மூலம்: Reality Check India வலைப்பதிவில் வெளியான கட்டுரை Love Jihad is about airgapping two different legal regimes
தமிழில்: ச.திருமலை
கடவுள் படைத்த இந்த உலகில் லவ் ஜிஹாத் என்றால் என்ன?
எந்தவொரு முஸ்லீமும் எந்தவொரு முஸ்லீம் அல்லாதவருடன் ஈடுபடும் காதல் லவ் ஜிஹாத் என்று அழைக்கப் படுகிறது.
ஒரு ஹிந்துப் பெண்ணுக்கும் முஸ்லீம் பையனுக்கும் நிகழும் காதலை லவ் ஜிஹாத் என்று அழைப்பதற்குக் கீழ்க்கண்ட கூடுதல் அம்சங்களும் கருதப் படுகின்றன.
1) ஏமாற்றும் நோக்கம்
2) பெண் வழக்கமாக அதிகம் படித்தவளாகவோ அல்லது நகரப் பகுதியில் வளர்ந்த பெண்ணாகவோ இல்லாமல் இருத்தல்
3) காதலின் மூலமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுதல்
மேற் சொன்ன காரணிகள் தவிர இதில் ஒரு சதித் திட்டம் இருப்பதாகவும் கருதப் படுகிறது. அதாவது மதத் தலைவர்களின் குழுக்கள் வேலை வெட்டி இல்லாமல் திரியும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு பணம், பயிற்சி மற்றும் பிற சலுகைகளை அளித்து சந்தேகம் கொள்ளாத அப்பாவி இந்துப் பெண்களைக் காதல் செய்து கவர்ந்து வருமாறு திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்பது. அப்படி காதல் செய்யப் படும் இந்து மற்றும் கிறிஸ்துவப் பெண்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற வைப்பதே அந்த சதித் திட்டம் என்று குற்றம் சாட்டப் படுகிறது.
இரண்டு இணையான சட்டங்களும் திருமண ஒப்பந்தமும்:
இந்தியாவில் ஒரு தனித்துவமான தனிநபர் சட்டம் இருக்கிறது. அதன் படி முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தின் படியும் இந்துக்கள் இந்து திருமண சட்டப் படியும் தத்தம் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர விசேஷ திருமண சட்டம் ஒன்றும் இருக்கிறது. அதாவது பதிவு திருமணம். அதன் படி எந்த இரு மதங்களிலும் மணமக்கள் திருமணம் செய்து கொண்டு பதிவு திருமணச் சட்டப்படி தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொள்வது. கேரள கிறிஸ்துவர்களும் கூட லவ் ஜிஹாதுக்கு தங்கள் பெண்களும் பாதிக்கப் படுவதாகப் புகார் கூறினாலும் கூட எளிமையான புரிதலுக்காக நான் கிறிஸ்துவ சீக்கிய மதங்களை இந்த உதாரணத்தில் இருந்து சற்று விலக்க்கிக் கொள்கிறேன்.
எந்தவிதமான சட்டப் படி திருமணத்தைப் பதிவு செய்திருந்தாலும் திருமணம் என்பது மணமக்களுக்கு இடையேயான ஒரு வித சட்டபூர்வமான ஒப்பந்தம் என்பதாகவே கருதப் படுகிறது. அது ஒன்றே அதை இருவர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் இருந்து வேறு படுத்துகிறது. மேலும் ஒரு திருமண ஒப்பந்தமானது கணவன் மனைவி இருவருக்கும் சில உரிமைகளையும் பாதுகாப்பையும் கடமைகளையும் வலியுறுத்துகிறது.
இந்து திருமணச் சட்டப் படி உரிமைகளும் கடமைகளும் அனேகமாக கணவன் மனைவி இருவருக்குமே பொதுவானவை. ஆனால் ஷரியா சட்டப் படி இருவருக்குமான விதிகள் பொதுவானவை அல்ல. ஷரியா சட்டப் படி ஒரு பெண்ணின் உரிமைகள் வெகுவாக குறைக்கப் படுகின்றன. மதசார்பின்மை என்னும் அரசு என்ற பெயரில் இஸ்லாமியர்களை சமரசப் படுத்தும் நோக்கத்தில் இந்த இரு வேறு விதமான திருமணச் சட்டங்கள் இந்தியாவில் நிலவுகின்றன. இந்தியாவின் முஸ்லீம்களைத் திருப்திப் படுத்த வேண்டிய இடியாப்பச் சிக்கலுக்காக இந்தியாவின் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் ஏனைய பிற சட்டங்கள் போலவே இதையும் சட்டமாக்கியுள்ளார்கள். ஆனால் எதுவுமே இலவசமாக வருவதில்லை. எல்லாவற்றிற்கும் உண்டான விளைவுகள் இருக்கவே செய்யும்.
தடுமாறும் நீதி அமைப்புகள்:
இப்படி இரு வேறு விதமான திருமண சட்டங்கள் நிலவும் நிலையில், ஒரு சட்டத்தின் படி (ஷரியா) பெண்ணின் உரிமைகள் அதிரடியாகக் குறைக்கப் பட்டுள்ள நிலையில், பெண்கள் கட்டாயப் படுத்தி இஸ்லாமுக்கு மதம் மாறும் திருமணங்களின் விளைவுகளும் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. பெரும்பாலான லவ் ஜிஹாத் திருமணங்களில் இந்துப் பெண்களே அதிக அளவில் மதம் மாறி இஸ்லாமிய இளைஞர்களைத் திருமணம் செய்து கொள்வதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இந்து ஆணைத் திருமணம் செய்யும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இந்துவாக மணம் மாறிக் கொண்டு இஸ்லாமை விட அதிக அளவிலான உரிமைகளைப் பெறும் வாய்ப்பு ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. அத்தகைய திருமணங்கள் நடைமுறையில் அனேகமாக அதிகம் நடப்பதில்லை (ஒரு சில மிகக் குறைவான விதிவிலக்குகள் இருக்கலாம் – தமிழ் நடிகை குஷ்பு, தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் பாத்திமா பாபு போல).
ஆகவே லவ் ஜிஹாத் திருமணங்களில் பொதுவாக எப்பொழுதுமே இந்துப் பெண்ணே வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றம் செய்யப் பட்டு, அவள் அதுநாள் வரையிலும் அனுபவித்து வந்த பல்வேறு உரிமைகள் பறிக்கப் படுவதே நடைமுறையில் நடக்கிறது. அந்தத் திருமணங்கள் விசேஷ பதிவுத் திருமணச் சட்டத்தின் படி பதிவு செய்யப் படுவதற்குப் பதிலாக ஷரியா சட்டப் படியே வலுக்கட்டாயமாக நடத்தப் படுகின்றன. அதன் படி மதம் மாறுவது கட்டாயமாகின்றது. அப்படி மதம் மாறாவிட்டால் ஷரியா சட்டப் படி அந்தத் திருமணம் செல்லுபடியாகாது. அந்தத் திருமணத்தை ஒரு இஸ்லாமிய மத குருமார் நடத்தித் தர மாட்டார். மணக்கள் இருவருமே இஸ்லாமியர்களாக இருந்தால் ஒழிய அது இஸ்லாமிய நிக்காஹாக கருதப் படாது. ஆகவே மணப் பெண் முதலில் மதம் மாறிய பின்னரே ஷரியா சட்டப் படியான திருமணம் நடைபெறுகிறது. இதையே பதிவு திருமணச் சட்டப் படி செய்திருந்தால் மணப் பெண் மதம் மாற வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆக இங்கு திருமணத்தின் முக்கிய நோக்கமே மதம் மாற்றுவது என்பதாகிறது. அதனாலேயே இது லவ் ஜிஹாத் என்று வழங்கப் படுகிறது.
எனது பார்வையில் இந்த பிரச்சினை:
ஒரு இந்துப் பெண் ஷரியா சட்டப் படி திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவள் தன் அடிப்படை உரிமைகளைத் தானே இழந்து விடுகிறாள். ஆக அவள் சம்மதத்துடனேயே திருமணம் செய்து கொண்டிருந்தாலும் கூட அது உண்மையாகவே விவரம் தெரிந்து செய்து கொண்ட திருமணமாகக் கருதப் படாது. அவளை அறியாமலேயே முழு விபரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே தன் அடிப்படை உரிமைகளை இந்த ஷரியா திருமணம் மூலமாக இழந்து விடுகிறாள் என்பதே உண்மை நிலவரம்.
விபரம் தெரிந்தும், ஷரியா திருமணத்தில் உள்ள விபரீதத்தை உணர்ந்தும், சம்மதிப்பது குறித்து:
ஷரியா திருமணம் செய்து கொள்ளும் இந்து பெண்கள் அனைவருமே வழக்கமாக தங்களுக்கான அடிப்படை உரிமைகள் என்ன என்பதை அறிந்து கொண்ட விபரமறிந்த பெண்களாக இருப்பதில்லை. தங்களது உரிமைகள் குறித்த விபரமின்மை, அறியாமையில் இருக்கும் பெண்களே இந்த ஷரியா திருமணத்தைச் செய்து கொள்கிறார்கள். என்னிடம் இது குறித்து எந்த ஆதாரமும் கிடையாது. இருந்தாலும் இப்படி ஷரியா சட்டப் படி திருமணம் செய்து கொள்ளும் இந்த இளம் இந்துப் பெண்கள் எல்லாம் இது முஸ்லீம்களின் முறைப்படி செய்யப் படும் ஒரு திருமணச் சடங்கு மட்டுமே மற்றபடி தங்கள் அடிப்படை உரிமைகள் எதையும் தாங்கள் இழப்பதில்லை என்று தாங்களாகவே விபரம் தெரியாமல் எண்ணிக் கொள்கிறார்கள் என்று யூகம் செய்கிறேன். அவர்கள் முதலில் உண்மை தெரியாமல் திருமணம் செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். அப்பொழுது அவளது காதலன் ஏற்கனவே திருமணமானவன் என்பதோ அல்லது இன்னொரு திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பவன் என்பதோ அதில் ஷரியா சட்டப்படி எந்தத் தவறும் கிடையாது என்பதையோ இந்த விபரம் புரியாத அப்பாவி இளம் இந்துப் பெண்கள் உணர்வதில்லை. கர்ப்பமாதலோ அல்லது பிள்ளை பெற்றுக் கொள்வதோ பிரச்சினையை இன்னும் சிக்கல் ஆக்கவே செய்கிறது. ஏனென்றால் விவாகரத்துச் செய்வதோ அல்லது திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவதோ இந்த ஷரியா சட்டப்படி அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த வகையான பரிதாபகரமான திருமணங்கள் அனைத்திலும் இதுவே பொதுவான சரடாக, பொதுவான பிரச்சினையாக அமைகிறது. ஆகவே லவ் ஜிஹாத்தில் உள்ள முக்கியமான ஏமாற்று என்னவென்றால் பெண்கள் அவர்கள் அடிப்படை உரிமைகளை இழப்பார்கள் என்ற உண்மை தெரியாமல் ஷரியா திருமணம் செய்து கொள்வதே ஆகும்.
பரிந்துரை:
கலப்பு மதத் திருமணங்களைத் தடை செய்வது என்பது முட்டாள்த்தனமான ஒரு காரியமாக அமைந்து விடும். நான் அதை எந்தவிதத்திலும் மறைமுகமாகக் கூடப் பரிந்துரைக்க விரும்பவில்லை. ஆனால் ஷரியா திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் தங்கள் உரிமைகளை இழப்பது குறித்து சில பரிந்துரைகளைச் செய்ய விரும்புகிறேன்.
ஷரியா சட்டப் படி முஸ்லீமாக மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் அனைவருக்கும் தாங்கள் எந்தவிதமான உரிமைகளை இழக்கப் போகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அதைப் படித்துப் பார்த்து கையொப்பம் இடச் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலமாக குறைந்த பட்சம் அவர்களுக்கு தாங்கள் தங்களது அடிப்படை உரிமைகளை இழக்கப் போகிறார்கள் என்ற குறைந்த பட்ச விபரமாவது தெரிய வரும். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வது அவர்களது உரிமை/விருப்பம்.
இந்த உரிமை இழப்புப் படிவம் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருத்தல் அவசியம். கிராமப்புறப் பெண்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். கிராமப்புற இந்துப் பெண்கள் தாங்கள் இழக்கப் போகும் உரிமைகளை முழுப் புரிதலுடன் அறிந்து கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். உதாரணமாக,
அ) இந்தத் திருமணத்தின் மூலமாக உன் அடிப்படை உரிமைகளை இழப்பாய். அது உனக்குத் தெரியுமா? நீ நிச்சயமாக அவற்றை இழக்க விரும்புகிறாயா? ஆம்/இல்லை
ஆ) உன் கணவன் உன் சம்மந்தம் இன்றியே வேறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை இந்தச் சட்டம் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா? ஆம்/இல்லை
இ) நீ உன் கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமைகளை இந்தச் சட்டத்தின் படி திருமணம் செய்து கொண்டாய் இழப்பாய். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? ஆம்/இல்லை
என்பன போன்ற எளிய புரிதலைத் தரும் கேள்விகள் அந்த உரிமை இழப்பு ஒப்புதல் படிவத்தில் இருத்தல் வேண்டும்.
பல இந்துப் பெண்கள் முஸ்லீம் ஆண்களை மணந்து கொண்டு சந்தோஷமாகக் குடும்பம் நடத்துகிறார்கள். அவர்களது உரிமைகள் பற்றிய புரிதல்களுடன் திருமணம் செய்து அன்புடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்காக எழுதப் பட்டது அல்ல இந்தப் பதிவு.
ஒரு சில பெண்கள் ஷரியா திருமணத்திற்குப் பிறகும் சந்தோஷமாகவும் உரிமைகளை இழக்காமலும் வாழ்கிறார்கள் என்பதற்காக, ஏராளமான விபரம் அறியாத நகர்ப்புற மற்றும் கிராமத்துப் பெண்கள் விபரம் தெரியாமல் தங்கள் உரிமைகளை இழப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு இந்தத் திருமணம் மூலமாக தாங்கள் என்ன இழக்கப் போகிறோம் என்ற விபரங்களைச் சொல்லியே ஆக வேண்டும் . தங்கள் வாழ்வில் எடுக்கப் போகும் முக்கியமான முடிவான திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் தகவல்கள் அளிக்கப் பட வேண்டும். அந்தத் தகவல்கள் பரவலாகவும் எளிமையாகவும் அனைத்து இந்துப் பெண்களும் தெரிந்து கொள்ளும் விதத்தில் பரப்பரப் பட வேண்டும்.
( Idea of India குழுமத்திலிருந்து உங்களுக்காக வழங்கப் படும் இன்னொரு பதிவு இது).
இவ பேரு ரூமி நாத். அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் பர்க்ஹோல தொகுதி.
இவள் ஹிந்து. திருமணமானவள். கணவன் குழந்தை உண்டு. கடந்த வருடம் இஸ்லாமியன் ஜாக்கி ஜாகீர் என்பவனுடன் தொடர்பு முகநூல் மூலம் ஏற்பட்டு முதல் கணவன் விவாகரத்து பண்ணும் முன் கல்யாணம் செய்து கொண்டால் அந்த இஸ்லாமியனை.
இவர்களது கல்யாணத்துக்கு உறுதுணையாய் இருந்தது அஸ்ஸாம் அமைச்சர் சித்திக் அஹ்மத். இவள் இஸ்லாமிய மதத்துக்கு தன்னை மாற்றி கொண்டு தன பெயரை ராபியா சுல்தானா இட்டுகொண்டாள். பல எதிர்ப்புகள் இங்கே இருந்ததால் பங்களாதேஷ் சென்று விட்டாள்.
அந்த இஸ்லாமியன் இவள் மூலம் பல பண உதவியை பெற்று கொண்டு இவள் மூலமாக ஹிந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு இவள் அதற்கு உதவி இருக்கிறாள். பின்னர் அவன் இவளை துன்புறுத்த ஆரம்பித்தான் கொடூரமாக. கடைசியில் 15 லட்சம் ஒரு கார் கேட்டு கொலை செய்ய முயற்சிக்கிறான்..
இப்பொழுது மீண்டும் இவள் அருணாச்சல் போலீசிடம் தஞ்சம் புகுந்து அவன் மீது குற்ரம் சுமத்தி அவன் ஜெயிலில் இருக்கிறான்.
அந்த இஸ்லாமியன் ஜாகிர் இதற்கு அவன் கூறிய பதில் அனைத்தும் குரான் படி தான் செய்தேன் என்றான். முடிவில் தெரிந்தது அங்கே நடந்தது லவ் ஜிஹாத்.
ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால்..ஒரு சாதாரண குடும்பம் இன்று எண்ணற்ற பெண்கள் லவ் ஜிஹாத் வலையில் சிக்கி சீரழிந்து கொண்டு இருகிறார்கள்..இது அதிகாரபூர்வமான உண்மை..கட்டாய மதமாற்றம் மற்றும் பெண் விற்பனை அடிமைகளாக அனுப்ப படுகிறார்கள் இத மூலம்…காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முதல் இந்த அவலம் இருக்கிறது…இதை வெளிப்படையா சொல்ல தயக்கம் காட்டுகிறது அரசு..
இதை வெளிப்படையாக தேசிய அபாயமாக அறிவிக்க அரசும் ஊடகங்களும் முன் வரவேண்டும்..மத சார்பின்மைக்காக வாயை பொத்தி கொண்டு இருப்பது..இன்னும் பல பேர் வாழ்க்கைகள் துளைத்து விடும்…எத்தனை பேர் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் என்பதை வெளியே கொண்டு வரவேண்டும்..விழிப்புணர்வு கொடுக்கவேண்டும்.
– ரத்தினகுமார் வழக்கறிஞர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது
லவ் ஜிகாத் என்பதே அயோக்கியத் தனமானது. 2012 செப்டம்பர் மாதம் கேரள சட்ட மன்றத்தில் மாநில முதல்வர் திரு. உம்மன் சாண்டி , சி.பி.எம் சட்ட மன்ற உறுப்பினர் கே.கே. லாதிகா எழுப்பிய கேள்விக்கு அளித்த பதில் 2006 முதல் 2012 வரை 7713 பேர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறியுள்ளார்கள். இதில் 2667 இளம் பெண்கள் இஸ்லாத்திற்கு மாறியுள்ளார்கள். கேரள உயர் நீதி மன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு விசாரனைக்கு வந்த போது, நீதிபதி திரு.சங்கரன் கொடுத்த தீர்ப்பு சில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையாகும். 22வது பாராவில் சில அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் இவ்வாறு மத மாற்றம் நடைபெறுகிறது. அரசியல் ஷரத்து 25 கட்டாய மத மாற்றம் செய்ய அனுமதிக்கவில்லை. 23வது பாராவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாக்க உரிமை உள்ளது என்றும் இதற்காக தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கூற முழு உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அரசியல் ஷரத்து 25 தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கின்றது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை, ஆனால் இது குடும்ப முறையையும், கலாச்சாரத்தையும் சீரழிக்க முனைவதில்லை என்றும் தெளிபட கூறியுள்ளார்.
ஆ.சரவணன் ஈரோடு.
முஸ்லிம் ஆக மதம் மாறிய இந்து பெண் எந்த எந்த உரிமைகளை இழக்கிறார் என அட்டவணையையும் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக விளங்கும். அடுத்த தொடரில் எதிர் நோக்குகிறேன்.
1) “தமிழ் நடிகை” குஷ்புவா? அவர் தமிழ் பேசுவதால் தமிழ் நடிகை ஆகிவிடுவாரா? “சினிமா நடிகை” என்று வேண்டுமானால் கூறுங்கள்.
2) இந்து தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும். முஸ்லிம் மதம் என்றால் என்ன? அந்த மதத்தினர் நடத்தும் கொடுமைகள் என்ன?ஷரியத் சட்டம் என்றால் என்ன? அதில் பெண்களுக்கு தரப்படும் உரிமைகள் என்ன? என்பது பற்றி எல்லாம் சொல்லி வளர்க்க வேண்டும். அதற்கு முதலில் அந்த பெற்றோர்கள் அவற்றை பற்றி அறிந்துகொள்ள (to sensitize ) இந்து மத தலைவர்கள் ஒரு “சிற்றேடு” (booklet ) ஒன்று தயாரித்து மக்களிடம் விநியோகிக்கவேண்டும். அவற்றை படித்தபின் இந்து பெண்கள் ஷரியா சட்டம் நமக்கு சரியா வராது என்று உணர்வார்கள். இதை செய்யாமல் வேறு தேவையற்ற வேலைகளை செய்து கொண்டிருகின்றனர்.
3) முஸ்லிம் ஆண்கள் என்ன அவ்வளவு பேரழகன்களா? தாடியை வைத்து கொண்டு பிச்சைகாரர்கள் போல காணப்படும் இவர்களை எதற்கு இந்து பெண்கள் காதலிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. காதலுக்கு கண் இல்லை என்பது இதுதானோ? அவர்களின் கண்களை திறந்து விடுவது இந்து அமைப்பினருக்கு பெரிய கடமையாகும். அதற்கு booklets உதவும்.
4) மேற்படி booklet ல் அஸ்ஸாம் எம்.எல்.ஏ (இவள் தான் பெற்ற குழந்தையை கூட விட்டுவிட்டு வேறு ஒருவனுடன் ஓடுகிறாள் என்றால் இவள் ஒரு பெண்தானா?) பட்ட கஷ்டங்களை பட்ட அவஸ்தைகளை பட்ட அவமானங்களை பட்டியல் போட்டு காட்ட வேண்டும். அப்போதுதான் அந்த மதத்திற்கு மாறவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மனதில் பயம் வரும்)
இன்னும் விவரம் ஆக வெளியிட வேண்டும். இஸ்லாமிய பெண்களே கூட தலாக் செய்யப்பட்டால் அவர்களுக்கு ஜிவனம்சத்திற்கு சரியான வழி இஸ்லாத்தில் கிடையாது.
(1) திருமதி சசிரேகா (வயது 32) (முகவரி : 28, மோகன்புரி 2 வது தெரு ஆதம்பாக்கம், சென்னை 88) என்பவர் இம்ரான் அஹமது என்பவரை மணந்து பாத்தீமா மாஹீன் என்று மாறியுள்ளார்.
(2) திருமதி ரேவதி(வயது 34) (முகவரி: 50/51,சித்தி விநாயகர் 1 வது தெரு, அம்பேத்கர் நகர், சிருங்காவூர், விளங்காடுபாக்கம், சென்னை -52) என்பவர் மதம் மாறி ஜமிலா என்று மாறியுள்ளார்.
(3) செல்வி கௌரி (வயது 39) (முகவரி: 2,குமரகுரு 1 வது தெரு காமராஜர் சாலை, திருவான்மியூர் சென்னை 41) என்பவர் இஸ்லாம் மதம் மாறி GOWHAR என மாறியுள்ளார்.
(4) விஜயலட்சுமி (முகவரி: 8/328, நேருஜி 4 வது தெரு, புதிய காமராஜர் நகர், வியாசர்பாடி, சென்னை 39) என்பவர் பாத்தீமா பீவி ஆக மாறியுள்ளார்.
(5) குமார் (வயது 38) (முகவரி: 213, அன்னை இந்திரா காந்தி நகர் புதிய வண்ணாரபேட்டை, சென்னை 81) என்பவர் மதம் மாறி அப்துல்லாவாக மாறியுள்ளார்.
(6) அனுஷா (வயது 8) (முகவரி : மேற்கண்ட முகவரி) மதம் மாறி அனிஷா என்று மாறியுள்ளார்.
இப்படி தினந்தோறும் மதம் மாறி கொண்டே வருகிறார்கள். இதைபற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் கவலைபடாமல் பூஜை புனஷ்காரம், பஜனை செய்து கொண்டிருந்தால் இது இன்னும் பெரிய அளவில் நடக்கும். கோவிலில் “யாகம்” மட்டும் செய்து கொண்டிருந்தால் நமது மதம சேர்ந்த பெண்களை “தியாகம்” செய்ய வேண்டியதுதான். அவர்கள் மதம் மாறியதற்கான காரணம் என்ன என்று இந்து அமைப்புகள் விசாரிக்க வேண்டும் அவை மேற்கொண்டு நடக்காமல் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
லவ் ஜிஹாத் பல வருடங்களாக நமது நாட்டில் இருந்து வந்துள்ளது. இந்துக்கள் தான் நாம் மெஜாரிட்டி என்ற செருக்கில் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோம். ஒரு இந்து ஒரு கிறிஸ்தவரையோ அல்லது முஸ்லிமையோ காதலித்து மணந்து கொள்ளும் போது மதம் மாறுவது இந்துவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் இதர மதங்கள் மதம் மாறமலிருப்பதற்கு காட்டும் தீவிரமும், இந்துக்களின் விட்டுக் கொடுக்கும் தன்மையுமாகும். இதர மத பாஸ்டர்களும், முல்லாக்களும் பல காரணங்கள் காட்டி இந்துக்களை தங்கள் மதத்துக்கு இழுத்துக்கொள்வார்களே தவிர, தங்கள் மத்தினரை இந்துவாக மாற ஒரு போதும் அனுமதிக்கமட்டார்கள்! அப்படியே மதம் மாற்றாமல் இந்துவாகவே இருக்க விட்டாலும், குழந்தகளை மதம் மாற்றாமல் இருக்க மாட்டார்கள். இது மிகவும் plan செய்து செய்யப்படும் செயலாகும். இதர மதத்தினர் தங்கள் மதத்திலிருந்து ஒருவர் கூட வெளியில் செல்வதை விரும்புவதில்லை. இந்துக்களுக்கு என்று கண்காணிப்பதற்கு ஒரு குழுவோ , ஒரு மதத்தலைவரோ இல்லதது தன் இதற்கு காரணம். ஓவ்வொரு ஊரிலும் ஒரு இந்து மையம் அமைக்க வெண்டும். அந்த மையம் ஊரிலுள்ள இந்துக்களை கண் காணிக்க வெண்டும்; அவர்களுடைய நல்லது, கெட்டதில் பங்கேற்று அவர்களை வழி நடத்திச் செல்லவெண்டும். இந்த மையங்களை செயல் படுத்த பி ஜெ பி அரசு உடனே ஆவன செய்ய வெண்டும்.
I agree with Thulasi das in this issue.
Hindus are to blame for this.Take education. Most top schools are run by christian missionaries. Also,they preach their religion thro’ sermons, TV channels etc.,
There are many muslims & christian channels which are exclusively devoted to spreading their religion. HIndus also have a few channels like Sankara TV but that is not enough.
Also, we must make our brethen realise the true meaning of our religion. The religious heads/scholars who give religious discourses should make their langauge easier so that the common man can understand.
At present, it is highly theoritical & complex.
I see many hindus themselves making fun of Ramayana by asking inane questions like ” How did Ravana sleep if he had 10 heads?” etc.,
Ramayana & Mahabharatha have many inbuilt lessons which are used today in management theories, quality control concepts etc.,
Take Tsunami. When it happened, we had scores of christian heads visiting the spot & trying to rehabiliate the people. Of course, their inner motive was conversion, but they were visible. But what were our sankaracharyas & Jeeyars doing?
They should have directed their volunteers to render help & visited some of the spots to see for themselves. Of course, you can argue that their main concern is only about religion but religion is of no use if it is simply confined to the scriptures.
It is only the RSS which did the bulk of the work, but how many us even know that?
Swami Vivekananda said that by serving people, you serve God.
We have to do a lot of introspection, otherwise, a day may not be far off when hindus become a minority in India itself.
To my knowledge, i know 5 brahmin girls of high profile families and elite people have been trapped in to love jihad and got married to this soul harvesters who converted them to in islam. one girl name was changed to asha and went abroad, other three girls returned to parents home after some time and no news about the other one. same time marriages between brahmin girls and chirstianity is becoming increased day by day as a common affair. This is due to the parents mistake in not telling about the religions, our culture, heritage and about our gods and most importantly they never discussed with the children about ” love jihad ” and ” love Christ” both operations carried out by Abrahamic religions for soul harvesting done by shadow followers of shadow religions .
As long as Brahmins do not discuss this sort of social issues with friends, relatives and with their children and simply reading the sickular anti hindu news paper ‘The Hindu “, they will be blind folded without any idea and will lose their daughters for ever. parents realize it only after they lose their children. This is due to craziness to educate their children in English christian convents which drag them in to the trap by the followers of shadow religions.
எனக்கு தெரிந்து நமது தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் கடின உழைப்பாளிகள், சுத்தமானவர்கள். ஆனால் ஸ்மார்ட் சேவகர்கள் அல்லர். இல்லையெனில், இன்னும் தேசவிரோத செயல்களில் ஈடுபடும் மதமாற்றிகளை, அவர்களுக்கு உதவும் போலி தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதி வழிகளை, ஏன் இன்னும் பகிரங்கபடுத்தி நடவடிக்கை எடுக்கவில்லை? அதனால்தானே உதயகுமார் கும்பல்கள் ஆட்சியாளர்கள் மீதே வழக்கு தொடுப்பேன் என்று உதார் விடுகின்றனர்!, கள்ளகடத்தல் கும்பல்களை, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கயவர்களை, குண்டுவைக்கும் அமைப்புகளை, கல்லெறி கூட்டங்களை, இந்துக்களுக்காக வேலை செய்பவர்களை கண்டதுண்டங்களாக வெட்டி சாய்க்கும் அசுர சக்திகளை, அரசு இனம் கண்டு நடவடிக்கை எடுக்க இன்னும் எத்தனை இந்து தாய்மார்கள் தங்கள் தாலியை இழக்க வேண்டும்? இந்த லவ் ஜிகாத் குபல்கள், நமது இந்து இந்து சகோதரிகளை தங்கள் வலையில் வீழ்த்தும் வரை தங்கள் மத அடையாளமான மீசையை வழித்து, தாடி மற்றும் தொப்பி சகிதம் காட்சி தருவதில்லை. இதனை படிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த, உறவுக்கார சகோதரிகளுக்காவது விஷயத்தை சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். மற்றபடி ஆட்சியாளர்கள் செயலில் ஈடுபடுவதுபோல் எனக்கு இப்பொழுதெல்லாம் தோன்றுவதில்லை. இந்த எனது தெளிவை எம் குருதேவர் அய்யா வீரத்துறவி இராம. கோபால்ஜி 20 வருடங்களுக்கு முன்பே தீர்க்கதரிசனமாக சொன்னார். அதாவது, ” பா. ஜ க ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் பிரச்சனைகளுக்கு முடிவு வந்து விடும் என்று எண்ணாதே. அப்பொழுதும் இந்துக்கள் தங்கள் ஒவ்வொரு கோரிக்கைகளுக்கும் வீதிக்கு வந்து போராடித்தான் ஆகவேண்டும். அப்படி என்றால் இன்னும் நாம் பா. ஜ க வை ஏன் ஆதரிக்கவேண்டும் என்றால், மற்ற கட்சிகள் நம்மை மனிதராக கூட வகை வைப்பதில்லையே? போலி மதச்சார்பின்மை பேசும் வேற்று கட்சிகளை பொறுத்தவரை, இந்துக்கள் அவர்களுக்காக ஒட்டு போடும் எந்திரம் மட்டுமே”. ஆக இந்துக்கள் ஒவ்வொருவரும் நடமாடும் ஊடகங்களாக மாறி இத்தகைய விஷயங்களை தினமும் 10 பேருக்கு சொல்வோம். ஷாகா வில் இணைவோம். நமது சமய கருத்துக்களை நாம் ஆழ்ந்து படித்து மற்றவர்களையும் படிக்கவைப்போம். அதன்மூலம் ஒவ்வொருவருக்கும் சமய பற்றை ஏற்படுத்துவோம். ஒழுக்கமுள்ள தலைமுறையை உருவாக்குவோம். பின்பு எந்தகொம்பனாலும், நம்மை தங்களின் கீழ்த்தரமான தந்திர வலையில் வீழ்த்த முடியாது. “செயலில் ஈடுபட முன்வராத தனி மனிதனும், சமுதாயமும் தங்களுக்கு வரப்போகும் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள இயலாமல் மடிந்து விடுகின்றன” என்ற சுவாமி விவேகானதரின் சொற்களை பொன்மொழிகளாக நெஞ்சில் நிறுத்துவோம். தர்மமே வெல்லும்.
////Most top schools are run by christian missionaries. Also,they preach their religion thro’ sermons////
நாம் பண்டிகை, திருவிழா என்று பணத்தை விரயம் செய்து வருகிறோம். கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய அன்பு ஒன்றைத்தான். தூய அன்பை காட்டுவதற்கு பூஜை புனஷ்காரம் இத்தியாதிகள் எதுவும் தேவை இல்லை. அதற்காக பணத்தையும் வீணாக செலவிட வேண்டாம். இப்படி செலவிடப்படும் பணத்தை கொண்டு நாம் நமது இந்து பிள்ளைகளுக்கு என்று கல்விசாலைகள் திறந்தால் கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு இந்து குழந்தைகள் செல்ல வேண்டிய அவசியம் இராது. அங்கு படிக்கும் இந்து குழந்தைகளுக்கு ‘கண்ணன் ஒரு வெண்ணை “திருடன்”. அவன் கோபியருடன் கொஞ்சி கூடி விளையாடினான்’ என்ட்று சொல்லி தருகிறார்கள். மேலும் இந்து பெண் குழந்தைகள் அவர்களது நெற்றியில் பொட்டும் தலையில் பூவும் வைத்து கொள்ள அனுமதிப்பதில்லை. இது ஒரு கலாசார அழிவுக்கான சதி திட்டம்.
////HIndus also have a few channels like Sankara TV /// இதில் நாட்டில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் அக்கிரமங்களை எடுத்து கூறி ஆவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை கூறி இந்துக்கள் மனதில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதில்லை. ஆனால் சாமிக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பி கொண்டிருக்கின்றனர். திகவினர் கேட்கும் கேள்விகளுக்கு தக்க பதில்களை இந்த டிவி களில் பதில் தரலாம். ஆனால் அதை மட்டும் செய்யமாட்டார்கள்.
///But what were our sankaracharyas & Jeeyars doing?///// இவர்கள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை அறியாதவர்கள். கடவுளுக்கு மலர் மாலை சூட்டி கற்பூர தீபம் காட்டிவிட்டால் அதுவே இவர்களுக்கு பெரிய தன்னலமற்ற சேவை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். சுனாமியால் எவன் செத்தால் இவர்களுக்கு என்ன வந்தது? தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்று நினைக்கும் இவர்கள் போய் அங்கே மக்களை காப்பாற்றும் வேலையை செய்துவிடுவார்களா? ஆர்.எஸ்.எஸ் நல்ல பணிகளை செய்வது உண்மை. ஆனால் அது விளம்பரம் இல்லாமல் செய்வதால் அதன் தன்னலமற்ற சேவை பற்றி மக்களை அடைவதில்லை. ஆனால் திமுகாரன் ஆர்.எஸ்.எஸ் மீது சொல்லும் அபாண்ட பழிகளைதான் மக்களும் நம்பவேண்டியிருக்கிறது////.a day may not be far off when hindus become a minority in India itself./// அது நடக்கத்தான் போகிறது. ஆனால் அவர்கள் minority ஆக அல்ல அந்த இனமே கருவோடு பூண்டற்று போகிறது.
////“செயலில் ஈடுபட முன்வராத தனி மனிதனும், சமுதாயமும் தங்களுக்கு வரப்போகும் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள இயலாமல் மடிந்து விடுகின்றன” என்ற சுவாமி விவேகானதரின் சொற்களை பொன்மொழிகளாக நெஞ்சில் நிறுத்துவோம்///// அவர் வேறொன்றும் கூறியுள்ளார். “”‘பசியாய் உள்ள ஒருவனிடம் பகவத் கீதையை போதிப்பதை விட்டு விட்டு அவனது பசிக்கு சோறு கொடுங்கள்” என்றார். ஆனால் நமது மத தலைவர்கள் அதற்கு நேர் விரோதமாக தான் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் ஏழ்மை எங்கு இருக்கிறதோ அங்கு போய் சேவை செய்கிறார்கள். அவர்களது சேவையை கண்டு மகிழ்ந்து மனம் மாறி பின் மதம் மாறுகின்றனர். அப்போது நம்மவர்கள் உடனே கிறிஸ்தவர்களை “மத மாற்றிகள்” என்று ஏசுவார்கள். அவன் செய்யும் சேவையை நீ செய்தால் அவன் மனம் மாறுவானா? மதம் மாறுவானா? அதை செய்யாமல் உண்டியில் கொட்டு கொட்டு என்று பணத்தை கொட்டுகிறார்கள். அதை ஒரு நாள் எவனோ ஒரு திருடன் தூக்கி சென்று விடுகிறான். இல்லையென்றால் அந்த பந்தை கொண்டு திருவிழா என்ற பெயரில் “ஆபாசமான சினிமா பாட்டு கச்சேரி”, “வாண வேடிக்கை”,இத்தியாதி என்று பணத்தை வீண் விரயம் செய்வார்கள். என்றுதான் இவர்கள் தவறை உணர்ந்து திருந்துவார்களோ?