மிக அருமை. படங்கள் வரைந்தவர் அனுபவித்து வரைந்திருக்கிறார்.
He also drew illustrations (pictures) for Seethayanam – a long series – that appeared in Thinnai authored by Jeyabharatan. Seethayanam is pitched itself against Ramayanam and showed Raman in a bad light.
I wonder how the illustrator can ‘experience’ (anubavithu) the story. Vaiyavan is basically an artist to whom art is God, not someone God is his art. Therefore, he could draw for stories which are opposite extremes. Like Kannadasan who can write both about Krishna and also Yesu Kaviyam. For him, the enjoyment of creating poetry is unmatchable delight. Like him, here Vaiyavan: He seems to enjoy art for art’s sake but Madame Geeta Sambasivam has been swept off her feet i.e. misled. Lets allow artist to live in their own world. Not dragging them to our world. Illustrations are awesome but he coloring is a bit garish – like in Pongal greeting cards of old times..
Bala Sundara Vinayagam
ஆதி சங்கரர் சிவபெருமானின் அவதாரம் என்பது மிகைப்படுத்துதல். இப்படிப்பட்ட மிகைகள் நமது வரலாற்றைச் சிதைக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவரது வாழ்வில் அவர் சந்தித்த சண்டாளனை வழியை விட்டு அகன்று போ என்று சொன்னபோது வந்தவர் பார்வதி பரமேஸ்வரன் என்றால், ஆதி சங்கரர் சிவபெருமானின் அவதாரம் என்ற கூற்று என்ன ஆகும்?
சிவபெருமான் கருவுட்புகார், கருவூறார், அவதாரம் எடுப்பதில்லை.
ஸ்ரீ அடியவன் அவர்கள் ஆதிசங்கராச்சாரியார் பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுடைய அவதாரம் என்பது மிகை என்று கூறியுள்ளார். சிவபெருமான் அவதாரம் செய்வதில்லை அவர் அயோனிஜர் என்பது அனைத்து சைவப்பெரியோர்களின் ஒருமித்தக்கருத்தாகவே இருக்கிறது. ஸ்மார்த்த-அத்வைத பாரம்பரியத்தில் சிவபெருமான் சகுணபிரம்மத்தின் வடிவமாக மும்மூர்த்திகளில் ஒருவராகவே கருதப்படுகிறார். ஆனால் சைவம் சிவபெருமானைப்பரப்பிரம்மமாகவே காண்கிறது. சகுண நிர்க்குணபிரம்மப்பகுப்பை ஏற்பதில்லை. மும்மூர்த்திகள் மட்டுமல்ல பஞ்சமுர்த்திகளுக்கும் துரியராக மேலானவராக பரசிவம், மஹாலிங்கம் என்று சிவத்தை சைவர் தியானிக்கின்றனர். ஆகவே சைவர்கள் கேவலாத்வைதிகள் தங்களது ஆச்சாரியார் சிவபெருமானுடைய அவதாரம் என்றால் கவலைப்படத்தேவையில்லை.சைவர்களோடு உரையாடும்போது ஸ்மார்த்தர்களும் இந்தவேறுபாட்டை உணர்ந்துகொண்டு உரையாடினால் நன்று. குருவே சிவமெனக்கூறினன் நந்தி என்று திருமூலர் பிரான் சொல்வதால் ஸ்மார்த்தர்களும் தங்களது குருவை சிவமாகக் காண்தலில் தவறில்லை என்றே உணரலாம். சிவசிவ
சிவஸ்ரீ அவர்களுக்கு: சிலவற்றை அவ்வப்போது மறுக்காவிட்டால் என்ன ஏற்படுகிறது என்பதை இப்போது வெளிப்படையாகக் கூறவேண்டிய அவசியம் வந்திருக்கிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து என்றொரு பழமொழி உண்டு. இந்தப் பரமேஸ்வரனின் அவதாரம் ஆதிசங்கரர் என்பதில் ஆரம்பித்து இப்போது காஞ்சி பரமாச்சாரியாரும் அப்படியான அவதாரமே என்று அவரது பக்தர்கள் சிலர் கூறி வருகின்றனர். (எனக்கும் அவர் மீது அதிக அளவிலான பக்தி உண்டுதான்.) அத்தோடு அவர்கள் நிற்கவில்லை. எல்லை இல்லாமல் மிகைப் படுத்துதளைக் கொண்டு போன சிலர், பரமாச்சாரியாரை வலது புறமும், காஞ்சி காமாட்சி அம்பாளை இடது புறமுமாகப் படம் வரைந்து அம்மையப்பர் என்று படம் தருகின்றார்கள். முஸ்லிம்கள் முகமதை வெறும் சித்திரமாகக் கூட வரையக் கூடாது என்றும் அப்படி யாராவது வரைந்தால் அவர்களக் கொள்ளும் அளவுக்குப் போவதும் ஒருவேளை சரிதானோ என்று யோசிக்கும் அளவுக்கு பக்தி போய்விடுகிறது என்பது பெரும் வேதனையைத் தருகிறது. எனவேதான் சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் எந்த வித சலுகையும் கூடாது என்று சொல்கிறேன்.
அன்பர் பீ எசு அவர்கள் செப்பும் விஷயங்களில் விதிவிலக்காக எனக்கு சில சமயம் கருத்தொற்றுமை கூடக் காணக்கிட்டுகிறது.
இங்கு ஆதிசங்கரர் படக்கதைக்கு அழகழகான படங்களை வரைந்த அதே ஸ்ரீ வையவன் அவர்கள் சீதாயணம் என்ற அலக்கியத்துக்கும் படம் வரைந்தார் என்பது கொஞ்சம் முகஞ்சுளிக்க வைதது. ஆனால் படம் வரைவது அவருடைய தொழில் தர்மமாயிற்றே. அலக்கியத்துக்கு படம் வரைந்தால் என்ன? இலக்கியத்துக்கு படம் வரைந்தால் என்ன?
அந்த அலக்கியத்துக்கு படம் வரைந்த படிக்கும் சரி இங்கு சங்கரர் படக்கதைக்கு படம் வரையும் போதும் சரி அவருடைய சித்திரங்கள் மனதைக் கவருபவை என்பதில் மட்டிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சங்கரர் படக்கதை எளிமையாக அவர் வாழ்வை சித்தரிக்க விழையும் ஒரு ப்ரயாசை. இனிதே கதை முன் நகர்கிறது. உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
சிவனை ” பிறவா யாக்கைப் பெரியோன் ” என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. சிவன், திருமாலைப் போலப் பல அவதாரங்கள் எடுத்ததாகக் காட்டப்படவில்லை. ஆயினும், காஞ்சி மகாப்பெரிவரைப் போற்ற ஆரம்பித்தால் அவரது புகழ் பாடும் கற்பனைக் கதைகளுக்கு அளவே இல்லை. (அவர் பல்லக்கில் இருந்து மறைந்து பின் மீண்டும் காட்சி அளித்தார்) உண்மையில் மகாப்பெரிவரின் முன்னோடியாகக் கருதப்படும் ஆதி சங்கரர் ‘ பிரசன்ன பவுத்தர்’ என்றும் அவர் காலத்தில் அப்போதைய இந்துக்களில் சில பிரிவினரால் அழைக்கப்பட்டார். அவரே பிறகு பஜகோவிந்தமும் இயற்றினார்.
‘மகாப்பெரிவர் ‘என்ற வார்த்தையை ‘மகாப்பெரியவர் ‘ என்று படிக்கவும். எழுத்துப் பிழைக்கு வருந்துகிறேன்.
I am sure the idea of this illustrated history of one of the greatest Eastern Philosopher is to introduce him to children. Children like illustrations of excessive use of colors. The adults can go to big books without or with minimal illustrations; but children can be hooked only with such garishly attractive illustrations.
tamilhindu.com may ensure that this ongoing story is released in book form for children.
As for me, I am more interested in his astounding philosophy of Vedanta, than in his story as believed.
The story being illustrated here, is well known to me. But for novices, it is a great service.
சுத்தாத்துவித சைவ சித்தாந்திகள் வழிபடும் சிவம், “அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப் பிழம்பு”.ஆதி சங்கரரை அறிவால் சிவனெ என்று கூறுவது உபசாரமே. உண்மையன்று. புகழ்ச்சிக்கு ஒரு எல்லையுண்டு. சிவபரம்பொருளே சங்கரராக அவதரித்தது என்று கூறுவது அடாது. அப்படிக் கூறுவோர் சங்கரருக்கும் பாவம் விளைக்கின்றனர்.
முனைவர் ஐயா அவர்கள் கவனிக்கவேண்டிய விஷயம்: சங்கரரை மட்டும் அல்ல, காஞ்சி மகா பெரியவரைக் கூட பரமசிவனின் அவதாரம் என்று சொல்கிறார்கள். அத்தோடு நில்லாமல் காஞ்சி மகாபெரியவரை அர்த்தனாரீஸ்வரரில் பரமசிவன் இருக்கும் பாதியில் உருவம் பதித்து, காமாட்சி அம்பாளை இடப்புறம் வரையும் அளவுக்கு பரமசிவனை, காமாட்சி அம்பாளை, காஞ்சி மஹாபெரியவரைக் கொச்சைப் படுத்துகிறார்கள். இதே தளத்தில் சீதையின் பார்வையில் ராமன் தொடர் குறித்து சில நிகழ்வுகளுக்கு ஒரு பெரிய கட்டுரை வரும் அதே சமயம், பரமசிவனையும், சங்கரரையும் அபசாரம் செய்யும் இப்படக் கதையும் வருகிறது. பீஎஸ் குறித்து வருந்தும் கிருஷ்ணகுமார் அவர்களுக்குக் கூட இந்த அபசாரம் ஏற்புடையதாக இருப்பது அதிசயம்.
// Vaiyavan is basically an artist to whom art is God, not someone God is his art. //
வையவன் அவர்கள் படம் வரையவில்லை, உரையாடலை எழுதியிருக்கிறார்; செந்தமிழ் செல்வன் படம் வரைந்திருக்கிறார் என்று படக்கதையின் மேலே எழுதியுள்ளதே!
My friend is a devotee of Puttaparthi Saibaba. He informs me that the devotees consider their guru an avatar of Lord Shiva.
In my view, it cannot be stopped i.e. anyone can consider the guru as an avatar of any God. As long as it is confined within the followers, it is harmless imagination.
பேரன்பிற்குரிய ஸ்ரீ அடியவன்.
இரண்டு விஷயங்கள் .
சங்கரரை சிவபெருமானின் அவதாரமாகச் சொல்வது.
மஹாபெரியவரை சித்தரிக்கும் விஷயம்.
சங்கர திக் விஜயங்கள் முதல் விஷயத்தை எப்படி சித்தரிக்கின்றன என்பது சம்ப்ரதாய ரீதியாக பார்க்க வேண்டிய விஷயம். சைவம் வேறு. அத்வைதம் வேறு. அத்வைதத்துக்கும் சைவத்துக்கும் ஒற்றுமைகள் இருந்தாலும் வேற்றுமைகளும் உண்டு.
சங்கர திக்விஜயங்கள் சிவபெருமானின் அவதாரமாகத் தான் சங்கரரைச் சித்தரிக்கின்றன என்று என் புரிதல்.
எந்த காவ்யத்தில் பரமேச்வரருடைய அவதாரமாகிய பகவத்பாதர் என்று ப்ரசித்தி பெற்றவர் நாயகராகவும் சாந்தி ரஸம் நிலையுள்ளதாகவும் ச்ருங்காரம் முதலிய மற்ற ரசங்கள் அங்கங்களாகவும், அவித்யையின் நாசம் பயனாகவும் இருக்கிறதோ அத்தகைய காவ்யத்தை இயற்றுகின்றவன் வ்யாசமுனிவர் போல் நிலை பெற்ற சிறந்த கவியாகவும் மிக பாக்யசாலியாகவும் இருக்கின்றான். அந்த காவ்யத்தை படித்து பொருளை அறிந்து கொள்பவர்களும் பாக்யசாலிகள்.
ப்ருஹத் சங்கர விஜயத்திலும் இது போன்றே தான் சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன். மாற்றுக்கருத்து இருந்தால் தரவுகளுடன் தெரிவிக்கவும்.
இரண்டாவது விஷயம். ஸ்ரீ காஞ்சி பெரியவர் பற்றி ………..எனக்குப் புரிந்தவரைக்குமான கருத்துக்களை …….இது சம்பந்தப்பட்ட என்னுடைய வ்யாசத்தில் முன்னமேயே பகிர்ந்திருக்கிறேன். இந்த விஷயத்தில் எனக்கு முழுமையான விஷயத் தெளிவு இல்லை.
வேறு ஒரு நூலில் …….. வேறு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.
சாயி சத் சரித்ரம் என்ற நூல் நீங்கள் படித்திருக்கலாம் என நினைக்கிறேன். அதில் ஒரு அம்மையார் சாயிக்கு வயிற்றை பிடித்து விட்டு சேவை செய்யும் ஒரு நிகழ்வு வரும். அங்கு சுற்றியுள்ள அடியவர்கள் அந்த அம்மையார் சாயியின் வயிற்றை ……… கிட்டத்தட்ட முதுகுடன் ஒட்டும் அளவுக்கு அவர் வயிற்றைப் பிடித்துவிடுவதைப் பார்த்து கதிகலங்குவர். அவரை சற்று நிதானமாக சேவை செய்யுமாறு சொல்லுவர். ஆனால் அப்படி பரிந்துரை செய்யும் அடியவர்களை சாயி கடிந்து கொள்வார். தன்னுடைய சாயியிடம் பேரன்பு கொண்ட அந்த அம்மையார் தான் விரும்பிய படி சேவை செய்வதை வேறு யாரும் குறை சொல்ல வேண்டாம் என்று கடிந்து கொள்வார்.
இது விஷயத்தில் உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதே சம்ப்ரதாயத்தைச் சார்ந்த சாஸ்த்ரக்ஞர்களிடம் நீங்கள் இது பற்றி எடுத்துரைத்தால்………அது பற்றி மேலதிகத் தெளிவு கிட்டும். ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவர் என்ற யதியின் உபதேசங்கள் என்னுடைய வாழ்வில் ஆன்மீகம் என்ற கதவைத் திறந்து அனுஷ்டானங்களின் மீது எனக்கு பிடிப்பை ஏற்படுத்தியது.
குருவை மூர்த்தி த்ரயமாக ஸ்துதி செய்ய சாஸ்த்ரம் விதிக்கிறது.
யதிகளை வாஸுதேவ ஸ்வரூபமாக சுட்டும் குறிப்புகளும் என்னுடைய வ்யாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதற்காக சித்திரங்களிலும் இப்படி சித்தரிப்பது சரியா என்ற விஷயத்தில் எனக்குத் தெளிவு இல்லை என்று சொல்வது தான் முறையாக இருக்கும். விஷயம் தெரிந்த சாஸ்த்ரக்ஞர்களிடம் இது பற்றி தாங்கள் மேலதிகத் தெளிவு பெறுதல் நன்று என்பது சிறியேனுடைய விக்ஞாபனம்.
மிகவும் அருமை

https://www.dinamalar.com/news_detail.asp?id=1434607

என் வசம் மாதவீய சங்கர திக்விஜயம் உள்ளது.
சர்க்கம் ——- 1…… ச்லோகம் ..17
नेता यत्रोल्लसति भगवत्पादसम्ज्ञो महेशः
शान्तिर्यत्र प्रकचति रसः शेषवानुज्ज्वलाद्यैः ।
यत्राविद्याक्षतिरपि फलम् तस्य काव्यस्य कर्ता
धन्यो व्यासाचलकविवरस्तत्कृतिज्ञाश्च धन्याः ॥
நேதா யத்ரோல்லஸதி பகவத்பாதஸம்க்ஞோ மஹேச:
சாந்திர்யத்ர ப்ரகசதி ரஸ: சேஷவனுஜ்வலாத்யை:
யத்ராவித்யாக்ஷதிரபி பலம் தஸ்ய காவ்யஸ்ய கர்தா
தன்யோ வ்யாஸாசலகவிவர: தத்க்ருதிக்ஞாஸ்ச தன்யா:
பொருளுரை :-