மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்

மாதொருபாகன் நாவல் விவகாரத்தை முகாந்திரமாக வைத்து, இந்துத்துவ இயக்கங்களையும், திருச்செங்கோட்டு மக்களையும், கவுண்டர் சமுதாய மக்களையும் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் பேசி தொடர்ந்து அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் யார்?

தீராவிட தறுதலைகள், முற்போக்கு முகமூடி அணிந்துள்ள  மார்க்ஸிஸ்ட்கள், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகள்.

இது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். இவர்களது சதி வலையிலிருந்து மீண்டெழுந்து அவதூறு, பொய், ஆபாச பிரச்சாரங்களை முறியடிக்கும் மன வலிமையையும் , அறிவையும் மக்கள் பெற்று புதிய பாதையை அமைத்துள்ளனர். விஷமத்தனமான பிரச்சாரங்களையும், நச்சு சதி வலைகளையும் அறுத்தெறிய புதிய ஆயுதத்தை, திருநீலகண்டனாக ஆலகால விஷத்தை உண்ட அம்மை அப்பனே, அந்த ஈசனே திருச்செங்கோடு மக்களுக்கு வழங்கி இருக்கிறார்.

Tiruchengode_sivan_hill_temple

நாவல் எழுதி நஞ்சு விதைத்து ஊர் உலகம் முழுக்க பரவி அம்மக்களை வதைத்து குற்றவாளிகளாகவும், காட்டு மிராண்டிகளாகவும் சித்தரித்து கூனி குறுகி இருக்க செய்தார்கள். இந்த அப்பாவி ஊர் மக்களின் கருத்தைக் கேட்க எந்த ஊடகத்திற்கும் காதுகளோ, கண்களோ, புலன்களோ ஒப்பவில்லை. முற்போக்கு மாஃபியா கும்பல்களும், தீராவிட விஷம கும்பலின் பிரச்சாரங்களும்,  அன்னிய மதங்களின் நச்சு பேச்சுகளும், நிதி ஆதாரங்களும், ஊடக பலங்களும் கிளப்பிய புழுதியில் உண்மை உலகிற்கு தெரியாமல் போய் விட்டது. ஆற்றாது அழுத மக்களின் கண்ணீரை ஆற்ற இறைவன் ஒரு வழி செய்து கொடுத்திருக்கிறான். அது தான் ” ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற முயற்சி.

பொதுவாக கடினமான உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் தெய்வ பக்திக்கும் பேர் போனவர்கள் கொங்கு பகுதி மக்கள். இந்த பிரச்சினையை எப்படி அணுகலாம் என்று கூடி பேசி, ஜனநாயக முறைப்படி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். பிரிவினைவாத, வகுப்புவாத, அடிப்படைவாத அமைப்புகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவதூறாகவும், ஆபாசமாகவும், கோவிலையும், கோவிலுக்கு வரும் பெண்களையும் அவமானப்படுத்தும் விதமாக எழுதப் பட்ட புனைவைக் கண்டு மனம் வெதும்பிய அந்த மக்கள், தங்களது எதிர்ப்புப் போராட்டில் ஒரு கட்டத்திலும் அகிம்சையைக் கைவிடவில்லை. இந்த தேசத்தின் பாரம்பரிய முறைப்படி உண்ணா நோன்பு இருந்தார்கள். காவல் துறையில் அரசியல் சாசன சட்டம் அனுமதிக்கும் படி சென்று புகார் அளித்தார்கள். இதற்கு ஒரு மறுப்பு செய்தி வெளியிடுங்கள் என்று கோரினார்கர். புனைவை உண்மையான வரலாறு என்று சொல்லி வாங்கிய கூலிக்கு மாரடிக்க வேண்டாம் என்றும், பொய்யை, புனை சுருட்டை உண்மை நிகழ்ந்த வரலாறு என்று புளுகுவதை தயவு செய்து நிறுத்துங்கள் என்றும் கோரினார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பும் கோரினார். தன் ஆபாச செய்கைக்காக தன் புத்தகத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் அறிவித்தார்.

ஆனால் இதை முன் வைத்து திருச்செங்கோட்டு இறைவனையும், கோவிலையும் கேவலப்படுத்தவும், தேர் திருவிழாவை தடுத்து நிறுத்தி சிதைக்கவும் அந்நிய கைக்கூலிகளிடம் பணம் பெற்றுக்கொண்ட சதி கும்பல்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த நிகழ்வை கருத்து சுதந்திரத்திற்கே ஏற்பட்ட கேடு என்றும், இந்திய அரசுக்கும் மக்களுக்கு இடப்பட்ட சவால் என்றும் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டனர். முற்போக்கு மாஃபியாக்களின் பிரச்சார பீரங்கிகள் திக்கெட்டும் முழங்கின. கருணாநிதி ஐயோ கொல்றாங்களே என்ற நாடகத்தை எப்படி அரங்கேற்றினாரோ, அதற்கு 100 மடங்கு மேலாக இந்த கும்பலின் ஆர்கெஸ்ட்ராக்களும், ஊடக விபச்சார நிறுவனங்களும் அவதூறுகளை அள்ளி அள்ளி அப்பாவி மக்கள் மீது வீசினார்கள்.

thiruchengode_arthanareeswarar_picமுற்போக்கு முகாம்களை சேர்ந்த இழிபிறவிகள், “திருவிழாவிற்கு போய் திருச்செங்கோட்டு பெண்கள் பல பேருடன் இருந்து குழந்தை பெற்ற வரலாறை நீங்கள் மறுக்க கூடாது” என்று கோஷம் போட்டார்கள். காலம் காலமாக கவுண்டர் சமூகத்தில் இப்படி திருவிழாவில், சென்று குழந்தை பெற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது என்று கூசாமல் சொன்னார்கள். அடிப்படை அற உணர்வு சிறிதும் அற்ற இந்த தறுதலைகள் தாங்களே விளக்கு பிடித்து பார்த்தது போல தங்கள் பிரச்சார ஊடகங்களில் தங்கள் சொந்த மண்ணின் மக்களை கேவலப்படுத்தினர். திருச்செங்கோட்டிற்குப் பிறந்தவனே என்று புதிய வசைகளை பரப்பி விட்டார்கள். வக்கிரம் பிடித்த மார்க்ஸிஸ்ட்கள், தீராவிட தறுதலைகளின் கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கான கற்பனை விழைவை திருச்செங்கோட்டு மக்கள் மீதும், தேர்திருவிழாவின் மீதும் ஏற்றி பிரச்சாரம் செய்தார்கள். சீன அடிவருடி மஞ்சள் பத்திரிக்கையான தி ஹிண்டு ஆங்கில நாளிதழ் எரிகிற வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்பதாக அவதூறுகளையும், ஆபாசங்களையும், திட்டமிட்ட பொய் பிரச்சாரங்களையும் தொடர்ந்து பரப்பியது.  அந்த நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகம் இந்த கருத்து வேசைத்தனத்தை தன் லாப வெறிக்காக ஊதி பெரிதாக்கி குளிர் காய்ந்தது. டைம்ஸ் நவ், பிபிசி, நியு யார்க் டைம்ஸ் வரை இந்த கேடு கெட்ட கேவலத்தை விற்பனைப் பண்டமாக்கி, திருச்செங்கோட்டு மக்களை கேடு கெட்டவர்கள், காட்டு மிராண்டிகள் என்று கூசாமல் சித்தரித்தார்கள் ஊடக வியாபாரிகள்.

கருத்து சுதந்திரத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அயோக்கியர்களின் லட்சணங்களை பாருங்கள்.

மாற்றுக் கருத்து கொள்ள வாய்ப்பிருப்பவர்களை எல்லாம் கொலை செய்த ஸ்டாலின், லெனின், மாவோ, போல்பாட் வழி வந்த களவாணி கொலைகார மாவோயிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் சொல்கிறார்கள் –  கருத்து சுதந்திரத்திற்காக உயிரை கொடுப்பார்களாம் !

பிரான்ஸ் நாட்டில் சார்லி ஹெப்டோ பத்திரிகையில் கார்ட்டூன் வரைந்ததற்காக 17 எழுத்தாளர்களை , பத்திரிக்கையாளர்களை கொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்துக்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் !

இனவெறி பிடித்த ஈவேரா என்று ஆதாரபூர்வமாக விமர்சனத்தை வைத்த்தற்காகவே வன்முறையில் இறங்கிய, தீராவிட கும்பல்கள், அழகிரிக்கு செல்வாக்கில்லை என்று சொன்னதற்காக 3 பத்திரிக்கையாளர்களை உயிரோடு எரித்த தீராவிட தறுதலைகள், கருத்து சுதந்திரம் பற்றி வெட்கமின்றி வகுப்பெடுக்கின்றன !

ஆனால் இத்தனை சதி வலைகளையும் அறுத்து வீசி, தங்களுக்குள் பகைமை ஏற்படுத்தி குளிர் காய நினைக்கும் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளின் சதியை நீர்த்து போகச்செய்யும் படியா ஒரு அமைதியான முயற்சியை துவங்கி இருக்கிறார்கள் திருச்செங்கோட்டு மக்கள். “ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற இயக்கத்தினைத் தொடங்கி இருக்கிறார்கள்.

thiruchengode_ardhanareeswarar“ஊர் கூடி தேர் இழுப்போம்” இயக்கம்

இந்த இயக்கத்தின் மூலமாக திருச்செங்கோட்டின் தேர் திருவிழாவின் 96 மண்டகப்படி அறக்கட்டளை உள்ள சமூகங்களையும் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைத்து இந்த ஆண்டு முதல் திருச்செங்கோட்டு தேர் திருவிழாவை உலகே திரும்பி பார்க்கும் ஒரு சமூக ஒருங்கிணைப்பு, ஒற்றுமை விழாவாக நடத்தலாம் என்று ஊர் கூடி பேசி முடிவு எடுத்திருக்கிறார்கள். 96 மண்டகப்படி அறக்கட்டளை தாரர்களையும் தொடர்பு கொண்டு அவர்கள் சமுகத்திலிருந்து அனைவரையும், அவர்கள் எந்த ஊரில் இருந்தாலும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை வரவைப்பது, இழந்த பெருமையை மீட்டெடுப்பது, நம்மை காக்கும் அம்மைஅப்பனுக்கு நம் நன்றியை முறையாக செலுத்துவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் ஊர் மக்கள் ஒவ்வொருவரையும் இந்த நிகழ்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு களம் இறங்க மக்கள் காத்திருக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் தேர்த்திருவிழாவை சமூக ஒன்றினைவு நிகழ்வாக்கவும், ஒற்றுமையை மீட்டெடுக்கவும் தான் ஏற்படுத்தினார்கள். ஊர் கூடி தேர் இழுக்கும் பொழுது மகத்தான ஒரு நிகழ்வில் இணையும் மனிதப் புள்ளியாகவும், பல உயிர்கள் இணைந்த ஒரே உயிராகவும் திகழும் வண்ணம் ஏற்பாடும் செய்திருந்தார்கள். அத்தகைய முயற்சிகளுக்கு நடுவில் குந்தகம் ஏற்பட்டிருந்தது. அதை இனி துடைத்தெறிய, ஊரின் அனைத்து குடிகளும் தங்களால் இயன்றதை செய்து இந்த சமூகத்தை ஒன்றிணைத்து ஒற்றை சக்தியாக தங்களை மீள் கட்டமைத்து கொள்கிறார்கள். இந்த முறை அவர்களை ஒருங்கிணைக்கும் பண்பாட்டு சரடாக திருச்செங்கோட்டு தேர் திருவிழா இருக்க போகிறது. மக்களின் உடல்களும், மனங்களும் ஒன்றாக சங்கமித்து இந்த பாரத வர்ஷமே திரும்பி பார்க்க வைக்கும் மகத்தான மானுட முயற்சியை செய்ய இருக்கிறார்கள்.

14 நாள் தேர் திருவிழாவிலும் அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தின் பழமையையும் பெருமையும் அங்கீகரிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த சக்தியாக உருமாற முடிவு செய்து முயற்சி செய்கிறார்கள். இந்த முறை 1 லட்சம் பத்திரிக்கைகள் அடித்து, பிருங்கி முனிவரின் பெயராலும், இந்த ஊருக்கு அருள் தரும் கண்ணகி அன்னையின் பெயராலும், மாதொருபாகனின் அருள் பெற அன்போடு அழைக்க போகிறார்கள். அத்தோடு திருவிழாவில் கொங்கு பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க இருக்கிறார்கள். இந்த மண்ணின் மாண்பையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் அதன் அழகியலோடு  நவீன உலகிற்கு காட்ட இருக்கிறார்கள். தங்களுக்குள் இருக்கும் பிறப்பு, சமூக ஏற்றத் தாழ்வுகள், பொருளாதார காரணிகள் அனைத்து புறத்தளைகளையும் உதறிவிட்டு அனைவரும் திருச்செங்கோட்டு ஈசனின் மக்களாக, செங்கோட்டையன் பாகத்தாளாக தங்களையே கண்டடைந்து ஒரு மகத்தான சரித்திரம் படைக்க இருக்கிறார்கள்.

thiruchengode-chariot

கொங்கு சமூகங்களின் பாரம்பரிய குல குருக்களையும் இந்த விழாவிற்கு வரவழைக்க இருக்கிறார்கள். ஊர் கூடி தேர் இழுத்து தங்கள் அனைவரையும் மாதொருபாகனின் அறச்செல்வர்களாகவும், அறசெல்விகளாகவும் உலகிற்கு அறிவுறுத்த இருக்கிறார்கள். இவ்வளவு திரளான அனைத்து சமூக மக்களும் தங்களுக்கிடையில் மீண்டும் நம் பழைய பாசத்தையும் நேசத்தையும் மீட்டெடுத்து ஒரு புதிய விளக்கை தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் ஏற்றுகிறார்கள்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இந்த மகத்தான மானுட முயற்சி வெற்றி அடைய நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம். அனைவரும் நம் ஊர் தேர்திருவிழாக்களையும் விமர்சையாக கொண்டாடி நம் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுத்தி நிலை பெறச்செய்வோம்.

மானுட உள்ளங்களின் ஒருங்கிணைவு என்பது வரலாறுகளை நிகழ்த்த செய்வது. சதிச்செயல்களாலும், அவதூறுகளாலும் திருச்செங்கோட்டு சகோதரிகளையும், தேர்திருவிழாவையும் அவதூறு செய்த முற்போக்கு, தீராவிட, கம்யூனிச, இஸ்லாமிய , கிறிஸ்த்தவ அமைப்புகளின் சதி மோசடிகளிலிருந்து அப்பாவி திருச்செங்கோட்டு மக்களை வரலாறு விடுதலை செய்யும். உண்மையை உலகம் உணர்ந்தே தீரும். உமையொருபாகன் இந்த கயவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க பிரார்த்திப்போம்.

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

21 Replies to “மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்”

 1. அருமையான முடிவு

  அல்ல அல்ல ஆரம்பம்

  நம்மை இழிவு செய்பவர்களுக்கு நாம் யாரென்று உணர்த்தும் வகையில் ஒன்று பட்டு நம் கலாசாரத்தை காப்பாற்றும் அரிய முயற்சி இது.
  வரவேற்கிறேன்.

  தனி மனிதரின் அல்லது ஒரு எழுத்தாளரின் தன் மானத்தை விட ஒரு ஊரின் ,ஒரு நாட்டின் , ஒட்டு மொத்த மக்களின் கலாசாரம் பெரியது.அதைக் கட்டிக் காக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 2. இங்கு ஏற்கனவே ஒருவர் சொன்னதுதான் இது. அந்த கேடுகெட்ட புக்க்கு மறுப்பு என்பது இன்னொரு புக் எண்பதுதான் சரி. அப்படி இல்லை என்றால் இந்த எதிற்ப்பு கட்டுரைகள் அத்தனையும் ஒன்றாக்கி ஒரு புக் போடுவதுதான் எதிர்காலத்துக்கு மிக சரியானதாக இருக்கும்.
  வீர. ராஜமாணிக்கம் இதில் மிக சரியாக செயல்பட்டவரில் ஒருவர். அவரின் மருப்புக்கு பின்புதான் ஜெயமோகன் தன் நிலையில் இருந்து கீழரிங்கி வரவேண்டி இருந்தது. அவருக்கு நன்றி

 3. என் சமூகத்தில் தோன்றிய நல்ல எழுத்தாளன் ‘தீராவிட தறுதலைகள், முற்போக்கு முகமூடி அணிந்துள்ள மார்க்ஸிஸ்ட்கள், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகள்.’ ஆகியோரின் மாயவலையில் சிக்கிப் பாழாய் நாசமாய்ப் போனது எனக்கு மிகுந்த வருத்தமே. திருச்செ3ங்கோட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கின் நிகழ்ச்சியை எந்த ஒரு நாளேடும் வெளியிடாதிருப்பது இதழ்களின் ஒருசார்போக்கை வெளிப்படுத்துகின்றது. பெருமாள் முருகனின் மனைவி சென்னைக்குப் பணி மாற்றம் பெற்றதை விளம்பரப்படுத்தும் நாளேடுகள், இக்கருத்தரங்கு நிகழ்ச்சிகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தது கண்டிக்கத் தக்கது.

 4. ////////14 நாள் தேர் திருவிழாவிலும் அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்கிறார்கள்////////

  நல்லது ஆனால் இந்த விழாவில் தலித் சமூகத்தை ஒதுக்கி விடவேண்டாம் அவர்களை ஒதுக்கியதால்தான் இன்று இந்துமத அழிவுக்கு காரணம் மேலும் மதமாற்றம் நடப்பதற்கு காரணமும் அதுதான் . இன்றேனும் நாம் திருந்தி வாழவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நாம் வணங்கும் கடவுளை வணங்கும் அவனை வெறுத்து கேவலபடுத்தியும் நம் கடவுள்களை கேலி பேசி திரியும் முஸ்லிம்களை “பாய்! (=சகோதரா!) .என்று அழைப்பது நியாயமா என்று ஒரு வினாடி நிதானமாக யோசித்து பார்.

 5. கொங்கு நாட்டு மக்களுடைய இன்னொரு போற்றப்பட வேண்டிய மாண்பு காலங்காலமான இவர்களது அதிதி சத்காரம். விருந்தினர்களுக்கு உபசரித்தல் என்பதில் கொங்கு நாட்டாருக்கு ஈடு இணையில்லை என்பதனை இங்கு பதிவு செய்கிறேன்.

  \\ பொதுவாக கடினமான உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் தெய்வ பக்திக்கும் பேர் போனவர்கள் கொங்கு பகுதி மக்கள். \\

  தேர்த்திருவிழா போன்றே செங்கோட்டு வேலனின் புகழ் பாடும் இன்னொரு பெருவிழா பெப்ரவ்ரி மாதத்தில் திருச்செங்கோட்டுப்பதியில் நடக்கும் படிவிழா.

  சேலம், நாமக்கல், பள்ளிபாளையம், ஈரோடு, ராசீபுரம், கொமாரபாளயம், பரமத்தி வேலூர் மற்றும் சுத்து பத்து க்ராமங்களிலிருந்து படிவிழாவிற்கு வரும் அன்பர்களுக்கு திருச்செங்கோடு நகரம் முழுதிலும் காலையில் வயிற்றுக்கு வயணமாக உணவிடும் திருச்செங்கோட்டு மக்களின் அதிதி சத்காரத்தில் பங்கேற்று வயிறார உணவுண்டு திருப்புகழோதிக்கொண்டே செங்கோட்டு மலையேறி நாககிரியில் வீற்றிருக்கும் அம்மையப்பனை தரிசிக்கும் பேறினை நான் பெற்ற பாக்யத்தை நினைவிலிருத்தி இதையெழுதுகிறேன்.

  தமிழ்ப்பண்பாட்டுக்காவலர்கள் என்று மட்டுமின்றி……….. மாற்றுமதத்தினருடன் ஒற்றுமை பேணுவதில் எந்த அளவுக்கு நாட்டத்தைக் கொண்டுள்ளார்களோ ……….அதே அளவுக்கு பரங்கிப்பணத்தில் தேசவிரோத வேலைகளில் ஈடுபட்டு வரும் மாற்று மதத்தினரின் மதமாற்று வேலைகள்………..மற்றும் த்ராவிட பிரிவினைவாத……… மற்றும் கம்யூனிஸ மற்றும் முற்போக்கு மாஃபியா கும்பல்களின் முதுகெலும்பை முறிக்கத் தக்க ஒற்றுமையை முன்வைக்கும் பாங்குடையவர்கள் கொங்கு நாட்டினர் என்பதனை இங்கு முன்வைத்தலும் முக்யம்.

  சீல அகத்திய ஞான தேனமுதைத் தரவல்ல…….. நாலுமறைப் பொருளான நாககிரிப்பெருமான்………… கொங்கு நாட்டுக் குடிகளின் பண்பாடு போற்றும் ஒற்றுமையையும்………. செங்கோட்டின் மாண்பினைக்காற்ற விழையும் செயற்பாட்டினையும் காத்து ரக்ஷிக்க இறைஞ்சுகிறேன்.

  தள நிர்வாகிகள் ………..அன்பர் ஸ்ரீ வீர.ராஜமாணிக்கம், ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன், ஸ்ரீ சாமி தியாகராஜன் எழுத்தாளர் ஸ்ரீ சாரு நிவேதிதா போன்றோர் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய காணொளிகளை தளத்தில் வலையேற்றம் செய்யுமாறும் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

 6. ரொம்பவும் உணர்ச்சிகரமாக எழுதித் தள்ளிவிட்டார். ஈரோட்டுக்காரரல்லவா?

  கட்டுரையில் காணும் சொற்றொடர்கள்:

  நாவல் எழுதி நஞ்சு விதைக்கப்பட்டுவிட்டது.
  மக்கள் குற்றவாளிகளாகவும் காட்டுமிராண்டிகளாகவும் உணரவைக்கப்பட்டு கூனிக்குறுகி விட்டார்கள்.
  எதிராளிகள் கிளப்பிவிட்ட புழுதியில் உண்மை உலகிற்குத் தெரியாமல் போய்விட்டது.
  மக்கள் ஆற்றாது அழுதுகொண்டிருக்கிறார்கள்.
  புனைவை நம்பி – அவரெழுதியது “”கண்டு”” — மக்கள் வெதும்பிவிட்டார்கள்.
  திருச்செங்கோடு இறைவனும் கோயிலும் கேவலப்படுத்தப்பட்டுவிட்டன.
  அப்பாவி மக்கள் விடுதலை பெறப்போகவிருக்கிறார்கள் (அதாவது இந்த நாவலும் இதன் ஆதரவாளர்களாலும் திருச்செங்கோடு மக்கள் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டார்கள் என்கிறார்)

  இவற்றிலிருந்து என்ன தெரியவைக்கிறார்?

  ஆயிரக்கணக்கான ஆண்டு காலப் பாரம்பரியம் ஒரு 200 பக்க சிறிய‌ நாவலால் இலகுவாக சிதைக்கப்பட்டு மக்கள் அடிமைப்படுத்தப்படுவார்கள். வேதனைப்படுத்தப்படுவார்கள். கேவலப்படுத்தப்படுவார்கள். அது மட்டுமா? உலகமே அந்நாவலில் சொல்லப்பட்டவற்றை நம்பிவிடும்.

  அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சாகும். அளவுக்கு மீறிப்பயப்பட்டால் ஒரு சிறிய எறும்பக்கண்டு கூட ஓடவேண்டும்!

  திருச்செங்கோட்டுத் தேர்த்திருவிழா முன்பில்லாத அல்லது என்றுமே இல்லாதவகையில் இவ்வருடம் சிறப்பாக அனைத்து சமூக மக்களையும் ஒன்றுபடுத்திக்கொண்டாடப்பட இருக்கிறது. இது மட்டும் போதும்.

  அதாவது அக்கொண்டாட்டம் அம்மக்களுக்கு. அவர்கள் விருப்பத்திற்காக.

  ஆனால், அந்த நாவலுக்காக, அதன் ஆதராவாளருக்காக எனபது இத்திருவிழாவின் பாரம்பரியத்தையும் மகத்துவத்தையும் சிறுமைப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

  மிகப்பெரியதை மிகச்சிறியதோடு ஒப்பிடும்போது பெரியதன் சிறப்பு கொச்சைப்படுத்தப்படும். ஒப்பீடுசெய்வோர் இதை உணர வேண்டும்.

 7. இந்த வருட தேர்த்திருவிழா எங்கள் அனைத்து சமுகமக்களும் ஒன்று சேர்ந்த நடத்தப்போகிறார்கள் .எங்களை விமர்சனம் செய்த போலிகளின் முகத்திரையை கிழிக்க போகிறார்கள்.

 8. Great, Great, Great. Best wishes for Ardhanareeswarar Bakthaas. Go Ahead. We Just keep up our spiritual values by organizing Chariot festival. By that we get the blessings of Lord Shiva and Paarvathi.

  Also we can demonstrate our unity that will shake our enemies that itself equivalent to spitting on their faces who tries to defame us.

 9. நேற்றே பதிந்த மறுமொழி வெளிவரவில்லை . இது சுருக்கமான வேறொன்று.

  திருசெங்கோட்டு சகோதர சகோதரிகளுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.
  ஊருக்கு , சமூகத்துக்கு வெளியிலும் உங்களுக்கு சகோதார் சகோதரிகள் உண்டு. தர்மம் ஈன்ற பிள்ளைகள் அனைவரும் உடன் பிறந்தோரே.

  தன்மானம் என்றால் என்ன என்று எல்லாருக்கும் பாடம் எடுக்கும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் .

  விழித்து விட்டவர்கள் மேலும் தூங்கட்டும் என்று அபஸ்வரமாக தாலாட்டு பாடுவோர் பாடட்டும், நாம் விழித்தாயிற்று. மற்றோரையும் எழுப்புவோம்.

  சாய்

 10. நல்ல முடிவு. ஆக்கப்பூர்வமான முடிவு. கொங்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள் பல்லாயிரம்.

 11. https://othisaivu.wordpress.com/2015/01/31/post-450/
  தமிழகத்தில் அவல சிந்தனைகளின் ஆதாரம் எங்குள்ளது என்று காட்டும் இணைப்பு இதோ.
  திராவிடமாயை அன்றிலிருந்து, இன்று வரை தமிழர்களுக்கு சொல்லி தர முயன்றது என்ன?
  இன்றைக்கு அந்நிய அறிவுலக பௌண்டேஷன் சில இந்த முயற்சிகளின் பின் நிற்பது ஏன்?
  இவை வெற்றி பெறக் காரணம் ஒன்றே ஒன்று தான். அது மக்களின் தங்கள் சொந்தக் கலாச்சாரத்தை பற்றிய அறியாமை.
  அவரவர் வீட்டில் பெரியவர்கள், குறிப்பாக திராவிட மாயையில் குழம்பாத அன்னையர்கள் காட்டித் தரும் சமயத்தை ஆங்கில படிப்பு அகங்காரம் இன்றிப் புரிந்து கொண்டாலே போதும்.
  பாட்டியர்களால் பெரிய விஷயங்களை சுலபமாக புரிய வைத்து விட முடியும், கோணல் மறு வாசிப்புகள் , அந்நிய நட்டு ஆய்வாளர்கள் மற்றும் உள்நாட்டு சிப்பாய் ஆய்வாளர்கள் இவர்களின் அரைகுறை எழுத்து, ,– இவைகள் நோக்கம் கோணல் அன்றி வேறில்லை.
  இந்த பேருண்மையை நாம் புரிந்து கொண்டால் இந்த தேரை நாமும் சேர்ந்து இழுத்தது போலாகும்.

  சாய்

 12. //திருச்செங்கோட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கின் நிகழ்ச்சியை எந்த ஒரு நாளேடும் வெளியிடாதிருப்பது இதழ்களின் ஒருசார்போக்கை வெளிப்படுத்துகின்றது. //

  இந்த இணையயிதழ் போட்டாலென்ன?

 13. அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
  உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ
  கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
  செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்!

 14. ஒரு மிக பெரிய, உலகிலே சிறந்த அறிவு ஜீவி, தமிழ் நாட்டில் எல்லா விழாக்களுமே, “தலை கீழாவதர்குட்தான்” என்று எழுதி உள்ளாரே. அதாவது
  வெவ்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்கள் கலவி செய்வதற்குத்தான் என கருத்து கூறி உள்ளார். அதற்கு ஐரோப்பிய ஆசிரியர்களையும் துணைக்கு அழைத்து உள்ளார். குஷ்பூ சொன்னதற்கு, போராடினவர்கள், இப்பொழுது எங்கே போனார்கள்?

 15. ஆயிரம் கைகள் என்ன பல கோடி கைகள் இணைந்து சூரியனை மறைக்க நினைத்தாலும் அவர்கள் மறைந்தே போவர்கள். இந்த கேடு கேட்ட திராவிட திருடர்களின் போலி கொள்கைகளை மக்கள் எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள் என்ற தெரியவில்லை. நபிகள் நாயகம் இகழபட்டால் அணைத்து முஸ்லிம்களும் குழந்தை உட்பட ரோட்டில் நின்றும் வன்முறை புரிந்தும் போராட்டம் நடத்துகிறார்கள். ஏசு இகழபட்டால் அணைத்து கிறிஸ்துவர்களும் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் நம் கலாச்சாரத்தின் வெளிப்படான் நம் தெய்வங்கள் பல இடங்களில் பல முறை கேவலபடுத்தி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் 10% பேர் கூட போராட மறுக்கிறார்கள். போராட விட்டாலும் பரவாயில்லை ஒற்றுமையாக இருந்து தேர்தலிலாவது இவர்களுக்கு ஒரு பாடம் புகட்டலாம். அதுவும் இல்லை. ஒன்று கருணாநிதி பேயாட்சிக்கு வழி வகுக்கிறார்கள் அல்லது ஜெயலலிதா பிசாசு ஆட்சிக்கு வழி வகுக்கிறார்கள். நம் மக்கள் மக்கள் அல்ல மாக்கள்.

 16. தேர்த்திருவிழா பற்றிய நிகழ்ச்சி நிரல் தேதி கிடைக்குமா தயவு செய்து சொல்லுங்களேன் ஓம் நமசிவாய….

 17. //புனைவை உண்மையான வரலாறு என்று சொல்லி வாங்கிய கூலிக்கு மாரடிக்க வேண்டாம் என்றும், பொய்யை, புனை சுருட்டை உண்மை நிகழ்ந்த வரலாறு என்று புளுகுவதை தயவு செய்து நிறுத்துங்கள் என்றும் கோரினார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பும் கோரினார். தன் ஆபாச செய்கைக்காக தன் புத்தகத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் அறிவித்தார்.//

  வீர இராஜமாணிக்கம் அழகாக எழுதிவிட்டார். வேறு பேச்சுக்கேயிடமில்லை.

  எழுத்தாளரை விட்டுவிட்டு, கருத்து சுதந்திரம் பேசுபவர்களை கட்டுரைச் சாடுகிறது. அதாவது அவர்களுக்குப்பதிலடியாக ஊர்கூடி தேர் இழுக்கப்போகிறார்கள்.
  என்ன பொருள்? இப்படி ஊர்கூடி தேர் இழுக்க ஒருவர் நாவல் எழுதி இவர்களைத் தட்ட வேண்டும்! இவர்களாகவே அனைத்து சமூக மக்களையும் இணைத்து ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்றுதானே? அர்த்தநாரீசுவரர் பெருமாள் முருகன் எப்ப்போது நாவல் எழுதி நம் திருவிழாவை இழிவு படுத்துவார் என்று காத்திருக்க வேண்டும். அப்படித்தானே?

  பேச்சு, எழுத்து, கருத்து சுதந்திரத்தைப் பற்றிக்கூட்டம் போட்டுப்பேசுவோர் – கொச்சியில், தில்லியில், சென்னையில், – இவ்வூர்கூடித் தேரிழுத்துவிட்டது; நம் மூக்கை உடைத்துவிட்டார்கள் என்று நினைத்து தங்கள் மேடைப்பேச்சுக்களையும் போராட்டங்களையும் விட்டுவிடுவரா? தமிழ்நாட்டில் மட்டுமன்று; இந்திய ஆங்கில ஊடகங்களிலும் வெளிநாட்டு ஊடங்கங்களிலும் இந்தப்பிரச்சினை விவாதிக்கப்பட்டுவிட்டது. வங்கம், இந்தி, மராட்டி, மலையாளம் ஊடகங்களில் முருகனுக்கு ஆதரவான கட்டுரைகள் வந்துவிட்டன. மலையாளத்தில் எழுதியவர் சக்கரியா. ஒரேயொரு இணையதள ஆங்கில இதழில் மட்டுமே ஒரு எதிர்ப்புக் கட்டுரை வந்தது. ஆனால் அது வெளியில் தெரியா இதழ்.

  அவர்கள் பேசிக்கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்குப் பதில் நீங்களும் பேசுங்கள். திருச்செங்கோடு கருத்தரங்கம் அப்படித்தான் நடந்தது. இதுதான் நல்ல ஜனநாயகம்.

  தமிழ்நாட்டு மக்கள் இந்நாவலைப்படிக்க முடியாது. ஆனால், ஆங்கில மொழியாக்க நாவல் ஒன் பார்ட் வுமன், உலக புத்தக விழாவில் பெங்குவின் அரங்கத்தில் பெஸ்ட் செல்லர் நூல வரிசையில் முகப்பிலேயே வைக்கபபட்டு தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

  இந்நாவல் வெறும் கோயில் திருவிழாவை மட்டும்பற்றிப்பேசவில்லை. பின் என்ன பேசுகிறது?

  கவுண்டர்கள் எப்படி ஆதிக்கசக்திகளாக அப்பகுதியில் வாழ்ந்தனர் என்றும் அருந்ததியர் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி நடாத்தினரென்றும். நாடார்களையும் தம் அடிமைகளாக வைத்திருந்தனர் என்றும் தெளிவாகப் பேசுகிறது. கவுண்டர் இளைஞர்கள் ஒரு ஆதிவாசிப்பெண்ணை கூட்டுவன்புணர்வு பண்ணிக் கொன்றதாகச் சொல்கிறது. நாடார்களை சானார்கள் என்று இழிவாக அழைத்து தம் பண்ணையடிமைகளாக வைத்திருந்தனர் என்று சொல்கிறது. குழந்தைப்பேறில்லாத நாயகன், நாடார் ஒருவருக்குப் பிறக்கப்போகும் குழந்தையைத்தத்து எடுக்கலாமென்று தன் மனைவியிடம் சொல்லும்போது அவள் வெகுண்டெழுகிறாள்: //நாம் எடுத்துவிடுவோம். நம் சமூகம் குழந்தையை ஏற்காது. சாணார் குழந்தை என்று புறந்தள்ளும். இக்கொடுமையை நாம் செய்ய வேண்டுமா? அந்தப்பாவம் நமக்கு வேண்டுமா?// என்கிறாள். இன்னொரு காட்சியில் இவர்கள் வண்டியில் ஒரு அருந்ததியர் குடும்பம் ஏற கெஞ்ச‌ அனுமதிக்கப்படுகிறார்கள். அக்காட்சியில் அருந்ததியைரைக் கவுண்டர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடத்துகிறார்கள் என்று காட்டுகிறார். கவுண்டர்களின் பேச்சு வழக்குகள் காதுகொண்டு கேட்கத்தகும் சொற்களாகவே இல்லையென்றும் காட்டுகிறார். கதை நெடுக கவுண்டர்களின் ஆதிக்க வாழ்க்கைப் படம்போட்டுக் காட்டப்படுகிறது. மொத்ததில் இந்நாவலைப்படிப்பவர்கள் கவுண்டர்களிடையே இன்னும் நாகரிக வாழ்க்கை வந்து சேரவில்லை என்ற‌ முடிவைத்தான் எடுக்க முடியும்.

  இவற்றுக்கெல்லாம் என்ன பதில்?இன்னொரு திருவிழாவா?

  இன்னொரு நாவல் என்பதே சரி வீர இராஜமாணிக்கம், சக்திவேல், சாய்! அவரைப்போல இன்னொரு எழுத்தாளர் கவுண்டர்களிடமிருந்து வந்தால்தான் இது நடக்கும்.

  வி கீதாவின் ஆங்கில மொழியாக்கம் தமிழை விட சிறப்பு. எனவேதான் அந்நாவலில் விற்பனை வெளிநாட்டிலும் சிறக்கிறது. நன்றாக எழுதினால் மட்டுமே வெள்ளைக்காரன் எடுப்பான். அதை எதிர்கொள்ள கவுண்டர்களிலிருந்து கீதாவைப்போல ஆங்கில எழுத்தாளர் வரவேண்டும். சாருவால் எழுத முடியாது. அவர் ஏரியாவே வேற. ஆங்கிலத்தில் சிறப்பாக எழுத இன்று நம்மிடையே எழுத்தாளர்கள் இல்லை.

  இந்நாவலைப்பற்றி கவலை கொள்ளாமல், இதுவும் கடந்து போகும் என்று விட்டுவிடுவது சரி.

 18. நமது பிள்ளைகளுக்கு நமது ஹிந்து தர்ம நெறிமுறைகள் திரித்து சொல்லும்போது மனம் வலிக்கிறது. கோயில்கள் , திருவிழா நாட்களில் மற்றும் கல்யாண வீடுகளில் ஹிந்து தர்ம நெறி முறைகள், அர்த்தங்கள் , நாள் மற்றும் கிழமைகளின் அற்புதங்கள், செயல் பாடுகள் ஆகியவற்றின் தொகுப்பினை CD மற்றும் சொற்பொழிவாளர்களின் கருத்துகளை கேட்க செய்யலாம். இதனை வளர்ந்த பெரிய கோமான்கள் எடுத்து நடத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *