வன்முறையே வரலாறாய்…- 24

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

’அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

இந்தியப் பிரிவினை தொடர்பான வன்முறை வங்காளம் மற்றும் பிகாரிலிருந்து இன்றைய பாகிஸ்தானின் பகுதிகளுக்கு நகர்ந்தது. பிகாரில் இந்துக்கள் தொடுத்த எதிர் தாக்குதல்கள் முஸ்லிம் லீகின் அவதூறுப் பிரச்சாரங்களை இப்பகுதிகளில் தொடர்ந்து நடந்து, அதுவே மேலும் வன்முறை பரவக் காரணமாக அமைந்தது. இன்றைய பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணங்களைச் சார்ந்த முஸ்லிம் லீக் மற்றும் பிற பகுதிகளைச் சார்ந்த முஸ்லிம்கள் தங்கள் பிரதிநிதிகளை பிகாருக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு நடந்தவற்றை அறிந்து வருவதற்காக. அவ்வாறு சென்றவர்களுடன் சேர்ந்து கொண்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர்கள், பிகாரின் நிகழ்வுகளைப் பாகிஸ்தான் பகுதிகளுக்கு கொண்டு சென்றார்கள்.

கலவரத்தால் கொல்லப்பட்டவர்களின் மண்டையோடுகள், படங்கள், உடைபட்ட மசூதிகளின் செங்கற்கள், கிழிக்கப்பட்டuntitled குரானின் பக்கங்கள் போன்றவற்றைக் கொண்டு சென்ற மேற்படி பிரதிநிதிகளும், அலிகர் மாணவர்களும் அவை பிகாரில் இந்துக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையால் உண்டானதாகப் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பிரச்சாரம் முஸ்லிம்கள் அதிகம் வசித்த வடமேற்கு இந்தியாவில் குறிப்பாக வட மேற்கு எல்லைப்புற மாகாணங்களில் மிக உக்கிரமாக நிகழ்த்தப்பட்டன. ஆயிரம் மடங்கு ஊதிப் பெருக்கப்பட்ட பொய்த் தகவல்களாலும், காஃபிரி இந்துக்களுக்கு எதிரான மனோபாவத்தாலும் முஸ்லிம் பகுதிகள் குலுங்கின. “வட மேற்கு எல்லைப் பிராந்தியத்தில் பிகாரிகளைப் பழி வாங்குவோம்; இரத்தத்திற்கு ரத்தமே பதில்” என முஸ்லிம்கள் அங்கு வசித்த இந்துக்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து டிசம்பர் 1946-ஆல் இந்து மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வடமேற்குப் பிராந்தியத்திலிருக்கும் ஹசாரா மாவட்டத்தில் ஆரம்பமானது. அந்தக் கலவரம் மிக விரைவாக முஸ்லிம்கள் அதிகமிருக்கும் பிற பகுதிகளுக்கும் பரவியது. அங்கு நடந்த வன்முறை குறித்த தகவல்களை எழுத வேண்டுமென்றால் ஒரு தனிப் புத்தகமே எழுத வேண்டியிருக்கும் என்பதால் அதனைக் குறித்து சுருக்கமாக இங்கு காண்போம்.

NWFP என்றழைக்கப்படும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் முஸ்லிம்களல்லாதவர்கள் வெறும் 8 சதவீதமே வசித்ததால், அங்கு வாழ்ந்த இந்து மற்றும் சீக்கியர்கள் மிக விரைவாகவே அழித்தொழிக்கப் பட்டார்கள். அவர்களின் (இந்து/சீக்கிய) கடைகளும், வியாபாரத் தலங்களும் கொள்ளையடிக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டன. இந்துக் கோவில்களும், சீக்கிய குருத்வாராக்களும் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப் பட்டன. ஏராளமான இந்து மற்றும் சீக்கியர்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டு முஸ்லிம்களுக்கு வலுக்கட்டாயமாக மணம் செய்து வைக்கப்பட்டார்கள். இருப்பினும் ஜனவரி 1947-வரை அந்த வன்முறை பெரும்பாலும் ஹசாரா மற்றும் டேரா இஸ்மாயில்கான் மாவட்டங்களுக்குள் மட்டுமே அடங்கியிருந்தது.

ஆனால், பிப்ரவரியில் முஸ்லிம் லீகினால் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை (Civil disobedience) முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மீதான தாக்குதல்களை துரிதப்படுத்தியது. கலவரம் அங்கிருந்த பிற மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. முஸ்லிம் லீகின் குண்டர்கள் இந்து மற்றும் சீக்கியர்களை மிரட்டி அவர்களைக் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தியதுடன், கொள்ளைகளையும் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார்கள்.

1947-ஆம் வருட ஏப்ரல் மாதத்தில் டேரா இஸ்மாயில்கான் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருந்த முஸ்லிம்கள் அல்லாதோரின் கடைகளும், வீடுகளும் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்து, சீக்கியர்கள் அந்தப்பகுதிகளை விட்டு விரட்டப்பட்டார்கள். ஏறக்குறைய 1200 இந்து மற்றும் சீக்கியர்களின் வியாபாரத்தலங்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இன்னும் சில கிராமங்களிலிருந்த அத்தனை இந்து/சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் மதம் மாறாவிட்டால் கொல்லப்படுவார்கள் என மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். கிராமங்களை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற இந்து/சீக்கியக் குடும்பங்கள் வழி மறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களின் பெண்கள் கவர்ந்து செல்லப்பட்டார்கள்.

mountbatten1947

வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் இந்து/சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை கட்டுக்கடங்காமல் 1947-இல் இருந்து ஜனவரி 1948 வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜனவரி 22, 1948 அன்று பயங்கர ஆயுதங்கள் தாங்கிய ஒரு பெரும் முஸ்லிம் கும்பலொன்று, முஸ்லிம் லீக் குண்டர்களுடன் இணைந்து பாராசினாரில் அமைந்திருந்த ஒரு அகதி முகாமைத் தாக்கியது. அதில் 138 இந்து/சீக்கியர்கள் கொல்லப்பட்டு, 223 பெண்கள் அவர்களால் கவர்ந்து செல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் சிறிது காலத்திற்குப் பிறகே துவங்கியது. 1947 மார்ச் 4-ஆம் தேதியன்று லாகூரில் இந்து மற்றும் சீக்கிய மாணவர்கள் இந்தியவைப் பிரித்து பாகிஸ்தான் அமைப்பதற்கு எதிராக ஒரு பேரணியை நடத்தினார்கள். அவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்திய போலிசார் பலரைக் கொன்றார்கள். நகரின் மற்றொரு பகுதியில் நடந்த இதே போன்றதொரு பேரணி முஸ்லிம் குண்டர்களால் பயங்கரமாகத் தாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் கலவரம் செய்ய ஆரம்பித்தார்கள். லாகூரின் பல இந்து மற்றும் சீக்கியர்கள் கத்தியால் குத்தப்பட்டார்கள். அவர்களின் கடைகளும், வியாபாரத்தலங்களும் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் எரிக்கப்பட்டன.

அந்தி சாய்வதற்குள் முப்பத்தியேழு இந்து மற்றும் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். லாகூரில் துவங்கிய அக்கலவரம் பின்னர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான அமிர்த்சர், ராவல்பிண்டி, மூல்தான், ஜீலம் மற்றும் அட்டோக் பகுதிகளுக்குப் பரவியது. மார்ச் 5-ஆம் தேதி லாகூரின் பிற பகுதிகளுக்குப் பரவிய கலவரம் இந்து/சீக்கியர்களின் பகுதிகளைக் குறி வைத்து தாக்கத் துவங்கியது. பின்னர் மார்ச் 11-ஆம் தேதி கலவரம் சிறிது அடங்கியது.

அமிர்த்சரில் முஸ்லிம்கள் அதிகம் வசித்தாலும் அங்கே அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை. இருப்பினும் மார்ச் 6-ஆம் தேதி ஷரிஃபுரா பகுதியில் ஒரு ரயிலை நிறுத்தி அதில் பயணத்துக் கொண்டிருந்த இந்து மற்றும் சீக்கியர்களைக் கொன்றார்கள். கொல்லப்பட்ட இந்து/சீக்கியர்களின் பிணங்களுடன் அந்த ரயில் அமிர்த்சர் ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களின் கொலை வெறியாட்டம் அமிர்த்சரிலும் தொடங்கியது. அமிர்த்சர் மருத்துவமனை பிணங்களால் நிரம்பி வழிந்தது. உடலிலிருந்து ஏறக்குறைய துண்டிக்கப்பட்ட தலயுடைய பிணங்களும், வயிற்றை வெட்டிப் பிளந்ததால் குடல் வெளியே சிதறித் தொங்கும் உடலையுடைய பெண்களும், கை கால்கள் வெட்டப்பட்ட பயங்கரமான பல உடல்களும் அந்த மருத்துவமனையில் நிரம்பி வழிந்தது. அவ்வாறு இறந்தவர்களில் பெருவாரியானவர்கள் இந்து மற்றும் சீக்கியர்களே.

மார்ச் 7-ஆம் தேதி அமிர்த்சரைச் சுற்றிலும் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. மார்ச் 8-ஆம் தேதிக்குள் நகரத்தில் ஏறக்குறைய 140 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். கணக்கிலங்காத பலர் எரியும் நெருப்பில் தப்ப முடியாமலும், இடிந்த வீடுகளின் அடியிலும் சிக்கி மாண்டு போனார்கள். வன்முறை தொடர்ந்து மேலும் ஒரு வார காலத்திற்கு நடந்தது. இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் உடைமைகள் தகர்க்கப்பட்டு அவர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். முஸ்லிம் அல்லாதோரின் எல்லாத் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன.

Migration India
1947: Sikh carrying his wife on his shoulders in convoy migrating to East Punjab after the division of India. (Photo by Margaret Bourke-White/Time & Life Pictures/Getty Images)

இதற்கு இணையாக மார்ச் 5-ஆம் தேதி மூல்தானில், கத்திகள், கோடாலிகள், ஈட்டிகள் போன்ற ஆயுதங்கள் தாங்கிய பெரும் முஸ்லிம் கூட்டமொன்று இந்து மற்றும் சீக்கிய மாணவர்கள் நடத்திய ஒரு பேரணியைத் தாக்கியது. அதில் பலர் படுகாயமடைந்தார்கள். அதனைத் தொடர்ந்த மூன்று நாட்களுக்கு மூல்தானில் வசித்த் இந்து/சீக்கியர்கள் மீது வெறித்தனமான தாக்குதல்களை இடைவிடாமல் தொடர்ந்து நடத்தினார்கள். பிற பகுதிகளைப் போலவே இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. மூல்தானின் காச நோயாளிகளுக்கு வைத்தியம் செய்து வந்த முக்கிய மருத்துவமனையான ஸ்ரீகிருஷ்ண பகவான் காசநோய் மருத்துவமனையைத் தாக்கிய முஸ்லிம்கள் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அத்தனை பேர்களையும் படுகொலை செய்த பின்னர் மருத்துவமனையைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

மூல்தானின் குருத்வாராக்களும், கோவில்களும் தகர்க்கப்பட்டு, ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டன. பல கோவில்கள் தீக்கிரையாகின. அக்கோவில்களுக்குச் சென்றிருந்த – ஜோக் மயா, ராம் தீர்த், தேவ்புரா மற்றும் தேவ்தா கு ஆலயங்கள் – பக்தர்கள் அனைவரும் சூழப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். பல இளம் இந்து, சீக்கியப் பெண்கள் கைப்பற்றப்பட்டு தூக்கிச் செல்லப்பட்டார்கள்.

இவற்றையெல்லாம் விட ராவல்பிண்டி மாவட்டத்திலிருந்த நகர மற்றும் கிராமங்களில் வசித்த இந்து மற்றும் சீக்கியர்கள் சுதந்திரத்திற்கு முந்திய கலவரங்களின் பேரழிவினைச் சந்தித்தார்கள். எப்போதும் போல படுகொலைகளும், கற்பழிப்புகளும், கொள்ளையும், தீயிடலும், கட்டாய மதமாற்றங்களும் முஸ்லிம்களால் இந்து/சீக்கியர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்தப் பயங்கரங்களின் ஒன்றிரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு காண்போம். அத்தனை இங்கே எழுதிவிட முடியாது என்னும் காரணத்தினால்.

மார்ச் 6–ஆம் தேதி முஸ்லிம் குண்டர்கள் ராவல்பிண்டியைச் சேர்ந்த இந்து மற்றும் சீக்கியர்களைத் தாக்கத் துவங்கினார்கள். வீட்டை எரிப்பதும், அங்கு வசிப்பவர்களைக் கண்ட துண்டமாக வெட்டியெறிவதும், பிடிபட்டவர்களை கட்டாய மதமாற்றம் செய்வதும், சீக்கியர்களின் தலைமுடி மற்றும் தாடியை வெட்டியெறிவதுமாக அந்தக் கலவரம் கட்டுக்கடங்காமல் கொளுந்து விட்டு எரிந்தது. ஆனால் சில பகுதிகளில் இந்து மற்றும் சீக்கியர்களின் எண்ணிக்கை முஸ்லிம்களுக்கு இணையாக இருந்தது. அந்தப் பகுதிகளைச் சேர்ந்த இந்து மற்றும் சீக்கியர்கள் தங்களைத் தாக்கும் முஸ்லிம்களின் மீது எதிர்த்தாக்குதல்கள் நடத்திப் பல முஸ்லிம்களைக் கொன்றார்கள்.

இதனைக் கண்ட முஸ்லிம்கள் தங்களுக்கு உதவுவதற்காக பிற பகுதி முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர்களை வரவழைத்தார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்து/சீக்கியர்கள் மீதான கலவரம் தொடர்ந்து நடந்தது.

மார்ச் 7 மற்றும் 8 தேதிகளில் முஸ்லிம் லீக், பதினொன்று இந்து மற்றும் சீக்கியப் பிரதி நிதிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியே ஏற்படுத்துவது அந்தப் பேச்சு வார்த்தைகளின் நோக்கம். ஆனால் அந்தப் பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்க வந்த பிரதி நிதிகளில் ஏழு பேர்களைப் பிடித்த முஸ்லிம் கும்பலொன்று அவர்களை அந்த இடத்திலேயே படுகொலை செய்தது. அங்கிருந்து இரண்டு பிரதிநிதிகள் மட்டுமே தப்பிச் சென்றார்கள்.

 (தொடரும்)

One Reply to “வன்முறையே வரலாறாய்…- 24”

  1. இன்றைய மாலை செய்தி

    ஈராக்கில் மசூதிகள் – வழிபாட்டு மையங்களை இடித்து தள்ளிய ஜிகாதிக்கள்
    பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூலை 05, 6:31 PM IST

    ஈராக்கில் மசூதிகள் – வழிபாட்டு மையங்களை இடித்து தள்ளிய ஜிகாதிக்கள்

    மொசூல், ஜூலை 5-

    ஈராக்கில் கடந்த மாதம் மொசூல் நகரத்தை கைப்பற்றிய ஜிகாதிக்கள் வரலாற்று சிறப்புமிக்க வடக்கு நகரத்தின் புராதன வழிபாட்டு தலங்கள் மற்றும் மசூதிகளை இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர்.

    வடக்கு நைன்வெஹ் மாகாணத்தில் 4 சூபி ஆலயங்கள், 6 ஷியா மசூதிகள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பான புகைப்படங்களை ஐ.எஸ். ஜிகாதி குழு இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது. சன்னி மற்றும் சூபி ஆலயங்கள் புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதும், ஷியா மசூதிகள் மற்றும் வழிபாட்டு மையங்கள் வெடிகுண்டுகள் மூலம் தகர்க்கப்பட்டதும் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

    தங்கள் மூதாதையர்கள் கட்டிய இந்த ஆலயங்கள் இடிக்கப்பட்டது கடும் வேதனை அளிப்பதாக கூறிய அப்பகுதி மக்கள், அவை அனைத்தும் நகரின் அடையாளங்கள் என்று குறிப்பிட்டனர். இரண்டு தேவாலயங்களை போராளிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    என்ன அன்பு கருணை பாருங்கள் . இந்த கொடுமைகளை நியாயப்படுத்தும் வஹாபி தீவிரவாத சன்னிக்களை கடவுள் என்ன செய்வார் ? அது சரி கடவுள் இருந்தால் இப்படி அராஜகம் செய்வோரை விட்டுவிடுவாரா ? பதிலுக்கு ஷியாக்கள் என்ன செய்யப்போகிறார்களோ என்று பதறுகிறார்கள் பொதுமக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *