தமிழின் மூத்த பத்திரிகைக் குடும்பமான விகடன் குழுமம் கடந்த சில காலமாக, மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. குறிப்பாக, ஜூனியர் விகடன், டைம் பாஸ் ஆகியவற்றில் ஆசிரியர் குழுவில் உள்ள சில விஷமிகளின் கைவண்ணத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பத்திரிகை தர்மத்தை மீறி இந்த அவலம் நடந்து வருகிறது. ‘அடிக்கடி வெளிநாடு செல்லும் மோடியை எப்படியேனும் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்’ என்ற ஒரு கிறுக்குத்தனமான ஜோக் போதும் விகடனின் விஷமத்தை அறிய.
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதும் இப்படித்தான் அவரது பெயரைக் கெடுக்க ஊடகங்கள் பலவகைகளில் முயன்றன. அதன் எதிர்விளைவாகவே அவர் பிரதமர் பதவி என்ற அதிகார பீடத்தை நோக்கி விரைந்தார். நாட்டு மக்களின் பேராதரவுடன் மோடி ஆட்சியில் அமர்ந்து நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் அனைத்துமே, அவரை எதிர்த்த கும்பலின் முகத்தில் கரியைப் பூசி வருகின்றன. இந்நிலையில், பாஜக அரசு மீது எந்தக் குறையும் கூற முடியாத எதிர்க்கட்சிகள் அவரது வெளிநாட்டுப் பயணத்தை கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றன.
எப்போதும் ஏதாவது உளறி பத்திரிகையில் செய்தியாவதை வழக்கமாகக் கொண்ட காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதி புத்திசாலியான மதிமுகவின் வைகோ போன்றவர்களின் வயிற்றெரிச்சலைப் புரிந்துகொள்ள முடிகிறது. அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய ஊடகங்கள் ஏன் இவ்வாறு பிதற்றுகின்றன? இதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். பாஜக மற்றும் மோடி குறித்த எந்த அபவாதப் பிரசாரத்தையும் கண்டிக்கவோ, கண்டுகொள்ளவோ அக்கட்சியினர் யாரும் இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துவிட்டது.
கடந்த மார்ச் மாதம், காங்கிரஸ் இளவரசர் ராகுல் திடீரென மாயமானார்; இரு நாட்களுக்குப் பிறகே அவர் வெளிநாடு சென்றதை அக்கட்சி அறிவித்தது. அப்போதும் கூட அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்பதை காங்கிரஸும் அறிவிக்கவில்லை; ஊடக வாயாடிகளும் கேட்கவில்லை. பல வாரங்கள் கழித்து நாடு திரும்பியபோதும் ராகுலிடம் எந்த ஊடக அறிஞரும் அவரது வெளிநாட்டுப் பயண மகிமை குறித்து வினவவில்லை. அதே ஊடகங்கள் தான் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை உள்நோக்கத்துடன் விமர்சிக்கின்றன.
அதனால்தான், ‘பிரதமர் மோடி வெளிநாடு செல்வதற்குப் பதிலாக இந்திய விவசாயிகளின் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்’ என்று உபதேசிக்கும் தெம்பு ராகுலுக்கு வந்தது. அதையும் செய்தியாக்கி மகிழும் ஊடகங்களுக்கு மோடியின் வெளிநாட்டுப் பயணத்தின் பயன்கள் தெரியாதா என்ன?
பிரதமர் நரேந்திர மோடி இன்பச் சுற்றுலாவுக்காக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளவில்லை. அவர் வெளிநாடுகளுக்குச் செல்வது, அந்நாடுகளுடன் வெளியுறவை மேம்படுத்தவும், அந்நாட்டுத் தொழில்துறையிடமிருந்து இந்தியாவுக்கு முதலீடுகளை ஈர்க்கவும் தான். ராகுல் போல மசாஜ் கிளப்களுக்கு மோடி செல்லவில்லை. அவர் நமது நாட்டின் கௌரவத்தை உயர்த்த, வெளியுறவுக் கொள்கையில் புதிய வடிவத்தைக் கொண்டுவந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
தான் பிரதமர் பதவி ஏற்றதிலிருந்து, 2014-இல் 9 நாடுகளுக்கும் 2015-இல் இதுவரை 17 நாடுகளுக்கும், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் அவர் வரும் மாதங்களில் மேலும் 9 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர இடம் பெறும் முயற்சியில் இந்தியா பல்லாண்டு காலமாக முயன்றுவரும் நிலையில், உலக அரசியலில் தனது நிலையை இந்தியா ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதே மோடியின் இலக்கு. தவிர, அவர் செல்லும் நாடுகளிலிருந்து அந்நிய நேரடி முதலீடாக பல லட்சம் கோடியை இந்திய தொழில் துறைக்குள் ஈர்த்து வருகிறார்.
இவை மட்டுமல்லாது, தான் செல்லும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களையும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து, அவர்களின் நம்பிக்கை நாயகனாக தெம்பூட்டி வருகிறார். நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்குப் பிறகு, உலக அளவில் இந்தியா குறித்து பெருத்த மரியாதையை ஏற்படுத்தி வருபவர் மோடி தான் எனில் மிகையில்லை.
உலக அளவிலான நாடுகளின் கூட்டமைப்புகளான பிரிக்ஸ், ஜி-20, கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு, சார்க் போன்றவற்றில் இந்தியாவின் முக்கியத்துவம் தற்போது அதிகரித்துள்ளது என்றால் அதற்கு பிரதமர் மோடியே காரணம். இவை ஏன் நமது எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஊடகங்களுக்குப் புலப்படுவதில்லை? கழுதைகளுக்கு கற்பூர வாசனை தெரிவதில்லை.
ஆனால், ஊடகங்களின் அராஜகங்களை மீறி சமூக ஊடகங்களின் தயவில் பெருவாரியான மக்கள் உண்மை நிலையை உணர்ந்தே இருக்கிறார்கள். அண்மையில் (ஆக. 16, 17) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற மோடிக்கு அங்கு கிடைத்த வரவேற்பும், அங்கு கையெழுத்தான ஒப்பந்தங்களும், மோடியின் தெளிவான திட்டமிடலை மீண்டும் நிரூபித்தன.
உலக அளவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் முடிவு செய்துள்ளன. இதுதவிர, ராணுவ ஆயுதத் தயாரிப்பில் ஒத்துழைப்பு நல்கவும், இரு நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி மூலம் பாதுகாப்பை அதிகரிக்கவும், இரு நாடுகளுக்கு இடையே உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களும் 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆலோசனை நடத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இஸ்லாமிய நாடு என்ற போர்வையில் பாகிஸ்தான் நடத்திவரும் அத்துமீறல்களுக்கான ‘லகான்’ என்று சொல்லத் தேவையில்லை.
இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை புதிய உச்சத்திற்குக் கொண்டுசெல்லும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 சதவீதம் வரை முதலீடுகளை அதிகரிக்கவும் எமிரேட்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் அடிப்படை கட்டமைப்புத் துறையில் ரூ. 5 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸின் மஸ்தார் நகரில் அந்நாட்டு முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ”இந்தியாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய உள்கட்டமைப்பு, எரிசக்தி, கட்டுமானத் துறை என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் முதலீடு செய்யுங்கள். நாம் அனைவரும் இணைந்து 21-ஆம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக மாற்றிக் காட்டுவோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல்லாமல் எப்படி ஆசியா முழுமை பெற முடியும்? இந்தியாவின் திறனும், ஐக்கிய அரசு எமிரேட்ஸின் சக்தியும் இணைந்து ஆசியாவின் முக்கியத்துவத்தை உலகம் உணரச் செய்யலாம்” என்றார்.
மோடியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கவனமாகத் தொடுக்கப்பட்டவை. அவர் முன் தெளிவான இலக்கு உள்ளது என்பதற்கு இந்தப் பேச்சே மிகச் சரியான உதாரணம். துபாயில் உள்ள ஷேக் ஜாயித் மசூதிக்கு மோடி சென்றதையும், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பையும் இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்வு அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கும் பாரதப் பண்பாட்டின் வெளிப்பாடாகவும் மிளிர்ந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் ராணுவத் தலைமை பொறுப்பில் 2-வது இடத்தில் உள்ளவருமான ஷேக் முகமது பின் சையீத் அல் நயானை மோடி சந்தித்தபோது, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். மரபை மீறி விமான நிலையம் வரை வந்து பிரதமர் மோடியை அவரும் 5 இளவரசர்களும் வரவேற்றது குறிப்பிட வேண்டிய விஷயம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் பணி யாற்றுகின்றனர். தொழில் நகரமான அபுதாபியில் இந்தியத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்குள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்தியத் தொழிலாளர்களை மோடி சந்தித்தார். அந்நிய மண்ணில் தங்களை நேரில் சந்தித்த முதல் பிரதமரான மோடியைக் காண எந்த மத வேறுபாடும் இல்லாமல் இந்தியர்கள் திரண்டனர்.
துபாயில் நடைபெற்ற மாபெரும் நிகழ்வில் சுமார் 50,000 இந்தியர்கள் திரண்டனர். அதற்கெனெ அந்நாட்டு அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கியது என்றால், அந்த நிகழ்வின் வலிமை புரியும். அங்கு மோடி இந்தியில் பேசினார். அது உள்ளூர் ரேடியோக்களில் நேரடியாக ஒலிபரப்பானது. ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மோடியின் பேச்சு உடனுக்குடன் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவரது பேச்சைக் கேட்க இந்த அளவுக்கு மக்கள் குவிந்ததும், அவரது பேச்சு ரேடியோவில் ஒலிபரப்பானதும் இதுவே முதல்முறை.
அங்கு மோடி பேசுகையில், “நான் ஒரு சிறிய இந்தியாவில் இருப்பது போல உணர்கிறேன். இங்கு பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறீர்கள். இந்தியா கஷ்டத்தில் இருக்கும்போது நீங்கள் உதவத் தவறுவதில்லை. எனக்கு இங்கு அளிக்கப்பட்ட மரியாதையும் அன்பும் உண்மையில் 1.25 கோடி இந்திய மக்களுக்கு அளிக்கப்பட மரியாதையாகவே கருதுகிறேன்” என்றார். அரங்கில் ‘பாரத் மாதா கி ஜய்’ என்ற முழக்கம் எழுந்தவாறே இருந்தது.
இதுதான் மோடியின் மகிமை. மோடி என்ற மந்திரம் இந்திய எல்லை தாண்டி உலக அரங்கிலும் பலனளிக்கத் தொடங்கிவிட்டதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம் மீண்டும் நிலைநாட்டியது. மிக விரைவிலேயே இந்தப் பயணங்களின் பலன் கிட்டும்போது, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு மேலும் கூடி இருக்கும். அதுவரை உலகம் சுற்றும் வாலிபனாக மோடியை நமது ஊடகங்கள் கேலி செய்துகொள்ளட்டும். போற்றுவார் போற்றட்டும்… புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்… மோடியின் பயணம் தொடரும்.. உலக அரங்கில் இந்தியாவின் நிலை உயரும் வரை.
.
சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசை ஊத்தி மூடிட்டு வேற வேலையைப் பாருங்கடா .ஏன்னா நாங்கதான் சுதந்திரம் வாங்கிதந்தோம் என்ற பேரால காங்கிரஸ் பெற வெச்சுகிட்டு பம்மாத்து பண்ற வேலையெல்லாம் வேணாம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தார் .காங்கிரஸ்காரனுங்க நாட்டைக் கெடுத்துட்டு போனதை சொல்ல வார்த்தைகளே இல்லை இல்லை இல்லவே இல்லை.பா. ஜ. க ஒன்றால் மட்டுமே நாட்டை சீர் படுத்த முடியும் முடியும் கண்டிப்பாக முடியும்.நமோவை ஏளனமாகப் பேசும் ஒவ்வொருவரும் சிவாஜிகணேசன் அவர்கள் பேசிய வசனம்போல் நமது பாரம்பரியம் மிக்க “ஹிந்துஸ்தான் ” தேசத்தின் அசல் வித்தாக இருக்கமாட்டார்கள் என்பது உறுதி உறுதி உறுதியோ உறுதி.-இதற்கு மேல வார்த்தைகள் கிடையாது என்பது எனது எண்ணம் -இப்படிக்கு வி. லக்ஷ்மிநாராயணன்
அமெரிக்காவில் ஒபாமாவையும் ஜார்ஜ் புஷ்ஷையும் எப்படி கிண்டல் செய்கிறார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட அரசியல்வாதிகளை சர்வசாதாரணமாக கிண்டல் செய்கிறார்களாம். அட திராவிடக் கட்சித் தலைவர்களை கிண்டல் செய்கிறார்களே என்று பொங்கி எழுந்தாலாவது ஜால்ரா அடிக்கக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். சேக்கிழானின் உணர்வுகள் உண்மையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறதே!
அது ஏனோ தெரியவில்லை தமிழர்கள் மட்டும் இப்படி தொட்டாற்சுருங்கியாக – oversensitive – ஆக இருக்கிறோம்.
// அடிக்கடி வெளிநாடு செல்லும் மோடியை எப்படியேனும் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்’ // லூசா விடுங்க சார், சாதாரண ஜோக்தான் இது. // பாஜக மற்றும் மோடி குறித்த எந்த அபவாதப் பிரசாரத்தையும் கண்டிக்கவோ, கண்டுகொள்ளவோ அக்கட்சியினர் யாரும் இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துவிட்டது. // இது அபவாதமும் இல்லை, இதைக் கண்டிக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் கோளாறு இருக்கிறது.
சவுக்கு என்ற இனையதளம் கொஞ்ச வருடம் முன்பு விகடனின் ஊழல் எப்படி என்று அம்பலபடுதியது . கனி கைதான போது நிருபரை PAID நியூஸ் coverage க்கு flight இல் கூட்டிகொண்டு போனவர் ராஜாத்தி – இது எல்லாம் படிக்காதவர்கள் வேண்டுமானால் விகடனை குருட்டுத்தனமாக நம்புவர் . ஒரு வேலை விகடன் க்கு மோடி சம்திங் மாமூல் வெட்டினால் கனி மாதரி buildup கொடுப்பார்கள் போல !!!!! யாராவுது மோடியிடம் சொல்லுங்கள் !!!
சுாியனைப் பாா்தது நாய் குரைத்த கதையாய் மோடியை விகடன் குரைப்பது முடியும். பணத்துக்கு வாய் பிளககும் உயிருள்ள பிணங்கள் விகடன் குழுமம் ஆகும்.
மிக நல்ல கட்டுரை. நன்றி
Junior vikadan oru nalanthara pathrikkai.Nan antha pathrikkai padippathu illai kadantha 5 varudankal.Mulukka mulukka junior vikadan DMK sarbulla pathrikkai enpathu ennai pondrur unarnth junior vikadan vangvathu illai,
Indiavil Modi valartchi enpathu Nattin valartch.
Jagadeesan
தங்கள் சேவைக்கு நன்றி.
தமிழ்ஹிந்து இங்கிலிஷில் படிக்க முடியுமா?
என்னுடயை மற்ற மொழி நண்பர்கள் விருப்பம் நிறைவேறுமா?
மூத்த பத்திரிகைக் குடும்பமான விகடன் குழுமம் ——————-பசுமை விகடனில் மிக கடுமையாக மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். நான் கேள்விபட்டது அப்பத்ரிக்கை குழுமம் தற்போது ஒரு குறிப்பிட்ட சாதியாளர்களின் கைக்கு போய் விட்டதாக சொல்லப்படுகிறது.
நான் ஒருமுறை ஒரு விகடன் பத்திரிக்கையாளருடன் ஒரே வண்டியில் செல்ல நேர்ந்தது. நான் அவரிடம், சார் நீங்கள் காஞ்சிப் பெரியவர்களைப் பற்றி தொடர்ந்து தவறாக எழுதி வருகிறீர்கள். அது உங்கள் கருத்து. அனால் அதை ஏன் ஜூனியர் விகடனில் எழுதுகிறீர்கள். சக்தி விகடனில் எழுத வேண்டியதுதானே? பக்தர்களுக்கு தானே நீங்கள் தவறான சாமியார்களைத் தெரித்துக் காட்டவேண்டும் என்று கேட்டேன். அதற்க்கு அவர் சக்தி விகடனிலா? எப்படி சார்? என்று கேட்டார்.
இவர்களுக்கு சக்தி விகடனில் மஹா பெரியவர் மகிமை எழுத வேண்டும். ஜூனியர் விகடனில் அவதூறு எழுத வேண்டும். ஜூனியர் விகடனில் தாலி தேவையா என்று கட்டுரை. சக்தி விகடனில் காரடையான் நோன்பு சாவித்திரி விரத மகிமை என்று எழுத வேண்டும். இலவச தாலிக் கயிறும் கொடுப்பார்கள்.
கேட்டால் நாங்கள் பத்திரிகை சுதந்த்திரத்தில் தலையிடுவதில்லை என்று கூறுவார்கள். நாம் நம் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, வாடகை வீட்டில் என்ன நடக்கிறது என்று நான் கவலைப் படுவதில்லை என்று சொன்னால் போலீஸ் விடுமா?
Vikatan has become yellow journal long back . True example of prestitutes is vikatan group .To wash their sins they bring out Sakthi vikatan.Decent families with young childrenn stopped buyinng Anandavikatan and junior vikatan .
I agree with RV’s comments. To be oversensitive will lead to suppression of Press freedom and, consequently, smothering of our democracy. After Modi came to power, many instances of rounding up people for criticising Modi have occurred.
Modi should intervene and control these totalitarian elements in our democracy. Already the Maharastra government had a loss of face in the episode of putting two young women behind bars for questioning the arson conducted by Siva Sena elements in the aftermath of Thackerey death. News about many things that happened in Modi reign are nowadays spreading fast; and he, as PM, the leader of the largest democracy in the world, should be concerned and stop these people from damaging democratic principles. Criticism of Vikatan falls under this category. Modi is the PM of India and his every political or governmental act can be criticised by the Press. A PM should just ignore all and concentrate on implementing his agenda or manifesto and leave the opinion to the people who have elected him.
விகடன் படிப்பதை நிறுத்தியவன் என்பதில் பேரு மகிழ்வு கொள்கிறேன். மற்றைய ஹிந்துக்களும் விகடனின் எழுத்து விபசாரத்திற்கு மயங்காமல் இருக்குமாறும் அதை படிப்பதை துறக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
vikatan ‘s only aim is to bring back Sonia and karunanidhi’s rule. For that they will go to any extent.
Who is the owner, who is controlling vikatan, we don’t know. But it is a classic example of yellow journalism.
அவர்களின் மாணவர் நிருபர் திடட்டத்தை போற்றியவர் பலர் .அதனால் மேல் படிப்பும் இல்லாமல் நடுத்தர வயதில் வேலையை இழந்தவர் பலர் . பத்திரிக்கை , கம்யூனிஸ்ட் எல்லாம் அடுத்தவன் கம்பெனிக்கு தான் வாய் கிழிய பேசுவர் . அவர்களின் WFR க்கு எவனும் பேச முடியாது