தெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்

(21-4-2015) இமயம் தொலைக்காட்சியில் திராவிடர் கழகத்தை தடை செய்வது பற்றிய ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் நான், வே.மதிமாறன், பாஜகவைச் சார்ந்த வழக்கறிஞர் ராமநாதன், திராவிடர் கழகத்தைச் சார்ந்த மஞ்சை வசந்தன் ஆகியோர் கலந்துகொண்டோம்.

அந்நிகழ்ச்சியில் மஞ்சை வசந்தன் சதி என்கிற உடன்கட்டை ஏறுதல் வேண்டும் என்று தெய்வத்தின் குரலில் காஞ்சிப் பெரியவர் சொன்னதாகச் சொன்னார். உடனே நான் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டபோது தெய்வத்தின் குரல் புத்தகத்தை படியுங்கள். அதில் இருக்கிறது என்று கூறினார்.

நான் எப்போதுமே திராவிடர் கழக எழுத்தாளர்கள், கம்யூனிச எழுத்தாளர்கள் சொல்வதை முதலில் ஏற்பதில்லை. ஏனென்றால் அதில் எப்போதுமே திரிபுவாதமே மேலோங்கியிருக்கும். மஞ்சை வசந்தன் அப்படிப்பட்ட ஒரு திரிபுவாதத்தை ஏற்கனவே தன்னுடைய புத்தகத்தில் செய்திருக்கிறார்.

marriage

மஞ்சை வசந்தன், ‘தமிழா! நீ ஓர் இந்துவா?’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்நூலில் 69ஆம் பக்கத்தில் இப்படி எழுதுகிறார் :

‘பார்ப்பான் மந்திரஞ்சொல்லி தாலி எடுத்துக்கொடுத்து நடத்தப்பட்டால்தான் அது திருமணமாகும் என்கிறது இந்துமதம். திருமணத்தின்போது பார்ப்பான் சொல்லுகின்ற மந்திரத்தின் பொருள் என்ன தெரியுமா?

சோமஹ பரதமே விவித கந்தர்வ

விதித உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே

பதி ஸதுரியஸ்தே மனுஷ்ய ஜாஹ

மணமகளாக இருக்கிற பெண்ணை முதலில் சோமனும், அடுத்து கந்தர்வனும் அடுத்து உத்திரனும் நான்காவதாக புரோகிதப் பார்ப்பானும் வைத்திருந்து, இறுதியில் பார்ப்பான் தன் விருப்பத்தின்பேரில் மணமகனுக்கு மணப்பெண்ணை தாரைவார்த்துக் கொடுக்கின்றானாம்.

இந்துமதப்படி திருமணம் செய்துக் கொள்கின்ற சூத்திரனின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்று இந்துமதம் கூறுவதைப் பார்த்தாயா?……..

(இந்த மந்திரத்தையும் இதற்குரிய அர்த்தத்தையும் காஞ்சி சங்கராச்சாரியாரே தனது நூலில் (தெய்வத்தின் குரல் – வானதி பதிப்பக வெளியீடு) குறிப்பிட்டுள்ளார். எனவே, நான் மேலே குறிப்பிட்டுள்ளது உண்மையாக இருக்குமோ? என்று யாரும் சந்தேகப்படத் தேவையில்லை)

என்று மஞ்சை வசந்தன் எழுதியிருக்கிறார்.

நானும் பலநாள் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்திருந்தேன் தெய்வத்தின் குரல் புத்தகத்தை படிக்கும்வரை. ஆனால் என்னிடம் அந்த புத்தகங்கள் இல்லாத காரணத்தால் உடனே படிக்கக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போனது. எப்போதுமே நான் மூலநூலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன். சிலநாள் கழித்து ஒரு நூலகத்தில் தெய்வத்தின் குரல் புத்தகம் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

kanchi periyavarதெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதியில்தான் இந்த மந்திரங்களைப் பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லியிருக்கும் தகவல்கள் வருகின்றன. மஞ்சை வசந்தன் குறிப்பிடுகிற மாதிரிதான் காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறாரா என்று பார்த்தால் அதற்கு முற்றிலும் நேர்எதிராக அவர் சொல்லியிருக்கிறார்.

இதோ காஞ்சி சங்கராச்சாரியார் சொல்கிறார் :

நம் ஒவ்வொரு தேஹத்திலும், அங்கங்களுக்குள்ளே அவை ஒவ்வொன்றுக்கும் அதிதேவதையாக ஒரு தேவன் இருக்கிறான். கண்ணில் ஸூரியன், கையில் இந்திரன் என்றிப்படி நமக்குள் ஆத்யாத்மிகமாக தேவ சக்திகள் இருக்கின்றன. இது தவிர ஒவ்வொரு வயோவஸ்தையிலும் (வயசுக் கட்டத்திலும்) ஒவ்வொரு தேவதைக்கு நம் மேல் ஆதிக்கம் இருக்கிறது.

இவ்விதத்திலே ஒரு பெண்ணானவள் பிறந்ததிலிருந்து வஸ்திரம் கட்டிக் கொள்ளத் தெரிகிற வரையில் ‘ஸோமன்’ என்ற தேவதையின் ஆதீனத்தில் இருக்கிறாள். (புருஷர்கள் கட்டிக்கொள்ளும் வேஷ்டிக்கே ‘சோமன்’ என்று பேர் இருக்கிறது) அதற்கப்புறம் ரிதுவாகும் வரையில் அவள் கந்தர்வனின் ஆதீனத்தில் இருக்கிறாள். வசது வந்த திலிருந்து மூன்று வருஷம் அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். ஸோமன் என்றால் சந்திரன். ஸோமன் ஒரு பெண்ணை ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிற குழந்தைப் பிராயத்தில் அதனிடம் நிலா மாதிரியான குளிர்ச்சி இருக்கிறது. அப்புறம் கந்தர்வன் என்ற உல்லாஸ ஜீவியான, நல்ல ஸுந்தரமான தேவதையிடம் இருக்கிற சிறுமிக்கு லாவண்யம் விசேஷமாக இருக்கிறது. பிறகு அக்னியின் அதிகார காலம் உண்டான போது காமாக்னியை ஏற்படுத்தும் சக்தி உண்டாகிறது. மூன்று தேவதைகளுடைய அதிகாரத்துக்கு இப்படி லௌகீகமாக அர்த்தம் பண்ணுவதுண்டு. இது இருக்கட்டும்.

சீர்திருத்தக்காரர்கள் சான்று காட்டும் வேதமந்திரங்களின் அர்த்தம் என்ன?

வரன் எனப்படும் கல்யாணப்பிள்ளை வதூ எனப்படும் கல்யாணப் பெண்ணைப் பார்த்துச் சொல்லும் இந்த வேத வாக்கியங்களுக்கு என்ன அர்த்தம் என்றால், ‘முதலில் ஸோமன் உன்னை அடைந்தான்; இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான்; மூன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மநுஷ்ய வர்க்கத்தைச்சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன். உன்னை ஸோமன் கந்தர்வனிடம் கொடுத்தான். கந்தர்வன் அக்னியிடம் கொடுத்தான். அக்னி என்னிடம் இப்போது கொடுத்திருக்கிறான்’ என்று அர்த்தம்.

விவாஹத்தின்போதே சொல்லப்படுகிற மந்திரத்தில் இப்படி வருவதால் கல்யாணப் பெண்ணானவள் ரிதுமதியாகி அக்னியின் ஆதினத்தில் மூன்று வருஷம் இருந்த பிறகுதான் அவளை ஒருத்தன் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான் என்றுதானே அர்த்தமாகிறது?

இதைச் சொல்லித்தான் சீர்திருத்தக்காரர்கள் ‘நாங்கள் ஒன்றும் சாஸ்திர விரோதமான reform (சீர்திருத்தம்) கொண்டுவரவில்லை. ஆதியிலிருந்த சாஸ்திரத்துக்கு விரோதமாகத் துருக்க ராஜ்யத்தில் ஏற்பட்ட வழக்கத்தை மாற்றிப் பழையபடி சாஸ்திரோக்தமாகப் பண்ண வேண்டும் என்று தான் சொல்கிறோம். வேத வாக்கியத்தைவிடப் பெரிய பிரமாணம் இருப்பதாக எந்த ஸநாதனியும் சொல்ல முடியாதே! அதைத்தான் நாங்கள் ‘அதாரிடி’யாகக் காட்டுகிறோம்’ என்று சொன்னார்கள்.

தெய்வத்தின் குரல், இரண்டாம் பகுதி, பக்கம்.865-866

(காஞ்சிப் பெரியவர் சீர்திருத்தக்காரர்கள் என்று இங்கு சொல்வது இந்து சீர்திருத்தக்காரர்களையே)

மஞ்சை வசந்தன் குறிப்பிட்டமாதிரி திருமணம் செய்துக் கொள்கின்ற சூத்திரனின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்று எங்கே இப்புத்தகத்தில் வருகிறது?

பார்ப்பான் நான்காவதாக வைத்திருந்தான் என்று எங்கே இதில் வருகிறது? முதலில் இங்கே சூத்திரன் என்கிற சொற்றொடரே வரவில்லை.

இதே மந்திரத்தைத்தான் பிராமணர்களும் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சூத்திரனை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் அல்லது இந்த மந்திரம் கேவலமாக இருந்தால் பிராமணர்கள் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துவார்களா? சூத்திரனைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் சூத்திரனுக்கு மட்டுமே அந்த மந்திரத்தை சொல்வார்கள். தங்களுக்கு வேறொரு மந்திரத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் நடைமுறையில் எல்லோருக்கும் அதே மந்திரம்தான் பயன்படுத்தப்படுகிறது.

காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லாத ஒன்றை காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்தானே! இப்படி திரிபுவாதம் செய்பவர்கள்தான் திராவிட இயக்க எழுத்தாளர்கள் என்பதை புரியவைக்கவே இதை எழுதினேன்.

இந்த விளக்கத்தை இமயம் தொலைக்காட்சி விவாதத்திலும் தெய்வத்தின் குரல் புத்தகத்தோடு விளக்கினேன். மஞ்சை வசந்தன் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதை வேறொருநாளில் விவாதமாக வைத்துக்கொள்ளலாம் என்று மழுப்பினாரே தவிர பதில் சொல்லவில்லை.

இந்த விவாதம் பற்றி வே.மதிமாறன் தன்னுடைய மூஞ்சிப்(?) புத்தகத்தில் ‘டீ கடையில் டீ குடிக்கும்போது தற்செயலா இரண்டு வார்த்தைக்கூட பேசுவதற்கு லாயக்கற்றவர்களோடு டீவியில் எல்லாம் பேச நேரிடுவது கொடுமை’ என்று எழுதியிருந்தார். இது நானும் வே.மதிமாறனும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியைப் பற்றியதுதானா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிகழ்ச்சியைப் பற்றியதுதான் என்று அவருக்கு ஸ்டேடஸ் போட்டவர்கள் உறுதிபடுத்தினார்கள். மிக மோசமான வார்த்தை பயன்படுத்தி என்னை வசைபாடியிருக்கிறார்கள். இந்த மனநிலையை நாம் எப்படி புரிந்துகொள்வது?

mathimaran
இதுதான் ‘திராவிடர் கழக எழுத்தாளர்களின் ஆதிக்க சாதிய மனநிலை.

தாழ்ந்த சாதிக்காரன்கூட உனக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு, அவனுங்கல்லாம் ஒரு மனுசனா மதிச்சு பேசக்கூட லாயக்கற்றவனுங்க என்று இரட்டை டம்ளர் டீ கடையில சில்வர் கிளாசில டீ குடிச்சிக்கிட்டு பேசுற தொனி ஆதிக்க சாதிய மனநிலையில் எழுகிற தொனி.

அவனுங்க எல்லாம் எப்ப பார்த்தாலும் குடிச்சிக்கிட்டு இருப்பானுங்க.முட்டாளுங்க, வேசிமகனுங்க என்று ஆதிக்க சாதி திமிரில் பேசிய பேச்சு ஆதிக்க சாதிய மனநிலையில் பேசுகிற பேச்சு.’

இந்த ஆதிக்க சாதி மனநிலையில் இருந்துதான் இப்படிகேவலமாக எழுதியிருக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய இயல்பே. திராவிட இயக்க எழுத்தாளர்கள் மற்றும் அடிப்பொடிகள் தங்களுடைய மனநிலையை தெள்ளத் தெளிவாக நமக்கு காட்டியிருக்கிறார்கள். ஏன் இப்படி கொந்தளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நான் பேசிய பேச்சைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.

கொஞ்சம் கவனியுங்க நண்பர்களே : நான் எழுதிய இந்த பதிவை படித்துவிட்டு காஞ்சி பெரியவர் சொல்கிற அனைத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று யாரும் முடிவுகட்டிவிட வேண்டும். அவருடைய பல கருத்துக்களை, முக்கியமாக தலித்துகள் கோயில் நுழைவு, பெண்கள் பற்றிய அவருடைய கருத்துக்களை மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

சிறு குறிப்பு : பல தொகுதிகளாக தெய்வத்தின் குரல் புத்தகம் வந்திருக்கிறது. பயன்படுத்தாமல் அலமாரிகளில் நானும் அந்தப் புத்தகங்களை பத்திரமாக, ஆனால் அதேசமயம் தூசு படிந்து வைத்திருக்கிறேன் என்று சொல்லும் நண்பர்கள் மட்டும் எனக்கு கொடுக்கலாம்.

22 Replies to “தெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்”

  1. நண்பர் வெங்கடேசன் அவர்கட்கு,
    புத்தகத்தை தேடி அலைய வேண்டாம்….தெய்வத்தின் குரல் முழுவதும் இங்கே காணக்கிடைக்கிறது….படித்து தெளிந்தும் கொள்ளவும்….

    https://www.kamakoti.org/tamil/part1index.htm

  2. பார்ப்பனைர்களை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு தமிழிலிருந்து ஆன்மீகத்தைப் பிரித்தெடுத்தன இந்த சக்திகள். ‘உடல் மீது உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ என்பது அடிப்படை இலக்கண விதி. தமிழ் உடல். ஆன்மீகம் உயிர். ஆன்மீகத்தை நீக்கிவிட்டால் வெறும் உடலாகிய தமிழை வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும் ?
    திராவிடர் கழகம் என்பதே திரிபுவாதத்தை அடிப்படையாகக் கொண்டது தான். எந்த அடிப்படையுமே இல்லாமல் போகிற போக்கில் வாயில் வந்ததைக் கூறிச் செல்வது பகுத்தறிவு என்கிற தமிழக சித்தாந்தத்தின் அடிப்படையில் மதிமாறன் பேசியுள்ளது சரியே.

  3. காமரசப் படங்களில் நடித்துக் காசு குவித்த அந்த சிற்றின்பப் பைத்தியம் பாக்கியராஜ் நடத்தும் பாக்யா பத்திரிகையில் மஞ்சை வசந்தன் ஆண்டாளைப் பற்றியும் திருப்பாவையைப் பற்றியும் மோசமாக எழுதியிருந்தான். அவனைப் பாஞ்சஜன்யம் (ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ) பத்திரிகையில் ‘கிழி, கிழி என்று’ கிழித்துத் தள்ளினர். அவ்வளவு கீழ்த்தரமான மனிதன் அவன்.

    இவர்களின் நோக்கத்தையும் கீழ்த்தரத்தையும் இன்னும் ஸ்பஷ்டமாக தமிழ் இந்து உலகத்திற்கு எடுத்துக் காட்டியமைக்கு, நன்றி திரு ம. வெங்கடேசன் அவர்களே.

  4. தெளிவாக, ஆதானகளுடன், பொய் கலக்காமல் எழுதக்கூடிய இன்னொரு அரவிந்தனாக தமிழ் ஹிந்துக்களுக்குக் கிடைத்திருக்கிறார் ம.வெ; வளரட்டும், தொடரட்டும். சாக்கிய முனியோ வியாச முனியோ அவருக்கு துணை நிற்கட்டும்.

  5. ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ பாஞ்சஜன்யம் ஆசிரியருக்கு மறுப்பு எழுதுகிறேன் என்று பாக்யா பத்திரிகையில் ‘டேய் முண்டம்’ என்றெல்லாம் விளித்து எழுதிய ஹீனன் மஞ்சை வசந்தன்.

  6. https://sivamgss.blogspot.in/2013/09/blog-post_8.html

    https://sivamgss.blogspot.in/2013/09/blog-post_12.html

    https://sivamgss.blogspot.in/2006/07/92.html

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மந்திரங்களின் பொருளை மேற்கண்ட சுட்டிகளில் காணலாம். பொதுவாகவே மந்திரங்களின் உட்பொருளும் சரி, சாஸ்திர ரீதியான சில சம்பிரதாயங்களும் சரி , நன்கு விளக்கிச் சொல்லப்படாமல் தவறான புரிதலுக்கே உள்ளாகி இருக்கிறது. இனி வரும் தலைமுறைக்காவது சரியான பொருளில் போய்ச் சேர வேண்டும்.

  7. //இந்த ஆதிக்க சாதி மனநிலையில் இருந்துதான் இப்படிகேவலமாக எழுதியிருக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய இயல்பே. திராவிட இயக்க எழுத்தாளர்கள் மற்றும் அடிப்பொடிகள் தங்களுடைய மனநிலையை தெள்ளத் தெளிவாக நமக்கு காட்டியிருக்கிறார்கள். //

    ஒருவரைப்பற்றி கன்னபின்னவென்று திட்டி, இல்லாத ஒன்றை ஆதாரமாகக் காட்டவேண்டியது, தங்கள் கருத்தை யாராவது சான்றுகாட்டி எதிர்த்தால், அவர்களைப் பற்றி மோசமாக எழுதவேண்டியது.

    அதையும்அமைதியான முறையில் எதிர்த்தால்,அவர்கள் மீது வன்முறையைச் செலுத்தவேண்டியது. இதுதான் இவர்கள் கற்ற, கையாளும் பாடம்.

    இவர்களின் வன்முறையைப் பற்றி நியாயமான் முறையில் காவல்துறையிடம் புகார் செய்தால், “இவன் என்னை இழிசாதி என்று கேவலமாகப் பேசி இழிவு செய்தான். இவனும் என்மீது வன்முறை செய்தான்.” என்று பொய்யான சாட்சிகளைச் தயார் செய்யவேண்டியது.

    இதுதான் இவர்களின் தொழில்.

    இவர்களுக்கும் மற்றவர் கலாசாரங்களை அழிக்கும் ISISக்கும் வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கூர்ந்து கவனித்தால், ISIS ஒரு குருட்டு நம்பிக்கையில் செய்கிறார்கள். இவர்கள் எங்கிருந்தோ பணம் பெற்று, மற்றவர்களை ஏமாற்றி, மக்களின் அறிவை மழுங்க அடிக்கவே இச்செயல்களைச் செய்கிறார்கள்.

    இவர்களுக்கு ஊடகமும் துணைபோகிறது.

    என்னத்தைச் சொல்ல!

  8. அன்புள்ள ம.வெ, சரியான தரவுகளைக் கொடுத்து இந்த திரிபுவாதிகளின் பொய்யை அம்பலப் படுத்தியிருக்கிறீர்கள். அருமை.

    இந்த மந்திரம் குறித்து 2008ல் நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். நீங்கள் இணையத்தில் தேடியிருந்தால் கிடைத்திருக்கும் 🙂

    ஒரு மணப்பெண்ணும், தேவதைகளும், திராவிட பகுத்தறிவும் –
    https://jataayu.blogspot.in/2008/05/blog-post_08.html

  9. பேரன்பிற்குரிய ஸ்ரீ ம.வெங்கடேசன்

    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். தர்மமே வெல்லும். என்ற சொல்லாடல் பொய்ப்பதே இல்லை.

    தங்களது ஒவ்வொரு விளக்கத்திற்கும் தாங்கள் மிகுந்த ப்ரயாசை எடுத்து முழுமையான தரவுகள் கொடுத்து எதிர்த்தரப்பு அன்பர்களின் திரிபு வாதங்களை கட்டுடைப்பது மிகவும் நேர்மையான செயல்.

    \\ எப்போதுமே நான் மூலநூலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன். சிலநாள் கழித்து ஒரு நூலகத்தில் தெய்வத்தின் குரல் புத்தகம் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. \\

    இந்த ஒரு செயற்பாட்டைக் கொள்பவர்கள் நேர்மையாளர்கள். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று மனதில் தோன்றியதையெல்லாம் கருத்துக்கந்தசாமியாக கக்குபவர்கள் திரிபாளர்கள். தங்களது நேர்மைக்கு வாழ்த்துக்கள்.

    \\ இந்த விவாதம் பற்றி வே.மதிமாறன் தன்னுடைய மூஞ்சிப்(?) புத்தகத்தில் ‘டீ கடையில் டீ குடிக்கும்போது தற்செயலா இரண்டு வார்த்தைக்கூட பேசுவதற்கு லாயக்கற்றவர்களோடு டீவியில் எல்லாம் பேச நேரிடுவது கொடுமை’ என்று எழுதியிருந்தார். \\ தாழ்ந்த சாதிக்காரன்கூட உனக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு, அவனுங்கல்லாம் ஒரு மனுசனா மதிச்சு பேசக்கூட லாயக்கற்றவனுங்க என்று இரட்டை டம்ளர் டீ கடையில சில்வர் கிளாசில டீ குடிச்சிக்கிட்டு பேசுற தொனி ஆதிக்க சாதிய மனநிலையில் எழுகிற தொனி. \\

    தாங்கள் இந்தப் பதிவை இட்டிருப்பது அவர்களது புளுகு மூட்டைகளை தோலுரித்து வருவது……………… பொய்யிலே பிறந்து பொய்யிலே வளரும் த்ராவிட விசிலடிச்சான் குஞ்சப்பனார் படைகளுக்கு …………… இன்னமும் வசை பாடத்தூண்டும்.

    த்ராவிட பாஷாணத்தில் ஊறிய புழுக்கள் (என்னுடைய பதப்ரயோகம் இல்லை இது………. அன்பர் அழகிரி அவர்கள் த்ராவிட பாரம்பர்யத்தை சுட்ட உபயோகித்த பதப்ரயோகம்) ஆதிக்க ஜாதி இனவெறியில் ஊறியவர்கள் என்பதற்கு மேலே அடைக்குறியிலிட்ட ****அவர்களது இழிவுப் பேச்சுக்களே**** ஆதாரம்.

    டீ வியில் மனிதர்கள் மனிதர்களுடன் விவாதம் செய்வது தான் வழக்கம். அதற்கு மாறாக மனித உலகில் மனிதர்களாக உலவும் மிருகங்களுடன் ஜாதி வெறியில் தோய்ந்த மிருகங்களுடன் உங்களுக்கு கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வாய்த்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

    த்ராவிட முகமூடி சுவிசேஷ பஜனை மடம் என்பது ஆதிக்க ஜாதி வெறியர்களுக்கு தங்கள் ஆதிக்க ஜாதி வெறியினை தக்க வைத்துக் கொள்வதற்கும் அதனை வளர்த்தெடுப்பதற்குமான ஒரு சாதனம் மட்டுமே. இவர்களது மற்றைய அனைத்து செயற்பாடுகளும் இதிலிருந்து கரந்துரையப்பட்டனவே.

  10. இந்த ஹிந்து விரோத கும்பலுக்கு மிஷனரிகள் – சவூதி அரேபியா – ஐ எஸ் ஐ பணம் வருகிறது.

    அவர்களது திட்டம் என்னவென்றால்:

    ஹிந்து தர்மத்தை நேரடியாகத் தாக்கினால் பிராமணரல்லாதவர்களும் எதிர்ப்பார்கள்.

    ஆகவே பிராமணர்களைத் தாக்கினால் அவர்கள் ஏதாவது எதிர் மொழி சொல்வார்கள் ;அல்லது எதிர்ப்பார்கள்
    அதைக் சாக்காக வைத்து பிராமணர் அல்லாதவர்களை பிராமணர்களுக்கெதிராகத் தூண்டி விடலாம்;
    அடுத்த கட்டமாக ஹிந்து தர்மம் ஏதோ பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என்பது போல் அடையாளப்படுத்தி அதை இழிவு படுத்தலாம்.

    பிராமணரல்லாதோருக்கு, முக்கியமாக இளைஞர்களுக்கு ஹிந்து தர்மத்தின் மீது வெறுப்பு வர வைக்கலாம்

    அப்போது மிஷனரி உள்ளே நுழைந்து மதம் மாற்றலாம்!

  11. திராவிடமே இது பொய்யடா வெறும் பொய்கள் அடைத்த பையடா.

  12. தெய்வத்தின் குரல் மற்றும் ஆன்மிக நூல்களைவிட குமுதம் கல்கி விகடன் போன்ற பத்திரிகைகள் ஹிந்துக்கள் குறிப்பாக பிராமணர்கள் இல்லங்களில் படிக்கபடுகின்றன இந்த பத்திரிகைகளின் தரம் பற்றி விமர்சிக்க தேவை இல்லை வசந்தன் கருத்துக்கு மறு கருத்தை யார் படிக்கபோகிரார்கள்?

  13. திரு ம வெங்கடேசனின் இந்த திராவிட மாயை பற்றிய கட்டுரைகள் சேமித்து வைத்து படிக்கப் பட வேண்டியவை. நமக்கு தெரிந்தவர்க்கு , அதாவது மாயையில் ஆழ்ந்திருக்கும் விஷயம் தெரியாதோருக்கு படிக்கக் கொடுக்கப் பட வேண்டியவை.
    வாழ்த்துக்கள்.

    பொதுவில் மூலப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் பலருக்கு இல்லை.
    இந்த குணம் திராவிட மாயை வாதிகளுக்கு பெரிய வரப்பிரசாதம்.

    “மார்க்ஸ் எழுதிய லெனினிசம் [ !] என்றச் புத்தகத்தில் 120 ஆம் பக்கத்தில்…” என்று ஒரு பழைய பேச்சாளர் சொல்ல, உடனே கை தட்டுவார்களாம். 🙂

    பெரிய பெரிய புத்தகங்கள் படித்து பட்டம் பெற்றோரும் [ அப்படி என்ன படித்தார்களோ? நோட்ஸ் மட்டும் படித்த பழக்கமோ என்னவோ ] ,பழைய விகடன் ஜோக் படிக்கும் அளவிற்குத் தான் இருக்கிறார்கள். இரண்டு வரிக்கு மேல் மனம் பதிவதே இல்லை. விடாமல் சத்தமாக [ டைம்ஸ் நொவ் அர்னப் போல ] கத்தினால் பல படித்தவர்கள் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்.

    இந்த விஷயத்தை எண்பது வருடங்கள் முன்பே புரிந்து கொண்ட அந்நிய சக்திகள், மற்றும் அவர் சிப்பாய்கள் இன்றளவும் பலரை ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் ஆயுதமே மக்களின் அறியாமை, அறிந்து கொள்ள விரும்பாமை, படு சோம்பேறித் தனம் , மற்றும் எதற்கும் கை தட்டும் குணம் தான்.

    இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல. படித்தவர்கள் பலர் நம் நாட்டில் அப்படித் தான் இருக்கிறார்கள்.

    மூலப் புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டும் மக்களுக்கு வந்து விட்டால் திரிப்பாளிகள் திணறிப் போவார்கள். வளருட்டும் திரு வெங்கடேசனின் பணி.

    சாய்

  14. அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வெங்கடேஷ். தி.க. என்ற பெயரிலான இந்த திருடர்கள் கழகத்தாருக்கு பார்ப்பனை எதிர்க்கும் வேகம், பஞ்சமனைக் கொண்டாடுவதில் இருக்காது. தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவனின் அடிப்பொடிகள் அல்லவே அவர்கள். தமிழின் சிறப்பே இவர்களுக்கு தெரியாதபோது அதையே திரித்துக் கூறும்போது சம்ஸ்க்ருதம் என்ன பாடு படும்? ஏற்க வேண்டிய ஆசாரங்களுக்கு கஞ்சி பெரியவரையும், ஆசாரத் திருத்தங்களுக்கு பாரதியையும் விவேகானந்தரையும் பின்பற்றுவோம்.

  15. சமஸ்கிருதத்திலிருந்து உண்மையானவற்றை, நல்லவிடயங்களை எல்லா , மக்களும் அறிந்துகொண்டால் நம்ம( தங்கள்) பிழைப்பு நடக்காதே , அதற்காகத்தான் சமஸ்கிருதத்தை எதிர்க்கிறார்களோ? என்னவோ ? அன்புடன் பிறேமதாசன் திருமேனி :

  16. சமஸ்கிருதத்தின் அறிவுபூர்வமான வார்த்தைகள் இந்த அறிவிலிகளுக்கு புரிந்து இருந்தால் தான் ஆச்சர்யம். ஆதி காலத்தில் இருந்த இரு தாய் மொழிகளான தமிழ், பிரகிருதம் இரண்டுக்கும் பொதுவான கடவுள் மொழி என்றும் சொல்லலாம், இரண்டு மொழிகளும் இணைந்து உருவான தேவ பாசை எனேவும் சொல்லலாம். சூரியனை பார்த்து தெரு நாய்கள் குலைப்பதற்கு நாம் கவலைபடவேண்டாம். திருடர் கலகங்களை ஒழித்து கட்டும் நாள் வெகு அருகில் வந்து விட்டது. ஜெய் ஹிந்த். ஓம் நமசிவய.

  17. அன்புள்ள ம.வெ !

    தெளிவான தோலுரித்தலுக்கு நன்றிகள்.

    // இந்த விளக்கத்தை இமயம் தொலைக்காட்சி விவாதத்திலும் தெய்வத்தின் குரல் புத்தகத்தோடு விளக்கினேன். மஞ்சை வசந்தன் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதை வேறொருநாளில் விவாதமாக வைத்துக்கொள்ளலாம் என்று மழுப்பினாரே தவிர பதில் சொல்லவில்லை. //

    ஏங்க, வச்சிகிட்டா வஞ்சனை செய்யப்போறாரு ? சட்டில் இருந்தாத்தானே அகப்பையில வரும் ? உண்மைக்கு எதிரா பொய் என்னைக்கும் கூனிக்குறுகித்தானே நிக்கும் ? நிக்கணும் ?

  18. // தாழ்ந்த சாதிக்காரன்கூட உனக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு, அவனுங்கல்லாம் ஒரு மனுசனா மதிச்சு பேசக்கூட லாயக்கற்றவனுங்க என்று இரட்டை டம்ளர் டீ கடையில சில்வர் கிளாசில டீ குடிச்சிக்கிட்டு பேசுற தொனி ஆதிக்க சாதிய மனநிலையில் எழுகிற தொனி.

    அவனுங்க எல்லாம் எப்ப பார்த்தாலும் குடிச்சிக்கிட்டு இருப்பானுங்க.முட்டாளுங்க, வேசிமகனுங்க என்று ஆதிக்க சாதி திமிரில் பேசிய பேச்சு ஆதிக்க சாதிய மனநிலையில் பேசுகிற பேச்சு.’

    இந்த ஆதிக்க சாதி மனநிலையில் இருந்துதான் இப்படிகேவலமாக எழுதியிருக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய இயல்பே. திராவிட இயக்க எழுத்தாளர்கள் மற்றும் அடிப்பொடிகள் தங்களுடைய மனநிலையை தெள்ளத் தெளிவாக நமக்கு காட்டியிருக்கிறார்கள். //

    அவங்க தரத்திற்கும் உயரத்திற்கும் ஏற்பத்தானே அவங்களோட பேச்சும் எழுத்தும் செயல்பாடும் இருக்கும் ? இதில ஆச்சர்யப்பட என்ன இருக்கு ? தனது வியாதி பற்றிய பிரக்ஞையேயற்ற இந்த மனோவியாதிக்காரர்கள்மீது பரிதாபப்படத்தான் முடியும்.

    வெள்ளத்தனைய மலர் நீட்டம்.

  19. அன்புள்ள ம.வெ !

    “நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று என் எதிரியே தீர்மானிக்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல நான் ஆத்திரமாக பேசவேண்டுமா, நிதானத்தோடு பேசவேண்டுமா என்று என் எதிரிகள் தான் முடிவு செய்கிறார்கள். வே.மதிமாறன் ராமநாதனை அறிவில்லாதவர் என்று சொல்லியிருக்காவிட்டால் நானும் வே.மதிமாறனை முட்டாள் என்றெல்லாம் பேசியிருக்க மாட்டேன்.”

    “கொஞ்சம் கவனியுங்க நண்பர்களே : நான் எழுதிய இந்த பதிவை படித்துவிட்டு காஞ்சி பெரியவர் சொல்கிற அனைத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று யாரும் முடிவுகட்டிவிட வேண்டும். அவருடைய பல கருத்துக்களை, முக்கியமாக தலித்துகள் கோயில் நுழைவு, பெண்கள் பற்றிய அவருடைய கருத்துக்களை மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்.”

    உங்களை மனம் திறந்து பாராட்டுகிறேன். உங்கள் தொண்டு வளரட்டும். வாழ்க. வளர்க.

    R Subramanian

  20. திரு வெங்கடேசன் அவர்களுக்கு,
    அருமையான பதிவுகள். சாம தான பேத தண்டம் என்பது இங்கும் பொருந்தும். எதிராளி சாதாரணமாக பேசாமல் இருக்கும் போது நாம் மட்டும் எல்லா நேரங்களிலும் பொருத்து போக முடியாது. இந்த பதிவை பார்க்கும் போது, தாங்கள் செய்தது சரியே.

    அரங்கன்.

  21. //..Ranga on May 24, 2015 at 9:09 pm
    திரு வெங்கடேசன் அவர்களுக்கு,
    அருமையான பதிவுகள். சாம தான பேத தண்டம் என்பது இங்கும் பொருந்தும். எதிராளி சாதாரணமாக பேசாமல் இருக்கும் போது நாம் மட்டும் எல்லா நேரங்களிலும் பொருத்து போக முடியாது. இந்த பதிவை பார்க்கும் போது, தாங்கள் செய்தது சரியே.

    அரங்கன்.//

    ஆங்கிலத்தில் ரங்கா என்று எழுதுபவர் ரங்கன் என்று பதிவிடும் நான் இல்லை.,
    ( யாரவது கேட்டார்களா என்றால் கடைசியில் அரங்கன் என்று முடித்து உள்ளார். அதனால் சொல்லவேண்டும் என்று தோணியது.)

    ஆங்கில ரங்கா தங்களது வருகை நல்வரவாகுக.

  22. // ஆங்கிலத்தில் ரங்கா என்று எழுதுபவர் ரங்கன் என்று பதிவிடும் நான் இல்லை.,//

    ஆஹா. ஏற்கனவே ஒரு ரங்கா இருக்கிறாரா? தாங்கள் கூறுவதை பார்த்தால் பல காரசார விவாதங்களில் பங்கு கொள்பவர் போலும்!

    அடியேனுக்கு இது தான் முதல் பதிவு. தங்கள் இனிய சொற்களுக்கு நன்றி.

    PS :
    // ஆங்கில ரங்கா தங்களது வருகை நல்வரவாகுக. //
    நான் ஆங்கில Ranga அல்ல என்பதற்க்காகவே அரங்கன் என்று முடித்து இருந்தேன். ஆயினும் தாங்கள் என்னை ஆங்கிலேயர் பட்டியலில் சேர்த்து விட்டீர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *