சென்னை மழைவெள்ளம்: சேவாபாரதி மீட்புப் பணிகள்

chennai-rainவரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை நகரத்தைப் பேரிடரில் ஆழ்த்தியுள்ளது.   இந்தச் சூழலில் அயர்வின்றி ஓய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும்  அனைத்து அரசு அமைப்புகள், பொதுத்துறை / தனியார்  நிறுவனங்கள், சேவை அமைப்புகளுக்கும் நமது இதயபூர்வமான நன்றிகள். குறிப்பாக, மாநகர போக்குவரத்து, காவல் துறை, தீயணைப்புத் துறை,  மாநகராட்சி, மத்திய/மாநில பேரிடர் மீட்புப் பணியாளர்களின் இடையறாத சேவை போற்றுதலுக்குரியது.  இந்த இடரிலிருந்து சென்னை விரைவில் மீண்டு வர இயற்கையை இறைஞ்சுகிறோம்.

சேவா பாரதி அமைப்பு நகரத்தின் பல இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.  உதவி வேண்டுவோர் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Sri. Rajesh Vivekanandan – 9840260631

Sri. Srinivasan – 9789023996

Sri. Durai Shankar – 9444240927.

சேவார பாரதி அமைப்பு, தொடர்ந்து பல கல்வி, மருத்துவ, நிவாரண சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  இப்பணிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு தங்கள் கொடைகளை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

A/c Name: SEVABHARATHI TAMILNADU
A/c No: 078410011014427
IFSC code: ANDB0000784 (Andhra Bank Chetput Branch, Chennai)

(Please send your name, address details etc. to sevabharathitn@rediffmail.com to enable them to send receipt. Donations are tax exempt under sec. 80G).

சேவா பாரதி முகவரி:

2, M. V. Naidu Street, Panchavati, Chetpet, Chennai – 600 031.

5 Replies to “சென்னை மழைவெள்ளம்: சேவாபாரதி மீட்புப் பணிகள்”

  1. வட இந்திய தொலை காட்சிகள் சென்னையை புறக்கணித்த நிலையில் சேவா பாரதி, மற்றும் நண்பர்கள் குழு ஆங்காங்கே மீட்பு பணியில் இறங்கி உதவி செய்வது மனதிற்கு இதம் அளிக்கிறது. தமிழக தொலை காட்சி நிறுவனங்களும் சரிவர எல்லா இடங்களுக்கும் செல்ல முடியவில்லை. தமிழக அரசு, மற்றும் மத்திய பேரிடர் மீட்பு குழுவின் 500 வீரர்களும் மீட்பு பணியில் இருப்பது தான் இப்போதைய ஒரே ஆறுதல்.

  2. ஆர் எஸ் எஸ் தொண்டர்களோ அல்லது சேவா பாரதி தொண்டர்களோ மழை வெல்ல மீட்பு பணியில் ஈடுபட்டதாக எந்த ஒரு தமிழ் டிவி சானலிலும் செய்தியோ படமே வரவில்லையே. வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறார்களா? ஒரு டிவி சானலில் TMMK (=தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம்) என்ற எழுத்து போட்ட பனியன் போட்ட நபரை அடிக்கடி காட்டினார்கள். ஆனால் ஆர் எஸ் எஸ் பற்றி படமோ செய்தியோ காணவில்லை. அதற்கு தான் பிஜேபி க்கு என்று ஒரு டிவி சானெல் வேண்டும் என்று கரடியாக கத்துகின்றேன். ஆனால் யார் காதிலும் விழவில்லையே!

  3. Kindly add phone number also. Money2India site asks for it. I took it from Sevabharathi website as Phone: +91 – 44 – 2836 1049 / 2836 0243. Could you confirm if it is right?
    Thanks,
    Murali.

  4. சேவாபாரதி மற்றும் ஆா்எஸஎஸ் நடத்தும் வெள்ள நிவாரணப்பணிகள் குறித்து தொலைகாட்சிகளிலும் பத்திாிகைகளிலும் செய்திகள் இல்லை.பாலிமா்டிவி தவ்ஹித் ஜமாத் செய்த பணிகள் குறித்து அடிக்கடி செய்திகள் வெளியிட்டது. தினமணி பத்திாிகையில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற பெயாில் ஒரு அரைப்பக்க கட்டுரை வெளியிட்டுள்ளது.பாதி சேவாபாரதியின் தொணடுகள் குறித்தும் மறுபாதி தவ்ஹித் ஜமாத் செய்த பணிகள் குறித்தும் உள்ளது. அந்த மட்டில் பரவாயில்லை.பொதிகையாகட்டும் ஜெயா சன் யாரும் முச்சுவிடத்தயாராகயில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *