மோடி பிரதமரானால் யாருக்கெல்லாம் ஆப்பு?

மோடி பிரதமரானால் யாருக்கெல்லாம் ஆப்பு?

1) அதிகாரிகள்:

இதுநாள் வரை எந்த வேலையும் செய்யாமல் அரசியல் தலைவர்களுக்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்த அதிகாரிகளுக்குத்தான் முதல் ஆப்பு. அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை. எங்கே, எப்படி எந்த திட்டத்தில் கொள்ளையடிக்கலாம் என்று அரசியல்வாதிகளுக்கு கோடிட்டுக் காட்டுபவர்களே இந்த அதிகாரிகள்தான். பல அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யத் தயங்குவதில்லை. கோப்புகளைப் பார்க்காமல், மக்களின் தேவைகளை இழுத்தடிப்பு செய்து உல்லாச வாழ்க்கை அனுபவித்த அதிகாரிகளுக்குத்தான் முதல் ஆப்பு. இனிமேல் அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சால்ஜாப்பு சொல்லமுடியாது. முன்பு மாதிரி எடுத்ததெற்கெல்லாம் கை நீட்ட முடியாது.

2) அரசியல் புரோக்கர்கள்/அரசியல் ஆதரவு தேடித் தருபவர்கள் (Lobbyists):

அரசாங்கத்திற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பாலமாக இருக்கும் இந்த புரோக்கர்கள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. எந்த நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் ஒப்பந்தம் வழங்கவேண்டும், யாருக்கு வழங்கக்கூடாது என்பதிலிருந்து அனைத்து விவகாரங்களையும்தான் இந்த புரோக்கர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வர்த்தக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் ஏதாவது லைசன்ஸ் வாங்க வேண்டுமென்றால் இந்த புரோக்கர்களைத்தான் அணுகுகிறார்கள். புதிதாக பதவி ஏற்கவிருக்கும் மந்திரி சபையில் யார் எந்தத் துறைக்கு மந்திரியாகவேண்டும் என்பது முதற்கொண்டு இந்த புரோக்கர்கள் தீர்மானிக்கின்றனர். 2 ஜி விவகாரத்தில் நீரா ராடியவின் பங்கு இதற்கு ஒரு நல்ல உதாரணம். இந்த அரசியல் புரோக்கர்களை முற்றிலும் ஒழிக்க முடியாது, ஆனால் கட்டுப்படுத்தப்படுவார்கள்.

3) ஊழல் புரிந்த அரசியல்வாதிகள்:

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களை ஒன்றும் செய்வதில்லை. பேருக்கு வழக்கு நடக்கும். வழக்கு முடிவதற்குள், ஒன்று அந்த ஊழல் அரசியல் தலைவர்கள் இறந்து விடுவார்கள் அல்லது அவர்கள் செய்த ஊழலை விட பெரிய ஊழல்கள் நடந்தேறி மக்கள் மனதில் இவர்கள் செய்த ஊழல்கள் எல்லாம் மறைந்துவிடும். ஆனால் இம்முறை அதற்கு சாத்தியமே இல்லை. உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப ஊழல் அரசியல் தலைவர்கள் மீது சட்டமும், விசாரணையும் முடுக்கி விடப்படும். நீதிமன்ற தீர்ப்புகள் வருவதற்கான காலதாமதங்கள் சரி செய்யப்படும்.

4) தீவிரவாதிகளும், அவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களும்:

இதுநாள் வரை இந்தியாவில் புகுந்து எந்த நாச வேலை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்திருந்த தீவிரவாத இயக்கங்களுக்கு பலத்த அடி விழும். அவர்கள் நாட்டிற்குள் நுழையும் முன்பே அவர்களது கதை முடிக்கப்படும். உளவுத்துறை புதிய பரிமாணத்தை எட்டும். தீவிரவாத தாக்குதல்களைத் தடுக்கும் சிறப்புப் படைகள் பல உருவாக்கப்படும். தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தரும் உள்ளூர் ஆசாமிகளுக்கென புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கும் அவர்களது விசுவாசிகளுக்கும் கால தாமதமின்றி தண்டனைகள் நிறைவேற்றப்படும். தீஸ்தா செத்தல்வாட், மல்லிகா சாராபாய், அருந்ததி ராய், பிரிவினை பேசும் பிரஷாந்த் பூஷன், அக்பருதின் உவைசி , தாவுத் இப்ராகிம் ஆகியோருக்கெல்லாம் ஆப்பு நிச்சயம்.

Modi_kite_3

5) மாவோயிஸ்டுகள்:

இந்தியாவில் இவர்களது ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை. இவர்கள் யார், யாருக்காக செயல்படுகிறார்கள்? எங்கிருந்து இவர்களுக்கு பணம் மற்றும் ஆயுதங்கள் வருகிறது என்று அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தாலும் இதுவரை எந்த அரசாங்கமும் இவர்கள் மீது சரியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் உள்நாட்டில் செயல்படும் கம்யூனிஸ்டுகள். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அடுத்த நிமிடம் மனித உரிமை மீறல் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். பத்திரிக்கைகளில் கண்களை கசக்க வைக்கும் கட்டுரைகளை (கட்டுக் கதைகளை) எழுதுவார்கள். போராட்டம் நடத்துவார்கள். அரசியல் மட்டத்திலேயே அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முறியடிப்பார்கள். அரசியல் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றால் தங்களுடைய தோழர்களை அல்லது தோழமை இயக்கங்களை வைத்து அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்வார்கள். மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தந்த டாக்டர் பினாயக் சென்னைக் காப்பாற்ற இவர்கள் செய்த முயற்சி நாடறிந்தது. நாட்டிற்கு எதிராக சதி செய்த குற்றத்தில் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட பினாயக் சென் இப்பொழுது நாட்டின் திட்டக் குழு உறுப்பினர். இனி இவையெல்லாம் மாறிவிடும். இராணுவம் வரவழைக்கப்பட்டு மவோயிஸ்டுகளின் கொட்டம் ஒடுக்கப்படும் அல்லது முற்றிலுமாக முடித்து வைக்கப்படும். இடதுசாரிகள் மனித உரிமை மீறல் என்று கதறினாலும் ஒன்றும் நடக்காது. நாட்டிற்கு துரோகம் செய்பவர்கள் இனம் கண்டுகொள்ளப்பட்டு களை எடுக்கப்படுவார்கள்.

6) சி.பி.ஐ:

இதுவரை ஆளும் கட்சியின் கூண்டுக் கிளியாக செயல்பட்ட சி.பி.ஐ அதன் கூண்டில் இருந்து விடுவிக்கப்படும். இதுநாள் வரை ஆளும் கட்சிக்கு கைப்பாவையாக செயல்பட்ட சி.பி.ஐ இனி சுதந்திரமாக செயல்படும். ஆட்சியாளர்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து அவர்கள் எதிரிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும். அதேபோல் ஆட்சியாளர்களின் கட்டளையின் பேரில் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவிட்ட விவகாரங்களெல்லாம் கிளரப்படும். பதவியை துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் எல்லாம் வருந்த வேண்டிய காலம் தொடங்கிவிட்டது. நேர்மையாக உழைத்த அதிகாரிகளெல்லாம் மகிழ்ச்சி அடைவர். நேர்மையான அதிகாரிகள் மோசமாக செயல்பட்ட அதிகாரிகளை காட்டிப்கொடுப்பர், அவர்களுக்கு எதிராகவும் சாட்சியம் அளிப்பர்.

7) ஊடகத்துறை மற்றும் செய்தி நிறுவனங்கள்:

என்ன ஆட்டம் போட்டார்கள் இவர்கள். இந்திய ஜனநாயகத்தின் ஐந்தாதவது தூண் என்று பறைசாற்றிக்கொண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்களில் முதன்மையானவர்கள் இந்த ஊடகத்துறையினர். அரசியல் அமைப்புச் சட்டம் தங்களுக்கு கொடுத்த கருத்து சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்த அரக்கர்கள். உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டவர்கள். காசுக்காக எதையும் செய்து வந்த எத்தகர்கள். தங்களுக்கு வேண்டியவர்களைப் பற்றி உயர்வாகவும், வேண்டாதவர்களைப்பற்றி இழிவான செய்திகளையும் பரப்பி வந்த இழிபிறவிகள். மற்ற அனைவரையும் விட இவர்களுக்குத்தான் பெரிய ஆப்பு காத்துக் கிடக்கிறது. ஊடகத்துறை, புது சட்டம் கொண்டுவரப்பட்டு கட்டுபடுத்தப்படும். ஊடகத்துறைக்கு வரும் நிதி உதவிகள் கண்காணிக்கப்படும். இதுகாரும் ஊடகத்துறையில் தருண் தேஜ்பால் போல் தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டவர்கள், ஈபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

8) என்.ஜி.ஓக்கள் (NGOs):

கஷ்டத்திலிருப்பவர்களுக்கும், நலிவடைந்தவர்களுக்கும் உதவி செய்கிறேன் என்ற பெயரில் கோடிக்கணக்கான வெளிநாட்டு பண உதவிகளை வைத்துக்கொண்டு மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களெல்லாம் இனி கடையை மூட வேண்டியதுதான். குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மதமாற்று தடைச் சட்டம் இனி தேசிய அளவில் கொண்டுவரப்படும். என்.ஜி.ஓக்களின் பண புழக்கங்கள், பட்டுவாடாக்கள் மேற்பார்வை இடப்படும். இவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பண உதவிகள், புதிய சட்டங்கள் மூலம் தீவிரமாக கட்டுப்படுத்தப்படும்.

9) நலிந்த அரசு பொது நிறுவனங்கள்:

நஷ்டத்தில் இயங்கும் பொதுநிறுவனங்களெல்லாம் இழுத்து மூடப்படும். இதுநாள் வரை பொது நிறுவனங்கள் நலிவுற்று நஷ்டத்தில் ஓடினாலும் அவற்றை மூடாமல் அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் போராட்டத்திற்கும், யூனியனிற்கும் அஞ்சி பல நிறுவனங்களை அரசு நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருக்கிறது. பெருவாரியான அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தியே ஆகவில்லை என்றாலும் அரசாங்கம் சம்பளம் முதற்கொண்டு ஏனைய காரணங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு வந்திருக்கிறது. இனிமேல் இத்தகைய நிறுவனங்கள் மூடப்படும் அல்லது தனியார் வசம் கொடுக்கப்படும். இந்தியாவில் விமான சேவை செய்யும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா எடுத்துகொள்ள முன்பே விருப்பம் தெரிவித்திருக்கிறார். தொடக்கத்தில் ஏர் இந்தியா தோற்றுவித்ததே டாட்டா குழுமம்தான். இலாபம் ஈட்டக்கூடிய அல்லது அரசாங்கத்திற்கு முக்கியம் என்று கருதப்படுகின்ற நிறுவனங்களின் நிர்வாகிகளெல்லாம் மாற்றப்படுவர். இவை தவிர பெட்ரோலியத் துறை, இன்சூரன்ஸ் துறை சீரமைக்கப்படும். எண்ணெய் விலைகளின் ஏற்ற, இறக்கங்களை சமன் செய்ய புது யுக்திகள், கொள்கைகள் கொண்டுவரப்படும்.

10) காங்கிரஸ் கட்சி:

செத்த பாம்பை ஏன் அடிப்பேன் என்று மோடி இக்கட்சித் தலைவர்களை விட்டுவிடலாம் அல்லது வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றா பழமொழிக்கு ஏற்ப இவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் அவசர நிலைக்குப் பிறகு ஏற்பட்ட ஜனத்தா கட்சி செய்த தவறை மோடி செய்யமாட்டார் என்று உறுதியாக நம்பலாம். அவசர நிலைக்குப் பிறகு இந்திரா காந்தியை பழி வாங்குகிறேன் என்று மக்கள் மத்தியில் இந்திரா காந்திக்கு அனுதாபத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர் ஜனத்தா கட்சியினர். அதேபோல் வாஜ்பாய் அரசு காங்கிரஸ்காரர்களின் அடாவடித்தனத்தை கண்டுகொள்ளாமல் இருந்தது போல் இருக்கவும் மாட்டார் மோடி. இன்னும் சொல்லப்போனால் வாஜ்பாய் அரசு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அவரது மகன் ராகுல் காந்திக்கும் நிறைய உதவிகளை செய்திருக்கிறது. 2001 ஆம் ஆண்டு ராகுல் காந்தியும் அவரது பெண் தோழியுமான விரோனிக் என்பவரும் அமெரிக்க நாட்டில் சட்ட விரோதமாக 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் இத்தாலி பாஸ்போர்ட் வைத்திருந்ததால் அமெரிக்க ஊஆஐ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். ராகுல் காந்தி மீது ஊஐகீ பதிவு செய்யப்பட்டது. அவர் மீது விசாரணை தொடங்குவதற்கு முன், இந்திய அரசாங்கம் அதிக அழுத்தம் கொடுத்து (இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான சுமூகமான உறவு பாதிக்கும் என்றளவிற்கு) ராகுல் காந்தியின் மீதான வழக்கை திரும்பப் பெறச் செய்தது. மோடி அந்தளவிற்கு தாராள குணம் படைத்தவர் அல்ல. பிரச்சனை என்றால் வலிய சென்று சோனியா குடும்பத்தைக் காப்பாற்ற மாட்டார். அதேபோல் ராபர்ட் வதேராவையும் சும்மா விடமாட்டார்.

பி.கு: இது இணையத்தில் ஆங்கிலத்தில் வந்த ஒரு பதிவின் (கிட்டத்தட்ட) மொழி பெயர்ப்பு.

கட்டுரை ஆசிரியர் எஸ்.பி.சொக்கலிங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார்.காப்புரிமை – அறிவுசார் சொத்துரிமை (தமிழக அரசால் 2010ன் சிறந்த புத்தகமாக தேர்ந்தெடுக்கப் பட்டது),மதுரை சுல்தான்கள் (வரலாறு), பிரபல கொலை வழக்குகள் (இந்தியாவில் 20ம் நூற்றாண்டில் நடந்த பிரபல கொலை வழக்குகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் பற்றியது), நரேந்திர மோடி ஆகிய  நூல்களை எழுதியுள்ளார்.  தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் எழுதி வருகிறார்.

33 Replies to “மோடி பிரதமரானால் யாருக்கெல்லாம் ஆப்பு?”

 1. விஜயவாணி தளத்தில் ஸ்ரீமான் அருண் ஸ்ரீவாஸ்தவா அவர்களது வ்யாசம்.

  வாசிக்காதவர்கள் அவச்யம் வாசிக்கவும்

  https://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=3188

  ஹிந்துஸ்தானத்துக்கு எதிரான சதியில் — WCC — Western Crime Conglomerate — என்று ஹிந்துஸ்தானத்துக்கு எதிராக செயல்படும் விதேச குழுமங்களைப் பற்றியும் இந்த குழுமங்கள் ஹிந்துஸ்தானத்தில் இயங்கும் ஐந்தாம்படைகளுடன் கைகோர்த்து செயல்படும் கந்தறகோளாதிகளையும் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

  ஐந்தாம் படைகளின் மீது சந்தேஹப்படுவது Conspiracy theory — ப்ஸ் ப்ஸ் என்று ஒதுங்குபவர்கள் ஒதுங்கலாம்.

  சர்க்கார் ஒதுங்கக்கூடாது.

  நக்ஸடார்க்கிலிருந்து நக்ஸலைட்டாக ஆகி பின்னர் நக்கிலைட்டாக பரிணாமம் எடுத்து நக்கலைட்டாக குத்தாட்டம் போட்டுவரும் என — செல்லமாக நண்பர் ஸ்ரீ ஒத்திசைவு ராமசாமி குறிப்பிடும் — ஜ்யாமெட்ரிக் ப்ராக்ரஷனில் பரிணாமிக்கும் — மாவோ கும்பல்களிலிருந்து………. ஜோல்னாப்பை கம்யூனிஸ்ட் கண்மணிகள், தர்ணா செய்வதே தலையாய கடமை என்று செயல்பட துவங்கியிருக்கும் ஆப்பு கட்சி, அஜ்மல் கசாப், அஃப்சல் குரு — இத்யாதி மிருகங்களுக்கு பிரியாணி கொடுப்பதற்காக வேண்டி மனித உரிமை கூச்சலிடும் குளுவான் கள், பொதுப்பணத்தை சுருட்டுவதே பிறப்புரிமை என்று செயல்படும் மானாட மண்ணாங்கட்டி ஆடும் த்ராவிட விசிலடிச்சான் குளுவான் கள், இவர்கள் அத்துணை பேர்களுடனும் கை கோர்த்து தினம் இரவு நேரத்தில் கூச்சல் போடும் ஊடக ப்ரோக்கர்கள்………….. என நீண்ட பயங்கரவாத கும்பல்களின் மீது எவ்வளவு விரைவாக சர்க்கார் பலப்ரயோகம் செய்கிறதோ …….. அவ்வளவு விரைவாக தேச வளர்ச்சி துரிதப்படும்.

 2. actually, when Sri Modi becomes A PM, he will have to face a lot of obligatios. When u become a GM of a company, same problems arise;( I have experienced this) one has to oblige several peole for various things. However, if he can bring in an able administration and concentrate more on the govt functioning than on Hindus, muslims, christians probelems, then he has a chance to suceed. He has to set up several monitoring committes and take advisors from private sectors say Infosys??reliance?? and academic institutions to help him out. not an easy job. let us wait. Hope he is surrounded by good souls and intelelctuals and adminsistrators.

 3. அடுத்த பிரதமர் மோடி மட்டுமே அதை யாராலலும் தடுக்கமுடியாது

 4. தமிழீழம் பற்றியும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் நாங்கள் எதிர்பார்ப்பது இந்திய யுக்கு மட்டும் அல்லஎண்கள் தமிலேனதுக்கும் செர்துதுதன்
  நன்றி

 5. மற்றும் பி ஜே பியில் பழம் பெருமை பேசி பொழுது போக்கும் தலைகள் – அத விட்டுட்டீங்க

 6. இது அதீதமான எதிர்பார்ப்பு என்று மட்டும் சொல்ல முடியும்.

  இன்றைய சூழலில் இருக்கும் நிலையிலிருந்து ஓரிரு சதவீத முன்னேற்றம் ஏற்பட்டாலே அது சாதனைதான்.

  1. அதிகார வர்க்கத்தை ஒரு அளவுக்கு மேல் கட்டுப்படுத்த இயலாது. ’இந்திரன் மாறுவான், ஆனால் இந்திராணி மாறமாட்டாள்’ என்ற ஒரு வழக்குண்டு. மானில அளவிலேயே நமது அதிகார வர்க்கத்தின்மேல் சாட்டை சொடுக்கிய “இரும்புப்பெண்மணி” குப்புற விழுந்ததால் சொடுக்கிய சாட்டையை சுருட்டி இருக்கைக்கடியில் பதுக்கியது வெகு சமீபத்திய வரலாறு.

  மூக்கிருக்கும் வரை சளியுமிருக்கும்.

  2. அரசியல் தரகர்கள் இல்லாமல் எந்த அரசும் இயங்கிவிட முடியாது. விரும்பியோ விரும்பாமலோ, எல்லா வணிகர்களும் நேரடியாக அரசிடம் பேசி தமக்கு வேண்டியவற்றை சாதித்துக்கொள்ள இயலாது என்பதால் இவர்களது பங்கு அதிகம்.

  இந்திய அரசு நமது பெரும் வணிகர்களால் மறைமுகமாக இயக்கப்படுவது ஒன்றும் பெரிய ரகசியமல்ல. மோடி அரசு எத்தனை வணிக குழுமங்களுக்கு எவ்வளவு நிலங்களை, தரிசு நிலங்களாக இருப்பினும் சந்தைவிலைக்கு அல்லாது அடிமாட்டு விலைக்கு அள்ளி விட்டுள்ளது, அதனால் அந்த நிறுவனங்கள் எவ்வளவு கோடி பயனடைந்துள்ளன என்ற புள்ளிவிபரம் பல்வேறு தளங்களில் உள்ளன. எல்லா அரசுகளும் வணிக நிறுவனங்களுக்கு சலுகைகள் செய்வது இயல்புதான் எனினும் இந்த புள்ளி விபரங்கள் கூறுவது மலைக்க வைப்பது. (நேற்றைய யாஹூ தளத்திலேயே மோடி ஆட்சி காலத்தில் அதானி குழுமம் எத்தனை பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்ற செய்தி வெளியானது)

  இவை எல்லாம் தரகர்கள் உதவியில்லாமலேயே நடந்திருக்கும் என்பது நம்ப கொஞ்சம் சிரமமான விஷயம்.

  (edited and published)

 7. இது போன்று இப்பொழுதே எழுதுவது தவறு என்றே நினைக்கிறேன். மோடி பிரதமரானால் நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது தான் முறையாகும். இவர் பிரதமரானால் இன்னின்னவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று சொல்வது பழி வாங்கும் செயல் என்ற எண்ணம் தமிழ் இந்து படிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு ஏற்படும். மேலும் சட்டம் ஒழுங்கு அந்தந்த மாநில அரசுகளின் கையில் உள்ளது. அதை மோடி செய்ய வேண்டும் என்று சொல்வது தவறு.

 8. Those things which come under the perview of state govts shall be done by them. But those which come under the central govt’s perview — modi shall take pro active action.

  Most probably left is finished politically.

  Their presence in other areas shall be finished off in a planned and systematic manner.

  Development shall be the primary objective. But all other hindrances in the path of development shall be ruthlessly tackled. Especially Internal security and external affairs — with proper balance… no rabble rousing. But strategic tackling. Modi has already outlined.

  lets hope for the best.

 9. திரு கிரிஷ்ணகுமார் அவர்களே! நடிகர் கமல் பாணியில் சொல்லவேண்டுமானால் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு “”பூட்ட கேசு””. காங்கிரஸ் கட்சியை விட இந்த கம்யூனிஸ்ட் காரர்கள் மிக மோசமானவர்கள். இவர்கள் ஒழிந்தாலே போதும் நாடு உருப்படும். மேடையில் பகுத்தறிவு பேசுவார்கள் ஆனால் பாருங்கள். சென்னையில் ஒரு தொகுதியில் நின்ற வாசுகி என்ற கம்யூனிஸ்ட் பெண் வேட்பாளர் மக்கள் ஆரத்தி எடுத்தால் தலை குனிகிறார் . போட்டு வைத்தால் அதை மறுக்காமல் வாங்கி கொள்கிறார். ரூபாய் நோட்டு மாலையை போட்டால் மகிழ்ச்சியோடு அணிந்து கொள்கிறார். இந்த கம்யூனிஸ்ட்களே இந்த நாட்டின் சாபக்கேடு.

 10. திரு “Honest man” அவர்களே ,

  கம்யூனிஸ்டுகளை நம் நாட்டின் சாபக்கேடு என்று சொல்வதைவிட மனித இனத்துக்கே சாபக்கேடு என்று கூறுவதே மிகப்பொருத்தமாக இருக்கும்.

 11. அன்பின் ஸ்ரீ ஹானஸ்ட்மேன், ஸ்ரீ வெள்ளைவாரணன்,

  அரசியல் அரங்கில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஹாஸ்ய பாத்ரம் புதைகுழிக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

  கல்வித்துறை, ஊடகம், சினிமா, ட்ராமா – இத்யாதி பொதுஜன தளங்களில் கம்யூனிஸக் கருத்தாக்கங்கள் தேசவிரோதம், ஆப்ரஹாமிய மதவெறி, ஹிந்துமதக்காழ்ப்பு போன்றவற்றின் கலவையான நஞ்சு குறையாது இன்னமும் செயல்பாட்டில் இருக்கிறது. இந்தத் துறைகளில் இந்த ராக்ஷஸ சக்தியின் முதுகெலும்பு முறிக்கப்பட்டால் ஹிந்துஸ்தானத்தின் வளர்ச்சி என்பது உறுதிசெய்யப்படும்.

  ஒருங்கிணைந்த முறையான திட்டமிடல்கள் மூலம் இதுவும் சாத்யமே.

 12. வெள்ளை வாரணன்…

  //கம்யூனிஸ்டுகளை நம் நாட்டின் சாபக்கேடு என்று சொல்வதைவிட மனித இனத்துக்கே சாபக்கேடு என்று கூறுவதே மிகப்பொருத்தமாக இருக்கும்.//

  மோடியல்ல.. எந்த கேடி வந்தாலும் கம்யுனிசத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவில் கம்யுனிச ஆட்சி ஏற்பட அச்சாரம் போடபோவதே மோடிதான். பொறுத்திருந்து பாருங்கள். மோடி நல்லவர் என்று ஊடகங்கள் ஊதி பெருக்கியதை நம்பிக்கொண்டு அவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கும் அப்பாவி நடுத்தர மக்களை விட கம்யுனிஸ்டுகள் நாங்கள் தான் மிகவும் ஆசை படுகிறோம்.. சாயம் வெளுக்கவாவது நிச்சயம் மோடி ஆட்சி அமைக்க வேண்டும்.

  “Революция никогда не может быть прогноз; он не может быть живым; само по себе. Революции, приготовление и обязан уходить.” – Владимир Ленин

  Means :- “Revolution can never be forecast; it cannot be foretold; it comes of itself. Revolution is brewing and is bound to flare up.”
  ― Vladimir Lenin

 13. பெரு மதிப்பிற்குறிய இராகுலன் அவர்களே,

  தங்கள் மறுமொழியில் யாரோ ஒரு வெளிநாட்டு தலைவரின் மேற்கோளை சொல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏனுங்க ? தங்களுக்கு சுயமாக சிந்திக்க தெரியாதா ? இரஷ்யாவில் புரட்சி என்றபெயரில் புரட்டு நடந்தபோது சுமார் 7-10 கோடி மக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் concentration camp , போர்க்களம் மற்றும், கம்யூனிஸ்டுகளின் கிளை அமைப்புக்களாலும் படுகொலை செய்யப்பட்டனர். இதில் என்ன முக்கியம் என்றால், படுகொலை செய்யப்பட்டவர்களில் முதலாளிகள் ஒரு சதவீதத்துக்கும் குறைவு.99 விழுக்காடு அப்பாவி ஏழைகளே. ஏழைமக்களை மேலும் பிச்சைக் காரர்கள் ஆக்குவதற்கு ஏற்கனவே அரசியல்வாதிகள் உள்ளனர். புதியதாக கம்யூனிசம் என்ற மோசடி தத்துவம் தேவை இல்லை.

  உடனே உங்களிடம் இருந்து, கம்யூனிஸ்டுகள் வேறு, கம்யூனிசம் வேறு என்ற பதில் வெளிவரும்.உலகில் எந்த கம்யூனிஸ்டு நாடுகளிலும் பின்பற்ற முடியாமல் கைவிட்ட utopianthought -கற்பனை கருத்துக்களின் தொகுப்பே கம்யூனிசம் என்பது. தாங்கள் ஒரு மூளை சலவை செய்யப்பட கம்யூனிஸ்டாக இருந்தால், உங்களை யாரும் மறுத்துப் பேசிப்புண்ணியம் இல்லை. ஆனால் சுயமாக சிந்திக்கும் திறன் உள்ள மனிதராக இருப்பின், தாங்கள் சிந்திக்க வாய்ப்பு உள்ளது.

  1. அரசு இல்லாத நாடு என்பது கம்யூனிசத்தின் கற்பனை இல்லாமல் வேறு என்ன.?

  2. வர்க்கப்போராட்டம் என்பது இப்போது ஷியா-சன்னி -அகமதியா இனங்களில் கூட இல்லை .அங்கு நடப்பது இன அழிப்பு போராட்டங்களே.

  3. எல்லா உற்பத்தி சாதனங்களும் கம்யூனிசத்தின் படி அரசிடம் இருக்கும், ஆனால் உற்பத்தி எதுவும் நடக்காது. எல்லாமே முடங்கி கிடக்கும். அது தான் கம்யூனிசம்.

  4. விளாடிமிர் லெனின் என்ற உங்கள் கம்யூனிச தலைவர் , கடைசி நாட்களில் காம்ரேடு என்று சொல்லிக்கொண்ட ஸ்டாலினின் , சிறைக்கைதியாக வீட்டுக் காவலில் இருப்பது போல, வீடே சிறையாக வாழ்ந்து, உணவில் மருந்துடன் விஷம் கொடுக்கப்பட்டு , சிறிது சிறிதாக உயிர்விட்டார். தோழர் லெனின் அந்த இழிநிலை உலகில் எல்லோருக்கும் வரவேண்டும் என்றால், கம்யூனிசத்தை விட வேறு நாசகரமான கொள்கை வேறு எதுவும் தேவை இல்லை. உலகிலேயே எங்கும் இல்லாத கம்யூனிசம் இந்தியாவில் இருந்தும் தானே அழியும். அழிவுக்கான விதைகள் கம்யூனிசத்தில் ஏராளம் இருக்கின்றன. மார்க்சியம் என்பதே உலகில் இதுவரை இருந்துள்ள சாபக்கேடுகளில் பெரிய சாபக்கேடு.கம்யூனிசம் முற்றிலும் அழிந்தால், உலகமே வளம் பெறும்.

 14. //சாயம் வெளுக்கவாவது நிச்சயம் மோடி ஆட்சி அமைக்க வேண்டும்//

  அப்படி சாயம் வெளுத்தால் மறுபடியும் காங்கிரெஸ்ஸுக்குத்தான் மக்கள் வோட்டு போடுவார்கள் அய்யா. இந்த நாட்டு மக்கள் கம்யூனிசத்தைப் புரிந்து கொண்ட அளவுக்கு நீங்கள் புரிந்து கொள்ளவில்லயே ராகுலன்.

 15. ஆஹா வந்துட்டாரய்யா வந்துட்டார் இங்கேயும் ஒரு ராகுலர் காங்கிரஸ்கொடியை அல்ல செங்கொடியை தூக்கிக்கொண்டு. மோதிஜி ஆட்சிக்கு வந்தால் புரட்சி வரும் என்றுவேறு கட்டியம் கூறுகிறார். இந்த யுகத்தின் இணையற்ற தீர்க்கதரிசி லெனின் அவர்களின் வசனத்தினை வேறு மேற்கோள் காட்டுகிறார். அது எப்பவரும் எப்படி வரும் என்று சொல்லமுடியாது. தன்னாலே வரும் என்றால் மோதி ஜியின் ஆட்சியால்வருமென்று எப்படி சொல்கிறீர்களே ராகுலரே.
  கம்யூனிஸம் ஒரு சர்வாதிகாரப்போக்குடைய ஏதேச்சதிகாரத்தினை முன்னிறுத்தும் கருத்தியல். அது பொன்னுலகத்தினைப்படைக்காது. புன்னுலகத்தினைப்படைக்கும். தனிமனிதனை நசுக்கும் நாசாகர வழிமுறை.

 16. பாஜகவினர்தான் ஏற்கெனவே பதவிக்கு வந்து விட்டது போல் ஆடுகிறார்கள் என்றால், இந்த கட்டுரையை எழுதியவரும், பின்னூட்டம் இட்டர்வர்களும் கூட பாஜகவினர் போல் ஆட்சியைப் பிடித்து விட்டது போலவே எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

  மே 16 வரை காத்திருக்க முடியவில்லையா? முடிவு வேறு விதமாக வந்தால் என்ன செய்வார்கள்?

  2004 மற்றும் 2009 ஆண்டு தேர்தல் முடிவிற்கு முன் NDA வெற்றி பெரும் என்றெல்லாம் கருத்துக் கணிப்பு வந்தது. ஆனால் என்ன ஆயிற்று?

  எனவே மே 16 வரை அடக்கி வாசியுங்கள்

 17. திரு நாகராஜன்
  உங்களின் வாதம் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் சுமார் 80% ஹிந்து மக்கள் தொகை இருக்கும் இந்த நாட்டில் அந்த 80% ம் வெறியர்கள் என்று போலி மத சார்பின்மைக் கூட்டம் சொல்லும்போது இது வரை மத்தியில் காங்கிரஸ் என்றே ஒட்டு போட்டு வந்து கொண்டிருந்த என் போன்றவர்களுக்கே இந்த முறை பொறுமை போய் விட்டது. அதன் எதிர்லிப்புதான் இந்த கட்டுரைகளும் பின்னூட்டங்களும். போலி மத சார்பின்மைதான் மீண்டும் அரசு அமைக்கும் என்று வந்தால் தீவிரவாதத்தின் வெறி இன்னும் அதிகமாகும்.

 18. பெருமதிப்பிற்குரிய திரு நாகராஜன் அவர்களே,

  நமது தளத்தில் கருத்துப்பதிவோர் மற்றும் மறுமொழி இடுவோர் அனைவரும் பாஜக கட்சிக்காரர்கள் அல்ல. எந்த மாற்றுக்கருத்தும் பதிவு செய்தவுடன் மட்டுறுத்தி வெளியிடப்படுகிறது. ஏதேனும் அசிங்கமான , கேவலமான வாசகங்களை கோபத்தில் யாரேனும் பயன்படுத்தி இருந்தால் அது மட்டுமே தணிக்கையில் மட்டுறுத்தப்படுகிறது என்பது இங்கு வெளியாகும் மறுமொழிகளை கவனித்தால் தெரிகிறது.

  கம்யூனிஸ்டுகளால் மூளை சலவை செய்யப்பட சில நண்பர்கள் எழுதும் கருத்துக்களும் வெளியிடப்படுகிறது. இந்த தளத்தில் கடந்த ஒரு வருடமாக காங்கிரசுக்கு எதிராக ஏராளமான மறுமொழிகள் வந்தவண்ணம் உள்ளன. அதன் காரணம் , காங்கிரஸ் கட்சியின் பெரும் ஊழல்களும், நாட்டுக்கு காங்கிரசால் விளைந்துள்ள பத்துவருட அபாயங்களும் மட்டுமே( கடும் விலைவாசி உயர்வு உட்பட ). பாஜகவுக்கு காங்கிரசை விட நாடு முழுவதும் அதிக ஆதரவு காணப்படுகிறது என்பது ஒரு உண்மை. ஏனெனில் காங்கிரசின் அயோக்கியத்தனங்கள் காரணமாக , காங்கிரஸ் எதிர்ப்பு அலை, நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்த எதிர்ப்பு பாஜகவுக்கு ஆதரவாக மாறி உள்ளது.இதனை ஆம் ஆத்மியின் யோகேந்திர யாதவ் என்ற முன்னாள் ராகுல் உதவியாளர் கூட தினமணி பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி மூன்று வாரங்கள் முன்னர் தினமணியில் வந்தது.

  2004-2009 ஆண்டுகளில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட்ட நிறுவனங்கள் எல்லாமே பாஜக வெற்றிபெறும் என்று சொல்லவில்லை. ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே அந்த முடிவை சொல்லின. இப்போதும் கூட, ஒரு பத்திரிகை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களை வெல்லும் என்று எழுதியுள்ளது. எனவே, பத்திரிக்கைகளைப் பொருத்தமட்டில், கருத்துக்கணிப்பு வேறுபடுகிறது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் கூட, நக்கீரன் பத்திரிகை திமுக அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அதிமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜூனியர் விகடனில் வந்த கருத்துக்கணிப்புக்கள் உண்மையானால், பாஜக அணி கூட அதிக இடங்களை தமிழகத்தில் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. எனவே, பத்திரிக்கைகளைப் பொருத்தமட்டில், அவை பல்வேறு முடிவுகளை தருகின்றன. எல்லா பத்திரிக்கைகளும் சேர்ந்து ஒரே முடிவை தரவில்லை. மாறுபட்ட அபிப்பிராயங்களே உள்ளன.

  காங்கிரஸ் யாரையாவது பிடித்து, ஜெயலலிதா, மமதா, மாயா, முலயாம் , இப்படி யார் காலிலாவது விழுந்து , மோடி பிரதமர் ஆகாமல் தடுக்க முயல்கிறது. ஏனெனில், மோடி பிரதமர் ஆனால், அடுத்த 15 வருடம் சாதனை புரிவார். ( நம் நாட்டில் சாதனை என்பதே, காங்கிரசைவிட குறைந்த ஊழல் என நான் பொருள் கொள்கிறேன் ) . மேலும் காங்கிரஸ் நிச்சயம் காணாமல் போய்விடும். பாஜகவில் காங்கிரசைப் போல எல்லோரும் ஊழல்வாதிகள் அல்ல. நரேந்திர மோடி நிச்சயம் ஊழல் செய்யமாட்டார். ஆனால் பாஜகவில் இந்த தேர்தலில் மோடியின் தலைமைக்கே மக்கள் வாக்கு அளிக்கிறார்கள் என்பதே உண்மை. எனவே நல்ல திருப்பம் ஏற்படும். பாஜக கூட்டணி நிச்சயம் தனிப் பெரும்பான்மை பெரும். 16-5-2014 இரவு எட்டுமணிக்கு எல்லா முடிவுகளும் வந்துவிடும். காங்கிரசும், ஆம் ஆத்மியும், கம்யூனிஸ்டுகளும் செல்வாக்கு குறைந்து பழைய பலம் குறைந்து சின்னா பின்னமாகி விடுவார்கள். ஜெயா, மமதா, நவீன், ஒய் எஸ் ஆர் ஜெகன் ரெட்டி ஆகியோர் கூடுதல் இடங்களைப் பெறுவார்கள்.( 2009- தேர்தலில் பெற்றதைவிட அதிகம் பெறுவார்கள்.) லல்லு, மாயா, முலயாம், நிதீஷ், சரத் பாவர் , மஞ்சள் கருணா ஆகியோர் கட்சிகள் பின்னடைவை சந்திப்பார்கள். காங்கிரஸ் இரண்டு இலக்க இடங்களைப் பிடிக்கும்.100-க்கும் கம்மிதான்.

  காங்கிரஸ் படுதோல்வியை ஒவ்வொரு தமிழனும் பாயசம் வைத்து, குலதெய்வத்துக்கு படையல் போட்டு, கொண்டாடுவான். காங்கிரசின் சொம்புகளுக்கும் அதே கதிதான். அப்பாவி இலங்கை தமிழர் தலையில் கொத்து எரிகுண்டுகளைப் போட்டுக் கொன்ற காங்கிரஸ் கட்சிக்கும், அந்த காங்கிரசின் தலைமறைவு பிரதமரான , இரத்தக்காட்டேறியின் மருமகளை , சொக்கத்தங்கம் என்று சொன்ன பெரியவருக்கும் இனி டெல்லி நீதிமன்றமும், திகாருமே விசிட்டிங் பிளேஸ் ஆகும்.

 19. அன்பார்ந்த வெள்ளைவாரணன்…

  //தங்கள் மறுமொழியில் யாரோ ஒரு வெளிநாட்டு தலைவரின் மேற்கோளை சொல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏனுங்க ? தங்களுக்கு சுயமாக சிந்திக்க தெரியாதா ?//

  என்ன பன்றதுங்கன்னா.. நம்ம ஊர்ல இருந்து மேற்கோள் காட்டி சொல்ற அளவுக்கு எந்த தலைவரும் இல்லையே.. லெனின் கூட ஒப்பிட்டு பேசும் அளவுக்கு யாரு இங்க இருக்கா. அப்புறம், லெனின் உடைய மேற்கோள்களை காட்டியதற்க்கே சுயமா சிந்திக்க தெரியாதான்னு என்னை கேக்குறிங்க. ஏன் உங்க தமிழ்ஹிந்துல வர கட்டுரைகள்,மறுமொழிகள் எல்லாம் அப்படியே சுயமா சிந்திச்சு தான் வருதா.நீங்க யாரும் வேதத்துல வர மந்திரங்கள், தேவார,திருவாசக பாடல் வரிகள் இதெல்லாம் மேற்கோள் காட்டி பேசுனதே இல்லையா. உங்க தளத்துல மேற்கோள் காட்டி எத்தன கட்டுரை இருக்குனு எடுத்து விடவா. அப்படி பாத்தா உங்க கட்டுரை ஆசிரியர்களுக்கே இன்னும் சுய புத்தி கிடையாதுன்னு ஒத்துகிறீங்களா.

  //இரஷ்யாவில் புரட்சி என்றபெயரில் புரட்டு நடந்தபோது சுமார் 7-10 கோடி மக்கள் கொல்லப்பட்டனர்.//

  அப்டி போடு … சொல்றதுன்னு ஆய்டுச்சு அதுஎன்ன அல்பதனமா 7 கோடி 10 கோடின்னு.. ஒரு 70 கோடி 100 கோடின்னு அடிச்சு விடவேண்டி தானே. என்ன இருந்தாலும் நீங்க ஸ்டாலின் கூடவே இருந்து கணக்கெடுப்பு பண்ணி இருக்கீங்க. Actula ஸ்டாலின் காலத்துல சோவியத் ரஷ்யவோட ஜன தொகையே வெறும் 20 கோடிக்கும் கீழ தான். அதுக்கு முன்னாடி சார் மன்னர் காலத்துல இன்னும் கம்மியா தான் இருந்துச்சு. வேனும்ன நீங்க நெட்ல search பண்ணி பாருங்க. நீங்க என்னடானா 10 கோடி பேர கொன்னுடாங்கனு இப்படி அண்ட புளுகு புளுகுறீங்க.

  //உடனே உங்களிடம் இருந்து, கம்யூனிஸ்டுகள் வேறு, கம்யூனிசம் வேறு என்ற பதில் வெளிவரும்//

  அப்படி கிடையாது, கம்யுனிசம் வேறு கம்யுனிஸ்டுகள் வேறு அல்ல. கம்யுனிசம் வேறு, போலி கம்யுனிஸ்டுகள் வேறு. அப்புறம் போலிகள் அனைத்திலுமே உருவாகத்தான் செய்வார்கள். ஆனானப்பட்ட உங்க சனாதன இந்து மதத்திலேயே போலிச்சாமியார்கள் இல்லையா. அதுக்காக, போலி சாமியார்கள பாத்து இது தான் இந்து மதத்தோட யோகிதை என்று கூறி காரி துப்பவா முடியும். அது போல தான்.

  //தாங்கள் ஒரு மூளை சலவை செய்யப்பட கம்யூனிஸ்டாக இருந்தால், உங்களை யாரும் மறுத்துப் பேசிப்புண்ணியம் இல்லை. ஆனால் சுயமாக சிந்திக்கும் திறன் உள்ள மனிதராக இருப்பின், தாங்கள் சிந்திக்க வாய்ப்பு உள்ளது.//

  இதையே நான் உங்களுக்கும் கூற முடியும்.. யாரும் பிறக்கும் போது கம்யுனிஸ்டாக பிறப்பதில்லை. சூழ்நிலைகள் உண்மையை புரிய வைக்கும் பொழுது ஒருவர் தனக்குரிய பாதையை தேர்ந்தெடுப்பார். மதம் சார்ந்த பாதை எப்போதுமே ஒரு மோசடியான பாதை தான். இதை புரிய வைக்க யாரும் யாரையும் மூளை சலவை எல்லாம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. மதம் வாழ்ந்து கொண்டிருப்பது எதனால் என்கிற எதார்த்தத்தை நோக்கினாலே இந்த உண்மை புரியும்.

  //1. அரசு இல்லாத நாடு என்பது கம்யூனிசத்தின் கற்பனை இல்லாமல் வேறு என்ன.?//

  முதலில் அரசு என்பது ஏன் ஏற்பட்டது என்னும் வரலாறை போய் படித்து விட்டுவாங்கள். பிறகு, அரசு குறித்து கம்யுனிசம் கூறுவது கற்பனையா அல்லது உண்மையா என்பதை பற்றி விவாதிக்கலாம். கம்யுனிசம் குறித்த உங்களின் அறிவு என்ன என்பது இதன் மூலம் நன்றாக தெரிகிறது.

  //2. வர்க்கப்போராட்டம் என்பது இப்போது ஷியா-சன்னி -அகமதியா இனங்களில் கூட இல்லை .அங்கு நடப்பது இன அழிப்பு போராட்டங்களே.//

  இது மதம் சார்ந்த சண்டை. இதை போன்று நடப்பதை தடுக்க தான் நாங்கள் மதத்தையும், கடவுளையும். இந்த இரண்டிற்கும் படியளந்து இயக்கும் முதலாளித்துவத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பாடுபடுகிறோம். மதமும், முதலாளித்துவமும் சேர்ந்தே தான் சமுகத்தை சுரண்டும்.

  //3. எல்லா உற்பத்தி சாதனங்களும் கம்யூனிசத்தின் படி அரசிடம் இருக்கும், ஆனால் உற்பத்தி எதுவும் நடக்காது. எல்லாமே முடங்கி கிடக்கும். அது தான் கம்யூனிசம்.//

  அப்படி நீங்களாக நினைத்து கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பில்லை. எந்த அரசிடம் இருக்க வேண்டுமோ அந்த அரசிடம் இருக்க வேண்டும். பா.ஜ.க, காங்கிரஸ், இங்கு இருக்கும் போலி கம்யுனிச கட்சிகள் போன்ற ஒட்டு பொறுக்கிகளிடம் இருந்தால் நீங்கள் கூறுவது போன்று தான் இருக்கும். ஏனென்றால், அப்போதுதானே நஷ்ட கணக்கு காண்பித்து பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கலாம்.

  //4. விளாடிமிர் லெனின் என்ற உங்கள் கம்யூனிச தலைவர் , கடைசி நாட்களில் காம்ரேடு என்று சொல்லிக்கொண்ட ஸ்டாலினின் , சிறைக்கைதியாக வீட்டுக் காவலில் இருப்பது போல, வீடே சிறையாக வாழ்ந்து……………//

  மன்னிக்கவும். இதற்க்கு எந்த ஆதாரமும் கிடையாது . நீங்கள் கம்யூனிசத் தத்துவத்தைப் பற்றி முதலாளித்துவத்தின் அவதூறுகளின் மூலம் தான் அறிந்திருக்கிறீர்கள் போலும்.ஏகாதிபத்தியம் தூக்கி எறியும் எலும்பு துண்டுகளுக்காக கம்யுநிசதையும் அதன் தலைவர்களையும் உண்மைக்கு புறம்பாய் அவதூறாக பேசி எழுதியவர்களின் பேச்சையும் ,நூலையும் ஆதாரமாக வைத்து கொண்டு நீங்கள் சிந்தித்தால் நான் கூறுவது அனைத்தும் உங்களுக்கு வேப்பங்காய்யாக தான் கசக்கும்.

  இறுதியாக, இந்தியா போன்ற பல தேசிய இனங்களை கொண்ட நாட்டிற்க்கு நிச்சயம் இந்த அரசியல் அமைப்பு சரி வராது. சோசலிச பாதை ஒன்று தான் இந்தியாவின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு.

  История показывает, что нет непобедимый армий. – Иосиф Сталин

  Means: “History shows that there are no invincible armies.”
  ― Joseph Stalin.

  ஆக வெல்ல முடியாத ஒன்று என ஏதுமில்லை. ஹிட்லரையே கம்யுனிசம் பார்த்து விட்டது. இந்தியாவில் இருப்பவர்கள் அவனை விடவா. சரி பார்க்கலாம்.

 20. அன்புள்ள இராகுலன்,

  தங்கள் விரிவான மறுமொழிக்கு நன்றி.

  நான் அளித்துள்ள முந்திய மறுமொழியில், இரஷ்யா மற்றும் சீனா என்று இருக்க வேண்டும். அதே சமயம் புரட்சியின் போது மட்டுமல்ல, புரட்சிக்கு பின்னர் சுமார் 65 வருடகாலத்தில் ரஷ்ய மற்றும் சீன நாட்டின் concentration camps ,சுமார் முறையே 1917-1989( 72 வருடம் ரஷ்யாவில்)1949-2014(65 வருடம் சீனாவில்) இயங்கிவந்துள்ளன. இந்த கான்சென்டிரேஷன் கேம்புகள் (concentration camps )பற்றி எனது முந்திய கடிதத்திலேயே உள்ளது. எனவே திரு இராகுலன் அவர்களின் கருத்து தவறு. கம்யூனிஸ்டுகள் அவிழ்த்துவிடும் பொய்களை நம்பி ஏமாந்தவர்களில் இந்த நண்பரும் ஒருவர் என்று தெரிகிறது. கம்யூனிஸ்டு நாடுகளில் நடக்கும் கொடுமைகள் பற்றிய ஆதாரங்களை அழித்து விடுகிறார்கள். எனவே தப்பிக் கிடைக்கும் சிறிது ஆதாரங்களை வைத்தே உண்மையை மதிப்பிடுகிறார்கள். இரஷ்யா மற்றும் சீனாவில் இருந்து வெளியேறிய பலரும் உண்மைகளை புட்டு புட்டு வைத்துள்ளனர். ஆனால் நண்பர் இராகுலன் அவர்கள் இவை எல்லாமே முதலாளித்துவத்தின் அவதூறுகள் என்று மூடி மறைக்கிறார். முதலாளித்துவ நாடுகளில் பூரண பத்திரிகை சுதந்திரம் உள்ளது. ஆனால் கம்யூனிஸ்டு நாடுகளில் தான் இரும்புத்திரை இருந்தது.சீனாவில் இன்னமும் ஒரு மாநிலத்துக்காரன் வேறு மாநிலத்துக்கு போவதற்கே அரசிடம் விசேட விசா வாங்கவேண்டும். மேலும் வெளிநாட்டு பயணிகள் அரசு காட்டும் கண்காட்சிகளை மட்டுமே பார்க்க முடியும். வெளி உலகத்துக்கு தெரியாத சோகக் கதைகள் கம்யூனிஸ்டு நாடுகளில் ஏராளம் வண்டி வண்டியாக புதைந்துள்ளது. மடியில் கனம் இருப்பதால தான் அவர்கள் பலவற்றையும் மூடி மறைக்கிறார்கள். மேலும் சோசலிசம் என்பது ஒரு மாயை. அதனை அமல் செய்வது என்பது ஒரு முழுப்பொய் மட்டுமே. எந்த ஒரு புதிய முயற்சியையும் ஒரு சிறிய மாதிரியில் செயல்முறைப் படுத்திப் பார்த்து, அதன் பின்னரே , மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்வார்கள். ஆனால் சோசலிசம் எங்கும் செயல்படமுடியாத ஒரு குறைப்பிரசவம். சோசலிசம் என்றால் என்ன என்றே தெரியாமல் , அதனை பலரும் ஒரு கவர்ச்சியான விஷயமாக ஒரு நாற்பது வருடகாலம் நினைத்தனர். ஆனால் இரஷ்யா உடைந்து பல உண்மைகள் வெளிவந்தபின்னர், மாயை பலூன் உடைந்துவிட்டது. சோசலிசம் என்பது ஒரு முழு சர்வாதிகாரம் மட்டுமே. இந்த உலகில் சர்வாதிகாரம் ஏற்கனவே மன்னராட்சி, ராணுவ ஆட்சி என்ற பெயர்களில் பல நாடுகளில் உள்ளது. புதியதாக ஒரு சோசலிசப் பேய் வேண்டாம். இருக்கிற பேய்களை விரட்டவே நேரம் போதவில்லை. புதுப்பேய்கள் வேண்டாம்.

 21. //முதலில் அரசு என்பது ஏன் ஏற்பட்டது என்னும் வரலாறை போய் படித்து விட்டுவாங்கள்//
  நீங்கள் சொல்ற அரசு அப்போதைய சீன. சோவியத், கிழக்கு பெர்லின், கியூபா, தற்போதயை வட கொரியா போன்ற அரசுகள். நாங்கள் சொல்வது, அமெரிக்கா, இந்திய,கனடா, ஆஸ்திரேலியா, போன்ற ஜனநாயக அரசுகள்.

  லெனின், ஸ்டாலின் மேற்கோள்கள் சொல்லிவிடீர்கள். பால் பாட் என்று ஒரு கம்போடியா அறிஞர் இருந்தாரே அவர் சொன்னதையும் சொல்லிவிடுங்கள்.

  மொழி என்றபா படத்தில் பாஸ்கர் ஒரு மறதிக்கார வேடத்தில் வருவார். அதுதான் ஞாபகம் வருகிறது. “மணிரத்த்ம்னு புதுசா ஒரு டைரக்டர் வந்திருக்கார்…”

 22. போல்பாட் போன்ற கொடியவனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால் கம்யூனிசமே நாறிவிடும். அவனுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொள்வதில் ஒரு தப்பும் இல்லை. ஏனெனில் கொடுங்கோலன் போல்பாட்டுக்கு , கம்யூனிஸ்டு கொடுங்கோலர்கள் ஆதரவு அளித்தது இயல்பான ஒரு விஷயமே. இனம் இனத்தோடு சேருகிறது அவ்வளவுதான். லெனின், ஸ்டாலின், மாவோ, ஆகிய கம்யூனிஸ்ட் சர்வாதிகாரிகளின் வரிசையில் போல்பாட்டும் எண்ணத் தகுந்தவரே. நமது கற்பனை உலகில் வாழும் கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொள்ளும் காம்ரேடுகள் , ஒரேயடியாக கம்யூனிஸ்டுகள் செய்யும் செயலுக்கு கம்யூனிசம் பொறுப்பாகாது என்று சொல்வார்கள். கம்யூனிசமே ஒட்டுமொத்த அராஜகத்தின் தொகுப்பு என்ற போது, கம்யூனிஸ்டுகளை குற்றம் சொல்ல இயலாது. மூளை சலவை செய்யப்பட அடிமை வர்க்கம். அவ்வளவே. அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 23. i think Raahular is supporting maoists. No improvement should reach people and kill as many people as possible. Good ideology.

 24. 12-5-2014 திங்கள் அன்று இரவு தேர்தலின் கடைசிக்கட்டம் முடிந்து 30 நிமிடங்கள் கழிந்தபின் அனைத்து தொலைக்காட்சிகளுமே, தேர்தலுக்கு பிந்திய எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளன. பாஜக கூட்டணிக்கு 278 முதல் 340 வரைக்கும் பல கணிப்புக்களும் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் எம் ஜி ஆர் கட்சிக்கு 20 முதல் 31 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கணிப்பு பாஜக அணிக்கு 7 இடங்களும், திமுக அணிக்கு 5 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. வேறு ஒரு கணிப்போ பாஜக அணிக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காது என்று தெரிவித்துள்ளது. முடிவுகள் எப்படி இருந்தாலும் போட்டி என்னவோ, இரண்டாவது இடம் பாஜக அணிக்கா, அல்லது திமுகவினரின் குடும்ப கட்சிக்கா என்பது தான். இன்னும் நாலு நாள் காத்திருந்தால், வெள்ளி இரவு 8 மணிக்கு 543 முடிவுகளும் தெரிந்துவிடும்.

  தமிழகம் முழுவதும் அதிமுக அணிக்கும், திமுக அணிக்கும் இடையே சுமார் 13 விழுக்காடு வாக்கு வித்தியாசம் உள்ளதாக சி என் என் ஐ பி என் கணிப்பில் -எக்சிட் போலில்- தெரிவித்துள்ளனர். இந்த வாக்கு சதவீதம் சரியாக இருக்குமானால், அதிமுக 34 முதல் 36 இடங்கள் வரை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பத்து தொகுதிகளில் போட்டி கடுமையாக இருப்பதால் , அவற்றில் யார் வென்றாலும் வித்தியாசம் குறைவாகவே இருக்கும்.

  சாணக்கியன் கருத்துக்கணிப்பின் முடிவு போல, பாஜக கூட்டணிக்கு 340 இடங்கள் கிடைத்தால், அதற்கு காங்கிரசாரின் அயோக்கியத்தனங்களால் ஏற்பட்ட வெறுப்பு அலையே காரணம் என்பதை அறியலாம். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 31 இடம் கிடைக்கும் என்பதையும், டெல்லியில் முக்கியப் போட்டி பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையில் தான் என்பதை , இந்த சாணக்கியா கருத்துக் கணிப்பு சரியாக சொல்லி இருந்ததால், இந்த முறையும் சாணக்கியா கருத்து கணிப்பு சரியாக வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 25. உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. உலகில் உள்ள ஆட்சி முறைகளிலேயே சிறந்தது ஜனநாயகமே ஆகும். நடந்துமுடிந்த லோக்சபா பொதுத்தேர்தலில் சுமார் 66.38 விழுக்காடு வாக்குப்பதிவு ஆகியுள்ளது. சுமார் 56 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். உலகில் உள்ள 190- க்கும் மேற்பட்ட நாடுகளில் சீனாவை தவிர மற்ற எந்த நாட்டின் மக்கள் தொகைகளையும் விட , நமது வாக்காளர் எண்ணிக்கை அதிகம். சுமார் 120- கோடி மக்கள் தொகை உள்ள இந்த நாட்டில், இதுபோல ஒரு தேர்தல் திருவிழாவை ஐந்தாண்டு களுக்கு ஒரு முறை நடத்துவது என்பது ஒரு பாராட்ட வேண்டிய பணி. அந்த பணியை செவ்வனே செய்து முடித்த இந்திய தேர்தல் கமிஷனின் அலுவலர்களுக்கும், தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநிலம் மத்திய அரசுப்பணியாளர்கள், காவல் துறையினர், இராணுவத்தினர் அனைவருக்கும் நம் நன்றி உரித்தாகுக.

  சில புல்லர்கள் சர்வாதிகார , காட்டுமிராண்டி வம்ச வழி வந்தவர்கள் ஜனநாயகத்தை இழித்தும், பழித்தும் பேசி , தேர்தல் பாதை திருடர் பாதை என்று சொல்லி, கரிக்கட்டியால் சுவர்களில் எழுதி அசிங்கப்படுத்துவதும், துப்பாக்கி, வெடிகுண்டு என்று வன்முறை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஜனநாயகத்தில் ( மக்களாட்சியில்) எவ்வளவு குறைகள் இருப்பினும் , தீர்வுக்கு பல வாய்ப்புக்கள் இருக்கின்றன. தேர்தல் சமயத்தில் ஊழல் மன்னர்களையும், அவர்களது குடும்ப அரசர், அரசிகளையும் புறந்தள்ள ஒரு வாய்ப்பு உள்ளது. மன்னராட்சி, சர்வாதிகாரம், இராணுவ ஆட்சி ஆகியவற்றில் தீர்வே கிடைக்காது. இத்தகைய தீய சக்திகளுக்கு நம் அரசியல் தலைவர்களில் சிலர் அறிந்தோ அறியாமலோ, பல்லக்கு தூக்கி , மாவோயிச, லெனினிச , மார்க்சிச வன்முறை தீய சக்திகள் இந்தியாவில் சில இடங்களில் இரயில் பாதையில் குண்டு வைத்தல், போன்ற அழிவு செயல்களில் ஈடுபடுகின்றன.சில குறைபாடுகள் எல்லா இடத்திலும், எல்லா துறைகளிலும் இருக்கத்தான் செய்யும். அவற்றைக் களைந்து ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் செம்மைப் படுத்திக்கொள்ளவேண்டியது நமது கடமையும், உபாயமும் ஆகும்.

  இந்திய ஜனநாயகத்தின் வளர்ச்சிப் பாதையில் , ஒரு கரும்புள்ளி- சர்வாதிகாரி இந்திரா காந்தி. அவர் 1975-1977 காலக்கட்டத்தில், அவசர நிலை என்ற பெயரில், ஜனநாயக விளக்கை அணைக்க முயற்சித்தார். பத்திரிகை தணிக்கை, எதிர்க்கட்சியினரை சிறையில் தள்ளி, பல லட்சம் பேரை சிறையிலேயே பினமாக்கினார். அந்த பிணந்தின்னியை, இரத்தக்காட்டேரியை, கொடுங்கோல் பேயை நம் மக்கள் விரட்டி அடித்தனர்.ஜனநாயகம் மீண்டும் வென்றது.

  மக்கள் பிரதிநிதிகள் ஆளுவது ஜனநாயகம். மக்களாட்சியின் மாண்பே அதுதான். மக்களாட்சி கூடாது என்று சொல்லும் சர்வாதிகார அமைப்புக்கள் உருவாக நாம் அனுமதிக்கக் கூடாது. குடும்ப ஆட்சி, மன்னர் ஆட்சி, ராணுவ ஆட்சி ஆகியவை மிகப் பெரிய தீங்கு. அந்த தீங்குகளின் ஒட்டுமொத்த தொகுப்பு தற்போது உள்ள இந்திரா காங்கிரஸ் கட்சியும், அந்த கட்சியின் சொம்புகளான மானங்கெட்ட கும்பல்களும்.( அந்த கும்பல்களின் பெயர்களை எழுதினால் , மிகும் என்பதால் எழுதவில்லை.)

  சர்வாதிகாரத்தினை இந்திய மக்கள் தூக்கி எறிவார்கள். ஜனநாயகமே வெல்லும். இந்திய ஜனநாயகம் வெல்க. இந்த தேர்தலை முறியடிக்க பாகிஸ்தானிய ஐ எஸ் ஐ ஏஜெண்டுகள் பல பல முயற்சிகளை செய்தனர். அகில உலக வன்முறை தீவிரவாதி பின் லேடனுக்கு திருட்டு தனமாக பாய் விரித்த பாகிஸ்தானின் சதி முயற்சிகளை அமெரிக்கா பாகிஸ்தானுக்குள்ளேயே புகுந்து , அவனைப் போட்டுத்தள்ளியது. இந்தியாவில் புகுந்து 2008-நவம்பர் மாதம் 26-ஆம் நாள் சுமார் 300 பேரை குற்றுயிரும் கொலை உயிரும் ஆக்கிய , பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ மீது ஒரு நடவடிக்கையும் எடுக்காத இந்த வெட்டி மன்மோகன் சிங்கு ஒரு தண்டம். இந்த காங்கிரஸ் அரசுக்கு மக்கள் மரண அடி கொடுப்பார்கள். அது மேமாதம் 16, வெள்ளிக்கிழமை அன்று தெரியும்.மானங்கெட்ட காங்கிரஸ் காரர்கள் தேச விரோதிகளே என்பது நாடு முழுவதும் புரிந்து விட்டது. காங்கிரஸ் ஒழிக, இந்தியா வாழ்க, ஜனநாயகம் வெல்க.

  பொதுமக்களை சந்தித்து வாக்குகளைப் பெற்று , மக்களவை உறுப்பினர் ஆகாமல் கொல்லைப் புரவழியாக இருபது வருடகாலத்துக்கு மேலாக ராஜ்ய சபை உறுப்பினராகவே இருந்து கொண்டு, அதில் பத்து வருடம் பிரதமர் பதவியை அலங்கரித்த இந்த மன்மோகன் சிங்கு இந்திய ஜனநாயகத்தின் களங்கம். மக்களாட்சியின் மாண்பை கெடுத்தவர். மக்களாட்சியின் மாண்பை கெடுக்க அனுமதித்த காங்கிரஸ் கட்சி ஒரு அசிங்கம். தமிழக முதல்வராக இருந்த திரு குமாரசாமி இராஜா அவர்கள், சட்டசபை தேர்தலில் தோற்ற மறுநாளே இராஜினாமா செய்து கோட்டையை விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அப்போதைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள், அவரை மேலும் சிறிது காலம் , முதலமைச்சராக தொடருங்கள், நீங்கள் மேலவை உறுப்பினர் தானே என்றபோது, பொதுமக்கள் வாக்கு வாங்கி ஒரு சட்டசபை உறுப்பினர் ஆகும் அளவு கூட , பொதுமக்கள் நம்பிக்கையைப் பெறமுடியாத நான் முதல்வர் பதவியில் ஒரு நாள் நீடிப்பதும் கேவலம் என்று சொல்லி , மறுத்துவிட்டார். அவரு ஒரிஜினல் காங்கிரஸ் காரர். சோற்றிலே உப்பு போட்டு சாப்பிட்டவர். ஆனால் இப்போதுள்ள காங்கிரஸ் கட்சி , அதன் பிரதமர் பொம்மை மன்மோகன் சிங்கு ஆகியவை உப்பு போட்டு சாப்பிடும் இராகத்தை சேர்ந்தவை அல்ல. இந்த மன்மோகனும், அவரை அந்த பதவியில் கொல்லைப்புற வழியாக உட்காரவைத்த சோனியா கும்பலும் நம் நாட்டின் சாபக்கேடுகள். இந்த சாபக்கேடுகளை ஜனநாயகத்தில் இனியும் அனுமதிக்க மாட்டார்கள் நம் மக்கள். இந்த சாபக்கேடுகளுக்கு பல்லக்கு தூக்கிய கோபாலபுரம் குடும்ப கட்சிக்கும் இனி அரசியல் அஸ்தமனம் தான்.

 26. திரு. வெள்ளைவாரணன்……

  ஒரு கம்யுனிச அரசு உண்மையான கம்யுனிச(மார்க்சிய-லெனினிய) பாதையில் பயணித்தால் அதுதான் மக்களுக்கான உண்மையான பொன்னுலகம். ஆனால், அதே கம்யுனிச அரசு “கம்யுனிச கோட்பாடுகளை” காற்றில் பறக்க விட்டு திரிபுவாத அரசாக மாறினால் அப்போதுதான் தொல்லையே. ஒன்று சோவியத் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலை ஏற்படும் அல்லது சீனாவை போன்று போலி கம்யுனிச அரசாக தான் போய் முடியும். கம்யுனிச புரட்சியின் இலக்கு “பாட்டாளி வர்க்க சர்வதிகாரம்” மட்டுமே. அந்த அலகீட்டின் படி பார்த்தால் ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்தோடு சோசியலிச ஆட்சி முடிந்து விட்டது. அதற்க்கு பின்னல் வந்த குருஷேவின் காலத்தில் இருந்ததற்கு பெயர் சோசலிசம் கிடையாது. அதே போன்று தான் சீனாவிலும் மாவோ காலத்திற்கு பிறகு இப்போது வரை உள்ள போலி கம்யுனிசமும்.

  //போல்பாட் போன்ற கொடியவனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால் கம்யூனிசமே நாறிவிடும். //

  போல்பாட்டை பற்றி பேசினால் கம்யுனிசம் எப்படி நாறும்.. போல்போட்டை கம்யுனிஸ்ட் என்று யார் அங்கீகரித்தது. அவர் தன்னை அவ்வாறு அழைத்து கொண்டார்.

  கம்போடியாவில் நடந்தது ஒரு புரட்சி. ஆனால், அது அது ஒரு மார்க்சிய புரட்சி அல்ல. பொல்பொட்டின் கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது. ஆனால் பொல்பொட், மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தின் வழி நடக்கவில்லை. அந்தக் கொள்கைக்கு மாறாக, கம்போடிய மண்ணின் தன்மைகளுக்கேற்ற தனித்துவமான சித்தாந்தம் ஒன்றை வரித்துக் கொண்டார். கம்போடியாவை தவிர, வேறந்த நாட்டிலும் அந்த சித்தாந்தம் எடுபடவில்லை. கம்போடியப் புரட்சியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அவா, பொல்பொட்டிற்கு இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால்,கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி, சர்வதேச கம்யூனிஸ்டுகளின் அமைப்பான மூன்றாம் அகிலத்தில் உறுப்பினராக இருக்கவில்லை. அது குறித்து அவர்கள் அக்கறைப் படவுமில்லை.

  பொல்பொட் முன்மொழிந்த “மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்” பின்வரும் அவருடைய தர்க்கவாதத்துடன் நியாயப் படுத்தப் பட்டது. “ஒவ்வொரு நாட்டு மக்கள் இயக்கமும் அதற்குரிய மார்க்சிய-லெனினிசத்தை கொண்டுள்ளது. கம்போடியாவில் வேர் விட்ட, க்மெர் சித்தாந்தம் ஒன்றை வகுப்பதே எமது இலக்கு ஆகும். ஆகவே, கட்சி உறுப்பினர்கள் மார்க்சிய நூல்களை படிக்க வேண்டியதில்லை, அந்த நூல்களை க்மெர் மொழியில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை.” உலகில் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியும், தனது உறுப்பினர்கள் மார்க்சிய நூல்களை படிக்கத் தேவையில்லை என்று கூறியதில்லை. அந்த வகையில், பொல்பொட்டும், க்மெர் ரூஜும் தனித்துவமானவர்கள். அவர்கள் புரட்சியாளர்கள் தான். ஆனால், நிச்சயமாக மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்கள் அல்ல.பொல்பொட் முன்மொழிந்த புதிய சித்தாந்தப் பிரகாரம், நாட்டுப்புற விவசாயிகள், கம்போடியாவின் பாட்டாளி வர்க்கமாக கருதப் பட்டனர். கம்போடியாவின் பொதுவுடமைப் புரட்சிக்கு, அந்த வர்க்கத்தினரே தலைமை தாங்க வேண்டும் என கற்பிக்கப் பட்டது.க்மெர் ரூஜ் என்ற விடுதலைப் படையில் போராளிகளாக சேர்பவர்கள், மார்க்சிய லெனினிசம் படிக்க வேண்டிய கடமை இருக்கவில்லை. அவர்களது வர்க்கப் பின்னணியே போதுமானது.

  ஒருவர் செம்படையில் சேரவேண்டுமானால் அதிகமில்லை என்றாலும் ஓரளவிற்காவது மார்க்சியம் பற்றி அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால், போல்பாட் தன்னுடைய புரட்சி படையில் இருப்பவர்களுக்கு மார்க்சிய லெனினியத்தை பற்றி தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுத்ததில்லை. போல் பொட்டை கம்யுனிச மார்க்சிய புரட்சியாளாராக எல்லாம் யாரும் ஏற்று கொண்டதில்லை. அவர் தன்னுடைய முகத்தை கம்யுனிச தாழிக்குள் சென்று புதைத்து கொண்டால் அதற்க்கு என்ன செய்வது.

  கம்யுனிசத்தில் வன்முறை இல்லை என்று நான் கூறவில்லை. ஆயுதம் ஏந்தி தான் போராட வேண்டும். எந்த ஆயுதத்தை?.. அறிவு என்கிற ஆயுதத்தை ஏந்தி போராட வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சி என்பது யாருக்காக என்பதை மக்களுக்கு முன்னால் அம்பல படுத்த வேண்டும். அம்பானி,அதானி,டாடா போன்ற பெரு முதலாளிகளின் வளர்ச்சி என்பது தேசத்தின் வளர்ச்சி அல்ல வீழ்ச்சி என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும். ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், நாட்டை சுரண்டும் தரகு முதலாளிகள் போன்றவர்களுக்கு எதிராக பெருவாரியான உழைக்கும் மக்கள் தான் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும். மாவோயிஸ்ட் போன்ற ஆயுதம் தாங்கிய குழுக்கள் அல்ல. அதனால்,யாருக்கும் எந்த லாபமும் இல்லை.

  ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்த சொல்லி மார்க்சோ இல்லை எங்கெல்சொ யாரையும் வற்புறுத்தவில்லை… ஒற்றுமையாக சேர்ந்து அறிவை ஆயுதமாக்கி தான் போராட வேண்டும் … ஒரு வேலை அந்த அமைதி போராட்டத்தை நசுக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்கத்தின் துணை கொண்டு முதலாளித்துவம் ஒடுக்க நேர்ந்தால் அதற்க்கு ஆயுத(வன்முறை) போராட்டம் மட்டுமே தான் தீர்வு… உதாரணத்திற்கு மானேசரில் நடந்த மாருதி ஆலை போராட்டம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு..”போராளிகள் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எதிரி தான் தீர்மானிக்கிறான்” என்கிற மாஒவின் வாசகம் இங்கு நினைவு கூற தக்கது ….

 27. ராகுலன்

  ஆயிரக் கணக்கான உயிர்களை பலி கொண்ட ஜோசப் ஸ்டாலின் தான் உங்களுக்கு உண்மையான சோசியலிஸ்ட் என்றால் இனி உங்களுடன் பேசி பிரயோஜனமில்லை. மானேசர் போரட்டத்தைப் பற்றி நீங்கள் எழுதும் விதத்தில் இருந்து உங்களுக்கு வன்முறை தவிர வேறு எதுவும் பிடிக்காது என்று நன்றாகத் தெரிகிறது.

  ஒன்று மட்டும் சொல்லி உங்களுடன் என் வாதத்தை முடித்துக் கொள்கிறேன்.

  உங்களுக்கு அம்பானி வில்லன் என்றால் வீதியில் பிச்சை எடுகின்றவர்களுக்கு நீங்கள் அம்பானி.

 28. “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” – இந்த சொற்களை திரு ராகுலன் அவர்கள் மேலே பயன்படுத்தி உள்ளார். சமத்துவம் வேண்டுவோர் எந்தவித சர்வாதிகாரத்தையும் விரும்பமாட்டார்கள். கம்யூனிசம் ஒரு மக்கள் விரோதக் கொள்கை என்பது தெளிவாகி விட்டது. சர்வாதிகாரம் எந்த உருவில் வந்தாலும், எந்த பெயரில் வந்தாலும் மனித இனம் அதனை அனுமதிக்காது. பல கோடி மக்களை படுகொலை செய்தவர்கள் ரஷ்ய, சீன கம்யூனிஸ்டுகள். தியானன்மென் படுகொலையை நியாயப்படுத்திப் பேசும் கம்யூனிசத்தை ஆதரிக்கும் திரு ராகுலன் பரிதாபத்துக்கு உரியவர்.

  தலாய்லாமா அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டதை சீன ஊடகங்கள் இன்றுவரை பொதுமக்களுக்கு வெளியிடவில்லை. இந்தியாவில் பணியாற்றும் சீனர்கள் , இங்கு இன்டர்நெட்டில் இந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். கம்யூனிஸ்டுகளின் யோக்கியதை இவ்வளவு தான். சீனாவிலும், இரஷ்யாவிலும் இப்போது இருப்பது கம்யூனிசம் அல்ல என்றாலும், இதற்கு முன்னரும் எந்த நாட்டிலும் , கம்யூனிசம் என்பது இருந்ததில்லை. சர்வாதிகாரம் மட்டுமே இருந்தது. திரு இராகுலன் அவர்களுக்கு நடந்துள்ள மூளைசலவை பற்றி நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். வெளியுலகில் உள்ள பல உண்மைகளை அறிய எல்லாம் வல்ல இறைசக்தி அவருக்கு அருள் புரியட்டும். வையகம் வளமுடன் வாழ்க.

  கம்யூனிசம் என்பது கேரளாவில் இடது கம்யூனிஸ்டுகள் தங்கள் எதிர்க்கட்சியினரையும், உள்கட்சி அதிருப்தியாளர்களையும் எப்படிக் கொன்று ஒழித்தனர் என்று , மேடையிலேயே கர்வமாக சொல்லி மற்றவரை மிரட்டிய மார்க்சிஸ்ட் தலைவர் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இது கம்யூனிசம் அல்ல, அது வேறு என்கிறார் திரு ராகுலன் அவர்கள். அதுவேறு என்கிற கம்யூனிசம் எங்கேயும் எப்போதும் இருந்ததில்லை. இனியும் வராது. அது ஒரு அயோக்கியனின் கற்பனை. மனிதரில் பல நிறங்களும், பல சுவைகளும் உண்டு என்பதை ஏற்காத எந்த தத்துவம் ஆனாலும் அது அயோக்கியர்களின் கடைச்சரக்கே. கம்யூனிசம் என்பது எந்த மண்ணுக்கும் ஏற்றதல்ல.மனித இனத்துக்கே அது ஒரு விரோதமான தத்துவம்.

 29. இராகுலன் கூறும் கம்யூன்சம் என்றும் எவ்விடத்திலும் இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை. கம்பூனிசத்தில் தொடங்கும்; பின் சர்வாதிகாரமாக உயிரைப் பலிகொள்ளும். இராகுலன் போன்றவர்களால் திரிபுவாதம் முதலிய கலைச் சொற்களால் சமாதானம் கூறப்படும்.

 30. ஐயா, வெள்ளை வாரணன் அவர்களே, எப்படிடீய் யா, மே 10 ஆம் தேதியே , மோடி உட்கார்ந்தார் என்றால் 15 வருடங்களுக்கு சாதனை புரிவார் என்று எழுதினீர்கள் !!!!!!!!!!!!!!!உங்கள் வாக்கு ஸ்தானத்தில் ( 2 ஆம் இடம் ) யாருய்யா !!! சொன்னது இல்லை இல்லை ,எழுதினது பலிச்சுடுத்து. இன்றைக்குத்தான் இந்த கட்டுரையைப்பார்த்தேன்.வாழ்க ,வாழ்க .உம்முடைய எழுத்தில் மேதா விலாசம் பளிச்சென்று தெரிகின்றது..உண்மையுடன் …..ஜால்ரா இல்லை .நம் நாத்திக மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு ஒரு விண்ணப்பம் …திருக்குறள் கனகசுப்புரத்தினம் அவர்கள்” வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சியை மெகா தொலைக்காட்ச்சியில்,தினமும் காலை 7.30 மணிக்கோ அல்லது மாத இதழ் ” கவனகர் முழக்கம் ” (வெறும் ரூபாய் 20 மட்டுமே ) கேட்டோ ,படித்தோ பாருங்கள் …உங்கள் சிந்தனைகள் கண்டிப்பாக மாறுபடக்கூடும் . இதற்கும் நீங்கள் போன ஜென்மத்தில் கொஞ்சமாவது புண்ணியம் செய்து இருக்கவேண்டும். இது அதீதமல்ல ……சத்தியம்.

 31. அன்புள்ள திரு ஜானவி புத்திரன் அவர்களே,

  நான் சோதிடன் அல்ல. என் கருத்தை எழுதினேன். அவ்வளவுதான். எதேச்சையாக அது நடந்துள்ளது. அதற்கு நான் காங்கிரஸ் காரர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். ஏனெனில் அளவு கடந்த ஊழல்கள், விலைவாசி உயர்வு , அளவு கடந்த தேசத்துரோகம் ஆகியவை காங்கிரஸ் காரர்கள் நம் நாட்டுக்கு அளித்த பரிசு. அதன் விளைவே இந்த தேர்தல் முடிவுகள். மோடி வெற்றிபெறுவார் என்று தான் எழுதினேன்.
  நம் தமிழ் நாட்டில் ஒரு ஆனந்த விகடன் வாசகர் அதிமுக 37, பாஜக கூட்டணி 2 திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி ஆகியவை தமிழ் நாட்டில் சைபர் ( பூஜ்யம் ) என்று ஏப்ரல் 24-ஆம் நாளுக்கு முன்பே மிக துல்லியமாக கணித்து முதல் பரிசு வாங்கியுள்ளார். உண்மை என்னவெனில் , சாதாரண தமிழக வாக்காளர்களுக்கு திமுக வெற்றி பெறாது என்பதும், திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்பதும், மோடி தான் அடுத்த பிரதமர் என்பதும் தேர்தல் நடந்த நாளுக்கு முன்பே தெரிந்திருந்தது. ஆனால் நமது மீடியாவில் உள்ள அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் எதிர்ப்பாளர்கள் சிலர் மட்டுமே, திமுகவுக்கு 25 நிச்சயம், காங்கிரஸ் எப்படியும் 100 இடத்துக்கு மேல் ஜெயித்துவிடும் என்றெல்லாம் உளறிக்கொண்டிருந்தார்கள். தங்கள் பாராட்டுக்கு நான் தகுதி உடையவன் அல்ல. ஏனெனில் என்னைவிட துல்லியமாக கணித்து பரிசு பெற்றவர்கள் ஏராளம் உள்ளனர். இருப்பினும் தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 32. வெள்ளை வாரணன் அவர்களே ! தமிழ்நாட்டை விடும் …நம் பரந்த பாரத தேசமல்லவோ பெரியது!!!! குறிப்பாக 15 வருஷம் திரு மோடிதான் பிரதமாராக இருப்பார் என்று சொல்லி இருந்தீர்களே அதனை அப்படியே ,திரு சந்திரபாபு நாய்டு பலருக்கும் தெரியுமாறு பெருமிதமாக அறிவித்தும் விட்டாரே ……உம்முடைய அந்த வாக்கு பலத்தைத்தான் வியந்தேன் . உள்ளமும் வெள்ளை ……பெயரிலும் வெள்ளை …வாழ்க .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *