கடந்த சில வருடங்களாக ஜடாயு எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
இந்து ஞானத்திலும் இந்திய சிந்தனை மரபிலும் மையம் கொண்டு சமூகம், வரலாறு, கலை, கலாசாரம் எனப் பலதளங்களில் விரியும் கட்டுரைகள் இதில் உள்ளன. ராமாயணத்தின் பரிமாணங்கள், ஐயப்ப வழிபாட்டின் வேர்கள், சைவசமயம் குறித்த விவாதம், சிற்பக்கலைத் தேடல்கள், ஹிந்துத்துவம், மதமாற்றம், சாதியம், சூழலியல் குறித்த கண்ணோட்டங்கள் என்று வலைப்பின்னலாக இவற்றின் பேசுபொருள்கள் அமைந்துள்ளன.
நீண்ட நெடிய வரலாறு கொண்ட நமது பண்பாட்டின் கூறுகளையும், நிகழ்காலத்தின் சமூக, கலாசாரப் போக்குகளையும் இணைத்து சிந்திக்கும் பார்வையை இவை அளிக்கின்றன.
வியாசரையும் விவேகானந்தரையும், காரைக்காலம்மையையும் பாரதியையும், ஆர் எஸ் எஸ்ஸையும் அம்பேத்கரையும், காந்தியையும் கலாமையும் ஒரு சரடாக இணைக்கும் பண்பாட்டு உயிர்ப்பின் நரம்பைத் தொட்டு இவை அடையாளம் காட்டுகின்றன.
காலம்தோறும் நரசிங்கம் (பண்பாட்டுக் கட்டுரைகள்)
ஆசிரியர்: ஜடாயு
வெளியீடு: தடம் பதிப்பகம்அச்சுப் புத்தகம் – ரூ 130
இணையம் மூலம் வாங்க: என்.எச்.எம்
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234மின் புத்தகம் – ரூ 75
வாங்க: கூகிள்ப்ளேசென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் 2016 ஜனவரி 14 முதல் 24 வரை நடைபெறும் பொங்கல் புத்தகத் திருவிழாவில் தடம் பதிப்பகத்தின் புத்தகங்கள் ஸ்டால் எண் 201 (டயல் ஃபார் புக்ஸ்) மற்றும் ஸ்டால் எண் 190 (நூல்வனம்) கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
காலந்தோறும் நரசிங்கம் தமிழ் ஹிந்து தளத்தில் பதிவாகி பெரும் வரவேற்பைப் பெற்ற வ்யாசம். அதைத் தொடர்ந்து அறிவு பூர்வமான நீண்ட விவாதங்கள் நிகழ்ந்தன. ஸ்ரீ ஜடாயு அவர்களது ப்ளாக்கிலும் அரிதான விஷயங்களை அடக்கிய பற்பல வ்யாசங்கள் காணக்கிட்டுகின்றன. தமிழ் ஹிந்து வ்யாசங்கள் மற்றும் அவரது ப்ளாக்கில் உள்ள வ்யாசங்கள் இவற்றை தொடுத்து ஒரு நூலாக பதிப்பு செய்திருப்பது ஹிந்துத்வத்தில் நாட்டமுள்ள அன்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.
ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கும் தமிழ் ஹிந்து தளத்திற்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். நமது தளத்து வ்யாசங்கள் முன்னரும் பதிப்பிக்கப்பட்டிருக்கலாம். இந்த செய்தி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
இணையம் வந்த பின் அச்சில் வரும் நூற்களை மெனக்கெட்டு காசு கொடுத்து வாங்கிப்படிப்பது குறைகிறதோ என்று தோன்றுகிறது. சளைக்காமல் ஸ்ரீ பத்ரி சேஷாத்ரி போன்றோர் கிழக்கு பதிப்பகம் மூலமாக பல நூற்களை பதிப்பு செய்வதில் எந்த அளவு வெற்றி பெறுகிறார்கள்? அச்சிடப்பட்ட நூல் விக்ரயம் எந்த அளவு இன்றளவும் ப்ரபலமாக உள்ளது என்றும் அறிய ஆவல்.
ஶ்ரீ ஜடாயு அவர்களுக்கு வாழ்த்துக்களோடு பாராட்டுகளும் சொல்வதில் மகிழ்ச்சி. பலப்பல நூல்கள் தொடர்ந்துவரப் பரமனருள் நிறைக. சிவசிவ