதயகுமார் மற்றும் அவர்களின் கூட்டணியாகிய திரு புஷ்பராயன், ஆகியோர் கூட இந்த தேர்தலில் பெரிய ஒரு மாறுதலைக் கொண்டுவரப்போவதைப்போல ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்க சில 3-ஆம் அணி பத்திரிக்கையாளர்கள் முயற்சித்தனர். மக்கள் இந்த சதியை முறியடித்தனர்.

  2.PIL – புகழ் தென்சென்னை டிராபிக் இராமசாமி என்ற அன்பர் வழக்கம் போல , தமிழகத்தில் எல்லா தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்று ஒரு மனுவை நீதிமன்றத்தில் போட்டுள்ளார். இவரைப் போன்றவர்களை நினைத்து தலையில் தான் அடித்துக்கொள்ளவேண்டும். வழக்கம் போல டெபாசிட்டை பறிகொடுத்த இவர் சுய விளம்பரத்துக்காக மீண்டும் இதுபோல செய்கிறார். வாக்கு சீட்டுக்கு தலைக்கு 200 ரூபாய் முதல் 500 வரை பணம் கொடுப்பது நம் தமிழகத்தில் திருமங்கலம் பார்முலா என்ற பெயரில் அமுலாகி ஏறக்குறைய ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு எவ்வளவோ இடைத்தேர்தல்களில் பணம் வழக்கம் போல புகுந்து விளையாடியது. ஆனால் அதனை தடுக்குமாறு அப்போது இவர் அந்த இடைதேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று வழக்கு போட்டாரா என்று எனக்கு தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

  2011- சட்டசபைத் தேர்தலின் போதும் வாக்காளர்களுக்கு பணம் அள்ளி வீசப்பட்டது. அள்ளி வீசியவர்கள் வெற்றிபெறமுடியவில்லை. பணம் வாங்கிய வாக்காளர்கள் பணம் கொடுத்தவரை தோற்கடித்து விட்டனர். உண்மை என்னவெனில் பணம் கொடுத்து தமிழ் நாட்டில் யாரும் வெற்றிபெறமுடியாது. தங்களுக்கு பிடிக்காத கட்சியை , அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நம் மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு தோற்கடித்து விடுகிறார்கள்.

  இந்தியா முழுவதிலும் வீசிய மோடி பேரலை தமிழகத்தில் வீசாததற்கு காரணம் மோடி ஆதரவாளர்கள் அம்மாவின் கட்சிக்கு ஓட்டுப்போட்டதனால் தான். மோடி ஆதரவாளர்கள் முழுவதும் பாஜக கூட்டணிக்கு ஓட்டுப் போட்டிருந்தால் நிச்சயம் தமிழகத்தில் பாஜக அணிக்கு ஒரு ஐந்து இடமாவது கிடைத்திருக்கும். ஜெயாவின் அம்மா உணவகம், மலிவுவிலைக் குடிநீர்(10 ரூபாய்) , மாணவ செல்வங்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆகிய திட்டங்கள் மத்திய தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு திருப்தியை தந்துள்ளன. பால் விலை , மின்சார கட்டணம், பஸ் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளபோதிலும் , காங்கிரசின் மீதான வெறுப்பும், காங்கிரசின் சொம்புகள் மீதான வெறுப்பும், கோபமும், மக்களை அதிமுகவுக்கு ஓட்டுப் போடசெய்துவிட்டன. இதுதான் உண்மை.

  ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் தேர்தலுக்கு ஒருமாதம் முன்னர் நாங்கள் இந்தமுறை அம்மாவுக்கு ஓட்டுப்போடமாட்டோம். மீட்டர் இலவசமாகப் பொருத்துகிறோம் என்று சொல்லி, கொஞ்சம் பேருக்கு மட்டும் இலவச மீட்டர் பொருத்தி விட்டார்கள். இன்னமும் மீதிப்பேருக்கு இலவச மீட்டர் பொருத்தவில்லை. அந்த மீட்டரும் பல அடிக்கடி ரிப்பேர் ஆகிரதுங்க என்று சொல்லி வருத்தப்பட்டார்கள். ஆனால் தேர்தல் அன்று அம்மாவுக்கே ஓட்டுப் போட்டுவிட்டார்கள். ஏனப்பா இப்படி செய்தீர்கள் ? ஒரு மாதம் முன்னாடி சொன்னதுக்கும், இப்போது நீங்கள் செய்ததுக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, காங்கிரஸ் கார நாயிங்க மீண்டும் ஜெயிக்கக் கூடாதுங்க, அவுனுங்க மறுபடி வந்துவிட்டா, விலைவாசியும் மேலும் கூடும் , டூ ஜி , நிலக்கரி போல இன்னும் பல ஊழல் சகாப்தங்களும் தலை எடுக்கும். அந்த நாயிங்களை ஒழிக்கணும் என்றால் அம்மாவால் மட்டுமே முடியும் என்றார்கள்.

  இந்தியாவிலேயே காங்கிரசை ஒழிக்க பாஜகவை விட்டுவிட்டு மாநிலக்கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் தமிழ் நாடு, ஒரிசா, மேற்குவங்காளம், தெலுங்கானா ஆகிய நான்கு மாநில மக்கள் மட்டுமே. அதிலும் தமிழகத்தில் எம் ஜி ஆர் இறந்து இருபத்தேழு வருடம் ஆகியும் அவர் மீது அடித்தட்டு மக்களுக்கு இருக்கும் நல்ல அபிப்பிராயம் இன்னும் மாறவில்லை என்பது ஒரு அதிசயமாகத்தான் இருக்கிறது.

 17. ஜெயித்த 37 இடங்களை வைத்துக்கொண்டு நாக்கை வழிக்கவா ? தமிழக மக்கள் இன்னம் திராவிட மயக்கத்திலிருந்து விடுபடவில்லை என்பதை தான் இந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிமுக அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது திமுக என்றால் தமிழக மக்களிடம் தேசிய சிந்தனை மழுங்கிவிட்டது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த தமிழகமும் வங்கதேசமும் தேசியத்தை முன்நிறுத்தி சுதந்திரபோரில் ஈடுபட்டதோ இன்று அந்த சிந்தனை முற்றிலும் வரண்டுவிட்டது. டான்சி வழக்கில் அத்வானி காப்பாற்றியது போல் சொத்து குவிப்பு வழக்கில் மோதி அரசு உதவாமல் சட்டபடி நடக்க அனுமதிக்க வேண்டும்.

 18. கடவுளுக்கு நன்றி – பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கொடுத்ததற்காக .

  கடவுளுக்கு நன்றி – ஜெயலலிதா ஆதரவை நாடாமல் வைத்ததற்காக.
  கடவுளுக்கு நன்றி – பிரிவினை வாதி வை கோ தோற்றதிர்காக.

  திரு மோதி தன்னுடைய ஏற்புரையில், 2015 – 16 ஆண்டு தீன தயாள் நூற்றாண்டு என்று குறிப்பிட்டார்.

  தீன தயாள் வாழ்ந்து காட்டிய எளிமை இன்று பா ஜ க வில் இல்லை .
  டாம்பீகம் தேவைக்கு அதிகமாகவே உள்ளது .

  ஆரம்பமே உறுத்துகிறது . இவ்வளவு ஆடம்பரமான பதவியேற்பு விழா
  ஏன் தேவை ?

  எம்ஜியார் பாடல் நினைவிற்கு வருகின்றது :

  பதவி வரும் போது பணிவு வர வேண்டும்
  பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வெண்டும் தோழா

  செருக்கு அழித்து விடும். 2004 ஆண்டு ஏன் பாஜக தோற்றது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் – மக்களை விட்டு விலகியதால் தோற்கடிக்கப்பட்டனர் என்பதை மறக்கவே கூடாது .
  ஊடகங்கள் காட்டும் மாய வலையில் விழுந்து விடக் கூடாது .

  2019 தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி வருவதும் வராததும் பாஜக கையில்தான் உள்ளது.

 19. 1. பிஜேபி கூட்டணியில் “இந்திய ஜன நாயக கட்சி” என்றொரு கட்சி (அதன் தலைவர் பச்சமுத்து என்கிற பாரி வேந்தர்) இருந்தது. அவர்தான் “புதிய தலைமுறை என்ற டிவி சானலையும் புதிய தலைமுறை என்ற வார இதழையும் நடத்துகிறார். ஆனால் அவர் கூட்டணிக்கு விரோதமாக குறிப்பாக பிஜேபி க்கு விரோதமாக “நேருக்கு நேர்” என்ற நிகழ்ச்சியில் கண்ட கண்ட பசங்களை (அருணன், வீரபாண்டியன் விஜயதாரணி, பீட்டர் அல்போன்ஸ் போன்றோர்) கூப்பிட்டு எந்த அளவிற்கு பிஜேபி யை தாக்கி பேசமுடியுமோ அந்த அளவிற்கு பேச வைத்தார்கள் அப்புறம் எப்படி அவர் பெரம்பலூரில் ஜெயிக்க முடியும்? தோல்வி அவருக்கு நிச்சயம் வேண்டும்.

  2. மோடி பதவி ஏற்பு விழாவிற்கு தேவை இல்லாமல் எதற்கு சார்க் நாட்டு தலைவர்களை அழைக்க வேண்டும்? ரொம்ப தேவையா? இப்போது இலங்கை அதிபரை அழைத்தமைக்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பு குரல் ஓங்கியுள்ளது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். அது போல ஆரம்பரமே அமங்கலமாக உள்ளதே! எப்படி 5 ஆண்டுகளை ஓட்டுவது? பதவி ஏற்பு விழாவை மிக எளிமையாக முடித்து கொள்ள கூடாதா? இதை வைத்தே தமிழ்நாட்டில் சில ஜென்மங்கள் தங்களது ” எதிர்ப்பு தொழிலை” இப்போதிலிருந்தே தொடங்கிவிடுவார்கள். அதில் திக மற்றும் மனித நேய கட்சி காரங்களும் சேர்ந்து சந்தில் சிந்து பாட ஆரம்பித்து விடுவார்கள். நம்ம ஆட்கள் இது பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டார்களா? காங்கிரஸ் க்கு ஏற்பட்ட கதிதான் பிஜேபி க்கும் தமிழ்நாட்டில் ஏற்படவேண்டும் கங்கணம் கட்டிக்கொண்டு திரிவதேன்? எதையும் யோசித்து செய்யுங்கப்பா. உங்கள் தலை மீது நீங்களே மண்ணை வாரி போட்டு கொள்ளாதீர்கள்.

 20. இந்த தேர்தலில் அதிக பணப்புழக்கம் இருந்த தொகுதிகள் திமுகவின் முன்னை நாள் அமைச்சர் பெருமக்கள் திரு ஜெகத்ரட்சகன், திரு ஆ இராசா, திரு தயாநிதி மாறன், திரு டி ஆர் பாலு ஆகியோர் போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி, மத்திய சென்னை, மற்றும் தஞ்சாவூர் ஆகிய நாலு தொகுதிகள் தான். இந்த தொகுதிகளில் திமுகவினரின் படுதோல்வி நமக்கு புலப்படுத்தும் உண்மை என்னவெனில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு தங்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ அந்த வேட்பாளர்களுக்கு தான் தமிழக மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதுதான். பணம் கொடுத்து வெற்றிபெறமுடியாது என்பதற்கு மேலே கூறிய நாலு தொகுதிகளும் நல்ல உதாரணம். இனியாவது பணவிநியோகம் செய்தலை அரசியல் கட்சிகள் தவிர்ப்பார்களா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

 21. மதிப்பிற்குரிய திரு வேதம்கோபால் அவர்கள் கருத்திலிருந்து நான் முரண்படுகிறேன்.

  1.தமிழர்களாகிய நம் மக்களுக்கு என்றுமே திராவிட மயக்கம் இருந்ததில்லை.

  2.திமுக ஏழு எம் பி தொகுதிகளில் மூன்றாவது இடமும், இரண்டு தொகுதிகளில் நான்காவது இடமும் பெற்று , இரண்டு எம் பி தொகுதிகளில் ஜாமீன் தொகையை இழந்துள்ளது. மேலும் இரண்டாவது இடம் பெற்ற திமுக வேட்பாளருக்கும் , மூன்றாவது இடம் பெற்ற பாஜக கூட்டணி வேட்பாளருக்கும் ஆறு எம் பி தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிக குறைவு.

  3. முதல் இரு இடங்கள் எம் ஜி ஆர் கட்சிக்கும், கருணா அவர்களின் குடும்பக்கட்சிக்கும் மட்டுமே என்று இருந்த நிலை இந்த தேர்தலில் மாறி விட்டது. பிற கட்சிகள் பாஜக உட்பட கடந்த தேர்தல்களில் இந்த இரு கழகங்களின் கூட்டணிகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்துதான் வென்றனர். ஆனால் இந்த தேர்தலில் இந்த இரு முக்கிய கட்சிகளையும் புறக்கணித்து விட்டு அமைத்த கூட்டணி சுமார் 19 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டு இடங்களையும் வென்றுள்ளது. எனவே இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடத்தேவை இல்லை.

  4) உடையாத திமுக , அண்ணா அவர்கள் தலைமையில் 14 கட்சிக்கூட்டணியாகத்தான் . 1967-லே அன்றைய குல்லுக பட்டன் இராசாசி உதவியுடன் தேர்தலை சந்தித்தது. அப்போது திமுக வெற்றிபெற்றதற்கு திராவிட மயக்கம் காரணம் அல்ல.

  5) புகழ் பெற்ற திரைப்பட நடிகராய் அன்று இருந்த மக்கள் திலகம் எம் ஜி ஆரை , வில்லன் நடிகரும், திராவிடர் கழக பேச்சாளரும் ஆன திரு எம் ஆர் இராதா அவர்கள் துப்பாக்கியால் சுட்ட காரணத்தாலும், அந்த சமயம் 1967- பொது தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னர் என்பதாலும் , எம் ஜி ஆர் இராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் காயங்களுக்கு கட்டுப்போட்டுக்கொண்டு வார்டில் உள்ள படுக்கையில் படுத்திருக்கும் போட்டோவை , திமுகவினர் தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி நோட்டீஸ் அடித்து, மக்கள் திலகம் பரங்கிமலை பாரிவள்ளலை சுட்ட படுபாவிகளுக்கா உங்கள் ஓட்டு ? – என்று பிரச்சாரம் செய்தனர். அந்த 1967- தேர்தலில் திரு ஈவேரா அவர்களும், அவரது அடிப்பொடிகளும் காமராஜரின் காங்கிரசுக்கு ஆதரவாகவும், கண்ணீர்த்துளிகள் என்று பெரியாரால் வர்ணிக்கப்பட்ட திமுகவினருக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வந்தனர். எம் ஜி ஆர் சுடப்பட்டிருக்காவிட்டால் சுமார் 75 தொகுதிகளில் திமுகவுக்கு பதில் காங்கிரஸ் கூடுதலாக வெற்றிபெற்றிருக்கும்.இதுவே திமுக ஆட்சிக் கட்டில் ஏறியதுக்கு முக்கியக் காரணம். மூல காரணம் எம் ஆர் இராதா தான்.எனவே தமிழனுக்கு எம் ஜி ஆர் மேல் மயக்கம் என்பது உண்மையே தவிர , திராவிட மயக்கம் என்பது என்றும் இருந்ததில்லை. இந்த மயக்கத்தை சினிமா மயக்கம் என்று வகைப் படுத்தமுடியாது- ஏனெனில் அரசியலில் நுழைந்த மற்ற சினிமா நடிகர்கள் ஆன சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி இராஜேந்தர், வடிவேலு மற்றும் குஷ்பு ஆகியோர் வெற்றிபெறவில்லை. எனவே எம் ஜி ஆர் மீது உள்ள பாசம் மற்றும் மயக்கம் என்று மட்டுமே சொல்லலாமே தவிர, திராவிட மயக்கம் என்பது சரியல்ல. உண்மை என்ன என்றால் , பெரியார் கட்சியுடன் காமராஜர் கொண்ட கூடா நட்பு , அதிக கேடாக முடிந்தது. எனவே தான் பெருந்தலைவர் காமராஜரும் ஒரு மாணவனிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்க நேர்ந்தது. அந்த தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் தமிழகத்தில் எழுதிருக்கவே முடியவில்லை. எவன் முதுகிலாவது ஏறித்தான் சவாரி செய்தார்கள்.

  6 )இந்த உண்மையை பேரறிஞர் அண்ணா அவர்கள் தெரிந்து வைத்திருந்ததால் தான், எம் ஜி ஆர் தேர்தல் நிதி தர முன்வந்தபோது, இராமச்சந்திரா- நீ தேர்தல் நிதி தரவேண்டாம், உன் முகத்தை திமுக கூட்டங்களில் காட்டு நான் ஒவ்வொரு கூட்டத்திற்கும் 30,000 ஓட்டுவீதம் வாங்கிவிடுவேன் என்று கூறி மகிழ்ந்தார்.

  7) கடுமையான அரிசிப்பஞ்ச காலத்தில், ரேஷன் மூலம் அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வழங்க தவறிய மத்திய மற்றும் மாநில ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கொடுங்கோலர்களும், அன்றைய காங்கிரஸ் தோல்விக்கு ஒரு காரணம்.

  8) திராவிட மயக்கம் இருந்திருந்தால் தமிழன் எப்படி தேசவிரோத காங்கிரஸ் கட்சிக்கு 1971.1980,1984,1989,1991,2004, மற்றும் 2009 ஆகிய ஏழு தேர்தல்களில் வெற்றிபெற செய்திருப்பான் ? சினிமா நடிகர் எம் ஜி ஆர் திமுக -காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததாலும், அல்லது காங்கிரஸ் கூட்டணியில் எம் ஜி ஆரின் அதிமுக இருந்ததாலும் தான் காங்கிரஸ் பல முறை வெற்றி பெறமுடிந்தது. தமிழனுக்கு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கவும் முடியாது.2011- ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தண்ணீராக வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய ஆளுங்கட்சி படு தோல்வி அடைந்தது.

  9) இந்த 2014- பாராளுமன்ற தேர்தலிலும், வாக்காளர்களுக்கு அதிக பணம் வழங்கப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர்களின் தொகுதியான நீலகிரி, ஸ்ரீ பெரும்புதூர், மத்திய சென்னை, தஞ்சை ஆகிய தொகுதிகளில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அதுவும் மத்திய சென்னை தவிர மற்ற மூன்று தொகுதியிலும் வாக்கு வித்தியாசம் லட்சத்துக்கும் மேல்.மேலும் பணம் வாங்கிக்கொண்டாலும் மக்கள் முட்டாள்கள் அல்ல. பணத்தை வாங்கிக்கொண்டு தாங்கள் விரும்பும் கட்சிக்கோ அல்லது தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கோ மட்டுமே ஓட்டுப்போடுகிறார்கள் என்பது தெளிவாகி விட்டது. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள மீடியாக்களில் சிலரும், சில பத்திரிக்கைகளும் இந்த உண்மைகளை மூடி மறைக்கிறார்கள். நாமாவது உண்மைகளை சொல்லிவிடுவோம்.

  10) சமீபத்தில் நடந்த கர்நாடகம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த , அதே மக்கள் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி கொடுத்துள்ளனர். சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலை வித்தியாசப்படுத்தி, வாக்களிக்கும் போக்கும் நம் மக்களுடன் எப்போதும் உள்ளது. இதற்கும் தமிழன் தான் முன்னோடி. 1980-ஜனவரி பாராளுமன்ற தேர்தலில் சர்வாதிகாரப்பெய் இரத்தக்காட்டேரி இந்திராகாந்தி -கருணாநிதி கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த நம் மக்கள், அடுத்த 4 மாதம் கழித்து சட்டசபை தேர்தல் நடந்தபோது, மீண்டும் எம் ஜி ஆரை வெற்றிபெற செய்தனர். எனவே திராவிட மயக்கம் என்பது ஒரு பொய்த்தோற்றம். அது திமுகவினரால் திட்டமிட்டு செய்யப்பட பொய்ப் பிரச்சாரம் மட்டுமே. எம் ஜி ஆர் ஒரு திராவிடத்தலைவர் அல்ல. அவர் ஒரு முன்னாள் காங்கிரஸ்காரர். பின்னர் தான் திமுகவில் சேர்ந்தார். எம் ஜி ஆரை ஒரு சர்வ கட்சிப் பிரமுகர் என்று சொல்வதே பொருந்தும். ஏனெனில் எல்லா கட்சிகளை சேர்ந்தவர்களும் எம் ஜி ஆருக்கு ஓட்டுப்போட்டிருக்கிறார்கள். அவர் ஒரு அதிசயப்பிறவி என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். திராவிட மயக்கம் என்ற ஒன்று என்றும் இருந்தது கிடையாது. இனியும் அதற்கு எப்போதும் இடம் இல்லை.

 22. பணம் கொடுத்தாலும் தேர்தலில் ஜெயிக்கமுடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல மதசார்பின்மை என்ற (மடையர்களுக்கே உரிய ) மந்திர சொல்லை கூறி முஸ்லிம்களின் வோட்டுக்களை அப்படியே வாரிவிடலாம் என் நினைப்பது முட்டாள்தனமானது. போலி மதசார்பின்மை பேசி திரியும் சில கேடுகெட்ட ஜென்மங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமென்றால் வேலூர் பாராளுமன்றத்தில் வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகியவை முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளாகும். மேற்படி 3 பகுதிகளில் பிஜேபி வேட்பாளர் மற்றும் முஸ்லிம் லீக் வேட்பாளர் வாங்கிய வாகுகள் விவரத்தை பாப்போம்.

  1. வாணியம்பாடி —பிஜேபி வாங்கியது——- 54150—–லீக் வாங்கியது ————- 38760
  2. ஆம்பூர் ————–பிஜேபி வாங்கியது ——-44257 —-லீக் வாங்கியது—————39821
  3. வேலூர் ————-பிஜேபி வாங்கியது——–54911—-லீக் வாங்கியது—————-37777

  ஆகவே இனிமேலாவது காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் கட்சி, திமுக, திருமா கட்சி, லொள்ளு கட்சி. நிதிஷ் கட்சி ஆகியவை சும்மா 24 மணி நேரமும் செகிலரிசம் என்று உலரிகொண்டிர்ராமல் growth , development , progress என்று பேசுங்கள். அப்போதுதான் நாட்டின் GDP (Growth + development + Progress = GDP) உயரும். நாம் சொல்வதை சொல்வோம். அவை தங்களது புத்திகளை மாற்றி கொள்கிறதா என்று பார்ப்போம்.

 23. தமிழ் நாட்டில் மோடி அலை எல்லாம் ஒன்றும் இல்லை. அதிமுக நலத்திட்டங்கள் மக்கள் இடையே சென்று அடைந்த பலன் தேர்தலில் இமாலய வெற்றி அதிமுகவுக்கு கிடைத்தது. தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெறுவது சாதாரமானது இல்லை. காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று அவர் சொன்ன படியே, காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. நல்ல ஆன்மிகவாதி முதல்வர் பெற்ற வெற்றியைப் பாராட்டுவோம். பிராமணர்கள் மற்றும் இந்து மதத்தை கேவலபடுத்திய, போலி மதச்சார்பின்மை பேசி, நோன்புக் கஞ்சி சாப்பிடும் திமுக கும்பல் அழிந்தது. ….இந்து மத விரோதிகள் கனவு மண்ணோடு மண்ணாக போய் விட்டது! மதமாற்ற தடுப்பு சட்டம், பொது சிவில் சட்டம், அயோத்தியில் ஸ்ரீ ராமர் திருக்கோயில் ஆகியவற்றை மோடி நிறைவேற்ற வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

  (edited)

 24. டூ ஜியில் ஊழல் ஒன்றும் இல்லை. அரசுக்கு நஷ்டம் எதுவும் இல்லை அரசுக்கு சிறிது லாபம் கூட வந்துள்ளது என்று பொய்களை மட்டுமே சொல்லித்திரிந்த மத்திய அமைச்சர் திரு கபில் சிபல் அவர்கள் இந்த தேர்தலில் 176206 ஓட்டு வாங்கி டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் மூன்றாவது இடம் பிடித்து தோல்வியுற்றார். டூ ஜி ஊழலில் அரசுக்கு சுமார் 176000 கோடிரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று தணிக்கை அறிக்கை தெரிவித்தது என்று பத்திரிகைகளில் படித்தோம். கபில்சிபலும் , என்ன ஒற்றுமை பாருங்கள் ,176206 ஓட்டு வாங்கி தோற்றுப்போனார்.

  ELECTION COMMISSION OF INDIA
  GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014

  NCT OF Delhi – CHANDNI CHOWK
  Result Declared
  Candidate Party Votes

  DR. HARSH VARDHAN Bharatiya Janata Party 437938
  ASHUTOSH Aam Aadmi Party 301618
  KAPIL SIBAL Indian National Congress 176206

  இது ஒரு அபூர்வமான நிகழ்வு.

 25. காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான தேசீயவாதக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் முடிவு பற்றிக் கருத்துக்கூறிய நண்பர் மாலிக் என்பவர் ஒரு உண்மையை அப்பட்டமாக சொல்லிவிட்டார். மோடியும், பாஜக கூட்டணி பேச்சாளர்களும் அந்த அந்த மாநில மக்களுக்கு புரிந்த மொழியில் பேசினார்கள். ஆனால் பசி, மற்றும் பல காங்கிரஸ் பேச்சாளர்கள் ஆங்கிலத்தில் பேசி, பொதுமக்களுக்கு புரியாதபடி செய்துவிட்டனர். காங்கிரஸ் தோற்றதுக்கு இதுவும் ஒரு உண்மைக்காரணம் என்று சொல்லியுள்ளார். ஆனால் அவரது கருத்து ஏற்கக் கூடியது அல்ல. புரியும் மொழியில் பேசினால் காங்கிரஸ் எல்லா இடங்களிலும் தோற்றுப்போகும் என்பதால், புரியாத மொழியான ஆங்கிலத்தில் பேசுவது குறைந்த பாதிப்பையே தரும் என்ற உண்மையை அவர் புரிந்துகொள்ளவில்லை. ஆங்கிலத்தில் பேசியதால் 44 இடமாவது ஏமாந்தவர்கள் ஓட்டில் கிடைத்தது. ஹிந்தியிலும் மற்ற மக்கள் பேசும் மொழியிலும் பேசி ஓட்டுக்கேட்டிருந்தால், காங்கிரசைப் பற்றிய உண்மை புரிந்து இந்தியா முழுவதும் பெரிய சுழி- சைபர் – தொகுதிகள் தான் கிடைத்திருக்கும். எனவே தான் பசி போன்றோர் ஆங்கிலத்தில் பேசி காங்கிரசு கட்சி சைபர் ஆகாமல் காப்பாற்றினர்.

 26. Ms அத்விகா அவர்களின் 21-5-2014 தேதியிட்ட மறுமொழியின் தொடர்ச்சியாக என்னது சில points ஐ இங்கே கூற விரும்புகிறேன்.

  8. மோடி பிரதமாரானால் நான் சந்நியாசி ஆக ஆவேன் —- தேவ கௌடா
  9. மோடி பிரதமரானால் நான் மொட்டை போடுகிறேன் — மனுஷியபுத்திரன் @ சாகுல் ஹமீது இவர் சீக்கிரம் மொட்டையடித்து தன கண்களை மறைக்கும் கரடி முடியை அகற்றினால் எதிரில் வரும் ஆட்கள் நன்றாக கண்ணுக்கு தெரியும்.
  10.மோடி பிரதமாரானால் நாட்டை விட்டே ஓடிவிடுகிறேன் –அனந்தமூர்த்தி என்ற உதவாக்காரை எழுத்தாளர்.(கர்நாடகா)
  11. மோடி பிரதமரானால் நான் நாட்டை விட்டு ஓடிவிடுகிறேன் — ஒரு முஸ்லிமை மணந்துகொண்ட சமூக சேவகி என்ற பெயரில் உலவும் குஜராத்தை சேர்ந்த டீஸ்டா செதல்வாட் (இந்து)
  12. வாரணாசியில் ஆடாத ஆட்டமாடிய பைத்தியகாரன் (= AAP ) கேஜ்ரிவால் வாங்கிய வாக்குகள் எவ்வளவு தெரியுமா? 24600 (இவர் நின்றது முனிசிபல் கவுன்சிலர் தேர்தல் அல்ல. பாராளுமன்ற தேர்தல் என்பதை நினைவில் வைத்து படியுங்கள்.) இன்னொரு ஆள் (காங்கிரஸ்) வாங்கியது 10600 மட்டுமே. ரோஷமிருந்தால் இவர்கள் இருவரும் நாக்கை பிடுங்கி சாகலாம். ஆனால் பிடுங்கும்போது கை எச்சில் ஆகிவிடுமே என்று பயபடுகிறார்கள்.

 27. அன்புள்ள திரு Honestman ,

  Uttar Pradesh – Varanasi
  Result Declared
  Candidate Party Votes
  NARENDRA MODI Bharatiya Janata Party 581022
  ARVIND KEJRIWAL Aam Aadmi Party 209238
  AJAY RAI Indian National Congress 75614
  VIJAY PRAKASH JAISAWAL Bahujan Samaj Party 60579
  KAILASH CHAURASIYA Samajwadi Party 45291

  தங்கள் கடிதத்தில் வரிசை எண்.12 இல் உள்ள புள்ளிவிவரங்கள் மேற்கண்டவாறு திருத்தப்படவேண்டும்.

 28. எண்ணிலடங்க ஹிந்து அமைப்பு சார்பாக எண்ணிலடங்க தொண்டர்கள் ஒரு தலைமையின் கீழ் வெற்றி பெற்று இமாலாய வெற்றி பெற்று இருக்கிறோம் ,,, இதனை தொடர்து தக்க வைக்க வேண்டும் ,,, சாதனையால் ,,,, பிரிந்தவர் ,,, திருந்தி வர நம் சமுதாயம் சீர் செய்யவும் வேண்டும்ம் ,,,, உலகில் இனி எந்த ஒரு ஹிந்துவும் பாதித்தால் நாம் குரல் கொடுக்க வேண்டும் ,
  -பழமை மாறாமல் புதிய வரவேற்று எப்போதும் ஹிந்து சமுதாயம் சிரஞ்சீவியாக உலகின் குருவாக பாரதம் திகழ ஸ்ரீ.மோடி ஜி அவர்கள் திட்டம் இட்டு இயங்க பாரத தாயை வேண்டுகிறேன் ,,, இனியும் மலேசியா , லங்கா , பாக் , உலகில் எங்கும் பாதிக்க கூடாது ,,,,,,,

 29. காங்கிரஸ் இந்த தோல்விக்கு பின்னர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். சுயம் இருந்தால் அல்லவா பரிசோதனை செய்துகொள்ள முடியும் ?

  1. மாட்டு தீவனம் லல்லுவுடன் பீகாரில் காங்கிரஸ் கூட்டு சேர்ந்தபோதே , சோனியா காங்கிரசுக்கு முடிவுரை எழுதிவிட்டார்.

  2. காங்கிரஸ் கூட்டணியை விட்டு திமுக விலகிய பின்னர் நடந்த ராஜ்யசபை தேர்தலில் திமுக தலைவரின் சிறிய மகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தபோதே காங்கிரஸ் தலைமைகள் தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு சங்கு ஊதி விட்டனர் .

  3. காங்கிரசுக்கு சிறிதாவது சொரணையோ, புத்திசாலித்தனமோ இருந்திருந்தால் விஜயகாந்த் கட்சி வேட்பாளருக்கு அந்த ராஜ்ய சபை தேர்தலில் ஆதரவு கொடுத்திருப்பார்கள். திமுக வேட்பாளர் தோற்று , விஜயகாந்த் கட்சிக்கு ஒரு எம் பி கிடைத்திருப்பார். மேலும் லோக்சபை தேர்தலில் காங்கிரசும் , விஜயகாந்தும் கூட்டணி அமைத்துப் போட்டி போட ஒரு வழி ஏற்பட்டு இருக்கும். அப்படி ஒரு தேமுதிக கூட்டணி காங்கிரசுக்கு கிடைத்திருந்தாலும் காங்கிரசுக் கூட்டணி ஒரு இடமும் ஜெயிக்காது. ஆனால் இப்படி 38 தொகுதி டெபாசிட் போனதற்கு பதிலாக 20 தொகுதிகளில் மட்டுமே டெபாசிட் போய், ஒரு பதினெட்டு தொகுதிகளில் டெபாசிட் திரும்ப கிடைத்திருக்கும். காங்கிரசார் அந்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டனர்.

  4. இப்போது கனிக்கு எதிராக நடக்கும் டூ ஜி வழக்கில், அந்த அம்மாவுக்கு தண்டனை கிடைத்துவிட்டால் என்ன ஆகும் என்று யோசித்தால், அந்த அம்மாவின் பதவி ,அதாவது எம் பி பதவி பறிபோகும். அந்த இடத்துக்கு மீண்டும் ஒரு தேர்தல் நடக்கும் போது, சட்டசபையில் அதிமுகவுக்கு பெரும் மெஜாரிட்டி இருப்பதால் அந்த ராஜ்யசபை எம் பி பதவி எம் ஜி ஆர் கட்சிக்கு போய்விடும். இதெல்லாம் தேவைதானா ? காங்கிரசாருக்கு விநாசகாலே விபரீத புத்தி என்று நடந்து கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *