மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2

மதசார்பின்மை மாயையில் இருந்து வெளிவந்த முஸ்லீம் சஹோதரர்கள் மற்றும் அதிலிருந்து இன்னமும் வெளிவராத முஸ்லீம் சஹோதரர்கள்……. பாஜக மற்றும் மோதி பற்றி கொண்டுள்ள அச்சங்கள் யாவை மற்றும் மோதி சர்க்காரிடமிருந்து இவர்களது அபிலாஷைகள் யாவை என்ற விஷயங்கள்………. இண்டியா டிவி தொலைக்காட்சியினர் நிகழ்த்திய *ஆப் கீ அதாலத்* (உங்கள் ந்யாயாலயம்) என்ற நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. மேற்கண்ட விவாதம் ஹிந்தி / உர்தூ / ஹிந்துஸ்தானி என்ற பலபாஷைகள் கலந்த ஒரு மொழிநடையில் நடத்தப்பட்டது. இந்த பாஷைகளில் பரிச்சயம் இல்லாத அன்பர்களுக்காக இந்த நிகழ்ச்சியின் சாராம்சம் மூன்று பாகங்களில் ஆன இந்த வ்யாசத்தில் பகிரப்படுகிறது.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி…

குற்றச்சாட்டு எண் – 2

2014 தேர்தலில் மோதி ஜெயித்த பின்னர் பாராளுமன்றத்தில் முஸல்மாணிய எம் பிக்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. யூனியன் ப்ரதேசங்கள் உள்பட கிட்டத்தட்ட 27 மாகாணங்களிலிருந்து ஒரு முஸல்மாணிய எம்.பி கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. 80 எம்பிக்களைக்கொண்ட உத்தரப்ரதேசத்திலிருந்து ஒரு முஸல்மான் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. உத்தரப்ரதேசத்தில் முஸ்லீம்களது ஜனத்தொகை 18-20 சதமானமாகும்.

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala):-

15ஆவது லோக்சபாவில் 543 எம்பிக்களில் முஸல்மாணியர் 29 பேர். இது 5 சதமானத்துக்கும் குறைவு.

முஸல்மாணியரது ஓட்டுக்களால் ஜீவிதமாக இருந்த காங்க்ரஸ் கட்சியில் 206 எம்பிக்களில் முஸ்லீம்கள் 9 பேர் மட்டிலும். இந்த எண்ணிக்கை 5 சதமானத்துக்கும் குறைவு.

மேலும் கேளுங்கள். சென்ற லோக்சபையில் இருந்த முஸ்லீம் எம்பிக்களின் செயல்பாடு எப்படி என்று. லோக்சபையில் இருந்த 29 முஸ்லீம் எம்பிக்களில் 19 பேருடைய செயல்பாடு எப்படி இருந்தது என்றால் ஐந்து வருஷ காலத்தில் ஒருமுறை கூட இவர்கள் தங்கள் வாயைத் திறந்ததில்லை. ஜெனாப் அஸாதுத்தீன் ஒவைஸி மற்றும் ஜெனாப் ஸையத் ஷா நவாஸ் ஹுஸைன் போன்ற இரண்டு எம்பிக்கள் மட்டிலுமே முஸல்மாணியர் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி லோக்சபையில் விவாதித்துள்ளனர்.

இதை மனதில் வைத்து நான் உங்களிடம் கேழ்க்க விரும்புகிறேன். நமக்கு வாய்மூடி மௌனியான வாய் தைக்கப்பட்ட மக்கள் ப்ரதிநிதிகள் லோக்சபையில் தேவையா? வாய்மூடி ஏதும் பேசாது ரப்பர் ஸ்டேம்புகளாகவும் மௌனிகளாகவும் பாராளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் மக்கள் ப்ரதிநிதிகள் நமக்குத் தேவையா? யோசித்துப் பாருங்கள்.

உத்தரப்ரதேசத்தில் ஸ்ரீ முலாயம் சிங்க் ஆட்சிக்கு வந்த பின்னர் 175 மதக்கலஹங்கள் நிகழ்ந்துள்ளன. அங்கு எத்தனை முஸ்லீம் எம் எல் ஏக்கள் உள்ளனர். ஒரு அல்லாகே பந்தே (அல்லாவின் ஆள்) என்று சொல்லத் தகுந்த முஸல்மானாவது தன் வாயைத் திறக்க யோசனையாவது செய்திருப்பாரா உத்தர ப்ரதேச சட்டசபையில்.

நமது முஸல்மான் சமூஹத்துக்கு ரிவர்ஸ் கியரில் வருவது தற்போது மிகவும் அவச்யம். முதலில் நாம் கல்வியில் மேம்பாடு எய்துவோம். கல்வியில் முன்னேறாத சமூஹம் வாய் திறவாத….. சமூஹத்துக்கு உபகாரமாக இல்லாத எம்பிக்களையே உத்பத்தி செய்யும்.

muslims-in-aap-ki-adalat

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

வாய் திறவா மௌன எம்பிக்கள் வாராமல் (தேர்ந்தெடுக்கப்படாமல்) இருப்பதே மேல் என்று சொல்கிறீர்களா?

ஜெனாப் ஸையத் ஜாஃபர் (Syed Zafar) :-

ஸ்வதந்த்ரத்துக்குப்பிறகு…… ஹிந்துஸ்தானத்தில் இன்றைய தினத்தில் 20 கோடி முஸ்லீம்கள் இன்றிருக்கிறோம் என்ற நிலையில் நாம் கல்வி பற்றி யோசிக்க வேண்டும். ஸ்வதந்த்ர ஹிந்துஸ்தானத்தின் முதல் கல்வி மந்த்ரி முஸ்லீம். அதற்குப் பின் நாம் பின்னடைந்து விட்டோம். அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் ஒரு அரசியல் கட்சியின் (பல செக்யுலர் அரசியல் கட்சிகளின்) கிட்டத்தட்ட எழுதப்படா அஜெண்டா நம் சமூஹத்தை கல்வியற்றவர்களாக வைத்திருப்பது. இதற்கு ஒரு வழிமுறையாக நம்மைக் கொம்பு சீவி வைத்திருப்பதையும் ….வலதுசாரி சக்திகளைப் பற்றிய தேவையில்லாத பயத்தை நமது மனதில் நிரந்தரமாக வைத்திருப்பதையும்….. இலக்காக வைத்திருந்தனர் அவர்கள்.

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

நீங்கள் முந்தைய காங்க்ரஸ் சர்க்காரின் செயல்பாட்டைப் பற்றிப் பேசுகிறீர்கள். மோதி சர்க்கார் என்ன செய்யவிருக்கிறது? முஸ்லீம்களுக்கு கல்வி கிடைக்குமா? வேலை கிடைக்குமா?

ஜெனாப் ஸையத் ஜாஃபர் :-

இதுவரை கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் விஷயத் தெளிவுடன் எந்த அரசியல்வாதியாவது….. அரசியல் கட்சியாவது….. முறையாக சிந்தித்துள்ளார்களா என்றால் அது மோதி அவர்கள் என்றும்….. அக்கட்சி பாஜக என்றும்…. நிச்சயம் சொல்வேன். பாஜக இது பற்றி Vision Document என்று ஒரு ஆவணம் தயார் செய்துவருகிறது.இந்த ஆவணம் ஹிந்து அல்லது முஸல்மான் என்று ஏதோ ஒரு சமூஹத்திற்காக தயாரிக்கப்படவில்லை. மாறாக முழு பாரத வர்ஷத்திற்காகவும் அனைத்து மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டுவதற்குத் தோதான வளர்ச்சித் திட்டங்களையும் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகளுடன் கூடிய கல்விக்காகவும் திட்டம் தீட்டப்படுகிறது பாஜகவில்.

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

மோதி அவர்கள் “அச்சே தின் ஆனே வாலே ஹைன்” – “நல்ல காலம் பிறக்க இருக்கிறது” என்று சொல்கிறாரே. இது ஹிந்துக்களுக்கு மட்டிலுமா அல்லது முஸல்மாணியர் உள்ளிட்ட அனைத்து சமூஹத்தினருக்குமா?

ஜெனாப் ஸையத் ஜாஃபர் (Syed Zafar) :-

தற்போது நிலைமை எப்படி என்றால்…………. ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களாகிய நாம்…… அனைத்து மக்களும்….. ரயில் நிலையத்தில் ப்ளாட்ஃபாரத்தில் உள்ளோம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ரயில் வண்டி கிளம்பத் தயாராக உள்ளது. நம் சமூஹம்(முஸ்லீம் சமூஹம்) கல்வியில் பின் தங்கியுள்ளது. நமக்கு ஏசி போகியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் சரி…….. ஜெனரல் கம்பார்ட்மெண்டிலாவது முண்டியடித்து ஏறவேண்டும். ஏறி ப்ரயாணம் செய்து இலக்கை அடைய வேண்டும். இலக்கை அடையவில்லை என்றால் இதே ப்ளாட்ஃபாரத்திலேயே தங்கி விடுவோம். இதே வெற்று வாக்குறுதி அரசியல்வாதிகள் பின்னால் ஓடுவோம். அதே பொய் வாக்குறுதிகள் அளிக்கப்படும். அப்படியே கொம்பு சீவி விடப்படுவோம். ஏமாற்றப்படுவோம். வெற்று வாக்குறுதிகள் எப்போதாவது நிறைவேற்றப்பட்டிருந்தால் நாம் இன்றைய நிலைமையில் உள்ளது போல் பின் தங்கி இருந்திருக்க மாட்டோம். வளர்ச்சி இலக்கை நோக்கி முன்னேறுவோமாக.

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

ஜாஃபர் சாஹேப் (ஸரேஷ்வாலா சாஹேப்) நீங்கள் கிட்டத்தட்ட 12 வருஷம் மோதி அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளீர்கள். அதற்காக மிரட்டல் உருட்டல்கள் — கொலை மிரட்டல்கள் வரை சந்தித்துள்ளீர்கள். நீங்கள் குஜராத்தில் இருந்திருக்கிறீர்கள். அங்கு எந்த அளவு வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பது நிதர்சனம். ஆனால் வெளியே மற்ற மாகாணங்களில் இருக்கும் முஸல்மாணியர் யாரிடம் முகத்தொடு முகம் கொடுத்து எங்கள் ப்ரச்சினைகளைப் பகிர முடியும்? பா ஜ கவில் முஸ்லீம் தலைமை என்று ஏதும் இல்லை.

நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள முடியுமா? எதிர் காலத்தில் உங்களது அரசியல் செயல்பாடு என்ன? பங்களிப்பு என்ன?

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா :-

நான் வ்யாபாரி. அரசியலில் நான் என்ன பங்களிக்க முடியும்? ஆனால் இதுவரை நான் எனது சமூஹ மக்களுக்கு எப்படி உதவிகரமாக இருந்திருக்கிறேனோ அப்படியே தொடருவேன். இன்ஷா அல்லாஹ்! இன்னமும் முயற்சி செய்வேன்.

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

இந்த தேர்தலில் பாஜக 7 முஸ்லீம்களுக்கு டிக்கட் கொடுத்துள்ளது. எல்லோரும் தேர்தலில் தோற்றுப்போயுள்ளனர். பெருமளவில் முஸ்லீம்கள் பொதுவில் ஹிந்து வேட்பாளர்களுக்கே வாக்களிக்கின்றனர். அது மட்டிலும் என்ன? பாஜக தரப்பிலிருந்து தேர்தலில் நிற்கும் முஸ்லீம்களை முஸ்லீம்களாகவே கூட நாம் கருதுவதில்லை. பாஜக தரப்பிலிருந்து ஒரு முஸ்லீம் பெருந்தகையான இன்னொருவர் விடுபட்டு விட்டார். ஜெனாப் முக்தார் அப்பாஸ் நக்வி. அவருக்கு டிக்கட் கொடுத்திருந்தால் அவரும் தோற்றுப்போயிருப்பார்.

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) :-

பாஜக தரப்பிலிருந்து தென்படும் முஸல்மாணிய முகங்கள் வெறும் டோக்கனிஸத்தின் பாற்பட்டு என்று சொல்கிறீர்கள். செயல்பாடுகளில் உத்சாஹம் பொருந்திய முஸ்லீம் முகங்கள் யாரும் இல்லை என்று சொல்ல வருகிறீர்கள். ஓரளவு உண்மை தான். ஆனால் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். முஸ்லீம்களும் பாஜகவுடன் பணியாற்ற வேண்டும். பாஜகவிற்கும் முஸ்லீம் கார்யகர்த்தர்களுக்கு உத்சாஹம் அளிக்க வேண்டும். அவர்களது பங்களிப்பை விஸ்தரிக்க வேண்டும். இரு தரப்பிலிருந்தும் கைகோர்த்தால் தான் டோக்கனிஸத்திலிருந்து வெளிவரும் படுக்கு சாத்யம் ஆகும்.

Modi_kite_1

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

ஸ்வதந்த்ரத்திற்குப் பிறகு மிக அதிகமாக காங்க்ரஸ் சர்க்கார் தான் அரசாட்சியில் இருந்துள்ளது. ஆனால் முஸல்மாணிய சஹோதரர்களுக்கு வாக்குறுதிகளை மட்டிலும் கொடுத்துள்ளார்களே ஒழிய சமூஹத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. பாஜக முஸல்மாணியரின் சமூஹ முன்னேற்றத்துக்கு என்ன செய்யும்?

ஆஸிஃபா கான் சாஹிபா (Ms. Asifa Khan ):-

சஹோதரரே, நம்முடைய விரோதி யார் நண்பர் யார் என்ற விஷயத்தைக் கூட இன்னொரு அரசியல் கட்சி தான் நமக்குச் சொல்லித்தர வேண்டுமா? முஸல்மாணியர்களாகிய நாம் நாமாகவே இந்த விஷயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள முயற்சி செய்யக்கூடாதா?

குஜராத்தில் மோதி சர்க்கார் ஹிந்துக்களுக்காக அல்லது முஸல்மான் களுக்காக என்று ப்ரத்யேகமாக எந்த கார்யத்தையும் செய்வது கிடையாது. மோதி அவர்கள் எப்போது பேசினாலும் 6 கோடி குஜராத்திகள் என்று அனைத்து குஜராத்திகளுக்காகவும் தான் பேசுவார். அதே போல ஹிந்துஸ்தானம் என்று வரும் போது 125 கோடி ஹிந்துஸ்தானியரைப் பற்றியே பேசுகிறார். நாம் எல்லோரும் அதில் அடக்கம். ஹிந்து, முஸ்லீம், க்றைஸ்தவர் என்று குறுகிய பார்வையில் இருந்து வளர்ச்சி பற்றிப் பேசாது…… அனைத்து ஹிந்துஸ்தானியரையும் உள்ளடக்கிய ஒரு உயர்ந்த சம்வாதம்…… தேசத்தில் மோதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் அரவணைத்து அனைவரும் வளர்ச்சியில் பங்களிக்கும் ஒருங்கிணைந்த சமூஹகக் கட்டமைப்பை முன்னிலைப்படுத்தும் ஒரு தலைவர் நமக்குக் கிடைத்திருக்கிறார். இன்ஷா அல்லாஹ்! இது தொடருமானால் ஓட்டு வங்கி அரசியல் முடிவுக்கு வரும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மற்ற சஹோதரர்களுக்கு இணையாக முஸல்மாணிய சஹோதரர்களுக்கும் சம வாய்ப்பு கிட்டும்.

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

அந்த சஹோதரர் வளர்ச்சி முஸல்மாணியருக்கும் கிட்டுமா என்று அறிய விரும்புகிறார்.

ஆஸிஃபா கான் சாஹிபா(Ms. Asifa Khan) :-

குஜராத்தில் *கன்யா கேடம்பி* என்ற மகளிருக்கான கல்வித்திட்டத்தை மோதி அவர்கள் அறிமுகம் செய்திருந்தார்.

பெண் குழந்தைகள் குஜராத்தில் மிகவும் குறைவாக கல்வி கற்று வந்தனர். தப்பித் தவறி கல்வி கற்க விழைந்தாலும், குஜராத்தில் பாதியில் கல்வியை விட்டுவிடுதல் என்ற குறைபாடு …….20 – 23 சதமான அளவுக்கு முஸல்மாணிய பெண் குழந்தைகள் மத்தியில் இருந்தது.

ஜில்லா பரூச் அருகே உள்ள சான்ச்வே என்ற க்ராமத்தில் இந்த திட்டத்தால் கவரப்பட்ட ஒரு முஸல்மாணியப் பெருந்தகை 20 லக்ஷ ரூபாய் நன் கொடை அளித்துள்ளார். எதற்காக இந்தப் பெருந்தகை இவ்வளவு பெரும் தொகையை சர்க்காருக்கு கொடுக்க விழைந்தார் என்று அறிய முற்பட்டேன். இந்தத் திட்டத்திற்காக ஒவ்வொரு க்ராமமும் சர்வே செய்யப்பட்டது. கல்வி கற்காத ஒவ்வொரு குழந்தையையும் கல்வி கற்க வேண்டி பள்ளிகளில் சேரவேண்டி ஊக்குவிக்கப்பட்டனர். முழுமையாக முஸல்மாணிய பெண்கள் கல்வி பெறாததற்கு ஒரு முக்ய காரணம் பள்ளிகள் க்ராமத்துக்கு அருகில் அமையவில்லை என்று கண்டறியப்பட்டது. ஆதலால் க்ராமத்துக்கு மிக அருகில் பள்ளிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு நகரத்திலும் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.

முஸல்மாணிய பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெகு தூரத்துக்குச் செல்லாமல் ஓரளவுக்கு அருகாமையிலேயே பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று கல்வி கற்க முடியும் என்ற நிலைமையைக் கொணர்ந்ததும் கல்வி கற்பதில் உத்சாஹம் பெருகியது. தங்களது நகரத்திலிருந்து வேறு நகரத்திற்குச் சென்று கல்வி கற்க வேண்டும் என்ற நிலை இருந்தால் நாம் நம் குழந்தைகளை வேற்று நகரங்களுக்கு சென்று கல்வி கற்க அனுமதிப்பதில்லை. ஆனால் அருகாமையிலேயே கல்விச்சாலைகள் இன்று இருப்பதால் ஒவ்வொரு கல்லூரியிலும் புர்க்கா / ஹிஜாப் (முகத்திரை) அணிந்து முஸல்மாணிய பெண்கள் கல்வி கற்பதை குஜராத்தின் பல நகரங்களில் இன்று காணலாம்.

இந்த அளவுக்கு இது வரை குஜராத் மாகாணத்தில் வேறு எந்த முக்ய மந்த்ரியும்…… நரேந்த்ரபாய் மோதி அவர்களைப் போல்….. ஒரு கூர்மையான பார்வையுடன் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கல்வியை அணுகவில்லை.

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

ஜாஃபர் சாஹேப் நீங்கள் ஒரு வ்யாபாரி. மோதி சர்க்காரில் முஸல்மான்களுடைய வ்யாபாரம் அபிவ்ருத்தி அடைந்ததா?

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala):-

மோதி சர்க்கார் காலத்தில் பிந்தைய 10-12 வருஷங்களில் குஜராத்தில் ஏற்பட்ட வளர்ச்சி அதற்கு முந்தைய 50 வருஷங்களில் காணக்கிட்டாதது. நாங்கள் BMW கார் வ்யாபாரம் செய்கிறோம். 2008ம் வருஷம் நாங்கள் எங்கள் வ்யாபாரத்தை அஹ்மதாபாத்தில் ஆரம்பித்தோம். இங்கும், குஜராத் முழுதும் நாங்கள் எவ்வளவு வ்யாபாரம் செய்ய முடியுமென்று நினைக்கிறீர்கள்? அதிலும் குறிப்பாக எத்தனை முஸல்மாணியர்களுக்கு எங்கள் BMW கார் வ்யாபாரம் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

ரூபாய் 30 லக்ஷத்திலிருந்து ரூபாய் ஒன்றரை கோடி பெருமானம் வரைக்குமான விலை ரேஞ்சில் கிட்டக்கூடியது இந்த BMW கார். குஜராத் மாகாணத்தில் முஸல்மாணியர் 9 சதமானம். எங்கள் ஒட்டுமொத்த வ்யாபாரத்தில் 11 சதமானம் முஸல்மாணியருக்கு என்றால் எங்கள் சமூஹம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்று அனுமானிக்கலாம்.

2009, 2011 மற்றும் 2013ல் முறையே 53, 59 மற்றும் 63 கார்களை விற்பனை செய்திருக்கிறோம்.

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் மற்றைய ப்ரதேச முஸல்மாணியரும் இந்த அளவுக்கு வளம் பெற மோதி அவர்கள் வழி வகை செய்வாரா? பீஹாரிலும் உத்தரப்ரதேசத்திலும் எத்தனை முஸல்மாணியர்கள் இந்த அளவு பெருமளவில் வளம் பெற்றிருக்கிறார்கள்? இவர்களாலும் BMW கார் வாங்க முடியுமா?

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) :-

மோதி அவர்கள் முஸல்மாணியருடனான ஒரு உரையாடலில் அனைத்து மக்களும் வளம் பெருவதைப் பற்றி விவாதித்துள்ளார். அங்கிருந்த ஒரு காதூன் (மதிப்பிற்குரிய முஸல்மாணிய பெண்) உடன் ஆஸிஃபா கான் சாஹிபாவுமிருந்தார். அவர் நரேந்த்ரபாய் அவர்களிடம் நீங்கள் ஹிந்துஸ்தானத்தின் ப்ரதமமந்த்ரியாக ஆனால் முஸல்மாணியர் நலனுக்காகவும் பாடுபடுவீர்களா என்று கேட்டார். அதற்கு நரேந்த்ரபாய் அவர்கள் பதிலளிக்கையில்…….ஹிந்து மற்றும் முஸல்மாணியர் ஒரு வாஹனத்தின் இரு சக்கரம் போன்றவர்கள். இதில் ஒரு சக்கரம் பங்க்சர் ஆனாலும் …..பழுதானாலும்…… வாஹனம் இயங்காது என்று நான் நன்றாக அறிவேன் என்று கருத்து பகிர்ந்துள்ளார்.

Modinomics-Book-Cover1

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

மதர்ஸாக்களில் கல்வி கற்கும் குழந்தைகள் தொழிற்சாலைகளில் சென்று வேலை செய்வதற்கு வாய்ப்புகள் பெறுவதில்லை. மதர்ஸாவில் கொடுக்கப்படும் டிகிரிகளுக்கு வேலைவாய்ப்புகளில் மதிப்பு இருப்பதில்லை. மதர்ஸாக்களில் கம்ப்யூட்டர், ஹிந்தி, ஆங்க்லம் போன்றவை கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு……….. மதர்ஸாக்கள் வழங்கும் டிகிரிகள் மதிப்புள்ளதாக ஆக்கப்படுமா?

முஃப்தி எஹ்ஸாஸ் அஹ்மத் சாஹேப் (Mufti Ehsaz Ahmed) :- (All India Muslim Personal Law Board)

இது சம்பந்தமான கருத்தை மோதி அவர்கள் இங்கு முன்னர் காண்பிக்கப்பட்ட காணொலியில் பகிர்ந்ததை நாம் பார்த்திருக்கலாம். அதில் முஸல்மாணிய குழந்தைகளின் ஒரு கையில் கம்ப்யூட்டரும் இன்னொரு கையில் குரான்-ஏ-கரீமும் இருப்பதை தான் காணவிழைவதாக மோதி அவர்கள் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் ஸர் சையத் அவர்கள் இதே போல் முஸல்மாணியரின் ஒரு கரத்தில் விக்ஞானமும் இன்னொரு கரத்தில் குரான்-ஏ-கரீமும் இருப்பதை தான் விரும்பவதாகக் கருத்து கொண்டிருந்தார்.அதே போன்றதொரு கருத்தை மோதி அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்வதந்த்ரத்திற்குப் பிறகு முஸல்மாணியருக்கு சம வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட நாம் வெகுவாக முன்னேறியிருக்க முடியும். மோதி அவர்கள் தான் மதத்தின் பேரால் எந்த ஹிந்துஸ்தானியரையும் வித்யாசப்படுத்தி பார்க்க மாட்டேன் என்றும் அனைவருக்கும் நீதி கிடைக்க வழிவகை செய்வேன் என்றும் அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கொடுப்பேன் என்றும் சொல்லியுள்ளார். இது சரியான கருத்து.

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

மதர்ஸாக்களை நவீன மயமாக்குதல் என்பது காங்க்ரஸ் சர்க்காரின் திட்டம். அது நடைமுறையிலும் இருக்கிறது. 2007ம் வருஷம் ரங்கநாத் மிஷ்ரா கமிட்டியின் ரிபோர்ட் வந்துள்ளது அதன் பின்னர் ஸச்சார் கமிட்டியின் ரிபோர்ட் வந்துள்ளது. இந்த ரிபோர்ட்டுகள் முஸல்மாணிய சமூஹம் மிகவும் பின் தங்கிய நிலைமையில் இருப்பதை தெளிவாக விவரித்துள்ளது. நமது சமூஹத்தின் பின் தங்கிய நிலைமையை சரிசெய்வதற்கு இந்த ரிபோர்ட்டுகள் முன்வைத்த சிஃபாரிசுகளை இதற்கு முந்தைய சர்க்கார்கள் முழுமையாக அமல் செய்யவில்லை. மோதி சர்க்கார் இந்த கமிட்டி ரிபோர்டுகளின் சிஃபாரிசுகளை அமல் செய்யுமா?

ஆஸிஃபா கான் சாஹிபா (Ms. Asifa Khan) :-

முஸல்மாணிய சமூஹத்தின் நிலைமை பற்றி கமிஷன்கள் ரிபோர்ட்டுகள் என்ற படிக்கு கண்துடைப்பு வேலை செய்வதே இது வரை நிலைமையாக இருந்துள்ளது. இந்த கமிட்டி ரிபோர்ட் வெளிவந்த பின் ஆறு ஏழு வருஷங்களுக்கு UPA சர்க்கார் ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் எந்த சிபாரிசுகளும் முழுமையாக அமல் செய்யப்படவில்லை.

குஜராத்தில் ஸச்சர் கமிட்டியின் சிபாரிசுகள் எந்த அளவுக்கு அமல் செய்யப்பட்டுள்ளன என்பதை ஆராய குந்து கமிட்டி என்று ஒரு கமிஷன் நிறுவப்பட்டது. இந்த கமிஷன் தன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்த படிக்கு ஸச்சர் கமிட்டியின் சிஃபாரிசுகள் ஹிந்துஸ்தானத்தில் குஜராத் மாகாணத்தில் நிறைவாக அமல் செய்யப்பட்டிருக்கிறது என்று ரிபோர்ட் அளித்துள்ளது. இது பொது தளத்தில் அனைவரின் பார்வைக்கும் உள்ளது. யாரும் ரிபோர்ட்டை சரிபார்க்கலாம்.

muslims-felicitate-modi

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

நீங்கள் குஜராத்தில் ஸச்சர் கமிட்டி சிபாரிசுகள் முறையாக அமல் செய்யப்பட்டுள்ளன என்று சொல்கிறீர்கள். இவை ஹிந்துஸ்தானம் முழுதும் முறையாக அமல் செய்யப்படுமா என்று இந்த சஹோதரர் அறிய விரும்புகிறார்.

மௌலானா ஸாஜித் ரஷீதி சாஹேப் (Maulana SAjid Rashidi) – All India Imam Association :-

நமது சமூஹத்தில் பெரும்பாலான சஹோதரர்கள் ஒரு நேர்மறையான அணுகுமுறையல்லாது எதிர்மறையான கருத்துக்களுடன் மோதி சர்க்காரை அணுக விழைவதாக எனக்குப் படுகிறது. நாம் இந்த சர்க்காரிடமிருந்து நலத்திட்டங்களை பெற விழைந்தால் இந்த சர்க்காருடன் அணுக்கமாக பணி புரிவதற்கு நம்மை முதலில் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சர்க்காரிடமிருந்து மிக அதிகமான இடைவெளியை வளர்த்துக்கொண்டு இந்த சர்க்கார் நமக்கு இது செய்யவில்லை அது செய்யவில்லை என்று குற்றம் சாட்ட விழைவது சரியான செயற்பாடு இல்லை. நாம் நம்முடைய கருத்துக்களை இங்கு பகிர்வது உலக முழுதிலும் அனைத்து மக்களாலும் பார்க்கப்படுகிறது. எனவே இங்கு கேழ்க்கப்படும் கேழ்விகள் தெஹ்ஸீப் (Tezhzeeb – வினம்ரதை – பணிவு) உடன் கேழ்க்கப்படுவது முக்யம் என்று எனது சஹோதரர்களிடம் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

தேர்தலுக்கு முன்னால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மோதி சர்க்கார் ஆட்சிக்கு வந்தால் முஸல்மாணியர் தொல்லைக்கு உள்ளாவார்கள். குஜராத்தில் 2002ம் வருஷம் நிகழ்ந்தது போல் தேசம் முழுதும் மதக் கலஹங்கள் நிகழும் என்று அச்சமூட்டினர். ஆனால் இவ்வாறு அச்சமூட்டப்பட்டாலும் தேசம் முழுதும் ……. அதுவும் குறிப்பாக ……முஸல்மாணியர் அதிக எண்ணிக்கையில் உள்ள பாராளுமன்றத் தொகுதிகளிலும் கூட……பாஜக எம்பிக்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். உ.பி யில் மொராதாபாத், சம்பல், பிஜ்னோர், பீஹார் மாகாணத்தில் பீஹார் ஷெரீஃப் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். குஜராத் மாகாணத்திலும் ராஜஸ்தானத்திலும் ஒட்டு மொத்த பாராளுமன்றத் தொகுதிகளை பாஜக வெற்றி பெற்றமை முஸல்மாணியரின் ஏகோபித்த ஆதரவு இல்லாமல் பெற்றிருக்க முடியாது.

இந்த அளவுக்கு மோதியின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டுப் போட்ட முஸல்மாணிய சமூஹம் மோதி சர்க்காரிடமிருந்து வளமான வாழ்க்கை கிட்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?

ஜெனாப் ஸையத் ஜாஃபர் (Syed Zafar) :-

பாஜக தன் தேர்தல் அறிக்கையில் தாங்கள் செய்ய விரும்பும் கார்யங்களை பட்டியலிட்டுள்ளது. அதை அமல் செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். அவர்கள் சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா என்று பார்க்க முனைவதே நம் அனைவருக்கும் நன்மை பயக்கும். அதை விடுத்து நாம் இதற்கு முன்னர் என்ன நிகழ்ந்தது என்று பின்னோக்கிப் பார்ப்பதில் எந்த லாபமும் இல்லை.

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

தேர்தலுக்கு முன் மோதியைப் பற்றி அரசியல் கட்சிகள் முன் வைத்த முகம் அச்சம் தரத்தக்கது. தேர்தலுக்குப் பின் மோதி அவர்கள் பேசுவதைக் காண்கையில் மற்ற அரசியல் வாதிகள் முன் வைத்த ஒரு முகத்தையல்லாது பெரும் வேற்றுமையை காண்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்ற பின் நான் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் வண்ணம் ஆட்சி புரிவேன் என்று மோதி சொல்கிறார். அவ்வாறு அவர் செயல்பட முடியுமா என்று விளக்கவும்.

ஆஸிஃபா கான் சாஹிபா (Ms. Asifa Khan) :-

முஸல்மாணிய மற்றும் ஹிந்து இளைஞர் சமுதாயம் மோதி அவர்களின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் தனியொரு கட்சியாக பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்றது இந்த உத்சாஹமிகுந்த சமுதாயத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் தான். இப்போது அந்த நம்பிக்கையை அமல் செய்ய வேண்டும் என்ற படிக்கு மோதி சர்க்காருக்கு பொறுப்பு இரு மடங்கு ஆகிவிட்டது. இன்ஷா அல்லாஹ்! நான் மோதி அவர்களுடன் பணி செய்கையில் மதத்தின் அடிப்படையில் எந்த வேறுபாட்டையும் சந்தித்ததில்லை. மோதி அவர்கள் அனைத்து ஹிந்துஸ்தானியரையும் அரவணைத்து தேசத்தை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்துச் செல்ல விழைகிறார் என்று உறுதியாகச் சொல்லுவேன்.

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

நமது முஸல்மாணிய சஹோதரர்கள் அரசியல் என்று மட்டுமின்றி லையன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப், மருத்துவ சேவை சார்ந்த சங்கங்கள் என சமூஹத்திற்குப் பங்களிக்கும் அனைத்து துறைகளிலும் பங்கேற்க விழைய வேண்டும். அப்படிப் பங்கேற்றாலே நாம் முழுமையான மற்றும் துரிதமான வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும்

(தொடரும்)

One Reply to “மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2”

  1. இந்த கட்டுரை முழுவதையும் சுவனப்பிரியனில் பதிவு செய்துள்ளேன். தமிழ் நடைதான் மிகக் கஷ்டமாக உள்ளது. பரிதிமால் கலைஞா் காலத்து தமிழில் எழுதுகின்றீர்களோ ? எளிமையான தமிழில் எழுத வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *